என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 1 அக்டோபர், 2014

போட்டி பற்றியதோர் சிறப்புப் பேட்டி !
 அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.


அடியேன் இந்த ஆண்டு 2014 ஜனவரி மாதத்தில் ஆரம்பித்த இந்த நம் சிறுகதை விமர்சனப்போட்டிகள், தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் வெற்றி நடை போட்டு வருவதுடன், இந்த அக்டோபர் மாத இறுதியில் வெற்றிகரமாக முடிவடைய உள்ளது என்பதைத் தாங்களும் நன்கு அறிவீர்கள். 

இந்த சிறுகதை விமர்சனப் போட்டிகளில் மிகுந்த ஈடுபாட்டுடனும், உற்சாகங்களுடனும் கலந்துகொண்டு தங்களில் பலரும் இதுவரை அளித்துள்ள ஒத்துழைப்புக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

இந்த சிறுகதை விமர்சனப்போட்டிகள் பற்றி, நம் பிரபலப் பதிவர்களில் ஒருவருடன் மின்னஞ்சல் மூலம் சமீபத்தில் நான் ஒரு பேட்டி எடுத்தேன். அதில் நான் கேட்டிருந்த சில கேள்விகளும் அதற்கு அவர்கள் அளித்துள்ள பதில்களும் இதோ இங்கே தங்கள் அனைவரின் பார்வைக்காகக் கொடுத்துள்ளேன். 


 

போட்டி பற்றியதோர் சிறப்புப் பேட்டி !

   


 

 { பேட்டிக்கு முன்பு ஓர் அறிமுகமாக ..... சற்றே என் கற்பனை கலந்தது }

 வணக்கம் மேடம். நல்லா செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா ? எப்போதுமே பிஸியாத்தான் இருப்பீங்கோ. இருந்தாலும் நான் கொஞ்சம் உங்களுடன் பேசணுமே ...... இப்போ அதற்கு நேரம் சரிப்பட்டு வருமா?

 வாங்கோ ஸார் ... வணக்கம். ஒரு நாளைக்கு 24 மணி நேரமே எனக்குப்போதவில்லை. நடுவினில் நீங்க வேறு வந்துட்டீங்களா? சரி... சரி.. வாங்கோ;  உங்களுக்கு இப்போ என்ன வேண்டும்? அதுதான் உங்கள் கதைக்கான என் விமர்சனங்களை உடனுக்குடன் அனுப்பி விடுகிறேனே ! வேறென்ன இப்போ உங்களுக்கு என்னிடம் வேண்டும் ?

 


 கோச்சுக்காதீங்கோ ... மேடம். தாங்கள் எனக்கு ஒரு சின்ன பேட்டி தரவேண்டும். ஒரு பத்தே பத்து நிமிஷம் மட்டுமே எனக்காக தாங்கள் ஒதுக்ககூடாதா? 

 சரி .... சரி ..... சீக்கரமா என்னை என்ன கேட்கணுமோக் கேட்டுட்டுக் கிளம்புங்கோ. எனக்கு நிறைய வேலைகள் உள்ளன. அடுத்த ஒரு வாரத்திற்கான தினசரிப்பதிவுகளை இன்று ஒரே நாளில் நான் கம்போஸ் பண்ணி, நூற்றுக்கணக்கான படங்களைத் தேடித்தேடி ஆசைதீர என் பதிவுகளில் இணைக்க வேண்டியதாக உள்ளதாக்கும் ...... !

  

[அவர்கள் மனதுக்குள் ஏதோ முணுமுணுப்பதுபோல எனக்குத் தோன்றியது:  ”ஹூக்க்கும் ! மூச்சு விடவே இங்கு எனக்கு நேரமில்லை. இதில் இவருக்கு என் பேட்டி வேறு வேண்டுமாம் .....” என்று தான் முணுமுணுத்திருப்பார்கள் :) - உடனே கட்டெறும்பு என்னைக் கடித்ததைப்போல சுருக்கென்று உணர்ந்தேன்.  சரி ... அது போகட்டும் .... மளமளன்னு நம் பேட்டியை ஆரம்பித்து முடித்து விடுவோம் என இதோ நானும் ஆரம்பித்து விட்டேன் .....]

 


 

{ இப்போது நிஜமான பேட்டி சூடாக ஆரம்பிக்கிறது }

 ந்த என் சிறுகதை விமர்சனப்போட்டியின் பொதுவான சிறப்பு அம்சங்களாகத் தாங்கள் நினைப்பவற்றைக் கொஞ்சம் சொல்லுங்கோ மேடம்.

 சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல் எழுத எழுத வித்தையை கற்கும் உற்சாகம் கொடுத்தது விமர்சனப்போட்டி.. புதிதான ஒரு கதவு திறந்தாற்போல் புதிய காற்றை சுவாசித்தாற்போன்ற உற்சாகம் ஏற்படுத்திக்கொடுத்தது. இதுவரை அறியாத ஓரு தளம் விமர்சனம் ..  ஒரு கதைக்கு கருத்துரை தருவது வேறு... விமர்சனம் எழுதுவது வேறு என்னும் அடிப்படைப்பாடத்தை கற்றுக்கொடுத்தது..

 

 வெரி குட் ... நல்ல பதிலாக வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். 
ந்த என் போட்டிகளில் நான் காட்டிவரும் ஆர்வம் மற்றும் ஈடுபாடுகளைப்பற்றி பொதுவாகத் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

 பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும் அதே அர்ப்பணிப்புடன், உற்சாகத்துடன், ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பு காணமுடிகிறது.. உடன் பிறந்த அந்த குணங்கள் பின்னிப்பிணைந்து திட்டமிடுதல், நடத்திக்காட்டுதல்,  இதனை இதனால் இவர் முடிக்கும் என தெளிவுடன் நடுவரைத்தேர்ந்தெடுத்தல், ஆரம்பத்திலிருந்து நடுவர் யார்... நடுவர் யார் என்று சஸ்பென்ஸ் 35 பதிவுகளுக்கு கட்டிக்காத்தது ...  நடுவருக்கும் விமர்சனம் எழுதியது யார் என்று இன்றுவரை அறிவிக்காத ஒரு நடுநிலைமை போன்ற நுணுக்கங்கள் எல்லாம் எவ்வளவு திறமையான நிர்வாகச் சிறப்புமிக்கவை என எண்ணிப்பார்த்து வியப்பில் ஆழ்த்துகிறது.. 

 

 ஆஹா வெகு அருமையாச் சொல்லிட்டீங்கோ .....  நானும் இந்தத்தங்களின் அற்புதமான பதிலை எண்ணிப்பார்த்து மிகவும் வியப்பில் ஆழ்ந்து போனேனாக்கும்! 
ந்த என் சிறுகதை விமர்சனப்போட்டியில் உள்ள அடிப்படை நோக்கங்களாக தாங்கள் நினைப்பது என்னவோ ?

 புத்தகம் போடுவதை விட குறைந்த முதலீட்டில் , தங்கள் கதைகள் நிறைய பேரை விமர்சனம் எழுதவும் அசை போடவும் வைத்திருக்கின்றன..

புத்தகமாகப்போட்டால் கூட ஒருமுறை வாசிப்பதோடு நிறுத்திடக்கூடிய சாத்தியம்தான் இருக்கிறது..

விமர்சனம் எழுத நிறைய முறை படிக்கவேண்டி இருப்பதால் தங்கள் பதிவின் பக்கப்பார்வை - ‘பேஜ்வியூஸ்’ கூடியிருப்பதை கண்கூடாகக்காணமுடிகிறது..


 

  ஆஹா ... ’பேஜ்வியூஸ்’ என்று எனக்கு இதுவரை தெரியாத, நான் இதுவரை கவனிக்காத ஒன்றைப்பற்றி புதிதாகச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.  தங்கள் வலைத்தளத்தின் ’பேஜ்வியூஸ்’ இப்போது 13 லட்சங்களை நெருங்க இருப்பதைப்பார்த்து நான் மிகவும் வியந்து மகிழ்ந்து போனேன் .... :)

ந்த என் சிறுகதை விமர்சனப்போட்டிகளில் குறிப்பாகத் தங்களைக் கவர்ந்த அம்சங்கள் என்னென்ன எனச் சொல்ல முடியுமா ?

 போட்டிக்காக  வெளியிடப்பட்ட கதைகளில் பொருத்தமான படங்களை இணைத்தது... கதையை அமர்களமாக எடிட் செய்து சிக் என பரிமாறியது... பரிசு பெற்றவர்களை  அறிவிக்கும் உற்சாகமான கைதட்டல்கள்... சஸ்பென்ஸ் நீடிக்கவைக்கும் தனித்தன்மை...

நடுவரிடம்  அவ்வப்பொழுது குறிப்புகள் வாங்கி வெளியிட்டு விமர்சனம் செல்லவேண்டிய பாதையை ஒழுங்குபடுத்தி .. கட்டை விரல் கேட்காத குருவாக ஒரு வித்தையை கற்றுக்கொடுத்தது சிறப்பம்சம்.

ஒரு திறனாய்வு திறமையை வாசகர்களிடம் வளர்த்தது  இந்த விமர்சனப்போட்டியின் ஒட்டு மொத்த சாதனை என பெருமைப்படலாம்.
 சபாஷ் .... என் சாதனைகளை ரஸித்துப் பட்டியல் இடுவதிலேயே தாங்கள் ஒரு சாதனையாளர் என நிரூபித்து விட்டீர்கள்! சரி, அதுபோகட்டும்.....  

ம் நடுவர் அவர்களின் செயல்பாடுகள் மற்றும் தீர்ப்புகள் எவ்வாறு இருந்ததாக தங்களுக்குத் தோன்றியது எனக் கொஞ்சம் சொல்லுங்கோ ! 


 எந்தவிதமான பாரபட்சமும் இன்றி,  தகுதி ஒன்றையே இலக்காகக்கொண்டு  நடுவர் செயல்படுவதாகத் தான்  தோன்றுகிறது..!

 நடுவரைப்பற்றி நன்னாவே சொல்லிட்டீங்கோ ..... ஓக்கே. 

டுத்தது சற்றே சங்கடமான கேள்விதான். இருப்பினும் கேட்கிறேன். இந்த என் விமர்சனப்போட்டிக்காக நான் அளித்து வரும் ஏதோவொரு மிகச்சிறிய பரிசுத்தொகைகளில் தங்களுக்குள்ள திருப்தி அல்லது திருப்தியின்மையைப் பற்றி தயவுசெய்து உள்ளது உள்ளபடி தெரிவிக்க வேண்டுகிறேன் ..... சொல்லுங்கோ ப்ளீஸ் ! பரிசுத்தொகை என்பது குதிரையின் முன் கட்டிவிட்ட காரட் போலத்தான்.. அது ஒன்றும் என்னைப்பொறுத்தவரை இலக்கு இல்லை..புத்தகங்களாக அனுப்பியிருந்தால் எங்கள்  இல்லத்தில் கேலிப்பார்வைக்கு ஆளாக்கியிருக்கும் .. இப்போது வங்கிக்கணக்கில் பரிசுத்தொகை பணமாகவே சேர்ந்துவிடுவதால் பிரச்சனை இல்லை..


 

 மிகவும் புத்திசாலித்தனமாக தகுந்த உதாரணத்துடன் பதில் சொல்லி சமாளித்துத் தப்பித்து  விட்டீர்கள். சரி, அது போகட்டும்... 

ந்தக்குதிரைக்கான கேரட் போன்ற பரிசுத்தொகைகளை கணக்கிட்டு அவ்வப்போது நான் அனுப்பி வைக்கும் முறைகளில் உள்ள திருப்தி அல்லது திருப்தியின்மை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கோளேன் ..... 

 அதெல்லாம்மிகச்சரியாக டாண்-டாண்ன்னு வந்து சேர்ந்துவிடுகின்றன.. மிகவும் திருப்தியாக மட்டுமே உள்ளது.


 

 அப்பாடீ ...... அம்மாடீ ...... ஒரு மிகப்பெரிய நிம்மதி எனக்கு! 

பிரத்யேகமாகத் தங்களுக்கு இந்த என் போட்டிகளில் இதுவரை ஏற்பட்டுள்ள ஆர்வம் + அனுபவங்கள் + மகிழ்ச்சி அல்லது அதிருப்தி .. பற்றி கொஞ்சம் விலாவரியாகத்தான் சொல்லுங்கோளேன் ..... ப்ளீஸ் !

 விமர்சனமே எழுதத்தெரியாது .. போட்டிகளிலும் பங்கேற்க முடியாது .. என்ற நிலையில் வெளிநாடுசெல்ல பயண ஏற்பாட்டில் இருந்தபோது, எதிர்பாராத விதமாக என் மகனே இங்கு என்னைப்பார்க்க வந்துவிட்டதால் போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு அமைந்தது..

ரமணி ஐயாவின் விமர்சனத்தை முன்னோடியாகக்கொண்டும், நடுவர் குறிப்புகளையெல்லாம் அடிப்படையாக்கொண்டும் எழுதிய விமர்சனங்கள் பரிசு பெற ஆரம்பித்ததும் உற்சாகம் ஏற்பட்டது.. பல திறமையாளர்கள் கலந்துகொள்ளாமல்   கற்றுக்குட்டியான எனக்கு வழிவிட்டதும் நான் பரிசு பெற காரணமாக இருந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

சிறுகதை விமர்சனப் போட்டிக்கான கதைகள் ஏற்கனவே தங்கள் பதிவினில் வெளியிடப்பட்டு, அவற்றிற்குப் பலமுறை நான்  கருத்தளித்திருப்பதால், வியாழன் இரவு 12 மணி அளவில் படிக்கும்போதே, எழுதப்பட வேண்டிய விமர்சனம் முந்திரிக்கொட்டையாய் என் மனதில் உருவாகிவிடுகிறது..

என்னுடைய பல விமர்சனங்களை நான் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமையே தங்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்தேன்.. பிறகுதான் பரிசு பெற்றவர்களை அறிவிக்கும் பதிவுக்குத் தாங்கள் தயாராகிக்கொண்டிருப்பீர்கள் என நினைத்து,  சில நாட்கள் கழித்து அனுப்ப ஆரம்பித்தேன்.. ஆனால் விமர்சனம் எதையும் நான் உடனே எழுத ஆரம்பித்து விடுவேன்.. அதுதான் என் வழக்கம்.


 

 ’மங்கள்யான் விண்கலம்’ போன்ற தங்களின் இந்த அதிவேகமும், சுறுசுறுப்பும் என்னை எவ்வளவோ முறைகள் வியக்கவும், மயக்கவும், மயங்கவும் வைத்துள்ளன! அதுதான் எனக்கு உங்களிடம் மிகவும் பிடித்ததோர் விஷயமே ஆகும்.

ங்களுக்கு இருக்கும் ஆயிரக்கணக்கான பதிவு வேலைகளுக்கு இடையேயும், நேர நெருக்கடிகளுக்கு இடையேயும், எனக்காகக் கொஞ்சம் நேரம் ஒதுக்கி, தங்கள் மனதில் பட்டதைப் பட்...பட்... எனச் சொல்லி, பேட்டியளித்துள்ளதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், Madam ..... Thank you very much ..... Bye for now !

 Welcome, Sir. Good Bye ! 


 [மனதுக்குள்] 

பேட்டி காண வந்த என்னை ஏனோ இவங்க சீக்கரமாகத் துரத்தி விடுவதிலேயே குறியாக இருக்காங்க! ........ பாவம் அவர்கள். மிகவும் தங்கமானவங்கதான்... அதுவும் சாதா தங்கமல்ல... கொங்கு நாட்டுக் கோவைத் தங்கமேதான் ........ ஒருவேளை ஏதேனும் சுவையற்ற சூழ்நிலையில், இக்கட்டான தர்மசங்கடமான நிலைமையில் தற்போது அங்கே உள்ளார்களோ என்னவோ?  அது நமக்கு எப்படித்தெரியும்? மனம்விட்டுச் சொன்னாலாவது ஆறுதலாகச் சில வார்த்தைகள் நாமும் பகிர்ந்துகொள்ள முடியும்! 

எது எப்படியோ, அவங்க எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும், எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இருந்தாலும், மனதை எப்போதும் ஜிலு-ஜிலுன்னு வைத்துக்கொண்டு, என்றும் செளக்யமா, சந்தோஷமா, நிம்மதியா, நீடூழி வாழணும் என நான் என் மனதாரப் பிரார்த்தித்துக்கொள்கிறேன். 

காணக்கிடைக்காத, கண்ணைப்பறிக்கும், அற்புதமானப் படங்களுடனும், தகவல் களஞ்சியமாக அரிய பெரிய அருமையான செய்திகளுடனும், தினசரி பதிவுகளாக இன்றுவரை 1,416 [ஆயிரத்து நானூற்றுப் பதினாறு] பதிவுகளை கொடுத்து மிகப்பெரிய சாதனை செய்துள்ள இவர்கள், மேலும் மேலும் பல ஆயிரம் பதிவுகளைத் தந்து நம் எல்லோரையும் தினமும் தொடர்ந்து மகிழ்விக்க வேண்டும் என இவர்களை நான் மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மிக்க நன்றியுடன் .....
VGK 

   

  

பேட்டி அளித்தவர் யார் ? 
எனத்தெரியாதவர்களுக்கு மட்டும் இதோ இந்த இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html
 
    


அனைவரின் கவனத்திற்கும் !


மேலேயுள்ள பேட்டி போல இல்லாவிட்டாலும், இந்த என் சிறுகதை விமர்சனப்போட்டிகள் பற்றிய தங்களின் மேலான கருத்துகளை மற்ற அனைவரும் என்னுடன் தாராளமாகப் பகிர்ந்துகொள்ளலாம். 

தங்களின் கருத்துக்களை சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் கட்டுரை வடிவில் எழுதி என் மின்னஞ்சல் முகவரிக்கு valambal@gmail.com அனுப்பி வைக்கலாம். 

வரும்  05.10.2014 ஞாயிற்றுக்கிழமைக்குள்  எனக்குக் கிடைக்குமாறு தயவுசெய்து அனுப்பி வைக்கவும். Mail இல் Subject என்ற இடத்தில் ‘நேயர் கடிதம்’ எனக்குறிப்பிடவும். 

 இந்த என் சிறுகதை விமர்சனப்போட்டியில் கலந்துகொண்டு விமர்சனம்  எழுதி அனுப்பியவர்கள், போட்டியில் கலந்து கொள்ளாதவர்கள்,  பார்வையாளர்கள், வாசகர்கள், பதிவர்கள், பதிவர் அல்லாதோர் என யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களை எழுதி மின்னஞ்சல் மூலம்  எனக்கு 05.10.2014க்குள் அனுப்பி வைக்கலாம்.

அவ்வாறு எனக்கு வந்துசேரும் சிறப்பான கட்டுரைகள் இந்த அக்டோபர் மாதத்தில் வரும் ஒவ்வொரு செவ்வாய், புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் இடவசதிக்கு ஏற்ப தனித்தனிப்பதிவுகளாக என் வலைத்தளத்தினில், தங்கள் பெயர் மற்றும் Photo or Profile Photo வுடன் என்னால் வெளியிடப்படும்.  

    நினைவூட்டுகிறோம்

இந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான

இணைப்பு:


கதையின் தலைப்பு:

VGK-37 
எங்கெங்கும்...
எப்போதும்...
என்னோடு... !

விமர்சனங்கள் வந்துசேர இறுதி நாள்

02.10.2014
நாளை வியாழக்கிழமை
இந்திய நேரம் 
இரவு 8 மணிக்குள் .

போட்டியில் கலந்துகொள்ள 
மறவாதீர்கள் !

இன்னும் தங்களுக்கு இருப்பதோ 
நான்கு வாய்ப்புகள் மட்டுமே !


என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்

58 கருத்துகள்:

 1. சிறுகதை விமர்சனப்போட்டி பற்றி தெளிவான கேள்விகளுடன் பேட்டியை சிறப்பாக வெளியிட்டமைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 1, 2014 at 12:35 AM

   வாங்கோ, வணக்கம்.

   //சிறுகதை விமர்சனப்போட்டி பற்றி தெளிவான கேள்விகளுடன் ........//

   கீழே நம் திரு. ஜீவி சார் சொல்வதுபோல நூற்றுக்கணக்கான .... ஏன் .... ஆயிரக்கணக்கான கேள்விகளை தங்களிடம் கேட்கத்தான் நானும் மிகவும் ஆசைப்பட்டேன்.

   ஆனாலும் அதெற்கெல்லாம் இடம் கொடுக்காமல் தாங்கள் எஸ்கேப் ஆகிவிட்டதால் எனக்கேற்பட்ட ஏமாற்றமே [மனதுக்குள்] என்ற கடைசி பாராவை என்னை எழுத வைத்தது.

   //பேட்டியை சிறப்பாக வெளியிட்டமைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்..!//

   ஆஹா ! சந்தோஷம். தன்யனானேன் ! மிக்க நன்றி !! -vgk

   நீக்கு
 2. மிக அருமை சார். ராஜி அவர்களின் பேட்டி நறுக் & சுருக்.

  சீக்கிரம் வேற எங்க போயிருப்பாங்க . அடுத்த விமர்சனத்தை எழுத்தத்தான்.

  நீங்கள் இருவருமே தேனீக்களைப் போலச் சுறுசுறுப்பானவர்கள். மேலும் தேனைச் சேகரித்து எங்களுக்கெல்லாம் கொடுப்பவர்கள்.

  இருவரும் வாழ்க வளமுடன். பரிசு பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thenammai Lakshmanan October 1, 2014 at 12:57 AM

   வாங்கோ, வணக்கம்.

   //மிக அருமை சார். ராஜி அவர்களின் பேட்டி நறுக் & சுருக்.//

   :))))) அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். :))))) மகிழ்ச்சி !
   எப்போதுமே அவர்களுடையது அருமையோ அருமை தான். அதனாலேயே இந்த என் பேட்டியை அவர்களிடம் மட்டுமே வைத்துக்கொண்டுள்ளேன். அவர்கள் மிகவும் புத்திசாலியாக்கும் ! :)))))

   //சீக்கிரம் வேற எங்க போயிருப்பாங்க . அடுத்த விமர்சனத்தை எழுத்தத்தான். //

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ...... அதே அதே ஸபாபதே ! :)

   //நீங்கள் இருவருமே தேனீக்களைப் போலச் சுறுசுறுப்பானவர்கள். மேலும் தேனைச் சேகரித்து எங்களுக்கெல்லாம் கொடுப்பவர்கள். //

   அடடா ! இதைத் தேன் வாயால் [தேனம்மை வாயால்] இங்கு சொல்லிக் கேட்கும்போது, கொம்புத் தேனை ஒரு கூஜா நிறையப் பருகியது போன்ற இனிமையோ இனிமை ..... ருசியோ ருசியாக, மயக்கமோ மயக்கமாகத்தான் உள்ளது. ஸ்பெஷல் பாராட்டுகள் + வாழ்த்துகள் + நன்றிகள், மேடம்.

   //இருவரும் வாழ்க வளமுடன்.//

   சந்தோஷம். மிக்க நன்றி, மேடம்.

   //பரிசு பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள். :)//

   இன்னும் பலரின் மனம் திறந்த மாறுபட்டக் கருத்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

   இந்த அக்டோபர் மாதம் மட்டுமாவது குறிப்பாக செவ்வாய், புதன், வியாழன்களில் மட்டுமாவது, இங்கு என் பதிவினில் பின்னூட்டப்பெட்டியில், தங்களின் ‘தேன்’ மழை பொழியட்டும்.

   பிரியமுள்ள கோபு [VGK]

   -=-=-=-=-

   [பின்குறிப்பு: தாங்கள் என்னைப் பேட்டிகண்டு தங்கள் தளத்தில் வெளியிட்டது ஏனோ இப்போது என் நினைவுக்கு வருகிறது ..... அதற்கான இணைப்பு .... இது மற்றவர்களின் கவனத்திற்காக மட்டுமே.

   http://honeylaksh.blogspot.in/2014/05/blog-post_10.html

   தங்களின் பதிவுகளிலேயே மிக அதிகப்பின்னூட்டங்கள் கிடைத்தது அதற்கு மட்டுமே என தாங்கள் என்னிடம் கூறி மகிழ்ந்ததும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

   - கோபு :)))))

   நீக்கு
 3. ராஜராஜேஸ்வரி அவர்களின் பேட்டி அருமை. அதை வெளியிட்ட விதம் அதைவிட அருமை. சரியான காரணங்களை அவர்கல் குறிப்பிட்டுவிட்டார்கள். மற்றவர்கள் சொல்ல இடமே இல்லை. :)))) எல்லாமும் பட்டியல் இடப்பட்டு விட்டது. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Geetha SambasivamOctober 1, 2014 at 5:29 AM

   வாங்கோ, வணக்கம்.

   //இராஜராஜேஸ்வரி அவர்களின் பேட்டி அருமை.//

   மிக்க மகிழ்ச்சி. சந்தோஷம். நன்றி.

   //அதை வெளியிட்ட விதம் அதைவிட அருமை.//

   அவர்கள் அடுப்பில் ஏற்றி சமைத்துக்கொடுத்துள்ள கறி,
   கூட்டு முதலியவற்றில், தேங்காய் துருவிப்போட்டு, கடுகு,
   உளுத்தம்பருப்பு, மிளகாய் போன்றவற்றை கூடமாட
   தாளித்து, ருசிப்படுத்தி இறக்கி பரிமாறியுள்ளது மட்டுமே
   இதில் என் வேலை. :)

   இதனைக் குறிப்பாக டேஸ்ட் செய்து இங்கு சொல்லியுள்ள
   தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

   //சரியான காரணங்களை அவர்கள் குறிப்பிட்டுவிட்டார்கள்.
   மற்றவர்கள் சொல்ல இடமே இல்லை. :)))) எல்லாமும்
   பட்டியல் இடப்பட்டு விட்டது. :)//

   இல்லை. இல்லவே இல்லை. அப்படியெல்லாம் தாங்கள் சொல்லி எஸ்கேப் ஆக நினைப்பது கொஞ்சமும் நியாயமே இல்லை.

   கீழே நம் அன்புக்குரிய திரு. ஜீவி சார் என்ன
   சொல்லியிருக்கிறார்கள் என்று பாருங்கோ. எனவே தாங்கள் எழுதியனுப்ப உள்ள கட்டுரை எனக்கும் அவருக்கும் ஒட்டு மொத்தமாகத் திருப்தியளிப்பதாக இருக்கட்டும். மாறுபட்ட முறையில் அது அமையட்டும். இது தங்களால் மட்டுமே இயலும்.

   ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

   அன்புடன் கோபு [VGK]

   நீக்கு
 4. அடுத்த பேட்டியாளரிடமு இதே கேள்விகள் இதே மாதிரியான பதில்கள் என்றால் கொஞ்சம் போரடிக்கும். கொஞ்சம் மாற்றியமைத்து கேள்விகளைத் தயாரித்துக் கொள்ளுங்கள்.

  சாம்பிளுக்கு சில கேள்விகள்:

  1.ஒவ்வொரு பரிசுகளையும் வகைப்படுத்திய நியாயம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?.. உதாரணமாக உங்களுக்கு மூன்றாம் பரிசு என்றால் முதல், இரண்டு பரிசு பெற்ற கட்டுரைகள் உங்களதை விட சிறப்பாக இருப்பதாக நீங்களே உணர்ந்தீர்களா? இதே மாதிரி உங்களுக்கு முதல் பரிசு கிடைத்தது என்றால் இரண்டாவது மூன்றாவது பரிசு பெற்றவர்களின் கட்டுரைகள் உங்களதை விட சிறப்பாக இருந்திருப்பதாக எப்போதாவது உணர்திருக்கிறீர்களா?..

  2.. பொதுவாக என் கதைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
  ஏதாவது குறைகள் தெரிகிறதா? எனக்காகச் சொல்ல வேண்டாம். கறாராகச் சொல்லுங்கள்.

  3. உங்கள் கதை பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது உங்களுக்கே ஆச்சரியமாக இருந்ததா?.. இல்லை, நிச்சயம் தேர்வாகும் என்று
  நம்பிக்கை இருந்ததா?

  4. குறிப்பிட்ட சிலரின் கதைகளே தொடர்ந்து பரிசுக்குத் தேர்வானதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

  5. பதிவர்களின் கதைகள் நிறைய அவர்கள் பதிவுகளில் படித்திருப்பீர்கள். வித்தியாசமான நல்ல கதைகளை எழுதும் பதிவர்கள் பலர் பதிவுலகில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. பத்திரிகைகளில் வெளியாகும் கதைகளுக்கும், பதிவுகளில் மட்டும் வெளியாகும் கதைகளுக்கும் சிறப்பு அடிப்படையில் ஏதாவது வித்தியாசம் உங்களுக்குத் தெரிகிறதா?

  இப்படி மாறுபட்ட சில கேள்விகளை பேட்டியில் நுழைத்தால்
  சுவாரஸ்யமாகவும், பயனுள்ளவையாகவும் இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜீவி October 1, 2014 at 5:32 AM [1]

   வாங்கோ, நமஸ்காரங்கள், வணக்கம்.

   //அடுத்த பேட்டியாளரிடமும் இதே கேள்விகள் இதே மாதிரியான பதில்கள் என்றால் கொஞ்சம் போரடிக்கும். கொஞ்சம் மாற்றியமைத்து கேள்விகளைத் தயாரித்துக் கொள்ளுங்கள்.//

   நான் பேட்டி என்று இதுவரை எடுத்துள்ளது இவர்களிடம் மட்டுமேதான் என்பதைத் தங்களின் அன்பான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இதுவும் பிறருக்கு ஒரு மாடல் மட்டுமே..

   இனி வருபவை அனைத்தும் அவரவர்கள் மனம் திறந்து சொல்லும் கருத்துக்களாக மட்டுமே வடிவமைக்கப்பட்டு சிறப்புக் கட்டுரைகளாக மட்டுமே, மிகச்சிறப்பாக வெளியிடப்பட உள்ளன.

   <<<<<

   நீக்கு
  2. ஜீவி October 1, 2014 at 5:32 AM [2]

   //சாம்பிளுக்கு சில கேள்விகள்:

   1.ஒவ்வொரு பரிசுகளையும் வகைப்படுத்திய நியாயம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?.. உதாரணமாக உங்களுக்கு மூன்றாம் பரிசு என்றால் முதல், இரண்டு பரிசு பெற்ற கட்டுரைகள் உங்களதை விட சிறப்பாக இருப்பதாக நீங்களே உணர்ந்தீர்களா? இதே மாதிரி உங்களுக்கு முதல் பரிசு கிடைத்தது என்றால் இரண்டாவது மூன்றாவது பரிசு பெற்றவர்களின் கட்டுரைகள் உங்களதை விட சிறப்பாக இருந்திருப்பதாக எப்போதாவது உணர்திருக்கிறீர்களா?..

   2.. பொதுவாக என் கதைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஏதாவது குறைகள் தெரிகிறதா? எனக்காகச் சொல்ல வேண்டாம். கறாராகச் சொல்லுங்கள்.

   3. உங்கள் கதை பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது உங்களுக்கே ஆச்சரியமாக இருந்ததா?.. இல்லை, நிச்சயம் தேர்வாகும் என்று நம்பிக்கை இருந்ததா?

   4. குறிப்பிட்ட சிலரின் கதைகளே தொடர்ந்து பரிசுக்குத் தேர்வானதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

   5. பதிவர்களின் கதைகள் நிறைய அவர்கள் பதிவுகளில் படித்திருப்பீர்கள். வித்தியாசமான நல்ல கதைகளை எழுதும் பதிவர்கள் பலர் பதிவுலகில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. பத்திரிகைகளில் வெளியாகும் கதைகளுக்கும், பதிவுகளில் மட்டும் வெளியாகும் கதைகளுக்கும் சிறப்பு அடிப்படையில் ஏதாவது வித்தியாசம் உங்களுக்குத் தெரிகிறதா?

   இப்படி மாறுபட்ட சில கேள்விகளை பேட்டியில் நுழைத்தால் சுவாரஸ்யமாகவும், பயனுள்ளவையாகவும் இருக்கும்.//


   தங்களிடமிருந்து இதுபோன்ற அழகானதோர் பயனுள்ள பின்னூட்டம் வர வேண்டும் என்ற ஆவலில் மட்டுமே நான் இந்த என் பேட்டி வெளியீடு பற்றி தங்களுக்கு ஏதும் முன் தகவல் சொல்லாமல் சர்ப்ரைஸ் ஆக வெளியிட்டுள்ளேன்.

   தங்களின் இந்த ஆலோசனைகளும், சாம்பிள் கேள்விகளும் மிக அருமையாக உள்ளன. என் மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான நன்றிகள்.

   அவரவர்களின் வித்யாசமான [மனம் திறந்த] கருத்துக்கள் எனக்கு வந்துசேர இறுதி நாளாக வரும் ஞாயிறு 05.10.2014 என இதில் நான் குறிப்பிட்டுள்ளேன்.

   எதையும் தன் சொந்த நடையில், மாறுபட்ட கோணத்தில், வெகு அழகாக எழுதக்கூடிய மிகச்சிறந்த எழுத்தாற்றல் மிக்க ஒரு சிலரின் கவனத்திற்கு இந்தத்தங்களின் பின்னூட்டம் என்னால் நிச்சயமாகக் கொண்டுசெல்லப்படும்.

   நம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கான பதில்களுடன் அவர்கள் எழுதி அனுப்பப்போகும், அத்தகைய மிகச்சிறந்த கட்டுரைகள், மிக விரைவில் என்றாவது ஒருநாள் என் பதிவுகளில் சிறப்பித்து வெளியிடப்படும் என நாம் நம்புவோமாக !

   பிரியமுள்ள கோபு [VGK]

   நீக்கு
 5. பதில்கள்
  1. கரந்தை ஜெயக்குமார் October 1, 2014 at 7:11 AM

   வாங்கோ, வணக்கம்.

   //பேட்டி அருமை. நன்றி ஐயா//

   தங்களின் வழக்கமான ஓரிரு வார்த்தைகளுக்கு என் நன்றிகள். - VGK

   நீக்கு
 6. நோத்ற்றுக்கணக்கான படங்கள்னு சொன்னதுமே இவங்க தான்னு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Durai AOctober 1, 2014 at 8:22 AM

   வாங்கோ Mr. அப்பாதுரை Sir, வணக்கம்.

   //நூற்றுக்கணக்கான படங்கள்னு சொன்னதுமே இவங்க தான்னு..//

   கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்களாக்கும் ! :)))))) சபாஷ் !!!!!

   இந்த நம் சிறுகதை விமர்சனப்போட்டிகள் பற்றிய தங்களின் விரிவான வித்யாசமான விளக்கமான கட்டுரையை ஆவலுடன் நான் மட்டுமல்ல.... நடுவர் மட்டுமல்ல.... இந்த நம் நாடே ..... பதிவுலகமே .... மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்காத்திருக்கிறது. உடனே அனுப்புங்கோ, ப்ளீஸ்.

   அன்புடன் கோபு [VGK]

   நீக்கு
  2. பேட்டியை படிக்க ஆரம்பித்தவுடனே திருமதி இராஜராஜேச்வரிதான் அவர்கள் என்று தெரிந்து விட்டது.
   மிக்க அழகிய விஷயங்களடங்கிய உரையாடல்.
   இரண்டுபேரும் கைதேர்ந்தவர்கள். சொல்லவா வேண்டும்? அன்புடன்

   நீக்கு
 7. Kamatchi October 1, 2014 at 1:29 PM

  வாங்கோ மாமி, அநேக நமஸ்காரங்கள்.

  //பேட்டியை படிக்க ஆரம்பித்தவுடனே திருமதி இராஜராஜேஸ்வரிதான் அவர்கள் என்று தெரிந்து விட்டது.//

  ஆஹா, அவர்களைத் தெரியாதவர்கள் இந்தப்பாரினில் உண்டோ?
  நானே அவர்களின் அருமை பெருமையெல்லாம் தங்களுக்கு அடிக்கடி எடுத்துச் சொல்லியுள்ளேனே !

  //மிக்க அழகிய விஷயங்களடங்கிய உரையாடல்.//

  மிகவும் சந்தோஷம் .... மாமி.

  //இரண்டுபேரும் கைதேர்ந்தவர்கள். சொல்லவா வேண்டும்? அன்புடன்//

  அடடா, அன்புடன் வருகை தந்து அழகான கருத்துகள் கூறி எங்கள் இருவரையும் பாராட்டி ஆசீர்வதித்துள்ள தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் + நமஸ்காரங்கள், மாமி.

  பிரியமுள்ள கோபு

  பதிலளிநீக்கு
 8. இந்தப் போட்டிகளை நீங்கள் அறிவிப்பு செய்த பதிவுக்கு ‘உற்சாகத்தின் மறு பெயர்வை. கோபால கிருஷ்ணன் என்று பின்னூட்டம் எழுதியதாக நினைவு, மீண்டும் ஊர்ஜிதம் ஆகிறது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. G.M Balasubramaniam October 1, 2014 at 4:07 PM

  வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

  //இந்தப் போட்டிகளை நீங்கள் அறிவிப்பு செய்த பதிவுக்கு ‘உற்சாகத்தின் மறு பெயர் வை. கோபால கிருஷ்ணன் என்று பின்னூட்டம் எழுதியதாக நினைவு, மீண்டும் ஊர்ஜிதம் ஆகிறது. வாழ்த்துக்கள்.

  ஆம் ஐயா. பசுமையாக என் நினைவிலும் உள்ளது ஐயா. இதோ இந்த என் பதிவினில் அது இடம் பெற்றுள்ளது.

  http://gopu1949.blogspot.in/2014/01/blog-post.html

  தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா. - VGK

  பதிலளிநீக்கு
 10. பேட்டி மிக அருமை கோபு சார். தாமரை மலரைப் பார்த்ததுமே அது நம் ராஜராஜேஸ்வரி மேடம் என்பது நன்றாகவே தெரிந்து விட்டது . எதையும் சற்று வித்தியாசமாக செய்கிறீர்கள் கோபு சார். இந்த நுணுக்கங்கள் நாங்கள் அறிந்து கொள்ள வேண்டியது கோபு சார்.
  நன்றியுடன் வாழ்த்துக்களும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. rajalakshmi paramasivam October 1, 2014 at 8:21 PM

   வாங்கோ, வணக்கம்.

   //பேட்டி மிக அருமை கோபு சார். //

   மிகவும் சந்தோஷம் ..... மிக்க நன்றி, மேடம்.

   //தாமரை மலரைப் பார்த்ததுமே அது நம் ராஜராஜேஸ்வரி மேடம் என்பது நன்றாகவே தெரிந்து விட்டது.//

   ஆஹா, அடடா; தாமரை மலருக்குப்பதில் அவங்க படத்தையே நான் காட்டியிருக்கலாமோ !!!!! :)

   //எதையும் சற்று வித்தியாசமாக செய்கிறீர்கள் கோபு சார்.//

   :))))) அதில் எனக்கோர் தனி ஈடுபாடு உண்டு தான். THE WAY OF PRESENTATION மிக நல்லமுறையில் அமைய வேண்டும் / அமைக்க வேண்டும், என்பதற்காக நிறையவே
   அலட்டிக்கொள்ளும் டைப் தான் நான். அதை மிகச்சரியாகப் புரிந்துகொண்டு தாங்கள் இங்கு சொன்னது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள். :)))))

   //இந்த நுணுக்கங்கள் நாங்கள் அறிந்து கொள்ள வேண்டியது கோபு சார். //

   அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை மேடம்.

   இந்தக் கம்ப்யூட்டர் டெக்னாலஜிகள் மட்டும் எனக்கு அவ்வளவாகப்புரிவது இல்லை. எதையுமே கையால் செய்ய வேண்டுமென்றாலோ, எழுத வேண்டும் என்றாலோ, ஆர்ட் ஒர்க் போல வரைய வேண்டுமென்றாலோ, இதைவிட என்னால் சூப்பராகச் செய்ய இயலும்.

   எதையும் நாம் சற்றே வித்யாசமாகச் செய்ய வேண்டும் என்று மனதில் ஓர் எண்ணமும், அதற்காகக் கொஞ்சம் கலை ஆர்வமும் இயற்கையாக நம்மிடம் இருந்தால் போதும். எதையும் சுலபமாக நாம் சாதிக்கலாம்.

   என்னிடமிருந்து இதில் தாங்கள் அறிந்துகொள்ள நுணுக்கங்கள் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

   //நன்றியுடன் வாழ்த்துக்களும்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான [நுணுக்கமான:)] கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 11. நான் முதலிலேயே கண்டுபிடிச்சுட்டேனே ! ராஜேஸ்வரியக்கா தான் பேட்டியளித்தது :)
  வாழ்த்துக்கள் அக்கா.ஒவ்வொன்றும் அழகான அருமையான பதில்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Angelin October 1, 2014 at 8:22 PM

   வாங்கோ நிர்மலா ! வணக்கம். நெடு நாட்களுக்குப்பின்
   தங்களின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்வளிக்கிறது.

   //நான் முதலிலேயே கண்டுபிடிச்சுட்டேனே ! ராஜேஸ்வரியக்கா தான் பேட்டியளித்தது :) //

   ஹைய்யோ .... மிகவும் கஷ்டமான கண்டுபிடிப்புதான்.
   பாராட்டுகள். இந்த அரிய கண்டுபிடிப்புக்கே நிர்மலாவுக்கு
   ஓர் ஸ்பெஷல் பரிசு தரலாமான்னு யோசிக்கிறேன். :)))))

   //வாழ்த்துக்கள் அக்கா. ஒவ்வொன்றும் அழகான
   அருமையான பதில்கள்//
   ________________________

   {இதற்கு தங்கள் அக்காவே ஒருவேளை நன்றி கூறி பதில்
   அளிப்பார்களோ என்னவோ. அதனால் நான் கோடுமட்டும்
   போட்டுள்ளேன் ...... ரோடு போட வசதியாக }

   மிக்க நன்றி நிர்மலா.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 12. சிறப்பான பேட்டி...

  நகைச்சுவை இழையோட தான் இதுவரை நடத்தி வந்த போட்டி பற்றிய கேள்விகளை அண்ணா கேட்க,

  நண்பர் ராஜராஜேஸ்வரி அவர்கள் மிக அற்புதமாக நேர்த்தியாக பதில் சொல்லி இருக்கிறார்கள்.

  ரிட்டையர் ஆனதும் ஒரு வெறுமை மனதில் சூழ உட்கார்ந்துவிடாமல் வலையில் தன் ஆக்கங்களை பதித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், சளைக்காமல், சலிக்காமல், மறக்காமல், போட்டிகள் நடத்தி, எல்லோரையும் உற்சாகப்படுத்தி விமர்சனங்கள் எழுத வைத்து, அதற்கும் போட்டி வைத்து, நடுநிலையான நீதிபதி அவர்களால் கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு எல்லோராலும் பாராட்டி பேச வைத்த சிறப்பான பதிவு அண்ணா...

  எனக்கு உடல்நலம் சரி இல்லாமல் போவதால் அதிகம் டைப் செய்யமுடியாததால் இதனுடன் நிறுத்திக்கொள்கிறேன்.


  இன்னும் இதுப்போன்று போட்டிகள் நிறைய நடத்தி சாதனை படைக்க மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Manjubashini Sampathkumar October 1, 2014 at 9:43 PM

   வாங்கோ மஞ்சு. அபூர்வ வருகைக்கும் கருத்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் மிகவும் சந்தோஷம், மஞ்சு.

   உடல்நலம் சரியாகும் வரை Strain செய்து Type அடிக்க வேண்டாமே மஞ்சு. Please take care of your health, Manju.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 13. பேட்டி அளித்தவர் யார் ? - உங்கள் கேள்வி பதில் பேட்டியில் உள்ள தாமரைப் படம் மற்றும் கேள்வி – பதில்களின் சாராம்சத்திலேயே அவர் நமது ஆன்மீகப் பதிவர் சகோதரி இராஜராஜேஸ்வரி என்று தெரிந்து விடுகிறது. மேலும் பல்வேறு பணிகளுக்கு இடையிலும் அவர் தொடர்ந்து வலைப் பதிவினில் விடாது எழுதும் தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.

  இந்த வருடத்தின் முதல் மாதம் (ஜனவரி 2014) தொடங்கி பத்தாவது (அக்டோபர்) மாதம் முடிய, ஒரு தாய் தனது குழந்தையை சுமப்பது போல, தனி மனிதராக VGK சிறுகதை விமர்சனப் போட்டியினை கண்ணும் கருத்துமாக நடத்தி வருகிறீர்கள். வலையுலகில் பெரிய சாதனைதான். எல்லாம் காளிதாசனுக்கும் கம்பனுக்கும் அருளிய கலைமகள் அருள்தான்.

  இன்று சரஸ்வதி பூஜை. தங்களுக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தி.தமிழ் இளங்கோOctober 2, 2014 at 5:06 AM

   வாங்கோ ஐயா, வணக்கம் ஐயா.

   //பேட்டி அளித்தவர் யார் ? - உங்கள் கேள்வி பதில் பேட்டியில் உள்ள தாமரைப் படம் மற்றும் கேள்வி – பதில்களின் சாராம்சத்திலேயே அவர் நமது ஆன்மீகப் பதிவர் சகோதரி இராஜராஜேஸ்வரி என்று தெரிந்து விடுகிறது. மேலும் பல்வேறு பணிகளுக்கு இடையிலும் அவர் தொடர்ந்து வலைப் பதிவினில் விடாது எழுதும் தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.//

   ”சகலகலாவல்லி சரஸ்வதி தேவி”
   ஆயிற்றே ! எப்படித்தெரியாமல் போகும் ?

   இது இன்று அவர்கள் வெளியிட்டுள்ள பதிவின் தலைப்பு. அதைத்தான் நானும் இங்கு சொல்லியுள்ளேன் ! :)))))

   //இந்த வருடத்தின் முதல் மாதம் (ஜனவரி 2014) தொடங்கி பத்தாவது (அக்டோபர்) மாதம் முடிய, ஒரு தாய் தனது குழந்தையை சுமப்பது போல, தனி மனிதராக VGK சிறுகதை விமர்சனப் போட்டியினை கண்ணும் கருத்துமாக நடத்தி வருகிறீர்கள். //

   ஆமாம் ஐயா. தங்களின் இந்த ஒப்பீடு மிக அருமை.
   அதே .... அதே .....

   பெண்களின் மஸக்கை, 10 மாத வயிற்று சிரமங்கள் ...
   பாரங்கள், வலிகள், அவ்வப்போது வயிற்றினுள் வாங்கிடும் இன்ப உதைகள், மாபெரும் எதிர்பார்ப்புகள், இடுப்பு வலிகள், எதிர்கொள்ளப்போகும் பிரஸவகால வேதனைகள் என எல்லாமே என்னாலும் இதில் தத்ரூபமாக உணர்ந்து அனுபவித்துத் தெரிந்துகொள்ள முடிகிறது.

   எல்லாத் துன்பங்களுக்கும் பிறகு, குழந்தை பிறந்ததும் ஒரு பேரின்பம் இருப்பது போல, பட்டதுன்பமெல்லாம்
   அந்தத்தாய்க்கு மறைந்தும் மறந்தும் பறந்தும் போய் விடுவது போல .....

   இந்தப்போட்டியின் இறுதியில் புண்ணியாஹாவாசனம் நடத்தித் தொட்டிலில் குழந்தையைப்போட்டு, பெயர் சூட்டுவது போல11 நாட்கள் விழாவாகக் கொண்டாடி, சுமார் 18 சிறப்புச் சாதனையாளர்களை அடையாளம் காட்டி, கும்மி அடித்து, கோலாட்டமிட்டுக் கூடுதல் பரிசுகளும், விருதுகள் என்ற விருந்துகளும் கொடுத்து

   அமர்க்களப் ப-டு-த்-த த்தான் நினைத்துள்ளேன்.

   முதலில் இந்த அக்டோபர் மாத இறுதியில் நல்லபடியாக
   சுகப்பிரஸவமாக நடந்து அழகான ஆரோக்யமான மழலை பிறந்து என்னை மட்டுமல்லாமல் அனைவரையும் மகிழ்விக்கட்டும்.

   //வலையுலகில் பெரிய சாதனைதான். எல்லாம் காளிதாசனுக்கும் கம்பனுக்கும் அருளிய கலைமகள் அருள்தான்.//

   நிச்சயமாக ஐயா. எதையும் நாம் திட்டமிடலாம். அவற்றை அழகாக நிறைவாக அனைவருக்கும் திருப்தியாக வெற்றிகரமாக நடத்திக் கொடுப்பது என்பது இறை அருள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பதே உண்மை.

   //இன்று சரஸ்வதி பூஜை. தங்களுக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்! //

   மிகவும் சந்தோஷம் ஐயா.

   ’சகலகலாவல்லி சரஸ்வதி தேவி’ யின் அருள் நம் எல்லோருக்கும் தொடர்ந்து கிடைக்கட்டும்.

   தங்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள், ஐயா.

   அன்புடன் VGK

   நீக்கு
 14. தேர்ந்த கேள்விகளும் திருப்திகரமான பதில்களுமென்று போட்டி களைகட்டியுள்ளது. கீதா மேடம் குறிப்பிட்டுள்ளது போல் ஒவ்வொரு விமர்சகரின் வாசகரின் உள்ளத்து உணர்வுகளை எல்லாம் அழகாகப் படம்பிடித்தாற்போல் ஆரவாரமில்லாது அமைதியாகவும் அதே சமயம் அழுத்தமான வரிகளாலும் தம் எண்ணங்களை அழகாக வெளிப்படுத்தியுள்ளார் திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்கள். தொடர்ந்து வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்கும் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 15. தேர்ந்த கேள்விகளும் திருப்திகரமான பதில்களுமென்று பேட்டி களைகட்டியுள்ளது. கீதா மேடம் குறிப்பிட்டுள்ளது போல் ஒவ்வொரு விமர்சகரின் வாசகரின் உள்ளத்து உணர்வுகளை எல்லாம் அழகாகப் படம்பிடித்தாற்போல் ஆரவாரமில்லாது அமைதியாகவும் அதே சமயம் அழுத்தமான வரிகளாலும் தம் எண்ணங்களை அழகாக வெளிப்படுத்தியுள்ளார் திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்கள். தொடர்ந்து வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்கும் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  சென்ற பின்னூட்டத்தில் பேட்டிக்கு பதில் போட்டி என்று தவறுதலாய்ப் பதிவாகிவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீத மஞ்சரி October 2, 2014 at 6:25 AM

   வாங்கோ, வணக்கம்.

   //தேர்ந்த கேள்விகளும் திருப்திகரமான பதில்களுமென்று பேட்டி களைகட்டியுள்ளது. கீதா மேடம் குறிப்பிட்டுள்ளது போல் ஒவ்வொரு விமர்சகரின் வாசகரின் உள்ளத்து உணர்வுகளை எல்லாம் அழகாகப் படம்பிடித்தாற்போல் ஆரவாரமில்லாது அமைதியாகவும் அதே சமயம் அழுத்தமான வரிகளாலும் தம் எண்ணங்களை அழகாக வெளிப்படுத்தியுள்ளார் திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்கள். தொடர்ந்து வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்கும் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். //

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   //சென்ற பின்னூட்டத்தில் பேட்டிக்கு பதில் போட்டி என்று தவறுதலாய்ப் பதிவாகிவிட்டது.//

   நானும் அதை கவனித்தேன். அவசத்தில் டைப் செய்யும்போது இதெல்லாம் மிகவும் சகஜம் தான்.

   இந்த கடைசி வரிகளை இங்கு தாங்கள் குறிப்பிட்டுள்ளதால் மட்டுமே இரண்டையும் நான் வெளியிட்டு விட்டேன். :)

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 16. முதன்முதலாகக் கோவையிலிருந்து ஏற்கனவே எனக்கு வந்து சேர்ந்துள்ள ‘நேயர் கடிதம்’ இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

  இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/10/blog-post_2.html

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
 17. ஆஹா....பேட்டி மிக அருமை.

  தாமரையை அடையாளமாகக் கொண்டு, தடங்கலின்றி தங்களின் அத்தனை கேள்விகளுக்கும் மிக அழகாக பதில் சொல்லியுள்ள தாமரை தேவியின் முகத்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறது.

  அத்தனை விமரிசகர்களின் ஒட்டு மொத்த எண்ணங்களாக தம் பதில்களை பக்குவமாக, அழுத்தம் திருத்தமாகக் கூறி விட்டார் திருமதி ராஜராஜேஸ்வரி.

  வெற்றியின் சிகரத்தை எட்டிக் கொண்டிருக்கும் அவருக்கு வாழ்த்துக்கள்.

  வித்யாசமான இந்தப் போட்டியை நடத்தி, அதில் பங்கு பெற்றவர்களை இன்னும் எப்படியெல்லாம் கௌரவிக்கலாம் என்று யோசித்து செயல் புரியும் தங்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  புண்ணியாகவசனத்தை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Radha BaluOctober 2, 2014 at 10:55 PM

   வாங்கோ திருமதி ராதா பாலு மேடம், வணக்கம். இன்று நல்லபடியாக சரஸ்வதி பூஜை முடிந்திருக்கும் என நினைக்கிறேன்.

   //ஆஹா....பேட்டி மிக அருமை.//

   சந்தோஷம். :)

   //தாமரையை அடையாளமாகக் கொண்டு, தடங்கலின்றி தங்களின் அத்தனை கேள்விகளுக்கும் மிக அழகாக பதில் சொல்லியுள்ள தாமரை தேவியின் முகத்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறது.//

   உங்களுக்கும் அந்த ஆர்வம் வந்திடுச்சா. நாம் இருவரும் சேர்ந்தே கோவைக்குப் போய் தரிஸித்து விட்டு வருவோமா ? :)))))

   நம் இருவரின் சந்திப்பே இப்போது தான் சமீபத்தில் இனிமையாக நடைபெற்று முடிந்துள்ளது. அதைப்பற்றி மிக சுவாரஸ்யமாக ஓர் பதிவு போட்டிருப்பேன், இந்நேரம் .... இந்த போட்டி வேலைகள் மட்டும் தொடர்ச்சியாக எனக்கு இல்லாமல் இருந்திருந்தால் !

   //அத்தனை விமரிசகர்களின் ஒட்டு மொத்த எண்ணங்களாக
   தம் பதில்களை பக்குவமாக, அழுத்தம் திருத்தமாகக் கூறி
   விட்டார் திருமதி ராஜராஜேஸ்வரி.//

   அழுத்தம் திருத்தமாக ..... என அழுத்தம் திருத்தமாகச்
   சொல்லியுள்ளீர்கள். சாதாரண அழுத்தம் இல்லை. மஹா
   மஹா அழுத்தமாக்கும் ..... அவங்க. :)))))

   //வெற்றியின் சிகரத்தை எட்டிக் கொண்டிருக்கும் அவருக்கு வாழ்த்துக்கள்.//

   சிகரத்தை எட்டியவர்கள் / எட்டிக்கொண்டே இருப்பவர்கள் /
   இனியும் மேலும் எட்டவும் கூடியவர்கள்தான். தங்கள்
   வாழ்த்துகளுக்கு நானே [அவர்கள் சார்பில்] நன்றி கூறிக்
   கொள்கிறேன்.

   //வித்யாசமான இந்தப் போட்டியை நடத்தி, அதில் பங்கு
   பெற்றவர்களை இன்னும் எப்படியெல்லாம்
   கௌரவிக்கலாம் என்று யோசித்து செயல் புரியும்
   தங்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.//

   இந்த போட்டியின் இறுதியில் நடக்கவுள்ள கல்யாண
   அமர்க்களங்களைப் பாருங்கோ. பருப்பில்லாமல்
   கல்யாணமா? கெளரவிக்கப்போகிறவர்கள் பட்டியலில்
   தாங்களும்கூட இருக்கலாம். :))))) காசிக்குப்போய் கங்காஸ்நானம் செய்துவிட்டு, இராமேஸ்வரம் போய்விட்டு சீக்கிரமா வந்துடுங்கோ. தினமும் தொடர்ச்சியாக 10 நாட்களுக்குக் கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெறப்போகிறது.

   சுமார் 20 சாதனையாளர்கள் கெளரவிக்கப்பட உள்ளனர்.
   கூடுதலாக புதிய உபரிப்பரிசுகள் நிறையவே அறிவிக்கப்பட உள்ளன.

   //புண்ணியாஹாவாசனத்தை ஆவலாக எதிர்பார்த்துக்
   கொண்டிருக்கிறேன்!//

   ஆஹா, நீங்கள் இல்லாமலா ! இந்த மாதக்கடைசியில் 25ம்
   தேதியிலிருந்தே நிறைவு விழா களைகட்ட ஆரம்பித்து
   விடும். அதற்கடுத்த ஒரு 10 நாளைக்கு தினமும் பல்வேறு
   புதிய புதிய அறிவிப்புகள் வெளியாகிக்கொண்டே இருக்கும்.

   நல்லபடியா க்ஷேத்ராடனங்களுக்குப்போய் விட்டு, காசி +
   இராமேஸ்வரத்தில் எனக்கும் சேர்த்து வேண்டிக்கொண்டு
   வாங்கோ. பிறகு பேசிக்கொள்ளலாம்.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 18. தோன்றிற் புகழொடு தோன்றுக என்றார் வள்ளுவர். அதற்கு இலக்கணமாக ஒரு ஈடுபாட்டுடன் செயல்களைச் செய்து சாதனை படைத்துவரும் தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்! பேட்டியும் அதற்கான பதிலும் மிக அருமை! தொடரட்டும் இவையாவும்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Seshadri e.s. October 3, 2014 at 7:21 AM

   வாங்கோ, வணக்கம்.

   //தோன்றிற் புகழொடு தோன்றுக என்றார் வள்ளுவர். அதற்கு இலக்கணமாக ஒரு ஈடுபாட்டுடன் செயல்களைச் செய்து சாதனை படைத்துவரும் தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்! பேட்டியும் அதற்கான பதிலும் மிக அருமை! தொடரட்டும் இவையாவும்! நன்றி!//

   தங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

   நீக்கு
 19. நான் இதற்கு போட்ட பின்னூடங்கள் எப்படி காணமால் போய் விட்டது என்று தெரியவில்லை. இணையம் அடிக்கடி மக்கர் செய்கிறது ,போய் போய் வருகிறது அதனால் பதிவாக வில்லையா என்று தெரியவில்லை.
  //ரமணி ஐயாவின் விமர்சனத்தை முன்னோடியாகக்கொண்டும், நடுவர் குறிப்புகளையெல்லாம் அடிப்படையாகக்கொண்டும் எழுதிய விமர்சனங்கள் பரிசு பெற ஆரம்பித்ததும் உற்சாகம் ஏற்பட்டது.. பல திறமையாளர்கள் கலந்துகொள்ளாமல் கற்றுக்குட்டியான எனக்கு வழிவிட்டதும் நான் பரிசு பெற காரணமாக இருந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன்.//

  திருமதி இராஜஜேஸ்வரி அவர்களின் தன்னடக்கம் வியக்க வைக்கிறது. உங்கள் கேள்வியும் அவர்களின் பதிலகளும் மிக அருமை.
  அவர்களின் திறமை கண்டு வியந்து போய் இருக்கிறேன். தினம் ஒரு பதிவு அதற்கு அழகான படங்கள் தேர்வு என்று பதிவு போடுவது ஒரு பெரிய சாதனை.
  வாழ்த்துக்கள் இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அரசு October 3, 2014 at 12:09 PM

   வாங்கோ, வணக்கம்.

   //நான் இதற்கு போட்ட பின்னூடங்கள் எப்படி காணமால் போய் விட்டது என்று தெரியவில்லை. இணையம் அடிக்கடி மக்கர் செய்கிறது ,போய் போய் வருகிறது அதனால் பதிவாக வில்லையா என்று தெரியவில்லை.//

   இணையம் அடிக்கடி மக்கர் செய்கிறது என்பதும் உண்மைதான். பலபேர்களின் கமெண்ட்ஸ் எனக்குக் கிடைப்பதே இல்லை. என் வெளியீடுகளில் 90% டேஷ் போர்டில் காட்சியளிப்பதே இல்லை. தாங்கள் என் இந்தப்பதிவுக்குக் கருத்தளிக்க வராதபோதே எனக்கு சந்தேகமாகத்தான் இருந்தது ... தங்கள் பின்னூட்டம் காக்கா ஊஷ் ஆகியிருக்குமோ என்று :)

   *****ரமணி ஐயாவின் விமர்சனத்தை முன்னோடியாகக்கொண்டும், நடுவர் குறிப்புகளையெல்லாம் அடிப்படையாகக்கொண்டும் எழுதிய விமர்சனங்கள் பரிசு பெற ஆரம்பித்ததும் உற்சாகம் ஏற்பட்டது.. பல திறமையாளர்கள் கலந்துகொள்ளாமல் கற்றுக்குட்டியான எனக்கு வழிவிட்டதும் நான் பரிசு பெற காரணமாக இருந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன்.*****

   //திருமதி இராஜஜேஸ்வரி அவர்களின் தன்னடக்கம் வியக்க வைக்கிறது.//

   என்னைப்போலவே தங்களையும் வியக்க வைத்ததா? :)))))

   அதிலே பாருங்கோ .... இவங்க ஒரு .... கற்றுக்குட்டியாம் !

   சின்ன இளம் கன்னுக்குட்டி போல எவ்வளவு அழகான பதில் பாருங்கோ. :)))))

   //உங்கள் கேள்வியும் அவர்களின் பதிலகளும் மிக அருமை.//

   மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.

   //அவர்களின் திறமை கண்டு வியந்து போய் இருக்கிறேன். தினம் ஒரு பதிவு அதற்கு அழகான படங்கள் தேர்வு என்று பதிவு போடுவது ஒரு பெரிய சாதனை.//

   சாதனையே தான் .... [ஏன்ன்ன்ன் என இழுத்து இழுத்துப்பேசும் தில்லானா மோகனாம்பாள் மனோரம்மா ஆச்சி [ ஜில் ஜில் ரமாமணி ] குரலில் .... ’சாதனையே தான்’ என்பதைச்சொல்லிப்பார்த்து மகிழவும். :)))))

   //வாழ்த்துக்கள் இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு.//
   __________________. :)

   >>>>>

   நீக்கு
 20. பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும் அதே அர்ப்பணிப்புடன், உற்சாகத்துடன், ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பு காணமுடிகிறது.. உடன் பிறந்த அந்த குணங்கள் பின்னிப்பிணைந்து திட்டமிடுதல், நடத்திக்காட்டுதல், இதனை இதனால் இவர் முடிக்கும் என தெளிவுடன் நடுவரைத்தேர்ந்தெடுத்தல், ஆரம்பத்திலிருந்து நடுவர் யார்... நடுவர் யார் என்று சஸ்பென்ஸ் 35 பதிவுகளுக்கு கட்டிக்காத்தது ... நடுவருக்கும் விமர்சனம் எழுதியது யார் என்று இன்றுவரை அறிவிக்காத ஒரு நடுநிலைமை போன்ற நுணுக்கங்கள் எல்லாம் எவ்வளவு திறமையான நிர்வாகச் சிறப்புமிக்கவை என எண்ணிப்பார்த்து வியப்பில் ஆழ்த்துகிறது.. //

  உங்களைப் பற்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் சொன்னதும் மிக சரியே.

  நானும் உங்கள் திறமை கண்டு வியந்து போகிறேன். உங்கள் விடாமுயற்சி எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்யும் உற்சாகம் இவ்ற்ரை இளையவர்கள் உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்.
  இப்படி செய் என்று சொல்வதை விட நடந்தி காட்டினால் அது எல்லோர் மனதிலும் பதிவாகும் . அப்படி போதனை பண்ணாமல் சாதனை செய்து வருகிறீர்கள்.
  நீங்கள் இருவருமே சாதனையாளார்கள். உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அரசு October 3, 2014 at 12:17 PM [2]

   *****பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும் அதே அர்ப்பணிப்புடன், உற்சாகத்துடன், ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பு காணமுடிகிறது.. உடன் பிறந்த அந்த குணங்கள் பின்னிப்பிணைந்து திட்டமிடுதல், நடத்திக்காட்டுதல், இதனை இதனால் இவர் முடிக்கும் என தெளிவுடன் நடுவரைத்தேர்ந்தெடுத்தல், ஆரம்பத்திலிருந்து நடுவர் யார்... நடுவர் யார் என்று சஸ்பென்ஸ் 35 பதிவுகளுக்கு கட்டிக்காத்தது ... நடுவருக்கும் விமர்சனம் எழுதியது யார் என்று இன்றுவரை அறிவிக்காத ஒரு நடுநிலைமை போன்ற நுணுக்கங்கள் எல்லாம் எவ்வளவு திறமையான நிர்வாகச் சிறப்புமிக்கவை என எண்ணிப்பார்த்து வியப்பில் ஆழ்த்துகிறது..*****

   //உங்களைப் பற்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் சொன்னதும் மிகச் சரியே.//

   அவங்க ..... எது சொன்னாலும் அது மிகச்சரியாகவே இருக்கும். :)))))

   //நானும் உங்கள் திறமை கண்டு வியந்து போகிறேன். உங்கள் விடாமுயற்சி எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்யும் உற்சாகம். இவ்ற்றை இளையவர்கள் உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்.

   இப்படி செய் என்று சொல்வதை விட நடத்திக் காட்டினால்
   அது எல்லோர் மனதிலும் பதிவாகும்.//

   எல்லோர் மனதிலும் பதிவாகுமோ என்னவோ தங்களின் அருமையான கருத்துகள் என் மனதில் இப்போ பதிவாகி விட்டன. :)))))

   // அப்படி போதனை பண்ணாமல் சாதனை செய்து
   வருகிறீர்கள்.//

   இதென்ன சோதனை ...... அடுத்தடுத்து போதனை சாதனை
   என்று வேதனை தராத பாராட்டு வார்த்தைகள். :)))))

   //நீங்கள் இருவருமே சாதனையாளார்கள். உங்கள்
   இருவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பாராட்டுகள் +
   வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   >>>>>

   நீக்கு
 21. அடுத்த பேட்டியாளரிடமு இதே கேள்விகள் இதே மாதிரியான பதில்கள் என்றால் கொஞ்சம் போரடிக்கும். கொஞ்சம் மாற்றியமைத்து கேள்விகளைத் தயாரித்துக் கொள்ளுங்கள்.//

  ஜீவி சார் அவர்களின் கருத்தும் அருமை. அவருக்கும் வாழ்த்துக்கள். நடுவர் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருக்காமல் , விமர்சனம் எப்படி இருக்க வேண்டும், கேள்விகள் எப்படி இருக்க வேண்டும், என்றெல்லாம் உற்சாகமாய் தன் கருத்துக்களை சொல்லி வாசகர்களை மேலும் எழுத தூண்டும் ஜீவி சார் போன்ற நடுவரை தேர்ந்து எடுத்த உங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
  நல்ல மாறுதலான கேள்விகள் , பதில்கள் அவற்றை படிக்க ஆவலுடன்.

  இன்னும் ஒருவாரம் இணையம் பக்கம் வர முடியாது.
  அத்தை வீட்டுக்கு (கோவை) போவதால்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அரசு October 3, 2014 at 12:26 PM

   *****அடுத்த பேட்டியாளரிடமு இதே கேள்விகள் இதே மாதிரியான பதில்கள் என்றால் கொஞ்சம் போரடிக்கும். கொஞ்சம் மாற்றியமைத்து கேள்விகளைத் தயாரித்துக் கொள்ளுங்கள்.*****

   //ஜீவி சார் அவர்களின் கருத்தும் அருமை. அவருக்கும் வாழ்த்துக்கள். நடுவர் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருக்காமல் , விமர்சனம் எப்படி இருக்க வேண்டும், கேள்விகள் எப்படி இருக்க வேண்டும், என்றெல்லாம் உற்சாகமாய் தன் கருத்துக்களை சொல்லி வாசகர்களை மேலும் எழுத தூண்டும் ஜீவி சார் போன்ற நடுவரை தேர்ந்து எடுத்த உங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.//

   என் அலுவலகத்தில் என்னை எல்லோருமே அன்புடன்
   அழைத்தது 'வீ.............ஜீ [V.G]' என்ற ஒரு பெரிய ராகத்துடன்
   கூடிய பெயரால் மட்டுமே. இதைப்பற்றிகூட நான் என் பதிவு ஒன்றினில் நகைச்சுவையாக எழுதியுள்ளேன்.

   http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html

   அந்தப்பதிவினில் கீழிருந்து ஆறாவது பாராவில் இதனைக்
   காணலாம். அதில் முக்கியமாக திரு. ரிஷபன் அவர்களின் கருத்தினையும் அதற்கு நான் அளித்துள்ள பதிலையும் தவறாமல் படியுங்கோ.

   வீ.....ஜீ யின் போட்டிகளுக்கு
   ஜீ.....வீ நடுவராக அமையப்பெற்றது என் பாக்யமே.

   ’எங்கோ படித்தது’, ’யாரோ சொன்னது’ என்ற தலைப்புகளில் அவ்வப்போது விமர்சனதாரர்களுக்கு உபயோகப்படக்கூடிய விமர்சனக் குறிப்புகளையெல்லாம் எழுதி என்னைவிட்டு வெளியிடச் சொன்னதெல்லாம் நம் நடுவர் திரு. ஜீவி சார் அவர்களே தான்.

   //நல்ல மாறுதலான கேள்விகள், பதில்கள் அவற்றை படிக்க ஆவலுடன்.//

   வரும் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மேலும் பலரின் மிகச்சிறப்பான கருத்துகள் வெளியிடப்பட உள்ளன.

   //இன்னும் ஒருவாரம் இணையம் பக்கம் வர முடியாது. அத்தை வீட்டுக்கு (கோவை) போவதால்.//

   அத்தை வீட்டுக்கு போவது இருக்கட்டும் .......
   அத்தை விடுங்கோ. :)))))

   ஒருவாரம் போனபின் மெதுவாகப்படித்து விட்டு மறக்காமல் கருத்துச்சொல்லுங்கோ

   அன்புடன் கோபு [VGK]

   நீக்கு
  2. கோமதி அரசு October 3, 2014 at 12:26 PM

   அன்புள்ள Madam,

   நான் மேலே குறிப்பிட்டுச்சொல்லியிருந்த என் பழைய பதிவுக்கும் வருகை தந்து, சிரித்து மகிழ்ந்து, கருத்துச்சொல்லியுள்ள தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   பிரியமுள்ள
   வீ...............ஜீ

   நீக்கு
 22. கேள்விகளும் அருமை.. பதில்களும்அருமை...

  பதிலளிநீக்கு
 23. கே. பி. ஜனா... October 3, 2014 at 4:46 PM

  வாங்கோ, வணக்கம்.

  //கேள்விகளும் அருமை.. பதில்களும் அருமை...//

  கேள்விகளும் பதில்களும் போலவே
  தங்கள் வருகையும் கருத்துக்களும்
  அருமையே.

  நன்றியுடன்
  VGK

  பதிலளிநீக்கு
 24. பதில்கள்
  1. வெங்கட் நாகராஜ் October 3, 2014 at 6:55 PM

   வாங்கோ வெங்கட் ஜி, வணக்கம்.

   //ஸ்வாரசியமான பேட்டி! :)//

   மிக்க நன்றி, ஜி. - VGK

   நீக்கு
 25. வாத்யாரே! வணக்கம்! நலம்தானே! //நான் சாதாராணமானவன்தான்! ஆனால் எதையாவது சாதிக்கவேண்டுமென்று எப்பொழுதும் ''நினைப்பவன்''// எழுதுவதில் உங்களின் சாதனை உலகறிந்தது! இந்த பேட்டி அடுத்த சாதனை! 'வாத்தியார்' என்றாலே 'நினைத்ததை முடிப்பவன்(ர்)'தானே! எனக்கு இதில் ஆச்சரியம் சிறிதும் இல்லை! ஆனால் அளவுகடந்த மகிழ்ச்சி உண்டு! அதில் நான்தான் முதல்! எழுத்துலக அறுசுவை அரசு - அவர் எடுத்த பேட்டி வேறு எப்படி இருக்குமாம்! அருமை! தாமரைப்பூவின் மணத்திற்கு விளம்பரம் வேறு வேண்டுமாக்கும்? இன்னா வாத்யாரே?! என்றும் அன்புடன் உங்கள் எம்ஜிஆர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. RAVIJI RAVI October 5, 2014 at 12:31 PM

   //வாத்யாரே! வணக்கம்! நலம்தானே!//

   அன்புள்ள திரு. ரவிஜி அவர்களே, வாங்கோ, வணக்கம். நான் நலம் தான். தங்களுக்கு என்ன ஆச்சு? என்பது மட்டுமே என் கவலை.

   //நான் சாதாராணமானவன்தான்! ஆனால் எதையாவது சாதிக்கவேண்டுமென்று எப்பொழுதும் ''நினைப்பவன்''// எழுதுவதில் உங்களின் சாதனை உலகறிந்தது! இந்த பேட்டி அடுத்த சாதனை! 'வாத்தியார்' என்றாலே 'நினைத்ததை முடிப்பவன்(ர்)'தானே! எனக்கு இதில் ஆச்சரியம் சிறிதும் இல்லை! ஆனால் அளவுகடந்த மகிழ்ச்சி உண்டு! அதில் நான்தான் முதல்!//

   அளவு கடந்த மகிழ்ச்சிக்கே முதலிடம் வகிப்பதாகச் சொல்லும் தங்களின் மகிழ்ச்சிக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   // எழுத்துலக அறுசுவை அரசு - அவர் எடுத்த பேட்டி வேறு எப்படி இருக்குமாம்! அருமை!//

   தங்களின் அருமையான கருத்துக்களுக்கு என் அன்பான நன்றிகள்.

   // தாமரைப்பூவின் மணத்திற்கு விளம்பரம் வேறு வேண்டுமாக்கும்? இன்னா வாத்யாரே?!//

   :)))))

   //என்றும் அன்புடன் உங்கள் எம்ஜிஆர்//

   வாழ்க !

   பின்குறிப்பு:

   VGK-13 To VGK-30 and VGK-32 ஆகிய 19 போட்டிகளில் மட்டும் கலந்து கொண்டீர்கள். அதில் 13 வெற்றிகளும் பெற்றீர்கள். அதில் 5 முறை முதல் பரிசினையும் வென்றீர்கள். 3 முறை ஹாட்-ட்ரிக் அடித்தீர்கள். எனக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது.

   திடீரென்று VGK-33 முதல் இன்றுவரை உங்களை என்னால் பார்க்கவே முடியவில்லை. அது தான் எனக்கு வருத்தம்.

   என் பதிவுகள் பக்கம் வந்து வழக்கம்போல ஜாலியாகப் பின்னூட்டங்கள் கூட எழுதவில்லை. அப்படி என்ன ஆச்சு உங்களுக்கு?

   எனினும் இந்த போட்டிகளின் நிறைவு விழாவில் தங்களின் சாதனைகளையும் கெளரவிக்கத்தான் உள்ளேன் என்பதை மட்டும் இங்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

   எங்கிருந்தாலும் எந்த சூழ்நிலையில் தாங்கள் இருந்தாலும் வாழ்க ! வாழ்க !! வாழ்க !!! என வாழ்த்தி மகிழ்கிறேன்.

   என்றும் அன்புடன் VGK

   நீக்கு
 26. பேட்டியை சிறப்பாக வெளியிட்டமைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்..! வாழ்க ! வாழ்க !!
  இனிய அன்பு நன்றி.
  Vetha.Langathilakam.

  பதிலளிநீக்கு
 27. //kovaikkavi October 8, 2014 at 11:08 AM
  பேட்டியை சிறப்பாக வெளியிட்டமைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்..! வாழ்க ! வாழ்க !!
  இனிய அன்பு நன்றி.
  Vetha.Langathilakam.//

  வணக்கம்.

  தங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுகள் +
  வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

  பதிலளிநீக்கு
 28. அன்பின் வை.கோ

  மறுமொழிகள் அனத்துமே அருமை - பொறுமையாகப் படித்தேன் - இரசித்தேன் - மகி\ழ்ந்தேன் .

  பேட்டி எட்டுப்பவரும் பேட்டி கொடுப்பவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் பேட்டியினைச் சரியாக - ச்றப்பாகக் கொண்டு சென்ற விதம் நன்று.

  மறுமொழிகள் நீண்ட மறுமொழிகளாக கருத்துகள் நிறைந்த மறுமொழிகளாக இருந்தது பாராட்டூக்குரியது.

  பாராட்டுகள் மற்றும் நல்வாழ்த்துகள் மறுமொழியாளர்களுக்கும் வைகோவிற்கும்.உரித்தாகுக.

  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. cheena (சீனா) October 25, 2014 at 2:24 AM

   //அன்பின் வை.கோ //

   வாங்கோ என் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே, வணக்கம் ஐயா.

   //மறுமொழிகள் அனத்துமே அருமை - பொறுமையாகப் படித்தேன் - இரசித்தேன் - மகி\ழ்ந்தேன் .//

   ஆஹா, மிகவும் சந்தோஷம் ஐயா. பதிவினை மட்டுமல்லாது மறுமொழிகளையும் அதற்கு நான் தரும் பதில்களையும் படித்து மகிழ்ந்து ரஸித்துப்பாராட்டுவோர் தங்களைப்போன்ற மிகச்சிலர் மட்டுமே. அவர்களை என்னால் விரல்விட்டு மிகச்சுலபமாக எண்ணிவிடவும் முடியும். அதுதான் உங்களின் ஸ்பெஷலிடியே ! :))))) You are So Great ! :)))))

   //பேட்டி எட்டுப்பவரும் பேட்டி கொடுப்பவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் பேட்டியினைச் சரியாக - சிறப்பாகக் கொண்டு சென்ற விதம் நன்று. //

   ஆஹா. இதைத்தாங்கள் இங்கு வருகை தந்து சளைக்காமல் படித்து நன்கு எடுத்துச் சொன்னதை மட்டும்தான் தனிச்சிறப்பாக நான் உணர்கிறேன்.

   //மறுமொழிகள் நீண்ட மறுமொழிகளாக கருத்துகள் நிறைந்த மறுமொழிகளாக இருந்தது பாராட்டுக்குரியது.//

   அனைவருமே தங்களைப்போலவே என் மீது அளவுகடந்த அன்பு செலுத்தி வருபவர்கள். அதனால் அவர்களின் மறுமொழிகளின் நீள அகல ஆழமும் கருத்துச்செறிவும் சற்றே அதிகமாக இருப்பதில் வியப்பேதும் இல்லை. இதைத்தாங்கள் இங்கு எடுத்துச்சொன்னதும் மிகவும் பாராட்டுக்குரியதுதான்.

   //பாராட்டுகள் மற்றும் நல்வாழ்த்துகள் மறுமொழியாளர்களுக்கும் வைகோவிற்கும்.உரித்தாகுக.
   நட்புடன் சீனா //

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகாக விளக்கமாக, உணர்ந்து சொல்லியுள்ள கருத்துகளுக்கும், பின்னூட்டமிட்டுள்ளவர்களையும் என்னையும் சேர்த்தே பாராட்டி நல்வாழ்த்துகள் அளித்துள்ள தங்களின் தனிச்சிறப்புக்கும், பெருந்தன்மைக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

   இந்த அக்டோபர் மாதம் மட்டும் என் வலைத்தளத்தினில் அவ்வப்போது வெளியாகிக்கொண்டிருக்கும் ’நேயர் கடிதம்’-2 to ’நேயர் கடிதம்’-12 அவசியமாக நேரம் கிடைக்கும்போது படியுங்கள் ஐயா. அவை என்னை உன்னிப்பாக கவனித்துவரும் தங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாகவே இருக்கும்.

   அவற்றை தாங்கள் படித்தால் மட்டும் தான் இதுவரை தொடர்ச்சியாக 40 வாரங்களாக தொய்வின்றி நடைபெற்று வெற்றிகரமாக முடியும் தருவாயில் உள்ள என் சிறுகதை விமர்சனப்போட்டிகள் பற்றிய விரிவான விளக்கங்களையும், முழு விபரங்களையும் தாங்கள் அறிய முடியும்.

   பிரியமுள்ள கோபு [VGK]

   நீக்கு
 29. திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுடனான பேட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 30. பின்னூட்டத்தில் எல்லாருமே சொல்லி இருப்பது போல பேட்டி ரொம்ப சுவாரசியமா இருக்கு.

  பதிலளிநீக்கு
 31. ரொம்ப சுவாரசியமான பேட்டி.

  உங்களையும் ஒரு பேட்டி எடுக்க வேண்டும் கோபு அண்ணா

  பதிலளிநீக்கு
 32. இந்த பதிவு வித்தியாசமா இருந்திச்சி. பேட்டி எடுத்த ஒங்க கேள்விகளுக்கெல்லாம் சிக்கிகிடாத அளகா பதில சொல்லினாங்க மேடம். கமண்டுகளயும் படிச்சு போட்டேன். இன்னமும் வித்தியாசமா கேள்வி கேக்க ஐடியா வேர கொடுத்திருக்காக.

  பதிலளிநீக்கு
 33. பேட்டியும் சுவாரசியமான பின்னூட்டங்களும் ரொம்ப நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 34. 'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html தலைப்பு: ’இன்று போல் என்றும்’

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு