என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

VGK-37 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - ’எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு...‘
 

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு : VGK-37   


 ’ எங்கெங்கும்... 


எப்போதும்... 


என்னோடு... ‘  


 


 


  

இணைப்பு:     

மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு 

மிக அதிக எண்ணிக்கையில் 

பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 

அவர்கள் அனைவருக்கும் 

என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.  
 நடுவர் திரு. ஜீவி  

இந்தக் கதைக்கான நடுவரின் சிறப்பு விமர்சனம்

நாளை 13-10-2014 திங்கட்கிழமையன்று 

தனிப்பதிவாக வெளியிடப்பட உள்ளது.

படிக்கத் தவறாதீர்கள்.

நம் நடுவர் அவர்களால் 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள

விமர்சனங்கள் மொத்தம் :ஐந்துஇந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் நம் பாராட்டுக்கள் + 

மனம் நிறைந்த இனிய  நல்வாழ்த்துகள். 
  


மற்றவர்களுக்கு: 

    

முதல் பரிசினை முத்தாக
வென்றுள்ள விமர்சனம் - 1
சிறுகதையைப் படித்து முடித்ததும் மனதில் தோன்றிய சொல் poignant. 

இதற்கான சரியானத் தமிழ்ச்சொல் தெரியவில்லை. 'நெஞ்சைத் தொடும்'?. 
நெஞ்சைத் தொட்டக் கதை என்றே இப்போதைக்கு வைத்துக்கொள்வோம்.

தலைப்பைப் படித்ததும் காதல், பக்தி, நேயம்... இந்த வகைகளில் ஒரு கதை என்று நினைத்தேன். இவையெல்லாம் கலந்த மென்மையான சோகம் 
சேர்த்தப்புத்துணர்வுக் கதை என்பது படித்து முடிக்கையில் புரிந்தது. 
இதுவரை படித்த சிறுகதைகளிலிருந்து சற்றே விலகிய கரு. சிந்திப்பதற்கும் 
செயலாற்றுவதற்கும் இடையிலான சிக்கலில் பிறந்த கதை.

சிந்தனையின் நிறைவை விடச் செயலின் நிறைவு பன்மடங்கு பெரிது. 

சிந்தனையில் உதித்த பல, செயலாகாமாலே நின்றுவிடுகின்றன என்பதை அறிவோம். எனில், செயல் என்பது என்ன? எப்படி உருவாகிறது? 
சிந்தனைப்பொறியிலிருந்து செயல் தீ எப்படிப் பரவுகிறது? ஏன் பரவுகிறது? 
ஒரு உந்துதல். 

முதுகில் ஒரு தள்ளு. ஷொட்டு. வேகம். ஆத்திரம். முனைப்புக்கான விதை,
உரம், நீர். சொடுக்கு. சாட்டை. எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். 
எதைச் செய்யவும் ஒரு காரணி தேவைப்படுகிறது. சிலருக்குகாலையில் 
படுக்கையிலிருந்து எழுவதற்கு ஒரு உந்துதல் தேவைப்படுகிறது. சிலருக்கு சாப்பிட்ட தட்டை எடுத்துக் கழுவவோ, அல்லது கழுவுமிடத்தில்
போடவோ கூட, முனைப்பு தேவைப்படுகிறது. சிலருக்கு சாப்பிடவே உந்துதல்
தேவைப்படுகிறது. சிலருக்குப் படிக்க. சிலருக்கு வேலை தேட. சிலருக்கு
வேலையில் தொடர. சிலருக்குப் பதிவெழுத.
செய்ய வேண்டும் என்று மனம் துடிக்கிறதுசெய்ய முடியாமல் உடல் தடுக்கிறது
மனதுக்கும் உடலுக்கும் இடையிலான இழுபறிஅல்லது மனதுக்கும் உடல் 
என்றபெயரில் நிழல் மனதுக்குமான இழுபறி எனலாமாஉந்துதல் இல்லாமல் 
செயல்இல்லை.


இந்தச் சிறுகதையில் கதாநாயகருக்கு உடலெடை சீராக்க நடை பழக வேண்டிய
அவசியம் உண்டாகிறதுஅதற்கான உந்துதல் தேவைப்படுகிறதுஇந்த உந்துதல்
அல்லது முனைப்பின் விசை அல்லது விதை... இது எங்கிருந்து வேண்டுமானாலும்
வரலாம்எப்படி வேண்டுமானாலும் வரலாம்கதாநாயகருக்கு ஒரு பெரியவருடனான 
தற்செயல் சந்திப்பில் வருகிறதுஇந்த உந்துதல் இருக்கிறதே உந்துதல்.. அது உந்துதல் 
என்றே பலருக்குப் பல நேரம் புரியாமல் போகக் கூடும்செய்ய வேண்டியதைச் 
செய்யாமல் விட்டுப் பிற்பாடு, அடடாஅது உந்துதல் என்றுதெரியாமல் போனதே?!' 
என்ற ஞானோதயம் பிறக்கும்.

பள்ளித் தேர்வில் நூற்றுக்கு இருபது மதிப்பெண் எடுப்பதிலிருந்து வேலைகாதல்
உறவுநட்பு வகைகளைத்தொலைப்பது வரை இந்த 'அடடா!' சற்றுத் தாமதமாகவே 
வந்து உறுத்தும்மெதுக்கான போதிமரம்இந்த அடடா அறிவுகதாநாயகருக்கும் 
காலம் கடந்துவருகிறதுபலருக்கு எந்தக் காலத்திலும் 'அடடா!' அறிவு வந்துப் 
பலனிராதுசிலருக்கு இதயத்தில் முள் தைத்து மனம் ஆறும்மனம் மாறும்
கதாநாயகர், மனமாறும் சிறுபான்மைஅந்தத் தருணத்திலிருந்து அவருடைய 
'அடடா!' அடங்கி இயல்பாகி விடுகிறதுமுனைப்பாகி விடுகிறதுஉந்துதல் விளக்கு 
பளிச்சென்று எரியத் தொடங்குகிறது.


இதான் கதைபுரிந்ததா?


கதாநாயகனைத் தன்னிலைப்படுத்திக் கேலி செய்து கொள்வதாக எழுதுவது 
ஒருவகை நகைச்சுவைசுலபமான உத்திகல்கிதேவன்குஷ்வந்த் சிங் போன்ற
நம்மூர்க்காரர்களும் oscar wilde, wodehouse, mark twain போன்ற 
வெளியூர்க்காரர்களும் இந்த வகையில் நிறைய எழுதியிருக்கிறார்கள்
எளிமையாகக்கதையைத் தொடங்க இந்த உத்தி பயன்படுகிறது


கதாசிரியர் இந்த உத்தியை நன்றாகக் கையாள்கிறார்கதை முழுதும் இந்தத் 
தன்னிலைக் கேலி ரசிக்குமாறு விரவியிருக்கிறதுஇதனால்தான் கதை முடிவின் 
திடீர் அதிர்வு, மிக்சியில் சிக்கியத்தக்காளித் துண்டு போல் சிக்கென்று நெஞ்சை 
உலுக்கிப் பிசைகிறது.


[...என்னுடைய உடல் எடை மிகவும் அதிகம் என்பது எனக்கே நன்றாகத் தெரியும்.
என்ன செய்வதுசூதுவாது இல்லாதவன் நான்யாரையும் வருத்தப்பட 
வைக்கமாட்டேன்..." ]

அட, கள்ளமற்ற உள்ளம் எடை கூட்டுமா என்ன? புதிதாக இருக்கிறதே என்று
எண்ணுகையில் அடுத்த வரி. ["..நானும் என் உடம்பை எதற்கும் வருத்திக்கொள்ள மாட்டேன். ரொம்பவும்
மசமசப்பான பேர்வழி நான் என்று என் காது படவே என் மனைவி முதல்
மாமனார் மாமியார் வரை எல்லோருமே சொல்லி வந்தது...].


ஆகாஇங்கே இருக்கிறது இவருடைய உடலெடை உந்துதல்
அடுத்த வரிகளைப்படித்தால் இந்த உந்துதலின் ஆட்சி புரியும்
நகைச்சுவை என்றாலும் படித்து முடித்ததும் அருவருப்பு 
கலந்த பயம் வந்து விடுகிறது.


நான் அதிகமாக வாரி வளைத்து சாப்பிடக்கூடியவனும் கிடையாது
காய்கறிகளில் பலவற்றைப் பிடிக்காது என்று தவிர்த்து விடுபவன்
திரும்பத் திரும்ப  சாம்பார்சாதம்குழம்பு சாதம்ரஸம் சாதம்மோர் சாதம் 
என்று கை நனைத்து பிசைந்துசாப்பிட சோம்பலாகி விடுகிறது எனக்கு.
கையில் ஒட்டாத டிபன் அயிட்டங்களான காரசாரமான அடைமுறுகலான தோசை,
பூப்போன்ற மிருதுவான இட்லிபூரி மஸால்ஒட்டலுடன் கூடிய காரசாரமான
குழம்புமா(வுஉப்புமாமோர்மிளகாய் போட்டுநிறைய எண்ணெயைத் 
தாராளமாகவிட்டுச் செய்த அல்வாத்துண்டு போன்ற மோர்களி
சேவைநாழியில் கையால் பிழிந்த சேவை (இடியாப்பம்
முதலியன என்றால் ஒரு பிடி பிடித்து விடுவதுண்டு

வடைபஜ்ஜிஉருளைக்கிழங்கு போண்டாவெங்காய பக்கோடாசிப்ஸ்
தட்டை(எள்ளடை), முறுக்கு என்றால் ஒரு பிரியமும்அவற்றுடன் ஒரு 
தனிஆவர்த்தனமும் செய்வது உண்டு.  படுக்கை பக்கத்தில் எப்போதும் 
ஸ்டாக் வைத்துக்கொண்டுநேரம் காலம் இல்லாமல் இத்தகைய நொறுக்குத் 
தீனிகளுடன்கரமுராவென்று உரையாடிஉறவாடி வருவேன். ]


காரசார அடைமுறுகலான தோசைபூப்போன்ற இட்லி
எண்ணையைத் தாராளமாகவிட்டுச் செய்த மோர்க்களி அல்வாத்துண்டு... 
படிக்கப் படிக்க நாவிலும் வயிற்றிலும் என்னவோ செய்கிறதே
கதாநாயகர் தன்னைச் சூதுவாது அறியாதவரென்று சொல்வது நன்றாக விளங்குகிறது
உடல் நலம் பாதிக்கும் என்ற அறிவில்லாமல் நடக்கக்கூடிய எளிய மனது என்பது, 
பச்சாதாபம் கடந்த திகில்படிக்கும் பொழுதே நமக்கு உறைக்கிறது
அதை நகைச்சுவையான தன்னிலைக் கேலி மிதப்படுத்துகிறது உண்மைஹ்ம்ம்.. எளிய போண்டா பகோடாவில் இத்தனை ஒளிந்திருக்கிறதா?
கதாநாயகர் மருத்துவரிடம் ஆலோசனை கேட்க, 
மருத்துவர் இவரை தினம் நடக்கச் சொல்கிறார்.

கதாசிரியரின் கேலி நகைச்சுவை எழுத்து, சில சமயம் வைஜயந்திமாலா முறுவல்.. 
சில சமயம் வீரப்பா அதிரடிச் சிரிப்பு. (வை, வீ இடையே போட்டியா? 
கதாசிரியர் எழுத்தில் மட்டுமே இந்த விசித்திரம். 
இந்தக் காலத்தில் யார் வைஜயந்தி? யார் வீரப்பா? 
அதற்கேற்றாற்போல் மாற்றிக் கொள்ளவும்)


[ "உடலின் எடையைக் குறைக்க வேண்டும் என்ற ஆவலில் டாக்டர் ஒருவரை சந்தித்தேன்
உங்கள் உயரம் மற்றும் வயதுக்கு ஒரு 75 கிலோ வரை இருக்கலாம் .... ஆனால்
நீங்க 96 கிலோ எடை உள்ளீர்கள் .... 21 கிலோ எடையைக் குறைக்க வேண்டும்
என்று சொன்னார்அந்த டாக்டர்.
"சரி ..... அப்படியானால் உடனடியாகக் குறையுங்கோ ..... டாக்டர்” 
என்றேன் அப்பாவியாக நானும்" ]

இந்த ஹிவைஜயந்திமாலா.


[ ”நான் குறைப்பதா ! நீங்கள் தான் உங்கள் எடையைக்குறைக்க வேண்டும்”  
என்றார் அந்த டாக்டர்.
என் எடையை நானே குறைப்பதற்கு உங்களுக்கு கன்சல்டிங் ஃபீஸ் நான் தரவேண்டுமா?” 
என என் மனதில் நான் நினைத்துக்கொண்டேன். ]

இந்த ஹிஹாஹி வீரப்பா.


[..என் உடல்வாகு அப்படி.  என் தாத்தாஅப்பா என்று பரம்பரை ஜீன்ஸ் அப்படி.  
அது புரியாமல் அந்த டாக்டர்என்னைப் போய் நடக்கச் சொல்கிறார்.  
நடக்கற .........காரியமா அது! ]

இந்த ஹி மாலா.


[..ஒரு அரை கிலோ மீட்டர் போவதற்குள் எனக்கு நாக்கு தள்ளிப் போச்சு
அங்கிருந்த ஒரு கடையில் பன்னீர் சோடா ஜில்லென்று ஒன்றுக்கு இரண்டாக 
வாங்கிக் குடித்துவிட்டுஅங்கிருந்த டீக்கடை பெஞ்ச் ஒன்றில் ஒரு கால் மணி நேரம்
ஓய்வெடுத்துக்கொண்டுமீண்டும் பல்லைக் கடித்துக் கொண்டுஎன் 
நடைபயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டேன்ஒரு நடைப் பிணம் போல.
மேலும் ஒரு கால் கிலோ மீட்டர் தான் சென்றிருப்பேன்... 
சுற்றும் முற்றும்பார்த்தேன்.  ரோட்டோரமாக சூடாக வடை,
பஜ்ஜி போட்டு விற்கும் கைவண்டிக்கடைகண்ணில் பட்டது
..உடலுக்கும் உள்ளத்திற்கும் தெம்பு ஏற்பட நாலுவடைகளும்
நாலு பஜ்ஜிகளும்மட்டும் சூடாக வாங்கி உள்ளே தள்ளினேன்
உணவுக் கட்டுப்பாடு விஷயமாக டாக்டர் எச்சரித்திருந்ததால்
சூடாகவும் சுவையாகவும் இருப்பினும் அதற்கு மேல் வாங்கி 
சாப்பிட என் மனசாட்சி இடம்கொடுக்கவில்லை ]


ஒரு கிலோமீட்டருக்கும் உள்ளாக இரண்டு பன்னீர் சோடா
நாலு பஜ்ஜிநாலுவடை..! மனசாட்சி அறிவுறுத்தலினால் 
நிறுத்துகிறார் நாயகர்!!


இந்த ஹிஹாஹி வீரப்பா.


பெளர்ணமியன்று இதே மலையை அரை மணி நேரத்தில் 3 சுற்று 
சுற்றிவருபவர்களும் உண்டு.  நான் என்ன செய்வது?  அவ்வாறு 
வேகவேகமாகச் சுற்றிவருபவர்களைப் பார்த்தாலே எனக்கு கால் 
வலிப்பது போலத் தோன்றும் ]

மாலா.


ஆனால் நான் நடந்து செல்லும் இந்த நகரத்தின் மலையைச் சுற்றியுள்ள 
நான்குவீதிகளில்மனிதன் நடந்து செல்வதே மிகவும் கஷ்டமாக உள்ளது
கொஞ்சம் அசந்தால் நம் முழங்கையை ஒரு சைக்கிள்காரர் பெயர்த்துச் சென்று விடுவார்.  
சற்றுநம் நடையில் வேகம் காட்டினால் போச்சு - காலின் மேல் ஆட்டோவின் பின்சக்கரத்தை 
ஏற்றி விடுவார் ஒரு ஆட்டோக்காரர்.  இவர்களுக்காக சற்றே ஒதுங்கினால் நம் கால்
ஆங்காங்கே தெருவில் வெட்டப்பட்டுமூடப்படாமல் உள்ளசாக்கடைக் குழிக்குள் 
நம்மை இறக்கிவிடும். இந்த லட்சணத்தில் கால் வீசி வேகவேகமாக நடக்க நான் என்ன 
ஒட்டடைக்குச்சியோ அல்லது ஓமக்குச்சியோ போல ஒல்லியானவனா என்ன! ]

வீரப்பா.


'சபாஷ்சரியான போட்டி!' என்று விசித்திரத்தை ரசிக்க முற்படுகையில், 
நடை பழகத் தொடங்கிய கதாநாயகர் கண்களில் ஒரு திண்ணை தென்படுகிறது
கதை ரயில் தடம் மாறுகிறது.
அதற்கு முன்திண்ணைகள் பற்றிய ஒரு தகவல்.


அந்தக் காலத்தில் மனிதாபிமானம் மிக்கவர்கள்
அவரவர் வீடு கட்டும்போதுவாசலில் பெரிய பெரிய திண்ணைகள் 
திண்டுடன் கட்டி வைப்பார்கள்வழிப்போக்கர்களும்ஊர் விட்டு ஊர் செல்வோரும்
ஆங்காங்கே சற்று நேரம் இத்திண்ணைகளில் அமர்ந்து ஓய்வு எடுத்துச் செல்ல வசதியாக இருந்தது. ]


திண்ணைக்கு இப்படி ஒரு பயன்பாடாஇதுவரை அறியாதிருந்தேன். 'முகமறியாப் பயணிகளுக்கு உதவட்டும்என்று வீட்டு வாசலில் திண்ணை 
கட்டினார்களா முன்னோர்கள்? 'யாதும் ஊரே யாவரும் கேளிர்என்பது பேச்சுக்கழகு,
கவைக்குதவாது என்று அடிக்கடி நினைப்பதுண்டுதிண்ணை கவைக்குதவிய 
உதாரணமானது மண்டையில் அறைகிறதுமுன்னோர்களுக்கிருந்த மனப்பக்குவம் 
நம்மிடம் இல்லையேஏன்இந்தக் கேள்வி குடைகிறதுமுன்னோர்களை விட 
எல்லா வகையிலும் மேற்பட்டவர்கள் நாம் என்று நினைப்பவன் நான்
பரோபகாரச்சிந்தனையுடன் திண்ணை கட்டினார்கள் பெரியவர்கள் 
என்றால் நாம் கொஞ்சம் சரிந்திருக்கிறோம் என்ற எண்ணத்துடன் 
கதையைத் தொடர வேண்டியிருக்கிறது.  (அதற்காக ஊர்க்காரர் நிறுத்தட்டும் 
என்று கார் பார்க்கிங்க் கட்ட முடியுமா என்னஎன் மனசாட்சி. ஹிஹி.)
கதாநாயகர் திண்ணையில் அமர்ந்திருக்கும் பெரியவரை சந்திக்கிறார்.


சந்துக்கு உள்ளடங்கிய திண்ணையில் என் உருவத்தில் முக்கால் வாசியானவரும்
சற்றே குள்ளமான கறுப்பான ஒரு பெரியவர்கையில் செய்தித்தாளுடன்அருகே ஒரு 
கைத்தடியை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.  கால் கடுத்துப் போன நான் அவர் அருகில் 
உள்ள மற்றொரு திண்ணையில் கஷ்டப்பட்டு குனிந்து உட்காரலாமாஎன யோசித்து 
என் கைக்குட்டையால் ஒரு தட்டுத் தட்டினேன். ]

திண்ணையின் கட்டுமானம் புரிகிறதுகூடவே ஜாதியுணர்வும்.


[நீங்கள் பிராமணர் தானே?” என்றார் மிகச்சரியாக என்னைப் பார்த்த மாத்திரத்தில்.
ஜாதிகள் இல்லையடிப் பாப்பா” என்று முண்டாசுக் கவிஞர் சொன்னதை நினைவூட்டினேன்
நீங்கள் பிராமணர் தானே”  என்றார் மீண்டும் மறக்காமல்.
அப்படித்தான் எல்லோரும் சொல்லுகிறார்கள்” என்றேன்.
அப்போ நீங்க பிராமணர் ஜாதி இல்லீங்களா?”  என்றார்.
ஜெயா டி.வி.  யில் “எங்கே பிராமணன்” பார்த்து வந்ததால் 
எனக்கே இதில் இப்போது ஒரு பெரிய சந்தேகம் ” என்றேன். 
புரிந்து கொண்டவர் சிரித்துக்கொண்டே தன்னுடைய ஜாதியைக் கூறினார்,]


ஜாதியுணர்வு மூச்சு நின்றால் மட்டுமே மறையும் என்பதற்கு 
இந்தக் கதைச் சம்பவம் உதாரணம்

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஜாதி லென்ஸ் வழியாக நம் பார்வை 
போவது தவிர்க்க முடியாததாகிப் போய்விட்டது. கடவுள் நம்பிக்கையிலிருந்து
சடங்குககளிலிருந்து சாதாரண பேச்சு வார்த்தை வரை ஜாதி என்பது 
உள்ளுக்குள் நெய்யப்படும் உபத்திரவப் பட்டாகிப் போனது. உலகம் முழுதும் 
இதே கதை. 

கதைமாந்தர்கள் என்று இல்லை. எங்கே போனாலும் இதை அனுபவிக்க முடிகிறது. 
சந்திப்பவர்களின் நிறம், பேச்சு, வளர்ச்சி, பணம், அந்தஸ்து என்றப் புறஅடையாளங்களில் 
நிறையோ குறையோ காணும் பாங்கு மாறவேயில்லை. இத்தனை முன்னேற்றம் 
முற்போக்கு என்று வந்திருந்தாலும் அடிப்படையில் ஒருகுறுகிய கண்ணோட்டம் - 
தொடர்ந்து வருகிறது. உள்ளிழுக்கும் மூச்சு வெற்றாக இருந்தாலும் வெளிவரும் 
மூச்சில் ஜாதிக் கலவை. வருத்தப்படுவதா அல்லது விடுவதா?


கதாநாயகரை விட அந்தப் பெரியவருக்கு முப்பது வயது போல் அதிகம். 

(வைகோ அல்லது ஜீவி இருவரில் ஒருவர் இதை மிகச் சரியான 
எண்ணிக்கைக்குத் திருத்துவார்கள் என்று பந்தயம் கட்டுகிறேன்). 

பெரியவர் தினம் நடப்பவர். எனினும் பெரியவருக்கு மூட்டுவலி. 
திண்ணையில் அமர்ந்திருக்கிறார். அருகே பளபளக்கும் அழகான 
உறுதியானவேலைபாடுகளுடன் கூடிய புதிது போன்ற கைத்தடி.  
கதாநாயகர் கைத்தடி பற்றி வியக்கையில், எதிரே சைக்கிளில் 
இளநீர் விற்பவர் வருகிறார். சூதுவாது அறியாத கதாநாயகர் சும்மா இருப்பாரா?


எனக்கும் அந்தப் பெரியவருக்கும் இரண்டு இளநீர்நல்ல வழுக்கையாக
பெரியதாகசுவையான நீர் நிறைந்ததாகச் சீவச் சொன்னேன். ]


அதானேஇனிமேல் உடலெடை குறைக்க நடை பழகுவதென்றால் 
கதாநாயகர் போன்ற ஒருவருடன் போக வேண்டும்
அல்லது போக வேண்டாம்
வீட்டில் உட்கார்ந்தே குறைவாகச் சாப்பிட்டிருப்பார் போலிருக்கிறதே?
தொடர்ந்து வரும் தத்துவம் கொஞ்சம் கனமானது.


[ 7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடனும், 70 வயதுக்கு மேற்பட்ட
பெரியவர்களுடனும் பொறுமையாகப் 
பேச்சுக்கொடுத்துப் பேசினால்
நமக்கு நிறைய புதுப்புதுவிஷயங்கள் கிடைக்கும்.   
அவர்கள் இந்த உலகத்தைப் பார்க்கும் பார்வை 
புதுமையானதுவித்யாசமானது
புதுப்புது அனுபவங்களை எடுத்துச் சொல்லக்கூடியது. ]


இதில் உண்மை கொஞ்சம் அடங்கியிருக்கிறது
என் அனுபவத்தில் 60-70 வயதுக்காரர்கள் புலம்பல் கேஸ். 
எங்கள் காலத்தில் இப்படி இருந்தோம் இந்தக்காலத்துப்பிள்ளைகள் 
உருப்படாதவர்கள் எதுவுமே தெரியவில்லை.. என்ற ரீதியில் காழ்ப்புணர்ச்சி 
கலந்த சிந்தனைகளாகவே இருக்கின்றன இவர்கள் பேச்சு
உலகத்தில் கோலோச்சிவந்தவர்கள் ஓய்வு பெற்றதும் அதை 
இயல்பாக்கிக் கொள்ள முடியாமல் தவிப்பதால் இருக்கலாம்


70- 80 வயதில், யாரும் தன்னை மதிக்கவில்லையே பெரியவர் என்ற 
மரியாதையில்லையே என்ற தன்னிரக்கத்தினால் உண்டாகும் வெறுப்புச் 
சிந்தனைகள்பெரும்பாலும் இப்படிப்பட்டவர்களாகவே சந்திக்கிறேன்


80 வயது கடந்ததும் திடீரென்று ஒரு பக்குவம்
பட்டினத்தார் குமரகுருபரர் அரிஸ்டாடில் மனநிலை
புலம்பியவர்கள் எல்லாரும் ஞானிகள் போல் பேசத் தொடங்குகிறார்கள்
கள்ளமும் காழ்ப்பும் காணாமல் போகிறதுபிள்ளைகள் போல் ஒரு நேர்மை
இது முதிர்ச்சியாஅல்லது முதிர்ச்சி என்பதே ஒரு வட்டமா
கிள்ளையும் கிழமும் ஒன்றாதடம் மாறிச் சிந்திக்கவைக்கிறது கதை.


ந்திக்கும் கதைமாந்தர்கள் என்னவோ முதியவர்கள்
எனினும், அவர்கள் முதிர்ச்சியினிடையே அகழி ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே முதிர்ச்சி பாலம் கட்டவேண்டிய நிலையில்
கதாநாயகருக்கான புத்தறிவு விதைக்கப்படுகிறது

திண்ணையில் அமர்ந்து உரையாடியதில் இருவருக்கும் மன நிறைவு.


[ “உங்களை இன்று சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி
அடிக்கடி இந்தப் பக்கம் மாலை வேளையில் 5 மணி சுமாருக்கு வரும் போதெல்லாம் 
நான் இந்தத் திண்ணையில் இருக்கிறேனா என்று பார்த்து விட்டு
கொஞ்சம் நேரம் பேசிவிட்டுப் போங்க” என்றார். ]

விடைபெற்று எழுகிறார் கதாநாயகர்.தாழ்வான அந்தத் திண்ணையிலிருந்து எழும் போதே 
என்னைத் தள்ளி விடுவது போல உணர்ந்தேன்.  
இனிமேலும் நடந்தால் சரிப்பட்டு வராது என்று அங்கே வந்து நின்ற 
ஆட்டோவில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன்.
...பழக்கமே இல்லாமல் இன்று ரொம்ப தூரம் நடந்து விட்டு வந்திருக்கிறோம் 
என்ற நினைப்பிலேயேஇரவு பலகாரம் சாப்பிட்டு விட்டுஇரண்டு கால்களுக்கும் 
ஆயிண்மெண்ட் தடவிகொண்டு
படுத்தவன் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்து விட்டேன் .]


அதானேஒரு கிலோமீட்டருக்கும் குறைவாக நடந்து 
இடையில் இரண்டு பன்னீர் சோடாநாலு வடைநாலு பஜ்ஜி
பெரிதாக வழுக்கையுடன் கூடிய இரண்டு இளநீர்,
கொஞ்சம் திண்ணையில் ஆர அமற உட்கார்ந்து பேசிய ஓய்வு.. 
பலகாரம் சாப்பிட வேண்டாமா பின்னேகாலுக்கு ஆயின்ட்மென்ட்.. 
அடஅது வேறாபலே பலே!


அடுத்த இரண்டு நாட்கள் மழை காரணமாக நாயகர் நடை பழகவில்லை
முதல் தேதியிலிருந்து மறுபடி தொடங்குகிறார்
சோம்பல் குறுக்கே வருகிறதுஒரு வழி ஆட்டோ என்றுத் தீர்மானித்து 
ஆட்டோவில் ஏறித் திண்ணை வீட்டுச் சந்தில் இறங்கிக் கொள்கிறார்


இவரெல்லாம் என்றைக்கு நடந்து என்றைக்கு எடை குறைத்து.. 
என்று நாம் எண்ணுகையில் திண்ணைக்கு வந்துவிடுகிறார் நாயகர். அங்கே வெகு நேரமாக உட்கார்ந்தும் பெரியவர் வரவில்லை.
பெரியவர் வரவில்லைபெரியவர் வரவில்லை. பெரியவர் வரவில்லை.பெரியவர் வருகிறது.
திடுக்கிடுகிறார் கதாநாயகர்


தொடர்ந்து அவர் செய்யும் செயல்கள் நம்மைக் கலங்க வைக்கின்றன. 
வேலைப்பாடுகளுடன் கூடிய கைத்தடி இனிப் பெரியவருக்கு உதவாது 
என்ற நிலையில்அதைக் கேட்டு வாங்கிக் கொள்கிறார் கதாநாயகர். 
தினமும் நடை பழகத் தொடங்குகிறார். 


கைத்தடி என்றென்றும் அவருடன். சில நினைவுகளும். நெகிழ்ச்சி. நிறைவு.
உந்துதல் இங்கே சற்றே கீறி வலிக்க வைக்கிறது இல்லையா
வலிக்கிறதுஆனால் வலிக்கவில்லைஊசி தைக்கிறது. 
ஆனால் ஆணி அடித்தாற் போல் உறைக்கிறது.
கதாநாயகருக்கு ஒரு மன நிறைவு
படித்த நமக்கு ஒரு நிறைவு
இரண்டுமே placebo. 
இருந்தாலும் பிடிக்கிறது.  


கதாநாயகர் மறுபடி சோம்பித் திரிவாரா
அல்லது பெரியவர் வடிவ உந்துதல் நிலைக்குமா
இது காரணி என்று கதாநாயகருக்கு உறைக்காமல் போனதேன்?
பிற்பாடு புரிந்து பலனுண்டா? 
இது போன்று பல நேரங்களில் நாம் செய்ய வேண்டியவை 
நமக்கு உறைக்காமல் போவதேன்? 
ஒரு உந்துதலுக்காகக்காத்திருப்பதேன்? 
கிடைத்தும் மறுப்பதேன்? 
காலம் கடந்து உறைப்பதேன்? 
அதற்குப் பிறகு, 'நான் எதற்கும் இலாயக்கில்லை, 
நம்மால் எதுவும் முடியாது,எல்லாம் விதி' என்றக் 
கழிவிரக்கத்தில் மூழ்குவதேன்? 
அல்லது நம் நிலைக்கு இன்னொருவர் மீதோ இயற்கை மீதோ 
கடவுள் மீதோ வேறு கண்றாவி மீதோ ஆத்திரமோ கோபமோ அடைவதேன்?
இவையெல்லாம் கேள்விகள்பதில் இல்லாபதில் தேவையற்றக் கேள்விகள்.
அசலில் கதாநாயகரின் நேர்மை கலங்க வைக்கிறது
அப்பாவித்தனம் அருவருப்பூட்டுகிறது
எளிமை திகிலூட்டுகிறதுநகைச்சுவையாக ரசிக்க முடிந்தாலும் 
என் நிலை இப்படி ஆகிவிடக்கூடாதே என்ற திகிலில்
நேற்று வாங்கிய - ஆரஞ்சுமாம்பழம்பைனாப்பிள்செரி
ஸ்ட்ராபெரிசாக்லெட் என்று ஆறு வகை க்ரீம்
பாதாம்பிஸ்தாமுந்திரி 
என்று மூன்று வகை பருப்புகலந்த தனித்தனியாக சுருட்டப்பட்ட 
பிஸ்கட்டுகள் அடங்கியமரூன் மற்றும் தங்கநிறத்தில் 
ரெம்ப்ரேன் ஓவியத்துடன கூடிய 
ஆஸ்திரியாவிலிருந்து வந்த -  
அழகான வட்ட டப்பாவைப் பிரிக்காமல் 
அப்படியே எதிர் வீட்டுக் குழந்தைக்குத் தானம்செய்துவிட்டேன்குழந்தை வளர்ந்து அறுபத்தொரு வயதில் வாக்கிங் போகட்டும்.

 

இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்:  திரு. 


 அப்பாதுரை


அவர்கள்.வலைத்தளம்: மூன்றாம் சுழி 

moonramsuzhi.blogspot.com  
  
மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.    முதல் பரிசினை முத்தாக

வென்றுள்ள விமர்சனம் - 2


அறுபதைக் கடந்த ஒருவர், அரும்பாடுபட்டு உடல் எடையைக் குறைக்க முயல்வதில் நகைச்சுவையுடன் கதை ஆரம்பிக்கிறது. கதைசொல்லியின் பிரச்சனையே அதிகமான உடல் எடைதான். பரம்பரை ஒரு காரணம் என்றாலும், இவரின் பிரச்சனைக்கு இவர் பட்டியலிடும் இவருக்குப் பிடித்த சிற்றுண்டிகளும், நொறுக்குத்தீனி வகைகளும்தான் காரணம் என்பது நமக்குப் புலப்பட்டுவிடுகிறது.

உடல் நலம் பேண வேண்டியதின் அவசியத்தை “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்ற திருமூலரின் வாக்கினாலும், “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” எனும் பழமொழி மூலமும் உணர்ந்து கொள்ளலாம்.

“நொறுங்க உண்” என்பதை நம் கதாநாயகன் தவறாகப் புரிந்து கொண்டாரோ என்னவோ? நொறுக்குத் தீனியாக உள்ளே தள்ளி தொப்பையும் தொந்தியுமாக மாறியிருக்கிறார். நாட்டில் மக்களுக்குப் பிரச்சனையே வயிறுதான். பாதிபேர் குறைக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பாதி பேர் நிறைக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஔவையார்  நல்வழியில் எவ்வளவு அழகாக இதை எடுத்துரைக்கிறார் பாருங்கள்
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோவு அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.                  (பா-11)

நம் கதாநாயகன் நாவிற்கு அடிமையானவர் என்பதை நயமாக உரைத்த விதம் அருமை. மருத்துவரின் ஆலோசனையின்படி நடைப்பயிற்சி மேற்கொள்ள முயன்று முதல் நாளிலேயே அவர் படும் துயரங்களை அவர் விவரிக்கும் விதம் அருமை. நடைப்பயிற்சி மேற்கொள்ள நகரத்தின் தெருக்கள் உகந்ததாக இல்லையென்பதை, கொஞ்சம் அசந்தால் சைக்கிள்காரர் நம் முழங்கையைப் பெயர்த்துச் சென்றுவிடுவார் எனவும், ஆட்டோக்காரர் காலின்மேல் ஆட்டோவின் பின் சக்கரத்தை ஏற்றிச் சென்றுவிடுவார் எனவும், இவர்களுக்குப் பயந்து ஒதுங்கினால் மூடப்படாமல் உள்ள சாக்கடைக் குழிக்குள் இறங்க நேரிடும் எனக் குறிப்பிடுவதன் மூலம் அந்த நகரத்தின் தெருக்களை, காட்சிகளை நம் கண்முன் நிறுத்தி, நாமே நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதில் கைதேர்ந்தவர் என்பதில் ஐயமில்லை.

அரை கிலோமீட்டர் நடந்தவுடன் ஜில்லென்று இரண்டு பன்னீர் சோடாக்கள். கால் மணிநேரம் ஓய்வு. பின்னர் கால்கடுக்க நடைப்பிணம் போல் நடை(?). ஆகா என்ன ஒரு நடை! கால் கிலோ மீட்டர் ஆமை வேகத்தில் நடந்து, மேலும் நடக்க முடியாமல், அமர நினைக்கையில் அருகிலிருந்த கடையின் ஆமை வடையின் வாசத்தால் கவரப்பட்டு, பஜ்ஜிக்கடையருகில் சென்று, உள்ளத்துக்கும், உடலுக்கும் தெம்பு ஏற்பட(?) 4 வடை, 4 பஜ்ஜி உண்டு அந்த வேளையில் டாக்டரின் அறிவுரை அறிவுக்கு எட்ட அத்தோடு பயந்து நிறுத்தியதாய்க் காண்பித்தது நகைச்சுவையின் உச்சம்!


இந்த நடைப்பயிற்சியில் மேலும் ஓய்வெடுக்க(!) எண்ணித் திண்ணையைத் தேடுவதில் திண்ணியராகிறார் நம் கதைசொல்லி. அவரைவிட வயதான, அவர் உருவத்தில் முக்கால்வாசியும் கறுப்பாகவும் குள்ளமாகவும், கையில் செய்தித்தாளுடனும் இருந்த 88 வயது முதியவரை ஒரு வீட்டின் திண்ணையில் சந்திக்கிறார்.


நாட்டு நடப்பையும், உலகச் செய்தியையும் அறிந்தவராகவும் அறிவுப்பூர்வமாக பேசுபவராகவும் இருந்ததால் அவர் மீது ஒரு ஈர்ப்பு நம் கதைசொல்லிக்கு ஏற்பட்டுவிடுகிறது. நீங்கள் பிராமணர்தானே? எனும் முதியவரின் கேள்விக்கு, நம் கதைசொல்லியின் பதிலும் அறிவுபூர்வமாகவே அமைந்துவிடுகிறது. நமக்கும் பொய்யாமொழிப் புலவனின்.


அந்தணன் என்போன் அறவோன் மற்றெவ்வுயிர்க்கும் 
செந்தண்மை பூண்டொழுகலான்
எனும் வரிகளை நினைவூட்டிச் செல்கிறது.
நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல் கற்றாரைக் கற்றாறே காமுறுவர் –
என்பதை மெய்ப்படுத்தும் விதமாக, அரை மணிநேரமே பழகினாலும் நீண்ட காலம் பழகிய நண்பர்களாக இருவரும் உணர்ந்ததாகக் குறிப்பிடுவது அருமை.


இதில் பேசிய களைப்பு தீர இருவரும், பெரியதாக, சுவையாக, நல்ல வழுக்கையான இளநீர் பருகுவதாகக் காண்பிக்குமிடத்தில் உரையாடலின் சுவாரஸ்யத்திலிருந்து விடுபட்ட நாம், நம் கதை சொல்லி நடைப்பயிற்சி மேற்கொள்ள வந்ததை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

6லிருந்து 60 வரை என்பார்கள். ஆனால் கதைசொல்லியோ 7லிருந்து 70 வரை என ஒரு புதிய சொல்லாடலை உபயோகிக்கிறார். வயதானவர்கள் முடிந்தவரை சொந்த பந்தங்கள் புடைசூழ இருப்பது அவசியம். தனிமையில் அவர்கள் இருக்க நேர்ந்தால் மனமும், உடலும் சோர்வடைந்துவிடும். அதனால் அவர்களுக்குப் பிடித்த விஷயங்களில் மனதைச் செலுத்தலாம்.


இந்த முதியவருக்கு அந்த விஷயத்தில் எந்தக் குறையும் இல்லை. மகள், மருமகன், பேரன் பேத்திகளுடன் சேர்ந்து வசிப்பதாகக் காண்பித்தது மனநிறைவை நமக்களிக்கிறது88வயதில் நடந்து செல்ல வசதியாக, உறுதியான நல்ல அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கைத்தடியுடன் அவர் வந்ததாகக் கண்பித்ததில் அவர் மீது அக்கரை கொண்ட குடும்பத்தார் வாய்த்ததை உணர்த்தும் சிம்பாலிக் ஷாட்.


ஊன்றிய கோலுடன் நடக்கும் பெரியவர், நம் கதைசொல்லியின் உள்ளத்தில் “உன்னால் முடியும் தம்பி” என்ற உணர்வை ஊன்றிச் சென்றதாகவே எனக்குத் தோன்றுகிறது. நேர்மறை எண்ணங்களின் அதிர்வலைகள் அவரைச் சுற்றியிருப்பதை உணர்த்திவிடுகிறது.நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் 
நன்றே - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றேஅவரோடு இணங்கி 
இருப்பதுவும் நன்று.
என்பது இதனால் தானோ?


இளநீர் அளித்தமைக்கு வாஞ்சையான பார்வையால் நன்றி சொல்லி, அந்தப்பக்கம் மாலை வேளையில் 5 மணிக்கு வரும்போதெல்லாம் பார்த்துச் செல்லுமாறு கூறி பிரியா விடைபெறுகிறார் முதியவர்.


நடைப்பயிற்சியை மேற்கொண்ட நம் கதைசொல்லி ஆட்டோவில் வீடுதிரும்புகிறார். வீட்டுவாசலில் இறங்காமல் தெருமுனையில் இறங்கி நடந்து செல்ல முற்பட்டது ஏன்? என எண்ணுகையில், இவர் நடைபயிற்சி மேற்கொண்டதை டாக்டர் அறிய நேர்ந்ததை உணர்த்த எனப் புரிந்துவிடுகிறது.


அடுத்த இரண்டு நாட்களுக்கு மழையும், அதற்கடுத்த இரண்டு நாட்களுக்கு சோம்பலும் இவரை ஆட்கொண்டு நடைபயிற்சியைத் தொடரவிடவில்லை. முதல் தேதியன்று, முதியவரைச் சந்திக்க வேண்டும் எனும் ஆவலில், 

திரும்பும்போது நடந்துவரலாம் என எண்ணி ஆட்டோவில் அந்த 

சந்திப்பு நிகழ்ந்த இடத்தை அவர் அடைகிறார்.  அதனால்தான் அந்த 

முதியவரின் முகதரிசனம் இறுதியாக நம் கதைசொல்லிக்குக் 

கிடைக்கிறது. ஏதோ ஒரு ஜென்மத்து பந்தம் என்பது இதுதானோ? 

இல்லையெனில் அந்த உள்ளுணர்வு எப்படித் தோன்றியிருக்கும்.


மறைந்த முதியவரின் பாதம் பணிந்து, அவருடைய கைத்தடியை அவருடைய ஞாபகார்த்தமாக வைத்துக்கொள்ள, அவர்களுடைய உறவினர்களிடம் வேண்டிப் பெற்றுக்கொண்டு நடந்தே அவர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுத் திரும்புகிறார் நம் கதை சொல்லி.


சந்திப்பு நிகழ்ந்த இடத்திற்குத் திரும்புகையில் அதே இளநீர் வியாபாரி கண்ணில் பட ஒரு இளநீரைத் அந்த முதியவருக்குப் படையலாக அளிப்பதும்,. மற்றொன்றை தான் பருகியதும், இளநீரின் சுவை அன்றுபோல் இல்லையெனக் குறிப்பிடுவதும் ஆழ்ந்த துயரை அவர் அடைந்திருப்பதை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது. இந்த காட்சியை விவரிக்கும் விதத்தில் நம் கண்களும் பனிக்கின்றன.எப்படியோ நம் கதைசொல்லிக்கு தளரநேரும் தருணங்களில், தன்னம்பிக்கை அளிக்கும் வண்ணம் அந்த கைத்தடி அமைகிறது. அன்றாடம் நடைபயிற்சி மேற்கொள்ளவும், அவரோடு உடனிருப்பதுபோலவும் ஒரு உணர்வினைத் தருவதாக முடித்தது கதையின் தலைப்பான ” ’எங்கெங்கும்...எப்போதும்...  என்னோடு...”  என்பதற்கு மிகப் பொருத்தமாகவும் அமைந்துவிடுகிறது.இந்தக் கதையைப் படித்தநாள் முதல் நானும் தவறாமல் நடைபயிற்சி மேற்கொள்ளத் தலைப்பட்டுள்ளேன்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துபர் எண்ணியர்
திண்ணி யராகப் பெறின்
என்பது உண்மையன்றோ?
நல்லதொரு தன்னம்பிக்கையை வளர்க்கும் கதையைப் படைத்த நம் கதாசிரியருக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்! நன்றி!

-காரஞ்சன்(சேஷ்)
 


இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 


 திரு. 


E.S. SESHADRI


அவர்கள்.வலைத்தளம்: காரஞ்சன் (சேஷ்)

esseshadri.blogspot.com


  
மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.      
      மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.


நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

முதல் பரிசுக்கான தொகை இவ்விருவருக்கும்

சரிசமமாகப் பிரித்து அளிக்கப்பட உள்ளது.
       இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டுள்ளன.இணைப்புகள் இதோ:


http://gopu1949.blogspot.in/2014/10/vgk-37-03-03-third-prize-winner.html


http://gopu1949.blogspot.in/2014/10/vgk-37-02-03-second-prize-winners.htmlகாணத்தவறாதீர்கள் !
இந்தக் கதைக்கான நடுவரின் சிறப்பு விமர்சனம்

நாளை 13-10-2014 திங்கட்கிழமையன்று 

தனிப்பதிவாக வெளியிடப்பட உள்ளது.

படிக்கத் தவறாதீர்கள்.    அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


oooooOooooo


நினைவூட்டுகிறோம்இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 

கதையின் தலைப்பு: VGK-39 


  மா மி யா ர்   விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 


16.10.2014  


இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.

 


போட்டிகளில் கலந்துகொள்ள
இன்னும் தங்களுக்கு 
இரண்டே இரண்டு
வாய்ப்புகள் மட்டுமே உள்ளன
என்பது நினைவிருக்கட்டும் !! 

என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்

22 கருத்துகள்:

 1. திரு அப்பாதுரை அவர்களுக்கும்
  நண்பர் சேஷாத்ரி அவர்களுக்கும்
  மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. கிள்ளையும் கிழமும் ஒன்றா?
  தடம் மாறிச் சிந்திக்கவைக்கிறது கதை //

  திரு அப்பாதுரை அவர்களின் முத்திரை பதிக்கும் ,
  வித்தியாசமான ஆழ்ந்த பார்வை கொண்ட விமர்சனம் ரசிக்கவைத்தது..

  மனம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.!

  பதிலளிநீக்கு
 3. ஏதோ ஒரு ஜென்மத்து பந்தம் என்பது இதுதானோ? இல்லையெனில் அந்த உள்ளுணர்வு எப்படித் தோன்றியிருக்கும்.///

  திரு.சேஷாத்ரி அவர்களின் பரிசுபெற்ற
  அருமையான விமர்சனத்திற்கு
  நிறைவான வாழ்த்துகள். பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 4. தன் முழு ஃபார்மில் இவர் வரவேண்டும் என்று ஒருமுறை அப்பாத்துரை சாரிடம் கேட்டிருந்தேன். நான் ஆசைப்பட்டிருந்ததை அவர் அடைய வைத்திருக்கும் பொழுது இன்னும் இன்னும் என்று மனசு மேலும் மேலும் அவாவுகிறது... ஆசைக்கு அளவு தெரியாது என்று தெரியாமலா சொல்லியிருக்கிறார்கள்! மற்ற ஆசைகளை விட்டு விடுங்கள். எழுத்து என்று வரும் பொழுது ஆசை என்பது மோகமாக மாறிவிடுவதும் தெரிகிறது.

  அன்பர் சேஷாத்ரியின் விமர்சனம் ஒத்த சிந்தனைச் சிறப்பின் கீர்த்தியைச் சொன்னது எனக்கு. வெவ்வேறு தளங்களில் நாளும் நாம் மேம்படுத்திக் கொள்ளும் எண்ணங்களின் வீச்சு நாம் பார்ப்பதிலெல்லாம், படிப்பதிலெல்லாம் படியும். அந்த அனுபவச் சிறப்பை அழகாகப் பதிந்திருக்கும் அவருக்கு என் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. என்னுடைய விமர்சனம் முதற் பரிசைப் பகிர்ந்துகொள்ள தெரிவானதில் மகிழ்ச்சி. அருமையாக விமர்சனம் எழுதியுள்ள திரு அப்பாதுரை ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்! எனக்கு வாய்ப்பளித்த திரு வைகோ சார் அவர்களுக்கும், தெரிவு செயத நடுவர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி! வாழ்த்திய/ வாழ்த்தப்போகும் அனைத்து நல்லுளங்களுக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 6. //அன்பர் சேஷாத்ரியின் விமர்சனம் ஒத்த சிந்தனைச் சிறப்பின் கீர்த்தியைச் சொன்னது எனக்கு. வெவ்வேறு தளங்களில் நாளும் நாம் மேம்படுத்திக் கொள்ளும் எண்ணங்களின் வீச்சு நாம் பார்ப்பதிலெல்லாம், படிப்பதிலெல்லாம் படியும். அந்த அனுபவச் சிறப்பை அழகாகப் பதிந்திருக்கும் அவருக்கு என் வாழ்த்துக்கள்!//
  நடுவர் அவர்களின் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 7. உங்கள் நிறைவு விழாக் கொண்டாட்டங்கள் பற்றிய அறிவிப்பைப் பார்த்தேன். உங்கள் விடாமுயற்சிக்கும் ஊக்கத்திற்கும் தலை வணங்குகிறேன்.

  பதிலளிநீக்கு
 8. அன்புள்ள திரு. வை.கோபாலகிருஷ்ணன் அய்யா அவர்களுக்கு,
  வணக்கம்.

  எனது வலைப்பூ பக்கம் வந்து எனது சிறுகதைகளைப் படித்து விமர்சனம் செய்ய அன்புடன் வேண்டுகிறேன்.

  நன்றி.
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  பதிலளிநீக்கு
 9. ஆ.. கவனியாது போனேனே?! மிகவும் நன்றி.
  ஜீவி சாரின் பின்னூட்டம் போனஸ் - நன்றி.

  சிலவற்றைச் செய்ய எண்ணி செய்ய முடியாதிருக்க ஊர்ப்பட்ட சாக்குகளைத் தேடும் மனதை சுவாரசியமாகக் கதைப்படுத்தியிருந்தார் வைகோ சார்.. இந்த மனப்பாங்கில் நம்மில் பலர் நம்மை அடையாளம் காண முடியும் என்று நினைக்கிறேன். சட்டென்று ஒட்டிய கதைக்கரு.

  பதிலளிநீக்கு
 10. வைஜயந்திமாலாவின் முறுவலும் வீரப்பாவின் அதிரடிச் சிரிப்புமாக கதையின் விமர்சனத்தை வெளிப்படுத்தியமை அழகு. முதல் பரிசு பெற்றமைக்கு மனமார்ந்த பாராட்டுகள் அப்பாதுரை சார்.

  பதிலளிநீக்கு
 11. திருக்குறள், நல்வழி, மூதுரைகளோடு அழகான விமர்சனமெழுதி முதல் பரிசு பெற்றுள்ள திரு.சேஷாத்ரி அவர்களுக்கு இனிய பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 12. மிக அருமையாக இருக்கிறது அப்பாதுரை சாரின் விமர்சனம்.’

  //கள்ளமும் காழ்ப்பும் காணாமல் போகிறது. பிள்ளைகள் போல் ஒரு நேர்மை.
  இது முதிர்ச்சியா? அல்லது முதிர்ச்சி என்பதே ஒரு வட்டமா?
  கிள்ளையும் கிழமும் ஒன்றா? தடம் மாறிச் சிந்திக்கவைக்கிறது கதை.//
  வை,கோ சார் கதை அப்பாதுரை சாரை சிந்திக்க வைத்தது போல் அப்பாதுரை சாரின் விமர்சனமும் நம்மை சிந்திக்க வைத்து வயதான காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வற்றை காலம் தவறாமல் கடைபிடிக்கவும் தூண்டுகிறது.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. கரஞ்சன்சேஷாத்ரி அவர்களின் விமர்சனமும் மிக அருமை.

  //இந்தக் கதையைப் படித்தநாள் முதல் நானும் தவறாமல் நடைபயிற்சி மேற்கொள்ளத் தலைப்பட்டுள்ளேன்.//

  கதையில் நல்ல கருத்துக்களை சொல்லி அதை கடைபிடிக்க வைத்த வை.கோ சாருக்கு வெற்றி.
  கடைபிடிப்பதை தன் விமர்சனத்தில் சொல்லி பிறரையும் வழி படுத்தும் சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. முதல் பரிசு வென்ற அப்பாதுரை சாருக்கும், சேஷாத்ரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 15. ’சேஷ் விருது’ க்கான முதலிடமும் மற்றும் ’கீதா விருது’ க்கான மூன்றாமிடமும் பெற்றுள்ள சாதனையாளர் திரு. E S சேஷாத்ரி அவர்கள், தான் இதுவரை பெற்ற தொடர் வெற்றிகளான VGK-25 TO VGK-40 ஆகியவற்றை ஒட்டுமொத்தமாகச் சிறப்பித்து தன் வலைத்தளத்தினில் இன்று தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.

  அதற்கான இணைப்பு:

  http://esseshadri.blogspot.com/2014/11/blog-post.html

  அவருக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
 16. பரிசு வென்ற திரு அப்பாதுரை சார் மற்றும் திருசேஷாத்ரி அவர்களுக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 17. முதல் பரிசு வென்ற திரு அப்பாதுரை அவர்களுக்கும் திருசேஷாத்ரி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 18. பரிசு வென்ற திரு அப்பாதுரை சார் திரு சேஷாத்திரி அவங்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 19. திரு அப்பாதுரை சார் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 20. பரிசு திரு அப்பாதுரை மற்றும் திரு. சேஷாத்ரி இருவருக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு