என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 25 அக்டோபர், 2014

VGK-38 / 03 / 03 - THIRD PRIZE WINNER - 'மலரே ..... குறிஞ்சி மலரே ...... !’/’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்கதையின்  தலைப்பு :


 VGK-38    மலரே ....குறிஞ்சி மலரே ! இணைப்பு:     

மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு 

மிக அதிக எண்ணிக்கையில் 

பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 

அவர்கள் அனைவருக்கும் 

என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.   நடுவர் திரு. ஜீவி   


அமெரிக்காவில் வீட்டுக்கல்வியாய் தமிழ்

நடுவர் தாத்தாவும் அவர் பேரனும்

பேரனின் தமிழ் எழுத்துக்களும்


 நம் நடுவர் அவர்களால் 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள

விமர்சனங்கள் மொத்தம் :ஐந்துஇந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் நம் பாராட்டுக்கள் + 

மனம் நிறைந்த இனிய  நல்வாழ்த்துகள். 
  


மற்றவர்களுக்கு: 
    


முத்தான மூன்றாம் பரிசினை

வென்றுள்ள விமர்சனம்:ஒரு கிரைம் ஸ்டோரி போன்று பரபரப்பான டெல்லி போக்குவரத்து நெரிசலில் சிக்னலில் சடர்ன் ப்ரேக் அடித்த போலீஸ் ஜீப்பில் உட்காரவைக்கப்பட்டிருந்த ஒரு இளைஞனின் கன்னத்தில் இருக்கும் ஒரு மச்சம் நந்தினியின் கவனத்தைக் கவர்வதில் கதை துவங்குகிறது!


யாரந்த நந்தினி? அந்த மச்சம் ஏன் அவளது கவனத்தைக்கவரவேண்டும்? வாங்க கதைக்குள்ளார போனாத்தானே தெரியும்!  உயிர்த் தோழி கல்பனாவின் கணவனாக இருக்கலாமோ என்று சந்தேகித்து ஒரு வழியாக நம்பரைப்பிடித்து போன் செய்தால் பதிலில்லை! அதே நேரத்தில் அவளது உயிர்த்தோழியான கல்பனாவிற்கு டெல்லி சென்ற கணவனிடமிருந்து போனே வராததால் தவிப்பில் இருக்கிறாள்! அப்படின்னா அந்த மச்சக்காரன் அவளோட கணவனேதானா? படித்துக்கொண்டிருக்கும் நமக்கு விறுவிறுப்பு ஏறுகிறது!


போலீஸ் ஜீப்பில் பார்த்த அந்த ‘மச்சக்காரன்’ கல்பனாவின் கணவனா என்று அறியுமுன்னரே தாய்மை அடைந்திருப்பதை போனில் பேசும்போது நந்தினியிடம் கல்பனா சொல்ல இந்த சூழ்நிலையில் என்ன கேட்பது? நமக்கும் தலையைப் பிய்த்துக்கொள்ளலாம்போல இருக்கிறது! இருவருக்கிடையே நடைபெறும் உரையாடல் மூலமாகவே நந்தினி ஒரு வக்கீல் என்பதையும் அவளது வருங்காலக் கணவரும் ஒரு வக்கீலே என்பதனை நமக்குத் தெரியத்தந்து ‘அப்பாடா’ என்று சற்றே ஆசுவாசப்படவைக்கிறார் கதாசிரியர்! நந்தினி மூலமே தீர்வு வரப்போகிறது என்பதையும் அப்பொழுதே லேசான குறிப்பால் உணரவைத்துவிடுகிறார்!  கூடவே பாலும் பழமும் கொடுத்து பராமரிக்க ஆட்களையும் வைத்து, செய்யும் வேலைக்கும் செல்லாது தங்கக் கூண்டிலே அடைத்த கிளியெனவே (இந்தக்காலத்தில் ஒரு செல்போன் கூட வைத்திருக்கமுடியாததாக) கல்பனாவின் நிலை இருப்பதையும் சற்றே துயர்ப்பட விளக்கிவிடுகிறார்! அதுக்குள்ளாரயே கதைல எத்தனை டுவிஸ்ட்? எவ்வளவு வேகமான காட்சி மாற்றங்கள்? கல்பனா நந்தினி இருவருக்குமே இரவுத்தூக்கம் கெட்டுவிடுகிறது! உயிர்த்தோழிகள் என்பதனை இதன்மூலமாகவும் சிம்பாலிக்காக சொல்லிவிடுகிறார்! ஒரே பிரேம்ல ரெண்டுபேரும் வேறு வேறு இடத்துல தூக்கம் வாராது துயருரும் காட்சி நம் கண்முன்னே விரிகிறது! அதுபோல சிவராமன் பெண்களின் சுதந்திரம் எவ்வளவு முக்கியம் என்பதனை தெளிவாக உணர்ந்துவிட்டான் என்பதை அவன் தன் மனைவியைக்கொண்டே வளர்த்துவரும் ‘கூண்டுக்கிளி’களை விடுதலை செய்ய வைப்பதன்மூலமாக சிம்பாலிக்காக உணர்த்துவதும் உன்னதம்!


பெண்களின் சுதந்திரம் என்பது என்ன, உண்மை நட்பு என்பது என்ன என்ற கேள்விகளுக்கு பதிலளிப்பதாக அமைந்த கதை!  இன்னும் ஒரு மிக முக்கியமான செய்தி நம் தேசிய மொழியாம் ஹிந்தியை அனைவரும் கற்க வேண்டியதின் அவசியத்தை அறிவுறுத்துவது! ஹிந்தி தெரியாமல் எவ்வளவு பெரிய வம்பிலும் தொல்லையிலும் கதாநாயகன் மாட்டிக்கொள்கிறான்? ஒரு கதையில் எத்தனை எத்தனை மெசேஜ்கள்?!


ஆரம்பத்தில் மச்சத்தை வைத்து ஒரு முறையே பார்த்த தோழியின் கணவனை அடையாளம் கண்டுகொள்வது, தாய்மை அடைந்த உயிர்த் தோழியிடம் அவளது கணவனின் நிலைகுறித்து சொல்லமுடியாதபோதும், பதறாமல் நிதானமாக வருங்காலக் கணவனுடன் சேர்ந்து, ஜெயில் வாசத்திலிருந்து அவனை வெளியே கொண்டுவந்து, போலீஸில் காணாமல்போன பொருட்களுக்காக கம்ப்ளெய்ன்ட் கொடுக்கவும் உதவி செய்து, உயிர்த்தோழியின் கணவன் மனம்கோணாதபடி கல்பனாவின் அருமை பெருமைகளை உணரச்செய்து, ஊர் திரும்பும்வரை உதவி செய்து --(அப்பா சொல்லவே மூச்சு வாங்குதே) – கதையிலேயே நிமிர்ந்து நிற்கும் நிறைவான சுறுசுறுப்பான துறுதுறுப்பான பாத்திரம் நந்தினியின் பாத்திரம்தான்! நந்தினி என்றால் காமதேனுவின் மகளல்லவா! செயலோடு சேர்ந்து பெயரும்கூட கனப்பொருத்தம்தான்! நந்தினியின் வருங்காலக் கணவர் வஸந்த்தின் (கணேஷின் ஜூனியரா?!) பாத்திரப் படைப்பும் அவளைப்போலவே, உதவும் குணம், PRACTICAL APPROACH உள்ள வக்கீல் என பொருத்தமான ஜோடிதான் – MADE FOR EACH OTHER என்று நம்மை எண்ணமிட வைக்கிறது! நிறைகுடம்  தளும்பாது என்பதற்கு உதாரணமாக பன்முகத் திறமைகள் கொண்ட நந்தினிக்கே ரோல் மாடலாக இருந்த அலட்டல் இல்லாத கல்பனாவின் பாத்திரம்! குறிஞ்சி மலரைத் தேடிக் காண விரும்பும் - கடைசியில் தன்னுடன் வாழும் மனைவியே ஒரு உன்னதக் குறிஞ்சி மலர்தான் என்று ‘பட்டு’ – உணரும் பாத்திரமாக சிவராமன். எல்லாவற்றுக்கும் மேலாக ஓப்பனிங் ஷாட்டில் வந்து விறுப்பேற்றி குளோசிங் ஷாட்டில் சிவராமனை “மலரே! குறிஞ்சி மலரே” என ‘கட்டிய’ மனைவியிடம் மனதுக்குள் டூயட் பாடவைக்கும் அவனது “அதிர்ஷ்ட மச்சம்” ஒரு உயிருள்ள பாத்திரமாகவே மாறிவிடுகிறது!


ஓடியாடி வேலைக்கு சென்று சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டிருந்த ஒரு பன்முகத்திறமைகொண்டிருந்த ஒரு பெண்ணை வசதிகள் எல்லாம் செய்துகொடுத்து அக்கறையுடன் கவனித்துக்கொள்வதாய் எண்ணிக்கொண்டு ‘எந்த வேலை’யையும் செய்யவிடாமல் ஏறக்குறைய ‘தங்கச்’சிறையிலேயே கல்பனாவை அடைத்துவிட்ட கணவனாய் சிவராமன்! சிறைப்படுத்துவதின் வலி சிறை பட்டபின்னர்தான் புரிகிறது! ஓவர் பொஸசிவ்னெஸ்தான் பாசத்தின் வெளிப்பாடு என்று எண்ணியிருந்த சிவராமனுக்கு உண்மைப் பாசம், உண்மைக் காதல் என்றால் முழு சுதந்திரம் தருவதுதான் என்ற ஆணித்தரமான கருத்தினை இதைவிட எப்படி புரியவைக்க முடியும்! நல்ல மனிதர்களுக்கும் சில நேரத்தில் அதிர்ச்சி வைத்தியம் தேவையோ என்றுகூட நம்மை எண்ணமிடவைத்துவிடுகிறார் கதாசிரியர்! அட்டகாசம்!


சிறுகதை எழுத்தாளர்களின் உலகத்தில் இது போன்ற எளிய நடையிலான, உயர்ந்த கருத்துக்களை ஆணித்தரமாக உணர்த்தும், உன்னத பாத்திரப் படைப்புகளுடன் கூடிய, காட்சிகளை கண்முன்னே நிறுத்தும் விஜிகே அவர்களின் இந்த சிறுகதையும் உண்மையில் ஓர் உன்னதக் குறிஞ்சி மலர்தான்!


 


இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்:  திரு. ரவிஜி அவர்கள்.வலைத்தளம்: மாயவரத்தான் MGR

mayavarathanmgr.blogspot.com


  
மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.


      மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
      


 இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.காணத்தவறாதீர்கள் !     நினைவூட்டுகிறோம்
இந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான


இணைப்புகள்: 
பகுதி-1 க்கான இணைப்பு:  
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-1-of-4.html


பகுதி-2 க்கான இணைப்பு:  
பகுதி-3 க்கான இணைப்பு:  
பகுதி-4 க்கான இணைப்பு:  கதையின் தலைப்பு:VGK-40


மனசுக்குள் மத்தாப்பூ !விமர்சனங்கள் வந்துசேர இறுதி நாள்நாளை 26.10.2014


 ஞாயிற்றுக்கிழமைஇந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.
போட்டியில் 


கலந்துகொள்ள 


மறவாதீர்கள் !
இதுவே இந்தப்போட்டியில் 


தாங்கள் கலந்துகொள்வதற்கான


இறுதி வாய்ப்பாகும். நல்லதொரு வாய்ப்பினை

நழுவ விடாதீர்கள் !என்றும் அன்புடன் தங்கள்

வை.கோபாலகிருஷ்ணன்
14 கருத்துகள்:

 1. நல்ல மனிதர்களுக்கும் சில நேரத்தில் அதிர்ச்சி வைத்தியம் தேவையோ என்றுகூட நம்மை எண்ணமிடவைத்துவிடுகிறார் கதாசிரியர்//


  திரு. ரவிஜி அவர்கள். சிறப்பாக விமர்சனம் எழுதி பரிசுபெற்றதற்கு இனிய பாராட்டுக்கள். வாழ்த்துகள்.!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 25, 2014 at 9:46 AM

   வாங்கோ, வணக்கம். முதல் வருகை மகிழ்வளிக்கிறது.

   //*நல்ல மனிதர்களுக்கும் சில நேரத்தில் அதிர்ச்சி வைத்தியம் தேவையோ என்றுகூட நம்மை எண்ணமிடவைத்துவிடுகிறார் கதாசிரியர்*
   - Raviji MGR //

   ஆயிரம் ஆயிரம் உள் அர்த்தங்களைச் சொல்லும் இந்த வரிகளை இங்கு சுட்டிக்காட்டியுள்ளது, தங்களின் அதிபுத்திசாலித்தனத்தினை, நன்கு எனக்கு எடுத்துக்காட்டுகிறது.

   ’சில சமயங்களின் நம் விரலாலேயே நம் கண்களைக் குத்திக்கொள்வதும் நேர்வது உண்டு’, என்பது ஏனோ இங்கு என் நினைவுக்கு வந்தது.

   //திரு. ரவிஜி அவர்கள். சிறப்பாக விமர்சனம் எழுதி பரிசுபெற்றதற்கு இனிய பாராட்டுக்கள். வாழ்த்துகள்.! //

   மிக்க நன்றி. இதற்கு திரு. ரவிஜி அவர்களே பிறகு வந்து பதில் தந்தாலும் தரலாம் என நினைக்கிறேன். - VGK

   நீக்கு
 2. தங்கச்’சிறையிலேயே கல்பனாவை அடைத்துவிட்ட கணவனாய் சிவராமன்! சிறைப்படுத்துவதின் வலி சிறை பட்டபின்னர்தான் புரிகிறது! ஓவர் பொஸசிவ்னெஸ்தான் பாசத்தின் வெளிப்பாடு என்று எண்ணியிருந்த சிவராமனுக்கு உண்மைப் பாசம், உண்மைக் காதல் என்றால் முழு சுதந்திரம் தருவதுதான் என்ற ஆணித்தரமான கருத்தினை இதைவிட எப்படி புரியவைக்க முடியும்! நல்ல மனிதர்களுக்கும் சில நேரத்தில் அதிர்ச்சி வைத்தியம் தேவையோ என்றுகூட நம்மை எண்ணமிடவைத்துவிடுகிறார் கதாசிரியர்! //

  திரு. ரவிஜி அவர்களின் விமர்சனம் மிக நன்றாக இருக்கிறது.
  வாழ்த்துக்கள் பரிசு பெற்றதற்கு.


  பதிலளிநீக்கு
 3. வழக்கமான தன் நகைச்சுவையான பாணியில் அழகானதொரு விமர்சனமெழுதி பரிசுக்குரியவராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.ரவிஜி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. அமெரிக்காவில் அழகுத்தமிழ் எழுத்துக்களைப் பார்க்க கண்ணும் மனமும் நிறைகின்றன. தமிழ் கற்றுத்தரும் தாத்தாவுக்கும் அழகாய் கற்றுக்கொள்ளும் பேரனுக்கும் இனிய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீத மஞ்சரியின் குறிப்புக்கு நன்றி. இப்பொழுது தான் பார்த்தேன். பேரனுக்கு பாட்டி கற்றுத் தந்த தமிழ். என் மனைவி பணி ஓய்வு பெற்ற ஆசிரியை.பி.லிட்., எம்.எட்.
   இது பற்றிய குறிப்பு ஒன்றை சேஷாத்திரி அவர்களின் பின்னூட்டத்திற்கு கொடுத்திருக்கிறேன். முதல் பரிசு
   கட்டுரைக்கான பின்னூட்டத்தில் அதைக் காணலாம்.
   அன்புடன்,
   ஜீவி

   நீக்கு
 5. மூன்றாம் பரிசை வென்ற ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள். விமரிசனத்தை இன்னும் படிக்கவில்லை. :) இப்போதைக்கு வாழ்த்து மட்டும்.

  பதிலளிநீக்கு
 6. மூன்றாம் பரிசை வென்ற திரு.ரவிஜி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. பரிசு வென்ற திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 8. மூன்றாம் பரிசை வென்ற திரு.ரவிஜி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. பரிசு வென்ற திரு ரவிஜியவங்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள். விமரிசனம் ரொம்ப நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 11. தூங்கி எழுந்திருச்சி வந்து மறுபடியும் தூங்கிட்டேன்போல இருக்கு. வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு மிகவும் நன்றி..

  பதிலளிநீக்கு