என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 7 அக்டோபர், 2014

நேயர் கடிதம் - [ 4 ] திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்.


’அரட்டை’
http://rajalakshmiparamasivam.blogspot.comதிருமதி

 இராஜலக்ஷ்மி பரமசிவம்  

அவர்களின் பார்வையில் .... வருட ஆரம்பத்தில் விமரிசனப் போட்டி என்று  திரு. வை.கோபாலக்கிருஷ்ணன் அறிவித்திருந்ததால்  ஆர்வத்துடன் காத்திருந்தேன். நான் அவருடைய பதிவுகளைத் தவறாது படித்து வருபவள். நான் பதிவுகள் எழுத ஆரம்பித்து சுமார் ஒரு வருட காலமே  ஆன போது வந்திருந்த அறிவிப்பு இது.


என்னைப் பொறுத்த வரை  கதை என்ன? அதன் விமரிசனம் எப்படி இருக்கப் போகிறது என்கிற ஆர்வம் அதிகமானது. 


முதல் கதையே 'ஜாங்கிரி' என்கிற  இனிப்புடன் ஆரம்பித்தது. அந்தக் கதைக்கு சற்றே தயங்கினேன், விமரிசனம் எழுத. ஆனாலும் ஆர்வக் கோளாறு விடவில்லையே! முதல் கதைக்கே விமரிசனம் என்கிற பெயரில் எதையோ எழுதினேன். பரிசு அறிவிக்கப்படும் நாளன்று ஆர்வத்துடன்  அவர் தளத்தை கவனித்து வந்தேன். மூன்றாம் பரிசில் ஆரம்பித்து  வெளி வந்து கொண்டிருந்தது பரிசுகள். எனக்கொன்றும் பரிசு வரவில்லை.  ஆனால் பரிசு பெற்ற விமரிசனங்களைப் படித்ததில் விமரிசனம் எப்படி எழுத வேண்டும் என்கிற  டெக்னிக் தெரிய வந்தது. அதன்படி எழுத ஆரம்பித்தேன். முதலில் சற்றுத் தடுமாறினாலும் பிறகு எனக்கும் பரிசுகள் கிடைக்க ஆரம்பித்தன.


நடுவரைப் பற்றிய ரகசியம் காத்தார் கோபு சார்.  யாராயிருந்தால் என்ன?நமக்கென்ன வந்தது? என்றாலும் ஆர்வம் அதிகமாகிக் கொண்டே போனது.  விமரிசிகர்களுக்கும், நடுவருக்கும் இடையே  கண்ணிற்குத் தெரியாத பாலத்தை உருவாக்கியிருந்தார் கோபு சார்.  நம்முடைய விமரிசனம் நடுவரைப் போய் சேரும். நடுவரின் தீர்ப்பு நமக்குத் தெரியப்படுத்தப்படும்.  கனக்கச்சிதமாக இந்த போக்குவரத்தைக் கையாண்டதில் கோபு சாரின் திறமை  அசத்தல். 


நடுவர் பற்றியும் இங்கே சொல்லியாக வேண்டும். நடுவர் திரு. ஜீவியும் கோபு சாருக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தார் என்றே சொல்ல வேண்டும். அவர் நினைத்திருந்தால் பின்னூட்டங்கள் வாயிலாக  அவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் அவரும் ரகசியம் காத்து, கோபு சாருக்குப் பக்கப் பலமாய் இருந்திருக்கிறார். 


நடுவர் எந்த பாரபட்சமும் காட்டவில்லை என்பதை உறுதியாக சொல்லலாம். பரிசு பெற வேண்டுமென்றால், கதையைப்  புகழ்ந்து எழுதினால்  மட்டுமே  கிடைக்கும் என்பது நாம் சாதரணமாக நினைப்பது. ஆனால் நான் பல சமயங்களில் கதைகளில் உள்ள கருத்திற்கு  மாற்றுக் கருத்து எழுதி விமரிசித்த  போதும் என்னைத் தேடி பரிசு வந்திருக்கிறது. நடுவரின் நடு நிலைமைக்கு  இதுவே சாட்சி என்று நினைக்கிறேன்.கோபு சாரின் கதைகளைப் பற்றி இங்கே சொல்லியே ஆக வேண்டும். எல்லாக் கதைகளும் ஏதேனும் ஒரு நல்ல செய்தியை மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ  சொல்வதாகவே இருக்கும். உடம்பெல்லாம் உப்பு சீடை, பூபாலன் என்கிற கதைகளை உதாரணமாக சொல்லலாம். கதைகளை மட்டுமல்ல அதை வெளியிடும் விதமும் என்னை  அசர வைத்தது.  ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும், மறக்காமல் கதையை அவர் வெளியிட்டார். எத்தனையோ வேலைகள் இடையில் குறுக்கிடாமலா இருந்திருக்கும். அதற்கு நடுவில் கதையை  சரியான சமயத்தில் வெளியிடுவதைப் பாராட்டியேயாக வேண்டும். பாராட்டுக்கள் கோபு சார் !


கதைகளை மட்டும் தவறாமல் வெளியிட்டதோடு நிற்காமல், பரிசுப் பணத்தை   அவ்வபொழுது நம் வங்கிக் கணக்கிற்கு  சேர்த்துவிடும் முக்கியவேலையையும் செய்து கொண்டிருந்தார். பரிசுப்பணம், ஊக்கப் பரிசு, ஹாட்ரிக் பரிசுகள், சில சமயங்களில்  ஸ்பெஷல் பரிசு என்று கலக்கிக் கொண்டிருக்கிறார் கோபு சார். இப்படிப் பரிசுகளைப் பணமாகக் கொடுப்பதற்கு தாராள மனது வேண்டும். தாராளம், தாராளமாகவே இருக்கிறது கோபு சாரிடம். 


நாமெல்லாம் பரிசு கிடைத்தால் மகிழ்வோம். ஆனால், பரிசுப் பணம் கொடுத்து மகிழ்கிறார் இவர். 

இதையெல்லாம்  கூட போட்டியின் ஒரு பகுதியாக எடுத்துக் கொண்டு விடலாம். அவ்வப்பொழுது அவர் வெளியிடும்  புள்ளி விவரங்கள் பதிவுகள்  நம்மை வியக்க வைக்கும். இவரால் மட்டும் எப்படி இதையெல்லாம்  தவறே இல்லாமல் செய்ய முடிகிறது என்று வியந்திருக்கிறேன். பரிசுகளை அறிவிக்கும் பதிவுகளில்  வெளியிடும் படங்கள்  மிக நேர்த்தி. 

பரிசுப் பெற்றால் ஒரு கைதட்டல் கிடைக்கும் பாருங்கள்........ அந்தக் கைதட்டலுக்காகவே பரிசு பெற மாட்டோமா என்று  மனம் விழையும்.


கோபு சார் எதற்காக இந்தப் போட்டியை நடத்துகிறார் என்னும் கேள்வி எழாமல் இல்லை. ஆனால் பலன் பெற்றதோ விமரிசனம் எழுதியப் பதிவர்கள் தான். பரிசு மட்டுமா கிடைத்தது. எழுதுவதற்கு ஊக்கம் அல்லவா கொடுத்தது இந்தப் போட்டி. 

பதிவர்களுக்குத் தங்கள் எழுத்துக்களின் தரம் அறிந்து கொள்ள கோபு சார் வாய்ப்பு கொடுத்திருந்தார் என்றும் சொல்ல வேண்டும். அது மட்டுமா? பலருக்கும் அறிமுகமாகாத என் போன்ற வலைப்பதிவர்களின் எழுத்துக்கள், (பரிசு பெறும் விமரிசனங்கள்)   பிரபலமான  கோபு சாரின் தளத்தில் வரும்போது நிறைய பேரை  சென்றடையும்  என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என் தளத்திற்குப் புது வாசகர்கள் வருகை புரிவதற்கு  இதுவும் ஒரு காரணமென்றே நினைக்கிறேன். நன்றி கோபு சார்.


மொத்தத்தில் இந்த விமரிசனத் திருவிழா  மிக மிக விமரிசையாக நடைபெற்றது. இன்னும் ஒரு சில வாரங்களே பாக்கியிருக்கிறது.  ஒன்பது மாதங்களாக நடக்கும் இந்தத் திருவிழா தொய்வில்லாமல் நடந்து வருவது பாராட்டிற்குரியது.  

இந்தத் திருவிழா  முடிவடையும்  நேரத்தில் நான் கேட்பது, "அடுத்து என்ன புதிதாக ஆரம்பிக்க திட்டமிட்டிருக்கிறீர்கள் கோபு சார்.? அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்."


கோபு சார் " வாழ்த்துகள் !  பாராட்டுக்கள் !!"

 

  

 

என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய 
திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களே !
தங்களுக்கு முதலில் அடியேனின் வணக்கங்கள்

தாங்கள் இங்கு மனம் திறந்து பேசியிருப்பவை யாவும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்கிறது. என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 

தாங்கள் VGK-02 'தை வெள்ளிக்கிழமை’ என்ற சிறுகதை விமர்சனப்போட்டியில் http://gopu1949.blogspot.in/2014/02/vgk-02-01-03.htmlமுதன்முதலாக முதல் பரிசினை வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. 

அதுவும் இந்தப்போட்டிகளின் ஆரம்பகாலக்கட்டத்தில் ‘விமர்சனத் திலகம்’ ’விமர்சனச் சக்ரவர்த்தி’ என்றெல்லாம் பலராலும் புகழப்பட்ட நம் திரு. ரமணி சார் அவர்களுக்கு இணையாக மேடையேறி முதன் முதலாக முதல் பரிசினை அவருடன் பகிர்ந்துகொண்ட பெருமை தங்களுக்கு மட்டுமே அல்லவா கிடைத்துள்ளது. அதற்காகவே தங்களுக்கு என் ஸ்பெஷல் வாழ்த்துகள்.

அதன்பிறகும் அவ்வப்போது மட்டும் இந்தப்போட்டிகளில் கலந்துகொண்டு மேலும் பல பரிசுகளையும் வென்றுள்ளீர்கள். சந்தோஷமாக உள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள். இதுவரை இந்தப்போட்டிகளில் ஒன்பது முறைகள் பரிசுக்குத்தேர்வாகியுள்ள தாங்கள் மேலும் ஒரேயொரு முறையாவது பரிசுக்குத்தேர்வாகி அது பத்து என்ற இரண்டிலக்க எண்ணிக்கையைக்காட்டாதா என என் மனம் ஏங்குகிறது. முடிந்தால் முயற்சிக்கவும். இன்னும் அதற்கு மூன்று வாய்ப்புகள் மட்டுமே தங்களுக்கு உள்ளன. 

தங்களின் இந்த சிறப்புக் கட்டுரைக்கு என் ஆத்மார்த்தமான ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  வாழ்க !


 


பிரியமுள்ள கோபு [VGK]

    


நினைவூட்டுகிறோம்

இந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான

இணைப்பு:

கதையின் தலைப்பு:

VGK-38
மலரே... குறிஞ்சி மலரே !

விமர்சனங்கள் வந்துசேர இறுதி நாள்

09.10.2014
வரும் வியாழக்கிழமை
இந்திய நேரம் 
இரவு 8 மணிக்குள் .

போட்டியில் கலந்துகொள்ள 
மறவாதீர்கள் !

இன்னும் தங்களுக்கு இருப்பதோ 
மூன்று வாய்ப்புகள் மட்டுமே !


என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்
37 கருத்துகள்:

 1. இராஜலக்‌ஷ்மி அவர்கள் அருமையாக கடிதம் எழுதி இருக்கிறார்கள். நிறை பேரின் மன நிலை இது போல் தான் இருக்கிறது. அவர்களின் விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள், மேலும் 9 முறை பரிசு வாங்கிய அவர்கள் ஐயாவின் ஆசை போல 10 பரிசு வாங்க வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. R.Umayal Gayathri October 7, 2014 at 9:50 AM

   வணக்கம். இந்தப்பதிவுக்குத் தங்களின் முதல் வருகை + அபூர்வ வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

   //இராஜலக்ஷ்மி அவர்கள் அருமையாக கடிதம் எழுதி இருக்கிறார்கள். நிறைய பேரின் மன நிலை இது போல் தான் இருக்கிறது. அவர்களின் விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள். மேலும் 9 முறை பரிசு வாங்கிய அவர்கள் ஐயாவின் ஆசை போல 10ம் பரிசு வாங்க வாழ்த்துகிறேன்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துகளுக்கும், அவர்களை வாழ்த்தியுள்ளதற்கும் என் அன்பான இனிய நன்றிகள்.

   நீக்கு
  2. திருமதி உமையாள் காயத்ரி அவர்கள் என் கடிதத்தைப் பாராட்டியதற்கும், பரிசு வாங்க வாழ்த்துவதற்கும் என் நன்றிகள்.

   நீக்கு
 2. மொத்தத்தில் இந்த விமரிசனத் திருவிழா மிக மிக விமரிசையாக நடைபெற்றது../

  திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களின் சிறப்பான கருத்துரைகள் அருமை..பாராட்டுக்கள்.!

  பதிலளிநீக்கு
 3. To Mrs. Rajalakshmi Paramasivam, Madam.

  தாங்கள் தங்கள் நேயர் கடிதத்தில் இறுதியாகக் கேட்டுள்ள ஓர் கேள்விக்கு என் பதில்:

  //இந்தத் திருவிழா முடிவடையும் நேரத்தில் நான் கேட்பது,
  "அடுத்து என்ன புதிதாக ஆரம்பிக்க திட்டமிட்டிருக்கிறீர்கள் கோபு சார்.? அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்."//

  இந்த நிறைவு விழா இனிதே முடியவே நவம்பர் 10 தேதி
  ஆகலாம் என நினைக்கிறேன்.

  இது முடிந்ததும் என் ’பிள்ளையாரப்பா’வுக்கு சதிர் தேங்காய்
  உடைக்க வேண்டும். வேண்டிக்கொண்டுள்ளேன்.

  இப்போதைக்கு உங்களையெல்லாம் ஈடுபடுத்தி, தொடர்ந்து அன்புத் தொல்லை கொடுக்கும்படியான திட்டங்கள் ஏதும் என்னிடம் கைவசம் இல்லை.

  கொஞ்ச நாட்களாவது எனக்கு முழு ஓய்வு வேண்டும்.

  என் மீதும், சக்களத்தி பிளாக்கியின் மீதும் மிகக் கோபமாக உள்ள என் மேலிடத்தை நான் முதலில் சமாதானப்படுத்த வேண்டும்.

  சக்களத்தி ப்ளாக்கி பற்றிய விபரங்கள் என் 50வது பதிவினில் உள்ளது. இணைப்பு இதோ:

  http://gopu1949.blogspot.in/2011/03/blog-post.html

  மேலிடம் என் மீது இரக்கப்பட்டு அனுமதித்தால் மட்டுமே
  கணினிப்பக்கம் என்னால் வர இயலும்.

  பார்ப்போம். ஈஸ்வரோ ரக்ஷது. எல்லாம் கடவுள் செயல்.

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. My internet is not working.iam typing from my mobile. I shall comment tomorrow when my internet gets corrected.
   Any way thank yo sir for publishing my letter .
   Thankyou.

   நீக்கு
  2. என் கேள்விக்கு விரிவாக பதில் சொல்லி விட்டீர்கள் கோபு சார். என் நேயர் கடிதத்தை வெளியிட்டு என்னை சிறப்பித்தும் விட்டீர்கள்.

   எனக்கே நான் முதன் முதலாக எந்த விமரிசனத்திற்குப் பரிசு வாங்கினேன் என்பது நினைவில் நிற்காத போது, அதைக் குறிப்பிட்டு சொல்லி பாராட்டுவது என்னை நெகிழ வைத்து விட்டது. உங்கள் நினைவாற்றலிற்கும் கண்டிப்பாக ஒரு சபாஷ் .
   என்னைப் பாராட்டுவதற்கு மீண்டும் நன்றி கோபு சார்.

   நீக்கு
 4. சகோதரி ஆசிரியை ராஜலஷ்மி பரமசிவம் சொல்வது போல , கோபு சாரின் பதிவின் மூலம் எனக்கும் நிறைய வலைப் பதிவர்கள் அறிமுகம் ஆனார்கள். நானும் ஆசிரியை போலவே திரு V.G.K அவர்களிடம் “what is next?” என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஓய்வில் இருந்தாலும் அவர் ஒன்றிரண்டு பதிவுகளை வாரம் ஒருமுறையாவது எழுதவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்துரைக்கு நன்றி தமிழ் சார். உங்களைப் போலவே நானும் கோபு சார் இன்னும் என்ன புதுமைகள் வைத்துள்ளார் என்று ஆவலாயிருக்கிறேன்.

   நீக்கு
 5. இறுதிக்கட்டத்தில் வெற்றிகரமாக முடியும் தருவாயில் உள்ள நம் சிறுகதை விமர்சனப்போட்டியில் கலந்துகொள்ள இன்னும் மூன்றே மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளன என்ற தகவல் பலரையும் சென்றடையும் விதமாக, நம் ’ஊஞ்சல்’ வலைத்தளப்பதிவர் திருமதி. ஞா. கலையரசி அவர்கள், தனது வலைத்தளத்தினில் இன்று ஒரு தனிப்பதிவு வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்கள்.

  அதன் இணைப்பு:

  http://unjal.blogspot.in/2014/10/blog-post_7.html

  ஏற்கனவே நமது போட்டியில் PAY & DISBURSEMENT OFFICER ஆக கெளரவப்பதவியை வகித்து வரும் அவர்கள், இப்போது புதிதாக PUBLICITY & PUBLIC RELATIONS OFFICER ஆகவும் தானே முன்வந்து கூடுதல் பொறுப்பேற்று உள்ளது எனக்கு மேலும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

  அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
 6. குறைந்த பட்சம் போட்டிகளில் கலந்து கொண்டவர்களாவது இப்படியான கட்டுரைகளில் மனம் திறந்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் அனுபவங்கள், இந்த போட்டியில் கலந்து கொள்ளாதவர்களுக்கு
  சுவாரஸ்யமாகவும், இந்த போட்டி பற்றிய மேம்பட்ட தகவல்கள் அளிப்பதாகவும் அமையும்.

  மாற்றுக் கருத்துகள் ஏதாயினும் இருப்பினும் அவற்றை வெளிப்பட எடுத்துரைப்பது இது மாதிரியான போட்டிகளை வேறு தளங்களில் நடத்துபவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

  என்றைக்குமே இருக்கிறது வேலைச்சுமை, தங்கள் பதிவுகளில்
  பதிவுகள் இடுதல் போன்ற தனிப்பட்ட சூழல்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் விமரிசனத்தைப் பரிசுக்குரியதாய் தேர்ந்தெடுக்கும் நடுவர் ஐயாவிற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
   நன்றி நடுவர் ஐயா.

   நீக்கு
 7. மிகவும் அருமையான கடிதம்...
  அவருக்கும் பகிர்த தங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 8. சிறு கதை விமர்சனப் போட்டிகள் நடத்தி
  மற்றவர்களை ஊக்குவிக்கும் தங்களின் பணி
  மகத்தான பணி
  தாங்கள் பாராட்டிற்கு உரியவர்

  பதிலளிநீக்கு
 9. விமர்சனப் போட்டிகள் பற்றி தன் மனத்தில் தோன்றியவற்றை மிக அழகாக இங்கு நம்மிடம் பகிர்ந்துகொண்டுள்ளார் திருமதி ராஜலக்ஷ்மி மேடம். கைதட்டல்களுக்காகவே பரிசு வாங்கவேண்டும் என்ற அவரது உளக்கிடக்கை குழந்தை போன்ற அவரது ரசனையை வெளிப்படுத்துகிறது. கடைசியாக ஒரு கேள்வி கேட்டிருக்கிறாரே...அதைக் கண்டு முறுவல் எழுந்துவிட்டது. அதற்கான காரணத்தை கோபு சாரே பின்னூட்டத்தில் தெரிவித்துவிட்டார்.:)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் கடித்தை ரசித்துப் படித்து, சிரித்தற்கு நன்றி கீதா .. கைத்தட்டல்கள் விரும்பாதவர் உண்டோ? கோபு சார் போட்டிருக்கும் படங்களில் வரும் கைத்தட்டலை நான் மிகவும் ரசிப்பேன். அதை அப்படியே பகிர்ந்து கொண்டேன்.
   கடிதத்தைப் பாராட்டியதற்கு நன்றி கீதா.

   நீக்கு
 10. நாமெல்லாம் பரிசு கிடைத்தால் மகிழ்வோம். ஆனால், பரிசுப் பணம் கொடுத்து மகிழ்கிறார் இவர்.

  Great ! Hats off to VGK Sir

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துக்கு நன்றி கோபு சார்.

   நீக்கு
  2. ரிஷபன் October 8, 2014 at 6:52 PM
   நாமெல்லாம் பரிசு கிடைத்தால் மகிழ்வோம். ஆனால், பரிசுப் பணம் கொடுத்து மகிழ்கிறார் இவர்.

   Great ! Hats off to VGK Sir

   -=-=-=-=-=-
   rajalakshmi paramasivam October 8, 2014 at 10:09 PM
   //கருத்துக்கு நன்றி கோபு சார்.//
   -=-=-=-=-

   மேடம், மேற்படி பின்னூட்டம் கொடுத்துள்ளவர் என் எழுத்துலக மானஸீக குருநாதர் திரு. ரிஷபன் சார் அவர்கள். அதற்கு பதிலளித்துள்ள தாங்கள்

   //கருத்துக்கு நன்றி கோபு சார்.//

   என ஏதோ ஒரு அவசரத்தில் எழுதியுள்ளீர்கள். -
   Just for your information, please. - Gopu 08.10.2014 10.30 PM

   நீக்கு
 11. இருவருமே என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒரு அவசரத்தில் நிகழ்ந்த தவறு.
  இந்தப் பின்னூட்டத்தில் நான் நன்றி சொல் நினைத்தது ரிஷபன் சாருக்கு.
  நன்றி ரிஷபன் சார்.

  பதிலளிநீக்கு
 12. தங்கள் விமரிசன இலக்கிய சேவைக்கு மனமுவந்த பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 13. திருமதி ராஜலக்ஷ்மியும் அருமையானதொரு பகிர்வைப் பகிர்ந்துள்ளார். ஏற்கெனவே வைகோ அவர்கள் போட்டி ஆரம்பிக்கையிலேயே தன் உடல் நிலை குறித்துப் பகிர்ந்திருந்தார். அதையும் மீறித்தான் இத்தனை நாட்களாகத் தாக்குப் பிடித்து வருகிறார். ஆகவே நிச்சயம் அவருக்கு ஓய்வு தேவை தான். ஆனால் நமக்கெல்லாம் நெருங்கிய உறவினர் வந்து மாதக் கணக்காய்த் தங்கிவிட்டுப் பிரிந்து சென்றதைப் போன்றதொரு வெறுமை தோன்றும். இது உண்மை.

  திருமதி ராஜலக்ஷ்மி மேலும் பரிசுகள் வாங்கவும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. "அடுத்து என்ன புதிதாக ஆரம்பிக்க திட்டமிட்டிருக்கிறீர்கள் கோபு சார்.? அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்."//

  நானும் ஆவலாக இருக்கிறேன்.
  ராஜலக்ஷ்மி அவர்கள் மிக அருமையாக நேயர் கடிதம் எழுதி இருக்கிறார்,
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. //கதைகளை மட்டும் தவறாமல் வெளியிட்டதோடு நிற்காமல், பரிசுப் பணத்தை அவ்வபொழுது நம் வங்கிக் கணக்கிற்கு சேர்த்துவிடும் முக்கியவேலையையும் செய்து கொண்டிருந்தார். பரிசுப்பணம், ஊக்கப் பரிசு, ஹாட்ரிக் பரிசுகள், சில சமயங்களில் ஸ்பெஷல் பரிசு என்று கலக்கிக் கொண்டிருக்கிறார் கோபு சார். இப்படிப் பரிசுகளைப் பணமாகக் கொடுப்பதற்கு தாராள மனது வேண்டும். தாராளம், தாராளமாகவே இருக்கிறது கோபு சாரிடம்.
  // உண்மைதான்! வலையுலக வள்ளல் எனும் பட்டம் அளிக்கலாம் எனத் தோன்றுகிறது!

  பதிலளிநீக்கு
 16. நடுவரைப் பற்றிய கருத்துகள் பாரபட்சமற்றவை.

  பதிலளிநீக்கு
 17. ஆஹா இது நல்லா இருக்கே. வலையுலக வள்ளல. எல்லாரும் ஜோரா ஒருமுறை கைதட்டுங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் September 4, 2015 at 1:42 PM

   //ஆஹா இது நல்லா இருக்கே. வலையுலக வள்ளல். எல்லாரும் ஜோரா ஒருமுறை கைதட்டுங்க.//

   :))))) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. தங்களின் இந்தக் கருத்துக்காக நானும் இப்போது கைத்தட்டிவிட்டேன் :)))))

   நீக்கு
 18. //உண்மைதான்! வலையுலக வள்ளல் எனும் பட்டம் அளிக்கலாம் எனத் தோன்றுகிறது!//

  பரிசு கொடுப்பதால் மட்டும் அல்ல. மற்றவர்களின் வலைத் தளங்களுக்குச் சென்று பின்னூட்டம் அளித்து ஊக்கு விப்பதிலும் உங்களுக்கு இணை நீங்கள் மட்டுமே.

  பதிலளிநீக்கு
 19. ஆஹா வலையுவக வள்ளலே வாழ்க வாழ்க

  பதிலளிநீக்கு
 20. நேயர்கடிதம் ரிப்ளை கமண்ட் எல்லாம் நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 21. // பதிவர்களுக்குத் தங்கள் எழுத்துக்களின் தரம் அறிந்து கொள்ள கோபு சார் வாய்ப்பு கொடுத்திருந்தார் என்றும் சொல்ல வேண்டும். அது மட்டுமா? பலருக்கும் அறிமுகமாகாத என் போன்ற வலைப்பதிவர்களின் எழுத்துக்கள், (பரிசு பெறும் விமரிசனங்கள்) பிரபலமான கோபு சாரின் தளத்தில் வரும்போது நிறைய பேரை சென்றடையும் என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என் தளத்திற்குப் புது வாசகர்கள் வருகை புரிவதற்கு இதுவும் ஒரு காரணமென்றே நினைக்கிறேன். நன்றி கோபு சார்.// இதை அப்படியே ஈ அடிச்சாங் காப்பியா என் கருத்தா ரிப்பீட்டு..

  பதிலளிநீக்கு
 22. http://unjal.blogspot.com/2014/10/blog-post_7.html

  மேற்படி இணைப்பினில் ’சாதனையாளர் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!’ என்ற தலைப்பினில் ஓர் தனிப்பதிவு ‘ஊஞ்சல் வலைப்பதிவர்’ திருமதி கலையரசி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  பதிலளிநீக்கு
 23. 'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html

  தலைப்பு: ’இன்று போல் என்றும்’

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 24. அன்புடையீர்,

  அனைவருக்கும் வணக்கம் + இனிய ‘பிள்ளையார் சதுர்த்தி’ நல்வாழ்த்துகள்.

  ‘அரட்டை’ வலைப்பதிவர் திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் நேற்று ‘பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டை செய்வது எப்படி?’ என ஓர் சமையல் குறிப்புக்கான மிகச்சிறிய மூன்று நிமிடம் + 45 வினாடிகளுக்கான வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதனைக் கண்டு மகிழ இதோ ஓர் இணைப்பு:

  https://www.youtube.com/watch?v=t6va0K3KDtc&feature=youtu.be

  மேற்படி வீடியோவில் 0:55 முதல் 1:25 வரை சுமார் 30 வினாடிகள் மட்டும், திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் பற்றியும், அதன் அடிவாரத்தில் வசித்துவரும் அடியேனைப்பற்றியும் ஏதேதோ புகழ்ந்து சொல்லி மகிழ்ந்துள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 2014-ம் ஆண்டு, என் வலைத்தளத்தினில், 40 வாரங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்ற ‘சிறுகதை விமர்சனப் போட்டி’களில் கலந்து கொண்டு ஒன்பது முறைகள் (4 முதலிடம், 4 இரண்டாம் இடம், ஒரு மூன்றாம் இடம்) வெவ்வேறு பரிசுகளையும், கீதா விருதும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி போட்டிகளில் முதன் முறையாக, முதல் பரிசினைத் தட்டிச்சென்ற பெண் பதிவர் என்ற பெருமையும் இவர்களுக்கு உண்டு. மேலும் விபரங்களுக்கு சில இணைப்புகள்:

  http://gopu1949.blogspot.com/2014/02/vgk-02-01-03.html

  http://gopu1949.blogspot.com/2014/02/vgk-04-02-03-second-prize-winners.html

  http://gopu1949.blogspot.com/2014/03/vgk-05-02-03-second-prize-winners.html

  http://gopu1949.blogspot.com/2014/03/vgk-09-02-03-second-prize-winners.html

  http://gopu1949.blogspot.com/2014/05/vgk-15-01-03-first-prize-winners.html

  http://gopu1949.blogspot.com/2014/05/vgk-17-03-03-third-prize-winner.html

  http://gopu1949.blogspot.com/2014/06/vgk-21-01-03-first-prize-winners.html

  http://gopu1949.blogspot.com/2014/07/vgk-25-01-03-first-prize-winners.html

  http://gopu1949.blogspot.com/2014/09/vgk-34-02-03-second-prize-winners.html

  http://gopu1949.blogspot.com/2014/11/part-3-of-4.html

  http://gopu1949.blogspot.com/2014/10/4.html

  http://gopu1949.blogspot.com/2014/11/vgk-31-to-vgk-40.html

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு