என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

VGK-38 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - 'மலரே .... குறிஞ்சி மலரே .... !’




’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்



 


 




கதையின்  தலைப்பு :


 VGK-38 



   மலரே ....குறிஞ்சி மலரே ! 



இணைப்பு:



     

மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு 

மிக அதிக எண்ணிக்கையில் 

பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 

அவர்கள் அனைவருக்கும் 

என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.  







 நடுவர் திரு. ஜீவி  


 


அமெரிக்காவில் வீட்டுக்கல்வியாய் தமிழ்

நடுவர் தாத்தாவும் அவர் பேரனும்

பேரனின் தமிழ் எழுத்துக்களும்


 



நம் நடுவர் அவர்களால் 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள

விமர்சனங்கள் மொத்தம் :



ஐந்து







இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் நம் பாராட்டுக்கள் + 

மனம் நிறைந்த இனிய  நல்வாழ்த்துகள். 




  


மற்றவர்களுக்கு: 




    

முதல் பரிசினை முத்தாக

வென்றுள்ள விமர்சனம்-1



“ஸ்திரீகளுக்கு ஜீவன் உண்டு; மனம் உண்டு; புத்தியுண்டு; ஐந்து புலன்களுண்டு; அவர்கள் செத்த யந்திரங்களல்லர்,” என்று சொல்லும் பாரதி வழியில் நின்று பெண்விடுதலை விழிப்புணர்வு கதையைப் படைத்தமைக்கு ஆசிரியருக்கு முதல் பாராட்டு!.


கல்லூரி காலத்தில் “வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்,” என்று உற்சாகம் பொங்கப் பாடிப் பாரதியின் புதுமைப்பெண்ணாக விளங்கியதுடன், மற்றவர்களுக்குத் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் அளிக்கும் ரோல்மாடலாகவும் திகழ்ந்த கல்பனாவிற்குத் திருமணம் என்ற பெயரில் விலங்கு பூட்டப்படுகிறது.  சுதந்திரப்பறவையாகத் திகழ்ந்த போது, அவளிடமிருந்த புரட்சிகரமான சிந்தனைகளும், திறமைகளும் அவளுடனே அந்த நான்கு சுவர்களுக்குள் சிறை வைக்கப்படுகின்றன.


இப்படி வீட்டினுள் அடைபட்டு ஏங்கும் பெண்ணின் நிலையைக் கூண்டுக் கிளியின் நிலையோடு ஆசிரியர் ஒப்பிட்டது மிகவும் அருமை.


கூண்டுக்கிளி என்ற பாடலில் கவிமணி, தினமும் பாலும் பழமும் தந்தாலும், சோலைக்கோடிப் போகவழி சுற்றிப் பார்ப்பதேன் கிளியே?  என்று சிறுவன் கிளியைப் பார்த்துக் கேட்பதாகவும்

“சிறையில் வாழும் வாழ்வுக்குச்
சிறகும் படைத்து விடுவானோ?
இறைவன் அறியாப் பாலகனோ
எண்ணி வினைகள் செய்யானோ?
பாலும் எனக்குத் தேவையில்லை
பழமும் எனக்குத் தேவையில்லை
சோலை எங்கும் கூவிநிதம்
சுற்றித் திரிதல் போதுமப்பா”

என்று அது பதில் சொல்வதாகவும் அற்புதமாகப் பாடியிருப்பார்.

கூண்டுக்கிளிக்கு நேரா நேரத்துக்குப் பாலும் பழமும் கிடைக்கிறது; காட்டினுள் அலைந்து திரிந்து இரை தேடிக் களைத்துப் போகவேண்டிய அவசியமில்லை.  என்றாலும் “எதுவும் எனக்குத் தேவையில்லை; சோலையில் சுதந்திரமாகப் பறந்து திரிவதற்கு எதுவும் ஈடாகாது,” என்கிறது, தவறு ஏதும் செய்யாமல் சிறைவாசத்தை அனுபவிக்கும் நிரபராதியான கிளி. 

கல்பனாவிற்கும் மகாராணி போல ஓய்வெடுப்பதும் சாப்பிடுவதும் தூங்குவதும் மட்டுமே வேலைகள்.  வீட்டுவேலை செய்யப் பணிப்பெண்கள் இருவர்.  ஆனால் வெளியே வேடிக்கை பார்க்கக்கூட அனுமதியில்லை; கோயிலுக்குச் செல்லவேண்டும் என்றால் கூட மாமியார் காவல்.  ஒரு செல்போன் வைத்திருப்பதற்குக் கூட அனுமதியில்லை.  

  
தவறேதும் செய்யாமல், சிறைவாசம் அனுபவிக்கும் போது தான், சிவராமனுக்குத் தன் மனைவியின் வலியும் வேதனையும் புரிந்து அவளுக்கு விடுதலை கிடைக்கிறது.  அவன் சிறைபடாமல் இருந்திருப்பானேயானால்,  அவள் கதி என்ன? வாழ்நாள் முழுக்க கைதி தானா? என்றெல்லாம் நம்மை யோசிக்க வைக்கிறது கதை. 


பாரதிதாசன் கூண்டுக்கிளியிடம் கேட்பார்:-
“தச்சன் கூடு தான் உனக்குச் சதமோ?
அக்காஅக்கா என்றுநீ அழைத்தாய்
அக்கா வந்து கொடுக்கச்
சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே? என்று.


சுதந்திரம் என்பது ஒருவர் கொடுத்துப் பெறுவதில்லை; போராடித்தான் பெறவேண்டும் என்ற உண்மை தெரிந்திருந்தும், புதுமைப் பெண்ணான கல்பனா வாய்மூடி மெளனம் சாதிப்பது ஏன்?  கையில் இருக்கும் வங்கி வேலையைக் கூடத் தக்கவைத்துக்கொள்ளக்கூட, அவள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. 


கல்லூரி நாட்களில் பெண்சுதந்திரத்தைப் பற்றி அனல் பறக்கும் விதமாகச் சொற்பொழிவு ஆற்றிப் பலரது கைதட்டல்களைப் பெற்று விழிப்புணர்வு ஏற்படுத்தியவள் இன்று கூண்டுக்கிளி வாழ்க்கை நடத்துவது ஏன்?  என்ற  கேள்விகள்,  நமக்குள் எழாமலில்லை.


‘இடுக்கண் களைவதாம் நட்பு,’ என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க சிறந்த நட்புக்கு அடையாளமாய் நந்தினி. தோழியின் கணவனைச் சட்டென்று அடையாளம் கண்டு, தாமாகவே முன்வந்து அவனைச் சிறையிலிருந்து வெளிக்கொணர உதவுவது மட்டுமின்றி, கல்பனாவின் பெருமைகளை அவனுக்கு எடுத்துச் சொல்லி, அவளது சிறை வாழ்வு முடிவுக்கு வருவதற்கும் காரணமாயிருக்கிறாள்.


நல்ல நினைவுத்திறனோடு, யோசித்து உடனுக்குடன் முடிவெடுக்கும் திறன் கொண்ட நந்தினியே, தன் விதியை நொந்து கொண்டு அவல வாழ்வு நடத்தும் கல்பனாவை விட, என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரமாக விளங்குகிறாள்..


இருபத்தியோராம் நூற்றாண்டிலும் பெண்ணைச் சக மனுஷியாக பாவித்துப் பெண்ணுரிமையை அங்கீகரிக்க மறுக்கும் ஆண்கள் பலர் இருக்கத்தான் செய்கின்றனர்.  இத்தகைய ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதியாகச் சிவராமன் கதாபாத்திரத்தைப் படைத்திருக்கும் ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்!


மனைவியின் சிறைவாழ்வுக்குக் காரணமான சிவராமனுக்குப் பெண்ணொருத்தியின் மூலமாகமே விடுதலை கிடைப்பது, ஆதிக்க மனோபாவம் கொண்ட ஆண்களுக்கு, ஆசிரியர் வைக்கும் குட்டு!


முதல் சிறைவாசத்தையும், முதல் குறிஞ்சிமலரின் தரிசனத்தையும் ஒப்பிடுவது தவறு என்பது என் கருத்து. 
 .  

எதுவுமே அளவுக்கு மீறினால் ஆபத்து தான் என்ற நீதியையும் இக்கதை உணர்த்தத் தவறவில்லை.  மனைவிமேல் கணவன் வைக்கும் அளவுக் கதிகமான, அபரிமிதமான அன்பே, அவளது இயல்பு வாழ்க்கையைப் பாதித்து மூலையில் முடக்கக் காரணமாகிறது. 


பெண்விடுதலை, மக்கள்தொகையில் பாதியளவு உள்ள பெண்களின் அறிவும் திறமையும் சமுதாயத்துக்குப் பயன்படவேண்டும், பெண்கல்வி போன்ற முற்போக்கு கருத்துக்களுடன் கூடிய இக்கதையைப் படைத்து அதை இவ்விமர்சனப்போட்டியின் மூலம் நம்மை ஆழமாக வாசிக்கத் தூண்டிய கோபு சார் அவர்களுக்குப் பாராட்டும் நன்றியும்.



 




இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 





 திருமதி.



ஞா. கலையரசி 



அவர்கள் 


வலைத்தளம்: ஊஞ்சல்

unjal.blogspot.com.au


  


 





மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.






      




முதல் பரிசினை முத்தாக


வென்றுள்ள விமர்சனம்-2


 









ஒன்றின் மேல் எழும் கண்மூடித்தனமான அன்பு, அந்த அன்பால் உருவாகும் ஆளுமை, தனக்குப் பிடித்த அதைத் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளும் வேகம், தான் மட்டுமே ரசிக்கவும் அனுபவிக்கவும் விரும்பும் ஆசை, தன்னை விட்டுப் போய்விடுமோ என்ற அநாவசிய பயம், ஒரு குறுகிய வட்டத்தைப் போட்டு அதை அதற்குள் முடக்கி அங்கிங்கு நகரவிடாமல் மூச்சடைக்கச் செய்யும் இயல்பு, தன் கைப்பொருளாய் அது தன் கண்முன்னால் இருப்பதாலேயே அடையும் ஆனந்தம்… அறிந்தோ அறியாமலோ அது தனக்கான வட்டத்தை விட்டு சற்று வெளியே வந்தாலும் எழும் ஆத்திரம்… கையகப் படுத்தப்பட்ட அது கைவிட்டுப் போகும் நிலையில் உணரும் கையாலாகாத்தனம்… கண்மூடித்தனமான அன்பே காலப்போக்கில் கண்மூடித்தனமான வெறியாய் மாறும் சாத்தியம்… இத்தனைக்கும் ஒரே பெயர்.. ஆங்கிலத்தில் பொஸஸிவ்நெஸ் என்ற ஒற்றைச்சொல்லால் முடித்துவிடுகிறோம். இதற்கு இணையான தமிழ்ச்சொல்லைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.


பறத்தல் பறவையின் இயல்பு. பறக்கும் பறவைகளை ரசிப்பது இயல்பான மனிதர்களின் இயல்பு. பறக்கும் பறவைகளைப் பிடித்து அவற்றைக் கூண்டிலிட்டு ரசிப்பது.. பொஸஸிவ் மனநிலை கொண்ட மனிதர்களின் இயல்பு. கல்பனாவின் கணவன் சிவராமனுக்கு இருக்கும் பொஸஸிவ் குணத்தை கிளிகள் வளர்ப்பிலிருந்தும் கல்பனாவின் வாய்மொழியிலிருந்தும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.


சிலர் பெருமையாக சொல்வார்கள், தங்கள் கணவனோ, மனைவியோ, காதலனோ, காதலியோ மிகவும் பொஸஸிவ் என்று. ஆரம்பத்தில் பரவசத்தைத் தரும் அந்த அனுபவம் போகப்போக  கட்டுப்பாடுகளை உண்டாக்கி தளைகளை இறுக்கி வலியும் வேதனையும் தரக்கூடியதாய் அமைந்துவிடும்.


பொஸஸிவ்நஸ் என்பது கணவன் மனைவி, காதலன் காதலிக்கிடையில் மட்டுமல்ல, பெற்றோர், பிள்ளைகள், உடன்பிறந்தவர்கள், நண்பர்கள் என்று எந்த உறவுக்கிடையில் உருவானாலும் பிரச்சனைதான். அந்த அன்பின் ஆளுமைக்கு உட்பட்டவர்கள் தங்களை அறியாமலேயே மெல்ல மெல்ல தங்கள் சுதந்திரத்தை இழப்பர், தங்கள் சுயத்தை இழப்பர், தங்கள் உரிமைகளை இழப்பர், தங்கள் உணர்வுகளை இழப்பர், இறுதியில் தங்கள் வாழ்க்கையையே இழந்துநிற்பார்கள். இந்தக் கதையில் கல்பனாவும் தன் கணவனின் ஆளுமைக்கு எதிராக குரல் எழுப்ப விரும்பவில்லை. உள்ளுக்குள் அலுப்பும் சலிப்பும் இருந்தாலும் வெளியில் தோழியிடம் கணவனைப்பற்றி பெருமையாகவே பேசுகிறாள்.  கணவனிடத்திலோ எந்த சூழ்நிலையிலும் தன் பெருமைகளைப் பற்றிப் பேசாதவளாகவே இருக்கிறாள். 


பொஸஸிவ் குணம் கொண்டவர்கள் எல்லோருமே பொல்லாதவர்கள் என்ற முடிவுக்கு வரமுடியாது. சிவராமன் நல்லவன்தான். அடுத்த பெண்களை ஏறெடுத்தும் பாராத சங்கோஜி. மனைவியை அன்பாக வைத்துக்கொள்பவன், வீட்டு வேலைகளைச் செய்ய ஆட்களைப் போட்டு மனைவியை சொகுசாக வைத்துக்கொள்ள விரும்புபவன்… ஆனால் இந்த கண்மூடித்தனமான அன்புதான் குதிரைக்கு கண்பட்டை போட்டது போல் வேறெதையும் சிந்திக்கவிடாமல் அவனைத் தடுத்துவிடுகிறது. அன்பு மனைவியின் அளப்பரிய ஆற்றலைப் புரிந்துகொள்ளும் சக்தியும் இல்லாது போய்விடுகிறது அல்லது புரிந்தும் புத்தி அதை ஏற்க மறுக்கிறது.


கல்பனாவின் அருமை பெருமைகளை நேரம் பார்த்து அவனுக்கு உணர்த்தி புரியவைக்கிறாள் ஒருத்தி. அவள்தான் வழக்கறிஞரும் கல்பனாவின் தோழியுமான நந்தினி. காவல்துறையில் சிக்கியிருக்கும் சிவராமனை விடுவிப்பதோடு, சிவராமனின் கட்டுப்பாட்டில் சிக்கியிருக்கும் கல்பனாவையும் விடுவிக்கிறாள்.


கதையாகவே இருந்தாலும் தவறு செய்தவர்கள், தாங்களாகவே உணர்ந்து திருந்த வேண்டும், திருந்தாவிடில் செய்த தவறுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டும். அப்போதுதான் வாசகர்களுக்கு மனம் ஆறும். கதை முடிந்த திருப்தி கிடைக்கும். இந்தக் கதையிலும்    எல்லாத் திறமைகளும் அசாத்திய துணிச்சலும் கொண்ட கல்பனாவை ஒரு கூண்டுப்பறவை போல் அடக்கி முடக்கி வைத்த அவள் கணவனுக்குக் கிடைக்கும் தண்டனை அவன் திருந்துவதற்கான வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. சிலரை சொல்லித் திருத்தமுடியாது. இங்கும் சிவராமன் திருந்துவதற்கு இரண்டு நாள் சிறைவாசமும், வழக்கறிந்த ஒரு பெண்ணின் உதவியும்தான் சிவராமனின் மனமாற்றத்துக்கு உதவியிருக்கிறது.


அதென்ன, தவறு செய்தவனை சென்னையிலேயே வைத்துத் தண்டிக்காமல் டில்லிக்கு அனுப்பி ஏன் சிக்கலில் மாட்டிவைக்கவேண்டும் என்று தோன்றலாம். அப்போதுதானே வழக்கறிஞரான நந்தினியின் பார்வையில் படமுடியும்? ஏன் நந்தினியை டில்லியில் இருப்பதாக காட்டவேண்டும்? நந்தினியும் கல்பனாவும் பக்கம் பக்கம் தொடர்பில் இருப்பது போல் காட்டினால் இந்த ஆறுமாதகால அவகாசமே தேவைப்பட்டிருக்காதே. நந்தினி ஆரம்பத்திலேயே கல்பனாவின் முடக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்திருப்பாள். ஆனால் அப்போது அவை சிவராமனால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே..


இப்போது சிவராமன் ஒரு சிக்கலில் சிக்கிக் கொண்டதால் நந்தினி அவனைக் காப்பாற்றியிருக்கிறாள். இப்போது அவள் சொல்லும் வார்த்தைகளுக்கு ஒரு மதிப்பு இருக்கும். அதனாலேயே இந்த இடைவெளியை கதாசிரியர் நுழைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.


டில்லியில் வழக்கறிஞராக இருக்கும் பெண் ஒருநாளில் எத்தனையோ பேர்களை சந்திக்கிறாள், வழியில் பார்க்கிறாள். அத்தனைப் பேரையுமா அவள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறாள்? சிவராமனை மட்டும் எப்படி கவனித்து அடையாளம் கண்டுகொண்டாள்? அதற்குத்தானே அந்த காய்ந்த திராட்சை மச்சம்! அதையும் தோழிகள் கேலி செய்ததால் நினைவில் நின்றதுபோல் காட்டியிருப்பது சிறப்பு.


கதை நெடுக எந்த இடத்திலும் வாசகர் ஏன் எதற்கு என்ற கேள்வி எழுப்பிவிடாதபடிக்கு சர்வ ஜாக்கிரதையாய் சம்பவங்களை மிக நேர்த்தியாகப் பின்னி, தான் சொல்ல வந்த கருத்தை மிக அழகாக சொல்லியுள்ளார் கதாசிரியர்.


தெரிந்தே தவறிழைப்பவர்கள் ஒருவகை. தவறென்று தெரியாமல் இழைப்பவர்கள் ஒரு வகை. தவறென்று தெரிந்தபின் அதைத் திருத்திக்கொள்ள முயல்பவர்கள் ஒருவகை, முயலவே விரும்பாதவர்கள் ஒருவகை, முயன்றும் இயலாதவர்கள் ஒரு வகை. இப்படியானவர்கள் மத்தியில் சிவராமன், தன் மனைவி கல்பனாவை அன்பெனும் சிறையில் அடைத்து அவள் வளர்ச்சியை முடக்குவது தவறென்று உணர்ந்து திருந்துவது கதையை வாசிக்கும் அனைவருக்குமே பரம திருப்தியைத் தரும் ஒரு சாதகமான முடிவு. 




 


இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 




  


 திருமதி. 



கீதா மதிவாணன்  


அவர்கள்.



வலைத்தளம்: கீதமஞ்சரி

geethamanjari.blogspot.in

  



மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.



      






 

  

VGK-35 TO VGK-38


   



தான் அடித்த ஐந்தாம் ஹாட்-ட்ரிக் வெற்றியினை

நான்காம் சுற்றிலும் தக்க வைத்துக்கொண்டுள்ளார்கள்.





மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.




      



 



சென்றமுறை VGK-37 இல் இரண்டாம் பரிசினைப் 

பகிர்ந்துகொண்ட அதே ஜோடி

இந்தமுறை VGK-38 இல் முதல் பரிசினைப்

பகிர்ந்துகொண்டுள்ளது 

மேலும் மகிழ்ச்சியளிக்கிறது. 

இருவருக்கும் நம் இனிய நல்வாழ்த்துகள்.




      






மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.




நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

முதல் பரிசுக்கான தொகை 

இந்த இருவருக்கும் சரிசமமாகப் 

பிரித்து அளிக்கப்பட உள்ளது.



      

 



இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 



காணத்தவறாதீர்கள் !



     




 முக்கிய அறிவிப்பு 



’VGK-39 மாமியார் ’

சிறுகதை விமர்சனப்போட்டி 

பரிசுக்கான முடிவுகள்

நாளை திங்கள் +செவ்வாய்க்குள் 

முற்றிலுமாக 

வெளியிட முயற்சிக்கப்படும்.


காணத்தவறாதீர்கள் !


    


நினைவூட்டுகிறோம்




இந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான


இணைப்புகள்:



 
பகுதி-1 க்கான இணைப்பு:  
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-1-of-4.html


பகுதி-2 க்கான இணைப்பு:  
பகுதி-3 க்கான இணைப்பு:  
பகுதி-4 க்கான இணைப்பு:  



கதையின் தலைப்பு:



VGK-40


மனசுக்குள் மத்தாப்பூ !



விமர்சனங்கள் வந்துசேர இறுதி நாள்



இன்று 26.10.2014


 ஞாயிற்றுக்கிழமை



இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.




போட்டியில் 


கலந்துகொள்ள 


மறவாதீர்கள் !




இதுவே இந்தப்போட்டியில் 



தாங்கள் கலந்துகொள்வதற்கான



இறுதி வாய்ப்பாகும். 



போட்டியில் கலந்துகொள்ள



இன்னும் சிலமணி



நேரங்களே உள்ளன.






அரியதோர் வாய்ப்பினை 

நழுவ விடாதீர்கள் !









என்றும் அன்புடன் தங்கள்

வை.கோபாலகிருஷ்ணன்


25 கருத்துகள்:

  1. முதல் பரிசினைப் பகிர்ந்துகொண்டுள்ள
    இருவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. அன்புடையீர்,

    அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

    http://gopu1949.blogspot.in/2014/06/vgk-24.html

    இந்த என் மேற்படி பதிவினில் நான் வெளியிட்டுள்ள ‘VGK-24 தாயுமானவள்’ என்ற கதையினை திருவாளர். G. பெருமாள் செட்டியார் என்ற ஒரு பதிவர் ஆழ்ந்து படித்துள்ளார்கள்.

    அவரால் மேற்படி கதைக்கான விமர்சனப்போட்டியில் கலந்துகொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    எனினும் இந்த என் கதையின் தாக்கம் அவருக்குள் எழுப்பியுள்ள உணர்வுகளை மிகவும் உருக்கமாக தன் வலைத்தளத்தில் இன்று தனிப்பதிவாக எழுதி சிறப்பித்துள்ளார்கள்.

    இதோ இணைப்பு:
    http://gperumal74.blogspot.in/2014/10/blog-post_25.html

    காணத்தவறாதீர்கள்.

    அன்புடன் கோபு [VGK]




    பதிலளிநீக்கு
  3. அன்புடையீர்,

    அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

    இந்த VGK-38 சிறுகதை விமர்சனப்போட்டியில் முதல் பரிசினை வென்று பகிர்ந்துகொண்டுள்ள ‘கீதமஞ்சரி’ திருமதி. கீதா மதிவாணன் அவர்கள் தனது வலைத்தளத்தினில் இன்று ஓர் புதிய பதிவினை வெளியிட்டுள்ளார்கள்.

    தலைப்பு: ’ஒரு வருத்தமும் ஒரு மகிழ்ச்சியும்’

    இணைப்பு:
    http://geethamanjari.blogspot.in/2014/10/blog-post_26.html

    பதிவர்களுக்கான மிகவும் பயனுள்ள செய்திகளும், எச்சரிக்கையும் அதில் உள்ளன.

    காணத்தவறாதீர்கள்.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய பதிவுக்கு இணைப்பு கொடுத்து அறிவித்தமைக்கு மிகவும் நன்றி கோபு சார்.

      நீக்கு
  4. என் விமர்சனத்தை முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் இந்த வாய்ப்பை நல்கிய திரு கோபு சார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
    அருமையான விமர்சனம் எழுதி முதல் பரிசு பெறும் விமர்சன வித்தகி கீதாவுடன் பரிசைப் பங்கிட்டுக் கொள்வதில் மட்டில்லா மகிழ்ச்சியடைகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. விமர்சனப்போட்டித்தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கும் இவ்வேளையில் தொடர்ந்து பரிசினைப் பெறுவது பெருமகிழ்ச்சியளிக்கிறது. முதல் பரிசு என்பதும் அதை என் அன்புக்குரிய கலையரசி அக்கா அவர்களுடன் பகிர்ந்துகொள்வதும் மிகுதியான மகிழ்வளிக்கிறது.

    பரிசுக்குரியதாய் என் விமர்சனத்தைத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் அற்புதமான வாய்ப்பினை அமைத்துக்கொடுத்துள்ள கோபு சார் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.

    பாரதியார், பாரதிதாசன், கவிமணி போன்றோரின் கவி வரிகளை மேற்கோள் காட்டி சிறப்பானதொரு விமர்சனத்தை வழங்கி முதல் பரிசினை வென்றுள்ள கலையரசி அக்காவுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. முதல் பரிசைப் பகிர்ந்து கொண்டிருக்கும் திருமதி கலையரசிக்கும், திருமதி கீதா மதிவாணனுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். கீதா மதிவாணன் தொடர்ந்து முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் விதமாகச் சிறப்பான விமரிசனம் எழுதி வருவதற்குப் பாராட்டுகள்; வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. இன்னமும் யாருடைய விமரிசனத்தையும் படிக்கவில்லை. படிக்காமல் அவற்றைக் குறிப்பிட முடியாது என்பதால் குறிப்பிடவில்லை.

    பதிலளிநீக்கு
  8. முதல் பரிசினை தங்களது முத்தான விமர்சனத்தால் வென்றுள்ள இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி சேஷாத்ரி சார்!

      நீக்கு
  9. அமெரிக்காவில் நம் நடுவரிடம் தமிழ் கற்கும் அவரின் பேரனுக்கு என்னுடைய வாழ்த்துகள்! நடுவர் அவர்களுக்கு என் பாராட்டுகள்!பேரனின் தமிழ் எழுத்துகள் அருமை! பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள சேஷாத்திரி அவர்களுக்கு,

      வணக்கம்.

      தங்கள் கூர்மையான பார்வைக்கும், உணர்விற்கும் நன்றி.

      என் பேரனுக்கு தமிழ் கற்றுத் தந்தது அவன் பாட்டி தான்.
      என் மனைவி ஓய்வு பெற்ற ஆசிரியை. அதனால் ஆறே மாதங்களில் தமிழ் படிக்கவும், எழுதவும் முறைப்படி
      கற்றுக் கொடுத்து விட்டார்கள்.

      இந்தப் பகுதி விமர்சனங்களில் ஹிந்தி அறிந்திருப்பதைப் பற்றி குறிப்புகள் வருகின்றன. அதனால் பொருத்தமாக இருக்கும் என்று இந்தப் படத்தைப் போடச் சொல்லி கோபு சாரிடம் கேட்டுக் கொண்டேன்.

      அதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

      நமது பதிவுலக சகோதரியின் கீழ்க்கண்ட பதிவைப் பாருங்கள்.

      http://authoor.blogspot.com/2014/08/blog-post.html

      இது தான் இன்றைய நிலை. பள்ளிப்படிப்பில் வாய்ப்பு இல்லாது போயினும் தமிழ் எழுத படிக்க நம் சிறார்கள்
      முயன்று வெற்றி பெற வேண்டும்.

      நம் செல்வங்கள் தமிழ் தெரிந்திருப்பது தான் எதிர்காலத்
      தமிழ் வளர்ச்சியே. இந்தப் பதிவுக்கு வரும் சகோதர சகோதரிகள் அவர்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் தமிழ் எழுதப் படிக்க தெரியும் என்கிற நிலையை எய்த வேண்டும். அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

      அன்புடன்,
      ஜீவி

      நீக்கு
  10. முத்தான முதல் பரிசுகளை வென்ற தோழிகள் கீதா மற்றும் கலையரசிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. பல அம்சங்களையும் அலசி ஆராய்ந்த அருமையான விமரிசனங்கள்.
    திருமதி. கலையரசி,
    திருமதி. கீதா மதிவாணன்
    இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. திருமதி. கலையரசி, திருமதி. கீதா மதிவாணன் இருவருக்கும் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  13. திருமதிகள் கீதாமதிவாணன் கலையரசி அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  14. திருமதி. கலையரசி, திருமதி. கீதா மதிவாணன் இருவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. திருமதி கீதாமதிவாணன் திருமதி கலயரசி அவங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. திருமதி கீதாமதிவாணன் திருமதி கலையரசி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. திருமதி கீதா மதிவாணன் திருமதி கலையரசி இருவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு