என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 31 அக்டோபர், 2014

VGK 40 / 01 / 03 FIRST PRIZE WINNERS - மனசுக்குள் மத்தாப்பூ




’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்




  
  

  
  





கதையின்  தலைப்பு :


 VGK-40 



     மனசுக்குள் மத்தாப்பூ   






இணைப்புகள்:

பகுதி-1 க்கான இணைப்பு:  
பகுதி-2 க்கான இணைப்பு:  

பகுதி-3 க்கான இணைப்பு:  

பகுதி-4 க்கான இணைப்பு:  



     

மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு 

மிக அதிக எண்ணிக்கையில் 

பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 

அவர்கள் அனைவருக்கும் 

என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.  








 நடுவர் திரு. ஜீவி  


 நம் நடுவர் அவர்களால் 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள

விமர்சனங்கள் மொத்தம் :



* ஆறு *


*வழக்கமான ஐவருடன் மூன்றாம் பரிசு மட்டும் 


உபரியாக ஒருவருக்கு அளிக்கப்படுகிறது.*


*உயர்திரு நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

மூன்றாம் பரிசுக்கான தொகை மட்டும் 

இருவருக்குமே முழுமையாகவே அளிக்கப்பட உள்ளது *

[NOT SHARING]










இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஆறு நபர்களுக்கும் 

நம் பாராட்டுக்கள் + 

மனம் நிறைந்த இனிய  நல்வாழ்த்துகள். 



  
       


முதல் பரிசினை முத்தாக


வென்றுள்ள விமர்சனம்-1







ஒரு காரியம் செய்வீர்களா? "வித்தியாசமான கரு" என்று முதலிலேயே கோபு அவர்களைக் கூப்பிட்டுச் சொல்லிவிடுங்களேன்? 


அப்படியே இன்னொன்றையும் நான் சொன்னதாகச் சொல்லிவிடுங்கள், புண்ணியமாகப் போகும். "இதுவரை படிக்க வைத்தக் கதைகளில்(சீடை கதை தவிர) பெரும்பாலும் இழையளவு கருநூலை வைத்து ஜரிகை கலந்த எட்டுமுழ கதைவேட்டி பின்னியவர், இக்கதையில் சம்பவங்கள் திருப்பங்கள் சேர்த்துக் கருவைக் கனமாக்கியிருக்கிறார். கனக்கருவைக் கதைப்படுத்துவதில் தெரிந்தோ தெரியாமலோ குழி தோண்டியிருக்கிறார். நிறைய கதைகள் இத்தகைய குழியில் விழுந்து, எழாமல் அமுங்கிவிடும். இவர் விழாமல் தாண்டியிருப்பது பாராட்ட வேண்டிய சாமர்த்தியம்". சொல்லிவிட்டீர்களா? சமர்த்து. நன்றி. குழி தோண்டு/தாண்டு படலத்துக்குப் பிறகு வருவோம்.


நாயகன் மனோ மனோதத்துவ நிபுணன். மறுபடி படியுங்கள். மனோ பிழையாக இருமுறை வரவில்லை. நாயகன் மனோ. நாயகன் மனோதத்துவ நிபுணன். ஆக.. புரிந்ததா, விடுங்கள். 


மனோதத்துவ நிபுணனோ கனவு காண்பதில் நிபுணனாக இருக்கிறான்.


கர்ப்பம் தரித்த அனுவைக் கட்டிக்கொண்டு அட்டையாக ஒட்டிக்கொண்டிருக்கிறான் மனோ. அனு விலகுமாறு நச்சரிக்கிறாள். மனோ இரட்டை அர்த்தத்தில் கொஞ்சுகிறான் (ஹிஹி.. கதையில் கிளுகிளுவுக்குக் குறைச்சலில்லை). பிரசவ வலி வேகத்தில் திடீரென்று அலறுகிறாள் அனு. ஹ்ம், கனவு. மனோ விழிக்கிறான்.


காதல் கனவு காண்கிறோம் என்று வையுங்கள். முதலில் காதலிப்பதாகவும், பிறகு கல்யாணம், பிள்ளை என்று வரிசைக் கிரமமாகத் தானே கனவு காண்போம்? இந்தக் கதையின் நாயகன் முதலில் பிள்ளைப் பேற்றை கனவாகக் கண்டுவிட்டு அங்கிருந்து லாஜிகலாக காதலுக்கு வருகிறான். இந்தக் கேள்விக்குறி லாஜிக் சுவாரசியமான லாஜிக்காக மாறியிருப்பது கதாசிரியரின் கைவண்ணம்.


கனவு நிபுணன் மனோ, அனு வீட்டின் மாடியில் குடியிருக்கிறான். தினசரி என்ன செய்கிறார் மாடி வீட்டு மைனர்? ஒரு பைனாகுலர் வைத்துக்கொண்டு தினம் கீழ் வீட்டு அனு கோலம் போடுவதை ரசிக்கிறான். அனுவும் தினமொரு கோலம் போட்டு (தரையில் தான்) அழகு பார்க்கிறாள். அதை மனோ அழகு பார்ப்பதையும் அழகு பார்க்கிறாள். மண்ணிலே கோலம் போட்ட கோதை, நாயகன் மனதிலும் நாளடைவில் கோலம் போட்டு விடுகிறாள். காதல் கோலம். அதைக் கலையாமல் வைத்திருருக்க விரும்புகிறான் நாயகன். இந்த வேளையில் நாயகி வாய்ச்சொல் ஏதுமிலை என்ற வண்ணமிருப்பது நாயகனுக்குப் புரிகிறது. ஊஹூம்.. கண்ணொடு கண் நோக்கின் வாய்ச்சொற்கள் என்ற வள்ளுவர் பாணி இல்லை. அனு உண்மையிலேயே வாய்ச்சொல் ஏதுமிலாதவள். ஊமை. திக்கென்றாகிறது பைனாகுலர் மைனருக்கு. ஊமையுடன் எப்படி காதல் டூயட் பாடுவது என்ற கவலையில் திக்கெனவில்லை. அத்தனை சொக்கத்தங்க அழகுப் பதுமை ஊமையான அநியாயத்தில் திக்கென்றாகிறது. கள்ள சைட் என்றாலும் மைனருக்கு நல்ல மனதாக்கும்.


தொடக்கத்திலிருந்து இந்த இடம் வரை கதாசிரியர் அடிக்கடி கவிஞராவது வியப்பு. சுவாரசியம். அழகு. அதனால் அருமை.

அனு கோலமிடும் அழகை இப்படி வர்ணிக்கிறார்: "..வழுவழுப்பான கைகளில் அணிந்த கண்ணாடி வளையல்களின் ஒலிகளுடன், தலை நிறைய பூவுடன், அன்ன பக்ஷியொன்று தத்தித்தத்தி தாவித்தாவி வட்டமிட்டு கோலம் வரையும் அழகை..." சைட் அடித்தாலும் இப்படியல்லாவா அடிக்க வேண்டும்? எத்தகைய குளுகுளு காட்சி!


அனுவின் "இடுப்பு மடிப்புகளில் பனித்துளிகள் படர்வதை" படிக்கையில் நமக்கே ஏதோ செய்கிறது. இந்த மாதிரி பைனாகுலர் ஒன்று கிடைக்காமல் போனதே? பைனாகுலர் கிடைத்தாலும் அனுராதாவுக்கு எங்கே போவது? ஹ்ம்.


"அனுவின் அன்றாடக் கோலங்கள், அன்புக் கோலங்களாக பதிந்து, என்றும் அழியாத காதல் கோலங்களாக மாறத்துவங்கி விட்டன". ஆகா! கோல ஜாலம்.


இத்தோடு விட்டாரா? தலை நிறைய பூ இருந்தால், அடுத்த கட்டம் என்ன? "சிறிய பட்டாம்பூச்சியொன்று அவளின் முதுகுப்புறம் தேன் தேடி மேய்வதை"... அதானே? இதல்லவோ கிளுகிளு? ரசிக்கிறான் நாயகன். குட்டிக் கவிதைகள் படித்த திருப்தி நமக்கு.


ஊமைப் பெண் ஒரு கனவு கண்டாள். சரி, அதை உள்ளத்தில் வைத்து வாழ்கிறாளா என்றுத் தெரிந்து கொள்ள நினைக்கிறான் நாயகன். அதற்குள் சோதனையாய் கதையில் திருப்பம். சைட் அடித்துக் கொண்டிருந்தவன் வீட்டுக் கதவைத் தட்டிச் செய்தி சொல்கிறார் அனுவின் தாய். 


அனுவைப் பெண் பார்க்க பட்டணத்திலிருந்து பெரிய இடத்துக்காரர்கள் வருவதாகவும், பெண் பார்க்கும் நேரத்தில் கீழே வந்து ஆண் இல்லாத வீட்டில் சற்று உதவியாக இருக்க முடியுமா என்றும் கேட்கிறார். அதிர்ந்த நாயகன் தன் எண்ணத்தைச் சொல்லாமல் உதவுவதாகச் சொல்கிறான். 'க்கும்.. சைட் அடிக்க மட்டும் தெரிகிறது' என்று நாம் புலம்புகிறோம்.


காதலுறும் ஒருவன் தன் காதலுக்கு இடையூறு ஏற்படுவது போல் தெரிந்தால் என்ன செய்வான்? உடனே பதறுவான். காதலியிடம் போவான். பெற்றோர்களிடம் புலம்புவான். நண்பர்களிடம் ஆலோசனை கேட்பான். குறைந்தபட்சம் கவிதையாவது பாடுவான். மனோ அப்படியில்லை. உடனே ஹை டெபனிஷன் கலரில் கனவு காண்கிறான். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வடிகால்.


கனவில் அனு கோலம் வரைகிறாள். (இது மனோவின் கனவு. அனு, அவன் சைட் அடிக்கும் பெண். அவன் கனவில் அவள் கோலமிட்டால் என்ன, கொஞ்சினால் நமக்கென்ன என்கிறீர்களா? சரி). அனு கோலம் வரைவதை மனோ சைட் அடித்துக் கொண்டிருக்கிறான் (கனவில் தான்). இவன் சைட் அடிக்கும் கோணத்தில் அனுவின் முதுகுப்புறமாக ஒரு பெரிய நாகம் படமெடுத்து ஆடுகிறது. மனோ அரண்டு போய் கீழிறங்குகிறான். சட்டென்று அனுவை அப்படியே தூக்கிக்கொண்டு நாகத்தின் பார்வையில் நிற்கிறான். யாரோ தன்னைத் தொட்டுத் தூக்கியது ஒரு அதிர்ச்சி. கண்ணெதிரே நாகம் படமெடுத்து ஆடுவதைப் பார்த்ததில் மறு அதிர்ச்சி. அதுவரையில் பேச்சறியாதப் பேதை, "அம்மா" என்று அலறுகிறாள். வந்த வேலை முடிந்தது போல் மறைகிறது நாகம். ஆனால் கன்னிப் பெண்ணைத் தொட்டுத் தூக்கிய கயமைக்காக மனோவுக்குக் கெட்ட பெயரும் தண்டனையும் கிடைக்கிறது. அதற்கு நிவர்த்தியாக என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் கனவு கலைந்து விடுகிறது.


கனவில் கண்டது நிஜமாகும் என்று நம்புகிறவன் மனோ. 


மூச்! படித்த மனோதத்துவ நிபுணர் இப்படியெல்லாம் நம்புவாரா? லாஜிக்கெல்லம் கேட்கப்படாது. பிச்சிப்புடுவேன் பிச்சு. இது மனோவின் நம்பிக்கை. அதில்லாமல், காதலுக்கு எதற்கு லாஜிக்? 


கனவு நனவானால் என்னவாகும் என்று கலங்கி நிற்கையில், கீழே அனு வீட்டில் பட்டணத்து மாப்பிள்ளையைச் சந்திக்கிறான் மனோ.

மாப்பிள்ளையாக வந்தவன் ஒன்றாம் நம்பர் கேடி. ஆயிரம் கேடிக்கு சமம். சும்மா அதிரும் கேடித்தனம். தானறிந்த அத்தனை தில்லுமுல்லுக்களையும் காலை எட்டு மணிக்குள்ளாகச் செய்பவன். அதற்குப் பிறகு புதுக் கயமைகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளன். ஏற்கனவே பல முறை திருமணமானவன். பணத்துக்காகவும் பொல்லாப்புக்காகவும் மாப்பிள்ளையாக இங்கே வந்திருக்கிறான். இவனைப் பற்றி மனோவுக்கு இளமையிலேயே தெரியும்.


தன்னுடைய அனுவுக்கு ஆபத்து என்று தெரிந்ததும் மனோ என்ன செய்கிறான்? 


நோ, நோ. இந்த முறை கனவெல்லாம் காணவில்லை. உண்மைகளைப் புட்டுப் புட்டு வைத்து விடுகிறான் அனுவின் தாயிடம். ஏதோ சாக்கு சொல்லி மாப்பிள்ளையை அனுப்பி விடுகிறார் தாய்.  கதையின் முக்கிய திருப்பம் இது தான். மிச்சக்கதை விமரிசனத்துக்குத் தேவையில்லை. நீங்களே படித்துக் கொள்ளுங்கள். மறு நாள் கோலத்தில் தன்னுடைய நன்றியை மனோவுக்கு வெளிப்படுத்துகிறாள் அனு என்பதை மட்டும் இங்கே தெரிந்து கொண்டால் போதும்.


குழி தோண்டு/தாண்டு படலத்துக்கு வந்து விட்டோம்.


கர்ப்பிணியாக இருக்கும் இடங்கள் கனவு, அதற்குப் பிறகு நாகப்பாம்பு வருமிடம் கனவு... என்று அனுவையும் மனோவையும் இணைக்கும் சுவாரசியமான சம்பவங்கள் அனைத்தும் கனவு என்று கதாசிரியர் சொன்னதும் பற்றிக்கொண்டு வருகிறது. இப்படியே கடைசியில் எல்லாம் கனவு என்று சொல்லி நம்மைக் குழந்தையாகக் கருதுவார் போலிருக்கிறதே என்ற எரிச்சலுண்டாகிறது. அதுவும் கனவில் தோன்றுபவை நனவாகும் என்ற நம்பிக்கையுள்ள படித்த நிபுணன் என்றதும் டபுள் எரிச்சல். எல்லாம் கனவு என்று எழுதுவது கதாசிரியருக்கான குழி. இது கனவு அது கனவு என்று ஆங்காங்கே குழி தோண்டியவர் எப்படி வெளிவரப் போகிறார் என்ற ஆவலுடன் தொடர்கிறோம். அழகாகவே தாண்டியிருக்கிறார்.


மனோ மனோதத்துவ நிபுணர் என்று முதலிலேயே சொல்லிவிடுவதால், தாண்டு படலம் சுலபமாகி விடுகிறது. உலகின் அத்தனை பேரும் ஏதோ ஒரு கட்டத்தில் மன நோயாளிகளே என்ற வியாக்கியானம் அசர வைக்கிறது. அந்த வகையில் அனுவுக்கும் மனோதத்துவ ரீதியில் குணமுண்டாகலாம் என்ற லாஜிக்கை சிக்கல் பிரித்துச் சொல்கிறார். பட்டணத்து மாப்பிள்ளையின் பெயர் நாகப்பன். நாகம் கனவில் வந்தது, நாகப்பன் நனவில் வருகிறான். கனவிலும் நனவிலும் காப்பாற்றியவன் மட்டும் நாயகன். கனவில் நடப்பது நனவாகும் என்று நம்புகிறான் மனோ. அனுவுடன் கனவில் கணவனாகக் கொஞ்சுகிறான். நனவில் நன்றி சொல்லி காதலைத் தொடங்கி வைக்கிறாள் அனு. ஆக, சாமர்த்தியமாக கனவுக்கும் நனவுக்கும் முடிச்சிட்டு, குழி தாண்டி, வெற்றிக்கொடி நட்டிருக்கிறார் கதாசிரியர். பாராட்டுக்கள்.


வாழ்வில் நான் முக்கியமாக நினைக்கும் மூன்றை இந்தக் கதை தொட்டிருப்பது, தொட்டுப் பின்னியிருப்பது எனக்கு பிடித்திருக்கிறது.

நம் எல்லோருக்குமே வாழ்வில் ஒரு முழுமை தேவைப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் இந்த முழுமை கிடைக்கிறதா என்றால் இல்லை. முழுமை என்பது அவரவர் விளக்கத்துக்குட்பட்டது என்றாலும், ஒரு சிறிய பொதுவானக் கேள்வியின் விடையில் அது முழுமையா இல்லையா என்று தெரிந்து விடுகிறது. ஒரு நாளின் முடிவில், அல்லது வருடத்தின் முடிவில், அல்லது ஒரு பருவத்தின் முடிவில், அல்லது முதுமையின் விளிம்பில்.. ஏதோ ஒரு காலக்கட்டத்தில் வாழ்வின் சுவடுகளைத் திரும்பிப் பார்க்கையில், சம்பவங்களை அசை போடுகையில்... 'நாம் வாழ்க்கையில் முழுமை பெற்றோமா, ஒரு நிறைவு கிடைத்திருக்கிறதா?' என்ற சிறிய, பொதுக் கேள்விக்கான விடையில் புரிந்து விடுகிறது. இந்தக் கேள்வியை வாழ்வில் எப்பொழுது கேட்கிறோம் என்பது ஒரு வகைத் தேடல். எப்பொழுதெல்லாம் கேட்கிறோம் என்பது இன்னொரு வகைத் தேடல். ஒவ்வொரு தேடலிலும் ஒவ்வொரு வகை முழுமை.


என் வரையில் அறிவு, காதல், கருணை - இம்மூன்றும் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் முழுமையைத் தரக்கூடியது என்று நம்புகிறேன். தயங்காமல் அறிவை உபயோகித்து வாழ்வது தன்னம்பிக்கை மற்றும் நேர்த் தேடல்களை நம் வசமாக்கி வாழ்வை வளமாக்குகிறது. காதல் எனும் அற்புத உணர்வு அந்த வளமான வாழ்வை, உணர்வோடு இணைந்தத் துணையுடன் வாழச் செய்து அளவிலா மகிழ்ச்சியைப் பெற வைக்கிறது. அந்த மகிழ்ச்சியான வாழ்வை அடுத்தவரும் பெற வேண்டும் என்ற தயாள குணம், பெருந்தன்மை, மெலியாருக்கு உதவ வேண்டும் என்ற உணர்வு, எல்லோரும் ஓரினம், தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதில்லை என்றப் பரந்த நோக்கு - இவை அத்தனையும் கருணையின் அடையாளம்.  இந்த மூன்றும் இல்லாமல் வாழ்வு முழுமையடைவதில்லை. 


இந்தக் கதையில் வரும் மனோ-அனுவின் உறவு, அறிவு, காதல், கருணை மூன்றையும் தொட்டுக் காட்டியிருக்கிறது. அவர்களின் மனமிணைந்தக் காதலின் தொடக்கமே ஒரு முழுமையின் வெளிப்பாடு என்று படிக்கும் பொழுது - சற்றே புல்லரிக்கிறது. இந்தக் காதலர்களின் வாழ்வில் முழுமைக்குப் பஞ்சமில்லை என்ற நிறைவு உண்டாகிறது.


ஆங்காங்கே கவிதை உணர்வுகளை மீட்டிய காதல் கதை.






 







இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 





  



 திரு. அப்பாதுரை அவர்கள்.


வலைத்தளம்: மூன்றாம் சுழி







  





மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 




அன்பான இனிய நல்வாழ்த்துகள்.



      




முதல் பரிசினை முத்தாக


வென்றுள்ள விமர்சனம்-2





மனசெல்லாம் மத்தாப்பூ பூக்கும்படியாய் அழகானதொரு காதல் கதை. மனோ, அனு மீது கொண்ட உன்மத்தம் வெகு அழகாய் வெளிப்படுகிறது.

கதையில்.  மனோ – அனு காதல் தம்பதியரின் பிணைப்பு சாதாரண 
பிணைப்பல்ல என்பதை எடுத்த எடுப்பிலேயே உணர்த்திவிடுகிறார் 
ஆசிரியர்பாசக்கயிற்றினாலும் தங்கள் பாசத்தைப் பிரிக்கமுடியாது 
என்பதைப் போல மார்க்கண்டேயன்சிவலிங்கத்தை ஆலிங்கனம் செய்த உவமையும், வருடும் காதல்வசனங்களும் முதல் பகுதியிலேயே வாசகரைக் கதைக்குள் ஈர்த்துவிட, தொடரும் பகுதிகளில் வாசக இருப்பை, தொடர்ந்து கதைக்குள் தக்கவைத்துக்கொள்கிறார் கதாசிரியர், தன் கதை சொல்லும் சாமர்த்தியத்தால்.

கர்ப்பிணியான அனுவைக் கட்டிக்கொண்டு லயிக்கும் காதல் கணவனாய்மனோவின் கனவும், அதைத் தொடர்ந்து நாம் எதிர்பாராத நிகழ்வுகளும், மீண்டும் ஒரு கனவும் அதன் பலாபலனும் என ஒரு zigzag வடிவத்தில் பயணிக்கிறது கதை.

அனு தன் அன்புக்கணவருடன் தனக்கு வரவிருக்கும் 
தற்காலிகப்பிரிவை எண்ணி பொறுமை காத்தாள் என்ற 
வரிகளை வாசிக்கும்போதுகர்ப்பிணியான அனு சீராடத் 
தன் தாய்வீடுசெல்லும்போது ஏற்படும் பிரிவைத்தான் 
குறிப்பிடுகிறாள் என்றுதான் முதலில்  தோன்றுகிறது

பொதுவாக முதன்முறைதாய்மையடைந்திருக்கும் 
பெண்களை ஏழாம் மாதம் வளைகாப்புநடத்தி தாய்வீட்டுக்கு 
அழைத்துச்செல்வது வழக்கம்இங்கும்அந்தப் பிரிவை 
எண்ணிதான் இருவரும் கலங்குகிறார்களோ என்று
நினைத்துக் கொண்டிருக்கையிலேயே…  உள்ளூரிலேயே.. 
அவர்கள் வசிக்கும் அதே வீட்டின் கீழ் போர்ஷனில்தான் 
அனுவின் தாயார் வசிக்கிறார் என்பது தெரியவருகிறது.  
அடச்சேகூப்பிடுதூரத்தில் இருக்கும் மாமியார் வீட்டுக்கு அனுப்பத்தான்
இத்தனை பீடிகையா?’ என்று அடுத்ததாகத் தோன்றுகிறது.

கடைசியில் பிரிவு அதற்காகவும் இல்லையாம்பிரசவத்துக்கு
மருத்துவமனை செல்வதால் உண்டாகும் பிரிவு பற்றிய
கவலையாம் அது… இது நல்லாயிருக்கே… பிரசவத்துக்கு
மனைவியை மருத்துவமனை அனுப்பாமல் வீட்டில்
வைத்துக்கொண்டு இப்படி ஆலிங்கனம் செய்துகொண்டே
இருந்தால் குட்டி மனோவாவது… அனுக்குட்டியாவது

ஆசைக்கும் ஒரு அளவு வேண்டாமா இந்த மனோவுக்கு
இப்படியா கர்ப்பிணி மனைவியைப்போட்டு பாடாய்ப் படுத்துவது? இப்படியொரு பெண்டாட்டி பித்தனாக 
இருக்கிறானே என்று அவனை நொந்துகொண்டிருக்கும்போதே 
திடுக்கென்று கனவுகலைந்து விழிக்கிறான் மனோ
அடடாநமக்கும் விழிப்பு தட்டி ஆசுவாசம் வருகிறது 
அந்த இடத்தில்.

உலகில் எத்தனை விதமான மனநோயாளிகள் இருக்கின்றனர்
என்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின்
எண்ணிக்கையை விடவும் அனுமதியாகாமல் வெளியுலகில்
சுற்றித்திரியும் நோயாளிகளே அதிகம் என்றும் மனோவியல்
மருத்துவரான மனோ நினைப்பதாக கதையோட்டத்துடன் 
ஒருபெரிய பட்டியல் வருகிறதுஅனுவை கோலப்பைத்தியம் 
என்று குறிப்பிட்ட அவன் தன்னை அனு பைத்தியம் என்று 
குறிப்பிட்டுதானும் அந்தப் பட்டியலில் இணைந்திருக்கலாம்
அந்த அளவுக்கு அவனை கனவிலும் நனவிலும் 
கற்பனையிலும் ஆக்கிரமித்திருக்கிறாள் அனு.

நல்லதோபொல்லாததோநடவாத ஒன்றை நடப்பதுபோல்
நினைப்பதை கற்பனை என்கிறோம்அந்தக் கற்பனையே 
கொஞ்சம்கொஞ்சமாய் எண்ணத்தை 
ஆக்கிரமித்துக்கொள்ளும்போதில் உறக்கத்தில் 
நம்மையறியாது அரை உணர்வுநிலையில்
எழுவதைக் கனவு என்கிறோம்.  நடக்கவிருக்கும் ஒன்றைமுன்கூட்டியே 
அறிந்துகொள்ளும் திறனை உள்ளுணர்வின் உந்துதல் 
என்கிறோம்இப்படி கற்பனையும் கனவும் உள்ளுணர்வின் 
உந்தலுமாய்  மனோவின் மனம் காதலியானஅனுவையும் 
அவள் பிரச்சனைகளையுமே சுற்றிச் சுற்றிவருவதால் 
இந்த இளம் மனநல மருத்துவனுக்கு காதல் வியாதி
முற்றிவிட்டது என்றே சொல்லலாம்.

அனுவின் கோலங்கள் பற்றிய சிலாகிப்பும்,  
கோலமிடும் கோலமயிலான அவளைப் பைனாகுலர் மூலம் 
அருகில் ரசித்து மகிழும் சிலிர்ப்புமாய் மனோவின் பரவச 
அனுபவங்கள் ஆஹா….

காதலியே ஆனாலும் அவளறியாமல் அவளை 
பைனாகுலர்வழியே ரசிக்கலாமா
ஒரு மருத்துவருக்கு இது அழகா?
திருமணமாகாத கன்னிப்பெண்ணை
அவள் தன்னைக்காதலிக்கிறாளா என்று தெரியாத நிலையில்
அவளறியாமல் இப்படி அணு அணுவாக ரசிப்பது 
தவறென்று மனசாட்சிஉறுத்தாதாஎன்றெல்லாம் 
யோசிக்கவிடாமல் மனோவின்ஆழ்மன ஆசையைக் 
கனவாக்கி காதல் கசிந்துருகும் பாத்திரமாய்ப்படைத்து 
நம்மை வாயடைக்கச் செய்துவிடுகிறார் ஆசிரியர்.

என்னதான் காதலின் ஆழத்தைகனவில் அவளைத் 
திருமணம்செய்துஅவள் கர்ப்பிணியான பின்பும் 
காதலைச் சொட்டச் சொட்ட உணர்த்தினாலும் 
இந்த இடத்தில் ஒன்றிரண்டு கேள்விகள் எழாமல்இல்லை
மனசாட்சியையும் மீறி ரசிக்குமளவுக்கு காதலும் ஆசையும் 
வைத்திருப்பவன்திருமணம் செய்துகொள்ளும்நோக்கம் 
இல்லாமல் இருப்பானாஅனுவின் தாயாரிடம் ஏன் அவன் 
அனுவைத்  திருமணம் செய்வது குறித்துப் பேசவில்லை?அவ்வளவு தூரம் கனவிலும் கற்பனையிலும் 
அவளைக்காதலித்தவன்அவளைத் திருமணம் 
செய்துகொள்ள எந்தமுயற்சியும் எடுக்காதிருப்பது ஏன்
ஏன் தயங்கவேண்டும்?

மனோவுக்கு என்ன குறைமருத்துவனாய் இருக்கிறான்
நல்லசுபாவமுடையவனாகவும் இருக்கிறான்
மகளின்திருமணப்பேச்சின்போது அவன் இருந்தால் 
ஒரு தைரியம்கிடைக்கும் என்ற அளவில் அவன் மீது 
நம்பிக்கைவைத்திருக்கிறார் அனுவின் தாயார்
பிறகும் ஏன் மௌனம்சாதிக்கிறான்தானாகப் பெண்கேட்கும் சாமர்த்தியம் இல்லாவிடினும் இதோ..  
இப்போது அனுவின்  தாயாரே அவளது திருமணப்பேச்சைத் துவக்கிவைத்திருக்கிறார்களே.. இந்தசந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளாமல் 
நழுவ விடுவது ஏன்?

பெண்பார்க்க வருகிறார்கள் என்று கேள்விப்பட்டதுமே 
அனுவைவேறொருவனுக்கு மனைவியாகப் போகிறவள் 
என்று எண்ணுவதும்திருமணத்துக்குப் பின் அவளது 
வாழ்க்கை நல்லபடியாக அமையவேண்டும் என்று 
பிரார்த்திப்பதும்தான் சற்று நெருடலாக உள்ளது.

ஒருவேளை… ஒருவேளை… அவள் ஊமை என்ற விவரம்
மனோவுக்கு முதல்நாள்தானே தெரியவந்ததுமனோ எதிர்பாராத
அதிர்ச்சி அல்லவா அதுஅந்த அதிர்ச்சியிலிருந்து 
அவன்மீளவில்லையோஇல்லையே… 
அந்த விஷயம் தெரிந்தபிறகும் அவன் அனுமேல் வைத்திருக்கும் 
ஈடுபாட்டில் துளியும் குறையவில்லை என்றும் கதாசிரியர் 
சொல்லிவிட்டாரே.

மனோவுக்கு கனவு ஏற்பட்டால் அது நிச்சயம் நடந்துவிடுவதுண்டு
என்று குறிப்பிட்டு மனோவின் வாழ்க்கையில் சம்பவித்த சில நிகழ்வுகளையும் குறிப்பிடுகிறார் கதாசிரியர்

கனவுகள் பலிக்கும் என்றால் மனோவுக்கு அனுவுடன் 
திருமணமாகும்தாய்மைப்பேறுஉண்டாகும்
அனுவால் பேசமுடியும்.. எல்லாம் சரிதான்.
இரண்டாவது கனவில் நிகழ்ந்ததுபோல் 
மனோவைக்கட்டிப்போட்டு ஊரே கூடி 
உதைப்பதும் நிறைவேறுமா
அப்படியென்றால் ஐயோ பாவம் அவன்!

நிறைவேற வாய்ப்பும் இருக்கிறது என்பதை 
கதையின் கடைசிப்பகுதி மறைமுகமாக உணர்த்துகிறது. 
நாகப்பா ஒரு ரௌடி. எந்த ரௌடியும் தான் நினைத்துவந்த 
காரியம் ஆகாதபொழுதில் சும்மா இருப்பதில்லை. 
ஒன்று உடனேயே பாய்ந்து எதிரியின் குடலை உருவிவிடுவார்கள் அல்லது கருவிக்கொண்டு உரிய காலம் வரும்வரை காத்திருப்பார்கள். இங்கும் நாகப்பா வெறுமனே புலம்பிக்கொண்டு வெளியேறுவதாய் சொல்லப்பட்டாலும் பின்னாளில் அவனால் மனோவுக்கு ஏதேனும் ஆபத்து வரும் வாய்ப்புள்ளது என்பதால் அந்த அடி உதைக்கனவும் ஒருநாள் நிறைவேறக்கூடும் என்று கொள்ளலாம். 
அந்த நாகப்பாவின் கண்களுக்கு மனோவின் தரிசனம் 
மறுபடி கிடைக்காமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.  

அதைப் பற்றி அப்புறம் பார்ப்போம். 
இப்போது அனுவின் மனத்தில் இடம்பிடித்துவிட்ட 
மனோவின் குதூகலத்தைப் பார்த்து ரசிப்போம். 
கதாசிரியரே சொல்லிவிட்டாரே.. அடுத்த தீபாவளி 
அனு – மனோவுக்கு நிச்சயம் 
தலை தீபாவளியாகத்தான் இருக்கும் என்று! 
நாளைய காதற்தம்பதியருக்கு நாமும் இனிதே நம் 
வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்வோம். 

ooooooooooooooooooooooooo 






 







இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 






 திருமதி. கீதாமதிவாணன் அவர்கள்.


வலைத்தளம்: கீதமஞ்சரி

geethamanjari.blogspot.in





 



மீண்டும் ஒரு மிகப்பெரிய ஹாட்-ட்ரிக் 


அடித்து அசத்தியுள்ளார்கள்  !








VGK-35 To VGK-40 





 

  

   



 



 Great Achievement ! 

My Heartiest Congratulations to you !! 

- Gopu



இது இவர் அடித்துள்ள ஐந்தாவது 

ஹாட்-ட்ரிக் வெற்றியாகும்.




அடுத்தடுத்து மூன்று முறை தொடர் 

வெற்றிகளுடன் ஒரேயொரு ஹாட்-ட்ரிக்



VGK-23 TO VGK-25 




 இவர் அடித்துள்ள மற்ற


நான்கு ஹாட்-ட்ரிக்களுமே


ஒவ்வொருமுறையும் 


ஆறு தொடர் வெற்றிகளுடன் 


[சிக்ஸ்சருடன்]


கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.



VGK-07 TO VGK-12 ; 

VGK-17 TO VGK-22; 

VGK-29 TO VGK-34 

and  

VGK-35 TO VGK-40



    





மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 




அன்பான இனிய நல்வாழ்த்துகள்.



      


 



மிகக்கடினமான இந்த வேலையை
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.




நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி
முதல் பரிசுக்கான தொகை இவ்விருவருக்கும்


சரிசமமாகப்பிரித்து அளிக்கப்பட உள்ளன.





      

 





இந்த இறுதிப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டுள்ளன.





அதற்கான இணைப்புகள்














காணத்தவறாதீர்கள் !



     



முக்கிய அறிவிப்பு


  

 





’அழைப்பிதழ்’



நாளை 01.11.2014 முதல் 09.11.2014 வரை


நம் சிறுகதை விமர்சனப்போட்டியின் 


வெற்றி விழாக்கள்


நிறைவு விழாக்கள் 


தினமும் ஒரு புத்தம் புதிய தகவலுடன் 


வெகு விமரிசையாகக் 


கொண்டாடப்பட உள்ளன.



நிகழ்ச்சி நிரல்:



01.11.2014  

VGK-01 TO VGK-40 TOTAL LIST OF HAT-TRICK PRIZE WINNERS



02.11.2014 

சாதனையாளர்களுக்கான புதிய கூடுதல் விருதுகள் அறிவிப்பு - 1


03.11.2014 

சாதனையாளர்களுக்கான புதிய கூடுதல் விருதுகள் அறிவிப்பு - 2


04.11.2014 

சாதனையாளர்களுக்கான புதிய கூடுதல் விருதுகள் அறிவிப்பு - 3


05.11.2014 

சாதனையாளர்களுக்கான புதிய கூடுதல் விருதுகள் அறிவிப்பு - 4



06.11.2014  


VGK-01 To VGK-40 

வெற்றியாளர்கள் பற்றிய 

ஒட்டுமொத்த அலசல்.




07.11.2014 

 நன்றி அறிவிப்பு 

- கோபு [VGK]



08.11.2014

’அன்பான நெஞ்சங்களுக்கு’

என்ற தலைப்பில் நடுவர் 

திரு ஜீவி அவர்களின் கடிதம்




09.11.2014 

VGK-31 TO VGK-40 


ஒட்டுமொத்த பரிசு அறிவிப்பு +


அவரவர்களுக்கான மொத்தப் 


பரிசுத்தொகை அறிவிப்பு +


பரிசுப்பண பட்டுவாடா தேதி அறிவிப்பு.









அனைவரும் அவசியமாக 


குடும்ப சஹிதம் 


முன்னதாகவே வருகைதந்து


இந்த இனிய வெற்றி விழாக்களைக்


கண்டுகளித்துக் கருத்தளித்து 


சிறப்பிக்குமாறு  அன்புடன்


வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.














என்றும் அன்புடன் தங்கள்

வை.கோபாலகிருஷ்ணன்

47 கருத்துகள்:

  1. முத்தாக முதல் பரிசினை பகிர்ந்துகொண்ட இருவருக்கும்
    வந்தனோபசார வாழ்த்துகள்..பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
  2. இராஜராஜேஸ்வரி October 31, 2014 at 9:41 AM

    வாங்கோ, வணக்கம். தங்களின் முதல் வருகை மனதுக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது.

    //முத்தாக முதல் பரிசினை பகிர்ந்துகொண்ட இருவருக்கும்
    வந்தனோபசார வாழ்த்துகள்..பாராட்டுக்கள்.!//

    இந்தப்போட்டிகளின் ஆரம்பத்ததிலிருந்து, இந்த இறுதி அறிவிப்புவரை, அனைத்துப்பகுதிகளையும், கதைகள் + என் அனைத்துப் பரிசு அறிவிப்புகளையும், ஆர்வமாகப்படித்து, உடனுக்குடன் ஏதேனும் ஒரு கருத்தாவது பதிவு செய்த பெருமைக்குரியவர் தாங்கள் மட்டுமே என்பது மிக மிகப் பாராட்டத்தக்கதொன்று.

    தங்களின் இந்த சுறுசுறுப்புக்கும், ஆர்வத்திற்கும், பிறரைப்பாராட்டத் துடிக்கும் மிக உயர்ந்த உள்ளத்திற்கும் நான் தலை வணங்கி இங்கு இப்போது நன்றி கூறிக்கொள்கிறேன்.

    இருப்பினும் ஆரம்பத்தில் தங்களுக்கு இவற்றில் இருந்த உற்சாகம் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதாகவே என்னால் உணரப்படுகிறது.

    ஆரம்பத்திலெல்லாம் ஒன்றுக்கும் மேற்பட்ட கருத்துகளை பின்னூட்டமாக வழங்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளீர்கள்.

    இப்போது அதன் எண்ணிக்கைகளும், அளவும் வெகுவாகக் குறைந்து போய் உள்ளன என்பதை நான் உணராமல் இல்லை.

    'SOMETHING IS BETTER THAN NOTHING' எனத்தாங்கள் சொல்ல வருவது எனக்கும் புரிகிறது.

    இருப்பினும் வாழ்க ! வாழ்க !! வாழ்க !!! என வாழ்த்துகிறேன். - VGK

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. http://gopu1949.blogspot.in/2014/09/vgk-35-03-03-third-prize-winner.html

      தாங்கள் பரிசுபெற்ற மேற்படி ’VGK-35 பூபாலன்’ கதை விமர்சனத்திலேயே தங்களின் அலுப்பு + சலிப்பினை விக்ரமாதித்தன் வேதாளத்திற்குச்சொல்வது போல ஜாடை மாடையாகத் தெரிவித்துள்ளீர்கள். இதோ அது:

      *****விமர்சகர்கள் எல்லாம் ரொம்பத்தான் டயர்ட் ஆகிவிட்டோம்.. ரொம்ப போர் வேறு அடிக்கிறது (அடித்துவிட்டோம்) இல்லாவிட்டால் இன்னும் கதையைப்பற்றி காதில் ரத்தம் வர அமைச்சர் ஆற்றிய உரையை விட பெரிய உரை ஆற்றுவோம்.. ஜாக்கிரதையாக இரு வேதாளம்.. உன்னைப்பார்த்தால்தான் ரொம்பப்பாவமாக இருக்கிறது..!!!!???*****

      மிக நன்றாகவே புரிந்து கொண்டோம். :)))))

      மிக்க நன்றி. - VGK

      நீக்கு
    2. இந்த VGK-40 கதைக்கான பரிசுத் தேர்வுகளில் வெற்றிவாய்ப்பினைப்பெற்றுள்ள ஆறு நபர்களில் ஐந்து நபர்கள் இதுவரை இங்கு எட்டிப்பார்க்கவே இல்லை.

      முன் தகவல் அனுப்பியிருந்தும் அவர்களுக்கெல்லாம் இங்கு வருகைதர நேரம் சாதகமாக அமையவில்லை போலிருக்கிறது.

      ஆனால் இதுவரை எந்தவொரு தகவலும் நான் தங்களுக்கு எப்போதுமே அனுப்பாமலேயே இருந்து வந்தும்கூட, தாங்கள் இதுபோல [ஓர் நித்ய கர்மானுஷ்டம் போலவே நினைத்து] என் பதிவுகள் பக்கம் தினமும் வருகை தந்து கருத்தளிப்பது என்பதே தங்களின் மிகப்பெரிய சாதனையாகும்.

      சாதனையாளர்கள் பட்டியல்கள் பலவற்றில் தங்களுக்கும் சிறப்பிடம் தரப்பட உள்ளது.

      அதுபோலவே 07.11.2014 வெளியிட இருக்கும் என் மிக நீ...ண்...ட நன்றி அறிவிப்பினிலும் தங்களுக்கு சிறப்பானதோர் இடம் கொடுக்கப்பட உள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். - VGK

      நீக்கு
  3. நம் எல்லோருக்குமே வாழ்வில் ஒரு முழுமை தேவைப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் இந்த முழுமை கிடைக்கிறதா என்றால் இல்லை. முழுமை என்பது அவரவர் விளக்கத்துக்குட்பட்டது என்றாலும், ஒரு சிறிய பொதுவானக் கேள்வியின் விடையில் அது முழுமையா இல்லையா என்று தெரிந்து விடுகிறது. ஒரு நாளின் முடிவில், அல்லது வருடத்தின் முடிவில், அல்லது ஒரு பருவத்தின் முடிவில், அல்லது முதுமையின் விளிம்பில்.. ஏதோ ஒரு காலக்கட்டத்தில் வாழ்வின் சுவடுகளைத் திரும்பிப் பார்க்கையில், சம்பவங்களை அசை போடுகையில்... 'நாம் வாழ்க்கையில் முழுமை பெற்றோமா, ஒரு நிறைவு கிடைத்திருக்கிறதா?' என்ற சிறிய, பொதுக் கேள்விக்கான விடையில் புரிந்து விடுகிறது. இந்தக் கேள்வியை வாழ்வில் எப்பொழுது கேட்கிறோம் என்பது ஒரு வகைத் தேடல். எப்பொழுதெல்லாம் கேட்கிறோம் என்பது இன்னொரு வகைத் தேடல். ஒவ்வொரு தேடலிலும் ஒவ்வொரு வகை முழுமை.// அருமையான விமர்சனம் எழுதி முதல் பரிசைப் பெற்றுள்ள திரு அப்பாதுரை ஐயா அவர்களுக்கு பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  4. //வருடும் காதல்வசனங்களும் முதல் பகுதியிலேயே வாசகரைக் கதைக்குள் ஈர்த்துவிட, தொடரும் பகுதிகளில் வாசக இருப்பை, தொடர்ந்து கதைக்குள் தக்கவைத்துக்கொள்கிறார் கதாசிரியர், தன் கதை சொல்லும் சாமர்த்தியத்தால்.// சரியாகச் சொன்னீர்கள்! சிறப்பாக விமர்சனம் எழுதி முதல் பரிசைப் பெற்றுள்ள விமர்சன வித்தகி திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்குப் பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  5. திரு வைகோ சாரின் அழைப்பிதழ் கண்டோம். வெற்றிவிழாவில் பங்கேறுச் சிறப்பிக்க காத்திருக்கிரோம்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s. October 31, 2014 at 1:11 PM

      வாங்கோ, வணக்கம்.

      //திரு வைகோ சாரின் அழைப்பிதழ் கண்டோம். வெற்றிவிழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்க காத்திருக்கிறோம்! நன்றி!//

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும், காத்திருப்புக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      VGK

      நீக்கு
  6. நன்றி.

    கீதமஞ்சரிக்கு வேறே வேலை கிடையாதா? இப்படி டிரிக்கு மேலே ட்ரிக்கா தட்டிட்டுப் போறாங்களே? ஹ்ம்.

    கலந்து கொண்டோருக்கும் பரிசு பெற்றோருக்கும் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகள் அப்பாதுரை சார். என்னது? எனக்கு வேற வேலை இல்லையா? என் வலைப்பக்கம் எட்டிப் பார்த்தீர்களென்றால் என் நிலைமை தெரியும். கோபு சாருடைய உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் நினைத்தால் போதும் சோர்வு பறந்துபோய்விடும். அப்படிதான் என்னால் இத்தனைப் போட்டிகளிலும் பங்கேற்க முடிந்தது. பரிசுகளைப் பெறவும் முடிந்தது.

      நீக்கு
    2. விமர்சனப் போட்டித்தொடரின் நிறைவு விழாவை வெற்றிவிழாவாகக் கொண்டாட அழைப்பிதழ் அனுப்பியுள்ள தங்களுக்கு மிக்க நன்றி கோபு சார். போட்டிகளை முடித்துவிட்டு அக்கடா என்று கொஞ்சநாள் ஓய்வெடுத்து உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள். பிறகு புதிய உற்சாகத்துடன் புத்துணர்வுடன் மீண்டும் பதிவுலகில் உங்கள் முத்திரையைப் பதிக்க வாருங்கள்.

      நீக்கு
    3. கீத மஞ்சரி October 31, 2014 at 5:31 PM

      வாங்கோ, வணக்கம்.

      //விமர்சனப் போட்டித்தொடரின் நிறைவு விழாவை வெற்றிவிழாவாகக் கொண்டாட அழைப்பிதழ் அனுப்பியுள்ள தங்களுக்கு மிக்க நன்றி கோபு சார்.//

      சந்தோஷம்.

      //போட்டிகளை முடித்துவிட்டு அக்கடா என்று கொஞ்சநாள் ஓய்வெடுத்து உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள்.//

      ஆம். அதே தான் செய்ய உள்ளேன். அதுவும் இங்கிருந்தால் என்னால் சும்மாவே இருக்க முடியாது என்பதால் அயல்நாட்டுக்குச் செல்கிறேன், முழு ஓய்வு எடுக்க. அதுபற்றியும் 9.11.2014 அறிவிக்க உள்ளேன். பாருங்கோ.

      //பிறகு புதிய உற்சாகத்துடன் புத்துணர்வுடன் மீண்டும் பதிவுலகில் உங்கள் முத்திரையைப் பதிக்க வாருங்கள்.//

      :))))) பார்ப்போம். தங்களின் அன்பான வருகைக்கும், முத்திரை பதிக்கும் எழுத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
    4. கீத மஞ்சரி October 31, 2014 at 5:28 PM

      //வாழ்த்துகள் அப்பாதுரை சார். என்னது? எனக்கு வேற வேலை இல்லையா? என் வலைப்பக்கம் எட்டிப் பார்த்தீர்களென்றால் என் நிலைமை தெரியும்.//

      அவர் அப்படித்தான் ஏதாவது கொளுத்திப்போட்டுக்கொண்டே இருப்பார். அதை நீங்க ஜாலியா எடுத்துக்கோங்கோ.

      //கோபு சாருடைய உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் நினைத்தால் போதும் சோர்வு பறந்துபோய்விடும். அப்படிதான் என்னால் இத்தனைப் போட்டிகளிலும் பங்கேற்க முடிந்தது. பரிசுகளைப் பெறவும் முடிந்தது.//

      ஆஹா ! மனோ கண்டதுபோல இது இனிய கனவா அல்லது நனவா என்று என்னை நானே கிள்ளிப்பார்த்துக் கொண்டேன். :))))) மிக்க நன்றி, மேடம்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  7. கலாய்ப்பும் கலகலப்புமாய் அப்பாதுரை சாரின் விமர்சனம் பிரமாதம். கதையில் வந்த குட்டிக்கவிதை வரிகளை ரசித்து சிலாகித்துக் குறிப்பிட்டது சிறப்பு. அவரோடு முதல் பரிசினை பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு. பாராட்டுகள் அப்பாதுரை சார்.

    பதிலளிநீக்கு
  8. இந்த இறுதிச்சுற்றின் பத்து போட்டிகளிலுமே ஏதாவது ஒரு பரிசுக்கு என் விமர்சனம் தேர்வாகியிருப்பது பெருத்த மகிழ்வையும் தன்னம்பிக்கையையும் தருகிறது. இப்படியொரு வாய்ப்பினை வழங்கி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் எழுத்துத்திறமையை வெளிக்கொணர்ந்து பரிசுகளும் அள்ளிக்கொடுத்த கோபு சார் அவர்களுக்கு அன்பான நன்றி. விமர்சனங்களைப் பொறுமையுடன் வாசித்து பரிசுக்குரியவற்றைத் தேர்ந்தெடுத்து பொறுப்பாய் வழங்கிய நடுவர் ஜீவி சாருக்கு மனம் நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி October 31, 2014 at 5:26 PM

      மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.

      //இந்த இறுதிச்சுற்றின் பத்து போட்டிகளிலுமே ஏதாவது ஒரு பரிசுக்கு என் விமர்சனம் தேர்வாகியிருப்பது பெருத்த மகிழ்வையும் தன்னம்பிக்கையையும் தருகிறது. //

      ஆம் அது மிகவும் சந்தோஷமானதோர் விஷயம் தான். இறுதிச்சுற்று மட்டுமின்றி நாலு சுற்றிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாகவே தாங்களே முதலிடம் பெற்றிருப்பீர்களோ என்னவோ, புள்ளிவிபரங்களைச் சேகரித்து முழுக் கணக்குப்பார்த்தால்தான் தெரியும். :))))) எதற்கும் இப்போதே தங்களுக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      //இப்படியொரு வாய்ப்பினை வழங்கி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் எழுத்துத்திறமையை வெளிக்கொணர்ந்து பரிசுகளும் அள்ளிக்கொடுத்த கோபு சார் அவர்களுக்கு அன்பான நன்றி.//

      தங்கள் ஒவ்வொருவரின் எழுத்துத் திறமைகள் மிகப்பெரிய பூசணிக்காய் என்று வைத்துக்கொண்டால் நான் அளிக்கும் பரிசுகள் ஓர் சுண்டைக்காய் அளவு மட்டுமே.

      எனினும் தங்களுக்கு என் அன்பு நன்றிகள். - கோபு

      நீக்கு
  9. மூன்றாம் சுழி வலைத்தளப்பதிவர் உயர்திரு. அப்பாதுரை அவர்கள் நேயர் கடிதமாக எழுதி எனக்கு ஏதும் தனியாக அனுப்பி வைக்கவில்லையே தவிர, என் சிறுகதை விமர்சனப் போட்டிகளைப்பற்றி அலசோ அலசென அலசி, தனக்கே உரிய தனிப்பாணியில், நகைச்சுவையாகவும் நல்லவிதமாகவும் தன் தளத்தில் இன்று 31.10.2014 ஓர் தனிப்பதிவு வெளியிட்டுள்ளார்கள்.

    அவருக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    இதோ இணைப்பு:

    http://moonramsuzhi.blogspot.in/2014/10/blog-post_31.html

    இதோ தலைப்பு:

    ’இன்று போல் என்றும்’

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலத்தில் அனுப்பாமல் விட்ட நேயர் கடிதமே பதிவானது சார்..

      நன்றி.

      நீக்கு
    2. அப்பாதுரை October 31, 2014 at 8:02 PM

      Welcome Sir !

      //காலத்தில் அனுப்பாமல் விட்ட நேயர் கடிதமே பதிவானது சார்.. நன்றி.//

      :))))) OK Sir. Thank you, Sir. :)))))

      - VGK

      நீக்கு
  10. முதல் பரிசு பெறும் திரு அப்பாதுரை அவர்களுக்கும் தொடர்ச்சியாகப் பல பரிசுகள் வென்று முன்னணியில் திகழும் விமர்சன வித்தகி கீதா மதிவாணன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்!
    நிறைவு & வெற்றி விழாவின் அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றோம். குடும்பத்துடன் கண்டு களிக்க ஆயத்தமாயுள்ளோம். விழா இனிதே நடக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kalayarassy G October 31, 2014 at 5:45 PM

      வாங்கோ, வணக்கம்.

      //முதல் பரிசு பெறும் திரு அப்பாதுரை அவர்களுக்கும் தொடர்ச்சியாகப் பல பரிசுகள் வென்று முன்னணியில் திகழும் விமர்சன வித்தகி கீதா மதிவாணன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்!//

      :))))) சந்தோஷம்.

      //நிறைவு & வெற்றி விழாவின் அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றோம். குடும்பத்துடன் கண்டு களிக்க ஆயத்தமாயுள்ளோம். விழா இனிதே நடக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! //

      தங்களின் அன்பான வருகைக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நன்றியுடன் கோபு

      நீக்கு
  11. ஆறு நபர்களில் ஐந்து நபர்கள் இதுவரை இங்கு எட்டிப்பார்க்கவே இல்லை.

    //முன் தகவல் அனுப்பியிருந்தும் அவர்களுக்கெல்லாம் இங்கு வருகைதர நேரம் சாதகமாக அமையவில்லை போலிருக்கிறது// வாத்யாரே "முதல் தகவல் அறிக்கை" காணவில்லை என்று போடுவதற்குள் நல்ல வேளை நான் ஆஜராகிவிட்டேன்! இடையில் எனது புது(வை)மைக் கம்ப்யூட்டர் மட்டையாகிவிட்டது! கூடவே "மானிட்டர்" இருக்கில்லையா!?? ஹா..ஹா! சகோதரி கீத மஞ்சரி! வடிவேலு பாணியில சொல்லனும்னா..."இதே வெலையாத்தான் அலையுறீங்களா?" தொடர் பரிசுகளைத்தான் சொல்றேன்! வாழ்த்துக்கள்! அன்புள்ள அப்பாத்துரை அவர்களே நீங்கள் இந்த விமர்சனம் மூலமாக 'அடேங்கப்பா-அப்பாத்துரை" ஆகிவிட்டீர்கள்! விமர்சனம் மிகவும் அருமை! வாத்தியார் வைகோ எழுதுறதுல ஜித்தன்னாக்க நடுவர் ஜிவி அவர்கள் தெரிவுசெய்ரதுல ஜித்தன்னு திரும்பவும் தெரியப்படுத்திவிட்டார்கள்! யூத் டச்சான கதைக்கு மிகவும் பொருத்தமான விமர்சனங்களுக்குதான் முதல் பரிசு கிடைத்துள்ளது! நடுவர் அவர்களும் கூடஆல்வேஸ் யூத் டச்தான் என்று புகைப்படங்கள் மூலமாகவும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்! ஆல்வேஸ் டீ ஷிர்ட்! சில நேரம் ஜீன்ஸ்! மிகவும் மகிழ்ச்சி! கொண்டாட்ததுக்கு குடும்ப சகிதமா வாத்யார் பட ஓப்பனிங் ஷோ மாதிரி தாரை தப்பட்டையோட வந்து குத்தாட்டம் போட்டு பட்டயக்களப்புவோம்ல! என்றும் அன்புடன் உங்கள் எம்ஜிஆர்

    பதிலளிநீக்கு
  12. ஆறு நபர்களில் ஐந்து நபர்கள் இதுவரை இங்கு எட்டிப்பார்க்கவே இல்லை.

    //முன் தகவல் அனுப்பியிருந்தும் அவர்களுக்கெல்லாம் இங்கு வருகைதர நேரம் சாதகமாக அமையவில்லை போலிருக்கிறது// வாத்யாரே "முதல் தகவல் அறிக்கை" காணவில்லை என்று போடுவதற்குள் நல்ல வேளை நான் ஆஜராகிவிட்டேன்! இடையில் எனது புது(வை)மைக் கம்ப்யூட்டர் மட்டையாகிவிட்டது! கூடவே "மானிட்டர்" இருக்கில்லையா!?? ஹா..ஹா! சகோதரி கீத மஞ்சரி! வடிவேலு பாணியில சொல்லனும்னா..."இதே வெலையாத்தான் அலையுறீங்களா?" தொடர் பரிசுகளைத்தான் சொல்றேன்! வாழ்த்துக்கள்! அன்புள்ள அப்பாத்துரை அவர்களே நீங்கள் இந்த விமர்சனம் மூலமாக 'அடேங்கப்பா-அப்பாத்துரை" ஆகிவிட்டீர்கள்! விமர்சனம் மிகவும் அருமை! வாத்தியார் வைகோ எழுதுறதுல ஜித்தன்னாக்க நடுவர் ஜிவி அவர்கள் தெரிவுசெய்ரதுல ஜித்தன்னு திரும்பவும் தெரியப்படுத்திவிட்டார்கள்! யூத் டச்சான கதைக்கு மிகவும் பொருத்தமான விமர்சனங்களுக்குதான் முதல் பரிசு கிடைத்துள்ளது! நடுவர் அவர்களும் கூடஆல்வேஸ் யூத் டச்தான் என்று புகைப்படங்கள் மூலமாகவும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்! ஆல்வேஸ் டீ ஷிர்ட்! சில நேரம் ஜீன்ஸ்! மிகவும் மகிழ்ச்சி! கொண்டாட்ததுக்கு குடும்ப சகிதமா வாத்யார் பட ஓப்பனிங் ஷோ மாதிரி தாரை தப்பட்டையோட வந்து குத்தாட்டம் போட்டு பட்டயக்களப்புவோம்ல! என்றும் அன்புடன் உங்கள் எம்ஜிஆர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. RAVIJI RAVI October 31, 2014 at 10:48 PM

      வாங்கோ திரு. ரவிஜி MGR அவர்களே, வணக்கம்.

      //"முதல் தகவல் அறிக்கை" காணவில்லை என்று போடுவதற்குள் நல்ல வேளை நான் ஆஜராகிவிட்டேன்!//

      சந்தோஷம். மிக்க நன்றி.

      //கொண்டாட்ததுக்கு குடும்ப சகிதமா வாத்யார் பட ஓப்பனிங் ஷோ மாதிரி தாரை தப்பட்டையோட வந்து குத்தாட்டம் போட்டு பட்டயக்களப்புவோம்ல! //

      :))))) வாங்கோ, வாங்கோ !

      முதல் நாள் முதல் ஷோ முதல் டிக்கெட் போல, ஒன்பது நாளைக்கும் தவறாமல் விசிலடிக்க வந்திடுங்க.

      பிரியமுள்ள VGK

      நீக்கு
  13. இருவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  14. //கனவில் நடப்பது நனவாகும் என்று நம்புகிறான் மனோ. அனுவுடன் கனவில் கணவனாகக் கொஞ்சுகிறான். நனவில் நன்றி சொல்லி காதலைத் தொடங்கி வைக்கிறாள் அனு. ஆக, சாமர்த்தியமாக கனவுக்கும் நனவுக்கும் முடிச்சிட்டு, குழி தாண்டி, வெற்றிக்கொடி நட்டிருக்கிறார் கதாசிரியர். பாராட்டுக்கள்.//

    மிக அருமையான கருத்தைச் சொல்லி இருக்கிறார் அப்பாதுரை. நான் நினைத்ததை ஆனால் எப்படிச் சொல்லுவது என்று தவித்ததை வெகு எளிதாக அப்பாதுரையும் தாண்டி விட்டிருக்கிறார். எனக்கும் மனோதத்துவ நிபுணன் மனோவின் அசட்டுத்தனமான காதலின் மேலும், அது தொடர்பான கனவுகளைக் குறித்தும் கொஞ்சம் எரிச்சலே வந்தது என்றால் அது மிகையில்லை. :))))

    பதிலளிநீக்கு
  15. //பிறகும் ஏன் மௌனம்சாதிக்கிறான்? தானாகப் பெண்கேட்கும் சாமர்த்தியம் இல்லாவிடினும் இதோ..
    இப்போது அனுவின் தாயாரே அவளது திருமணப்பேச்சைத் துவக்கிவைத்திருக்கிறார்களே.. இந்தசந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளாமல்
    நழுவ விடுவது ஏன்?//

    ஆம், இது எனக்கும் தோன்றியது தான். பக்கத்திலேயே நல்ல மாப்பிள்ளை, அதுவும் மருத்துவர் மாப்பிள்ளை கிடைக்கையில் அந்த அம்மாவுக்குக் கசக்குமா?

    //பெண்பார்க்க வருகிறார்கள் என்று கேள்விப்பட்டதுமே
    அனுவைவேறொருவனுக்கு மனைவியாகப் போகிறவள்
    என்று எண்ணுவதும், திருமணத்துக்குப் பின் அவளது
    வாழ்க்கை நல்லபடியாக அமையவேண்டும் என்று
    பிரார்த்திப்பதும்தான் சற்று நெருடலாக உள்ளது.//

    உண்மை; உண்மை; உண்மையைத் தவிர வேறில்லை.

    இந்தக் கதையில் அப்பாதுரையின் விமரிசனம் முழுக்க முழுக்க எனக்கு ஒப்புதலாக உள்ளது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

    பதிலளிநீக்கு
  16. // மூச்! படித்த மனோதத்துவ நிபுணர் இப்படியெல்லாம் நம்புவாரா? லாஜிக்கெல்லம் கேட்கப்படாது. பிச்சிப்புடுவேன் பிச்சு. இது மனோவின் நம்பிக்கை. அதில்லாமல், காதலுக்கு எதற்கு லாஜிக்? //

    அதானே லாஜிக் எல்லாம் பார்த்தால் பிச்சுப் பிடுங்கிட மாட்டோமா? :))) ஹிஹிஹி, ரசிச்சுச் சிரிச்சேன். :)

    பதிலளிநீக்கு
  17. முதல் பரிசு வாங்கி இருக்கும் அப்பாதுரை சொல்லி இருக்கிறாப்போல் இந்தக் கதையில் அநேக நெருடல்கள். கதாசிரியரின் கற்பனையும் கொஞ்சம் அளவுக்கு மீறியே காணப்பட்டது. :))))

    முதல் பரிசினை வென்றிருக்கும் அப்பாதுரைக்கும், கீதா மதிவாணன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  18. இன்னிக்கும் நாளைக்கும் இணையத்துக்கு வர முடியும். திங்கட்கிழமையிலிருந்து எப்படினு சொல்ல முடியாது. :))))

    பதிலளிநீக்கு
  19. முதல்பரிசு வென்ற அப்பாதுரை அவர்களுக்கும், கீதமஞ்சரிக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. முதல் பரிசினைப் பகிர்ந்து கொண்ட
    திரு. அப்பாதுரை அவர்களுக்கும்
    திருமதி கீதமஞ்சரி அவர்களுக்கும்
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. // மனோ மனோதத்துவ நிபுணர் என்று முதலிலேயே சொல்லிவிடுவதால், தாண்டு படலம் சுலபமாகி விடுகிறது. உலகின் அத்தனை பேரும் ஏதோ ஒரு கட்டத்தில் மன நோயாளிகளே என்ற வியாக்கியானம் அசர வைக்கிறது. அந்த வகையில் அனுவுக்கும் மனோதத்துவ ரீதியில் குணமுண்டாகலாம் என்ற லாஜிக்கை சிக்கல் பிரித்துச் சொல்கிறார். பட்டணத்து மாப்பிள்ளையின் பெயர் நாகப்பன். நாகம் கனவில் வந்தது, நாகப்பன் நனவில் வருகிறான். கனவிலும் நனவிலும் காப்பாற்றியவன் மட்டும் நாயகன். கனவில் நடப்பது நனவாகும் என்று நம்புகிறான் மனோ. அனுவுடன் கனவில் கணவனாகக் கொஞ்சுகிறான். நனவில் நன்றி சொல்லி காதலைத் தொடங்கி வைக்கிறாள் அனு. ஆக, சாமர்த்தியமாக கனவுக்கும் நனவுக்கும் முடிச்சிட்டு, குழி தாண்டி, வெற்றிக்கொடி நட்டிருக்கிறார் கதாசிரியர். பாராட்டுக்கள்.//

    ஆமாம், கிட்டத்தட்ட எனக்கும் இந்தக் கருத்தே தான். மனோதத்துவ நிபுணருக்கு இருக்கக் கூடிய உணர்வுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், நிதானம், விவேகம் எதுவுமே கதாநாயகன் மனோவிடம் காணப்படவில்லை. பிரச்னைகளை அணுகும் முறையும் கனவுகளை அடித்தளமாகக் கொண்டு செய்யப்படுகிறதை ஏற்கவும் முடியவில்லை. :( என்னைப் பொறுத்தவரை கதையின் நாயக, நாயகியருக்கு வேண்டுமானால் முழுமை கிடைத்திருக்கலாம். எனக்கு இந்தக் கதையில் ஏதோ ஒரு குறை தென்படுகிறது. :)

    @அப்பாதுரை, முதல் பரிசுக்கு வாழ்த்துகள். உங்களுக்குக் கிடைக்கலைனாத் தான் ஆச்சரியப்படணும்.

    பதிலளிநீக்கு
  22. //காதலியே ஆனாலும் அவளறியாமல் அவளை
    பைனாகுலர்வழியே ரசிக்கலாமா?
    ஒரு மருத்துவருக்கு இது அழகா?
    திருமணமாகாத கன்னிப்பெண்ணை,
    அவள் தன்னைக்காதலிக்கிறாளா என்று தெரியாத நிலையில்,
    அவளறியாமல் இப்படி அணு அணுவாக ரசிப்பது
    தவறென்று மனசாட்சிஉறுத்தாதா? என்றெல்லாம்
    யோசிக்கவிடாமல் மனோவின்ஆழ்மன ஆசையைக்
    கனவாக்கி காதல் கசிந்துருகும் பாத்திரமாய்ப்படைத்து
    நம்மை வாயடைக்கச் செய்துவிடுகிறார் ஆசிரியர்.//

    அதே, அதே, சபாபதே! :) இந்த இடம் நிறையவே நெருடல் தான். என்னதான் கதையின் கவர்ச்சியான ஓட்டத்துக்கு இது வழிகாட்டினாலும் சற்றும் பொருந்தவில்லை என்பதே உண்மை.



    //இரண்டாவது கனவில் நிகழ்ந்ததுபோல்
    மனோவைக்கட்டிப்போட்டு ஊரே கூடி
    உதைப்பதும் நிறைவேறுமா…
    அப்படியென்றால் ஐயோ பாவம் அவன்!//

    ஆமா, இல்ல?? இது தோணவே இல்லையே!!! :))))

    தொடர்ந்து முதல் பரிசுகளாகப் பெற்று வெற்றி மாலை சூடிய கீத மஞ்சரிக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. முதல் பரிசினைப் பகிர்ந்து கொண்ட திரு. அப்பாதுரை அவர்களுக்கும் திருமதி கீதமஞ்சரி அவர்களுக்கும்
    எனது மனமார்ந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

      அன்புடையீர்,

      வணக்கம்.

      31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இதுவரை, 2011 ஜனவரி முதல் 2014 அக்டோபர் வரையிலான 46 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
  24. பரிசு வென்ற திருமதிகீதமஞ்சரி திரு அப்பாதுரை அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

      வணக்கம்மா.

      31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 அக்டோபர் வரை முதல் 46 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      பிரியமுள்ள நட்புடன் கோபு

      நீக்கு
  25. பரிசு வென்ற திருமதி கீதமஞ்சரி அவர்களுக்கும், திரு அப்பாதுரை அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  26. அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு:

    அன்புள்ள ஜெயா,

    வணக்கம்மா !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 அக்டோபர் மாதம் வரை முதல் 46 மாதங்களில் உள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.

    பிரியமுள்ள நட்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  27. பரிசு வென்றவங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  28. அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:

    அன்புள்ள (mru) முருகு,

    வணக்கம்மா !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 அக்டோபர் மாதம் வரை, முதல் 46 மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் ஏதோவொரு பின்னூட்டம் அல்லது சில பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு

    பதிலளிநீக்கு
  29. திருமதி கீதமஞ்சரி மேடம் திரு அப்பாதுரை அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  30. -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
    So far your Completion Status:

    672 out of 750 (89.6%) within
    22 Days from 15th Nov. 2015 ! :)
    -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-


    அன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர்
    திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 அக்டோபர் மாதம் முடிய, என்னால் முதல் 46 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    பதிலளிநீக்கு
  31. -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
    So far your Completion Status:

    672 out of 750 (89.6%) that too within
    15 Days from 26th Nov. 2015.
    -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

    அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
    திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 அக்டோபர் மாதம் வரை, என்னால் முதல் 46 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    பதிலளிநீக்கு