என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 6 அக்டோபர், 2014

நேயர் கடிதம் - [ 3 ] திருமதி ஞா. கலையரசி அவர்கள்


’ஊஞ்சல்’
www.unjal.blogspot.com.auதிருமதி

 ஞா. கலையரசி  

அவர்களின் பார்வையில் !  

வலையுலகில் முதன் முறையாக விமர்சனப் போட்டியை ஜனவரி 2014 துவங்கி பத்து மாதங்கள்(!!!!) சிறிது கூடத் தொய்வின்றி வெற்றிகரமாக நடத்தி வரும் வை.கோபு சார் அவர்களை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

திட்டமிடல், குறித்த காலத்தில் செயல்படுதல், காரியத்தில் சோர்வின்றித் தொடர்ந்து ஈடுபடுதல், குன்றாத ஆர்வம், விடாமுயற்சி போன்ற தலை சிறந்த பண்புகளை வை.கோபு சார் அவர்களிடத்தில் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
  
கதையை வெளியிட்ட மாத்திரத்தில் அனைவருக்கும் அது பற்றிய தகவல்களை அளித்தல், திரும்பத் திரும்ப நினைவூட்டல், விமர்சனத்தை நடுவருக்கு நகல் எடுத்து அனுப்புதல், பரிசு விபரங்களைக் குறித்த நேரத்தில் வெளியிடுதல், பரிசு தொகையைச் சுடச்சுட விநியோகித்தல் என இந்தப் பத்து மாதங்களாகத் தொடர்ந்து ஓய்வின்றி உழைத்திருக்கிறார்.  கரும்புத் தின்னக் கூலியாக தொகை+ போனஸ்+ ஹாட் டிரிக் எனப் பரிசும் கொடுத்தும் ஊக்குவிக்கிறார்.

என்னால் ஒரு சில போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ள முடிந்தது. எல்லாவற்றிலும் கலந்து கொள்ள முடியவில்லையே என வருத்தம் தான்.  ஆனால் விமர்சனம் எழுதுவது எப்படி என்று இந்தப் போட்டியின் மூலமாகவே நான் தெரிந்து கொண்டேன்.  பரிசு பெறுபவர்களின் விமர்சனங்களை வாசிப்பது மூலமாகவும், அவ்வப்போது நடுவரும் வை.கோபு சார் அவர்களும் கொடுத்த குறிப்புகள் மூலமாகவும் ஒரு சிறந்த விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

தமிழில் விமர்சனக் கலையை வளர்த்த சான்றோர்களில் வை.கோபு சார் அவர்களுக்கும் நிச்சயம் இடமுண்டு.  சிறந்த விமர்சன வித்தகர்களையும் சக்ரவர்த்திகளையும்  உருவாக்கியிருக்கிறார்.

வெட்டி அரட்டையைத் தவிர்த்து இணையத்தை நல்லதொரு காரியத்துக்குப் பயன்படுத்தி இருக்கிறார். 

வலைப்பூவில் எழுதும் பலர் இன்னும் அதிகளவில் பங்கெடுத்திருந்தால் இப்போட்டியை இவர் நடத்தியதன் அடிப்படை நோக்கம் முழுவதுமாக நிறைவேறியிருக்கும் என்பது மட்டுமே சிறிய குறை.


மொத்தத்தில் பத்து மாதங்கள் ஒரு போட்டியை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய சாதனையாளர்!  தொடர்ந்த ஊக்கத்துக்கும் ஆக்கத்துக்கும் ஒரு முன்மாதிரி!  எதிர்காலத்தில் இணையத்தில் இது போன்ற பயனுள்ள போட்டியைத் துவங்க  நினைக்கும் எவருக்கும், நல்லதொரு வழிகாட்டி!

நன்றியுடன்,

         ஞா.கலையரசி         

  

 

என் மரியாதைக்குரிய 
திருமதி. ஞா. கலையரசி அவர்களே !

தங்களுக்கு முதலில் அடியேனின் வணக்கங்கள்

தாங்கள் இங்கு மனம் திறந்து பேசியிருப்பவை யாவும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்கிறது. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 

தாங்கள் முதன்முதலாகக் கலந்துகொண்ட [VGK-05 'காதலாவது ... கத்திரிக்காயாவது !”] விமர்சனப் போட்டியிலேயே http://gopu1949.blogspot.in/2014/03/vgk-05-01-03-first-prize-winners.html  முதல் பரிசினை வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. தாங்கள் மட்டும் இந்தப் போட்டிகளில் தொடர்ந்து கலந்துகொண்டிருந்தால், மிகச்சிறப்பான ஓரிடத்தை தங்களால் மிகச்சுலபமாகப் பெற்றிருக்க முடியும். 

தங்களுக்கு அதற்கான சூழ்நிலைகள் சாதகமாக இல்லாமல் பல்வேறு சந்தோஷமான குடும்ப நிகழ்வுகளில் ஈடுபட வேண்டியதாகி விட்டது. http://gopu1949.blogspot.in/2014/08/vgk-31-03-03-third-prize-winner.html எல்லாம் நன்மைக்கே என நாமும் நினைத்துக்கொள்வோம். 

பரிசு வென்றவர்களுக்கு பரிசுத்தொகைகளை அவ்வப்போது ராக்கெட் வேகத்தில் அனுப்பி வைக்க எனக்கு மிகவும் உதவி செய்துள்ளீர்கள். காலத்தினால் செய்த இந்தத் தங்களின் உதவியை என்னால் என்றுமே மறக்க இயலாது. 

 

தங்களுக்கு என் ஆத்மார்த்தமான ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  வாழ்க !


  நன்றியுடன் கோபு [VGK]

    


நினைவூட்டுகிறோம்

இந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான

இணைப்பு:


கதையின் தலைப்பு:

VGK-38 
மலரே ...
குறிஞ்சி மலரே !

விமர்சனங்கள் வந்துசேர இறுதி நாள்

09.10.2014
வரும் வியாழக்கிழமை
இந்திய நேரம் 
இரவு 8 மணிக்குள் .

போட்டியில் கலந்துகொள்ள 
மறவாதீர்கள் !

இன்னும் தங்களுக்கு இருப்பதோ 
மூன்று வாய்ப்புகள் மட்டுமே !


என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்

37 கருத்துகள்:

 1. சாதனையாளர் என்ற பெயர் தங்களுக்கு மிகவும் பொருந்தும். கலையரசி அவர்களுக்கு வாழ்த்துக்கள். தங்களுக்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. மிகச்சிறப்பான பணிதான்! பாரட்டுக்கள் பெற்றதில் வியப்பில்லை! இந்த சிறுகதைப் போட்டிகளுக்கான கதைகளை படித்து வந்தாலும் போட்டியில் கலந்துகொள்ளவில்லை! பெரிய விமர்சனங்கள் எழுதும் பக்குவம் வராதது ஓர் காரணம். இன்னொன்று கொஞ்சம் கூடவே பிறந்த சோம்பேறித்தனமும்தான்! இணையத்தில் இந்த மாதிரி போட்டிகள் மிகக் குறைவு. இந்த போட்டிகள் வாசகர்களிடையே ஓர் உற்சாகத்தை வளர்த்து இணைய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை! மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துக்கள்! கண்டிப்பாக பாரட்டப்பட வேண்டிய விசயம்தான்! இந்த பாராட்டுக்கள் எழுத்தாளர்களை மேலும் ஊக்கப்படுத்தும். இந்த போட்டியின் கதைகளை படித்து வந்தாலும் போட்டியில் கலந்துகொள்ளவில்லை! பெரிய அளவில் விமர்சிக்கும் பக்குவம் இன்னும் வரவில்லை என்பது ஒருபுறம், மறுபுறம் கூடவே பிறந்த சோம்பேறித்தனமும் காரணம். இந்த மாதிரி எழுத்தை ஊக்குவிக்கும் போட்டிகள் இணையத்தில் குறைவு. அந்த குறையை நிவர்த்தி செய்துள்ளார் கோபு சார்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. கலையரசி அவர்கள் சொன்னதில் மிகை ஏதும் இல்லை. திரு V.G.K அவர்கள் உண்மையிலேயே சாதானையாளர்தான். அவரைப் பற்றி இன்னும் சொல்ல வேண்டுமென்றால் தன்னம்பிக்கை நிறைந்தவர் மற்றும் அந்தந்த வேலைகள் அவ்வப்போது நடக்க வேண்டும் என்ற ஒழுங்கை (DISCIPLINE) எதிர்பார்ப்பவர். இதனாலேயே சிறுகதை விமர்சனப் போட்டிக்கு பலநாட்கள் இரவு நீண்டநேரம் கண்விழித்து பணியாற்றுகிறார். இதனை அவருடைய பதிவுகள், பின்னூட்டங்கள், மறுமொழிகள் ஆகியவற்றின் பதிவு நேரத்தினை வைத்து சொல்லலாம்.

  பதிலளிநீக்கு
 5. திருமதி கலையரசி அவர்களின் சிறப்பான கருத்துகளும் ,
  பரிசுப்பணம் அனுப்பவதற்கான உதவிகளும் பாராட்டத்தக்கது..வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 6. //வலைப்பூவில் எழுதும் பலர் இன்னும் அதிகளவில் பங்கெடுத்திருந்தால் இப்போட்டியை இவர் நடத்தியதன் அடிப்படை நோக்கம் முழுவதுமாக நிறைவேறியிருக்கும் என்பது மட்டுமே சிறிய குறை.//

  இது நானும் உணர்ந்ததே. இதற்காக இன்னும் அதிக வேலை பளுவையும் ஏற்க சித்தமாக இருந்தேன். அதற்காக முடிந்தளவு
  சில முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. மூன்று பேருக்காக என்று ஆரம்பத்தில் தீர்மானிக்கப் பட்ட பரிசுகள், ஐந்து பேருக்காக என்று மாற்றம் கண்டது அதில் ஒன்று. இந்த மாற்றத்தை மாற்ற கடைசி வரை கோபு சார் சம்மதிக்கவே இல்லை. "பாவம், ஆர்வத்தோடு எழுதி அனுப்பிச்சிருங்காங்க, சார்! ஐந்து பேருக்கு என்று இருப்பதை மட்டும் குறைச்சிடாதீங்க.." என்று என்னுடன் மல்லுக்கட்டியிருக்கிறார்.

  இந்த போட்டி என்பது ஒரு சாக்கே தவிர எதை ஒட்டியாவது சக பதிவர்களுக்கு பரிசளித்து மகிழவே அவர் விரும்பியிருக்கிறார்.

  அவர் பார்வையில் விமர்சனம் அனுப்பிய அத்தனை பேரும் குழந்தைகள். என் பார்வையில் இவரே ஒரு குழந்தை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போட்டியில் நடுவராக இருந்து, பதிவுகள் அனைத்தையும் வாசித்து நடுநிலையிலிருந்து அவற்றில் சிறப்பானவற்றைப் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பது சாதாரண வேலையில்லை. அதுவும் இந்த கடினமான பணியைப் பத்துமாதங்கள் தொடர்ந்து செய்வதற்கு அசாத்திய பொறுமை தேவை.
   கோபு சாரின் பக்கபலமாக இருந்து இப்போட்டியை நடத்திக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி. தாங்கள் அவ்வப்போது கொடுத்த குறிப்புகள், விமர்சனம் எழுத நினைக்கும் அனைவருக்கும் கைகொடுக்கும்.
   தாங்கள் சொல்லியிருப்பது போல் சக பதிவர்களுக்குப் பரிசு கொடுத்து மகிழ்வதே அவரது உண்மையான எண்ணம். அதனால் தான் மூன்றுக்கு பதிலாக ஐந்து , போனஸ் , ஹாட்ரிக் என்று தாராளமாக பரிசுகளை வாரி இறைத்ததுக்கு இதுவே காரணம்.
   எழுதும் அனைவரும் ஏதாவது ஒரு பரிசு பெற வேண்டும் என்பதில் அவருக்கு இருக்கும் ஆர்வமும் ஆனந்தமும் வியக்க வைக்கிறது.

   நீக்கு
 7. என் கடிதத்தை வெளியிட்டு என்னைப் பெருமைப்படுத்திய கோபு சார் அவர்களுக்கு என் வணக்கமும் நன்றியும்.

  இந்தக் கடினமான பணிக்காக நான் செய்த மிகச் சிறிய உதவியைப் பெரிய அளவில் சிலாகித்துப் பாராட்டி நன்றி சொல்லும் செயல், அவரின் பணிவிற்கும் பெருந்தன்மைக்கும் சான்று. அவருக்கு உதவி செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்ததைப் பெரிய பேறாக நினைத்து மகிழ்கிறேன்.

  இங்குப் பாராட்டுத் தெரிவித்திருக்கும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Kalayarassy G October 7, 2014 at 6:43 PM

   வாங்கோ, வணக்கம்.

   //என் கடிதத்தை வெளியிட்டு என்னைப் பெருமைப்படுத்திய கோபு சார் அவர்களுக்கு என் வணக்கமும் நன்றியும்.//

   நேயர் கடிதங்கள் யாவுமே எனக்குக்கிடைத்த தேதி வரிசைப்படி First come .... first served என்ற அடிப்படையில் மட்டுமே என்னால் வெளியிடப்பட்டு வருகின்றன.

   ஆர்வத்துடன் அழகாகவும் சீக்கரமாகவும் அனுப்பி வைத்த தங்களுக்குத்தான் நான் நன்றி கூற வேண்டும்.

   //இந்தக் கடினமான பணிக்காக நான் செய்த மிகச் சிறிய உதவியைப் பெரிய அளவில் சிலாகித்துப் பாராட்டி நன்றி சொல்லும் செயல், அவரின் பணிவிற்கும் பெருந்தன்மைக்கும் சான்று. அவருக்கு உதவி செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்ததைப் பெரிய பேறாக நினைத்து மகிழ்கிறேன்.//

   என்னைப்பொறுத்தவரை இது மிகப்பெரிய உதவி மேடம்.
   உங்கள் ஒருவரே ஒருவருக்கு மட்டும், அதுவும் ஸ்டேட் பேங்க் என்பதால் என்னால் மிகச்சுலபமாக மொத்தப்பணத்தையும், பரிசளிக்கப்பட வேண்டியவர்களில் வங்கிக்கணக்கு விபரங்களையும், ஒவ்வொருவருக்கும் , அளிக்கப்பட வேண்டிய தொகை போன்றவற்றையும் மிகச் சுலபமாக என்னால் அனுப்பி வைக்க முடிகிறது.

   நானே இதுபோல ஒவ்வொருவருக்கும் நேரிடையாக அனுப்பி வைக்க இயலும் தான் என்றாலும், எனக்கு அது மிகவும் கஷ்டமான வேலையாக இருக்கும். மேலும் கணினி மூலம் செயல்படும்போது, அது கேட்கும் பல்வேறு கேள்விகள் என்னைக்குழப்பி, பயம் கொள்ளச் செய்துவிடும். அதனால் மட்டுமே, இந்தப்பரிசளிப்பையே VGK-01 to VGK-40 முடிய அனைத்துக்கதைகளின் பரிசு முடிவுகளும் வெளியான பின்பு இறுதியாக வைத்துக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். அதையே தான் 01.01.2014 வெளியிடப்பட்டுள்ள என் முதல் டும்..டும்..டும்..டும்.. பதிவிலும் சொல்லியிருந்தேன்.

   அவ்வாறு சேர்த்து ஒட்டுமொத்தமாக அனுப்பி வைத்தால், அதில் பரிசு பெறுவோருக்கு அவ்வளவாக மகிழ்ச்சி இருக்காது. பரிசுத்தொகை கடைசியில் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகமும் ஏற்படலாம்.

   அவ்வபோது நாம் பரிசுத்தொகைகளை அனுப்பி வைக்கும் போது அதுவே அவர்களுக்கு ஓர் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்து மேலும் மேலும் இந்தப்போட்டிகளில் தொடர்ந்து பங்குகொள்ள ஓர் உற்சாகத்தையும் அளிக்கக்கூடும்.

   உலகளாவிய சிறுகதைப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற எனக்கே இந்தப்பரிசு விஷயத்தில் ஓர் கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. அதை நான் இங்கு பகிரங்கமாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:

   -=-=-=-=-

   ஈழத்து மூத்த படைப்பாளியும், பதிப்பாசிரியருமான அமரர் ஆத்மஜோதி நா. முத்தையா அவர்களின் நினைவாக, சர்வதேச அளவில் நடத்தப்பட்ட தமிழ் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசுக்கு “மனிதனை தரிஸிக்க” என்ற தலைப்பில் நான் எழுதி அனுப்பிய என் சிறுகதை தேர்வாகியது. அந்த இரண்டாம் பரிசுக்காக அவர்களால் விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டிருந்த பரிசுத்தொகை ரூ 1500 [ ரூபாய் ஆயிரத்து ஐநூறு மட்டும்]

   இதைப்பற்றிய முதல் தகவல் [நண்பர் ஒருவர் மூலம் தொலைபேசித்தகவல்] எனக்குக் கிடைத்த 08.02.2012 அன்று நான் வெளியிட்ட பதிவு ஒன்றில் கூட இந்த இனிமையான செய்தியினைப் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

   http://gopu1949.blogspot.in/2012/02/hattrick-award-of-this-february-first.html

   “இனிய நந்தவனம்” என்ற மக்கள் மேம்பாட்டு மாத இதழின், பிப்ரவரி 2012 வெளியீட்டின், பக்கம் எண்: 18 முதல் 21 வரை, இந்த என் பரிசுபெற்ற சிறுகதையும், போட்டியில் நான் பரிசுக்குத் தேர்வான செய்திகளும், வெளியிடப்பட்டுள்ளன.

   அந்தப்பத்திரிக்கைக்கு அந்த காலக்கட்டத்தில் சந்தா கட்டியிருந்த என்னிடம் இன்னும் அந்த மாத இதழ் உள்ளது.

   இருப்பினும் இன்று வரை [ இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும்] அதற்கான பரிசுத் தொகை ஏதும் எனக்குத் தரப்படாமல் உள்ளது.

   நமக்கு [எனக்கோ .... உங்களுக்கோ] பணம் முக்கியம் அல்ல. இவையெல்லாம் ஒரு அங்கீகாரம் மட்டுமே.

   இருப்பினும், பிரமாதமாக உலகளாவியப் போட்டி என்று விளம்பரம் கொடுத்துவிட்டு, போட்டியை நடத்துபவர்களில், இப்படியும் சில மனிதர்கள் உள்ளார்கள் என்பதைத் தெரிவிக்கவே இதை நான் இங்கு பகிரங்கமாக எழுதியுள்ளேன்.

   -=-=-=-=-

   அதுபோன்ற ஒரு கெட்ட பெயர் எனக்கு இந்த நான் நடத்தும் போட்டிகளில் வரக்கூடாது என்பதில் நான் சற்று அதிக கவனம் எடுத்துக்கொள்கிறேன். அதற்கு தாங்கள் எனக்கு பக்கபலமாக இருந்து வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.

   நன்றியுடன் கோபு [VGK]

   நீக்கு
 8. இறுதிக்கட்டத்தில் வெற்றிகரமாக முடியும் தருவாயில் உள்ள நம் சிறுகதை விமர்சனப்போட்டியில் கலந்துகொள்ள இன்னும் மூன்றே மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளன என்ற தகவல் பலரையும் சென்றடையும் விதமாக, நம் ’ஊஞ்சல்’ வலைத்தளப்பதிவர் திருமதி. ஞா. கலையரசி அவர்கள், தனது வலைத்தளத்தினில் இன்று ஒரு தனிப்பதிவு வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்கள்.

  அதன் இணைப்பு:

  http://unjal.blogspot.in/2014/10/blog-post_7.html

  ஏற்கனவே நமது போட்டியில் PAY & DISBURSEMENT OFFICER ஆக கெளரவப்பதவியை வகித்து வரும் அவர்கள், இப்போது புதிதாக PUBLICITY & PUBLIC RELATIONS OFFICER ஆகவும் தானே முன்வந்து கூடுதல் பொறுப்பேற்று உள்ளது எனக்கு மேலும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

  அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவ்விமர்சனப்போட்டியைப் பாராட்டி இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே ஒரு பதிவு போட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நேரமின்மை காரணமாக போட இயலவில்லை. போட்டி முடியுந்தறுவாயில் என் பாராட்டுக்களைப் பதிவு செய்யும் விதமாக இப்பதிவை வெளியிட்டிருக்கிறேன்.
   வலையுலகில் தொடர்ந்து நான் இயங்காததால் இது எத்தனை பேரைச் சென்றடையும் என்பது எனக்குத் தெரியாது. தங்களது கடின உழைப்பும புது முயற்சியும் கெளரவிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்திலேயே இப்பதிவை வெளியிட்டுள்ளேன்.
   தங்களுக்கு மீண்டும் என் நன்றி.

   நீக்கு
 9. சிறப்பான கருத்துக்கள் ~ பாராட்டுக்கள்!
  பரிசு பரிமாற்ற உதவிகள் புரிந்தமைக்கு நன்றிகள்
  ~ திருமதி கலையரசி!!!

  பதிலளிநீக்கு
 10. கோபு சார் அவர்களின் சிறப்புகளை அழகாக எடுத்துரைத்த கடிதம். தாங்கள் சொல்வது போல் விமர்சனம் என்றால் எப்படியிருக்கவேண்டும் என்பதை இப்போட்டிகள்தாம் பயிற்றுவித்தன. அதற்காக கோபு சாருக்கும் ஜீவி சாருக்கும் நாம் என்றென்றும் நன்றி சொல்லவேண்டும். பதிவுலகில் ஒரு திருவிழா போல் நடைபெற்ற இப்போட்டிகள் முடிவுக்கு வருவது சற்று வருத்தம் தரும் செய்தி என்றாலும் இதனால் பலரும் பயனடைந்திருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. கோபு சாரின் ஏராள பொறுப்புகளிலிருந்து பணப்பட்டுவாடா என்னும் பொறுப்பைத் தாங்கள் எடுத்துக்கொண்டு அவருக்கு உதவி புரிந்தமை மிகவும் பாராட்டுக்குரியது. தங்களுக்கும் வாசக விமர்சகர்கள் சார்பில் அன்பான நன்றி.

  பதிலளிநீக்கு
 11. அன்பின் கலையரசி

  அருமையான பதிவு - அருமை நண்பர் வை.கோவின் ஆற்றலையும் சிந்தனையையும் - அவற்றால் விளைந்த கதையையும் - நேயர் கடிதத்தில் அழகாக வடித்தமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  //
  மொத்தத்தில் பத்து மாதங்கள் ஒரு போட்டியை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய சாதனையாளர்! தொடர்ந்த ஊக்கத்துக்கும் ஆக்கத்துக்கும் ஒரு முன்மாதிரி! எதிர்காலத்தில் இணையத்தில் இது போன்ற பயனுள்ள போட்டியைத் துவங்க நினைக்கும் எவருக்கும், நல்லதொரு வழிகாட்டி!
  // - அழகான அருமையான பாராட்டு - இதற்க்காகவே தங்களைப் பாராட்ட வேண்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சீனா சார்!

   நீக்கு
 12. வலைப்பூவில் எழுதும் பலர் இன்னும் அதிகளவில் பங்கெடுத்திருந்தால் இப்போட்டியை இவர் நடத்தியதன் அடிப்படை நோக்கம் முழுவதுமாக நிறைவேறியிருக்கும் என்பது மட்டுமே சிறிய குறை.//

  நீங்கள் சொல்வது உண்மை கலைரசி .என்னாலும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை.

  நீங்கள் சாருக்கு பணப்பட்டுவாடா பொறுப்பை எடுத்துக் கொண்டு உதவியமைக்கு நன்றி.

  எப்படி வாழ வேண்டும் என்ற வாழும் முறையை தன் கதைகளின் மூலமாக சொல்லி வருக்கிறார். சில கதைகள் சிரிக்கவும் சிந்திக்கவும் இருக்கும் . அனைவருக்கும் நல்ல வாழிக்காட்டி சார்.

  அனைத்தும் தெரிந்த சாதனையாளரைபற்றி நீங்கள் எழுதிய நேயர் கடிதம் மிக அருமை.
  வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருமை எனப் பாராட்டியதற்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோமதி!

   நீக்கு
 13. //மொத்தத்தில் பத்து மாதங்கள் ஒரு போட்டியை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய சாதனையாளர்! தொடர்ந்த ஊக்கத்துக்கும் ஆக்கத்துக்கும் ஒரு முன்மாதிரி! எதிர்காலத்தில் இணையத்தில் இது போன்ற பயனுள்ள போட்டியைத் துவங்க நினைக்கும் எவருக்கும், நல்லதொரு வழிகாட்டி!/அருமையாகச் சொன்னீர்கள்! திரு வைகோ சாரின் உழைப்பும், திறமையும் நடுவரின் செயல்பாடும் மிகவும் பாராட்டுதலுக்குரியது என்பதில் ஐயமில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது கருத்துரைக்கு மிக்க நன்றி சேஷாத்ரி சார்!

   நீக்கு
 14. கலையரசி அவர்களின் கருத்துக்களை நான் முற்றிலும் வழி மொழிகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் கருத்துக்களை வழிமொழிந்ததற்கு மிகவும் நன்றி ஐயா!

   நீக்கு
 15. கலையரசி அவர்களுக்கு வாழ்த்துகள் நம் சார் சொல்லியிருப்பது போல அவருக்கு கிடைத்த கசப்பான அனுபவம் வேறு யாருக்கும் கிடைத்து விடக்கூடாது என்று ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக சிறப்பாக செயல் பட்டுவரும் நேர்மை. யூ ஆர் ஸோ க்ரேட்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் September 4, 2015 at 1:38 PM

   வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.

   //கலையரசி அவர்களுக்கு வாழ்த்துகள்.//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

   // நம் சார் சொல்லியிருப்பது போல அவருக்கு கிடைத்த கசப்பான அனுபவம் வேறு யாருக்கும் கிடைத்து விடக்கூடாது என்று ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக சிறப்பாக செயல் பட்டுவரும் நேர்மை. யூ ஆர் ஸோ க்ரேட்//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான புரிதலுக்கும், நேர்மையான சிறப்பான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   You are also So Great ! :) - vgk

   நீக்கு
 16. //அதுபோன்ற ஒரு கெட்ட பெயர் எனக்கு இந்த நான் நடத்தும் போட்டிகளில் வரக்கூடாது என்பதில் நான் சற்று அதிக கவனம் எடுத்துக்கொள்கிறேன். அதற்கு தாங்கள் எனக்கு பக்கபலமாக இருந்து வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.//

  இந்த விஷயத்தில் நீங்கள் ஒரு முன் ஜாக்கிரதை முத்தண்ணா. அதைவிட கண்டிப்பாக அந்த பரிசுத் தொகைகள் உரியவர்களை சேர வேண்டும் என்ற உங்கள் நல்லெண்ணம் நல்லபடி நடத்தி வைக்கும்,.

  கலையரசிக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya October 26, 2015 at 12:12 AM

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   இந்த உலகளாவிய சிறுகதைப்போட்டியில் பரிசுபெற்ற எனக்கு, அந்தப்பரிசுத்தொகையை இன்று வரை கொடுக்காமல், இழுத்தடித்துக்கொண்டு, நடுவில் இடைத்தரகர் போல இருந்து, பணத்தை அபேஸ் செய்துகொண்டுள்ள நபர், சமீபத்திய புதுக்கோட்டை பதிவர் திருவிழாவில் மேடையில் ஏறியவர்களில் ஒருவர் மட்டுமே.

   நான் நினைத்திருந்தால் இதில் நடந்த அனைத்து விஷயங்களையும், என்னிடம் இன்றும் உள்ள ஆதாரங்களுடன் நிரூபித்து, தனிப்பதிவு ஒன்றே வெளியிட்டு, நம் பதிவர்கள் அனைவரின் முன்னிலையிலும், அவரின் முகத்திரையைக் கிழித்திருக்க முடியும்.

   போனால் போகிறார் என பெருந்தன்மையுடன் நான் இருந்து விட்டேன்.

   இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
  2. இன்னொருவருக்குக் கிடைக்கக் கூடிய பரிசுத்தொகையை இடையிலிருந்து அபேஸ் செய்வது போலக் கீழ்த்தரமான செயல் வேறுஒன்றுமில்லை. நீங்கள் ஏற்கெனவே சொல்லியிருப்பது போல பணம் என்பதை விட பரிசு என்பது நம் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம். அதைக் கிடைக்காமல் செய்தவரின் முகத்திரையைக் கிழிக்காமல் போனால் போகிறதென்று விட்டுவிட பெரிய மனது வேண்டும். உங்கள் பெருந்தன்மையைப் பாராட்டுகிறேன்!

   நீக்கு
  3. ஞா. கலையரசி October 26, 2015 at 9:04 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //இன்னொருவருக்குக் கிடைக்கக் கூடிய பரிசுத்தொகையை இடையிலிருந்து அபேஸ் செய்வது போலக் கீழ்த்தரமான செயல் வேறு ஒன்றுமில்லை.//

   இவையெல்லாம் மானஸ்தர்களாகிய நம்மைப் போன்றவர்கள் மட்டுமே பொதுவாக நினைப்பது.

   //நீங்கள் ஏற்கெனவே சொல்லியிருப்பது போல பணம் என்பதை விட பரிசு என்பது நம் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம். அதைக் கிடைக்காமல் செய்தவரின் முகத்திரையைக் கிழிக்காமல் போனால் போகிறதென்று விட்டுவிட பெரிய மனது வேண்டும்.//

   மூன்று ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு நியாயமாகக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டிய அந்தத்தொகையை வைத்துக்கொண்டு, அவர் மாடி வீடு கட்டி, மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தால், எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியாகவே இருந்திருக்கும். எனக்குத் தெரிந்து அவர் அதுபோலவும் தன் சொந்த வாழ்க்கையில் நிம்மதியாகவும் இல்லை. அதற்கான மூல காரணத்தையும் அவர் இன்னும் உணர்ந்ததாகவும் தெரியவில்லை.

   எப்படியோ இனி அவராவது நல்லா இருக்கட்டும் என நான் எனக்குள் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

   //உங்கள் பெருந்தன்மையைப் பாராட்டுகிறேன்!//

   மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு
  4. //போனால் போகிறார் என பெருந்தன்மையுடன் நான் இருந்து விட்டேன்.//

   உங்களால் அப்படி மட்டும்தான் இருக்க முடியும். வேறு மாதிரி உங்களால் கண்டிப்பாக இருக்க முடியாது.

   //இந்த உலகளாவிய சிறுகதைப்போட்டியில் பரிசுபெற்ற எனக்கு, அந்தப்பரிசுத்தொகையை இன்று வரை கொடுக்காமல், இழுத்தடித்துக்கொண்டு, நடுவில் இடைத்தரகர் போல இருந்து, பணத்தை அபேஸ் செய்துகொண்டுள்ள நபர், சமீபத்திய புதுக்கோட்டை பதிவர் திருவிழாவில் மேடையில் ஏறியவர்களில் ஒருவர் மட்டுமே.//

   குற்ற உணர்வே இருக்காதா? இல்லை அப்படி நடிக்கிறார்களா?

   எது எப்படி ஆனாலும் விட்டுத் தள்ளுங்கள்.

   நீக்கு
 17. இதெல்லா படிச்சிகிடவே ஆச்சரியமால்ல இருக்குது. நீங்க சொல்லினாப்புல பணம் பெரிய வெசயமில்லதா. நம்ம எளுத்துக்கு ஒரு நல்ல அங்கீகாரம்மட்டும் தேவைதா. படிக்குறவங்களுக்கு திருப்தியா கத இருந்திச்சில்ல அதா பெரியவெசயம்

  பதிலளிநீக்கு
 18. நேயர் கடிதம் எழுதியவர்களுக்கு ரிப்ளை கபண்ட் கொடுப்பதில் சில கசப்பான விஷயங்கள் தெரிய வரது. நாம நேர் வழியே போலாம்.  பதிலளிநீக்கு
 19. //திட்டமிடல், குறித்த காலத்தில் செயல்படுதல், காரியத்தில் சோர்வின்றித் தொடர்ந்து ஈடுபடுதல், குன்றாத ஆர்வம், விடாமுயற்சி போன்ற தலை சிறந்த பண்புகளை வை.கோபு சார் அவர்களிடத்தில் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.// நானும்தான் முயற்சிபண்றேன். முடியமாட்டேங்குதே.

  பதிலளிநீக்கு
 20. http://unjal.blogspot.com/2014/10/blog-post_7.html

  மேற்படி இணைப்பினில் ’சாதனையாளர் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!’ என்ற தலைப்பினில் ஓர் தனிப்பதிவு ‘ஊஞ்சல் வலைப்பதிவர்’ திருமதி கலையரசி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  பதிலளிநீக்கு
 21. 'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html

  தலைப்பு: ’இன்று போல் என்றும்’

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு