About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, October 27, 2014

VGK-39 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - 'மாமியார்’
’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்  


கதையின்  தலைப்பு :


 VGK-39      மாமியார்   


     

மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு 

மிக அதிக எண்ணிக்கையில் 

பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 

அவர்கள் அனைவருக்கும் 

என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.  


 நடுவர் திரு. ஜீவி  


 நம் நடுவர் அவர்களால் 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள

விமர்சனங்கள் மொத்தம் :ஐந்துஇந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் நம் பாராட்டுக்கள் + 

மனம் நிறைந்த இனிய  நல்வாழ்த்துகள். 
  


மற்றவர்களுக்கு: 


      
இனிப்பான இரண்டாம் பரிசினை


வென்றுள்ள விமர்சனம் - 1

‘அம்மா’ என்ற சொல்லைக்கேட்ட உடனே வ(த)ரும் மகிழ்ச்சி, சகஜமான உணர்வு பொதுவாக ‘மாமியார்’ என்ற சொல்லைக் கேட்டால்  வருவதில்லை! ஆனாலும் கதையின் தலைப்பை மாமியார் என்றே வைக்க என்ன காரணம்? கதையின் முதல் வரி அல்லது முதல் பத்தியை படித்தவுடன் எழும்பும் கேள்வி இந்தக் கதையின் தலைப்பைப் பார்த்ததுமே எழும்பிவிடுகிறது!தலைப்பிலேயே கொக்கியை வீசி வாசகனை பிடித்துவிடும் நம்ப கதாசிரியருக்கு ஒரு பாராட்டு சொல்லிவிட்டு – வாங்க உள்ளார போகலாம்!

     
உள்ளூரிலேயெ உள்ள தன் தாய் வீட்டிற்குப்போய்விட்டு திரும்பி மாமியாரைக் காணாது கணவனைக்கேட்டால் மாமியார் ஒரேயடியாய் கிளம்பிச்சென்றுவிட்டதாக வேணும்னே சொல்லி ‘மூஞ்சி’யைக்காட்டிவிட்டு வெளியே போகும் கணவன்ஆரம்பமே ரொம்ப சூடா இருக்கே?!
       

கல்யாணம் ஆகி ஆறே மாதம் ஆகும் புதுமணத்தம்பதியர்! பகலெல்லாம் சூரியனாய் சு(க)டும் சண்டை மாலையில் குளிர்ந்து இரவில் காணாமல்போவது சகஜமான ஒன்றே! அதனை நாசுக்காக தொட்டுச் செல்வது அழகு! இதற்கிடையில் flash backக்ஆக ஜாதகப் பொருத்தம் பார்த்த உபரிக்கதை! நல்ல வரன் வந்தால் ஜாதகப் பொருத்தம் இரண்டாம் பட்சமாகப் போய்விடுவதை சற்றே நகைச்சுவை கலந்த ஆதங்கத்துடன் சொல்லியிருப்பது மிகவும் சிறப்பு! பெண்ணைப் பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் எதிர்கொள்ளும் விஷயம்தான் இது! முதல் ஜோசியர் ஜாதகப் பொருத்தம் குறைவைச் சுட்டிக் காட்டிய பின்னரும் செகண்ட் ஒப்பீனியன் செல்வது அவரிடமும் பாஸிடிவான பதிலை எதிர்பார்த்து அவ்வாறே சொல்லவைப்பது என்ற செய்கைகளின் மூலமாக இதனை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப்போலச் சொல்லியிருப்பது அதி உன்னதம்! எலிசபெத் டவரில் எலிப்பொறிகளின் வகைகளைச் சொல்லியிருப்பதைப்போல இக்கதையில் ஜாதகப் பொருத்தம் பற்றிய விவரங்கள்! இதையெல்லாம் எங்கத்தான் தே…ஏ…ஏ…ஏ…டிக்கண்டுபிடிக்கிறாரொ தெரியலயே என்று ஆச்சரியம் கொள்ளவைத்துவிடுகிறார்! ஜாதகப் ‘பொருத்தம்’ பார்த்தவருக்கு டபுள் கன்ஸல்டிங் பீஸ்! மாமியாரைக்காணாத பரபரப்பு வனஜாவுக்கு தொற்றிக்கொள்ள நமக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பிபீ ஏறத்துவங்குகிறது! ஒருவேளை சஷ்டாஷ்டக தோஷம்’ தொல்லை கொடுக்கிறதோ என்று வனஜாவுடன் சேர்ந்து நம்மையும் எண்ணமிடச் செய்துவிடுகிறது! அதோட ‘பிளாஷ்பேக்ல’ ஒரு ‘கட்’ போட்டுவிட்டு மீண்டும் விட்ட இடத்துக்கே நம்மை கூட்டிச் சென்றுவிடுகிறார் கதாசிரியர்! பெற்ற அம்மா வீட்டுக்குத்தானே அதுவும் சொல்லிவிட்டுத்தானே சென்றாள் நம் கதாநாயகி? அதற்கு ஏன் மாமியாருக்கு கோபம் வரவேண்டும்? சொல்லாமல் எங்கோ ஏன் கிளம்பவேண்டும்? என்ன சஸ்பென்ஸ்ல டாப் எகிறுதா?
       

புதுசா கல்யாணம் ஆன பொண்ணு ஞாயித்துகிழமைல அவ கையாலயே சமைக்க விரும்பினா - அதுக்கு மாமியார் ‘தடா’ போட்டா “நான் என்ன தீண்டத்தகாதவளா?”ன்னு மருமகளுக்கு ஒரு எண்ணம் வர்றது நியாயம்தானே! ஒருவேளை இந்த மாமியாருங்களே இப்படித்தானா? (இதமாதிரி கேள்வி எழுப்புனாத்தானே அதுக்கு பதில் கொடுக்குறமாதிரி கதைவிரியும்! திருப்பங்களும் நிகழும்!)
      

வனஜாவுக்கும் அவளோட அம்மாவுக்கும் இடையில நடக்குற உரையாடல்லயே மாமியாரோட நல்ல மனசையும், அக்கறையையும் சொல்லி மகளை உரிமையோட திட்டும்பொழுதே மாமியார் எங்கேன்னே தெரியலைன்னு வனஜா புலம்புறப்ப அதுக்கு பதில் சொல்றாப்பல மாமியாரோட தங்க குணத்தையும் சொல்லி மகளுக்கு உணரவைப்பது அருமை!
       

மாமியாரைக் காணாமல் தவித்துக்கொண்டிருந்தால் அவரோ மருமகளை சமாதானம்செய்து வீட்டுக்கு அழைத்துவர சம்பந்த்தியின் வீட்டிற்கே சென்றிருக்கிறார்!அதுதான் நம்ப கதைசொல்லியோட ‘டச்’! ‘கூக்ளி’போடுற பெளலர்போல எதிர்பாராத கோணத்துல கதைல டுவிஸ்ட் கொடுத்து திருப்புறதுதான் நம்ப விஜிகே அவர்களோட ஸ்டைல்! அம்மா – மகளுக்கு இடையில் நடக்கும் உரையாடலிலேயே மாமியாரின் அக்கறையை (கையை சுட்டுக்கொள்ளக் கூடாது, முகத்தில் எண்ணெய் தெறித்துவிடக்கூடாது). சின்னஞ்சிறுசுகள் ஜாலியாக ஊர் சுற்றவேண்டும், ஊட்டி கொடைக்கானல் என டூர் போகவேண்டும்; அம்மாவும் மாமியாரும் பாட்டியாகவேண்டும் என்று எல்லாவற்றையுமே விளக்கிவிடுவது அட்டகாசமான டெக்னிக்!  இதே விஷயத்தை மாமியார் நேரடியாக சொல்லியிருந்தால் அவ்வளவு சீக்கிரம் எடுபட்டிருக்குமா? அம்மா சொன்னதும்தான் உண்மை சரியாகப் புரிகிறது வனஜாவுக்கு! மாமியாரிடம் மன்னிப்புக்கேட்டு அவரது காலில் விழுந்து நமஸ்கரிக்கும் எண்ணமே அவளுக்கு வந்துவிடுவதாகச்சொல்லியிருப்பது செம பஞ்ச்!
       

மருமகளைத்தேடி சம்பந்தி வீட்டிற்கு மாமியார் போவதும், அவர் சொன்னதைக்கேட்டு பொறுமையாக மகளுக்கு எடுத்துரைத்து, சம்பந்த்திக்கு விருந்துவைத்து வீட்டிற்கும் திரும்ப அழைத்துவருவதாகச் சொல்லும் வனஜாவின் அம்மா பாத்திரப்படைப்பும் ‘மாமியாரை’ப்போலவே அதிஅற்புதம்!
       

ஒரு வீட்டிற்கு மாற்றுப்பெண்ணாக வருபவள் வெட்டி எடுத்துவந்து நட்ட ரோஜாப்பதியன்போல! வந்த இடத்தில் மண்’பிடித்து’ வேர்விட்டு மலர்ந்து மணம்பரப்பும்வரை உரமிட்டு தண்ணீர் ஊற்றி பராமரிக்கவேண்டியது மாமியாரின் பொறுப்புதானே! அதை நமது வனஜாவின் மாமியார் மிகச்சரியாகச் செய்துள்ளார்! மருமகளுக்கு ‘மண்’பிடித்து அவள் மகளாகும்பொழுது ‘மாமியாருக்குபெண் பிடித்து அம்மாவாகவே மாறிவிடுவார்!
       

ஒரு வண்ணத்துப்பூச்சி - கூட்டுப்புழுப் பருவம், லார்வாப் பருவம் கடந்து மெல்ல வண்ணத்துப்பூச்சியாகி சிறகடிக்கத்துவங்குவதைப்போல கதையை சீராக அதே சமயத்தில் சரியான இடத்தில் திருப்பங்களுடன் கொண்டு சென்றிருக்கும்விதம் மிக மிக – அருமை!
       

திரும்பி அம்மாவுடன் வீட்டிற்கு வரும் மாமியாரை ##மாமா-மியா(ர்)!” என்று அன்பும் குதூகலமாய் தன் அம்மாவுடன் சேர்த்து அணைத்துக்கொள்வாள் வனஜா! அதன் பிறகு அம்மாக்களுக்கும் பெ()ற்ற மகளுக்கும் இடையே ஆயிரம் இருக்கும்! அவங்களா என்னை ‘கெட் அவுட்’ என்று சொல்லி தொரத்துரதுக்கு முன்னால அம்மாமியாருக்கு என் சார்பில ஒரு ‘கட் அவுட்’ வச்சுட்டு நான் ‘அப்பீட்டு!’  விஜிகே வாத்தியார் மனசு வச்சா பார்ட்-2 ரிப்பீட்டு! வனஜாவோட ஹஸ்பண்டுதான் பாவம் மொதல் ஷாட்லயே எஜெக்ட்டு?!
       

வழக்கம்போல வனஜா ஒருத்தியின் பெயரோடு மற்றவர்களை உறவுமுறையுடனேயே அறிமுகம் செய்து ஒரு மன நிறைவான பாஸிடிவான சிறுகதையைக்கொடுத்த கதாசிரியருக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்கள்!

பின் குறிப்பு:
##(‘மாமா-மியா’ – இத்தாலிய மொழியில் “என் தாயே!” என்று பொருள்படும் ஒரு மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் வார்த்தை!

("mamma mia" = my mom , my mother (an Italian exclamatory expression)

என்றும் அன்புடன்,
ரவிஜி @ மாயவரத்தான் எம்ஜிஆர்
 இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 
   திரு. ரவிஜி

   
அவர்கள்.வலைத்தளம்: மாயவரத்தான் MGR

mayavarathanmgr.blogspot.com    மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.      


இனிப்பான இரண்டாம் பரிசினை


வென்றுள்ள விமர்சனம் - 2“மாமியார்” எனும் தலைப்பைப் பார்த்ததும், காலகாலமாக நாம் படித்துப் பழகிய மாமியார்-மருமகள் உறவுமுறை(!) குறித்த கதையாக இருக்குமோ எனும் எண்ணம் தோன்றியது. கதையைப் படித்தவுடன் மருமகளைப் புரிந்துகொண்ட மாமியாராய்ப் படைத்த கதாசிரியருக்கு பாராட்டு தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பது தெளிவாகியது.


வனஜா என்கிற பாத்திரத்தைத் தவிர வேறு எந்த கதாபாத்திரத்திற்கும் பெயரிடாமலேயே கதையைப் பின்னியிருக்கிறார் ஆசிரியர்.


ஆறு மாதங்களுக்கு முன் வாழ்க்கைப்பட்ட வனஜாவிற்கு அமைந்த வரனும் உள்ளூரிலேயே (பஸ்ஸில் தன் தாய்வீட்டிற்குச் சென்று திரும்ப ஏதுவாக) அமைந்ததும், புரிந்து கொண்ட மாமியாராய் அமைந்ததும் பிராப்தம்தான்.


மணப் பொருத்தம் பார்த்த முதல் ஜோதிடர் வேண்டாம் என உரைத்துவிட, இரண்டாவதாக ஒரு ஜோதிடரிடம் காண்பிக்கச் செல்கின்றனர் வனஜாவின் பெற்றோர்.


தற்காலத்தில் மருத்துவத் துறையில் ஒரு மருத்துவர் சொன்ன விஷயத்தை உறுதி செய்ய இன்னொரு மருத்துவரை நாடிச்செல்லும் நிலையிருக்கையில், ஆயிரம் காலத்துப் பயிரான திருமண பந்தம் குறித்து முடிவெடுக்க இன்னொரு ஜோதிடரை நாடியதில் தவறொன்றும் இல்லை.


இந்த ஜோதிடரோ, ஜாதகங்களை மட்டும் பார்க்காமல், பார்க்க வந்தவர்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொள்ளும் வல்லமை பெற்றவராக விளங்குகிறார்.


ஷஷ்டாஷ்டக ராசி (ஒற்றுமையின்மை) குறித்து அறிந்து கொள்ள தகவல்களைத் தேடியதில், கிடைத்த தகவலகள் படி  ஷஷ்டாஷ்டக ராசிகளில் கணவன் மனைவி ராசிகள் அமைந்தால் இருவருக்குமிடையில் பல விஷயங்களிலும் ஒற்றுமையின்மை நிலவும். பெண் ராசியிலிருந்து பையன் ராசி வரை எண்ணினால் 6-க்கு மேலிருந்தால் பொருந்தும். 8-வது ராசி ஆகாது. 7-வது ராசியானால் சுபம். அதிலும் கும்பம்- சிம்மம், மகரம்-கடகம் போன்றவை பொருந்தாது. 2, 6, 8, 12 ஆகாது. 1, 3, 5, 9, 10, 11-வது வந்தால் சுமார். பெண் ராசிக்கு பிள்ளை ராசி 6, 8 ஆகவோ 8, 6 ஆகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். இது மிகவும் தீமையாகும். இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு. அனுகூல சஷ்டாஷ்டகம் என்று சில உண்டு எனப் பட்டியல் இட்டுள்ளனர்.

ஆனால் இதற்குமேல் அதைப்பற்றிய ஆராய்ச்சியில் நாம் இறங்கவேண்டிய அவசியமில்லாமல் செய்துவிடுகிறார் ஆசிரியர்.
சஷ்டாஷ்டகத்திலும் இது மித்ர சஷ்டாஷ்டகம்தான்
அதனால் பரவாயில்லை ஜோடி சேர்க்கலாம்

என்னஒன்று ... இதுபோன்ற தம்பதியினர் பகல் பூராவும்
சண்டை போட்டுக்கொண்டே வாக்குவாதம்
செய்துகொண்டே இருப்பார்கள்

ராத்திரியானா சமாதானமாப் போய்விடுவார்கள்” 

என்று புன்சிரிப்புடன் சொல்லிக்கொண்டே
வாயில் குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலைபாக்கு 
பன்னீர்ப்புகையிலையை எட்டிப்போய்த் துப்பிவிட்டு
ஒரு சொம்புதண்ணீரால் வாயையும் கழுவிக்கொண்டு வந்தவர் 
என்ன ஸ்வாமிநான் சொன்னது விளங்கிச்சா உமக்கு என்று மீண்டும் நமட்டுச்சிரிப்பொன்றை வெளிக்கொணர்ந்தார்
அந்த ஜோஸ்யர். “

என்னவொரு காட்சி அமைப்பு!

வனஜாவின் அப்பாவோ தானும் தன் மனைவியும் அப்படித்தான் இருந்து வருவதாகவும், வேறொன்றும் தோஷம் இல்லையெனில் இந்த சம்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவதில் ஒன்றும் பிரச்சனையில்லையே என வினவியதிலும் அவரது எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டு, தன்னையே உதாரணமாகக் காட்டி

இன்றைக்கு சண்டை சச்சரவு இல்லாத புருஷன் பெண்டாட்டி 
எங்கே இருக்கிறார்கள்? எங்கேயாவது நூற்றுக்கு ஒத்தரோ
ஆயிரத்துக்கு ஒத்தரோ இருக்கலாம்
குடும்பம்னாசண்டை சச்சரவுகள் 
இருக்கத்தானே செய்யும்இப்போ நானும் என் சம்சாரமுமே
மித்ரசஷ்டாஷ்டக தோஷம் உள்ளவா தான்; எங்களுக்கு விளையாட்டுபோல ஆறு பிள்ளைங்க
ரெண்டுபொண்ணுகள்
பகலெல்லாம் இங்கே தான் ஜோஸ்யம்பார்த்துண்டு இருப்பேன்.  
வீட்டுக்குப்போனா ஒரேபிரச்சனைகள்
ராத்திரி படுத்துக்க மட்டும் தான் வீட்டுக்கேபோவேனாக்கும்”  

நம்பிக்கையூட்டிய ஜோதிடருக்கு கைமேல் பலன் இரட்டிப்பாய்க் கிடைத்தது.


இங்கு உளவியல் ரீதியாகக் கதை சித்தரிக்கப்பட்டுள்ளது. நல்ல சம்பந்தம் என்று அறிந்ததும் ஜாதகமும் நமக்குச் சாதமாக அமையாதா? அல்லது ஏதேனும் பரிகாரங்கள் மூலமாவது அதை சாதகமாக மாற்றிக்கொள்ள முடியாதா? என நினைப்பவர்கள் அதிகம். அந்த வகையில் வனஜாவின் தந்தை சித்தரிக்கப்பட்டுள்ளார்.

இது பலித்ததா? என நம்முள் எழும் கேள்விக்கு, இந்த விஷயம் முன்னமே அறிந்திருந்த, அதில் நம்பிக்கையில்லாத வனஜாவே, அந்த ஜோதிடரின் வாய்க்கு சர்க்கரை போட வேண்டும் என நினைப்பதாகக் காண்பித்து விடையளித்துவிடுகிறார் ஆசிரியர். பெயர் குறிப்பிடாத அவரின் கணவர் முறைப்புடன் வெளியேறுவதாகக் காட்சியையும் மறவாமல் அமைத்துவிடுகிறார் கதாசிரியர்.

நாமும் இதிலிருந்து விலகி கதையை அலசச் செல்வோம். மாமியார் மருமகள் என்பது சற்று சிக்கலான உறவுமுறைதான். புரிந்து கொள்ளல், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பிறந்த வீட்டுப் பெருமையை மட்டும் பேசியபடி இருக்காமல், புகுந்தவீட்டாரின் மேலும் அக்கறை இருப்பதை உரிய வகையில், உரிய நேரத்தில் வெளிப்படுத்தத் தவறாமை ஆகிய குணங்கள் மருமகளுக்கு அமையப் பெற்றால் இந்த மாமியார்-மருமகள் உறவில் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இக்கதையில் மாமியாரின் மன ஓட்டத்தை மருமகள் புரிந்து கொள்ளாத நிலையைக் கருவாக அமைத்து கதை அமைத்த பாங்கு பாராட்டத்தக்கது.

மருமகள் மீது தனக்கிருக்கும் அக்கறையை தன் சம்பந்தி அம்மாளிடம் அழகாக எடுத்துரைத்து, அவர் மூலமே அதை மகளுக்குப் புரிய வைக்கும் பாங்கு புதுமை. சம்பந்திகளுக்குள்ளும் புரிதல் இருந்ததை நமக்குப் புரிய வைத்துவிட கதாசிரியர் கையாண்ட யுத்தி இது.

வாழ்க்கையில் சாதாரணமாக கணவன் மனைவிக்குள்ளோ, மாமியார் மருமகள் இடையேயோ ஏற்படும் பிரச்சனைகளை உளவியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் அணுகி விடைதேடினால் நல்ல தீர்வு கிடைக்கும் என்பதை அழகாக விளக்கிய ஆசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

மாமியார் மேல் வனஜாவிற்கும் பாசம் அதிகம் என்பதை, வீட்டிற்குத் திரும்பியதும், மாமியாரைக் காணாமல் தவித்த நிலையிலிருந்து நம்மை அறிந்து கொள்ளச் செய்து விடுகிறார்.

ஞாயிறன்று மாமியாருக்கு ஓய்வு கொடுக்க மருமகள் நினைப்பதும், மருமகள் சந்தோஷமாக மகனுடன் அந்நாளைச் செலவிட மாமியார் நினைப்பதும்தான் சிறு பிரச்சனைக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. மருமகள், தன்னை மாமியார் சமையல்கட்டிலிருந்து வெளியேற்றத் துடிப்பதாக எண்ணுவதும், மாமியாரோ தன்னை ஓய்வெடுக்கச் சொல்லும் மருமகளின் சொல்லால் மனதளவில் பாதிப்பு அடைவதாகக் காண்பித்தது எதார்த்தம்.

நல்ல ஆரோக்கியத்துடன் திகழும் மாமியார்கள் மருமகளுக்கு உதவ தாமாகவே உவந்து முன்வரும்போது, அவர்களுக்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வதில் தவறொன்றும் இல்லையென்றே எனக்குத் தோன்றுகிறது. அவர்களை இதற்காகவே வெளிப்படையாகப் பாராட்டிப் பேச அந்த மருமகள் கடமைப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது.

தன் அம்மாவீட்டிற்குத்தான் மாமியார் சென்றுள்ளார் என்பதை அறிந்து மகிழ்வடைந்ததோடு மட்டுமல்லாமல், தன் அம்மா மூலம் மாமியாரின் மனஓட்டத்தை, தன் மீதுள்ள அக்கறையை, பரிவை அறிந்துகொண்ட, புரிந்து கொண்ட மருமகளாகிவிடுகிறாள் வனஜா.

இனியென்ன! வழக்கம்போல் பகலில் முறைத்துக்கொண்டு கணவன் சென்றாலும், இரவில் பெட்டிப்பாம்பாய் அடங்(க்)கி, மாமியாரின் விருப்பத்தை விரைவில் நிறைவேற்றி, பாட்டியாக பதவி உயர்வு அளித்துவிடுவார் வனஜா! மன்னித்தருளும் அன்பான மாமியாரின் ஆசிகள் பரிபூர்ணமாக உதவும் என்பதில் ஐயமில்லை!

சுபம்!


 


இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 


திரு.E.S. சேஷாத்ரி


அவர்கள்.


வலைத்தளம்: காரஞ்சன் (சேஷ்)

esseshadri.blogspot.com/
  
மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
      


 

     

VGK-37 TO VGK-39 
இனிப்பான இரண்டாம் 


பரிசினை வென்றதுடன் 


நான்காம் முறையாக ஓர் 


புதிய ஹாட்-ட்ரிக் 


அடித்துள்ளார்.

மனம் நிறைந்த பாராட்டுகள் +

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.The Hat-Trick Prize Amount will be DOUBLED if

he is able to yield one more Success in VGK-40 also.


Let us Hope for the Best, Sir ! 


- vgk


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம் பரிசுக்கான தொகை இந்த இருவருக்கும்

சரிசமமாகப் பிரித்து அளிக்கப்பட உள்ளது.

      

 இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன.காணத்தவறாதீர்கள் !    என்றும் அன்புடன் தங்கள்

வை.கோபாலகிருஷ்ணன்

16 comments:

 1. ஒரு வண்ணத்துப்பூச்சி - கூட்டுப்புழுப் பருவம், லார்வாப் பருவம் கடந்து மெல்ல வண்ணத்துப்பூச்சியாகி சிறகடிக்கத்துவங்குவதைப்போல கதையை சீராக அதே சமயத்தில் சரியான இடத்தில் திருப்பங்களுடன் கொண்டு சென்றிருக்கும்விதம் மிக மிக – அருமை!///

  திரு. இரவி ஜி அவர்களின் வண்ணத்துப்பூச்சியாய்
  சிறகடிக்கும் சிறப்பான , அருமையான விமர்சனம்
  பரிசு பெற்றதற்கு இனிய வாழ்த்துகள். பாராட்டுக்கள்..!

  ReplyDelete

 2. திரு. இரவி ஜி அவர்களின் வண்ணத்துப்பூச்சியாய்
  சிறகடிக்கும் சிறப்பான , அருமையான விமர்சனம்
  பரிசு பெற்றதற்கு இனிய வாழ்த்துகள். பாராட்டுக்கள்..!

  ReplyDelete

 3. நல்ல சம்பந்தம் என்று அறிந்ததும் ஜாதகமும் நமக்குச் சாதமாக அமையாதா? அல்லது ஏதேனும் பரிகாரங்கள் மூலமாவது அதை சாதகமாக மாற்றிக்கொள்ள முடியாதா? என நினைப்பவர்கள் அதிகம்.

  உண்மைதான் ,, முழுதிருப்தி இல்லாவிட்டாலும் வந்திருக்கும் வரன்களில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலையில் இருப்பதால்- வந்திருக்கும் விமர்சனத்தில் சிலவற்றைத் தேர்ந்தெடுக்கும் நடுவர் ஐயா அவர்களைப்போல் பரிகாரம் செய்தாவது ஒரு வரனைத் தேர்வு செய்யும் நிலையே இருக்கிறது..

  யதார்த்தமான விமர்சனம் ..திரு.E.S. சேஷாத்ரிஅவர்களுக்கு இனிய வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்.!

  ReplyDelete
 4. இனிப்பான இரண்டாம் பரிசு பெற்றிருக்கும் ரவிஜி & சேஷாத்ரி ஆகிய இருவருக்கும் பாராட்டுக்கள்! தொடர்ந்து நான்காம் முறையாக ஹாட்டிரிக் பரிசு வென்றிருக்கும் சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. என்னுடைய விமர்சனம் இரண்டாம் பரிசுக்குத் தெரிவானதில் மிகவும் மகிழ்ச்சி.ஒவ்வொரு முறையும் பாராட்டி, வாழ்த்தி ஊக்குவிக்கும் அனைத்து நல்லிதயங்களுக்கும் என் உளமார்ந்த நன்றி! சிறப்பாக விமர்சனம் எழுதி என்னுடன் பரிசினைப் பகிர்ந்துகொண்டுள்ள திரு, ரவிஜி அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்! வாய்ப்பளித்த வைகோ சார் அவர்களுக்கும், நடுவர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete
 6. திரு. ரவிஜி,
  திரு. சேஷாத்ரி,
  பரிசு பெற்ற இருவருக்கும்
  பாராட்டுகள்!

  ReplyDelete
 7. \\மருமகள் மீது தனக்கிருக்கும் அக்கறையை தன் சம்பந்தி அம்மாளிடம் அழகாக எடுத்துரைத்து, அவர் மூலமே அதை மகளுக்குப் புரிய வைக்கும் பாங்கு புதுமை.\\
  இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்ற குறளுக்கேற்ப செயல்பட்ட மாமியாரின் சாதுர்யம் மெச்சத்தக்கதுதான் அல்லவா? சிறப்பாக விமர்சனமெழுதி இரண்டாம் பரிசு பெற்றுள்ள திரு.சேஷாத்ரி அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. வழக்கமான தன் நகைச்சுவை பாணியில் ஆரம்பம் முதல் இறுதி வரை முறுவல் விலகாது வாசிக்க வைக்கும் வித்தியாசமான விமர்சனமெழுதி இரண்டாம் பரிசு பெற்றுள்ள திரு.ரவிஜி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

  ReplyDelete
 9. திரு ரவிஜிக்கும், திரு சேஷாத்ரிக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. இரண்டாம் பரிசு பெற்ற திரு. ரவிஜி, திரு. சேஷாத்ரி, இருவருக்கும் பாராட்டுகள்!

  ReplyDelete
 11. பரிசு பெற்ற திரு ரவிஜி திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. இரண்டாம் பரிசு பெற்ற திரு. ரவிஜி, திரு. சேஷாத்ரி, இருவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. பரிசு வென்றவங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. திரு ரவிஜி திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. வாழ்த்திய அன்புநெஞ்சங்களுக்கு எனது நன்றிகள். பரிசினைப் பகிர்ந்துகொண்ட நண்பர் சேஷாத்ரி அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

  ReplyDelete