என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

42] நேர மேலாண்மை

2
ஸ்ரீராமஜயம்




1] பார்க்கிற, கேட்கிற எல்லாவற்றிலும் ஆசையை விடுவது.

2] கேட்டதில், கேட்கப்போவதில் ஆசையை விடுவது.

3] பார்த்ததில், பார்க்காததில் ஆசையை விடுவது.

எல்லாவற்றையும் கூட்டிப்பார்த்தால் - ஒரு மனித மனதில் இடம்பெறக்கூடிய அத்தனை ஆசைகளையும் தொலைத்து முழுகுவதுதான் வைராக்யம்.

கேட்ட உபதேசத்தை விடாமல் மனனம் செய்து அர்த்தத்தை கண்டு கொண்டபிறகு, அந்த அர்த்தம் ஒன்றிலேயே மனதை இடைவிடாமல் ஈடுபடுத்தி நிற்பதே தியானம் ஆகும்.   

பணத்துக்காகப் பறக்காத போது, இறைவன் புகழ்பாட நிறைய நேரம் இருக்கும். வாழ்க்கையின் நிம்மதியும் திருப்தியும் செளபாக்கியமும் தன்னாலே உண்டாகும்.



oooooOooooo

ஓர் ஆச்சர்யமான சம்பவம்


ஒரு அனுஷத்துக்கு மறுநாள் நிறைய பக்தர்கள் தர்சனம் பண்ண வந்தார்கள்.

அதில் ஒரு வயசான பாட்டி. 

பெரியவாளை பார்த்து “சர்வேஸ்வரா………..மஹாப்ரபு…. என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்.


“எப்டி இருக்கான் ஒன் ஸ்வீகாரம்?………”




“ஏதோ இருக்கான்………” விட்டேத்தியாக பதில் வந்தது பாட்டியிடமிருந்து.



“வயசான காலத்ல ஒனக்கு பிடிப்பே இல்லேன்னியே? ……… அதான் 

ஒதவியா இருக்கட்டுமே … ன்னுதான் குடுத்தேன்” முகத்தில் சிரிப்பு!


”ஆஹா, பிடிப்பு இருக்கட்டும் ….. ன்னு குடுத்தாராம்! ”


சுற்றி இருந்தவர்கள் முகத்திலும் சிரிப்பு.


“சரி … ஒன் ஒடம்பு எப்டி இருக்கு?………”




“ஏதோ இருக்கேன்….பெரியவா அனுக்ரஹம் … மழை பெஞ்சா, ஆத்துல


முழுக்க ஒரேயடியா ஒழுகறது …. அதை கொஞ்சம் சரி பண்ணிக் 

குடுத்தா, தேவலை பெரியவா”


என்னது? சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்தனர்! 


மோக்ஷத்தை தரவல்ல பராசக்தியிடம் எப்படிப் பட்ட விண்ணப்பம்!


“இந்த ஊர்ல மழையா ! காஞ்சிபுரந்தான் காஞ்சு போயிருக்கே! …….” 




மறுபடியும் கிண்டல் சிரிப்பு.



“இல்லையே….இப்போ ரெண்டு நாள் முன்னால பெஞ்ச மழைல கூட ஒழுகித்தே!…….”


“அப்டியா! சரி ஏற்பாடு பண்றேன் …..” 


பாட்டி சற்றே நகர்ந்து நின்றாள். 


இத்தனை உரிமையோடு பெரியவாளிடம் பேசும் அந்த பாட்டி, எட்டு வயசில் திருமணமாகி விதவை ஆனவள். 

கணவர் வழியில் ஏராளமான சொத்து! 

ஒரு பெண்ணிடம் இத்தனை சொத்து இருக்க சொந்தக்காரர்கள் விடுவார்களா? 

அதே சமயம் தன்னிடம் வரவேண்டிய ஜீவன் ஒரு நாயாக இருந்தால் கூட பகவான் விட்டு வைப்பானா?


பெண்ணுக்கு விவரம் கொஞ்சம் நன்றாக தெரிந்திருந்ததால், சற்று சுதாரித்துக் கொண்டாள். 
காஞ்சிபுரத்துக்கு எதேச்சையாக வந்தவள், 


“தன் சொத்துக்கள் அத்தனையும் காமாக்ஷிக்கு!” 


என்று சொல்லிவிட்டாள். 


பெரியவா எவ்வளவோ மறுத்தும், கடைசியில் அந்த பெண்ணின் அன்பான பிடிவாதம் வென்றது. 


எனவே அவளுக்கு மடத்துக்கு சொந்தமான வீடு ஒன்றை தங்கிக்கொள்ள குடுத்துவிட்டார். 


அல்லும் பகலும் பெரியவாளை தர்சனம் பண்ணும் பாக்யம் ஒன்றே போதும் என்று பரம த்ருப்தியுடன், பணத்துக்கு துளியும் முக்யத்வம் குடுக்காத ஒரு ஆத்மாவை, பெரியவா அல்லும் பகலும் ரக்ஷித்தார்.


பாட்டியோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவரிடம் சில பிரமுகர்கள் வந்து ஒரு தட்டில் ஏதே பத்திரிகையை வைத்தார்கள். 


சிரித்துக் கொண்டிருந்த முகம் சட்டென்று மாறியது…….


“என்னது இது?”




“காமாக்ஷி அம்மன் ப்ரம்மோத்சவ பத்திரிகை……….”



“கலெக்டருக்கு குடுத்தாச்சா?”


“குடுத்துட்டோம். பெரியவா”


“இவாளுக்கு?” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த மற்ற ரெண்டு 

பெரியவாளையும் காட்டி கேட்டார்.

“குடுத்தாச்சு. பெரியவா……”

“ஓஹோ…சரி. எல்லார்க்கும் குடுத்துட்டு, இவன் மடத்த விட்டு

எங்கேயும் போக மாட்டான்….ன்னுட்டு கடைசிலே போனாப் 

போறதுன்னு எனக்கும் ஒரு பத்திரிகை கொண்டு வந்தேளாக்கும்?”

ருத்ர முகம்!

“இல்லை….. அது வந்து …… பெரியவா” நிர்வாகிகள் எச்சில் கூட முழுங்க முடியாமல், கால்கள் நடுங்க நின்றனர்.

“……… கேட்டுக்கோங்கோ! மடத்து சம்ப்ரதாயம்.. ன்னு ஒண்ணு இருக்குன்னாவது தெரியுமோ? 


பத்திரிகை மொதல்ல எங்க தரதுன்னு தெரியுமோல்லியோ? 

எல்லா சம்பிரதாயத்தையும் மீறி நடந்துண்டா எப்டி? 

நீ எத்தனை வர்ஷமா இங்க இருக்கே?” 

குண்டுகளாக துளைத்தன! 


பெரியவா பத்திரிகையை தொடவே இல்லை! 

மடத்து நிர்வாகிகள் நடுங்கிப் போய்விட்டனர்.


ஆம். தவறுதானே?




“எப்டி வரணுமோ அப்டி வாங்கோ” 



திரும்பி நடந்தவர்களை, “ஒரு நிமிஷம் ……..” நிறுத்தினார்.


“நீ எங்கே குடியிருக்கே?”


“வடக்கு சன்னதிப் பக்கம் ஒரு ஆத்துல…….”


“அங்க வேற ரெண்டு மூணு வீடு இருந்ததே…”


“அங்க சுப்புராமன் இருக்கார்……”


பெரியவாளுக்கோ எந்தெந்த வீடு, யார் யார் இருக்கிறார்கள் எல்லாம் அத்துப்படி!


“சுப்புராமன்தான் மேல போயிட்டாரே……அவரோட வாரிசுகள் மடத்ல வேலை செய்யறாளா என்ன?”


“இல்லை……….”


“மடத்ல வேலை செய்யறவாளுக்குத்தான் நாம வீட்டை குடுத்திருக்கோம். 


இங்க வேலை செய்யாதவாளுக்கு எதுக்கு வீடு? 


நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது! நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு குடி போகணும் !..


டேய்! நாளன்னிக்கு நல்ல நாளா…ன்னு பாரு”


“ஆமா பெரியவா நல்ல நாள்தான்”




“அப்போ சரி. இந்த பாட்டி நாளன்னிக்கு அந்தாத்துக்கு போறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ”


பெரியவா சங்கல்பம் நிறைவேறியது!

இதற்கப்புறம் மூன்று மாசம் கழித்து காமாக்ஷி கோவிலில் தர்சனம் பண்ணிவிட்டு சன்னதி தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த பெரியவா, சட்டென்று ஒரு வீட்டின் முன் நிற்கிறார்.

பின்னால் வந்து கொண்டிருந்த பக்தர் குழாம் குழம்பியது. 

ஒரு பக்தரிடம், 

”ரெண்டு மூணு நாளா பாட்டியை காணும்….. உள்ள போய்ப் பாரு. 

ஒடம்புக்கு கிடம்புக்கு முடியலையோ என்னவோ…..”

உள்ளே…. ஏழ்மையான எளிமையான வாஸம். ஒரே ஒரு குமுட்டி அடுப்பு. ரெண்டே ரெண்டு பாத்ரம். வேறு எதையுமே காணோம். 

பாட்டி ஒரு ஓரத்தில் முடங்கிக் கிடக்கிறாள். 

பக்தர் மெதுவாக பாட்டியிடம் பெரியவா வாசலில் நிற்கும் விஷயத்தை சொன்னதுதான் தாமதம்! தடாலென்று எழுந்து, தன் நார்மடியை சரி பண்ணிக் கொண்டு ஓடோடி வருகிறாள்.

இரைந்து …….



”சர்வேஸ்வரா……மஹாப்ரபு ……. 



நீயே என்னைத் தேடிண்டு வந்துட்டியா?”






என்று அலறிக் கொண்டு பெரியவா பாதத்தில் 



விழுந்தாள். 





மூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தாள். 



இதை உண்மையான பக்தனும் பகவானும் 

மட்டுமே அனுபவிக்க முடியும்.


தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் வந்து 

தர்ஸனம் பண்ணுகிறார்கள். 




ஆனால், தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை 

பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால், 

பகவானால் தாங்க முடியாமல், தானே 

அவர்களைப் பார்க்க வந்துவிடுவான். 


அந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம் 

எல்லோருக்கும் கிடைக்குமா? 




தன்னையே பெரியவாளிடம் முழுவதுமாக 

அர்ப்பணித்தவர்களுக்கு மட்டுமே நிச்சயம் 

கிடைக்கும்.
  



[Thanks to Amirtha Vahini 30 07 2013]









ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி 
நாளை மறுநாள் வெளியிடப்படும்.





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

27.08.2013 செவ்வாய்க்கிழமை



47 கருத்துகள்:

  1. பணத்துக்காகப் பறக்காத போது, இறைவன் புகழ்பாட நிறைய நேரம் இருக்கும்.
    Yes Sir, I am practically realising this now a days.
    My God... My God....
    I cannot control my emotions....
    Sir, You made me cry by your writings....
    viji

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வை.கோ

    அருமையான துவக்கம் - வழக்கம் போல். கண் காது இரண்டும் சேகரித்த சேகரிக்கும் சேகரிக்கப் போகிற செய்திகளை ஆசைப்படுவதை நிறுத்த வேண்டும். அருமையான அறிவுரை.

    தியானத்தின் விளக்கம் அருமை.

    திருப்தியும் சௌபாக்கியமும் நிம்மதியும் தன்னாலே உணடாகும் வழி - அருமை.

    ஆச்சரயமான சம்பவம் மனது நெகிழ்கிறது - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளுக்கு ருத்ர முகமும் உண்டா - கேள்விப்பட்டதே இல்லையே - சாந்த சொரூபி அல்லவா அவர்.

    //ஆனால், தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை

    பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால்,

    பகவானால் தாங்க முடியாமல், தானே

    அவர்களைப் பார்க்க வந்துவிடுவான்.


    அந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம்

    எல்லோருக்கும் கிடைக்குமா?




    தன்னையே பெரியவாளிடம் முழுவதுமாக

    அர்ப்பணித்தவர்களுக்கு மட்டுமே நிச்சயம்

    கிடைக்கும். //

    அப்பின் வை.கோ - நன்றூ நன்று வழக்கம் போல் காணக் கிடைக்காத படத்துடன் பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  3. பணத்துக்காகப் பறக்காத போது, இறைவன் புகழ்பாட நிறைய நேரம் இருக்கும். வாழ்க்கையின் நிம்மதியும் திருப்தியும் செளபாக்கியமும் தன்னாலே உண்டாகும்.

    வெளிநாட்டுக்கு பறந்தால்தான் பணம் நிறைய கிடைக்கும் என்று ஆலாய் பறக்காதவர்கள் யார்?என்னைத் தவிர

    இருக்கின்ற காசை தனக்கு போக தர்மம் செய்யாமல்
    வட்டிக்கு விட்டு கட்டி கட்டியாய் தங்கமாக மாற்றாதவர்கள் யார்?

    கல்வி கற்பதே அதற்குதான் இன்று அனைவரும்.
    கம்பன் கூறியதுபோல் ராமபிரானை யார் கற்கிறார்கள்?

    மனிதர்களை துதி பாடினால் ஏதாவது தேறும்.இறைவனை துதி பாடினால் என்ன தேறும்?

    எதுவும் தேறுவதோ இல்லையோ ஜன்மமாவது கடைத்தேறும் என்று யார் ஸ்துதி படுகிறார்கள் ?

    எல்லாவற்றையும் துறந்த பெரியவர்க்கு எதுவும் தேவையில்லை. எதையும் துறக்காத மனிதர்க்கு உபதேசங்கள் எதுவும் காதில் விழுவதில்லை.

    எல்லாவற்றிக்கும் நேரம் காலம் வரவேண்டும்.
    அப்போதுதான் உண்மைகள் புரியும்.

    பதிலளிநீக்கு
  4. உண்மையான பக்தனுக்கு கடவுளின் தரிசனம்!

    பதிலளிநீக்கு
  5. //தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை
    பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால்,
    பகவானால் தாங்க முடியாமல், தானே
    அவர்களைப் பார்க்க வந்துவிடுவான். //

    100% True




    பதிலளிநீக்கு
  6. பணத்துக்காக பறக்காத போது இறைவனைப் பற்றி நினைக்க் நேரம் அதிகம் கிடைக்கும். அட்சர லட்சம்!
    பாட்டியின் பாக்கியமே பாக்கியம்!

    பதிலளிநீக்கு
  7. பணத்தின் மீது பற்று வைக்காமல் பக்தியின் மீது பற்றுவைத்த பாட்டிக்கு பெரியவாளின் அனுக்கிரகம் ஒரு வரப்பிரசாதம்! அருமையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. பணத்துக்காகப் பறக்காத போது, இறைவன் புகழ்பாட நிறைய நேரம் இருக்கும். வாழ்க்கையின் நிம்மதியும் திருப்தியும் செளபாக்கியமும் தன்னாலே உண்டாகும்.//

    அமுதமொழி இந்த காலத்திற்கு இப்போது தேவையான ஒன்று.
    வசதி, வாய்ப்பு, என்று நேரம் காலம் மறந்து ஓடிக் கொண்டு இருப்பவர்கள் நிம்மதியை,, திருப்தியை, செளபாக்கியத்தை இழந்து கொண்டு இருக்கிறார்கள்.

    // தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை

    பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால்,

    பகவானால் தாங்க முடியாமல், தானே

    அவர்களைப் பார்க்க வந்துவிடுவான்.//

    உண்மை. இறைவனின் வீதி உலா காரணமே வயதானவர்கள் , நோயினால் கோவிலுக்கு வரமுடியதவர்கள் வீட்டிலிருந்து பார்க்கவே ஏற்பட்டதாய் சொல்வார்கள்.

    //”ரெண்டு மூணு நாளா பாட்டியை காணும்….. உள்ள போய்ப் பாரு.

    ஒடம்புக்கு கிடம்புக்கு முடியலையோ என்னவோ…..”

    இறைவனின் கரிசனம், உண்மையான பக்திக்கு கிடைத்த பரிசு நேரடி தரிசனம் .

    பாட்டிக்கு தரிசனம் கொடுக்க பெரியவா வந்தது. பாட்டியின் அளவில்லா பக்தி இரண்டும் மெய்சிலிர்க்க வைத்து விட்டது.

    நல்லவைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள், நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  9. //தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை
    பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால்,
    பகவானால் தாங்க முடியாமல், தானே
    அவர்களைப் பார்க்க வந்துவிடுவான். //
    நிச்சயமாய்! பாட்டியை தேடி பெரியவா அவர் வீட்டு முன் நின்றது அற்புதமான நிகழ்வு.
    நன்றி!

    பதிலளிநீக்கு

  10. நேர மேலாண்மை...! அருமையான தலைப்பு.. உங்கள் நேரம் நல்லவைகளைப் பகிர்ந்து கொள்வதில் சிறக்கிறது. வாழ்த்துக்கள் கோபு சார்.

    பதிலளிநீக்கு
  11. எல்லாவற்றையும் கூட்டிப்பார்த்தால் - ஒரு மனித மனதில் இடம்பெறக்கூடிய அத்தனை ஆசைகளையும் தொலைத்து
    முழுகுவதுதான் வைராக்யம்.

    வைராக்யத்திற்கு ஆழமான அர்த்தம் ..!

    பதிலளிநீக்கு
  12. தன்னையே பெரியவாளிடம் முழுவதுமாக
    அர்ப்பணித்தவர்களுக்கு மட்டுமே நிச்சயம்
    கிடைக்கும். அமிர்த வர்ஷிணி...!!!!

    பதிலளிநீக்கு
  13. பணத்துக்காகப் பறக்காத போது, இறைவன் புகழ்பாட நிறைய நேரம் இருக்கும். வாழ்க்கையின் நிம்மதியும் திருப்தியும் செளபாக்கியமும் தன்னாலே உண்டாகும்.

    திருப்தியான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  14. அந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம் எல்லோருக்கும் கிடைக்குமா....?

    பதிலளிநீக்கு
  15. / பணத்துக்காக பறக்காத போது இறைவனைப் பற்றி நினைக்க் நேரம் அதிகம் கிடைக்கும் / அப்படி பறக்கும் போதே அவன் அருளால் அவனை நினைக்க நேரம் ஒதுக்குபவர்கள் தான் பாக்கியவான்கள்.

    முதல் முறை உங்கள் தளத்துக்கு வருகிறேன். மேலும் வாசிக்க ஆசை. Please add an option to get post by email

    - நாற்சந்தி ஓஜஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஜஸ் August 27, 2013 at 6:39 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம்.

      / பணத்துக்காக பறக்காத போது இறைவனைப் பற்றி நினைக்க் நேரம் அதிகம் கிடைக்கும் /

      //அப்படி பறக்கும் போதே அவன் அருளால் அவனை நினைக்க நேரம் ஒதுக்குபவர்கள் தான் பாக்கியவான்கள்.//

      ;))))) அப்படியும் வைத்துக்கொள்ளலாம்.

      //முதல் முறை உங்கள் தளத்துக்கு வருகிறேன்.//

      சந்தோஷம்.

      //மேலும் வாசிக்க ஆசை.//

      வாசியுங்கள். இதுவரை இதே தொடரில் ஒருநாள் விட்டு ஒரு நாள் வீதம், 42 சிறு பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

      பகுதி-1 க்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2013/05/1.html

      மேலும் இதேபோல ஒருநாள் விட்டு ஒருநாள் வீதம் முடிந்தவரை வெளியிடவும் நினைக்கிறேன். குருவருள் + திருவருள் + ப்ராப்தம் இருப்பின் நல்லபடியாக செய்து முடிக்க முடியும். பார்ப்போம்.

      //Please add an option to get post by email//

      அதற்கான தொழிற்நுட்பங்கள் பற்றி அடியேன் ஏதும் அறியேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், அலோசனைகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  16. ஆங்கிலத்தில் surrendering without reservation என்று சொல்கிறார்களே. அது இந்தப் பதிவைப் படித்ததும் பளிச் என்று புரிய வந்தது.
    பாட்டி கொடுத்தவைத்தவர் தான். எத்தனை புண்ணியம் செய்தவர் பாருங்கள்!
    நன்றி பகிர்விற்கு....

    பதிலளிநீக்கு
  17. ஆம் அதுபோன்ற பாக்கியம்
    கோடியில் ஒருவருக்கு வாய்ப்பது கூட அதிசயமே
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  18. அடடா.. அத்தனை சொத்தையும் கடவுளுக்கே கொடுத்துவிட்டு ஓலைக் குடிசையில் இருக்கும்.. பாட்டியை என்னவென்பது?... அதனால்தான் அவர் கொடுத்து வைத்தவர்.

    பதிலளிநீக்கு
  19. பணத்துக்காகப் பறக்காத போது, இறைவன் புகழ்பாட நிறைய நேரம் இருக்கும். வாழ்க்கையில் நிம்மதியும் கிடைக்கும். நன்றி

    பதிலளிநீக்கு
  20. அவனருளால் அவன்தாள் வணங்கி....

    பக்திப் பரவசம் தரும் பகிர்வுகள்.

    ஈசனோடாயினும் ஆசை அறுமின் என எத்தனை விதமாய் சொல்லி வைத்தும் சாமான்யர்களால் 'சும்மா'யிருக்க முடியவில்லையே...

    எது தியானம் என்ற விளக்கம் அருமை.

    பாட்டி வெகு பக்குவமானவர்.

    பதிலளிநீக்கு
  21. கண்ணுலே ஜலம் வந்துடுத்து. பாட்டியின் பக்தி. கணினி வேலை ஸ்ட்ரைக். பின்னூட்டம் போட வேலை செஞ்சது. எப்படி தெரியலே.
    படிக்கப்படிக்கத் தெவிட்டாத விருந்து.

    பதிலளிநீக்கு
  22. ஆவ்வ்வ்வ் அனைத்துப் பின்னூட்டங்களும் போட்டு முடிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்:) பரிசை இண்டைக்கோ தாறீங்களோ கோபு அண்ணன்?:)) சரி சரி முறைக்காதீங்க:)).. பிந்தினாலும் பறவாயில்லை:) நல்லதா பார்த்துத் தாங்கோ:))

    பதிலளிநீக்கு
  23. //தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை
    பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால்,
    பகவானால் தாங்க முடியாமல், தானே
    அவர்களைப் பார்க்க வந்துவிடுவான். //
    மெய்சிலிர்க்க வைத்த பதிவு! நன்றீ ஐயா!

    பதிலளிநீக்கு
  24. அமுத மொழிகள் படித்து இன்புற்றேன்....

    தொடர்ந்து படிக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  25. ஆம்,எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடுவதில்லை,பாக்கியம் இருப்பவர்களுக்கு மட்டுமே சில குடுப்பினைகள் கிடைக்கும்...உண்மையான பக்தர்களுக்கு கடவுளின் தரிசனம் நிச்சயம் கிடைக்கும்!!

    பதிலளிநீக்கு
  26. “தன் சொத்துக்கள் அத்தனையும் காமாக்ஷிக்கு!” என்று தந்துவிட்ட பாட்டியின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தினை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  27. //ஒரு மனித மனதில் இடம்பெறக்கூடிய அத்தனை ஆசைகளையும் தொலைத்து முழுகுவதுதான் வைராக்யம்.//

    ஆசையைத் துறப்பது தானே கடினம்.....

    அமுத மொழிகள் தொடரட்டும்....

    பதிலளிநீக்கு
  28. இந்தப் பதிவோட தலைப்பைப் பார்த்ததுமே நமக்குக் கொஞ்சம் கூட அறிய முடியாத, இயலாத ஒன்றாக இருக்கேனு நினைச்சேன்.

    பாட்டி கொடுத்து வைச்சவர். அதான் பெரியவாளே தேடிண்டு வந்துட்டார். :) புண்ணியாத்மா.

    பதிலளிநீக்கு
  29. பாட்டிக்கு கிடைத்த பாக்கியம் படிக்கும்போதே சிலிர்க்கின்றது.

    பதிலளிநீக்கு
  30. Neengal vivariththa nigazhchiyaip padiththen; itho en kanneerthuligal samarppanam.

    பதிலளிநீக்கு
  31. \\ பணத்துக்காகப் பறக்காத போது, இறைவன் புகழ்பாட நிறைய நேரம் இருக்கும். வாழ்க்கையின் நிம்மதியும் திருப்தியும் செளபாக்கியமும் தன்னாலே உண்டாகும்.\\

    பணத்தை ஒரு பொருட்டாய் நினையாமல் தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாமல் எல்லாவற்றையும் அந்த காமாஷியின் பேரிலேயே எழுதிக்கொடுத்துவிட்ட பாட்டியின் பெருந்தன்மையை என்னவென்று சொல்வது? பெரியவரின் அருட்பார்வை கிடைத்ததில் வியப்பென்ன? நெகிழவைத்தப் பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.

    பதிலளிநீக்கு
  32. , தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை

    பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால்,

    பகவானால் தாங்க முடியாமல், தானே

    அவர்களைப் பார்க்க வந்துவிடுவான்.


    அந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம்

    எல்லோருக்கும் கிடைக்குமா?




    தன்னையே பெரியவாளிடம் முழுவதுமாக

    அர்ப்பணித்தவர்களுக்கு மட்டுமே நிச்சயம்

    கிடைக்கும். //

    பதிலளிநீக்கு
  33. எல்லாவற்றையும் கூட்டிப்பார்த்தால் - ஒரு மனித மனதில் இடம்பெறக்கூடிய அத்தனை ஆசைகளையும் தொலைத்து முழுகுவதுதான் வைராக்யம்.//

    ஆசையே அலை போலே
    நாமெல்லாம் அதன் மேலே

    ஆசைகளை விட்டொழிக்க வயதும், பக்குவமும் வேண்டுமே.

    கொடுத்து வைத்த பாட்டி.


    //”ஆஹா, பிடிப்பு இருக்கட்டும் ….. ன்னு குடுத்தாராம்! ”//

    இப்படி மகா பெரியவாள் முன் உரிமையுடன் பேச என்ன தவம் செய்திருந்தாளோ அந்த பாட்டி.

    சொத்து அத்தனையும் மடத்திற்கு கொடுத்து விட்டு - என்ன ஒரு மனது.

    படிக்கப் படிக்க நெகிழ்கிறது மனது.

    நன்றியுடன்
    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
  34. நேர மேலாண்மை//

    அருமையான ஒரு சொற்றொடர்

    பதிலளிநீக்கு
  35. லீலைகள் கண் கலங்க வைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  36. பக்தனால் தன்னைத்தேடி வரமுடியாத போது அந்த ஆண்டவனே அவர்களைத்தேடிப்போயி தரிசனம் கொடுக்கிறார்களே.

    பதிலளிநீக்கு
  37. சரியான முறைப்படி நடந்துகாதவங்க கிட்டால எப்பூடி கோவபடுறாங்க குருசாமி அவுகளுக்கு கோவப்ளடக்கூட வருமா

    பதிலளிநீக்கு
  38. தன்னையே பெரியவாளிடம் முழுவதுமாக

    அர்ப்பணித்தவர்களுக்கு மட்டுமே நிச்சயம்

    கிடைக்கும்.. ரொம்ப சரியான வார்தைகள்..

    பதிலளிநீக்கு
  39. பணத்துக்காகப் பறக்காத போது, இறைவன் புகழ்பாட நிறைய நேரம் இருக்கும். வாழ்க்கையின் நிம்மதியும் திருப்தியும் செளபாக்கியமும் தன்னாலே உண்டாகும்.// பலருக்கு இது வயதான காலத்தில்தான் அமைகிறது!!

    பதிலளிநீக்கு
  40. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (18.06.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://www.facebook.com/groups/396189224217111/permalink/416986118804088/

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு