2
ஸ்ரீராமஜயம்
கல்யாணத்துக்குப் பொருத்தம் பார்க்கும் போது சகோத்ரம் இல்லாமல் மனசுக்குப் பிடித்த ஜாதி சம்பிரதாயத்துக்கு ஒத்திருந்தால் போதும்.
மூலம் ஆயில்யம்ன்னு நக்ஷத்திரங்களைப் பார்த்துண்டு அதனாலே பெண்களோட திருமணத்துக்குத் தடை ஏற்படக்கூடாது.
தோஷம்னு இருந்தா எல்லாத்துக்கும் பரிகாரம் இருக்கு. அந்தப் பரிகாரத்தை செய்துவிட்டு திருமணத்தை நடத்திக்கலாம்.
பிள்ளையைப்பெற்ற பெண்கள் முன்வந்து வரதட்சிணை வாங்க மாட்டேன் என்று உறுதி எடுத்தால்தான் வரதட்சிணைக் கொடுமைக்கு முடிவு கட்ட வழி பிறக்கும்.
ஒழியணும் என்பதை விட்டு, வளரணும் என்று ஆரம்பித்தோமானால், அத்தனை பேதமும், த்வேஷமும். சண்டையும் போய்விடும்.
oooooOooooo
oooooOooooo
ஒரு நாள் போதுமா !
இன்றொரு நாள் போதுமா !!
[திருவிளையாடல் திரைப்படத்தில் வரும்
ஹேமநாத பாகவதர் போன்ற ஒருவர் பற்றிய சம்பவம்]
ஆடல் வள்ளலின் திருவிளையாடல் 64 என்பார்கள். நம் ஆச்சார்யாளின் திருவிளையாடல்கள் அனந்தம்.
ஸ்ரீ பரமாச்சார்யாள் ஸதாராவில் முகாமிட்டிருந்தார்.
ஸ்ரீ மஹாபெரியவா சந்நிதானம் என்றாலே வித்வத் சபைகளுக்குப் பஞ்சம் இருக்காது.
அனைத்துக்கலைகளும் அவருடைய போதனையால் வளர்ந்தது என்றால் மிகையாகாது.
ஸதாராவில் ஸ்ரீகிருஷ்ண சாஸ்திரி என்பவர் பண்டித தர்க்க வித்வானாக பிரகாசித்து வந்தார்.
அவருடைய பிள்ளை, பேரன் என பரம்பரையாக தர்க்க வாதத்தில் விற்பன்னராக இருந்து வந்தனர்.
அவருடைய க்ருஹத்திலேயே சாஸ்திர பாடசாலை வைத்து நடத்தி பலவித மாணாக்கர்களை தயார் படுத்தி வந்தார்.
ஸ்ரீ பரமாச்சார்யாள் ஸதாரா வந்ததும் தினமும் நடைபெறும் வித்வத் சபைகளில் பங்கெடுத்துக்கொண்டு, வேறு எவரும் வாதத்தில் வெற்றி பெற முடியாதபடி நடுவில் பல கேள்விகளைக் கேட்டு, யாரும் பதில் சொல்ல முடியாது திணறுவதைக்கண்டு, தக்ஷிண தேசத்தில் எனக்கு பதில் சொல்ல பண்டிதர் எவருமில்லை என்ற இறுமாப்புடன் இருந்து வந்தார்.
சர்வேஸ்வரனான ஆச்சார்யாளுக்கு அவர் எண்ணம் புரியாதா என்ன?
அதற்கான வேலைகளைத் தொடங்கினார் ஸ்ரீ பெரியவா
கும்பகோணத்திலுள்ள அத்வைத சபாவின் தலைவராக இருந்த விஷ்ணுபுரம் ஸ்ரீ ராமமூர்த்தி ஐயர் அவர்களிடம் தகவல் அனுப்பி பண்டிதராஜ் ஸ்ரீ சுப்ரமணிய சாஸ்திரிகளை உடனே ஸதாராவுக்கு அனுப்பி வைக்குமாறு சொன்னார்.
பண்டிதராஜ் ஸ்ரீ சுப்ரமணிய சாஸ்திரிகள் என்பவர் தலை சிறந்த வித்வான்.
கொச்சி ராஜா, தர்க்க சாஸ்திரம் படித்தவராயும், வாதத்தில் விருப்பமுடையவராகவும் இருந்ததனால், அடிக்கடி பண்டிதராஜ் அவர்களை வாதத்திற்கு அழைத்து, அவரின் வாதத் திறமைகளுக்கு சந்தோஷித்து, தனக்கு சமமான ஆசனத்தில் அவரை இருத்தி போஜனம் செய்வார் என்பது ஸ்ரீ பண்டிதராஜ் அவர்களின் பெருமை அல்லவா!
ஆனால் அவருக்கு தேக ஆரோக்யம் பிரயாணம் செய்யும்படியாக அமையாமல் போன சமயத்தில் ஸ்ரீ பெரியவாளின் ஆக்ஞை வந்தது.
ஸ்ரீ பண்டிதராஜ் அவர்களின் அசெளகர்யம் என்னவென்றால், மலம் சிறுநீர் போன்ற விசர்ஜனங்கள் ட்யூப்பின் வழியாக வெளியேற்றும் படியாக இருந்து வந்தது. கும்பகோணத்தில் இருக்கும் போதே அவரின் உதவிக்கு இன்னொருவரை நாட வேண்டி இருந்தது.
இந்த மாதிரியான குருசேவை செய்ய வேண்டியிருப்பதை ஸ்ரீ பெரியவாளுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.
ஆனால் ஆச்சார்யாள் அவருக்குப் பெருமை தேடித்தர சித்தம் கொண்டதால், இச்சிறுமையான விஷயங்களை மனதில் வாங்கிக்கொள்ளாது, “அவர் இங்கே கட்டாயம் வரணும் ...... அவாளுக்கு வேண்டிய செளகர்யங்களைப் பண்ணிக்கொடுத்து ரயிலிலே முதல் வகுப்புப்பொட்டியிலே [FIRST CLASS] ஜாக்கிரதையா அழச்சுண்டு வாங்கோ” என உத்தரவே போட்டு விட்டார்.
அதன்படி பண்டிதராஜ் ஸ்ரீ சுப்ரமணிய சாஸ்திரிகள் ஸதாரா வந்து சேர்ந்தார்.
அன்றும் நம் ஹேமநாத பாகவதரான ஸதாரா ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகளும் வந்தார். ஸ்ரீ பெரியவாளோ அவரை அழைத்து, “தக்ஷிண க்ஷேத்ரத்திலிருந்து ஒரு சிறிய தர்க்க வித்வான் வந்துள்ளார்; இன்று ஓய்வு எடுத்துக்கொண்டு நாளை உங்களுடன் விவாதிப்பார்” என்றார்.
நம் ஹேமநாத பாகவதரின் பிரதிநிதியான ஸதாரா சாஸ்திரிகளோ “ஒரு நாள் போதுமா!” என்ற பாவனையுடன் சென்று விட்டார்.
மறுநாள் ஸ்ரீ பெரியவா சந்ந்தியில் சபை தொடங்கியது. தர்க்க வாக்யார்த்தம் ஆரம்பிக்கப்பட்டது.
பண்டிதராஜ் ஸ்ரீ சுப்ரமணிய சாஸ்திரிகள் ஸ்ரீ மஹாபெரியவாளுக்கு குரு வந்தனம் செய்து பின் வாக்யார்த்தம் சொல்ல ஆரம்பித்தார்.
வழக்கம்போல ஸதாரா சாஸ்திரிகள் கேள்விக்கணைகளைத் தொடுத்தார்.
அதற்கு பண்டிதராஜ் அவர்கள் “நடுவில் எந்தக்கேள்விகளையும் தயவுசெய்து கேட்க வேண்டாம்; நான் முடித்தபின் நீங்கள் எத்தனைக் கேள்விகள் கேட்டாலும் பதில் சொல்கிறேன்” எனக் கேட்டுக்கொண்டார்.
அதேபோல இடைவிடாது மூன்று மணி நேரங்கள் வாக்யார்த்தம் நடைபெற்றது. அனைத்தையும் சொல்லி முடித்தார் ஸ்ரீ பண்டிதராஜ். பின் பெரியவாளை சேவித்து அமர்ந்தார்.
ஸனாதன சங்கரரோ, ஸதாரா பண்டிதரை நோக்கி, ”இனி உங்கள் கேள்விகளைக் கேட்கத்தொடங்கலாம்” என குறுநகையுடன் தெரிவித்ததும். அவர் உடனே ஸாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, ”என் கேள்விகளுக்கு மேல் அவர் அனைத்தும் பதிலாகச் சொல்லிவிட்டார். அவரின் பதில்களுக்கு என்னிடம் கேள்விகள் இல்லை” என்றார்.
மேலும் “ஸ்ரீ பெரியவா தக்ஷிண தேசத்து சிறிய வித்வான் என இவரை அறிமுகப்படுத்தினார்கள்; சிறிய வித்வானே என்னைக் கேள்வி கேட்க முடியாமல் செய்திருக்கிறார் எனில் தக்ஷிண தேசத்துப் பெரிய வித்வான்கள் முன் நான் வாய் திறக்கக்கூட அருகதை இல்லை” என மனமுவந்து பெரிய மனதோடு ஒப்புக்கொண்டார்.
அதற்கு பண்டிதராஜ் அவர்கள், “இது நம் ஸ்ரீ ஆச்சார்யாளின் பிரபாவமேயன்றி என் சாமர்த்தியம் ஏதும் இல்லை. ஸ்ரீ ஆச்சார்யாளின் அடிமணலும் வாதிக்கும். குருநாதரின் க்ருபையைத்தவிர வேறு எதுவுமே இல்லை. எவ்வளவு படித்தாலும், வித்தைகள் கற்றுக்கொண்டாலும், அந்தப்படிப்போ வித்தையோ சமயத்தில் கை கொடுக்க வேண்டுமெனில் “சத்குரு க்ருபை” இருந்தால் மட்டுமே முடியுமேயன்றி, வேறு எதைக்கொண்டும் நிரூபிக்க முடியாது” என்றார் மிகுந்த அவை அடக்கத்தோடு.
ஸ்ரீ ஆச்சார்யாள் ஸதாரா சாஸ்திரிகளையும் கெளரவப்படுத்தி, அடுத்த வருஷம் கும்பகோணம் ஸ்ரீமடம் அத்வைத சபாவுக்கு தாங்களும் வர வேண்டுமென நியமித்தார்.
அதன்படி ஸதார பண்டிட் ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரி அவர்களும் வந்து தெற்கத்திய வித்வான்களோடு கலந்துகொண்டு, அந்த சபையை அலங்கரித்தார்.
அதன்படி ஸதார பண்டிட் ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரி அவர்களும் வந்து தெற்கத்திய வித்வான்களோடு கலந்துகொண்டு, அந்த சபையை அலங்கரித்தார்.
ஸ்ரீ ஸதாரா சாஸ்திரிகள், தன் கருத்தை மாற்றிக்கொண்டு, தக்ஷிண தேச வித்வான்களுக்கு மரியாதை சேர்க்கும் விதமாய் ”செப்புப்பட்டயம்” எழுதித்தந்தார் என்பது ’செவிவழி’ச் செய்தி.
-oOo-
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்
’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.
இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.
இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
// வளரணும் என்று ஆரம்பித்தோமானால்... // அருமையான வரிகள்...
பதிலளிநீக்கு/// “சத்குரு க்ருபை” இருந்தால் மட்டுமே முடியுமேயன்றி // சிறப்பு...
நன்றி... வாழ்த்துக்கள் ஐயா...
Thanks for sharing
பதிலளிநீக்குExcellent read,thx for sharing Sir
பதிலளிநீக்குஎவ்வளவுதான் கற்றாலும் பணிவும் வினயமும் வேண்டும்.வினயம் இல்லாத வித்தை வீணாய்த் த்தான் போகும். குருவும் தெய்வமும் ஒன்று. குரு கடாஷம் இருந்தால்தான் தெய்வ கடாஷம் கிடைக்கும்.
பதிலளிநீக்குஅதைபெற்றவ்ர்களுக்கு இந்த உலகில் அடைய வேண்டிய பொருள் வேறொன்றுமில்லை.
வரதக்ஷினைக்கொடுமைக்கு பெண்கள் மட்டுமல்ல காரணம். மனிதர்களின் சுயநலமும்,வீண் ஆடம்பரமும் காரணம்.
Nice and useful information..
பதிலளிநீக்குஒழியணும் என்பதை விட்டு, வளரணும் என்று ஆரம்பித்தோமானால், அத்தனை பேதமும், த்வேஷமும். சண்டையும் போய்விடும்.//
பதிலளிநீக்குஅற்புதமான உண்மை.
“இது நம் ஸ்ரீ ஆச்சார்யாளின் பிரபாவமேயன்றி என் சாமர்த்தியம் ஏதும் இல்லை. ஸ்ரீ ஆச்சார்யாளின் அடிமணலும் வாதிக்கும். குருநாதரின் க்ருபையைத்தவிர வேறு எதுவுமே இல்லை. எவ்வளவு படித்தாலும், வித்தைகள் கற்றுக்கொண்டாலும், அந்தப்படிப்போ வித்தையோ சமயத்தில் கை கொடுக்க வேண்டுமெனில் “சத்குரு க்ருபை” இருந்தால் மட்டுமே முடியுமேயன்றி, வேறு எதைக்கொண்டும் நிரூபிக்க முடியாது”//
குரு அருள் இருந்தால் வேறு என்ன வேண்டும்!
அருமையான குரு பக்திக்கு எடுத்துக்காட்டு.
நல்ல பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி சார்.
பிள்ளையைப்பெற்ற பெண்கள் முன்வந்து வரதட்சிணை வாங்க மாட்டேன் என்று உறுதி எடுத்தால்தான் வரதட்சிணைக் கொடுமைக்கு முடிவு கட்ட வழி பிறக்கும்.
பதிலளிநீக்குவரதட்சிணைக் கொடுமை முடிவுக்கு வரட்டும்..!
எவ்வளவு படித்தாலும், வித்தைகள் கற்றுக்கொண்டாலும், அந்தப்படிப்போ வித்தையோ சமயத்தில் கை கொடுக்க வேண்டுமெனில் “சத்குரு க்ருபை” இருந்தால் மட்டுமே முடியுமேயன்றி, வேறு எதைக்கொண்டும் நிரூபிக்க முடியாது”
பதிலளிநீக்குஅவை அடக்கத்துடன் விநயமான வரிகள்
அமிர்தமாக வர்ஷித்தது..பாராட்டுக்கள்..!
ஸ்ரீ மஹாபெரியவா சந்நிதானம் என்றாலே வித்வத் சபைகளுக்குப் பஞ்சம் இருக்காது.
பதிலளிநீக்குஅனைத்துக்கலைகளும் அவருடைய போதனையால் வளர்ந்தது என்றால் மிகையாகாது.
ஸதாராவில் வித்வத் சதஸ் பற்றி அருமையான விவரங்கள்..வாழ்த்துகள்..!
ஆடல் வள்ளலின் திருவிளையாடல் 64 என்பார்கள். நம் ஆச்சார்யாளின் திருவிளையாடல்கள் அனந்தம்.
பதிலளிநீக்குஆனந்தமான பகிர்வுகள்..!
தங்களுடைய மகா பெரியவரைப் பற்றிய நிகழ்வுகள் ரொம்பவும் அருமை. படிக்கப் படிக்க மனதை என்னவோ செய்கிறது. எனக்கு கல்யாணமாகி சில வருடங்களாகியும் குழந்தைப் பாக்கியம் இல்லையே என்று மனவருத்தத்துடன் நானும் என் மனைவியும் காஞ்சிபுரத்தில் அவரைத் தரிசனம் செய்தோம். ஒன்றும் சொல்லாமலேயே மவுனமாகவே எங்களின் குறையைத் தீர்த்துவைத்த மகான் அவர். தொடரட்டும் உங்களின் தெய்வீகப் பணி
பதிலளிநீக்குஎத்தனை படித்திருந்தாலும், அகம்பாவம் கூடாது..... என்பதை அழகாய் சொல்லியிருக்கிறது பதிவு.....
பதிலளிநீக்குSuperb!
பதிலளிநீக்குVaradaksinai vaangalaagathunnu Periyavaa evvaluvu valiyurithiirukkar!!
மஹா பெரியவாளின் 'திருவிளையாடல்' அற்புதம்!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குகுரு பார்த்தாலே கோடி நன்மை. குருவின் கடாக்க்ஷம் என்றால் சும்மாவா. ஜகத்குருவின் அருள் ஆயிற்றே. குருவை தேட அவசியமில்லை. குருவை எனக்கு அருளுங்கள் என்று நாம் மனம் உருகி பரம்பொருள் கேட்டால் நமக்கு கிடைக்கச் செய்வர்.
பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன்
மகா பெரியவாவின் திருவிளைனயாடல்களை வரிசைக் கிரமமாக எழுதி வருவது. சிநப்பு.
பதிலளிநீக்குபணிவு பொறுமை எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக்காட்டியது. பதிவு.
மிக நன்றி.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நான் என்னும் அகந்தை அழிக்க மஹா பெரியவர் செய்த லீலை தான் என்னே!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குபடித்துப் பின்னூட்டம் எழுதிய நினைவு. பதிவாகவில்லையே.
அனைவரும் அவசியம் படித்து
பதிலளிநீக்குமனதில் பதிந்துவைத்துக் கொள்ள வேண்டிய
அற்புதமான பதிவு
.பதிந்துவைத்துக் கொண்டேன்
விரிவான பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
அகம்பாவத்தை அடக்கி அவராகவே உணரச்செய்தது,படிப்பிருந்தாலும்,வித்வத்தன்மை இருந்தாலும்,அடக்கத்தை அவராகவே உணரும்படி செய்தது எவ்வளவு நாகரீகச் செய்கை. மனதில் பதியும்படிஉணரும் செய்கை. அன்புடன்
பதிலளிநீக்குவரதட்சணை ஒழிய பெரியவர் அருளிய உபதேசத்தை அனைவரும் மனத்தில் கொள்ளவேண்டும். அடக்கத்தின் முன் ஆணவம் சிறுமைப்படும் என்பதை உணர்த்திய நிகழ்வு. பகிர்வுக்கு நன்றி சார்.
பதிலளிநீக்குஆடல் வள்ளலின் திருவிளையாடல் 64 என்பார்கள். நம் ஆச்சார்யாளின் திருவிளையாடல்கள் அனந்தம்.//
பதிலளிநீக்குதங்கள் பதிவுகளில் கண்கூடு !
ஆடல் வள்ளலின் திருவிளையாடல் 64 என்பார்கள். நம் ஆச்சார்யாளின் திருவிளையாடல்கள் அனந்தம்
பதிலளிநீக்குAha aha like to read further. Continue Sir, and accept my Thanks also.
viji
அளவுக்கு மீறிய படிப்பினால் ஏற்பட்ட அகம்பாவம், பாலில் ஜலம் தெளித்தாற்போல அடங்கி விட்டது. நல்ல புத்தியும் ஏற்பட்டது விசேஶமல்லவா?
பதிலளிநீக்குபெண்கள் படித்து முன்னிலையில் இருக்கிறார்கள். காலப்போக்கில் வரதக்ஷிணை குறைய நிரைய வாய்ப்புக்கள்
அதிகரித்து வருகிரது. நல்லதே நடக்க வேண்டும். அன்புடன்
அருமையான சம்பவம். ஆணவம் இருக்கக் கூடாது என்பதை சிறப்பாக சொல்லியிருக்கிறார்.
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ
பதிலளிநீக்குதிருமணத் தடைகள் நீங்க - அருமையான பதிவு -
ஜாதி சம்பிரதாயம் பார்த்தால் போதும் - நட்சத்திரப் பொருத்தம் பார்த்தால் போதும் - மூலம் போன்ற நட்சத்திரங்களை வைத்துக் கொண்டு திருமணத்திற்கு தடை விதிக்காமல் இருக்கலாம் - தோஷத்துக்கெல்லாம் பரிகாரம் செய்யலாம் - திருமணத்தை நடத்தலாம் - வரதட்சனையை நிறுத்த்லாம் -
// ஒழியணும் என்பதை விட்டு, வளரணும் என்று ஆரம்பித்தோமானால், அத்தனை பேதமும், த்வேஷமும். சண்டையும் போய்விடும்.// - நல்லதொரு சிந்த்னை
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அன்பின் வை.கோ
பதிலளிநீக்குஒரு நாள் போதுமா - திருவிளையாடல் அருமை - பரமாச்சாரியார் நடப்பதைப் புரிந்து கொண்டு உடனடியாக சரியான போட்டிக்கு ஒருவரை அழைத்து வந்து - போட்டியில் கலந்து கொள்ள வைத்து - வெற்றியும் பெறச் செய்தது புல்லரிக்க வைக்கிறாது - பரமாச்சாரியாரின் செயல்கள் அனைத்துமே அருமை. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
படங்கள் எதுவுமே திறக்கலை.:( நல்லதொரு பகிர்வு. இந்தச் செய்தி கேட்டதில்லை. :)))) திருமணங்களுக்கு இப்போ தடைனு எதுவும் சொல்ல முடியாது. ஏனெனில் பெண்கள் கிடைப்பது தான் குதிரைக்கொம்பாக இருக்கிறது. :)))) ஆணுக்கு ஒரு காலம் போய் இப்போப் பெண்ணுக்கு ஒரு காலம் வந்தாச்சு. பெண்ணைத் தேடிப் போய்ப் பிடிக்க வேண்டி இருக்கு!
பதிலளிநீக்குதிருவிளையாடல் ஆனந்தமான பகிர்வு.
பதிலளிநீக்குஎவ்வளவு படித்தாலும், வித்தைகள் கற்றுக்கொண்டாலும், அந்தப்படிப்போ வித்தையோ சமயத்தில் கை கொடுக்க வேண்டுமெனில் “சத்குரு க்ருபை” இருந்தால் மட்டுமே முடியுமேயன்றி, வேறு எதைக்கொண்டும் நிரூபிக்க முடியாது” //
பதிலளிநீக்குநிச்சயம்! அருமையான பதிவு! நன்றி ஐயா!
அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! நீங்கள் ஆரம்பத்திலேயே சொன்னது போல,
பதிலளிநீக்கு// திருவிளையாடல் திரைப்படத்தில் வரும்
ஹேமநாத பாகவதர் போன்ற ஒருவர் பற்றிய சம்பவம் //
என்ற் வரிகளின் தொடர்ச்சியாக திருவிளையாடல் திரைப்படம் தான் ஞாபகம் வந்தது. ஒரு நாள் போதுமா ! இன்றொரு நாள் போதுமா !! இதன் அடுத்தநாள் பதிவிற்கு போகிறேன்! நன்றி!
Nice and very useful information sir, thank you very much....
பதிலளிநீக்குYou have a very nice space here. gr8
பதிலளிநீக்கு//56] திருமணத்தடைகள் நீங்க ../// இதுக்கு நான் உடனே ஓடிவரவில்லை:) ஏன் தெரியுமோ?:) மீக்குத்தான் திருமணமாகிட்டே:)) பிறகெதுக்கு?:)).. ஹா..ஹா..ஹா.. ஹையோ முருகா.. எப்பூடியெல்லாம் கிட்னியை ஊஸ்பண்ணி:) பின்னூட்டம் போட வேண்டிக்கிடக்கு:))...
பதிலளிநீக்குஎப்ப கோபு அண்ணன் முடியும் இத்தொடர்?:))... ஹையோ எல்லாரும் முறைக்கினமே.. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்:))
///ஒழியணும் என்பதை விட்டு, வளரணும் என்று ஆரம்பித்தோமானால், அத்தனை பேதமும், த்வேஷமும். சண்டையும் போய்விடும்.///
பதிலளிநீக்குஹா..ஹா..ஹா.. இதைப் படிச்சு.. சனமெல்லாம் மாத்தியோசிக்கப் போகினம்:)) அதாவது “வளரணும்” என்பதை.. சீதனத்தை வளர்க்கோணுமாக்குமென:)).. ஹையோ மீ இதைச் சொல்லல்ல:) என் மைண்ட் வொயிஸ் சொல்லிச்சுது:)).
///ஒழியணும் என்பதை விட்டு, வளரணும் என்று ஆரம்பித்தோமானால், அத்தனை பேதமும், த்வேஷமும். சண்டையும் போய்விடும்.///
பதிலளிநீக்குஹா..ஹா..ஹா.. இதைப் படிச்சு.. சனமெல்லாம் மாத்தியோசிக்கப் போகினம்:)) அதாவது “வளரணும்” என்பதை.. சீதனத்தை வளர்க்கோணுமாக்குமென:)).. ஹையோ மீ இதைச் சொல்லல்ல:) என் மைண்ட் வொயிஸ் சொல்லிச்சுது:)).
மெத்த படித்தாலும் ஆணவம் இருக்ககூடாதுன்னு அழகா சொல்லியிருக்கார்..நன்றி ஐயா!!
பதிலளிநீக்குவரதட்சணை அனைத்து மக்களிடமும் ஜாதி மதபேதமில்லாமல் உள்ள பிரச்சினை சட்டங்கள் இருந்தாலும்
பதிலளிநீக்குயாரும் கட்டுபடுவதில்லை மஹாபெரியவாளின் அறிவுறைகளை பின்பற்றினால் அனைவரும் உய்யலாம்
தர்க்க சாஸ்திரம் கரையில்லாதது.
பதிலளிநீக்குதிரு விளையாடல் நல்லா இருக்கு
பதிலளிநீக்கு// பிள்ளையைப்பெற்ற பெண்கள் முன்வந்து வரதட்சிணை வாங்க மாட்டேன் என்று உறுதி எடுத்தால்தான் வரதட்சிணைக் கொடுமைக்கு முடிவு கட்ட வழி பிறக்கும்.//
மகா பெரியவரின் வாக்குப்படி என் மகனுக்கு வரதட்சணை வாங்கவில்லை. பாத்திரம், பண்டங்கள் எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டோம். எவ்வளவு நகை போடுகிறீர்கள் என்று கேட்கவில்லை. 5 வருடங்கள் முடிந்து விட்டன. இன்னும் மருமகளுக்கு என்ன நகை போட்டார்கள் என்றுதெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. என்னால் முடிந்ததை நான் செய்து போடுகிறேன். அவ்வளவு தான்.
எல்லாம் தெரிந்தவன் எவரும் இல்லை.
ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகளின் கர்வ பங்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் படிப்பினை.
Jayanthi Jaya August 20, 2015 at 2:13 PM
நீக்குவாங்கோ ஜெயா, வணக்கம்.
**பிள்ளையைப்பெற்ற பெண்கள் முன்வந்து வரதட்சிணை வாங்க மாட்டேன் என்று உறுதி எடுத்தால்தான் வரதட்சிணைக் கொடுமைக்கு முடிவு கட்ட வழி பிறக்கும்.**
//மகா பெரியவரின் வாக்குப்படி என் மகனுக்கு வரதட்சணை வாங்கவில்லை. பாத்திரம், பண்டங்கள் எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டோம். எவ்வளவு நகை போடுகிறீர்கள் என்று கேட்கவில்லை. 5 வருடங்கள் முடிந்து விட்டன. இன்னும் மருமகளுக்கு என்ன நகை போட்டார்கள் என்று தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. என்னால் முடிந்ததை நான் செய்து போடுகிறேன். அவ்வளவு தான்.//
வெரிகுட் ஜெயா. இது விஷயத்தில் நீங்களும் நானும் ஒரே கட்சிதான் என்பதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே. என் மூன்று பிள்ளைகளுக்குமே தாங்கள் சொல்லியுள்ளது போலவேதான். மூன்று மருமகள்களையும் எங்களின் சொந்தப் பெண்களாகவேதான் இன்றுவரை பாவித்து வருகிறோம். :)))
யாருக்கும் ஒரு குறையும் வைக்கவில்லை. மூவருமே House Wife தான். மூவருக்கும் எங்களிடம் அன்பும் முழுச் சுதந்திரமும் உண்டு. இன்று இதை நான் டைப் செய்யும்போது, அகஸ்மாத்தாக எல்லோரும் இங்கு நம் ஆத்தில் கூடியுள்ளார்கள். :)))))
பதிவு கமண்டு அல்லாமே நல்லாருக்குது
பதிலளிநீக்குஎங்க ஆத்திலும் வரதட்சிணை சீர் செனத்தினு எதுவுமே வாங்காமல்தான் திருமணம் நடந்தது. அதுமட்டுமால்ல மண்டப செலவு சாப்பாட்டுச்செலவு வைதீகாள் செலவு எல்லாவற்றையுமே. நாங்களே மனமுவந்து செய்தோம் நாம்தான் செய்தோம் என்கிற ஆணவம் வந்துடக்கூடாதில்லயா. அதான் வெளிப்படையாக சொல்லிக்கொள்வது கூட இல்லை. இந்த பதிவு படித்ததும் சொல்லணும்னு தோணித்து.
பதிலளிநீக்குசிவபழமாக பெரியவரின் படம் அருமை...ஸோ நேச்சுரல்...
பதிலளிநீக்குஇந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (30.06.2018) பகிரப்பட்டுள்ளது.
பதிலளிநீக்குஅதற்கான இணைப்பு:-
https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=428803647622335
இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு