என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 19 அக்டோபர், 2010

கத்தி (ப் ) பேசினால் [TRIAL] சோதனை வெளியீடு

கத்தி (ப் ) பேசினால்:
=========================

காய்கறி பழங்களை நறுக்கும் பொழுது
என் வாய் பட்டு நான் ருசித்த எச்சிலைத்
தின்பவர்களே இந்த நாகரீக மனிதர்கள் !

கவனக்குறைவாக இருக்கும் பொழுது
இவர்கள் ரத்தத்தையும் நான் ருசிப்பதுண்டு !!

ஆக்கபூர்வமாகவும் செயல் படுவேன் !
அதே சமயம் அழிக்கவும் பயன் படுவேன் !!

என்னைக் கையாள்பவர் செயல்படியே தான்
எப்போதும் என் இயக்கமும் !

சும்மா இருக்கும் என்னை சாணை பிடித்து
கொம்பு சீவி விடுகிறார்கள் !!

பல நேரம் வாய் ஓயாமல்
கத்திக்கொண்டே இருக்கும் இவர்கள்,
மௌனமாக இருக்கும் எனக்கு
வைத்துள்ள பெயரோ "கத்தி" !!

32 கருத்துகள்:

  1. புத்தியைத் தீட்டி போட்ட‌ ப‌திவு.
    க‌த்திப் பேசுவோம், க‌வ‌னிக்க‌வில்லையெனில்,
    க‌த்தி பேசும். ப‌ஞ்ச் ட‌ய‌லாக்.

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள திரு வாசன் அவர்களுக்கு,

    என்னுடைய முதல் பதிவுக்கு (Just for Trial only) தங்களின் முதல் வருகைக்கு நன்றி. சென்ற வாரம் சுமார் ஒன்றரைக்கிலோ முட்டைக்கோஸை கத்தியால் நறுக்கும் போது திடீரென உதித்த வரிகள் இவை.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் வை.கோபால கிருஷ்ணன்

    கத்தி பேசினால் ...... நல்லதொரு இடுகை - இறுதியில் பெயர்க்காரணம் சூப்பர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  4. cheena (சீனா) said...
    அன்பின் வை.கோபால கிருஷ்ணன்

    //கத்தி பேசினால் ...... நல்லதொரு இடுகை - இறுதியில் பெயர்க்காரணம் சூப்பர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

    மிக்க நன்றி, ஐயா. தங்களின் இந்தப்பின்னூட்டத்தை நான் இன்று 21.05.2011 அதிகாலை தான் பார்த்தேன்.
    அன்புடன் தங்கள் vgk

    பதிலளிநீக்கு
  5. கத்தி, கத்திச் சொன்ன கவிதை நன்றாக இருக்கிறது அண்ணா. ;)

    பதிலளிநீக்கு
  6. இமா said...
    //கத்தி, கத்திச் சொன்ன கவிதை நன்றாக இருக்கிறது அண்ணா. ;)//

    [இமா டீச்சர் கத்திக்கத்திச் சொல்லிக்கொடுக்கும் எதுவும் நன்றாகத் தானே இருக்கும், இமா.]

    தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, இமா.

    மகிழ்ச்சி. மகிழ்ச்சி! ;))))
    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் அண்ணா.நலம்தானே. என் முதல் வருகை.மன்னிக்கவும் தாமதத்திற்கு.
    "கத்தி (பற்றி) கவி பாடியது அருமை.

    பதிலளிநீக்கு
  8. அன்புச் சகோதரி Ms.“ammulu" அவர்களே,

    வாருங்கள். வணக்கம்.

    தங்களின் பெயரான ”அம்முலு” எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அது ஏதோ தாங்கள் என் சொந்தத் தங்கை போல ஓர் அந்நோன்யத்தை ஏற்படுத்துகிறது.

    தாமதமானால் என்ன, தங்களின் முதல் வருகையும், அதுவும் தாங்கள் என்னுடைய, முதல் சோதனைப்பதிவிலிருந்து படிக்க ஆரம்பித்துள்ளதும், மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அழகாக அன்புடன் அண்ணா என அழைத்திருப்பதும் சந்தோஷமாக உள்ளது.

    நான் நலமே. பாராட்டுக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    அண்ணா VGK

    பதிலளிநீக்கு
  9. ஒரு வார்த்தைக்கு ரெண்டு பொருள் கொண்ட மிக அருமையான கவிதை.....

    கத்திப் பேசினால் என்னென்ன ஆகும்

    காய்கறி வெட்டும் கத்தியே தன்னைப்பற்றி பேசினால் என்னென்ன ஆகும்...

    மிக அருமையான சிந்தனை அண்ணா...

    கத்தி தான் முதலில் ருசித்த எச்சிலை தான் நாகரீக மக்கள் சுவைக்கின்றனர்... சில சமயம் அவர்களின் ரத்தத்தை கத்தியும் ருசிப்பதையும்...

    கத்தியை உசுப்பேற்றிவிடுவது போல சாணைப்பிடிப்பதும்...

    மிக அருமையான க்ரியேட்டிவிட்டி வரிகள் அண்ணா...

    கத்தி (சத்தமாகப்) பேசினால் தொண்டைக்கட்டிப்போகும், வயிறு புண்ணாகிப்போகும்....

    கத்தியே பேசினால் இப்படி ஒரு அருமையான கவிதை தான் மலரும்....

    அசத்தல் அண்ணா கவிதை வரிகள்....

    அன்பு வாழ்த்துகள் பகிர்வுக்கு...

    பதிலளிநீக்கு
  10. அன்பின் மஞ்சு, வாங்கோ வணக்கம்.

    உங்கள் அண்ணாவுக்கு கவிதை எழுதுவதில் அவ்வளவாக நாட்டம் கிடையாது. இருப்பினும் இதுவரை ஒரு நூறு கவிதைகள் எழுதியுள்ளேன். அவற்றில் ஐந்தோ ஆறோ மட்டுமே, என் பதிவுகளில் வெளியிட்டுள்ளேன். மீதெயெல்லாம் எங்கெங்கோ காணாமல் போய் விட்டன. சேகரித்து பத்திரமாக வைக்கவில்லை.

    வெளியில் பத்திரிகைக்கு போட்டிக்காக எழுதிய அனுப்பியவைகளில் ஒருசில வெளியிடப்பட்டுள்ளன.

    திருக்குறள் போன்ற ஓர் இரண்டே வரிக்கவிதை [அம்மவைப்பற்றி] எழுதி போட்டிக்கு அனுப்பினேன். மிகப்பெரிய மிக்ஸி [அன்றைய விலை ரூ 2500] பரிசாகத் தந்தார்கள்.

    அதுபோல கொடுக்கப்பட்ட தலைப்பில் On the Spot நான் எழுதிய ஒருசில கவிதைகள் மேடை ஏற்றப்பட்டு, அப்துல் காதர் போன்ற பிரபல கவிஞர்களால் பாராட்டப்பட்டுள்ளன. இது சும்மா நான் ஒருநாள் 2 கிலோ முட்டைக்கோஸை பொடிப்பொடியாக டைமண்ட் கல்கண்டுகள் போல கத்தியால் நறுக்கும் போது, மனதில் தோன்றியதால் ஓர் டயரியில் அப்போதே எழுதி வைத்தது. உடனே இந்த சோதனைப் பதிவில் [VERY FIRST TRIAL POST] வெளியிட்டேன்.

    //ஒரு வார்த்தைக்கு ரெண்டு பொருள் கொண்ட மிக அருமையான கவிதை.....

    கத்திப் பேசினால் என்னென்ன ஆகும்

    காய்கறி வெட்டும் கத்தியே தன்னைப்பற்றி பேசினால் என்னென்ன ஆகும்...

    மிக அருமையான சிந்தனை அண்ணா...

    கத்தி தான் முதலில் ருசித்த எச்சிலை தான் நாகரீக மக்கள் சுவைக்கின்றனர்... சில சமயம் அவர்களின் ரத்தத்தை கத்தியும் ருசிப்பதையும்...

    கத்தியை உசுப்பேற்றிவிடுவது போல சாணைப்பிடிப்பதும்...

    மிக அருமையான க்ரியேட்டிவிட்டி வரிகள் அண்ணா...

    கத்தி (சத்தமாகப்) பேசினால் தொண்டைக்கட்டிப்போகும், வயிறு புண்ணாகிப்போகும்....

    கத்தியே பேசினால் இப்படி ஒரு அருமையான கவிதை தான் மலரும்....

    அசத்தல் அண்ணா கவிதை வரிகள்....

    அன்பு வாழ்த்துகள் பகிர்வுக்கு...//

    ஏதேதோ புகழ்ந்து பாராட்டி கத்திச் சொல்லியுள்ளீர்கள். மகிழ்ச்சியே மஞ்சு. மிகவும் சந்தோஷம்.

    பிரியமுள்ள
    கோபு அண்ணா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் மஞ்சு ....

      //திருக்குறள் போன்ற ஓர் இரண்டே வரிக்கவிதை [அம்மவைப்பற்றி] //

      ”அ ம் மா வை ப் ப ற் றி” எனத்திருத்தி வாசிக்கவும்.

      நான் நீண்டகாலம் பணியாற்றிய BHEL பற்றி நான் எழுதிக்கொடுத்ததோர் கவிதை, என் அந்த மிகப்பெரிய நிறுவனத்தால், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி + தனிப்பில்லாங்குழலிலும் இசை அமைக்கப்பட்டு, அனைத்து BHEL அலுவலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எல்லா யூனிட் BHEL Technical Library களிலும் அவை பாதுக்காப்பாக வைக்கப்பட்டுள்ளன.

      இதுபற்றி நான் கீழ்க்காணும் இணைப்பில் கடைசி படமாக வெளியிட்டுள்ளேன்.

      http://gopu1949.blogspot.in/2011/07/3.html

      பிரியமுள்ள
      கோபு அண்ணா

      நீக்கு
  11. ஆஹா.. சூப்பர்க் கற்பனை... கத்திப் பேசுவதும்.. கத்தியும் ஒன்றெனக் காட்டியுள்ளதுபோல இருக்கு:)).. அதாவது கத்தி வெட்டும்.. கத்திப் பேசுவதும் நல்லதல்ல... என்பதை உணர்த்தியிருப்பதாகவும் உணர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. //athira October 22, 2012 3:02 PM
    ஆஹா.. சூப்பர்க் கற்பனை... கத்திப் பேசுவதும்.. கத்தியும் ஒன்றெனக் காட்டியுள்ளதுபோல இருக்கு:)).. அதாவது கத்தி வெட்டும்.. கத்திப் பேசுவதும் நல்லதல்ல... என்பதை உணர்த்தியிருப்பதாகவும் உணர்கிறேன்.//

    அன்பின் அதிரா, வாங்கோ வாங்கோ.

    தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் எனக்கு மிக்வும் மகிழ்ச்சியளிக்கிறது. மனமார்ந்த நன்றிகள்

    பிரியமுள்ள
    கோபு அண்ணா

    பதிலளிநீக்கு
  13. //பல நேரம் வாய் ஓயாமல்
    கத்திக்கொண்டே இருக்கும் இவர்கள்,
    மௌனமாக இருக்கும் எனக்கு
    வைத்துள்ள பெயரோ "கத்தி" !!//

    இதுதான் ஹைலைட்.

    //ஒரு நூறு கவிதைகள் எழுதியுள்ளேன். அவற்றில் ஐந்தோ ஆறோ மட்டுமே, என் பதிவுகளில் வெளியிட்டுள்ளேன். மீதெயெல்லாம் எங்கெங்கோ காணாமல் போய் விட்டன. சேகரித்து பத்திரமாக வைக்கவில்லை//

    கொஞ்சம் மூளையைக் கசக்கி ஞாபகத்துக்குக் கொண்டு வாங்கோ.

    இல்லை புதிதாகத் தோன்றுபவைகளை அப்போதைக்கப்போதே எழுதி வைத்து விடுங்கள்.

    வணக்கத்துடன் கூடிய வாழ்த்துக்களுடன்
    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ திருமதி ஜெயந்தி ரமணி மேடம், வணக்கம்.

      *****
      //பல நேரம் வாய் ஓயாமல்
      கத்திக்கொண்டே இருக்கும் இவர்கள்,
      மௌனமாக இருக்கும் எனக்கு
      வைத்துள்ள பெயரோ "கத்தி" !!*****

      //இதுதான் ஹைலைட்.//

      மிகவும் சந்தோஷம்.

      ***ஒரு நூறு கவிதைகள் எழுதியுள்ளேன். அவற்றில் ஐந்தோ ஆறோ மட்டுமே, என் பதிவுகளில் வெளியிட்டுள்ளேன். மீதியெல்லாம் எங்கெங்கோ காணாமல் போய் விட்டன. சேகரித்து பத்திரமாக வைக்கவில்லை***

      //கொஞ்சம் மூளையைக் கசக்கி ஞாபகத்துக்குக் கொண்டு வாங்கோ.

      இல்லை புதிதாகத் தோன்றுபவைகளை அப்போதைக்கப்போதே எழுதி வைத்து விடுங்கள்.//

      ஆகட்டும் மேடம். முதலாவதை விட இரண்டாவது தான் சுலபமாக இருக்கும். முயற்சிக்கிறேன்.

      அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      பிரியமுள்ள
      கோபு

      நீக்கு
  14. எனக்கு ஐந்து ஆஸ்கர் கொடுத்து விட்டு , என் கோபத்தையும் பெற்று விட்டர்கள் ஐயா ...ஆம்மாம் ரொம்ப ரொம்ப கோவம் ....

    பின்ன இவ்வளவு அருமையான இரண்டு பொருள் தரும் கவிதையை நீங்களே எப்படி குறைத்து மதிப்படலாம் இப்படி என் வலைப்பூவில்
    //////”கத்தி” என்றதும் ஏனோ நான் எழுதியுள்ள அரை வேக்காட்டுக் கவிதையொன்று நினைவுக்கு வந்தது.//////

    தன்னடக்கம் என்று சமாளிக்க முடியாது ஐய்யா ஆமா ...பின் வருபவை நீங்கள் ரெண்டு நாட்களுக்கு முன்பு வலைச்சரத்தில் கூறியவை
    ////////என்னைப்பொருத்தவரை நான் எழுதிய அந்தக்கதையைப் படித்து ரஸித்தவர்கள் அதிர்ஷ்டசாலிகளே.

    படிக்க வாய்ப்பு கிட்டாதவர்கள் எல்லோரும் துரதிஷ்டசாலிகளே,
    என நான் நினைத்துக்கொள்வதுண்டு.

    இதுபோல நாம் நினைத்துக்கொண்டு, எழுதிக்கொண்டே செல்ல வேண்டும் என்பதைத் தங்க்ளுக்கு அறிவுருத்த மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளேன்./////////////////

    ஐயா உங்களின் அந்த காதல் கதைக்கு மட்டும் அல்ல எல்லா பதிவுக்கும் பொருந்தும் சிந்தனை தான் இவை .. எனக்கும் உங்களிடம் இருந்து ஆஸ்கர் கிடைத்து வருவதால் நானும் அவ்வாறே இனி எண்ணி கொள்வேன் ....

    நிறையேவே உங்களிடம் கற்றுக்கொள்ள ஆவல் உள்ளது ஐயா ! உங்கள் பதிவுகள் பல நான் படித்து கருத்து சொல்லாமல் வாக்களித்து சென்ற நாட்களும் உண்டு ...இனி பின்னூட்டம் அவசியம் கொடுப்பேன் உங்களை வாழ்த்த அல்ல உங்களிடம் நிறையா கற்றுக்கொள்ளவே ... உங்கள் தமிழை போற்றும் பல உள்ளங்களில் நானும் முதன்மையானவன் நன்றி ஐயா ....அடுத்து எங்கே போறேன் தெரியுமா காலையில் தொடரும் என்று நீங்கள் முடித்த கடவுள் இருக்கிறாரா என்ற பதிவுக்கு தான் ... அங்கே தொடர்கிறேன் ........(காலை சுற்றிய பாம்பு என்று நீங்கள் அலறுவது போல தெரியுது ஹி ஹி )



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பான வருகைக்கும், உரிமையுடன் கோபித்துக் கொண்டுள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள், நண்பரே.

      //அடுத்து எங்கே போறேன் தெரியுமா காலையில் தொடரும் என்று நீங்கள் முடித்த கடவுள் இருக்கிறாரா என்ற பதிவுக்கு தான் ... அங்கே தொடர்கிறேன் ........//

      மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி.

      //(காலை சுற்றிய பாம்பு என்று நீங்கள் அலறுவது போல தெரியுது ஹி ஹி )//

      தங்களைப்போன்ற பாம்புகள் எப்போதும் என் காலைச்சுற்றிச் சுற்றி வந்து கடித்துக்கொண்டே இருப்பதையே நான் இப்போது மிகவும் விரும்புகிறேன்.

      ஒரே ஒரு பாம்பு ... அதுவும் நல்ல பாம்பு ... தொடர்ந்து என்னைக் கடித்து வந்த பாம்பு ... தினமும் என்னைப் பலமுறை கடித்து வந்த பாம்பு ... எண்ணினால் இதுவரை சுமார் ஆயிரம் முறைக்கு மேல் என்னைக் கடித்து வந்ததோர் என் செல்லப்பாம்பு ... ஏனோ என்னிடம் கோபித்துக்கொண்டு ... எங்கோ மறைந்து போய் விட்டது.

      அதனால் எனக்கு வருத்தமோ வருத்தம். இரவெல்லாம் எனக்குத் தூக்கமே வருவது இல்லை. துக்கம் மட்டுமே.

      அதனை [அந்த நல்ல பாம்பை] நான் மீண்டும் காணும் நாள் என்னாளோ என ஏங்கித்தவித்து வருகிறேன். பார்ப்போம்.

      ooo அந்த நல்ல பாம்பை உத்தேசித்து ஒரு பாடல் ooo

      “நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே ....
      உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே ....

      ஆதிசிவன் தலையமர்ந்த ஆணவமா .... இல்லை
      அவன் அங்கமெல்லாம் விளையாடும் தைரியமா ....

      பெயருக்குத் தகுந்தாற்போல் மாறிவிடு ......
      இந்தப்பிள்ளையை மறுபடியும் வாழவிடு. ;)

      இப்படிக்கு,

      என் செல்லப் பாம்புக்கு பல நாட்கள் பால் ஊற்றியவன். vgk

      நீக்கு
  15. பல நேரம் வாய் ஓயாமல்
    கத்திக்கொண்டே இருக்கும் இவர்கள்,
    மௌனமாக இருக்கும் எனக்கு
    வைத்துள்ள பெயரோ "கத்தி" !!

    செல்லப்பாம்புக்கும் கத்தியா..!!

    கத்தாமல் மகுடி வாசித்திருந்தாலே சிவனே என்று வாழும் பாம்பாக சுற்றிசுற்றி வந்துகொண்டிருக்குமே ஐயா..

    அதைப் பழுதென்று எண்ணி மிதித்தததால் தற்காப்பிற்காக சீறியிருக்குமாயிருக்கும் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி February 28, 2013 at 10:06 AM

      வாங்கோ, வாங்கோ .... வணக்கம்.

      //பல நேரம் வாய் ஓயாமல்
      கத்திக்கொண்டே இருக்கும் இவர்கள்,
      மௌனமாக இருக்கும் எனக்கு
      வைத்துள்ள பெயரோ "கத்தி" !!//

      //செல்லப்பாம்புக்கும் கத்தியா..!!//

      கத்தாமல் மகுடி வாசித்திருந்தாலே சிவனே என்று வாழும் பாம்பாக சுற்றிசுற்றி வந்துகொண்டிருக்குமே ஐயா..

      அதைப் பழுதென்று எண்ணி மிதித்தததால் தற்காப்பிற்காக
      சீறியிருக்குமாயிருக்கும் ..//

      //செல்லப்பாம்புக்கும் கத்தியா..!!//

      என் செல்லப்பாம்பே ..... நீ எது வேண்டுமானாலும் சொல்லுப்பாம்பே !

      நீ எனக்குத் திரும்பக்கிடைத்ததே நான் செய்ததோர் அதிர்ஷ்டம் தான்டா என் செல்லமே, தங்கமே ;)))))

      //கத்தாமல் மகுடி வாசித்திருந்தாலே சிவனே என்று வாழும் பாம்பாக சுற்றிசுற்றி வந்துகொண்டிருக்குமே ஐயா..//

      இனி உன்னை மயக்கி, என்னிடமே தக்க வைத்துக்கொள்ள நினைப்பது, எப்போதுமே உனக்கு மிகவும் பிடித்த என் மகுடி
      வாசித்தலால மட்டுமே தான்டா, என் செல்லப்பாம்புக்குட்டியே! ....... ;)))))

      NO MORE கத்தி OR கத்தல் AT ALL FROM ME டா. உன்னை என்றுமே ADJUST செய்து, நானே விட்டுக்கொடுத்தே போவேனடா. .

      //அதைப் பழுதென்று எண்ணி மிதித்தததால் தற்காப்பிற்காக
      சீறியிருக்குமாயிருக்கும் ..//

      இருக்கலாம்டா கண்ணூ, இருக்கலாம்.

      பாம்பு எனத்தெரியாமல் பழுது என நினைத்துத் தெரியாமல் என் காலால் நானும் மிதித்திருக்கலாம் / இடறியிருக்கலாம் தான். ;(

      பாம்புக்குட்டியின் சீற்றம் மிகவும் நியாயமானதே!

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் , புரிதலுக்கும் புரிய வைத்தலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      இப்படிக்கு

      மிகவும் பிரியம் வைத்துள்ள பாம்பாட்டி

      நீக்கு
  16. சும்மா இருக்கும் என்னை சாணை பிடித்து
    கொம்பு சீவி விடுகிறார்கள் !!/

    அட்டைக்கத்தியானால் சாணை பிடிக்கமுடியுமா ??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி February 28, 2013 at 10:11 AM

      *****சும்மா இருக்கும் என்னை சாணை பிடித்து
      கொம்பு சீவி விடுகிறார்கள் !!*****

      //அட்டைக்கத்தியானால் சாணை பிடிக்கமுடியுமா ??//

      அது எப்படி முடியும்? முடியாதூஊஊஊ.

      ஆனால் அட்டைக்கத்தியையும் பளபளப்பாக்க முடியும்.

      அதைப் பளபளப்பாக்க ஜிகினாக்காகிதங்கள் ஒட்டி விடலாம். ;)

      தங்களின் அன்பான வருகைக்கு நன்றீங்க!.

      நீக்கு
  17. காய்கறி பழங்களை நறுக்கும் பொழுது
    என் வாய் பட்டு நான் ருசித்த எச்சிலைத்
    தின்பவர்களே இந்த நாகரீக மனிதர்கள் !

    கவனக்குறைவாக இருக்கும் பொழுது
    இவர்கள் ரத்தத்தையும் நான் ருசிப்பதுண்டு !! ///

    காய்கறி பழங்கள் கழுத்திலிருந்து கத்தி கேட்டது
    காய்கறியே சௌக்கியமா ?? மனிதா நீயும் சௌக்கியமா??

    கத்தி கேட்டது கத்தி --அது அர்த்தம் உள்ளது ..

    வெட்டவேண்டிய காய்கறிகளை மட்டுமே
    வெட்டினால் எல்லாம் சௌக்கியமே ..

    தவறிப்போய் கைகால்கள் எதையாவது
    வெட்டிக்கொண்டால்..தொல்ல்லை நேருமே ..!

    பதிலளிநீக்கு
  18. ..இராஜராஜேஸ்வரி February 28, 2013 at 10:19 AM

    வாருங்கள், மீண்டும் வருகை எனக்கு மகிழ்வளிக்கிறது.

    *****
    காய்கறி பழங்களை நறுக்கும் பொழுது
    என் வாய் பட்டு நான் ருசித்த எச்சிலைத்
    தின்பவர்களே இந்த நாகரீக மனிதர்கள் !

    கவனக்குறைவாக இருக்கும் பொழுது
    இவர்கள் ரத்தத்தையும் நான் ருசிப்பதுண்டு !!

    *****
    //காய்கறி பழங்கள் கழுத்திலிருந்து கத்தி கேட்டது
    காய்கறியே சௌக்கியமா ?? மனிதா நீயும் சௌக்கியமா??

    கத்தி கேட்டது கத்தி --அது அர்த்தம் உள்ளது ..

    வெட்டவேண்டிய காய்கறிகளை மட்டுமே
    வெட்டினால் எல்லாம் சௌக்கியமே ..//

    எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் கவியரசு கண்ணதாசன் அவர்கள்.

    அவர்கள் சினிமாவுக்காக எழுதிய பாடலையே அப்படியே மாற்றி, இந்த என் பதிவுக்கும் மற்ற சூழலுக்கும் மிகப்பொருத்தமாக, எழுதியுள்ள ’கன்னுக்குட்டி என் செல்லக்கன்னுக்குட்டி’ க்கு [பாம்புக்குட்டிக்கு] என் அன்பான பாராட்டுக்கள்.

    //தவறிப்போய் கைகால்கள் எதையாவது
    வெட்டிக்கொண்டால்..தொல்ல்லை நேருமே ..!//

    ஒருசில முறைகள் தவறிப்போய் அவசரத்தில் வெட்டிக்கொண்டும் ஆகிவிட்டது. இனி வேண்டவே வேண்டாம் அந்தத்தொல்லை.

    கத்தியைக் கையாளும் போது மட்டும், கத்திமேல் நடப்பதுபோல சற்றே உஷாராக இருந்துட்டாப்போச்சு. ;)))))

    பதிலளிநீக்கு
  19. ஆஹா, கத்தி. கத்திப் பேசாத கத்தி. கத்தி பேசினால் என்ன ஆகும்? கத்தியைக்கொண்டு கொலை செய்தவனெல்லாம் தன் வினையை கத்தியால் அறுப்பான்.

    பதிலளிநீக்கு
  20. கத்திப் பேசினால் குத்தி விடுவார்களோ?! அதனால் கத்திப் பேசாமல் நறுக்கிக் கொண்டே நறுக் என்று கத்தி பேசுவது அருமை!

    பதிலளிநீக்கு
  21. கத்தியின் கோபம் நியாம் தானே,
    அதைத் தங்கள் கவி நடையில் சொல்லியுள்ளது சிறப்பு.
    என் வாய் பட்டு எச்சிலைத் தின்பவர்கள் தான் இந்த மனிதர்கள்.
    இந்த நாகரீக உலகில் அருமையான வரிகள்.

    பதிலளிநீக்கு
  22. மறுபடியும் ஒன்றரைக்கிலோ முட்டைகோஸ் எப்ப கட் பண்ணபோறீங்க.? அப்பதானே இதுபோல சுவாரசியமான கவிதை படிக்க கிடைக்கும்.
    பின்னூட்டங்களையும் ரிப்ளை பின்னூட்டங்களையும்கூட எவ்வளவு சுவாரசியமாக எழுதமுயும் என்பது உங்க பதிவு பின்னூட்டங்கள் படித்தாலே தெரிஞ்சுக்க முடிகிறது. கவித பத்தி நான் எதுவுமே சொல்லல இல்ல. பின்னூட்டம் போட்டிருப்பவர்கள் எனக்கு விட்டுவைக்காமல் எல்லாத்தையும் எழுதிட்டாங்களே. மறுபடியும் நானும் அதையே எழுத வேண்டாமே என்று " பெரிய மனது" பண்ணி ஏதும் எழுதாம விட்டுவிட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... January 7, 2016 at 10:20 AM

      ஆஹா, வாங்கோ, வணக்கம்.

      //மறுபடியும் ஒன்றரைக்கிலோ முட்டைகோஸ் எப்ப கட் பண்ணபோறீங்க.? அப்பதானே இதுபோல சுவாரசியமான கவிதை படிக்க கிடைக்கும்.//

      பணி ஓய்வுக்குப்பின் இப்போதெல்லாம் தினமுமே நான் கத்தியும் கையுமாக மட்டுமே. ஏதோ நம் வீட்டுப் பெண்மணிகளுக்கு கொஞ்சம், நம்மால் ஆன ஒத்தாசை செய்வோமே என இரக்கப்பட்டு ஒருநாள் ஆரம்பித்தேன். அதுவே தொடர்கதை ஆகி விட்டது :)

      //பின்னூட்டங்களையும் ரிப்ளை பின்னூட்டங்களையும்கூட எவ்வளவு சுவாரசியமாக எழுதமுயும் என்பது உங்க பதிவு பின்னூட்டங்கள் படித்தாலே தெரிஞ்சுக்க முடிகிறது.//

      :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :) நானும் மீண்டும் அவற்றை இன்று ஒருமுறை படித்து மகிழ வாய்ப்பாக அமைந்தது, தங்களின் இந்தப்பின்னூட்டம்.

      //கவித பத்தி நான் எதுவுமே சொல்லல இல்ல. பின்னூட்டம் போட்டிருப்பவர்கள் எனக்கு விட்டுவைக்காமல் எல்லாத்தையும் எழுதிட்டாங்களே. மறுபடியும் நானும் அதையே எழுத வேண்டாமே என்று " பெரிய மனது" பண்ணி ஏதும் எழுதாம விட்டுவிட்டேன்//

      அதுவும் நல்லதுதான். பரவாயில்லை.

      தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  23. பல நேரம் வாய் ஓயாமல்
    கத்திக்கொண்டே இருக்கும் இவர்கள்,
    மௌனமாக இருக்கும் எனக்கு
    வைத்துள்ள பெயரோ "கத்தி" - மிகவும் ரசனையான வரிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நெல்லைத் தமிழன் October 3, 2016 at 7:39 PM

      தங்களின் வருகைக்கும் ‘மிகவும் ரசனையான வரிகள்’ எனச் சொல்லியுள்ளதற்கும் என் நன்றிகள்.

      நீக்கு
  24. பதில்கள்
    1. G Perumal Chettiar March 14, 2018 at 9:36 PM

      வாங்கோ, வணக்கம்.

      //கத்தியின் கர்ஜனை ... மிக அருமை !//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஐயா.

      நீக்கு