என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 21 மே, 2011

மூ க் கு த் தி [ பகுதி 1 of 7 ]


எங்கள் கிராமத்திலிருந்து கிளம்பிப்போனால் ஒரு மணி நேரத்தில் டவுனுக்குப்போக இப்போதெல்லாம் ஏகப்பட்ட டவுன் பஸ்ஸுகள் விடியவிடிய விடப்பட்டுள்ளன. எவ்வளவு பஸ்ஸுகள் ஓடினாலும் கும்பல் தான் தாங்க முடியாமல் உள்ளது. 

ஜனங்களுக்கு அப்படி என்னதான் வேலையோ, என்னதான் அவசரமோ, படிக்கட்டுகள் இரண்டிலும் பத்து பேர்களுக்குக்குறையாமல் தொங்கியபடி பயணிக்கின்றனர்.

நான் இன்று புறப்பட்டது டவுனில் உள்ள ஒரு நகைக்கடைக்கு. அந்த நாளில் தங்கம் வெள்ளி வாங்க ஒரே ஒரு செட்டியார் கடையும், வைர நகைகளுக்கு ஒரு வடக்கத்திய சேட்டுக்கடையுமாக இரண்டே கடைகள் தான் இருக்கும். இரண்டுமே நம்பிக்கைக்கும் நாணயத்திற்கும் பெயர்போன கடைகள். 

உள்ளே போனதும் இன்முகத்துடன் கடை முதலாளி வரவேற்பார். அமர ஒரு இருக்கை கொடுத்து, மின் விசிறியைத்தட்டி விட்டு, குழல்விளக்குகள் மூலம் அதிக வெளிச்சம் தர ஏற்பாடு செய்வார்கள். 

ஊர் பெயர், நமது பெயர் முதலியன கேட்டு, ஊரிலுள்ள மற்றவர்களைப்பற்றியும் நலம் விசாரித்து, கோடை வெப்பம் தணிய குளுமையான பானைத்தண்ணீர் அருந்தச்சொல்லி, அதன்பின் வியாபாரம் பேச ஆரம்பிப்பார்கள்.

மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் கணக்குப்போட்டு நகைகளை ஒரு கடவுள் படத்தின் காலடியில் வைத்துத்தருவார்கள். 

நம் பழைய நகைகளை வாங்கி, ஒரு சொரசொரப்பான சாணைக்கல்லில் உரசிப்பார்த்து, தரத்திற்கு தகுந்தபடி, அதையே அழித்து, மேலும் கொஞ்சம் தங்கம் சேர்த்து புதியதாக நகைகள் செய்து தருவார்கள்.  

கூலி, சேதரம், உபரித்தங்கம் முதலியவற்றிற்கு கணக்குப்பார்த்து வாங்கிக்கொள்வார்கள். அந்த நாளில் விற்பவருக்கும் பொறுமை உண்டு, வாங்குபவருக்கும் பொறுமை உண்டு. கைராசி என்று நினைப்பதுண்டு. இன்றைய நிலைமையே வேறு.

இது ஒரு அவசர உலகம். நகைகளை உடனே வாங்கி உடனே அணிய வேண்டும் என்பதே பெரும்பாலானோர் விருப்பம். பழைய நகைகளைத் தனியாக விற்று காசாக்கிக்கொள்வதற்கும் வசதி. 

இன்று ஏராளமான நகைக்கடைகள். வியாபாரத்தில் நிறைய போட்டிகள். கவர்ச்சிகரமான விளம்பரங்கள். குளுகுளு வசதிகளுடன் பெரியபெரிய கடைகள்.

நகை வாங்கி விடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டவுடன் கூல்டிரிங்க்ஸ் வழங்கி உபசரித்து தாஜா செய்தல்.கொட்டிக்கிடக்கும் நகைகள். டிசைன்கள். ஒவ்வொரு கடைகளிலும் கூட்டமான கூட்டங்கள். க்யூவில் நிற்க வேண்டிய நிலைமை.

கையில் குடையுடன், மஞ்சள் பையில் பணத்துடன், ஒரு நல்ல நாளில், நல்ல நேரத்தில்,  பஸ் பிடித்து, டவுனில் உள்ள ஒரு பிரபல நகைக்கடைக்குள், காலை பத்து மணிக்குப் பிரவேசித்தேன்.

தொடரும் 



பின்குறிப்பு:-

1) இந்தச்சிறுகதையில் வரும் கதாபாத்திரம் வேறு, இந்தச்சிறுகதையை எழுதியுள்ள கதாசிரியனான நான் வேறு என்று தெரிவித்துக்கொள்கிறேன். யாரும் தயவுசெய்து குழப்பிக்கொள்ள வேண்டாம் என்பதற்காக இதை இங்கு முதலிலேயே குறிப்பிட்டுள்ளேன் 

2) இந்தச்சிறுகதையின் தொடர்ச்சி [பகுதி - 2 of 7] வரும் செவ்வாய்க்கிழமை 24.05.2011 அன்று வெளியிடப்படும்.

44 கருத்துகள்:

  1. சிறுகதை நன்றாகத் தொடக்கப்பட்டுள்ளது! அந்தக்காலத்தில் நகைகள் வாங்கும் போது நல்ல நடைமுறைகளைக் கடைப்பிடித்திருக்கிறார்கள்! கேட்கவே இனிமையா இருக்கு! அப்புறம் கதையின் கதாபாத்திரம் நீங்கள் இல்லையா? ஓகே! செவ்வாய்க்கிழமைக்காக வெயிட்டிங்!

    பதிலளிநீக்கு
  2. //அந்த நாளில் விற்பவருக்கும் பொறுமை உண்டு, வாங்குபவருக்கும் பொறுமை உண்டு. கைராசி என்று நினைப்பதுண்டு. இன்றைய நிலைமையே வேறு.//

    என்ன சொல்ல வாரீங்கன்னு புரியலை ம்ம்ம்ம் தொடருங்க....

    பதிலளிநீக்கு
  3. சிறு கதைக்கே தொடருமா....???

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

    பதிலளிநீக்கு
  4. ரொம்ப பின்னாடி போக வேண்டாம் ஒரு பத்து வருடம் முன்பு வரை கூட அப்படிதான்.

    பதிலளிநீக்கு
  5. ஆரம்பமே அருமையா இருக்கு. அந்த காலம் வேறு. இந்த காலம் வேறு தான். தொடருங்கள் சார்.

    பதிலளிநீக்கு
  6. ஆரம்பமே ஒரு எதிர்பார்ப்பைத் தருகிறது..

    பதிலளிநீக்கு
  7. நகை வாங்குவதில் கூட எத்தனை மாற்றங்கள் வந்து இருக்கின்றன. தங்கமான ஆரம்பம். வாழ்த்துக்கள்! :-)

    பதிலளிநீக்கு
  8. மாற்றம் என்பது தான் வாழ்வில் நிரந்தரம் போலும்! தொடருங்கள் அடுத்த பதிவில்....

    பதிலளிநீக்கு
  9. ஆரம்பமே அருமை ஐயா
    காத்திருக்கிறேன் உங்களின் அடுத்த பகுதிக்கு

    பதிலளிநீக்கு
  10. அந்த நாளில் விற்பவருக்கும் பொறுமை உண்டு, வாங்குபவருக்கும் பொறுமை உண்டு. கைராசி என்று நினைப்பதுண்டு. இன்றைய நிலைமையே வேறு.//
    மாற்றம் ஒன்றே மாறாதது. காலத்தின் நியதி. காலம் மாறி ,எதிலும் வேகம் கூடிவிட்டது.

    பதிலளிநீக்கு
  11. எல்லாக் கதைகளையுமே தன்மை ஒருமையிலேயே எழுதுவதால் எல்லோருமே பாத்திரத்தையும் உங்களையும் ஒன்றாக நினைத்துக் குழப்பிக் கொள்கிறார்கள் என்று முன் ஜாக்கிரதையாக நீங்களே அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லிவிட்டது ஜோர்.

    மாவிலை தோரணத்தோடு அதிகாலை நாதஸ்வரம் முழங்கும் ஒரு கல்யாண மண்டபத்தில் நுழைந்திருக்கிறோம்.

    நிறைய நேரமிருக்கிறது முஹூர்த்தத்திற்கு.

    காத்திருக்கலாம். தப்பில்லை.

    பதிலளிநீக்கு
  12. செவ்வாக் கிழமை வரை வெயிட் பண்ணனுமா?

    பதிலளிநீக்கு
  13. சுகமான பழைய நினைவுகளுடன் நல்ல ஆரம்பம். என் அம்மா கூட தனது சிறு வயதில் ஒரு பவுன் 60 ரூபாய்க்கு வாங்கியது பற்றிய கதையெல்லாம் சொல்வார்கள். அடுத்த பகுதிக்காக செவ்வாய் என்று வரும் என்று காத்திருக்கிறேன்….

    பதிலளிநீக்கு
  14. பின் குறிப்பு கொடுத்ததும் நல்லதாய் போயிற்று
    நானும் இந்த அவஸ்தைக்கு அடிக்கடி ஆட்படுகிறேன்
    நல்ல துவக்கம் தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. Chudithaar vaanga javulikkadaikki poyaachchu; ippo mookkuththi vaanga nakaikkadai!
    Kootittu ponga, kooda varom!

    பதிலளிநீக்கு
  16. அந்த காலத்தைக் காட்டிலும், இன்றைய தினத்தில் தான் நகை வாங்குவது எளிதாகப் படுகிறது. இருந்தாலும் மூக்குத்தி வாங்கிய அனுபவம் இல்லை. உங்கள் கதை மூலம் ஓர் உண்மை அனுபவம் போன்ற உணர்வு கிட்டும் என்ற எதிர்பார்ப்பு .....தொடர் கதையின் அழகே அது தானோ?

    பதிலளிநீக்கு
  17. நாங்களும் வருகின்றோம் மூக்குத்தி எமக்கும் கிடைக்கும்தானே :)

    பதிலளிநீக்கு
  18. உங்கள் இயல்புபடி ஆரம்பம் ஜோர். சிறு பதிவுகளாக வரப்போவது சிறு கதையா நெடுங்கதையா.?

    பதிலளிநீக்கு
  19. //"நகை வாங்கி விடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டவுடன் கூல்டிரிங்க்ஸ் வழங்கி உபசரித்து தாஜா செய்தல்"//

    உண்மை...உண்மை...

    பதிலளிநீக்கு
  20. மங்களகரமான ஆரம்பம்! புதுசா இருக்கு பழைய நடைமுறைகள்! அடுத்த பாகத்துக்கு வெய்ட்டிங்!
    :-)

    பதிலளிநீக்கு
  21. என்னமோ சொல்லப் போறீங்க...
    நன்றாக இருக்கிறது..
    எனது ஒவ்வொரு பதிவிற்கிற்கும் நீங்கள்
    கூறும் கருத்து அருமை..நன்றி பல பல..
    உங்கள் அனுபவத்தை எங்கள் இளைய தலைமுறைக்கு தரவும்..

    பதிலளிநீக்கு
  22. இயல்பான தொடக்கம். நல்ல கதைசொல்லி நீங்கள். வாழ்க்கையின் சுவைகூடிய சிறுகதைகள் உங்கள் கதை. மூக்குத்தியைத் தொடர்ந்து வாசிப்பேன்.

    பதிலளிநீக்கு
  23. டி.கே.பட்டம்மாள் ரசித்து ஆலாபனைஎல்லாம் சேர்த்து பாட்டை விருத்தி செய்வது போல் கொண்டு செல்கிறீர்கள்..

    நகைக்கடைக்கு ஏதும் 'லோலாக்கு' மாட்டப் போகிறீர்களா வை.கோ சார்!

    பதிலளிநீக்கு
  24. அன்புடன் வருகை தந்து, அரிய பல கருத்துக்கள் கூறி, உற்சாகப்படுத்தியுள்ள என் அன்பான உடன்பிறப்புக்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    இன்ட்லியிலும், தமிழ்மணத்திலும் ஆதரவாக வாக்குகள் அளித்துள்ள அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    பதிலளிநீக்கு
  25. அருமையாக ஆரம்பிச்சிருக்கீங்க ஐயா.
    நான் உங்கள் கதையைத் தான் சொல்லி இருக்கீங்கன்னு நினைத்தேன்.நல்லவேளை பின்குறிப்பைப் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  26. ஜிஜி said...
    //அருமையாக ஆரம்பிச்சிருக்கீங்க ஐயா.
    நான் உங்கள் கதையைத் தான் சொல்லி இருக்கீங்கன்னு நினைத்தேன்.நல்லவேளை பின்குறிப்பைப் படித்தேன்.//

    மிக்க நன்றி, மேடம். தொடர்ந்து வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  27. மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் கணக்குப்போட்டு நகைகளை ஒரு கடவுள் படத்தின் காலடியில் வைத்துத்தருவார்கள்.

    இப்போது கணிணிகள் தான் கணக்குப்போட்டுத்தருகின்றன.......

    பதிலளிநீக்கு
  28. அந்த நாளில் விற்பவருக்கும் பொறுமை உண்டு, வாங்குபவருக்கும் பொறுமை உண்டு. கைராசி என்று நினைப்பதுண்டு. இன்றைய நிலைமையே வேறு.

    அந்த நாளில் நேரம்பார்த்து நாள் பார்த்து முகூர்த்தம் பார்த்து நகை வாங்கி அணிவார்கள்..

    பதிலளிநீக்கு
  29. இராஜராஜேஸ்வரி said...
    மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் கணக்குப்போட்டு நகைகளை ஒரு கடவுள் படத்தின் காலடியில் வைத்துத்தருவார்கள்.

    //இப்போது கணிணிகள் தான் கணக்குப்போட்டுத்தருகின்றன.......//

    Yes Madam. You are correctly telling the fact. Thanks for your kind entry & valuable comments.

    பதிலளிநீக்கு
  30. இராஜராஜேஸ்வரி said...
    அந்த நாளில் விற்பவருக்கும் பொறுமை உண்டு, வாங்குபவருக்கும் பொறுமை உண்டு. கைராசி என்று நினைப்பதுண்டு. இன்றைய நிலைமையே வேறு.

    //அந்த நாளில் நேரம்பார்த்து நாள் பார்த்து முகூர்த்தம் பார்த்து நகை வாங்கி அணிவார்கள்..//

    ரொம்ப அழகாகவே சொல்லிட்டீங்க!

    இப்போ நேரம் காலம் பார்ப்பதற்குள் தங்கம் விலை விர்ரென்று ராக்கேட் வேகத்தில் ஏறிடுமோ என்ற கவலை வேறு படுகிறார்கள்.

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

    பதிலளிநீக்கு
  31. //ஊர் பெயர், நமது பெயர் முதலியன கேட்டு, ஊரிலுள்ள மற்றவர்களைப்பற்றியும் நலம் விசாரித்து, கோடை வெப்பம் தணிய குளுமையான பானைத்தண்ணீர் அருந்தச்சொல்லி, அதன்பின் வியாபாரம் பேச ஆரம்பிப்பார்கள்...... ....... ....
    நகை வாங்கி விடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டவுடன் கூல்டிரிங்க்ஸ் வழங்கி உபசரித்து தாஜா செய்தல். //
    நகைக் கடைக்குள் நுழைந்தவுடனேயே, நாம் நகையை எடை போட்டு வாங்குவதற்குள் நம்மை அவர்கள் எடை போட்டு விடுவார்கள். அவர்களின் வியாபார உத்திகளை உங்கள் கதையின் தொடக்கமே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஆட்களை கடைக்காரர்கள் அசத்தும் வேலைகளில் இதுவும் ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாருங்கள், வணக்கம்.

      தங்களின் அன்பான வருகையும், கதையினை நன்கு ஆழமாக ஊன்றி வாசித்து, அழகாக அற்புதமாக விமர்சனம் செய்துள்ளதும் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. அதற்கு என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

      //நகைக் கடைக்குள் நுழைந்தவுடனேயே, நாம் நகையை எடை போட்டு வாங்குவதற்குள் நம்மை அவர்கள் எடை போட்டு விடுவார்கள். // ;)))))

      அன்புடன்
      vgk

      நீக்கு
  32. Sir,
    Very beautiful, buying jewels and choice of buying in different shops have really changed now. But still when it comes to marriage or any important occasion I think the [some]family tradition goes by the tradition in buying the same shops. Lot of changes have happened, but travelling in the crowded in the villages towns and cities have never changed I think. Even now when we go to Nagapattinam and when we take local buses it is always crowded. Some things never change...

    பதிலளிநீக்கு
  33. Priya Anandakumar August 22, 2013 at 6:15 AM

    வாங்கோ மேடம், வணக்கம்.

    //Sir,
    Very beautiful, buying jewels and choice of buying in different shops have really changed now. But still when it comes to marriage or any important occasion I think the [some]family tradition goes by the tradition in buying the same shops. Lot of changes have happened, but travelling in the crowded in the villages towns and cities have never changed I think. Even now when we go to Nagapattinam and when we take local buses it is always crowded. Some things never change...//

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பல கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    ஆம், பயணங்களும் ஓய்வதில்லை, கூட்டங்களும் குறைவது இல்லை.

    பதிலளிநீக்கு
  34. மஞ்சள் பையில் பணம் கொண்டு போன நபர் நீங்கள் ஒருவராகத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  35. அந்தக்கால நகைக்கடைகளின் நடைமுறைகளை நன்றாகச் சொல்லி இருக்கிங்க. இப்பல்லாம வேர மாதிரி.

    பதிலளிநீக்கு
  36. ரோட்டில் நடக்கும் போது இஞ்ச் இஞ்ச்சாக கவனிப்பீயளோ?

    மூக்குத்தி வாங்கப் போறீய.

    ஒரு மூக்குத்தி வாங்கறதுக்கு 7 எபிசோடு. டீவி சீரியல் கெட்டுது போங்க.

    ஏனுங்க, உங்க கதையெல்லாம் நாடகமா எடுத்தா சூப்பரா இருக்குங்கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya June 2, 2015 at 10:18 PM

      ரோட்டில் நடக்கும் போது இஞ்ச் இஞ்ச்சாக கவனிப்பீயளோ? //

      சேச்சே அப்படியெல்லாம் இல்லை. நான் ரொம்ப ரொம்ப நல்ல பையனாக்கும். :)

      //மூக்குத்தி வாங்கப் போறீய.//

      போவது நான் அல்ல. என்னைவிட இன்னும் நல்ல வயதான கிழம் அவர். :) அவர் என் கதாபாத்திரம் மட்டுமே.

      //ஒரு மூக்குத்தி வாங்கறதுக்கு 7 எபிசோடு. டீவி சீரியல் கெட்டுது போங்க.//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)

      //ஏனுங்க, உங்க கதையெல்லாம் நாடகமா எடுத்தா சூப்பரா இருக்குங்கோ//

      நீங்களே பணம் போட்டு நாடகமாகவோ, டீ.வி. சீரியலாகவோ, சினிமாவாகவோ எடுத்துக்கோங்கோ.
      No objection at all for me. :)

      நீக்கு
  37. அடி ஆத்தாடியோ. ஒரு நகை வாங்குரதுல இத்தர நேக்கு இருக்குதா.. எங்கூட்ல லா ஒரு பொட்டு திருகாணி தங்கம் கூட கெடயாது.

    பதிலளிநீக்கு
  38. மூக்குத்தி வாங்க போனீர்களா. இந்த மூக்குத்தி கம்மல( காது தோடு) வளையல் சங்கிலி இதெல்லாம் பொம்பிளைகள் ஏரியாவாச்சே. அங்க ஏன் போனீங்க. ஆனாலும் அந்த கடையை எங்களையெல்லாம் நல்லா சுத்தி காட்டி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  39. அக்கால மனிதர்கள் பலர் பொற்கால மனிதர்கள்தான்...தற்காலம்தான் கற்காலம்...கார்ப்பரேட் நகைக்கடைக்குள்ளார போயாச்சு...நெக்ஸ்ட்டு...????

    பதிலளிநீக்கு
  40. காலக்கண்ணாடியாய் தொடர்கிறது கதை! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
  41. ஆஹா இப்ப நகை கடையை சுத்தி காட்டபோறீங்களா.. தங்கம் எவ்வளவு விலை ஏறினாலும் நகைகடைகளில் கூட்டமு என்னமோ குறைவதே இல்லைதான். க்ராம்கணக்குல பவுன்கணக்குல வாங்கறவங்க முன்னால நம்ம ஹீரோ...))))) மூக்குத்தி எப்படி வாங்கபோறாங்கனு சுவாரசியமா சொல்லத்தானே போறிங்க.. ஆவலுடன் வெயிடிங்கு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ ஸ்ரத்தா, ஸபுரி ... 11.08.2016

      வாங்கோ, வணக்கம்.

      இந்தக் கதையின் பாகம்-1 க்கு தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். தொடர்ந்து வாருங்கள் ..... :) நானும் ஆவலுடன் வெயிட்டிங்.

      நீக்கு