என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 19 மே, 2011

டிஸ்மிஸ்




மிகவும் கறார் பேர்வழியான அந்த அலுவலக மேனேஜர், ஊழியர்கள் பகுதிக்கு திடீர் விஜயம் செய்தார். 

அவர் வருவதை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள், அரட்டை அடித்துக்கொண்டும், வீண் வம்பு பேசிக்கொண்டும், வீணாகப் பொழுதைக் கழிப்பதைப் பார்த்ததும், கோபம் வந்து கத்தலானார். 

அனைவர் டேபிள் மீதும் பல்வேறு செய்தித்தாள்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் எனக் குவிந்திருந்தன.

ஒவ்வொருவராகத் தன் அறைக்கு வரவழைத்து, இன்று காலை முதல் உறுப்படியாக என்ன வேலைகள் பார்த்தாய்? எவ்வளவு கதைகள் படித்தாய்? எவ்வளவு ஜோக்குகள் படித்தாய்? என்னென்ன செய்திகள் படித்தாய்? எதைஎதைப்பற்றி யாரிடம் என்னென்ன பேசினாய்? அதைப்பற்றிய உண்மை விபரங்களை மறைக்காமல் கூறவும் என மிரட்டலானார். 

பொய் சொன்னால் அவருக்கு சுத்தமாகப்பிடிக்காது. குறுக்கு விசாரணை செய்து உண்மையை எப்படியும் கண்டு பிடித்து விடுவார் என்பது அங்கு வேலை பார்க்கும் அனைவருமே அறிந்த விஷயம்.

அவரவர்கள் தாங்கள் செய்து முடித்த அலுவலகப்பணிகளை பயந்து கொண்டே விபரமாக எடுத்துக்கூறினர். 

எல்லாவற்றையும் உடனுக்குடன் மேனேஜர் குறிப்பெடுத்துக்கொண்டார்.

விசாரணை முடிவில், மிகவும் சாத்வீகமானவனும், பயந்த சுபாவம் உள்ளவனும், நல்ல பையனும்,  புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தவனுமான ரவிகுமார் மட்டும் எந்தக்கதையோ, கட்டுரையோ, ஜோக்குகளோ, செய்திகளோ படிக்கவில்லை என்றும், யாரிடமும் எந்த அரட்டைப்பேச்சுகளும் பேசவில்லை என்ற உண்மை மேனேஜருக்குப் புலப்பட்டது.

..........
..........
..........
..........
..........


”நீ நம் அலுவலகத்துக்குப் பொருத்தமான ஊழியர் அல்ல” என்று கூறி ரவிக்குமாருக்கு மட்டும் வேலையிலிருந்து டிஸ்மிஸ் ஆர்டர் கொடுத்து அனுப்பி வைத்தார் மேனேஜர்.  

.............
.............
.............
.............
.............
.............
.............

வேலையை இழந்த சோகத்தில் அந்த மிகப்பெரிய பத்திரிக்கை அலுவலகத்தை விட்டு வெளியேறினான், ரவிகுமார்.  


-o-o-o-o-o-o-o-o-

44 கருத்துகள்:

  1. உங்கள் கதை ரொம்ப நல்ல இருந்தது சார் ; ஆம் ஒரு பத்திரிகையாளன் என்பவன் கண்டதும் கற்க வேண்டும் ;

    பதிலளிநீக்கு
  2. அமைதியா இருக்கிறவங்க பத்திரிகை ஆபீஸ்ல வேலை செய்ய முடியாதா?

    பதிலளிநீக்கு
  3. நீங்க பிரஸ்ல ஒர்க் பண்றவர் போல.. ம் ம்

    பதிலளிநீக்கு
  4. வச்சீங்களே கடைசி வரியில் பொடியை...! நான் கூட டிஸ்மிஸ் செய்து விட்டு வேறு ஆப்பீசில் மேனேஜர் என்றெல்லாம் வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்! இந்த இடங்களில் இப்படி வேலை செய்வதுதான் பொருத்தம்! பாவம்தான் ரவி!

    பதிலளிநீக்கு
  5. ஹ்ம்ம் இடத்திற்கு தகுந்தார் போல இருக்கணும்

    பதிலளிநீக்கு
  6. கதையும் அருமை - என்ன, முடிவை கெஸ் செய்துட்டேன்! புது டிஸைனும் அருமை!

    பதிலளிநீக்கு
  7. ”நீ நம் அலுவலகத்துக்குப் பொருத்தமான ஊழியர் அல்ல” என்று கூறி ரவிக்குமாருக்கு மட்டும் வேலையிலிருந்து டிஸ்மிஸ் ஆர்டர் கொடுத்து அனுப்பி வைத்தார் மேனேஜர்.


    ..... பதிவுலகில் இருந்தால், நிறைய பதிவுகள் வாசிக்கணும். ரைட்டு! ஹி,ஹி,ஹி,ஹி.....

    பதிலளிநீக்கு
  8. குட்டியூண்டு கதை அருமை, கோபு சார்.

    பதிலளிநீக்கு
  9. அருமை அருமை
    "அந்த பத்திரிக்கை அலுவலகத்தைவிட்டு வெளியேறினார்"
    அதிகம் விளக்காமல் சொல்லிப்போனது அருமை
    நல்ல பதிவுதொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. நச் கதை!மிக நல்ல வந்திருக்கு!

    பதிலளிநீக்கு
  11. ஒரே வார்த்தையில் சஸ்பென்சை உடைத்திருப்பதற்கு தனியே ஒரு பாராட்டு!

    பதிலளிநீக்கு
  12. ட்விஸ்ட்டே உன் பெயர்தான் கோபு சாரா?

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா19 மே, 2011 அன்று 1:59 PM

    கடைசியில் நாம் எதிர்பாராதவாறு கொண்டு வந்து முடித்துள்ளீர்கள் அருமை

    பதிலளிநீக்கு
  14. முடிவு சூப்பர்.எதிர்பார்க்கவில்லை இப்படியொரு அர்த்தமுள்ள முடிவை.

    ஃபோட்டோஸ் இணைத்திருக்கும் விதம் அருமை.
    வாழ்த்துகள் சார்.

    பதிலளிநீக்கு
  15. எதிர்பாராத முடிவு சார். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  16. கண்டது கற்க பண்டிதனாவான். பத்திரிக்கை ஆபீசில் படிக்க விருபமில்லாவிட்டால் எப்படி?. முடிவு அருமை. பாராட்டுகள்..

    பதிலளிநீக்கு
  17. இரத்தின சுருக்க கதை ஐயா
    கடைசி வரியில்
    அத்தனை அர்த்தம்
    அபாரம்

    பதிலளிநீக்கு
  18. ”நச்”சென்று ஒரு கதை. ஆனால் பாவம் ”ரவிக்குமார்”-ஐ நினைத்தால் தன்னையறியாமல் ”உச்” வெளியானது.

    பதிலளிநீக்கு
  19. அடடா.. இது தெரியாம போச்சே.. ம்ம்.. இனிமே அடுத்த வேலைல புத்தியா புழைக்கட்டும்..

    பதிலளிநீக்கு
  20. வாவ்.... நல்ல ட்விஸ்ட். உங்கள் சிறுகதைத் தொகுப்பு பரிசு பெற்றமைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  21. தவறு சரியென்பது காலம், இடம் சார்ந்தது என்று புரியவைத்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  22. ரவிகுமார் மட்டும் எந்தக்கதையோ, கட்டுரையோ, ஜோக்குகளோ, செய்திகளோ படிக்கவில்லை என்றும், யாரிடமும் எந்த அரட்டைப்பேச்சுகளும் பேசவில்லை என்ற உண்மை மேனேஜருக்குப் புலப்பட்டது.//
    கழுதைக்கு வாழ்க்கைப்பட்டு உதைக்கு பயப்படலாமா?
    பேய்க்கு வாழ்க்கைப்பட்டு புளியமரத்திறகு பயப்படலாமா??
    பத்திரிகை ஆபீஸில் வேலைக்குச் சேர்ந்து படிக்க பயப்படலாமா?
    சும்மா படித்து வெளுத்துக்கட்டியிருக்க வேண்டாமோ??
    தகுதியுள்ளது தானே தப்பிப்பிழைக்கும்!!

    பதிலளிநீக்கு
  23. அருமை ..

    எதிர்பாரத திருப்பம்.

    மிகவும் இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  24. //வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
    வாவ்.... நல்ல ட்விஸ்ட். உங்கள் சிறுகதைத் தொகுப்பு பரிசு பெற்றமைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.//

    தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
    என்றும் அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  25. கே. பி. ஜனா... said...
    //நச் கதை!மிக நல்ல வந்திருக்கு!

    கே. பி. ஜனா... said...
    //ஒரே வார்த்தையில் சஸ்பென்சை உடைத்திருப்பதற்கு தனியே ஒரு பாராட்டு!//

    தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

    குட்டிக்கதைகள் ஏராளமாக எழுதி புகழ் வாய்ந்த தங்களின் பாராட்டு, வஸிஷ்டர் வாயால் பிரும்மரிஷி
    என்பதுபோல, எனக்கு மிக்க மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிப்பதாக உள்ளது. மிகவும் சந்தோஷம்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    பதிலளிநீக்கு
  26. சுந்தர்ஜி said...
    //ட்விஸ்ட்டே உன் பெயர்தான் கோபு சாரா?//

    அடிக்கும் வெய்யிலுக்கு, மிகப்பெரிய ஐஸ் பாறையை என் தலையில் வைத்து விட்டீர்களே! இது நியாயமா!

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  27. அன்புடன் வருகை தந்து, அழகிய கருத்துக்கள் கூறி, என்னைப் பாராட்டி வாழ்த்தி உற்சாகப்படுத்தியுள்ள என் பாசமுள்ள உடன்பிறப்புக்களாகிய

    திருவாளர்கள்:
    மோஹன் தாமேஷ் சார்
    கலாநேசன் சார்
    வேடந்தாங்கல் - கருன் சார்
    சி.பி.செந்தில்குமார் சார்
    ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம் சார்
    எல்.கே சார்
    ஜி.எம்.பாலசுப்ரமணியன் ஐயா
    ரமணி சார்
    கந்தசாமி சார்
    ஏ.ஆர்.இராஜகோபலன் சார்
    வெங்கட் சார்
    என் எழுத்துலக குருநாதர் ரிஷபன் சார்
    முனைவர் இரா. குணசீலன் சார்

    ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  28. அன்புடன் வருகை தந்து, அழகிய கருத்துக்கள் கூறி, என்னைப் பாராட்டி வாழ்த்தி உற்சாகப்படுத்தியுள்ள என் பாசமுள்ள உடன்பிறப்புக்களாகிய

    திருமதி மிடில் கிளாஸ் மாதவி அவர்கள்
    திருமதி சித்ரா அவர்கள்
    திருமதி துளஸி கோபால் அவர்கள்
    திருமதி திருமதி bs ஸ்ரீதர் அவர்கள்
    திருமதி கோவை2தில்லி அவர்கள்
    திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்
    திருமதி சாகம்பரி அவர்கள்

    ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  29. தமிழ்மணத்திலும், இன்ட்லியிலும் இந்தப்படைப்புக்கு ஆதரவாக வாக்குகள் அளித்துள்ள என் அன்புச் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் விசேஷமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  30. குட்டிக் கதை சூப்பர்.முடிவு நல்லா இருந்தது.நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  31. ஜிஜி said...
    //குட்டிக் கதை சூப்பர்.முடிவு நல்லா இருந்தது.நன்றி ஐயா//

    மிக்க நன்றி, ஜிஜி மேடம்.

    பதிலளிநீக்கு
  32. ஐயா அருமை! கதையை வாசிக்க எடுத்துக் கொண்ட நேரத்தை விட அதன் கருத்தை கண்டுபிடிக்க எடுத்துக் கொண்ட நேரம்தான் அதிகம்;)
    நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  33. இளமதி October 17, 2012 4:05 PM
    //ஐயா அருமை! கதையை வாசிக்க எடுத்துக் கொண்ட நேரத்தை விட அதன் கருத்தை கண்டுபிடிக்க எடுத்துக் கொண்ட நேரம்தான் அதிகம்;)//

    அடடா, என்னால் உங்கள் பொன்னான நேரம் கொஞ்சம் கெட்டதோ?

    ஸாரி .... ஆனாலும் உங்களுக்கு ஓர் யோசனை சொல்கிறேன்.

    இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படும் போது, பின்னூட்டங்களில் ஒருசில தாமரைகள் [ரோஸ் கலரில்] அழகாக மலந்திருக்கும். அதையும் கொஞ்சம் படிச்சுக்கோங்கோ. தெளிவு கிடைக்கும்.

    அநேகமாக தாமரை மலராத பதிவுகளே இல்லை என்றே சொல்லலாம். சிலவற்றில் ஒன்றோ இரண்டோ மலர்ந்திருக்கும். சிலவற்றில் தாமரைத்தடாகமே இருக்கும். அதெல்லாம் ஒரு சீஸன்.

    இதில் இரண்டாவதாக மலர்ந்துள்ள தாமரையில் உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் அனைத்துக்குமான பதிலகளை அப்படியே புட்டுப்புட்டு வைத்துள்ளார்கள் பாருங்கள். அது தான் அவர்களின் ஸ்பெஷாலிடி. ;))))))

    //நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்!!!//

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ’யங் மூன்’

    பிரியமுள்ள
    VGK

    பதிலளிநீக்கு
  34. என்னமோ ஏதோ என்று நினைத்தால் விஷயம் இப்படிப் போகுதா?

    பதிலளிநீக்கு
  35. ஆமா பத்திரிக்கை ஆபீஸில் வேலை பாரத்துண்டு எதுவுமே படிக்காம சும்ம இருந்தா எப்படி.

    பதிலளிநீக்கு
  36. ரவி குமாருக்கு பதவி உயர்வு கொடுக்கப் போறார்ன்னு இல்ல நினைச்சேன். இப்படி வெச்சீங்களே ஆப்பு .

    BE ROMAN IN ROME அப்படீன்னு சொல்லுவாளே அது இதுதானோ?

    குட்டிக்கதை
    உங்களுக்கு ஒரு
    ஷொட்டுக்கதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya June 2, 2015 at 10:08 PM

      //ரவி குமாருக்கு பதவி உயர்வு கொடுக்கப் போறார்ன்னு இல்ல நினைச்சேன். இப்படி வெச்சீங்களே ஆப்பு .

      BE ROMAN IN ROME அப்படீன்னு சொல்லுவாளே அது இதுதானோ?

      குட்டிக்கதை, உங்களுக்கு ஒரு ஷொட்டுக்கதை//

      தாங்க் யூ வெரி மச் ஜெயா :)

      நீக்கு
  37. அக்காங்க். பத்திரிக்க ஆபீசுல வேலக்கு வந்துபிட்டு எதுமே படிக்காம இருந்திச்சுனா எப்பூடி.

    பதிலளிநீக்கு
  38. நல்லா இருக்கு. இங்க ஒரு பழமொழி சொன்னா பொருந்தாமதான் இருக்கும் ஆனா சொல்ல தோணறதே. பேய்க்கு வாக்கப்பட்டா புளியமரத்துல ஏரித்தானே ஆகணும். பத்திரிகை ஆபீசுல வேலைக்கு சேர்ந்துட்டு எதையுமே படிக்காம இருந்தா எப்படி

    பதிலளிநீக்கு
  39. படிக்கப் புடிக்காத ஆளுக்கு...பத்திரிக்கை ஆபீஸா...டிஸ்மிஸ்-சரிதான்!!!

    பதிலளிநீக்கு
  40. எதிர்பாராத முடிவு! சிந்திக்க வைத்தது!

    பதிலளிநீக்கு
  41. அதானே... பத்திரிகை ஆபீஸுல வேலை பார்க்கறவங்க கண்ணையும் காதயும் ஷார்ப்பான கவனமாக வைத்துக்கொள்வதுமட்டுமில்லாமல்.. நிறைய விஷயங்களை படிச்சு தெரிஞ்சுக்கணுமே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ ஸ்ரத்தா, ஸபுரி...

      வாங்கோ, வணக்கம். வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு