"நித்யா, நாம் வழக்கமாக சந்திக்கும் பார்க்குக்கு இன்று ஈவினிங் வழக்கமான நேரத்திற்கு வந்துடு.
நம்ம கல்யாணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால், நாம் நிறைய வேலைகள் பார்க்க வேண்டி இருக்கும்.
கல்யாணத்திற்கு முன்பு, இதுவே நமது கடைசி சந்திப்பாக வைத்துக் கொள்வோம்.
இருவருக்கும் கல்யாணம் என்று முடிவான பிறகு, பார்க் பீச் என்று தனிமையில் நாம் சந்திப்பது தேவையில்லாதது மட்டுமல்ல, யார் கண்ணிலாவது பட்டால், அவர்கள் வம்பு பேசவும் இடமளித்து விடும்” என்றான் செல்போனில் பேசிய ரமேஷ்.
ரமேஷின் பேச்சு நித்யாவுக்கு நியாயமாகப் பட்டதால் ”மாலையில் கட்டாயம் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் சந்திப்போம்” என்றாள்.
அவரவர்கள் வீட்டில் வெவ்வேறு டிசைனில் தனித்தனியே பிரிண்ட் செய்திருந்த திருமண அழைப்பிதழ்களை பரஸ்பரம் ஒருவொருக் கொருவர் கொடுத்துக் கொண்டனர், வாழ்த்திக் கொண்டனர்.
....................
....................
....................
....................
....................
....................
நேரில் கலந்து கொள்ள இயலாமைக்கு இருவருமே ஒருவருக்கொருவர் வருத்தமும் தெரிவித்துக் கொண்டனர்.
....................
....................
....................
....................
....................
அவர்களும் தான் என்ன செய்வார்கள் .... பாவம் !
நித்யாவின் திருமணம் திருப்பதி மலையில், அதே தேதியில் ரமேஷின் திருமணம் ஸ்வாமி மலையில்.
-o-o-o-o-o-o-o-
ஹா ஹா ஹா ஹா ஹா ஹய்யோ ஹய்யோ....
பதிலளிநீக்குஆஹா..... கடைசியில் ஒருத்தர் ஒருத்தர் கிட்ட இருந்து தப்பிச்சிட்டாங்களா???? :-))))))
பதிலளிநீக்குசீரியஸ் பதிவு எழுதுறீங்கன்னு பார்த்தா இப்பிடி கவுத்துட்டீங்களே ஹே ஹே ஹே ஹே....
பதிலளிநீக்குஇப்போ காதலும், கல்யாணமும் கூட, அரசியல் கூட்டணி மாதிரி ஆயிடுத்து!
பதிலளிநீக்குசரிதானா வைகோ சார்? நான் உங்களைத் தான் mean பண்ணேன். தவறுதலா அவரோன்னு நினைச்சுடாதிங்கோ.
இப்ப உள்ள காலத்துக்கு பொருத்தமான குட்டிக்கதை,,
பதிலளிநீக்குஅய்யா ... உண்மைக்கதை அல்லது உண்மை சம்பவம் என சப் டைட்டில் கொடுத்திருக்கலாம்.. அருமை. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஹஹாஹா காதல் தோல்வியாள பையன் சோகத்தில தாடிவளர்த்துக்கொண்டும் பொண்ணு வாழ்க்கையே வெறுத்தது போலவும் இருக்காமல், இந்த முடிவு நல்லது தான்.
பதிலளிநீக்குவாழ்க்கையின் எதார்த்தத்தை எதிர்பாராத திருப்பத்தோடு சொல்லியிருக்கிறீர்கள்
பதிலளிநீக்குநல்ல பதிவு ஐயா
அருமை அருமை
பதிலளிநீக்குசுருக்கமாகச் சொல்லப்பட்ட
இன்றைய யதார்த்தம்
தொடர வாழ்த்துக்கள்
(தங்கள் படைப்பைச் சொல்கிறேன்)
நித்யாவுக்கு கோவிந்தா
பதிலளிநீக்குரமேஷுக்கு அரோகரா
ரொம்ப நல்ல இருக்கு ஐயா ...
பதிலளிநீக்குஹஹ்ஹா நல்லா சிரிக்க வெச்சீங்க
பதிலளிநீக்குஇந்த ஜோக் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும்
பதிலளிநீக்குமீண்டும் ரசித்தேன்.
பாவமென்று
பதிலளிநீக்குஹைய்யோ...ஹைய்யோ...
பதிலளிநீக்குஇந்தக் கதையை 2011ல் இருப்பதால் யூகிக்க முடிந்தது. ஆனாலும் நீங்களும் இப்படி யோசித்தது எனக்குப் பிடித்திருந்தது கோபு சார்.
பதிலளிநீக்குநல்லா இருக்கு சார் இது! மாறுதலாய் ஒரு சிந்தனை.
பதிலளிநீக்குஹா..ஹா...
பதிலளிநீக்குநித்யாவின் திருமணம் திருப்பதி மலையில், அதே தேதியில் ரமேஷின் திருமணம் ஸ்வாமி மலையில்.///
பதிலளிநீக்குஅய்யய்யோ நான் என்னமோ நினைச்சு ஏமாந்துட்டனே!!
எதிபார்க்காத முடிவு... இக்காலத்துக்கேற்ற முடிவு தான்.. அசத்தலான கதை..
பதிலளிநீக்குநல்ல சஸ்பென்ஸ்!!
பதிலளிநீக்குகேள்விப்பட்ட ஜோக்கையே, கதையாக மாற்றி, ஒரு சிறு பதிவாகவும் வெளியிட்டது, உங்கள்க்ரியேட்டிவ் அணுகலைக் காட்டுகிறது. வாழ்த்துக்கள். இந்த பதிவை தமிழ்மணம் மூலம் படித்தேன்
பதிலளிநீக்குஇந்தக்குட்டியூண்டு சிறுகதையையும் பெரிதாக நினைத்து, மிகப்பெரிய வரவேற்வு அளித்து, வருகை தந்து சிறப்பித்து, தங்கள் மேலான கருத்துக்களைக் கூறி பின்னூடம் அளித்து, பாராட்டுக்கள் தெரிவித்து, என்னை உற்சாகப்படுத்தியுள்ள என் அன்பு உடன்பிறப்புக்கள் அனைவருக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
பதிலளிநீக்குஇன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் வோட்டு அளித்துள்ள அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.
என்றும் அன்புடன் தங்கள் vgk
அப்படிபோடுங்க வை.கோ சார்! காதல்ல இதுல்லாம் சகஜமப்பா!
பதிலளிநீக்குஅடடா.. இப்படி ஏமாத்திபிட்டீங்களே..ம்ம்
பதிலளிநீக்குதிரு மோகன்ஜி சார் &
பதிலளிநீக்குதிரு ரிஷபன் சார்,
இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
மோகன்ஜி said...
பதிலளிநீக்கு//அப்படிபோடுங்க வை.கோ சார்! காதல்ல இதுல்லாம் சகஜமப்பா!//
அப்படியா! அனுபவிச்சு சொல்வது போல உள்ளது.OK
சத்தியமா எதிர்பார்க்கலை சார்.
பதிலளிநீக்குகோவை2தில்லி said...
பதிலளிநீக்கு//சத்தியமா எதிர்பார்க்கலை சார்.//
நன்றி மேடம்.
விருந்தினர் வருகையால் மிகவும் பிஸியாகிவிட்ட தாங்கள் வருகை தந்து பின்னூட்டம் தருவீர்கள் என்று நானும் ‘சத்தியமா எதிர்பார்க்கலை’ மேடம்.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள்.
பதிலளிநீக்குஅதுபோலவே, உங்களது கதை மிகச்சிறிதாக இருந்தாலும் ரசிக்கவும், சிரிக்கவும் வைத்தது.
அய்யா உங்களுடைய கதை சிறியது .ஆனால் அதி உள்ள கருத்து பெரியது ... மிகவும் அற்புதம் ...
பதிலளிநீக்குசுவாரசியமானது இந்த கதை நன்றி அய்யா.
nunmadhi said...
பதிலளிநீக்குகடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள்.
அதுபோலவே, உங்களது கதை மிகச்சிறிதாக இருந்தாலும் ரசிக்கவும், சிரிக்கவும் வைத்தது.//
அன்புள்ள கெளரி லக்ஷ்மி,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
அன்புடன் vgk
VijiParthiban said...
பதிலளிநீக்குஅய்யா உங்களுடைய கதை சிறியது .ஆனால் அதி உள்ள கருத்து பெரியது ... மிகவும் அற்புதம் ...
சுவாரசியமானது இந்த கதை நன்றி அய்யா.//
தங்கள் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
நித்யாவின் திருமணம் திருப்பதி மலையில்,
பதிலளிநீக்குஅதே தேதியில் ரமேஷின் திருமணம் ஸ்வாமி மலையில்.
தற்போதைய நிதர்சன நித்யாக்கள் !!???
"திருமண மலைகளும் ....... மாலைகளும் !"
பதிலளிநீக்குதிருப்பதி மலை
ஸ்வாமி மலை என்று மலகளும் வேறு !
கல்யாணமாலைகளும் வேறு !
அழகான தலைப்பு !
இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்குநித்யாவின் திருமணம் திருப்பதி மலையில்,
அதே தேதியில் ரமேஷின் திருமணம் ஸ்வாமி மலையில்.
//தற்போதைய நிதர்சன நித்யாக்கள் !!???//
வாங்கோ வாங்கோ
தற்போதைய உலகின் நிதர்சன சமாச்சாரங்களை உணர்ந்து கொடுத்துள்ள பின்னூட்டத்திற்கு நன்றிகள்.
இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்கு"திருமண மலைகளும் ....... மாலைகளும் !"
திருப்பதி மலை
ஸ்வாமி மலை என்று மலகளும் வேறு !
கல்யாணமாலைகளும் வேறு !
//அழகான தலைப்பு !//
தலைப்’பூ’ போலவா மேடம்?
வருகைக்கு நன்றி.
என்ன ஒரு சஸ்பென்ஸ்? என்ன ஒரு கிளைமேக்ஸ்? பத்தே வரிகளில் சிறந்த சிறுகதை.
பதிலளிநீக்குஹா ஹா நல்ல ட்விஸ்ட் வச்சுட்டிங்க.
பதிலளிநீக்குகதையில திடீர் திருப்பம், எதிர்பாரத திருப்பம், பஞ்ச் டயலாக் இதெல்லாம் உங்களுக்குக் கை வந்த கலை.
பதிலளிநீக்குஆனா இந்த குட்டியூண்டு கதையில இப்படி ஒரு திருப்பமா?
சான்சே இல்லை.
என்னை விட சின்னவரா இருந்திருந்தால், ‘அடப்பாவி, எப்படிடா இப்படியெல்லாம் எழுதற’ன்னு சொல்லி முதுகுல ஒரு ஷொட்டு வெச்சிருப்பேன். என்ன பண்ண அண்ணாவாயிட்டேளே,
அதனால ஆன்னு வாயப்பொளந்துண்டு நிக்கறேன்.
Jayanthi Jaya June 2, 2015 at 10:04 PM
நீக்கு//என்னை விட சின்னவரா இருந்திருந்தால், ‘அடப்பாவி, எப்படிடா இப்படியெல்லாம் எழுதற’ன்னு சொல்லி முதுகுல ஒரு ஷொட்டு வெச்சிருப்பேன்.//
அடடா, ஜெயா கையால் முதுகுல ஒரு ஷொட்டு வாங்கும் அந்த சான்ஸ் இல்லாம இப்படி அநியாயமாப் போச்சே ! (
ஓ ஓ.... வேர வேர ஆளுக கூட நிக்கா பண்ணிப்போட்டாங்களா. மொதக் படிக்கேயிலே வேர மாதிரி நெனச்சுப்பிட்டேனே.
பதிலளிநீக்குரியலி நல்லகதை. பாதி படிக்கும் வரையிலும் திருமண ஜோடிகளாக அவர்கள் இருவரையும்தான் நினைக்க தோன்றியது. கடேசில வச்சுட்டீங்களே ட்விஸ்டு
பதிலளிநீக்குதலைப்பயே கொஞ்சம் விரிவு செய்தால்...கதை...இப்படியெல்லாம் எழுத எப்புடி முடியுது?
பதிலளிநீக்குவித்யாசமான சிறுகதை! மாற்றி யோசி என்பது இதுதானோ?
பதிலளிநீக்குஹா ஹா... என்னா ட்விஸ்ட்... முதலில் அவங்க இருவருக்கும் தான் திருமணமோன்னு நினைக்க வைத்து கடைசியில் வேறு வேறு நபருடன் திருமணம் என்று படிக்கும்போது சிரிப்புதான் வந்தது....
பதிலளிநீக்கு@ ஸ்ரத்தா, ஸபுரி
நீக்குவாங்கோ, வணக்கம். ரஸித்து, சிரித்து, பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி.