என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 11 பிப்ரவரி, 2012

அவரவர் பார்வையில் !


அவரவர் பார்வையில்!

By Vai. Gopalakrishnanடாக்டர் ஒருவர் தன் மருத்துவமனைக்குள் வெகு வேகமாக நுழைந்தார். மிகவும் அவசரமானதோர் அறுவை சிகிச்சைக்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். எவ்வளவு சீக்கரமாக முடியுமோ அவ்வளவு சீக்கரமாக வந்து சேர்வதாகத் தொலைபேசியில் ஏற்கனவே சொல்லியிருந்தார். 

தன் உடைகளை அவசர அவசரமாக மாற்றிக்கொண்டு ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைகிறார். பாதையில் நோயாளிச் சிறுவனின் தந்தை பதட்டத்துடன் டாக்டரின் வருகைக்காக காத்திருப்பதை காண்கிறார். 

”ஏன் சார் நீங்க இங்கே வந்து சேர இவ்வளவு தாமதம்?. என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான் என்ற விஷயம் உங்களுக்குத் தெரியாதா?  உங்களுக்குக் கொஞ்சமாவது பொறுப்புணர்ச்சி என்பதே கிடையாதா?” பெற்ற பாசத்தில் உள்ள தந்தை டாக்டரிடம் புலம்பி விட்டார்.

புன்னகைத்த டாக்டர் “என்னை மன்னிக்கவும்; நான் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே இல்லை. தொலைபேசி அழைப்பு எனக்கு வந்ததும், நான் எவ்வளவு சீக்கரமாக இங்கு வந்துசேர முடியுமோ அவ்வளவு சீக்க்ரமாகவே வந்து சேர்ந்துள்ளேன். தாங்கள் இப்போது சற்றே அமைதியாக இருந்தால் தான், நான் என் வேலைகளைக் கவனிக்க முடியும்” என்றார்.

“நான் இப்போது அமைதியாக இருக்க வேண்டுமா?  டாக்டர், உங்கள் பையன் இது போன்ற நிலைமையில் இருந்தால் உங்களால் அமைதியாக இருக்க முடியுமா? உங்கள் மகன் இதுபோல உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” பையனின் தந்தை கோபத்துடன் கத்தலானார்.

மீண்டும் புன்னகை புரிந்த டாக்டர், 

“புனித நூல்கள் என்ன சொல்கிறது தெரியுமா? நாம் அனைவரும் புழுதியிலிருந்தே பிறக்கிறோம் பிறகு கடைசியில் புழுதியிலேயே மறைகிறோம். இடையில் ஏதோ கொஞ்சகாலம் இந்த பூமியில் நாம் வாழ கடவுளால் ஆசீர்வதிக்கப்படுகிறோம்; 

டாக்டர்களாகிய எங்களால் எந்த உயிரையும் இந்த உலகில் என்றுமே நிரந்தரமாகத் தக்க வைத்துவிட முடியாது; 

நீங்கள் இப்போது போய் தங்கள் மகன் உயிருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். கடவுள் அருளுடன் நாங்கள் எங்களால் என்ன செய்யமுடியுமோ அதைச்செய்கிறோம்” என்றார் மிகவும் பொறுமையாக.

”தனக்கு ரத்த சம்பந்தமே இல்லாத,  பிறர் உயிர்கள் விஷயத்தில், அடுத்தவருக்கு அட்வைஸ் பண்ணுவது ரொம்ப சுலபம் தான்” முணுமுணுத்தபடி அமர்ந்தார் அந்தப் பையனின் தந்தை.

பலமணி நேரங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்ததில் டாக்டர் முழுத்திருப்தியுடன் தியேட்டரை விட்டு வெளியேறினார்.

வெளியே புறப்பட்டுச்செல்லும் முன் பையனின் தந்தையிடம் “கடவுள் அருளால் தங்கள் மகனைக் காப்பாற்ற முடிந்தது” என்று சொல்லிவிட்டு அவரின் பதிலுக்காகக் காத்திராமல், "மேலும் ஏதாவது விபரங்கள் தங்களுக்குத் தேவையென்றால் நர்ஸிடம் கேட்டுக்கொள்ளுங்கள்" என்று சொல்லியபடி ஓடிச்சென்று தன் காரில் ஏறி மிக அவசரமாகப் புறப்பட்டு விட்டார், அந்த டாக்டர்.

”ஏன் இந்த டாக்டர் இவ்வளவு ஒரு அரக்க குணம் வாய்ந்தவராக இருக்கிறார்? அவர் சில நிமிடங்களாவது என்னுடன் நின்று பொறுமையாகப் பேசியிருந்தால், என் மகனின் உடல்நிலை பற்றி நான் கேட்டு தெரிந்திருப்பேன் அல்லவா?” என்றார் டாக்டர் சென்ற சில நிமிடங்கள் கழித்துத் தன்னிடம் வந்து நின்ற நர்ஸிடம்.

தன் கண்களில் கண்ணீர் சிந்தியபடி அந்த நர்ஸ் பேசலானாள்: 

”டாக்டரின் மகன் ஓர் சாலை விபத்தில் நேற்று இறந்து போய் விட்டான். உங்கள் மகனின் உயிரைக்காப்பாற்ற நாம் அவரை அழைத்த போது, அவர் தன் மகனின் ஈமச்சடங்குகளை செய்ய சுடுகாட்டில் இருந்தார்; 

இருப்பினும் ஓடோடி வந்து உங்கள் மகனின் உயிரை அவர் இப்போது காப்பாற்றி விட்டார். இப்போது அவர் அவசர அவசரமாக ஓடிச்செல்வது, பாதியில் நிறுத்திவிட்டு வந்துள்ள,  அவரின் இறந்து போன மகனின் ஈமச்சடங்குகளை தொடர்ந்து செய்து முடிக்கத்தான்” என்றாள்.

-o-o-o-o-o-o-o-o-
கதையின் நீதி: 

அடுத்தவரின் நிலைமை பற்றி நமக்கு எதுவுமே தெரியாமல், யாரையும் நாம் அவசரப்பட்டு, தப்பாக எடை போட்டு, எதுவும் பேசிவிடக்கூடாது.

[ இது சமீபத்தில் மெயில் மூலம் ஆங்கிலத்தில் எனக்கு வந்த தகவல். என்னால் முடிந்தவரை தமிழாக்கம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது vgk ]   
30 கருத்துகள்:

 1. Nice snippet...Though such Doctors are rare to see today...After all,they are humans too.

  பதிலளிநீக்கு
 2. இந்த வகை சம்பவங்கள் கதைகளில் மட்டுமே நிகழக் கூடும். உண்மை உலகில் நிகழ்வதற்கு வாய்ப்பு இல்லை என்பதே என் கருத்து. நீதிக்காக கதை என்றால், இது சிறப்பான கதை என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 3. கதையாக,நீதியாக பார்த்தால் மனம் சில வினாடிகள் கனத்தது.நடைமுறையில் வாய்ப்பே இல்லை.

  பதிலளிநீக்கு
 4. அன்பின் வை.கோ - கதை நன்று - கதையாகப் பார்க்க வேண்டும் - நிஜத்தில் இது நடக்கவே நடக்காது. கதை கூறும் கருத்து சிறந்தது. எலோரும் இது மாதிரி நடக்க முயற்சிக்க்லாம். ஆனால் இயலாது - நாம் உணர்வின் அடிப்படையில் இயங்குகிறோம். அறிவின் அடிப்படையில் அல்ல .

  நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 5. அடுத்தவரின் நிலைமை பற்றி நமக்கு எதுவுமே தெரியாமல், யாரையும் நாம் அவசரப்பட்டு, தப்பாக எடை போட்டு, எதுவும் பேசிவிடக்கூடாது

  நீதியை புரிந்துகொண்டு நட்க்கவேண்டிய அற்புதக்கதை!

  பதிலளிநீக்கு
 6. "அவரவர் பார்வையில் !

  ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்! எண்ணங்கள்!!

  பதிலளிநீக்கு
 7. My God!
  What apity.
  Ofcourse, sometimes when we are in trouble, we never think of the others problem.
  viji

  பதிலளிநீக்கு
 8. ”கதையின் நீதி:

  அடுத்தவரின் நிலைமை பற்றி நமக்கு எதுவுமே தெரியாமல், யாரையும் நாம் அவசரப்பட்டு, தப்பாக எடை போட்டு, எதுவும் பேசிவிடக்கூடாது”

  இது உண்மையான வரிகள்.

  ஆனால் சம்பவம் இன்றைய சூழ்நிலையில் இப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.

  பதிலளிநீக்கு
 9. எனக்கும் மின்னஞ்சலில் வந்தது. உண்மையாக நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா புரியவில்லை... ஆனால் இப்படி இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்...

  பதிலளிநீக்கு
 10. மனதை நெகிழ வைத்த கதை.கடைசி வரிகளில் சொல்லியிருக்கும் நீதி அருமை.

  பதிலளிநீக்கு
 11. சொல்ல வந்த கருத்துக்காக கதை என்றாலும் அழுத்தம் திருத்தமாக சொல்லப் பட்டு இருக்கிறது. பாராட்டுக்கள் பகிர்ந்தமைக்காக. .

  பதிலளிநீக்கு
 12. True our paradigms determine our attitude, speech and speech. Stephen Covey's famous book, "7 Habits of Highly Effective People" is an authoritative treatise on our attitudes. "Seeking to understand,...and then to be understood" is a great habit to cultivate.

  பதிலளிநீக்கு
 13. In my previous comment, the word speech got repeated twice; it should read speech and behavior.

  பதிலளிநீக்கு
 14. அடுத்தவரின் நிலைமை பற்றி நமக்கு எதுவுமே தெரியாமல், யாரையும் நாம் அவசரப்பட்டு, தப்பாக எடை போட்டு, எதுவும் பேசிவிடக்கூடாது//

  உண்மைதான் சார்.

  பதிலளிநீக்கு
 15. மனம் கனத்து போனது .நிஜத்தில் ஒன்றிரண்டு பேர் இப்படி இருந்தால் கூட போதும், .  //அடுத்தவரின் நிலைமை பற்றி நமக்கு எதுவுமே தெரியாமல், யாரையும் நாம் அவசரப்பட்டு, தப்பாக எடை போட்டு, எதுவும் பேசிவிடக்கூடாது//  சரியா சொன்னீங்க .ஆனா இதனை எத்தனை பேர் புரிந்து நடக்கிறார்கள் ???
  அம்மா எப்பவும் சொல்வாங்க அவசரப்பட்டு வார்த்தையை கொட்ட கூடாது
  தவறாகிபோனாலும் அள்ளி எடுக்க முடியாது.

  பதிலளிநீக்கு
 16. நல்லதொரு கருத்தை அருமையான கதை மூலம் வெளிப்படுத்தியுள்ளீர்கள். தேர்ந்த மொழியாக்கம் மிகவும் ரசிக்கச் செய்தது. மிகவும் நன்றி வை.கோ. சார்.

  பதிலளிநீக்கு
 17. இந்த புரிதல் வந்துவிட்டால் பார்வையின் கோணமே விரிவடையும். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. கதையாயினும் ஏதோ நேரில் பார்த்ததைப்போன்ற பிரம்மையில் மனதை நெகிழ வைத்து விட்டது.இப்படி நல்ல .பெரிய உள்ளஙக்ளும் இன்னும் இருக்கின்றார்களா?

  பதிலளிநீக்கு
 19. "அடுத்தவரின் நிலைமை பற்றி நமக்கு எதுவுமே தெரியாமல், யாரையும் நாம் அவசரப்பட்டு, தப்பாக எடை போட்டு, எதுவும் பேசிவிடக்கூடாது"

  உண்மை தான்

  பதிலளிநீக்கு
 20. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து அழகிய கருத்துக்கள் கூறி வாழ்த்தி சிறப்பித்துள்ள அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  என்றும் அன்புடன் தங்கள் vgk

  பதிலளிநீக்கு
 21. நாம் எப்போதும் நம்மைப் பற்றியேதான் சிந்திக்கிறோம் என்பதை அழுத்தமாக உணர்த்தும் சம்பவம்.

  பதிலளிநீக்கு
 22. அந்த டாக்டர் மிகுந்த மனிதாபிமானம் உள்ளவராக இருந்ததால தான் தன இழப்பை யும் மறந்து இன்னொரு உயிரை கூப்பூற்றி இருக்கார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் May 28, 2015 at 10:58 AM

   //அந்த டாக்டர் மிகுந்த மனிதாபிமானம் உள்ளவராக இருந்ததால் தான், தன் இழப்பையும் மறந்து இன்னொரு உயிரை கா ப் பா ற் றி இருக்கார்//

   புரிதலுக்கு நன்றிகள். அவரும் தங்களைப்போல ஒரு அக்குப்பஞ்சர் டாக்டராக இருப்பாரோ ? மிகவும் நல்லவராக, நியாயமானவராக, மனிதாபிமானம் மிக்கவராக இருப்பதால் எனக்கு இந்த திடீர் சந்தேகம் வந்துள்ளது :)

   நீக்கு
 23. இன்றும் இது போல் எங்கோ ஒரு மருத்துவர் இருந்து கொண்டு தான் இருக்கிறார்.

  மற்ற மருத்துவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம்.

  பதிலளிநீக்கு
 24. ஒரு உசிர கொடுப்பதும் எடுப்பதும் ஆண்டவன் செயல்தான் அந்த டாக்குடரு சாரு ரொம்ப கருணயுடன்தா நடந்துகிட்டிருக்காரு.

  பதிலளிநீக்கு
 25. டாக்டர்களை எல்லாருமே காப்பாற்றும் கடவுளாகத்தான் பார்க்கிறார்கள் அவருக்கும் குடும்பம் மனைவி குழந்தைகள் என்று இருக்கும். அவரின் வலி வேதனைகளை வெளியே காட்டிக்கொள்ளமுடியாத சூழ்நிலை தன் இழப்பையும் மறந்து மற்ற ஒரு உயிரை காப்பாற்றிய பெருந்தன்மை. இது எதயுமே புரிந்து கொள்ளாமல் மற்றவர்களின் ஏச்சு பேச்சுகள். பாவம்தான்

  பதிலளிநீக்கு
 26. நீங்கள் எழுதிய அதி உன்னதமான கதைகளில் இதற்கு டாப் டென்னில் நிச்சயம் இடம் உண்டு...மனதை உருக்கும் கதை..A REAL DOCTOR....அருமை.!!!

  பதிலளிநீக்கு