About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, February 16, 2012

விருது மழையில் தூறிய குட்டிக்கதை !


மீண்டும் மீண்டும் விருதுகள் 


[விருது மழையில் தூறிய குட்டிக்கதை !]


[1] விருதினை அன்புடன் வழங்கியவர்:


திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்மூன்றாவது முறையாக எனக்கு இதே 


விருது வழங்கப்பட்டுள்ளது

என் பேரன்புக்கும், பெரும் மரியாதைக்கும் உரிய மிகப்பிரபல பதிவரும், பல பத்திரிகைகள் மின் இதழ்கள் முதலான ஊடக எழுத்துலகில் மிகப்பிரபலமான எழுத்தாளரும், இன்னும் பல்வேறு தனித்திறமைகளைத் தங்களிடத்தே குவித்து வைத்துக் கொண்டுள்ளவருமாகிய, தங்களின் பொற்கரங்களால் இந்த விருதினை இன்று 16.02.2012 பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் !Madam !

oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo[2] விருதினை அன்புடன் வழங்கியவர்: 


திரு. காரஞ்சன் (சேஷ்) E.S.SESHADRI அவர்கள்


காரஞ்சன் சிந்தனைகள்(சேஷாத்ரி)


இரண்டாவது முறையாக எனக்கு இதே 


விருது வழங்கப்பட்டுள்ளது.


இவ்விருதினை அன்புடன் 15.02.2012 அன்று 
எனக்கு வழங்கியுள்ள அருமை நண்பர் 
திரு. காரஞ்சன் (சேஷ்) அவர்களுக்கு 
என் மனமார்ந்த நன்றிகள்.oooooooooooooooooooooooooooo

நான் பெற்ற இந்த மிகவும் மதிப்பு வாய்ந்த இரண்டு விருதுகளையும், என் அருமை நண்பரும், என் நலம் விரும்பியும், என் எழுத்துலக மானஸீக குருநாதருமான பிரபல எழுத்தாளர் மற்றும் பதிவர் திரு. ரிஷபன் rishaban57.blogspot.com அவர்களுக்கு அன்புடன் சமர்பிக்கின்றேன். 

 

ஒரே நேரத்தில் இரு விருதுகள் பெற்ற திரு. ரிஷபன் அவர்களுக்கு என் அன்பான மனமார்ந்த வாழ்த்துகள்.


to you, Sir

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்.
ooooooooooooooooooooooooooooooooooooooooooooooo


விருதுகள் பெற்ற 
மற்றும் 
விருதுகள் அளித்த 
மகிழ்ச்சியில் 
இதோ ஓர் குட்டிக்கதை 
உங்கள் பார்வைக்காக மட்டுமே!


ஓர் வயதான கணவன் மனைவி. 

கணவன் படுத்த படுக்கையில் நாட்களை எண்ணிக்கொண்டு. 

அவரின் கடைசி ஆசையை தன் அன்பு மனைவியிடம் சொல்லி ”நிறைவேற்றித்தருவாயா?” எனக்கேட்கிறார்.

”எதுவாக இருந்தாலும் நிச்சயமாக நிறைவேற்றிடுவேன்” என்கிறாள் மனைவி.

கணவனின் கடைசி ஆசை: 

தான் கஷ்டப்பட்டு உழைத்து சேமித்த தன் பணம் முழுவதும் [சுமார் ஒரு கோடி ரூபாய்] தான் இறந்த பிறகு தன்னுடனே சேர்த்து புதைத்திட வேண்டும் என்பதே.

மனைவி அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறாள். 

கணவர் டெபாஸிட் செய்திருந்த அவரின் பணமெல்லாம் வங்கியிலிருந்து 1000 ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டு ஒரு பெரிய சூட்கேஸ் நிறைய எடுத்து வந்து, வீட்டில் பத்திரமாக மனைவியால் பாதுகாக்கப்படுகிறது.

கணவன் மனைவிக்கு மட்டுமே தெரிந்த இந்த விஷயம், மிகவும் ரகசியமாகவே பாதுகாக்கப்படுகிறது. பிறருக்கு இந்த விஷயம் கசிந்தால் பிறகு புதைப்பதில் பல்வேறு பிரச்சனைகள் வரக்கூடும் அல்லவா! 

யாராவது புதைத்த அந்தப்பணத்தைத் தோண்டி கொள்ளை அடித்தும் செல்லலாம் அல்லவா! அதனால் மிகவும் உஷாராகவே தேவரகசியமாகவே பாதுகாக்கப் பட்டது.

அந்த நாளும் வந்தது. 

மனைவி அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக கணவனை நல்லடக்கம் செய்யும் இடத்திற்குத் தானும் அந்த மிகப்பெரிய சூட்கேஸை தூக்க முடியாமல் தூக்கிச்சென்று, அதை முதலில் தன் கையாலேயே வைத்துவிட்டு, பிறகு தன் கணவனின் பூத உடலின் நல்லடகத்தில் கலந்து கொண்டு, அவரை சூட்கேஸுடன் புதைத்த அந்த இடத்தை முழுவதும் பூசும் வரை அங்கேயே இருந்து விட்டு வீடு திரும்புகிறாள். 

மற்றவர்களிடமெல்லாம் அந்தப்பெட்டியில் உள்ளவை, என் கணவர் அன்றாடம் எழுதி வந்த பலவருஷ பழைய டயரிகள் மட்டுமே எனச் சொல்லி சமாளித்து விட்டாள்.

சந்தேகப்பட்டுத் தூண்டித்துருவிக் கேட்ட தன் தம்பியிடம் மட்டுமே உண்மையைச் சொல்லும்படியாகி விட்டது அவளுக்கு.

“ஏன் அக்கா மடத்தனமாக இப்படிச்செய்தாய்? என்று மனம் கொதித்துப்போய்க் கேட்டான் தம்பி.

“என் பிரியமான கணவரின் கடைசி ஆசையடா அது. அதை கூட நான் நிறைவேற்றாவிட்டால் என் மனமும் அவர் ஆன்மாவும் எப்படி சாந்தியடையும்?” என்றாள்.  

”நீ செய்த இந்த முட்டாள் தனத்தால் யாருக்கு என்ன லாபம்?” என்றான் தம்பி.

”இந்த என் செயலால் யாருக்கு என்ன நஷ்டம்; உனக்குத்தான் என்ன நஷ்டம்; அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அவர் தன்னுடன் மேலுலகம் வரை கொண்டு செல்ல விரும்பினார்; அவ்வளவு தான்; இதில் என்ன தப்பு இருக்கிறது? ” என்றாள் தொடர்ந்து அந்த அக்காக்காரி.

“பணத்தின் மதிப்புத்தெரியாத பைத்தியக்காரியாக இருக்கிறாயே ... நீ இப்படி” வேறு யாருக்காவது இந்த விஷயம் தெரிந்தால் அவரைப் புதைத்த இடத்தை தோண்டி பணம் முழுவது கொள்ளை போய் விடும், தெரியுமா? என்று தொடர்ந்து வாதம் செய்தான் அவளின் அன்புத் தம்பி.

[இதைக்கேட்டதும் அக்காக்காரிக்கு தன் தம்பி மேல் கோபம் வந்து விட்டது]

/சற்று இடைவேளை/
.............
.....................
............................
...................................
.........................................
...............................................
....................................................
.............................................................
.....................................................................
.............................................................................

”நானா பணத்தின் மதிப்புத் தெரியாதவள்? நானா பைத்தியக்காரி? போடா போக்கத்தவனே ..... 

நான் அவருடன் சூட்கேஸில் அனுப்பியுள்ள தொகை By way of Cheque மட்டுமே; அதுவும் "Account Payee only" என்று Cross செய்யப்பட்டது. 

அதுவும் Payable -  in favour of 'MY BELOVED HUSBAND', only. 

அவரைத்தவிர அந்தப்பணத்தை யாருமே எடுக்க முடியாது. 

ஏன் அவரே கூட இனி அந்தப் பணத்தை எடுக்க முடியாது; 

பைத்தியக்காரா, நான் உன் அக்கா.......டா; 
உனக்கு முன்னாலேயே பிறந்தவளாக்கும்” என்றாள். 

இது எப்படியிருக்கு! 

தங்கள் கருத்தைக்கூறுங்களேன்.

அன்புடன்
vgk


57 comments:

 1. தலையில் குட்டி(ய) கதை என்று நினைத்தேன்.

  விருதுக்கு வாழ்த்துக்கள் அய்யா!

  ReplyDelete
 2. மிக கெட்டிக்காரிதான் அவள்!
  நல்ல கதை

  ReplyDelete
 3. //அவரைத்தவிர அந்தப்பணத்தை யாருமே எடுக்க முடியாது.
  ஏன் அவரே கூட இனி அந்தப் பணத்தை எடுக்க முடியாது; //

  இந்த இடத்தில படித்து சிரித்து விட்டேன் .
  குட்டிகதை ஆனாலும் பல விஷயங்களை சொல்லிசென்ற நீதிக்கதை .

  தங்கள் பெற்ற விருதுகளுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. மீண்டும் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்....

  சாமர்த்தியசாலிதான் அந்தப் பெண்மணி... :)

  ReplyDelete
 5. Congragulations sir, for the awards.

  The story reveals so many things.
  Yes it does shows the todays trent
  viji

  ReplyDelete
 6. நான் பெற்ற இந்த மிகவும் மதிப்பு வாய்ந்த இரண்டு விருதுகளையும், என் அருமை நண்பரும், என் நலம் விரும்பியும், என் எழுத்துலக மானஸீக குருநாதருமான பிரபல எழுத்தாளர் மற்றும் பதிவர் திரு. ரிஷபன் rishaban57.blogspot.com அவர்களுக்கு அன்புடன் சமர்பிக்கின்றேன்.

  என் மனப்பூர்வமான நன்றியும் அன்பும்.

  ReplyDelete
 7. மீண்டும் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!
  கதை அருமை!

  காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 8. மகிழ்ச்சியான செய்தி. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!!!!! :-)

  ReplyDelete
 9. மீண்டும் விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் சார்.

  குட்டி கதை அருமை.

  உங்களிடம் விருது பெற்ற ரிஷபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. :))))))))))))))))

  romba rasichen sir.... romba naal piragu kadhai......... enjoyed every bit of reading exp. thanks a tonne :)))))))))

  kathai class... athanaala virudhukku vazhthu solrathu kooda maranthu pochu parunga.... :D

  வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 11. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!
  கதை அருமை!
  அன்புடன் எம்.ஜே.ராமன்

  ReplyDelete
 12. அன்பின் வை.கோ - விருதுகள் தொடர்ந்து பெற்று வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி. விருது அளித்தவர்களூக்கு நன்றி கூறும் விதம் நன்று. கூடவே ஒரு குட்டிக்கதை. மிக மிக இரசித்தேன். நன்ற். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 13. சார் விருதுகள் பெற்று வழங்கியமைக்கு வாழ்த்துகள்

  சார் குட்டிக் கதை செம சூப்பர்

  ReplyDelete
 14. விருது பெற்றமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்...

  ReplyDelete
 15. அருமை நண்பரும், நலம் விரும்பியும், எழுத்துலக மானஸீக குருநாதருமான பிரபல எழுத்தாளர் மற்றும் பதிவர் திரு. ரிஷபன் அவர்களுக்கு விருது வழங்கி விருதினைப் பெருமைப்படுத்திய அருமையான உயர்ந்த உள்ளத்திற்கு பாராட்டுக்கள்..

  ReplyDelete
 16. விருது மழையில் தூறிய குட்டிக்கதை !

  "சாமர்த்திய மனைவிதான்..
  சமர்த்தோ சம்ர்த்து..

  ReplyDelete
 17. Congratulations sir. Wish you many more milestones. Happy Blogging

  ReplyDelete
 18. மீண்டும் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்

  குட்டிக் கதை எனினும் கெட்டிக் கதைதான்

  ReplyDelete
 19. அருமையான கதை.
  நன்றி ஐயா.

  ReplyDelete
 20. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

  அந்த வயதான மனைவி பலே கில்லாடிதான்.குட்டிக்கதை வெகு ஜோர்.படிக்கும் பொழுது நாற்காலி நுனியில் அமரச்செய்து விட்டீர்கள்.அத்தனை சுவாரஸ்யம்.

  ReplyDelete
 21. விருதுகளுக்கு வாழ்த்துக்கள் சார்.

  குட்டிக்கதையில் வருபவர்,மிக சாமர்த்தியமான பெண்.

  ReplyDelete
 22. மிக நன்றி கோபால் சார்.. உங்கள் பதிவில் என்னை கௌரவித்தமைக்கு.. ரிஷபன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  விருதுகளுக்கே விருதுகள் கொடுக்கிறோம். நாம் பேறு பெற்றவர்கள்..:)

  அந்த கதை எதிர்பாராத ட்விஸ்ட்.. அழகு..:)

  ReplyDelete
 23. விருது மழையில் நனையும் உங்களுக்கு வாழ்த்துகள்..

  அக்காவா கொக்கா !!!.. சாமர்த்தியம் ஜூப்பரப்பு :-))

  ReplyDelete
 24. தங்கள் பெற்ற விருதுகளுக்கு வாழ்த்துக்கள் !
  நல்ல கதை.
  வாழ்த்துக்கள்
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
 25. தொடர்ந்து பெய்யும் விருது மழைக்கும், அழகான அசத்தலான குட்டிக்கதைக்கும் பாராட்டுகள். தங்களிடம் இரட்டைவிருது பெறும் ரிஷபன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. விருதுகளுக்கு வாழ்த்துக்கள் ஐயா.
  சாமர்த்தியமான மனைவி.கதை அருமை.

  ReplyDelete
 27. மீண்டும் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்..

  அந்தப் பெண்மணிகெட்டிக்காரிதான்

  ReplyDelete
 28. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து என்னை மிகவும் மகிழ்வித்த

  திருவாளர்கள்:
  ===============

  நிஜாமுதீன் அவர்கள்

  சென்னை பித்தன் ஐயா அவர்கள்

  வெங்கட் நாகராஜ் அவர்கள்

  ரிஷ்பன் சார் அவர்கள்

  ஈ.எஸ். சேஷாத்ரி அவர்கள்

  மணக்கால் சார் அவர்கள்

  சீனா ஐயா அவர்கள்

  ரத்னவேல் நடராஜன் ஐயா அவர்கள்

  மற்றும்

  திருமதிகள்:
  ============

  ஏஞ்சலின் அவர்கள்

  விஜி அவர்கள்

  சித்ரா அவர்கள்

  கோமதி அரசு அவர்கள்

  ஷக்திப்ரபா அவர்கள்

  திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் அவர்கள்

  இராஜராஜேஸ்வரி அவர்கள்

  மீரா அவர்கள்

  ராஜி அவர்கள்

  ஸாதிகா அவர்கள்

  ரமாரவி [ராம்வி] அவர்கள்

  தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்

  அமைதிச்சாரல் அவர்கள்

  கோவைக்கவி
  வேதா இலங்காதிலகம் அவர்கள்

  கீதமஞ்சரி அவர்கள்

  ஜிஜி அவர்கள்

  சந்திரவம்சம் அவர்கள்

  ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.

  அன்புடன்
  vgk

  ReplyDelete
 29. மீண்டும் விருதுகள் பெற்றதற்கு வாழ்த்துகள் சார்.

  விருதுகளை பெற்றுக் கொண்ட ரிஷபன் சாருக்கும் வாழ்த்துகள்.

  கதை அருமை. சாமர்த்தியமான பெண் தான்....

  ReplyDelete
 30. கோவை2தில்லி said...
  //மீண்டும் விருதுகள் பெற்றதற்கு வாழ்த்துகள் சார்.

  விருதுகளை பெற்றுக் கொண்ட ரிஷபன் சாருக்கும் வாழ்த்துகள்.

  கதை அருமை. சாமர்த்தியமான பெண் தான்....//

  சற்றே தாமதமாக வந்துள்ள கோவை2தில்லி எக்ஸ்ப்ரஸுக்கு என் நன்றிகள். vgk

  ReplyDelete
 31. என் சகோதர எழுத்தாளன் ரிஷபனை இரு விருதுகள் அளித்து கௌரவித்தமைக்கு நன்றிகள். அவர் இன்னும் பல விருதுகளைப் பெறவேண்டும்.

  குட்டிக்கதையா அது..

  சுட்டிக்கதை. சுறுசுறுப்பான கதை.
  சுகம்தேடும் சோம்பேறிகளைச் சுடர வைக்கும் கதை.
  கடுகு அளவு ஞானம் சுமந்த கதை. ஆனால் அதன் வீரியம் அதிகம்.

  பணம் சார். பண்ம்.. கோடி ரூபாயை கணவனுடன் புதைக்க எந்த தர்மபத்தினியும் விரும்பமாட்டாள். தரும பத்திரர் புத்தி அப்படி.

  புதைந்தும் புதையவில்லை அவரது பணமோகம்.

  அருமை. அருமை. அருமை.

  ReplyDelete
 32. ஹ ர ணி said...
  //என் சகோதர எழுத்தாளன் ரிஷபனை இரு விருதுகள் அளித்து கௌரவித்தமைக்கு நன்றிகள். அவர் இன்னும் பல விருதுகளைப் பெறவேண்டும்.//

  விருதுகளை நான் என் எழுத்துலக மானஸீக குருநாதருக்கு சமர்பித்துள்ளேன், ஐயா.

  என் ஆரம்ப நாட்களில் [2006 ஆம் ஆண்டு] அவரின் தூண்டுகோள் மட்டும் எனக்குக் அவ்வப்போது கிடைக்காமல் போயிருந்தால், நான் யாருக்குமே தெரியாத ஒரு அட்ரஸ் இல்லாதவனாகவே ஆகியிருப்பேன்.

  இதுபற்றி நான் பலமுறை எழுதியிருக்கிறேன், ஐயா. அதில் ஒன்றுக்கான இணைப்பு இதோ:

  http://gopu1949.blogspot.in/2011/12/3-of-3.html

  குட்டிக்கதையா அது..

  சுட்டிக்கதை. சுறுசுறுப்பான கதை.

  சுகம்தேடும் சோம்பேறிகளைச் சுடர வைக்கும் கதை.

  கடுகு அளவு ஞானம் சுமந்த கதை. ஆனால் அதன் வீரியம் அதிகம்.

  பணம் சார். பண்ம்.. கோடி ரூபாயை கணவனுடன் புதைக்க எந்த தர்மபத்தினியும் விரும்பமாட்டாள். தரும பத்திரர் புத்தி அப்படி.

  புதைந்தும் புதையவில்லை அவரது பணமோகம்.

  அருமை. அருமை. அருமை.//

  பாரட்டுக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, ஐயா.

  அன்புடன்
  vgk

  ReplyDelete
 33. ஒரு கோடி ரூபாவை தனது மனைவிக்கும் தராது தன்னுடன் புதைக்கச் சொன்ன அந்த பெரிய மனிதனைத்தான் நினைத்துப் பார்க்கின்றேன். இப்படியும் ஒரு மனிதன் உலகத்தில் இருப்பானா? இருக்கவும் கூடாது . ஆனால் பொருத்தமான மனைவி . குட்டிக் கதையும் அசத்தல். குட்டி போடும் உங்கள் விருதுகளின் பட்டியலும் அசத்தல் . உங்கள் கதைக் கருக்களுக்கு எத்தனை விடுதுகளும் கொடுக்கலாம் சார் . தொடரட்டும் பாராட்டுக்களின் பட்டியல் . விரியட்டும் உங்கள் கதைகளின் பட்டியல். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 34. சந்திரகௌரி said...
  //ஒரு கோடி ரூபாவை தனது மனைவிக்கும் தராது தன்னுடன் புதைக்கச் சொன்ன அந்த பெரிய மனிதனைத்தான் நினைத்துப் பார்க்கின்றேன். இப்படியும் ஒரு மனிதன் உலகத்தில் இருப்பானா? இருக்கவும் கூடாது. ஆனால் பொருத்தமான மனைவி. குட்டிக் கதையும் அசத்தல். குட்டி போடும் உங்கள் விருதுகளின் பட்டியலும் அசத்தல். உங்கள் கதைக் கருக்களுக்கு எத்தனை விருதுகளும் கொடுக்கலாம் சார் . தொடரட்டும் பாராட்டுக்களின் பட்டியல் . விரியட்டும் உங்கள் கதைகளின் பட்டியல். வாழ்த்துக்கள்//

  தங்களின் அன்பான வருகைக்கும் அசத்தலான கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள், மேடம்.

  தங்களின் தனிப்பட்ட பாராட்டுக்களும் மிகவும் மகிழ்வளிக்கும் வித்யாசமான வாழ்த்துக்களும் என்னை மிகவும் உற்சாகப்படுத்துவதாக உள்ளது மேடம். மிகவும் சந்தோஷம்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 35. விருதுகளை குவித்தமைக்கு வாழ்த்துகள் ஐயா..மகிழ்ச்சி..அந்த குட்டிக் கதை சுவை..

  ReplyDelete
 36. மதுமதி said...
  //விருதுகளை குவித்தமைக்கு வாழ்த்துகள் ஐயா..மகிழ்ச்சி..அந்த குட்டிக் கதை சுவை..//

  தங்களின் அன்பான வருகையும், மகிழ்ச்சியான வாழ்த்துக்களும்,
  சுவையான கருத்துக்களும் எனக்கு மிகவும் உற்சாகம் அளிப்பதாக உள்ளது, ஐயா. நன்றிகள்.

  ReplyDelete
 37. மகிழ்ச்சியான செய்தி.

  மீண்டும் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்....


  அருமை. அருமை..கதை

  ReplyDelete
 38. மகிழ்ச்சியான செய்தி.

  மீண்டும் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்....


  அருமை. அருமை..கதை

  ReplyDelete
 39. கணேஷ் said...
  //மகிழ்ச்சியான செய்தி.

  மீண்டும் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்....

  அருமை. அருமை..கதை//

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, கணேஷ். அன்புடன் vgk

  ReplyDelete
 40. விருதினை ஏற்று கொண்ட விதமும் பகிர்ந்த விதமும் அருமை.உங்கள் பதிவுகள் என்றாலே தனி முத்திரை தான்.கதை பகிர்வு நல்லாயிருக்கு.

  ReplyDelete
 41. //Asiya Omar said...
  விருதினை ஏற்று கொண்ட விதமும் பகிர்ந்த விதமும் அருமை.உங்கள் பதிவுகள் என்றாலே தனி முத்திரை தான்.கதை பகிர்வு நல்லாயிருக்கு.//

  நீ...ண்...ட... நாட்களுக்குப்பிறகு தங்கள் வருகை மகிழ்வளிக்கிறது.

  நன்றி நன்றி நன்றி

  ReplyDelete
 42. miga nunukkamana visayangalayum migavum satharanama solli irukkurerkal melum vaalvil athikam per ippadi payanpadutha theriyamal ullaargal enpathayum solliyirukkinga

  ReplyDelete
 43. //nagappan meenakshi sundaram said...
  miga nunukkamana visayangalayum migavum satharanama solli irukkurerkal melum vaalvil athikam per ippadi payanpadutha theriyamal ullaargal enpathayum solliyirukkinga.

  நாகப்பன் மீனாக்ஷிசுந்தரம்:

  மிக நுணுக்கமான விஷயங்களையும் மிகவும் சாதாரணமாகச் சொல்லி இருக்கிறீர்கள். மேலும் வாழ்வில் அதிகம் பேர் இப்படி பயன்படுத்தத் தெரியாமல் உள்ளார்கள் என்பதையும் சொல்லியிருக்கீங்க!//

  தங்கள் புதிய வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, நண்பரே. vgk

  ReplyDelete
 44. விருது பெற்ற அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!! மிக்க மகிழ்ச்சி அண்ணா..கதையில் வரும் அந்த அம்மா ரொம்ப கெட்டிக்காரிதான்..

  ReplyDelete
 45. ராதா ராணி said...
  //விருது பெற்ற அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!! மிக்க மகிழ்ச்சி அண்ணா..கதையில் வரும் அந்த அம்மா ரொம்ப கெட்டிக்காரிதான்..//

  அன்பு சகோதரி,

  தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  நன்றி ....

  அன்புடன்
  vgk
  அண்ணா

  ReplyDelete
 46. ரசிக்கும்படியான பதிவு சார்!
  ////
  நான் அவருடன் சூட்கேஸில் அனுப்பியுள்ள தொகை By way of Cheque மட்டுமே; அதுவும் "Account Payee only" என்று Cross செய்யப்பட்டது.

  அதுவும் Payable - in favour of 'MY BELOVED HUSBAND', only.

  அவரைத்தவிர அந்தப்பணத்தை யாருமே எடுக்க முடியாது.

  ஏன் அவரே கூட இனி அந்தப் பணத்தை எடுக்க முடியாது;
  ///////
  சிரித்துவிட்டேன் சார்! ஆனால் யோசிக்க வைக்கிறது, சிறு யோசனை தான் ஆனால் இன்றைய நவீன யுகத்தையும் அதில் பணத்தின் மதிப்பையும் காட்டியதாக இருந்தது! பகிர்வுக்கு நன்றி சார்!

  ReplyDelete
 47. யுவராணி தமிழரசன் November 21, 2012 3:52 AM

  வாருங்கள், யுவராணி! இந்த வார 19-25.11.2012 வலைச்சர ஆசிரியராகக் கூடுதல் பொறுப்புகள் எடுத்துக்கொண்டும், நேரம் ஒதுக்கி, இங்கு வருகை தந்து கருத்துக்கூறியுள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. ;)

  //ரசிக்கும்படியான பதிவு சார்!//

  மிக்க சந்தோஷம்மா!

  *****நான் அவருடன் சூட்கேஸில் அனுப்பியுள்ள தொகை
  By way of Cheque மட்டுமே; அதுவும் "Account Payee only"
  என்று Cross செய்யப்பட்டது.

  அதுவும் Payable - in favour of 'MY BELOVED HUSBAND', only.

  அவரைத்தவிர அந்தப்பணத்தை யாருமே எடுக்க முடியாது.

  ஏன் அவரே கூட இனி அந்தப் பணத்தை எடுக்க முடியாது; *****

  //சிரித்துவிட்டேன் சார்!//

  தங்களின் சிரிப்பொலியைக் கற்பனை செய்து பார்த்தேன். ;)))))

  //ஆனால் யோசிக்க வைக்கிறது, சிறு யோசனை தான் ஆனால் இன்றைய நவீன யுகத்தையும் அதில் பணத்தின் மதிப்பையும் காட்டியதாக இருந்தது!//

  கணவனின் கடைசி ஆசையையும் மனைவி நிறைவேற்ற வேண்டும்.

  அதே நேரம் கஷ்டப்பட்டு தன் கணவன் ஈட்டிய பணத்தையும் வீணாக இழந்து விடக்கூடாது.

  அதனால் மட்டுமே அந்த கெட்டிக்காரியான மனைவி அவ்வாறு முடிவெடுத்திருக்கிறாள்.

  கணவனை இழந்தாலும் அவள் இந்த நவீன யுகத்தில் வாழ்ந்தாக வேண்டுமே! அதற்கு அவளுக்குப் பணம் அவசியம் வேண்டுமே!!

  //பகிர்வுக்கு நன்றி சார்!//

  தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், யுவராணி.

  நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னுடைய ஒருசில பதிவுகளுக்கு வருகை தாருங்கள். கருத்துக்கூறுங்கள். எல்லா படைப்புக்களிலுமே ஓரளவு நகைச்சுவை தூக்கலாகவே இருக்கும்.

  02.10.2012 அன்று வலைச்சர ஆசிரியராக இருந்த திருமதி. மஞ்சு பாஷிணி அவர்களின் பதிவு ஒன்று கீழே கொடுத்துள்ளேன்.

  http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

  இந்த இணைப்பைத் தாங்கள் சேமித்து வைத்துக்கொண்டால், என் பதிவுகளுக்கு அவ்வப்போது வந்துபோக சுலபமாக இருக்கும்.

  பலவிதமான தலைப்புகள் இணைப்புகளுடன் அதில் என் அன்புத்தங்கை மஞ்சுவால் INDEX செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 48. அந்த லிங்கை புக்மார்க் செய்துவிட்டேன் சார்! கண்டிப்பாக அனைத்து பதிவுகளுக்கும் வலம் வருவேன்!!!

  ReplyDelete
 49. யுவராணி தமிழரசன் November 21, 2012 7:48 AM

  //அந்த லிங்கை புக்மார்க் செய்துவிட்டேன் சார்! கண்டிப்பாக அனைத்து பதிவுகளுக்கும் வலம் வருவேன்!!!//

  ரொம்ப சந்தோஷம்மா... மிக்க நன்றி, யுவராணி.

  கோயில்களில் அங்கப்பிரதக்ஷணம் போல, அடிப்பிரதக்ஷணம் என்று ஒன்றும் செய்வார்கள். அதாவது காலடியை ஒவ்வொன்றாக வைத்து மெதுவாக நடந்து செல்லுதல். முதலில் வலதுகால் பாதம், பிறகு அதை ஒட்டி, அதாவது வலதுகால் விரல்களை ஒட்டி இடது காலின் குதிகால் இருப்பது போல, பிறகு இடது காலின் விரல்களை ஒட்டி வலது காலின் குதிகால் இருப்பதுபோல CLOSE STEP-BY-STEP வைத்து வலம் வருவார்கள் [பிரதக்ஷணம் செய்வார்கள்] அதன் பெயர் அடிப் பிரதக்ஷணம்.

  அதுபோல தாங்கள் என் பதிவுகள் ஒவ்வொன்றையும் மெதுவாகவே வலம் வாருங்கள்.

  வருகை தரும் பதிவுகளில் உள்ள குறை / நிறை இரண்டையும் மறக்காமல் கருத்தாக பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.

  அன்புடன்,
  VGK

  ReplyDelete
 50. விருதுக்குப் பாராட்டுகள். கதையில் மனைவி கணவனின் ஆசையை நிறைவேற்றிய விதம் மெச்சத்தகுந்தது.

  ReplyDelete
 51. //”நானா பணத்தின் மதிப்புத் தெரியாதவள்? நானா பைத்தியக்காரி? போடா போக்கத்தவனே .....

  நான் அவருடன் சூட்கேஸில் அனுப்பியுள்ள தொகை By way of Cheque மட்டுமே; அதுவும் "Account Payee only" என்று Cross செய்யப்பட்டது.

  அதுவும் Payable - in favour of 'MY BELOVED HUSBAND', only.

  அவரைத்தவிர அந்தப்பணத்தை யாருமே எடுக்க முடியாது.

  ஏன் அவரே கூட இனி அந்தப் பணத்தை எடுக்க முடியாது;

  பைத்தியக்காரா, நான் உன் அக்கா.......டா;
  உனக்கு முன்னாலேயே பிறந்தவளாக்கும்” என்றாள்.

  இது எப்படியிருக்கு! //
  ஹா ஹா அருமையான மனைவிதான். கணவர் சொல்லைத்தட்டாம நிறைவேற்றிவிட்டாளே.

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் May 29, 2015 at 6:10 PM

   //ஹா ஹா அருமையான மனைவிதான். கணவர் சொல்லைத்தட்டாமல் நிறைவேற்றிவிட்டாளே.//

   அவள் சமத்தோ சமத்து. கணவர் சொல்லைத்தட்டாமல் நிறைவேற்றிவிட்டாள் காலணா செலவு இல்லாமலேயே !

   மிகவும் புத்திசாலிப்பெண் ......... பூந்தளிர் போலவே :)

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான நகைச்சுவையான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

   Delete
 52. விருது பெற்றதற்கும், அந்த விருதை உங்கள் எழுத்துலக மானசீக குருவுக்கு சமர்ப்பித்ததற்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 53. மறுக்கா விருதுக்கு வாழ்த்துகள் புருசன் பேச்சு தட்டாத புத்திசாலி பொஞ்சாதிதா.

  ReplyDelete
  Replies
  1. mru October 17, 2015 at 3:06 PM

   வாங்கோ, வணக்கம்மா.

   //புருசன் பேச்சு தட்டாத புத்திசாலி பொஞ்சாதிதா.//

   :) கரெக்டூஊஊஊ :)

   மிக்க மகிழ்ச்சி + நன்றிம்மா.

   Delete
 54. விருதுக்கும் பகிர்வுக்கும் வாழ்த்துகள். குட்டி கதையா குட்டிய கதையா அந்த மனைவி அதி புத்திசாலிதான்

  ReplyDelete
 55. செம கதை...இது விமர்சனப்போட்டியிலும் கலந்துகொண்டதென எண்ணுகிறேன்...விருதுகளை பொறுத்தவரையில்..."பிறற்கொருவன் கொடுப்பதெல்லாம்...தனக்கே கொடுத்துக்கொள்கிறான்" என்ற ரமணரின் வாக்கு உண்மையானது...

  ReplyDelete