About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, February 6, 2012

THE VERSATILE BLOGGER AWARD

THE VERSATILE BLOGGER AWARD

திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்கள் 
அளித்துள்ள விருது



மேற்படி விருது ஒன்று பதிவர் திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களால் எனக்கு 04.02.2012 அன்று வழங்கப்பட்டுள்ளது.   http://ushasrikumar.blogspot.in

விருதுடன் அவர்கள் அளித்துள்ள சிறப்புரை:
Vai .Gopalakrishnan of http://gopu1949.blogspot.in/ 
- a really broad spectrum and informative blog.

இவர் USHA SRIKUMAR'S MUSINGS என்ற வலைத்தளத்தில் ஆங்கிலத்தில் பதிவுகள் இட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு பன்முகத்திறமையாளர் ஆவார். 

இவருக்கு மிகவும் ஆர்வமுள்ள விஷயங்கள்: 

வாசித்தல், எழுதுதல், தன்னைச்சுற்றி நிகழும் அனைத்தையும் கூர்ந்து கவனித்தல், ஓவியம், கலை மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரித்தல்,   அந்தக்கலைகளை பிறருக்கு சொல்லிக்கொடுத்தல், மிகவும் ருசியான சமையல் செய்தல், தமிழ் பத்திரிகைகளுக்குப் படைப்புகள் அனுப்புதல், தன் வலைத்தளத்தில் பதிவுகள் இடுதல் முதலியன.

இவருடைய படைப்புகள் மங்கையர் மலர், சினேகிதி போன்ற பிரபல தமிழ் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. 

இது போன்ற பல்வேறு திறமைகளை தனக்குள் கொண்டுள்ள ஓர் மிகச்சிறந்த சாதனையாளரான இவர் என்னை எப்படித்தேடிக் கண்டுபிடித்து இந்த விருதை எனக்கு அளித்தார் என்பது தான் எனக்கு மிகவும் புரியாத புதிராகவும், வியப்பளிக்கும் விஷயமாக உள்ளது.



[திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்கள்]

எனக்கு விருது அளித்து மகிழ்வித்துள்ள திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைக்கூறிக்கொள்கிறேன்.



கொடுத்துள்ள நிபந்தனைப்படி எனக்கு மிகவும் ஆர்வமான ஏழு விஷயங்களையும் இதில் தெரிவித்து, எனக்கு மிகவும் பிடித்தமான ஐந்து பதிவர்களுக்கு இந்த விருதை நான் என் மூலம் அளிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். 

=============================================

VERSATILE என்றால் 

(1)ஒரு விஷயத்திலிருந்து வேறு விஷயத்திற்கு சுலபமாக மாறுகிற [கவனிக்கிற] [Capable of turning easily from one thing or subject to another] 

(2) எந்த வேலையையும் செய்யும் திறமை வாய்ந்த 
[Applying oneself readily to any task.] 

(3) பலவிதத் திறமைகளுள்ள [many-sided]

(4) பல கலைகளில் வல்லமையுள்ள [Example: Versatile Author]

என்று தெரிய வருகிறது. 

============================================

இந்த விருது ”Nitya's Knits Quoin" என்ற வலைப்பதிவில் எழுதி வரும் திருமதி நித்யகல்யாணி http://nityakalyani-kalmat.blogspot.in என்ற மற்றொரு ஆங்கிலப்பதிவர் அவர்களால் திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த விருதைப் பெற்றவர் தனக்கு ஆர்வமுள்ள ஏதாவது ஏழு விஷயங்களைப்பற்றி சுருக்கமாகக் கூறிவிட்டு, தான் மிகவும் விரும்பும் தகுதி வாய்ந்த வேறு ஐந்து பதிவர்களுக்கு இந்த விருதை தன் மூலம் PASS ON செய்ய வேண்டுமாம். அப்போது தான் இந்த விருதை அவர் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாம். தொடர்பதிவுகள் போல இது ஒரு தொடர் விருதாக அமையப்போவது நிச்சயம்.

எனக்கு மிகவும் பிடித்தமான ஏழு விஷயங்கள்: 

1) எழுதுதல்
2) வாசித்தல் 
3) படம் வரைதல்
4) ஒரு சில கைவேலைகள் செய்தல்
5) திரைப்பட நகைச்சுவைக் காட்சிகளை
    மட்டும் எப்போதாவது தொலைகாட்சியில் ரசிப்பது
6) மிகவும் விரும்பிப்படிக்கும் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுதல்
7) மிகவும் ருசியான ஒருசில சிற்றுண்டிகளை விரும்பிச் சாப்பிடுதல்




என் மூலமாக இந்த விருதை நான் வழங்க விரும்பும் ஐந்து பதிவர்கள் [பன்முகத் திறமையாளர்கள்] பற்றிய பட்டியல் இதோ:



1) திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் 
    [மணிராஜ்] 
    jaghamani.blogspot.com




2) திருமதி ஷக்தி ப்ரபா அவர்கள் 
    [மின்மினிப்பூச்சிகள்] 
    minminipoochchigal.blogspot.com




3) திருமதி சாகம்பரி அவர்கள்
    [மகிழம்பூச்சரம்]




4) திருமதி ராஜி அவர்கள்
    [கற்றலும் கேட்டலும்]




5) குமாரி நுண்மதி அவர்கள்
     [தமிழ்த்தேடல்]



விருது பெறும் ஐவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.



தாங்களும் மேற்படி விருதினை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக தங்களின் விருப்பங்கள் ஏழு பற்றி தங்கள் பதிவினில் கூறிவிட்டு, இதே முறையில், தங்களுக்கு மிகவும் பிடித்தமான தகுதி வாய்ந்த மற்ற ஐந்து பதிவர்களுக்கு, இந்த விருதினை அளித்து மகிழுங்கள். 

இந்தத் தொடர் சங்கிலி அறுந்து போகாமல் அவர்களையும் இதுபோலவே செய்யச் சொல்லுங்கள். மேலும் விபரங்களுக்கு: http://ushasrikumar.blogspot.in

நன்றி.

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்




42 comments:

  1. விருது பெற்ற உங்களுக்கும், உங்களிடம் விருது வாங்கியவர்களுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. Respected Sir,
    Thank you for accepting this award given by new blogger like me.
    Congratulations to you and the other recepients of this Versatile Blogger Award.

    ReplyDelete
  3. விருது பெற்ற உங்களுக்கும் உங்களிடம் பெறுபவர்களுக்கும் வாழ்த்துகள் ஐயா..

    ReplyDelete
  4. தங்கள் பின்னூட்டங்கள் ஏற்கனவே மிக அருமையான விருதுகளை பெற்ற மகிழ்வை எனக்கு அளித்துள்ளன. தங்களுடைய இந்த விருது பெருமைமிக்கது. ஒரு பதிவராக எனக்கு கிடைத்த பெருமைமிக்க அங்கீகாரம். இதனை மிக மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு தொடர்கிறேன். மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  5. உங்களுடைய விருதுக்கு பாராட்டுகள். நீங்கள் விருது வழங்கிய அனைவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  6. விருதுக்கு பாராட்டுக்கள். என் வலைதளத்தை குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  7. விருது பெற்றமைக்கும் வழங்கியமைக்கும் வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  8. விருது பெற்ற உங்களுக்கும், உங்களிடம் விருது வாங்கியவர்களுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. Sir,
    I am happy.
    For the right person from the right person this award is been given.
    Congragulations.
    viji

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. தாங்கள் ஒரு பன்முகத்திறமையாளர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. மிகத் தகுதியானவரையே இவ்விருது அடைந்துள்ளது. தாங்களும் தகுதியானவர்களுக்கே பரிந்துரை செய்துள்ளீர்கள். தங்களுக்கும் தங்களிடமிருந்து விருது பெறுபவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் வை.கோ.சார்.

    ReplyDelete
  12. வாழ்த்துகள் வைகோ சார்.

    ReplyDelete
  13. விருது பெற்ற தங்களுக்கும் ஏனையோருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. Congratulations Sir. Wish you many more milestones in blogging.

    ReplyDelete
  15. விருது பெற்ற தங்களுக்குப் பாராட்டுக்கள்..,

    அந்தவிருதை பெருமையோடு எங்களுக்கு அளித்தமைக்கு மகிழ்ச்சி..

    ReplyDelete
  16. மனமுவந்த பாராட்டுக்கள்!

    ReplyDelete
  17. விருது பெற்ற உங்களுக்கும் உங்களால் விருது வழங்கப்பட்டவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்....

    தொடரட்டும் உங்களுக்குக் கிடைக்கும் விருதுகள்....

    ReplyDelete
  18. விருது பெற்ற உங்களுக்கும் உங்களால் விருதுகளை அடைந்த அன்புத் தோழமைகளுக்கும் இனிய வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  19. மனம் கனிந்த பாராட்டுக்கள் ஸார்..

    ReplyDelete
  20. ”வனப்பு” என்ற வலைத்தளப் பதிவர் திருமதி சந்திரகெளரி என்பவரால்

    http://kowsy-vanappu.blogspot.in/2012/02/blog-post.html

    LIEBSTER BLOG AWARD என்று ஒன்று எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேற்படி விருதினை வழங்கிய திருமதி சந்திரகெளரி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  22. மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. விருது பெற்ற உங்களுக்கும், உங்களால் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.....

    ReplyDelete
  24. இந்தப் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து வாழ்த்தருளியுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  25. வெற்றி மீது வெற்றி வந்து
    உங்களைச் சேரும்!

    அதை வாங்கித்தந்த பெருமை
    உங்கள் திறமையைச் சேரும்!!//

    தொடர்ந்து சாதனைகள் புரிய
    எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. அன்பின் வை.கோ - விருது பெற்ற தங்களுக்கும் - தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐவருக்கும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  27. நன்றி சார். சில நாட்களாக வேலைப் பளுவின் காரணமாய் இங்கு வர முடியவில்லை. இன்றே பதிவிடுகிறேன் சார்.

    ReplyDelete
  28. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சார் ! உங்கள் பதிவுகள் எல்லாமே சூப்பர், விருது உங்களுக்கு வெகு பொருத்தமே!

    ReplyDelete
  29. cheena (சீனா) said...
    அன்பின் வை.கோ - விருது பெற்ற தங்களுக்கும் - தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐவருக்கும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

    அன்பின் சீனா ஐயா வணக்கம்.

    தங்களின் இந்த தங்கமான மறுமொழியே என்னைப்பொருத்தவரை மிகப்பெரிய விருதாகும். நன்றி ஐயா.

    ReplyDelete
  30. nunmadhi said...
    //நன்றி சார். சில நாட்களாக வேலைப் பளுவின் காரணமாய் இங்கு வர முடியவில்லை. இன்றே பதிவிடுகிறேன் சார்.//

    அன்புள்ள கெளரி லக்ஷ்மி,

    வாங்க! எப்படி இருக்கீங்க?

    ரொம்ப சந்தோஷம்.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  31. Thanai thalaivi said...
    //விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சார் !//

    மிக்க நன்றி.

    //உங்கள் பதிவுகள் எல்லாமே சூப்பர்//

    அடடா! எதை வைத்து இந்த முடிவுக்கு வந்துள்ளீர்களோ! ;))

    இருப்பினும் மனமார்ந்த நன்றிகள்.

    //விருது உங்களுக்கு வெகு பொருத்தமே!//

    தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்விக்கின்றன.

    சந்தோஷம். நன்றியோ ந்ன்றிகள்.

    ReplyDelete
  32. மிக அற்புதமான விஷயம் இது.... தனக்கு கிடைத்த விருதினை எல்லோருக்கும் பகிர்வது.... அது போல பல்கலை திறமையாளார் திருமதி உஷா ஸ்ரீகுமார் மேடம் அவர்களிடம் இருந்து உங்களுக்கு விருது கிடைத்தமைக்கு அன்பு வாழ்த்துகள் சார்...

    உங்களிடம் இருந்து விருதினைப்பெற்ற நண்பர்களுக்கும் என் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்....

    உங்களுக்கு பிடித்தமான விருப்பங்கள் 7 ரசித்து வாசித்து மகிழ்ந்தேன்....

    அன்பு நன்றிகளுடன் கூடிய வாழ்த்துகள் வை.கோபாலகிருஷ்ணன் சார்.

    ReplyDelete
  33. அன்புடைய திருமதி மஞ்சுபாஷிணி அவர்களே,

    வாருங்கள். வணக்கம்.

    தங்களின் அன்பான வருகையும், அழகான விரிவான கருத்துக்களும், வாழ்த்துகளும் எனக்கு மன மகிழ்ச்சியளிக்கின்றன.

    தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    என்றும் அன்புடன்,
    VGK

    ReplyDelete
  34. Versatile award உங்களுக்கு மிகப் பொருத்தமே.

    ReplyDelete
  35. தங்கள் கிரீடத்தில் மீண்டும் ஓரு பெருமை மிக்க விருதூ. மனம் நிறைந்த வாழ்த்துகளுடன்.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் May 28, 2015 at 10:28 AM

      //தங்கள் கிரீடத்தில் மீண்டும் ஓரு பெருமை மிக்க விருது. மனம் நிறைந்த வாழ்த்துகளுடன்.//

      மிக்க நன்றி. :)

      Delete
  36. இந்த மாதிரி விருதெல்லாம் உனக்குக் கிடைக்குமா ஜெயந்தி.

    ஓ கிடைக்குமே. ராத்திரி தூக்கத்துல கனவு காணும்போது கிடைக்கும்.

    ஏதோ அண்ணா ப்ளாகுக்கு வந்தோமா, அவருக்கு விருது கிடைச்சதுக்கு சந்தோஷப் பட்டோமான்னு இரும்மா தாயே. ரொம்ப ஆசைப் படாதே.

    ReplyDelete
  37. விருது பெற்ற தாங்களுக்கும் தங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்

    ReplyDelete
  38. வாழ்த்துகள் சார் விருது பெற்றதற்கும் பகிர்நது கொண்டதற்கும் வெரஸடைலுக்கு அர்த்தமாக நீங்கள் இருப்பதால் உங்களுக்கு அந்த விருதைக்கொடுத்து பெருமைப்படுத்தி இருக்காங்க திருமதி உஷாஸ்ரீகுமார் மேடம் அவங்க திறமைகளையும் இங்கு பகிர்ந்து கொண்டது சிறப்பு.

    ReplyDelete
  39. versatile - உங்களுக்கு பொருத்தமான வார்த்தைதான்...விருதும் பொருத்தம்தான். வாழ்த்துகள்...

    ReplyDelete
  40. பொருத்தமான விருது! வாழ்த்துகள் சார்!

    ReplyDelete