என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 11 பிப்ரவரி, 2012

விருது மழையில் தூறிய கவிதைத் துளிகள் !

விருது மழையில் தூறிய 
கவிதைத் துளிகள் !


2
ஸ்ரீராமஜயம்

பேராசிரியர் திரு. ஹரணி ஐயா அவர்களால் 
எனக்கு அன்பின் அடையாளமாக
10.02.2012 அன்று

அன்பின் விருது

என்ற விருது 
மீண்டும் ஒரு முறை வழங்கப்பட்டுள்ளது 
என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

எனது புகைப்படம்
பேராசிரியர்
திரு.ஹரணி அவர்கள்


விருது வழங்கிய திரு ஹரணி அவர்களுக்கு 
என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அன்புடன் 
வை. கோபாலகிருஷ்ணன்


o============oOo=============o

தொடர்ச்சியாக பல விருதுகளை பலர் மூலம் அடுத்தடுத்துப் பெற்ற மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் என் மனம் சிறு குழந்தைபோல மாறி இரு கவிதைகளை எழுதத் தொடங்கியது.  [ கவிதைகள் தானா என்று எனக்குள் ஓர் சந்தேகம் வேறு இன்னும் உள்ளது ]  

அவை இதோ உங்களின் பார்வைக்கு: 


அடித்த வெய்யிலில்
புழுங்கிய குடைக்கு
ஆனந்தக் குளியல்
மழை வந்ததும்.

=============


நான் பெரியவள் ஆனதும்
உனக்கும் ஒரு ரெயின் கோட்
வாங்கித் தருவேன்!


பாப்பா சொன்னது
மழையில் நனைந்து வந்த 
யானையைப்பார்த்து.

=o=o=o=o=o=o=o=

எனக்கு மிகவும் பிடித்தமான ஏழு விஷயங்கள்: 

1) எழுதுதல்

2) வாசித்தல் 

3) படம் வரைதல்

4) ஒரு சில கைவேலைகள் செய்தல்

5) திரைப்பட நகைச்சுவைக் காட்சிகளை

    மட்டும் எப்போதாவது தொலைகாட்சியில் ரசிப்பது

6) மிகவும் விரும்பிப்படிக்கும் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுதல்

7) மிகவும் ருசியான ஒருசில சிற்றுண்டிகளை விரும்பிச் சாப்பிடுதல்நான் பெற்ற இந்த விருதினை என் அன்புக்குரிய கீழ்க்கண்ட ஐந்து பதிவர்களுக்கு அளித்து மகிழ விரும்புகிறேன்.”ஆரண்ய நிவாஸ்” திரு. ஆர். ராமமூர்த்தி


திரு. வெங்கட் நாகராஜ்


திரு. கே.பி. ஜனா


மாத்தியோசி திரு. கணேஷ்


கரஞ்சன் (சேஷ்) திரு. E.S. சேஷாத்ரிவிருது பெற்ற உங்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

அன்புடன்
vgk
34 கருத்துகள்:

 1. எப்போதோ தாங்கள் கவிதைகள் எனக்கு
  அவ்வளவாகப் பிடிக்காது என
  சொன்னதாக ஞாபகம்
  ஆனால் கவிதைக்கு உங்களைப் பிடித்திருக்கிறதே ?
  அதற்காகவாவது இனி
  கவிதைகளைத் தொடர வேண்டுகிறேன்
  மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. மனமது குழந்தை ஆகிவிட்டால்
  பார்ப்பதெல்லாம் அழகிய கவிதை தான்..
  எழுதிய கவிதையில் இருந்து
  தங்களின் உள்ளத்தின் நிறமும்
  புலனாகிறது ஐயா..
  விருதுகள் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. மீண்டும் விருது பெற்றதற்கு வாழ்த்துகள் சார். கவிதை அழகு......

  பதிலளிநீக்கு
 4. மீண்டும் விருது பெற்றதற்கு வாழ்த்துகள் சார். கவிதை அழகு

  பதிலளிநீக்கு
 5. மீண்டும் விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் சார்.
  படங்கள் , கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
 6. அன்புள்ள ஐயா..

  நான் நேற்றே வந்து பார்த்துவிட்டேன். உங்களின் அளவுகடந்த அன்பிற்கு நான் என்ன செய்வது. திகைக்கிறேன். திளைத்து அதனை அனுபவிக்கிறேன். நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 7. அன்புள்ள ஐயா..

  நான் நேற்றே வந்து பார்த்துவிட்டேன். உங்களின் அளவுகடந்த அன்பிற்கு நான் என்ன செய்வது. திகைக்கிறேன். திளைத்து அதனை அனுபவிக்கிறேன். நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 8. விருதுகள் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா..
  கவிதை அழகு.
  வாழ்த்துக்கள்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 9. கவிதை சாரலில் நானும் நனைந்தேன் .ஹைக்கூ கவிதைகள் மிக அருமை .

  என் அன்பான வேண்டுகோள் உங்க சிறுகதைகள் பதிவிடும்போது ஒவ்வொரு ஹைக்கூ கவிதையுடன் எழதுங்கள்
  அடிக்கடி நாங்களும் சிறு பிள்ளைகளாய் மாறி விளையாடிசந்தோஷப்பட்டுக்கறோம்

  பதிலளிநீக்கு
 10. ஹைய்யோ.... கவிதைகள் அழகு வை.கோ சார். வெயிலில் புழுங்கிய குடையின் மனமறிந்து உரைத்த அழகென்ன? ஆனை பார்த்து பாப்பா சொன்ன அக்கறையின் அழகென்ன?

  மிகவும் ரசித்தேன். விருது மழையில் நனைந்த மனத்தின் கவித்துளிகள் அருமை.பாராட்டுகள் வை.கோ.சார்.

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்துக்கள் !!!!
  உங்கள் கவிதைகள் அருமை. மழையில் நாங்களும் நனைந்தோம். தொடர்ந்து சிறப்புகள் குவிய வாழ்த்துகக்ள்

  பதிலளிநீக்கு
 12. தொடர வேண்டுகிறேன்

  விருதுகள் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. விருதுகள் தொடர வாழ்த்துக்களய்யா!

  பதிலளிநீக்கு
 14. அடித்த வெய்யிலில்
  புழுங்கிய குடைக்கு
  ஆனந்தக் குளியல்
  மழை வந்ததும்.


  விருது மழையில் ஆனந்தக்குளியலுக்கு வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 15. தங்களிடம் விருது பெற்ற அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 16. அன்புள்ள மாமாவுக்கு !

  நன்றிகள் கலந்த வாழ்த்துக்கள்.

  பதிவுலகில் நீங்கள் ஆலமரம். நான் காளான் போன்று.

  இந்த விருதை பெரும் தகுதி தங்களுக்கு மட்டுமே .
  எது எப்படியோ இதன் மூலம் எனக்கு நல்ல உற்சாகம் கிடைத்துள்ளது.

  மீண்டும் ஒரு முறை நன்றி.

  பதிலளிநீக்கு
 17. எனக்கு மீண்டும் ஒரு விருது! அதுவும் உங்களிடமிருந்து எனும்போது மகிழ்ச்சி அதிகமாகிறது....

  மிக்க நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் ஐயா!
  குழ்ந்டை உள்ளத்தோடு எழுதிய கவிதைகள் அருமை! தங்களின் விருது என்ககு மகிழ்ச்சியளிக்கிறது! மனமார்ந்த நன்றி!

  பதிலளிநீக்கு
 19. தங்கள் கவிதை மழையில் நனைந்தேன்!
  தங்களுக்கு விருது என்றதும் மகிழ்ந்தேன்!!
  தாங்கள் எனக்கொரு விருது கொடுத்ததும், மகிழ்ச்சியில் திளைத்தேன்!!!
  அத்தனையும் திகட்டவே திகட்டாத
  தேன்!தேன்!!தேன்!!!

  பதிலளிநீக்கு
 20. வாழ்த்துகள் சார்.படங்கள் கவிதைகள் மிகவும் அருமை.

  பதிலளிநீக்கு
 21. தாங்கள் எனக்களித்த விருதினை, நானும் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன்....

  http://venkatnagaraj.blogspot.in/2012/02/blog-post_16.html

  மீண்டும் நன்றி.

  பதிலளிநீக்கு
 22. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து வாழ்த்தியுள்ள அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  என்றும் அன்புடன் தங்கள் vgk

  பதிலளிநீக்கு
 23. விருது பெற்றமைக்கும் அதன் விளைவாக கவிதைகள் ஊற்றெடுத்தமைக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு

 24. அடித்த வெய்யிலில்
  புழுங்கிய குடைக்கு
  ஆனந்தக் குளியல்
  மழை வந்ததும்.

  இதுபோல கவிதைகள் படிக்கும்போது நாங்களும் ஆனந்தக்குளியல் போட்டது போல இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் May 29, 2015 at 5:59 PM

   வாங்கோம்மா, வணக்கம்மா.

   அடித்த வெயிலில் புழுங்கிய குடைக்கு
   ஆனந்தக் குளியல் மழை வந்ததும்.

   //இதுபோல கவிதைகள் படிக்கும்போது நாங்களும் ஆனந்தக்குளியல் போட்டது போல இருக்கு.//

   :) சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும், ஆனந்தக்குளியலுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். :) வாழ்க !

   நீக்கு
 25. உங்களுக்கு விருதுக் குவியல்

  எங்களுக்கு ஆனந்தக் குளியல்

  கவிதை அருமை.

  விருதுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 26. அடித்த வெயிலில் புழுங்கிய குடைக்கு ஆனந்த குளியல் மழை வந்ததும் ( எனக்கும் கூடதா)

  பதிலளிநீக்கு
 27. யான ரெயின் கோட்டு போட்டுகிட்டு குளியல் போட்டா எப்பூடி இருக்குமுனு நெனச்சி சிரிப்பாணி பொத்துகிச்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mru October 17, 2015 at 1:59 PM

   வாங்கோ முருகு, வணக்கம்மா.

   //யான ரெயின் கோட்டு போட்டுகிட்டு குளியல் போட்டா எப்பூடி இருக்குமுனு நெனச்சி சிரிப்பாணி பொத்துகிச்சி//

   :))))) மகிழ்ச்சி + நன்றி. :)))))

   நீக்கு
 28. விருதுக்கு வாழ்த்துகள். குதூகலமான கவிதைகளுக்கும் படங்களுக்கும். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 29. வாத்யாரே...நீங்கள் தொடர்ந்திருந்தால் எக்கச்சக்கமான கவிதைகளை எழுதியிருக்கமுடியும். விரு(ந்)து மழையில் ஆனந்தக் குளியல் போட்டுவரும் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஆசானே.

  பதிலளிநீக்கு