என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 9 பிப்ரவரி, 2013

என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் ! [ பகுதி 2 ]என் வீட்டு ஜன்னல் கம்பி 
ஒவ்வொன்றாய்க் 
கேட்டுப்பார் !

அனுபவம்
By
வை. கோபாலகிருஷ்ணன்

                                                           
[ பகுதி 2 ]

-oOo-


எங்களின் 5ம் எண் கட்டடமான 
’சிவஷக்தி டவர்ஸ்’க்கு அடுத்த 

6ம் எண் கட்டடத்தின்  [MEHAR PLAZA] 
கட்டுமானப்பணிகள் தொடங்கி 
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் 
கட்டட வேலைகள் முழுவதுமாக 
முடிவடையாமல் பாதியில் 
அரைகுறையாகவே நிற்கின்றன.

அதற்குள் அதன் தரைத்தளத்தில் 
“CARE” CHEMISTRY TUITION CENTRE  + 
BANK OF BARODA, TIRUCHI HEAD OFFICE 
ஆகிய இரண்டும் ஆரம்பிக்கப்பட்டு 
எழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன.  

-=-=-=-=-=-=-=-நான் அன்று இந்த வீட்டினை வாங்குவதற்கு செலவழித்த பெரும் தொகையில், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தினில் தனித்தனியாக நான்கு மிகப்பெரிய பங்களாக்களே வாங்கியிருக்க முடியும் தான்.

அதனால் என்ன பிரயோசனம் ? 

”ஆடி அடங்கும் வாழ்க்கையடா .... ஆறடி நிலமே சொந்தமடா” என்றொரு சினிமா பாடல் உண்டு. 

இப்போது அந்த ஆறடி நிலமும் சொந்தமில்லாமல் செய்து விட்டார்கள் - ’மின் மயானம்’ என்ற புதிய கண்டுபிடிப்பின் மூலம்.  

நாம் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவர்கள் [அதாவது கண்டு பிடித்தவர்கள்] என்றும் நீடூழி வாழட்டும் !

இனிமேல் அந்தப்பாடலை ”ஆடி அடங்கும் வாழ்க்கையடா, அரை மணி நேரத்தில் அஸ்தியடா” என மாற்றியும்கூட பாடலாம் தான்.

நமக்கு சொந்தமாக எவ்வளவு வீடுகள் இருப்பினும் நாம் தங்கப்போவதோ, தலை வைத்துப் படுக்கப்போவதோ ஒரே ஒரு இடம் மட்டும் தானே!  

நாலு இடங்களில் நமக்கு வீடுகள் உள்ளன என்பதால், ஓர் இடத்தில் தலையையும், ஓர் இடத்தில் உடம்பையும், மற்ற இரண்டு இடங்களில் நம் கைகால்களையும் வைத்து வாழமுடியுமா என்ன?

எனவே நம்மால் நம் சக்திக்குத் தகுந்தவாறு தேர்ந்தெடுக்கப்படும் ஒரே ஒரு வீடு, நாம்  நிம்மதியாகவும், சந்தோஷமாக வாழ்வதற்கு ஏற்றதாகவும், நமக்கு மிகவும் மனதுக்குப் பிடித்தமானதாகவும், நாம் பழகிய ஓர் இடமாகவும், ஓரளவுக்காவது  பாதுகாப்பானதாகவும், எந்த ஒரு அத்யாவஸ்ய பொருள் வாங்கவும் அங்குமிங்கும் பஸ் பிடித்து, ரயில் பிடித்து, ஆட்டோ பிடித்து, டாக்ஸி பிடித்து அலையாதபடியாகவும், HEART OF THE CITY யாகவும் அமைந்து விட்டால் மிகவும் நல்லது அல்லவா! 

நம் குழந்தைகள் படிக்கும் பள்ளியோ, நாம் வணங்கும் தெய்வத்தின் கோயில்களோ, எல்லாமே நம் வீட்டிலிருந்து நடந்தே செல்லும் கூப்பிடு தூரத்தில் அமைந்திருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் அல்லவா!!

முக்கியமாக நம் பசிக்கும் ருசிக்குமான  உணவகங்களும், மருத்துவ வசதிகளும் எந்த நாளும் எந்த நேரமும் கிடைக்கும்படியாக, அவைகள் நம் வீட்டுக்கு அருகிலேயே இருக்க வேண்டியது மிக மிக முக்கியம் அல்லவா!!!  

நான் இந்தக்குறிப்பிட்ட வீட்டை மிகவும் அதிக விலை கொடுத்து வாங்கியதற்கு பல காரணங்கள் உண்டு. 

இன்று நான் இப்போது குடியிருக்கும் பகுதி சுமார் முப்பதாயிரம் சதுர அடிகளுக்கு மேல் பரப்பளவு கொண்ட, ஏழைகளின் குடியிருப்பாக “பெரிய நாராயண ஐயர் ஸ்டோர்” என்ற திருநாமத்துடன், ஓட்டு வீடுகளாகத்தான் அன்று திகழ்ந்தன.  

உலகத்திலேயே மிகப்பெரிய குடியிருப்பு அது [ஸ்டோர்] என்றும் சொல்லலாம். 

52 ஏழைக்குடும்பங்கள் குருவிக்கூடுபோல இதில் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன. 

-=-=-=-=-=-=-=-

இதைப்பற்றி என்னுடைய பதிவு ஒன்றில் மிகவும் வர்ணித்து, நகைச்சுவையாக எழுதியுள்ளேன். 

அதன் தலைப்பு: ”மறக்க மனம் கூடுதில்லையே”

அதை இதுவரை படிக்காதவர்கள் மிகவும் துரதிஷ்டசாலிகள் தான் என்பேன். 

அவசியமாகப் படிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அது ஓர் அற்புதமான 80% உண்மைக்காவியம். 

இணைப்பு இதோ:  

http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4_19.html


இந்தக்கதையைப் படிக்க ஆரம்பித்து விட்டால், அதை முழுவதும் படித்து முடிக்காமல், அங்கே இங்கே என யாரும் அசைந்து செல்லவே முடியாது. அந்த அளவுக்கு விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும். 

-=-=-=-=-=-=-=-

இந்த ஏழைகளின் குடியிருப்பில் தான் எனக்கு நினைவு தெரிந்த நாட்களான 1955 முதல் 1980 வரை [என் 5 வயது முதல் 30 வயது வரை] சுமார் 26 வருடங்கள் நான் வாழ்ந்துள்ளேன். 

இங்கு நான் வாழ்ந்த போது தான் 03.07.1972 அன்று எனக்குத் திருமணம் நடைபெற்றது. 18.03.1974  + 22.09.1975 ஆகிய தேதிகளில் எனக்கு முதல் இரண்டு மகன்கள் பிறந்தார்கள்.

”எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும்  இந்நாடே” என்பது போல எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி என்னுடனும் என் மனைவியுடனும் என் குழந்தைகளுடனும் இருந்ததும் இந்த மிகப்பெரிய ஸ்டோரே [குடியிருப்புப் பகுதியே] எனச்சொன்னால் அது மிகையாகாது.

அதன் பிறகு என்னுடைய ஒரு சில பணிச்சுமை + கூடுதல் பொறுப்புக்களால் நான் 1981 முதல் 2000 வரை, என் அலுவலகத்திற்கு அருகே அமைந்திருந்த COMPANY QUARTERS இல் வசிக்க வேண்டிய நிர்பந்தங்களால், இந்த ஸ்டோர் வாழ்க்கையை விட்டு நான் கட்டாயமாக விலக நேர்ந்தது.

பிறகு 30000 சதுர அடி நிலமான அது மூன்றாகப்பிரிக்கப்பட்டு 1995 இல் விற்கப்பட்டு  விட்டது.  ஒற்றுமையாய் வாழ்ந்து வந்த அந்த ஏழை மக்களின் குருவிக்கூடுகள் கலைக்கப்பட்டு விட்டன. 

அடுக்குமாடிக்குயிருப்பு + வெவ்வேறு வணிக வளாகங்கள் என புதியதாக முளைக்க ஆரம்பித்தன. 

அதில் ஒன்றில் தான் நானும் ஓர் வெறியுடன், மிக அதிக விலையானாலும் பரவாயில்லை என்று, துணிந்து ஓர் வீடு வாங்கினேன். 

இந்த என் வெறிச்செயலால நான் என் வாழ்க்கையில் இழந்த சொத்துக்களும், சேமிப்புகளும்  ஏராளம் தான். 

நான் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து, சம்பாதித்து ஓரளவு சேமித்து, அந்த சேமிப்பில் ஏற்கனவே வாங்கியிருந்த இரண்டு வீடுகளையும், நான்கு மனைகளையும் மிகக்குறைந்த விலைக்கு விற்றேன். [இன்று அவற்றின் விலைகள், நான் விற்ற விலையைப் போல பத்து மடங்குகள் ஏறியுள்ளன.]

என் PF சேமிப்புத்தொகை முழுவதையும் சுரண்டி எடுத்தேன். 

அதுவரை வாழ்க்கையில் கடனே வாங்கக்கூடாது என்ற கொள்கையுடன் இருந்து வந்த நான், வங்கிக்குச்சென்று மிகப்பெரியதொரு தொகையை கடனாகவும் வாங்கினேன். 

இவ்வாறு பலவித தடாலடி வேலைகளில் இறங்கித்தான், இந்த வீட்டை வாங்க வேண்டும், என்ற என் வெறியை என்னால் தணித்துக்கொள்ள முடிந்தது.  

என்னுடைய மூத்த பிள்ளையையும் அவன் மனைவியையும்தவிர, என் நெருங்கிய சொந்தங்களோ, நண்பர்களோ கூட இந்த என் துணிச்சலான முடிவினை ஆதரிக்கவில்லை.  

ஆனால் இதில் நான் இறுதியாகப் பெற்றதோ ஓர் மன நிம்மதி, ஆத்ம திருப்தி, சொல்லமுடியாத ஏதோ ஒரு சந்தோஷம்.  

இதில் நான் மிகவும் அதிகமான RISK எடுத்து விட்டாலும் கூட, மிகச்சரியான நேரத்தில் நான் எடுத்த மிகச்சரியான முடிவுதான் இது  என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை, என்பேன்.   

நான் என் தாய் தந்தையருடன், என் இளம் வயதில்,  எங்கு ஒரு சிறிய ஓட்டு வீட்டில் வாடகை கொடுத்து  வாழ்ந்து வந்தேனோ, அதே இடத்தில் ஓர் சொந்த வீடு, புத்தம் புதியதாக ’வஸந்த மாளிகை’யாக வாங்கியுள்ளேன் என்பதில் பெரும் மகிழ்ச்சி எனக்கு.

இதனால் எனக்குக்கிடைத்துள்ள மன நிம்மதியை, மன மகிழ்ச்சியை, என் மிகப்பெரிய இந்த சாதனையை  என்னால் பிறருக்கு உணர்த்தவோ, சொல்லிப்புரிய வைக்கவோ முடியவே முடியாது.  

என்னைப்பெற்று வளர்த்த என் தாய் தந்தையர் இன்று இருந்து இதைப்   பார்க்க முடியாமல் போய் விட்டதே என்ற ஓர் மனக்குறை மட்டும் எனக்கு இப்போதும் உண்டு.

இந்த என் புது வீட்டினில் இது வரை நடந்துள்ள பல்வேறு சுப நிகழ்ச்சிகள்:

24.08.2001 
’பவித்ராலயா’வின்நூதன க்ருஹப்ரவேச சுபமுஹூர்த்தம்

05.03.2002 

என் முதல் பேரன் சிவா பிறந்தது.

31.10.2002 

இரண்டாவது பிள்ளைக்குத் திருமணம் ஆகி புது மருமகள் வருகை.

29.03.2006
மூன்றாவது மகனுக்கு, மிகச்சிறப்பான பெரிய உத்யோகம், அதுவாகவே அவனைத்தேடி வந்து அமைந்தது

15.12.2008
உக்ரஹ சாந்தி நடைபெற்றது [ Reaching the Age of 60 from 59 ]

01.07.2009 

மூன்றாவது பிள்ளைக்குத் திருமணம் ஆகி புது மருமகள் வருகை

04.12.2009
என் முதல் இரண்டு சிறுகதைத்தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

05.12.2009 
எங்களுக்கு சஷ்டியப்த பூர்த்தி [60th Birth Day] சிறப்பாக நடைபெற்றது. 

01.04.2010 
வெறும் எட்டு வயதே ஆகியிருந்த எங்கள் அருமைப் பேரன் சிவாவுக்கு உபநயனம் [பூணூல் கல்யாணம்] நடைபெற்றது

01.01.2011
என் மூன்றாவது, சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு

20.02.2011
எங்கள் மூன்றாவது மருமகளுக்கு, கங்கணதாரண பும்ஸுவன ஸீமந்த சுபமுஹூர்த்தம் நடைபெற்றது [வளைகாப்பு + சீமந்த நிகழ்ச்சிகள்] 

24.04.2011 

என் இரண்டாவது பேரன் ”அநிருத்” பிறந்தது.

11.05.2012
பேரன் ‘அநிருத்’ ஆயுஷ்ஹோமம் நடைபெற்றது


நான் மிகப்பெரிய [நவரத்னா To மஹாரத்னா] பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் என் கடின உழைப்பினால் மட்டுமே அதிகாரியாக பதவி உயர்வு பெற்றது, 

நான் பத்திரிகை எழுத்தாளரானது, 

நான் பதிவரானது, 

நான் பரிசுகள் பல பெற்றது, 

தேசிய விருதுகள் உள்பட பல விருதுகள் நான் பெற்றது, 


மனநிறைவுடன், நான்  பணி ஓய்வு பெற்றது, 

பல வேதவித்துக்களையும், மார்கழி மாதம் விடியற்காலம்  ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஜபம் சொல்லி கிரிவலம் செய்யும் கோஷ்டியினரையும், வீட்டிற்கு வரவழைத்து கெளரவித்தது, 

பல ஹோமங்கள், ஸ்ரீ வேங்கடாசலபதி தீப ஸமாராதனைகள், சுமங்கலிப்பிரார்த்தனைகள், ஹனுமனுக்கு வடை மாலைகள்  என பல வழிபாடுகள் அவ்வப்போது இதே வீட்டில் செய்தது 

என இந்த என் வீட்டின் ராசியைப்பற்றி  மேலும் சொல்லிக்கொண்டே போகலாம் தான். 

-=-=-=-=-=-=-=-=-=-=-

இந்த சுப நிகழ்ச்சிகள் சிலவற்றை நான் என் “மலரும் நினைவுகள்” என்ற பதிவினில் நிறைய படங்களுடன் கொடுத்துள்ளேன். 

2011 ஜூலை மாத முதல் ஆறு பதிவுகளில் அவற்றைப்பார்க்கலாம். 


முதல் பதிவின் இணைப்பு இதோ: 


http://gopu1949.blogspot.in/2011/07/1.html 


-=-=-=-=-=-=-=-=-=-=-


அடடா, நான் ஏதேதோ பேசி உங்களையெல்லாம், எங்கெங்கோ அழைத்துச்சென்று கொண்டிருக்கிறேன். 

அதனால் நான் சொல்ல  வந்த முக்கியமான ’என் வீட்டு ஜன்னல் கம்பி’ விஷயம், இந்தப்பகுதியிலும்  சொல்ல முடியாமல் போய் விட்டது ...... பாருங்கோ! ”அடுத்த முறை, ஓ..மீண்டும் திருச்சி வந்தால், வை.கோ வீட்டில் ஜன்னலோரமாக இடம் கேட்டுத் தங்கத் தோன்றியது. 

திருச்சி செல்லும் எல்லாரும் அவசியம் வை.கோ வீட்டு ஜன்னலை விசிட் செய்ய வேண்டும். 

காணக்கண் கோடி வேண்டும்.”  
- அப்பாதுரைதிரு. அப்பாதுரை சார் அவர்கள் ஏன் இவ்வாறு சொல்லியுள்ளார்? என்பதற்கான காரணத்தை இதன் அடுத்த பகுதியில் நான் நிச்சயமாகச் சொல்லிவிடுகிறேன். 

-=-=-=-=-=-=-

அதற்குள், எங்கள் ஊராம் திருச்சியைப்பற்றி நான் எழுதியுள்ள விரிவான கட்டுரையை மிக அழகான ஏராளமான படங்களுடன் கண்டு களியுங்கள்.

இணைப்பு இதோ: 


http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html


-=-=-=-=-=-=-


/ தொடரும் /
 [ இதன் தொடர்ச்சி அதாவது இறுதிப்பகுதி வரும் 
ஞாயிறு 17.02.2013 அன்று வெளியிடப்படும். ]

148 கருத்துகள்:

 1. தங்களின் உறுதியான தன்னம்பிக்கையும், தோல்விகளைப் பற்றி சிந்திக்காமல் வெற்றி பெற்றதும், ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்வதும்... மற்றவர்களுக்கு ஒரு உதாரணம்...

  இவைகளை விட தங்களிடம் வியப்படைவது தங்களின் ஞாபகத்திறன்... Excellent...

  ஜன்னலை ரசிக்க திருச்சி வரும் போது வருகிறேன்...

  கொடுத்துள்ள இணைப்புகளையும் படிக்கிறேன்...

  வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திண்டுக்கல் தனபாலன் February 9, 2013 at 8:41 AM

   வாருங்கள், வணக்கம்.

   //தங்களின் உறுதியான தன்னம்பிக்கையும், தோல்விகளைப் பற்றி சிந்திக்காமல் வெற்றி பெற்றதும், ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்வதும்... மற்றவர்களுக்கு ஒரு உதாரணம்...

   இவைகளை விட தங்களிடம் வியப்படைவது தங்களின் ஞாபகத்திறன்... Excellent...//

   எனக்கு பலவிஷயங்கள் எப்போதுமே ஞாபகத்தில் இருக்கும். எதையும் அவ்வளவு சுலபத்தில் மறக்கவே மாட்டேன்.

   ஆனால் அவை என்னென்ன என உடனடியாகச் சொல்லுங்கள் என்றால் சொல்ல மறந்து போகும்.

   கொஞ்சம் டைம் கொடுத்தால் தான் யோசித்துச் சொல்ல முடியும்.

   மொத்தத்தில் நான் ஒரு ட்யூப் லை போல என நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.

   எனக்கு எப்போதுமே என் அருகில் அட்டாச்சிடு ஆக நல்லதொரு ஸ்டார்ட்டர் வேண்டும். அது மட்டும் என் விருப்பப்படி அமைந்து விட்டால் நான் எங்கேயோ போய் விடுவேனாகும்! ;))))))

   //ஜன்னலை ரசிக்க திருச்சி வரும் போது வருகிறேன்...

   கொடுத்துள்ள இணைப்புகளையும் படிக்கிறேன்...

   வாழ்த்துக்கள் ஐயா...//

   தங்களின் அன்பான முதல் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   நீக்கு
 2. //நாலு இடங்களில் நமக்கு வீடுகள் உள்ளன என்பதால், ஓர் இடத்தில் தலையையும், ஓர் இடத்தில் உடம்பையும், மற்ற இரண்டு இடங்களில் நம் கைகால்களையும் வைத்து வாழமுடியுமா என்ன?//

  சத்தியமான வார்த்தைகள்.

  நீங்கள் லிங்க் கொடுத்துள்ள பதிவுகளை ஏற்கனவே படித்திருந்தாலும் இன்னொரு முறை படிக்க வேண்டும் என்று தூண்டியது உங்கள் விளக்கம்.

  //இந்த என் புது வீட்டினில் இது வரை நடந்துள்ள பல்வேறு சுப நிகழ்ச்சிகள்://

  இந்த லிஸ்டில் மேலும் மேலும் சுப நிகழ்ச்சிகளுடன் சதாபிஷேகமும்,கனகாபிஷேகமும், சேர்ந்து நடக்க வேண்டும் என்று பெருமாளிடம் வேண்டிக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. RAMVI February 9, 2013 at 8:45 AM

   வாங்கோ, வணக்கம்.

   *****நாலு இடங்களில் நமக்கு வீடுகள் உள்ளன என்பதால், ஓர் இடத்தில் தலையையும், ஓர் இடத்தில் உடம்பையும், மற்ற இரண்டு இடங்களில் நம் கைகால்களையும் வைத்து வாழமுடியுமா என்ன?*****

   //சத்தியமான வார்த்தைகள்.//

   மிக்க நன்றி. சந்தோஷம்

   //நீங்கள் லிங்க் கொடுத்துள்ள பதிவுகளை ஏற்கனவே படித்திருந்தாலும் இன்னொரு முறை படிக்க வேண்டும் என்று தூண்டியது உங்கள் விளக்கம்.//

   படிக்காதவை ஏதேனும் இருந்தால் படித்து விட்டு கருத்து எழுதுங்கோ..... ப்ளீஸ்

   *****இந்த என் புது வீட்டினில் இது வரை நடந்துள்ள பல்வேறு சுப நிகழ்ச்சிகள்:*****

   //இந்த லிஸ்டில் மேலும் மேலும் சுப நிகழ்ச்சிகளுடன் சதாபிஷேகமும்,கனகாபிஷேகமும், சேர்ந்து நடக்க வேண்டும் என்று பெருமாளிடம் வேண்டிக்கொள்கிறேன்.//

   தங்கள் வேண்டுதல் எனக்கும் மகிழ்ச்சியாகவே உள்ளன. மிக்க நன்றி.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   நீக்கு
 3. //திரு. அப்பாதுரை சார் அவர்கள் ஏன் இவ்வாறு சொல்லியுள்ளார்? என்பதற்கான காரணத்தை இதன் அடுத்த பகுதியில் நான் நிச்சயமாகச் சொல்லிவிடுகிறேன். //

  இப்படி சஸ்பென்ஸ் வைத்துவிட்டீங்களே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. RAMV February 9, 2013 at 8:46 AM
   *****திரு. அப்பாதுரை சார் அவர்கள் ஏன் இவ்வாறு சொல்லியுள்ளார்? என்பதற்கான காரணத்தை இதன் அடுத்த பகுதியில் நான் நிச்சயமாகச் சொல்லிவிடுகிறேன்.*****

   //இப்படி சஸ்பென்ஸ் வைத்துவிட்டீங்களே!//

   எப்போதாவது அத்திப்பூத்தாற்போல பதிவுகள் எழுதுகிறேன், இப்போதெல்லாம்.

   அதில் ஓர் விறுவிறுப்பும், முழுமையான விளக்கங்களும், கூடவே கொஞ்சம் சஸ்பென்ஸும் வேண்டாமா? அதனால் மட்டுமே மேடம், தயவுசெய்து பொருத்தருளவும்.

   நீக்கு
 4. அத்தனையும் முத்துக்கள் அவசியம் உங்கள் வீட்டுக்கு வருகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவியாழி கண்ணதாசன் February 9, 2013 at 8:51 AM

   வாருங்கள், வணக்கம்.

   //அத்தனையும் முத்துக்கள் //

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

   //அவசியம் உங்கள் வீட்டுக்கு வருகிறேன்//

   அவசியம் வாருங்கள் ஐயா. WELCOME !

   நீக்கு
 5. அடடா! இன்னும் ஒருவாரம் காத்திருக்க வேணுமா?
  ஸ்டோர் மாதிரி வீடுகளில் குடியிருந்த அனுபவம் எனக்கும் உண்டு.
  உங்கள் ஞாபக சக்தி வியக்க வைக்கிறது.
  இன்னும் பல பல நல்ல விசேஷங்கள் இந்த வீட்டில் நடக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Ranjani Narayanan February 9, 2013 at 9:09 AM

   வாங்கோ, வணக்கம்.

   //அடடா! இன்னும் ஒருவாரம் காத்திருக்க வேணுமா?//

   ஒரே வாரம் மட்டும் தானே! காத்திருந்தால் என்னவாம்?

   //ஸ்டோர் மாதிரி வீடுகளில் குடியிருந்த அனுபவம் எனக்கும் உண்டு.//

   உங்களுக்கு எதில் தான் அனுபவம் இல்லை?

   WORDPRESS / BLOGSPOT என எல்லாவற்றிலும் கலக்குறீங்கோ. நாங்களும் எதில் எதைப்படிப்பது என கலங்குகிறோமாக்கும்.

   //உங்கள் ஞாபக சக்தி வியக்க வைக்கிறது.//

   அது கொஞ்சம் அப்படித்தான். எதையும் அவ்வளவு சுலபமாக மறக்க முடியவில்லை தான். 31.12.2012 / 01.01.2013 நள்ளிரவில் நான் கொடுத்த, நீங்கள் தொலைத்த, பத்துக்கும் மேற்பட்ட பின்னூட்டங்களையும் தான், சொல்கிறேன்.

   //இன்னும் பல பல நல்ல விசேஷங்கள் இந்த வீட்டில் நடக்கட்டும்.//

   ரொம்ப சந்தோஷம்

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   நீக்கு
 6. பதில்கள்
  1. Seeni February 9, 2013 at 9:40 AM
   nalla anupava pakirvu...ayyaaa....! நல்ல அனுபவப் பகிர்வு ஐயா ! //

   வாருங்கள், வணக்கம். நன்றி.

   நீக்கு
 7. தங்களின் பதிவு சுவையாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது.அடுத்து அடுத்து படித்துக் கொண்டே போகலாம். நேரம் கிட்டும்போதெல்லாம் இனி உங்கள் பக்கம்
  பார்க்கிறேன்

  அன்புடன் ருக்மணி சேஷசாயி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Rukmani Seshasayee February 9, 2013 at 9:41 AM
   தங்களின் பதிவு சுவையாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது.அடுத்து அடுத்து படித்துக் கொண்டே போகலாம். நேரம் கிட்டும் போதெல்லாம் இனி உங்கள் பக்கம் பார்க்கிறேன்

   அன்புடன் ருக்மணி சேஷசாயி.//

   வாங்கோ, அநேக நமஸ்காரங்கள்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   நீக்கு
 8. சார் பயங்கர சஸ்பென்ஸ் வைத்திருக்கிறீர்கள் .இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டுமா?

  நீங்கள் வீடு வாங்கிய அனுபவம் என்னை முப்பது வருடம் பின்னோக்கி அழைத்து சென்று விட்டது.

  உங்கள் வீட்டில் இன்னும் மென்மேலும் சுப காரியங்கள் நடக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. rajalakshmi paramasivam February 9, 2013 at 9:42 AM

   வாங்கோ, வணக்கம்.

   //சார் பயங்கர சஸ்பென்ஸ் வைத்திருக்கிறீர்கள் .இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டுமா?

   ஒரே ஒரு வாரம் மட்டும் தானே! காத்திருந்தால் என்னவாம்?

   //நீங்கள் வீடு வாங்கிய அனுபவம் என்னை முப்பது வருடம் பின்னோக்கி அழைத்து சென்று விட்டது.//

   அப்போ அதைப்பற்றி நீங்களும் எழுதுங்கோ ... ப்ளீஸ்ஸ்ஸ்.

   //உங்கள் வீட்டில் இன்னும் மென்மேலும் சுப காரியங்கள் நடக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.//

   ரொம்பவும் சந்தோஷம்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   நீக்கு
 9. தங்களின் பதிவு மிகவும் சுவையுடனும் பயனுடையதாகவும் உள்ளது. அடுத்தடுத்து படிக்கத் தோன்றுகிறது. நேரம் கிடைக்கும்போது தங்களின் பதிவைப் படிக்கிறேன். பாராட்டுகள்.
  அன்புடன் ருக்மணி சேஷசாயி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Rukmani Seshasayee February 9, 2013 at 9:46 AM

   //தங்களின் பதிவு மிகவும் சுவையுடனும் பயனுடையதாகவும் உள்ளது. //

   மீண்டும் வருகைக்கு நன்றிகள். எல்லாம் உங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசீர்வாதங்கள் மட்டுமே, காரணம்.

   //அடுத்தடுத்து படிக்கத் தோன்றுகிறது. நேரம் கிடைக்கும்போது தங்களின் பதிவைப் படிக்கிறேன். பாராட்டுகள்.
   அன்புடன் ருக்மணி சேஷசாயி.//

   மிகவும் சந்தோஷம். படியுங்கோ. ஆங்காங்கே படித்த முடித்தவற்றிற்கு ஓர் சின்ன கருத்தும் கூறுங்கோ, ப்ளீஸ்ஸ்.

   நீக்கு
  2. கோபு >>>> Rukmani Seshasayee February 9, 2013 at 9:46 AM

   அன்புள்ள மேட்ம, நமஸ்காரம், வணக்கம்..

   இந்த மாத “நம் உரத்த சிந்தனை February 2013" இன்று இப்போது தான் தபாலில் கிடைக்கப்பெற்றேன்.

   அதில் ஐந்தாம் பக்கம் பிரத்யேகமாக தங்களுக்காகவும், பக்கம் 50 முதல் 53 வரை எனக்காகவும் ஒதுக்கி சிறப்பித்துள்ளர்கள்.

   நம் புகைப்படத்துடன் கூட நம்மைப்பற்றிய சிறுகுறிப்பும் கூறியிருப்பது காண மிகவும் பெருமையாக உள்ளது.

   உங்களைப்போன்ற சீனியர் எழுத்தாளர்கள் பலரின் அறிமுகங்களுடன், என்னையும் கொண்டுவந்து சிறப்பித்துள்ளது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

   ”நம் உரத்த சிந்தனை” மாத இதழுக்கும், அதன் ஆசிரியர் திரு. உதயம் ராம் அவர்களுக்கும், என் மட்டற்ற மகிழ்ச்சியினையும் மனமார்ந்த நன்றிகளையும் இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.

   அன்புடன்
   வை. கோபாலகிருஷ்ணன்

   நீக்கு
 10. மிக அருமை.சார்.இன்னும் வாசிக்க வேண்டியது இந்த இடுகையிலேயே நிறைய இருக்கு,லின்க் எல்லாம் விட்டுவிட்டு இந்த இடுகை மட்டும் வாசித்து கருத்திட்டுவிட்டேன்,மெதுவாக இணைப்புக்களை வாசிக்கிறேன்.26 வாருடங்கள் வாழ்ந்த பழைய இடத்திலேயே மீண்டும் புது வீடு வாங்கி குடியேறுவது எல்லோருக்கும் வாய்க்காது.வாழ்த்துக்கள்.ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயிளோடும் தம்பதியர் சகிதம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.பணம் வரும் போகும்,நிம்மதி அப்படி அல்ல, நாம் தேடிப் பெற்றுக் கொள்வது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Asiya Omar February 9, 2013 at 10:26 AM

   வாருங்கள், வணக்கம்.

   //மிக அருமை.சார்.இன்னும் வாசிக்க வேண்டியது இந்த இடுகையிலேயே நிறைய இருக்கு,லின்க் எல்லாம் விட்டுவிட்டு இந்த இடுகை மட்டும் வாசித்து கருத்திட்டுவிட்டேன்,மெதுவாக இணைப்புக்களை வாசிக்கிறேன்.//

   ஆஹா, கேட்கவே சந்தோஷமாக உள்ளது.

   //26 வாருடங்கள் வாழ்ந்த பழைய இடத்திலேயே மீண்டும் புது வீடு வாங்கி குடியேறுவது எல்லோருக்கும் வாய்க்காது. வாழ்த்துக்கள். ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயிளோடும் தம்பதியர் சகிதம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.//

   வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி/

   //பணம் வரும் போகும், நிம்மதி அப்படி அல்ல, நாம் தேடிப் பெற்றுக் கொள்வது.//

   அது சரி. பணம் வந்து கொண்டும் போய்க்கொண்டுமே உள்ளது.
   அதுவரை மகிழ்ச்சியே.

   அன்றாட வாழ்க்கைக்கு வேண்டிய WORKING CAPITAL லுக்கும் நிறையவே வழி செய்துகொண்டு விட்டேன்.

   என் மகன்கள் உள்பட யாரையும் எதற்கும் ஒரு பைசா கூட கேட்பது இல்லை. அவர்களாகவே கொடுத்தாலும் வாங்கிக்கொள்வதும் இல்லை. என் கொள்கை அது போல.

   முடிந்தால் தேவையானால் நான் அவர்களுக்குத் தந்து உதவுவதும் உண்டு.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   நீக்கு
 11. இன்னும் பல சுபநிகழ்ச்சிகள் அந்த ராசியான வீட்டில் நடக்க வாழ்த்துக்களும்,பிரார்த்த்னைகளும் ஐயா..உங்கள் ஞாபகசக்தியைக் கண்டு வியக்கிறேன்...

  திரு.அப்பாதுரை சொன்ன காரணம் எனக்கு புரிந்துவிட்டது.உங்கள் வீட்டு ஜன்னலில் இருந்து உச்சி பிள்ளையாரை தரிசிக்கலாம்..சரிதானே ஐயா!!

  நீங்கள் கொடுத்துள்ள இனைப்புகளை ஒவ்வொன்றாக படிக்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. S.Menaga February 9, 2013 at 11:14 AM

   வாருங்கள், வணக்கம்.

   //இன்னும் பல சுபநிகழ்ச்சிகள் அந்த ராசியான வீட்டில் நடக்க வாழ்த்துக்களும், பிரார்த்த்னைகளும் ஐயா.. உங்கள் ஞாபகசக்தியைக் கண்டு வியக்கிறேன்.//

   சந்தோஷம், மிக்க நன்றி..

   //திரு.அப்பாதுரை சொன்ன காரணம் எனக்கு புரிந்துவிட்டது. உங்கள் வீட்டு ஜன்னலில் இருந்து உச்சி பிள்ளையாரை தரிசிக்கலாம். சரிதானே ஐயா!!//

   அது தான் இதுவரை நான் கொடுத்துள்ள படங்களிலேயே ஓரளவு தெரிகின்றதே. ஓரளவு சரி தான். மேலும் என் வீட்டு ஜன்னல் கம்பி வழியே மட்டுமல்லாமல், திருச்சி நகரின் முக்கிய வீதிகள் எங்கிருந்து பார்த்தாலும், மலைக்கோட்டையையும், உச்சிப்பிள்ளையாரையும் தரிஸிக்க முடியும் தான்.

   எனவே என் வீட்டு ஜன்னல் கம்பிகள் மூலம் காணும் போது, அந்த உச்சிப்பிள்ளையார் + மலைக்கோயிலைத்தவிர. மேலும் ஏதாவது சில இருக்கலாம் அல்லவா!

   //நீங்கள் கொடுத்துள்ள இனைப்புகளை ஒவ்வொன்றாக படிக்கிறேன்...//

   மிக்க மகிழ்ச்சி. அவசியம் படியுங்கோ. மறக்காமல் கருத்தும் எழுதுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   நீக்கு
 12. நோஓஓஓஓஓ மீ த 1ஸ்ட்டூ.. நான் பார்க்கும்போது 0 கொமெண்ட்ஸ் என இருந்துதே... :)

  //இதில் நான் மிகவும் அதிகமான RISK எடுத்து விட்டாலும் கூட, மிகச்சரியான நேரத்தில் நான் எடுத்த மிகச்சரியான முடிவுதான் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை, என்பேன். /// அழகாக சொலிட்டீங்க.. கண்ணதாசன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமோ?.... “ஒரு முடிவென்பது, அம்முடிவை எடுத்தபின் நீங்க வருந்தாததாக இருக்க வேண்டும்”.... அது உங்கள் விஷயத்தில் 100 வீதம் உண்மையாக்கிட்டீங்க....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira February 9, 2013 at 11:31 AM

   வாங்கோ அதிராஆஆஆஆஆஆ!!

   //நோஓஓஓஓஓ மீ த 1ஸ்ட்டூ.. நான் பார்க்கும்போது 0 கொமெண்ட்ஸ் என இருந்துதே... :)//

   நீங்க தான் எப்போதுமே 1ஸ்ட்டூஊஊஊஊ அதிரா.

   அதில் சந்தேகமே வேண்டாம், அதிரா.

   மேலே உங்களை முந்திக்கொண்டு வந்துள்ளவர்கள், ஏதாவது அழுகுணியாட்டம் ஆடியிருப்பர்களோ என்னவோ. அதனால் மன்னிச்சுங்கோங்கோ .... கோச்சுக்காதீங்கோ... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

   //அழகாக சொலிட்டீங்க.. கண்ணதாசன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமோ?.... “ஒரு முடிவென்பது, அம்முடிவை எடுத்தபின் நீங்க வருந்தாததாக இருக்க வேண்டும்”.... அது உங்கள் விஷயத்தில் 100 வீதம் உண்மையாக்கிட்டீங்க....//

   அய்ய்ய்ய்கோ அய்ய்ய்ய்காகச் சொல்லிட்டீங்கோ, அதிரா!

   எதுவுமே எங்க அதிரா சொன்னால் தான் அது அய்ய்கோ அய்ய்காக இருக்குமாக்கும்.

   [ஹுக்க்க்க்க்கும் ... ரொம்பத்தான் இந்தக்குழந்தையை தாஜா செய்ய வேண்டியுள்ளது..... ஜாமீஈஈஈஈஈஈ]

   நீக்கு
 13. //அதனால் நான் சொல்ல வந்த முக்கியமான ’என் வீட்டு ஜன்னல் கம்பி’ விஷயம், இந்தப்பகுதியிலும் சொல்ல முடியாமல் போய் விட்டது ...... பாருங்கோ! // என்னாது இன்னும் சொல்லவே இல்லையோ? :) விடுங்கொ.. விடுங்கோ.. என்னை விடுங்கோ காசிக்கே போயிருந்திடுறேன்ன்.. நேக்கு பயமாக் கிடக்கு.. வலையுலகில் எல்லோருக்கும் என்னமோ ஆச்சூ :).. அப்போ இதுவரை சொன்னதெல்லாம் ????? :).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira February 9, 2013 at 11:33 AM
   *****அதனால் நான் சொல்ல வந்த முக்கியமான ’என் வீட்டு ஜன்னல் கம்பி’ விஷயம், இந்தப்பகுதியிலும் சொல்ல முடியாமல் போய் விட்டது ...... பாருங்கோ!*****

   //என்னாது இன்னும் சொல்லவே இல்லையோ? :) விடுங்கோ.. விடுங்கோ.. என்னை விடுங்கோ காசிக்கே போயிருந்திடுறேன்ன்.. நேக்கு பயமாக் கிடக்கு.. //

   எங்கே சொல்ல விட்டீங்கோ. விட்டுடறேன், விட்டுடறேன். காசியில் நமக்கு வேண்டியப்பட்டவங்க விலாசம், மெயில் ஐ.டி, டெலிபோன் நம்பர் எல்லாமே இருக்குதூஊஊஊஊ. தேவைப்பட்டால் தருகிறேன். பயப்படாம கேளுங்கோ. ப்ளீஸ்ஸ்.

   காசிக்குப்போனாலும் கருமம் தொலையாதுன்னு, முணுமுணூக்காதீங்கோ, முறைக்காதீங்கோ.

   //வலையுலகில் எல்லோருக்கும் என்னமோ ஆச்சூ :).//

   அதெல்லாம் ஒண்ணும் ஆகவில்லை. எல்லோருமே ஏதேதோ என்னென்னவோ எழுதிக்கிட்டே தான் இருக்காங்கோ.

   நமக்குத்தான் எதைப்படிப்பது எதை விடுவது ... அதை எங்கே விடுவது என ஒரெ குயப்பமாக உள்ளதூஊஊஊஊஊ.

   //அப்போ இதுவரை சொன்னதெல்லாம் ????? :).//

   சுற்று வட்டாரக்கதைகள் தான். முன்னேற்பாடுகள் தான். மணமான மல்லிகைப்பந்தல் போடுவது போலத்தான்.;)))))

   டக்குனு விஷயத்துக்கு போய் விடலாமா? அதில் என்ன ருசி இருக்க முடியும்?

   கொஞ்சம் கொஞ்சமாக ...... கொஞ்சிக்கொஞ்சி .... அதன் பிறகு தான் விஷயத்துக்கே போகணுமாக்கும்.

   ஸ்வீட் சிக்ஸ்டீனுக்குத்தெரியாததாக்கும்.

   சும்மாவாவது எதையாவது என்னை உசிப்பி விடுவதே உங்களுக்கு வேலையாப்போச்சு, அதிரா.

   நீக்கு
 14. அக்குவேறு ஆணிவேறாக அனைத்தையும் படங்களோடு சொல்லியிருக்கிறீங்க கோபு அண்ணன்.. நீங்க பெரியவர் நாலும் தெரிஞ்சவர்... உங்களுக்கு நான் சொல்ல என்ன இருக்கு.. ஆனாலும்.. அனைத்தையும் வெளியில் ஒப்புவிக்கப்படாது என பெரியவர்கள் சொலுவினம்.. ஒன்றுமில்லை கண்ணூறாகிடும் என்று..

  திருஷ்டி சுத்தி பெரீஈஈஈஈஈஈஈய பூசணிக்காயை அந்த, வீட்டுக்கு கீழ் இருக்கும், ஒரு பார்ஷல் 60 ரூபா விக்கும்.. ஹோட்டல் வாசலில்.. பளாரென உடையுங்கோ.. ஆரும் ஏதும் கேட்டால் அதிரா சொன்னா அதுதான் உடைச்சேன் எனப் பயப்பூடாமல் சொல்லுங்கோ, என் அட்ரஸ் கேட்டால்ல்.. இருக்குத்தானே கொடுத்திடுங்கோ.. ”4ம் கொப்பு” என்பதையும் சேர்த்துச் சொல்லிடுங்கோ அது ரொம்ப முக்கியம் அட்ரசில்..:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira February 9, 2013 at 11:37 AM

   //அக்குவேறு ஆணிவேறாக அனைத்தையும் படங்களோடு சொல்லியிருக்கிறீங்க கோபு அண்ணன்.. //

   ஆஹா, மிகவும் சந்தோஷம் அதிரா.

   //நீங்க பெரியவர் நாலும் தெரிஞ்சவர்... //

   எனக்குத்தெரிந்தது நாலு மட்டுமே. அந்த நாலாம் நம்பர் மிக மிக மிக மிக அழகான் “ஓரஞ்சு கலர் பேக்” மட்டுமே.

   //உங்களுக்கு நான் சொல்ல என்ன இருக்கு.. //

   எனக்கு நாலும் தெரியும். ஆனாக்க உங்களுக்கு நாலாயிரம் தெரிஞ்சிருக்கும். நான் மிகச் சாதாரணமானவனாக்கும். எங்க அதிரா அப்படியல்லவாக்கும் என்பது அந்த எனக்குத்தெரிந்த நாலில் ஒன்றாக்கும்..

   //ஆனாலும்.. அனைத்தையும் வெளியில் ஒப்புவிக்கப்படாது என பெரியவர்கள் சொலுவினம்.. ஒன்றுமில்லை கண்ணூறாகிடும் என்று.. //

   ஆஆஆஆஆஆ ! என் அன்புத்தங்கச்சி அதிராவா கொக்கா! என்னே ஒரு பாசம் இந்த கோபு அண்ணன் மேல் .... புல்லரிக்க வைக்குதே! நான் இப்போது சீப்பும் கையுமாக ......

   >>>>>>

   நீக்கு
  2. கோபு >>>>> அதிராஆஆஆஆஆஆ [2]

   //திருஷ்டி சுத்தி பெரீஈஈஈஈஈஈஈய பூசணிக்காயை அந்த, வீட்டுக்கு கீழ் இருக்கும், ஒரு பார்ஷல் 60 ரூபா விக்கும்.. ஹோட்டல் வாசலில்.. பளாரென உடையுங்கோ.. //

   பெரீஈஈஈஈஈஈஈஈஈஈய என்றால் எம்மாம் பெரிசூஊஊஊஊ?
   சைஸ் சொல்லக்கூடாதா? அல்லது வெயிட்டாவது சொல்லக்கூடாதா?

   என்னவோ போங்கோ! எது கேட்டாலும் ஒழுங்கா பதில் சொல்வதே இல்லை, நீங்கோ.

   உங்களோட நான் டூஊஊஊஊஊ வாக்கும்..

   //ஆரும் ஏதும் கேட்டால் அதிரா சொன்னா அதுதான் உடைச்சேன் எனப் பயப்பூடாமல் சொல்லுங்கோ.//

   அதிரடி, அலம்பல், அட்டகாச அதிரா இருக்கும்போது எனக்கென்ன பயம்? சொல்லிடறேன்.

   //என் அட்ரஸ் கேட்டால்ல்.. இருக்குத்தானே கொடுத்திடுங்கோ.. ”4ம் கொப்பு” என்பதையும் சேர்த்துச் சொல்லிடுங்கோ அது ரொம்ப முக்கியம் அட்ரசில்..:).//

   அது என்ன அட்ரஸ்ஸில் புதிதாக “4ம் கொப்பு”?

   ஓஹோ அந்த ஜல் அக்கா கொடுத்த 4ம் பரிசோ?

   ஓரஞ்சு கலர் பேக்கோ?

   சரி சரி புரிந்து போச்சூஊஊஊஊஊ.

   உங்களுக்கும் என்னவோ ஆச்சூஊஊஊஊஊஊஊஊ. ;)))))

   நீக்கு
 15. //2011 ஜூலை மாத முதல் ஆறு பதிவுகளில் அவற்றைப்பார்க்கலாம்.

  முதல் பதிவின் இணைப்பு இதோ: //

  ஹையோ... ஏன் இன்னும் உலகம் அழியாமல் இருக்கு முருகா!!!.. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப் :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athira February 9, 2013 at 11:38 AM
   //2011 ஜூலை மாத முதல் ஆறு பதிவுகளில் அவற்றைப்பார்க்கலாம்.

   முதல் பதிவின் இணைப்பு இதோ: //

   //ஹையோ... ஏன் இன்னும் உலகம் அழியாமல் இருக்கு முருகா!!!.. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப் :))//

   ;))))))))))))))))))))))))

   அதிரடி, அலம்பல், அட்டகாச ஸ்வீட் சிக்ஸ்டீன் அதிரா இருக்க முருகன் எதற்கூஊஊஊஊஊ???????

   உலகம் அழிய அதிரா என்ற ஒருத்தங்களே போதுமாக்கும். ஹூக்க்க்கும் ...... ;))))))))))))))))))))

   நீக்கு
 16. பொக்கிஷ பெட்டியை திறந்ததும் சிரிக்கும் குழந்தை படம்பதிவுக்கு பொருத்தமாக மிக அருமை ..
  ஜன்னல் கம்பிகள் ஒவ்வொன்றும் உங்கள் உழைப்பையும் விடா முயற்சியையும் எங்களோடு பகிர்ந்தன .

  ஆறடி நிலம் பற்றிய தங்கள் ஆதங்கம் நிதர்சனமான சுடும் நிஜம் .
  //
  மிகச்சரியான நேரத்தில் நான் எடுத்த மிகச்சரியான முடிவுதான் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை, என்பேன். //
  ஆமாம் அண்ணா சரியாக சொன்னீர்கள் ..நான் சென்னையில் ஒரு வீடு வாங்க தடுமாறி மிஸ் செய்து விட்டேன்
  இப்ப அந்த இடம் நான் கொடுக்க விருந்த விலையை விடா மூன்று மடங்கு அதிகமாகி விட்டது ..
  சில நேரத்தில் எதைபற்றியும் கவலைபடாமல் செய்யும் காரியத்தில் குறியாக இருக்கவேண்டும் .உங்க மகனும் மருமகளும் பாராட்டுக்கு உரியவர்கள் ..
  வசந்த மாளிகையில் வசந்த நினைவுகளாய் எத்தனை சந்தோஷ நிகழ்வுகள் ...
  பொக்கிஷமான நினைவுகளை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. angelin February 9, 2013 at 1:52 PM

   வாங்கோ நிர்மலா, வணக்கம்.

   //பொக்கிஷ பெட்டியை திறந்ததும் சிரிக்கும் குழந்தை படம் பதிவுக்கு பொருத்தமாக மிக அருமை ..//

   அப்படியாச் சொல்றீங்கோ!!!!!! ;)))))

   அது நான் மிகவும் பொக்கிஷமாக நினைக்கும் வேறு ஒரு பதிவரிடமிருந்து, நான் உரிமையோடு திருடியதாக்கும்.

   திருடக்கூடாது என்று நினைத்துத்தான் ஆசையோடு அவர்களிடம் மறைமுகமாகக் கேட்டுப்பார்த்தேன்.

   ஆனாலும் அவர்கள் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை.

   வைரத்தோடா என்ன, அவர்கள் காதில் வாங்கிக்கொள்வதற்கு?

   வைரத்தோடே ஆனாலும் காதில் வாங்கிக்கொள்ளாத வைரம் தான் அவர்கள்.

   அதை அவர்கள் எனக்குத் தரவும் இல்லை. அதை அடைய வழியையும் சொல்லவில்லை.

   பொறுமையிழந்த நான், கொஞ்சம் கஷ்டப்பட்டு அதைத் திருடிக்கொண்டு விட்டேன்.

   எல்லாவற்றையும் எல்லோரிடமும் நான் இப்படித் திருடவே மாட்டேனாக்கும்.

   எனக்கு மிகவும் பிடித்த ஒருசிலவற்றை மட்டும், அதுவும் யாரிடம் எனக்கு நிறைய உரிமைகள் இருப்பதாக நான் நினைக்கிறேனோ, அவர்களிடம் மட்டுமே, திருடிக்கொள்வேன்.

   >>>>>>

   நீக்கு
  2. கோபு >>>>> நிர்மலா [2]

   //ஜன்னல் கம்பிகள் ஒவ்வொன்றும் உங்கள் உழைப்பையும் விடா முயற்சியையும் எங்களோடு பகிர்ந்தன .//

   மிக்க நன்றி, நிர்மலா.

   //ஆறடி நிலம் பற்றிய தங்கள் ஆதங்கம் நிதர்சனமான சுடும் நிஜம் .//

   ஆமாம் நிர்மலா. இது எல்லா இடங்களிலும், எல்லோரையும் சுட ஆரம்பித்து விட்டது. பழமையிலும் சாஸ்திர சம்ப்ரதாயங்களிலும் ஊறிப்போய் உள்ளவர்களால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை என்பதே உண்மை.

   *****மிகச்சரியான நேரத்தில் நான் எடுத்த மிகச்சரியான முடிவுதான் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை, என்பேன்.*****

   //ஆமாம் அண்ணா சரியாக சொன்னீர்கள் ..நான் சென்னையில் ஒரு வீடு வாங்க தடுமாறி மிஸ் செய்து விட்டேன்

   இப்ப அந்த இடம் நான் கொடுக்க விருந்த விலையை விடா மூன்று மடங்கு அதிகமாகி விட்டது ..

   சில நேரத்தில் எதைபற்றியும் கவலைபடாமல் செய்யும் காரியத்தில் குறியாக இருக்கவேண்டும் .//

   தங்களின் புரிதலுக்கு நன்றி, நிர்மலா.

   //உங்க மகனும் மருமகளும் பாராட்டுக்கு உரியவர்கள் ..//

   ஆம் நிர்மலா, அவர்கள் மிகவும் BROAD MIND உள்ளவர்கள் + நல்ல குணம் படைத்தவர்கள்.

   அதே சமயம் அவர்கள் உலகைப் பார்க்கும் பார்வை மிகவும் வித்யாசமானது.

   என் பெரிய மகன் உலகம் சுற்றும் வாலிபன் ஆவான். அவன் போகாத நாடோ ஊரோ உலகில் இல்லை என்றே சொல்லலாம். அவனுக்கு உலக அனுபவம் மிகவும் அதிகம்.

   கணவன் + மனைவி இருவருமே CORRECT DECISION MAKING செய்யக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள்.

   என் ஆசிகள் எப்போதும் அவர்களுக்கு எக்கச்சக்கமாகவே உண்டு.

   அவர்களும் என் ஆசியுடன் கடந்த 10 ஆண்டுகளில் உலகின் பல்வேறு இடங்களில், பல முதலீடுகள் [FLATS + PLOTS] செய்துள்ளார்கள்.

   >>>>>>

   நீக்கு
  3. கோபு >>>> நிர்மலா [3]

   //வசந்த மாளிகையில் வசந்த நினைவுகளாய் எத்தனை சந்தோஷ நிகழ்வுகள் ... பொக்கிஷமான நினைவுகளை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி //

   மிகவும் சந்தோஷம் நிர்மலா.

   வஸந்த மாளிகையை நோக்கி தங்களின் அன்பான வருகைக்கும், வஸந்த நினைவுகளாய்ப்பகிர்ந்து கொண்ட அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், நிர்மலா.

   நீக்கு
 17. பதில்கள்
  1. பழனி. கந்தசாமி February 9, 2013 at 1:56 PM
   மிகவும் ரசித்தேன்.//

   வாருங்கள் ஐயா. வணக்கம்.

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ‘மிகவும் ரசித்தேன்’ என்ற கருத்துக்கும் மிக்க நன்றி, ஐயா.

   நீக்கு
 18. உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பெற்றோருடன் வளர்ந்த இடத்தில் அந்த நினைவுகளுக்காகவே வீடு வாங்கியிருப்பது, அதுவும் நஷ்டத்தைப் பொருட்படுத்தாமல், மிகவும் பாராட்டுக்குரியது. சொல்லியிருக்கும் காரணங்கள் மனதைத் தொடுகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம். February 9, 2013 at 2:12 PM

   வாங்கோ ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம் !

   //உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பெற்றோருடன் வளர்ந்த இடத்தில் அந்த நினைவுகளுக்காகவே வீடு வாங்கியிருப்பது, அதுவும் நஷ்டத்தைப் பொருட்படுத்தாமல், மிகவும் பாராட்டுக்குரியது. சொல்லியிருக்கும் காரணங்கள் மனதைத் தொடுகின்றன.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஸ்ரீராம்.

   நீக்கு
 19. தங்களின் பதிவு மிகவும் சுவையுடனும் பயனுடையதாகவும் உள்ளது.

  எனது தளத்தில் Passion On Plate contest வைத்திருக்கிறேன்.. உங்களால் முடிந்த சமையல் குறிப்பினை அனுப்பி போட்டியில் கலந்துக்கொள்ளும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  http://www.en-iniyaillam.com/2013/02/announcing-passion-on-plate-giveaway.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. faiza kader February 9, 2013 at 2:42 PM

   வாருங்கள். வணக்கம்.

   //தங்களின் பதிவு மிகவும் சுவையுடனும் பயனுடையதாகவும் உள்ளது. //

   மிக்க நன்றி.

   //எனது தளத்தில் Passion On Plate contest வைத்திருக்கிறேன்.. உங்களால் முடிந்த சமையல் குறிப்பினை அனுப்பி போட்டியில் கலந்துக்கொள்ளும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   http://www.en-iniyaillam.com/2013/02/announcing-passion-on-plate-giveaway.html//

   மீண்டும் சமையல் குறிப்பா ! ?????????

   எனினும் முயற்சிக்கிறேனுங்கோ ;)

   அன்பான தகவலுக்கும் அழைப்புக்கும் நன்றீங்கோ.

   நீக்கு
 20. சஸ்பென்ஸ் .................. நீடித்துக் கொண்டே ........................... போகிறது. மீண்டும் பழைய மலரும் நினைவுகள்! படிப்பதற்கு சுவாரஸ்யம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தி.தமிழ் இளங்கோ February 9, 2013 at 4:20 PM

   வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

   //சஸ்பென்ஸ் .................. நீடித்துக் கொண்டே ........................... போகிறது. மீண்டும் பழைய மலரும் நினைவுகள்! படிப்பதற்கு சுவாரஸ்யம்!//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

   நீக்கு
 21. எனவே நம்மால் நம் சக்திக்குத் தகுந்தவாறு தேர்ந்தெடுக்கப்படும் ஒரே ஒரு வீடு, நாம் நிம்மதியாகவும், சந்தோஷமாக வாழ்வதற்கு ஏற்றதாகவும், நமக்கு மிகவும் மனதுக்குப் பிடித்தமானதாகவும், நாம் பழகிய ஓர் இடமாகவும், ஓரளவுக்காவது பாதுகாப்பானதாகவும், எந்த ஒரு அத்யாவஸ்ய பொருள் வாங்கவும் அங்குமிங்கும் பஸ் பிடித்து, ரயில் பிடித்து, ஆட்டோ பிடித்து, டாக்ஸி பிடித்து அலையாதபடியாகவும், HEART OF THE CITY யாகவும் அமைந்து விட்டால் மிகவும் நல்லது அல்லவா!

  நம் குழந்தைகள் படிக்கும் பள்ளியோ, நாம் வணங்கும் தெய்வத்தின் கோயில்களோ, எல்லாமே நம் வீட்டிலிருந்து நடந்தே செல்லும் கூப்பிடு தூரத்தில் அமைந்திருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் அல்லவா!!//

  நீங்கள் சொல்வது உண்மை சார். வீடு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். என் கருத்தும் இது தான்.

  உங்கள் பெற்றோர்களுடன் வசித்த இடத்தில் வீடு, அவர்கள் ஆசிகள் உங்களை நல்லபடியாக வாழவைக்கும். அவர்கள் ஆசிர்வாதங்கள் என்றும் இருக்கும். மேலும் பல நன்மைகள் இறைவன் அருளால் வந்தடைய வாழ்த்துக்கள் சார்.
  உழைப்பின் உன்னதத்தை காட்டும் உயர்ந்த மனிதரின் வீட்டுக்கும், அதில் வாழும் உயர்ந்த உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  நீங்கள் குறிப்பிட்ட பதிவுகளை படிக்கிறேன் சார்.
  மனம்திறந்த அருமையான பதிவுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
  நிறைவு பகுதியை படிக்க ஆவலுடன் காத்து இருக்கிறேன்.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அரசு February 9, 2013 at 4:52 PM

   வாங்கோ மேடம். வணக்கம்.

   *****எனவே நம்மால் நம் சக்திக்குத் தகுந்தவாறு தேர்ந்தெடுக்கப்படும் ஒரே ஒரு வீடு, நாம் நிம்மதியாகவும், சந்தோஷமாக வாழ்வதற்கு ஏற்றதாகவும், நமக்கு மிகவும் மனதுக்குப் பிடித்தமானதாகவும், நாம் பழகிய ஓர் இடமாகவும், ஓரளவுக்காவது பாதுகாப்பானதாகவும், எந்த ஒரு அத்யாவஸ்ய பொருள் வாங்கவும் அங்குமிங்கும் பஸ் பிடித்து, ரயில் பிடித்து, ஆட்டோ பிடித்து, டாக்ஸி பிடித்து அலையாதபடியாகவும், HEART OF THE CITY யாகவும் அமைந்து விட்டால் மிகவும் நல்லது அல்லவா!

   நம் குழந்தைகள் படிக்கும் பள்ளியோ, நாம் வணங்கும் தெய்வத்தின் கோயில்களோ, எல்லாமே நம் வீட்டிலிருந்து நடந்தே செல்லும் கூப்பிடு தூரத்தில் அமைந்திருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் அல்லவா!!*****

   //நீங்கள் சொல்வது உண்மை சார். வீடு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். என் கருத்தும் இது தான். //

   தங்களின் ஆறுதலான வார்த்தைகளுக்கு சந்தோஷம், மேடம்.

   //உங்கள் பெற்றோர்களுடன் வசித்த இடத்தில் வீடு, அவர்கள் ஆசிகள் உங்களை நல்லபடியாக வாழவைக்கும். அவர்கள் ஆசிர்வாதங்கள் என்றும் இருக்கும். மேலும் பல நன்மைகள் இறைவன் அருளால் வந்தடைய வாழ்த்துக்கள் சார்.
   உழைப்பின் உன்னதத்தை காட்டும் உயர்ந்த மனிதரின் வீட்டுக்கும், அதில் வாழும் உயர்ந்த உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.//

   தங்களின் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றிகள். சந்தோஷம்.

   //நீங்கள் குறிப்பிட்ட பதிவுகளை படிக்கிறேன் சார்.//

   ரொம்பவும் சந்தோஷம், மேடம்.

   //மனம் திறந்த அருமையான பதிவுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். நிறைவு பகுதியை படிக்க ஆவலுடன் காத்து இருக்கிறேன்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் , வாழ்த்துகளுக்கும், பாராட்டுக்களுக்கும்என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.


   நீக்கு
 22. அன்பு கோபு சார். படித்த பிரமிப்பு இன்னும் அடங்க
  வில்லை. எத்தனை ஒரு உறுதி இருந்தால் இவ்வளவு செய்திருப்பீர்கள். மன
  அழுத்தப் பட்டிருந்தாலும் எடுத்த காரியத்தை முடித்தீர்கள். மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
  உங்களுக்குத் துணைநின்ற மனைவியையும் மகனையும் மிகவும் மதிக்கிறேன்.

  அடுத்தபகுதியில் நீங்கள் எவ்வளவு நாட்களில் வீடுகட்டிமுடித்தார்கள்
  என்னும் விவரமெல்லாம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
  நீங்கள் குறிப்பிட்டிருக்கும் லின்க்ஸ் விசிட் சமையல் வேலை முடிந்த பிறகு பார்க்கிறேன்.

  இத்தனை பூஜைகள் ஹோமங்கள்,சமாராதனை நடந்த இடம் இன்னும் செழிப்பாக இருக்கும்.பிள்ளையாரின் நேர்ப்பார்வையில் உங்கள்
  குடும்ப வாழ்க்கை உச்சிப் பிள்ளையாரின் நேர்ப்பார்வையில்
  இன்னும் செழிக்க வேண்டுமென்று வாழ்த்துகள் சொல்லிப் பெருமாளை வேண்டிக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வல்லிசிம்ஹன் February 9, 2013 at 5:47 PM

   வாங்கோ மேடம். வாங்கோ, அன்பு வணக்கங்கள்.

   //அன்பு கோபு சார். படித்த பிரமிப்பு இன்னும் அடங்கவில்லை. எத்தனை ஒரு உறுதி இருந்தால் இவ்வளவு செய்திருப்பீர்கள். மன அழுத்தப் பட்டிருந்தாலும் எடுத்த காரியத்தை முடித்தீர்கள். மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுக்குத் துணைநின்ற மனைவியையும் மகனையும் மிகவும் மதிக்கிறேன்.//

   தங்களின் சொற்கள் ரொம்பவும் சந்தோஷமாக உள்ளது.

   //அடுத்தபகுதியில் நீங்கள் எவ்வளவு நாட்களில் கட்டி முடித்தார்கள் என்னும் விவரமெல்லாம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.//

   இதற்கு பதில் தனியாக கீழே கொடுக்க உள்ளேன்.

   //நீங்கள் குறிப்பிட்டிருக்கும் லின்ங்ஸ் விசிட் சமையல் வேலை முடிந்த பிறகு பார்க்கிறேன்.//

   சமையல் வேலை முடிந்து, சாப்பாட்டு வேலையும் முடிந்து, கொஞ்சம் விஷ்ராந்தியும் செய்துகொண்டு, மெதுவாகவே பாருங்கோ. இது எங்கும் ஓடிவிடப்போவது இல்லை.

   //இத்தனை பூஜைகள் ஹோமங்கள்,சமாராதனை நடந்த இடம் இன்னும் செழிப்பாக இருக்கு பிள்ளையாரின் நேர்ப்பார்வையில்.//

   ஆமாம் மேடம். என்றும் நம்மை பிள்ளையார் காப்பாற்றுவார்.

   //உங்கள் குடும்ப வாழ்க்கை உச்சிப் பிள்ளையாரின் நேர்ப்பார்வையில் இன்னும் செழிக்க வேண்டுமென்று வாழ்த்துகள் சொல்லிப் பெருமாளை வேண்டிக் கொள்கிறேன்.//

   உங்களின் வேண்டுதலுக்கு நன்றி.

   ஸ்ரீலங்காவுக்குச் செல்ல இருந்த உங்கள் ஸ்ரீரங்கம் பெருமாளை, தடுத்து, இப்போது உள்ள இடத்தில், நகர முடியாதபடி, பிரதிஷ்டை செய்துவிட்டு, ஒரே ஓட்டமாக ஓடியாந்து மலை உச்சியில் அமர்ந்தவரே இந்த உச்சிப்பிள்ளையார் என்றும் ஓர் புராணக்கதை உள்ளதே மேடம்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் , வாழ்த்துகளுக்கும், பாராட்டுக்களுக்கும்என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   நீக்கு
  2. கோபு >>>>> திருமதி. வல்லிசிம்ஹன் அவர்கள் [2]

   //அடுத்தபகுதியில் நீங்கள் எவ்வளவு நாட்களில் வீடுகட்டி முடித்தார்கள் என்னும் விவரமெல்லாம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.//

   நான் இப்போது குடியிருக்கும் வீட்டைத்தவிர மீதி எல்லா வீடுகளும் பலராலும் 1998 ஜனவரி முதலே அட்வான்ஸ் கொடுத்து புக்கிங் ஆகி, மூன்று வருஷங்கள் மும்முரமாக கட்டட வேலைகள் நடந்து 2001 ஆரம்பத்தில் ஓரளவு வீடுகளின் வேலை முடிவுக்கு வந்து, சிலர் கிரஹப்பிரவேஸமும் நடத்தி விட்டார்கள்.

   இந்தக் குறிப்பிட்ட வீட்டை மட்டும் யாருக்குமே கொடுக்காமல் தனக்கே தனக்கு வேண்டும் என்று அந்த PROMOTER சொல்லி வந்துள்ளார்.

   அவருக்கு மிக நன்றாகத்தெரியும். இந்த வீடு கடைசியில் அல்வா போல நல்ல விலைக்குப் போய் விடும் என்று.

   நான் ஆரம்பத்திலிருந்தே இந்த குறிப்பிட்ட வீட்டின் மேல் ஒரு கண் வைத்திருந்தேன். அந்த PROMOTER இடமும் சொல்லி வைத்திருந்தேன். அதாவது "விலை முன்னே பின்னே ஆனாலும் எனக்கு அந்த குறிப்பிட்ட வீடு மட்டுமே வேண்டும்" என்று.

   கடைசியாக ஒரு நாள் அவருக்கு ஒரு ஃபோன் போட்டேன். நீ தருவாயா? அல்லது வேறு இடத்தில் நான் அட்வான்ஸ் கொடுக்கலாமா? என்று ஒரு பந்தை விட்டெறிந்தேன்.

   அவர் தன்னுடைய HIGHEST RATE ஐ எனக்குச் சொன்னதுடன், FULL PAYMENT WITHIN A WEEK தரவேண்டும் என்று கண்டிஷனும் போட்டார்.

   அடுத்த அரை மணி நேரத்தில் ஒரு டாக்ஸியில் போய் SINGLE CHEQUE FOR RUPEES FIVE LAKHS அட்வான்ஸ் பணம் கொடுத்து விட்டு, அதற்கான RECEIPT வாங்கிக்கொண்டேன். அவரிடம் நான் எதுவும் BARGAIN செய்யவே இல்லை.

   பிறகு அவர் சொன்ன கெடு தேதியான ஒரு வாரம் நான் சுத்தமாகத் தூங்கவே இல்லை என்பது வேறு விஷயம்.

   அடுத்த என் SINGLE CHEQUE மூலம் அவருக்கான FULL SETTLEMENT OVER.

   அவரே அசந்து போனார். அவர் மட்டுமல்ல, இந்தக் கட்டடத்தில் வீடு வாங்கியுள்ள மீதி 27 பேர்களும் தான்.

   அவர்களில் பலரும் இந்த வீட்டை தங்களுக்காகக் கேட்டிருந்து, அது கிடைக்காமல் போகவே, ரயில் வண்டி போல எதிரும் புதிருமாக இருட்டான நடை பாதையில் அமைந்துள்ள. ஏதோ ஒரு வீட்டினை வாங்கியுள்ளனர். அதனால் அவர்களுக்கு என் மீது கொஞ்சம் வருத்தம். சிலர் இதை என்னிடம் நேரிடையாகவே கூடச்சொன்னார்கள்.

   எனவே READY MADE PANT + SHIRT வாங்குவது போல நான், ஜூலை 2001 முதல் வாரத்தில் முழுப்பணமும் கொடுத்து விட்டு, ஆகஸ்டு 2001 இல் கிரஹப்பிரவேஸம் செய்துவிட்டு, 2001 நவம்பர் மாதம் இறுதியில் குடி வந்து விட்டேன்.

   குடி வந்த பிறகு வந்த முதல் பண்டிகை 2001 கார்த்திகை தீபம்.

   என் வீட்டிலிருந்து மலைக் கார்த்திகை தீபம் ஏற்றுவதை தரிஸித்து விட்டு, நாங்கள் புது ஆத்தில் விளக்குகள் ஏற்றி மகிழ்ந்தோம்.

   மேலும் ஓர் சுவையான நிகழ்ச்சி கீழே தனியாக எழுதியுள்ளேன்.

   >>>>>>>

   நீக்கு
  3. கோபு >>>> திருமதி. வல்லிசிம்ஹன் அவர்கள் [3]

   இந்த எங்கள் சிவஷக்தி டவர்ஸ், கட்டட வேலைகள் நடந்த போது 2008-2011, 4 வருடங்களில் ஒரு புருஷன் பொஞ்சாதி, இதே கட்டடத்தின் வாட்ச்மேன் வேலை பார்த்து வந்தனர்.

   சித்தாள், கொத்தனார், மேஸ்திரி போலவும் செயல்பட்டு வந்தனர்.

   இரவெல்லாம் இங்கேயே தங்கி வந்தனர்.

   FLAT விலைக்குக் கிடைக்குமா? என விசாரிக்க வருபவர்களுக்கு எல்லாம் அவர்களே PROMOTER பெயர், போன் நம்பர் முதலியன கொடுத்து, பதில் சொல்லிக்கொண்டும் இருந்தனர்.

   ஏற்கனவே 2 குழந்தைகள் அந்த தம்பதிக்கு. இந்த கட்டட வேலைகள் நடைபெற்ற நாலு வருஷத்தில் மட்டும் புதியதாக 2 குழந்தைகள் பிறந்து ஆங்காங்கே தூளி கட்டி ஆட்டிக் கொண்டிருந்ததையும் நான் கண்டு மகிழ்ந்துள்ளேன்.

   எதற்குச்சொல்கிறேன் என்றால், இந்த எங்கள் கட்டடம் எல்லாவற்றிற்குமே மிகவும் ராசியான இடமாக்கும். ;)))))) ]

   oooooooo

   நீக்கு
  4. //அப்பாதுரை February 13, 2013 at 10:29 PM

   சுவாரசியம்.//

   Dear Sir,

   உண்மையிலேயே இது மிகவும் சுவாரஸ்யமான விஷயம் தான், சார்.

   இதுபோல நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் என் மனதில் உள்ளன.

   ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையான உண்மை அனுபவங்கள் மட்டுமே .

   எல்லாவற்றையும், எல்லா இடங்களிலும், எல்லோரிடமும் என்னால் பகிர்ந்து கொள்ள முடிவது இல்லை.

   ஒரு சிலவற்றை மட்டும் என் சிறுகதைகளில் ஆங்காங்கே மிக மென்மையாகக் கொண்டு வந்துள்ளேன்.

   இவர்கள் [திருமதி. வல்லிசிம்ஹன் அவர்கள்] என்னைவிட வயதில் சற்றே ஓரிரு ஆண்டுகள் மூத்தவர்.

   தற்சமயம் மட்டும் துபாயில் இருக்கிறார்கள்.

   இதைப்படித்த அவர்கள், சந்தோஷ மிகுதியால் எனக்குத் தனியாக ஒரு மிக நீ....ண்....ட மெயில் கொடுத்துள்ளார்கள்.

   அவர்களுக்குத் தெரிந்த, குழந்தை பாக்யம் இதுவரை ஏற்படாத தம்பதிகள் சிலரை, இந்த [சந்தான] கோபாலகிருஷ்ணனின் வீட்டு ஜன்னல் கம்பியைப்போய் தொட்டு விட்டு வரச்சொல்லி அனுப்புவதாக உள்ளார்களாம். ;)

   இந்த என் பதிவினால் இன்னும் என்னென்ன நடக்கப்போகிறதோ! ஆண்டவா !! ;)))))

   திருமதி வல்லிசிம்ஹன் அவர்களுக்கு நான் எழுதியுள்ள இந்த சுவாரஸ்யமான என் பதிலை, இங்கு வருகை தந்துள்ள எவ்வளவு பேர்கள் படித்தார்களோ அல்லது படிக்காமல் தவற விட்டுள்ளார்களோ, எனக்குத் தெரியாது.

   தாங்கள் இதை ரஸித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.

   நீக்கு
 23. every sage has a past என்று சொல்வார்கள்.

  ஒவ்வொரு மனிதனின் பின்னும் ஒரு கதை நிச்சயம் உண்டு.
  ஆனால் அதை பிறருக்கு எடுத்து சொல்வதற்கு திறமை தேவை.
  அப்படி சொன்னாலும் அதை கேட்பதற்கு மனிதர்கள் தேவை.
  அந்த தகுதி இறைவன் உமக்கு அளித்திருக்கிறான்,
  நீங்கள் பல்லாண்டு வாழ்க பெரும் புகழுடன்.

  இந்த உலகில் கோடிக்கணக்கான
  unsung heroes இருக்கிறார்கள்.

  ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பல அனுபவங்கள்.
  அனுபவங்கள்தான் உண்மையான ஆசிரியர்கள்.
  அவைகளிலிருந்து பாடங்களை கற்றுக்கொளுபவனே
  வாழ்வில் முன்னேறுகிறான்.

  பாடம் கற்றுக்கொள்ளாதவன்
  வீட்டில் சுவரில் படமாகதான்
  மாட்டப்படுவான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Pattabi Raman February 9, 2013 at 6:17 PM

   வாருங்கள், வணக்கம்.

   //every sage has a past என்று சொல்வார்கள்.

   ஒவ்வொரு மனிதனின் பின்னும் ஒரு கதை நிச்சயம் உண்டு.
   ஆனால் அதை பிறருக்கு எடுத்து சொல்வதற்கு திறமை தேவை.
   அப்படி சொன்னாலும் அதை கேட்பதற்கு மனிதர்கள் தேவை.
   அந்த தகுதி இறைவன் உமக்கு அளித்திருக்கிறான்,
   நீங்கள் பல்லாண்டு வாழ்க பெரும் புகழுடன்.

   இந்த உலகில் கோடிக்கணக்கான
   unsung heroes இருக்கிறார்கள்.

   ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பல அனுபவங்கள்.
   அனுபவங்கள்தான் உண்மையான ஆசிரியர்கள்.
   அவைகளிலிருந்து பாடங்களை கற்றுக்கொளுபவனே
   வாழ்வில் முன்னேறுகிறான்.

   பாடம் கற்றுக்கொள்ளாதவன்
   வீட்டில் சுவரில் படமாகதான்
   மாட்டப்படுவான்//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் , வாழ்த்துகளுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

   நீக்கு
 24. கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க. நகரின் மையப் பகுதியில, ஆஸ்பத்திரி, ஆலயம் எல்லாம் அருகில் இருக்கிற மாதிரி வீடு அமைவது கொடுப்பினைதான். அதற்காக நீங்க பட்ட கஷ்டங்களைத் தாண்டி, பல நல்ல நிகழ்வுகள் நடந்தேறியிருபு்பதைப் பகிர்ந்திருக்கறதப் படிச்சதும் சந்தோஷம். ஸ்டோர் வீடுகளில் குடியிருந்த அனுபவம் என் இளமைப் பருவத்தின் சொத்து. அதை நினைவுபடுத்திட்டீங்க என்னை சின்ன பையனாக்கிட்டீங்க நீங்க இப்போ. யார் கிட்டயும் கடனே வாங்காம வாழணும்கறத பாžலிஸியா கடைப்பிடிச்சுட்டு வர்ற எனக்கு நீங்களும் என் மாதிரிங்கறதுல கொள்ளை சந்தோஷம் வை.கோ. ஸார். ஆனா... உங்க மேல கொஞ்சம் கோபம்தான்! பின்ன... அடுத்த பதிவு நீங்க வெளியிடற வரைக்கும் காக்க வெச்சுட்டீங்களே...! வருகிற ஞாயிறு அங்கு வருவதாக உத்தேசம். அதற்குள் வெளியிட்டால் சரி... இல்லையேல் உங்கள் வீடு முற்றுகைப் போராட்டம் இடப்படும். ஹி... ஹி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பால கணேஷ் February 9, 2013 at 6:57 PM

   வாருங்கள், வணக்கம்.

   //கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க. நகரின் மையப் பகுதியில, ஆஸ்பத்திரி, ஆலயம் எல்லாம் அருகில் இருக்கிற மாதிரி வீடு அமைவது கொடுப்பினைதான். அதற்காக நீங்க பட்ட கஷ்டங்களைத் தாண்டி, பல நல்ல நிகழ்வுகள் நடந்தேறியிருபு்பதைப் பகிர்ந்திருக்கறதப் படிச்சதும் சந்தோஷம். //

   மிக்க நன்றி சார், எனக்கும் சந்தோஷமே.

   //ஸ்டோர் வீடுகளில் குடியிருந்த அனுபவம் என் இளமைப் பருவத்தின் சொத்து. அதை நினைவுபடுத்திட்டீங்க என்னை சின்ன பையனாக்கிட்டீங்க நீங்க //

   இளமை ஊஞ்சலாடட்டும் எப்போதுமே ... மின்னலாக!

   //இப்போ. யார் கிட்டயும் கடனே வாங்காம வாழணும்கறத பாžலிஸியா கடைப்பிடிச்சுட்டு வர்ற எனக்கு நீங்களும் என் மாதிரிங்கறதுல கொள்ளை சந்தோஷம் வை.கோ. ஸார்.//

   ”கடன் பட்டான் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்” என்றல்லவா கம்பர் சொல்லியிருக்கிறார்.

   ஆனால் இப்போதெல்லாம் கடன் பட்டவர்களை விட கடன் கொடுத்தவர்களும் கலங்கித்தான் போகிறார்கள், வசூல் ஆகுமோ ஆகாதோ என்று.

   //ஆனா... உங்க மேல கொஞ்சம் கோபம்தான்! பின்ன... அடுத்த பதிவு நீங்க வெளியிடற வரைக்கும் காக்க வெச்சுட்டீங்களே...! //
   வருகிற ஞாயிறு அங்கு வருவதாக உத்தேசம். அதற்குள் வெளியிட்டால் சரி... இல்லையேல் உங்கள் வீடு முற்றுகைப் போராட்டம் இடப்படும். ஹி... ஹி.//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! எப்படியும் வெளியிட்டு விடுகிறேன்.

   வெளியிடாததற்காகவோ அல்லது வெளியிட்டதற்கோ எதற்கோ ஒன்றுக்கு நீங்கள் முற்றுகைப் போராட்டம் நடத்துங்கோ.

   அப்போதுதான் என் பெயரும் விஸ்வரூபமாக பிரபலமாகக்கூடும். .

   நீக்கு
 25. Unmaiyil suspense ezhuththaLar thaangaL!! aduththa pagathikkaaka aavaludan...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. middleclassmadhavi February 9, 2013 at 7:43 PM

   வாங்கோ, வணக்கம்,.

   //Unmaiyil suspense ezhuththaLar thaangaL!! aduththa pagathikkaaka aavaludan...உண்மையில் தாங்கள் சஸ்பென்ஸ் எழுத்தாளர்.
   அடுத்த பகுதிக்காக ஆவலுடன் //

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் , என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   நீக்கு
 26. உங்கள் வீடு வாங்கிய அனுப்பவம் மிக அருமை, உங்கள் வீட்டு ஜன்னல் இல்லை ஓவ்வொரு கல்லிலும் உங்கள் உழைப்பு இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jaleela Kamal February 9, 2013 at 9:13 PM

   வாருங்கள் மேடம், வணக்கம்.

   //உங்கள் வீடு வாங்கிய அனுப்பவம் மிக அருமை, உங்கள் வீட்டு ஜன்னல் இல்லை ஓவ்வொரு கல்லிலும் உங்கள் உழைப்பு இருக்கிறது.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆறுதலான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

   நீக்கு
 27. நாங்களும் சரி எங்க அம்மாவீட்டிலும் சரி, மாமியார் வீட்டிலும் மே ஊருக்கு ஒதுக்கு புறமாக வீடு வாங்கினால் நல்ல வசதியாக பங்களாவில் வாழலாம்.

  ஆனால் ஒரு ஆத்த்ர அவசரத்துக்கு மக்கள் மனுஷாட்களை தேட முடியாது.
  நீங்கள் சொல்வது போல் பழகிய இடம் தான் நமக்கு பெஸ்ட்.

  விட்டை விட்டு கீழே இரங்கினால் நடக்கும் தொலைவில் எல்லாம் பொருட்களும் கிடைக்கும்படியான இடத்தில் தான் இருக்கிறோம்.

  இன்னுமா இதே வீட்டில் இருக்கிறீர்கள் என்று நிறைய பேர் கேட்பார்கள்
  அதே வீட்டில் இருப்பதற்கும் ஒரு குடுப்பினை வேண்டும் இல்லை யா??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jaleela Kamal February 9, 2013 at 9:20 PM
   நாங்களும் சரி எங்க அம்மாவீட்டிலும் சரி, மாமியார் வீட்டிலுமே ஊருக்கு ஒதுக்கு புறமாக வீடு வாங்கினால் நல்ல வசதியாக பங்களாவில் வாழலாம்.

   ஆனால் ஒரு ஆத்திர அவசரத்துக்கு மக்கள் மனுஷாட்களை தேட முடியாது. நீங்கள் சொல்வது போல் பழகிய இடம் தான் நமக்கு பெஸ்ட்.

   விட்டை விட்டு கீழே இறங்கினால் நடக்கும் தொலைவில் எல்லாம் பொருட்களும் கிடைக்கும்படியான இடத்தில் தான் இருக்கிறோம்.

   இன்னுமா இதே வீட்டில் இருக்கிறீர்கள் என்று நிறைய பேர் கேட்பார்கள். அதே வீட்டில் இருப்பதற்கும் ஒரு குடுப்பினை வேண்டும் இல்லை யா??//

   என் சிறிய வயதில் என் அப்பா அம்மாவுடன் அந்த ஓட்டு வீட்டில் நாங்கள் வசித்ததற்கும் இதுவே காரணம்.

   வீடு சற்றே வசதி குறைவாக இருந்தாலும் கூட, வீட்டைச்சுற்றி எல்லா வசதிகளும் இருந்தன. அதுவும் தானே முக்கியம்.

   தாங்கள் சொல்வது போல எதற்குமே ஓர் கொடுப்பிணை வேண்டும் தான்.

   நீக்கு
 28. சின்னவயதில் வாழ்ந்த அதே குடியிருப்பை , பிற்காலத்தில் நீங்களே வாங்கியது சின்ன விஷியம் கிடையாது,
  இது ஒரு பெரிய சாதனையே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jaleela Kamal February 9, 2013 at 9:21 PM

   //சின்னவயதில் வாழ்ந்த அதே குடியிருப்பை, பிற்காலத்தில் நீங்களே வாங்கியது சின்ன விஷயம் கிடையாது, இது ஒரு பெரிய சாதனையே.//

   ஆமாம் மேடம். இளமையில் வறுமையை அனுபவித்த எனக்கு, இது ஓர் மிகப்பெரிய சாதனை தான். சந்தேகமே இல்லை.

   நீக்கு
 29. //// நாம் நிம்மதியாகவும், சந்தோஷமாக வாழ்வதற்கு ஏற்றதாகவும், நமக்கு மிகவும் மனதுக்குப் பிடித்தமானதாகவும், நாம் பழகிய ஓர் இடமாகவும், ஓரளவுக்காவது பாதுகாப்பானதாகவும், எந்த ஒரு அத்யாவஸ்ய பொருள் வாங்கவும் அங்குமிங்கும் பஸ் பிடித்து, ரயில் பிடித்து, ஆட்டோ பிடித்து, டாக்ஸி பிடித்து அலையாதபடியாகவும், HEART OF THE CITY யாகவும் அமைந்து விட்டால் மிகவும் நல்லது அல்லவா! ////


  இதே தான் என் கணவரும் சொல்வார்,

  எனக்கு தெரிந்த ஒரு குடும்பம் இங்கு எங்க ஏரியாவில் தான் இருந்தார்கள்.

  ஆனால் கொஞ்ச நாட்களில் வீடு மாறி போய் விட்டனர்,

  முதலில் இருந்த வீட்டை விட. இப்ப இருக்கும் வீட்டில் நாலு குழந்தைகள் சைக்கிள் ஓட்டலாம், பந்து விளையாடலாம்

  அவங்க சமையலறையில் அங்கே யே டைனிங், பக்கத்தில் பெரிய சமைத்து விட்டு முடியலன்னா அப்படியே சாய்ந்தட ஈச்சி சேர்,

  இதெல்லாம் உண்டு

  ஆனால் என்ன பயன். ஒரு கருவேப்பிலை, பால் வாங்குவதாக இருந்தால் கூட காரை எடுத்து கொண்டு வெகு தூரம் டிராபிக்கில் நீந்தி அடிச்சி போய் வாங்கி வரனும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jaleela Kamal February 9, 2013 at 9:26 PM

   ***** நாம் நிம்மதியாகவும், சந்தோஷமாக வாழ்வதற்கு ஏற்றதாகவும், நமக்கு மிகவும் மனதுக்குப் பிடித்தமானதாகவும், நாம் பழகிய ஓர் இடமாகவும், ஓரளவுக்காவது பாதுகாப்பானதாகவும், எந்த ஒரு அத்யாவஸ்ய பொருள் வாங்கவும் அங்குமிங்கும் பஸ் பிடித்து, ரயில் பிடித்து, ஆட்டோ பிடித்து, டாக்ஸி பிடித்து அலையாதபடியாகவும், HEART OF THE CITY யாகவும் அமைந்து விட்டால் மிகவும் நல்லது அல்லவா! *****

   //இதே தான் என் கணவரும் சொல்வார்,//

   சந்தோஷம். நன்கு புரிந்து கொடுள்ளார்.

   //எனக்கு தெரிந்த ஒரு குடும்பம் இங்கு எங்க ஏரியாவில் தான் இருந்தார்கள். ஆனால் கொஞ்ச நாட்களில் வீடு மாறி போய் விட்டனர், முதலில் இருந்த வீட்டை விட. இப்ப இருக்கும் வீட்டில் நாலு குழந்தைகள் சைக்கிள் ஓட்டலாம், பந்து விளையாடலாம். அவங்க சமையலறையில் அங்கே யே டைனிங், பக்கத்தில் பெரிய சமைத்து விட்டு முடியலன்னா அப்படியே சாய்ந்தட ஈச்சி சேர், இதெல்லாம் உண்டு

   ஆனால் என்ன பயன். ஒரு கருவேப்பிலை, பால் வாங்குவதாக இருந்தால் கூட காரை எடுத்து கொண்டு வெகு தூரம் டிராபிக்கில் நீந்தி அடிச்சி போய் வாங்கி வரணும்//

   அழகாகவே உதாரணத்துடன் சொல்லிவிட்டீர்கள். அதே அதே ! கஷ்டம் தான். மஹா கஷ்டம் தான். அனுபவித்தால் தான் தெரியும் அந்தக்கஷ்டம்..

   நீக்கு
 30. நமது வாழ்வில் இருக்கும் கனவுகளில் இரண்டு மிகப் பெரியது. ஒரு கல்யாணம், மற்றொன்று வீடு கட்டுதல். இவை இரண்டும் சிறப்பாக அமைந்து விட்டால், மற்றவை சிறப்பாக செல்லும். ஏனென்றால் வாழ்வில் மகிழ்ச்சி தருவது, நல்லதொரு இல்லாள், நலம் பயக்கும் இல்லம். இதற்கு இறைவன் வரம் தந்திருக்க வேண்டும். மனைவி அமைவதும் இறைவன் கொடுத்த வரம். நல்ல மனை (வீடு) அமைவதும் இறைவன் கொடுத்த வரம்.

  தாங்கள் கூறியது போல், ஆத்மாவைத் தவிர வேறு எதுவும் நமக்கு சொந்தமில்லை. கொண்டு வந்தது ஏதுமில்லை. கொண்டு செல்வதும் ஏதுமில்லை. ஆனால் இந்த உடலைக் கொண்டு இடைப்பட்ட காலத்தில் வாழ்வது இருக்கின்றதே அது மகிழ்ச்சியாக செல்ல வேண்டும். அதற்கு வாழுமிடம் மனதிற்கு பிடித்ததாக, வசதியாக இருக்க வேண்டும். அது சொந்த வீடாக இருந்து விட்டால் ஒரு தனி கம்பீரம், பெருமை, கர்வம். இந்த உடல் வாழ்ந்த பயனின் அடையாளம். தனக்கெனவும், பின் தன் சந்ததியினருக்கெனவும் ஒரு சொந்த வீடு என்பது ஒரு நீண்ட கால பாரம்பரியத்தின் சின்னம்.

  " எங்கே போனாலும் வந்தாலும், எனக்கு என்கவூட்டுக்கு போய்ட்டா நிம்மதி", "என்னதான் சொல்லுங்க, எங்க வூடு மாதிரி வராது", "நான் இந்த வீட்டுக்கு குடி வந்த பிறகுதான், எனக்கு புரோமோஷன் வந்தது; கார் வாங்கினேன்; பொண்டாட்டிக்கும் மகளுக்கும் முப்பது பவுன்லே செயின் வாங்கிப் போட்டேன். நான் இந்த வூட்டை கட்டிய பிறகுதான் எனக்கு எல்லா அதிர்ஷ்டமும் வந்திச்சு" - இவை நாம் வெகு சாதாரணமாக கேட்டிருக்கும் ஒரு 'பெருமூச்சு' அல்லது 'சந்தோஷ' வாசகங்கள். ஆனால் அது அமைய வேண்டும்.

  இதே இப்படியும் சில வாசகங்களை நாம் கேட்டிருப்போம். அதாவது, "அவருக்கு என்ன வேதனையோ தெரியலை, மனுஷன் வீட்டை விட்டு ஓடிப் போய்ட்டார் !", "என்னோமோ தெரியலை நான் அந்த வீட்டை வித்து இந்த வீட்டுக்கு வந்த பிறகு, இப்போ நிம்மதியா இருக்கேன்" - இவையும் நாம் கேட்டிருக்ககூடிய வாசகங்கள்தாம்.

  ஒரு இலக்கணமான வீடு அதில் வாழும் மனிதர்களின் குணங்களை மாற்றும் வல்லமையும் கொண்டது என்பதையும் நாம் நம்பித்தான் ஆக வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் கொண்டவன், வீட்டிற்கு வந்தவுடன் நேர்மறை எண்ணங்கள் கொண்டவனாக மாறுவான். இதுவே தலைகீழாகவும் செல்லும். அதற்கு வீடு கட்டப்பட்டுள்ள விதம், அறைகள் அமைந்துள்ள இடம் கூட ஒரு காரணம். சாஸ்திரத்தை ஒரேடியாக இன்று கடைப்பிடிக்க முடியாது போனாலும், ஓரளவாவது கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். வாஸ்து என்பதும் ஒரு அறிவியலே.

  தங்கள் அனுபவக் கட்டுரை என்னை இப்படி பல்வேறு சிந்தனைகளுக்கு இட்டுச் சென்றுள்ளது. இன்று தாங்கள் தங்கள் வீட்டை பற்றி ஒரு அனுபவமாக சொல்வதற்கு எவை வித்திட்டது என்று பார்த்தால், எப்படியாவது இந்த வீட்டை வாங்கி விட வேண்டும் என்ற தங்கள் ஆணித்தரமான அவா. வாங்கி விடுவோம் என்ற தன்னம்பிக்கை. அதற்கான முயற்சி, செய்த தியாகம். கொடுத்த விலை. காலம் கனிய காத்திருந்தது. இந்த உணர்வுகள் யாவற்றுக்கும் இன்று 'பவித்ராலாயா' என்ற தங்கள் வீடு கொடுத்திருக்கும் பதில் மரியாதை, மகிழ்ச்சி மற்றும் பெருமை. உயிர் இல்லாத ஒன்று தங்களின் இந்த உணர்வுகளின் காரணமாக உயிர் பெற்று உங்கள் குடும்பத்தினர் அனைவருடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது; ஒரு அரணாக பாதுகாத்து வந்து கொண்டிருக்கின்றது என்று சொன்னால் அதில் மிகை ஒன்றும் இல்லை என்றே நான் கருதுகின்றேன்.

  இந்த மகிழ்ச்சி, நிம்மதி, பெருமை, அமைதி எல்லாம் உங்களுக்கு, உங்கள் சந்ததியினருக்கு தொடர்ந்து கிட்டி, பெருகி, இந்த வீட்டை பற்றி பெருமையாக தங்கள் பேரன் சிவா பின்னாளில் எழுத அதை என் பேரன் வாசிக்க அருள் பாலிக்கும்படி அந்த அம்பாளை வேண்டி வணங்குகின்றேன்.

  வாழ்க வளமுடன்.

  PRJ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Advocate P.R.JayarajanFebruary 9, 2013 at 10:01 PM

   வாருங்கள், வணக்கம். தங்களின் மிக நீண்ட கருத்துக்கள் எல்லாம் மிக அருமையாக உள்ளன. மனதுக்கு நெகிழ்ச்சியாகவும் உள்ளது. உள்ளதை உள்ளபடி மனம் திறந்து சொல்லியுள்ளீர்கள்.

   //இந்த மகிழ்ச்சி, நிம்மதி, பெருமை, அமைதி எல்லாம் உங்களுக்கு, உங்கள் சந்ததியினருக்கு தொடர்ந்து கிட்டி, பெருகி, இந்த வீட்டை பற்றி பெருமையாக தங்கள் பேரன் சிவா பின்னாளில் எழுத அதை என் பேரன் வாசிக்க அருள் பாலிக்கும்படி அந்த அம்பாளை வேண்டி வணங்குகின்றேன்.

   வாழ்க வளமுடன்.//

   //இந்த வீட்டை பற்றி பெருமையாக தங்கள் பேரன் சிவா பின்னாளில் எழுத அதை என் பேரன் வாசிக்க ........//

   VERY EXCELLENT Sir. I am very very Happy to go thro' these words.

   Thank you very much Sir for your kind visit here & the beautiful comments offered. Thanks a Lot Sir.

   அன்புடன் vgk

   நீக்கு
  2. பதில் கருத்துக்கு நன்றி சார்....

   நீக்கு
 31. ஆச்சரியம் தான். சின்ன வயசில் இருந்த அதே இடத்திலேயே மீண்டும் வீடு கிடைத்ததும், சிரமப்பட்டாவது அதை நீங்கள் வாங்கியதும் ஆச்சரியமான அனுபவங்களாக உள்ளன. வசதி முக்கியம் தான். அதுவும் நகரிலேயே இருந்து பழகியவர்களுக்கு நகரத்தை விட்டு வெளியே வரத் தோன்றாது. வீட்டிலும் அடுத்தடுத்து சுபகாரியங்கள் நடந்திருப்பதும் நிறைவாக இருக்கின்றது. உங்கள் மற்றப் பதிவுகளை இனித் தான் படிக்க வேண்டும்.

  கடைசியில் இந்த வாரமும் சஸ்பென்ஸைச் சொல்லாமல் விட்டு விட்டீர்கள். பார்க்கலாம் அடுத்தவாரம். :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Geetha Sambasivam February 9, 2013 at 10:34 PM

   வாங்கோ, வணக்கம்.

   //ஆச்சரியம் தான். சின்ன வயசில் இருந்த அதே இடத்திலேயே மீண்டும் வீடு கிடைத்ததும், சிரமப்பட்டாவது அதை நீங்கள் வாங்கியதும் ஆச்சரியமான அனுபவங்களாக உள்ளன. வசதி முக்கியம் தான். அதுவும் நகரிலேயே இருந்து பழகியவர்களுக்கு நகரத்தை விட்டு வெளியே வரத் தோன்றாது. வீட்டிலும் அடுத்தடுத்து சுபகாரியங்கள் நடந்திருப்பதும் நிறைவாக இருக்கின்றது.//

   ரொம்பவும் சந்தோஷம்.

   //உங்கள் மற்றப் பதிவுகளை இனித் தான் படிக்க வேண்டும். //

   ஆஹா, படியுங்கோ!

   //கடைசியில் இந்த வாரமும் சஸ்பென்ஸைச் சொல்லாமல் விட்டு விட்டீர்கள். பார்க்கலாம் அடுத்தவாரம். :)))))//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் , என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   நீக்கு
 32. // நம்மால் நம் சக்திக்குத் தகுந்தவாறு தேர்ந்தெடுக்கப்படும் ஒரே ஒரு வீடு, நாம் நிம்மதியாகவும், சந்தோஷமாக வாழ்வதற்கு ஏற்றதாகவும், நமக்கு மிகவும் மனதுக்குப் பிடித்தமானதாகவும், நாம் பழகிய ஓர் இடமாகவும், ஓரளவுக்காவது பாதுகாப்பானதாகவும், எந்த ஒரு அத்யாவஸ்ய பொருள் வாங்கவும் அங்குமிங்கும் பஸ் பிடித்து, ரயில் பிடித்து, ஆட்டோ பிடித்து, டாக்ஸி பிடித்து அலையாதபடியாகவும், HEART OF THE CITY யாகவும் அமைந்து விட்டால் மிகவும் நல்லது அல்லவா!//

  உண்மை சார் நீங்கள் சொல்வது சரிதான் அந்த வீட்டிற்கான உங்கள் உழைப்புகள் உங்களுக்கு வேண்டிய மன நிறைவை தந்திருக்கும் அல்லவா
  'போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் போகட்டும் கண்ணனுக்கே '
  உங்களுக்கு தெரியாத தா உங்க பெயரிலேயே தங்கவைத்திருக்கீங்க
  அருமையான பகிர்வு தொடர வாழ்த்துகள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. malar balan February 9, 2013 at 11:26 PM

   வாருங்கள், வணக்கம்.

   ***** நம்மால் நம் சக்திக்குத் தகுந்தவாறு தேர்ந்தெடுக்கப்படும் ஒரே ஒரு வீடு, நாம் நிம்மதியாகவும், சந்தோஷமாக வாழ்வதற்கு ஏற்றதாகவும், நமக்கு மிகவும் மனதுக்குப் பிடித்தமானதாகவும், நாம் பழகிய ஓர் இடமாகவும், ஓரளவுக்காவது பாதுகாப்பானதாகவும், எந்த ஒரு அத்யாவஸ்ய பொருள் வாங்கவும் அங்குமிங்கும் பஸ் பிடித்து, ரயில் பிடித்து, ஆட்டோ பிடித்து, டாக்ஸி பிடித்து அலையாதபடியாகவும், HEART OF THE CITY யாகவும் அமைந்து விட்டால் மிகவும் நல்லது அல்லவா!*****

   //உண்மை சார் நீங்கள் சொல்வது சரிதான் அந்த வீட்டிற்கான உங்கள் உழைப்புகள் உங்களுக்கு வேண்டிய மன நிறைவை தந்திருக்கும் அல்லவா! //

   ஆம். இந்த வீடு விஷயத்தில் நான் மன நிறைவுடனேயே இப்போதும் உள்ளேன்.

   //'போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் போகட்டும் கண்ணனுக்கே 'உங்களுக்கு தெரியாத தா உங்க பெயரிலேயே தங்கவைத்திருக்கீங்க //

   சந்தோஷம். என் பெயர் தான் கோபாலகிருஷ்ணன். ஆனால் நான் மிகச்சாதாரணமானவன், தான்.
   .
   //அருமையான பகிர்வு தொடர வாழ்த்துகள் .//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் , என் மனமார்ந்த நன்றிகள்.

   நீக்கு
 33. இதில் நான் மிகவும் அதிகமான RISK எடுத்து விட்டாலும் கூட, மிகச்சரியான நேரத்தில் நான் எடுத்த மிகச்சரியான முடிவுதான் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை, என்பேன். //

  ரிஸ்க் எடுப்பதெல்லாம்
  ரஸ்க் சாப்பிடுகிற மாதிரி அநாயசமாக மிகச்சரியான முடிவை சரியான தருணத்தில் எடுத்து வெற்றி பெற்று மனத்திருப்தி அடைந்ததற்கு வாழ்த்துகள். பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி February 9, 2013 at 11:35 PM

   வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!! வாங்கோ!!!! வாங்கோ!!!!!

   *****இதில் நான் மிகவும் அதிகமான RISK எடுத்து விட்டாலும் கூட, மிகச்சரியான நேரத்தில் நான் எடுத்த மிகச்சரியான முடிவுதான் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை, என்பேன்.*****

   //ரிஸ்க் எடுப்பதெல்லாம்
   ரஸ்க் சாப்பிடுகிற மாதிரி அநாயசமாக மிகச்சரியான முடிவை சரியான தருணத்தில் எடுத்து வெற்றி பெற்று மனத்திருப்தி அடைந்ததற்கு வாழ்த்துகள். பாராட்டுக்கள்..//

   என்னது ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடுகிற மாதிரியா?

   உங்களுக்கு வேண்டுமானால் அப்படியிருக்கலாமுங்க ! எனக்கு குருவி தலையில் பனங்காயை வைத்தது போல இருந்தது. ஆனாலும் மிகவும் சுதாரிப்புடன், திட்டமிட்டு, மீண்டு வந்து விட்டேன்.

   இந்த வீடு வாங்கிய ராசியால் மிகப்பெரிய WAGE REVISION ஒன்று வந்து என்னை எங்கேயோ கொண்டு போய் மகிழ்வித்து விட்டது.

   அதனாலும் என்னால் சுலபமாக கடன்களை அடைத்து வெளியே வர முடிந்தது.

   இப்போது ஒரு சிரமமும் இல்லை. SURPLUS BUDGET தான். ;)))))

   நீக்கு
 34. நீங்க பெரியவர் நாலும் தெரிஞ்சவர்... உங்களுக்கு நான் சொல்ல என்ன இருக்கு.. ஆனாலும்.. அனைத்தையும் வெளியில் ஒப்புவிக்கப்படாது என பெரியவர்கள் சொலுவினம்.. ஒன்றுமில்லை கண்ணூறாகிடும் என்று..

  திருஷ்டி சுத்தி பெரீஈஈஈஈஈஈஈய பூசணிக்காயை அந்த, வீட்டுக்கு கீழ் இருக்கும், ஒரு பார்ஷல் 60 ரூபா விக்கும்.. ஹோட்டல் வாசலில்.. பளாரென உடையுங்கோ.. ஆரும் ஏதும் கேட்டால் அதிரா சொன்னா அதுதான் உடைச்சேன் எனப் பயப்பூடாமல் சொல்லுங்கோ,//

  நான் எழுத நினைத்ததை அதிரா அதிரடியாக பூசணிக்காய் உடைத்தமாதிரி பளிச் என்று சொல்லிவிட்டாரே ..!
  அவரது சாமர்த்தியமே சாமர்த்தியம் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மியாவும் மியாவும் நன்றி!!.. அவர் இனும் பூசணிக்காயை உடைக்கேல்லைப்போல:).

   நீக்கு
  2. அன்புள்ள அதிரடி, அலம்பல், அட்டகாச அதிராஆஆஆஆஆஆ! [ஸ்வீட் சிக்ஸ்டீன்] !!

   நீங்க உண்மையிலேயே மிகப்பெரிய அதிர்ஷ்டசாலியாக்கும்.

   என் மனதில் கோயில் கொண்டுள்ள அந்த அம்பாள் வாயால் மேலே என்ன சொல்லியிருக்காங்கோ பாருங்கோ ..... ;)))))

   இதோ கீழேயும் கொடுத்துள்ளேன்:

   //நான் எழுத நினைத்ததை அதிரா அதிரடியாக பூசணிக்காய் உடைத்தமாதிரி பளிச் என்று சொல்லிவிட்டாரே ..!
   அவரது சாமர்த்தியமே சாமர்த்தியம் ..//

   நான் எனக்காகவும் என் வீட்டுக்காகவும் இல்லாவிட்டாலும், என் அம்பாளே சொல்லிவிட்ட தங்களின் “சாமர்த்தியமே சாமர்த்தியம்” என்ற ஓர் ’அருள் வாக்கு’ வார்த்தைக்காகவே, பூசணிக்காய் உடைத்து விடலாம் என்று தீர்மானித்து விட்டேன்.

   உங்களை என் பக்திக்குரிய அம்பாள் அவர்கள் இவ்வாறு சொல்லிவிட்டதில் என் கண்ணே பட்டுவிடுமோ என எனக்கு பயமாக்க்கீதூஊஊஊஊஊஊ. ;))))))

   நீக்கு
  3. //நான் எழுத நினைத்ததை//

   நீங்கஎழுதவே வேண்டாம். எனக்காக தினமும் ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கோ ... போதும்.

   என் மனதில் நிறைந்துள்ள அம்பாள், ஒரிஜினல் அம்பாளிடம் பிரார்த்தனை செய்தால், என்னைப்பிடித்த எந்த திருஷ்டியும் விலகி விடும் என்பது என் நம்பிக்கை.

   நீக்கு
 35. சுப நிகழ்ச்சிகள் தொடர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி February 9, 2013 at 11:40 PM
   சுப நிகழ்ச்சிகள் தொடர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..//

   நன்றியோ நன்றிகள்.

   இதை .... இதைத்தான் நான் உங்களிடம் வேண்டுவது. அதைத்தான் மேலேயும் நான் சொல்லியுள்ளேன்.

   நீக்கு
 36. HEART OF THE CITY யாகவும் அமைந்து இதயம் நிறைந்த மகிழ்ச்சிகளை அள்ளித்தரும் இனிய இல்லத்திற்கு வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி February 9, 2013 at 11:42 PM

   //HEART OF THE CITY யாகவும் அமைந்து இதயம் நிறைந்த மகிழ்ச்சிகளை அள்ளித்தரும் இனிய இல்லத்திற்கு வாழ்த்துகள்..//

   மிக்க நன்றி. இந்த எங்கள் இனிய இல்லத்தில் தங்களின் திருப்பாதம் படும் நாளே, மேலும் மகிழ்ச்சிகளை அள்ளித்தரக்கூடும் என்பது என் எதிர்பார்ப்பு. பார்ப்போம் ... அதற்குப் பிராப்தம் இருக்கிறதா என்று.

   நீக்கு
 37. இதனால் எனக்குக்கிடைத்துள்ள மன நிம்மதியை, மன மகிழ்ச்சியை, என் மிகப்பெரிய இந்த சாதனையை என்னால் பிறருக்கு உணர்த்தவோ, சொல்லிப்புரிய வைக்கவோ முடியவே முடியாது.

  ஆத்மார்த்தமாக பகிர்ந்த இனிய அனுபவங்களுக்கு பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி February 9, 2013 at 11:44 PM

   *****இதனால் எனக்குக்கிடைத்துள்ள மன நிம்மதியை, மன மகிழ்ச்சியை, என் மிகப்பெரிய இந்த சாதனையை என்னால் பிறருக்கு உணர்த்தவோ, சொல்லிப்புரிய வைக்கவோ முடியவே முடியாது*****.

   //ஆத்மார்த்தமாக பகிர்ந்த இனிய அனுபவங்களுக்கு பாராட்டுக்கள்..//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் , வாழ்த்துகளுக்கும், பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   ஐந்து முறை தங்கத்தாமரைகளால் அர்சித்து அனுக்கிரஹம் செய்துள்ளது, இந்த என் பதிவினை மேலும் மெருகூட்டியுள்ளதாக நினைத்து மகிழ்கிறேன்.

   அம்பாளுக்கு என் நன்றியோ நன்றிகள்.

   நீக்கு
 38. வழக்கம்போல இயல்பான நகைச்சுவை மிளிர்ந்தாலும், இவ்வளவு விலை கொடுத்து இந்த வீட்டை வாங்கியதற்கான காரணத்தைப் படித்தபோது சற்று நெகிழ்ச்சியாகவும் இருந்தது. எல்லாராலும் முடியாதது; நீங்கள் சாதித்திருக்கிறீர்கள். :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சேட்டைக்காரன் February 10, 2013 at 2:03 AM

   வாங்கோ வேணு சார், வணக்கம்.

   //வழக்கம்போல இயல்பான நகைச்சுவை மிளிர்ந்தாலும், இவ்வளவு விலை கொடுத்து இந்த வீட்டை வாங்கியதற்கான காரணத்தைப் படித்தபோது சற்று நெகிழ்ச்சியாகவும் இருந்தது. எல்லாராலும் முடியாதது; நீங்கள் சாதித்திருக்கிறீர்கள். :-)//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆறுதலான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், சார்.

   நீக்கு
 39. உங்களை மீண்டும் எழுத வைத்த ஜன்னல் வாழ்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரிஷபன் February 10, 2013 at 2:50 AM
   உங்களை மீண்டும் எழுத வைத்த ஜன்னல் வாழ்க..//

   வாங்கோ சார், வணக்கம் சார்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆறுதலான கருத்துக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், சார்.

   நீக்கு
 40. பெற்றோர்கள் வாழ்ந்த இடத்திலேயே வீடு அமைந்ததில் மகிழ்வு,ஒரு மனிதனின் வாழ்வில் வீடு ஒரு உறவு போல் முக்கிய பங்கு கொள்வது பகிர்வில் புரிந்தது.நீங்கள் கூறியபடி வயதான காலத்தைக் கருத்தில் கொண்டு சிறியதாய் இருந்தாலும் வசதியான இடத்தில் வீட்டை அமைப்பது புத்திசாலித்தனம் . ஜன்னல் கதையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ezhi lFebruary 10, 2013 at 4:13 AM

   வாங்கோ, வணக்கம்.

   //பெற்றோர்கள் வாழ்ந்த இடத்திலேயே வீடு அமைந்ததில் மகிழ்வு,ஒரு மனிதனின் வாழ்வில் வீடு ஒரு உறவு போல் முக்கிய பங்கு கொள்வது பகிர்வில் புரிந்தது.

   நீங்கள் கூறியபடி வயதான காலத்தைக் கருத்தில் கொண்டு சிறியதாய் இருந்தாலும் வசதியான இடத்தில் வீட்டை அமைப்பது புத்திசாலித்தனம் .

   ஜன்னல் கதையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் ஐயா...//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் , என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   நீக்கு
 41. சிறு வயதில் வசித்த இடத்திலேயே வீடு வாங்கியது பெரிய சாதனைதான்.மனம் போல் அமைவது பெரிய விஷயம்.உங்க வீட்டு ஜன்னல் என்ன விஷயம் சொல்லுதோ தெரியலை என்னை பொறுத்த வரை ஒரு அனுபவ பொக்கிஷத்தை(உங்களை தான் சார்) என் வீட்டில் வைத்திருக்கிறேன்னு மனம் (ஜன்னல்) திறந்து பெருமையா சொல்லுது. மெமரி கார்டு எல்லாம் உங்க கிட்ட இருந்துதான் கண்டுபிடிச்சாங்களோ? எப்படி சார் எல்லாமே ஞாபகத்துல வைச்சிக்க முடியுது..?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உஷா அன்பரசு February 10, 2013 at 5:50 AM

   வாங்கோ டீச்சர், வணக்கம் டீச்சர்.

   //சிறு வயதில் வசித்த இடத்திலேயே வீடு வாங்கியது பெரிய சாதனைதான்.மனம் போல் அமைவது பெரிய விஷயம்.//

   டீச்சர் எது சொன்னாலும் அது அழகாகச் சரியாகவே இருக்கும். மனம் போல மாங்கல்யம் என்பார்கள். அது போல உங்கள் க்ருத்துக்களும் என் மனதைத்தொடுவதாக உள்ளதூஊஊஊ.

   //உங்க வீட்டு ஜன்னல் என்ன விஷயம் சொல்லுதோ தெரியலை //

   அது எனக்கும் தெரியலை. இன்னுமே தான் நான் புதிதாக ஏதாவது யோசித்துச் சொல்லணுமாக்கும். .

   //என்னை பொறுத்த வரை ஒரு அனுபவ பொக்கிஷத்தை (உங்களை தான் சார்) என் வீட்டில் வைத்திருக்கிறேன்னு மனம் (ஜன்னல்) திறந்து பெருமையா சொல்லுது. //

   இதைக்கேட்கும் என் மனமும் ஜில்லிட்டுப்போய் விட்டது.

   நான் இப்போது திருச்சி மலைக்கோடை அருகில் இருக்கிறேனா அல்லது வேலூர் கோட்டையில் இருக்கிறேனா என எனக்கே இப்போது மிகப்பெரிய சந்தேகம் ஆகிவிட்டதூஊஊஊஊ டீச்சர்.

   மாணவனின் சந்தேகத்தைத் தெளிவு படுத்த வேண்டியது டீச்சரின் கடமையாக்கும். மறக்காமல் பதில் எழுதுங்கோ.

   இல்லாவிட்டால் மெயில் வரும், அல்லது ஃபோன் வரும். இல்லாவிட்டால் நானே நேரே புறப்பட்டு வந்துடுவேனாக்க்கும். ஜாக்கிரதை. ;))))))

   //மெமரி கார்டு எல்லாம் உங்க கிட்ட இருந்துதான் கண்டுபிடிச்சாங்களோ? //

   கம்ப்யூட்டரெல்லாம் கண்டுபிடிக்கும் முன்பே நான் ஒரு கம்ப்யூட்டர் போல SYSTEMATIC ஆகவும் SPEED ஆகவும், PERFECT ஆகவும் வேலை செய்தவனாக்கும்.

   //எப்படி சார் எல்லாமே ஞாபகத்துல வைச்சிக்க முடியுது..?//

   ”மறக்கமனம் கூடுதில்லையே!” அதனால் மட்டுமே ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடிகிறதூஊஊஊஊ.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான, ஆறுதலான, அசத்தலான, ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் , என் மனமார்ந்த நன்றிகள், டீச்சர்.

   நீக்கு
 42. எனக்கு இப்போதுதான் படிக்க முடிந்தது. பிதுர் ராஜ்ஜியமாக இருந்த ஒரு இடத்தில், ஸுயராஜ்ஜியத்தையும் நிருவ எவ்வளவு கஷ்டப்பட்டாலும்,நம் வீடு,நம் தாய்தந்தையர் இருந்த ஒரு இடம்,
  எவ்வளவு, அன்புடன்,ஆடிப்பாடி,உண்டு,உறங்கி,படித்து பட்டம் பெற்று,பொருளீட்டி,தாய்,தந்தையரைப் பேணி,வாழ்வாதாரங்களை,
  வளர்த்த, இடம், மறக்கமுடியுமா?எல்லோருக்குமே கிடைக்குமிடமா? எவ்வளவு இருந்தாலும், நம்முடைய ஸொந்த வீடு என்பது, இப்போது மாத்திரமல்ல, வயதான காலத்திலும்
  அவசியமானதொன்று. ஒருசாண் வீடும்,அரைவயிற்றுக்கு கஞ்சியும், நம்மதென்று இருப்பதற்கு ஈடு இணை கிடையாது.
  சரித்திரப் புகழ் பெற்ற மாதிரி உங்கள் வீடு, உங்கள் விருப்பம்,
  பலபேரும் பார்த்து வசதிகளை எண்ணி வியப்பது, படிக்க மிகவும்,சுவையாகவும், ஸந்தோஷமாகவும் இருக்கிறது.
  பல நல்ல விசேஷங்கள் மேன்மேலும் நடைபெற, ஆல்போலுங்கள் குடும்பம் செழித்து வளர காட்மாண்டு பசுபதீசுவரை வணங்கி, உங்களுக்கு என் ஆசிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், வீடு,நல்ல வீடு. பொங்கும் மங்களத்தைத் தரும்,பவித்ராலயா, பெயர் பெற்ற அருமையான வீடு. அன்புடன்

  பதிலளிநீக்கு
 43. Kamatchi February 10, 2013 at 9:07 AM

  வாங்கோ காமாக்ஷி மாமி, அநேக நமஸ்காரங்கள்.

  //எனக்கு இப்போதுதான் படிக்க முடிந்தது.//

  அதனால் என்ன? ரொம்பவும் சந்தோஷம் தான்.
  .
  // பிதுர் ராஜ்ஜியமாக இருந்த ஒரு இடத்தில், ஸுயராஜ்ஜியத்தையும் நிறுவ எவ்வளவு கஷ்டப்பட்டாலும், நம் வீடு, நம் தாய்தந்தையர் இருந்த ஒரு இடம்,

  எவ்வளவு, அன்புடன், ஆடிப்பாடி, உண்டு, உறங்கி, படித்து பட்டம் பெற்று, பொருளீட்டி, தாய், தந்தையரைப்பேணி, வாழ்வாதாரங்களை, வளர்த்த, இடம், மறக்கமுடியுமா? எல்லோருக்குமே கிடைக்குமிடமா?//

  மிகச்சரியாகவே உணர்ந்து சொல்றீங்கோ, மாமி. என் அம்மாவே நேரில் வந்து சொல்வது போல என் மனதுக்கு இதமாகவும், ஆறுதலாகவும் உள்ளது

  // எவ்வளவு இருந்தாலும், நம்முடைய ஸொந்த வீடு என்பது, இப்போது மாத்திரமல்ல, வயதான காலத்திலும் அவசியமானதொன்று. ஒருசாண் வீடும், அரைவயிற்றுக்கு கஞ்சியும், நம்மதென்று இருப்பதற்கு ஈடு இணை கிடையாது//

  சபாஷ் மாமி. சரியாகவே தேங்காய் உடைச்சது போல பளீச்சென்று சொல்றீங்கோ. அனுபவித்து சொல்றேள்.!

  கேட்கவே மிகவும் ஆனந்தமாக உள்ளது. ;).

  //சரித்திரப் புகழ் பெற்ற மாதிரி உங்கள் வீடு, உங்கள் விருப்பம், பலபேரும் பார்த்து வசதிகளை எண்ணி வியப்பது, படிக்க மிகவும், சுவையாகவும், ஸந்தோஷமாகவும் இருக்கிறது.//

  ஆஹா, நீங்கள் இவ்வாறு சொல்வதைக் கேட்க எனக்கும் மிகவும் சநதோஷமாகவே உள்ளது.

  //பல நல்ல விசேஷங்கள் மேன்மேலும் நடைபெற, ஆல்போலுங்கள் குடும்பம் செழித்து வளர காட்மாண்டு பசுபதீசுவரை வணங்கி, உங்களுக்கு என் ஆசிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.//

  ஒரு 30-35 ஆண்டுகளுக்கு முன்பு, காஞ்சீ மஹாஸ்வாமிகள் [ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா] அங்கு காட்மாண்டு பசுபதீஸ்வரரை தரிஸிக்க வந்தாரல்லவா!.

  அவருடன் என் சொந்த அண்ணாவும், காஞ்சிபுரத்திலிருந்து கிளம்பி நடை பயணமாகவே ஸ்ரீ பெரியவா கேம்ப் உடன் வந்திருந்தார்கள்.

  அவர் எனக்கு பிரஸாதத்துடன், உங்க நேபாள கரன்சி நோட் ஒன்றும் கொடுத்தார்கள்.

  அதை இன்னும் பொக்கிஷமாக என்னுடன் வைத்துள்ளேன். இப்போ எங்க அண்ணா இல்லை. இருந்தாலும் அவர் அன்று என்னிடம் கொடுத்த அந்த நோட்டு மட்டும் உள்ளது.

  நீங்கள் காட்மாண்டு பசுபதீஸ்வரரைப்பற்றி எழுதியதும், எனக்கு என் அண்ணா ஞாபகம் வந்தது.

  //வீடு, நல்ல வீடு. பொங்கும் மங்களத்தைத் தரும், பவித்ராலயா, பெயர் பெற்ற அருமையான வீடு. அன்புடன்//

  எங்களுக்கு தங்களைப்போன்றவர்களின் ஆசீர்வாதம் மட்டும் தான் வேண்டும் மாமி.

  தங்களின் அன்பான வருகைக்கும் அழகான சிரத்தையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மாமி.

  அநேக நமஸ்காரங்களுடன்
  கோபாலகிருஷ்ணன்

  பதிலளிநீக்கு
 44. வழக்கம் போல் சுவாரஸ்யத்துடன் கூடிய பதிவாக்கி இருக்கின்றீர்கள்.மற்ற இணைப்புகளை அவசியம் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸாதிகா February 10, 2013 at 10:29 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //வழக்கம் போல் சுவாரஸ்யத்துடன் கூடிய பதிவாக்கி இருக்கின்றீர்கள்.மற்ற இணைப்புகளை அவசியம் பார்க்கிறேன்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் , என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   நீக்கு
 45. உங்கள் வாழ்க்கையும் வளமும் பற்றிய விவரிப்பு அருமை . நன்றி ஐயா.
  தொடருங்கள். வருவேன்.
  இறையாசி நிறையட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. kovaikkavi February 10, 2013 at 10:58 AM

   வாருங்கள். வணக்கம்.

   //உங்கள் வாழ்க்கையும் வளமும் பற்றிய விவரிப்பு அருமை . நன்றி ஐயா. தொடருங்கள். வருவேன். இறையாசி நிறையட்டும்.
   வேதா. இலங்காதிலகம்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் , என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   நீக்கு
 46. அடடா அருமையாக எழுதியிருக்கிறீங்கள் வைகோ ஐயா. உங்கள் பெற்றோருடன் சிறு வயதுமுதல் வாழ்ந்த அதே இடத்தில் தொடர்ந்தும் வாழ அதிலேயே பல இன்னல்களுடன் சுயமுயற்சியுடன், சொந்தமாக வீடு வாங்கி குடியிருப்பது சாதனைதான்.

  ஆனால் நீங்கள் சொன்னதுபோல அங்கு இத்தனை இடர்பட்டு இறுதிவரை சொந்தவீடு வேண்டுமென வாங்கி வாழ்ந்தாலும் வாடகை வீட்டில் வாழ்ந்தாலும் முடிவில் அந்த ஆறடிதன்னும் இல்லைத்தானே...
  இத்தனை பிரயத்தனப்பட்டு என்ன மிஞ்சப்போகிறது... பட்ட கடனை அடைத்துவிட்டால் அதிர்ஷ்டம். இல்லையானால் அப்படியே வட்டி, அதற்கும் வட்டி இப்படி வளர்ந்து வாங்கியவர்கள் அடைக்க முடியாமல் விடைபெற அவர் பிள்ளைகள் திட்டித்தீர்த்து தாமும் வாழாமல் கையில் அகப்பட்ட விலைக்கு அதை விற்று.... ஏகப்பட்ட கஷ்டங்களை நான் பார்த்திருக்கிறேன், கேட்டுமிருக்கிறேன்.
  அதனால் வந்த கசப்பான உணர்வுகளால் இப்படியும் நினைப்பதுண்டு.

  இங்கு உங்கள் பதிவு மாறுபட்டது. சுவாரஸ்யமானது. பல அனுபவப் பதிவுகளை பதிந்திருக்கின்றீர்கள். உண்மையில் உங்கள் மனைவி மக்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். அருமையான வீடு வாங்கி அங்கு குடியமர்த்தி அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்திருக்கின்றீர்களே...

  இன்னும் உங்கள் வீட்டு ஜன்னல் கம்பிகள் பேசத் தொடங்கவில்லையே... பேசவிடுங்கள்...:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இளமதி February 10, 2013 at 2:16 PM

   //அடடா அருமையாக எழுதியிருக்கிறீங்கள் வைகோ ஐயா. உங்கள் பெற்றோருடன் சிறு வயதுமுதல் வாழ்ந்த அதே இடத்தில் தொடர்ந்தும் வாழ அதிலேயே பல இன்னல்களுடன் சுயமுயற்சியுடன், சொந்தமாக வீடு வாங்கி குடியிருப்பது சாதனைதான். //

   //இங்கு உங்கள் பதிவு மாறுபட்டது. சுவாரஸ்யமானது. பல அனுபவப் பதிவுகளை பதிந்திருக்கின்றீர்கள். உண்மையில் உங்கள் மனைவி மக்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். அருமையான வீடு வாங்கி அங்கு குடியமர்த்தி அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்திருக்கின்றீர்களே...//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான, ஆறுதலான, அசத்தலான, ஆத்மார்த்தமான பல்வேறு நீ...ண்...ட கருத்துக்களுக்கும் , என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   //இன்னும் உங்கள் வீட்டு ஜன்னல் கம்பிகள் பேசத் தொடங்கவில்லையே... பேசவிடுங்கள்...:)//

   ஆகட்டும் தாயே. அது போல .......
   நாம் நினைத்தது நடக்கும் ..... மனம் போலே!

   வரும் ஞாயிறு அன்று அதைப் பேசவிடுகிறேனம்மா!.

   நீக்கு
 47. நன்றி வை.கோ.ஸார்,
  இப்ப தான் இங்கு வர முடிந்தது. வாவ் என்ன ஒரு எழுத்து நடை. அதிலும் எனக்கு நிறய்யவே ஹோம் வொர்க் வேற குடுத்திருக்கிங்க.
  அவசியம் அதை (மற்ற இணைப்புகளையும்) படிச்சுட்டு வரேன்.
  உண்மையிலேயே யூ ஆர் லக்கியஸ்ட்.
  இந்த ராசியான வீடை வாங்கவேண்டும் என்றால் உண்மையிலேயே நிறய்ய குடுத்து வைத்திருக்கனும். அவசியம் நானும் திருச்சி வந்தால் என் வீட்டு ஜன்னல் கம்பியை பார்க்கனும்.
  வருவேன். வருவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Vijiskitchencreations February 10, 2013 at 7:26 PM

   வாங்கோ, வணக்கம்.

   //நன்றி வை.கோ.ஸார், இப்ப தான் இங்கு வர முடிந்தது. வாவ் என்ன ஒரு எழுத்து நடை. அதிலும் எனக்கு நிறய்யவே ஹோம் வொர்க் வேற குடுத்திருக்கிங்க.அவசியம் அதை (மற்ற இணைப்புகளையும்) படிச்சுட்டு வரேன்.//

   படிப்பதாகச் சொன்னதே, படித்து விட்டு கருத்தும் கூறியது போல சந்தோஷம் அளிக்குது, எனக்கு.

   //உண்மையிலேயே யூ ஆர் லக்கியஸ்ட்.
   இந்த ராசியான வீட்டை வாங்கவேண்டும் என்றால் உண்மையிலேயே நிறையக் கொடுத்து வைத்திருக்கனும். //

   அப்படியா? இதைக்கேட்கவே சந்தோஷமாக உள்ளது.

   //அவசியம் நானும் திருச்சி வந்தால் என் வீட்டு ஜன்னல் கம்பியை பார்க்கணும். வருவேன். வருவேன்.//

   உங்கள் வீட்டு ஜன்னல் கம்பிகளே தான் அவை. அதை தாராளமாக எப்போது வேண்டுமானாலும் நீங்கள் வந்து பார்க்கலாம். வாங்கோ, அவசியமாக வாங்கோ.

   நீக்கு
 48. "எங்கு ஒரு சிறிய ஓட்டு வீட்டில் வாடகை கொடுத்து வாழ்ந்து வந்தேனோ, அதே இடத்தில் ஓர் சொந்த வீடு, புத்தம் புதியதாக ’வஸந்த மாளிகை’யாக வாங்கியுள்ளேன் என்பதில் பெரும் மகிழ்ச்சி எனக்கு"
  நல்லமுடிவு..

  பல்லாண்டுகள் சிறப்புடன் மகிழ்வாக இனிது வாழ வேண்டுகின்றேன். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாதேவி February 10, 2013 at 8:06 PM
   *****எங்கு ஒரு சிறிய ஓட்டு வீட்டில் வாடகை கொடுத்து வாழ்ந்து வந்தேனோ, அதே இடத்தில் ஓர் சொந்த வீடு, புத்தம் புதியதாக ’வஸந்த மாளிகை’யாக வாங்கியுள்ளேன் என்பதில் பெரும் மகிழ்ச்சி எனக்கு *****

   //நல்லமுடிவு.. //

   //பல்லாண்டுகள் சிறப்புடன் மகிழ்வாக இனிது வாழ வேண்டுகின்றேன். வாழ்த்துகள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் , என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   நீக்கு
 49. கட்டக் கடைசியில் காணப்பெறும் அந்தக் குழந்தையும் அழகு;
  அதன் குறும்புச் சிரிப்பும் அழகு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜீவி February 10, 2013 at 11:06 PM

   வாங்கோ சார், நமஸ்காரம். வணக்கம்.

   //கட்டக் கடைசியில் காணப்பெறும் அந்தக் குழந்தையும் அழகு;
   அதன் குறும்புச் சிரிப்பும் அழகு!/

   ஐயா, அந்தப்படம் என் பக்திக்குரிய அம்பாளிடமிருந்து, நான் பிரஸாதமாக நினைத்து, உரிமையுடன் திருடிக்கொண்டது.

   இணைப்பு இதோ:

   http://jaghamani.blogspot.com/2013/01/blog-post_23.html

   இந்தப்படத்தின் ’எல்லாப்புகழும் திருமதி இராஜராஜேஸ்வரி அம்பாளுக்கே’ உரியது..

   அன்புடன் கோபு

   நீக்கு
 50. அழகான பகிர்வு சார். சிறு வயது முதல் வசித்த இடத்திலேயே கஷ்டப்பட்டு வீட்டை வாங்கி வசிப்பது மிகப்பெரிய விஷயம்....

  தொடர்ந்து நடைபெற்ற சுப நிகழ்ச்சிகளும் வீட்டின் ராசியை சொல்கிறது.

  அடுத்த வாரம் கட்டாயம் ஜன்னலின் ரகசியத்தை போடுங்கோ சார். இல்லையென்றால் நானே வந்து தெரிந்து கொள்வேன்...:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோவை2தில்லி February 10, 2013 at 11:43 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //அழகான பகிர்வு சார். சிறு வயது முதல் வசித்த இடத்திலேயே கஷ்டப்பட்டு வீட்டை வாங்கி வசிப்பது மிகப்பெரிய விஷயம்....

   தொடர்ந்து நடைபெற்ற சுப நிகழ்ச்சிகளும் வீட்டின் ராசியை சொல்கிறது.//

   ரொம்பவும் சந்தோஷம்.

   //அடுத்த வாரம் கட்டாயம் ஜன்னலின் ரகசியத்தை போடுங்கோ சார். இல்லையென்றால் நானே வந்து தெரிந்து கொள்வேன்...:))//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

   தங்களின் மீண்டும் வருகைக்காகவாவது, ஜன்னல் ரகசியத்தை வெளியிடாமல் மறந்தாற்போல விட்டு விட்டு, வேறு ஏதாவது ஒரு பதிவினை வெளியிடலாமா என நினைக்கத்தோன்றுகிறது.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் , என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   நீக்கு
 51. அப்பாதுரை February 11, 2013 at 10:14 PM

  வாங்கோ, சார். வணக்கம்.

  // impressive and inspiring VGK! //

  நீங்க ஸ்டார்ட் பண்ணிக்கொடுத்துள்ளது, அது பாட்டுக்கும் வண்டி முட்டாமல் மோதாமல் போய்க்கிட்டே இருக்குது.

  அடுத்த பகுதியிலும் முடிக்க முடியாமல் மேலும் சில விஷயங்கள் என் மனதில் உள்ளன.

  இருப்பினும் பலரின் ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்புகளுக்காக வரும் ஞாயிறு [17.02.2013] அன்று முடித்து விட்டு, சஸ்பென்ஸ்ஸையும் ஒரு மாதிரி உடைத்து விடப்போகிறேன்.

  மறு ஞாயிறு [அதாவது 24.02.2013 அன்று] வேறொரு தலைப்பு கொடுத்து மேலும் கொஞ்சம் எழுதலாம் என உத்தேசித்துள்ளேன்.

  தங்களின் அன்பான வருகைக்கும் “IMPRESSIVE + INSPIRING" என்ற உற்சாகமூட்டும் பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், சார்.

  பதிலளிநீக்கு
 52. இந்தப் பதிவுக்கு பின்னூட்டமா தனியா ஒரு பதிவே போடலாம் போல இருக்கே.

  கட்டட வேலைகள் முழுவதுமாக
  முடிவடையாமல் பாதியில்
  அரைகுறையாகவே நிற்கின்றன.//

  நாங்க முதன் முதல்ல சொந்த வீடு கட்டிக்கொண்டு போனபோது உள்பூச்சு முடித்து குடியேறி விட்டோம். வெளிப்பூச்சு கொஞ்ச வருடங்கள் கழித்துதான் பூசினோம். என் கணவர் வருத்தப்படும் போதெல்லாம் சொல்வேன் இப்படி அக்கம்பக்கத்தில் ரொம்ப நாட்களாக முடியாமல் இருக்கும் வீடுகளைப் பாருங்கள். நாம அழகா சொந்த வீட்டில் குடியேறி விட்டோமே என்று.

  ”ஆடி அடங்கும் வாழ்க்கையடா, அரை மணி நேரத்தில் அஸ்தியடா” //

  ரொம்ப அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

  அரைமணி நேரத்தில் அரை கிளாஸ் அஸ்தியடா என்றும் சொல்லலாம்.

  நமக்கு சொந்தமாக எவ்வளவு வீடுகள் இருப்பினும் நாம் தங்கப்போவதோ, தலை வைத்துப் படுக்கப்போவதோ ஒரே ஒரு இடம் மட்டும் தானே! //

  நூத்துல ஒரு வார்த்தை - இல்லை இல்லை ஆயிரத்தில், கோடியில் ஒரு வார்த்தை.

  ஒரு RECENT SURVEY சொல்கிறது இப்படி பல வீடுகளை கட்டி காலியாகவே வைத்திருக்கிறார்களாம். INCOME TAX விலக்கு பெருவதற்காக.

  1955 (நான் பிறந்த வருடமாக்கும்) ல் இருந்து 1980 வரை வாழ்ந்த இடத்திலேயே வீடு வாங்குவது என்பது - என்ன சொல்ல பூர்வ ஜென்ம் புண்ணியம், குடுப்பினை எல்லாம்தான்.

  ”பெரிய நாராயண ஐயர் ஸ்டோரில்” கோபால கிருஷ்ணனுக்கு தொடர்ந்து குடி இருக்கும் வாய்ப்பு கிடைத்ததில் ஒன்றும் ஆச்சரியம் இல்லையே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. JAYANTHI RAMANIFebruary 12, 2013 at 3:19 AM

   வாங்கோ, வாங்கோ, வாங்கோ! வணக்கம்.

   //இந்தப் பதிவுக்கு பின்னூட்டமா தனியா ஒரு பதிவே போடலாம் போல இருக்கே.

   போடுங்கோ, போடுங்கோ, போடுங்கோ. பின்னூட்டமும் தாங்கோ, தனிப்பதிவும் போடுங்கோ. அதற்காக வேண்டி இதை அம்போன்னு விட்டுடாதீங்கோ. அப்புறம் அது முழுவதும் முடியாத கட்டட வேலை போல ஆகிவிடும்ங்கோ..

   ***கட்டட வேலைகள் முழுவதுமாக முடிவடையாமல் பாதியில்
   அரைகுறையாகவே நிற்கின்றன.***

   நாங்க முதன் முதல்ல சொந்த வீடு கட்டிக்கொண்டு போனபோது உள்பூச்சு முடித்து குடியேறி விட்டோம். வெளிப்பூச்சு கொஞ்ச வருடங்கள் கழித்துதான் பூசினோம்.

   என் கணவர் வருத்தப்படும் போதெல்லாம் சொல்வேன் இப்படி அக்கம்பக்கத்தில் ரொம்ப நாட்களாக முடியாமல் இருக்கும் வீடுகளைப் பாருங்கள். நாம அழகா சொந்த வீட்டில் குடியேறி விட்டோமே என்று.//

   உங்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் கேட்கவா வேண்டும்.! ;)))) உங்க பொண்ணு சொன்னது கரெக்டு தான். அவங்க வாய்க்கு சர்க்கரை தான் போடணும்.

   >>>>>>

   நீக்கு
  2. கோபு >>>>> திருமதி ஜெயந்தி மேடம் [2]

   ****”ஆடி அடங்கும் வாழ்க்கையடா, அரை மணி நேரத்தில் அஸ்தியடா”*****/

   //ரொம்ப அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

   அரைமணி நேரத்தில் அரை கிளாஸ் அஸ்தியடா என்றும் சொல்லலாம்.//

   சபாஷ், அப்படியே சொல்லிட்டாப்போச்சு !

   [அது என்ன அரை கிளாஸ் பால் பாயஸம் போல சொல்லிட்டீங்கோ! ;))))) ]

   *****நமக்கு சொந்தமாக எவ்வளவு வீடுகள் இருப்பினும் நாம் தங்கப்போவதோ, தலை வைத்துப் படுக்கப்போவதோ ஒரே ஒரு இடம் மட்டும் தானே!*****

   //நூத்துல ஒரு வார்த்தை - இல்லை இல்லை ஆயிரத்தில், கோடியில் ஒரு வார்த்தை.//

   ஆஹா,
   கோபுவை கோடியிலே கொண்டுபோய் தள்ளிட்டீங்களே! ;)))))

   //ஒரு RECENT SURVEY சொல்கிறது இப்படி பல வீடுகளை கட்டி காலியாகவே வைத்திருக்கிறார்களாம். INCOME TAX விலக்கு பெறுவதற்காக.//

   ஒருசில இடங்களில் மட்டும் அப்படித்தான் உள்ளது.

   >>>>>>

   நீக்கு
  3. கோபு >>>> திருமதி ஜெயந்தி மேடம் [3]

   //1955 (நான் பிறந்த வருடமாக்கும்) ல் இருந்து 1980 வரை வாழ்ந்த இடத்திலேயே வீடு வாங்குவது என்பது - என்ன சொல்ல பூர்வ ஜென்ம் புண்ணியம், குடுப்பினை எல்லாம்தான்.//

   //1955 (நான் பிறந்த வருடமாக்கும்)//

   பிறந்த உடன் எனக்குத் தகவல் சொல்லவே இல்லை பார்த்தீங்களா? ஐந்து வயதுப்பையனான நான் ஆசையா ஒரே ஓட்டமா பார்க்க ஓடியாந்திருப்பேனோள்யோ!

   போங்க, உங்களோடு நான் டூஊஊஊஊஊ. ;)))))

   ////1955 ல் இருந்து 1980 வரை வாழ்ந்த இடத்திலேயே வீடு வாங்குவது என்பது - என்ன சொல்ல பூர்வ ஜென்ம் புண்ணியம், குடுப்பினை எல்லாம்தான்.//

   ஆமாம். அதே அதே ... சபாபதே ! தான்.

   மிகவும் சந்தோஷம் மேடம்.

   //”பெரிய நாராயண ஐயர் ஸ்டோரில்” கோபால கிருஷ்ணனுக்கு தொடர்ந்து குடி இருக்கும் வாய்ப்பு கிடைத்ததில் ஒன்றும் ஆச்சரியம் இல்லையே.//

   என்னென்னவோ நீங்களும் சொல்லி என்னை ஆச்சர்யப்பட வைக்கிறீங்கோ. மகிழ்ச்சியாகவே உள்ளதூஊஊஊ.

   >>>>>>

   நீக்கு
 53. இதனால் எனக்குக்கிடைத்துள்ள மன நிம்மதியை, மன மகிழ்ச்சியை, என் மிகப்பெரிய இந்த சாதனையை என்னால் பிறருக்கு உணர்த்தவோ, சொல்லிப்புரிய வைக்கவோ முடியவே முடியாது. //

  அதான் உங்க பதிவை படிச்சாலே புரியறதே.

  இந்த என் புது வீட்டினில் இது வரை நடந்துள்ள பல்வேறு சுப நிகழ்ச்சிகள்://

  வாழ்த்துக்கள். நல்ல மனம் வாழ்க, நாடு போற்ற வாழ்க.

  என்றென்றும், எப்பொழுது நன்றி கூறும் நிலையில் வைத்த இறைவனுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. JAYANTHI RAMANI February 12, 2013 at 3:28 AM

   வாங்கோ, மீண்டும் வருகை .... மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

   *****இதனால் எனக்குக்கிடைத்துள்ள மன நிம்மதியை, மன மகிழ்ச்சியை, என் மிகப்பெரிய இந்த சாதனையை என்னால் பிறருக்கு உணர்த்தவோ, சொல்லிப்புரிய வைக்கவோ முடியவே முடியாது.*****

   //அதான் உங்க பதிவை படிச்சாலே புரியறதே.//

   உங்களுக்குப் புரிஞ்சிதோ புரியலையோன்னு எனக்கு ஒரே கவலையா இருந்ததூஊஊஊ. இப்போ அந்தக்கவலை விட்டுடுச்சூஊஊஊ.

   *****இந்த என் புது வீட்டினில் இது வரை நடந்துள்ள பல்வேறு சுப நிகழ்ச்சிகள்:*****

   //வாழ்த்துக்கள். நல்ல மனம் வாழ்க, நாடு போற்ற வாழ்க.//

   ரொம்ப சந்தோஷம் மேடம், தங்களின் இனிய வாழ்த்துகளுக்கு.

   //என்றென்றும், எப்பொழுது நன்றி கூறும் நிலையில் வைத்த இறைவனுக்கு நன்றி.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான ஆறுதலான கருத்துப்பகிர்வுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   >>>>>

   நீக்கு
 54. பி.கு: உங்கள் பதிவுகள் மற்றவர்களுக்கு அவரவர் அனுபவங்களை பதிய தூண்டுபவையாக இருக்கின்றன.

  உங்கள் அடி பற்றி நானும் என் அனுபவங்களை எழுதுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. JAYANTHI RAMANI February 12, 2013 at 3:29 AM

   ஆஹா, மீண்டும் வருகைக்கு என் நன்றிகள், மேடம், வாங்கோ!

   //பி.கு: உங்கள் பதிவுகள் மற்றவர்களுக்கு அவரவர் அனுபவங்களை பதிய தூண்டுபவையாக இருக்கின்றன.

   உங்கள் அடி பற்றி நானும் என் அனுபவங்களை எழுதுகிறேன்.//

   ஆஹா, பேஷா எழுதுங்கோ. எழுத ஆரம்பீங்கோ. DRAFT ஆக எழுதி SAVE செய்து வைத்துக்கொள்ளுங்கோ.

   நான் வரும் ஞாயிறு வெளியிடப்போகும் இந்தத்தொடரின் இறுதிப்பகுதியில் உங்களை இதே போன்ற அனுபவங்களைத் தொடர் பதிவு இட வருமாறு அழைப்பு விடுக்கிறேன்.

   அதன் பிறகு அதை வெளியிடுங்கோ.

   இதனால் நம் இருவருக்குமே மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.

   நீக்கு
 55. வாழ்ந்த வீட்டில் தொடர்ந்து வாழ்வது எல்லோருக்கும் கிட்டாத பாக்கியம் தான்!மூத்தோர் ஆசி நிறைந்த இடம்! கொடுத்து வைத்தவர் சார் நீங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிலாமகள் February 12, 2013 at 4:38 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //வாழ்ந்த வீட்டில் தொடர்ந்து வாழ்வது எல்லோருக்கும் கிட்டாத பாக்கியம் தான்! மூத்தோர் ஆசி நிறைந்த இடம்! கொடுத்து வைத்தவர் சார் நீங்கள்!//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான ஆறுதலான கருத்துப் பகிர்வுகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   நீக்கு
 56. பதிவையும் பின்னுட்டங்களையும் படித்துக்கொண்டிருக்கும்போதே ஸ்ப்பாஆஆஆஆஆஆ யே கொல்லியாத்தி னு சொல்லத்தோணுது ..எத்தனை நிகழ்வுகள்,தேதி வாரியாக குறிப்பிட்டுள்ளதும் அப்பப்பா ....அடுத்து அங்கே உங்களுக்கு 80 ஆம் கல்யாணமும் நடக்க வேண்டும்.ஒரு டன் பூசனிக்காய் உடைத்தாலும் தகும்.

  கடைசியில் உள்ள குழந்தை கோபாலகிருஷ்ணன் சார்தான்னு தெரிவிச்சிகிறேனுங்கோ,,,,,,,,,,,,,,,,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. thirumathi bs sridhar February 12, 2013 at 4:56 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   காணுமேன்னு கவலைப்பட்டேனாக்கும்.

   //பதிவையும் பின்னுட்டங்களையும் படித்துக்கொண்டிருக்கும்போதே ஸ்ப்பாஆஆஆஆஆஆ யே கொல்லியாத்தி னு சொல்லத்தோணுது //

   எல்லோரும் பதிவை மட்டுமே படித்தோ அல்லது படிக்காமலேயோ கூட கமெண்ட் அளிப்பார்கள்.

   நீங்களும் உங்களைப்போன்ற என் நலம் விரும்பிகள் சிலரும் மட்டுமே, பின்னூட்டங்களையும், அதற்கான என் பதிலகளையும் ரஸித்துப் படிக்கிறீங்கோ. ;)))))

   ஸ்ப்பாஆஆஆஆஆஆ யே கொல்லியாத்தி னு தான் எனக்கும் சொல்லத்தோணுதாக்கும் ;))))))))))))

   >>>>>>

   நீக்கு
  2. கோபு >>>>> திருமதி ஆச்சி மேடம் [2]

   //.எத்தனை நிகழ்வுகள்,தேதி வாரியாக குறிப்பிட்டுள்ளதும் அப்பப்பா ....அடுத்து அங்கே உங்களுக்கு 80 ஆம் கல்யாணமும் நடக்க வேண்டும்.//

   கேட்கவே சந்தோஷமாகத்தான் உள்ளது. அதற்காவது நீங்கள் நேரில் வந்து கலந்து கொள்வீர்களா?

   உங்க பெரியவளுக்கு கல்யாணம் ஆகி உங்களுக்கு மாப்பிள்ளையே கூட வந்திருப்பார் அப்போது.

   சின்னவள் அப்போது ஸ்வீட் சிக்ஸ்டீன் அல்லது செவெண்டீன் ஆக இருப்பாள்.

   எல்லோருமே வந்துடுங்கோ ;)))))

   //ஒரு டன் பூசனிக்காய் உடைத்தாலும் தகும்.//

   வரும் போது ஹரியானாவிலிருந்து ஒரு லாரியில் ஏற்றி வாங்கோ ஒரு டன் பூசணிக்காய்களையும்.

   நீங்க தான் வந்து உங்க கையால் தான் உடைக்கணும்

   மிகவும் ராசியான கையாக்கும்! ஹுக்க்க்க்க்கும் !!. ;)))))).

   >>>>>>>

   நீக்கு
  3. கோபு >>>>> திருமதி ஆச்சி மேடம் [3]

   //கடைசியில் உள்ள குழந்தை கோபாலகிருஷ்ணன் சார்தான்னு தெரிவிச்சிகிறேனுங்கோ,,,,,,,,,,,,,,,,,, //

   ஆஹா, கரெக்ட்டா சொல்லிட்டீங்கோ.

   நேற்று என் வீட்டுக்கு வந்த என் பெரிய அக்கா இதையே தான் வேறு மாதிரி சொன்னாங்கோ:

   “நீ சின்னக்குழந்தையில் இதைவிட சூப்பரா கஷ்கு முஷ்க்க்ன்னு இருந்தேடா .... அந்தக்காலத்தில் அதை போட்டோ பிடிச்சு வைக்கத்தோணலையே, நமக்கு அதற்கான வசதிகள் இல்லையே என்று நினைத்தால் எனக்கு இப்போதுகூட அழுகை அழுகையாக வருதுடா”

   என்று சொல்லிப்போனார்கள்.

   எங்க பெரிய அக்காவைப்பற்றி உங்களுக்குத்தான் தெரியுமே!

   தெரியாவிட்டால் இதோ 2-3 இணைப்புகள் போய் ஞாபகப் படுத்திக்கொள்ளுங்கள்.

   http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html

   http://gopu1949.blogspot.in/2012/03/2.html

   http://gopu1949.blogspot.in/2011/07/2.html
   [பத்தாவது படத்தில் உள்ளார்கள்.]

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான ஆறுதலான கருத்துப்பகிர்வுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   நீக்கு
  4. போயிடுச்சுனு நினைக்கிறேன். :)

   நீக்கு
  5. //Geetha SambasivamFebruary 14, 2013 at 4:12 AM
   போயிடுச்சுனு நினைக்கிறேன். :)//

   எங்கேயும் போகலை. இங்கே என் வீட்டு ஜன்னல் கம்பிகளைப் பார்க்க வந்திடுச்சூஊஊஊ. ;)))))

   நீக்கு
 57. //அவர்களுக்குத் தெரிந்த, குழந்தை பாக்யம் இதுவரை ஏற்படாத தம்பதிகள் சிலரை, இந்த [சந்தான] கோபாலகிருஷ்ணனின் வீட்டு ஜன்னல் கம்பியைப்போய் தொட்டு விட்டு வரச்சொல்லி அனுப்புவதாக உள்ளார்களாம். ;)//

  நான் கொடுத்த பின்னூட்டம் போகாமல் ஏதோ எரர் மெசேஜ் வந்து விட்டது.

  நான் எழுதி இருந்தது: ஏற்கெனவே படிச்சிருந்தாலும் திடீர்னு ஒரு உந்துதல் ஏற்பட்டு மீண்டும் படித்தேன். மேற்கண்ட வரிகளின் அர்த்தம் முழுமையாக இப்போது தான் மண்டையில் ஏறியது, உங்கள் வீட்டுக்கு வர வேண்டும். பார்க்கலாம். என் மெயில் ஐடி தெரியும்னு நினைக்கிறேன். உங்க மெயில் ஐடியும், தொலைபேசி எண்ணும் கொடுங்க. விரைவில் வரோம்.

  இதுவானும் போகுதானு பார்க்கணும். :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Geetha Sambasivam February 14, 2013 at 4:12 AM
   *****அவர்களுக்குத் தெரிந்த, குழந்தை பாக்யம் இதுவரை ஏற்படாத தம்பதிகள் சிலரை, இந்த [சந்தான] கோபாலகிருஷ்ணனின் வீட்டு ஜன்னல் கம்பியைப்போய் தொட்டு விட்டு வரச்சொல்லி அனுப்புவதாக உள்ளார்களாம். ;)*****

   //நான் கொடுத்த பின்னூட்டம் போகாமல் ஏதோ எரர் மெசேஜ் வந்து விட்டது.//

   அடடா, எனக்கு இதுபோலத்தான் அடிக்கடி ஆகிவிடுகிறது.

   நான் எழுதி இருந்தது:

   //ஏற்கெனவே படிச்சிருந்தாலும் திடீர்னு ஒரு உந்துதல் ஏற்பட்டு மீண்டும் படித்தேன். மேற்கண்ட வரிகளின் அர்த்தம் முழுமையாக இப்போது தான் மண்டையில் ஏறியது,//

   சந்தோஷம். எப்படியோ முழுமையாக ஏறிவிட்டதில் மகிழ்ச்சியே.

   //உங்கள் வீட்டுக்கு வர வேண்டும். பார்க்கலாம்.//

   வாங்கோ, பாருங்கோ.

   //என் மெயில் ஐடி தெரியும்னு நினைக்கிறேன்.//

   தெரியாதுங்கோ!

   //உங்க மெயில் ஐடியும், தொலைபேசி எண்ணும் கொடுங்க. விரைவில் வரோம். இதுவானும் போகுதானு பார்க்கணும். :))))//

   என் மெயில் ஐ.டி: valambal@gmail.com

   தொலைபேசி எண் பிறகு மெயில் மூலம் தருகிறேன். OK யா?

   நீக்கு
 58. pazhaya natkalai puratip parkum inbame inbam. I too enjoy hearing them. I used to start talks on this to listen to other's outputs about such nostalgic past.

  Enjoyed this post Gopu Sir. Best wishes

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Mira February 20, 2013 at 8:24 PM

   WELCOME TO YOU MIRA !

   //pazhaya natkalai puratip parkum inbame inbam. I too enjoy hearing them. I used to start talks on this to listen to other's outputs about such nostalgic past. Enjoyed this post Gopu Sir. Best wishes

   பழைய நாட்களைப் புரட்டிப்பார்க்கும் இன்பமே இன்பம். நானும் அவற்றைக்கேட்டு மகிழ்பவளே தான். பிறர் தனது கடந்த காலத்தையும் அனுபவங்களையும் சொல்லும்போது அவற்றை உன்னிப்பாகக் கேட்பதுண்டு. இந்த தங்களின் பதிவினை மிகவும் ரஸித்துப்படித்தேன் ... கோபு சார். வாழ்த்துகள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான ஆறுதலான கருத்துப் பகிர்வுகளுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   நீக்கு
 59. Rathnavel Natarajan March 17, 2013 at 6:18 PM

  வாருங்கள், வணக்கம்.

  //அருமையான பதிவு. நன்றி ஐயா.//

  அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 60. உங்க பதிவுகளைப் படிக்க ஆரம்பிக்கும்போது இன்று ஐந்து பின்னூட்டமாவது போடணும்னு நினைப்பேன். பதிவை முழுமையாக படிக்காமல் பின்னூட்டம் போட மாட்டேன். அதன் பிறகும் மற்றவர்களின் பின்னூட்டங்கள, உங்க பதில் பின்னூட்டங்கள் என்று டயம் போவது தெரியாமல் ஆழ்ந்த வாசிப்பில் இருந்துடறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் August 15, 2015 at 5:55 PM

   வாங்கோ, வணக்கம்.

   //உங்க பதிவுகளைப் படிக்க ஆரம்பிக்கும்போது இன்று ஐந்து பின்னூட்டமாவது போடணும்னு நினைப்பேன். பதிவை முழுமையாக படிக்காமல் பின்னூட்டம் போட மாட்டேன். அதன் பிறகும் மற்றவர்களின் பின்னூட்டங்கள, உங்க பதில் பின்னூட்டங்கள் என்று டயம் போவது தெரியாமல் ஆழ்ந்த வாசிப்பில் இருந்துடறேன்.//

   மிகவும் சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   You are a Very Good Girl :)

   நீக்கு
 61. குருஜி இந்த பதிவு படிச்சாபல் எங்கட மனசிலயும் கான்பிடன்ஸ் வந்திச்சி. ஒரு நா நானும் ஸி. ஏ. படிச்சி (ஓ)ஆடிட்டராயி கை நெறயா சம்பாரிச்சி சொந்நதத்துல வூடு வாங்கி போடுவேன். இப்பத்தக்கு ஓட்டு வூடுல வாடகல தா இருக்கு. காலம் மாறிடும்தான????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mruOctober 23, 2015 at 11:34 AM

   வாங்கோ முருகு, வணக்கம்மா.

   //குருஜி இந்த பதிவு படிச்சாபல் எங்கட மனசிலயும் கான்பிடன்ஸ் வந்திச்சி. ஒரு நா நானும் ஸி. ஏ. படிச்சி//

   படிப்பு விஷயமாக தங்களுக்கு தன்னம்பிக்கையூட்டி நான் நிறைய மெயில்கள் ஏற்கனவே அவ்வப்போது கொடுத்துக்கொண்டே வருவது தங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

   தாங்கள் மட்டும் CA படிப்பு படித்து முடித்து வெற்றி பெற்று விட்டால், எனக்குத்தகவல் கொடுக்கவும். நானே நேரில் A.C CAR இல் அல்லது ப்ளேனில் புறப்பட்டு வந்து, தாங்கள் எந்த ஊரில் இருந்தாலும் தங்களைப் பாராட்டுவேன்.

   மேலும் அன்று என் சக்திக்கு என்னால் முடிந்த மிகப்பெரியதொரு (தொகை) அன்பளிப்பாகவும் தங்களுக்கு என் கைகளால் அளிப்பேன். :) அது ஒரு பவுன் அதாவது 8 கிராம் தங்கம் அன்றைய விலையில் வாங்குவதற்குக் குறையாமல் நிச்சயமாக இருக்கும்.

   //(ஓ)ஆடிட்டராயி கை நெறயா சம்பாரிச்சி சொந்நதத்துல வூடு வாங்கி போடுவேன். இப்பத்தக்கு ஓட்டு வூடுல வாடகல தா இருக்கு.//

   நானும் உங்களைப்போலவே வாடகை வீட்டில், ஓட்டு வீட்டில் ஒட்டுக்குடுத்தனமாக 1980 வரை இருந்தவன்தான். நான் SSLC 11th Standard படித்து முடிக்கும்வரை அந்த என் வாடகை வீட்டுக்கு மின்சார சப்ளையும் இல்லை. மிகவும் மங்கலான தெருவிளக்கிலும், சிம்னி / அகல் விளக்கிலும் படித்தவன் நான். அதைப்பற்றிய என் சொந்தக்கதை + சோகக்கதை இதோ இந்தப்பதிவினில் பகுதி-2 இல் முழுவதுமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது .... பாருங்கோ:

   http://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html

   //காலம் மாறிடும்தான???? //

   காலம் ....... ஒருநாள் மாறும் ......
   நம் கவலைகள் யாவும் தீரும் .... :)

   எதை நினைத்தும் கவலையே படாமல் மன உறுதியுடன் CA படித்து முடிக்க முயற்சி செய்யுங்கோ.

   B.Com., படித்ததும், M.Com., சேர்ந்துள்ளதும்கூட WASTE என்பேன். அனாவஸ்யமான கால விரயங்கள் இவை.

   +2 முடித்ததும் நேராக CA படிப்பினை தொடர்ந்திருக்கலாம் என்பதே நான் இங்கு உங்களுக்குச் சொல்ல வருவதாகும்.

   இன்றைய தேதியில் C.A., வுக்கு உள்ள மதிப்பு வேறு எந்தப்படிப்புக்குமே கிடையாது. மாதம் பல லக்ஷங்கள் சம்பாதிக்க உலகம் பூராவும் வாய்ப்புகள் நிறையவே கொட்டிக்கிடக்கின்றன.

   பணம் மட்டும் இருந்தால் மிகச்சுலபமாக பட்டங்கள் பெற்றுவிடக்கூடிய மற்ற Engg. / Medical போன்ற படிப்புக்களைவிட, அதிக பணமே தேவைப்படாத C.A., படிப்பு படித்து முடிப்பதில்தான் பல்வேறு கஷ்டங்கள் / சிரமங்கள் உள்ளன என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

   முதலில் ஆர்வம் இருக்க வேண்டும். அடுத்ததாக அதற்காக மிகக்கடுமையாக உழைக்கணும். இவை எல்லவற்றையும்விட, இந்த CA படிப்பு படிப்பவருக்கு அதி புத்திசாலித்தனமும் இயற்கையாகவே அமைந்து இருக்க வேண்டும். அதிர்ஷ்டமும் இறை அருளும் கூடிவரவும் வேண்டும்.

   அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
  2. குருஜி >>>>> முருகு (2)

   தங்களைப்போன்ற ஒரு மிகவும் ஏழைக்குடும்பத்தில் பிறந்த, தமிழ்நாட்டில் ஆட்டோ ஓட்டிவரும் ஒருவரின் மகளும், மும்பையில் வசிப்பவளுமான ஓர் பெண்மணி சென்ற ஆண்டு C A தேர்வினில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அவர்களிடமிருந்து அரசு மரியாதையாக ரூபாய் ஐந்து லட்சம் பணமும், முன்னால் முதலமைச்சர் திரு.மு. கருணாநிதி அவர்களிடமிருந்து அவரின் கழகத்தின் சார்பில் ரூபாய் ஒரு லட்சம் பணமும் பெற்றுள்ளார் என்ற செய்தியினை நினைவில் வைத்துக்கொண்டு நன்றாக படியுங்கோ.

   மீண்டும் என் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 62. உங்க வீட்டு அனுபவங்கள் உங்க திறமைக்கும் கடின உழைப்புக்கும் கிடைத்த பரிசு. திருமதி வல்லிசிம்ஹன் மேடத்துக்கு நீங்க போட்ட ரிப்ளை பின்னூட்டம் பல விஷயங்களை புரிய வைத்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரணாகதி. November 26, 2015 at 1:25 PM

   வாங்கோ, வணக்கம்.

   //உங்க வீட்டு அனுபவங்கள் உங்க திறமைக்கும் கடின உழைப்புக்கும் கிடைத்த பரிசு.//

   ஆம். நிச்சயமாக இது ஒரு மாபெரும் பரிசு மட்டுமே. THAT TOO GOD'S GIFT :)

   //திருமதி வல்லிசிம்ஹன் மேடத்துக்கு நீங்க போட்ட ரிப்ளை பின்னூட்டம் பல விஷயங்களை புரிய வைத்தது.//

   குறிப்பாக திருமதி. வல்லிசிம்ஹன் அவர்களுக்கு இந்தப் பதிவினில் நான் எழுதியுள்ள பதில்களைப் படித்துப் புரிந்துகொண்டவர்களே மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அதில் தாங்களும் ஒருவர் என்பதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

   இதன்பிறகு எங்களுக்குள் மட்டும், ஒருசில மெயில்கள் மூலம், இதுபற்றி மேலும் பல இனிய செய்திகளைப் பகிர்ந்துகொள்ளவும் முடிந்தது என்பது மேலும் சுவாரஸ்யமே.

   தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் இனிய அன்பு நன்றிகள், சார்.

   அன்புடன் VGK

   நீக்கு
 63. வாத்யாரே...நீங்கள் ஒரு சுயசரிதமே எழுதலாம்...ஜன்னல் ஓரத்திலேயே உட்கார்ந்து எழுதுங்கள்!!!

  பதிலளிநீக்கு
 64. ராசியான வீடு அமைந்த நீங்கள் எல்லா வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க!

  பதிலளிநீக்கு
 65. Mail message received on 19.10.2017 - 11.44 Hrs.

  என் வீட்டு ஜன்னல்..... பதிவு கண்டு படித்தேன்.
  அழகாக எழுதி இருக்கிறீர்கள்.

  படிப்பவர் மனம் பார்ப்பது போன்ற ஒரு பிரமை....ஜன்னல் சொன்ன கதைகள் நிச்சயம் அங்கு ஓரிடம் வேண்டும் என்று கேட்கத் தான் சொல்கிறது மனம்.

  திரு. அப்பாதுரை அவர்கள் கேட்டதில் நியாயம் இருக்கிறது.. வியந்ததும், தங்களை விளக்கம் எழுதச் சொல்லிக் கேட்டதிலும் வியப்பேதும் இல்லை தானே.

  பவித்ராலயாவின் அன்புலோகத்தின் கண்கள்
  உலகத்தைப் பார்க்கும் அழகோ அழகு.

  இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின்
  பரம ரஸிகை

  பதிலளிநீக்கு