என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 27 ஜூன், 2013

16] வாய்ச்சொல் வீரர்கள் !


2
ஸ்ரீராமஜயம்



பெரிதாக வாய்ப்பந்தல் போட்டு விட்டு, வாழ்க்கையில் வேறுவிதமாக இருந்தானானால் அவன் எத்தனை அழகாக சத்தியத்தை எடுத்துச் சொன்னாலும், அதற்கு மற்றவர்களை தூண்டிவிடும் சக்தி இருக்காததால், அது சத்தியத்தோடு சேரவே சேராது. உயிரல்லாத வெற்றுப்பேச்சான சத்தியம் சத்தியமேயில்லை.

தானே செயல் புரிந்தவனாக கொண்டாடிக்கொள்வது மாதிரி பாரம் வேறு எதுவும் கிடையாது. இப்பெருமையினால் நாமே நம் கழுத்தில் கல்லைக்கட்டிக் கொள்கிறோம் என்பது தான் உண்மை. 

கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அகங்காரம் போனால்தான் அடக்கம் வரும்.

போதும் என்ற மனசோடு சம்பாதனம் செய்து [நியாயமான முறையில் சம்பாதித்து] அதை கவனத்துடன் செலவழிக்க வேண்டும்.


oooooOooooo

அதிசய நிகழ்வு 

நெஞ்சை உருக்கும் சம்பவம்

மிராசுதாரை மிரள வைத்த மஹாபெரியவா! 


முன் கதை பகுதி- 1 of 10   

முன் கதை பகுதி- 2 of 10 

முன் கதை பகுதி- 3 of 10    

முன் கதை பகுதி- 4 of 10  

முன் கதை பகுதி- 5 of 10  ..... தங்கள் நினைவுக்காக 

”நேத்திக்கு நீ என்ன பண்ணினேங்கறதை நான் சொல்றேன், கேட்டுக்கோ .... நோக்கு சொல்ல வெட்கமாயிருக்குப்போல. 

வைதீகாளையெல்லாம் வரிசையா ஸ்வாமி சந்நதியிலே ஒக்காத்தி வெச்சு, தலைக்குப் பத்து ரூவா ஸம்பாவனை பண்ணிண்டே வந்தே. தேப்பெருமாநல்லூர் கனபாடிகள்ட வந்தபோது, ’இவர்தான் சரியா ருத்ரம் சொல்லலியே .... இவருக்கு எதுக்கு மத்தவா மாதிரி பத்து ரூவா கொடுக்கணும்?’னு நெனச்சு ஏழு ரூவா ஸம்பாவனை பண்ணினே. ஏதோ அவரைப்பழி வாங்கிட்டதா எண்ணம் நோக்கு. 

கனபாடிகள் எதையாவது லட்சியம் பண்ணினாரா பாத்தியா? நீ கொடுத்ததை வாங்கிண்டு அப்படியே வேஷ்டித் தலைப்பிலே முடிஞ்சிண்டார்.  நா சொல்றதெல்லாம் சரிதானே சொல்லு” என்று உஷ்ணமானார் ஆச்சார்யாள்.

பக்தர்கள் அனைவரும் அப்படியே ஸ்தம்பித்து நின்றனர். ஒருவரும் வாயைத் திறக்கவில்லை.  

”நேற்று திருவிடைமருதூர் கோயிலிலே நடந்த விஷயங்கள் பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?’  என அங்கே குழுமியிருந்த பக்தர்கள் ஆச்சர்யப்பட்டனர்.

மிராசுதார் ஸ்ரீ பெரியவா கால்களில் விழுந்து எழுந்து, “தப்புத்தான் பெரியவா, ஏதோ அக்ஞானத்தில் அப்படியெல்லாம் நடந்துண்டேன். இனிமேல் அப்படி நடந்துக்கவே மாட்டேன்! என்னை நீங்க மன்னிச்சுடுங்கோ” என்று சொல்லி முடிப்பதற்குள், பெரியவா “இரு... இரு...! இத்தோடு முடிஞ்சிட்டாத்தான் பரவாயில்லையே .... ஜப பிராமணாளுக்கெல்லாம் அங்க மஹாதானத்தெரு ராமச்சந்திர ஐயர் கிருஹத்திலே தானே  சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணியிருந்தே?” என்று ஓர் கேள்வியைப் போட்டார்.     

“ஆமாம், பெரியவா” இது மிராசுதார்.

உடனே ஆசார்யாள், ”சாப்பாடெலாம் பரமானந்தமா நன்னாத்தான் போட்டே.  பந்தியிலே நெய் ஒழுக ஒழுக நெறைய முந்திரிப்பருப்பு, திராக்ஷையெல்லாம் போட்டு சர்க்கரைப் பொங்கல் பண்ணச்சொல்லி, ஒங் கையாலே நீயே பரிமாறினே ... சரியா?” என்று கேட்டார். 

வெலவெலத்துப்போய் விட்டார் மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர். 





[பகுதி 6 of 10]

மிராசுதார் வாயப்பொத்தியபடியே, ”ஆமாம் ... பெரியவா ... பந்தியில் சர்க்கரைப்பொங்கல் மட்டும் என் கையால் நானே பரிமாறினேன்” என்று குழைந்தார். 

ஸ்வாமிகள் விடவில்லை. “சரி ... அப்படி சர்க்கரைப் பொங்கலை நீ போடறச்சே, பந்தி தர்மத்தோடு பரிமாறினதா ஒம் மனசாட்சி சொல்றதா?” என்று கேட்டார் கடுமையாக.

வாய் திறக்கவே இல்லை மிராசு. ஆச்சார்யாளே பேசினார்.

“நீ சொல்ல வேண்டாம், நானே சொல்றேன். நீ சர்க்கரைப்பொங்கல் போடறச்ச, அது பரம ருசியா இருந்ததாலே, வைதீகாளெல்லாம் கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டா! நீயும் நிறைய போட்டே. 

ஆனா தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் ’சர்க்கரைப் பொங்கல் இன்னும் போடுடாப்பா ... ரொம்ப ருசியா இருக்குனு பலதடவை வாய்விட்டுக் கேட்டும்கூட, நீ காதிலே வாங்கிண்டு, அவருக்குப் போடாமலேயே போனியா இல்லியா?   

அவரும் எத்தனை தடவ வாய் விட்டுக்கேட்டார்! போடலியே நீ! பந்தி வஞ்சனை பண்ணிப்டியே  .... இது தர்மமா? ஒரு மஹா ஸாதுவை இப்படி அவமானப் படுத்திப்டியே....” மிகுந்த துக்கத்துடன் மெளனத்தில் ஆழ்ந்து விட்டார் ஸ்வாமிகள்.

மிராசுதார் தலை குனிந்து நின்றார். பக்தர்கள் வாயடைத்து நின்றனர். அனைவருக்கும் ஒரே பிரமிப்பாக இருந்தது. 

கண்களை மூடி, கால்கள் இரண்டையும் பின்பக்கமாக மடித்து, நிமிர்ந்து அமர்ந்து கொண்டார், ஆசார்யாள்.  சாக்ஷாத் பரமேஸ்வரனே அப்படி அமர்ந்திருப்பது போன்ற ஒரு திருமேனி விலாசம். அசையவில்லை.

பதினைந்து நிமிடங்கள் மெளனம். பிறகு கண்களைத்திறந்து மெளனம் கலைந்தார் ஆசார்யாள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. அச்சார்யாளே, நாராயணஸ்வாமி ஐயரைப்பார்த்து, தீர்க்கமாகப் பேச ஆரம்பித்தார். 

தொடரும்






ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

[இதன் தொடர்ச்சி 29.06.2013 சனிக்கிழமையோ  
அல்லது 30.06.2013 ஞாயிற்றுக்கிழமையோ வெளியாகும்]




என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

42 கருத்துகள்:

  1. தானே செயல் புரிந்தவனாக கொண்டாடிக்கொள்வது மாதிரி பாரம் வேறு எதுவும் கிடையாது. இப்பெருமையினால் நாமே நம் கழுத்தில் கல்லைக்கட்டிக் கொள்கிறோம் என்பது தான் உண்மை.

    அருமையான தத்துவம்..!

    பதிலளிநீக்கு
  2. கண்களை மூடி, கால்கள் இரண்டையும் பின்பக்கமாக மடித்து, நிமிர்ந்து அமர்ந்து கொண்டார், ஆசார்யாள். சாக்ஷாத் பரமேஸ்வரனே அப்படி அமர்ந்திருப்பது போன்ற ஒரு திருமேனி விலாசம். அசையவில்லை.

    அற்புதமான காட்சி..!

    பதிலளிநீக்கு
  3. மிகுந்த துக்கத்துடன் மெளனத்தில் ஆழ்ந்து விட்டார் ஸ்வாமிகள்.

    மஹாஸ்வாமிகளையே துக்கத்தில் ஆழ்த்தில் ஆழ்த்திய பாந்தி வஞ்சனை..!

    பதிலளிநீக்கு
  4. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 ராஜேஷ்வரி அக்கா:).. மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ:)

    பதிலளிநீக்கு
  5. //16] வாய்ச்சொல் வீரர்கள் !// ஹா..ஹா..ஹா.. ஆரைச் சொல்றீங்க கோபு அண்ணன்..:)) என்னை இல்லையே?:))... உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது கோபு அண்ணன்..:) இந்தக் காலத்தில “வாய் இல்லாட்டில், நாய் கவ்விட்டு ஓடிடுமாம்” என அம்மம்மா சொல்லுவா:))

    பதிலளிநீக்கு
  6. //தானே செயல் புரிந்தவனாக கொண்டாடிக்கொள்வது மாதிரி பாரம் வேறு எதுவும் கிடையாது. இப்பெருமையினால் நாமே நம் கழுத்தில் கல்லைக்கட்டிக் கொள்கிறோம் என்பது தான் உண்மை.//

    ரொம்பவும் சரி.. இதனால் நம்மீதுள்ள எதிர்பார்ப்புகள் கூடுகின்றன. ஒரு கட்டத்தில் அவைகளை நிறைவேற்ற இயலாமல் தடுமாறி விடுகிறோம்.

    எல்லாம் அவன் செயல் என்றிருப்பதே நிம்மதியானது.

    பதிலளிநீக்கு
  7. // உயிரல்லாத வெற்றுப்பேச்சான சத்தியம் சத்தியமேயில்லை.//..

    கரெக்ட்... “செய் அல்லது செத்துப்போ” எனும் காந்தி அடிகளின் வாக்கியத்தை நான் அடிக்கடி நினைப்பதுண்டு. வாக்கு கொடுத்தால் கொடுத்ததாக இருக்க வேண்டும். முகத் துதிக்காக சொல்லிவிட்டு பின்னர் மாறக்கூடாது என்பது என் பிடிவாதம்.



    ////கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அகங்காரம் போனால்தான் அடக்கம் வரும்.

    போதும் என்ற மனசோடு சம்பாதனம் செய்து [நியாயமான முறையில் சம்பாதித்து] அதை கவனத்துடன் செலவழிக்க வேண்டும்.///

    100 வீதம் எல்லாமே சரி. அடுத்தவருக்கு சமனாக நாமும் அதேபோல் பணக்காரர்தான் என நடிக்க வெளிக்கிட்டால்ல்.. முடிவில் மண்தான் கவ்வோணும்.... நாம் நாமாக இருக்க எதுக்கு வெட்கப்படவேண்டும்.. இருப்பதைவைத்து திருப்தியாக இருந்திடோணும்.

    பதிலளிநீக்கு
  8. //”நேத்திக்கு நீ என்ன பண்ணினேங்கறதை நான் சொல்றேன், கேட்டுக்கோ .... நோக்கு சொல்ல வெட்கமாயிருக்குப்போல. ///

    ஆமா...ஆமா...ஆமா...:)))

    பதிலளிநீக்கு
  9. //அவரும் எத்தனை தடவ வாய் விட்டுக்கேட்டார்! போடலியே நீ! பந்தி வஞ்சனை பண்ணிப்டியே .... இது தர்மமா? ஒரு மஹா ஸாதுவை இப்படி அவமானப் படுத்திப்டியே....”//

    எதுக்காக அவர் இப்படிப் பண்ணினார்ர்???? முடிவு அடுத்த பாகத்திலோ?:)).. ஹையோ இனி மீ “இந்தாட்டிக்காவில” இருந்துதான் படிக்கோணும்...

    பதிலளிநீக்கு
  10. புற்றிலிருந்து ஈசல் புறப்படுகிறமாதிரி இன்னும் என்னென்ன அபசாரங்களோ. பந்தி வஞ்சனை, இப்படிக்கூட புத்தி போகும் போலுள்ளது.
    கட்டுப்பாடு,அஹங்காரம், போதும் என்ற மனது+ இதனுடைய வியாக்யானங்கள் மிகவும் அருமை.
    பகவானே. இப்படியா உலகம் என்று தோன்றுகிறது. படிக்கும் நமக்கெல்லாம் நல்ல புத்தியையே கொடு பகவானே.
    நல்ல கருத்தை உணர்த்தும் பதிவு. ஆசிகளுடனும்,அன்புடனும்

    பதிலளிநீக்கு
  11. அற்புதமான கருத்துடன் ஆரம்பம்... முடிவில் நாங்களும் பிரமித்தோம்... மேலும் அறிய ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
  12. மஹாபெரியவாளின் தீர்க்க தரிசனம் சிறப்பு! தொடர்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  13. நீ என்ன பண்ணினேங்கறதை நான் சொல்றேன், கேட்டுக்கோ
    (ஒவ்வொருவரும் தங்கள் மனதில் சுய பரிசோதனை செய்ய வேண்டிய கேள்வி)

    பதிலளிநீக்கு
  14. பிரமித்தோம். மகிழ்வுடன் தொடர்கின்றேன்

    பதிலளிநீக்கு
  15. //கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அகங்காரம் போனால்தான் அடக்கம் வரும்.

    போதும் என்ற மனசோடு சம்பாதனம் செய்து [நியாயமான முறையில் சம்பாதித்து] அதை கவனத்துடன் செலவழிக்க வேண்டும்.// நூறு சதவிகிதம் உண்மை ஐயா!!

    பெரியவரின் தரிசனம் கிடைக்க பெற்றோம்,ஆவலுடன் தொடர்கிறேன்..

    பதிலளிநீக்கு
  16. என்ன தான் சொன்னார் மஹா பெரியவர்.
    நீங்கள் சொல்வது போல் பல சமயங்களில் நம் கழுத்தில் நாமே கல்லைக் கட்டிக் கொண்டு தான் விடுகிறோம். இதிலிருந்து எப்படி மன்னிப்பு கிடைத்தது மிராசுதார்க்கு.

    அறிந்து கொள்ள மிக மிக ஆவல்.

    பதிலளிநீக்கு
  17. நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
    வஞ்சனை சொல்வாரடீ - கிளியே
    வாய்ச் சொல்லில் வீரரடீ.
    - மகாகவி சுப்ரமண்ய பாரதியார்

    என்று நமது பாரதி சும்மாவா பாடினார்?

    பதிலளிநீக்கு
  18. உயிரல்லாத வெற்றுப்பேச்சான சத்தியம் சத்தியமேயில்லை.

    உண்மை....

    ஒவ்வொரு பகுதியிலும் நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறேன். தொடரட்டும் பகிர்வுகள்.

    பதிலளிநீக்கு
  19. தானே செயல் புரிந்தவனாக கொண்டாடிக்கொள்வது மாதிரி பாரம் வேறு எதுவும் கிடையாது. இப்பெருமையினால் நாமே நம் கழுத்தில் கல்லைக்கட்டிக் கொள்கிறோம் என்பது தான் உண்மை.

    கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அகங்காரம் போனால்தான் அடக்கம் வரும்.//
    நீங்கள் சொல்வது உண்மை.
    தற்பெருமை, அடக்கம் இல்லாமை, அகங்காரம் மூன்றும் ஒரு மனிதனின் அழிவுக்கு காரணகர்த்தாக்கள்.
    மஹாபெரியவாளின் பந்தி உபசரிப்பு கேள்விகளுக்கு மிராசுவின் பதில்கள் படிக்க ஆவல்.

    பதிலளிநீக்கு
  20. "கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அகங்காரம் போனால்தான் அடக்கம் வரும்." நல்ல அமுதமொழி.

    பதிலளிநீக்கு
  21. இது படிச்சேன், பின்னூட்டம் போட மறந்திருக்கேன்.

    //தானே செயல் புரிந்தவனாக கொண்டாடிக்கொள்வது மாதிரி பாரம் வேறு எதுவும் கிடையாது. இப்பெருமையினால் நாமே நம் கழுத்தில் கல்லைக்கட்டிக் கொள்கிறோம் என்பது தான் உண்மை.//

    ஆமாம், ஒரு சிலர் என்னால் தான் இப்படி நடந்தது, நான் நடத்திக்காட்டினேன் என்றெல்லாம் சொல்வதைப் பார்த்தால்..........:(

    பதிலளிநீக்கு
  22. //தானே செயல் புரிந்தவனாக கொண்டாடிக்கொள்வது மாதிரி பாரம் வேறு எதுவும் கிடையாது. இப்பெருமையினால் நாமே நம் கழுத்தில் கல்லைக்கட்டிக் கொள்கிறோம் என்பது தான் உண்மை. //

    இந்த மிகப்பெரிய உண்மையை என்று மிராசு உணரப்போகிறார்?

    பதிலளிநீக்கு
  23. \\கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அகங்காரம் போனால்தான் அடக்கம் வரும்.\\

    மிகவும் உண்மை. இதுபுரியாமல்தான் பலரும் அழிந்துபோகிறார்கள். மிராசுவின் செயல்களை நினைத்து அவரே கூனிக்குறுக நேர்கிறது. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. //தானே செயல் புரிந்தவனாக கொண்டாடிக்கொள்வது மாதிரி பாரம் வேறு எதுவும் கிடையாது. இப்பெருமையினால் நாமே நம் கழுத்தில் கல்லைக்கட்டிக் கொள்கிறோம் என்பது தான் உண்மை.

    // எல்லாம் அவன்செயல் என்றுணர்ந்தால் என்றும் துன்பமில்லை!
    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  25. /போதும் என்ற மனசோடு சம்பாதனம் செய்து [நியாயமான முறையில் சம்பாதித்து] அதை கவனத்துடன் செலவழிக்க வேண்டும்// போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து. ஆனால் ஆசை,பேராசை யாரை விட்டது நியாயமாக சம்பாதிக்க.

    //தானே செயல் புரிந்தவனாக கொண்டாடிக்கொள்வது மாதிரி பாரம் வேறு எதுவும் கிடையாது. இப்பெருமையினால் நாமே நம் கழுத்தில் கல்லைக்கட்டிக் கொள்கிறோம் என்பது தான் உண்மை//
    எவ்வளவு உண்மையான கருத்து.

    //கண்களை மூடி, கால்கள் இரண்டையும் பின்பக்கமாக மடித்து, நிமிர்ந்து அமர்ந்து கொண்டார், ஆசார்யாள். சாக்ஷாத் பரமேஸ்வரனே அப்படி அமர்ந்திருப்பது போன்ற ஒரு திருமேனி விலாசம். அசையவில்லை.//இந்நிலையில் நான் பார்த்த மகாபெரியவா ஒருகணம் என் மனக்கண்ணில் வந்து சென்றார். சுவாரஸ்யமாக உள்ளது கதை.

    பதிலளிநீக்கு
  26. கண்களை மூடி, கால்கள் இரண்டையும் பின்பக்கமாக மடித்து, நிமிர்ந்து அமர்ந்து கொண்டார், ஆசார்யாள். சாக்ஷாத் பரமேஸ்வரனே அப்படி அமர்ந்திருப்பது போன்ற ஒரு திருமேனி விலாசம். அசையவில்லை.//

    அப்படியே கண்ணை மூடி இந்தக் காட்சியை ரசித்தேன்.

    எங்க அம்மா அடிக்கடி சொல்லுவா, பந்தி வஞ்சனை பண்ணக் கூடாதுன்னு. இப்படி பெரியவங்க சொல்லறதை கேட்டு வளர்ந்ததாலோ என்னவோ இன்னும் கொஞ்சம் நல்ல விஷயங்கள் நம்ப கிட்ட ஒட்டிண்டிருக்கு.

    பந்தி வஞ்சனையே தப்பு. அதிலும் வேதம் சொல்லற வாய்க்கு வஞ்சனை பண்ணினா அதோட பலன் மிராசுதாருக்கு காத்துண்டிருக்கு.

    பதிலளிநீக்கு
  27. ”சாப்பாடெலாம் பரமானந்தமா நன்னாத்தான் போட்டே. பந்தியிலே நெய் ஒழுக ஒழுக நெறைய முந்திரிப்பருப்பு, திராக்ஷையெல்லாம் போட்டு சர்க்கரைப் பொங்கல் பண்ணச்சொல்லி, ஒங் கையாலே நீயே பரிமாறினே ... சரியா?” //

    நெய் ஒழுக ஒழுக சர்க்கரைப் பொங்கல தன் கையால போட்டும் மிராசுதாருக்கு பலன் இல்லை.

    பதிலளிநீக்கு
  28. Your foreword tells us a very good message. Thanks for sharing. Continuing to read your other posts....

    பதிலளிநீக்கு
  29. ம்....நல்லா மாட்டினார் மிராசுதார்(இந்தப் பதிவிலும் முடிவு தெரியவில்லையே? உங்கள என்ன பன்றது???????)

    பதிலளிநீக்கு
  30. இப்படி பண்ணிட்டாரே ஓர வஞ்சனை செய்து... பாவம் அந்த பெரியவர்...

    நாம் எங்கிருந்தாலும் நம் செயல்கள் கவனிக்கப்படுகின்றன என்பது இது தான்...

    ஆடிப்பூரமான இன்று, காலையில் இருந்து பெரியவாளை பற்றி படித்ததில் மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  31. அன்பின் வை.கோ - வாய்ச்சொல்லில் வீரரகள் - அருமை

    //தானே செயல் புரிந்தவனாக கொண்டாடிக்கொள்வது மாதிரி பாரம் வேறு எதுவும் கிடையாது. இப்பெருமையினால் நாமே நம் கழுத்தில் கல்லைக்கட்டிக் கொள்கிறோம் என்பது தான் உண்மை. //

    பெரியவா கோபப்படுவார் என்பது புதிய செய்தி - விரட்டு விரட்டேன்று விரட்டுகிறாரே - ம்ம்ம்

    //கண்களை மூடி, கால்கள் இரண்டையும் பின்பக்கமாக மடித்து, நிமிர்ந்து அமர்ந்து கொண்டார், ஆசார்யாள். சாக்ஷாத் பரமேஸ்வரனே அப்படி அமர்ந்திருப்பது போன்ற ஒரு திருமேனி விலாசம். அசையவில்லை.//

    பாவம் மிராசுதார் - என்னவொ நினைத்து வந்தார் - அவர் செய்த தவறுகளை எல்லாம் பெரியவா புட்டுப் புட்டு வைத்து விட்டாரே ..... தொடர்கிறதே --- த்ஹொடரட்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  32. பந்தி தர்மம் அனுசரிக்கவில்லை என்றால் அன்னதானப் புண்ணியம் இல்லை.

    பதிலளிநீக்கு
  33. இவ்வளவு விஷயம் நடந்திருக்கு ஆச்சார்யாள் கிட்ட எதையாவது மறைக்க முடியுமா.

    பதிலளிநீக்கு
  34. அடடா காப்ளாட்டு எடத்துல இப்பூடில்லா நடந்திகிட கூடாதுல்ல

    பதிலளிநீக்கு
  35. பந்தி வஞ்சனை பண்ணி கனபாடிகளை இப்படி அவமானப்படுத்தி இருக்கக்கூடாது. அவர் வாய் விட்டு கீட்டும் கூட கண்டு கொள்ளாமல் இருந்தது தப்புதான்.

    பதிலளிநீக்கு
  36. கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அகங்காரம் போனால்தான் அடக்கம் வரும்.

    போதும் என்ற மனசோடு சம்பாதனம் செய்து [நியாயமான முறையில் சம்பாதித்து] அதை கவனத்துடன் செலவழிக்க வேண்டும்./// ஒவ்வொருவருக்கும் பொருந்தும்..

    பதிலளிநீக்கு
  37. பந்தில பாரளடசம் காட்டலாமோ. மிராசுதாருக்கு அது ஏன் தெரியாம போச்சு. வாய திறந்து கேட்டும் கூட போடாம போயிருக்காரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. happy November 1, 2016 at 11:15 AM

      வாம்மா .... ஹாப்பி, வணக்கம்.

      //பந்தில பாரபட்சம் காட்டலாமோ. மிராசுதாருக்கு அது ஏன் தெரியாம போச்சு. வாய திறந்து கேட்டும் கூட போடாம போயிருக்காரே.//

      அதானே. எல்லோரும் எங்கட ஹாப்பியைப்போல தங்கமான தாராள மனஸுடன் இருப்பாளா! ஹாப்பி ஹாப்பிதான். சமத்தோ சமத்தூஊஊஊஊஊ.

      இருப்பினும் எங்கட குழந்தை ஹாப்பி கையால் பரிமாறி ஏதும் சாப்பிட எனக்கு இன்னும் கொடுத்துவைக்கவே இல்லை. :(

      அட்லீஸ்ட் ஒரு கப் சூப்பர் டிகிரி காஃபியாவது தரக்கூடாதா? :)

      நீக்கு
  38. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (23.05.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=402690036900363

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு