என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 25 ஜனவரி, 2014

VGK 01 / 03 / 03 ] THIRD PRIZE WINNER ”ஜாங்கிரி”




’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்

கதையின்  தலைப்பு 

VGK 01 ] ஜா ங் கி ரி



மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,
கணிசமான எண்ணிக்கையில் பலரும், 
மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 
வெகு அழகாக விமர்சனங்கள் 
எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 

அவர்கள் அனைவருக்கும் என் 
மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 

நடுவர் அவர்களால் பரிசுக்குத் 
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 
விமர்சனங்கள் மூன்று. 


 

 


இந்தப் பரிசுகளை வென்றுள்ள மூவருக்கும் 
நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள். 

   


மற்றவர்களுக்கு:  
BEST OF LUCK NEXT TIME !



    

மூன்றாம் 
பரிசினை 
வென்றுள்ளவர்:-




திருமதி 

’உஷா ஸ்ரீகுமார் ’

அவர்கள்


usha-srikumar.blogspot.in
'உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்’



மனம் நிறைந்த 
பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.




மூன்றாம் பரிசினை வென்றுள்ள விமர்சனம்:


ஜாங்கிரி - இனிப்பான சுருக்கமான தலைப்பு...

திண்ணையில் நடக்கும் சீட்டுக் கச்சேரியில் ஆரம்பிக்கும் கதை  "ச்வீட் மாஸ்டர்"  நாகராஜன் பற்றிய விசாரிப்பிலேயே  தலைப்பை  விளக்கி விடுகிறது...

அடுத்து வரும் வரிகள்  நாகராஜன்  என்ற ஏழ்மைக்கும் _ நடுத்தரத்துக்கும் இடையே   ஊசலாடும் ஒரு  நேர்மையான உழைப்பாளி, பாசமான கணவன், அன்பான தந்தை, மொத்தத்தில்   ஒரு  நல்ல மனுஷர் .

ஆயிரம் ருபாய் நாகராஜனின்  தினசரி பிரச்சனைகளை தீர்க்கும் என்பது  நிதர்சனம் என்றாலும்  ..... நாகராஜன் என்ற உணர்வுகள் நிரம்பிய ஒரு கணவனின் ஊமை வலிகள் மனைவி சமையல் வேலைக்குப் போவது  அபிப்ராயப் படும்  போது  நமக்குப் புரிகிறது... மகனுக்காக ரெண்டு ஜாங்கிரி  தந்தால் பரவாயில்லை என்று ங்கும் -  ஆனால் வாய் விட்டுக் கேட்க இடம் தராத தன்மானம்... ஒரு பாசமுள்ள மானஸ்தனை  நம் கண் முன் கொண்டு நிற்கவைத்து விட்டீர் கள், VGk  சார்...

யாரும்  நாகராஜனை சாப்பிட சொல்லாததால்  வெறும் வயிற்றுடன் வீடு திரும்பி, திரும்பும்  வழியில் கடையில் பிள்ளைக்காக ஜாங்கிரி வாங்கிவந்து "பழைய சோறோ நீராகாரமோ"  கேட்கும் வரிகள் மனதை கசக்கும் கவிதை...

பலர்  இன்றும் தங்கள் வீடு விசேஷங்களில் வேலையாட்களை சாப்பிட சொல்வதற்கு மறந்து விடுகிறார்கள்... அதற்கு காரணம் "busy "யாக இருப்பதுவும்.. வேலையாட்களை விருந்தாளிகளுக்கு சமமாக மதிப்பது இல்லை-ஏன், மனிதர்களாகக் கூட நினைப்பது இல்லை என்பது தான்...

அப்படிப்பட்டவர்களில், ஒரு சிலராவது இந்தக் கதையை படித்த பின் ஒரு 10% ஆவது மாறினால் கூட அது கதாசிரியருக்கு கிடைத்த வெற்றி...

சிறுகதை இலக்கிய இலக்கணப்படி ஒரு நல்ல சிறுகதையில் Unity of Time, Place அண்ட் Action  அவசியம் ... (எந்தக் காலத்திலோ படித்தது )

அதாவது- அளவான காலகெடுவில் நடந்திருக்க வேண்டும்.... நிறைய இடங்களில் கதை களம் அமையாமல் ஒரு சில  இடங்களில மட்டும், அளவான கால  கெடுவில் நடக்க வேண்டும்... அளவான கதாபாத்திரங்களும் சம்பவக் கோர்வைகளும் போதும்   ...
ஜாங்கிரியில் அவை மிகவும் சரியான விகிதத்தில் இருக்கின்றன...

மொத்தத்தில், ஜாங்கிரி மிகவும் நேர்த்தியாக சுற்றப்பட்டு சரியான மொறுமொறுப்புடன், மினுமினுப்புடன், அளவான, பதமான பாகில் ஊற வைத்து, சூடாகப்  படைக்கப் பட்ட விருந்தாக  இருக்கிறது...


    


மிகக்கடினமான இந்த வேலையை
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.


போட்டியில் பரிசு பெற்றுள்ள மற்றவர்கள் 
பற்றிய விபரம் இன்றே  தனித்தனிப்
பதிவுகளாகத் தரப்பட்டுள்ளன.


அனைவரும் தொடர்ந்து
ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 
உற்சாகத்துடன் பங்கு கொண்டு 
சிறப்பிக்க வேண்டுமாய் 
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான இணைப்பு: 



விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
வரும் வியாழக்கிழமை 30.01.2014  
இரவு 8 மணிக்குள் [I.S.T]




என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

33 கருத்துகள்:

  1. அன்பின் வை.கோ -

    உஷா ஸ்ரீகுமார் எழுதியுள்ள விமர்சனம் அருமை - இயல்பாக எழுதப் பட்டுள்ளது - கதையின் சாராம்சத்தைப் பிழிந்தெடுத்து விபரமான விம்ர்சனமாக எழுதி உள்ளார். மூன்றாம் பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் உஷாஸ்ரீகுமார் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  2. திருமதி உஷாவிற்கு என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...

    விமர்சனப் போட்டி சிறப்பாக தொடரட்டும்..

    பதிலளிநீக்கு
  4. இனிய வாழ்த்து அனைவருக்கும்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு

  5. மூன்றாம் பரிசினை வென்றுள்ள திருமதி உஷா ஸ்ரீகுமார் ’அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  6. அருமையான விமர்சனம்.பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. பரிசு பெற்ற உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். தொடர்ந்து பல பரிசுகளை அள்ள வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. ஆழமான பார்வையுடன் கூடிய
    அற்புதமான விமர்சனம்
    திருமதி. உஷா ஸ்ரீ குமார் அவர்களுக்கு
    எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  11. அருமையான விமர்சனம் செய்த திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  12. இதுவும் நன்றாக இருந்தது. வாழ்த்துகள் அன்புடன்

    பதிலளிநீக்கு
  13. திருமதி உஷா ஸ்ரீகுமார் ’அவர்களுக்கு இனிய வாழ்த்துகள். !

    பதிலளிநீக்கு
  14. மூன்றாம் பரிசு பெரும் திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. திருமதி உஷா ஸ்ரீகுமாருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. அருமையான விமர்சனம்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  17. உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வாழ்த்து

    பதிலளிநீக்கு
  18. மூன்றாம் பரிசினை வென்ற சகோதரி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  19. Gopu sir, while posting links, select them and click on the link icon and type the http address there. this will simplify the reader's work of copy pasting as directly a single click on it will lead to the page :-)

    பதிலளிநீக்கு
  20. How r u gopu sir ? It's been long time since I visited ur blog, sorry for that. At the same time, thanks for ur comments to all my post !

    பதிலளிநீக்கு
  21. தட்டு நிறைய ஜாங்கிரி சாப்பிட்ட சந்தோஷம் எனக்கு...

    அருமையான கதை படிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு ...

    அதற்க்கு நான் எழுதிய விமரிசனத்திற்கு பரிசு கிடைத்ததற்கு ...

    அந்த விமரிசனத்திற்கு இத்தனை பின்னூட்டங்கள் வந்ததை படித்து...

    தட்டு நிறைய ஜாங்கிரி சாப்பிட்ட சந்தோஷம் எனக்கு.......

    நன்றி....

    பதிலளிநீக்கு
  22. திருமதி உஷா ஸ்ரீகுமாருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களின் விமரிசனம் அவர்கள் ஜிலேபியைப் பற்றி சொன்னது போலவே இருக்கிறது, அதாவது மொறுமொறுப்புடனும் மினுமினுப்புடனும் இருக்கிறது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  24. உஷாஸ்ரீகுமார அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  25. திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 26, 2015 at 4:15 PM

      //திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.//

      மிக்க நன்றி.

      நீக்கு
  26. உஷா ஸ்ரீகுமாரவங்களுக்கு வாழ்த்துகள.

    பதிலளிநீக்கு
  27. திருமதி உஷாஸ்ரீகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள். இவங்களும் விமரிசனம் நல்லா எழுதி இருக்காங்க. நாகராஜனின் ஏழ்மைக்கும் வறுமை நிலைக்கும் மத்தியிலும் மனைவியை வேலைக்கு அனுப்பாத குணத்தை சிறப்பாக நினைத்து விமரிசனத்துல சொஸ்லி இருக்காங்க. முதல் இரண்டாம் மூன்றாம் பரிசுக்கு தேர்வு செய்ய நடுவர் ரொம்ப சிரமப்படுவார்னு தோணறது.

    பதிலளிநீக்கு
  28. திருமதி உஷாஸ்ரீகுமார் அவர்களுக்குப் பாராட்டுகள்! மேலும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு