2
ஸ்ரீராமஜயம்
ஆடி அமாவாசை நாளில் கடலில் நீராடுவது புண்ணியம். அதிலும் காஞ்சி மஹானுடன் நீராடுவது பெரும் பேறு என்று எண்ணியபடி பெருங்கூட்டமாக கடற்கரைக்கு வந்திருந்தனர். வயதான மூதாட்டிகள் உள்பட பலரும் ஆர்வத்துடனும்,. பக்தியுடனும் கரையில் காத்திருந்தனர்.
எனக்கு ஒருசில விதங்களில் செலவைக் குறைக்கலாம் என்று தோன்றுகிறது.
எல்லோரும் [ஸ்திரிகள் உள்பட], கல்யாணம், உபநயனம் என்று அழைப்பு வந்தால், நண்பர்கள், உறவினர்கள் என எல்லோருமாகச் சேர்ந்து போகத்தான் வேண்டும் என்பதில்லை.
பிரயாணத்திற்குச் செலவிட்டு ரயில்காரனும், பஸ்காரனும் வாங்கிக்கொள்வதில் என்ன பிரயோஜனம்? அதையெல்லாம் சேர்த்து வைத்துக் கல்யாணம் பண்ணுகிறவனுக்கு ரொக்கமாக அனுப்பி விட வேண்டும்.
இதனால் விருந்துச் சாப்பாடு என்று ஒரு செலவினம் குறைவது ஒரு பக்கம்; அவசியமான செலவும் சீரும் செய்யக் கல்யாணம் பண்ணுகிறவனுக்கு வரவினம் வலுப்பது இன்னொரு பக்கம்.
oooooOooooo
[ 1 ]
மது அருந்தியவன் மனிதனா?
க்ஷேத்ரங்கள் பலவற்றிற்கும் சென்று, அங்கு உறைந்திருக்கும் இறைவனை தரிஸிக்க வேண்டும்; புண்ணிய நதிகளில் தீர்த்தங்களில் நீராட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. மஹாமகம், கும்பமேளா போன்ற புண்ணிய காலங்களில் லக்ஷக்கணக்கான பக்தர்கள் புனித நதிகளில் நீராடுவதை இன்றைக்கும் காணலாம். புண்ணிய நதிகளில் நீராடினால் .... பாபங்கள் நீங்கி, மனதுள் நிம்மதி பெருகும் !
’கடலைக்காண்பதே விசேஷம். இதைப்பார்ப்பதே புண்ணியத்தைத் தரும்’ என்பர். ஆனால், சாதாரண நாட்களில், கடலில் நீராடக்கூடாது. ஆடி மற்றும் தை அமாவாசை, கிரஹனம், மாசி மகம் போன்ற புண்ணிய காலங்களில் மட்டுமே கடலில் நீராடலாம். ஆனால் இராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், தனுஷ்கோடி ஆகிய தலங்களில் உள்ள கடலில் எப்போது வேண்டுமானாலும் நீராடலாம்; புண்ணியம் பெறலாம்.
காஞ்சி மஹாபெரியவர், தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டிருந்தார். ஆடி அமாவாசை புண்ணிய காலம் நெருங்குவதையொட்டி வேதாரண்யத்தில் ஸ்நானம் செய்ய முடிவு செய்தார், பெரியவா. அதற்குத்தக்கபடி தனது யாத்திரையை அமைத்துக்கொண்டார் ஸ்வாமிகள்.
ஸ்ரீ இராமபிரான் காரண காரியம் இல்லாமல் எந்தவொரு வார்த்தையையும் பேச மாட்டார்; செயல்பட மாட்டார் என்பர். மஹான்களும் அப்படித்தான். வெட்டிப்பேச்சுகளும் வீண் செயல்களும் அவர்களிடம் இருக்காது.
யாத்திரையின்போது, வழியில் உள்ள சில ஊர்களில் முகாமிட்டுத்தங்கி, பூஜைகளை முடித்துக்கொண்டு பிறகு தனது பயணத்தைத் தொடர்ந்தார்கள் ஸ்வாமிகள். இப்படி ஓர் ஊரில் முகாமிட்டிருந்தபோது, அங்கு பசியால் வாடிய நிலையில், ஒருவர் வந்தார்.
அவரைக் கண்டதும் மடத்து மேனேஜரை அழைத்த ஸ்வாமிகள், “இவருக்கு ஆகாரம் கொடு; அப்படியே நல்ல வேஷ்டி, துண்டும் கொடு” என்றார். மேனேஜரும் அப்படியே செய்தார்.
பிறகு பெரியவளிடம் வந்து, “தங்கள் உத்தரவுப்படி உணவும் உடையும் கொடுத்தாச்சு. அவரை அனுப்பிடலாமா?” என்று கேட்டார்.
உடனே பெரியவாள், “மடத்துக்கு முக்கியப் பிரமுகர்கள் வந்தால் அவர்களை எப்படி கவனிப்பீர்களோ ... அதேபோல இவரையும் கவனியுங்கள்; ராஜோபசாரம் செய்யுங்கள்” என்றார்.
மேனேஜருக்குக் குழப்பம்! இருப்பினும் பெரியவாளின் உத்தரவுப்படி, யாத்திரையில் புதிய நபரும் உடன் வந்தார்.
தினமும் மேனேஜரிடம், “அவருக்கு சாதம் போட்டாயா?; அவரை நன்றாகக் கவனித்துக் கொள்கிறாயா?” என்று விசாரித்துக் கொண்டே இருந்தார் ஸ்வாமிகள்.
நாட்கள் நகர்ந்தன. அந்த புதிய ஆசாமி, திடீரென்று மது அருந்தி விட்டு வந்தார். கடவுளைத் திட்டினார்; மடத்து ஊழியர்களைக் கண்டபடி ஏசினார்; தனக்கு உணவு மற்றும் உடை தந்து ஆதரித்த பெரியவாளயும் இஷ்டத்துக்குத் திட்டித் தீர்த்தார்.
இதைக்கண்டு பொறுமை இழந்த மேனேஜர், ஓடோடி வந்து, பெரியவாளிடம் விவரம் முழுவதும் சொன்னார். ”இந்த ஆசாமியை அனுப்பி விடுங்கோ” என்று வேண்டினார்.
இதைக்கேட்டு வாய்விட்டுச் சிரித்தார் ஸ்வாமிகள். இம்மியளவு கூட அந்த ஆசாமி மீது கோபமே வரவில்லை ஸ்வாமிகளுக்கு.
”ஸ்வாமி ! அந்த ஆசாமியை அனுப்பிடட்டுமா?” என்று மீண்டும் கேட்டார், மேனேஜர். ஆனால் பெரியவாள் மறுத்து விட்டார்கள்.
ஆடி அமாவாசை ! இந்த நாளில் காஞ்சி மஹாபெரியவா, வேதாரண்யத்தில் சமுத்திர ஸ்நானம் செய்யப்போகிறார் என்னும் தகவல் அறிந்து, சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், வேதாரண்யத்திற்கு வந்து சேர்ந்தனர்.
ஆடி அமாவாசை நாளில் கடலில் நீராடுவது புண்ணியம். அதிலும் காஞ்சி மஹானுடன் நீராடுவது பெரும் பேறு என்று எண்ணியபடி பெருங்கூட்டமாக கடற்கரைக்கு வந்திருந்தனர். வயதான மூதாட்டிகள் உள்பட பலரும் ஆர்வத்துடனும்,. பக்தியுடனும் கரையில் காத்திருந்தனர்.
ஸ்வாமிகள் கடற்கரைக்கு வந்தார்கள். அவரை அனைவரும் நமஸ்கரித்தனர். நீராடுவதற்காகக் கடலில் இறங்கினார் ஸ்வாமிகள். அவரைத்தொடர்ந்து மூதாட்டிகள் உள்பட எண்ணற்ற பக்தர்கள் பலரும் தபதபவென கடலில் இறங்கினர்.
அவ்வளவுதான். மூதாட்டிகள் சிலரை கடல் அலைகள் இழுத்துச்செல்ல ... பலரும் செய்வதறியாது தவித்து மருகினர்.
அப்போது ..... ஆரவார அலைகளைப் பொருட்படுத்தாமல் பாய்ந்து சென்று, மூதாட்டிகளை இழுத்து வந்து, கரையில் சேர்த்தார் ஒருவர். அவர் வேறு யாருமல்ல ..... பெரியவாள் உள்பட அனைவரையும் மது போதையில் ஏசினானே ... அந்த ஆசாமியே தான் !
இவற்றை கவனித்த ஸ்வாமிகள், மேனேஜரைப் பார்த்து மெள்ள புன்னகைத்தார். உடனே அவர் ஓடோடி வந்து பெரியவாளை நமஸ்கரித்தார். மஹான்கள் தீர்க்கதரிசிகள் !
அவர்களது செயல்பாடுகளில் .... அவர்களின் ஒவ்வொரு பார்வையிலும் கூட ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும்.
இதை உணர்ந்து செயல்பட்டால், மஹான்களது ஆசீர்வாதம் பரிபூரணமாகக் கிடைக்கும்.
மஹான்களின் பூரண ஆசி கிடைத்து விட்டால், வாழ்நாளெல்லாம் திருநாள்தானே !
மஹாபெரியவா திருவடிகள் சரணம்
[எங்கோ எதிலோ என்றோ படித்தது]
[எங்கோ எதிலோ என்றோ படித்தது]
oooooOooooo
[ 2 ]
சாத்வீகமான பக்தி
திருச்சியில் ஒரு பக்தர், புகைப்படக்காரர். சிறிய ஸ்டுடியோ வைத்திருந்தார். வீட்டில் மஹா பெரியவா படம் பிரதானமாக இருக்கும்.
தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு மஹா பெரியவா படத்துக்கு நைவேத்யம் படைத்து விட்டுத்தான் எந்த வேலையையும் தொடங்குவார்.
உதடுகள் எப்போதும் மஹாபெரியவா நாமாவை உச்சரித்துக்க்கொண்டே இருக்கும்.
ஒரு தடவை பெரியவா ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூலுக்கு விஜயம் செய்திருந்தார்கள்.
அதுவோ மிகவும் உஷ்ணப்பிரதேசம். வெயில் கடுமையாகக் கொளுத்திக்கொண்டிருந்தது.
திருச்சியில் இருந்த இந்த புகைப்படக் கலைஞருக்கு பெரியவாளை தரிஸிக்க வேண்டும் என்ற ஆவல் வந்தது. அன்று காலை ரயிலில் புறப்படும் முன் ஒரு டம்ளரில் சூடான பாலை பெரியவா படத்தின் முன் வைத்து விட்டு கிளம்பி விட்டார்.
கர்னூலில் அளவுக்கு அதிகமாக பக்தர்கள் கூட்டம். எங்கு திரும்பினாலும் மக்கள் வெள்ளம். புகைப்படக் கலைஞரால் உள்ளே செல்லவே முடியவில்லை.
சற்று மணல் மேடாக இருந்த ஒரு இடத்தில் ஏறி நின்று மஹானை தரிஸிக்க முயற்சித்தார். வெயிலின் தாக்கம் காலைச் சுடவே கீழே இறங்கி விட்டார். சரி, சற்று கூட்டம் குறைந்ததும் மாலை வந்து மஹானை தரிஸிக்கலாம் என்று நினைத்துக் கிளம்பிவிட்டார்.
இவ்வளவு தூரம் வந்தும் மஹானை தரிஸிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவர் மனஸில் இருந்தது.
சற்று தூரம் போனதும், தன்னை யாரோ அழைப்பது போல் உணர்ந்து திரும்பிப்பார்க்க, ஒரு பக்தர் வேகமாக இவரிடம் ஓடி வந்தார்.
“நீங்க திருச்சியிலேந்து தானே வந்திருக்கீங்க?”
“ஆமாம்”
”பெரியவா உங்களை அழைச்சுண்டு வரச்சொன்னார்கள்.”
“என்னையா?”
”நீங்க போட்டோகிராபர் தானே?”
“ஆமாம்”
”அப்படியென்றால் வாருங்கள்”
விடாப்பிடியாக அவரை அழைத்துக்கொண்டு பெரியவர் முன் நிறுத்தினார், அந்த சிஷ்யர்.
கைகளைக்கூப்பியவாறு, கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓட புகைப்பட நிபுணர் தன்னை மறந்து அங்கே நின்றார்.
அவரை ஏற இறங்க ஒருமுறைப் பார்த்த மஹான் , “என்னைப் பார்க்கணும்னு இவ்வளவு தூரம் வந்திருக்கே! பார்க்காமப் போனா என்னப்பா அர்த்தம்” என்றார்.
”கும்பல் நிறைய இருந்தது. அதான் கொஞ்சம் குறைஞ்சவுடன் வரலாம்ன்னு ” என்று இழுத்தார் புகைப்படக்காரர்.
“சரி, சரி, சாப்பிட்டயோ ?”
“சாப்பிட்டேன்”
சில வினாடிகள் தாமதத்திற்குப்பின் மஹான் பேசினார்:
“என் வாயப் பார்த்தாயோ”?
நாக்கை வெளியே நீட்டுகிறார். சூடு பட்டது போலச் சிவந்து இருந்தது.“உதடெல்லாம் கூட புண்ணாயிடுத்து; ஏன் தெரியுமா?”
புகைப்பட நிபுணருக்கு ஒன்றும் புரியவில்லை.
“நீ எனக்கு பாலைச் சுடச்சுட வெச்சுட்டு, அவசர அவசரமாக் கிளம்பி வந்துட்டே இல்லையா !அதான்” என்றார்.
திருச்சிக்காரருக்கு தான் காலையில் புறப்படும் போது வைத்த படையல் பால் அப்போதுதான் நினைவுக்கு வந்தது.
சாஷ்டாங்கமாக மஹானின் காலில் விழுந்து, “பிரபோ என்னை மன்னியுங்கள்” என்று கதறினார்.
எந்த அளவுக்கு பக்தி இருந்திருந்தால் மஹான் அந்தப்பாலை ருசித்திருப்பார் என்பதை சற்றே எண்ணிப் பாருங்கள்.
அது ஸாத்வீகமான பக்தி. ஆண்டவனே நீதான் எனக்கு எல்லாம் என்று நினைக்கும் பக்தி.
[எங்கோ எதிலோ என்றோ படித்தது]
"
oooooOooooo
[ 3 ]
தண்டம்
மஹா பெரியவா முன்னால் ஒருநாள் காலையில், இளைஞர் ஒருவன் அழுதபடி நின்று கொண்டிருந்தான். பெரியவா கரிசனத்துடன் விசாரித்ததும் அவனது அழுகை மேலும் அதிகமாயிற்று.
சற்று பொறுத்து அவன் தன்னைப்பற்றி மெதுவாகச் சொன்னான். ”படிப்பு முடிந்து இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னும் வேலை கிடைக்கவில்லை. வீட்டில் உள்ளவர்கள் ஏச்சும் பேச்சும் தாங்க முடியவில்லை. அப்பா, எப்போப் பார்த்தாலும் என்னை ‘தண்டம்’ ’தண்டம்’ ன்னு குத்திக் காட்டிண்டு இருக்கார். மனஸுக்கு ரொம்ப வேதனையா இருக்கு. அதனால் பெரியவா கிட்ட சொல்லி ஆசீர்வாதம் வாங்கிண்டு போலாம்ன்னு வந்தேன்” என்று கரகரத்த குரலில் சொன்னான்.
கருணையோடு பார்த்த மஹா பெரியவா அவனை ஒரு பக்கமாக உட்காரச்சொன்னார். அன்றைய அனுஷ்டானங்களை முடிக்க வேண்டும் அல்லவா !
தொடர்ந்து தனது செங்கோலாகத் திகழும் தண்டம் என்று எல்லோராலும் அழைக்கப்படும் செங்கோலுடன் எல்லோருக்கும் காட்சி அளித்த வண்ணம் அமர்ந்திருந்தார்.
அப்பொழுது அரசுத்துறையில் உயர் பதவியில் இருந்த இன்ஜினியர் ஒருவர் பெரியவாளை தரிஸிக்க வந்திருந்தார். அவரைப் பார்த்த மஹான் புன்னகைத்தார். வந்திருந்த இன்ஜினியருக்கோ மனம் நிறைந்த உற்சாகம்.
தான் கையில் வைத்திருந்த துறவறத் திருகோலை அவரிடம் காட்டி “இதற்குப்பெயர் என்ன? என்று கேட்டார்.
இன்ஜினியர் “தண்டம்” என்றார் மிகவும் பணிவாக.
”இதுக்கு உன்னால் ஒரு வேலை போட்டுத்தரமுடியுமா?” என்று கேட்டார் மஹான்.
“பெரியவா சொல்றது எனக்குப் புரியலையே”
மஹான் தன் அருகில் சற்று தள்ளி ஒதுங்கி நின்றிருந்த இளைஞனை அழைத்து, “இவனுக்கு ஒரு வேலை போட்டுக் கொடுப்பியா? ஏன்னா, இவனை வீட்டில் எல்லோரும் ‘தண்டம்’ ‘தண்டம்’ன்னு தான் கூப்பிடறாளாம்.”
”பெரியவா உத்தரவு போட்டாப்போதாதா .... அதற்குத்தானே காத்துக்கொண்டிருக்கிறோம்” என்றார் இன்ஜினியர்.
”சரி, ஒரு தண்டத்துக்கு வேலை கிடைச்சிடுத்து, இனிமேல் இந்த தண்டத்துக்கு வேலை இல்லை”ன்னு சொல்லிட்டு தன் கையிலிருந்த செங்கோலை சுவற்றின் பக்கம் சாய்த்து வைத்துவிட்டு சொன்ன வார்த்தைகள் இவை:
“தண்டம்” “தண்டம்”ன்னு கரிச்சுக்கொட்டராளே, அது தான் எங்களுக்கும் ரக்ஷை. பிரும்மச்சாரிகளுக்கும் ரக்ஷை. ராஜ தண்டத்துக்கு அடங்கித்தான் லோகத்திலேயே நீதி நியாயங்கள் இருந்தது.
ஈஸ்வர சிருஷ்டியிலே எதுவுமே உபயோகமானது தான் ...... தண்டமில்லை” என்றார்.
[எங்கோ எதிலோ என்றோ படித்தது]
oooooOooooo
[ 4 ]
அன்னபூரணி இருக்கும் இடத்தில்,
அன்னத்துக்குக் குறைவேது?
தினமும் சாப்பாட்டுக்கே வழியின்றி கஷ்டப்படும் ஒரு பரம ஏழை. பெரியவாளுடைய மஹா மஹா மஹத்துவமோ, அந்த எளிய உருவத்தின் கருணையோ எதுவுமே அவருக்குத் தெரியாது.
ஆனால் பெரியவா இருந்த முகாமுக்கு தினமும் இரண்டு வேளையும் வந்துவிடுவார். காரணம்? அன்னபூரணி இருக்கும் இடத்தில், அன்னத்துக்குக் குறைவேது?
வயிறார சாப்பிட்டுவிட்டுப் போவார். பெரியவா அந்த கிராமத்தை விட்டுக் கிளம்பியதும், பழையபடி பசி, பசி, பசி! குடும்பத்தில் நான்கைந்து உருப்படிகள்! என்ன செய்வது? பேசாமல் தற்கொலை பண்ணிக் கொண்டுவிடலாம் என்று முடிவு பண்ணினார்.
ஒரு கஷ்டத்திலிருந்து தப்பிக்க அதைவிடப் பெரிய கஷ்டத்தில் மாட்டிக் கொள்ளப்போவதை இம்மாதிரி தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் அறிவதில்லை.
சந்திரமௌலீஸ்வரர் ப்ரஸாதத்தை கொஞ்ச நாள் சாப்பிட்டிருக்கிறார் இல்லையா? எனவே, சாவதற்கு முன் பெரியவாளை சென்று ஒரு முறை தர்சனம் பண்ணிவிட்டு, அப்புறம் சாகலாம் என்று எண்ணி காஞ்சிபுரம் வந்தார். பெரியவாளை நமஸ்காரம் பண்ணிவிட்டு, எதுவும் பேசாமல் நின்றார்.
"ஒன்னோட அடுத்த ப்ரோக்ராம் என்ன?..." பெரியவாளின் திருவாக்கிலிருந்து 'டமால்' என்று வந்து விழுந்தது!
ப்ரோக்ராமா? வாழ்க்கையோட விளிம்பில் நின்று கொண்டிருக்கும் அந்த ஏழை என்ன பதில் சொல்லுவார்? 'தற்கொலை பண்ணிக் கொள்ளப் போகிறேன்' என்று அந்த தெய்வத்திடம் சொல்ல முடியுமா?
மனஸ் முழுக்க துக்கம்; அது தொண்டையை வேறு அடைத்துக் கொண்டது. கண்களிலிருந்து கண்ணீர் நதியாக பெருக்கெடுத்து, இதோ கருணைக்கடல்! போய்ச் சேருவோம்!... என்று வெளியே வழிந்தோடியது.
"என்ன செய்யறதுன்னே தெரியலே ஸாமி...எங்க ஊருக்குத்தான் போகணும்" கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.
அது நின்றால்தானே!
"நான் ஒனக்கு பஸ் சார்ஜ் தரேன்... இப்டியே ஒன்னோட ஊருக்குப் போகாதே! என்ன பண்ணு...நேரா இங்கேர்ந்து மெட்ராஸ் போயி..... பாரீஸ் கார்னர்ல எறங்கி, அங்கேர்ந்து மறுபடியும் பஸ் பிடிச்சு, ஒன்னோட ஊருக்குப் போ!..." என்று அந்த மனிதர் சுத்தமாகப் புரிந்து கொள்ளவே முடியாத ஒரு உத்தரவைப் போட்டுவிட்டு, கையில் ப்ரஸாதம் குடுத்து அனுப்பினார்.
மடத்திலிருந்து மெட்ராஸுக்குப் போக பஸ் சார்ஜ் தரப்பட்டது. அங்கிருந்தவர்களிடம் குழம்பிய முகத்தோடு, "வேலூர் பக்கம் எங்க கிராமம்... இங்கேருந்து நேராப் போனா, செலவும் கம்மி. ஸாமி ஏன் மெட்ராஸ் போயி அப்புறம் எங்கூருக்கு போகச் சொல்லறாருன்னு புரியலே!" என்று புலம்பிக் கொண்டே சென்றார்.
பெரியவா சொன்னபடி பாரீஸ் கார்னரில் இறங்கிக் கொண்டு, தன்னுடைய கிராமத்துக்கான பஸ்ஸை தேடிக் கொண்டிருந்தார்......
"என்னப்பா இவ்வளவு தூரம்? எங்க வந்தே? பாத்து எத்தனை வருஷமாச்சு!...." என்று வாஞ்சையும், நட்பும் ஒருசேர ஒரு குரல் அவருக்குப் பின்னாலிருந்து கேட்டது; தோளைச் சுற்றி அணைப்பாக ஒரு கரமும் விழுந்தது. திரும்பிப் பார்த்தால்.....பெரியவா அனுப்பிய தூதர் போல் இவருடைய பால்ய நண்பர் நின்று கொண்டிருந்தார்!
இவருடைய வாடிய முகத்தைப் பார்த்ததும் "வாப்பா! மொதல்ல சாப்பிடலாம். எனக்கும் பசிக்குது" என்று ஒரு ஹோட்டலுக்குக் கூட்டிக்கொண்டு போய் வயிறார வேண்டியதை வாங்கிக் கொடுத்து பசியாற்றினார்.
"இப்போ சொல்லு. எங்க இருக்கே? என்ன பண்ணிட்டு இருக்கே? எத்தனை கொழந்தைங்க?..." கேட்டதுதான் தாமதம்! பெரியவாளின் இந்த மஹா கருணையை எண்ணி எண்ணி உள்ளே பொங்கிக் கொண்டு வந்த அழுகை, தன் பால்ய நண்பன் அன்போடு வரிசையாகக் கேட்ட கேள்வியால், வெடித்துச் சிதறியது! தன்னுடைய அவல நிலையைக் கொட்டித் தீர்த்துவிட்டார்! தற்கொலை எண்ணம் உட்பட.
"இதுக்கெல்லாம் மனசு ஒடிஞ்சு போகலாமா? கவலையை விடு. ஒனக்கு வேண்டிய ஒதவிய நான் பண்ணறேன்! சின்னச்சிறு புள்ளைங்களைத் தவிக்க விட்டுட்டு, தற்கொலை அது இதுன்னெல்லாம் நெனைச்சுக் கூடப் பாக்காதே! ஒன்னோட எல்லாக் கடனையும் நான் அடைக்கறேன்! எங்கூடவே வேலை செய்யி...என்ன? புரியுதா?..." தன்னை மறுபடி அணைத்துக் கொண்ட நண்பனில் "காஞ்சி சாமி"யைத்தான் கண்டார்.
25 வருஷத்துக்குப்பின் தன் பெண்ணுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்தார். அப்போது வாசலில் ரதயாத்திரையாக வந்த பெரியவா விக்ரஹத்துக்குத் தன் கண்ணீரைக் காணிக்கையாக செலுத்தினார்.
[Thanks to Amritha Vahini 03 01 2014]
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்
’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.
இந்தப் புத்தாண்டில் கிடைத்துள்ள
இரண்டு சிறப்புச் செய்திகளை தனித்தனியே
பகுதி 106 / 2 / 3 and 106 / 3 / 3
ஆகிய இரண்டு பதிவுகளாக
இன்றே இப்போதே வெளியிட்டுள்ளேன்.
காணத்தவறாதீர்கள்.
இதன் தொடர்ச்சி வழக்கம்போல்
நாளை மறுநாள் வெளியாகும்.
இந்தத்தொடர் முடிய இன்னும்
இரண்டே இரண்டு பகுதிகள்
மட்டுமே பாக்கியுள்ளன
இந்தத்தொடர் முடிய இன்னும்
இரண்டே இரண்டு பகுதிகள்
மட்டுமே பாக்கியுள்ளன
இரண்டு சிறப்புச் செய்திகளை தனித்தனியே
பகுதி 106 / 2 / 3 and 106 / 3 / 3
ஆகிய இரண்டு பதிவுகளாக
இன்றே இப்போதே வெளியிட்டுள்ளேன்.
oooooooooooooooooooooooooooooooooo
சிறுகதை விமர்சனப் போட்டி !
அள்ளிச்செல்ல அன்புடன் வாருங்கள் !!
வெற்றிபெற அட்வான்ஸ்
ஆண்டு முழுவதும் பரிசுகள் !
அள்ளிச்செல்ல அன்புடன் வாருங்கள் !!
மொத்த பரிசுத்தொகை
Minimum: Rs.12,000
Maximum: Unlimited *
[*Variable according to the number of Participants ]
வெற்றிபெற அட்வான்ஸ்
நல்வாழ்த்துகள் !!!
மேலும் முழு விபரங்களுக்கு
என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்
"//அது ஸாத்வீகமான பக்தி. ஆண்டவனே நீதான் எனக்கு எல்லாம் என்று நினைக்கும் பக்தி//" - இறைவனிடத்தில் சரணாகதியடைந்துவிட்டால் கண்டிப்பாக இறைவன் நம்மை கை விட மாட்டான்.
பதிலளிநீக்குதொடர்ந்து காஞ்சிப்பெரியவாளைப் பற்றிய செய்திகளை எழுதி வரும் தங்களுக்கு நன்றி.
ஒரே பதிவில் பல்வேறு கருத்துக்கள். ஒரே மூச்சில் படிக்க இயலவில்லை. ஒரு சம்பவத்தைப் படித்து முடித்ததும் அடுத்த சம்பவம். பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ
பதிலளிநீக்குஒரு முறை படித்து விட்டேன் - வரவும் செலவும் - மது அருந்தியன மனிதனா - சாத்வீகமான பக்தி - தண்டம் - அனைத்ட்க்ஹும் மெதுவாகப் படித்து மகிழ்ந்தேன் - அவசர வேலைகள் இருப்பதனால் - பிறகு வந்து மறுமொழி இடுகிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
எல்லோரும் [ஸ்திரிகள் உள்பட], கல்யாணம், உபநயனம் என்று அழைப்பு வந்தால், நண்பர்கள், உறவினர்கள் என எல்லோருமாகச் சேர்ந்து போகத்தான் வேண்டும் என்பதில்லை.//
பதிலளிநீக்குபிராக்டிகலாக - நடைமுறையில் கொண்டுவந்தால்
எத்தனை எத்தனை சிரமங்கள் குறையும் என எண்ணிப்பார்த்தாலே மகிழ்ச்சியளிக்கிற்து ..!
மஹான்கள் தீர்க்கதரிசிகள் !
பதிலளிநீக்குஅவர்களது செயல்பாடுகளில் .... அவர்களின் ஒவ்வொரு பார்வையிலும் கூட ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும்.
இதை உணர்ந்து செயல்பட்டால், மஹான்களது ஆசீர்வாதம் பரிபூரணமாகக் கிடைக்கும்.
மஹான்களின் பூரண ஆசி கிடைத்து விட்டால், வாழ்நாளெல்லாம் திருநாள்தானே !///////
மஹான்களின் ஆசிகளை பரிபூரணமாக அமுதமழையாக வர்ஷிக்கும் அழகான நிகழ்வுப்பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
எந்த அளவுக்கு பக்தி இருந்திருந்தால் மஹான் அந்தப்பாலை ருசித்திருப்பார் என்பதை சற்றே எண்ணிப் பாருங்கள்.
பதிலளிநீக்குஅது ஸாத்வீகமான பக்தி. ஆண்டவனே நீதான் எனக்கு எல்லாம் என்று நினைக்கும் பக்தி. ///
ஆத்மார்த்தமாக அருமையாக பக்தியின் மேன்மையை சிறப்பித்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்...
“தண்டம்” “தண்டம்”ன்னு கரிச்சுக்கொட்டராளே, அது தான் எங்களுக்கும் ரக்ஷை. பிரும்மச்சாரிகளுக்கும் ரக்ஷை. ராஜ தண்டத்துக்கு அடங்கித்தான் லோகத்திலேயே நீதி நியாயங்கள் இருந்தது.
பதிலளிநீக்குஈஸ்வர சிருஷ்டியிலே எதுவுமே உபயோகமானது தான் ...... தண்டமில்லை” என்றார்.//
பரிபாலிக்கும் ராஜசெங்கோலாய் திகழும் தண்டத்தின் பெருமையை சிறப்பாக விளக்கிய அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
மனஸ் முழுக்க துக்கம்; அது தொண்டையை வேறு அடைத்துக் கொண்டது. கண்களிலிருந்து கண்ணீர் நதியாக பெருக்கெடுத்து, இதோ கருணைக்கடல்! போய்ச் சேருவோம்!... என்று வெளியே வழிந்தோடியது.//
பதிலளிநீக்குகருணைக்கடலில் சங்கமித்து அமிர்தவாஹினியாக , அமிர்தவர்ஷமாக பிரவஹித்து வாடிய வாழ்க்கைப்பயிரை தழைக்கவைத்த கருணை மழை அனைவர் வாழ்வையும் ரட்சிக்கட்டும்..
மிக மிக அருமை ஐயா.. நன்றிகள் பல...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா...
உங்களை வல்லமை மிக்கவராக்கும் பதிவுகள்.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமது அருந்தியவனுக்குக் கிடைத்த மரியாதை எதற்கு என்று புரிய வந்த போது அவரின் தெற்க்க தரிசனம் கண்டு வியந்தேன். புகைப்பட நிபுணருக்கு ஆசி வழங்கிய விதம் பிரமிப்பை ஊட்டியது . உங்கள்வல்லமை பாராட்டிற்கு வாழ்த்துக்கள் சார்.
பதிலளிநீக்குசம்பவங்கள் மனதை நெகிழ வைத்தன...
பதிலளிநீக்குபுகைப்படக்காரர் சம்பவம் முன்பு எங்கோ கேட்டது போல் இருந்தது...
வரவு செல்வௌ குறித்த அமுதமொழி அனைவரும் பின்பற்ற வேண்டியது..
Great post.thx for sharing
பதிலளிநீக்குசெலவு என்று படிக்கவும்..
பதிலளிநீக்கு//எல்லோரும் [ஸ்திரிகள் உள்பட], கல்யாணம், உபநயனம் என்று அழைப்பு வந்தால், நண்பர்கள், உறவினர்கள் என எல்லோருமாகச் சேர்ந்து போகத்தான் வேண்டும் என்பதில்லை.//
பதிலளிநீக்குசிக்கனத்துக்குனு இல்லாவிட்டாலும் இதை எங்க வீட்டில் பல சமயங்களில் கடைப்பிடித்திருக்கிறோம்.
எல்லா சம்பவங்களுமே மிக அருமை. மனதைத் தொட்டது.
பதிலளிநீக்குஎனக்கு ஒருசில விதங்களில் செலவைக் குறைக்கலாம் என்று தோன்றுகிறது. //
பதிலளிநீக்குநல்ல யோசனை.
//மஹான்கள் தீர்க்கதரிசிகள் !
அவர்களது செயல்பாடுகளில் .... அவர்களின் ஒவ்வொரு பார்வையிலும் கூட ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். //
உண்மை.
//ஆண்டவனே நீதான் எனக்கு எல்லாம் என்று நினைக்கும் பக்தி.//
அருமையான பகதி புகைப்படக்காரர் பக்தி.
//தன்னை மறுபடி அணைத்துக் கொண்ட நண்பனில் "காஞ்சி சாமி"யைத்தான் கண்டார். //
நெகிழ வைத்த நிகழ்ச்சி. கருணைகடல் கருணையை என்ன சொல்வது!
அருமையான் பகிர்வுகள் பகிர்ந்த உங்களுக்கு வாழ்த்துக்கள், நன்றிகள்.
அனைத்து சம்பவங்கள் நெஞ்சம் தொட்ட செய்திகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குஉபநயனம்,திருமணங்களுக்கு எல்லோரும் போகவேண்டியதில்லைதான் ஆனால்குடும்பஸஹிதம் என்றுபத்திரிகையில்போடுகிறோம் பெரியவாள் நல்லதாகத்தான் கூறுகிறார்.ஆனாலும் ஆடம்பரங்கள்தான் அதிகமாககிவருகிறது.நடுத்தரகுடும்பங்கள்கூட இதில் விதிவிலக்கு அல்ல.
பதிலளிநீக்குகுடிமகனையும் அவன் தூஷித்ததையும் பொருட்படுத்தாமல் அவனுக்கு உபசாரம் செய்ய சொல்கிறார்.அவனால் பல உயிர்கள் காப்பாற்றப்படபோகிறது என்பதைதன் ஞானதிருஷ்டியால் அறிந்து என்னஒருதிருவிளையாடல் நன்றி
பதிலளிநீக்குநாம் தினமும் ஸ்வாமிக்கு கூட நைவேத்யத்துக்கு மிகசூடான அன்னத்தை வைத்துவிடுகிறோம் .இது போன்ற தவறுகளைசெய்யக்கூடாது என்பதும் மஹாபெரியவாளின் கருத்து.
பதிலளிநீக்குதண்டம் அபர தண்டம்,நாம் அன்றாடவாழ்வில் அடிக்கடி பயன்படுத்தும்வார்த்தைகள் ஆனல் பெரியவாள் கையில் உள்ள தண்டம் எப்படிபட்டது உபயோகமானது என்பதை விலக்கிய சம்பவம் அருமை
பதிலளிநீக்குஈஸ்வர சிருஷ்டியிலே எதுவுமே உபயோகமானது தான் ...... தண்டமில்லை” என்றார்.
பதிலளிநீக்குதண்டம் பற்றி இவன் ஏற்கெனவே ஒரு பதிவு போட்டேனே நினைவிருக்கா?VGK
ஈஸ்வர சிருஷ்டியிலே எதுவுமே உபயோகமானது தான் ...... தண்டமில்லை” என்றார்.
பதிலளிநீக்குதண்டம் பற்றி இவன் ஏற்கெனவே ஒரு பதிவு போட்டேனே நினைவிருக்கா?VGK
மஹான்கள் தீர்க்கதரிசிகள் !
பதிலளிநீக்குஅவர்களது செயல்பாடுகளில் .... அவர்களின் ஒவ்வொரு பார்வையிலும் கூட ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும்.
இதை உணர்ந்து செயல்பட்டால், மஹான்களது ஆசீர்வாதம் பரிபூரணமாகக் கிடைக்கும்.
என்ன செய்வது ?
எத்தனை முறை பெரியவாவின் மகிமைகளை அருகில் இருந்து நேரில் கண்ட பிறகும் அவரின் செய்கைகளுக்கு காரணம் கேட்பதை மட்டும் நிறுத்தியதாகத் தெரியவில்லை.
மிக மிக அருமை ஐயா.. நன்றிகள் பல...
பதிலளிநீக்கு//ஈஸ்வர சிருஷ்டியிலே எதுவுமே உபயோகமானது தான் ...... தண்டமில்லை// திரும்பத் திரும்ப அசை போட்டு ஆயிரம் அர்த்தங்கள் தரும் வார்த்தைகள்!!
பதிலளிநீக்குமது அருந்தியவனாலும் உயிர்கள் காப்பாற்றப்படப் போகிறது என்பதை முன்கூட்டி அறிந்த ஞானி அவர். பிரயாணத்திற்கு
பதிலளிநீக்குதமக்கு சிலவாகும் பணத்தை கல்யாணத்திற்கு உபயோகமாகக்
கொடுக்கும்படி சொன்னது. எவ்வளவு உபயோகமான விஷயம்.
தண்டம் எப்படிப்பட்ட வியாக்யானம்? நல்ல விஷயங்களை
அறிய முடிந்ததில் ஸந்தோஷம்.அன்புடன்
அன்பின் வை.கோ
பதிலளிநீக்குவரவும் செலவும் - பதிவு - சிறியதாக இருந்தாலும் அருமை அருமை - எப்படி சிக்கனம் பிடிக்கலாம் - எவ்வாறு அதனைப் பயன் படுத்தலாம் - என விளக்கியமை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் வை.கோ - மது அருந்தியவன் மனிதனா - பதிவு அருமை - நன்று -
பதிலளிநீக்குசெயல்பாடுகளில் .... அவர்களின் ஒவ்வொரு பார்வையிலும் கூட ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும்.
இதை உணர்ந்து செயல்பட்டால், மஹான்களது ஆசீர்வாதம் பரிபூரணமாகக் கிடைக்கும்.
மஹான்களின் பூரண ஆசி கிடைத்து விட்டால், வாழ்நாளெல்லாம் திருநாள்தானே !
அவசர உதவி வேண்டும் போது - உடனடியாக உதவி செய்யும் - மது உண்டு பெரியவாளைத் தூற்றியவர் தான். கடல் அலைகளால் கவரப் பட்ட மூதாட்டிகளைக் காப்பாற்றியவரும் அவரே ! ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா திருவடிகள் சரணம் .
பதிவு நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் வை.கோ - சாத்வீகமான பகுதி - பதிவு நன்று நன்று - சூடான பாலினை ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் புகைப் படத்தின் முன்பு வைத்து விட்டு பெரியவாளைத் தரிசிக்க அவசர அவசரமாக வருகிறார்.
பதிலளிநீக்குபுகைப் படக் காரர் வைத்த சூடான பால் மகாப் பெரியவாளின் நாக்கினைப் பொசுக்கி விட்டது. செய்தி அறிந்த புகைப்படக் காரர் -சாஷ்டாங்கமாக மஹானின் காலில் விழுந்து, “பிரபோ என்னை மன்னியுங்கள்” என்று கதறினார்.
எந்த அளவுக்கு பக்தி இருந்திருந்தால் மஹான் அந்தப்பாலை ருசித்திருப்பார் என்பதை சற்றே எண்ணிப் பாருங்கள்.
அது ஸாத்வீகமான பக்தி. ஆண்டவனே நீதான் எனக்கு எல்லாம் என்று நினைக்கும் பக்தி.
எங்கோ எப்பொழுதோ எதிலோ படித்ததை நினைவில் நிறுத்தி பதிவாக எழுதியமை நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் வை.கோ - தண்டம் பதிவு அருமை .
பதிலளிநீக்குஈஸ்வர சிருஷ்டியிலே எதுவுமே உபயோகமானது தான் ...... தண்டமில்லை” என்றார். - கூறீயது ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளே தான்.
நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் வை.கோ
பதிலளிநீக்குஅன்னபூரணி இருக்கும் இடத்தில், அன்னத்துக்குக் குறைவேது? - பதிவு அருமை. தற்கொலை செய்ய சிந்தித்திருந்தவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப்பெரியவாளின் அருளினால் மனம் மாறுகிறார்.
தன்னை மறுபடி அணைத்துக் கொண்ட நண்பனில் "காஞ்சி சாமி"யைத்தான் கண்டார்.
25 வருஷத்துக்குப்பின் தன் பெண்ணுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்தார். அப்போது வாசலில் ரதயாத்திரையாக வந்த பெரியவா விக்ரஹத்துக்குத் தன் கண்ணீரைக் காணிக்கையாக செலுத்தினார்.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மாப் பெரியவாளின் கருணை மழை அனைவருக்கும் கிடைக்கும்.
பதிவு நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
மஹான்கள் தீர்க்கதரிசிகள் !அவர்களது செயல்பாடுகளில் .... அவர்களின் ஒவ்வொரு பார்வையிலும் கூட ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். இதை உணர்ந்து செயல்பட்டால், மஹான்களது ஆசீர்வாதம் பரிபூரணமாகக் கிடைக்கும். மஹான்களின் பூரண ஆசி கிடைத்து விட்டால், வாழ்நாளெல்லாம் திருநாள்தானே !//
பதிலளிநீக்குஉண்மைதான் ஐயா! பொக்கிஷமான பதிவுகலைப் ப்கிர்ந்துவரும் தங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்!
ரயில்காரனுக்கும், பஸ்காரனுக்கும் கொடுப்பதை கலியாணம் செய்கிறவருக்கு கொடுக்கலாம் - நல்ல யோசனை. ஆனால் வரவில்லை என்று நாளை சொல்வார்களே, என்ன செய்ய?
பதிலளிநீக்குபெரியவாளின் தீர்க்க தரிசனம் வியப்பைத் தருகிறது.
தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தவருக்கு 'காஞ்சி சாமி' செய்த உபகாரத்தை சொல்ல வார்த்தைகள் எது?
தண்டம் விளக்கம் அருமை! புகைப்படக்காரருக்கு அருளியது கண்ணீர் வரவழைத்தது! அருமையான பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்கு" தன்னை மறுபடி அணைத்துக் கொண்ட நண்பனில் "காஞ்சி சாமி"யைத்தான் கண்டார். " மனதைத் தொட்டது.
பதிலளிநீக்குமஹான்களின் பூரண ஆசி கிடைத்து விட்டால், வாழ்நாளெல்லாம் திருநாள்தானே
பதிலளிநீக்குamam.
சாஷ்டாங்கமாக மஹானின் காலில் விழுந்து, “பிரபோ என்னை மன்னியுங்கள்” என்று கதறினார்
padikum enakke kannil thanni varukirathu. Avarukku eppadi irunthirukkum?
ஈஸ்வர சிருஷ்டியிலே எதுவுமே உபயோகமானது தான் ...... தண்டமில்லை” என்றார்.
aha haa25 வருஷத்துக்குப்பின் தன் பெண்ணுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்தார். அப்போது வாசலில் ரதயாத்திரையாக வந்த பெரியவா விக்ரஹத்துக்குத் தன் கண்ணீரைக் காணிக்கையாக செலுத்தினார்.
ahaha.
யார் யாருக்கு என்ன வேண்டுமோ அதைக் கொடுப்பவர்தான் கலியுகக் கடவுள்.
பதிலளிநீக்குபோட்டோகிராபருக்கு என்ன ஒரு அதிர்ஷ்டம் பெரியவா தரிசனமும் ஆசிகளும் கிடைச்சுடுச்சே. ஆத்மார்த்தமான பக்தி இருந்தா எல்லாமே சாத்தியம்தான்
பதிலளிநீக்கு// இதனால் விருந்துச் சாப்பாடு என்று ஒரு செலவினம் குறைவது ஒரு பக்கம்; அவசியமான செலவும் சீரும் செய்யக் கல்யாணம் பண்ணுகிறவனுக்கு வரவினம் வலுப்பது இன்னொரு பக்கம்.//
பதிலளிநீக்குபூனைக்கு யார் மணி கட்டறதுன்னுதான் தெரியல.
// இவற்றை கவனித்த ஸ்வாமிகள், மேனேஜரைப் பார்த்து மெள்ள புன்னகைத்தார். உடனே அவர் ஓடோடி வந்து பெரியவாளை நமஸ்கரித்தார். மஹான்கள் தீர்க்கதரிசிகள் !//
ம்ம் யாராவது தப்பு பண்ணினா நமக்கு கோவம் வந்துடறதே (என்னமோ நாம தப்பே பண்ணாத மாதிரி) இதெல்லாம் படிச்சாவது திருந்துவோமா?
// எந்த அளவுக்கு பக்தி இருந்திருந்தால் மஹான் அந்தப்பாலை ருசித்திருப்பார் என்பதை சற்றே எண்ணிப் பாருங்கள்.//
ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர
// ஈஸ்வர சிருஷ்டியிலே எதுவுமே உபயோகமானது தான் ...... தண்டமில்லை” என்றார்.//
புரியத்தான் காலம் ஆகுது.
// 25 வருஷத்துக்குப்பின் தன் பெண்ணுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்தார். அப்போது வாசலில் ரதயாத்திரையாக வந்த பெரியவா விக்ரஹத்துக்குத் தன் கண்ணீரைக் காணிக்கையாக செலுத்தினார்.//
அவர் அடி சேர்ந்தால் பஞ்சம் என்றும் இல்லை.
Jayanthi Jaya September 26, 2015 at 3:39 PM
நீக்குவாங்கோ ஜெயா, வணக்கம்மா.
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஜெயா.
பிரியமுள்ள கோபு அண்ணா
நல்ல நல்ல சம்பவங்க எங்களுக்கும் படிச்சு சந்தோசபட வைக்கிறீங்க.
பதிலளிநீக்குஈஸ்வர சிருஷ்டியில் எதுவுமே உபயோகமானதுதான். தண்டமில்லை. காரணமில்லாம காரியமில்ல. ஏதோ காரணத்திற்காகத்தான் இப்படில்லாம் நடக்கிறதுன்னு தெளிவு வந்துட்டா நல்லது.
பதிலளிநீக்குஈஸ்வர சிருஷ்டியிலே எதுவுமே உபயோகமானது தான் ...... தண்டமில்லை” // உபயோகிக்கத்தெரியாத மனிதர்கள்தான் உண்டு..
பதிலளிநீக்கு//என்னப்பா இவ்வளவு தூரம்? எங்க வந்தே? பாத்து எத்தனை வருஷமாச்சு!...." என்று வாஞ்சையும், நட்பும் ஒருசேர ஒரு குரல் அவருக்குப் பின்னாலிருந்து கேட்டது; தோளைச் சுற்றி அணைப்பாக ஒரு கரமும் விழுந்தது. திரும்பிப் பார்த்தால்.....பெரியவா அனுப்பிய தூதர் போல் இவருடைய பால்ய நண்பர் நின்று கொண்டிருந்தார்!//
பதிலளிநீக்குதீர்க்கதரிசியன்றோ! மெய் சிலிர்க்கிறது!
எல்லோரும் [ஸ்திரிகள் உள்பட], கல்யாணம், "உபநயனம் என்று அழைப்பு வந்தால், நண்பர்கள், உறவினர்கள் என எல்லோருமாகச் சேர்ந்து போகத்தான் வேண்டும் என்பதில்லை. பிரயாணத்திற்குச் செலவிட்டு ரயில்காரனும், பஸ்காரனும் வாங்கிக்கொள்வதில் என்ன பிரயோஜனம்? அதையெல்லாம் சேர்த்து வைத்துக் கல்யாணம் பண்ணுகிறவனுக்கு ரொக்கமாக அனுப்பி விட வேண்டும்." - என்ன ஒரு கட்டளை, எக்காலத்துக்கும் (அதுவும் இக்காலத்துக்கு) பொருந்துகிற மாதிரி.
பதிலளிநீக்குஒருவனின் உபயோகமும், அன்பால் அமிஸ்யை பண்ணுவதை யாருக்கு அமிஸ்யை பண்ணுகிறோமோ அவர் ஏற்றுக்கொள்கிறார் என்று காட்டியதை, 'தண்டத்தைக் காட்டி எதுவும் வீணல்ல என்று உபதேசித்த விதமும், எது செய்தால் தன்னை அண்டியவனின் குறை தீருமோ அதை அருளியதைப் படிக்கப் படிக்க தெவிட்டவில்லை.
ஒரு இடுகையில் ஒன்று வீதம் 108 எழுதவேண்டும் என்று நினைத்து ஆரம்பித்த உங்களுக்கே, சம்பவங்களை விட்டுவிடக்கூடாது என்று 3-4 என்று சம்பவங்களைக் கோர்த்துக்கொடுத்துவிடலாம் என்று தோன்றி, அப்படி எழுதியுள்ளதைப் பாராட்டுகிறேன். எக்காலத்திலும் மீண்டும் மீண்டும் படித்து இன்புறலாம்.
'நெல்லைத் தமிழன் September 28, 2016 at 4:24 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//ஒரு இடுகையில் ஒன்று வீதம் 108 எழுதவேண்டும் என்று நினைத்து ஆரம்பித்த உங்களுக்கே, சம்பவங்களை விட்டுவிடக்கூடாது என்று 3-4 என்று சம்பவங்களைக் கோர்த்துக்கொடுத்துவிடலாம் என்று தோன்றி, அப்படி எழுதியுள்ளதைப் பாராட்டுகிறேன்.//
ஆமாம். நான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளை வேண்டிக்கொண்டு மிகவும் சிம்பிளாகத்தான் ஆரம்பித்து, ஒவ்வொரு பதிவிலும் ஒரு விஷயம் வீதம் என்று மட்டுமே வெளியிடலாம் என்று நினைத்துத்தான் துவங்கினேன்.
அது ஏதோ போகப்போக அவரின் அருளால், ஒவ்வொரு பகுதியும் பல சம்பவங்களைப் பற்றி மேலும் மேலும் சொல்ல வைத்து மிகவும் விஸ்தாரமாக அமையும் ப்ராப்தம் அமைந்து போனது.
பிரித்துப்பிரித்துப் போட்டிருந்தால் 108 பகுதிகள் என்பது 108*4=432 பகுதிகளாகக்கூட ஆகியிருக்கும் என நினைக்கிறேன்.
இதில் எதுவும் என் செயல் அல்ல. எல்லாம் அவரின் கிருபையால் மட்டுமே வெற்றிகரமான முடிந்தது. இதில் நான் ஒரு சின்ன கருவி மட்டுமே என்பதில், எனக்கோர் சின்ன மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஇந்தப்பதிவின் ஒரு பகுதி மட்டும் நமது அன்புள்ள ஆச்சி அவர்களால் தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று 25.03.2020 வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கான இணைப்பு: https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=869398053562890
இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.