அன்புடையீர்,
அனைவருக்கும் என் அன்பான பணிவான வணக்கங்கள்
06.01.2014 திங்ட்கிழமை காலை ”வல்லமை மின் இதழ்” ஆசிரியர் அவர்களிடமிருந்து அடியேனுக்குக் கிடைத்துள்ள மின்னஞ்சல் செய்தி:
from: | vallamai editor | ||
to: | "Gopalakrishnan Vai." | ||
date: | 6 January 2014 07:42 | ||
subject: | இந்த வார வல்லமையாளர்! | ||
mailed-by: | gmail.com | ||
Signed by: | gmail.com | ||
அன்பிற்கினிய திரு கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு,
வணக்கம். வாழ்த்துகள்.
தொடர்ந்து மகாப் பெரியவர் காஞ்சி மகா முனிவர், சுவாமிகள் அருளிய பல்வேறு சுவையான செய்திகளை அனைவரும் அறியும் வகையில் பகிர்ந்து கொள்ளும் தங்கள் வல்லமையைப் பாராட்டி நம் வல்லமை குழுவில் தங்களை இந்த வார வல்லமையாளராக தேர்வு செய்திருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
தங்களுடைய கீர்த்தி மென்மேலும் வானளவு உயர எங்களுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.
இது ஒரு கௌரவ விருதேயாயினும் தங்களுடைய மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்கு வித்தாக அமையும் என்று நம்புகிறோம்.
அதற்கான அறிவிப்பு இதோ இங்கே :
தொடர்ந்து தங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். வாழ்த்துகள்.
அன்புடன்
பவள சங்கரி
’வல்லமை’
மின் இதழ் ஆசிரியர் அவர்களுக்கு அடியேனின் மனம் நிறைந்த
இனிய அன்பு நன்றிகள்.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தினால் மட்டுமே கிடைத்துள்ள இந்த மகிழ்ச்சியான செய்தியினை தங்கள் எல்லோருடனும் இங்கு பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
ஏற்கனவே இதே கெளரவ விருதினைப் பெற்றுள்ள ஓர் சாதனையாளரைப் பற்றி, நானே இதே என் தொடரின் பகுதி-65/1/4 என்பதில் எழுதியுள்ளேன்.
அதன் இணைப்பு இதோ தங்களின் அன்பான பார்வைக்காக:
வல்லமை மின் இதழில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் இதோ:
இந்த வார வல்லமையாளர்
- Monday, January 6, 2014, 6:37
- இலக்கியம், கட்டுரைகள்
- Add a comment
திவாகர்
இன்னொரு புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற வகையில் இந்த புதிய ஆண்டையும் புதுமையாகவே எதிர்கொள்வோம். புது விஷயங்களையும் தெரிந்து கொள்வோம்.
அப்படி ஒரு புது விஷயத்தை பழைய கால நிகழ்விலிருந்து இன்றுதான் படிக்க நேர்ந்தது. உங்களுடன் அந்த புதிய விஷயத்தை புதுமையாக இந்தப் புது வருட ஆரம்பத்தில் பகிர்ந்துகொள்வது கூட எனக்கு என்னவோ புதுமையாகத்தான் படுகின்றது.
அப்படி ஒரு புது விஷயத்தை பழைய கால நிகழ்விலிருந்து இன்றுதான் படிக்க நேர்ந்தது. உங்களுடன் அந்த புதிய விஷயத்தை புதுமையாக இந்தப் புது வருட ஆரம்பத்தில் பகிர்ந்துகொள்வது கூட எனக்கு என்னவோ புதுமையாகத்தான் படுகின்றது.
இறைவன் மீது காவியம் பாடுவோர் பலர், மனிதனை மையமாக வைத்து காவியம் பாடுவோர் பலர். சின்னஞ்சிறு குயிலையும் கூட பாடுபொருளாக்கி காவியம் படைத்தவர் மகாகவி பாரதி. கடவுள், குயில், மனிதன் எல்லாமே நமக்குப் பழைய சங்கதிதான்.
ஆனால் யாரேனும் எருமை மீது காவியம் பாடுவதைக் கேட்டிருப்போமா.. அப்படிக் கேள்விப்பட்டால் அது புதுமையான விஷயம்தானே..
ஆனால் யாரேனும் எருமை மீது காவியம் பாடுவதைக் கேட்டிருப்போமா.. அப்படிக் கேள்விப்பட்டால் அது புதுமையான விஷயம்தானே..
இந்தப் புதிய விஷயத்தை தம் பதிவின் மூலம் வெளிப்படுத்திய திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு முதற்கண் என் நன்றி. இதோ அந்தச் செய்தியின் வடிவம்.
அவர் பதிவின்படி http://gopu1949.blogspot.in/2014/01/105-1-2.html அவர் எழுத்து மூலமாகத் தருகிறேன்.
//’ஷாஹூஜின்னு ஒரு ராஜா. அவர் காலத்துல, ‘குட்டிக்கவி’ன்னு ஒருத்தர் இருந்தார். பெயர்ல மட்டுமில்ல, வயசுலேயும் அப்ப அவர் குட்டியாக குழந்தையாத்தான் இருந்தார்.
ஷாஹூஜிக்கு அப்புறம் அவருடைய பிள்ளை ப்ரதாப ஸிம்ஹன் ராஜாவானான். ராஜ்ய நிர்வாஹத்தைத் திறம்பட நடத்தி வந்த முக்ய அதிகாரிகளான நானாஜி ப்ரபு, சந்தர பானு, ஆனந்தராயர் முதலான பெரியவர்கள் கால க்ரமத்தில் காலமாகிவிட்டார்கள். நல்லவனான ப்ரதாப ஸிம்ஹன் துரதிருஷ்டவசமாக கல்வி, கேள்விகள் இல்லாத சில சில்லறை ஆஸாமிகளின் வசப்பட்டுவிட்டான். அவர்களை ஆலோசகர்களாக வைத்துக்கொண்டு நிர்வாகம் செய்ததில் ஆட்சி சீர்குலைந்து, அவனது சோணாட்டு மக்கள் பலவிதத்தில் கஷ்டப்படும்படி ஆயிற்று.
அப்போதுதான் ராஜாவை தைர்யமாக இடித்துரைக்க வேண்டுமென்று குட்டிகவி ஒரு காவியம் எழுதப் புறப்பட்டார். இப்போது ‘குட்டி’யாக இல்லாமல் நல்ல வயஸு வந்தவராகவே அவர் ஆகியிருந்தார்.
மன்னனை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று யோசித்த குட்டிகவி, இக்காலத்தில் satire என்றும் irony என்றும் சொல்கிறார்களே… மறைமுகமாக, ஹாஸ்ய ரஸத்தோடு குத்திக்காட்டி எழுதுகிறார்களே… அப்படி ஒரு காவியம் எழுதுவது என்று ஆரம்பித்தார். இப்படி எழுதுவதை ‘சலோக்தி’ என்பார்கள். வெளியிலே ஒன்றைச் சொல்லி உள்ளே இன்னொன்றை உணர்த்துகிற முறையையும் கையாண்டார். இந்த அணிக்கு ‘அந்யாப தேசம்’ என்று பெயர்.
இக்காலத்திலே கார்ட்டூன் என்று போடுகிறார்கள். அதில் மநுஷர்களையே மிருகங்கள் மாதிரி கூடக் கேலியாகச் சித்திரிக்கிறார்கள். குட்டிகவி வார்த்தையாலேயே கார்ட்டூன் போட்டார்.
அந்த நூல் இப்போதும் இருக்கிறது. நூறு ச்லோகம் கொண்ட அதற்கு ‘மஹிஷ சதகம்’ என்று பெயர். எருமையை ஸ்தோத்ரம் பண்ணும் நூறு பாட்டு என்று புரிகிற தோல்லியோ? தலைப்பிலேயே பரிஹாஸமாக இடித்துச் சொல்லுதல்!
‘மஹிஷி’ என்று ராணிக்குப் பெயர் இருக்கிறது. ‘பட்டமஹிஷி’ என்கிறோம். ஆனால் ராஜாவுக்கு ‘மஹிஷன்’ என்று பேரில்லை. ‘மஹி’ என்றால் பூமி என்பதை வைத்து ‘மஹீசன்’ ‘மஹிபதி’ என்றுதான் பெயர்கள் இருக்கின்றன.
குட்டிகவி, மஹிஷ சதகம் பண்ண ஆரம்பித்து விட்டார். அவர் ‘சதகம்’ பண்ணத்தான் நினைத்தாரோ அல்லது ‘ஸாஹஸ்ரீ’யாக ஆயிரம் ச்லோகம் பண்ண நினைத்தாரோ? கொஞ்சம் கொஞ்சமாக ஸ்லோகம் பண்ணிப் பண்ணி, அவற்றை ராஜாவுக்கே அனுப்பிவைத்தார்.
அதன் ஸப்ஜெக்ட்டைச் சுருக்கமாகச் சொன்னால்… அஸத்தானவர்களைத் தன் பையில் வைத்துக்கொண்டு, அவர்களுக்கு ‘ஆமாம் பூசாரி’ போடுகிற ஒரு ராஜாவுக்கு ஸேவகம் செய்து பிழைப்பதைவிட, ஒரு எருமைக்கடாவை வைத்துக் கொண்டு, அதனால் ‘உழுதுண்டு வாழ்வதே மேல்’ என்பதுதான்! உழுதுண்டு வாழ்வதற்காக எதை ஏரிலே பூட்டிப் ‘பின் செல்கி’றோமோ, அந்த எருமையையே ‘தொழுது’ ஸ்துதிப்பதாகத்தான் ஸ்லோகங்கள் செய்தார்.
அதிலே இரண்டே இரண்டின் தாத்பர்யத்தை மட்டும் சொல்கிறேன்.
”மஹா பண்டிதரான ஸ்ரீதரர் தம் வித்யையைக் காசுக்கு விற்கிறார். ஷட்-தர்சனம் கற்ற அம்பு தீக்ஷிதர், சோற்றுக்குத் தாளம் போடுகிறார். ஷட்-தர்சனமாவது… சை! க்யாதி வாய்ந்த குட்டிகவியுங்கூட துஷ்ட தனிகரின் வாசலில் காத்துக் காத்து ஓய்ந்து போய்த் தூங்கி விழுந்துவிட்டார். இத்தனையும் எதனால்? மஹிஷேச்வரனான எருமைக் கடவுளான – உன்னை அநுஸரித்து ஆச்ரயிக்காத துர்பாக்யத்தின் பலன்தான்!” என்று ஒரு ஸ்லோகம்.
இன்னொன்றில், ”எருமையே! ராப் பகலாக நிலத்தை உழுது உழுது ஏன் கஷ்டப்படுகிறாய்? இப்போது ராஜஸபையில் இருப்பவர்களோடு நீயும் சேர்ந்து ஸுகஜீவனம் பெறலாமே!
‘எனக்கு அறிவில்லையே, ஸாமர்த்யமில்லையே!’ என்றெல்லாம் வீணுக்கு அலட்டிக் கொள்ளாதே! தற்போதைய ஸபாக்காரர்களோடு பார்த்தால் உன்னை ப்ருஹஸ்பதி என்றே சொல்லணுமாக்கும்!” என்கிறார்.
இவர் அனுப்ப அனுப்ப ஸ்லோகங்களைப் பார்த்துக் கொண்டே போன ராஜாவுக்கு – அவனும் உள்ளூர நல்ல ஸ்வபாவமுள்ளவன் என்றேனே… அதனால், மனஸிலே நன்றாகத்தைத்து, தான் பண்ணுகிறது தப்பு என்று உணர்ந்தான்.
ராஜரீக ஹோதாவைப் பார்க்காமல் ப்ரதாப ஸிம்ஹன் குட்டிகவியிடம் போய், தனக்கு நல்லறிவு பிறந்துவிட்டதாகவும், ஞான சூன்யமான ஸ்வய நல கோஷ்டியை நீக்கிவிட்டு, விஷயமறிந்த ஸத்துக் களை ஆலோசகர்களாகப் போட்டுக்கொண்டு ஆட்சி நடத்துவதாகவும் வாக்குக் கொடுத்தான். தேசத்துக்கு உபகாரமாகத் தாம் எடுத்துக்கொண்ட காரியம் பலிதமானதில் குட்டிகவி ஸந்தோஷம் அடைந்தார்.
அதோடு, அவர் தாம் கவனம் செய்து கொண்டிருந்த பரிஹாஸ காவியத்துக்கும் ‘ஃபுல் ஸ்டாப்’ போட்டுவிட்டார். அதுவரை ஸரியாக நூறு ஸ்லோகங்கள் ஆகியிருந்ததால் ‘மஹிஷ சதகம்’ என்று அதற்குப் பெயர் கொடுத்து வைத்து விட்டார்.
‘ராஜாதான் திருந்திவிட்டானே, ஏன் அந்த ச்லோகங்களைக் கிழித்துப் போட்டிருக்கக் கூடாது?’ என்றால், ‘ராஜாவையுங்கூட ஒரு கவியானவன் அடக்கி நல்வழிக்குக் கொண்டு வரமுடியும். நாட்டை அடக்கி, ஆள்கிறவனுக்கும் மேலான சக்தியைக் கவி நிஜமாகவே பெற்றவன்’ என்பதற்கு ப்ரத்யக்ஷ நிரூபணமாக இந்தக் காவியம் இருந்து கொண்டிருக்கட்டும் என்றே கிழித்துப் போடாமல் வைத்துவிட்டார்.
வருங்காலத்தில் ஆட்சிக்கு வருபவர்களுக்கும் ஒரு பாடமாக- எச்சரிக்கையாக இருக்கட்டுமென்று வைத்துவிட்டார்.
ராஜாவும் அந்தச் சுவடிகளை confiscate பண்ணுவது, proscribe பண்ணுவது என்று பறிமுதல், தடை செய்யாததையும் இங்கே சொல்லவேண்டும்.’
ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? //
நம் காலகட்டத்தில் நம் முன்னே நடமாடிய தெய்வமான காஞ்சி மகா முனிவர் அருளிய இந்த புதுமையான செய்தியை நமக்குப் பதிவாகத் தந்த திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்வு செய்கிறோம்.
காஞ்சி மஹானின் செய்திகளையெல்லாம் தம் வலைப்பூவில் கொடுத்து வருவது பயனுள்ள விஷயம் என்பதோடு அதைப் படிக்கும் இக்கால சமுதாயத்தினர் மேலும் பயன்பெறுகிறார்கள் என்பதும் இனிமையான விஷயம்தானே.
வாழ்க அவரது உயர்ந்த பணி !!
காஞ்சி மஹானின் செய்திகளையெல்லாம் தம் வலைப்பூவில் கொடுத்து வருவது பயனுள்ள விஷயம் என்பதோடு அதைப் படிக்கும் இக்கால சமுதாயத்தினர் மேலும் பயன்பெறுகிறார்கள் என்பதும் இனிமையான விஷயம்தானே.
வாழ்க அவரது உயர்ந்த பணி !!
-oOo-
oooooooooooooooooooooooooo
சிறுகதை விமர்சனப் போட்டி !
அள்ளிச்செல்ல அன்புடன் வாருங்கள் !!
வெற்றிபெற அட்வான்ஸ்
ஆண்டு முழுவதும் பரிசுகள் !
அள்ளிச்செல்ல அன்புடன் வாருங்கள் !!
மொத்த பரிசுத்தொகை
Minimum: Rs.12,000
Maximum: Unlimited *
[*Variable according to the number of Participants ]
வெற்றிபெற அட்வான்ஸ்
நல்வாழ்த்துகள் !!!
மேலும் முழு விபரங்களுக்கு
என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்
வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமனமார்ந்த பாராட்டுகள்.
பதிலளிநீக்குதங்களுடைய இந்த புதிய விருதுக்கு, என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஐயா.
பதிலளிநீக்குதங்களுடைய காஞ்சிப்பெரியவாள் பற்றிய பழைய பதிவுகளை, இப்போது தான் படிக்க ஆரம்பித்துள்ளேன். முழுமையாக படிப்பதற்குள், நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. தொடர்ந்து படித்து இன்னும் தெரிந்துக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குமிகவும் நன்றி ஐயா.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா மென்மேலும்
பதிலளிநீக்குஉங்கள் புகழ் உலகமெலாம் பரவட்டும் !!
2014 – இல் மீண்டும் மீண்டும் மகிழ்ச்சி தரும், உற்சாகமூட்டும் செய்திகள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅன்புள்ள VGK அவர்களுக்கு! உங்கள் கருத்துரைப் பெட்டியில் ஒவ்வொரு தடவையும், எனது கருத்துரையையும் இரண்டு முறை இட வேண்டியுள்ளது. தொழில் நுட்ப சிக்கல் காரணமாக இரண்டு இரண்டாக இருப்பவற்றுள் ஒன்றினை நீக்கி விடவும்.
பதிலளிநீக்குமிகவும் தகுதியானவரைத் தேடி தகுதியான விருது
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா
தங்களைக் கௌரவித்ததன் மூலம்
பதிலளிநீக்குவல்லமையும் பெருமை கொண்டது
(கடந்த நான்கு ஆண்டுகளாக பதிவுகள்
எழுதி வந்தாலும் தங்கள் பதிவின் மூலம்தான்
வல்லமை மின்னிதழைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது )
பதிவுகளும் சாதனைகளும் கௌரவங்களும்
மேலும் மேலும் பெருக மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வல்லமையாளர் விருது பெற்ற தங்களுடைய கீர்த்தி மென்மேலும் வானளவு உயர மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநூறு ச்லோகம் கொண்ட அதற்கு ‘மஹிஷ சதகம்’ போலவே தெனாலிராமன் கதைகளில் திலகாட்ட மஹிஷபந்தனம் என்கிற நூலைக்கொண்டு ஒரு தலைகனம் பிடித்த புலவரை விரட்டிய கதை நினைவு வந்தது ..
பதிலளிநீக்குதிலம் - எள்
மகிஷ பந்தனம் - எருமைகட்ட பயன்படுத்தப்படும் கயிறு ..!
அன்புடையீர்..
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்!..
ஸ்ரீஸ்ரீஸ்ரீ பரமாச்சார்ய ஸ்வாமிகளின் தனிப்பெருங்கருணையே அன்றி வேறில்லை!..
மேலும் மேலும் புகழ் எய்துவீர்களாக!..
வாழ்த்துக்கள் ஐயா...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.....!
பதிலளிநீக்குஇனிய வாழ்த்து. மேலும்மேலும் முன்னேற இறையருள் கிட்டட்டும்.
பதிலளிநீக்குநேற்று வந்து கருத்திட்டேன். அது பதியப்படவில்லை. புரியவில்லை.
வேதா. இலங்காதிலகம்.
நீங்கள் வல்லமையாளர் ஆனதுக்கு வாழ்த்துக்கள் சார். உங்கள் புகழ் மென்மேலும் பெருக இறைவனை வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!!
மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும் சார்..
பதிலளிநீக்குதங்களின் சாதனைகள் தொடரட்டும்..
வல்லமையாளர் விருதைப் பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மேன்மேலும் பற்பல விருதுகள் தேடிவரவும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவிருதுக்கு நல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குCongratz Sir,you absolutely deserve the award :)
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா!
பதிலளிநீக்குகுழந்தையின் ஃபோட்டோ அழகோ அழகு ! ;))))) ’விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும்’ என்ற படத்தை இனி நான் என் இஷ்டப்படி பயன் படுத்திக்கொள்வேனாகும். ;))))) மிக்க நன்றி.//
பதிலளிநீக்குதங்களின் பாராட்டும் வாழ்த்தும் என் செல்ல மகளின் வாழ்வுக்கு
வழித்துணையாகட்டும் ஐயா ! google மாமாவின் உத்தரவிற்கு இணங்கி விளக்கேற்றும் படத்திற்கு விடுதலை கொடுத்துள்ளேன் அவ்வளவு தான் :)))நீங்கள் பயன்படுத்தினால் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்று தான் நினைக்கின்றேன் .வாழ்த்துக்கள் ஐயா மிக்க நன்றி இனிய நற் கருத்திற்கு .
'வல்லமை தாராயோ இந்த நானிலம் பயனுற வாழ்வதற்கே'
பதிலளிநீக்குஎன்று பாரதி சிவசக்தியிடம் கேட்டுப் பெற்றதை கேட்காமலேயே நற்செயல்களால் தாங்கள் பெற்றமைக்கு மனம் கனிந்த வாழ்த்துககள் சார்:)
இந்த வார வல்லமையாளர்.....
பதிலளிநீக்குமிக்க சந்தோஷம் வை.கோ. ஜி!
தங்களுடைய கீர்த்தி மென்மேலும் வானளவு உயர எங்களுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள். //
பதிலளிநீக்குநாங்களும் அவ்வாறே வாழ்த்துகிறோம்.
உங்கள் கீர்த்தி மேன்மேலும் உயர்ந்து கொண்டே போகவேண்டும்.
வாழ்க வளமுடன்.
//காஞ்சி மஹானின் செய்திகளையெல்லாம் தம் வலைப்பூவில் கொடுத்து வருவது பயனுள்ள விஷயம் என்பதோடு அதைப் படிக்கும் இக்கால சமுதாயத்தினர் மேலும் பயன்பெறுகிறார்கள் என்பதும் இனிமையான விஷயம்தானே.
வாழ்க அவரது உயர்ந்த பணி !!//
சரியாக சொன்னார்கள். உங்கள் பணி உயர்ந்த பணிதான்.
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
வல்லமையுடையவர்களின் சாதனைகளுக்கு வானமே எல்லை!
பதிலளிநீக்குஅன்புடையவர்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சாதனைகளை மேலும் மேலும் விரிவாக்கும்!
வல்லமையாளருக்கு என் அன்பு வாழ்த்துக்கள்!!
வல்லமை தாராயோ
பதிலளிநீக்குஇந்த வையகம் பயனுற என்றான் பாரதி
சுவையும் நகைச்சுவையும்கலந்து
அனைவரையும் கவர்ந்திழுக்கும் உங்களின் பதிவுகள்
பாராட்டுவோரின் கவனத்தை ஈர்க்காமல் இருக்கமுடியாது.
//வல்லமையாளரா ? நானா? என்னால் நம்பவே முடியவில்லையே !// எங்களுக்கு நம்புவதில் ஒரு கஷ்டமும் இல்லை!! உங்களால் இந்த விருதுக்குப் பெருமையே!!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!!
வல்லமைஉடையவருக்கு வல்லமையாளர் விருது மிகப் பொருத்தமே.தாங்கள் மேலும் பல விருதுகள் பெற பூஜ்யஸ்ரி மஹாபெரியவாளை பிரார்த்திக்கிறேன்
பதிலளிநீக்குவல்லமை வல்லமையாளரைத் தேடி வருகிரது. அப்போதுதானே ஸமத்துவம் ஏற்பட்டு வல்லமையாளர் யார் என்று இன்னும் நிரூபிக்க ஆர்வம் ஏற்படும். பிறருக்கும் தெரியும். எல்லாம் ஆசாரியஸ்வாமிகளின் அருட்கடாக்ஷம். நன்றி .ஆசிகள் அன்புடன்
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ
பதிலளிநீக்குவல்லமை இதழின் இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி -
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளை நாளும் மனதில் நினைத்து -பதிவுகளில் அவர்களது பெருமையையும் -செயல்களையும் விளக்கமாக எழுதி - பல்வேறு இரசிக மக்களை மகிழ வைக்கும் தங்களின் அரிய செயல் தங்களை வல்லமை இதழின் இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்திருக்கிறது.
மிக்க மகிழ்ச்சி - எங்களீன் மனங்கனிந்த நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தினால் மட்டுமே கிடைத்துள்ள இந்த மகிழ்ச்சியான செய்தியினை தங்கள் எல்லோருடனும் இங்கு பகிர்ந்து கொள்வதி0ல் அனைவருமே பெரு மகிழ்ச்சியடைகிறார்கள் .
யாரேனும் எருமை மீது காவியம் பாடுவதைக் கேட்டிருப்போமா.. அப்படிக் கேள்விப்பட்டால் அது புதுமையான விஷயம்தானே..
இந்தப் புதிய விஷயத்தை தம் பதிவின் மூலம் வெளிப்படுத்திய திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு முதற்கண் நன்றி. இதோ அந்தச் செய்தியின் வடிவம். .
தங்களீன் நீண்ட பதிவினை அப்படியே பிரசுரம் செய்த வல்லமை இதழிற்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தினால் மட்டுமே கிடைத்துள்ள இந்த மகிழ்ச்சியான செய்தியினை தங்கள் எல்லோருடனும் இங்கு பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.// பாராட்டுகள் ஐயா! மிகவும் மகிழ்வளிக்கும் செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குஇந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதற்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா!!
பதிலளிநீக்குவல்லமையாளருக்கு வல்லமையாளர் விருது வழங்கப்படுவதில் அதிசயம் ஏதுமில்லை. அந்த அளவுக்குத் திறமையானவர் தாங்கள். பற்பல படைப்புகளில் தங்கள் திறமையை சிறப்புற இனங்காட்டியதோடு பின்னூட்டங்களைக் கவனித்துப் பாராட்டுவதிலும் வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டிருக்கும் தங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் வை.கோ.சார். மென்மேலும் தொடரட்டும் சிறப்புகள்.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி . நல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஒரு வல்லவருக்கு கிடைத்த மிக சரியான தேர்வு
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயஅ
புதியவிருதுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஒரு டவுட்டு. வாழ்த்துகள் னு சொல்லணுமா வாழ்த்துக்கள்னு சொல்லணுமா?? எப்படில்லாம் டவுட் கேக்கறேன்?????
பதிலளிநீக்குபூந்தளிர் August 25, 2015 at 10:09 AM
நீக்குவாங்கோ, வணக்கம்மா.
//புதியவிருதுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.//
மிகவும் சந்தோஷம். மிக்க நன்றிம்மா.
//ஒரு டவுட்டு. வாழ்த்துகள் னு சொல்லணுமா வாழ்த்துக்கள்னு சொல்லணுமா?? எப்படில்லாம் டவுட் கேக்கறேன்?????//
’வாழ்த்துகள் ’ என்பதே சரியான சொல். அதுபோல ‘பாராட்டுகள்’ என்பதே சரியான சொல்.
’வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்’ ஆகியவை தவறானவை. இரண்டு வார்த்தைகளுக்கும் ‘க்’ என்ற எழுத்து வரக்கூடாது.
பல நாட்கள் நானும் இவற்றை தவறாகவே எழுதி வந்துகொண்டிருந்தேன். பிறகுதான் ஓர் தமிழ் அறிஞர் மூலம் இந்தத்தவறுகளை நான் தெரிந்துகொண்டு, என்னை நானே திருத்திக்கொண்டேன். இதெல்லாம் மிகவும் சகஜம் தான். சந்தேகங்கள் கேட்க வெட்கப்படவே வேண்டாம். :)
// நம் காலகட்டத்தில் நம் முன்னே நடமாடிய தெய்வமான காஞ்சி மகா முனிவர் அருளிய இந்த புதுமையான செய்தியை நமக்குப் பதிவாகத் தந்த திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்வு செய்கிறோம். //
பதிலளிநீக்குஅவர் அருள் உங்களுக்குக் கிட்டாமல் இருக்குமா?
வாழ்த்துக்கள்.
Jayanthi Jaya September 26, 2015 at 3:43 PM
நீக்குவாங்கோ ஜெயா, வணக்கம்மா.
**நம் காலகட்டத்தில் நம் முன்னே நடமாடிய தெய்வமான காஞ்சி மகா முனிவர் அருளிய இந்த புதுமையான செய்தியை நமக்குப் பதிவாகத் தந்த திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்வு செய்கிறோம்.**
- வல்லமை மின் இதழ் ஆசிரியர் குழு
//அவர் அருள் உங்களுக்குக் கிட்டாமல் இருக்குமா? வாழ்த்துகள்.//
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, ஜெ.
பிரியமுள்ள கோபு அண்ணா
அதில இன்னா டவுட்டுகீது நீங்க வல்லமயாருங்கதா நோ டவுட்டு
பதிலளிநீக்குதகுதியானவருக்கு தான் விருது கொடுத்து கௌரவித்திருக்கிறார்கள்
பதிலளிநீக்கு. எல்லாம் அந்த காஞ்சி மஹானின் கருணைதான்.
இந்தப் பதிவ படிக்கிறதுக்கு முன்னாடியே நீங்க வல்லமையாளர்தான்கிறது எனக்குத் தெரியுமே!!! வாழ்த்துகள் வாத்தியாரே..
பதிலளிநீக்கு//ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தினால் மட்டுமே கிடைத்துள்ள இந்த மகிழ்ச்சியான செய்தியினை தங்கள் எல்லோருடனும் இங்கு பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.// பாராட்டுகள் ஐயா! மிகவும் மகிழ்வளிக்கும் செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்கு//