என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 25 ஜனவரி, 2014

VGK 01 / 02 / 03 ] SECOND PRIZE WINNER ”ஜாங்கிரி”




’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்

கதையின்  தலைப்பு 

VGK 01 ] ஜா ங் கி ரி



மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,
கணிசமான எண்ணிக்கையில் பலரும், 
மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 
வெகு அழகாக விமர்சனங்கள் 
எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 

அவர்கள் அனைவருக்கும் என் 
மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 

நடுவர் அவர்களால் பரிசுக்குத் 
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 
விமர்சனங்கள் மூன்று. 


 

 


இந்தப் பரிசுகளை வென்றுள்ள மூவருக்கும் 
நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள். 

   


மற்றவர்களுக்கு:  
BEST OF LUCK NEXT TIME !



    

இரண்டாம் 
பரிசினை 
வென்றுள்ளவர்:-




திருமதி 

’ஷக்தி ப்ரபா ’

அவர்கள்


minminippoochchigal.blogspot.in
'மின் மினிப் பூச்சிகள்’



மனம் நிறைந்த 
பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.




இரண்டாம் பரிசினை வென்றுள்ள விமர்சனம்:


அருமையான சிறுகதை எங்களுக்கு வழங்கியமைக்கு வாழ்த்துக்கள்.

நாகராஜன் என்ற கதாபாத்திரத்தை சுற்றியே கதை வட்டமடிக்கிறது. அவரது குணாதிசயம் நம்மில் பலரில் ஊறிப்போன நல்ல நேர்மையான நடுத்தர அல்லது நடுத்திரவர்கத்துக்கும் கீழிருக்கும் சராசரி ஆணின் மனோநிலை.

ஜாங்கிரியோ மைசூர்பாகோ செய்ய ஆள் வந்து அழைக்கும் வரை, தானே பிரமாதமான முயற்சி  ஏதும் செய்யும் மனநிலையையில் இல்லை நாகராஜன்.  இத்தனை காலம் அலைந்து திரிந்து இதற்கு மேல் அதிர்ஷ்டம் நம்பக்கம் இல்லை என்ற தெரிந்ததால் வந்த அயர்வாக இருக்கலாம். ஒரு வேளை 'சுவீட்மாஸ்டர்' என்ற பட்டம் வாங்கிவிட்டதால் வந்த திருப்தியாக இருக்கலாமோ?

ஏழ்மை நிலை என்று இல்லாவிட்டாலும், ஏழ்மை நிலையை விட்டு சற்றே மூச்சு விட்டிருக்கும்  அடித்தள வசதிகள் நிரம்பிய குடும்பம். பெண்பிள்ளைகளையும் பெண்டாட்டியையும் ராணி போல் வைத்திருக்க வேண்டும் என்று எண்ணும் பாசம். ஆசை. ஆனால் அதற்கான முயற்சியில் அவர் இது வரை இறங்கியதாக தெரியவில்லை. அப்படி இறங்கியிருந்தால், 'சீட்டுக்கச்சேரி'யில் செலவிடும் அளவு நேரம் மீதம் இருக்குமா?

முயற்சி செய்தாலும் வாய்ப்பும் அதிர்ஷ்டமும் சிலருக்கே வாய்க்கிறது. அது நமக்கு இல்லை என்று தெரிந்தபின் 'போதுமடா சாமி' என்ற சலிப்பே வந்துவிடுகிறது. எனினும் குடும்பம் இருக்கிறதே, என்னதான் செய்வான் ஒரு ஆண்மகன்.

போதா குறைக்கு "தன்மானம்" வேறு பிறந்ததிலிருந்தே ஒட்டிக்கொண்டுவிடுகிறது. காக்காய் பிடிக்கவோ, ஹிஹி என வழியவோ, அட 'ரெண்டு ஜாங்கிரி குடுங்க சார்' என்று கேட்கவோ கூட நா கூசுகிறது. 

கதையின் மிகப்பெரிய ப்ளஸ்பாய்ண்ட், சமையல் செய்பவர்களின் மனநிலை, குடும்ப சூழ்நிலையை அழகாய் எடுத்துக்காட்டுகிறது. அதை பொருட்டாக நினையாத மேல்தட்டு மக்களைக் குத்திக்காட்டுகிறது. முக்கி முக்கி சுட்டவனுக்கு மூணு தோசை என்ற கூற்றே உண்மை போலும்! குறைந்த பட்சம் சாப்பிட்டு விட்டு போகச் சொல்லியிருக்கலாம். நல்லவேளை சின்னபையன் மனம் குளிர கடையில் ஜாங்கிரி வாங்கிச் சென்றார். இருந்தாலும் 4 மணி நேரம் அடுப்பில் வெந்த வயிற்றுக்கு வெறும் கஞ்சி தான். போகட்டும் விடுங்கள் பைசா குறையாமல் ஆயிரம் ரூபாய் கொடுத்ததே 'அப்பாடா' என்றிருக்கிறது. 


கதையின் தலைப்பைப் போல் வளைவு சுளிவு நெளிந்த வாழ்வு. ஒரு நாள் இப்படியும் இன்னொரு நாள் அப்படியும் அமையும் நிதிநிலை. "இனிமேல் நீர் தான் எங்கள் வீட்டு விசேஷத்துக்கு சமைக்கணும்"  என் முத்தாய்ப்பு வைத்திருப்பதாலும், பெண்டாட்டியை வேலைக்கு அனுப்பலாமா என்ற சிந்தனையில் இறங்கியதாலும், இனி இவர் வாழ்வில் மெதுவே செல்வ வளம் படிப்படியாய் வளரும் என நம்புவோம்.

பெண்டாட்டி வேலைக்கு போவதுடன், அவரும் கூட தினமும் சமைல் வேலைக்கு ஆள் தேவை என்ற இடங்களில் தேடலாம். சிறு சிறு முயற்சிகளே பெரும் பிரச்சனைக்கு தீர்வாய் அமையும் என்று அவருக்கு தெரியாதா என்ன?!

உங்கள் யாருக்கானும் சமைக்க ஆள் வேண்டும் என்றால் தெரியப்படுத்துங்களேன். நாகராஜன் நன்றாக சமைக்கிறார்.  அவருடைய  தொலைப்பேசி எண்ணுக்கு vgk அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.

ippadikku vimarsanam,
ஷக்திப்ரபா 


    


மிகக்கடினமான இந்த வேலையை
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.


போட்டியில் பரிசு பெற்றுள்ள மற்றவர்கள் 
பற்றிய விபரம் இன்றே  தனித்தனிப்
பதிவுகளாகத் தரப்பட்டுள்ளன.


அனைவரும் தொடர்ந்து
ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 
உற்சாகத்துடன் பங்கு கொண்டு 
சிறப்பிக்க வேண்டுமாய் 
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான இணைப்பு: 




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
வரும் வியாழக்கிழமை 30.01.2014  
இரவு 8 மணிக்குள் [I.S.T]





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

29 கருத்துகள்:

  1. அன்பின் வை.கோ - விமர்சனம அருமை - அன்பின் ஷக்திப்ரபா - கதையினைப் படித்துப் புரிந்து கொண்டு அழகான விமர்சனம் எழுதியது நன்று - மிக மிக இரசித்தேன் - இரண்டாம் பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  2. திருமதி ஷக்தி பிரபாவிற்கு என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. ஷக்தி ப்ரபா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  4. இனிய வாழ்த்து அனைவருக்கும்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  5. இரண்டாம் பரிசினை வென்ற திருமதி ஷக்தி ப்ரபா அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  6. என்னவொரு அழகான விமர்சனம்.பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள். உங்கள் கதை விமர்சனங்கள் மூலம் எப்படி எல்லாம் விமர்சனம் எழுதலாம் என்ற ஒரு ஐடியா என்னைப் போன்றவர்களுக்கு கிடைக்கிறது. நல்ல அருமையான போட்டி வை.கோ.சார்,.

    பதிலளிநீக்கு
  7. இரண்டாம் பரிசு பெற்ற ஷக்திப்ரபாவுக்கு இனிய வாழ்த்துக்கள். பரிசு பெற்றவர்களின் விமர்சனங்கள் பலருக்கும் ஒரு வழிகாட்டலாய் இருக்கும். தொடர்ந்து பங்கேற்கவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. அருமையான விமர்சனம்
    கதாபாத்திரங்களின் குண நலன்கள்
    குறித்தான ஆழமான அலசல் மிக மிக அருமை
    திருமதி,ஷக்தி பிரபா அவர்களுக்கு
    என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. ஷக்தி ப்ரபா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    அவர்களின் தள இணைப்பு (minminippoochchigal.blogspot.in) செல்ல முடியவில்லை ஐயா...

    பதிலளிநீக்கு
  10. அருமையான விமர்சனம்.
    ஷக்திபிரபா அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  11. இப்படியும் பார்க்கலாம். நன்றாக இருந்தது. வாழ்த்துகள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  12. ஷக்தி ப்ரபா அவர்களுக்கு வாழ்த்துகள்...!

    பதிலளிநீக்கு
  13. இரண்டாம் பரிசு பெறும் விமர்சனமும் கன ஜோர்.....

    அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  14. திருமதி ஷக்தி பிரபாவிற்கு வாழ்த்துக்கள்! நன்றாக விமரிசனம் செய்துள்ளார்.

    பதிலளிநீக்கு
  15. அழகான விமர்சனம்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  16. இரண்டாம் பரிசினை வென்ற சகோதரி ஷக்தி ப்ரபா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  17. இத்தகு மேடை அமைத்துக்கொடுத்த வை.கோ சார் அவர்களுக்கு மிக்க நன்றி. கதை அருமையாக இருந்தால் தான் விமர்சனம் எழுத வரும். ஆகவே அனைத்து பெருமையும் கதைக்கே. நடுவர்கள் குழு என் விமர்சனத்தை ரசித்து இரண்டாம் இடம் அளித்தமைக்கு மிக்க நன்றி. என்னை வாழ்த்திய அனைத்து அன்பு நண்பர்களுக்கும் நன்றிகள் பல. நேரமின்மையால் உடன் பதிலிடமுடியாமல் போனதற்கு மன்னிக்கவும். அனைவருக்கும் பெரும் நன்றி. என் மகிழ்ச்சியையும் ஏற்றுக்கொள்ளுங்கள் :)

    பதிலளிநீக்கு
  18. இத்தகைய தளம் அமைத்துக்கொடுத்த வை.கோ சார் அவர்களுக்கு பணிவு கலந்த நன்றி.
    விமர்சனம் எழுத முடியவேண்டும் என்றால், கதையும் நன்றாக இருந்தால் தானே முடியும்.
    அனைத்து பெருமையும் அவருடைய கதைக்கே சேரும்.

    விமர்சனத்திற்கு இரண்டாம் இடம் அளித்து மகிழ்வூட்டிய நடுவர் குழுவுக்கு மிக்க நன்றி.

    விமர்சனத்தை படித்து வாழ்த்திய அனைத்து அன்பு நண்பர்களுக்கும் அன்பு கலந்த நன்றி.
    உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கும் மற்றும் ரமணி அவர்களுக்கும் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள். :)

    பதிலளிநீக்கு
  19. ஷக்தி ப்ரபா அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. திருமதி. ஷக்தி ப்ரபாவுக்கு என் வாழ்த்துகள். விமரிசனம் அழகாக எழுதியிருக்கிறார்கள். என்னால் இப்படி விரிவாக ஒவ்வொரு பாய்ன்டையும் தொட்டு எழுத பொறுமை இல்லை.

    பதிலளிநீக்கு
  21. பரிசு வென்ற சக்தி பிரபா அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. திருமதி ஷக்தி பிரவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ஜாங்கிரித் தட்டு எனக்குதான். ஓகேவா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 26, 2015 at 4:14 PM

      திருமதி ஷக்தி பிரபா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

      ஜாங்கிரித் தட்டு எனக்குதான். ஓகேவா//

      OK ... OK ... OK ... OK ...... :)

      நீக்கு
  23. ஷக்தி ப்ரபாவங்களுக்கு வாழ்த்துகள.

    பதிலளிநீக்கு
  24. திருமதி ஷக்தி பிரபா அவர்களுக்கு வாழ்த்துகள். விமரிசனம் படித்தேன் கதை எழுதுபவரை விட விமரிசனம் எழுத ஆழ்ந்து படிக்கவேண்டும் அப்பதான் இப்படி ஆணித்தரமா விமரிசனம் எழுத முடியும்

    பதிலளிநீக்கு
  25. வித்யாசமான யதார்த்த நடை விமர்சனம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  26. பரிசுபெற்றவர்களுக்கு பாராட்டுகள்! மேலும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு