’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot.in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.
தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.
நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி
முதற்பதிப்பு: 2016
வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979
அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225
ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள், செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் ஜீவி.
இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.
17) ’குமுதம்’
எஸ்.ஏ.பி.
[பக்கம் 104 முதல் 107 வரை]
குமுதம் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்த எஸ்.ஏ.பி. அவர்கள் பற்றி நமக்கு எல்லோருக்கும் தெரியும். ஆனால் இவர் புகைப்படத்தை எங்கேயும் யாரும் பார்த்ததில்லையாம். இவர் அமரர் ஆன தருணத்தில் தொலைக்காட்சியில் இவர் புகைப்படம் பார்த்தது தான் வாசகர்கள் குமுதம் ஆசிரியரின் தோற்றத்தை முதன் முதல் பார்த்ததாம். அந்த அளவுக்கு வெளியுலகத்திற்கு தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ளாமல் அரியதோர் மனிதராய் இவர் இருந்திருக்கிறார். இவர் எழுதிய 'நீ' , 'காதலெனும் தீவினிலே' போன்ற நாவல்களைப் பற்றியும் பத்திரிகை உலகில் இவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றியும் ஜீவி தனக்கே உரிய ரசனையில் அற்புதமாகச் சொல்கிறார்.
’பிரமச்சாரி’ ‘சொல்லாதே’ ‘இன்றே இப்பொழுதே’ ‘ஓவியம்’ ‘நகரங்கள் மூன்று சொர்க்கம் ஒன்று’ ஆகிய இவர் எழுதிய நாவல்களும் பிரபலமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சிறப்பானவை. செட்டிநாடு தந்த இந்த சீராளன் மறைவினால் தமிழக எழுத்துலகில் ஏற்பட்ட வெற்றிடம் மிகப்பெரியது என்று சொல்லி முடித்துள்ளார், ஜீவி.
18) ’ஜீவகீதம்’
ஜெகச்சிற்பியன்
ஜெகச்சிற்பியன்
ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழா போட்டியில் இரு முதல் பரிசுகளைத் தட்டிச் சென்றவர் ஜெகசிற்பியன். இந்தப் பரிசுகள் முறையே ’நரிக்குறத்தி’ சிறுகதைக்கும் ’திருச்சிற்றம்பலம்’ நாவலுக்கும் கிடைத்தன.
ஜெ.சி. நிறைய சரித்திர நாவல்கள் மட்டுமல்ல, சமூக நாவல்களும் எழுதியிருக்கிறார். நந்தி கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் நந்திவர்மன் பற்றி ஜெ.சி. எழுதிய 'நந்திவர்மன் காதலி' நாவல் பற்றி ஜீவி விவரமாக விவரிக்கிறார். நந்தி வர்மனைக் கொல்ல நடைபெற்ற சதி திடுக்கிடலாக இருக்கிறது.
’நந்திவர்மன் காதலி’, ’மாறம் பாவை’, ‘நாயகி நற்சோணை’, 'ஆலவாய் அழகன்’, ’மகரயாழ் மங்கை’, பத்தினிக்கோட்டம்’ என்று பல சரித்திர நாவல்கள் பற்றி இந்த நூலில் பேசப்பட்டுள்ளன.
‘மண்ணின் குரல்’; ’சொர்க்கத்தின் நிழல்’; ’கொம்புத்தேன்’; ‘கிளிஞ்சல் கோபுரம்’; ‘காணக்கிடைக்காத தங்கம்’; ‘இனிய நெஞ்சம்’; ’இன்று போய் நாளை வரும்’; ‘ஏழையின் பரிசு’; பதிமூன்று இந்திய மொழிகளில் நேஷனல் புக் டிரஸ்டாரால் மொழிமாற்றம் செய்யப்பட்ட ‘ஜீவகீதம்’ ஆகிய மறக்க முடியாத சமூக நாவல்கள் பற்றி இந்நூலில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
தமது சமூக நாவல்களில் பரம ஏழைகளின் மீது இரக்கம் கொண்ட ஏழைப்பங்காளனாய் ஜெ.சி. திகழ்வதை ஜீவி படம் பிடித்துக் காட்டுகிறார்.
இவரது சிறுகதைத் தொகுப்புகள்: (1) அக்கினி வீணை (2) பொய்க்கால் குதிரை (3) ஞானக்கன்று (4) ஒரு நாளும் முப்பது வருடங்களும் (5) இன்ப அரும்பு (6) காகித நட்சத்திரம் (7) கடிகாரச்சித்தர் (8) மதுர பாவம் (9) நிழலின் கற்பு (10) பாரத புத்ரன் (11) அஜநயனம்.
’சதுரங்க சாணக்கியன் என்ற ஜெ.சி. எழுதிய நாடகம் பற்றியும் ஜீவி விவரமாகக் குறிப்பிடுகிறார்.
ஜெ.சி. நிறைய சரித்திர நாவல்கள் மட்டுமல்ல, சமூக நாவல்களும் எழுதியிருக்கிறார். நந்தி கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் நந்திவர்மன் பற்றி ஜெ.சி. எழுதிய 'நந்திவர்மன் காதலி' நாவல் பற்றி ஜீவி விவரமாக விவரிக்கிறார். நந்தி வர்மனைக் கொல்ல நடைபெற்ற சதி திடுக்கிடலாக இருக்கிறது.
’நந்திவர்மன் காதலி’, ’மாறம் பாவை’, ‘நாயகி நற்சோணை’, 'ஆலவாய் அழகன்’, ’மகரயாழ் மங்கை’, பத்தினிக்கோட்டம்’ என்று பல சரித்திர நாவல்கள் பற்றி இந்த நூலில் பேசப்பட்டுள்ளன.
‘மண்ணின் குரல்’; ’சொர்க்கத்தின் நிழல்’; ’கொம்புத்தேன்’; ‘கிளிஞ்சல் கோபுரம்’; ‘காணக்கிடைக்காத தங்கம்’; ‘இனிய நெஞ்சம்’; ’இன்று போய் நாளை வரும்’; ‘ஏழையின் பரிசு’; பதிமூன்று இந்திய மொழிகளில் நேஷனல் புக் டிரஸ்டாரால் மொழிமாற்றம் செய்யப்பட்ட ‘ஜீவகீதம்’ ஆகிய மறக்க முடியாத சமூக நாவல்கள் பற்றி இந்நூலில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
தமது சமூக நாவல்களில் பரம ஏழைகளின் மீது இரக்கம் கொண்ட ஏழைப்பங்காளனாய் ஜெ.சி. திகழ்வதை ஜீவி படம் பிடித்துக் காட்டுகிறார்.
இவரது சிறுகதைத் தொகுப்புகள்: (1) அக்கினி வீணை (2) பொய்க்கால் குதிரை (3) ஞானக்கன்று (4) ஒரு நாளும் முப்பது வருடங்களும் (5) இன்ப அரும்பு (6) காகித நட்சத்திரம் (7) கடிகாரச்சித்தர் (8) மதுர பாவம் (9) நிழலின் கற்பு (10) பாரத புத்ரன் (11) அஜநயனம்.
’சதுரங்க சாணக்கியன் என்ற ஜெ.சி. எழுதிய நாடகம் பற்றியும் ஜீவி விவரமாகக் குறிப்பிடுகிறார்.
இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும்.
என்றும் அன்புடன் தங்கள்,
(வை. கோபாலகிருஷ்ணன்)
தொடரும்
இதன் அடுத்த பகுதியில்
இடம்பெறப்போகும்
எஸ் ஏ பி கதைகளும் படித்திருக்கிறேன். ஜெகசிற்பியன் கதை ஒன்றும் படித்திருக்கிறேன். அப்பாடி... நான் படித்த எழுத்தாளர்கள்!
பதிலளிநீக்கு:)))
ஸ்ரீராம். April 1, 2016 at 7:18 PM
நீக்குவாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம், வணக்கம்.
//எஸ் ஏ பி கதைகளும் படித்திருக்கிறேன். ஜெகசிற்பியன் கதை ஒன்றும் படித்திருக்கிறேன். அப்பாடி... நான் படித்த எழுத்தாளர்கள்!:)))//
அப்பாடி..:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம். -vgk
எஸ் ஏ பி , ஜெகசிற்பியன் குறித்த அழகான விமர்சனம். அடுத்த பகுதிக்கு ஆவலோடு காத்திருக்கிறோம் விஜிகே சார்..
பதிலளிநீக்குவளரும் எழுத்தாளரான நான் கட்டாயம் சென்னை செல்லும்போது இந்நூலினை வாங்கிப் படித்துவிடுகிறேன் . நன்றி :)
Thenammai Lakshmanan April 1, 2016 at 8:40 PM
நீக்குவாங்கோ ஹனி மேடம், வணக்கம். இந்தத்தொடரின் முதல் இரண்டு பகுதிகளில் மட்டும் பார்த்த தங்களை இங்கு மீண்டும் இந்தப் பத்தாம் பகுதியில் பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது.
//எஸ் ஏ பி , ஜெகசிற்பியன் குறித்த அழகான விமர்சனம். அடுத்த பகுதிக்கு ஆவலோடு காத்திருக்கிறோம் விஜிகே சார்..//
மிகவும் சந்தோஷம் மேடம். அதுவும் தாங்கள் ஆவலோடு காத்திருப்பதாகச் சொல்லும் இதன் அடுத்த பகுதி, தங்களைப்போன்ற தலைசிறந்த சில பெண் எழுத்தாளர்களைப் பற்றியதாக அமைந்துள்ளது, ஓர் மிகப்பெரிய ஆச்சர்யமாக உள்ளது.
//வளரும் எழுத்தாளரான நான் கட்டாயம் சென்னை செல்லும்போது இந்நூலினை வாங்கிப் படித்துவிடுகிறேன் . நன்றி :)//
தாங்களே இன்னும் ‘வளரும் எழுத்தாளரா?????’. சரி, சரி .... இருப்பினும் இவ்வளவு தன்னடக்கம் கூடவே கூடாதாக்கும். :)
தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம். அன்புடன் VGK
குமுதம் இதழில் அரசு பதில்கள் வெகு பிரபலம். அரசு பதில்களைப் படித்ததோடு சரி. அவருடைய வேறு எந்தப் படைப்பையும் வாசித்ததில்லை. ஜெகசிற்பியனின் ஆல்வாய் அழகன் சிறுவயதில் படித்திருக்கிறேன். ஆனால் இப்போது எதுவும் நினைவில் இல்லை. சுவையான அறிமுகங்கள். தொடருங்கள் கோபு சார்!
பதிலளிநீக்குஅண்ணாமலை, ரங்கராஜன், சுந்தரேசன்-- மூவர் பெயர்களின் முதல் எழுத்து சேர்ந்தது தான் அரசு என்று சொல்வார்கள்.
நீக்கு'புனிதன்' என்ற சண்முகசுந்தரத்தைச் சேர்த்து மூன்று துணையாசிரியர்கள் குமுதத்தில் இருந்தனர். புனிதன் அற்புதமான எழுத்தாளர். சுந்தர பாகவதர் என்ற பெயரிலும் நகைச்சுவையாக எழுதினார்.
ஸ்டூல் போட்டு பரணில் எதையோ எடுக்க முயன்ற பொழுது தவறி கீழே விழுந்தது அதுவே அவர் காலமாகக் காரணமாகிப் போய்விட்டது. ரா.கி.ர., ஜ.ரா.சு,, புனிதன்-- இந்த மூன்று துணையாசிரியர்கள் 45 வருடங்களுக்கு மேலாக கூட்டு சேர்ந்து ஒரு பெர்ய கதை சாம்ராஜ்யத்தையே குமுதத்தில் உருவாக்கி இருக்கிறார்கள்.
அண்ணாமலை, ரங்கராஜன், சுந்தரேசன்-- மூவர் பெயர்களின் முதல் எழுத்து சேர்ந்தது தான் அரசு என்று சொல்வார்கள்.
நீக்குதெரியாத புது செய்தியிது. அப்படியானால், அந்தப் பதில்களைக் கொடுத்தது மூவருமா?
புனிதன் பற்றியும் இப்போது தான் தெரிந்து கொண்டேன். தகவலுக்கு நன்றி ஜீவி சார்!
ஞா. கலையரசி April 1, 2016 at 9:05 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//குமுதம் இதழில் அரசு பதில்கள் வெகு பிரபலம். அரசு பதில்களைப் படித்ததோடு சரி.//
நானும் முன்னொரு காலத்தில் அரசு பதில்களைப் படித்தது உண்டு.
//அவருடைய வேறு எந்தப் படைப்பையும் வாசித்ததில்லை.//
நானும் அப்படியே.
//ஜெகசிற்பியனின் ஆல்வாய் அழகன் சிறுவயதில் படித்திருக்கிறேன்.//
மிக்க மகிழ்ச்சி. :)
//ஆனால் இப்போது எதுவும் நினைவில் இல்லை.//
:) நியாயம்தான். எல்லாமே எப்போதுமே நம் நினைவில் இருந்துகொண்டே இருக்கும் எனச் சொல்ல இயலாதுதான்.
//சுவையான அறிமுகங்கள். தொடருங்கள் கோபு சார்!//
தங்களின் அன்பான வருகைக்கும், விரிவான வித்யாசமான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.
நன்றியுடன் கோபு
ஆமாம். அந்த மூவரும் சேர்ந்து தான் கேள்விகளைப் பிரித்துக் கொண்டு பதிலளித்திருப்பதாகத் தெரிகிறது. ஏனெனில் எஸ்.ஏ.பி. அவர்களின் எழுத்து நடையையும், வார்த்தைப் பிரயோகங்களையும் துல்லியமாக என்னால் கணிக்க முடியும். இன்ன கேள்விக்கு இவர் பதிலளித்திருக்கிறார் என்று கூடச் சொல்லிவிடும் அளவுக்கு மூவரின் எழுத்துக்களின் ஸ்பெஷாலிட்டிகளை நான் அறிவேன்.
நீக்குஜ.ரா.சு. அவர்கள் பணி ஓய்வு பெற்றுவிட்டார்கள் என்பதினால் இப்பொழுது குமுதத்தில் இல்லை.
'அரசு' பெயர் க்யாதி பெற்றுப் பிரபலமடைத்து விட்டதால், அந்தப் பெயரைக் கைவிடமுடியாமல் இப்பொழுதும் அரசு பதில்கள் தொடர்ந்து கொண்டிருப்பது தான் ஆச்சரியம்.
எங்கள் வீட்டில் ”கலீர் கலீர் ” குமுதத்தில் தொடர் கதையாக வந்த புத்தகம் இருந்தது. எஸ் ஏ.பி அவர்கள் எழுதிய கதை என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஜீவி சார் குறிப்பிட்ட நூல்கள் பெயரில் கலீர் கலீர் இல்லையே !அப்ப அது வேறு பாரோ எழுதினது போலும். ஜாவர் சீத்தாராமன் அவர்களா?
பதிலளிநீக்குஜெகசிற்பியன் எழுதிய கதையும் படித்து இருக்கிறேன் ஆனால் எந்த கதை என்று நினைவு இல்லை.
'கலீர், கலீர்' எல்லார்வி எழுதிய் கதை. இது குமுதத்தில் குறுநாவலாக வந்ததா தொடர்கதையா நினைவில்லை. 'ஆட வந்த தெய்வம்' என்ற பெயரில் திரைப்படமாக வந்தது தெரியும்.
நீக்குT R மகாலிங்கம் படம்! 'கோடி கோடி இன்பம் பெறவே தேடி வந்த செல்வம்... கொஞ்சும் சலங்கை கலீர் கலீர் என ஆட வந்த தெய்வம்' என்று அவர் குரலிலேயே பாடலும் உண்டு! இனிமையான பாடல்.
நீக்குகோமதி அரசு April 1, 2016 at 9:05 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//எங்கள் வீட்டில் ”கலீர் கலீர்” குமுதத்தில் தொடர் கதையாக வந்த புத்தகம் இருந்தது. எஸ்.ஏ.பி அவர்கள் எழுதிய கதை என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஜீவி சார் குறிப்பிட்ட நூல்கள் பெயரில் கலீர் கலீர் இல்லையே ! அப்ப அது வேறு யாரோ எழுதினது போலும். ஜாவர் சீத்தாராமன் அவர்களா?//
எனக்கு இதுபற்றி ஏதும் தெரியவில்லை, மேடம். இருப்பினும் மேலே நம் ஜீவி சாரும், ஸ்ரீராம் அவர்களும் தங்களுக்கு சில விளக்கங்கள் அளித்துள்ளார்கள்.
’ஆட வந்த தெய்வம்’ திரைப்படம் பற்றி நான் திரட்டிய சில செய்திகள்: இயக்குனர்:பி.நீலகண்டன், தயாரிப்பாளர்: வே. எம். சிவகுருநாதன், மெஜெஸ்டிக் பிக்சர்ஸ், கதை: எல்.ஆர்.வீ; நடிகர்கள்: டி.ஆர். மகாலிங்கம், எம்.ஆர்.ராதா, ஏ.கருணாநிதி, எஸ்.ராமராவ், கே.டி.சந்தானம்; நடிகைகள்: ஈ.வி.சரோஜா, ராகினி, அஞ்சலி தேவி, லட்சுமிபிரபா, மனோரமா; இசையமைப்பு:கே.வி. மகாதேவன் என்று ஓரிடத்திலும், விஸ்வநாதன்-இராமமூர்த்தி என்று மற்றொரு இடத்திலும் சொல்லப்பட்டுள்ளது.
இந்தப் படம் வெளிவந்துள்ள நாள்:01-04-1960
குறிப்பாக கலீர் கலீர் என்ற வார்த்தைகள் வரும் ’கோடி கோடி இன்பம்’ என ஆரம்பிக்கும் பாடலின் பாடகர்: TR.மகாலிங்கம்; எழுத்தாளர்: A.மருதகாசி.
//ஜெகசிற்பியன் எழுதிய கதையும் படித்து இருக்கிறேன் ஆனால் எந்த கதை என்று நினைவு இல்லை.//
அதனால் பரவாயில்லை மேடம். எல்லாமே இன்று நம் நினைவில் இருக்க வாய்ப்பில்லைதான்.
தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK
படித்து ரசித்தேன்.
பதிலளிநீக்குபழனி.கந்தசாமி April 2, 2016 at 4:18 AM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//படித்து ரசித்தேன்.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். - VGK
நல்லதோர் அறிமுகம்
பதிலளிநீக்குதொடருங்கள் நண்பரே
அறிமுகங்களை....
Ajai Sunilkar Joseph April 2, 2016 at 7:55 AM
நீக்கு//நல்லதோர் அறிமுகம், தொடருங்கள் நண்பரே
அறிமுகங்களை....//
வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + நன்றி.
இன்று நான் சீக்கிரமே வந்துட்டேனே.குமுதம் புக் பற்றி மட்டும் தெரியும். ஆசிரியர்கள் பற்றி எல்லாம் தெரியாது. இப்பகூட குமுதம் மட்டும்தான் பழய ”சைஸிலேயே” வந்து கொண்டிருக்க்கிறது. அதே கல கலப்பும் இருக்கு. இங்கு அறிமுகப்படுத்தி இருக்கும் பிரபல எழுத்தாளர் களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசிப்பிக்குள் முத்து. April 2, 2016 at 11:09 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//இன்று நான் சீக்கிரமே வந்துட்டேனே.//
ஆம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. :)
//குமுதம் புக் பற்றி மட்டும் தெரியும்.//
அது தெரிந்தாலே போதும்.
//ஆசிரியர்கள் பற்றி எல்லாம் தெரியாது.//
அதெல்லாம் தெரிய வேண்டிய அவசியமே இல்லை.
//இப்பகூட குமுதம் மட்டும்தான் பழய ”சைஸிலேயே” வந்து கொண்டிருக்க்கிறது. அதே கல கலப்பும் இருக்கு.//
அப்படியா, சந்தோஷம். அதுபற்றி எனக்கு ஏதும் தெரியாது. நான் இப்போதெல்லாம் வார இதழ்கள் ஏதும் வாங்குவதோ படிப்பதோ இல்லை. சுத்தமாக நிறுத்திக் கொண்டு விட்டேன்.
ஏற்கனவே ஐந்து ஆண்டுகளுக்கு சந்தா கட்டியுள்ள ஒருசில மாத இதழ்கள் தபாலில் வருகின்றன. அவற்றைப் புரட்டிப் பார்ப்பதோடு சரி.
மேலும் தினசரியான ‘தினமலர்’ பல்லாண்டுகளாக நான் வாங்கி வருவதால், அதனுடன் கிடைக்கும் இலவச இணைப்புகளான ‘பெண்கள் மலர்’ ‘வார மலர்’ ‘பக்தி மலர்’ ‘சிறுவர் மலர்’ என வீடு பூராவும் எங்கே பார்த்தாலும் ஒரே புத்தகங்களாக கிடந்து வருகின்றன. எதையும் அவ்வப்போது வெளியேற்றவும் லேஸில் எனக்கு மனம் வருவது இல்லை. மொத்தத்தில் குப்பையுடன் குப்பையாக நானும் ஏதோ இப்போதெல்லாம் இருந்து வருகிறேன். :)
இதுபோக நான் பரிசு வாங்கிய நூல்கள், எனக்குப் பிறரால் அன்பளிப்பாக அளிக்கப்பட்ட நூல்கள், என் சிறுகதைகள் வெளியான பல்வேறு (நூற்றுக்கணக்கான) வார இதழ்கள் + மாத இதழ்கள் என வைக்கவே இடமில்லாமல் பெட்டி பெட்டியாகத் தனித்தனியே உள்ளன. சமயத்தில் இவற்றையெல்லாம் பார்த்து நானே எரிச்சல் அடைவதும் உண்டு. வீட்டில் உள்ளவர்களும், இதன் மதிப்புத்தெரியாமல் ‘வெறும் குப்பைகள்’ எனச்சொல்லும்போது என் எரிச்சல் மேலும் அதிகரித்து வருவதும் உண்டு :)
//இங்கு அறிமுகப்படுத்தி இருக்கும் பிரபல எழுத்தாளர் களுக்கு வாழ்த்துகள்.//
தங்களின் அன்பான வருகைக்கும், மென்மையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் VGK
ஆடவந்த தெய்வம் பார்த்து இருக்கிறேன். பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குகோமதி அரசு April 2, 2016 at 1:09 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//ஆடவந்த தெய்வம் பார்த்து இருக்கிறேன். பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கும்.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். VGK
இருவரும் என் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் மிக்க் குறிப்பாக குமுதம் ஆசிரியர் அவர்கள்.அவருடைய கதைகளைத் தொடராக மட்டும் படித்ததால் தனி நாவலாக படிக்காத்தால் மிகச் சரியாக குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை.அவருடைய யதார்த்த நடை கதை நிகழ்வுகள்,சொல்லிச்செல்லும்பாங்குஅனைவரினும் மாறுபட்டதாகவும் அருமையாகவும் இருக்கும்.கம்பெனி நொடித்துப்போன முதலாளி ஒருவர் தன் சொத்தை அனைவருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு தனது விசுவாச ஊழியனுக்காக இரவெல்லாம் முழித்து ஒரு கைத்தடி தன் கைப்படச் செய்து கொடுத்து விட்டு ஊரை விட்டுக் கிளம்பும்படயாக ஒரு நாவல் துவங்கும்.அதை மீண்டும் ஒருமுறைப் படிக்க வேண்டும் என வெகு நாளாக ஆசை.பெயர் தெரியாத்தால் அந்த ஆசை கிடப்பில் உள்ளது.தெரிந்தவர்கள் சொன்னால்மிக்க மகிழ்ச்சி கொள்வேன்...வாழ்த்துக்களுடன்
பதிலளிநீக்குRamani S April 2, 2016 at 7:58 PM
நீக்குவாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.
//இருவரும் என் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் மிகக் குறிப்பாக குமுதம் ஆசிரியர் அவர்கள். அவருடைய கதைகளைத் தொடராக மட்டும் படித்ததால் தனி நாவலாக படிக்காததால் மிகச் சரியாக குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை. அவருடைய யதார்த்த நடை கதை நிகழ்வுகள், சொல்லிச்செல்லும் பாங்கு அனைவரினும் மாறுபட்டதாகவும் அருமையாகவும் இருக்கும். கம்பெனி நொடித்துப்போன முதலாளி ஒருவர் தன் சொத்தை அனைவருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு தனது விசுவாச ஊழியனுக்காக இரவெல்லாம் முழித்து ஒரு கைத்தடி தன் கைப்படச் செய்து கொடுத்து விட்டு ஊரை விட்டுக் கிளம்பும் படியாக ஒரு நாவல் துவங்கும். அதை மீண்டும் ஒருமுறைப் படிக்க வேண்டும் என வெகு நாளாக ஆசை. பெயர் தெரியாததால் அந்த ஆசை கிடப்பில் உள்ளது. தெரிந்தவர்கள் சொன்னால் மிக்க மகிழ்ச்சி கொள்வேன்...வாழ்த்துக்களுடன்//
தங்களின் அந்த ஆவலை யாராவது இங்கு வந்து பூர்த்திசெய்து, மகிழ்விக்கக்கூடும் என எதிர்பார்க்கிறேன்.
தங்களின் அன்பான வருகைக்கும், மிகவும் ஈடுபாட்டுடன் சொல்லியுள்ள பிரமாதமான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். - VGK
இன்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரு பெரும் எழுத்தாளர்களை தெரியாதவர்கள் இருக்கமுடியாது. திரு எஸ்.ஏ.பி.அவர்களின் 'நீ' , 'காதலெனும் தீவினிலே' ஆகிய இரு நாவல்களையும் குமுதத்தில் படித்திருக்கிறேன். அவரது கதையின் ஆரம்பமே நம்மை ஈர்த்து அடுத்து என்ன வரப்போகிறதோ என எதிர்பார்க்க வைக்கும். அவர் ஆசிரியராக இருந்த குமுதம் இதழை ஆனந்த விகடன் மற்றும் கல்கிக்கு இணையாக தனது இதழை நடத்தி விற்பனையில் எல்லா இதழ்களையும் விட முதன்மையாக இருக்க வைத்தது அவரது திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. வாசகர்களின் நாடித்துடிப்பை அறிந்து அவர்களின் இரசனைக்கேற்ப படைப்புகள் குமுதம் இதழில் வரக் காரணமாக இருந்தவர். சிறுகதை எழுத பலருக்கு பயிற்சி கொடுத்தவர் அவர். அவரால் வெளிக்கொணரப்பட்ட எழுத்தாளர்கள் பலர்.இன்னும் அவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழா போட்டியில் இரு முதல் பரிசுகளைத் பெற்ற திரு ஜெகசிற்பியன் அவர்களின் ’நரிக்குறத்தி’ என்ற சிறுகதையையும் ’திருச்சிற்றம்பலம்’ என்ற நாவலையும் படித்திருக்கிறேன். நரிக்குறத்தி சிறு கதையில் நரிக்குறவர்களின் வாழ்க்கை முறை பற்றி சுவைபட விரிவாக சொல்லியிருப்பார் இரவில் எங்கிருந்தாலும் கணவன் மனைவியுடன் இருக்கக வந்துவிடவேண்டும் என்ற எழுதப்படாத விதியை வைத்து அழகாக கதையை பின்னியிருப்பார்.
இந்த இருவர் பற்றிய அறிமுகத்தை தந்த திரு ஜீ,வி அவர்களுக்கும் தங்களுக்கும் பாராட்டுக்கள்!
வே.நடனசபாபதி April 2, 2016 at 9:25 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//இன்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரு பெரும் எழுத்தாளர்களை தெரியாதவர்கள் இருக்கமுடியாது. திரு எஸ்.ஏ.பி.அவர்களின் 'நீ' , 'காதலெனும் தீவினிலே' ஆகிய இரு நாவல்களையும் குமுதத்தில் படித்திருக்கிறேன். அவரது கதையின் ஆரம்பமே நம்மை ஈர்த்து அடுத்து என்ன வரப்போகிறதோ என எதிர்பார்க்க வைக்கும்.//
வாசகர்களைச் சுண்டியிழுக்கும் பாணியில் இருந்துள்ள அவரின் எழுத்துக்களைப்பற்றி மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்திகளாகச் சொல்லியுள்ளீர்கள், சார்.
//அவர் ஆசிரியராக இருந்த குமுதம் இதழை ஆனந்த விகடன் மற்றும் கல்கிக்கு இணையாக தனது இதழை நடத்தி விற்பனையில் எல்லா இதழ்களையும் விட முதன்மையாக இருக்க வைத்தது அவரது திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.//
பிரபலமான + ஜனரஞ்சகமான வார இதழ்களிலேயே, சற்றே குறைந்த விலையில், ஆனால் மிக மிக அதிகப்பிரதிகள் விற்பனையானதில் முதன்மையானது ‘குமுதம்’ மட்டுமே என நானும் கேள்விப்பட்டுள்ளேன், சார்.
//வாசகர்களின் நாடித்துடிப்பை அறிந்து அவர்களின் இரசனைக்கேற்ப படைப்புகள் குமுதம் இதழில் வரக் காரணமாக இருந்தவர். சிறுகதை எழுத பலருக்கு பயிற்சி கொடுத்தவர் அவர். அவரால் வெளிக்கொணரப்பட்ட எழுத்தாளர்கள் பலர். இன்னும் அவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். //
இவற்றையெல்லாம் கோர்வையாகக் கேட்பதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, சார்.
//ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழா போட்டியில் இரு முதல் பரிசுகளைத் பெற்ற திரு ஜெகசிற்பியன் அவர்களின் ’நரிக்குறத்தி’ என்ற சிறுகதையையும் ’திருச்சிற்றம்பலம்’ என்ற நாவலையும் படித்திருக்கிறேன்.//
அப்படியா! மிகவும் சந்தோஷம், சார்.
//நரிக்குறத்தி சிறு கதையில் நரிக்குறவர்களின் வாழ்க்கை முறை பற்றி சுவைபட விரிவாக சொல்லியிருப்பார். இரவில் எங்கிருந்தாலும் கணவன் மனைவியுடன் இருக்க வந்துவிடவேண்டும் என்ற எழுதப்படாத விதியை வைத்து அழகாக கதையை பின்னியிருப்பார்.//
இதே தங்களின் கருத்துக்களை ஜீவி சாரும் தன் நூலினில் விரிவாகக் குறிப்பிட்டுச் சொல்லி தன் பாணியில் விவரித்துள்ளார்கள்.
அதாவது பகல் பூராவும் பாசிமணி ஊசியெல்லாம் விற்க ஆணும் பெண்ணும் தனித்தனியே ஊரெல்லாம் சுற்றித்திரிந்தாலும்கூட, மாலை நேரத்திற்குள் குறிப்பாக பெண்கள் தங்கள் இருப்பிடம் வந்து சேர்ந்தாகணும் என்பது எழுதப்படாததோர் விதி போல என்ற அடிப்படையில் இந்தக்கதை பின்னப்பட்டிருக்கிறது என நான் புரிந்துகொண்டேன்.
//இந்த இருவர் பற்றிய அறிமுகத்தை தந்த திரு ஜீ,வி அவர்களுக்கும் தங்களுக்கும் பாராட்டுக்கள்! //
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான + ஆத்மார்த்தமான + நீண்ட + வாசிப்பு அனுபவக் கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். - VGK
எஸ் ஏ பி , ஜெகசிற்பியன் அவர்களைப் பற்றிய விவரங்கள் அறிமுகம் அருமை. எஸ் ஏ பி கதைகள் சில வாசித்ததுண்டு அது போல் ஜெகசிற்பியன்....ரசித்தோம் சார்...வலைத்தளம் வர வேலைப்பளுவால் தாமதாமாகிவிட்டது...தொடர்கின்றோம் விட்ட பதிவுகளையும்
பதிலளிநீக்குThulasidharan V Thillaiakathu April 2, 2016 at 11:59 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//எஸ் ஏ பி , ஜெகசிற்பியன் அவர்களைப் பற்றிய விவரங்கள் அறிமுகம் அருமை. எஸ் ஏ பி கதைகள் சில வாசித்ததுண்டு அது போல் ஜெகசிற்பியன்.... ரசித்தோம் சார்...//
மிக்க மகிழ்ச்சி, சார்.
//வலைத்தளம் வர வேலைப்பளுவால் தாமதாமாகிவிட்டது... தொடர்கின்றோம் விட்ட பதிவுகளையும்//
அதனால் பரவாயில்லை. விட்ட(த்)தைப் பிடிக்க வாங்கோ. :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, சார். - VGK
நான் ரொம்ப லேட்.......... குமுதம் ஆசிரியர் திரு எஸ். ஏ. பி. என்று கேள்வி பட்டதுண்டு.. அவரின் எழுத்துகளை படித்து நினைவில்லை. திரு ஜெக சிற்பியன் அவர்களைப்பற்றியும் தெரிந்திருக்க வில்லை. இப்பவும் வாராந்திர மாதாந்திர பத்திரிகைகள் நிறைய " குட்டிகள்" போட்டு குடும்ப சகிதமாக வந்து கொண்டிருக்கின்றன... தினப் பத்திரிகையான தினமலருக்கே எவ்வளவு குட்டிகள்?)))))))) அப்படி இருக்கும்போது வாராந்திர மாதாந்திர பத்திரிகைகள் சும்மா இருக்க முடியுமா போட்டிகள் நிறைந்த வியாபார மாயிற்றே. சர்குலேஷனை உயர்த்தணுமே.......
பதிலளிநீக்குஸ்ரத்தா, ஸபுரி... April 3, 2016 at 10:35 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//நான் ரொம்ப லேட்........ குமுதம் ஆசிரியர் திரு எஸ். ஏ. பி. என்று கேள்வி பட்டதுண்டு.. அவரின் எழுத்துகளை படித்து நினைவில்லை. திரு ஜெக சிற்பியன் அவர்களைப்பற்றியும் தெரிந்திருக்க வில்லை. //
அதனால் ஒன்றும் பெரிய குற்றம் இல்லை.
//இப்பவும் வாராந்திர மாதாந்திர பத்திரிகைகள் நிறைய " குட்டிகள்" போட்டு குடும்ப சகிதமாக வந்து கொண்டிருக்கின்றன... தினப் பத்திரிகையான தினமலருக்கே எவ்வளவு குட்டிகள்?))))))))//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா, கரெக்டூஊஊஊ. :) குட்டி போட்டுக்கொண்டே உள்ளன என்பதே உண்மை.
//அப்படி இருக்கும்போது வாராந்திர மாதாந்திர பத்திரிகைகள் சும்மா இருக்க முடியுமா? போட்டிகள் நிறைந்த வியாபார மாயிற்றே. சர்குலேஷனை உயர்த்தணுமே.......//
சரியாகச்சொல்லியுள்ளீர்கள். விளம்பரதாரர்களின் உபயம் மட்டும் இல்லாவிட்டால், ஒரு பத்திரிகையையும் தொடர்ந்து நடத்த இயலாது.
அவ்வாறு இருப்பின் அதன் விலையும், சாமானிய வாசகர்களாகிய நாம் வாங்கும் அளவுக்குக் கட்டுப்பட்டு நிர்ணயிக்க இயலாது.
எல்லாமே ஓர் வியாபாரம் மட்டுமே. அதில் என்ன சந்தேகம். :)
தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK
குமுதம் இப்பவும் பிரபல பத்திரிகையாக வந்து கொண்டுதானே இருக்கு. முதலில் எஸ். ஏ. பி. மட்டும் ஆசிரியராக இருந்திருக்காங்க. இப்ப இணை ஆசிரியர் துணைஆசிரியர் என்று ஆசிரிய பகுதியில் நிறைய பேரு போடறாங்க..
பதிலளிநீக்குப்ராப்தம் April 3, 2016 at 11:26 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//குமுதம் இப்பவும் பிரபல பத்திரிகையாக வந்து கொண்டுதானே இருக்கு. முதலில் எஸ். ஏ. பி. மட்டும் ஆசிரியராக இருந்திருக்காங்க. இப்ப இணை ஆசிரியர் துணைஆசிரியர் என்று ஆசிரிய பகுதியில் நிறைய பேரு போடறாங்க..//
தாங்கள் சொல்வதும் சரியே. இருக்கலாம். சந்தோஷம்.
தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - VGK
எஸ் ஏபி அவர்களுடைய சில கதைகள் வாசித்திருக்கிறேன். எல்லாம் எங்கள் பாட்டி புண்ணியம். ஜெகசிற்பியன் அவர்களுடைய படைப்புகளை வாசித்த நினைவில்லை.. வாய்ப்பு அமைந்தால் அவசியம் வாசிப்பேன்.
பதிலளிநீக்குகீத மஞ்சரி April 3, 2016 at 11:43 AM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//எஸ் ஏ பி அவர்களுடைய சில கதைகள் வாசித்திருக்கிறேன். எல்லாம் எங்கள் பாட்டி புண்ணியம்.//
பாட்டியின் அருமைப் பேத்தி செய்த புண்ணியம். :) மிக்க மகிழ்ச்சி.
//ஜெகசிற்பியன் அவர்களுடைய படைப்புகளை வாசித்த நினைவில்லை.. வாய்ப்பு அமைந்தால் அவசியம் வாசிப்பேன்.//
மிகவும் சந்தோஷம். வாசிப்பு ஆவல் உள்ள தங்களுக்கு அந்த வாய்ப்பும் விரைவில் அமையட்டும்.
தங்களின் அன்பான வருகைக்கும், மென்மையான + மேன்மையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
பிரியமுள்ள கோபு
குருஜி எங்கிட்டிருந்து பூவு படம்லா போடுறீக. இன்னாமா சொலி சொலிகுது. ஓ......வெளங்கிகிட்டன். அடுத்தாப்போல பொம்பள ஆளுகள போட போறீகளோ... ஓ கே.. நா வெரசா வந்து போடுவன்லா.....
பதிலளிநீக்குmru April 3, 2016 at 12:43 PM
நீக்குவாங்கோ முருகு, வணக்கம்மா.
//குருஜி எங்கிட்டிருந்து பூவு படம்லா போடுறீக. இன்னாமா சொலி சொலிகுது.//
ஆரம்பத்திலேயே அதுபோல எதையாவது ஜொலி ஜொலிக்க விடாவிட்டால், ஒருத்தரையுமே இந்தப்பதிவுப்பக்கம் சுண்டியிழுக்க முடியாமல் போகும். ஜவுளிக்கடை வாசலில் அழகழகான பொம்மைகளை நிறுத்தி, அவற்றிற்கு நம்மைவிட ஜோராக டிரஸ் செய்து வைத்திருப்பார்களே, முருகு. அதுபோலத்தான் இதுவும். கொஞ்சம் கஷ்டப்பட்டு தேடி இவற்றையெல்லாம் எடுத்துப் போட்டுக்கொண்டிருக்கிறேன் ... அதுவும் நம் முருகு போன்ற ரசனையுள்ள சிலருக்காக மட்டுமே. :)
// ஓ......வெளங்கிகிட்டன். அடுத்தாப்போல பொம்பள ஆளுகள போட போறீகளோ... //
?????????????????????
அந்தக்காலத்தில் மிகப்பிரபலமாக இருந்துள்ள இரண்டு பெண் எழுத்தாளர்களைப்பற்றிய சிறப்புச் செய்திகளைப் பதிவாகப் போடப்போகிறேன். அவ்வளவுதான்.
// ஓ கே.. நா வெரசா வந்து போடுவன்லா.....//
'வெரசா'ன்னா சீக்கரமாக என்று அர்த்தமா முருகு?
OK .. OK. நானும் வெளங்கிகிட்டன் :)
தங்களின் அன்பான வருகைக்கும், மழலைக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் குருஜி கோபு
குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி அவர்களது பேட்டிகள், கட்டுரைகள் படித்து இருக்கிறேன். தன்னை வெளியே காட்டிக் கொள்ள விரும்பாதவர். ஜெகசிற்பியனின் ‘நந்திவர்மன் காதலி’ ராணிமுத்துவில் மாதம் ஒரு நாவல் திட்டத்தில் வெளிவந்தபோது படித்து இருக்கிறேன்.
பதிலளிநீக்குதி.தமிழ் இளங்கோ April 3, 2016 at 10:37 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி அவர்களது பேட்டிகள், கட்டுரைகள் படித்து இருக்கிறேன். தன்னை வெளியே காட்டிக் கொள்ள விரும்பாதவர். ஜெகசிற்பியனின் ‘நந்திவர்மன் காதலி’ ராணிமுத்துவில் மாதம் ஒரு நாவல் திட்டத்தில் வெளிவந்தபோது படித்து இருக்கிறேன்.//
மிகவும் சந்தோஷம் சார்.
தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார். அன்புடன் VGK
இரண்டு பிரபல எழுத்தாளர்+ பத்திரிகை ஆசிரியரைத் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி....
பதிலளிநீக்குsrini vasan April 5, 2016 at 5:10 PM
நீக்கு//இரண்டு பிரபல எழுத்தாளர்+ பத்திரிகை ஆசிரியரைத் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி....//
வாங்கோ, வணக்கம், மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. vgk
குமுதம் ஆசிரியர் திரு எஸ்.ஏ.பி..... திரு ஜெகசிற்பியன் அவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.நன்றி...
பதிலளிநீக்குஆல் இஸ் வெல்....... April 5, 2016 at 5:57 PM
நீக்குகுமுதம் ஆசிரியர் திரு எஸ்.ஏ.பி..... திரு ஜெகசிற்பியன் அவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.நன்றி...//
வாங்கோ, வணக்கம், மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGK
அரிய பெரிய பணி வாழ்த்துக்களுடன் போற்றுகிறேன் ஐயா!
பதிலளிநீக்குsubramanian madhavan April 7, 2016 at 6:39 PM
நீக்கு//அரிய பெரிய பணி வாழ்த்துக்களுடன் போற்றுகிறேன் ஐயா!//
வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
ஜீவியின் பின்னூட்ட விவரங்கள் சுவாரசியம். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இன்னொரு சு எழுத்தாளரும் அரசுவில் குளிர்காய்ந்ததாகச் சொல்வார்கள்.
பதிலளிநீக்குஅப்பாதுரை April 8, 2016 at 12:04 PM
நீக்குவாங்கோ சார், வணக்கம் சார்.
//ஜீவியின் பின்னூட்ட விவரங்கள் சுவாரசியம். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இன்னொரு சு எழுத்தாளரும் அரசுவில் குளிர்காய்ந்ததாகச் சொல்வார்கள்.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார். - VGK
Position as on 08.04.2016 - 2.00 PM
பதிலளிநீக்குஎன் இந்தத்தொடரின் முதல் பத்து பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை தந்து கருத்தளித்துச் சிறப்பித்துள்ள
திருமதிகள்:
01) ஞா. கலையரசி அவர்கள்
02) கோமதி அரசு அவர்கள்
03) கீதமஞ்சரி கீதா மதிவாணன் அவர்கள்
செல்விகள்:
04) ’சிப்பிக்குள் முத்து’ அவர்கள்
05) 'மின்னலு முருகு' மெஹ்ருன்னிஸா அவர்கள்
06) ’ப்ராப்தம்’ அவர்கள்
திருவாளர்கள்:
07) துளசிதரன் தில்லையக்காது அவர்கள்
08) ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்கள்
09) S. ரமணி அவர்கள்
10) வே. நடன சபாபதி அவர்கள்
11) ஸ்ரத்தா... ஸபுரி அவர்கள்
12) ஆல் இஸ் வெல் அவர்கள்
13) ஸ்ரீனிவாஸன் அவர்கள்
14) தி. தமிழ் இளங்கோ அவர்கள்
15) அப்பாதுரை அவர்கள்
ஆகியோருக்கு என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே போன்ற புள்ளி விபரங்கள் முதல் 15 பகுதிகள் முடிந்ததும் மீண்டும் அறிவிக்க நினைத்துள்ளேன்.
அன்புடன் VGK
oooooooooooooo
பகுதி-1 முதல் பகுதி-5 வரைக்கான சென்ற பட்டியலில் இடம்பெற்று, இந்தப்பட்டியலில் மாயமாய் மறைந்து காணாமல் போய் உள்ளவர் : திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள் மட்டுமே. VGK - 08.04.2016 - 14.00 Hrs.
எஸ்.ஏ.பி அவர்களின் மறைவினால் எழுத்துலகில் மட்டுமா வெற்றிடம். குமுதம் பத்திரிகையே தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. :(
பதிலளிநீக்குGeetha Sambasivam April 12, 2016 at 1:50 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
//எஸ்.ஏ.பி அவர்களின் மறைவினால் எழுத்துலகில் மட்டுமா வெற்றிடம். குமுதம் பத்திரிகையே தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. :(//
அடப்பாவமே, அப்படியா? இதுபற்றியெல்லாம் எனக்கு எதுவுமே தெரிவது இல்லை. ஏனெனில் நான் வெகு நாட்களாகவே குமுதம் வாசிப்பது இல்லை.
இதுபோல ஆணித்தரமான கருத்துக்கள் எழுதும் தாங்கள் வராமல் இங்கும் என் பதிவினில் மிகப்பெரிய வெற்றிடத்தை என்னால் உணர முடிந்தது.
>>>>>
//பாட்டுடைத் தலைவன் நந்திவர்மன் பற்றி ஜெ.சி. எழுதிய 'நந்திபுரத்து நாயகி' நாவல் பற்றி ஜீவி விவரமாக விவரிக்கிறார்.//
பதிலளிநீக்குஜெகசிற்பியன் எழுதியதில் "நந்திவர்மன் காதலி" என வந்திருக்கணுமோ? ஏனெனில் நந்திபுரத்து நாயகியை எழுதியவர் மறைந்த முதுபெரும் எழுத்தாளர் விக்ரமன் அவர்கள்.
Geetha Sambasivam April 12, 2016 at 1:52 PM
நீக்குவாங்கோ மேடம், வணக்கம்.
**பாட்டுடைத் தலைவன் நந்திவர்மன் பற்றி ஜெ.சி. எழுதிய 'நந்திபுரத்து நாயகி' நாவல் பற்றி ஜீவி விவரமாக விவரிக்கிறார்.**
//ஜெகசிற்பியன் எழுதியதில் "நந்திவர்மன் காதலி" என வந்திருக்கணுமோ?//
சபாஷ் மேடம். தாங்கள் சொல்வதுதான் சரி. அது ’நந்திப்புரத்து நாயகி’ அல்ல. ’நந்திவர்மன் காதலி’ தான்.
இந்தப்பதிவினை நான் COMPOSE செய்யும் போது என் அந்தப்புரத்து நாயகி ஏதேனும் நந்தியாகக் குறுக்கிட்டு தொந்தரவு கொடுத்திருப்பாள் என நினைக்கிறேன்.
அதனால் என்னால் என் போக்கில் அன்று சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் போய் இருக்கிறது. அதனால் இதில் ஏதோ தவிர்க்க இயலாத தவறு ஏற்பட்டுள்ளது என நினைக்கிறேன். அதற்காக நான் இப்போது வருந்துகிறேன். எது எப்படியாகினும் இது என் தவறாகவே நான் இப்போது ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.
தவறினை பளிச்சென்று சுட்டிக்காட்டியுள்ளதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள், மேடம்.
//ஏனெனில் ’நந்திபுரத்து நாயகி’யை எழுதியவர் மறைந்த முதுபெரும் எழுத்தாளர் விக்ரமன் அவர்கள்.//
ஆஹா, தங்களுக்கு எவ்வளவு ஒரு அபார ஞாபக சக்தி. வியந்து போகிறேன். தாங்கள் சொல்லும் இதுவும் சரிதான். சாஸ்திரப் பிரமாணங்களை எடுத்து நான் இப்போது சரிபார்த்து விட்டேன்.
சரித்திர நாவலைப் பற்றி அறிமுகப்படுத்தி எழுதும்போது அதில் தவறேதும் இருந்தால் வருங்காலத்தில் சரித்திரமே தப்பாகிவிடும். அதற்கு நான் காரணமாகக் கூடாது. அதனால் இந்த என் பதிவினில் தேவையான CORRECTIONS செய்து விடுகிறேன்.
மீண்டும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன் VGK
இரண்டாம் பத்தியில் மட்டும் தான் ‘நந்திப்புரத்து நாயகி’ என தவறாக இருந்துள்ளது. அதை இப்போது நான் மாற்றிவிட்டேன்.
நீக்குமூன்றாம் பத்தியில் ஏற்கனவே ’நந்திவர்மன் காதலி’ என்று சரியாகவே உள்ளதால் அதை அப்படியே இருக்கட்டும் என விட்டுவிட்டேன்.
இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.
மீண்டும் என் நன்றிகள், மேடம். - VGK
ஐயா, எனக்குக் கண்ணில் பிரச்னை வந்ததில் இருந்து பதிவுகள் எழுதுவதையும், படிப்பதையும் குறைத்திருக்கிறேனே! இதைக் குறித்து ஒரு பதிவாகவே போட்டிருக்கிறேன். தாங்கள் அதைப் படிக்கவில்லை போலும்! :( எனக்கு இயன்றபோது தான் என்னால் வர முடியும்! :)
பதிலளிநீக்குGeetha Sambasivam April 12, 2016 at 1:53 PM
நீக்குவாங்கோ மேடம் .... மீண்டும் வணக்கம்.
//ஐயா, எனக்குக் கண்ணில் பிரச்னை வந்ததில் இருந்து பதிவுகள் எழுதுவதையும், படிப்பதையும் குறைத்திருக்கிறேனே! இதைக் குறித்து ஒரு பதிவாகவே போட்டிருக்கிறேன். தாங்கள் அதைப் படிக்கவில்லை போலும்! :(//
அடடா, எனக்கு இது விஷயம் உண்மையிலேயே தெரியாது மேடம். கேட்கவே மிகவும் வருத்தமாக உள்ளது. :(
நானும் இப்போது பிறர் பதிவுகள் பக்கம் போவதையும், படிப்பதையும், கருத்துக்கள் சொல்வதையும் பெரும்பாலும் குறைத்திருக்கிறேன்.
அதனால் தாங்கள் சொல்லும் இந்தக் குறிப்பிட்ட தங்களின் பதிவினையும் நான் பார்த்திருக்க மாட்டேன் என நினைக்கிறேன்.
தயவுசெய்து தங்களின் கண்களை மிகவும் ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொள்ளுங்கோ மேடம். அதுதான் மிகவும் முக்கியம்.
//எனக்கு இயன்றபோது தான் என்னால் வர முடியும்! :) //
அதனால் பரவாயில்லை மேடம். ஏற்கனவே உங்களுக்கு நான் இந்தத் தொடரின் முதல் பகுதியில் தங்களின் பின்னூட்டத்திற்கான என் பதிலில் ’எதா செளகர்யம்’ எனச்சொல்லியுள்ளேன்.
http://gopu1949.blogspot.in/2016/03/1.html
கண்களை வருத்திக்கொண்டெல்லாம், பின்னூட்டமிட வராதீங்கோ மேடம், ப்ளீஸ்.
Please take care of your health Madam. - VGK