என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

அ ஞ் ச லை - 5 [ பகுதி 5 of 6 ]


முன்கதை முடிந்த இடம்:

த்ரீ பெட் ஏ.ஸி. ரூமுக்குள் அழைத்துச்செல்லப்பட்டபின், சிவகுருவுக்கும், அஞ்சலைக்கும், குழந்தைக்கும் வயிற்றுப்பசிக்குச்சாப்பிட வேண்டிய அனைத்துப்பதார்த்தங்களும், அந்த ரூமுக்கே வரவழைக்க சிவகுருவால் ஆர்டர் செய்யப்பட்டன.  

குழந்தை அங்கு கும்மென்று போடப்பட்டிருந்த மெத்தை தலையணிகளில் ஜம்மென்று குதித்து விளையாடத் தொடங்கியது. மிகவும் ரம்யமான அந்த சூழ்நிலையில், சிவகுரு அஞ்சலையிடம் தன் மனம் திறந்து பேசத்தொடங்கினார்.     
=========================================================================
இப்போது பகுதி-5 .......... தொடர்கிறது

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பார்கள்.  அந்த தெய்வமே இன்று இந்த சிவகுரு ஐயா உருவத்தில் வந்து, தனக்கு தகுந்த நேரத்தில் உதவிட முன்வந்திருப்பதை அஞ்சலை உணரத்தொடங்கினாள்.

தான் மேற்கொண்டு எப்படி இந்தப் பொல்லாத உலகத்தில்,  மானம் மரியாதையுடன் வாழ்ந்து, இந்தத் தன்கைக்குழந்தையையும் ஆளாக்க முடியும் என்று கலங்கிப்போய் இருந்தவளுக்கு, வயிறு நிரம்ப நல்ல உணவுகள் வாங்கிக்கொடுத்து, இந்த மிகப்பெரிய ஹோட்டலில் இன்று ரூம் போட்டு தங்கச்சொல்லி, மனதுக்கு இதமாக ஒத்தடம் கொடுப்பது போல பலவித யோசனைகள் கூறி, எந்தவிதமான நிர்பந்தங்களோ, கட்டாயமோ செய்யாமல், நன்றாக யோசித்து உன் முடிவைச்சொல், நான் ஒரு மணி நேரம் கழித்து வருகிறேன் என்று சொல்லிப்போய் உள்ள, சிவகுரு ஐயாவை நினைத்து கண் கலங்கினாள், அஞ்சலை.

இப்படியும் சில நாகரீகமான, நல்ல உள்ளம் கொண்ட, பரந்த மனப்பான்மை கொண்ட, மிகச்சிறந்த மனிதர்கள் இருப்பார்களா, என வியந்துதான் போனாள்,அதிகம் படிக்காதவளும்,  சேரியிலேயே பிறந்து வளர்ந்து சேரியிலேயே வாழ்க்கைப்பட்டவளுமான, அஞ்சலை என்ற அப்பாவிப்பெண்.

சிவகுரு ஐயாவின் விருப்பப்படி நான் நடந்து கொள்ள சம்மதிப்பது சரிதானா; அது பாவச்செயல் இல்லையா? மறைந்த தன் கணவனுக்கும், அவர் நினைவாக விட்டுச்சென்றுள்ள என் குழந்தைக்கும் நான் செய்யும் துரோகச்செயல் இல்லையா? இது, எந்த ஒரு பெண்ணும் பொதுவாக ஏற்றுக்கொள்ளும் செயல் அல்லவே! உற்றார் உறவினர் என்று சொல்லிக்கொள்ளும் படியாக தனக்கு யாரும் இல்லையென்றாலும், ஊரார் சும்மா இருப்பார்களா? அஞ்சலையின் ஒரு மனசாட்சி இவ்வாறெல்லாம் பலவாறு, அவளைக்குழப்பலானது.

அதேசமயம் அவளின் மற்றொரு மனசாட்சி “நீ இன்றிருக்கும் ஆதரவற்ற நிலையில், உன்னிடம் இரக்கம் காட்டி, உனக்கும் உன் குழந்தைக்கும் ஒரு பாதுகாப்பும், நல்வாழ்வும் அமைத்துத்தர, ஒரு மனிதர் தானே முன்வந்து, உன் வீட்டுக்கதவைத் தட்டுகிறார்.  அவரைத்தட்டிக்கழித்து விட்டு, உன்னால் இந்தக்கைக்குழந்தையுடன், வறுமை என்ற ஓட்டைப்படகுடன், கணவனை இழந்த வெறுமைவாழ்வு என்னும் பெரும் கடலில் எதிர்நீச்சல் போடமுடியுமா?” என்று கேட்டு எள்ளி நகையாடியபடி மேலும் தொடர்ந்தது:

”வசதி வாய்ப்புள்ள சிவகுரு ஐயாவுக்கு, நீ இல்லாவிட்டால் உன்னைப்போலவே 10 அஞ்சலைகள் கிடைக்கக்கூடும். ஆனால் நீ நினைத்தாலும் இவரைப்போன்ற இன்னொரு சிவகுருவைக்காணவே முடியாது” என மிரட்டியது.   
  
இவ்வாறு “பணமா........பாசமா” என்ற குழப்பத்தில் இருந்த அஞ்சலை, தன் குழந்தைப்பக்கம் திரும்புகிறாள்.

பால் சாப்பிட்ட திருப்தியில், உறங்கும் தன் மகன் தூக்கத்திலும் ஏதோ இன்பக்கனா கண்டது போல கன்னத்தில் குழிவிழ சிரிப்பதைக்கண்டவள், அவனைக்குனிந்து முத்தமிடுகிறாள். 

எப்படிக்கூட்டிக்கழித்து பெருக்கிவகுத்துப் பார்த்தாலும்,  தான் இன்றுள்ள நிலையில், சிவகுரு ஐயா சொல்வதே சரியென்று படுகிறது அவளுக்கு.   ஐயா சொல்படி கேட்டு நடந்தால்தான், அவருக்கும், அவர் மனைவிக்கும், தனக்கும், தன் குழந்தைக்குமே பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தோம் என்ற ஆறுதல் கிடைத்து, தன் சொச்ச வாழ்நாளாவது ஓரளவு தன் மகனுக்கு அமையப்போகும் நல்லதொரு வளர்ப்பையும், வாழ்க்கையையும் நினைத்தாவது இன்பமாகக் கழியக்கூடும் என்ற நல்லதொரு எண்ணத்துடன் ஒரு இறுதி முடிவுக்கு வந்திருந்தாள், அஞ்சலை.

......................
................................
..........................................

/ இடைவேளை /

.........................
....................................
...............................................

வீட்டு ஹாலின் சுவரைச்சுற்றிலும், பல்வேறு பாவனைகளில் சிரித்த வண்ணம் குழந்தைகள் படங்கள் நிறையவே தொங்கவிடப்பட்டிருந்தன. தினமும் போல ஒவ்வொன்றாக அவற்றைப்பார்த்து ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தாள் மல்லிகா.  

மணி மாலை 6 என்பதை ஆறு முறை ஒலித்த அந்த சுவர் கடிகாரம் நினைவு படுத்தியது. பூஜை அறையில் விளக்கேற்றிய அவளுக்கு அங்கு குனிந்த நிலையில், குழந்தை ரூபத்தில் இருந்த வெண்ணெய் திருடும் குட்டிக்கிருஷ்ணன் தன்னைப்பார்த்து குறும்புடன் சிரிப்பது போலத்தோன்றியது. 

காலையில் புறப்பட்டுச்சென்ற தன் கணவர் இன்னமும் வரக்காணோமே என்ற கவலையில் செல்போனில் தொடர்பு கொள்ள நினைத்தவளின் கவனத்தை வாசலில் கேட்ட அழைப்பு மணி ஈர்த்தது. 

கதவைத்திறந்த மல்லிகாவுக்கு, கையில் கஷ்குமுஷ்குன்னு ஒரு பணக்காரக்குழந்தையுடன், தன் கணவர் வந்து நிற்பதைக்கண்டு, சந்தோஷத்தில் பிரமிப்பு ஏற்பட்டது.

தலை நிறைய சுருட்டை முடி, குண்டு மூஞ்சி. குறுகுறுப்பான பார்வை. குட்டிக்கிருஷ்ணன் போன்றே சற்று கருமைநிறம். காது நுனிகளில் சொருகிய வண்ணம் தங்க அவல் போன்ற தொங்கட்டான்கள். கைக்கு ஒன்று வீதம் பட்டையான தங்க வளையல்கள். விரலில் குட்டியான அழகிய மாதுளைப்பழ முத்துக்கல் பதித்த மோதிரம். அந்த மோதிரத்தைக் கைவளையளுடன் இணைத்த பாம்பரணை போன்ற மெல்லியதோர் தங்கச்செயின்.  

கழுத்தினில் மினுமினுக்கும், மெஷின் கட்டிங்க்கில் செய்த வெந்தய டிசைன் தங்கச்சங்கிலி. இடுப்பில் தங்கத்தில் அரணா. தனியாக தங்க நாய்க்காசுகள், தங்கத் தாயத்துடன் கூடிய ஒரு கருப்புக்கயிறு.

கால்கள் இரண்டிலும் முத்துமுத்தாக ஒலிஎழுப்பும் வெள்ளிக்கொலுசுகள். பாதங்களில் நடந்தால், பூனை போல ஒலி எழுப்பும் அழகிய பூப்போட்ட பூட்ஸுகள். புதுச்சட்டை, புது டிராயர், கமகமக்கும் குழந்தைக்ளுக்கான விசேஷ பெர்ஃப்யூம் மணம்.  

தன்னிடம் தாவிய அந்தக்குழந்தையை அள்ளி எடுத்து முத்தமிட்டாள் மல்லிகா.

கூடவே வந்த வேலையாள் ஒருவன் ஒரு பெரிய அட்டைப்பெட்டியையும். அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த குட்டி மெத்தை தலையணியுடன் கூடிய, தொங்கும் தொட்டிலையும் வைத்துவிட்டு, சிவகுருவிடம் விடை பெற்றுச்சென்றான். 

அந்த அட்டைப்பெட்டி நிறைய, குழந்தைகளுக்கான விலை உயர்ந்த, தரமான விளையாட்டுச் சாமான்கள், ரப்பர் பொம்மைகள், பந்துகள், பால் பவுடர் டப்பாக்கள், ஃபீடிங் பாட்டில்கள், நிப்பிள்கள், நாப்கின்கள் இத்யாதி இத்யாதி, வாங்கிக்குவித்திருந்தார், சிவகுரு.

”இது யார் குழைந்தைங்க?” ஒருவித ஏக்கத்துடனும், மிகுந்த படபடப்புடனும் கேட்டாள், மல்லிகா.




தொடரும்

37 கருத்துகள்:

  1. பால் சாப்பிட்ட திருப்தியில், உறங்கும் தன் மகன் தூக்கத்திலும் ஏதோ இன்பக்கனா கண்டது போல கன்னத்தில் குழிவிழ சிரிப்பதைக்கண்டவள், அவனைக்குனிந்து முத்தமிடுகிறாள்.


    ...so sweet! :-)

    பதிலளிநீக்கு
  2. அழகாய் கதை செல்கிறது.... வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. அழகாக இயல்பாகச் செல்கிறது கதை
    ஆனாலும் இடைவேளை என
    குழைந்தை கைமாறும் இடத்தை
    விரிவாகச் சொல்லாமல்
    மறைத்துச் சென்றுள்ளதில்
    ஏதோ இருக்கிறது என்ற எண்ணத்தை
    தவிர்க இயலவில்லை
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

    பதிலளிநீக்கு
  4. செல்வச் செழிப்புடன் சிரித்த குழந்தை மனதில் நிறைகிறது.

    பதிலளிநீக்கு
  5. ரமணி சார் சொன்னது போல இடைவேளையில் ஏதோ ஒரு முக்கியமான விஷயம் தொக்கி நிற்பது புரிகிறது. அடுத்த பகுதிக்கான காத்திருப்புடன்….

    பதிலளிநீக்கு
  6. ஆறு மனமே ஆறு. அந்த கோபு சார் கட்டளை ஆறு.

    பதிலளிநீக்கு
  7. நான் நினைக்கும் முடிவை ஒரு சீல்ட் கவரில் வைத்திருக்கிறேன்!! :-)

    பதிலளிநீக்கு
  8. இது யார் குழந்தை? இது எங்களுக்குள்ளும் எழும் கேள்வி. தெரிந்து கொள்ளும் ஆவலுடன் காத்திருக்கிறோம்….

    பதிலளிநீக்கு
  9. இது சஸ்பன்ஸ் பகுதியா?என்ன சொன்னாரென்ற எதிர்பார்ப்புடன்.

    பதிலளிநீக்கு
  10. ஆஹா...சூப்பர்..இதை..இதைத் தான் எதிர்பார்த்தேன், தங்களிடம்!!

    பதிலளிநீக்கு
  11. கதை சற்று தாங்கள் முன்பு எழுதிய "தை வெள்ளிக்கிழமை"யை ஒத்திருக்கிறதா?

    பதிலளிநீக்கு
  12. தமிழ்வாசி - Prakash said...
    //உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
    பார்க்கவும்: புதன் படைப்புகளின் சரமாக//

    என்னை இன்று தாங்கள் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளதற்கு, என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    என்றும் அன்புடன்
    வை. கோபாலகிருஷ்ணன்.

    பதிலளிநீக்கு
  13. வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதற்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  14. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. பால் சாப்பிட்ட திருப்தியில், உறங்கும் தன் மகன் தூக்கத்திலும் ஏதோ இன்பக்கனா கண்டது போல கன்னத்தில் குழிவிழ சிரிப்பதைக்கண்டவள், அவனைக்குனிந்து முத்தமிடுகிறாள். //

    அருமையான வர்ணனை.

    கதை மிக அருமையா வருகிறது .தொடருங்கள் .

    சின்ன சின்ன எழுதுப்பிழை இருப்பதாய் தோன்றுகிறது..

    பதிலளிநீக்கு
  16. இந்தப்பகுதிக்கு, அன்புடன் வருகை தந்து, மேலான கருத்துக்கள் கூறி, உற்சாகப்படுத்தியுள்ள உங்கள் அனைவருக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    பதிலளிநீக்கு
  17. ”வசதி வாய்ப்புள்ள சிவகுரு ஐயாவுக்கு, நீ இல்லாவிட்டால் உன்னைப்போலவே 10 அஞ்சலைகள் கிடைக்கக்கூடும். ஆனால் நீ நினைத்தாலும் இவரைப்போன்ற இன்னொரு சிவகுருவைக்காணவே முடியாது” என மிரட்டியது.

    உண்மைதானே ! அஞ்சலைக்கு இதனைவிட்டால் வேறு வழி ஏது?

    பதிலளிநீக்கு
  18. பூஜை அறையில் விளக்கேற்றிய அவளுக்கு அங்கு குனிந்த நிலையில், குழந்தை ரூபத்தில் இருந்த வெண்ணெய் திருடும் குட்டிக்கிருஷ்ணன் தன்னைப்பார்த்து குறும்புடன் சிரிப்பது போலத்தோன்றியது.

    கதை எழுதிய ஆசிரியர் தன் சிறுவயது கோபால கிருஷ்ணன் படத்தை வைத்திருப்பார் !

    பதிலளிநீக்கு
  19. கையில் கஷ்குமுஷ்குன்னு ஒரு பணக்காரக்குழந்தையுடன், தன் கணவர் வந்து நிற்பதைக்கண்டு, சந்தோஷத்தில் பிரமிப்பு ஏற்பட்டது.

    பிரமிப்பான கதை !

    பதிலளிநீக்கு
  20. இராஜராஜேஸ்வரி said...
    ”வசதி வாய்ப்புள்ள சிவகுரு ஐயாவுக்கு, நீ இல்லாவிட்டால் உன்னைப்போலவே 10 அஞ்சலைகள் கிடைக்கக்கூடும். ஆனால் நீ நினைத்தாலும் இவரைப்போன்ற இன்னொரு சிவகுருவைக்காணவே முடியாது” என மிரட்டியது.

    //உண்மைதானே ! அஞ்சலைக்கு இதனைவிட்டால் வேறு வழி ஏது?//

    கதையில் அஞ்சலைக்கு ஆதரவாக ஓர் சிவகுரு.

    வலையில் என் எழுத்துக்களுக்கு ஆதரவாக நீங்கள்.

    வேறு வழி எதுவும் வேண்டவே வேண்டாம். இதுவே நல்லாயிருக்கு.

    அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் நன்றியோ நன்றிங்கோ!

    பதிலளிநீக்கு
  21. இராஜராஜேஸ்வரி said...
    பூஜை அறையில் விளக்கேற்றிய அவளுக்கு அங்கு குனிந்த நிலையில், குழந்தை ரூபத்தில் இருந்த வெண்ணெய் திருடும் குட்டிக்கிருஷ்ணன் தன்னைப்பார்த்து குறும்புடன் சிரிப்பது போலத்தோன்றியது.

    //கதை எழுதிய ஆசிரியர் தன் சிறுவயது கோபால கிருஷ்ணன் படத்தை வைத்திருப்பார் !//

    மிகப்பெரிய ஐஸ்கட்டியை என் தலையில் வைத்து உச்சி குளிர வைச்சுட்டீங்களே!

    மிகவும் சந்தோஷம். ;)))))

    அன்பான வருகைக்கும், அழகான குட்டி கோபால கிருஷ்ணன் பற்றிய கருத்துக்கும், நன்றியோ நன்றிங்க, மேடம்.

    பதிலளிநீக்கு
  22. இராஜராஜேஸ்வரி said...
    கையில் கஷ்குமுஷ்குன்னு ஒரு பணக்காரக்குழந்தையுடன், தன் கணவர் வந்து நிற்பதைக்கண்டு, சந்தோஷத்தில் பிரமிப்பு ஏற்பட்டது.

    //பிரமிப்பான கதை !//

    பிரமிப்பூட்டும் கருத்துக்களைக்கூறி, அன்புடன் மீண்டும் வருகை தந்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    பதிலளிநீக்கு
  23. மல்லிகாவின் பிரமிப்பு என்னையும் தொற்றிக் கொண்டது.அருமை.

    பதிலளிநீக்கு
  24. Asiya Omar said...
    //மல்லிகாவின் பிரமிப்பு என்னையும் தொற்றிக் கொண்டது.அருமை.//

    தங்களின் அன்பான வருகையும் ஒரே நாளில் இந்தக்கதையும் அனைத்துப் பகுதிகளையும் மிகுந்த ஆர்வத்துடன் படித்து, அதுவும் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியே கருத்துக்கூறியிருப்பதும்,
    எனக்கும் பிரமிப்பாகவே உள்ளது.

    மிக்க நன்றி, மேடம்.

    பதிலளிநீக்கு
  25. அஞ்சலையின் குழந்தைக்கு ஸ்ரீ மகாலட்சுமின் கடைக்கண் பார்வை பட்டிடிச்சு...அப்பறம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா சகோதரி!
      மிக்க மகிழ்ச்சி.
      தங்கள் வாக்கு தங்கமாக பலிக்கட்டும்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  26. முதல் பாதி கதையில் சஸ்பென்ஸை உச்சத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டு அடுத்த பாதியில் கதைக்குத் தொடர்பில்லாமல் ஒரு நிகழ்வைச் சொல்லும் பாணி ராசிப்புக்குரியது. சஸ்பென்ஸ் என்னவென்று யூகிக்க முடியும் என்றாலும் கதையின் சுவாரஸ்யத்தைக் கூட்ட இந்த டெக்னிக் பலனளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  27. எல்லாருடைய எதிர் பார்ப்பையும் ஏமாற்றும் படி என்னமோ சொல்ல போரீங்கதானே????

    பதிலளிநீக்கு
  28. அதான, அவ்வளவு சுலபமா முடிவை தெரிஞ்சுக்க முடியுமா? தமிழ் சினிமா வசனம் போல் வாசகர்களின் மனம் திக், திக்கென்று அடித்துக் கொள்ள வேண்டாமா?

    அடிச்சுக்காத மனசே, அடுத்த பகுதிக்கு சட்டுன்னு போயிடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya May 17, 2015 at 10:48 PM

      //அதான, அவ்வளவு சுலபமா முடிவை தெரிஞ்சுக்க முடியுமா? தமிழ் சினிமா வசனம் போல் வாசகர்களின் மனம் திக், திக்கென்று அடித்துக் கொள்ள வேண்டாமா?//

      :))))))

      //அடிச்சுக்காத மனசே, அடுத்த பகுதிக்கு சட்டுன்னு போயிடுவோம்.//

      இது விஷயத்தில் ஜெயா மிகவும் லக்கிதான் ! :)

      நீக்கு
  29. இடைவேளை வரக்கும் அஞ்சல நெனப்பத பாத்தா வேரமாதிரி நெனப்பு வருது. அதன் பொரவால அவரு கொளந்தயோட வாரத பாத்தா வேர மாதிரி தோணுது.

    பதிலளிநீக்கு
  30. முதலில் படிக்கும்போது அஞ்சலை நினைப்பதை படித்தால் புருசனுக்கு துரோகம் செய்வதுன்னுலாம் படிக்கச்சே வேரமாதிரிதான்நினக்க தோணறது. அப்படில்லாம் இருக்காதுன்னு அடுத்து வரும் வரிகள் தெளிவு படுத்தறது. அந்த அம்மா கொஞ்சுவது ஒருவேளை அஞ்சலையின் குழந்தைதானோ.

    பதிலளிநீக்கு
  31. ஆஹா..டிரக்டோரியல் டச் அள்ளுது...அடுத்த மூவ் என்ன என்ன...???

    பதிலளிநீக்கு
  32. நானும் டெய்லி ஒரு பதிவையாவது படிச்சுட நெனக்கிறேன்... வேலை படிச்சு வாங்குவது... வாரம் ஒருமுறை வருவதே கூட முடியல.. பட் உங்க பதிவுகள் படிச்சாலே ரொம்ப ரிலாக்ஸ் ஆகுது.. முதலில் அஞ்சலை யோசிப்பதை பார்க்கும்போது வேற விதமாகத்தான் நினைக்க தோணிச்சு..போக போகத்தான் ஓரளவு புரிய முடியுது.. குழந்தையை தத்து கேக்கதான் சிவகுரு நினைக்கறாரனு புரியுது..அவங்க மனைவியும் அந்த அழகான குழந்தையைப் பார்த்து ஆசையாக கைநீட்டவும் குழந்தையும் அவங்களிடம் தாவுவதும். சந்தோஷ நேரங்கள்....ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... July 6, 2016 at 10:01 AM

      //.....................................................
      உங்க பதிவுகள் படிச்சாலே ரொம்ப ரிலாக்ஸ் ஆகுது..
      ......................................................//

      வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆதரவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு