About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, October 9, 2013

62] உண்மையானவன் ஒருவனே !

2
ஸ்ரீராமஜயம்



ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனதைச் சாந்தமாக வைத்துக்கொண்டு, வேறு நினைவுகளை மனத்தில் செலுத்தாமல். கடவுளது தியானத்தில் அமர வேண்டும்.

வேறு நினைவுகள் இல்லாமல் தியானம் செய்வதால், நாளடைவில் புத்தியானது தெளிவடையும். ஆசையையும் கோபத்தையும் அடக்குவதற்கு இது ஒரு சாதனமாகும்.

நாம் பலவிதமான பொய்களாலேயே துன்பங்களுக்கு ஆளாகிறோம். பொய்யினால் பெறும் ஆனந்தமும் விரைவிலேயே பொய்யாகி விடும்.

உண்மையில் எப்போதும் ஆனந்தமாக இருப்பதற்கு எப்போதும் உண்மையாக இருக்கிறவனைப் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும். 

உண்மையாக இருக்கிறவர் இறைவன் ஒருத்தர்தான்.

தியானம்  பண்ண வேண்டும். அதைவிட முக்கியமாக தியானம் பண்ணினேன் என்ற எண்ணத்தையும் தியாகம் பண்ணிவிட வேண்டும்.

oooooOooooo

ஒருசில சுவையான நிகழ்ச்சிகள்.

ஜோஸ்யர் ஒருத்தர் மஹா பெரியவாளை தரிசிக்க வந்தார்.

பெரியகுடும்பம்.......வருமானம் போறலை, ஜோஸ்யம் சொல்லறதிலே வரும்படி ரொம்பகொறைச்சல்..ரொம்ப கஷ்டம்.." என்று முறையிட்டார்.
"நீ.......... ஒங்க அப்பா  இருந்த பூர்விக கிருஹத்லதானே இருக்கே?""இல்லே.... 
அதுல அண்ணா இருக்கான். அதுக்கு மேற்கு பக்கம் ஒரு ஆத்துல இருக்கேன்" 
”நீ அங்க இருக்க வேணாம். பூர்விக க்ருஹத்துலேயே கிழக்கு பக்கத்துல பழையமாட்டு கொட்டாய் இருக்கோன்னோ? அந்த எடத்ல ஒரு குடிசை போட்டுண்டு இரு.  
பரம்பரையா அம்பாளை பூஜை பண்ணின குடும்பம். மாட்டுக் கொட்டகைல இருங்கோ""..........அதோட, இன்னொண்ணும் கேளு.
எல்லா க்ரஹங்களையும் நன்னா........திட்டறயோன்னோ ! ....உங்க ஜாதகத்ல குரு நீசன், சனி பாபி, புதன் வக்கிரம்!... இப்பிடியெல்லாம் வாயால சொல்லக் கூடாது. 
குரு...ங்கறது பெரிய கிரகம். தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபம்....அவரைப் போய் நீசன், பாபி, வக்கிரம்..ன்னெல்லாம் திட்டக் கூடாது. சனி, சூர்யனோட புத்திரன். ஈஸ்வரபட்டம் வாங்கிண்டவர். அவரைப் போய் பாபி...ங்கறே!.....கிரகங்கள் சரியான எடத்ல இல்லை.....கால பலன் சரியில்லைன்னு சொன்னா போறுமே!.......
பொண்பிள்ளை ஜாதக பொருத்தம் பாக்க வரவா கிட்டே "பொருத்தமில்லை" ன்னு நிர்தாட்சண்யமா சொல்ல வேணாமே!
பொண்ணுக்கு விவாக காலம் வர நாளாகும், பையனுக்கு புத்திர பாக்கியம் கேள்விக் குறி ...ங்கற மாதிரி சொல்லலாம்.
முப்பது வயசாகியும் நெறைய பொண்கள் கல்யாணம் ஆகாம இருக்கா. அப்பிடிப்பட்டவாளுக்கு வரன், ஜாதக பொருத்தம் பாக்க வந்தா, முடிஞ்சவரை நிராகரிக்காம பதில் சொல்லணும். கல்யாண விஷயத்ல, பொண், பையன் ஜாதகப் பொருத்தத்துக்கு ஜாஸ்தி importance குடுக்காம, குலம்,கோத்ரம், மனப் பொருத்தம் இருந்தா போறும். பழங்காலத்ல ஜாதகப்பொருத்தம் அவ்வளவு முக்யமா இருந்ததில்லை".
ஜோஸ்யர் திருப்தியோடு "இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்" என்று சொல்லிபிரசாதம் வாங்கிக் கொண்டு போனார்.
 

ஒரு நடுவயது பையனை அழைத்துக் கொண்டு ஒரு தாயார் வந்தாள், மனஸின் துக்கம் மறைக்க முடியவில்லை. ஆம். பையனுக்கு பைத்தியம்! மருந்து மந்திரம் எல்லாம் பண்ணியாச்சு. ஒன்றும் பிரயோஜனமில்லை. ஆட்டம், பாட்டம், கூச்சல் இல்லாமல் இருந்தாலே போறும் என்றாகிவிட்டது தாயாருக்கு! அவன் வாயில் எப்போதும் எச்சில் வழிந்து கொண்டே இருந்தது. பெரியவா அந்த பையனையே பார்த்துக் கொண்டிருந்தார்.
"நாக்குல எச்சல் வந்தா... வாணி.... [சரஸ்வதி] ன்னு சொல்லுவா, கவலைப் படாதே ! நீ... பிராம்மிக்ருதம்ன்னு ஒரு மருந்து....... கேள்விப் பட்டிருக்கியோ? கேரளால கெடைக்கும். 
வல்லாரை நெய் ஒரு பாட்டில் வாங்கு. அதை வெச்சுண்டு, லக்ஷம் ஆவ்ருத்தி பஞ்சாக்ஷர ஜபம் பண்ணிட்டு, இந்த பையனுக்குகுடு........ அப்புறம், வேப்பங்கொட்டை தெரியுமோன்னோ? ரெண்டு மூணுகொட்டையை நன்னா... வெழுமூணா நசுக்கி தேன்ல கொழைச்சு தெனமும் இவன் நாக்குலதடவிண்டு வா......" 
சாக்ஷாத் அம்மாவே குழந்தைக்கு மருந்து உரைத்தாள். ரெண்டு மாசம் கழித்து, தாயாரும் பையனும் வந்தார்கள். பையனிடம் சேஷ்டை இல்லை. மக்கு மாதிரி, மலங்க மலங்க பார்த்துக் கொண்டிருந்தானே தவிர, வேறு தொந்தரவு எதுவும் இல்லை. "பெரியவா அனுக்ரஹத்ல பையன் கொஞ்சம் கொஞ்சம் படிக்க ஆரம்பிச்சிருக்கான்" என்றாள் தாயார் நிம்மதியான பெருமூச்சுடன். 
கையை தூக்கி ஆசிர்வதித்தார்.



மெட்ராஸ் சம்ஸ்க்ருத கல்லூரியில் முகாம். பெரியவாளுக்கு நெஞ்சு வலி. ரொம்ப தவித்தார். ஆயுர்வேத மருந்து சாப்பிட்டும், வலி குறையவில்லை. 
மானேஜருக்கு ரொம்ப கவலையாகிவிட்டது. ரொம்ப தயங்கி தயங்கி பெரியவாளிடம் சொன்னார் " ஆழ்வார்பேட்டைல டாக்டர் வைத்யநாதனுக்கு சொல்லி அனுப்பறேன்.
பெரியவா உத்தரவு குடுத்தா.......... ”நேக்கு என்னமோ அவர் வந்து பாத்தா தேவலைன்னு படறது........" அதிசயம்! உத்தரவாயிற்று!

டாக்டர் வைத்யனாதையர் வந்து பட்டுத் துணி போட்டு, நாடித்துடிப்பு பார்த்தார். சரியா இருந்தது. ரத்த அழுத்தம் பார்த்தார். ஏகமா ஏறி இருந்தது. " B P எக்கச்சக்கமா எகிறியிருக்கு. ஒடனே மருந்து சாப்பிடணும் பெரியவா"

"ஆட்டும்...ஆட்டும். ஒரு அரைமணி கழிச்சு வந்து மறுபடி டெஸ்ட் பண்ணு"
அரைமணி கழித்து டெஸ்ட் பண்ணினால், ஒரேயடியா கீழே போயிருந்தது. நமுட்டாக சிரித்துக் கொண்டே....... " அப்போ டெஸ்ட் பண்ணிட்டு B P ஜாஸ்தின்னு சொன்னே, இப்போ என்னடான்னா..... ரொம்ப கம்மி..ங்கறே. B P ஜாஸ்தியானா என்னாகும்? கம்மியானா என்னாகும்?"

"B P ஜாஸ்தியானா ஹெமரேஜ் ஆகி உசிருக்கே ஆபத்து! கொறைஞ்சு போனா, மயக்கம் போட்டு கீழே விழுந்துடுவா. அதுவும் ஆபத்து."

பெரியவாளான குழந்தை கேட்டது " ஆனா, நேக்கு அப்பிடி ஒண்ணும் ஆகலியே? ஹெமரேஜும் வரல்லே..... மயக்கமும் வரலியே?"

டாக்டர், மண்டையை குடைந்தார் " அதான் எனக்கும் ஆச்சரியமா இருக்கு! ரத்த அழுத்தம் மேல போறதும், கீழ இறங்கறதும் சாதாரணமா நடக்க கூடிய காரியமில்லை.  பெரியவா சரீரம், பெரியவாளோட ஆக்ஞைக்கு   கட்டுப்பட்டு நடக்கறதுன்னு தோணறது......."
சாக்ஷாத் வைத்யநாதனுக்கு வைத்தியம் பார்த்தால் ..................... இப்படித்தான்!
[Thanks to Mr RISHABAN R. SRINIVASAN Sir, for forwarding these to me]


நேற்று என் மூத்த சகோதரி வீட்டு 
கொலுவுக்குச் சென்றிருந்தேன். 

அங்கு எடுத்த சில புகைப்படங்கள்:





என் பெரிய அக்கா தன் பேத்திகள் இருவருடன்.
[இருவரும் இரட்டைக் குழந்தைகள்]


 




நேற்று அங்கு பாட்டுப்பாடிய குழந்தைகள் 


பாட்டுட்டீச்சர் போல குழந்தைகள் அருகே 
அமர்ந்திருக்கிறாரே ஒருவர் ....

அவரும் மிகப்பிரபலமான 
ஸ்வீட் வாய்ஸுடன் கூடிய பாடகியே 
என எல்லோரும் சொல்லுவார்கள். ;)

அவரும் நேற்று சில பாடல்கள் பாடி மகிழ்வித்தார்.

[1] ஆடாது ..... அசங்காது ..... வா ..... கண்ணா .......

[2] பெட்டி நிறைய .... பூக்கொணர்ந்து ..... பூஜிப்பேன் அம்பாள் .....

[3] கண்ணன் மேல் ஒரு ஹிந்திப்பாட்டு*

*டுமுக்கு டுமுக்கு பஹ, 
குமுக்க குஞ்ச பஹ,
சபல சரண ஹரி ஆயே!

டுமுக்கு டுமுக்கு பஹ, 
குமுக்க குஞ்ச பஹ,
சபல சரண ஹரி ஆயே!

மேரே ப்ராணபு லாவன ஆயே !
மேரே நயனலு பாவன ஆயே !!

மேரே ப்ராணபு லாவன ஆயே !
மேரே நயனலு பாவன ஆயே !!

டுமுக்கு டுமுக்கு பஹ, 
குமுக்க குஞ்ச பஹ,
சபல சரண ஹரி ஆயே!

...........  .......... ......... ......... 
...........  .......... ......... ......... 





[இந்த இனிமையான பாடலின் சில வரிகள் 
அவர்களுக்கே இப்போது மறந்து போய் உள்ளன. 

இந்தப் பாடலை முழுவதுமாகத் தெரிந்தவர்கள் 
அதை முழுவதுமாக எனக்கு மெயில் மூலம் 
அனுப்பி வைத்தால் மிகவும் 
நன்றியுடையவனாக இருப்பேன்.
Mail ID : valambal@gmail.com ]

-oOo-

மிகுந்த சுவையான பால் பாயஸமும், 
எனக்கு மிகவும் பிடித்தமான 
நிலக்கடலை சுண்டலும் பிரஸாதமாக
நிறைய கொடுத்து மகிழ்வித்தார்கள்.

-oOo-

அடியேன் அன்பளிப்பாக வழங்கிய
ஒரு ஜோடி பாசப் பறவைகள் இதோ:


தங்கமுலாம் பூசிய பாசப்பறவைகள்

[பாசம் என்றும் எப்போதும் தங்க வேண்டிக்கொடுத்தது]



- சுபம் -



ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியிடப்படும்.





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

74 comments:

  1. அன்பின் வைகோ

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகப பெரியவாளுக்கு உடல் நலமில்லையா - நம்ப முடிகிற்தா - முடியவில்லை,

    //
    பெரியவா சரீரம், பெரியவாளோட ஆக்ஞைக்கு கட்டுப்பட்டு நடக்கறதுன்னு தோணறது......."
    //
    //சாக்ஷாத் வைத்யநாதனுக்கு வைத்தியம் பார்த்தால் ..................... இப்படித்தான்! // அவர்தான் மகாப்பெரியவா

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. அன்பின் வை.கோ

    பெரிய அக்கா வீட்டுக் கொழ்லு அற்புதம் அருமை - கண்டு களித்தேன். பேத்திகள் இருவரும் பாட்டியுடன் - படங்கள் அருமை.

    பாடும் குழந்தைகளுடன் மிகப் பெரிய பாடகியும் சேர்ந்து பாட கொலு அமர்க்கள்மாக இருந்திருக்கும்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  3. //ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனதைச் சாந்தமாக வைத்துக்கொண்டு, வேறு நினைவுகளை மனத்தில் செலுத்தாமல். கடவுளது தியானத்தில் அமர வேண்டும்.//
    செய்ய முடிவது இது.
    //தியானம் பண்ண வேண்டும். அதைவிட முக்கியமாக தியானம் பண்ணினேன் என்ற எண்ணத்தையும் தியாகம் பண்ணிவிட வேண்டும்.//
    செய்யவே முடியாதது இது!
    ஜோசியம் சொல்கிறவர்கள் எல்லோருமே நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.
    தாயின் மனக்குறையை உணர்ந்து சொன்ன வைத்தியம். அதுதான் பலித்திருக்கிறது.
    வைத்தியநாதன் வைத்தியரிடம் விளையாடிய திருவிளையாடல்?
    உங்களது சகோதரியின் வீட்டு கொலுவுக்கு நாங்களும் வந்து பாட்டுப்பாடி தாம்பூலம் எடுத்துக் கொண்டோம். நன்றி!

    ReplyDelete
  4. /// முக்கியமாக தியானம் பண்ணினேன் என்ற எண்ணத்தையும் தியாகம் பண்ணிவிட வேண்டும்... ///

    இது மிகவும் உணர வேண்டியது..

    வைத்யநாதனுக்கு வைத்தியம் பார்த்தால் சோதனையும் வெற்றி தான்....

    நன்றி ஐயா... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. ஜோடி பாசப் பறவைகள் மனதை கவர்ந்தது....

    ReplyDelete
  6. எங்க ஏரியலா இந்த அளவுக்கு அழகா கொலு வச்சு பாத்ததில்ல..படங்கள் அருமை...தங்கமுலாம் பூசிய பொம்மைகள் அழகோ அழகு..

    ReplyDelete
  7. கொலு தன அழகால் வெகுநேரம் மனதில் கொலு வீற்றிருந்தது

    ReplyDelete
  8. மஹாப்பெரியவருக்கே வைத்தியம். ப்ரஶர் ஏறுவதும், இறங்குவதும் அவர் கண்ட்ரோலிலே. எல்லோருடயதையும் ஏற்றுக்
    கொள்கிரார் அல்லவா ? அவருடைய ஆக்ஞைக்கு யாவும் கட்டுப்பாட்டுடன் இருக்கிரது..
    கொலு பிரமாதம். படங்களும் பிரமாதம். பெரியவர்கள் இருக்கும்
    வீடு,ஆசாரமாக இருக்கும் பெரியவர்கள், குழந்தைகள், ஒரு ரீதியான குடும்பம்,வயதில் பெரிய நாத்தனார் அவர்களுடன்,
    ஸகோதரியுடன் பாசப்பிணைப்பு, நல்லதொரு குடு்ம்பத்தை
    ஸந்தித்த மகிழ்ச்சி,பாடும் குழந்தைகள், இப்படி ஒரு அழகான உலகத்தைப் பார்த்த மகிழ்ச்சி ஏற்பட்டது.
    நல்லதொரு நவராத்திரி. நன்றி
    பாசப் பறவைகள். ஸரியான வெகுமதி. அன்புடன்.

    ReplyDelete
  9. உண்மையாய் இருப்பதற்குச் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அட்சரலட்சம் பெறும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. தியானம் பண்ண வேண்டும். அதைவிட முக்கியமாக தியானம் பண்ணினேன் என்ற எண்ணத்தையும் தியாகம் பண்ணிவிட வேண்டும்.

    எத்தனை வருடங்களாக தியானம் தொடர்ந்தாலும் ஒவ்வொருமுறையும் அன்றுதான் முதன் முறையாக தியானம் ஆரம்பிக்கிறோம் என்கிற உணர்வுடன் தியனிக்கவேண்டும் ..!

    ReplyDelete
  11. தங்கமுலாம் பூசிய பாசப்பறவைகள்

    பாசம் என்றும் எப்போதும் தங்க வேண்டி உடன்பிறந்த பாசக்கிளிக்கு உன்னத பரிசுகள்..!!..!

    ReplyDelete
  12. கொலுன்னாவே சந்தோஷம்... இங்கு வேலூரில் ஒரு வீட்டில் ஒரு வீடு அளவுக்கு பெரிய்ய கொலு வைப்பாங்க... எல்லோரும் அதிசயமா போய் பார்ப்போம். பொது மக்கள் நிறைய பேர் வர்றதால அவங்க சாக்லேட்தான் தருவாங்க... நீங்க சுண்டல், பொங்கல் எல்லாம் தர்றதா இருந்தா உங்க வீட்டு கொலுவுக்கு வர்றேன்...

    ReplyDelete
  13. டுமக டுமக பக Print
    ராகம் :
    தாளம் :

    பல்லவி :
    டுமக டுமக பக குமக குஞ்ஜமக
    சபல சரண ஹரி ஆயே

    சரணம் :
    மேரேப்ராண் புலாவன் ஆயே
    மேரே நயன லுபாவன்ஆயே ...1

    ஜிமக ஜிமக ஜிம ஜிமிக ஜிமிக ஜிம
    நர்த்தன பத வ்ரஜ ஆயே
    மேரேப்ராண் புலாவன்ஆயே
    மேரே நயன லுபாவன்ஆயே ...2

    அமல கமல கர முரளி மதுர தர
    பன்ஸி பஜாவன்ஆயே
    மேரேப்ராண் புலாவன்ஆயே
    மேரே நயன லுபாவன்ஆயே ...3

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி October 9, 2013 at 3:44 AM

      வாங்கோ வாங்கோ வாங்கோ, வணக்கம். வந்தனம்.

      //டுமக டுமக பக Print
      ராகம் :
      தாளம் :

      பல்லவி :
      டுமக டுமக பக குமக குஞ்ஜமக
      சபல சரண ஹரி ஆயே //

      உடன் பதில் அதுவும் அம்பாளிடமிருந்து வந்துள்ளதில், பாடகிக்கும் எனக்கும் மிகவும் சந்தோஷம். ;)))))

      மறந்து போன சில வரிகளை நினைவு படுத்திக்கொண்டு மகிழ்ந்தார்கள்.

      இருப்பினும் இதுதவிர மேலும் சிலவரிகள் உள்ளதாம்:

      அவை என்னவென்றால்:

      அருண கருண கம
      சின்ன பின்ன தம
      கருண பால ரவி ஆயே !

      அதெல்லாம் நினைவில் உள்ளதாம். முழுப்பாடலும் முடிந்தால் அனுப்புங்கோ அல்லது லிங்க் கொடுங்கோ.

      அன்புடன் VGK

      Delete
  14. நவராத்திரி கொலுவுக்கு அழைத்ததால் கூப்பிட்டதுமே வந்துட்டேன். :))) பெரியவா பத்தின இந்த விஷயங்கள் புதியவை.

    உண்மை குறித்துச் சொன்னவை மனதில் வைக்க வேண்டியவை.

    நல்லதொரு பாசப்பறவைகள் பரிசு அளித்தமைக்கும், பெற்றுக் கொண்டவருக்கும் வாழ்த்துகள். இன்று போல் என்றும் இதே பாசத்துடன் நீடூழி வாழப் பிரார்த்திக்கிறேன். பாடல் எனக்குத் தெரியாதது.

    ReplyDelete
  15. பாட்டு டீச்சரையும் தெரியாது. :)

    ReplyDelete
  16. குரு...ங்கறது பெரிய கிரகம். தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபம்....அவரைப் போய் நீசன், பாபி, வக்கிரம்..ன்னெல்லாம் திட்டக் கூடாது. சனி, சூர்யனோட புத்திரன். ஈஸ்வரபட்டம் வாங்கிண்டவர். அவரைப் போய் பாபி...ங்கறே!.....கிரகங்கள் சரியான எடத்ல இல்லை.....கால பலன் சரியில்லைன்னு சொன்னா போறுமே!.......

    கிரஹங்களை சோதிக்கிறேன் என்று சொல்லி தன் வாழ்வையே தோதனைக்குள்ளாக்கிக் கொள்கிறார்கள் ஜோதிடர்கள்..!

    ReplyDelete
  17. தங்கள் சகோதரி வீட்டு
    கொலு மிகவும் அருமை...

    பாடல்களோடு அமர்க்களமான கொலு கொண்டாட்டத்திற்குப் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!

    ReplyDelete
  18. உண்மையில் எப்போதும் ஆனந்தமாக இருப்பதற்கு எப்போதும் உண்மையாக இருக்கிறவனைப் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும்.//

    அவன் பாத கமலங்களை பிடித்து இருந்தால் ஆனந்தமே!
    // பழங்காலத்ல ஜாதகப்பொருத்தம் அவ்வளவு முக்யமா இருந்ததில்லை".//
    நன்றாக சொன்னார்கள் பெரியவர்.
    //பெரியவா சரீரம், பெரியவாளோட ஆக்ஞைக்கு கட்டுப்பட்டு நடக்கறதுன்னு தோணறது......."//
    உண்மைதான் .
    உங்கள் சகோதரி வீட்டு கொலு மிக அருமை. எங்கள் அம்மா வீட்டுக் கொலுவை நினைவுக்கு கொண்டு வந்தது. காய்கறி கடை பழங்கள் காய்கள் எல்லாம் மிக அழகு. பார்க், நவதானியம் முளைத்து இருப்பது எல்லாம் பார்க்க அழகு.
    குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.
    //பாசபறவை பொம்மை அழகு.
    தங்கமுலாம் பூசிய பாசப்பறவைகள்

    [பாசம் என்றும் எப்போதும் தங்க வேண்டிக்கொடுத்தது]//
    எப்போதும் இதே பாசத்துடன் இருக்க வாழ்த்துக்கள்.
    சகோதரி வீட்டில் துணைவியார் பாடிய பாடல்கள் அருமை.
    உறவுகள் மகிழ்ந்து இருக்க இது போன்ற பண்டிகைகள் மிக அவசியம்.
    மனதுக்கு நிறைவான பதிவு.
    வாழ்த்துக்கள்.
    நன்றி.


    ReplyDelete
  19. தியானம் பண்ண வேண்டும். அதைவிட முக்கியமாக தியானம் பண்ணினேன் என்ற எண்ணத்தையும் தியாகம் பண்ணிவிட வேண்டும்.
    அருமையான அறிவுரை! எல்லா க்ரஹங்களையும் நன்னா........திட்டறயோன்னோ ! ....உங்க ஜாதகத்ல குரு நீசன், சனி பாபி, புதன் வக்கிரம்!... இப்பிடியெல்லாம் வாயால சொல்லக் கூடாது.
    குரு...ங்கறது பெரிய கிரகம். தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபம்....அவரைப் போய் நீசன், பாபி, வக்கிரம்..ன்னெல்லாம் திட்டக் கூடாது. சனி, சூர்யனோட புத்திரன். ஈஸ்வரபட்டம் வாங்கிண்டவர். அவரைப் போய் பாபி...ங்கறே!.....கிரகங்கள் சரியான எடத்ல இல்லை.....கால பலன் சரியில்லைன்னு சொன்னா போறுமே!.......// இந்த அறிவுரையும் மிகச்சிறப்பு! நல்லதொரு பகிர்வு! கொலுப்படங்கள் அருமை! நன்றி!

    ReplyDelete
  20. Everything super Iam very much delighted about your quick postings Thank you very much

    ReplyDelete
  21. Mail message [1] from Shri. G Ganesh from Soudi Arabia :

    Dear mama,
    I have seen the blog.very nice as usual as well as golu.
    very nice coverage. great chance for me to see the golu.
    I have sent the audio of the hindi song as you have asked.please see the attachment)
    please check and confirm that the same song you have asked.
    not able to see your blog frequently like before and make comments due to the work load.
    convey my regards to all.
    thanks
    ganesh

    04_sabala_charana_-_nanda_nadana.mp3
    3889K Play Download //

    Thank you, Ganesh,

    - GOPU

    ReplyDelete
    Replies
    1. Mail message [2] from Shri. G Ganesh from Soudi Arabia :

      Dear mama,
      I Sent the lyrics as below. but i don' know the correctness of the same.
      ganesh

      THUMAKA THUMAKA – Raag Tilang
      Thumaka thumaka paga kumaka kunja maga capala carana hari aye (ho)
      mere prana bhulavana aye mere nayana lubhavana aye
      aruna kirana sama srna vrnda tava kirana bala ravi aye ho
      amala kamala kara murali madhura dhara bamsi bajavana a ye ho

      RAP this below..double speed.

      amala kamala kara murali madhura dhara bansi bajavana Aye ho
      kunja kunja hara kunja kunja bhara vrnda ranga hari aye ho
      nimiki jhimiki jhimi nimiki jhimiki jhimi nartana paga pija a ye ho //

      Thanks a Lot, Ganesh, All the Best . Have a very Nice Day.
      Kindly convey my kind enquiries to your Mrs. & Children.

      - GOPU

      Delete
  22. உண்மையானவன் ஒருவனே ! உன்னதமான நல்ல பதிவு. நவராத்திரி கொலு பொம்மைகளும் படங்களும் வெகு அருமை. மகிழ்ச்சி. வாழ்த்துகள். நன்றி ஐயா.

    ReplyDelete
  23. தியானம் மற்றும் தியாகம் பற்றிய பெரியவாவின் விளக்கம் மற்றும்
    ஜோசியம் பார்க்கிறவர்கள் நடந்துகொள்ள வேண்டிய விதம் பற்றிய அறிவுரைகள் அருமை.
    கொலு தரிசனம் .
    எல்லாம் அருமை. பாராட்டுகள்

    ReplyDelete
  24. ஜோடி பாசப்பறவைகள் அருமை இன்று தான் இப்படி ஒரு காட்சிப்படம் பார்த்தேன் ஐயா!

    ReplyDelete
  25. சுண்டெலியை கீழே உருட்டுறேன்ன்ன் உருட்டுறேன்ன்.. போய்க்கொண்டே இருக்கு.. உஸ்ஸ்ஸ் அப்பாடா.. பதிவுக்கு பின்னூட்டம் போடுவதிலயே பாதி மெலிஞ்சிடுவன்போல இருக்கே... என்னா பெரீஈஈஈஈஈஈய பதிவூஊஊஊஊஊஊ...:)

    //தியானம் பண்ண வேண்டும். அதைவிட முக்கியமாக தியானம் பண்ணினேன் என்ற எண்ணத்தையும் தியாகம் பண்ணிவிட வேண்டும்.///

    ஹா..ஹா..ஹா... கொஞ்ச நேரம் தியானம் பண்ணினாலே ஏதோ ஒரு மாதம் பண்ணிட்டன்போல.. மனம் அதையே நினைக்கும்:) நீங்க வேற.. நினைக்கக்கூடா என்றீங்க:))

    ReplyDelete
  26. //வல்லாரை நெய் // இன்றுதான் புதுசாக் கேள்விப்படுறேன்ன்... குட்டிக் குட்டிச் சம்பவங்கள் படிக்க இனிமையாயிருக்கு.

    ReplyDelete
  27. கொலு மிக அழகாக இருக்கு. நம் நாட்டில் கொலு வைக்கும் பழக்கமில்லை.. ஆனா வாழையிலை விரித்து கும்பம் வைத்து நவதானியங்கள் விதைப்போம்ம்.. 9ம் நாள் அவ் நவதானியங்கள் வளர்ந்து கும்பத்தை மூடுவதுபோல பெரிசாகியும் விடும்... 9 நாளும் கொண்டாட்டம் தான்.. விதம் விதமான சமையல் படையல் என... வெளிநாட்டில் நிறையவே குறைந்து விட்டது.. இருப்பினும் விடாமல் செய்கிறோம்ம்.. இன்றும் கடலை சுண்டல் செய்து வைத்தேன்ன்... நேற்று பருப்பு வடை.... அவவுக்கு உறைப்பு வாணாமாம்ம்:). அதனால நாளைக்கு ஏதும் இனிப்பாக கொடுத்து.. கொஞ்சம் காசு கேட்கவுள்ளேன்ன்ன் :) ஹா..ஹா..ஹா..

    ReplyDelete
  28. என் பெரிய அக்கா தன் பேத்திகள் இருவருடன்.
    [இருவரும் இரட்டைக் குழந்தைகள்]
    ///
    முகம் பார்த்து நினைத்தேன்.. ஆனா எனக்கு எப்பவுமே இரட்டையர்கள் எனில் ஒரே மாதிரியே.. ஆடை அலங்காரம் / பின்னல் அனைத்தும் செய்திருக்கோணும் என விருப்பம்...

    நான் பார்த்திட்டனே ஆன்ரியை:)... ஓ அவவும் பாடகியோ??.. மிக்க மகிழ்ச்சி.

    பால் பாயாசம் செய்து படைக்கலாம் என எனக்குத் தெரியாதே... அப்போ நாளைக்கு அதையே செய்திடலாம்ம்ம்..

    ReplyDelete
  29. //அடியேன் அன்பளிப்பாக வழங்கிய
    ஒரு ஜோடி பாசப் பறவைகள் இதோ:///

    ஹா..ஹா..ஹா.. சந்தோசம் சந்தோசம்ம்.. கிளி போயிடுச்சாஆஆஆஆஆஆஆ? அக்கா வீட்டுக்கு?:) .. நல்லாயிருங்கோ.. நல்லாயிருங்கோ... உஸ்ஸ்ஸ் அப்பாடா இப்பத்தான் நேக்கு நிம்மதி:) ... இனி எப்பூடி கணக்கெடுக்கப் போறீங்க கோபு அண்ணன்?:))..

    இதுக்கு மேலயும் இங்கின நிண்டனெண்டால்ல்ல்ல்.. அது எனக்கு காலம் சரியில்லை:) என அர்த்தம்:) அதனால மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்:))

    ReplyDelete
  30. Amudha mazhai padithen... pasa mazhai kandu viyandhen.... blog super....

    ReplyDelete
  31. Amudha Mazhai padithen... Pasa mazhai... kandu viyandhen.... super blog

    ReplyDelete
  32. உங்கள் மதிப்புக்குறிய பெரிய அக்கா வீட்டு கொழு படங்களையும் பதிவையும் பார்த்து மகிந்தேன்.பரிசளித்த அற்புதமான குரிவி ஜோடி மிக அழகாக இருந்த்து.

    ReplyDelete
  33. சுவையான சுவாரசியங்களின் பகிர்வுகளுக்கு மிக்க நன்றி. அழகான கொலு அசத்துகிறது. தங்கள் துணைவியார் அருமையாகப் பாடுவார்கள் என்றறிந்து மகிழ்ச்சி. அவர்கள் பாடுவதையும் பதிந்து வெளியிட்டிருக்கலாம். தாங்கள் கேட்ட பாடல் வரிகளின் சுட்டி கீழே.

    http://lgw.in/songs/get_song_Thumaka%20Thumaka%20Paga.html

    பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
    Replies
    1. கீத மஞ்சரி October 9, 2013 at 10:51 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //சுவையான சுவாரசியங்களின் பகிர்வுகளுக்கு மிக்க நன்றி. அழகான கொலு அசத்துகிறது.//

      மிக்க மகிழ்ச்சி.

      //தங்கள் துணைவியார் அருமையாகப் பாடுவார்கள் என்றறிந்து மகிழ்ச்சி. அவர்கள் பாடுவதையும் பதிந்து வெளியிட்டிருக்கலாம்.//

      ;))))) மிகவும் சந்தோஷம். நல்ல ஆலோசனை தான்.

      இருப்பினும் என் மனைவி இதற்கெல்லாம் ஆசைப்படவே மாட்டாள். அதாவது தன்னை விளம்பரம் செய்துகொள்ள விரும்பவே மாட்டாள். [எனக்குத்தான் அவளையும் சேர்த்து வைத்து, எல்லாவற்றிலுமே ஜாஸ்தியாகவே ஆசை உண்டு]

      இந்தப்பதிவு வெளியிட்டது கூட அவளுக்கு முதலில் தெரியாது. பிறகு நான் தான் சொன்னேன். இதெல்லாம் வேண்டாமே, நீக்கி விடுங்கோ என இப்போதும் சொல்கிறாள்.

      அவளின் பிரத்யேக சுபாவம் [Excellent Special Qualities] பற்றி நான் ஏற்கனவே ஓர் சிறுகதையில் ஒரு கதாபாத்திரத்தின் வாயிலாக எழுதியுள்ளேன். நீங்கள் படித்தீர்களோ என்னவோ எனக்குத்தெரியவில்லை. படிக்காவிட்டால் படித்துவிட்டு கருத்துச்சொல்லுங்கோ.

      இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/04/1-of-3.html
      தலைப்பு: “சுடிதார் வாங்கப்போறேன் !” [பகுதி 1 of 3]

      // தாங்கள் கேட்ட பாடல் வரிகளின் சுட்டி கீழே.

      http://lgw.in/songs/get_song_Thumaka%20Thumaka%20Paga.html //

      மிக்க நன்றி, மிகவும் சந்தோஷம். தாங்களும் ஏற்கனவே இருவரும் கொடுத்துள்ள சுட்டிகளையும், ஆடியோவையும் வைத்து ஒரு வழியாக அந்தப்பாடலை முழுவதுமாக ஒரு நோட்டில் மிகத்தெளிவாக என் கைப்பட எழுதி என்னவளிடம் ஒப்படைத்து விட்டேன். இதில் மட்டும் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

      புதையல் கிடைத்தது போல ஓர் மகிழ்ச்சி. சின்ன வயதில் அவள் ஸ்கூல் படிக்கும் போது, அவள் சினேகிதி யாரோ கற்றுக்கொடுத்த பாடலாம் அது.

      அப்போ பாடிய பாடலில் சில வரிகள் அவளுக்கு இப்போது மறந்துபோய் உள்ளது. அவை திரும்பக்கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தாள்.

      உங்கள் எல்லோருக்கும் என் நன்றியோ நன்றிகள்.

      //பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார். //

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், காலத்தினால் செய்துள்ள பேருதவிக்கும் என் [எங்கள்] மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      பிரியமுள்ள VGK

      Delete
  34. தியானம் பண்ண வேண்டும். அதைவிட முக்கியமாக தியானம் பண்ணினேன் என்ற எண்ணத்தையும் தியாகம் பண்ணிவிட வேண்டும்.
    // அருமை! கொலு அருமை! நவராத்ரியில் நல்லதொரு பதிவு! நன்றி ஐயா!

    ReplyDelete
  35. பெரியவா அருளியது நவராத்ரி சமயத்தில் வெளியிட்டது பொருத்தம்...கொலுப்படங்கள் விவரம் எல்லாமே அருமை

    ReplyDelete
  36. வைத்யநாதனுக்கே வைத்தியம் பார்த்தாரா வைத்தியர்!!!

    தியானம் குறித்து சொல்லியுள்ளது அனைவரும் கடைபிடிக்க வேண்டியது.

    அக்கா வீட்டு கொலு வெகுவே அழகு....

    பாசப் பறவைகள் அழகான பரிசு.

    மாமி அழகாகப் பாடுவார் என்று தெரிந்து கொண்டேன். பாடலை பதிவு செய்து ஒன்று வெளியிட்டிருக்கலாமே சார்....

    ReplyDelete
  37. ஸ்ரீ மஹாபெரியவர், ஜோசியருக்கு சொன்ன அறிவுரை நினைவில் கொள்ள வேண்டியது. பெரிய அக்கா வீட்டு கொலு அருமை!!. பாசப் பறவைகளும் அழகு!. மிக நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி!!

    ReplyDelete
  38. Very divine read Sir and awesome pics of golu too :)

    ReplyDelete
  39. பகிர்வும்,கொலுவும் படங்களும் அருமை சார்.

    ReplyDelete
  40. மகா பெரியவர் பற்றின ஒவ்வொரு சம்பவங்களும் அழகாக தொகுத்து வருகின்றீர்கள் ..
    அனைத்துமே பல புதிய விஷயங்கள் அனுபவங்கள் ..

    ..உங்க அக்கா ...முன்பு ஒரு பதிவில் சிறு வயதில் உங்களை பள்ளிக்கு அழைத்து செல்வார் என்றீர்களே அவரா ..
    ஒரிஜினல் பாசபறவைகள் சேர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றும் எடுத்திருக்கலாம் :))
    கொலு அழகா இருக்கு ..

    முன்பு எங்கள் அப்பாவின் நண்பர் வீட்டில் பார்த்தேன் தசாவதார தீம் ஒரு concept எடுத்துஒருமுறை/ராமர் சீதை .. அப்புறம் ...கோகுல கண்ணன் ஆயர்பாடி தீம் செய்தார்கள் .


    பாட்டு டீச்சரின் குரலில் ஒரு பாடல் யூகே நேயர் விருப்பமாக அடுத்த பதிவில் வேண்டும் .....

    எனக்கு பிடித்த வேர்கடலை சுண்டலும் ஒரு ப்ளேட் பார்சல் ப்ளீஸ் :))

    ReplyDelete
  41. காலையில் எழுந்தவுடன் பெரியாவாயின் வாய்மொழி கேட்டு ஒரு காரியம் செய்ய கிளம்புகிறேன். நிச்சயம் வெற்றி பெறும் எனும் நம்பிக்கை உண்டு. தியானம் பற்றிய செய்திகள் அருமை. தாமதமான வருகைக்கு மன்னிக்கவும் அய்யா. கொழு கலைக் கட்டுகிறது. சிறந்ததொரு பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

    ReplyDelete

  42. // எல்லா க்ரஹங்களையும் நன்னா........திட்டறயோன்னோ ! ....உங்க ஜாதகத்ல குரு நீசன், சனி பாபி, புதன் வக்கிரம்!... இப்பிடியெல்லாம் வாயால சொல்லக் கூடாது. //

    // பொண்பிள்ளை ஜாதக பொருத்தம் பாக்க வரவா கிட்டே "பொருத்தமில்லை" ன்னு நிர்தாட்சண்யமா சொல்ல வேணாமே! பொண்ணுக்கு விவாக காலம் வர நாளாகும், பையனுக்கு புத்திர பாக்கியம் கேள்விக் குறி ...ங்கற மாதிரி சொல்லலாம் //

    எனது உறவினர் ஒருவர் எப்போது பார்த்தாலும் ஒவ்வொரு ஜோசியராக சென்று பார்த்துக் கொண்டே இருப்பார். அவர் சொல்லியதில் இருந்து, இன்னும் பல ஜோசியர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

    ReplyDelete
  43. உங்கள் மூத்த சகோதரி வீட்டு கொலுவை நாங்கள் இங்கிருந்தே பார்க்கும்படி செய்தமைக்கு நன்றி! விழாக்கால வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  44. சிறிய சம்பவங்கள் படிக்க மகிழ்ச்சியா இருக்கு...பெரியவருக்கே வைத்தியமா ஆச்சர்யமா தான் இருக்கு...

    ReplyDelete
  45. கொலு மிக அழகா இருக்கு ஐயா,தரிசனத்திற்க்கு மிக்க நன்றி!!

    ReplyDelete
  46. /// தியானம் பண்ண வேண்டும். அதைவிட முக்கியமாக தியானம் பண்ணினேன் என்ற எண்ணத்தையும் தியாகம் பண்ணிவிட வேண்டும்.//

    உண்மை.

    பாட்டு டீச்சர்....:)

    ReplyDelete
  47. //தியானம் பண்ண வேண்டும். அதைவிட முக்கியமாக தியானம் பண்ணினேன் என்ற எண்ணத்தையும் தியாகம் பண்ணிவிட வேண்டும்.
    Aha......well said.
    Very nicely arranged golu.
    Sweet children to singwith.
    Periya padagiyin padalai rasithom
    Very nicely given the golu photos at the opt time.
    Happy viewing the golu and sister.

    ReplyDelete
  48. Thanka pasa paravai......
    Rombave rasichen.
    viji

    ReplyDelete
  49. Beautiful golu, nice clicks.... the twin girls with ur sis look very nice....
    post about dhiyanam is beautiful...
    thanks for sharing sir....

    ReplyDelete
  50. கொலு அழகாக இருக்கின்றது.

    பாசப்பறவைகள் கண்டு களித்தோம்.

    ReplyDelete
  51. இந்த அழகான கொலுவை மிஸ் செய்ய இருந்தேனே!
    மிகவும் அருமையாக அழகாக் அமைக்கபப்ட்ட கொலு. அதற்கு மேலும் அழகு செய்ய உங்களுடைய தங்கப் பறவை.
    மனம் இந்த கொலுவில் கொள்ளை போனது உண்மை.

    பெரியவாளின் பிராக்டிகல் அப்ரோச் வியக்க வைக்கிறது. முப்பது வயதிற்கு மேல் ஜாதகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம்
    பற்றி சொல்லியிருப்பது நிறைய பேரை சென்றடைந்தால் பல தடைப்பட்ட திருமணங்கள் நடந்தேறும்.
    நன்றி பகிர்விற்கு.


    ReplyDelete
  52. //நாம் பலவிதமான பொய்களாலேயே துன்பங்களுக்கு ஆளாகிறோம். பொய்யினால் பெறும் ஆனந்தமும் விரைவிலேயே பொய்யாகி விடும்.//

    உண்மை!!

    Golu super!

    ReplyDelete
  53. கொலு போட்டோக்கள் நன்றாக இருக்கு மாமி நன்றாக பாடுவார்கள் எங்கே நான் உன்னை தேடுவேன் என்ற பாடல் எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல் வழக்கம் போல் பதிவும் அருமை நன்றி

    ReplyDelete
    Replies
    1. Sundaresan Gangadharan November 6, 2013 at 5:10 AM

      Dear Sundar ! Welcome

      //கொலு போட்டோக்கள் நன்றாக இருக்கு.//

      சந்தோஷம்.

      //மாமி நன்றாக பாடுவார்கள்.//

      மாமியிடம் சொன்னேன். மாமிக்கு மிகவும் சந்தோஷம்.
      நீயும் நன்றாகப்பாடுவாய் என்று சொன்னார்கள்.

      5/12 க்கும் 5/36 க்கும் இடையே ஒரு ஜன்னல் இருக்கும் - நினைவிருக்கா?

      5/12 இல் அந்த ஜன்னலின் அந்தப்பக்கம், கண்ணாடியில் தலைசீவிக்கொண்டே, நீ நிறைய சினிமாப் பாடல்கள் பாடுவாய். ஜன்னலின் இந்தப்பக்கம் உள்ள 5/36 இல் குடி இருந்த நாங்கள் அந்த உன் பாடல்களை ரேடியோ போல ரஸித்துக்கேட்போம். 1973-1980 சம்பவங்கள் - இன்றும் பசுமையான நினைவலைகளில் உள்ளன.

      //”எங்கே நான் உன்னை தேடுவேன்” என்ற பாடல் எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்//

      சொன்னேன். இப்போ ஒருமுறை பாடிப்பார்த்தார்கள்.

      // வழக்கம் போல் பதிவும் அருமை. நன்றி//

      மிக்க மகிழ்ச்சி, சுந்தர்.

      அன்புடன் கோபு மாமா

      Delete
  54. ஜோசியம் சொல்றதுக்கு இலக்கணம் சொன்னவரல்லவா பெரிய ஜோசியர்.

    ReplyDelete
  55. ஹப்பா கொலுலாம் பாத்தே வருஷ கணக்காச்சு. இப்ப உங்க மூலமாக நன்கு ரசித்துப்பார்த்தேன். நீங்க போட்டிருக்கும் கண்ணன் பாட்டு ஹிந்தி போல தோணல. மராட்டி போல தான் இருக்கு. அந்த ரெண்டு பாஷையும் தெரிஞ்ச்தால சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க. கொலு சூப்பரா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் August 20, 2015 at 10:49 AM

      வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.

      //ஹப்பா .... கொலுவெல்லாம் பாத்தே வருஷ கணக்காச்சு. இப்ப உங்க மூலமாக நன்கு ரசித்துப்பார்த்தேன். கொலு சூப்பரா இருக்கு.//

      வரும் 12.10.2015 முதல் 21.10.2015 வரை இந்த வருஷம் நவராத்திரியாச்சே. அது சமயம் அக்டோபர் செகண்ட் வீக் ஏதோ திருச்சிக்கு 3 நாட்கள் வருகை தந்து தங்கப்போவதாகச் சொல்லியிருந்தேளே ! அதை மேலும் சில நாட்கள் நீடித்துக்கொண்டு தங்கினால் என் பெரிய அக்கா வீட்டு கொலுவுக்கு நானே உங்களைக் கூட்டிக்கொண்டு போவேனே. ஆசை தீர கொலுவைக் கண்டு களிக்கலாம். தினமும் சுண்டலும் ஆசை தீர உண்டு மகிழலாம். :)

      //நீங்க போட்டிருக்கும் கண்ணன் பாட்டு ஹிந்தி போல தோணல. மராட்டி போல தான் இருக்கு. அந்த ரெண்டு பாஷையும் தெரிஞ்சதால சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க. //

      அது ஹிந்தியாகவோ அல்லது மராட்டியாகவோ இருக்கலாம். உங்களுக்கு அந்த இரண்டு பாஷைகளும் தெரிந்துள்ளது போல எங்களுக்கு அந்த இரண்டு பாஷைகளும் தெரியாது அல்லவா :) அதனால் இதில் தப்பா எடுத்துக்க என்ன இருக்கு?

      எங்களுக்கு கல்யாண ஆன புதிதில் இந்தப்பாட்டை என்னவள் மிக நன்றாக உற்சாகமாகப் பாடுவாள். அக்கம் பக்கத்து கொலு வைத்திருக்கும் வீடுகளில் அவளை அழைத்து மற்ற தமிழ் கீர்த்தனைகளுடன், இந்தப்பாடலையும் பாடச்சொல்லி கேட்டு மகிழ்வார்கள்.

      நாளடைவில் டச் இல்லாததால் இந்தப்பாடலின் இடையே சில வரிகள் மட்டும் அவளுக்கு மறந்து போய் விட்டது.

      இப்போ சிலரின் பின்னூட்டங்கள் மூலம் அந்த வரிகளைத் தெரிந்துகொண்டதில் அவளுக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான்.

      சின்னக்குழந்தையாய் எலிமெண்டரி ஸ்கூல் படிக்கும்போதே திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டிகளில் வெள்ளி டம்ளர், வெள்ளி விளக்கு போன்ற பல பரிசுகள் வாங்கியிருக்கிறாள். அதுபற்றிகூட என் பதிவுகள் ஏதோ ஒன்றில் எழுதியிருந்தேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஹிந்தி + மராட்டி விளக்கங்களுக்கும் மிக்க நன்றி. :)

      Delete
    2. //சின்னக்குழந்தையாய் எலிமெண்டரி ஸ்கூல் படிக்கும்போதே திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டிகளில் வெள்ளி டம்ளர், வெள்ளி விளக்கு போன்ற பல பரிசுகள் வாங்கியிருக்கிறாள். அதுபற்றிகூட என் பதிவுகள் ஏதோ ஒன்றில் எழுதியிருந்தேன். //

      அதற்கான இணைப்பு இதோ:

      http://gopu1949.blogspot.in/2013/12/97.html

      Delete
  56. // எல்லா க்ரஹங்களையும் நன்னா........திட்டறயோன்னோ ! ....உங்க ஜாதகத்ல குரு நீசன், சனி பாபி, புதன் வக்கிரம்!... இப்பிடியெல்லாம் வாயால சொல்லக் கூடாது. //

    ஒரு ஜோசியர் எப்படி ஜோசியம் சொல்லணும்ன்னு எவ்வளவு அழகா சொல்லி இருக்கார்.

    மகா பெரியவாளின் வாழ்வில் நம்பள மாதிரி சாதாரண மனிதர்களுக்கு நடந்ததை எல்லாம் படிக்கும் போது மெய் சிலிர்த்துப் போகறது. இவரை கெட்டியா பிடிச்சுண்டா சம்சார சாகரத்துல இருந்து சுலபமா நீந்தி வெளியில வந்துடலாம்ன்னு தோணறது.

    //பாட்டுட்டீச்சர் போல குழந்தைகள் அருகே
    அமர்ந்திருக்கிறாரே ஒருவர் ....

    அவரும் மிகப்பிரபலமான
    ஸ்வீட் வாய்ஸுடன் கூடிய பாடகியே
    என எல்லோரும் சொல்லுவார்கள். ;)//

    இந்த வரிகள படிக்கும் போதே புரிஞ்சுடுத்து அது எங்க வாலாம்பா மன்னின்னு.

    நேர வந்து பாட சொல்லி கேக்கறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      **பாட்டுட்டீச்சர் போல குழந்தைகள் அருகே
      அமர்ந்திருக்கிறாரே ஒருவர் .... அவரும் மிகப்பிரபலமான
      ஸ்வீட் வாய்ஸுடன் கூடிய பாடகியே என எல்லோரும் சொல்லுவார்கள். :)**

      //இந்த வரிகள படிக்கும் போதே புரிஞ்சுடுத்து அது எங்க வாலாம்பா மன்னின்னு. நேர வந்து பாட சொல்லி கேக்கறேன்.//

      :))))) ஆஹா .... நான் சும்மாயில்லாமல் .... நாத்தனார் + மன்னி ஆகிய உங்கள் இருவரிடமும் மாட்டிக்கிட்டேனா? கடவுளே .... கடவுளே ! :)))))

      Delete
  57. ஹையா கொலுவு படங்கலா சூப்பரா கீதே. உங்க அக்கா வூட்டு கொலுவுன்னு சொல்லினிங்க. உங்கூட்டுல வக்கறதில்லியா.

    ReplyDelete
  58. கலர் கலரான ப்ளாஸ்டிக் ஷீட் பின்னணியில் கலர்கலரான கொலுபொம்மைகளின் அலங்காரம் அழகோ அழகு பார்க் எல்லாம் கூட வச்சிருக்காங்க. ரொம்ப நல்லா இருக்கு. நாங்கல்லாம் சின்னவாளா இருந்தப்போ எல்லாராத்துலயும் கிடைக்கும் சுவையான சுண்டலுக்காகவே கொலு பாக்க போன ஞாபகம் வரது.

    ReplyDelete
  59. கொலு வண்ணமயம்...ஒரு பேத்தி இருந்தா லட்சுமி கடாட்சம்...இன்னும் ஒருத்தி கூடவே இருந்தா..சரஸ்வதி கடாட்சம்..

    ReplyDelete
  60. அக்காவும் பேத்திகளும் திருமதி விஜிகேவும் கொள்ளை அழகு. என்னது பாடுவாங்களா. அப்ப அவங்க பாடலையும் பதிவேத்துங்க விஜிகே சார் :)

    ReplyDelete
    Replies
    1. Thenammai Lakshmanan November 5, 2016 at 3:10 AM

      வாங்கோ ஹனி மேடம், வணக்கம்.

      //அக்காவும் பேத்திகளும் திருமதி விஜிகேவும் கொள்ளை அழகு.//

      ஆஹா, மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஹனி மேடம்.

      //என்னது பாடுவாங்களா. அப்ப அவங்க பாடலையும் பதிவேத்துங்க விஜிகே சார் :)//

      ஸ்வீட் வாய்ஸுடன் பாடுவாள் என பிறர் சொல்லிக் கேள்விப் பட்டுள்ளேன். :)

      ”இப்போ பாடு .... பதிவேற்ற வேண்டும்” என்று நான் சொன்னால் ..... பா-ட்-டு வி-டு-வா-ளோ என்னை, என்ற பயம் எனக்கு உள்ளது. :)

      இருவருமே இப்போது சீனியர் ஸிடிஸன்ஸ் ஆகிவிட்டோம் அல்லவா !

      இனி அவள் பாடி, நான் அதனைப் பதிவேற்றி என்பதெல்லாம் சரிப்பட்டு வராது மேடம். :)

      Delete
  61. இந்தப் பதிவு ஏற்கெனவே படிச்சாப்போல் இருக்கேனு நினைச்சுண்டே படிச்சேன். அதே போல் என்னோட கருத்தும் இதிலே இருக்கு. மஹாஸ்வாமிகள் சொன்னது சரிதானே! எல்லோருக்கும் எப்போதும் பொருந்தும். :) சுட்டிக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam January 8, 2017 at 12:54 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //இந்தப் பதிவு ஏற்கெனவே படிச்சாப்போல் இருக்கேனு நினைச்சுண்டே படிச்சேன். அதே போல் என்னோட கருத்தும் இதிலே இருக்கு.//

      ஆம். நீங்க ஏற்கனவே கமெண்ட்ஸ் கொடுத்திருக்கேள்.

      //மஹாஸ்வாமிகள் சொன்னது சரிதானே! எல்லோருக்கும் எப்போதும் பொருந்தும். :) சுட்டிக்கு நன்றி.//

      மீண்டும் வருகைக்கு மிக்க நன்றி மேடம்.

      Delete
  62. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (06.07.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:-

    https://www.facebook.com/groups/396189224217111/permalink/434645490371484/

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  63. இந்த பதிவின் மேலும் ஒருசில பகுதிகள் மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (06.07.2018) பகிரப்பட்டுள்ளன.

    அதற்கான இணைப்புகள்:-

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=434721147030585

    https://www.facebook.com/groups/396189224217111/permalink/434725610363472/

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete