2
ஸ்ரீராமஜயம்
அனைவருக்கும் தெரிந்த ராமாயணத்தை உதாரணக் கதையோடு சொல்லி, ஸ்ரீராமரை நம் நெஞ்சில் அமர்த்தி, ஒரு தர்ம பட்டாபிஷேகமே நடத்துகிறார் ஸ்ரீ மஹா ஸ்வாமிகள். எங்கே… மஹா பெரியவா சொல்வதைக் கேட்போமா?
‘ராமன் என்றாலே, ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும், அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அனுசரித்துக் கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீராமன்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளே ஆனந்தமாகவே இருந்தான்.
சுக - துக்கங்களில் சலனமடையாமல், தானும் ஆனந்தமாக இருந்து கொண்டு, மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவதுதான் யோகம். அப்படி இருப்பவனே யோகி.
இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப்போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி, வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு பின்பற்றி வாழ்வதுதான்.
ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக, வேத தர்மங்களை அப்படியே அனுசரித்து வாழ்ந்து காட்டுவதற்காக ஸ்ரீமந் நாராயணனே ஸ்ரீராமனாக வந்தார்.
ராம வாக்கியத்தை எங்கே பார்த்தாலும், ‘இது என் அபிப்பிராயம்’ என்று சொல்லவே மாட்டார். ‘ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள்; சாஸ்திரம் இப்படிச்சொல்கிறது’ என்றே அடக்கமாகச் சொல்வார்.
சகலவேதங்களின் பயனாக அறியப்பட வேண்டிய பரமபுருஷன் எவனோ, அவனே அந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்கக் கட்டுப்பட்டு, அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக் கொண்டு, ஸ்ரீ ராமனாக வேஷம் போட்டுக் கொண்டு வாழ்ந்தான்.
‘ராவணன் சீதையைத் தூக்கிக்கொண்டு போனபோது, ஒரே மைல் தூரத்திலிருந்த ஸ்ரீராமனுக்கு சீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம். அப்படிப்பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம்?’ என்று கேலி செய்து கேட்டவர்களும், எழுதியவர்களும் இருக்கிறார்கள்.
இவர்கள், ஸ்ரீராமன் இந்த லோகத்தில் வாழ்ந்தபோது மனுஷ்ய வேஷத்தில் இருந்தான்; மனுஷ்யர்களைப் போலவே வாழ்ந்தான் என்பதை மறந்து பேசுகிறார்கள்.
ஒரு நாடகம் நடக்கிறது. அதில் லவ - குசர்களை வால்மீகி, ராமனிடம் அழைத்து வருகிறார்.
ராஜபார்ட் ராமஸ்வாமி ஐயங்கார் ஸ்ரீராமராக வேஷம் போட்டிருக்கிறார். அவருடைய சொந்தப் பிள்ளைகளே நாடகத்தில் லவ -குசர்களாக நடிக்கிறார்கள்.
நாடக ராமன் வால்மீகியைப் பார்த்து, ‘இந்தக் குழந்தைகள் யார்?’ என்று கேட்கிறார்.
ராமஸ்வாமி ஐயங்காருக்குத் தம்முடைய பிள்ளைகளையே தெரியவில்லை என்று நாடகம் பார்க்கிறவர்கள் கேலி செய்யலாமா?
நாடக வால்மீகி, ‘இவர்கள் ராஜபார்ட் ராமஸ்வாமி ஐயங்காரின் பிள்ளைகள்; நீங்கள்தானே அந்த ராமஸ்வாமி ஐயங்கார்!’ என்று பதில் சொன்னால் எத்தனை ரஸாபாஸமாக இருக்கும்?
வாஸ்தவத்தில் இருப்பதை, வாஸ்தவத்தில் தெரிந்ததை, நாடகத்தில் இல்லாததாக, தெரியாததாகத்தான் நடிக்க வேண்டும்.
ஸ்ரீ ராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது இப்படித் தான் மனுஷ்ய வேஷம் போட்டுக்கொண்டு, தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக்கொண்டு வாழ்ந்தார்.
வேதப் பொருளான பரமாத்மா, தசரதனின் குழந்தையாக வேஷம் போட்டுக் கொண்டவுடன், வேதமும் வால்மீகியின் குழந்தையாக, ராமாயணமாக வந்து விட்டது.
அந்த ராமாயணம் முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லி இருக்கிறது.
ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பக்ஷணம் செய்து தருகிற வழக்கப்படி, கௌசல்யா தேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களுக்கும் கெட்டுப்போகாத பக்ஷணமாக இந்தத் தர்மத்தைத் தான் கட்டிக் கொடுத்தாள்.
”ராகவா… நீ எந்த தர்மத்தை தைரியத்தோடு, நியமத்தோடு அனுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும்’ என ஆசீர்வாத பக்ஷணம் கொடுத்தாள்.
தனது என்ற விருப்பு - வெறுப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது முக்கியம். அதே போல் தைரியம் முக்கியம். ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது.
ஸ்ரீராமனை சாக்ஷாத் லக்ஷ்மணனே பரிகசித்தான்.
”அண்ணா! நீ தர்மம், தர்மம் என்று எதையோ கட்டிக்கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத்தள்ளு. தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்யத்தை உனக்கு நான் ஸ்வீகரித்துத் தர அனுமதி தா” என்று அன்பு மிகுதியால் சொன்னான்.
ஆனால் ராமனோ, யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான். கடைசியில் அது அவனைக் காத்தது. தர்மம் தலை காத்தது.
ராவணனுக்குப் பத்து தலைகள் இருந்தும், அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன. ஸ்ரீராமன் இன்றும், ‘ராமோ விக்ரஹ வான் தர்ம:’ என்றபடி தர்மத்தில் தலைசிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரகம் செய்து வருகிறான்.
சாக்ஷத் ஸ்ரீராமனை லட்சியமாகக் கொண்டு ‘ராம ராம’ என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்குச் ஸித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.’
oooooOooooo
FLASH NEWS:
மகிழ்ச்சிப்பகிர்வு
நவராத்திரி வாரத்தில்
‘வல்லமை’ மின் இதழில்
இந்த வார வல்லமையாளராக
விருதளித்து கெளரவம்
செய்யப்பட்டுள்ளார்கள்
நமது பேரன்புக்கும்,
பெரும் மரியாதைக்கும் உரிய
அனைத்து வல்லமைகளும் நிரம்பியுள்ள
திருமதி
இராஜராஜேஸ்வரி
அவர்கள்.
விஜயதஸமி நன்நாளில்
கிடைத்துள்ள இந்த விருது
தாங்கள் மேலும் மேலும்
எழுத்துலகில் பல்வேறு
வெற்றி இலக்குகளை எட்டிட
வழிவகுக்கட்டும்.
என் மனம் நிறைந்த
அன்பான இனிய
நல்வாழ்த்துகள் + பாராட்டுக்கள்.
பிரியமுள்ள VGK
மேலும் விபரங்களுக்கு இதோ இணைப்புகள்:
http://www.vallamai.com/?p=39429&cpage=1#comment-9110
http://jaghamani.blogspot.com/2013/10/blog-post_15.html
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFFrW16Xct5ZkvHgrIiVdc84N-P73NArdAAcMrhc-yMys1Y99i0zFnl9yCc1Cg1ATJj4H7G0OvY1I1G5bhXEQHNHNW8V3ayWeZd2adwikKvlSNK4PgCzhbO1n4JuZlzz69VgSrwT3WxQAa/s1600/MINNAL+ANIMATION.gif)
FLASH NEWS:
மகிழ்ச்சிப்பகிர்வு
நவராத்திரி வாரத்தில்
‘வல்லமை’ மின் இதழில்
இந்த வார வல்லமையாளராக
விருதளித்து கெளரவம்
செய்யப்பட்டுள்ளார்கள்
நமது பேரன்புக்கும்,
பெரும் மரியாதைக்கும் உரிய
அனைத்து வல்லமைகளும் நிரம்பியுள்ள
திருமதி
இராஜராஜேஸ்வரி
அவர்கள்.
விஜயதஸமி நன்நாளில்
கிடைத்துள்ள இந்த விருது
தாங்கள் மேலும் மேலும்
எழுத்துலகில் பல்வேறு
வெற்றி இலக்குகளை எட்டிட
வழிவகுக்கட்டும்.
என் மனம் நிறைந்த
அன்பான இனிய
நல்வாழ்த்துகள் + பாராட்டுக்கள்.
பிரியமுள்ள VGK
மேலும் விபரங்களுக்கு இதோ இணைப்புகள்:
http://www.vallamai.com/?p=39429&cpage=1#comment-9110
http://jaghamani.blogspot.com/2013/10/blog-post_15.html
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFFrW16Xct5ZkvHgrIiVdc84N-P73NArdAAcMrhc-yMys1Y99i0zFnl9yCc1Cg1ATJj4H7G0OvY1I1G5bhXEQHNHNW8V3ayWeZd2adwikKvlSNK4PgCzhbO1n4JuZlzz69VgSrwT3WxQAa/s1600/MINNAL+ANIMATION.gif)
அன்புடையீர்
அனைவருக்கும் வணக்கம்.
28.05.2013 அன்று ஆரம்பித்த இந்தத்தொடரின் முதல் அறுபது பகுதிகள் மட்டும் 05.10.2013 அன்று நிறைவடைந்துள்ளது.
இந்தத்தொடருக்கு பலரும் அவ்வப்போது வருகை தந்து, தங்களின் மேலான கருத்துக்களை அளித்து உற்சாகம் தந்துள்ளனர்.
அவர்கள் அனைவரின் பெயர்களையும் தனித்தனியே குறிப்பிட்டு நன்றி கூறியுள்ளேன் ... இதன் தொடர்ச்சியில்.
இதன் தொடர்ச்சி ...
பகுதி 65 / 2 / 4,
பகுதி 65 / 3 / 4,
பகுதி 65 / 4 / 4
என மேலும் மூன்று பகுதிகளாக
இதோ இன்றே இப்போதே
வெளியிடப்பட்டுள்ளன.
காணத்தவறாதீர்கள்.
அன்பின் வை.கோ - இராஜ இராஜேஸ்வரியினை வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும் தங்களுடன் இணைந்து கொள்கிறேன் . அவர் இவ்வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளூக்கும் தகுதியானவர்.
பதிலளிநீக்குவல்லமை இதழின் வல்லமையாளராகப் பரிசு பெற்றமைக்கும் கவுரவிக்கப்பட்டதற்கும்
நல்வாழ்த்துகள் இராஜ இராஜேஸ்வரி
பாராட்டுகள் இராஜ இராஜேஸ்வரி .
நட்புடன் சீனா
எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும், அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அனுசரித்துக் கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீராமன்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளே ஆனந்தமாகவே இருந்தான்.
பதிலளிநீக்குஆனந்த ராமருக்கு
ஆனந்த நமஸ்காரங்கள்..!
விஜயதஸமி நன்நாளில்
பதிலளிநீக்குகிடைத்துள்ள இந்த விருது
தாங்கள் மேலும் மேலும்
எழுத்துலகில் பல்வேறு
வெற்றி இலக்குகளை எட்டிட
வழிவகுக்கட்டும்.
என் மனம் நிறைந்த
அன்பான இனிய
நல்வாழ்த்துகள் + பாராட்டுக்கள்.
அன்பான வாழ்த்துகளுக்கும் ,பாராட்டுக்களுக்கும்
மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!
ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பக்ஷணம் செய்து தருகிற வழக்கப்படி, கௌசல்யா தேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களுக்கும் கெட்டுப்போகாத பக்ஷணமாக இந்தத் தர்மத்தைத் தான் கட்டிக் கொடுத்தாள்.
பதிலளிநீக்கு”ராகவா… நீ எந்த தர்மத்தை தைரியத்தோடு, நியமத்தோடு அனுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும்’ என ஆசீர்வாத பக்ஷணம் கொடுத்தாள்.
எந்த யுகத்திலும் கெட்டுப்போகாத ருசியான ரக்ஷிக்கும்’ பக்ஷணம்
தர்மம் அல்லவா.. அருமை...
அன்பின் வை.கோ
பதிலளிநீக்குதர்மத்தின் பெயரே ஸ்ரீ ராமன் - பதிவு அருமை.
அனைவருக்கும் தெரிந்த ராமாயணத்தை உதாரணக் கதையோடு சொல்லி, ஸ்ரீராமரை நம் நெஞ்சில் அமர்த்தி, ஒரு தர்ம பட்டாபிஷேகமே நடத்துகிறார் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாப் பெரியவா.
அவர் சொல்வதைக் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
பதிவு நன்று - நல்வழ்த்துகள் - நட்புடன் சீனா
ஸ்ரீ ராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது இப்படித் தான் மனுஷ்ய வேஷம் போட்டுக்கொண்டு, தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக்கொண்டு வாழ்ந்தார்.
பதிலளிநீக்குஆழ்ந்த பொருளுள்ள தத்துவத்தை எளிமையாக உணர்த்திய அருமையான பகிர்வுகள்..!
வேதப் பொருளான பரமாத்மா, தசரதனின் குழந்தையாக வேஷம் போட்டுக் கொண்டவுடன், வேதமும் வால்மீகியின் குழந்தையாக, ராமாயணமாக வந்து விட்டது.
பதிலளிநீக்குசும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்..
சுந்தரகாண்டம் பாராயணம் செய் நலம் நிகழும்..
ராமாயணம் பாராயணம் செய் திருமணம் நடக்கும் - என்றெல்லாம் பலன் தரவேண்டுமானால் அது எத்தனை உயர்ந்த பொக்கிஷமாக இருந்திருக்கவேண்டும் என எண்ணிப் பார்க்கவேண்டும்..!!
முதல் படம் குரு பரம்பரையை
பதிலளிநீக்குஅருமையாக உணர்த்தி மன நிறைவளிக்கிறது..
பாராட்டுக்கள்..!
மனம் நிறைவான பதிவு. தர்மம் தலை காக்கும் என்பதெல்லாம் சத்யமான வார்த்தைகள். மிக மிக நன்றி.. நல்ல விஷயங்கலைத் தந்தமைக்கு!..
பதிலளிநீக்குமிகவும் அருமை ஐயா... தர்மம் தலை காக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்... நன்றி... வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்கு//வாஸ்தவத்தில் இருப்பதை, வாஸ்தவத்தில் தெரிந்ததை, நாடகத்தில் இல்லாததாக, தெரியாததாகத்தான் நடிக்க வேண்டும்.
பதிலளிநீக்குஸ்ரீ ராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது இப்படித் தான் மனுஷ்ய வேஷம் போட்டுக்கொண்டு, தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக்கொண்டு வாழ்ந்தார்.//
என்ன எளிமையான அருமையான விளக்கம்!
தங்கள் பணி பாராட்டுக்கும் அப்பாற்பட்டது ஐயா!
பதிலளிநீக்குஇந்த அறுபதாவது பதிவு மகுடமாக...
Excellent message . best Wishes for 100th post.keep it up
பதிலளிநீக்குExcellent message. All the best for 100th post.
பதிலளிநீக்குக - துக்கங்களில் சலனமடையாமல், தானும் ஆனந்தமாக இருந்து கொண்டு, மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவதுதான் யோகம். அப்படி இருப்பவனே யோகி. //
பதிலளிநீக்குராமர் அற்புதமான யோகியாக வாழ்ந்து காட்டினார்.
//ஸ்ரீராமன் இந்த லோகத்தில் வாழ்ந்தபோது மனுஷ்ய வேஷத்தில் இருந்தான்; மனுஷ்யர்களைப் போலவே வாழ்ந்தான் என்பதை மறந்து பேசுகிறார்கள்.
ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்…//
உதாரண கதை மிக அருமை.
ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பக்ஷணம் செய்து தருகிற வழக்கப்படி, கௌசல்யா தேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களுக்கும் கெட்டுப்போகாத பக்ஷணமாக இந்தத் தர்மத்தைத் தான் கட்டிக் கொடுத்தாள்.
”ராகவா… நீ எந்த தர்மத்தை தைரியத்தோடு, நியமத்தோடு அனுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும்’ என ஆசீர்வாத பக்ஷணம் கொடுத்தாள். //
என்ன அருமையான பக்ஷணம்.
தர்மம் உன்னை ரக்ஷிக்கும் என்று கொடுத்த ஆசீர்வாத பக்ஷணம் அவரை காக்கும் ரட்சை ஆனதே!
அருமையான எளிமையான விளக்கம்.
அருமையான பகிர்வுகளை படிப்பதற்கு அளித்து வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
திருமதி .இராஜராஜேஸ்வரி அவர்கள் வெற்றி திருமகள் அல்லவா!
அவர்களுக்கு வெற்றி திருநாளில்( நவராத்திரி வாரத்தில்)‘வல்லமை’ மின் இதழில்இந்த வார வல்லமையாளராக
விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சி .
அவர்களுக்கு வாழ்த்து முன்பே அவர்கள் பதிவில் தெரிவித்தேன்.
இங்கும் அவர்களுக்கு என் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
தர்மத்தின் பெயரே ஸ்ரீராமன்! தர்மத்தின் தலைவனை நல்ல உதாரணக் கதையோடு பகிர்ந்த தங்களுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குஇராஜராஜேஸ்வரி அம்மா அவர்களின் பதிவுகள் மேலும்
எழுத்துலகில் பல்வேறு வெற்றி இலக்குகளை எட்டிட
வாழ்த்துகள். பாராட்டுக்கள். மகிழ்ச்சி.
இராமன் என்றதும், தங்கள் பதிவை படித்ததும் எனக்கு பிடித்த கமபனின் பாடல்களில் ஒன்று நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குஇராமன் சீதையோடும் இலக்குவனோடும் கானகத்தில் செல்லும் காட்சியை கம்பன் வருணிக்கும் பாடல்:
வெய்யோன் ஒளி தன்மேனியில் விரிசோதியின் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும், போனான்-
"மையோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!" என்பதோர் அழியா அழகு உடையான்
(கம்பராமாயணம் – கங்கைப் படலம்)
கூற்றுவனின் மனைவியின்
நீக்குபெயர் 'ஐயோ" என்பார்கள்.
அதனால் அந்த பெயரைக் கேட்டாலே
எல்லோரும் நடுங்குவர்.
அதை அமங்கல சொல் என்று
அதை ஒதுக்கிவைப்பர்கள்.
ஆனால் அந்த சொல்லைத்தான்
அனைவரும் உச்சரிக்கின்றனர்
அறியாமல் ஒரு நாளில் பலமுறை.
என்பது வேறு விஷயம்
அதுவும் எல்லோரும்
அந்த சொல்லை சொல்லாதே என்று
ஒருவர் சொல்ல மற்றவர் மீண்டும்
அதை சொல்ல பலமுறை
அந்த சொல் காற்றில் கலந்துவிடும் .
இந்த சொல் கம்பனிடம்
சென்று முறையிட்டதாம்
என்னை எல்லோரும் ஒதுக்கி
வெறுக்கின்றார்கள் என்று.
அதற்கு கம்பன் நீ கவலைப்படாதே
நான் இயற்றும் கம்ப ராமாயணத்தில்
உனக்கு ஒரு உயரிய இடத்தை
அளிக்கிறேன் என்றானாம் .
அதை குறிக்கும் வகையிலே
இந்த பாடலை இயற்றியதாக
நான் கேள்விபட்டிருக்கிறேன்.
இந்த பாடலை மேற்கோள்
காட்டியதற்கு நன்றி திரு இளங்கோ அவர்களே .
கம்பனின் இந்த பாடலில் உள்ள ” ஐயோ” என்ற வியப்புச் சொல்லுக்கு, இப்படி ஒரு பின்ணனி இருப்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன். தகவலைத் தந்த திரு பட்டாபிராமன் அவர்களுக்கு நன்றி!
நீக்குமனம் நிறைவான பதிவு ஐயா!!
பதிலளிநீக்குஇராஜராஜேஸ்வரி மேடத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்களும் மகிழ்ச்சியும்...
பதிலளிநீக்கு// மகிழ்ச்சிப் பகிர்வு :
பதிலளிநீக்குநவராத்திரி வாரத்தில்‘வல்லமை’ மின் இதழில் இந்த வார வல்லமையாளராக விருதளித்து கெளரவம் செய்யப்பட்டுள்ளார்கள நமது பேரன்புக்கும், பெரும் மரியாதைக்கும் உரிய அனைத்து வல்லமைகளும் நிரம்பியுள்ள
திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்.//
அவருடைய வலைத்தளம் சென்று வாழ்த்து சொல்லிவிட்டேன். இப்போது உங்களோடு இணைந்து மீண்டும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குGreat write up with nice explanation,Feeling blessed sir
பதிலளிநீக்குஸ்ரீராமனுக்கு கட்டிக்கொடுத்த தர்மம் என்ற பக்ஷணம்தான் எல்லோரையுமே ரக்ஷிக்கக் கூடியது. பின்னாளில் பிறருக்கும் உபயோகப்படுத்த அபூர்வமான பக்ஷணம். கௌஸல்யா தேவியின் பக்ஷணம் இன்றுவரை , என்றும் வரை போற்றக் கூடியது. தொடருவேன்
பதிலளிநீக்கு14 வருடங்கள் கெட்டுப் போகாத பட்சணம் தர்மம். எல்லோருக்குமே அம்மாவின் கையால் பட்சணம் கட்டி எடுத்துப்போன அனுபவம் இருக்கும். அதனால் அதை உதாரணமாகச் சொன்னால் 'பச்' சென்று மனதில் ஒட்டிக் கொள்ளும். அதனால் இந்த உதாரணத்தைச் சொன்னாரோ, பெரியவா?
பதிலளிநீக்குதிருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் தளத்திலேயே வாழ்த்துச் சொன்னேன். இங்கு மறுபடியும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். உங்கள் சீரிய பணி தொடரட்டும்.
யார் என்ன சொன்னாலும் தர்மத்தை கைவிடாத பாங்கை அழகுற விளக்கிய விதம் சிறப்புங்க ஐயா.
பதிலளிநீக்குஇராஜராஜேஸ்வரி அவர்களுக்கு உரிய பரிசே.. வாழ்த்துக்கள்.
உதாரணக் கதையும், ஸ்ரீ ராம மகிமையும் சிறப்பு! நன்றி!
பதிலளிநீக்குஸ்ரீ ராமனின் அவதார மகிமையை அழகாக ,எளிமையாக பெரியவா விளக்கிய விதம் அருமை.
பதிலளிநீக்குபாராட்டுக்கள் VGK
ராமனோ, யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான். கடைசியில் அது அவனைக் காத்தது. தர்மம் தலை காத்தது.
பதிலளிநீக்குராவணனுக்குப் பத்து தலைகள் இருந்தும், அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன.
சாக்ஷத் ஸ்ரீராமனை லட்சியமாகக் கொண்டு ‘ராம ராம’ என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்குச் ஸித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.’//
உண்மை! அருமையான மனம்கவர்ந்த பதிவு! நன்றி
தர்மம் தலை காக்கும் என்பதை எவ்வளவு அழகாக விளக்கியிருக்கிறார் மஹா பெரியவர்.
பதிலளிநீக்குவிதண்டாவாதம் செய்கிறவர்கள் படிக்க வேண்டிய பதிவு.
அருமையான பதிவு.
முந்தைய பினூட்டத்தில் எழுத விட்டதை இங்கு எழுதுகிறேன்.
பதிலளிநீக்குராம உபன்யாசத்தில் மனதைப் பரி கொடுத்ததில் திருமதி ராஜராஜேஸ்வரியை வாழ்த்த மறந்து விட்டேன்/
அவருக்கு என் வாழ்த்துக்கள்......
Vaazthukkal Mrs.Rajarajeshwari, Beautiful message and very lovely message... thanks a lot for sharing sir...
பதிலளிநீக்குஅருமையான பதிவு ஐயா
பதிலளிநீக்குஅன்புள்ள ஐயா.
பதிலளிநீக்குஉங்கள் பதிவிற்கு எப்படியும் வந்துவிட்டுத்தான் போகிறேன். நேரமின்மை கருத்துரைக்கமுடியவில்லை. கருத்துரைக்கும் நேரத்தில் இன்னும் சில பதிவுகளைப் படித்துவிடலாம் என்கிற பேராசைதான்.
ராமபிரான் குறித்த இப்பதிவு மனநிம்மதி.
ஸ்ரீராமனைப் பற்றி பெரியவாளின் வார்த்தைகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குஇராஜராஜேஸ்வரி மேடம் தொடர்ந்து வலையுலகில் மேலும் சிறப்பான பல பதிவுகள் தர வாழ்த்துகள்.
கருத்துகள் பதிவுகளிட்ட எல்லோருக்கும் இனிய வாழ்த்து.
பதிலளிநீக்குமிக இலக்கியச் சுவையான உள்ளது.
ஐயா நேரப் பற்றாக் குறை 4 பதிவுகள் வாசிப்பேனோ தெரியவில்லை.
ஒன்று வாசிக்கவே பெரும் பாடு .முயற்சிப்பேன்.
வேதா. இலங்காதிலகம்:
இராமாயண தொலைக் காட்சிகளைப் பதிவு செய்து வைத்துள்ளேன். அவ்வப்போது அவைகளைப் பார்ப்பேன். அதில் மிகவும் உருக்கமான கட்டம் லவகுசர்கள் இராமனை சந்திக்கும் காட்சியும் சீதை பூமாதேவியின் மடியில் ஐக்கியமாவதும். அவை எப்பொழுதும் என் கண்களைப் பனிக்கச்செய்கின்றன.
பதிலளிநீக்குமிக அருமையான பதிவு கோபால் சார். ராமன் கதையை எப்போது கேட்டாலும் சிலிர்ப்புத்தான்.
பதிலளிநீக்குராஜி அவர்களுக்கும் வல்லமை இதழுக்கும் வாழ்த்துக்கள். :)
நல்வாழ்த்துக்கள் இராஜராஜேஸ்வரி. மிகப் பொருத்தம்.
பதிலளிநீக்குசாக்ஷத் ஸ்ரீராமனை லட்சியமாகக் கொண்டு ‘ராம ராம’ என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்குச் ஸித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.’
பதிலளிநீக்குRama Rama Rama...............
Rajeswari is the correct person to select with. All our hearty congragulations to her.
viji
\\ஸ்ரீ ராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது இப்படித் தான் மனுஷ்ய வேஷம் போட்டுக்கொண்டு, தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக்கொண்டு வாழ்ந்தார்.\\
பதிலளிநீக்குஇந்தக் கருத்தை எளிமையானதொரு கதை மூலம் விளக்கிப் பலரின் ஐயம்போக்கியவிதம் அருமை. பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.
நவராத்திரி வாரத்தில் அந்த வார வல்லமையாளராக அறிமுகம் செய்யப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டுள்ள இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.
வல்லமையாளராகக் கௌரவப் படுத்தப் பட்டிருக்கும் திருமதி இராஜராஜேஸ்வரிக்கு GENIUS என்ற பட்டம் கொடுத்துக் கௌரவித்திருக்கிறேன், எல்லாப் பட்டனக்களுக்கும் தகுதியானவர். எடுத்துக்காட்டிய உங்களுக்கும் அவருக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு.
பதிலளிநீக்குராமன் பற்றிய பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது..... நன்றி.
ராஜராஜேஸ்வரிக்கு வாழ்த்துகள். தகுதியான நபரைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்க்ள்.
பதிலளிநீக்குஶ்ரீராமனைக் குறித்த பரமாசாரியாரின் அமுத மொழிகளுக்கு நன்றி.
பதிலளிநீக்கு//FLASH NEWS:
பதிலளிநீக்குமகிழ்ச்சிப்பகிர்வு
நவராத்திரி வாரத்தில்
‘வல்லமை’ மின் இதழில்
இந்த வார வல்லமையாளராக
விருதளித்து கெளரவம்
செய்யப்பட்டுள்ளார்கள்
நமது பேரன்புக்கும்,
பெரும் மரியாதைக்கும் உரிய
அனைத்து வல்லமைகளும் நிரம்பியுள்ள
திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள். //
அவர்களை இங்கு என் பதிவினில் வந்து என்னுடன் சேர்ந்து பாராட்டி மகிழ்வித்துள்ள
திருமதிகள்:
01] கோமதி அரசு அவர்கள்
02] மேனகா S அவர்கள்
03] மாதேவி அவர்கள்
04] ரஞ்சனி நாராயணன் அவர்கள்
05] தென்றல் சசிகலா அவர்கள்
06] ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்
07] பிரியா ஆனந்தகுமார் அவர்கள்
08] ஆதி வெங்கட் அவர்கள்
09] தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்
10] ஆசியா உமர் அவர்கள்
11] விஜி அவர்கள்
12] கீத மஞ்சரி அவர்கள்
13] கீதா சாம்பசிவம் அவர்கள்
திருவாளர்கள்:
14] அன்பின் சீனா ஐயா அவர்கள்
15] வேல் அவர்கள்
16] தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்
17] GMB Sir அவர்கள்
ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ராஜேஸ்வரி அக்காவுக்கு என் இனிய வாழ்துக்கள்.. கூடவே பெருமையாகவும் இருக்கெனக்கு....
பதிலளிநீக்கு[[[[ ஊ.கு: கோபு அண்ணன் ஓடியாங்கோ.. எனக்கும் நன்றி சொல்லோணும் சொல்லிட்டேன்ன்ன்:)]]]]]
ராமாயண விளக்கம் சூப்பர். கம்பன் கழக விழாக்களில் ராமாயண சொற்பொழிவுகள் கேட்டுக் கேட்டு பாதி பாடமாகியிருக்கெனக்கு... ஆனா கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டனாக்கும்:))
athira October 24, 2013 at 1:04 PM
நீக்கு//ராஜேஸ்வரி அக்காவுக்கு என் இனிய வாழ்துக்கள்.. கூடவே பெருமையாகவும் இருக்கெனக்கு....//
பெருமையுடன் அக்காவை வாழ்த்தியுள்ள பிரித்தானிய மஹராணியாரின் பேத்தியும், இளவரசியுமான அதிரடி, அட்டகாச, அலம்பல், அல்டீ, அ தி ர ஸ அதிரா ஸ்வீட் சிக்ஸ்டீனுக்கு ஜே !
//[[[[ ஊ.கு: கோபு அண்ணன் ஓடியாங்கோ.. எனக்கும் நன்றி சொல்லோணும் சொல்லிட்டேன்ன்ன்:)]]]]]//
ஓடித்தான் வந்திருப்பேன் .... நா உன்ன மட்டும் பார்த்திருந்தா ..... தேடித்தான் வந்திருப்பேன் ...... தெரியலையே முன்னாடி ......
-=-=-=-=-
[ஆட்டுக்கார அலமேலு என்ற படத்தில் வரும் பாடல் வரிகள் இவை]
ஆரம்ப வரிகள் பல்லவி:
[அவள்]:
பருத்தி எடுக்கையிலே .... என்னைப் பல நாளும் பார்த்த மச்சான் .... ஒருத்தி இருக்கையிலே ஓடி வந்தால் ஆகாதோ ........
[அவன்]
ஓடித்தான் வந்திருப்பேன் .... நா உன்னே மட்டும் பார்த்திருந்தால் ... தேடித்தான் வந்திருப்பேன் ... தெரியலையே முன்னாடி ......
-=-=-=-=-=-
அதனால் அதிரா ..... தாங்கள் இங்கு வருகை தந்து கருத்தளித்தது எனக்குத் தெரியாமல் போய்விட்டது.
நான் நித்திரையில் ஆழ்ந்திருக்கும் போது வந்துள்ளீர்கள்.
என் நித்திரையில் அதிரா வந்து கருத்தளிப்பது போல கனாக் கண்டேன். உடனே திடுக்கிட்டு எழுந்தேன்.
இப்போத்தான் பார்த்தேன்.
வருகைக்கு முதலில் நன்றி. அக்காவை வாழ்த்தியதற்கும் அடுத்த நன்றி. மியாவுக்கும் நன்றி.
கிளியும் தன் நன்றியை சொல்லிக்கொள்கிறது. இன்று மதியம் 1 மணி சுமாருக்கு வெளியாகும் பகுதி-70 க்கும் வந்து கருத்தளிக்கும்படி என் கிளி கேட்டுக்கொள்கிறது.
போதுமாஆஆஆஆஆ ! ;)))))
அன்புள்ள கோபு அண்ணன்.
மனிதராக வாழ்ந்த தெய்வ அவதாரம் இராமாவதாரமே!! அருமையான விவரங்களைச் சொன்னமைக்கு நன்றி!!
பதிலளிநீக்குஇராஜராஜேஸ்வரி அவர்களுக்கு (காலந்தாழ்ந்த) வாழ்த்துக்கள்!
middleclassmadhavi October 26, 2013 at 12:16 AM
நீக்குஅன்புள்ள MCM Madam, வாங்கோ, வணக்கம்.
//மனிதராக வாழ்ந்த தெய்வ அவதாரம் இராமாவதாரமே!! அருமையான விவரங்களைச் சொன்னமைக்கு நன்றி!!//
சந்தோஷம்.
//இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு (காலந்தாழ்ந்த) வாழ்த்துக்கள்!//
காலந்தாழ்ந்தாலும், கரெக்ட் பெர்சனை, கரெக்ட்டாக வந்து, கச்சிதமாக வாழ்த்தி, மகிழ்வித்துள்ளதற்கு, என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
பிரியமுள்ள VGK
மனிதராகவே வாழ்ந்த தெய்வ அவதாரம் ராமாவதாரம்தான். காலத்துக்கும் கெடாத பஷணம் தர்மம்தான்.
நீக்குபட்டாபிஷேகம் செய்துகொள்ளவேண்டும் என்றபோது இருந்த முகத்தை விட நீ வனவாசத்துக்கு செல்லவேண்டும் என்று கைகேயி சொன்னபோது முகம் இன்னும் அதிகபிரகாசத்துடன் திகழ்ந்தது என்றுஇயம்புகிறது ராமாயணம் மஹாபெரியவாளின் விளக்கம் அருமையாக இருந்தது
பதிலளிநீக்குராம ராம
ராமன் என்றால் தர்மம் என்று பொருள் ஆகிவிட்டது.
பதிலளிநீக்குதிருமதி இராஜ்ராஜேஸ்வரி மேடத்துக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குதர்மம் தலை காக்கும் என்பதை எவ்வளவு அழகாக விளக்கியிருக்கிறார் மஹா பெரியவர்.
விதண்டாவாதம் செய்கிறவர்கள் படிக்க வேண்டிய பதிவு.
அருமையான பதிவு
// சாக்ஷத் ஸ்ரீராமனை லட்சியமாகக் கொண்டு ‘ராம ராம’ என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்குச் ஸித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.’//
பதிலளிநீக்குஇவற்றையெல்லாம் தினமும் படித்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக யாரும் தர்மத்தின் பாதை மாறி செல்ல மாட்டார்கள். ஆனால் இந்த இயந்திரகதி யுகத்தில் நல்ல விஷயங்களைப் படிக்க, கேட்க அதன் படி நடக்கத்தான் நேரமே இல்லை என்று சொல்லி விடுகிறார்கள்.
திருமதி இராஜ ராஜேஸ்வரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Jayanthi Jaya September 9, 2015 at 2:28 PM
நீக்குவாங்கோ ஜெயா, வணக்கம்மா.
** சாக்ஷத் ஸ்ரீராமனை லட்சியமாகக் கொண்டு ‘ராம ராம’ என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்குச் ஸித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.**
//இவற்றையெல்லாம் தினமும் படித்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக யாரும் தர்மத்தின் பாதை மாறி செல்ல மாட்டார்கள். ஆனால் இந்த இயந்திரகதி யுகத்தில் நல்ல விஷயங்களைப் படிக்க, கேட்க அதன் படி நடக்கத்தான் நேரமே இல்லை என்று சொல்லி விடுகிறார்கள்.//
அதானே ! :)
//திருமதி. இராஜராஜேஸ்வரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, ஜெயா.
பதிவு நல்லா இநுக்குது. இதுக்கப்பால ஏதும் சொல்ல தெரில.
பதிலளிநீக்குஇங்கயும் நான் போட்ட பின்னூட்டம் மேலே உள்ள இருவரின் பின்னூட்டத்துக்கு நடுவில் போய்விட்டது ஸாரி ஸார்.
பதிலளிநீக்குசரணாகதி. November 30, 2015 at 11:16 AM
நீக்கு//இங்கயும் நான் போட்ட பின்னூட்டம் மேலே உள்ள இருவரின் பின்னூட்டத்துக்கு நடுவில் போய்விட்டது ஸாரி ஸார்.//
அதனால் பரவாயில்லை. பின்னூட்டப்பட்டியலில் அது எங்கோ ஓர் இடத்தில் ’சரணாகதி’ அடைந்துள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே.
VGK
வல்லமையாளர் விருது பெற்ற சகோதரிக்கு வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஇந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (09.07.2018) பகிரப்பட்டுள்ளது.
பதிலளிநீக்குஅதற்கான இணைப்பு:-
https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=437558783413488
இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு
கீழ்க்கண்ட 9 வரிகளை மட்டும் தினமும் சொல்லி வந்தாலே முழு ராமாயண பாராயணமும் செய்த பலன் உண்டு என ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அவர்கள் சொல்லியுள்ளார்கள்.
பதிலளிநீக்கு1) ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
2) சிவதனு சாக்ரிஹித ஸீதா ஹஸ்தகரம்
3) அங்குல்ய ஆபரண சோபிதம் சூடாமணி தர்ஸனகரம்
4) ஆஞ்சநேய மாஸ்ரயம்
5) வைதேகி மனோஹரம்
6) வானர சைன்ய சேவிதம்
7) சர்வ மங்கள கார்யானுகூலம்
8) சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம்
9) ஸ்ரீராம் ஜயராம் ஜெய்ஸ்ரீ ராம் !