2
ஸ்ரீராமஜயம்
நமது மனம் நமக்கு வசமாக வேண்டும். எவ்வளவோ காலமாகத் தன்னிஷ்டப்படியே தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்த இந்த மனத்தை, தன்னுள் அடக்கச் சிறிது சிறிதாகவாவது முயற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
மனம் அடங்கிவிட்டால், நமக்கு வேறொன்றும் தேவையில்லை. அதுதான் நாம் பெற வேண்டிய முழுமையான சுதந்திரமாகும்.
உடல், உடை இவற்றிற்கு மேலாக ஒன்று இருக்கிறது. அது தான் உள்ளம். மனது என்பது சுத்தமாக இருக்க வேண்டியது.
உள்ளத்தூய்மை தான் மிகமிக முக்கியம். அது இல்லாமல் உடம்பும் உடுப்பும் எவ்வளவு தூய்மையாக இருந்தாலும் பயனே இல்லை.
அகங்காரம் மாதிரியே, பயம், தாழ்வுணர்ச்சி, சந்தேகம் என்பவையும் அழுக்குகளே. இவை இருக்கிற வரையில் சித்தம் சுத்தமாகாது.
oooooOooooo
மனஸை நெகிழவைக்கும் பெரியவா பேரருள்
பெரியவா சாதாரணமாக ரொம்ப கூட்டம் இல்லாவிட்டால் கூட, இரவு பத்து மணியானாலும் பக்தர்களின் குறைகளை கேட்டு உபாயமோ ஆறுதலோ சொல்லுவது வழக்கம். ஒருநாள் எல்லாரும் போனதும், பெரியவா ஸயனிக்க உள்ளே போனார்.
எனவே சிப்பந்திகள் தாழ்ந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டிருந்தபோது…….
“நான் பெரியவாளை தர்சனம் பண்ணனும்” குரல் கேட்டு யாரென்று பார்த்தால், ஒரு 12 வயஸ் பையன் மிகவும் பரிதாபமான கோலத்தில் நின்று கொண்டிருந்தான்.
“இப்போல்லாம் பெரியவாளை பாக்க முடியாது……..சாப்டுட்டு ஒரு பக்கமா இங்கியே படுத்துக்கோ…. காலேல தர்சனம் பண்ணு” பாரிஷதர் சொன்னார்.
இப்படி ஒரு பரிதாபமான கோலத்தில் ஒரு பையன் வந்திருக்கிறான் என்று பெரியவாளை எழுப்ப முடியாது. சிறுவன் விடுவதாயில்லை.
“எனக்கு இப்போ பசிக்கலை…பெரியவாளை மட்டும் எப்பிடியாவது தர்சனம் பண்ணனும் அண்ணா…” என்று சொல்லிவிட்டு, மிகவும் களைத்துப்போய் இருந்ததால், ஒரு பக்கமாக படுத்துக் கொண்டுவிட்டான். மறுநாள் காலை பெரியவா சிறுவனை தன்னிடம் அழைத்தார்.
“ஏம்பா….எங்கேர்ந்து வரே? ஓம்பேரென்ன? ஒங்கப்பா அம்மா யாரு? எங்கேயிருக்கா?……..”
ஸ்ரீ மாதாவின் குரலை அந்த கன்று இனம் கண்டுகொண்டது. கண்களில் நீர் பெருக அந்த குழந்தைப் பையன் சொன்னான்……….
“பெரியவா…..நான் மெட்ராஸ்ல ஒரு ஸ்கூல்ல படிச்சிண்டிருக்கேன்.. எங்கப்பா, அம்மா, தங்கை மூணுபேரும் வெளியூர்ல இருந்தா. அப்பா திடீர்னு செத்துப் போய்ட்டார்.
அம்மாவும் தங்கையும் ரொம்ப கஷ்டப்பட்டா… பாவம்! அப்புறம் பம்பாய்ல ஒரு பெரிய பணக்கார மாமாவாத்ல சமையல் வேலை பண்ணிண்டு இருந்தா….. [சிறுவன் மேலே பேச முடியாமல் விம்மினான்]
……. திடீர்னு எங்கம்மாவும் செத்துப் போய்ட்டா பெரியவா……..” இதற்கு மேல் குழந்தையால் தொடர முடியாமால், விக்கி விக்கி அழ ஆரம்பித்தான்.
“…… அப்பா அம்மா ரெண்டுபேரையுமே என்னால கடைசி வரைக்கும் பாக்க முடியலை பெரியவா. அவாளுக்கு கார்யம் பண்ணக்கூட என்னால முடியாது.
நேக்கு இன்னும் பூணூல் போடலை..ங்கறதால பண்ண முடியாதுன்னு சொல்லிட்டா… எனக்கு ரொம்ப அழுகையா வருது பெரியவா….. இப்போ அந்த பம்பாய்ல இருக்கற மாமா வேற, “ஒன்னோட தங்கையை வந்து அழைச்சிண்டு போ!” ன்னு எப்போப்பாத்தாலும் ஆள் விட்டுண்டே இருக்கார்…… பெரியவா.
நானே கவர்ன்மென்ட் ஸ்கூல் ஹாஸ்டல்ல இருக்கேன். என் அப்பா அம்மாக்கு கர்மாக்களைப் பண்ணனும், என் தங்கையை நன்னா வெச்சுக்கணும்..ன்னு நேக்கும் ரொம்ப ஆசையாத்தான் இருக்கும் பெரியவா.
ஆனா, நானே சோத்துக்கு வழி இல்லாம இருக்கேனே! அதான்….. ஒங்களை தர்சனம் பண்ணினா எனக்கு வழி சொல்லுவேள்னு மடத்துக்கு வந்தேன்…..” அழுகையோடு தட்டுத் தடுமாறி சொன்னான்.
அவனையே சிலவினாடிகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் சொல்லித்தானா அவருக்கு தெரியவேண்டும்? அவனைக் காப்பாற்றத்தானே இங்கே வரவழைத்திருக்கிறார்!
“சரி. கொழந்தே! நீ கொஞ்ச நாள் இங்கியே இரு. என்ன?”
“சரி” என்று சந்தோஷமாக தலையாட்டியது அந்த குழந்தை.
நாலைந்து நாட்களுக்குப் பிறகு, நெய்வேலியிலிருந்து சில உயர் அதிகாரிகள் பெரியவா தர்சனத்துக்கு வந்தார்கள்.
நாலைந்து நாட்களுக்குப் பிறகு, நெய்வேலியிலிருந்து சில உயர் அதிகாரிகள் பெரியவா தர்சனத்துக்கு வந்தார்கள்.
அவர்கள் கிளம்பும்போது, எதேச்சையாக அந்த பையன் அந்தப் பக்கம் வர, பெரியவா அவனிடம் ” சட்னு போய், அந்த நெய்வேலிலேர்ந்து வந்தவா போய்ட்டாளான்னு பாரு! போகலைனா, நான் கூப்டேன்னு சொல்லு”………. அவருடைய திருவிளையாடலை யாரறிவார்?
அவர்கள் கிளம்பவில்லை. ஒவ்வொருவராக பெரியவா முன்னால் வர வர, “நீ இல்லை, நீ இல்லை” என்று திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்.
கடைசியாக வந்தவரைப் பார்த்ததும் பெரியவா முகத்தில் ஒரு புன்சிரிப்பு.
“ம்ம்ம்ம்.. இவரைத்தான் கூப்ட்டேன். இந்தாடா! கொழந்தே! ஒன்னோட கதையை இவர்கிட்ட சொல்லு” என்று சொன்னார்.
பையன் சொல்ல சொல்ல அதிகாரியின் முகத்தில் ஒரே ப்ரகாசம்!
“பெரியவா……..என்னோட அக்கா பம்பாய்ல இருக்கா. அவாத்துலதான் இந்த பையனோட அம்மா சமையல் வேலை பாத்துண்டு இருந்தா. அந்த அம்மா செத்துப் போனதும், என் மூலமாத்தான் இந்த பையனுக்கு தகவல் போச்சு! இவன் தங்கையை அழைச்சிண்டு போகணும்..ன்னு என் மூலமாத்தான் அவா சொல்லிண்டு இருந்தா…….” என்று மனஸார ஒப்புக்கொண்டார்.
“ரொம்ப நல்லதாப் போச்சு! இங்க பாரு. இந்த கொழந்தை பெத்தவாளை பறிகுடுத்துட்டு தவிக்கறான்….. இவனோட, இவன் தங்கையையும் ஒன்னோட அழைச்சிண்டு போய், அவாளை படிக்கவெச்சு, ஆளாக்கறது ஒன்னோட பொறுப்பு!
மொதல்ல இவனுக்கு உபநயனம் பண்ணி வை. அவனைப் பெத்தவாளுக்கு கர்மாக்களை அவன் கையால பண்ண வை. ஆகக்கூடி, இவா ரெண்டு பேரோட எதிர்காலத்துக்கு நீ தான் எல்லாம் பண்ணனும். என்ன செய்வியா?”
அதிகாரிக்கோ சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை! பிரமிப்போ அதை விட பன்மடங்கு! என்ன ஒரு லீலை! எப்படி கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்! எல்லாரையும் விட்டுவிட்டு தன்னிடம் அவர் கட்டளை இட்டது, தனக்கு கிடைத்த பெரும் பாக்யம் என்று பூரித்துப் போனார்.
அந்தக் க்ஷணமே பெரியவா பாதத்தில் விழுந்து அந்த பையனையும், அவன் தங்கையையும் தன் சொந்தக் குழந்தைகள் போல் பாதுகாப்பதாக உறுதி மொழி குடுத்தார்.
பெரியவாளை நம்பினார் கெடுவதில்லை என்று அந்த குட்டிப் பையனுக்குக் கூட தெரிந்திருக்கிறது.
[Thanks to My eldest Son
Sri. G. Ramaprasad at Dubai
Sri. G. Ramaprasad at Dubai
for sharing this article ]
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்
’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.
இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியிடப்படும்.
இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியிடப்படும்.
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
நெகிழ வைத்த சம்பவம்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குமனதை நெகிழ வைத்தது ஐயா... ஸ்ரீ.கோ.ராம்ப்ரசாத் அவர்களுக்கும் நன்றி... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅந்த குழந்தைக்கு ஒரு நல்ல எதிர்காலத்தினை ஏற்படுத்தி தந்த பெரியவாளின் கருணைக்கு ஈடு இணையேது....
பதிலளிநீக்கு"மனஸை நெகிழவைக்கும் பெரியவா பேரருள்" படித்தேன். "இவன் தங்கையை அழைச்சிண்டு போகணும்..ன்னு என் மூலமாத்தான் அவா சொல்லிண்டு இருந்தா…….” சரியான நபரைக் கண்டுபிடித்து அவரிடம் பையனை ஒப்படைத்தது ஆச்சர்யமான செய்திதான்.
பதிலளிநீக்கு"உள்ளத்தூய்மை தான் மிகமிக முக்கியம். அது இல்லாமல் உடம்பும் உடுப்பும் எவ்வளவு தூய்மையாக இருந்தாலும் பயனே இல்லை" மிகச் சரியான செய்தி.
பதிலளிநீக்குஅவருடைய திருவிளையாடலை யாரறிவார்?
பெரியவாளை நம்பினார் கெடுவதில்லை என்று அந்த குட்டிப் பையனுக்குக் கூட தெரிந்திருக்கிறது./மெய்சிலிர்க்க வைத்த பதிவு! பகிர்விற்கு நன்றி!
நமது மனம் நமக்கு வசமாக வேண்டும்.பெரியவா
பதிலளிநீக்குஆனால் நாம் எல்லோரும் மனதிடம் அதை வசப்படுத்தும் மனோதிடம் இல்லாமல் வசமாக மாட்டிக்கொண்டு தவிக்கிறோம் ?
பெரியவாவின் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடந்தால் எல்லாம் சரியாக நடக்கும். அதற்கு அவரிடம் நம்பிக்கை பக்தி வேண்டும்.
அருமையான பதிவு. பாராட்டுக்கள். VGK
மனஸை உருகவைக்கும் ஸம்பவம். எவ்வளவு அழகாக பையனுக்கு மேற்கொண்டு வாழ வழி வகுத்துக் கொடுத்தது.
பதிலளிநீக்குஅபூர்வமான சக்தி கொண்டு நடமாடி கண்முன் வாழ்ந்த தெய்வம்..
எவ்வளவு மகத்தான லோக குரு.. அருமை .அன்புடன்
அகங்காரம் மாதிரியே, பயம், தாழ்வுணர்ச்சி, சந்தேகம் என்பவையும் அழுக்குகளே. இவை இருக்கிற வரையில் சித்தம் சுத்தமாகாது.
பதிலளிநீக்குஅழுக்குகளை அகற்றத்தானே
அமுதமழை வர்ஷிக்கிறது..!
நம்பினார் கெடுவதில்லை
பதிலளிநீக்குநான்குமறை தீர்ப்பாயிற்றே..!
பிரமிப்போ அதை விட பன்மடங்கு! என்ன ஒரு லீலை! எப்படி கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்! எல்லாரையும் விட்டுவிட்டு தன்னிடம் அவர் கட்டளை இட்டது, தனக்கு கிடைத்த பெரும் பாக்யம் என்று பூரித்துப் போனார்.
பதிலளிநீக்குபிரமிக்கவைத்த நிகழ்வுகள்..!
உடல், உடை எவ்வளவு தூய்மையாக இருந்தாலும் உள்ளத் தூய்மை இல்லாவிடில் பயனில்லை - நெஞ்சைத் தொடும் அமுத வாக்கு.
பதிலளிநீக்குநம்பினார் கெடுவதில்லை - நான்குமறை தீர்ப்பு அதேபோல மஹா பெரியவாளை நம்பினாரும் கெடுவதில்லை.
மனதை நெகிழ வைத்த பகிர்வு...
பதிலளிநீக்குஅருமை ஐயா,,
மனம் ஒரு குரங்கு. நாம் எண்ணாமலேயே நம் எண்ணங்களில் தாவும் அடக்குவது கஷ்டம். அடக்கிவிட்டால் எதையும் அடையலாம். அமுத மழை வர்ஷிக்கட்டும்,வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ
பதிலளிநீக்குஅருமையான பதிவு உள்ளத் தூய்மை. எவ்வளவு தான் உடம்பும் உடுப்பும் தூய்மையாக இருந்தாலும் பயனே இல்லை. மனம் அடங்கிவிட்டால், நமக்கு வேறொன்றும் தேவையில்லை. அதுதான் நாம் பெற வேண்டிய முழுமையான சுதந்திரமாகும்.
மனம் அடங்க வேண்டும் - இதுதான் முக்கியமான ஒன்று.
நல்லதொரு அனுப்வத்தில் விளைந்த நல்லதொரு அறிவுரை.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
யாரை எங்கு சேர்க்கவேண்டும் என
பதிலளிநீக்குஆண்டவனுக்கும் ஆண்டவனின் ரூபமாய் இருக்கும்
ஆச்சார்யார் அவர்களுக்கும் தானே தெரியும்
ஆயினும் அதற்கும் கொடுப்பினை வேண்டும்
மனம் நிறைவைத் தந்த பதிவு
பகிர்வுக்கு மிக்க நன்றி
அன்பின் வை.கோ - மனதை நெகிழ வைக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளின் பேரருள். - பதிவு அருமை - தாய் தந்தை சகோதரியுடன் இருந்த பையன் இப்பொழுது தாயும் தந்தையும் இல்லாது துயர்ப் படுகிறான். பெற்றவர்களுக்குத் திதி செய்ய முடியவில்லை - காரணம் அவனுக்கு பூநூல் கல்யாணம் இன்னும் நடக்க வில்லை. என்ன செய்வான் பாவம்.
பதிலளிநீக்குஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா அவனை அழைத்து - ஒரு பார்வையிலேயே - ஒரு பேச்சினிலியே - அவனைப் பற்றிய பூரண செய்திகளையும் அறிந்து கொண்டு - அவை அனைத்திற்கும் தேவையானவற்றை உணர்ந்து - அவை அத்தனையும் நடைபெற உடனடியாக ஆவன செய்தார். அவனையும் அவன் தங்கையையும் ஒருவரிடம் ஒப்படைத்து - உபநயனம் உள்ளிட்ட எதிர்காலத்திற்குத் தேவையான அனைத்தையும் செய்ய ஆணையிட்டார்.
இவர் தான் உண்மையிலேயே ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரிய்வா
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
படிக்கும் போதே கண்கள் கலங்கி விட்டது ஐயா!!
பதிலளிநீக்கு//மனம் அடங்கிவிட்டால், நமக்கு வேறொன்றும் தேவையில்லை. அதுதான் நாம் பெற வேண்டிய முழுமையான சுதந்திரமாகும்.//
பதிலளிநீக்குஅருமையான வரிகள்!
தொடர்ந்து பொழிந்து வரும் ஸ்ரீமஹாபெரியவரின் பேரருட் பெருமழையில் நனைந்து வருகிறேன். அருமையான பகிர்வுகள். உள்ளத் தூய்மை குறித்து ஸ்ரீமஹாபெரியவர் உரைத்த அமுதமொழிகள் என்றும் நினைவில் கொள்ள வேண்டியது. பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி.
பதிலளிநீக்குநெகிழ்ச்சியான சம்பவம் மகிழ்ச்சியான முடிவு. பெரியாவாளிடம் அடைக்கலம் அந்த சிறுவன் கெட்டிக்காரன் தான். உள்ளத்தூய்மை, மன அடக்கம் இரண்டும் இரு கண்களென போற்றி வாழ்வில் கடைபிடிக்க முயற்சிப்போம். அருமையான பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.
பதிலளிநீக்கு//மனம் அடங்கிவிட்டால், நமக்கு வேறொன்றும் தேவையில்லை. அதுதான் நாம் பெற வேண்டிய முழுமையான சுதந்திரமாகும்.///
பதிலளிநீக்குசிறப்பான அமுத மொழி.
குழந்தைக்கு உதவிய பெரியவர் நெய்வேலியைச் சேர்ந்தவர்.... அட எங்க ஊர்.
நல்ல பதிவு. நன்றி ஐயா
பதிலளிநீக்குமனம் அடங்கிவிட்டால், நமக்கு வேறொன்றும் தேவையில்லை. அதுதான் நாம் பெற வேண்டிய முழுமையான சுதந்திரமாகும்.//
பதிலளிநீக்குஅருமையான அமுதமொழி.
பெரியவாளை நம்பினார் கெடுவதில்லை என்று அந்த குட்டிப் பையனுக்குக் கூட தெரிந்திருக்கிறது.//
குட்டி பையனுக்கு உதவிய கருணையை படித்தவுடன் மனம் நெகிழ்ந்து கண்ணீர் வந்து விட்டது.
நம்பினார் கெடுவதில்லை என்பது அந்த குட்டி பையனின் வாழ்விலிருந்து தெரிகிறது.
அருமையான பதிவு.
பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்.
அந்த பையனின் நம்பிக்கை வீண் போகவில்லை. நம்பினார் கெடுவதில்லை – காரணமாகத்தான் பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குAha....
பதிலளிநீக்குThat boy is lucky. All his bad fortunate removed when he came here Periyava.....
viji
மனசின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கிறோமா? அல்லது மனசு நம் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? மனம் நம் கட்டுப்பாட்டில் இருக்கும்போதும் மனதை நம் வழி செலுத்துகிறோம். மனதை தவறான வழியில் பயணிக்க விடாமல் தவிர்க்கிறோம். நல்ல செயல்கள் செய்ய நற்சிந்தனை அவசியமாகிறது. நற்சிந்தனை பிறக்க மனம் எப்போதும் தூய்மையாய் இருப்பது அவசியமாகிறது மிக அற்புதமான பகிர்வு அண்ணா நீங்கள் மனதைப்பற்றி சொல்லி இருப்பது. மனத்தூய்மை நம் செயல்களை நல்லவிதமாகவே தீர்மானிக்கிறது. நல்ல வார்த்தைகளை நம்மில் இருந்து உதிர்க்க வைக்கிறது. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு அண்ணா.
பதிலளிநீக்குசின்னப்பிள்ளை ராத்திரி நேரத்துல வந்ததே என்னவோ ஏதோ என்று நானும் படிக்கும்போதே பதறினேன். ஆனால் வந்தது மஹப்பெரியவாளைத்தேடி. அவருக்கு தெரியாத சூக்ஷுமம் உண்டா? காலங்கார்த்தால பெரியவாளை பார்த்ததுமே குழந்தை முகத்தில் எத்தனை நம்பிக்கை.. தாய்மை பெருகும் பெரியவாள் குழந்தைக்கு நடந்த அத்தனையும் அறிந்திருந்தாலும் அதை அவன் வாயாலே கேட்பது எல்லோரும் அறியத்தான். பிள்ளை தந்தையை இழந்து தாயையும் இழந்து, கர்மம் பண்ணாமல், பூணூல் போடாமல், தங்கையையும் போஷிக்கும்படி சொல்லும்போது வாசிக்கும் நமக்கே இதயம் கனக்கிறதே பிள்ளை என்னச்செய்யும், மலைப்போல வந்த துன்பங்கள் எல்லாம் பனிப்போல விலக்கிவிட்டார் பெரியவாள். சரியா கரெக்டா யாரிடம் இந்தப்பிள்ளையும் தங்கையும் போய் சேரவேண்டும் என்று நினைத்தாரோ அதை அப்படியே செயலாற்றியும் விட்டார். அதெப்படி கரெக்டா பெரியவாளுக்கு தெரிஞ்சிருக்கு.. விதியையும் தன் மகிமையால் உட்கிரஹிக்கும் அற்புத சக்தி பெற்றவராயிற்றே... அற்புதங்கள் தொடரட்டும் அண்ணா.. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.
பதிலளிநீக்குAndha chinnakuzhandhaikku mahaaperiyavaa kattiya karunai kannil neerai varavaikkiradhu idhu pondra seidhigalai padiththu manasu sudhdhamaaga maarum miga nallapadhivu NANDRI
பதிலளிநீக்குமனத்துக் கன் மாசிலன் ஆதல் அனைத்து அறன் என்பார் வள்ளுவர். அருமை ஐயா நன்றி
பதிலளிநீக்குபெரியவாளின் அமுத மொழிகளில் தான் எத்தனை கருணை!படிக்க படிக்க வியப்பு மேலிடுகிறது.
பதிலளிநீக்குநன்றி பகிர்விற்கு.
"உள்ளத்தூய்மை தான் மிகமிக முக்கியம்.
பதிலளிநீக்குஅது இல்லாமல் உடம்பும் உடுப்பும்
எவ்வளவு தூய்மையாக இருந்தாலும்
பயனே இல்லை..."
அமுத வாக்காகச் சொன்னீர்கள்.
பெரியவாளைப் பற்றி அருமையாகச் சொன்னீர்கள்.
//எவ்வளவோ காலமாகத் தன்னிஷ்டப்படியே தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்த இந்த மனத்தை, தன்னுள் அடக்கச் சிறிது சிறிதாகவாவது முயற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
பதிலளிநீக்குமனம் அடங்கிவிட்டால், நமக்கு வேறொன்றும் தேவையில்லை. அதுதான் நாம் பெற வேண்டிய முழுமையான சுதந்திரமாகும்.//
என்னிக்குக் கிடைக்கும் அந்த சுதந்திரம்??? :(
அருமையான பதிவு. மனம் நெகிழ்ந்தது.
பதிலளிநீக்கு//உள்ளத்தூய்மை தான் மிகமிக முக்கியம். அது இல்லாமல் உடம்பும் உடுப்பும் எவ்வளவு தூய்மையாக இருந்தாலும் பயனே இல்லை.
பதிலளிநீக்கு// மிகவும் கரெக்ட்ட்... சரி.. உண்மை...
டுபாயில் இருந்த வந்த ஆர்டிகல் மிக நல்ல அனுபவமாக இருக்கு.
உள்ளத்தூய்மை பற்றிய அருமையான விளக்கம்.
பதிலளிநீக்குvery divine post, nice that the boy got the bliessings of periyavaa...
பதிலளிநீக்கு\\அகங்காரம் மாதிரியே, பயம், தாழ்வுணர்ச்சி, சந்தேகம் என்பவையும் அழுக்குகளே. இவை இருக்கிற வரையில் சித்தம் சுத்தமாகாது.\\
பதிலளிநீக்குபெரியவரின் அமுதமொழி ஒவ்வொன்றும் ஆழ்மனம் பாயும் அற்புதமொழிகள்.
ஆதரவின்றி ஆறுதல் தேடிவந்த சிறுவனுக்கு நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுத்த பெரியவரின் மகிமை போற்றி வணங்கத்தக்கது. நெகிழவைத்தப் பகிர்வுக்கு நன்றி சார்.
பெரியவா மஹா பெரியவா தான்!!
பதிலளிநீக்குயார் யாருக்கு எப்படி எப்படி அனுக்ரஹம் செய்யவேண்டும் என்று மஹான்களுக்குத்தான் தெரியும்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு//அகங்காரம் மாதிரியே, பயம், தாழ்வுணர்ச்சி, சந்தேகம் என்பவையும் அழுக்குகளே. இவை இருக்கிற வரையில் சித்தம் சுத்தமாகாது.//
பாக்கிலாம் பொடி எழுத்தில் வருது. படிக்கமுடியல
// உள்ளத்தூய்மை தான் மிகமிக முக்கியம். அது இல்லாமல் உடம்பும் உடுப்பும் எவ்வளவு தூய்மையாக இருந்தாலும் பயனே இல்லை.//
பதிலளிநீக்குஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்
உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்
மகா பெரியவாளின் லீலையே லீலை.
எதைக் கொண்டு எங்கே சேர்க்க வேண்டும் என்று அவருக்கா தெரியாது.
அவர் வாழ்ந்து காலத்தில் வாழ்ந்ததே நமக்குப் பெருமை.
குருசாமி பெரியவங்க சின்னவங்க ஏள பணக்காரவுக ன்னுபிட்டு எந்த வித்தியாசமும் பாக்காம நல்லது செய்யுறாங்க.
பதிலளிநீக்குமனம் அடங்க தியானம் பண்ணுவது சிறந்த வழி. அதுவாகவே அடங்குமா நாமதான் அதை அடக்க தியானம் எனும் முயற்சியைப்பண்ணனும் குட்டி சுட்டி பையனுக்கும் பெரியவா அருள் கிடைச்சிருக்கே.
பதிலளிநீக்குஅட்டகாசம்..."அவன் போட்ட முடிச்சு"...// உடல், உடை இவற்றிற்கு மேலாக ஒன்று இருக்கிறது. அது தான் உள்ளம். மனது என்பது சுத்தமாக இருக்க வேண்டியது.
பதிலளிநீக்குஉள்ளத்தூய்மை தான் மிகமிக முக்கியம். அது இல்லாமல் உடம்பும் உடுப்பும் எவ்வளவு தூய்மையாக இருந்தாலும் பயனே இல்லை.// அமுதத் துளிகள் வாழ்க்கைக்கு வழிகாட்டி..
இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ நேற்று (07.07.2018) பகிரப்பட்டுள்ளது.
பதிலளிநீக்குஅதற்கான இணைப்பு:-
https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=435754876927212
இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு