என் வீட்டுத் தோட்டத்தில் பூத்த
அழகிய மலர்களும் ....
அவற்றை வலைச்சரத்தில் அருமையாகத் தொடுத்த
81. Mrs. ANGELIN Madam
28.04.2014
28.04.2014
என் மீது அபார நம்பிக்கை வைத்து வலைசரத்தில் ஒரு வாரம் ஆசிரியாக நியமித்த சீனா ஐயா, தம்பி பிரகாஷ் ஆகிய இருவருக்கும் எனது பணிவான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திரு. வை.கோபாலகிருஷ்ணன் (கோபு அண்ணா) அவர்கள் என்னை அழைத்திருந்த போதிலும் அப்போது எழுத இயலாத சூழ்நிலையால் தடை பட்டது. ஆனால் இடைப்பட்ட காலத்தில் என்னை நானே சுய பரிசோதனை செய்து இயன்ற வரையில் எனது எழுத்துக்களை சிறிதேனும் மேம்படுத்தியிருக்கின்றேன் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டதால் மிகுந்த சந்தோஷத்தோடு இப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன் .
அதுவா ..... அன்பின் கோபு அண்ணா அவர்களின் வலைத்தளத்தினில் gopu1949.blogspot.in ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று ஓர் சிறுகதை வெளியிடப்பட்டு வருகின்றது.
அந்த சிறுகதைக்கு விமர்சனம் எழுதியனுப்ப போட்டியும் நடைபெற்று வருகிறது.
அந்த சிறுகதைக்கு விமர்சனம் எழுதியனுப்ப போட்டியும் நடைபெற்று வருகிறது.
அனைவரும் இதில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
84. திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள்
05.05.2014
சில நாட்களுக்கு முன்பு திரு.வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க கேட்ட போது, சில காரணங்களால் இயலாமல் போனது. முதன் முறையாக வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்றுள்ளேன். நல்லதோர் வாய்ப்பளித்த திரு. சீனா ஐயா அவர்களுக்கும், திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
85] திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள்
அறிவிப்பு
திரு.வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களது தளத்தில்
நடைபெறும் சிறுகதை விமர்சனப் போட்டி
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று
ஓர் சிறுகதை வெளியிடப்பட்டு வருகின்றது.
அந்த சிறுகதைக்கு விமர்சனம் எழுதியனுப்ப
போட்டியும் நடைபெற்று வருகிறது.
அனைவரும் இதில் கலந்துகொண்டு
பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் பொதுவான விதிமுறைகளுக்கான இணைப்பு:
இந்த வாரப்போட்டிக்கான சிறுகதையின் தலைப்பு:
“ சூ ழ் நி லை ”
ஆண்டு முழுவதும் பரிசுகள் !
அள்ளிச்செல்ல அன்புடன் செல்லுங்கள் !!
86. திரு. சொக்கன் சுப்ரமணியன்
என்கிற
சம்பந்தம் சுப்ரமணியன்
08.06.2014
என்கிற
சம்பந்தம் சுப்ரமணியன்
08.06.2014
ஆன்மிக பதிவாளர்கள் என்றாலே எனக்கு முக்கியமாக நியாபகத்துக்கு வருவது ராஜராஜேஸ்வரி அம்மாவும், வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களும் தான்.
ராஜராஜேஸ்வரி அம்மா அவர்கள் தினமும் ஒரு ஆன்மிக செய்தியை பதிவிடுவார்கள். அதில் நிறைய தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். இந்த பதிவில் அவர் நவக்ரஹ விநாயகரைப் பற்றி சொல்லியிருக்கிறார். நவக்கிரஹ விநாயகர்
கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் வலைப்பூவில் காஞ்சிப் பெரியவர்கள் பற்றி நிறைய செய்திகளை தெரிந்து கொள்ள முடியும் பக்தியே முக்திக்கு வழி
87] திருமதி. இமா அவர்கள்
15 / 06 / 2014
15 / 06 / 2014
பெண்கள்தான் அனேகம் கைவினை இடுகைகள் கொடுக்கிறார்கள். ஆண்களது வலைப்பூக்கள் காணக் கிடைக்குமாவென்று தேடினேன். முன்பு ஒருசிலரது ஓவிய வலைப்பூக்கள் பார்த்திருக்கிறேன். சுட்டிகள் பழைய கணணியோடு காணாமல் போய்விட்டது. இப்போது தேடினாற் கிடைக்கவில்லை. இது... உங்கள் வேலை. :-) தேடிப் பிடித்துக் கொடுப்பீர்களா!
என் நினைவில் நிற்பவர் VGK அண்ணா மட்டும்தான். அண்ணாவையும் அவர்களது வலைப்பூவையும் தெரியாதவர்கள் இருக்க மாட்டீர்கள். அவரது மயக்கும் எழுத்தாற்றல் அனைவருக்கும் அறிமுகமானதே.
சகோதரி திருமதி. இமா க்றிஸ் அவர்கள், நியூசிலாந்து நாட்டில், கல்வித்துறையில். பிரத்யேக தேவைகளுக்கான ஆசிரியையாக [Special Needs Teacher] பணியாற்றுபவராகத் தெரிகிறது. இவர் பிறரிடத்தில் பழகுவதில் மிகவும் அன்பானவர், பண்பானவர், கண்ணியமானவர்.
கலை, கைத்தொழில், சிற்பம், சித்திரம், கைவேலைகள், தோட்ட வேலைகள், செல்லப்பிராணிகள் வளர்ப்பு போன்ற அனைத்திலும் ஆர்வமும், ரசனையும் ஈடுபாடும் கொண்டவர்கள்.
பள்ளி ஆசிரியையாகிய இவரிடம் நான் இதுவரை கற்றுக்கொண்டுள்ள பாடங்களும் ஏராளம். அவற்றில் இரண்டை மட்டும் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்:
1) குறிப்பாக கணினியில் பொதுவானதோர் செய்தியினை மின்னஞ்சல் மூலம் பலருக்கும் நாம் அனுப்பும்போது, ஒருவருக்கு அனுப்புவது மற்றொருவருக்குத் தெரியக்கூடாது என்பதே 2010ம் ஆண்டு வரை, தெரியாமல் இருந்த எனக்கு, அதை எளிமையாக அழகாகச் சொல்லிக்கொடுத்து உதவினார்கள்.
[ அதாவது BCC என்ற OPTION ஐ மட்டும் பயன்படுத்தி பலருக்கும் ஒட்டுமொத்தமாக மெயில் அனுப்பும் முறை ]
இதனால் ஒருவரின் மின்னஞ்சல் முகவரி, அனாவஸ்யமாக மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கும். அதனால் சம்பந்தப்பட்ட நபருக்கு, முன்பின் தெரியாத பிற நபர்களிடமிருந்து, எதிர்பாராத தொடர் தொல்லைகள் ஏதும் ஏற்படாமல் இருக்கும்.
முதன்முதலாக இவர்களிடமிருந்து இதைக் கற்ற நான் இன்றுவரை மிகவும் கவனமாகவே கடைபிடித்து வருவதுடன், வேறு சில தெரியாதவர்களுக்கும் கற்றுக்கொடுத்துள்ளேன், என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது.
2) பிறர் பதிவுகளுக்கு பின்னூட்டம் தருவதற்கு முன்பு பின்னூட்டப்பெட்டியின் அடியில் வலதுபுறமாக உள்ள ’எனக்குத் தெரிவி / NOTIFY ME’ என்ற எழுத்துக்களுக்கு அருகே உள்ள மிகச்சிறிய பெட்டியில் டிக் அடித்துவிட்டு, அதன்பின் நமது பின்னூட்டங்களை PUBLISH கொடுக்க வேண்டும் என்பதையும் இவர்களிடமிருந்துதான் நான் மிகவும் தாமதமாகக் கற்றுக்கொள்ள நேர்ந்தது. இது தெரியாமலேயே 2011-12 இல் சுமார் 18 மாதங்கள் நான் மிகவும் கஷ்டப்பட்டுள்ளேன். அதை இப்போது நினைத்தாலும் எனக்கு மிகவும் துக்கமாகவும் அழுகையாகவும் வருகிறது. ஏனெனில் அவர்கள் எனக்குச் சொல்லிக்கொடுத்த இந்த பிரத்யேகமான பாடத்தின் பலன்கள் மிக மிக அதிகம்.
இதைப்பற்றி தெரியாத அறியாத பலருக்கும் நான் இந்தப்பாடத்தைச் சொல்லிக்கொடுத்தும் வருகிறேன். பிறர் பதிவுகளில் மட்டும் அல்ல, நம் பதிவுகள் ஒவ்வொன்றிலும்கூட, பதிவு வெளியிட்ட உடனேயே முதல் வேலையாக, இந்த ’NOTIFY ME / எனக்குத் தெரிவி’ என்பதை நாம் டிக் அடித்து வைத்து விடவேண்டும் என்பதும் மிக மிக முக்கியமாகும்.
இதுவரை இதுபற்றி தெரியாதவர்கள் / அறியாதவர்கள், இன்று முதல் உடனடியாக இதனை செய்துவிட பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். அதனால் கைமேல் கிடைக்கப்போகும் பலனைக் கண்டு மிகவும் ஆச்சர்யப்படுவீர்கள்.
எனக்கு இதுபோன்ற மிகவும் உபயோகமான பாடங்களை அவ்வப்போது போதித்து உதவிய, மிகவும் மரியாதைக்குரிய சகோதரி திருமதி. இமா டீச்சர் அவர்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
மிக்க நன்றியுடன் VGK
88] மணப்பாறை திரு.
அ. பாண்டியன்
அவர்கள்
26.06.2014
அ. பாண்டியன்
அவர்கள்
26.06.2014
தொடர்ந்து தனது பதிவுகளில் காஞ்சி பெரியவரின் அற்புதங்களைக் கூறி வருபவரும், சிறுகதைப் போட்டி நடத்தி வலையுலக சிறுகதை தந்தையாக திகழுபவருமான திரு. வை.கோ ஐயா அவர்கள் எழுதிய சாத்திரம் சொல்லும் ஸ்நான வகைகள் - ஐந்து. ஸ்நான வகைகள் - ஐந்து.
பேரைக்கேட்டாலே சும்மா அதிருதில்ல
சூப்பர் ஹிட் வெள்ளி - சூப்பர் ஹிட் போஸ்ட்
வை.கோபாலகிருஷ்ணன் இவர் சிறு கதை எல்லாம் நிறைய எழுதி அசத்துகிறார் இல்ல, புத்தகங்களும் அதிகமாக வெளியிட்டுள்ளார், அடிக்கடி விமர்சனப்போட்டி கூட வைக்கிறார் இல்லையா ம்..... அப்பிடியா ........ எனக்கு அவ்வளவு பழக்கம் இல்ல ஆனா பின்னூட்டத்தில சந்திச்சு இருக்கிறேன்.
90/2/2. திருமதி. காவிய கவி
இனியா
அவர்கள்
27.07.2014
http://kaviyakavi.blogspot.in/
இன்னும் கொஞ்சபேரை பார்த்திருக்கலாம். நாள் போதாதே. யாரை எல்லாம் பார்க்கணும்? Dr B Jambulingam, வை.கோபாலகிருஷ்ணன், வெங்கட் நாகராஜ், உஷா அன்பரசு, cheena (சீனா) ஐயா முக்கியமா, நேரடியாக அவ்வளவு பழக்கம் இல்லன்னாலும் இவர்களை பின்னூட்டத்தில் சந்திப்பேனே. அதனால தான் பார்க்கவிருந்தேன். இன்னும் பலர் இருக்கிறார்களே ம்...ம்...ம்.. இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் பார்த்தால் போச்சு இல்லையா .
இன்னும் கொஞ்சபேரை பார்த்திருக்கலாம். நாள் போதாதே. யாரை எல்லாம் பார்க்கணும்? Dr B Jambulingam, வை.கோபாலகிருஷ்ணன், வெங்கட் நாகராஜ், உஷா அன்பரசு, cheena (சீனா) ஐயா முக்கியமா, நேரடியாக அவ்வளவு பழக்கம் இல்லன்னாலும் இவர்களை பின்னூட்டத்தில் சந்திப்பேனே. அதனால தான் பார்க்கவிருந்தேன். இன்னும் பலர் இருக்கிறார்களே ம்...ம்...ம்.. இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் பார்த்தால் போச்சு இல்லையா .
வாஆஆஆவ்வ்வ் கைவேலையில் இமயமாகக் கலக்கும் இருவரையும் இங்கே இணைத்து வாழ்த்தி விட்டீங்க... அஞ்சுவுக்கும்... இமாவுக்கும்... மற்றும் இங்கே கோபு அண்ண்னால் வாழ்த்தப்பட்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... எனக்கொரு டவுட்டு:) எதுக்கு கோபு அண்ணன் அடிக்கடி த"அடையை" ப் பற்றிப் புகழ்றார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:):)
பதிலளிநீக்குஅன்புடையீர், வணக்கம்.
பதிலளிநீக்குதங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_27.html.
Kalayarassy G January 27, 2015 at 1:31 AM
நீக்கு//தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள். //
தங்கமான தகவலுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்.
நன்றியுடன் கோபு
வணக்கம் ஐயா! அம்மாடியோவ் அப்ப சொன்ன தெல்லாம் ஞாபகம் வைத்து இப்படி அசத்திட்டீங்களே. ரொம்பவே மகிழ்ச்சியாய் உள்ளது. எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. ஆனாலும் இரண்டு மூன்று தடவை தங்கள் தளத்திற்கு வந்து போயுள்ளேன் ஏனோ கருத்து போடமுடியவில்லை அதனால் திரும்பி விடுவேன்.தேர்ந்தெடுக்கப் பட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....! என்னையும் இதில் கலந்து சிறப்பிக்க வைத்தமைக்கு மிக்க நன்றியை தெரிவிக்கிறேன் அத்துடன் என் தளத்தையும் தொடரும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் எல்லா நலன்களும் கிட்ட வேண்டும் என வாழ்த்துகிறேன் ...!
பதிலளிநீக்குநில நடுக்கமோன்னு பயந்திட்டேன் ..! அதிர்ர்ர மியாவ் வந்திருக்காக அதான் இங்கே ப்ளாக் seesaw up and down ஆடுது ..
பதிலளிநீக்குஆமாம் அண்ணா 2012யில் நீங்க என்னை எழுத சொன்னீங்க .எனக்கு அப்போல்லாம் ரொம்ப பயம்.தொடர்ந்து வலைப்பூவில் பின்னூட்டமிட்டு ஊக்குவித்து வந்தீர்கள் ..இப்போது லேடி தாதா அதிராவுக்கு கொஞ்சம் அடுத்த பொசிஷனில் நான் மைக்ரோ தாதா ஆகியதன் காரணம் உங்கள் தொடர் ஊக்குவிப்பே :)
அந்த மிளகாபொடி மேக்கப் போட்ட இட்லிஸ் பார்ஸல் ப்ளீஸ்.
என் மகளுக்கு இந்த மிளகாபொடி ரொம்ப பிடிக்கும்
மைக்ரோ தாத்தா? ஹையோ டங்கு ஸ்லிப்:) தாதா..:) ஹா..ஹா..ஹா....
நீக்குஅட! கலங்குங்க சார் ! வலைசரத்தில் அறிமுகப்படுத்தப்டுவதே பெருமை என்றால், அதில் செஞ்சுரி அடித்திருக்கும் நீங்க, நான் சொன்ன மாதிரி சூப்பர் ஹிட் பதிவர் தான் இல்லையா! உங்கள் புகழ் மென்மேலும் வளர வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஇன்றைய வலைச்சர அறிமுகத்திற்கும், அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஇந்த தொடரில் , நீங்கள் குறிப்பிடும் எல்லா பதிவர்களையும், ஒருசேரப் பார்க்கும்போது, பழையபடி வலையுலகம் அந்நாளைய கலகலப்போடு வந்திடாதா என்ற ஏக்கமே மிஞ்சுகிறது.
நூறுக்கு மேல் அறிமுகம் கண்ட உங்கள் வலைத்தளம் ஆயிரம் முறைக்கு மேல் அறிமுகப் படுத்தப்பட வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅன்புடன்
ஜெயந்தி ரமணி.
அட! அடேங்கப்பா எத்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றீர்கள். வலைச்சரத்தில் அறிமுகம் என்றால் நீங்கள் எல்லோரையும் இங்கு சேர்த்து அறிமுகம் செய்தவர்களை எல்லாம் சொல்லி வருவது உங்களை உயரிய இடத்தில் வைத்துக் கொண்டாடத் தோன்றுகின்றது. இன்னும் உங்கள் தளம் அறிமுகங்களில் இடம் பெறும்....வாழ்த்துக்கள்! இன்றும் நீங்கள் வலைச்சரத்தில்....வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஉங்கள் தளம் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருவதும், நீங்களும் சலிக்காமல் அறிமுகம் செய்தவர்களை அறிமுகம் செய்வதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைய அறிமுகங்கள் அனைவருமே எனக்குப் புதியவர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅழகான அறிமுகப்பதிவுகள். இன்று தெரிவிக்கப்பட்டுள்ள பல தகவல்கள் எனக்கும் புதியவை. கற்றுக்கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி. அடையைப் பார்க்குந்தோறும் நாவூறுகிறது. பலரையும் கவர்ந்திழுத்திருப்பது அடை மட்டுமல்ல, தங்களுடைய சிறப்பான எழுத்துநடையும்தான் என்பதே உண்மை. பாராட்டுகள் கோபு சார்.
பதிலளிநீக்குஇரண்டு முறை என் வலைத்தளத்தில் வந்து சொன்னதற்கு முதலில் மிகவும் நன்றி ஐயா.
பதிலளிநீக்குதாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். கடந்த இரண்டு/மூன்று நாட்களாக வலைப்பக்கத்திற்கு வர இயலாமல் போய்விட்டது.
தங்களை அறிமுகப்படுத்தியவர்களை, தாங்கள் அறிமுகப்படுத்தி "நான் என்றும் நன்றி மறவாதவன்" என்று சொல்லிவிட்டீர்கள் ஐயா.
தங்களின் வலைப்பூவில் என்னுடைய புகைப்படத்தையும் போட்தற்கு மிக்க மிக்க நன்றி ஐயா.
அன்பின் அண்ணா..
பதிலளிநீக்குதம்மைப் பற்றிச் சொல்லிய அனைவரையும் மகிழ்வுடன் நினைவு கூர்ந்து - பதிவில் வெளியிடுவது - மகிழ்ச்சியாக இருக்கின்றது.
தங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்திய அனைத்து பதிவர்களையும் பற்றி தனிப்பதிவு வெளியிட்டு, அனைவருக்கும் பெருமை தேடித் தந்து விட்டீர்கள் ஐயா.
பதிலளிநீக்குஇதில் என் பெயரும் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா.
ஜமாயுங்கள். தொடர்கிறேன்.
பதிலளிநீக்குஇந்தப் பகுதி இவ்வளவு சிறப்பாக வரும் என்று ஆரம்பித்திலேயே கணித்து விட்டேன். அந்தச் சிறப்பு முழு
ஃபார்மில் வருவது கண்டு சந்தோஷம்.
எல்லாத்துக்கும் மேலே உங்கள் திட்டமிடல். 'எண்ணியவர் எண்ணியாங்கு எய்துபவர்' குறள் உங்களைப் போன்றவர்களுக்காகவே என்று எண்ணம் மேலோங்கியது.
ஈமெயில் அனுப்பும் நுணுக்கங்களை அறிந்தோம்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் வாழ்த்துகள்
பதிலளிநீக்குவலைச்சர தொடர் அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஇராஜராஜேஸ்வரி October 17, 2015 at 4:40 PM
நீக்கு//வலைச்சர தொடர் அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..//
வாங்கோ, வணக்கம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.
அதிரா வங்கள காணோமேன்னு தேடிகிட்டேன் வந்து சொதப்பிகிட்டு போயிட்டாங்க.
பதிலளிநீக்குஇன்றய வலைச்சர அறிமுகம் அனைவருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஉங்களின் வலைப்பூந்தோட்டத்து முகப்பில் இருக்கும் வருகப்பதிவாளர் பட்டியலில் கையொப்பம் இடுபவர்கள்தான் இவர்கள்..வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபலமுறை படித்து மகிழ்ந்த பதிவு அடடா என்ன அழகு !
பதிலளிநீக்கு