என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

என் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-4 of 16 [11-16]

என் வீட்டுத் தோட்டத்தில் பூத்த 
அழகிய மலர்களும் .... 
அவற்றை வலைச்சரத்தில் அருமையாகத் தொடுத்த 
அன்புக்கரங்களும் .... 

திருமதி மனோ சுவாமிநாதன் அவர்கள்


 


முதலில் என்னை இந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பணிக்கு அழைத்து வாய்ப்பளித்த பொறுப்பாசிரியர் திரு.சீனா அய்யா அவர்களுக்கும் அவர்களது குழுவினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை முதலில் தெரிவித்துக் கொள்ள‌ விரும்புகிறேன். சில மாதங்களுக்கு முன்பேயே என்னைப் பரிந்துரைத்த திருமதி. லக்ஷ்மி, திரு. வை.கோபாலகிருஷ்ணன் இருவருக்கும் அன்பு நிறைந்த நன்றி! 


 


திருமதி மனோ சுவாமிநாதன் அவர்கள்
 
 

எல்லாவற்றுக்கும் முன்னால் சமையல் முத்துக்கள் மின்ன வருகின்றன. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நாம் வாழ்வதும் உழைப்பதும் இந்த ஒரு சாண் வயிற்றின் பசியை நீக்கத்தான். சரியான உணவு இல்லாவிடில் கவிதைகள் எழுதுதலோ, இலக்கியத்தேடலோ, சமுதாயச் சேவை செய்திடலோ எதுவுமே முழுமையாக நடைபெற இயலாது.

1. http://gopu1949.blogspot.com/ [வை.கோபாலகிருஷ்ணன்]

முதலிடத்தில் வருபவர் சகோதரர் திரு.வை.கோபாலகிருஷ்ணன். அருமையான சிறுகதை எழுத்தாளரை இங்கு இழுத்து வருவதில் அவ்வளவாக எனக்கு உடன்பாடில்லை. ஆனால் இந்தப்பதிவினைப்படித்த பின் அவருக்குத்தான் பெண்களைக்காட்டிலும் முதல் இடம் கொடுப்பது நியாயம் என்று தோன்றி விட்டது. எந்நேரமும் சமையலறையிலேயே புழங்கும் பெண்களே அதிசயப்படும் அளவிற்கு சமையல் பொருள்கள், அவற்றை உபயோகிக்கும் விதம், ருசிகரமான சமையல் வகைகள், அதற்குத் தகுந்த ஜோடியாக கூட்டுப்பொருள்கள் என்று அசத்தியிருக்கும் இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள்!


  ’முத்துச்சிதறல்’ 
திருமதி. 
 மனோ சுவாமிநாதன்  
அவர்கள் பற்றிய சிறுகுறிப்பு: 

-oOo-

அடியேன் வலைப்பூ தொடங்கிய 2011ம் ஆண்டுக்கு சற்று முன்பே [DURING DECEMBER 2010] திருமதி. மனோ சுவாமிநாதன் அவர்களுடன் எனக்கு அவர்களின் ’முத்துச்சிதறல்’ வலைத்தளத்திற்கு நான் கருத்தளிப்பது மூலமும், மின்னஞ்சல் மூலமும், தொலைபேசி மூலமும் கொஞ்சம் நல்ல தொடர்பும் நட்பும் எங்களுக்குள் நீடிக்க ஆரம்பித்தது. 

என் மூத்தமகன் வாழும் U.A.E., யில் தான் இவர்களும் உள்ளார்கள் என்பதனால் எனக்கு இவர்களிடத்தில் ஓர் தனி பிரியமும், பாசமும் இருந்து வந்தது.

எனக்கு என் எழுத்துலக மானசீக குருநாதர் திரு. ரிஷபன் அவர்களால் ஏற்படுத்திக் கொடுத்திருந்த என் வலைத்தளத்தினில், நான் 2010 வரை எந்தப்பதிவும் வெளியிடாமலேயே இருந்து வந்தேன்.  

என்னை தொடர்ந்து வலைத்தளத்தினில் பதிவுகள் எழுத வேண்டும் என அடிக்கடி வலியுறுத்தி வந்தவர்களில் இந்த திருமதி. மனோ சுவாமிநாதன் அவர்களுக்கும் பெரும்பங்கு உண்டு. 

இவர்கள் வற்புருத்தலால் என் வலைத்தளத்தினில் 02.01.2011 அன்று முதன் முதலாக  ‘இனி துயரமில்லை’ என்ற தலைப்பினில் ஓர் படைப்பினை நான் வெளியிட்டிருந்தேன். http://gopu1949.blogspot.in/2011/01/blog-post.html அதற்கு முதன்முதலாக பின்னூட்டம் கொடுத்த பெருமையும் இவர்களையே சாரும். :)

அன்று 02.01.2011 என்னால் துவங்கப்பட்ட என் பதிவுகளின் எண்ணிக்கை மளமளவென்று நான்கே ஆண்டுகளில் 700ஐத் தாண்டியிருப்பது எனக்கே மிகுந்த வியப்பளிப்பதாக உள்ளது.

2011 பிப்ரவரி மாதம் தஞ்சைக்கு வந்திருந்த இவர்கள் என்னை நேரில் சந்திக்க விரும்பினார்கள். அதற்கு நான் ”தாங்கள் 20.02.2011 அன்று திருச்சிக்கு வர இயலுமா” என விசாரித்தேன்.

“அன்று அங்கு என்ன விசேஷம்?” என்று என்னிடம் கேட்டார்கள். பிறகு என் அன்பான அழைப்பினை ஏற்று 20.02.2011 அன்று என் இல்லத்தின் அருகே நடைபெற்ற எங்கள் குடும்ப விழாவிற்கு நேரில் வருகை தந்து கலந்துகொண்ட பிரபல எழுத்தாளப் பிரமுகராக, இவர்களை திருச்சியில் அடியேன் நேரில் சந்திக்கும் பாக்யம் பெற்றேன். 

அதாவது 24.04.2011 பிறந்த என் பேரன் அநிருத்தின் தாயாரின் சீமந்தம் + வளைகாப்பு விழா 20.02.2011 அன்று இங்கு எங்கள் வீட்டருகேயுள்ள் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. அந்த இனிய விழாவின் துவக்கத்திலேயே இவர்களுக்கு வரவேற்பு அளித்து சிறப்பிக்க முடிந்ததில் எனக்கு ஓர் தனி மகிழ்ச்சியாக இருந்தது. அங்கேயே ஒரு நான்கு பேர்கள் கொண்ட மிகச் சிறிய பதிவர் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற, நானே ஏற்பாடுகள் செய்திருந்தேன்.


20.02.2011 அன்று திருச்சியில் எங்கள் இல்ல இனிய விழாவிற்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்த 
பிரபல பத்திரிகை எழுத்தாளர், மிகச்சிறந்த ஓவியர், சமையல் கலை வல்லுனர், முத்துச்சிதறல் பதிவர், 
மாபெரும் தொழிலதிபர், இதுவரை மும்முறை வலைச்சர ஆசிரியர் 
என அஷ்டாவதானியாக விளங்கிவரும் 
திருமதி. மனோ சுவாமிநாதன் [SHARJAH - UAE] அவர்களை வரவேற்று, 
பொன்னாடை போர்த்தி, நினைவு நூல்கள் பரிசளித்தபோது 
எடுக்கப்பட்ட பொக்கிஷமான புகைப்படம்.
-oOo-


இவர்களின் இனிய சந்திப்பு பற்றிய செய்தியினைக்கூட என் வலைத்தளத்தினில் ’ஓடி வந்த பரிசும் தேடி வந்த பதிவர்களும்’ என்ற தலைப்பில் 02.03.2013 அன்று ஓர் பதிவு எழுதி வெளியிட்டிருந்தேன். இணைப்பு: http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_3629.html

அதன்பின் நாங்கள் பலமுறை தொலைபேசி + மின்னஞ்சல் மூலம் தொடர்பு எல்லைக்குள் இருந்து வந்தோம். எங்கள் பதிவுகளுக்கு எங்களுக்குள் ஒருவருக்கொருவர் பின்னூட்டங்களும் அளித்து வந்தோம்.

நான் பதிவு வெளியிடத் துவங்கிய முதல் (2011) ஒரே ஆண்டில் நான் பிற பதிவர்களின் வேண்டுகோள்களை ஏற்று வெவ்வேறு தலைப்புகளில் ஏழு தொடர் பதிவுகள் எழுதியிருந்தேன். அவற்றில் கீழ்க்கண்ட மூன்று தொடர்பதிவுகள் திருமதி. மனோ சுவாமிநாதன் அவர்களின் அன்புக் கட்டளைக்காகவே நான் எழுதியிருந்தேன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

1] தலைப்பு: 
’உணவே வா ! ... உயிரே போ !! ’
[சமையல் பற்றிய நகைச்சுவைப் பதிவு]

 

2] தலைப்பு: 
’ முன்னுரை என்னும் முகத்திரை ’


3] தலைப்பு: 
’ மழலைகள் உலகம் மகத்தானது ’

[ அமைதிச்சாரல் + மணிராஜ் + முத்துச்சிதறல்

ஆகிய முப்பெரும் தேவியர்களுக்காக எழுதியது ]


இணைப்பு: 29.08.2011 to 04.09.2011 and 14.01.2013 to 20.01.2013 ஆகிய காலக்கட்டங்களில் ஏற்கனவே வலைச்சர ஆசிரியராக இருமுறை பொறுப்பேற்று பணியாற்றியுள்ள இவர்கள் மீண்டும் மூன்றாம் முறையாக நாளை 19.01.2015 முதல் பொறுப்பேற்று வலைச்சர ஆசிரியராக பணியாற்றி ஹாட்-ட்ரிக் அடிக்க உள்ளார்கள் என்ற இனிய செய்தி சற்றுமுன் http://www.blogintamil.blogspot.in/2015/01/blog-post_20.html வெளியிடப்பட்டுள்ளதில், என் மகிழ்ச்சி மும்மடங்கு ஆகியுள்ளது. 

அவர்களால் நாளை துவங்கவுள்ள வலைச்சரப்பணி மிகவும் வெற்றிகரமாக திகழ நாம் அனைவரும் வாழ்த்துவோமாக ! 

அன்புடன் VGK


மாய உலகம் திரு. ராஜேஷ் அவர்கள்

 

திருச்சிராப்பள்ளியைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா. மரியாதைக்குரிய நமது அன்பர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது VAI. GOPALAKRISHNAN என்ற வலைப்பூவில் ஊரைச்சொல்லவா..பேரைசொல்லவா என்ற பதிவில் திருச்சிராப்பள்ளியைப் பற்றி பகிர்ந்திருக்கிறார்..வாருங்கள் திருச்சியை சுற்றி வருவோம்.


{ இவருக்கு நம் கண்ணீர் அஞ்சலிகள் }திரு மகேந்திரன் அவர்கள்
 

அனுபவத்தில் முதிர்ந்தவர் ஐயா. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தன் வலைப்பூவில் ஊரைச் சொல்லவா?!! பேரைச் சொல்லவா?!! என்று ஆரம்பித்து திருச்சிராப்பள்ளியின் ஆழ அகலங்களை அக்குவேறு ஆணிவேராக ஆராய்ந்து, வரலாற்று ஆதாரங்களுடன் அழகாக பேசுகிறார். திருச்சிராப்பள்ளி பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் இந்த பதிவை பார்த்தாலே போதுமானது.. அவ்வளவு விஷயங்கள்.. 

இதோ அவருக்காக...
முதலடி எடுத்துவைச்சேன் 
மூத்தோரை வணங்கிடவே!
இரண்டாமடி எடுத்துவைச்சேன் 
அனுபவத்தை ஏற்றிடவே!
மூனாமடி எடுத்துவைச்சேன் 
ஆவணத்தை காத்திடவே!
நாலாமடி எடுத்துவைச்சேன் 
நாற்புறமும் கொண்டுசெல்ல!!

 


திருமதி மிடில் கிளாஸ் மாதவி அவர்கள்
 
 

பெரிய சிறு கதைகளைத் தொடர்களாக வெளியிட்டு, அடுத்த பாகம் எப்போ என்று தேட வைக்கும் வை.கோபாலகிருஷ்ணன் - சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன் என்று தன்னடக்கமாகச் சொல்லிக் கொள்பவர், இப்போதைய பதிவுகளில் கதைக்கான ஓவியங்களையும் அவரே தீட்டுகிறார். இவர் கதைகளைப் படிக்கும் போது கண்முன்னே அந்தக் காட்சிகள் விரிவது மாதிரி, அழகாகக் கதை சொல்லுவார். 

சமீபத்திய பதிவுகளான ஏமாறாதே, ஏமாற்றாதே சிறுகதையையும் ஓவியத்தையும் சகுனம் சிறுகதை இரண்டு பகுதிகளையும் காண்பித்தேன். பாரதியாருக்கு மிகவும் பிடித்திருந்தது, அதுவும் இரண்டாவது கதை - மூட நம்பிக்கைகளின் எதிரி அல்லவா?!
படங்களுடன் கூடிய மேற்படி சிறுகதைகளின்

மீள்பதிவுக்கான இணைப்பு:


ஏமாற்றாதே ! .......... ஏமாறாதே !!

சகுனம்

 


திருமதி பி.எஸ். ஸ்ரீதர் [ஆச்சி] அவர்கள்
 

இந்த வாரத்தின் வலைச்சர ஆசிரியராக வாய்ப்பளித்த திரு.சீனா சார் அவர்களுக்கும், வலைச்சர குழுவினருக்கும், பரிந்துரைத்த திரு. வை. கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். 

நிறைகுறைகளை தொடர்ந்து பின்னூட்டமளித்து என்னை ஊக்கப்படுத்திவரும் திரு.வை.கோபாலகிருஷ்ணன் சார், திருமதி. ராஜிதிருமதி. ஆதி,  திருமதி. ஏஞ்சலின் ஆகியோருக்கு எனது நன்றிகள். 
தொடரும்


இவர்கள் அனைவருக்கும் 
என் இனிய அன்பு நன்றிகள்.


 நாளைய பதிவினில் இடம் பெறப்போகும்

வலைச்சர ஆசிரியர்கள் மொத்தம் நால்வர்:


1) திருமதி. ஆதி வெங்கட் அவர்கள்


2) திருமதி. ராஜி [கற்றலும் கேட்டலும்] அவர்கள்


3) திருமதி. சாகம்பரி அவர்கள்


4)  திருமதி. ரமா ரவி அவர்கள் 


என்றும் அன்புடன் தங்கள்
[வை.கோபாலகிருஷ்ணன்]

29 கருத்துகள்:

 1. அன்பின் அருமை நண்பர் வை.கோ அவர்களே

  தங்களைப் பாராட்டியவர்கள் அனைவரையும் இங்கு பாராட்டி பதிவுகள் இடும் நற்குணம் பாராட்டுக்குரியது. புதுமைகள் செய்வதைத் தொழிலாகக் கொண்ட தங்களின் நற்குணம் பிரமிக்க வைக்கிறது.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 2. அருமையான பகிர்வுகள் மற்றும் நினைவுகள்

  .தம்பி ராஜேஷ் யாராலும் மறக்க முடியாத நற்பண்பாளர் ..மூன்று ஆண்டுகளாகின்றது அண்ணா :(

  பதிலளிநீக்கு
 3. சார் இவ்ளோ புள்ளி விபரங்களா .......

  ரமணா திரைப்பட விஜயகாந்த் வசனம் நினைவிற்கு வருது

  உங்களுக்கு பதிவுலக கேப்டன் என்று பட்டம் வழங்கலாமா ....பெரியோர்கள் கன்சிடர் பன்னுங்கோ .....

  எனக்குத் தெரிந்து மஞ்சுபாஷினி அவர்கள் உங்களுக்கு ஒரு நாள் வலைச்சர பதிவில் உங்களை மட்டுமே குறிப்பிட்டிருந்தார்.(நான் சண்டை போட்டேன் சகோதரியிடம்,புகழ் பெற்றவரைவிட மீதி சாமான்யர்களுக்கும் வாய்ப்பு கொடுத்ருக்கலாமே என்று .... அவரின் அன்பான பதிலில் பிறகு சமாதனம் சமாதனம்...... )

  பதிலளிநீக்கு
 4. நாளை 19.01.2015 திங்கட்கிழமை முதல் துவங்க உள்ள வாரத்தின் வலைச்சரத்தின் ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளவர்களும் ’முத்துச்சிதறல்’ என்ற வலைத்தளத்தின் பதிவருமான திருமதி. மனோ சுவாமிநாதன் அவர்கள் பற்றிய சிறுகுறிப்பு ஒன்றினை இந்தப்பதிவினில் இப்போது புதிதாகச் சேர்த்துள்ளேன்.

  இது ஏற்கனவே இந்த என் பதிவினைப்படித்து பின்னூட்டங்கள் இட்டுள்ள ஆறு நபர்களின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 5. அருமையான பதிவர்கள் . மனோசாமிநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  ராஜேஷ் அவர்களின் மறைவு மனதுக்கு கஷ்டம் தான்.
  மிடில்கிளாஸ் மாதவி இப்போது எழுதுகிறார்களா? முன்பு எல்லாம் எனக்கு பின்னூட்டம் அளித்து ஊக்குவிப்பார்.
  ஆச்சி மற்றும் அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கும் வாழத்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. மனோசாமிநாதன் அவர்கள் உங்கள் குடும்ப விழாவில் கலந்து கொள்ளும் புதிய படம் இப்போது பார்த்தேன். மகிழிச்சி.

  பதிலளிநீக்கு
 7. அன்பின் வை.கோ

  இன்று முதல் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கும் சகோதரி மனோ சாமிநாதன் அவர்களைப் பற்றிய பதிவு நன்று.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 8. அன்பின் வை.கோ

  இன்று முதல் வலைச்சர ஆசிரியராக மூன்றாம் முறை பொறூப்பேற்கும் அன்புச் சகோதரி மனோ சாமிநாதன் அவர்களைப் பாராட்டுகிறேன்.

  அவர்களூக்குப் பாராட்டுகள்
  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 9. உங்கள் வலைச்சரம் தொகுப்பினைப் படித்தவுடன் வாசிப்பினால் உண்டாகும் இன்பம் அடைந்தேன்.

  தங்களின் ”உணவே வா உயிரே போ” – காரம் மணம் குணம் இவற்றோடு நாக்கையும் சப்பு கொட்ட வைத்தது. நானும் உங்களைப் போலவே ரசித்து ருசித்து சாப்பிடுவதில் நாக்கு ருசி உள்ளவன்தான். உங்கள் அம்மா உபயோகித்த அந்தக் கால சமையல் பாத்திரங்களின் படங்களை (இன்று பலபேருக்கு அவை தெரியாது) தொகுத்து தனியே ஒரு பதிவு எழுதவும். (மீண்டும் இன்றுமுதல் (19.01.15) ஒரு வாரத்திற்கு வலைச்சர ஆசிரியராக சகோதரி மனோ.சாமிநாதன் அவர்கள் வந்திருக்கிறார். இந்த தடவை உங்களைப் பற்றி என்ன எழுதுவார் என்று பார்ப்போம்)

  உங்களது அடுத்த பதிவை (5) நோக்கி நகர்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 10. ஆதி வெங்கட் அவர்களைத் தவிர மற்றவர்கள் புதியவர்கள். ராஜேஷ் என்றொரு பதிவர் இருந்ததையும், மறைந்ததையும் இன்றே அறிந்தேன். ரொம்பவே வருத்தமாய் இருக்கிறது. தொடர்ந்து அறிமுகம் செய்து வரும் உங்கள் உழைப்புக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 11. பாராட்டும் நல் உள்ளம்...

  அருமை ஐயா...
  வாழ்த்துக்கள்...
  தொடர்ந்து வருகிறோம்...

  பதிலளிநீக்கு
 12. என்னைப்பற்றி விபரங்கள் எழுதியதற்கும் தங்களின் மனமார்ந்த பாராட்டுக்களுக்கும் என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!! தங்களின் இனிய வாழ்த்துக்களுக்கு மறுபடியும் என் அன்பு நன்றி!

  பதிலளிநீக்கு
 13. theraikal oodium nadpai vedavillaye neengal. very nice. Happy to read this.Esp. the flowers. I just love it.Where did you got it from such a nice flowers.
  viji

  பதிலளிநீக்கு
 14. உங்களின் இந்தத் தொகுப்பைப் படித்தேன். எல்லோருக்கும் வாழ்த்துகள். இன்னும் படிக்க வேண்டும். அன்புடன்

  பதிலளிநீக்கு
 15. ஒருவரையும் விடாமல் தொகுத்து வைத்துக் கொண்டு நன்றி கூறி, வாழ்த்தும் தங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை..

  பதிலளிநீக்கு
 16. கோபு அண்ணா

  பள்ளிக்கூடத்துல படிக்கறபோது எப்படியோ? ஆனா இப்ப நீங்க நிறைய HOME WORK செய்யறீங்கன்னு தெரியறது.

  உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது என்றுமே சுவாரசியம் குறைந்ததே இல்லை.

  ‘இழுக்க, இழுக்க இன்பம் இறுதி வரை’ ந்னு ஒரு விளம்பரத்தில் வரும். அது போல படிக்கப் படிக்க இன்பம். மேலும், மேலும் படிக்கத்தூண்டும் எழுத்துக்கள்.

  வாழ்க வளமுடன்

  உங்களுடைய அருமையான தொகுப்பிற்கும், நினைவூட்டல்களுக்கும் ஒரு ஷொட்டு.

  அன்புடன்
  ஜெயந்தி ரமணி.

  பதிலளிநீக்கு
 17. ஆஹா ஒவ்வொருவரும் உங்களைப் பற்றி எழுதும் போது, எனக்கும் மகிழ்ச்சி. தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 18. மனோ மேடம் தங்களைப் பற்றிக் கொடுத்துள்ள அறிமுகம் அசத்துகிறது. எவ்வளவு அழகாக உங்கள் பதிவுகளை உள்வாங்கி சிறப்பித்திருக்கிறார்கள். ஒவ்வொரு பதிவரும் தங்களின் சிறப்பியல்புகளை மிக நன்றாக அலசி ஆராய்ந்து எடுத்துரைத்திருப்பது மகிழ்வாகவும் நிறைவாகவும் உள்ளது. தங்களுடைய இந்த மலர்ச்சரமே அவர்களுக்கு இனிய அன்புப்பரிசாய்... அன்பான பாராட்டுகள் கோபு சார்.

  பதிலளிநீக்கு
 19. ஒருவரையும் மறந்துவிடாமல் அழகாக தொகுத்து நினைவு கூர்ந்திருக்கிறீர்கள் மனோ மேடம் மட்டுமே தெரிந்த முகம்

  பதிலளிநீக்கு
 20. மகத்தான அறிமுகங்கள்..வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 17, 2015 at 5:35 PM

   //மகத்தான அறிமுகங்கள்..வாழ்த்துகள்..//

   வாங்கோ, வணக்கம், மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு
 21. மறுக்கா மறுக்க நா இன்னாத்த சொல்லுது.. நீங்க மத்தவங்களுக்கு நன்றி கூறி பாராட்டும் விதம் ரொம்ப டச்சிங்கா இருக்குது. அநுபவம் மத்தவங்கள சந்தோஷபடுத்தி பாக்குர பெரிய மனசு அல்லாமே ஒஙக கிட்டால நெறம்பி இருக்குது.

  பதிலளிநீக்கு
 22. எல்லாரையும் நன்றியுடன் நினைவு கூறுவது சிறப்பான விஷயம். .

  பதிலளிநீக்கு
 23. நார்மன் வின்சென்ட் பீல் சொல்வது " மனதார நன்றி கூறுங்கள்". அதை தாங்கள் தவறாது செய்து வருகிறீர்கள்.

  பதிலளிநீக்கு