என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 17 ஜூன், 2015

நினைவில் நிற்போர் - 17ம் திருநாள்

2

நினைவில் நிற்கும் 

பதிவர்களும், பதிவுகளும்

17ம் திருநாள்

17.06.2015


91. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்
வலைத்தளம்: மணிராஜ்


குருவருள் கூடும் திருப்பெயர்ச்சி-46



பிரமிக்க வைக்கும் மிதக்கும் சொர்க்கம்-47



http://jaghamani.blogspot.com/2011/03/blog-post_6028.html


 யானை விளையாட்டு-48






92. திரு. ஜீவி ( G.V ) அவர்கள்
வலைத்தளம்:  பூ வனம் 


சென்ற (2014) ஆண்டு முழுவதும் 
40 வாரங்களுக்குத் தொடர்ச்சியாக
வெற்றிகரமாக நடைபெற்ற 
மிகப்புதுமையான நம்
‘சிறுகதை விமர்சனப்போட்டி’யின்
நடுவராக பொறுப்பேற்று
திறம்பட செயல்பட்டவர் !

சிறுகதை விமர்சனப்போட்டியின் நடுவர் யார்?


மிகவும் அருமையானதோர் 
கண்ணியமான எழுத்தாளர்.

மிகப் பிரபலமான பிற எழுத்தாளர்களின் 
எழுத்துக்களை நன்கு திறனாய்வு செய்து 
தனது பதிவுகள் பலவற்றில் சிலாகித்து எழுதியுள்ளவர்.

இவர் மிக அபூர்வமாக எனக்குத்தந்துள்ள  
பல பின்னூட்டங்கள் எனக்கு 
மிகுந்த மகிழ்ச்சியையும்
தன்னம்பிக்கையையும் அளித்துள்ளன.

இதோ இவரின் வலைப்பக்கமுள்ள 
படைப்புக்களில் ஒருசில .....

கல்லிலே கலைவண்ணம் கண்டான்
நான் சினிமாவுக்கு வரலே
அங்கீகாரம்
சங்கிலி
இன்று செருப்பு .. நாளை சேலை
கனவும் காட்சியும்



93. திரு. சுந்தர்ஜி அவர்கள்
வலைத்தளம்: கைகள் அள்ளிய நீர்


நான் வலையுலகில் நுழைந்து 
முதன் முதலாக எழுத ஆரம்பித்த
காலக்கட்டங்களில் (2011-2012), 
தனது தனித்திறமை வாய்ந்த
பின்னூட்டங்களால் எனக்கு மிகவும்
ஊக்கமும் உற்சாகமும் அளித்தவர்.

இவரை நான் நேரில் சமீபத்தில் 
இருமுறை சந்தித்துள்ளேன்.

எங்களின் சந்திப்பு நிகழ்வதற்கு பலநாட்கள் முன்பே
எங்களுக்குள் நிகழ்ந்த முதல் தொலைபேசி உரையாடல்
இப்போது நினைத்தாலும் ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது.

அதைப்பற்றிய நகைச்சுவைப்பதிவு ஒன்று 
என்னால் எழுதப்பட வேண்டும்
என என்னிடம் இவர் கோரிக்கை விடுத்துள்ளார். :)

இதோ இவரின் வலைப்பக்கமுள்ள 
படைப்புக்களில் ஒருசில .....

சிரிக்காம படிங்க பாப்போம் .... ஒரு சவால்
{ சவாலில் நான் தோற்றுப்போனேன், சுந்தர்ஜி அவர்களே! 
தஞ்சாவூர்க் கவிராயர் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் - vgk }

முள்ளு மொனையில....
சிப்பிக்குள் முத்து
இங்கிவனை யான் பெறவே
விலைவாசி
சிற்றெறும்பு குருமார்கள்






94. அன்பின் திரு. சீனா ஐயா 
என்கிற
சிதம்பரம் காசிவிஸ்வநாதன்
என்கிற

ஆத்தங்குடி திரு. 

பெ.க.சு.பெ.கரு.கா. சிதம்பரம் செட்டியார் 

அவர்கள்

{வலைச்சர நிர்வாகக் குழு தலைவர்}

வலைத்தளங்கள்: 
TEST
வலைச்சரம்
மதுரை வலைப்பதிவர்கள் குழுமம்
அசைபோடுவது
மதுரை மாநகரம்
படித்ததில் பிடித்தது

இவர் என் நெருங்கிய நண்பர்.
மிகவும் அன்பானவர், பண்பானவர், கண்ணியமானவர்.

எங்கள் நட்பின் ஆழம், எங்கள் இருவரையும் தவிர 
வேறு யாருக்குமே தெரிந்திருக்க நியாயம் இல்லை.

இவர் தன் துணைவியாருடன் 
என் இல்லத்திற்கே நேரில் 
வருகை தந்து மகிழ்வித்தவர்.

எங்கள் இனிய சந்திப்புக்கான படங்களுடன் இணைப்பு:


என்னிடமிருந்து விடைபெறும்போது 

இவரின் துணைவியாரும், பதிவருமான 

திருமதி. மெய்யம்மை ஆச்சி அவர்கள்

என்னிடம் தனியாகக் கூறிய செய்திகள், 

நம் அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள் 

 என்மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளார்கள் என்பதை 

நிரூபித்துக்காட்டுவதாக இருந்தது.


அதைக்கேட்ட எனக்கு அன்று அப்போது 

ஆனந்தக்கண்ணீர் வந்தது.



என்னால் இதுவரை அடையாளம் காட்டி 

பரிந்துரை செய்யப்பட்ட மிகச்சிறந்த 

சுமார் 35 பதிவர்களுக்கு

வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க

வாய்ப்புகள் வழங்கி உதவியுள்ளார்கள்

நம் அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள்.



அவருக்கு மீண்டும் இங்கு என்

அன்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.




http://cheenakay.blogspot.in/2008/01/blog-post_17.html
எழுதுனதுலே பிடிச்சது (யாருக்கு?)
வலைச்சர வரலாறு பற்றி இரு பகுதிகள்
இன்பச்சுற்றுலா 06-08.10.2013
முதல் கணினி அனுபவம்
சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல்




95. திரு. பட்டாபிராமன் அவர்கள்
வலைத்தளம்: ராமரசம்



இவரை நான் இதுவரை நேரில் சந்திக்காவிட்டாலும்
எப்போதும் என் தொடர்பு எல்லைக்குள் மட்டுமே இருப்பவர்.
இவரை நான் எப்போதும் அன்புடன்
’பட்டாபிராம அண்ணா’
என்றே அழைத்து வருகிறேன். 

இவரின் மிக நீண்ட பின்னூட்டங்களில் பல
என்னை பாசத்துடன் பாராட்டுவதாகவும்
உரிமையுடன் கண்டிப்பதாகவும் இருக்கும்.

அதற்கோர் உதாரணமாக 

SWEET SIXTEEN - [இனிப்பான பதினாறு]
http://gopu1949.blogspot.in/2012/11/sweet-sixteen.html#comment-form
என்ற என் பதிவின் இறுதியில் உள்ள 
இவரின் 5 பின்னூட்டங்களையும்
அதற்கான என்னுடைய 
8 பதில்களையும் படித்துப்பாருங்கள்.
அவை மிகவும் ரசிக்கக்கூடியதாக இருக்கும் :)

-oOo-

இதோ இவரின் வலைப்பக்கமுள்ள 
படைப்புக்களில் ஒருசில .....

http://tamilbloggersunit.blogspot.in/2014/12/1.html
ஆண்டாள் காட்டும் அருட்பாதை - பாசுரம்-1 ஆரம்பம்
http://tamilbloggersunit.blogspot.in/2015/01/1000-2103.html
ராமரசம் 1000 - ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் சிந்தனைகள்
http://tamilbloggersunit.blogspot.in/2014/01/blog-post_26.html
கடவுள் எங்கிருக்கிறார்?
http://tamilbloggersunit.blogspot.in/2014/10/blog-post_26.html
மனிதர்களே ! தென்னையைப்போல் இருங்கள்





96. சுய அறிமுகத்தில் சில ...

நடமாடும் தெய்வமாகவே சமீபத்தில் நம்முடன் வாழ்ந்து, இன்றும் பலரின் நீங்காத நினைவுகளில் இடம்பெற்று வழிகாட்டிக்கொண்டிருப்பவரும், அனைத்து அறிவும், ஆற்றலும், தெய்வீக சக்திகளும் ஒருங்கே பெற்று, அனைத்து மதத்தவராலும் போற்றப்பட்ட உண்மையான, உயர்வான, எளிமையான, தூய்மையான துறவி, முக்காலமும் உணர்ந்திருந்த மாமுனிவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களைப்பற்றிய என் மெகா தொடரின் 108 பகுதிகளுக்கான இணைப்புகள் இதோ. ஒவ்வொன்றையும் க்ளிக்கினால் படிக்கலாம். இவற்றையெல்லாம் படிக்கவே ஓர் கொடுப்பினை வேண்டும். :)

oooooOooooo


oooooOooooo





oooooOooooo


  • [ஆரம்ப அறிமுக அறிவிப்பு]


oooooOooooo









மீண்டும் நாளை சந்திப்போம் !






என்றும் அன்புடன் தங்கள்

 

[வை. கோபாலகிருஷ்ணன்]

43 கருத்துகள்:

  1. தங்கள் நினைவில் நின்ற பதிவர்களிற்கும் உங்களிற்கும் இனிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. இன்றைய நினைவில் நிற்போர் எல்லாம் மூத்த பிரபல்யமான பதிவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. பிரபலமானவர்கள், மூத்தோர்கள் அறிமுகம். ஜீவி ஸார் பற்றி சொல்லவும் வேண்டுமோ? சுந்தர்ஜி பிரகாஷ் அவர்கள் தளம் சென்று நாட்களாகி விட்டன. பட்டாபிராமன் ஸார் இன்னிசையை சென்ற வெள்ளிக்கிழமை வீடியோவில் இசைக்க விட்டோம்! :)))))))

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ஸ்ரீராம்.

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      தங்களின் அன்பு வருகைக்கும் விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஸ்ரீராம் :)

      நீக்கு
  4. மூத்த பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். இன்றைக்கு நீங்கள் அறிமுகம் செய்த வலைப்பதிவர்களில் பட்டாபிராமன் (ராமரசம்) தவிர மற்றவர்களின் வலைத்தளங்கள் எனக்கு நன்கு அறிமுகம்.

    மரியாதைக்குரிய ஜீவி (பூவனம்) அவர்கள் நீங்கள் நடத்திய V.G.K சிறுகதை விமர்சனப் போட்டிக்கு நடுவராக இருந்து சிறப்பான பணியைச் செய்தவர்.

    சுந்தர்ஜி (கைகள் அள்ளியநீர்) அவர்களின் தத்துவார்த்தமான கட்டுரைகளைப் படித்து இருக்கிறேன். ஒருமுறை தஞ்சை சென்று இருந்தபோது நந்தி உணவகத்தில் இவரை சந்தித்து இருக்கிறேன்.

    அனைவரும் அறிந்த அன்பின் சீனா அவர்களைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. முதன்முதல் இவருடைய வலைத்தளத்தினைக் கண்டபோது, இவருடைய தஞ்சாவூர் அனுபவங்களைப் படிக்கப் போய், எழுத்தின் சுவாரஸ்யத்தில் இவரது அனைத்து பதிவுகளையும் (நேரம் கிடைக்கும் போதேல்லாம்) தொடர்ந்து படித்து முடித்தேன். தான் பணிபுரிந்த வங்கிக்கு தேவைப்பட்ட மென்பொருளை (SOFTWARE) வடிவமைப்பதில் முக்கிய பணி ஆற்றியவர். இப்போது அதிகம் எழுதுவதில்லை என்றாலும் வலைப்பதிவர்களை வலைப்பதிவர்களே அறிமுகப்படுத்தும் வலைச்சரத்தின் நிர்வாகி என்ற முறையில் அனைவரின் அன்பிற்கும் பாத்திரமானவர்.

    இன்றைக்கு உங்களால் அறிமுகம் செய்யப்பட்ட வலைப்பதிவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @தி.தமிழ் இளங்கோ

      அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ, சார், வாங்கோ, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் விரிவான பல நல்ல செய்திகளுக்கும், அனைவருக்குமான தங்களின் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      என்றும் அன்புடன் தங்கள் VGK

      நீக்கு
  6. எத்தனை பதிவுகளின் சுட்டி...... வியப்பாகவும் மலைப்பாகவும் இருக்கிறது.

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @வெங்கட் நாகராஜ்

      வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம். வியப்பான மலைப்பான சுட்டித்தனமான கருத்துக்களுக்கும், அனைவரையும் வாழ்த்தியுள்ளதற்கும் என் அன்பு நன்றிகள். :)

      நீக்கு
  7. நன்றி யாதவன் நம்பி அவர்களுக்கு.

    திரு வைகோ அவர்கள் ஒரு சக்தி பிழம்பு
    உற்சாகத்தின் ஊற்றுக் கண்.
    அனைவரோடும் இசைந்து வாழ்ந்து
    அனைவருக்கும் இன்பம் தருவதுடன்
    தானும் இன்பமுறுபவர்

    தொய்வின்றி அவருடன் தொடர்பு கொண்டிருந்த
    நாட்கள் என்றும் என் நினைவை விட்டு நீங்காதவை.

    தற்போது எழுதுவதை குறைத்துக் கொண்டேன்

    ஏனென்றால் இசை அன்னை என்னை
    தன்னிடம் அழைத்துக் கொண்டாள்.

    கடந்த ஓராண்டாக மவுதார்கன் இசையில்
    மூழ்கியிருக்கிறேன் .
    அது என்னை தன்னோடு
    அணைத்துக்கொண்டு எனக்கு சக்தியையும் மன ஆறுதலையும் தருகிறது.

    என்னுடைய இசை தொகுப்பை you tube ல் pattabiraaman mouthorgan vedios என்ற இணைப்பில் கண்டு மகிழுங்கள்.

    உங்களின் மேலான கருத்துகளை எனக்கு தெரிவித்தால் அது எனக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Pattabi Raman June 17, 2015 at 8:28 AM

      வாங்கோ அண்ணா, நமஸ்காரங்கள் அண்ணா ! :)

      //திரு வைகோ அவர்கள் ஒரு சக்தி பிழம்பு. உற்சாகத்தின் ஊற்றுக் கண். அனைவரோடும் இசைந்து வாழ்ந்து அனைவருக்கும் இன்பம் தருவதுடன் தானும் இன்பமுறுபவர். தொய்வின்றி அவருடன் தொடர்பு கொண்டிருந்த நாட்கள் என்றும் என் நினைவை விட்டு நீங்காதவை.//

      ஆஹா, தன்யனானேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான ஆசீர்வாத வார்த்தைகளுக்கும் மிக்க மகிழ்ச்சி அண்ணா. மிக்க நன்றி அண்ணா !

      தங்களை அபூர்வமாக நெடுநாட்களுக்குப்பின் இங்கு கூட்டி வந்திருக்கும் நம் அன்புத்தம்பி யாதவன் நம்பி - புதுவை வேலு அவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  8. இன்றைய பதிவும் பதிவர்களை அறிமுகப்படுத்திய விதமும் மிக அருமை. மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @S.P. Senthil Kumar

      //இன்றைய பதிவும் பதிவர்களை அறிமுகப்படுத்திய விதமும் மிக அருமை. மிக்க நன்றி!//

      :) மிக அருமையாகத்தான் சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, நண்பரே ! :)

      நீக்கு

  9. இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! தங்களுடைய மெகா தொடரை படித்து கருத்தை இடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி June 17, 2015 at 9:56 AM

      வாங்கோ சார், வணக்கம் சார்.

      //இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! தங்களுடைய மெகா தொடரை படித்து கருத்தை இடுகிறேன். //

      :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார் :)

      நீக்கு
  10. மிகச்சிறந்த பதிவர்கள் அனைவரின் தளங்களுக்கும் சென்று வாசிக்க வேண்டும். வாசிக்கின்றேன்! 108 பகுதிகளுக்கு இணைப்புக்கொடுத்து அசத்திவிட்டீர்கள். இந்த தொடரின் பல பகுதிகளை நான் ஏற்கனவே வாசித்திருக்கிறேன்! இருந்தாலும் மீண்டும் நேரம் கிடைக்கையில் வாசிக்கின்றேன்! தெவிட்டாத தெள்ளமது பதிவுகள் அவை! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ‘தளிர்’ சுரேஷ் June 17, 2015 at 12:07 PM
      மிகச்சிறந்த பதிவர்கள் அனைவரின் தளங்களுக்கும் சென்று வாசிக்க வேண்டும். வாசிக்கின்றேன்!

      :)

      //108 பகுதிகளுக்கு இணைப்புக்கொடுத்து அசத்திவிட்டீர்கள். இந்த தொடரின் பல பகுதிகளை நான் ஏற்கனவே வாசித்திருக்கிறேன்! இருந்தாலும் மீண்டும் நேரம் கிடைக்கையில் வாசிக்கின்றேன்!//

      :) மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி :)

      // தெவிட்டாத தெள்ளமது பதிவுகள் அவை! மிக்க நன்றி!//

      :))))))))))))))))))))))))))))))))))

      நீக்கு
  11. ஜயந்தி வரட்டும்! ஜயம் தரட்டும்!

    இதோ வந்துட்டென் அண்ணா.

    இன்று நீங்கள் குறிப்பிட்ட வலைத்தளத்தின் உரிமையாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    எனக்கும் (!) ஒரு வார வலைத்தள ஆசிரியராக வாய்ப்பு கொடுத்தி திரு அன்பின் சீனா அவர்களுக்கும், அதற்குக் காரணமாக இருந்த கோபு அண்ணா அவர்களுக்கும் என் வணக்கத்துக்குரிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @Jayanthi Jaya

      ஆஹா, வந்துட்டேளா ! வாங்கோ ஜெயா, வணக்கம்.

      :) மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி ஜெயா :)

      அவை மறக்கமுடியாத இனிய நாட்கள்.

      நீக்கு
  12. தங்கள் நினைவில் நின்றவர்கள், அருமை, பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  13. இன்றைய தொகுப்பு -
    மலைக்க வைக்கின்றது..
    வியக்க வைக்கின்றது!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @துரை செல்வராஜூ

      :) மலைக்கவும் வியக்கவும் வைக்கும் தங்கள் கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, பிரதர். :)

      நீக்கு
  14. விமர்சனப்போட்டியின் நடுவர் ஜீ.வீ அவர்களை மிக நன்றாகத் தெரியும். திரு சீனா ஐயாவையும் அறிவேன். மற்றவர்களைப் பற்றி இன்று தெரிந்து கொண்டேன். எல்லோருக்கும் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  15. சிறந்த பதிவர்களின் விவரங்கள்
    அழகிய முறையில்!

    தங்களின் க. உ. தெரிகிறது!

    (க. உ. =?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @அ. முஹம்மது நிஜாமுத்தீன்

      :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

      [ க.உ. = கடும் உழைப்பு தானே? ]

      நீக்கு
  16. ஜீவி சார், பட்டாபிராமன் அவர்கள் இருவரின் தளங்களுக்கும் சென்றதில்லை. அனைவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்..

    பதிலளிநீக்கு
  17. பதில்கள்
    1. சென்னை பித்தன் June 18, 2015 at 4:46 PM

      வாங்கோ சார், வணக்கம்.

      //முத்துக்குளிக்கிறீர்கள்!//

      தங்களின் அன்பான வருகைக்கும் முத்தான/சத்தான கருத்துக்களுக்கும் என் நன்றிகள்.

      உங்களுக்கும் ஒரு நாள் முத்துக்குளியல் இந்த என் வலைத்தளத்தில் நடக்க உள்ளது. :)

      இந்த 35 நாள் மஹோத்ஸவத்தில், இதுவரை 50% திருநாள்தான் முடிந்துள்ளன. இன்னும் 50% பாக்கியுள்ளன.

      அன்புடன் VGK

      நீக்கு

  18. இந்த 35 நாள் மஹோத்ஸவத்தில், இதுவரை 50% திருநாள்தான் முடிந்துள்ளன. இன்னும் 50% பாக்கியுள்ளன//.

    தாங்கள் எதைச் செய்தாலும்
    பக்காவாக திட்டமிட்டுச் செய்வீர்கள்
    என்பது பதிவர்கள் அனைவருக்கும் தெரிந்ததுதானே

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்துக்கள்

    பதிலளிநீக்கு
  19. @Ramani S

    **இந்த 35 நாள் மஹோத்ஸவத்தில், இதுவரை 50% திருநாள்தான் முடிந்துள்ளன. இன்னும் 50% பாக்கியுள்ளன.**

    //தாங்கள் எதைச் செய்தாலும் பக்காவாக திட்டமிட்டுச் செய்வீர்கள்
    என்பது பதிவர்கள் அனைவருக்கும் தெரிந்ததுதானே.//

    தங்களின் இந்தச்சொற்கள் என்னை மேலும் ஊக்குவிப்பதாக உள்ளது. அதற்கு என் தாழ்மையான ஸ்பெஷல் நன்றிகள், சார்.

    //பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துகள்//

    தங்களின் அன்பான வருகைக்கும், ஆறுதலான கருத்துக்களுக்கும், நல்வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

    பதிலளிநீக்கு
  20. பிரமிக்கவைக்கும் பதிவர்கள்..
    அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி November 6, 2015 at 1:56 PM

      வாங்கோ ....வணக்கம் மேடம்.

      //பிரமிக்கவைக்கும் பதிவர்கள்..
      அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்//

      :) இன்று, இங்கு தாங்கள் அன்பான வருகை தந்து பிரமிக்க வைத்துள்ளதற்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம் :)

      நீக்கு