கதையின் தலைப்பு :
மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,
அவர்கள் அனைவருக்கும் என்
மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
மற்றவர்களுக்கு:
இரண்டாம் பரிசினை
வென்றுள்ளவர்கள் இருவர்.
அதில் ஒருவர்
களம்பூர் திரு.
அதில் ஒருவர்
களம்பூர் திரு.
G. பெருமாள் செட்டியார்
வலைத்தளம்
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை.
ஒரே ஒரு கண்ணனுக்கு, ஆயர்பாடியின் அனைத்து கோபிகைகளாலும்
ஈடு கொடுக்க முடியவில்லை.
இங்கு இரட்டை ( வால் ) கண்ணன்கள்.
சொல்லவும் வேண்டுமோ, கதா நாயகியும் அவள் நண்பியும் படும்பாட்டை!.
தரையை ஈரமாக்குவது, அதில் வழுக்கி விழுவது...
யதார்த்தமான, நிதர்சனமான, மிகவும் ரசித்த வரிகள்.
யதார்த்தமான, நிதர்சனமான, மிகவும் ரசித்த வரிகள்.
மிகுதியான வேலை, அயர்ச்சி, இவைகளினூடே இந்த வால்களுக்கு வேறு செய்யவேண்டுமா என்று மனம் சலிப்பதுபோல் காட்டியிருந்தாலும்,
கறந்த பால் கன்னலொடு
நெய் கலந்தாற்போல
நாயகியின் மனதில் இருக்கும் தாய்மையின் நெகிழ்வையும்,பரிவையும்
( அவர்களுக்குத் தேவையான பிஸ்கட், சாக்லேட்ஸ், பால், இட்லி,நெய்யுடன் பருப்பு, தெளிவான காரமில்லாத ரசம் என தேடித்தேடி, ரசித்து, எடுத்து வைப்பது ) இணைத்துக் காட்டியிருப்பது அருமை.
ம் .. ம் .. பிஸ்கட்டும், சாக்லேட்சும் இக்கால தாய்மார்களுக்கு வரப்பிரசாதம்.
மறு மனையில் உட்கார்ந்து கை நிறைய வளையல்போட்டுக்கொண்டு, அம்மிக்
குழவி கழுவவது, வேப்பிலை அடிப்பது சிலருக்கு நம்பிக்கை..
பாதிக்கப் பட்டவர்களுக்கு அவமானம்..
சில தலைமுறைகளின் இடைவெளி..
" புதிதாக சாணை பிடித்த அருவாமனை "-- நறுக்கென்றவார்த்தைகள்.
" அவளும் என்னைப் போலத்தான், சுதந்திரமாக அரச மரத்தைச்சுற்றுகிறாள் " என ஒப்பிட்டுப் பார்க்கும் குணம்.
இவ்வாறு பெண்களின் குண நலன்களுடன் அநாயாசமாக விளையாடியிருக்கிறார் ஆசிரியர்.
தோழியும், அவளுடன் இலவச இணைப்புக்களும் வருவது பிடிக்கவில்லை என்றால்
”எனக்கு வேலை இருக்கிறது " என்று தட்டிக் கழித்திருக்கலாம், அல்லது
"முடிந்தால் வா, இல்லையென்றால் பிறகு பார்க்கலாம் " என்று பட்டும் படாமலும் பதிலளித்திருக்கலாம். அதைவிட்டு,
”எனக்கு வேலை இருக்கிறது " என்று தட்டிக் கழித்திருக்கலாம், அல்லது
"முடிந்தால் வா, இல்லையென்றால் பிறகு பார்க்கலாம் " என்று பட்டும் படாமலும் பதிலளித்திருக்கலாம். அதைவிட்டு,
“டி.வி.யில் அத்திப்பூக்கள் முடிந்த பிறகு , வாடி”
என்று கண்டிப்புடன் சொல்லியிருப்பதில் , எந்த தலைவலி வந்தாலும்
பரவாயில்லை, தோழி வரவேண்டும், அவளுடன் பேசிமகிழ வேண்டும் என்ற ஆவல் தொக்கி நிற்பது அருமை.
வந்த ஒற்றைத் தலைவலி, தூங்கி எழுந்து , லாப் டாப் ஐ இழுத்துத்தள்ளிவிட்டு,
" ஹையா ! ! இந்த வீட்டில் , உடையாத டி. வி. மானிட்டர், உடையாத ஷோ கேஸ் கண்ணாடி ! அதேபோல் , உடையாத லாப் டாப் ! ! ” என்று அதைப் பார்த்து சிரிப்பது மிகவும் அருமை.
கணவர் வேலையிலிருந்து திரும்பியவுடன் பக்குவமான மந்திர உபதேசம்.
கணவரின் சில தவறான வார்த்தைகளுக்காக வேதனைப்படும் கதா நாயகி.
உயிர்பிக்கப்பட்ட லாப் டாப்பில்
கஷ்குமுஷ்குக் குழந்தைகள் தோன்றி சிரிக்கத்துவங்கியதும் தான், பாதி உயிர் வந்ததாம் கதா நாயகிக்கு.
அந்த வீட்டில் வாழும் இரு ஜீவன்களின் சுவாசக் காற்றே குழ்ந்தைகள்தாம்
என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் கதாசிரியர் .
லாப் டாப் உடையவில்லை என்று கணவர் சொல்ல,
என் மனம் உடைந்துவிட்டது என்று கதறத் துடிக்கும் கதா நாயகி.
உன் கணவர் சொல்லிய வார்த்தைகள்
" நாவினாற் சுட்ட வடு " அல்ல , மகளே !
உன் மனதில் இருப்பது சாதாரண காயங்கள் தான் !
உன் விரல் உன் கண்ணைக் குத்தினால் உனக்கு வலிக்காது, பெண்ணே !
நாளை, உன் மடி ஈரமாகும் போது , உன் விழிகள் ஆயிரம் கதை சொல்லும் !
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்!
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
G.Perumal chettiar
மனம் நிறைந்த பாராட்டுக்கள் +
இனிய நல்வாழ்த்துகள்.
இரண்டாம் பரிசினை வென்று
பகிர்ந்து கொண்டுள்ள
மற்றொருவர்
திருமதி.
கீதா சாம்பசிவம்
அவர்கள்
வலைத்தளம்:
இரண்டாம் பரிசினை வென்ற
திருமதி.
கீதா சாம்பசிவம்
அவர்களின் விமர்சனம் இதோ:
குழந்தை வரம் வேண்டித் தவிக்கும் ஒரு பெண். அதே சமயம் இன்னொருவரின் குழந்தைகளின் விஷமத்தை வெறுக்கவும் வெறுக்கிறாள். குழந்தைகளோடு அதிகம் பழகாதவளோ கதாநாயகி என்னும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது இந்தக்கதை. இரண்டும் கெட்டான் குழந்தைகள் என்று சொல்லி விட்டுப் பின் அந்தக் குழந்தைகளின் விஷமங்களைப் பொறுக்க மனமில்லை எனில் எப்படி? இது கொஞ்சம் ஆச்சரியத்தை அளித்தாலும் பொதுவாக எல்லார் வீடுகளிலுமே அவரவர் வீட்டுக் குழந்தைகளின் விஷமம் என்றால் பொறுத்துக் கொள்வார்கள். அதுவே அடுத்தவர்கள் வீட்டுக் குழந்தைகள் எனில் கொஞ்சம் பொறுத்துக் கொள்வது சிரமம் தான். இங்கே கதாநாயகி வாய்விட்டு ஏதும் சொல்ல முடியாமல் தவிக்கிறாள். இருதலைக்கொள்ளி எறும்பு போல் தவிக்கிறாள் ஏனெனில் இந்தக் குழந்தைகள் அவள் சிநேகிதியின் நாத்தனார் குழந்தைகளாகப் போய்விடுகின்றன. பிறந்தது முதல் பார்த்து வருகிறாள் என்பதோடு தங்களுக்கெல்லாம் ஒரு குழந்தையே பிறக்காத போது ரேவதியின் நாத்தனாருக்கு ஒரே பிரசவத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் என்பது உள்ளூர ஒரு பிரமிப்பாகவும் இருக்கிறது. குழந்தைகள் வரும் சமயம் அவர்களுக்கு ஆகாரம் முதற்கொண்டு தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. அதோடு இவளுக்குக் கல்யாணம் ஆனதே அந்த சிநேகிதியால் தான் என்பதும் சுட்டிக் காட்டப்படுகிறது என்பதால் நம் கதாநாயகிக்கு இப்படி நடந்து கொள்வது அதற்கான நன்றிக்கடனோ எனவும் நினைக்க வைக்கிறது.
அந்த சிநேகிதி குழந்தைகளோடு வெகு நேரம் இங்கே கழிக்கிறாள். குழந்தைகள் பொருட்களை உடைப்பதும், புத்தகங்களைக் கிழிப்பதுமாக இருப்பதால் வந்து போன பின்னர் வீட்டைச் சுத்தம் செய்வதும் கஷ்டமாக ஆகிவிடுகிறது. தனக்குக் குழந்தை பிறக்கவில்லையே என நினைத்தாலும் வேறோரு குழந்தை இப்படி எல்லாம் வந்து விஷமம் பண்ணுவதைப்பொறுக்கவும் முடியவில்லை. அது தன் சிநேகிதியின் நாத்தனார் குழந்தைகள் என்பதால் வாயைத் திறக்கவும் முடியவில்லை. ஒரு குழந்தைக்கே தவமிருக்கும் தங்களுக்கு (ஆம், அந்த சிநேகிதிக்கும் குழந்தை பிறக்கவில்லை.) இரட்டைக் குழந்தைகள் பிறந்த அந்த நாத்தனாரைப் பார்த்து உள்ளூர ஒரு விதப்பொறாமை என்று சொல்லலாமோ? மேலும் அக்கம்பக்கம் எல்லாம் இவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்பதால் அவரவருக்குத் தெரிந்த வைத்தியம், பிரார்த்தனைகள், பரிகாரங்கள் என்று சொல்லி மனதை நோகடிக்கின்றனர்.. அதிலும் கல்யாணம் ஆகி ஒரு வருடத்துக்கும் மேல் என்று ஆகிவிட்டால் கேட்கவே வேண்டாம். அந்தப்பெண் பரிகாரங்கள், பூஜைகள், கோயில்கள் விஜயம் என அனைவராலும் கட்டாயப்படுத்தப் படுவதோடு வளைகாப்புப் பெண்ணோடு மறுமனை என்ற பெயரில் வளை அடுக்கிக் கொள்ளவும் நிர்ப்பந்திக்கப்படுவாள். கல்லைக் குழந்தையாகப் பாவித்து அதற்குக் குளிப்பாட்டி, மையிட்டுப் பொட்டெழுதி, பாலூட்டிச் சீராட்டி இந்தக் கல்லைப் போல் என் வயிறும் இருக்கே, கடவுளே நீயும் கல்லைப் போல் இருக்கியே, எனக்காக மனமிரங்க மாட்டாயா? என்று மனதுக்குள் வேண்டிக்கொள்ள வேண்டும். குழந்தை பிறக்காத பெண்கள் தங்களுக்குள்ளாக மெளனமாக அழுவது மட்டும் வெளியே கேட்டால் உலகமே அதிரும்! அத்தகைய பெரிய ஓசையாக இருக்கும்.
இதிலே ஒவ்வொரு முறையும் இந்தப்பரிகாரங்களுக்கு உட்படுவது என்னமோ பெண் தான். அந்தக் காலங்களில் வேண்டுமானால் ஆண்களில் மலட்டுத் தன்மை குறைவாக இருந்திருக்கலாம். ஆனால் தற்காலங்களில் உணவு முறை, சூழ்நிலை, பழக்கவழக்கங்கள், உடைகள் போன்றவற்றின் காரணமாக ஆண்களிலும் மலட்டுத் தன்மை அதிகரிக்கிறது. என்ன உடைனு சொல்றேன்னு பார்க்கிறீங்களா? இந்த உடை விஷயம் ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானது. இறுக்கமான உடை அணியும் ஆண்களும், பெண்களும் இத்தகைய உடல் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர் என்பது மருத்துவ ரீதியில் நிரூபிக்கப்பட்ட உண்மை. அதிலும் பெண்கள் இப்போது "லெகீஸ்" எனப்படும் ஒரு வகை இறுக்கமான உடையை அணிகின்றனர். அதைக் குறித்துப் பல மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துவிட்டார்கள். என்றாலும் நம் மக்கள் கேட்பதாக இல்லை. இதை எல்லாம் மீறி ஒருத்தருக்கு ஒரு வருஷத்துக்குள்ளோ, இரண்டு வருஷத்துக்குள்ளோ குழந்தை பிறந்தால் ஆச்சரியம் தான். ஆனால் இங்கே தோழிகள் இருவருக்குமே குழந்தைகள் இல்லை. அதில் நம் கதாநாயகிக்குக் கொஞ்சம் ஆறுதல் தான். தனக்கு மட்டுமில்லாமல் தோழிக்கும் குழந்தை பிறக்கவில்லையே என ஒரு சின்ன ஆறுதல். ஆனால் அதிலும் கொஞ்சம் மனம் சங்கடப்படும்படி ஒரு விஷயம். நம் கதாநாயகியின் கணவருக்கு தான் திருமணம் செய்து கொள்வதாக இருந்த இந்த ரேவதியைக் கண்டால் இப்போதும் ஒரு புல்லரிப்பு, பரவசம் ஏற்படுகிறது. அதற்கு மேல் எதுவும் இல்லை தான். ஆனால் ஒரு பெண் எதையும் நுணுக்கமாகக் கவனிப்பாள். அதிலும் தன் கணவன் தன்னைத் தவிர மற்றொரு பெண்ணைப் பார்க்கையில் எம்மாதிரி மனநிலையில் பார்க்கிறான் என்பதை அவளால் சரியாகக் கணிக்க முடியும். அப்படியே இங்கேயும் கணிக்கிறாள். ஆனாலும் அவளால் எதையும் வாய்விட்டுச் சொல்ல முடியவில்லை. தனக்குக் குழந்தை பிறக்கவில்லை என்னும் தாழ்வு மனப்பான்மை அவளை அடங்கிப் போகச் செய்கிறதோ!
அவள் சிநேகிதியிடமும் இந்தக் குழந்தைகளைக் கூட்டி வராதே, என்னால் அப்புறம் அதுங்க செய்யும் விஷமக் காரியங்களின் விளைவுகளைச் சரி செய்ய முடியவில்லை என்று சொல்ல முடியவில்லை. அது தான் ஏன்? தோழியிடம் மனம் விட்டுப் பேசத் தனிமை தான் வேண்டும். அது இல்லாமல் தோழி குழந்தைகளோடு வரட்டும் என அனுமதிப்பது ஏன்? கொஞ்ச நாட்கள் தான் என்பதாலோ? இருக்கலாம். ரேவதியின் நாத்தனார் நிரந்தரமாக இங்கே இருக்கப் போகிறவள் இல்லை; அதனால் கடுமையான வார்த்தைப் பிரயோகம் வேண்டாம்னு இருக்கலாம். அதே சமயம் தோழியோடு மனம் விட்டுப் பேசியும் ஆகணும். ஆகவே தனக்குப் பிடித்த நெடுந்தொடர் முடிந்ததும் வரச் சொல்லுகிறாள். அப்படித் தோழி ஒரு நாள் வருகையில் ஒரு குழந்தை வீட்டிலேயே தூங்க இன்னொன்றை மட்டும் அழைத்துவர, அதுவும் இந்த வீட்டில் தூங்கி விடுகிறது. சரினு நிம்மதியாப் பேசிக் கொண்டிருந்த தோழிகளுக்கு அதிர்ச்சியாக அந்தக் குழந்தை அறுபதாயிரம் ரூபாய் மடிக்கணினியைக் கீழே தள்ளிவிடுகிறது. சின்னக் குழந்தைக்கு என்ன தெரியும்! அது பாட்டுக்குச் சிரிக்கிறது எவ்விதக் கல்மிஷமும் இல்லாமல். ஆனால் குழந்தையை அழைத்து வந்த ரேவதியும் தனக்குப் பொறுப்பே இல்லை என்பது போல் உடனே கிளம்பி விடுகிறாள். கணினி வேலை செய்யுமோ, செய்யாதோ, கணவர் வந்தால் என்ன பதில் சொல்வது! நம்மைக் கூட இதில் எதுவும் செய்ய விடமாட்டாரே என்றெல்லாம் கலங்கிப் போய் இருக்கும் கதாநாயகி கணவர் வந்ததும் மெல்ல மெல்ல விஷயத்தைச் சொல்கிறாள்.
ஏற்கெனவே அந்தக் குழந்தைகள் செய்த விஷமங்களை எல்லாம் அடுக்கி, இன்றைய புதிய விஷமத்தைச் சொல்வதற்குள்ளாக அவள் மேல் நெருப்பு வந்து விழுகிறது. ஆம், அவள் கணவரே அவளைப் பார்த்துப் பொருட்களைக் குறித்துக் கவலைப்படும் உனக்குக் குழந்தைகளின் மதிப்புத் தெரியவில்லை என்று சொல்லி விடுகிறார். இது முழுக்க ஆணாதிக்கம் சார்ந்தது; சுயநலம் சார்ந்தது. குழந்தை பிறப்பது என்பதற்குப் பெண்கள் மட்டுமே பொறுப்பு என்பது போலவும், தன் மேல் எவ்விதத் தவறும் இல்லை என்பது போலவும் சொல்லி விடுகிறார். என்னதான் பின்னால் தப்பை உணர்ந்து தலையை அடித்துக் கொண்டாலும் கீழே கொட்டிய பொருட்களை அள்ளலாமே தவிர, வார்த்தைகளை அள்ள முடியுமா? திரும்ப வாங்க முடியுமா? சொன்னது சொன்னது தானே! அது என்னமோ ஒரு தம்பதிக்குக் குழந்தை பிறக்கவில்லை என்றால் ஒட்டுமொத்தமாகப் பெண்ணினத்தை மட்டுமே குறை சொல்வது வழக்கமாகி வருகிறது. வழக்கமாக இருக்கிறது. ஆணின் மேலும் தப்பு இருக்கலாம் என்றே அந்த ஆண்களுக்குக் கூடத் தோன்றுவது இல்லை. அதே போல் கதாநாயகியின் புகுந்த வீட்டுக்காரர்கள் ஒரு கத்தரிக்காயை வைத்துக் கொண்டு அதில் கூடப் புழு, பூச்சி இருப்பதாகவும், இவள் வயிற்றில் ஒன்றுமே வரவில்லை என்றும் ஏளனம் செய்வதைக் கண்டிருக்கிறார். இது அவருக்கும் தெரிந்தது தான். மனைவிக்கு ஆறுதல் சொல்ல வேண்டியவர் மனைவியைப் புண் படுத்துகிறார். சொல்லக் கூடாத வார்த்தைகளைச் சொல்கிறார்.
பின்னர் ஏதுமே நடக்காதது போல் கணினியை எடுத்து வைத்துக் கொண்டு அதைப் பரிசோதனை செய்துவிட்டு கணினி சரியாக இருக்கு என்று இவ்வளவு நேரம் கவலைப்பட்ட மனைவியிடம் சொல்லாமல் நேரே அந்த ரேவதிக்குத் தொலைபேசிச் சொல்லி மகிழ்கிறார். இப்போதும் மனைவியையோ அவள் கவலையையோ ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை. தான் மணக்க இருந்து ஜாதகக் கோளாறினால் மணக்க இயலாத ரேவதியிடம் பேசுவதில் தான் அவர் மனம் லயிக்கிறது. அதில் ஒரு அல்ப சந்தோஷம். குத்துவிளக்கை ஒத்த மனைவி வீட்டில் தவமாய்த் தவமிருக்க, அவளை விட்டு இன்னொருத்தியிடம் பேசி மன மகிழ்ச்சி கொள்ளும் அவலம். ஆண்களுக்கே உரிய அலட்சியம் என்று சொல்லலாமா? மனைவி எப்படி ஆனாலும் தனக்கு உட்பட்டவள், தான் என்ன சொன்னாலும், செய்தாலும் கேட்கக் கடமைப்பட்டவள் என்னும் எண்ணம் எனலாமா? முழு ஆணாதிக்கம் எனலாமா? இத்தனை நேரம் தவியாய்த் தவித்த மனைவியிடம் கணினி சரியாக இருக்கிறது என்பதைச் சொல்லக் கூட முடியாமல் மற்றொருத்தியிடம் பேசிச் சிரிக்கும் மனதை என்ன என்பது! இங்கே நம் கதாநாயகி சுக்குச் சுக்காக உடைந்து நொறுங்கிப் போகிறாள். விசாரிக்க வரும் மனைவியின் மனநிலைமை புரியாமல் மடிக்கணினிக்கு எவ்விதக் கீறலும் இல்லை என்றும் சொல்கிறார். ஆனால் இங்கே மனைவியின் மனமோ கீறல்களும், காயங்களுமாக ரணமாகிக் கிடக்கிறதே! அது எப்போ சரியாகும்? இந்தக் கேள்விக்கு பதிலை நம்மையே ஊகிக்கும்படி விட்டு விட்டார் ஆசிரியர்.
இந்த நிலையைச் சகித்துக் கொண்டு வாழப் பழகுவாள் அந்தக் கதாநாயகி. அவளுக்குத் தான் எதையும் தாங்கும் இதயம் ஆயிற்றே!
மனம் நிறைந்த பாராட்டுக்கள் +
இனிய நல்வாழ்த்துகள்.
மிகக்கடினமான இந்த வேலையை
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
நடுவர் அவர்களின்
வழிகாட்டுதல்களின்படி
இரண்டாம் பரிசுக்கான தொகை
இவ்விருவருக்கும்
சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.
-oOo-
இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள
மற்றவர்கள் பற்றிய விபரங்கள்
தனித்தனிப் பதிவுகளாக
பல மணி நேர இடைவெளிகளில்
வெளியிடப்பட்டு வருகின்றன.
காணத்தவறாதீர்கள் !
அனைவரும் தொடர்ந்து
ஒவ்வொரு வாரப்போட்டியிலும்
உற்சாகத்துடன் பங்கு கொண்டு
சிறப்பிக்க வேண்டுமாய்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOooooo
இந்த வார சிறுகதை
விமர்சனப் போட்டிக்கான
இணைப்பு:
கதையின் தலைப்பு:
” வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ
புதிய கட்சி
மூ.பொ.போ.மு.க.
உதயம் ”
புதிய கட்சி
மூ.பொ.போ.மு.க.
உதயம் ”
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
வரும் வியாழக்கிழமை
17.04.2014
இந்திய நேரம்
இரவு 8 மணிக்குள்.
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
ஆச்சரியமான விஷயம்தான், எனக்குப் பரிசு கிடைத்திருப்பதைச் சொன்னேன். எதிர்பார்க்கவே இல்லை. போன இரு கதைகளில் எதிர்பார்த்தேன். :)))) எப்போதுமே எதிர்பாரா ஆச்சரியம் தான் சந்தோஷத்தைத் தருகிறது. நன்றி. பகிர்ந்து கொண்ட பெருமாள் செட்டியாருக்கும் வாழ்த்துகள், நன்றி.
பதிலளிநீக்குதொடர
பதிலளிநீக்குதிரு. பெருமாள் செட்டியாருக்கும், திருமதி கீதா மேத்மிற்கும் என் இனிய வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇரண்டாம் பரிசினை வென்றுள்ள கலம்பூர் திரு.G. பெருமாள் செட்டியார் ஐயா அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஅவரது சிறப்பான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..!
பதிலளிநீக்குஇரண்டாம் பரிசினை பகிர்ந்துகொண்டு வென்ற
திருமதி.கீதா சாம்பசிவம் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்
அவர்களின் சிறப்பான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..! :
///இதிலே ஒவ்வொரு முறையும் இந்தப்பரிகாரங்களுக்கு உட்படுவது என்னமோ பெண் தான். அந்தக் காலங்களில் வேண்டுமானால் ஆண்களில் மலட்டுத் தன்மை குறைவாக இருந்திருக்கலாம். ஆனால் தற்காலங்களில் உணவு முறை, சூழ்நிலை, பழக்கவழக்கங்கள், உடைகள் போன்றவற்றின் காரணமாக ஆண்களிலும் மலட்டுத் தன்மை அதிகரிக்கிறது. என்ன உடைனு சொல்றேன்னு பார்க்கிறீங்களா? இந்த உடை விஷயம் ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானது. இறுக்கமான உடை அணியும் ஆண்களும், பெண்களும் இத்தகைய உடல் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர் என்பது மருத்துவ ரீதியில் நிரூபிக்கப்பட்ட உண்மை. அதிலும் பெண்கள் இப்போது "லெகீஸ்" எனப்படும் ஒரு வகை இறுக்கமான உடையை அணிகின்றனர். அதைக் குறித்துப் பல மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துவிட்டார்கள். .... //
பதிலளிநீக்குகீதாம்மா.. எழுதிக் கொண்டே வருகையில் கோர்வையாக எழுதி வருகின்ற வரிப்பாதையிலிருந்து எவ்வளவு விலகிப் போய் விட்டீர்கள், பாருங்கள்! உங்களுக்குள் இருக்கும் 'எடிட்டர்' என்னவானார்?..
எழுதக் கூடிய செய்திகளின் லகான் எப்பொழுதும் நம் கையில் இருக்க வேண்டும். அப்பொழுது தான் வேண்டும் பொழுது தளர்த்தவும், இழுத்துப் பிடிக்கவும் செளகரியமாக இருக்கும்.
மென்மேலும் வெற்றி குவிக்க வாழ்த்துக்கள், கீதாம்மா..
இந்த விமரிசனப் போட்டியில் அத்திப்பூத்தாற் போலத் தென்படுகின்ற புதுமுகங்களைக் காண அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.
பதிலளிநீக்குஇன்னும் வாசிக்க நம்மை எதிர்பார்க்க வைக்கின்ற எழுத்து. சுருக்கமாக முடித்துக் கொண்டு விட்டீர்களோ என்று தோன்றுகிறது.
அடுத்த விமரிசனத்தில் இன்னும் சிறப்பு காட்டூவீர்கள் என்கிற நம்பிக்கையின் கீற்று இந்த விமரிசனத்திலேயே தெரிகிறது. வாழ்த்துக்கள் அன்பரே!
திரு பெருமாள் செட்டியாரின் வித்யாசமான விமரிசனமும், திருமதி கீதாவின் பல விஷயங்களையும் அலசி எழுதியுள்ள விமரிசனமும் அருமை. பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குதிருமதி.கீதா சாம்பசிவம் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஇரண்டாம் பரிசு பெற்றுள்ள புதிய அறிமுகமான கலம்பூர் திரு. பெருமாள் செட்டியார் அவர்களுக்கும் கீதா சாம்பசிவம் மேடம் அவர்களுக்கும் இனிய பாராட்டுகள். விமர்சனங்களும் விமர்சனம் குறித்த ஜீவி சாரின் பார்வையும் மிகவும் பயனுள்ளவையாய் உள்ளன. நன்றி ஜீவி சார்.
பதிலளிநீக்கு/// தற்காலங்களில் உணவு முறை, சூழ்நிலை, பழக்கவழக்கங்கள், உடைகள் போன்றவற்றின் காரணமாக ஆண்களிலும் மலட்டுத் தன்மை அதிகரிக்கிறது.
பதிலளிநீக்குஎன்ன உடைனு சொல்றேன்னு பார்க்கிறீங்களா? இந்த உடை விஷயம் ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவானது. இறுக்கமான உடை அணியும் ஆண்களும், பெண்களும் இத்தகைய உடல் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர் என்பது மருத்துவ ரீதியில் நிரூபிக்கப்பட்ட உண்மை. அதிலும் பெண்கள் இப்போது "லெகீஸ்" எனப்படும் ஒரு வகை இறுக்கமான உடையை அணிகின்றனர். அதைக் குறித்துப் பல மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துவிட்டார்கள். என்றாலும் நம் மக்கள் கேட்பதாக இல்லை. ///
மிகச் சிறந்த அறிவுரை !
பராட்டுக்கள் !
பரிசு பெற்ற திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
உடை மட்டுமா..
நீக்குகுதி உயர்ந்த ஹைஹீல்ஸ் நடை அணிகளையும் மருத்துவர்கள் தவிர்க்க சொல்கிறார்கள்..
ஃபாஸ்ட் புட் என்னும் உடனடி உணவுகள் ,ஜங்க ஃபுட்கள் உடல் ஆரோக்கியத்தியத்தை கருத்தில் கொள்ளாமல் உடல்மெலிவை தக்கவைத்துக்கொள்ள மிக குறைந்த உணவை ஏற்றல் எல்லாம் தாய்மைபேறு அடைவதில் சிக்கலை ஏற்படுத்தி மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கவேண்டிய நிலையை ஏற்படுத்திவிடுகின்றனவே..!
நன்றி பெருமாள் செட்டியார், நன்றி ராஜராஜேஸ்வரி, உண்மையில் இது குறித்து விரிவாக எழுத எண்ணிப் பின்னர் விமரிசனத்தில் அதெல்லாம் வேண்டாம்னு விட்டேன். :)) முக்கியமாய் லெகீஸைக் குறிப்பிட்டதற்குக் காரணம் அது கருப்பையைப் பாதிக்கிறது என்பதால். சமீபத்தில் பிரபலமான ஒரு பெண்கள் மலரிலும் இது குறித்து ஒரு பெண் மருத்தவர் குறிப்பிட்டிருந்தார். :(((
பதிலளிநீக்குதங்கள் சிறுகதை விமர்சனப் போட்டியில் இரண்டாம் பரிசினை வென்றுள்ள சகோதரர் கலம்பூர் திரு. G. பெருமாள் செட்டியார் மற்றும் சகோதரி கீதா சாம்பசிவம் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஉங்கள் பதிவின் மூலமாக சகோதரர் கலம்பூர் திரு. G. பெருமாள் செட்டியார் அவர்கள புதிதாக அறிமுகம்..
என்னை பரிசுக்கு உரியவராக்கிய நடுவர் அவர்களுக்கும்,
பதிலளிநீக்குதிரு. VGK அவர்களுக்கும் , வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் .
இந்த வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
பதிலளிநீக்குஅவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
http://sivamgss.blogspot.in/2014/04/2_16.html
திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள்.
இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
http://gperumal74.blogspot.in/2014/05/blog-post_8.html
பதிலளிநீக்குகளம்பூர் திரு. G. பெருமாள் செட்டியார் அவர்கள்
இந்த வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
திரு.பெருமாள் செட்டியார் மற்றும் திருமதி. கீதா சாம்பசிவம் ஆகியவர்களின் விமர்சனங்கள் அருமை.
பதிலளிநீக்குபரிசு வென்ற திரு பெருமாள்செட்டியார் திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு வாழ்த்துகள் வலைப்பதிவில் எவ்வளவு பதிவர்கள் இருக்காங்கறதே உங்க பக்கம் வந்தாதான் தெரிஞ்சுக்கமுடியறது.
பதிலளிநீக்குபரிசு வென்ற திரு பெருமாள்செட்டியார் அவர்களுக்கும் திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
பதிலளிநீக்குJayanthi Jaya September 28, 2015 at 6:51 PM
நீக்கு//பரிசு வென்ற திரு பெருமாள்செட்டியார் அவர்களுக்கும் திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ. :)
பரிசு வென்றதிருமதி கீதாசாம்பசிவம் மேடம் திருபெருமாள்செட்டியாரவங்களுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குதிருமதி கீதாசாம்பசிவம் திரு பெருமாள் செட்டியார் அவர்களுக்கு வாழ்த்துகள். எந்தமனிதர் நெஞ்சுக்குள் காயமில்லை சொல்லுங்கள் காலப்போக்கில் காயமெல்லாம் மாறிப்போகும் மாயங்கள் என்று ரொம்ப அழகாக சொல்லி இருக்கார்.
பதிலளிநீக்குஒரே ஒரு கண்ணனுக்கு, ஆயர்பாடியின் அனைத்து கோபிகைகளாலும்
பதிலளிநீக்குஈடு கொடுக்க முடியவில்லை.
இங்கு இரட்டை ( வால் ) கண்ணன்கள்.
சொல்லவும் வேண்டுமோ, கதா நாயகியும் அவள் நண்பியும் படும்பாட்டை!.// ஆஹா...
//குழந்தை பிறக்காத பெண்கள் தங்களுக்குள்ளாக மெளனமாக அழுவது மட்டும் வெளியே கேட்டால் உலகமே அதிரும்! அத்தகைய பெரிய ஓசையாக இருக்கும்.// உண்மைதான்..
பரிசுபெற்ற இருவருக்கும் வாழ்த்துகள்.