என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

VGK 13 - வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ ! புதிய கட்சி ’மூ.பொ.போ.மு.க.’ உதயம் !!



இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்  : 17.04.2014

வியாழக்கிழமை


இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 

valambal@gmail.com 


[ V A L A M B A L @ G M A I L . C O M ]


REFERENCE NUMBER:  VGK 13

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:

 


’வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ !

புதிய கட்சி

மூ.பொ.போ.மு.க. 

உதயம் !! 

நகைச்சுவைத் சிறுகதைத் தொடர்

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-



முன் குறிப்பு: 

இந்த நகைச்சுவை சிறுகதைத்தொடர், தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக மார்ச் 2011 இல் என்னால் என் பதிவினில் வெளியிடப்பட்டது. 

தற்சமயம் ’லோக் சபா’  தேர்தல் நெருங்கி வருவதால், ஜனநாயகக் கடமையாகக் கருதி, இதனை  அப்படியே எந்த மாற்றமும் செய்யாமல், ’சிறுகதை விமர்சனப் போட்டி’க்கான கதையாக வெளியிட்டுள்ளேன். 

அரசியல் தெரிந்தவர், தெரியாதோர் என பாகுபாடு ஏதும் இன்றி அனைவரும் படித்து, சிரித்து மகிழலாம்.  

வெறும் அரசியல் மட்டுமின்றி அன்றாட அலுவலக அரசியல் உள்பட அனைத்து வாழ்க்கை இரகசியங்களுமே இதில் அடங்கியுள்ளன. 

படியுங்கோ, 

சிரியுங்கோ, 

மறக்காமல் பேரெழுச்சியுடன் 

விமர்சனம் எழுதி அனுப்புங்கோ.



பின் குறிப்பு: 

எட்டு சிறுசிறு பகுதிகளாக ஏற்கனவே 
என்னால் என் பதிவினில் வெளியிடப்பட்ட 
இந்த என் நகைச்சுவைச் சிறுகதைத் தொடருக்கு, 
பதிவுலக நகைச்சுவை எழுத்தாளர் 

திரு. சேட்டைக்காரன் 

அவர்கள் மட்டுமே 
36 தடவைகள் வருகை தந்து,  
கருத்தளித்துப் பாராட்டி 
மகிழ்வித்திருந்தார்கள் 
என்பது குறிப்பிடத்தக்கது.
 
உட்கார்ந்து யோசிப்போமில்லே.. ?


மேலும் திரு. சேட்டைக்கரன் அவர்கள்
நேரிலும் என் இல்லத்திற்கே 
03.10.2013 அன்று வருகை தந்து
இந்த என் நகைச்சுவைக் கதையினை
வெகுவாகப் பாராட்டிச் சென்றார்கள்.
அதற்கான இணைப்பு:


மிகவும் விறுவிறுப்பான கதை

சுறுசுறுப்பாகப் படியுங்கள்.




ஸ்ரீனிவாசன் என்ற ஒரே பெயரிலேயே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரியும் அந்த மிகப்பெரிய நிறுவனத்தில் ’வழுவட்டை ஸ்ரீனிவாசன்’  என்று சொன்னால் தெரியாதவர்களே கிடையாது. அவர் தலை வழுக்கையாக இருப்பதால் அப்படி ஒரு பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்த என் கணிப்பு முற்றிலும் தவறாகிப்போய்விட்டது.  

புதிதாக அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த நான் அவரிடம் போய் “சார், கேண்டீன் எங்கே இருக்கிறது, எப்படிப்போக வேண்டும்?” என்று கேட்டேன்.

“இதுகூடத் தெரியாமல் சுத்த வழுவட்டையாக இருக்கிறாயே!, எழுச்சியாக என்னுடன் புறப்பட்டு வா, நான் கூட்டிக்கொண்டு போகிறேன்” என்றார்.  

என் அப்பா வயதில் அவர் இருந்ததாலும், நான் வேலைக்குச்சேர்ந்த முதல் நாள் என்பதாலும், அவர் மீது கோபப்படாமல் அமைதி காக்கும்படி ஆகி விட்டது, என் அன்றைய நிலை.

கேண்டீனில் பலரிடம் அவர் பேசும்போதும் இந்த ’வழுவட்டை’ என்ற சொல்லை, அவர் மறக்காமல் அடிக்கடி பயன்படுத்தி வந்ததை நானும் கவனிக்கத் தவறவில்லை.

”காண்டீன் சாப்பாடு வரவர வழுவட்டையாக உள்ளது.  வீட்டுச் சாப்பாடுபோல எழுச்சியாக இல்லை.  புது மேனேஜர் எழுச்சியாக இருப்பார் என்று நினைத்தேன், ஆனால் அவரும் வழுவட்டையாகவே உள்ளார்” என்று ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தார்.

மொத்தத்தில் அவருடன் பழகியதில், ஒருவித எழுச்சியில்லாத அனைத்தும் வழுவட்டையே எனப்புரிந்து கொண்டேன்.  அவருடைய அகராதிப்படி எழுச்சிக்கு எதிர்பதம் வழுவட்டை என்ற சொல் என்பது எழுச்சியுடன் எனக்குப்புரிய வந்தது.

வ.வ.ஸ்ரீ, க்கு அருகிலேயே சற்று எதிர்புறமாக என்னுடைய அலுவலக இருக்கையும் அமைந்திருந்ததால் அவருடைய அன்றாடப்பணிகளைப் பார்க்கும் பாக்கியம் எனக்கு வாய்த்திருந்தது.  எல்லோரிடமும் மிகவும் கலகலப்பாகப் பழகிவந்த அவரைச்சுற்றி எப்போதும் யாராவது வந்துபோய்க்கொண்டே இருப்பார்கள்.

அவர் மேஜைமீது எப்போதும் பளபளப்புடன் கூடிய எவர்சில்வர் மூக்குப்பொடி டப்பா ஒன்று வைக்கப்பட்டிருக்கும்.  அவரை நாடி வருவோரைவிட அந்தப் பொடிடப்பாவை நாடி வருவோர்களே அதிகம். 




பார்ப்பவர்களுக்கு அது ஒரு அல்பப்பொடி தர்மமாகத் தெரிந்தாலும், பொடி உபயோகிப்பாளர்களுக்கு அது ஒரு மிகப்பெரிய, அன்னதானத்திற்கும் மேலான ஒரு தர்மம் போலும்.   

வ.வ.ஸ்ரீ. தன்னிடம் வருபவர்களையெல்லாம் “வாங்க, வாங்க! இந்தாங்க, எழுச்சியோடு பொடிபோட்டுட்டுப்போங்க” என்று சொல்லிப் பொடி டின்னை திறந்து நீட்டும்போதெல்லாம், குங்குமச்சிமிழுடன் கொலுவுக்கு அழைப்பது போல எனக்குத் தோன்றும்.   நாளடைவில் வ.வ.ஸ்ரீ. அவர்களுடனும், அவருடைய பொடிபோடும் நண்பர்களுடனும் எனக்கு நல்ல பரிச்சயம் ஆகிவிட்டது. 

ஒரு நாள் வ.வ.ஸ்ரீ. ஆபீஸுக்கு திடீரென லீவு போட்டு விட்டார். அவருடைய பொடி நண்பர்கள் பலரும் வந்து ஏமாந்து போனார்கள். ஒருசிலர் வ.வ.ஸ்ரீ. லீவு போடட்டும், பொடி டின்னுடன் லீவு போடலாமா? என்று மிகவும் சலித்துக்கொண்டனர்.   மாற்று ஏற்பாடு செய்யாததில் அவர்களுக்கு, அவர்களின் பொடி ஏறாத மூக்குக்குமேல் கோபம் கொப்பளித்து வந்ததைப் பார்த்தேன்.

இதைப்பார்த்த நான் சும்மா இல்லாமல், அதில் ஒருவரிடம், “ஏன் சார்,  நீங்களே தனியாக பொடி வாங்கி வைத்துக்கொள்ளலாமே” என்று தெரியாத்தனமாகக் கேட்டு விட்டேன்.

என்னை ஒரு முறை முறைத்துப்பார்த்த அவர், “தம்பி, நீ ஒரு பொடிப்பையன்.   பொடியைப்பற்றி உனக்குத்தெரிந்திருக்க நியாயம் இல்லை.   ஓஸியிலே பொடி வாங்கி நாசியிலே போட்டால் கிடைக்கும் இன்பமே இன்பம்;  அதெல்லாம் அனுபவிச்சவனுக்குத்தான் தெரியும்” என்றார்.
   
தொடரும்





 

[ 2 ]


மறுநாள் காலை கேண்டீனில் டிபன் சாப்பிட்டுக்கொண்டிருந்த என் அருகில் சூடான காஃபியை ஆற்றியபடியே, பேரெழுச்சியுடன் வந்தமர்ந்த வ.வ.ஸ்ரீ. யை, வணக்கம் சொல்லி வரவேற்றேன்.   

“என்ன சார், நேற்று உங்களை பார்க்க முடியவில்லை.  திடீரென்று லீவு போட்டுட்டீங்களே!” என்றேன்.

”இந்த தமிழ்நாடு எலெக்‌ஷன் முடியற வரைக்கும் எனக்கு ரெஸ்டே கிடையாது தம்பி.   அடிக்கடி லீவு போடுவேன்.  234 தொகுதிகளுக்கும் போய்ப் பலபேரை சந்திக்கணும்.  ஆற்றவேண்டிய கட்சிப்பணிகள் நிறையவே இருக்குப்பா” என்றார்.   

”நீங்க அப்போ எந்தக்கட்சி சார்” என்றேன் அப்பாவித்தனமாக.

இடது கை விரல் நுனியில் பொடிடப்பாவை வைத்துக்கொண்டு, வலதுகை ஆள்காட்டி விரலால் அதன் தலையில், மிருதங்க வித்வான் போல தட்டியவாறே, என்னை ஒரு விஷமப்பார்வை பார்த்து மீண்டும் பேசலானார். 

”ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று எல்லாப்பயல்களும் நான் எங்கே போறேன், யாரை சந்திக்கிறேன், அடுத்து என்ன செய்யப்போறேன்னு, ஒற்றர்படையை நியமித்து, என்னையே தொடர்ந்து நோட்டம் விடுகிறார்களப்பா. இந்தப்பத்திரிக்கைக்காரர்கள் தொல்லையும் தாங்கவே முடியாமல் இருக்குப்பா” என்றார்.

“நீங்களோ ஆளுங்கட்சியும் இல்லை, எதிர் கட்சியும் இல்லை என்று தெரிகிறது.  பிறகு எதற்கு சார் உங்களை அவர்கள் ஃபாலோ பண்ணனும்”  என்றேன்.

“நான் யார், என் பவர் என்ன என்பது எதுவும் தெரியாமல், வழுவட்டைத்தனமாக இப்போது என்னிடம் எதுவும் கேட்காதே, போகப்போக உனக்கே எல்லாம் தெரியவரும். அது சரி,  நேற்று ஆபீஸில் ஏதும் விசேஷமுண்டா” என்று கேட்டு பேச்சை மாற்றினார் வ.வ.ஸ்ரீ.

”பொடி டின்னுக்காக பலபேர் உங்களைத்தேடி வந்தாங்க சார்;  மேனேஜர் சார் உங்கள் சீட்டுப்பக்கம் இரண்டு முறை வந்து, ஏதோ ஃபைல்கள் பேப்பர்களைத் தேடிட்டுப்போனார், சார்; வேறு எதுவும் விசேஷமில்லை சார்” என்றேன்.

”இந்தப்புதிய மேனேஜர் பயலிடம் நான் ஸ்ட்ரிக்ட்டாவே சொல்லிப்புட்டேன். இந்த எலெக்‌ஷன் முடியற வரைக்கும் என்னைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று. அப்படியும் அவன் என் சீட்டுக்கு வந்து ஏதோ நோண்டிவிட்டுப்போனானா?   ஏற்கனவே இங்கிருந்து டிரான்ஸ்பரில் போன மேனேஜர்பயல் V V என்றால் புதிதாக வந்துள்ள இவன் S V V யாக இருப்பான் போலிருக்கு” என்றார், வ.வ.ஸ்ரீ. 


(V.V= வழுவட்டை;  S.V.V = சூப்பர் வழுவட்டை) 

”சார், என்ன இருந்தாலும் அவர் நம் மேனேஜர் இல்லையா, மேனேஜர் பயல்ன்னு மரியாதை குறைவா சொல்லுறீங்களே” என்றேன் நான்.   

(அவர் வாயைக்கிளறி அவரை ஏதாவது பேச வைத்து, அந்தப்பேச்சில் அப்படியே சொக்கிப்போய் மயங்குவதில் தான் எனக்கு ஒரு தனி இன்பம் ஆயிற்றே!)

“புதிதாக டிரான்ஸ்ஃபர் ஆகி வந்துள்ள இந்த மேனேஜர்பயல் என் சின்னப்பையனை விட வயதில் ரொம்பவும் சின்னவன் தெரியுமோ; அவன் வயசைப்போல ஒண்ணரை மடங்கு இந்த நிறுவனத்தில் நான் சர்வீஸே போட்டாச்சு தெரியுமோ; இந்த ஆபீஸில் சீனியர் ஆபீஸ் சூப்பிரண்டெண்டான நான், என் 41  வருஷ சர்வீஸில் இவனைப்போல எவ்வளவு மேனேஜர்பயலுகளைப் பார்த்திருப்பேன் தெரியுமோ?” என்றார் வ.வ.ஸ்ரீ.

”சரி சார், நாழியாச்சு, நாம கேண்டீனிலிருந்து புறப்பட்டு நம் சீட்டுக்குப் போவோமா” என்று கேட்டபடியே எழுந்து கொண்டேன்.   அவரும் பொடியை ஒரு சிட்டிகை இழுத்து விட்டு, ஒருவழியாக என்னுடன் எழுச்சியுடன் கிளம்பினார். 

அவரை அப்படியே பேசவிட்டால் சாயங்காலம் ஆபீஸ் முடியும் வரை கேண்டீனிலேயே என்னுடன் பேசிக்கொண்டே இருந்திருப்பார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

இந்த மூக்குப்பொடி போடும் ஆசாமிகள் சற்று தள்ளி நின்று பொடி போட்டாலே நமக்குத்தும்மல் வந்துவிடும் போது, அவர்களால் எப்படிப் பொடியை கணிசமான அளவில் விரல்களால் எடுத்துக்கொண்டு, **வேட்டுக்குழாயில் கந்தகம் அடைப்பது போல**, மூக்கினுள் அடைத்து, சர்ரென்று ஒரே இழுப்பாக இழுத்து, தும்மாமல் இருக்க முடிகிறது என்று எனக்கு அடிக்கடி ஒரு சந்தேகம் வருவதுண்டு.  ஒரு நாள் நம் வ.வ.ஸ்ரீ. அவர்களிடமே துணிந்து இது பற்றிக் கேட்டு விட்டேன்.  

அதற்கு அவர் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா?

“பொடி போட்டு வாழ்வாரே வாழ்வார்
  
மற்றவரெல்லாம் சளி பிடித்தே சாவார்”

என்று நீ கேள்விப்பட்டதில்லையா என்றார்.

(திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளில் பள்ளியில் பலமுறை பரிசுகள் வென்ற எனக்கு,  இந்தக்குறள் மட்டும் ஏனோ மறந்து விட்டது போலிருக்கு)

இந்த விசித்திரக் குறளைக்கேட்டு அவரை ஆச்சர்யத்துடன் நான் நோக்குகையில் அவரே தொடர்ந்து பேசலானார்.

“தம்பி, பொடி டின் நிறைய பொடியை அடைத்தாலும் அந்தப்பொடி டின் தும்மல் போட்டுப் பார்த்திருக்கிறாயா நீ...”  என்றார். 

“இல்லையே சார்,  அது எப்படித் தும்மல் போடும்”  என்றேன் நான்.

“அது போலத்தான், பொடி போடும் எங்களுக்கும் பொடி போடும் போது தும்மல் வராது.   ஆனால் நாங்கள் தும்மலை தேவைப்படும்போது சுலபமாக வரவழைத்துக்கொள்ள முடியும்” என்று சொன்னவர், சொன்னபடி செய்தும் காட்டிவிட்டார்.

“மூக்குப்பொடி போடும் இந்த மூளையுள்ள ஆண்களுக்கு முக்கியமாத் தேவை இந்தக்கைக்குட்டை” என்று ஜவுளி வியாபாரியாக வேஷமிட்டு சிவாஜி கணேசன் ’தூக்குத்தூக்கி’ என்ற படத்தில் ஒரு பாட்டுப் பாடுவார்.

அது போல கைவசம் எப்போதும் வைத்திருக்கும் பல கைக்குட்டைகளில் (கர்சீஃப்) ஒன்றைக் கையில் எடுத்தார் வ.வ.ஸ்ரீ.   அதன் ஒரு நுனியை விளக்குத்திரி போடுவது போலத் திரித்தார்.  அதை அப்படியே தன் மூக்குத் துவாரத்தில் நுழைத்தார்.   

முகத்தை அஷ்ட கோணலாக்கிக்கொண்டு அடுத்தடுத்து தொடர்ச்சியாக பதினைந்து தும்மல்கள் தும்மினார். அவரின் நெற்றி நரம்புகள் புடைத்துக்கொண்டன.  அவரைச்சுற்றி மழைச்சாரல்போல சளித்தூறல்கள். கைகுட்டை முழுவதும் பஞ்சாமிர்தம்போல ஏதேதோ ஒழுகியவண்ணம்.  அவர் முதல் தும்மல் போட்டதுமே, ஓடி விட்டேன் நான் என் சீட்டை நோக்கி.

இடி, மின்னல், மழை போன்ற அவரின் தும்மல்கள் ஒருவழியாக முடிந்து, புயல் கரையைக்கடக்க ஒரு கால் மணி நேரம் ஆனது. 

தன் பெண்ணின் நிச்சயதார்த்தம் பற்றி தன் வருங்கால சம்பந்தியிடம் டெலிபோனில் பேச முயற்சித்துக் கொண்டிருந்த பக்கத்து சீட்டு பரந்தாமனுக்கு, இவரின் தொடர் தும்மலால் மிகுந்த எரிச்சல் ஏற்பட்டது. சனியன், சகுனத்தடை என்று அவரைத் திட்டிக்கொண்டிருந்தது, எனக்கு மட்டுமே கேட்டது.

பாத் ரூம் சென்று மூக்குத் துவாரங்களைக் கழுவிக்கொண்டு, கைக்குட்டையையும் சோப்புப்போட்டு அலசிப் பிழிந்தவாறு தன் இருக்கையில் ஒருவாறு வந்தமர்ந்தார் வ.வ.ஸ்ரீ.   மீண்டும் அவரைப் பேட்டி காணப்போனேன், நான்.

தொடரும்


  
[ 3 ] 


பாத் ரூமிலிருந்து எழுச்சியுடன் வந்து தன் சீட்டில் அமர்ந்த வ.வ.ஸ்ரீ, நான் வந்து அவர் அருகே அமர்ந்திருப்பது கூடத் தெரியாமல், ஒரு பெரிய டர்க்கி டவலால், தனது பளபளக்கும் தலை முதல், முகம், கழுத்து, முழங்கை, கை விரல்கள் வரை சுத்தமாகத் துடைத்துக் கொண்டுவிட்டு, ஒரு சிட்டிகைப் பொடியை கை விரல்களால் எடுத்துக்கொண்டு, தரையில் ஒரு உதறு உதறிவிட்டு, பொடி டின்னையும் கையோடு மூடிவிட்டு, என்னை எழுச்சியுடன் ஒரு பார்வை பார்த்தார், என் அடுத்தடுத்தத் தொடர்த்தும்மல்கள் எப்படி இருந்தன?  என்று கேட்பது போல!. 

இங்கேயே உட்கார், எழுந்து போய் விடாதே, என்பது போல கைஜாடை காட்டி என்னை அமர வைத்தார். 

சற்றே கீழே குனிந்தவர், தன் கைவிரல்களில் இடுக்கியிருந்த பொடியை சர்ரென்று ஒரே இழுப்பாக மூக்கினுள் இழுத்து விட்டு, கையைக் கர்சீப்பால் துடைத்துக்கொண்டு, பிறகு அந்தக் கர்சீப்பையே, ஹோட்டல்களில் தோசையைச் சுருட்டி பார்சலாகத்தருவார்களே, அதே போலச் சுருட்டி  மூக்குத் துவாரங்களுக்கு அருகில், அதாவது மீசை இருக்க வேண்டிய இடத்தில் நீளவாக்கில் தன் இரு கைகளாலும் வயலின் அல்லது ஃபிடில் வாசிப்பது போலப் பிடித்தவாறே, தன் தலையையும் மூக்கையும் ஒரே ஆட்டாக ஆட்டினார்.  

அதாவது இவர் தன் மூளையை நோக்கிச் செலுத்திய அந்த ஒரு சிட்டிகைப்பொடியில், சில துகள்கள் மட்டும், நாம் இவர் மூளைக்குள் போய்ப் பார்ப்பதற்குப் பெரிதாக என்ன இருக்ககூடும் என்ற எண்ணத்தில், தங்கள் பயணத்தை ஒரு வித எழுச்சியுடன் தொடராமல், இடையே, மூக்கினுள் உள்ள முடிகளில் படிந்து விட்டிருக்கும் போல.  அந்த வழுவட்டையானத் துகள்களைத்தான் இப்போது ஒட்டடை அடிப்பது போல ஏதோ செய்து வெளியேற்றி வருகிறார், என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

ஸ்டெடியாக நிமிர்ந்து உடகார்ந்து என்னை நோக்கிய அவரிடம், ”ஒரு நாளைக்குப் பொடிக்கு மட்டும் எவ்வளவு சார், செலவு செய்கிறீர்கள்?” என்று மெதுவாக என் பேட்டியை ஆரம்பித்தேன்.

“ஐந்து பைசா மட்டையில் ஆரம்பித்தேன் 1966 இல்.  இப்போ தினமும் நாலு ரூபாய் செலவாகிறது.  அதில் எனக்கு மட்டும் மூன்று ரூபாய், நண்பர்களுக்காக ஒரே ஒரு ரூபாய் மட்டுமே.   அவனவன் சத்திரம் கட்டுகிறான், சாவடி கட்டுகிறான்,  ஆஃப்டர் ஆல் நம்மால் முடிந்தது இந்த சிறிய பொடி தர்மமாவது தினமும் செய்யலாமே என்று தான்”  என்றார்.  

”தினமும் நாலு ரூபாய்க்கு மூக்குப்பொடியா, என்ன சார் இப்படி, ரொம்பவும் அநியாயமாக உள்ளதே!” என்றேன்.

”விலைவாசியெல்லாமே ஏறிப்போயிடுத்துப்பா; உனக்கு ஒரு விஷயம் தெரியுமோ! ஒரு கிலோ ப்யூர் காஃபிப்பொடியை விட, ஒரு கிலோ மூக்குப்பொடி விலை அதிகம்”  என்றார் வ.வ.ஸ்ரீ. 

”தொடர்ந்து பொடி போடுவதனால் உடம்புக்குக் கெடுதல் இல்லையா, சார்”  என்றேன்.

“இது எங்கப்பரம்பரை வழக்கமப்பா, நான் என்ன செய்வது?; எங்க தாத்தா (அப்பாவோட அப்பா) தவறிப்போகும் போது அவருக்கு வயது 108.  அவர் தன் 12 ஆவது வயதிலிருந்து பொடிபோடப் பழகியவர்ன்னு கேள்வி.  

என் அப்பாவும் பொடி போடுவார்.   அவர் என் தாத்தாபோல செஞ்சுரி போடாவிட்டாலும் பொடி போட்டே 99 வயதுக்கு மேல் ஒரு மூணு மாதமும் வாழ்ந்தவர்.  சொல்லப்போனால் அவரின் அந்த இறுதி மூச்சு நின்ற நாள் காலையிலிருந்தே அவர் பொடி போடவில்லை.  

சுற்றி நின்ற எங்களுக்கெல்லாம் அது தான் மிகப்பெரிய கவலையாக இருந்தது. எது சாப்பிட்டாலும் நன்றாக முடிந்தவரை வயிறு முட்ட சாப்பிடுபவர்.   விரத நாட்களில் பட்டினி இருந்தாலும் சுத்தமாக இரண்டு நாட்கள் வரை எதுவுமே சாப்பிடாமல் முழுப்பட்டினி இருந்து விடுபவர். ஆனால் பொடி மட்டும் 5 நிமிடத்திற்கு ஒருமுறை வீதம் மூக்கில் இழுத்துக்கொண்டே இருக்கனும் அவருக்கு. 

அந்த அவரின் கடைசி நாள் அன்று, பொழுது விடிந்தது முதல் அந்தப்பொடியைத் திரும்பியே பார்க்கவில்லை என்றதுமே, எங்களுக்கு விசாரம் அதிகமாகி, ஓடிப்போய் நாட்டுவைத்தியரை கூட்டிவந்து காட்டி, அவரும் நாங்களுமாக வாக்கரிசி போடுவதுபோல ஆளுக்கு ஒரு சிட்டிகை அவர் மூக்கில் பொடியைப்போட்டும், மனுஷன் வைராக்கியமாக அதை மூக்கில் இழுத்துக்கொள்ளாமல், இறுதி மூச்சையே விட்டுவிட்டார்” எனச் சொல்லி கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டார், வ.வ.ஸ்ரீ.    

99 வயது வரை வாழ்ந்து முடிந்து,  அதன்பிறகு,  அதுவும் என்றைக்கோ இறந்துபோன, தன் தந்தையை நினைத்து இன்றைக்குப்போய் இவர் கண்ணீர் விட,  நான் காரணமாகி விட்டேனே என எனக்கே சற்று சங்கடமாக இருந்தது.

அன்றைய அலுவலக நேரம் இத்துடன் முடிந்து விட்டதால்,  நாங்கள் ஆற்ற வேண்டிய அரும் பணியை இவ்விதமாகப் பேசிப்பேசியே (Group Discussions) கழித்து விட்ட நாங்களும் வீட்டுக்குப் புறப்பட ஆயத்தமானோம்.



தொடரும்



   

[ 4 ]


மறு நாள் காலையில் நான் என் சீட்டுக்கு வந்து அலுவலக வேலைகளில் மூழ்கலானேன்.  வ.வ.ஸ்ரீ. அவர்கள் இன்னும் சீட்டுக்கே வரவில்லை. வரும் வழியில் யார் யாரிடம் எழுச்சியாக என்னென்ன பேசிக்கொண்டு இருக்கிறாரோ? என்ற கவலை எனக்கு.   அவரிடம் மேற்கொண்டு என்னென்ன கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று, ஒரு பேப்பரில் குறித்து ஞாபகமாக என் சட்டைப் பையில் வைத்துக்கொண்டேன்.  

என் மேஜை மீதிருந்த தொலைபேசி சிணுங்கியது.  எடுத்தேன். வ.வ.ஸ்ரீ.யே தான் பேசினார்.  அப்போது தான் கவனித்தேன் அவர் தன் சீட்டுக்கு வந்துவிட்டார் என்பதை.

“குட் மார்னிங் சார்,  என்ன சார், கொஞ்சம் லேட்டா?” என்றேன்.   

”நான் அப்போதே வந்து விட்டேன், நீ தான் கவனிக்கவில்லை.  ஏதோ குனிந்து எழுதிக்கொண்டிருந்தாய்.   If you are free,  please come to my seat.  Let us continue our discussions"  என்றார்.

ஆஹா, இன்றைக்கும் நம் ஆபீஸ் வேலை அம்போ தான் என்று நினைத்தேனே தவிர,  அவருடைய நகைச்சுவையான பேச்சுக்கள் என்னை வசீகரித்ததால், உடனே அவர் சீட்டுக்கு அருகில் இருந்த மற்றொரு காலி நாற்காலியில் போய் அமர்ந்து விட்டேன்.

”சொல்லுப்பா, நாம நேத்திக்கு எங்கே விட்டோம்”  என்றார் முகத்தில் ஒரு வித பேரெழுச்சியுடன்.

"தங்களின் 99 வயது தந்தைக்கு நீங்கள் எல்லோரும் வாக்கரிசி .... இல்லை இல்லை .... மூக்கரிசி .... அதுவும் இல்லை .... மூக்குப்பொடி போட்டும், அவர் வைராக்கியத்துடன், அதை ஏற்றுக்கொள்ளாமல் தன் இறுதி மூச்சை விட்டதில், விட்டோம், சார்" என்றேன்.

சிரித்துக்கொண்டவர், “நான் சொல்வதையெல்லாம் அப்படியே கிரஹித்துக் கொண்டு, கரெக்ட்டாகச் சொல்லுகிறாய் நீ, அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றார். 

“நீங்கள் எப்படி சார், இந்தப்பொடிப்பழக்கத்திற்கு அடிமை ஆனீங்க?” என்றேன் ஒரு வித ஆச்சர்யமான முகபாவனையுடன்.

“பொடி போடும் என் அப்பாவுக்கு நான் தான் அந்தக்காலத்தில் பொடி வாங்கி வருவேன்.  அவருக்கு திருச்சி மலைவாசலில் தேரடி பஜாரில் மேற்குப்பார்த்த முதல் கடையில் தான் ’டி.ஏ.எஸ்.  ரத்தினம் பட்டணம் பொடி’ வாங்கி வரணும். அங்கு எப்போதும் கமகமவென்று ஒரே பொடிமணமாக இருக்கும். 

சோம்பலில், வேறு கடைகளில் நான் பொடி வாங்கி வந்தால், அதன் காரசார மணம் குணம் முதலியவற்றை ஆராய்ச்சி செய்து விட்டு, என் மூஞ்சியிலேயே தூவி விடுவார். அவ்வளவு கோபம் வந்துவிடும் அவருக்கு. 

அந்த மலைவாசல் கடையில், பருமனான ஒருவர் முரட்டு மீசையுடன் பனியன் மட்டும் போட்டுக்கொண்டு கம்பீரமாக அமர்ந்திருப்பார்.  ஒரு பெரிய பத்துபடி டின்னிலிருந்து புதுப்பொடியாக ஒரு பெரிய கரண்டியில் எடுத்து, அங்குள்ள ஜாடிகளில் (ஊறுகாய் ஜாடி போல பீங்கானில் இருக்கும்) போட்டு வைத்துக்கொள்வார். 

அதன் பிறகு அந்த ஜாடிகளிலிருந்து கரண்டியால் எடுத்து தராசில் தங்கம் போல நிறுத்து, பதம் செய்யப்பட்டு, கத்தரியால் வெட்டப்பட்ட, வாழைப்பட்டைகளில், பேரெழுச்சியுடன் பேக் செய்து, வெள்ளை நூலினால் ஸ்பீடாகக் கட்டிக்கட்டிப் போட்டுக்கொண்டே இருப்பார், 10 கிராம், 50 கிராம், 100 கிராம் என்று பல எடைகளில்.   

அவர் கட்டிப்போடப்போட, அவர் எதிரில் வெள்ளைவெளேரென்ற கதர் சட்டையுடன், கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி, தங்க மோதிரங்கள், தங்கத்தில் புலி நகம் கட்டிய மைனர் செயின் முதலியன அணிந்த, மிகவும் குண்டான முதலாளி ஒருவர் அவற்றை உடனுக்குடன் விற்று, கைமேல் காசு வாங்கிப் போட்டுக்கொண்டே இருப்பார்.  கடை வாசலில் எப்போதுமே, (தற்கால ரேஷன் கடைகள் போல), கும்பலான கும்பல் இருந்து வரும். மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் என பொடி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்து வந்தனர் அவர்கள்.  

அதை விட வேடிக்கை என்னவென்றால், பொடிப்பயல்கள் முதல் பெரியவர்கள் வரை, நடுநடுவே ஓஸிப்பொட்டிக்கு கைவிரலை நீட்டுபவர்களுக்கெல்லாம், இலவசப்பொடி வழங்கப்பட்டு வந்ததே அந்தக்கடையின் தனிச்சிறப்பு.   

ஒரு அடி நீளத்திற்கு மேல் நீண்ட ஒரு மெல்லிய இரும்புக்குச்சிபோல ஒரு கரண்டி வைத்திருப்பார்கள்.   அதன் கொண்டைப்பகுதியில் ஒரு 10 சிட்டிகை மட்டும் பொடி பிடிக்கும் அளவு குழிவான பகுதி இருக்கும்.  பொடி ஜாடிக்குள் அதை நுழைத்து, அடிக்கடி 5  நிமிடங்களுக்கு ஒரு முறை வீதம், வெளிப்பக்கம் நிற்கும் வாடிக்கையாளர்களை நோக்கி அந்த இரும்புக்குச்சி போன்ற கரண்டியை நீட்டுவார்கள்.   

அதே நேரம் கோவிலில் சுண்டலுக்கு பாய்வது போல அங்கு நிற்கும் அனைவரும், தங்கள் விரலை ஒரு வித நேச பாசத்துடன், அந்த மிகச்சிறிய கரண்டிக்குள் விட்டு,  பொடியை எடுத்துக்கொண்டு நுகர்ந்து மகிழ்வார்கள். இழுக்க இழுக்க இன்பம் அடைவார்கள். அந்தக் காலத்தில் அதுபோல இலவசப்பொடியை நுகர ஆரம்பித்த நுகர்வோர்களில் 12 வயதே ஆன நானும் ஒருவன்.

தினமும் எதற்காக இப்படி என்னைப்போன்ற நூற்றுக்கணக்காண பொடியன்களுக்கு இலவசப்பொடி தர்மம் செய்கிறார்கள் என்று அந்த நாளில் வழுவட்டைத்தனமாக நானே ஆரம்பத்தில் ஆச்சர்யப்பட்டதுண்டு. 

பிறகு நாளாக நாளாகத்தான் அது அவர்களின் வியாபார யுக்தி; அனைவரும் எழுச்சியுடன் பொடி போட வேண்டும்; அடுத்த தலைமுறை இளைஞர்கள் எல்லோருமே ஒரு வித எழுச்சியுடன் விளங்க வேண்டும் என்ற தொலை நோக்குத் திட்டமும், வியாபாரத் தந்திரமும் என்பதைப் புரிந்து கொண்டேன்.

இன்றைய இலவச இணைப்புகள், ஆடித்தள்ளுபடி, அதிரடித்தள்ளுபடி என்பதெல்லாம் இந்த இலவசப் பொடியிலிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும்” என்ற சரித்திர உண்மைகளைச் சரமாரியாக எடுத்து விட்டார், நம் வ.வ.ஸ்ரீ.

தொடரும்


 

  



[ 5 ]


மதியம் கேண்டீனுக்குப்போய் லஞ்ச் முடித்து விட்டு, ஆபீஸ் வேலைகளைக் கொஞ்சம் பார்க்கலாம் என்று தான், நான் நினைத்தேன். ஏதோ கண்ணைச்சொக்குவது போல இருந்தது.   

வ.வ.ஸ்ரீ. சாப்பிட வீட்டுக்குப்போனவர் போனவர் தான். ஆளையே சீட்டில் காணும். எப்போதுமே சீட்டில் இருப்பவர் போல ஏதோ ஒரு ஃபைலை மேஜை மீது விரித்து வைத்து, அதன் மேல் ஒரு பேப்பர் வெயிட்டையும், மூக்குக்கண்ணாடியையும், மூக்குப்பொடி டப்பாவையும் வைத்து விட்டுச் சென்று விடுவார். பார்ப்பவர்களுக்கு அவர் இங்கு எங்கோ தான் பாத் ரூம் போய் இருப்பார் என்று நினைத்துக்கொள்ள, அது அவர் கையாளும் ஒரு டெக்னிக் என்பது, நான் மட்டுமே நாளடைவில் தெரிந்து கொண்டது.  

தன் கைவசம், அவர் எங்கு சென்றாலும், எப்போதும் வேறு ஒரு மூக்குக்கண்ணாடியும், வேறு ஒரு மூக்குப்பொடி டப்பாவும் உஷாராக கைவசம் வைத்துக்கொண்டு தான் செல்வார். 

தூக்கக்கலக்கம் போக, அவர் டேபிளின் மேல் இருந்த மூக்குப்பொடி டப்பாவில் முதன் முதலாகக் கைவைத்து, அதைத் திறந்து, லேசாக ஆள்காட்டி விரலை மட்டும் அதற்குள் பதித்து, மூக்கருகில் கொண்டு செல்ல எத்தனிக்கும் போது, வ.வ.ஸ்ரீ. அவர்களே வந்து விட்டார்.    

“என்னப்பா, இப்போதே Further ஆக நம்ம Discussions Continue பண்ணலாமா”, என்று சொல்லி ஒரு சிட்டிகை பொடியை வேகவேகமாக எடுத்து உறிஞ்சினார். கையில் உள்ள பொடியை அவர் உதற லேசாக என் கண்ணில் பட்டு, சற்றே எரிச்சல் ஏற்படுத்தியது என்றாலும், என் தூக்கம் சுத்தமாகக் கலைந்து போய் விட்டது. 

மேனேஜர் எங்கள் இருவரையும் ஒரு மாதிரியாகப் பார்த்தவாறே, தன் ரூமுக்குள் நுழைந்ததை நான் மட்டுமே கவனித்து விட்டு, வ.வ.ஸ்ரீ. யிடம் மெதுவாகச் சொன்னேன்.     

”அவன் கிடக்கிறான், நீ எதற்குமே கவலையே படாதே; அவனால் உனக்கு ஏதாவது பிரச்சனையென்றால் என்னிடம் வந்து சொல்லு.    RETIRE ஆக இன்னும் மூணு மாதங்களே உள்ளன எனக்கு.  அதற்குள், I will teach him a Lesson”  [நான் அவனுக்கொரு பாடம் கற்பிக்கிறேன்]   என்றார்.  அவர் கொடுத்த தைர்யத்தில் என் பேட்டியைத் தொடர ஆரம்பித்தேன்.

”இந்தப்பொடிப் பழக்கத்தால் உங்கள் தாம்பத்ய வாழ்க்கையில் எதுவும் பாதிப்பு உண்டா, சார்” என்றேன்.

“நல்லதொரு கேள்வி தானப்பா” என்று உற்சாகத்துடன் சொல்ல ஆரம்பித்தார்.

“எனக்குக் கல்யாணம் ஆன புதிதில், இந்தப்பொடி போடும் பழக்கமே எனக்கு அதிகமாகக் கிடையாது. எப்போதாவது யாராவது போடும்போது லேசாக வாங்கி மோந்து (முகர்ந்து) பார்ப்பதோடு சரி.   அதுவும் என்னவளை நெருங்கும்போது பொடி நெடி ஏதும் இல்லாமல் சுத்தமாக மூக்கைக் கழுவிக்கொண்டு, பாதுகாப்பாகத்தான் இருந்து வந்தேன்.

அடுத்தடுத்து ஐந்தாறு பிள்ளைகுட்டிகள் பிறந்து, குடும்பத்தில் எவ்வளவோ பிரச்சனைகள்,  மனக்கசப்புக்கள், மனைவியின் விதண்டாவாதப்பேச்சுக்கள் முதலியன ஏற்பட்டதில் எல்லாவற்றிலுமே ஒரு வெறுப்பு ஏற்பட்டது எனக்கு; 

புதுப்பொண்டாட்டியாக இருந்தபோது அவளிடம் இருந்த பூ வாசனை, செண்ட் வாசனையெல்லாம் நாளடைவில் மறைந்து, ஏதோவொரு சாம்பார்பொடி வாடையோ, பூண்டு வாடையோ எனத்தெரியாததொரு காரல் வாடை மாறிமாறி அடிக்க ஆரம்பித்ததும் தான்,  எனக்கு இந்தப் பொடியின் மீது, ஒருவித புதுக்காதல் மலர ஆரம்பித்தது.  அதுவே இன்றுவரை அதனுடன் ஒரு தீராத காதலாகவும், மோகமாகவும் மாறிவிட்டது;

பொண்டாட்டி இல்லாமல் இருக்கவே முடியாது என்றிருந்த என்னை ‘பொண்டாட்டி’ யின் சுருக்கமான ‘பொ.............டி’ இல்லாமல் இருக்கவே முடியாது என்று ஆக்கிவிட்டது. 

அவள் எனக்குக்கோபம் ஏற்படுத்தும் போதெல்லாம், எனக்கு என் பொண்டாட்டியை இரண்டு இழுப்பு இழுத்து விடணும் போல ஒரு வேகம் வருவதுண்டு.   அந்த நேரங்களிலெல்லாம் பொடியை இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு, அவளையே ஓங்கி இழுத்துவிட்டது போல ஒரு வித இன்பம் அடைவதுண்டு” என்றார், வ.வ.ஸ்ரீ.

கூடிய சீக்கரம் ரிடயர்ட் ஆகும் நிலையில் இருந்த அவரின் இந்த சோகமான சுய சரிதையைப் பொடிப்பொடியாகக் கேட்ட எனக்கு, அவர் மேல் ஒரு பச்சாதாபமே ஏற்பட்டது. 

சற்றும் ஒரு சங்கோஜமோ, சங்கடமோ, லட்ஜையோ இல்லாமல் தன் இல்வாழ்க்கையின் இரகசியங்களை அவர் எடுத்துரைத்த விதம் எனக்கு அவர் மேல் ஒரு உயர்ந்த அபிப்ராயத்தை ஏற்படுத்தி விட்டது.

அவர் காதருகில் போய் மெதுவாக, ”மனைவி என்பவள் எவ்வளவு நாள் ஆனாலும்,  கண்டு களிக்கும் விதமாக, ஆரம்பத்தில் இருக்கும் அதே அழகுடனும்,   சுண்டியிழுக்கும் கவர்ச்சியுடனும்,   சுவைத்திட நல்லதொரு கட்டிக்கரும்பாகவும், கடைசிவரை இருக்கவே முடியாதா, சார்”  என்றேன், நான்.

“புதுசா கல்யாணம் ஆகப்போகும் நீ,  இதை ஏன் இவ்வளவு ஒரு பரமரகசியமாக, அதுவும் பயந்து கொண்டே கேட்கிறாய்?  என்னிடம் பேச நீ இவ்வாறெல்லாம் கூச்சப்படலாமா?  ஒரு சில உதாரணங்களுடன் விளக்கினால் தான் உனக்கு எல்லா விஷயங்களுமே நல்லாப்புரிபடும்” என்று சொல்லி, எழுச்சியுடன் மேலும் ஒரு சிட்டிகைப் பொடியை எடுத்து உறிஞ்சி உதறலானார்.    நான் என் கண்களை முன் ஜாக்கிரதையாக மூடிக்கொண்டு, காதுகளை மட்டும் நன்றாகத் தீட்டித் திறந்து கொண்டேன்.

“முதன் முதலாக பால்சொம்புடன் படுக்க வரும்போது,  அவள் யாராயிருந்தாலும் அழகிய பால்குடம் போல பளபளப்பாத்தான், முன்னப்பின்ன அனுபவமில்லாத, உன் கண்களுக்குத் தெரியும்.   

நாளாக நாளாக அதே பளபளப்பான பால்குடம், பழையசோத்துப்பானையா மாறிடுமப்பா,  அதே உன் கண்களுக்கு!” என்றார் வ.வ.ஸ்ரீ. அவர்கள் .   

”அச்சச்சோ, அது தான் ஏன் சார்ன்னு உங்களிடம் கேட்கிறேன்.  காரணம் என்னன்னு சொல்லாமல், பால்குடம் பழைய சோத்துப் பானையா ஆகிடும்னு மட்டும் சொன்னா எப்படி சார்?” என்றேன் நானும் விடாமல். 

அவருக்கு மேலும் ஒருவித எழுச்சியை ஏற்படுத்தி முக்கியமானத் தகவலை பெற்றுவிட வேண்டும் என்பதே என் குறிக்கோள்.

”அவ்வளவு ஏனப்பா, இந்தப்பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு கொழுக்கட்டை சாப்பிட்டிருக்கிறாயா நீ ?”  என்றார் வ.வ.ஸ்ரீ.



“எனக்கு அது ரொம்ப பிடிச்ச ஐட்டம், சார்; நிறைய சாப்பிட்டிருக்கிறேன்” என்றேன்.

“முற்றலான தேங்காய்த் துருவல், ஏலக்காய், வெல்லம் எல்லாம் போட்டு, **கம்பர்கட்** போல பதமாக பாகுகாய்ச்சி,  அரிசி மாவை தனியே வேக வைத்து, மெல்லிசா அழகாக துணி மாதிரி அதை உள்ளங்கையில் கொஞ்சமாகப் பரப்பி, பிறகு அதை சொப்பு போலச்செய்து, அதில் இந்த தேங்காய், வெல்லம், ஏலம் கலந்த பூர்ணத்தை கொஞ்சமாக உருட்டி வைத்து, பிறகு அதை அப்படியே மூடி, சின்னதா ஒரு மூக்கு வைத்து முடித்துக்கொண்டு, பிறகு மீண்டும் இட்லி சுடுவது போல வேக வைத்து சூடாகத் தருவார்களே, அதைத் தின்னும் போது எவ்வளவு ருசியாகவும் சுவையாகவும் இருக்கும்? என்று சொல்லி நிறுத்தினார், வ.வ.ஸ்ரீ.

“ஆஹாஹா, சார்! நீங்க இப்படியொரு அருமையான கொழுக்கட்டை செய்முறைப் பக்குவம் சொல்லும்போதே, கொழக்கட்டைகள் என் கண்முன் இருப்பது போல, நாக்கிலே ஜலம் ஊறுகிறது,  சார்” என்றேன்.

“இந்த சுடச்சுட சாப்பிடும் பிள்ளையார் கொழுக்கட்டை போலத்தானப்பா, புதுப்பொண்டாட்டியும்.     அதே கொழுக்கட்டையை அப்படியே மூடி வைத்து ஒரு நாலு நாள் கழித்து சாப்பிட முடியுமா உன்னால்?” என்றார், வ.வ.ஸ்ரீ.

“அது எப்படி சார், சாப்பிட முடியும், ஊசிப்போய் நல்லாவே இருக்காது, ஒரே நாத்தம் அடிக்கும் சார்” என்றேன் நான்.

“முதல் நாள் சூடாக சுவையாக சாப்பிட ருசியாக இருக்கும் புதுக்கொழுக்கட்டை போன்ற, இந்தப் புதுப்பொண்டாட்டி,  நாளடைவில் இந்த ‘ஊசிப்போன கொழுக்கட்டை’ போல ருசி ஏதும் இல்லாமல் ஆகிவிடுகிறாள் என்பதை உனக்கு உணர்த்தவே நான் இவ்வளவு கஷ்டப்பட்டு உதாரணம் சொல்லிப் புரிய வைக்க வேண்டியுள்ளது” என்றார், வ.வ.ஸ்ரீ.   

பிறகு அவரே, “நீ மட்டும் என்னப்பா, என்றும் மார்க்கண்டேயனாக 16 வயது இளமையோடும், மன்மதன் போல அழகோடும் எழுச்சியோடும் கடைசிவரை இருந்து விடப்போகிறாயா என்ன! 

இந்த எழுச்சி, புரட்சி, மகிழ்ச்சி, விரைப்பு, முறைப்பு, ஆர்வம், அட்டகாசம், அதிகாரம், ஆணவம், ஆட்டம், பாட்டம் எல்லாமே எல்லோருக்குமே ஆரம்பத்தில் கொஞ்ச நாட்களுக்குத் தானப்பா; பிறகு போகப்போக கடைசியில் ஒரு நாள் எல்லோருமே எழுச்சிகுன்றி, வழுவட்டையாகத்தான் போயாக வேண்டும், என்பது தான் இந்த உலக நியதியப்பா;

பெண்களுக்கு இயற்கையாகவே ஏற்படும் மாதாந்தர சுழற்சிகளாலும், அடுத்தடுத்து பிள்ளைப்பேறுகளால் ஏற்படும் ஒருசில பிரத்யேகத் தொல்லைகளாலும், குழந்தைகள், குடும்பம், சமையல் அறை வேலைகள் என்ற கூடுதல் பொறுப்புகளை அவர்கள் முன்வந்து ஏற்பதாலும், பழையபடி சீவிமுடிச்சு சிங்காரிக்கவும், பவுடர், ஸ்னோ, செண்ட் என அப்பிக்கொண்டு கவர்ச்சியாக நிற்கவும் முடியாமல் போய்விடுகிறதப்பா;  

பாவம் அவர்கள், நடுவில் இந்த டி.வி. சீரியல்களைப்பார்த்து அதில் வரும் பல சோகங்களுக்காக, கண்ணீர் வடிக்க வேண்டியதாகவும் உள்ளது. அதனால் கொஞ்சம் நம்மை விட சீக்கிரமாகவே தளர்ந்து போய் விடுகிறார்களப்பா” என்று விளக்கினார், வ.வ.ஸ்ரீ.  

பிறகு அவரே,  ” ஆணோ பெண்ணோ, உடம்பில் தெம்பு குறைந்தாலும், உயிர் உள்ளவரை, உள்ளத்தில் எப்போதும் எழுச்சியும், உற்சாகமும், இளமையும் ஊஞ்சலாட வேண்டுமப்பா,  என்னைப்போல”, என்றார் வ.வ.ஸ்ரீ.

இவர் இப்படியெல்லாம் ஒவ்வொன்றையும் புட்டுப்புட்டு விலாவரியாக எடுத்துச் சொல்வதைக் கேட்டதும், நான் கல்யாணம் செய்து கொள்வதா வேண்டாமா, என்று ஒரேயடியாகக் குழம்பிப்போக வைத்தது என்னை. 

”எது எப்படியிருந்தாலும், இந்த வ.வ.ஸ்ரீ. உன்னை என்னதான் குழப்பினாலும், சுடச்சுட,  நீ கொழுக்கட்டை சாப்பிட்டே ஆகணும்” என்றது என் உள் மனது.   

எனக்கும் சுடச்சுட ருசியான ஒரு கொழுக்கட்டை விரைவிலேயே கிடைக்க வேண்டும் என்று நானும் மனமுருக வேண்டிக்கொண்டேன்.

இவரின் இந்தக்கொச்சையான பேச்சை வேறு பக்கம் திருப்பிவிட வேண்டும் என்று நினைத்த நான் ”பொடி எதிலிருந்து எப்படி சார் தயாரிக்கிறார்கள்” என்று என் அடுத்த கேள்விக்குத் தாவிச்சென்றேன்.  

அன்றைய ஆபீஸ் நேரம் அதற்குள் முடிந்து விட்டதால், நாளைக்குப் பேசுவோம் என்ற படி இருவரும் பிரியா விடை பெற்றுச்செல்ல வேண்டியதாகிப் போனது. 

தொடரும்


ஒரு சிறு விளக்கம்:

[  ** கம்பர்கட் ** அல்லது   கமர்கட்  என்பது அந்தக்காலத்தில் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் ஒரு தின்பண்டம்.  கடலைமிட்டாய், தேங்காய் பர்பி, ஆரஞ்ச் மிட்டாய் என்பதுபோல பல சாதாரண பெட்டிக்கடைகளிலும், பள்ளிக்கூட வாசல்களிலும் சுலபமாக கிடைக்கக் கூடியது.

தேங்காய் + வெல்லம் + ஏலம் கலந்த ஒரு கலவை தான், கையில் ஒட்டாதபடியும், ஆனால் அமுக்கினால் அமுங்கக்கூடியதாகவும் ஒரு வித ஜவ்வுமிட்டாய் போல பாகுபதத்தில் உருண்டையாக கோலிக்குண்டுபோல செய்யப்பட்டிருக்கும். மிகவும் சுவையானதாக இருக்கும். 

இப்போதெல்லாம் கடைகளில் கிடைக்குமோ கிடைக்காதோ தெரியவில்லை. ]

  


[ 6 ]


மறுநாள் காலை நான் என் சீட்டுக்கு வந்து அமரும் போதே, வ.வ.ஸ்ரீ. அவர்கள், மேனேஜர் ரூமுக்குள் அவசரமாக நுழைந்து கொண்டிருந்தார். அவர் இவரிடம் மாட்டினாரோ அல்லது இவர் அவரிடம் மாட்டினாரோ தெரியவில்லை, சுமார் ஒரு மணி நேரம் ஏதோ காரசார விவாதம் நடைபெற்று வருவதாகவும் என் பெயரும் அதில் அடிபடுவதாகவும், மேனேஜருக்குத் தண்ணி காட்டிவிட்டு# [#குடிக்க குளிர்ந்த ஜில் வாட்டர் கொடுத்துவிட்டு] வெளியே வந்த அட்டெண்டர் ஆறுமுகம், தன் வெற்றிலைபாக்குப் பன்னீர்ப்புகையிலை போட்ட வாயைக் குதப்பிக்கொண்டே,  ஏதேதோ சொல்லிப்போனதில், என் விசாரம் அதிகமாகி விட்டது.   

இனி இந்த வ.வ.ஸ்ரீ. அவர்களுடன் அனாவஸ்யமாக ஆபீஸ் நேரத்தில் அரட்டைப்பேச்சுகள் எதுவும் பேசக்கூடாது என்று மனதில் நினைக்கும் போதே, வ.வ.ஸ்ரீ. பேரெழுச்சியுடன் மேனேஜர் ரூமை விட்டு வெளியே, பிரஸ்ஸன்னமானதுடன், என்னைப்பார்த்து அவர் சீட்டுக்கு உடனே வருமாறு கைஜாடை காட்டினார்.   

என்னை அவர் சீட் அருகே அமரச்செய்து விட்டு, ஒரு சிட்டிகைப்பொடியுடன் பாத் ரூம் சென்று விட்டு உடனடியாக வருவதாகச் சொல்லிப்போனார்.   என்னவோ ஏதோ என்ற சஸ்பென்ஸில் என் தலையே வெடித்து விடும் போல இருந்தது.

சொன்னபடியே 2 நிமிடத்தில் தன் இருக்கையில் அமர்ந்த அவர் என் கையைப்பிடித்து குலுக்கினார்.  ”CONGRATULATIONS”  என்றார். 

”என்னாச்சு, எதற்கு சார்?” என்றேன் நான் மிகவும் பதட்டத்தில்.

”நான் ரிடயர்ட் ஆன பிறகு நீ தான் என் சீட் வேலைகளையும் சேர்த்து செய்யணும், இன்னிக்கு மத்யானமே ஆர்டர் வந்துடும்.  நான் தான் உன் பெயரை ரெகமெண்ட் செய்தேன், இதனால் உனக்கு சீக்கரமே அடுத்த பிரமோஷன் வர மிகவும் ப்ளஸ் பாயிண்ட் ஆக, அது அமையும்” என்றார்.

“சார், இது குருவி தலையிலே பனங்காயை வைத்தாற்போல எனக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்குமே, சார்,” என்றேன்.

“அதெல்லாம் ஒன்னும் கஷ்டமில்லேப்பா, நான் அந்தக்காலத்தில் பார்க்காத வேலையா?   In fact இப்போ என் சீட்டில் என்ன பெரிய வேலை நான் பார்த்து வருவதாக நீ பயப்படுகிறாய்.  சும்மா வருகிறவன் போகிறவனுடன் அரட்டை அடித்து வருகிறேன்.   இந்த கம்ப்யூட்டர் வந்த பிறகு எல்லா வேலைகளையும் உன்னைப்போல இளைஞர்கள் தானே பார்க்கிறீர்கள்!  நான் தான் இந்தக் கம்ப்யூட்டர் கன்றாவியெல்லாம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று ஒதிங்கி ஒரு எட்டு வருஷத்துக்கு மேல் இருக்குமே” என்றார்.

சார், உங்கள் டேபிள், சைடு ராக், ஃபைலிங் கேபினெட், கப்போர்டு எல்லாம் ஏகப்பட்ட ஃபைல்ஸ், பேப்பர்ஸ், ரிஜிஸ்டர்ஸ் என்று ஏராளமாக பழைய பஞ்சாங்கங்களாக வைச்சுருக்கீங்களே சார், அது தான் எனக்கு ஒரே பயமா இருக்கு சார்” என்றேன்.

அதெல்லாம் ஒரு மாமாங்கமா என்னிடம் தான் இருக்குதப்பா; அதெல்லாம் இந்தக் கம்ப்யூட்டரைஸ் பண்ணுவதற்கு முன்பு நான் கையால் எழுதிவைத்த ஓல்ட் எஸ்டாபிளிஷ்மெண்ட் ரிகார்ட்ஸ். 

எவனாவது ஏதாவது கேட்டுக்கிட்டு எப்போதாவது சிலசமயம் வருவான்.   பார்த்துத் தேடித்தருவதாகவோ அல்லது நீயே தேடிக்கொள் என்று சொன்னால் போதும், அதில் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் என் பொடி நெடி தாங்காமல், அவனவன் ஓட்டம் பிடித்து விடுவான்.  

இதெல்லாம் நானும் இந்த ஆபீஸில் ஏதோ வேலை செய்கிறேன் என்று ஒரு பாவ்லா காட்ட மட்டும் தான் வைத்திருக்கிறேன்”   என்று உள்ளதை உள்ளபடிச் சொல்லி, எனக்கு ஒரு உற்சாகம் அளித்தார்.

”பொடி எதிலிருந்து எப்படி சார் தயாரிக்கிறார்கள்”  என்ற என் நேற்றைய கேள்வியை ஞாபகமாகத் தொடர்ந்தேன்.

”ரிஷி மூலம், நதி மூலம் கேட்கக்கூடாதப்பா, இருந்தாலும் உனக்குச் சொல்கிறேன். நல்ல ஒஸ்தியான புகையிலையைப் பதமாக வறுத்து, பக்குவமாக அரைத்து, சுண்ணாம்பு (கால்ஷியம் சத்து), மற்றும் ஒருசில கெமிக்கல்ஸ் சேர்த்து, காரம், மணம், குணம் நிறைந்ததாக அவ்வப்போது உள்நாட்டு, வெளிநாட்டுத் தேவைகளுக்குத் தகுந்தாற்போல, உற்பத்தி செய்து, உடனுக்குடன் வினியோகிக்கிறார்கள். 

இதில் வாசனைப்பொடி என்று ஒரு வகையறா உண்டு.  காரசாரமே இல்லாமல் சுத்த வழுவட்டையாக இருக்கும்.  மூக்கினுள் செண்ட் அடித்தால் போல கமகமன்னு ஒரு வாசனை இருக்கும். போடுபவர்களுக்கு ஒருவித எழுச்சியை ஏற்படுத்தாது.

முத்தம் கொடுக்கும்போது ஒருவேளைப் பயன்படுமோ என்று நினைத்து, அந்தநாளில், நான் ஒரு நாள் அதைப் பயன்படுத்தப்போக என் மூக்கையே கெடுத்து விட்டது அது.  என் மனைவி வேறு “இதென்ன கண்ட்றாவியா ஒரு பொண நாத்தம் அடிக்குது உங்கள் மூக்குப்பக்கம், ஏதாவது குடிச்சுட்டு வந்தீங்களா” என்று சண்டைக்கே வந்து விட்டாள்.  பழையபடி மூக்கை எழுச்சியாக்கிக் கொண்டுவர மூன்று நாட்கள் ஆனது, எனக்கு.

நாசிகாச்சூர்ணம் என்று ஒரு ஆயுர்வேதிக் மூலிகைப்பொடி உள்ளது. வெந்தயத்தை லேசாக வறுத்து அரைத்தாற்போல ஒரு வித மஞ்சள் நிறத்தில் இருக்கும்.   அது எல்லாவற்றையும் விட பேரெழுச்சி கொடுக்கக்கூடியது.  லேசா ஒரு சிட்டிகை எடுத்து இழுத்தால் போதும். மண்டையில் உள்ள எல்லா நரம்புகளும் கட் ஆகிப் போவது போல, ஒரு அரைமணி நேரத்திற்குக் குறையாமல் தொடர்ச்சியான தும்மலையும், நம்மைச்சுற்றியுள்ள பகுதிகளில் தூரலையும் வரவழைத்து விடும். மண்டையில் தேங்கியுள்ள நீர் முழுக்க மளமளவென்று, குற்றால அருவி போல கொட்டிவிடும்.   தலை பாரமெல்லாம் குறைந்தது போல இருக்கும்.

ஒரே இடத்தில் உள்ள ஒரு பத்து பேர்களுக்கு, இந்த நாசிகாசூர்ணத்தை ஒரே நேரத்தில் போடச்சொல்லிக் கொடுத்து அவர்களும் போட்டு விடுவார்களேயானால், தீபாவளிப் பட்டாஸ் பத்தாயிரம் வாலாவைக் கொளுத்தி விட்டு அவைகள் தொடர்ந்து வெடிப்பது போல, இவர்கள் தொடர்ந்து மாற்றி மாற்றி தும்மிக்கொண்டே இருப்பார்கள்.  பார்க்கவும், கேட்கவும் மிகவும் தமாஷாக ஒரு மிருதங்கக் கச்சேரி போலவே இருக்கும்.  

முன்பெல்லாம் காய்ந்த வாழைப்பட்டையில் மடித்து பொடி வியாபாரம் செய்தனர். அதில் கொஞ்சம் சுகாதாரக்குறைவு உண்டு.  பொடியுடன் கூடவே, அந்த வாழைப்பட்டையின் தூள்களும், நார்களும் மூக்கினுள் போய்விடக்கூடிய பேராபத்து இருந்து வந்தது.  இப்போது அழகிய வழவழப்பான ஒட்டவே ஒட்டாத ப்ளாஸ்டிக் பெளச்சுகள் வந்து விட்டன. பேக்கிங் ஹைஜீனிக்காக இருப்பதால், நீ கூட தைர்யமாக பொடி போடலாம்” என்றார்.   

“அதெல்லாம் இப்போது வேண்டாம், சார்.   என் இல்வாழ்க்கை முதலில் நல் வாழ்க்கையாய் ஆரம்பிக்கட்டும். ஏதும் பிரச்சனைகள் ஏற்படும்போது கட்டாயம் உங்களிடம் வந்து, ’பொண்டாட்டி’யின் சுருக்கமான ’பொ.........டி’யை, தீட்க்ஷையாகப் பெற்றுக்கொள்கிறேன்.   ஆமாம், சார், ஏதோ மத்யானம் ஆபீஸ் ஆர்டர் வரப்போகுதுன்னு சொன்னீங்களே, ஆபீஸே முடியும் நேரமாகப்போவுது, இன்னும் வரக்காணோமே” என்றேன்.

“அந்த மேனேஜர்பயல் தான் சொன்னான்.  நீ ஒன்னும் கவலையே படாதே. நாளையிலிருந்து உன் சீட்டுக்கே போகாதே.  நேராக இங்கு வந்து உட்கார்ந்து கொள்.  I will get you the Office Order, Tomorrow morning” என்று சொல்லி விடைபெற்றார் வ.வ.ஸ்ரீ.

தொடரும்


  
   

[ 7 ]

மறுநாள் காலையில், நேற்று வ.வ.ஸ்ரீ. அவர்கள் சொன்னது போலவே, நான் அவர் சீட் வேலைகளையும் சேர்த்துப்பார்க்க வேண்டும் என்றும், அவர் பணி ஓய்வு பெறுவதற்கு மூன்றே மூன்று மாதங்கள் மட்டும் இருப்பதால் இப்போதே அதற்கான Responsibilities Handing over - Taking over முதலியன மேற்கொள்ள வேண்டும் என்று ஆபீஸ் ஆர்டர் கொடுக்கப்பட்டு விட்டதால், வ.வ.ஸ்ரீ. அவர்களுடைய சீட் அருகிலேயே அமர்ந்து தொடர்ந்து அரட்டை அடிப்பதற்கு [Official Discussions என்ற பெயரில்] அனுமதி வழங்கப்பட்டு விட்டது, என்று இருவருமே நினைத்து எங்களுக்குள் மகிழ்ந்து கொண்டோம்.

“பல வருஷங்களாக பொடி போட்டுவரும் தங்களுக்கு இதுவரை எந்தப்பிரச்சனையும் வந்தது இல்லையா, சார்” என்று நைஸாக என் இன்றையப் பேட்டியைத் தொடங்கலாலேன்.  

“ஒரு தடவை மூக்கினுள் ஏதோ ஒரு சிறிய கொப்பளம் போல் ஏற்பட்டு, பொடி போடும் போதெல்லாம் வலியும் எரிச்சலுமாக இருந்ததப்பா.  மூக்கு இரண்டையும் சுத்தமாகக் கழுவிவிட்டு “காது மூக்கு தொண்டை” [E.N.T] டாக்டரிடம் போனேன்.  எனக்கு டாக்டரைப்பார்க்க அபாய்ண்ட்மெண்ட் கிடைக்க அரை மணி ஆனதில், பொடிபோடாத என் மூக்கு, நொணநொணக்கவும், முணுமுணுக்கவும், தொணதொணக்கவும் ஆரம்பித்து விட்டது. என்னிடம் கெஞ்சோகெஞ்சென்று கெஞ்சியது என் மூக்கு.

மிகவும் பொறுத்துப்பொறுத்துப்பார்த்த நான், கடைசியில் சகிக்க முடியாததால், அங்கிருந்த வெண்புறா போன்ற நர்ஸ்ஸிடம் என் பிரத்யேகப் பிரச்சனையை எடுத்துரைத்து, அவள் என்மீது காட்டிய கடைக்கண் பார்வையால், முன்னுரிமை அடிப்படையில், உள்ளே அந்த டாக்டரிடம் சென்று விட்டேன். 

என் சிறிய மூக்குத்துவாரங்களுக்குள் ஏதோவொரு தொலைநோக்குக் கருவியை பொருத்தி, வெளிச்சம் அடித்துப் பார்த்த அவர், நான் பல்லாண்டு காலமாக பொடி போடும் ரகசியத்தை எப்படியோ கண்டுபிடித்து வன்மையாகக் கண்டித்து விட்டார்.  

காஃபி பில்டரில் தங்கியுள்ள சக்கைபோல தேங்கி, என் மூச்சுக்குழல் முழுவதும் ஒரே இருட்டாக ஒன்றுமே தெரியாமல் வழுவட்டையாக இருப்பதாகக்கூறி, இது மிகவும் ஆபத்து என பயமுறுத்தி, இனி பொடிப்பக்கமே தலை வைத்துப்படுக்கக்கூடாது, கண்ணாலும் பார்க்கக்கூடாது என்று இறுதி எச்சரிக்கையும் கொடுத்து விட்டார்.

டாக்டர் சொன்ன எச்சரிக்கையை என்னுடனேயே அருகில் இருந்து கேட்ட என் மனைவி என்னை, அப்போது ஒரு விதக் கொலைவெறியுடன் பார்த்தாள். வெளியே வந்த நான், அன்று இறுதியாக ஒரே ஒரு முறை மட்டும் பொடியை இழுத்துவிட்டு, ஒரு பேரெழுச்சியுடன் ஞாபகமாக அந்த வெண்புறாவுக்கும் நன்றி சொல்லிவிட்டு, என் மனைவியை நேருக்கு நேர் பார்க்க விரும்பாதவனாக, அவளுடனேயே ஆட்டோவில் ஏறி என் வீட்டை அடைந்தேன்.

பொடி டின்னை என் வீட்டுப்பரணையில் என் மனைவி பார்க்கும் போதே விட்டெறிந்து விட்டேன்.   இனிமேல் பொடியே போடப்போவதில்லை என்று [ப்ரஸவ வைராக்கியம் என்பார்களே, அது போல] சபதம் மேற்கொண்டேன்.

ஒரு அரை மணியோ ஒரு மணியோ, ஒரு மாதிரி தாக்குப்பிடித்து விட்டேன். அதன் பிறகு எனக்கு ஒரு வேலையும் ஓடவில்லை.  நடுவில் என் மனைவி சாப்பிடக்கூப்பிட்டு இருக்கிறாள் என்று நினைக்கிறேன். 

ஆனால் யார் பேசுவதும் என் காதிலேயே விழவில்லை.  உடல் பூராவும் ஒரு மாதிரி சோர்ந்துபோய், கண்கள் சொருக, சுத்த வழுவட்டையாகி விட்டேன். அப்படியே விட்டால், எனக்கு மூச்சே நின்றுவிடும் போல ஆனதை, என்னால் மட்டுமே உணர முடிந்தது.    

நான் இப்படித் தவியாய்த் தவிப்பதைப் பார்த்த என் மனைவி, தன் திருமாங்கல்யத்தை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்டு, வந்தது வரட்டும் என்று தானே மரஸ்டூல் ஒன்றைப்போட்டு, கோவை சரளா போல தன் புடவைத்தலைப்பை இழுத்துச்சொருகிக்கொண்டு, பரணை மீது ஏறி, பொடி டின்னைத் தேடி எடுத்து, தன் புடவைத்தலைப்பால் புழுதிகளைத் துடைத்து, மூடியைத்திறந்து என்னிடம் நீட்டிய பிறகு தான், எனக்குப்போன உயிர் திரும்பி வந்தது என்றால் பார்த்துக்கோயேன்” என்றார்.   

இவ்வாறு பொடியுடன் ஒன்றிப்போய்விட்ட அவரின் வாழ்க்கையை எண்ணி, ஆச்சர்யப்பட்டுப்போன நான் ”சமீபத்தில் நீங்கள் துபாய்க்குப்போய் வந்ததாகக் கேள்விப்பட்டேனே,  சார்; அங்கு நம்மூர் போல பொடிக்கடைகள் உண்டா? அந்த அனுபவத்தைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கோ சார்”, என்றேன்.

“அது ஒரு மிகப்பெரிய கதையப்பா,  லஞ்ச்டயம் ஆவதற்குள் சுருக்கமாகச் சொல்கிறேன்.   துபாயிலிருக்கும் என் பெரிய பையன், ரொம்ப நாட்களாகவே என்னை அங்கு வரும்படி கூப்பிட்டும், இந்தப்பொடி விஷயமாகத்தான், அந்தப்பயணத்தையே ஒத்திப்போட்டு வந்தேன்.  பிறகு அவன் பிடிவாதம் தாங்கமுடியாமல், அவனது அழைப்பை ஏற்று, நான் புறப்பட்டுச்செல்லும்படி ஆனது.

விமானம் ஏறும் முன்பு என்னைப் பரிசோதித்த அதிகாரிகள், என் சட்டைப்பையிலிருந்த பொடி டின்னைத் திறக்கச்சொல்லி, அதில் நான் புதுசாக வாங்கி அடைந்திருந்த மூன்று ரூபாய்ப்பொடியையும் ஒரு ஓரமாக தரையில் என்னை விட்டே கொட்டிவிடச்சொல்லிவிட்டனர்.  

காலிட்டின்னை மட்டும் எடுத்துச்செல்ல அனுமதியளித்தனர்.  எனக்கு அழுகையே வந்து விட்டது.  கைவசம் பொடி இல்லாத இந்த வெளிநாட்டுப்பயணம் தேவை தானா என்று ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்று விட்டேன்.   

செக்-இன் முடிந்த என்னையும், மற்ற பயணிகளையும் வெளியே வரமுடியாதபடி (ஆடுமாடுகளைப் பட்டியில் அடைப்பது போல) ஓரிடத்தில் அடைத்து விட்டனர். நாம் செல்ல வேண்டிய விமானம் வந்து விட்டது என்று அனைவரும் மகிழ்ச்சியுடன் க்யூவில் நிற்க, நானும் வேறு வழியில்லாததால் அவர்களுடன் சேர்ந்து நிற்கும்படி ஆகி விட்டது. 



முதன் முதலாக விமானத்தில் ஏறும் நான், அந்த ஐந்து மணி நேர விமானப்பயணத்தில் நொந்து நூலாகிப்போனேன்.      எழுச்சியுடன் பொடிபோட்டுக்கொண்டு ஜாலியாகப் பயணிக்க வேண்டிய நான், வழுவட்டையாக காலியான பொடி டின்னை மோப்பம் பிடித்தவாறே பறந்து கொண்டிருந்தேன்.  



அழகழகான இளம்வயது குட்டிகளான விமானப் பணிப்பெண்கள் அவ்வப்போது என்னருகே வருகிறார்கள், பயணம் இனிமையாகட்டும் என்று சொல்லி வாழ்த்துகிறார்கள்.  



எனக்குத் தின்ன, சுவைக்க, குடிக்க, சாப்பிட, படிக்க என்று ஏதேதோ தந்துதான் அந்தப்பெண்கள் என்னை அவ்வப்போது கவனித்துக்கொள்கிறார்கள். 

ஆனால் அவர்களில் ஒருத்தியாவது என் அவசர மற்றும் அவசியத் தேவையாகிய பொடியை மட்டும் தராதது, எனக்கு என் பொடிபோடாத மூக்குக்குமேல் கோபத்தை வரவழைத்து, அந்த அழகிய பெண்கள் மேல் ஒரு வித, எரிச்சலையே ஏற்படுத்தியது.  

நல்லவேளையாக 50 கிராமில் இரண்டு பாக்கெட்களும், 10 கிராமில் 50 பாக்கெட்டுகளும், என்னுடைய வெவ்வேறு லக்கேஜ்களுடன் துணிமணிகளில் சுற்றியவாறு கடத்திச்சென்றதை, பறிமுதல் செய்யாமல் விட்டுவிட்டனர்.                                   

அந்தப்பொடியின் காரம், மணம், குணம் குறையும் வரை மட்டும், ஒரு 40 நாட்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இல் தங்கி ஷார்ஜா, துபாய், அபுதாபி என எழுச்சியுடன் அனைத்து இடங்களையும் என் மகனுடன் தினமும் காரில் சுற்றிப்பார்த்தேன். 

நம்மூர், திருச்சி வெங்காய மண்டியில் சின்ன வெங்காயத்தை, நடு ரோட்டில் மலைபோல குவித்து வைத்திருப்பார்களே, அதே போல அங்குள்ள “இண்டர் நேஷனல் கோல்டு பஜார்” என்ற இடத்தில், ஒரு பெரிய தங்கநகைக் கடையில் ஜொலிக்கும் புத்தம்புதிய தங்க மோதிரங்களைக் குவித்து வைத்திருப்பதைப்பார்த்து நான் அசந்து போனேன்.

அதுபோல ’சிட்டிசென்டர்’ என்று ஒரு இடத்திற்கு என் மகன் காரில் கூட்டிச் சென்றான்.  அங்கு ”என்ன விசேஷம்”  என்று போகும் போது அவனிடம் நான் கேட்டேன்.   

“நீ அங்கு வந்து பாருப்பா;  அங்கு கிடைக்காத ஒரு சாமான் இந்த உலகிலேயே எதுவும் இருக்க முடியாது.  அவ்வளவு ஒரு மிகப்பெரிய ப்ரும்மாண்டமான ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் அது” என்றான்.

“அப்படியா! என்று கேட்டு ஆச்சர்யப்பட்டுப்போனேன். அப்படியானால் எப்படியும் இந்த மூக்குப்பொடி கிடைக்காமல் போகாது என்ற எண்ணத்தில்.  

”அங்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் தங்கள் காரைப்பார்க் செய்யவே பலமாடிகள் கொண்ட மிகப்பிரும்மாண்டமான கட்டடம், கட்டியிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் 5000 கார்கள் வரை பார்க் செய்ய முடியும்.  எந்த மாடியில் எந்த ஸ்லாட்டில் நம் காரை பார்க் செய்திருக்கிறோம் என்பதை மட்டும் நாம் ஞாபகமாக குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இல்லாவிட்டால் நம் காரை நாம் கண்டுபிடிக்கவே ஒரு வாரம் ஆகிவிடும்.   

நாம் கார் நிறுத்தும் எந்தத்தளத்திலிருந்தும் அப்படியே நேராக அந்த மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்க்குள் நுழைந்து விடவும், அங்கிருந்து நாம் விரும்பும் தளத்திற்கு லிஃப்ட்டில் சுலபமாகச் செல்ல வசதிகளும்,  நகரும் படிக்கட்டுகளுமான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்திருகிறார்கள்” என்றான். 

அங்கு போய்ப்பார்த்தபின்புதான் அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் முழுவதுமாக பொறுமையாக ஒவ்வொரு பிரிவாக சுற்றி வரவே, சுத்தமாக ஒருமாதம் ஆனாலும் ஆகலாம் என்பது எனக்குத் தெரிய வந்தது.

உலகப்பிரசித்தி பெற்ற எல்லா நிறுவனங்களும் அங்கே ஏராளமான ஸ்டால்கள் அமைத்து, அனைத்துப்பொருட்களும் அங்கு கிடைத்தும், அதனால் எனக்கு என்ன பயன் என்று தான் எனக்கு நினைக்கத் தோன்றியது. 

எனக்கு முக்கியமாகத் தேவைப்படும் மூக்குப்பொடி அங்கு கிடைக்குமா என்பது எனது சந்தேகம். அதுபற்றிய விபரம் எனக்குத் தெரியவில்லை. நான் பொடிபோடுவதே என் மகனுக்குப்பிடிக்காது.   அதனால் அவன் கண்ணெதிரில் நேருக்குநேர் நான் பொடி போடுவதும் கிடையாது. இது இவ்வாறு இருக்க, என் மகனிடம் போய், இந்த உலகச்சந்தையில் மூக்குப்பொடி கிடைக்குமா என்று நான் கேட்டால், என் ரசனை இவ்வளவு கேவலமானதா என்பது போல,  அவன் ஒருவேளை, என்மேல் கோபப்பட்டாலும் படுவான்.   அதனால் அவனிடம் இதுபற்றி ஏதும் கேட்காமல் வாயையும், முக்கியமாக மூக்கையும் பொத்திக்கொண்டு சுற்றி வரலானேன். 

அங்குள்ள வேறு யாரிடமாவது கேட்டால் அவர்களால் நான் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். அல்லது லாகிரி வஸ்துவொன்றை உபயோகிக்கத்துடிப்பதாக, ஏதாவது தவறாக நினைத்து என்னைக் கைது செய்யவும் முயற்சிக்கலாம்.   

இதுபோல ஏதும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவனாக,  உலகச்சந்தையை உற்று நோக்குவது போல, ஒரு மணி நேரம் ஏதோ ஒருசில கடைகளை மட்டும் பார்த்துவிட்டு, சூடான கார்ன் (நம்மூர் சோளக்கருதை, நல்லா வேகவைத்து, உப்பு, எலுமிச்சை, மிளகுத்தூள் முதலியன தூவியது) ஒரு பேப்பர் டம்ளர் நிறைய வாங்கி சாப்பிட்டுவிட்டு அங்குள்ள பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து கொண்டேன். 

அதற்குள் என் மகனும், மருமகளும் ஏகப்பட்ட மளிகை சாமான்கள், காய்கறிகள், எண்ணெய் டின்கள், பால், தயிர், ஜூஸ் வகைகள், தீனி வகையறாக்கள் என்று வீட்டுக்குத்தேவையான அனைத்துப் பொருட்களையும் அள்ளி அள்ளி ஆங்காங்கே தயாராக இருக்கும் தள்ளுவண்டி ஒன்றை தரதரவென்று இழுத்து, பொருட்களை அந்த வண்டி நிறைய ரொப்பி, பில் போடும் இடத்திற்கு வண்டியை இழுத்து வந்து, கிரெடிட் கார்டை நீட்டினர்.   

ஐந்தே நிமிடங்களில் ஒவ்வொரு சாமான்களையும், அப்படி அப்படியே ஒரு மிஷினில் தீபாராதனை போலக் காட்டியவுடன், அது கடகடவென்று பில் போட்டுக்கக்கி விட்டது.  பிறகு கிரெடிட் கார்டைப் பெற்றுகொண்டு, தள்ளுவண்டியுடன் லிஃப்டில் ஏறி, எங்கள் கார் நிறுத்தப்பட்டிருந்த நாலாவது தளத்திற்கு சமமான பகுதியில், லிஃப்டிலிருந்து வெளியே வந்து,  எங்கள் கார் வரை அந்த தள்ளு வண்டியைத்தள்ளிக்கொண்டு, பிறகு தள்ளுவண்டியிலிருந்த அத்தனைப்பொருட்களையும், கார் டிக்கியில் அடைத்துக்கொண்டு, தள்ளுவண்டியை அங்கேயே ஓரம்கட்டி விட்டு,  எங்கள் வீடு நோக்கித் திரும்பலானோம். 

“எப்படிப்பா இருந்தது இந்த சிட்டி சென்டர் ஷாப்பிங் ஏரியா?” என்றான் என் மகன்.

“துபாய்னா, துபாய்தான்; இதுபோல என் வாழ்நாளில் எங்கேயுமே பார்த்தது கிடையாது” என்றேன் நான்.   ’பொடிகூட விற்கப்படாத பொடலங்காய் ஷாப்பிங் ஏரியா’ என்று என் மனதுக்குள் முணுமுணுத்தவாறே.

என் கைவசம் வைத்திருந்த நம் நாட்டுப்பொடியின் காரம், மணம், குணம் குறையும் வரை ஒரு 40 நாட்கள் மட்டும்  துபாயில் எழுச்சியுடன் தங்கிவிட்டு, இதுபோல தினமும், ஊரைச்சுற்றிப் பார்த்துவிட்டு ஒருவழியாக ஊருக்கு வந்து சேர்ந்தேன்.   

வரும் போது ஞாபகமாக ஒரு பெளச் பொடியை மட்டும், அண்டர்வேர் பையில் அடக்கமாக வைத்துக்கொண்டு, கைப்பைக்குள் (Hand Luggage) தனியே கொஞ்சமாக ஒரு விபூதி குங்குமப்பிரஸாதம் போல மடித்துப் போட்டுக்கொண்டு விமானம் ஏறிவிட்டேன்.   ஊருக்கு வந்ததும் முதல் வேலையாக ஓடினேன் நேராக நம்மூர் பொடிக்கடைக்கு - புதுப்பொடி வாங்க” என்று தன் பயணக்கட்டுரையை புட்டுப்புட்டு புரியும் படியாக எடுத்துரைத்து அசத்தி விட்டார், வ.வ.ஸ்ரீ. அவர்கள்.    

லஞ்ச் முடிந்ததும் தனக்கு ஏதோ முக்கியமான கட்சிப்பணிகள் இருப்பதாகவும், அதனால் மத்யானம் என்னைத் தேடாதே என்றும் சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார்.

இனியும் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே ஒரு முக்கியமான விஷயம், இந்தக் கட்சிப்பணிகள் என்று அடிக்கடி இவர் எஸ்கேப் ஆவது பற்றி மட்டுமே என்பதால்,  அதைப்பற்றிய என் பேட்டியை நாளைக்கே அவர் நம்மிடம் சிக்கும்போது ஞாபகமாகக் கேட்டுவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.  


தொடரும்
    
    






[ 8 ]

அடுத்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து வ.வ.ஸ்ரீ. அவர்கள் ஆபீஸுக்கே வரவில்லை. எனக்கும் எந்த வேலைகளுமே ஓடவில்லை.  ஒரு வயதான மனிதருடன் மிகக் குறைந்த காலமே ஒரு அலுவலகத்தில் பழகியும், எனக்கு அவர் மீது இப்படி ஒரு அன்பும்,  ஆர்வமும் பிறந்துள்ளது எனக்கே மிகவும் ஆச்சர்யமாகப்போய் விட்டது. 

ஏதோ அவர் மீது ஒரு தனி பாசம்.  தனி பிரியம் எனக்கு. வயதானவர் மற்றும் மிகவும் அனுபவஸ்தர் என்பதாலோ, மிகவும் சுவாரஸ்யமாகப் பேசுபவர் என்பதாலோ, நகைச்சுவையாகப் பேசி மகிழ்விப்பவர் என்பதாலோ என்று சரியாகப் புரியாவிட்டாலும், ஏதோ ஒரு ஈடுபாடு அவருடன் போன ஜன்மத்திலிருந்தே ஏற்பட்டு இப்போது தொடர்கிறதோ என்னவோ.

இன்று சாயங்காலமாக ஆபீஸ் விட்டதும் அவரை அவர் வீட்டில் போய் சந்தித்து வரலாமா என்று நினைத்தேன்.   என் கை என்னையறியாமல் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசச்செய்தது.   மாலை ஆறு மணிக்கு காந்தி பார்க் என்ற இடத்திற்கு வரச்சொல்லி சொல்லிவிட்டார்.

நான் அவர் சொன்ன பூங்காவிற்கு 5.55 க்கே ஆஜர் ஆகிவிட்டேன். மிகுந்த பதட்டத்துடன் சற்று நேரத்திற்கெல்லாம் வ.வ.ஸ்ரீ. அவர்களும் வந்து சேர்ந்து விட்டார்.

“என்ன சார்,  ஆபீஸ் பக்கமே காணோம் ?”  என்றேன்.

”நான் இந்தத்தமிழ்நாட்டிலுள்ள பெரிய பெரிய கட்சிகளுக்காக எவ்வளவு பாடுபட்டு உழைத்திருக்கிறேன் தெரியுமா?  நம் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட யூனியன்களில் எவ்வளவு முறை நான் தலைவராக இருந்து கட்சிக்காக எவ்வளவு ஆதரவு திரட்டிக்கொடுத்திருக்கிறேன் தெரியுமா?  அந்த நன்றி விஸ்வாசத்தை மறந்துட்டாங்களே எல்லாப் பயல்களும்? 

இந்த எலெக்‌ஷனுக்கு முன்னாலேயே ஆபீஸிலிருந்து பணிஓய்வு பெறுவதும் நல்லது தான், இந்த தடவை வரும் எலெக்‌ஷனிலேயாவது நமக்கு எவனாவது ஒருத்தன் எம்.எல்.ஏ. சீட்டுக்கு டிக்கெட் தந்துடுவான்னு நினைச்சேன்; ஆனாக்க எல்லாப்பயல்களும் என்னிடமே பேரம் பேசறானுங்களே!  நான் கத்துக்கொடுத்த பாடத்தை என்னிடமே திருப்பறாங்களே! ” என்று ஏதேதோ காரசாரமாக ஆரம்பித்தார், வ.வ.ஸ்ரீ.

“அடடா இது தான் நீங்கள் 3 நாளா ஆபீஸுக்கு வராததற்கு காரணமா! விட்டுத்தள்ளுங்க, சார்.   இந்தப் பாழாய்ப்போன பாலிடிக்ஸே உங்களுக்கு வேண்டாமே சார்” என்று உசிப்பி விட்டேன் நான்.

“விடுவேனா இத்துடன் இந்தப்பயல்களை!  தமிழ்நாடு முழுக்க 234 தொகுதிக்ளிலும் நமக்கு ஆளுங்க இருக்கு.   தனிக்கட்சி ஆரம்பித்து கூட்டணிக்காவது கூப்பிடுறாங்களான்னு பார்ப்பேன். அதிலும் ஓரங்கட்டப்பட்டால், எல்லா இடங்களிலும் 234 தொகுதிகளிலும் தனித்தே என் கட்சி போட்டியிடும். அப்போது தான் என் கட்சியின் தனித்தன்மையையும், பலத்தையும் நிரூபித்து, அடுத்த எலெக்‌ஷனிலாவது என்னால் ஆட்சியைப்பிடிக்க முடியும். 

இன்று நள்ளிரவு பத்திரிக்கையாளர்களுக்கு இது சம்பந்தமாக சிறப்புப் பேட்டி கொடுக்க இருப்பதாகச் சொல்லி,  அழைப்புகள் அனுப்பியுள்ளேன். நாளை வரும் செய்திகளைப் பார், நான் யார் என்று உனக்கும் தெரியும்” என்று கர்ஜித்தார் வ.வ.ஸ்ரீ. 

”இந்த முற்போக்குக்கூட்டணி, பிற்போக்குக்கூட்டணி என்கிறார்களே, சார், அப்படின்னா என்ன சார், கொஞ்சம் எனக்குப்புரியும் படியா சொல்லுஙளேன்” என்றேன்.

“முற்போக்காவது, பிற்போக்காவது எல்லாமே ஒரே கொள்ளைக்கூட்டம் தானப்பா.   முற்போக்குன்னா: ’ வாந்தி’,   பிற்போக்குன்னா:  ’பேதி’ன்னு நினைச்சுக்கோ. வாந்தியோ பேதியோ எல்லாமே இன்றைய மண்ணாங்கட்டி அரசியலில், சாக்கடைக்கு அனுப்ப வேண்டியவை தான்” என்றார், வ.வ.ஸ்ரீ.,  மிகுந்த ஆத்திரத்துடன். 

”நீங்கள் ஆரம்பிக்கப் போகும் புதுக்கட்சியின் பெயர் என்ன சார்?” என்றேன், நான்.

“மூ.பொ.போ.மு.க”  

அதாவது,

மூக்குப் பொடி போடுவோர் 

முன்னேற்றக் கழகம்”  

என்றார்.

”தமிழ்நாட்டில் பெரிசா எவ்வளவு பேர்கள் மூக்குப்பொடி போடப்போகிறார்கள்! அவர்களுக்கு என்ன சார் இப்படி தனியே ஒரு முன்னேற்றக் கழகம்?” என்றேன்.

“இங்கு தான் நீ, நம் தமிழ்நாட்டு அரசியலை வழுவட்டைத்தனமாகப் புரிந்து கொள்கிறாய்.    சென்னை மாகாணமாக இருந்தது யாரால் எப்போது ’தமிழ்நாடு’ என்று மாற்றப்பட்டது என்ற சரித்திரம் உனக்குத் தெரியுமா?” என்றார் ஆத்திரத்துடன் வ.வ.ஸ்ரீ. 

“சுதந்திரத்திற்குப் பின் பல்லாண்டு ஆட்சி செய்த காங்கிரஸ் போய் கழக ஆட்சியைக் கொண்டு வந்தாரே,  நம் பேரறிஞர் அண்ணா! அவர்களால் கொண்டுவரப்பட்டது தான் இந்தத் ’தமிழ்நாடு’ என்ற புதுப்பெயர், அப்படின்னு கேள்விப்பட்டிருக்கிறேன், சார்”  என்றேன்.

“கரெக்ட்டா சொன்ன தம்பி.   இப்போது உள்ளவர்கள் யாருமே அறிஞர் அண்ணாவின் உண்மையான வாரிசு என்று சொல்லிக்கொள்ள முடியாது. அறிஞர் அண்ணா அவர்கள் எழுச்சியுடன் மூக்குப்பொடி போடுவார்.

 நானும் அதே அண்ணன் உபயோகித்த அதே பொடியைப் போடுகிறேன்.  எனவே அண்ணா அன்று ஆரம்பித்த முன்னேற்றக் கழகத்தின் அசல் வாரிசு, நான் ஒருவன் மட்டுமே.  இது ஒரு பாயிண்ட் போதும் எனக்கு, ஆட்சியைப்பிடிக்க” என்று மிகவும் ஆவேசமானார், வ.வ.ஸ்ரீ. அவர்கள்.

”தங்கள் கட்சிக்கு தாய்க்குலத்தில் ஆதரவு இருக்காதே, சார்?”  என்றேன்.

”ஏன் இருக்காது?   மது அருந்தும் பெண்கள், புகைபிடிக்கும் பெண்கள், சுருட்டு பிடிக்கும் பெண்கள்,  வெற்றிலைபாக்குப் புகையிலை போடும் பெண்கள் போலவே பொடி போடும் பெண்கள் நிறைய பேர்கள் உண்டப்பா. 

ஆனால் அவர்களுக்கே இருக்க வேண்டிய அச்சம், நாணம், மடம், பெயர்ப்பு என்று அந்தக்காலத்தில் சொல்லுவார்களே, அந்த ஒரு வெட்கத்தினால், இந்தப்பொடி போடும் பெண்கள் பற்றி வெளியுலகுக்குத் தெரிய நியாயம் இல்லை.   ஆனால் தலைவராகிய எனக்குத் தெரிந்தால் போதாதா! அவர்களின் ஆதரவை அள்ளிப்பெற்றிட முடியுமே, என்னால்!”  என்றார்.

”இருந்தாலும் சார்.......” என்று சற்றே நான் இழுத்தேன்.

”பெண்களே!  தாய்க்குலமே!  உங்கள் ஜாக்கெட்டில் ஒரு பாக்கெட் வையுங்கள். அந்தப் பாக்கெட்டில் பொடியை வையுங்கள்.  ஈவ் டீஸிங்கா, கடத்தலா, கற்பழிப்பா கவலையே படாதீர்கள்.  ஜாக்கெட்டில் உள்ள பாக்கெட்டை அவிழ்த்து தூவுங்கள் பொடியை அந்த வில்லன்களில் கண்களை நோக்கி” என்று கூறி மகளிர் அணியை வலுப்படுத்துவோம். மகளிருக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை ஊட்டுவோம்”  என்று வீர வசனங்கள் பேச ஆரம்பித்து விட்டார், வ.வ.ஸ்ரீ.

தங்கள் கட்சியின் கொள்கை என்ன?  பிரச்சார யுக்திகள் என்ன? விளக்குங்களேன் ” என்றேன்.

”அன்று பேரறிஞர் அண்ணா அவர்கள் உபயோகித்த அதே மூக்குப்பொடியை நாங்களும் உபயோகிக்கிறோம்.  

எனவே நாங்கள் தான் அண்ணா அவர்களின் உண்மைத்தம்பிகள்.

எங்கள் ”மூ.பொ.போ.மு.க.” வே ஒரிஜினல் தாய்க்கழகம் ஆகும் என்று மக்கள் மன்றத்தில் வாதாடுவோம்.

தாலிக்குத் தங்கம் வேண்டாம் ! 

தாளிக்க வெங்காயமும் வேண்டாம் !! 

மூக்குக்குப் பொடி வேண்டும் !

   முன்னேற வழி வேண்டும் !!       

என்று முழங்கிடுவோம்.




எங்கள் கட்சியின் சின்னமே “பொடி டின் ” தான்.

தற்சமயம் சத்துணவு என்ற பெயரில் ஏதேதோ உணவுகளும், முட்டைகளும் மட்டும் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.  இவை கொஞ்சம் பசியாற்றி அவர்களைத் தூங்கச்செய்யுமே தவிர, பாடங்கள் மனதில் பதியவோ, மூளை வளர்ச்சியடையவோ எந்தவிதத்திலும் பயன் படாது. 

எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூளைக்கு எழுச்சி கொடுக்கவும், குழந்தைகளின் ஞாபகசக்தியை அதிகரிக்கவும், ஆளுக்கு 5 கிராம் வீதம் தினமும் பொடி தந்து அதை எப்படிப்போடணும் என்று பயிற்சியும் தருவோம். பிறகு அதை படிப்படியாக தினமும் 10 கிராம் வீதம் தருவதற்கும் பாடுபடுவோம்.   

குழந்தைகளே வருங்கால இந்தியா என்பதால் அவர்களுக்கு ஆரம்பப்பள்ளிப் பருவத்திலேயே எழுச்சி ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் ’மூ.பொ.போ.மு.க’ கட்சியின் அடிப்படைக்கொள்கைகளில் மிக முக்கியமானதொன்று.

கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்க ஒரு புகழ்பெற்ற சூப்பர் சினிமா நடிகையை தேடி வருகிறேன்.   படுகுஜாலாக ஒருத்தி மட்டும் கிடைத்து விட்டால் போதும், மற்ற எல்லா பிரச்சனைகளும் ஓவர்.

சூரியன் மறைந்தாலும், சுட்டெரிக்கும் அந்த 

சூரியனை “கை” யே காக்க முயன்றாலும், 

இலைகள் உதிர்ந்தாலும், பம்பரமே படுத்தாலும், 

கொட்டும் முரசில் கொப்பளமே ஏற்பட்டாலும், 

மாம்பழமே புளித்தாலும், எழுச்சியுடன் நின்று, 

அனைத்து இடங்களிலும் வெற்றி பெறப்போவது 

எங்கள் அறிஞர் அண்ணா அவர்களின் 

உண்மையான அரசியல் வாரிசாகிய 

எங்களின் பொடி டின் சின்னமே என 

எடுத்துரைப்போம்”  

என்றார் பேரெழுச்சியுடன் வ.வ.ஸ்ரீ. அவர்கள்.

இருட்டி விட்டதாலும், வ.வ.ஸ்ரீ. அவர்கள் தன்னை மறந்து இவ்வாறு உரக்க வீராவேச உரை நிகழ்த்துவதாலும், பயந்து போன மக்கள், அந்தப் பூங்காவை விட்டு அவசர அவசரமாக வெளியேற, எனக்கும் அவருடன் அங்கு தனியே இருப்பது நல்லதாகப் படாமல், ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியது.  

“சார், நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள்.   நீங்கள் கொதித்துப்போய் இவ்வாறு உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதைக்கேட்கும் எனக்கு, நீங்களே அடுத்த முதலமைச்சர் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்து விட்டது. மீதி விஷயங்கள் நாளை ஆபீஸில் பேசிக்கொள்ளலாம்” என்றேன்.

இதைக்கேட்ட அவர் என்னைக் கட்டித்தழுவிக் கொண்டு, கை குலுக்கினார். அப்போது, அவர் முகத்தில், இதுவரை நான் என்றுமே பார்க்காத ஓர் பேரெழுச்சியுடன் கூடிய குதூகலத்தை, என்னால் காண முடிந்தது.

மீண்டும் ஒருமுறை என்னைக்கட்டி அணைத்துத் தழுவிக்கொண்டு விட்டு, ”இந்த நான் ஆரம்பிக்க இருக்கும் புதிய கட்சிக்கு நீயும் ஆதரவாக இருந்து எனக்கு பல உதவிகள் செய்யும்படியாக இருக்குமப்பா, நான் அதைப்பற்றி உனக்கு பிறகு விபரமாகச் சொல்கிறேன்”, என்று சொல்லி ஒருவழியாகப் புறப்பட்டு சென்று விட்டார்.  

நல்லவேளையாக இவர் என்னைக் கட்டிப்பிடித்ததை யாரும் அங்கே பார்த்ததாகத் தெரியவில்லை.   நானும் நடுங்கியவாறே வீடு போய்ச் சேர்ந்தேன்.

நான் வீடு போய்ச்சேர்ந்தும்,  வ.வ.ஸ்ரீ. அவர்கள் நல்லபடியாக வீடு போய்ச்சேர்ந்தாரா என்று எனக்கு ஏற்பட்ட விசாரத்தில், அவருக்கு மீண்டும் போன் செய்தேன்.      

நெடு நேரமாக ரிங் போயும், போன் எடுக்கப்படவில்லை.   பிறகு மீண்டும் போன் செய்தபோது ஒரு பெண் குரல் கேட்டது எனக்கு.

ஆஹா! ’கொள்கை பரப்புச் செயலாளர்’ ஆக பதவி ஏற்க அதற்குள் ’குஜாலான’எந்த நடிகை மாட்டினாள் என்று நான் ஆச்சர்யப்பட்டேன்.

பிறகு தான் தெரிந்தது அது அவரின் மனைவியின் குரல் என்று.   நான் என்னை அறிமுகம் செய்துகொண்டுவிட்டு, மிஸ்டர் ஸ்ரீனிவாசன் சாருடன் பேச வேண்டும்”  என்றேன்.

வ.வ.ஸ்ரீ. அவர்களை ஏதோவொரு மனநோய் மருத்துவமனையில் அட்மிட் செய்திருப்பதாகச் சொன்னார்கள், அவரின் மனைவி.  

நான் பதறிப்போனேன்.  ”ஏன் என்னாச்சுங்க மேடம்? 2 மணி நேரங்கள் முன்புகூட என்னிடம் நல்லாத்தானே பேசிக்கொண்டிருந்தார்!” என்றேன்.   

பிறகு வ.வ.ஸ்ரீ யின் மனைவியே எனக்கு ஆறுதல் சொன்னார்கள்.  பயப்பட வேண்டாம் என்றும் மனதை தைர்யப்படுத்திக்கவும் சொன்னார்கள்.  

அதாவது இந்த இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் பற்றிய ஏதாவது செய்திகள் வந்தாலே வ.வ.ஸ்ரீ அவர்களுக்கு இதுபோல ஒரு அட்டாக் வருவதுண்டாம். இதுவரை பலமுறை வந்துள்ளதாம்.   பயப்பட ஒன்றும் இல்லையாம். முற்றிய நிலையில் ஒரு நாலு நாள் டிரீட்மெண்ட் கொடுத்து படுக்க வைத்தால் போதுமாம். பிறகு பழையபடி, அடுத்த எலெக்‌ஷன் வரை கவலைப்பட வேண்டியதில்லையாம்.   

இன்று தான் அந்த முற்றிய நிலையை அந்த அம்மாவால் கண்டு பிடிக்க முடிந்ததாம்.    இன்னும் நாலு நாட்களில் வழக்கம் போல ஆபீஸுக்கு வந்து விடுவாராம்.   தயவுசெய்து யாரும் அரசியல் பற்றி மட்டும் அவரிடம் பேசாமல் பார்த்துக்கொள்ளுங்கள், என்றாள் அந்த அம்மா, எந்தவித ஒரு டென்ஷனுமே இல்லாமல்.  

இத்தகைய ஒரு அட்டாக் வந்துள்ள ஆசாமியுடன், தனியாக அந்தப் பார்க்கில், இருட்டும் வரை இருந்துள்ளோமே என்பதை நினைத்துப்பார்த்த எனக்குத் தான் இப்போது டென்ஷனாகிப்போனது.

”இந்தப்பாழாய்ப்போன அரசியல் தேர்தல்கள் அடிக்கடி வந்து தொலைப்பதனால், இதுபோல எவ்வளவு பேர்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனரோ?; எவ்வளவு பேர்களுக்கு மூளை குழம்புகிறதோ?; எவ்வளவு மக்களுக்கு மூளைச்சலவை செய்யப்படுகின்றதோ?” என நினைத்து, நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

பாவம் அந்த நல்ல மனிதர், வ.வ.ஸ்ரீ., அவர்கள் சீக்கரமாக குணமாகி நல்லபடியாகத் திரும்ப வரவேண்டும்; நல்லபல செய்திகள் அவர் வாயால் தொடர்ந்து நான் கேட்க வேண்டும், என கடவுளிடம் நான் மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டேன்.


தொடரும்

   
   


[9]


நான் செய்த அந்தப்பிரார்த்தனை வீண் போகவில்லை. அடுத்த ஒரு வாரத்தில் வ.வ.ஸ்ரீ.  அவர்கள், வழக்கம்போல எழுச்சியுடன் ஆபீஸுக்கு வந்து விட்டார்.   

அவரிடம் இந்த எலெக்‌ஷன் பற்றிய செய்தியினால் சமீபத்தில் அவருக்கு ஏற்பட்டதாக அவர் மனைவி சொன்ன அட்டாக்கின் அறிகுறிகள் எதுவும் தென்படவே இல்லை.   

அந்தளவுக்கு நல்லதொரு ஷாக் ட்ரீட்மெண்ட், கொடுத்திருப்பார்கள் போலிருக்கு!. 

அந்த நல்லதொரு நகைச்சுவையாளரை காப்பாற்றிய, அந்த மனநோய் மருத்துவருக்கும், கடவுளுக்கும் நன்றி கூறினேன், நான்.

நாங்கள் எங்கள் அலுவலகத்தில் ஆவலுடன் எதிர்பார்த்த வ.வ.ஸ்ரீ. அவர்களின் பணிஓய்வு பெறும் நாளும் வந்து விட்டது.   இன்று தான் அவர் பணிஓய்வு பெறப்போகிறார். 

அந்தக் காலைப்பொழுதில் வ.வ.ஸ்ரீ. யின் டேபிளின் மேல், இரண்டு டஜன் எவர்சில்வர் பொடி டப்பாக்கள், புத்தம் புதியதாக பளபளவென்று, அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.   ஒவ்வொன்றும் ஒண்ணரை அங்குல உயரமும், முக்கால் அங்குல விட்டமும் கொண்டதாக, திருகு மூடி போட்டதாக இருந்தன.  ஒவ்வொன்றிலும் ரூ.48.50 என்று விலை போடப்பட்டிருந்தன.

அன்று பணிஓய்வு பெறும் அவரை சந்திக்க நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பல்வேறு துறைகளிலிருந்தும்,தொழிற்சங்கங்களிலிருந்தும் வந்து அவருக்குப் பொன்னாடை போர்த்தி, பொற்கிழிகள், நினைவுப்பொருட்கள் என்று கொடுத்தபடி இருந்தனர். மாலைகள் மலை போலக்குவியத் தொடங்கின. 

பொடி போடும் பழக்கமுள்ள தன் நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும் ஒரு புதுப் பொடி டின் வீதம், தன் நினைவுப்பரிசாக அளித்து வந்தார் வ.வ.ஸ்ரீ.   அந்த டின்கள் உள்ளே முழுவதுமாக மூக்குப்பொடி அடைக்கப்பட்டிருந்தது கண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டு, ஆனந்தக்கண்ணீருடன் வ.வ.ஸ்ரீ. யுடன் கைகுலுக்கி, கட்டிப்பிடித்து போட்டோ எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர்.

ஆபீஸ் விட்டதும் அவரை வீடு வரை கொண்டு சேர்க்க நண்பர்கள் பலரும் பல கார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.ஒரு 25 கார்களுக்கு மேல் வரிசையாக பவனி வந்து ஒன்றன்பின் ஒன்றாக நின்றன.  




இவற்றையெல்லாம் வாழ்க்கையில் முதன் முதலாகப்பார்த்த எனக்கும் உற்சாகம் ஏற்பட்டது.   அவர் பயணம் செய்யப்போகும் விசேஷமான காரில் அவருடைய மாலைகள், பரிசுப் பொருட்கள் முதலியவற்றுடன் நானும் தொத்திக்கொண்டேன்.

எங்களின் மிகப்பெரிய நிறுவனத்தின் ஷிப்ட் முடிந்ததற்கான சங்கு அப்போது ஒலிக்க ஆரம்பித்தது.   கழுத்தில் ஆளுயர மாலையுடன் வ.வ.ஸ்ரீ. அவர்கள் காரில் ஏறி அமர்ந்து விட்டார்.  கார் கதவு மட்டும் இன்னும் மூடப்படவில்லை. பத்தாயிரம் வாலா பட்டாஸுச்சரம் ஒன்று கொளுத்தப்பட்டது.   வெடிகள் வெடித்து ஒருவழியாக ஓய்ந்தன. வ.வ.ஸ்ரீ அமர்ந்திருந்த காரைச்சுற்றி ஒரே கூட்டம்.  பிரியாவிடை கொடுக்க அலுவலகத் தோழர்களும், தோழிகளுமாக கூடியிருந்தனர். 

வ.வ.ஸ்ரீ. தன் பொடி டின்னை எடுத்து இடதுகை விரல்நுனியில் வைத்து, வலது கை ஆட்காட்டிவிரலால் இரண்டு தட்டுதட்டிவிட்டு, பிறகு மெதுவாக அதைத் திறந்து, காரின் ஒரு ஓர இருக்கையில் அமர்ந்தவாறே வெளிப்பக்கமாக நீட்டினார்.

பொடி போட்டுப்பழக்கம் உள்ளவர்கள், பழக்கம் இல்லாதவர்கள், ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடு ஏதுமின்றி அனைவரும் அதில் தங்கள் விரல்களை இட்டு, ஆளுக்கு ஒரு சிட்டிகை வீதம் பொடியை எடுத்தனர். 

இதுவரை நமக்கு நம் அலுவலக வாழ்க்கையில் அலுப்புத்தட்டாமல் ஒருவித கலகலப்பை ஏற்படுத்தி வந்த வ.வ.ஸ்ரீ. என்ற பெரியவர் கொடுத்த பிரஸாதமாகவே அதை நினைத்து தங்கள் மூக்கினில் வைத்து, சர்ரென்ற ஒலியுடன், ஒரே நேரத்தில், ஒற்றுமையாகவும் ஒரே இழுப்பாகவும் இழுத்தனர்.  

அவர்களின் ஒட்டுமொத்த தும்மல் சப்தம் விண்ணை முட்ட, அதுவே நல்ல சகுனம் என்று நினைத்த வ.வ.ஸ்ரீ. கார் கதவையும், தன் கையிலிருந்த பொடி டின்னையும் மூடியவாறு எழுச்சியுடன் புறப்படச் சொன்னார்.

25 கார்களும் வ.வ.ஸ்ரீ. யின் வீடு நோக்கி, மெதுவாக பயணிக்க ஆரம்பித்தன.  அந்தக் காட்சியைக் காண மிகவும் அருமையாகவே இருந்தது, எனக்கு.   

வ.வ.ஸ்ரீ. அவர்கள், அவர் அருகிலேயே அமர்ந்திருந்த என்னை அன்புடன் ஒரு பார்வை பார்த்து புன்னகை புரிந்து விட்டு, ஏதோ ஒரு அன்புப்பரவசத்தால் என்னை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டார். 

எனக்கு உடனே அந்தப் பூங்கா ஞாபகம் வந்து விட்டது.    





”வெற்றி, வெற்றி, வெற்றி ........ நானே 

முதலமைச்சர், நீயே நிதியமைச்சர். 

கோட்டையை நோக்கி நாம் ஆட்சியமைக்கச் 

சென்று கொண்டிருக்கிறோம்” என்று 

மூ.பொ.போ.மு.க, தலைவர் வ.வ.ஸ்ரீ. அவர்கள் 

என்னிடம் சொல்லுவது போன்ற பிரமை 

ஏற்பட்டது எனக்குள். 

 

oooooOooooo





 ”VGK-11 நாவினால் சுட்ட வடு” 



 

  


 




”VGK-11 நாவினால் சுட்ட வடு”

என்ற சிறுகதைக்கு பலரும் 
மிக அழகாக விமர்சனம்
எழுதி அனுப்பி சிறப்பித்திருந்தார்கள்.

அவர்கள் அனைவருக்கும் 
என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.




நாளை சனி, ஞாயிறு, திங்களுக்குள்

போட்டிக்கான பரிசு அறிவிப்புகள்

முற்றிலுமாக வெளியிடப்படும்.


 காணத்தவறாதீர்கள்  ! 







oooooOooooo


இந்த சிறுகதை விமர்சனப் போட்டிகளில்

அனைவரும் உற்சாகத்துடன் தொடர்ந்து

கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  


என்றும் அன்புடன் தங்கள்

வை.கோபாலகிருஷ்ணன்




oooooOooooo
  




   

45 கருத்துகள்:

  1. வெகு பிரமாதம். பொடி விஷயமா இது. வாசனை இங்கேயே வந்துவிட்டது. சர்வ விஷயங்களையிம் அலசி இருக்கிறீர்கள். இதுவரை இதை போல சுவையான பொடிக்கதை படித்ததில்லை. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. மிகச்சரியாக தேர்தல் நேரத்தில் உலாவரும்
    மிகவும் விறுவிறுப்பான அருமையான நகைச்சுவை
    கதைக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  3. ஏற்கெனவே படிச்சேன் இதை. இப்போ மறுபடியும் படிச்சேன். :))) நல்ல நகைச்சுவை.

    பதிலளிநீக்கு
  4. கமென்ட் போறச்சே எரர்! நல்ல வேளையா காப்பி, பண்ணி இருந்தேன். பேஸ்ட் பண்ணறேன். இதுவாவது போகணும். :)

    //ஏற்கெனவே படிச்சிருக்கேன் இதை. இப்போ மறுபடியும் படிச்சேன். :))) நல்ல நகைச்சுவை. //

    இதான் நான் கொடுத்த கமென்ட்.

    பதிலளிநீக்கு
  5. -மு- .பொ.போ.மு.க. உதயம் !!

    நெடில் -மூ- தானே வந்திருக்கவேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி April 11, 2014 at 5:26 PM

      வாங்கோ, வணக்கம்.

      //-மு- .பொ.போ.மு.க. உதயம் !!
      நெடில் -மூ- தானே வந்திருக்கவேண்டும்..//

      ஆம். மிக்க நன்றி, மேடம்.

      இப்போ அந்த எழுத்துப்பிழையைச் சரிசெய்து விட்டேன்.

      கதையைப் பலமுறை வாசித்து, ஆங்காங்கே பல திருத்தங்களை விடியவிடிய கண் விழித்துச் செய்தேன். இருப்பினும் தலைப்பினைச் சரி பார்க்கத்தவறி விட்டேன் போலிருக்கிறது.

      தலைப்பில் இருந்த [ ’மு - மூ’ ] தவறினை சுட்டிக்காட்டிய தங்கத்தலைவிக்கு என் அன்பான இனிய நன்றிகள்.

      நன்றியுடன் VGK

      நீக்கு
  6. நெடில் 'மூ' மாதிரியே,

    பொடி டின் (அல்லது பொடி டப்பா)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி April 11, 2014 at 8:46 PM

      வாங்கோ, ஸார், வணக்கம்.

      //நெடில் 'மூ' மாதிரியே,
      பொடி டின் (அல்லது பொடி டப்பா)//

      அந்தக்காலத்தில் யானை தந்தம், மாட்டுக்கொம்பு, தேக்கு மரங்கள் போன்றவற்றில் பொடி டப்பா [குட்டியூண்டு சூட்கேஸ் போல] செய்தார்கள். வெள்ளியிலும் பொடி டப்பாக்கள் உண்டு.

      பொதுவாக இப்போதெல்லாம் பெரும்பாலும் தகரம் தான் [அதிலும் சில துருப்பிடித்த தகரங்களாக இருக்கும். ] வெளியே கலர் கலராக பேப்பர் போட்டு சுற்றிக்கொடுத்து விடுவார்கள். அந்த வெளிப்புற கலர் பேக்கிங் ஷீட்டைப் பிரித்துப்பார்த்தால் மட்டுமே, உள்ளே உள்ள தகர டின் துருப்பிடித்திருப்பது தெரியவரும்.

      எவர் சில்வர் பொடிட்டின் என்றால் துருப்பிடிக்கும் வாய்ப்பு குறைவு. தகரமோ அல்லது எவர்சில்வரோ என்றால் அது பொடிட்டின். அதுவே மரத்தாலோ, தந்தத்தாலோ, மாட்டுக்கொம்பினாலோ செய்யப்பட்டிலிருந்தால் பொடி டப்பி அல்லது பொடி டப்பா என்று அழைக்கிறார்கள்.

      இந்தக்கதையில் பொடிட்டின் என்னும் வார்த்தை 14 இடங்களில் வருகின்றன. அவற்றையெல்லாம் பொடி டப்பா ஆக்கினால் பொடி கீழே சிந்தி சிதறி காரம் மணம் குணம் குறைந்து வழுவட்டையாகி, நமக்கும் தும்மலை வரவழைக்குமோ என அஞ்சுவதால், அப்படியே இருக்கட்டும் என விட்டுவிட்டேன். - VGK ;)

      நீக்கு
  7. 'பொடிட்டின்'-- என்பதில் 'ட்'டை மட்டும் நீக்கி 'பொடி'க்கும் 'டின்'க்கும் இடையே இடைவெளி விட்டு விட்டால் OK; வாசிப்பவர்களுக்கு சுலபமாகப் புரியலாம் என்பதற்காக சொன்னேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி April 12, 2014 at 8:03 AM

      //'பொடிட்டின்'-- என்பதில் 'ட்'டை மட்டும் நீக்கி 'பொடி'க்கும் 'டின்'க்கும் இடையே இடைவெளி விட்டு விட்டால் OK; வாசிப்பவர்களுக்கு சுலபமாகப் புரியலாம் என்பதற்காக சொன்னேன்.//

      தங்களின் ஆலோசனைப்படி ‘பொடிட்டின்’ என்று எங்கெல்லாம் வந்ததோ அங்கெல்லாம் ‘ட்’ என்ற எழுத்தினை நீக்கிவிட்டு இடைவெளி கொடுத்து விட்டேன்.

      இருப்பினும் எனக்கு அதன் நெடி தாங்காமல் 14*2=28 தும்மல்கள் தும்மினேன்.

      வ.வ.ஸ்ரீ சொல்வதுபோல அதுவும் நல்ல சகுனமே ! ;)

      நீக்கு
  8. இப்-பொடி-யான ஒரு நகைச்சுவைக் கதையை இதுவரை படித்ததில்லை..
    சிரித்து... சிரித்து... படித்தேன்.
    மனம் ரொம்ப மகிழ்ச்சியாகிவிட்டது!!!

    பதிலளிநீக்கு
  9. மிகச் சிறிய (பொடி )விஷயமானாலும்
    எழுத்தாளர் எப்படி அது குறித்து
    மிக மிக நுணுக்கமான விஷயங்கள் குறித்து
    அறிந்திருந்தால்தான் படைப்பு சுவாரஸ்யப்படும் என்பதற்கு
    இந்தச் சிறுகதை அருமையான உதாரணம்
    மீண்டும் படித்து மகிழ்ந்தேன்

    தங்களுக்கும் தங்கள் குடுமப்த்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. மிகச் சிறிய (பொடி )விஷயமானாலும்
    எழுத்தாளர் எப்படி அது குறித்து
    மிக மிக நுணுக்கமான விஷயங்கள் குறித்து
    அறிந்திருந்தால்தான் படைப்பு சுவாரஸ்யப்படும் என்பதற்கு
    இந்தச் சிறுகதை அருமையான உதாரணம்
    மீண்டும் படித்து மகிழ்ந்தேன்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. இந்தக் கதையை நான் ரொம்ப ரசிச்சி, சிரிச்சி, வாசித்து மகிழ்ந்தேன். சூழ்நிலை காரணமாக இக்கதையின் விமர்சனப் போட்டியில் கலந்து கொள்ள இயலவில்லை; மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  12. 'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'

    இந்த சிறுகதைக்கு பெரியவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று [22.12.2014] அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு இதோ:
    http://swamysmusings.blogspot.com/2014/12/vgk-13.html

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    நடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட அதனைத் தன் பதிவினில் வெளியிட்டு சிறப்பித்துள்ள முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு [VGK]

    ooooooooooooooooooooooooooo

    பதிலளிநீக்கு


  13. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
    நல்வணக்கம்!

    திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
    (வலைச்சரத்தில் இரண்டாம் நாள் - வாய் விட்டுச் சிரித்தால்!)
    இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_27.html.
    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள்
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
    வாழ்த்துக்களுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr
    "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
    ஜெய் ஹிந்த்!



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. yathavan nambiJanuary 27, 2015 at 2:12 AM

      அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
      நல்வணக்கம்!

      திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
      (வலைச்சரத்தில் இரண்டாம் நாள் - வாய் விட்டுச் சிரித்தால்!)
      இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_27.html.
      இன்றைய வலைச் சரத்தின்
      சிறப்புமிகு பதிவாளராக தாங்கள்
      வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
      வாழ்த்துக்களுடன்,
      புதுவை வேலு
      www.kuzhalinnisai.blogspot.fr
      "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
      ஜெய் ஹிந்த்!//

      தங்களின் தங்கமான தகவலுக்கு மிக்க நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  14. ஓசிப் பொடியால் கிடைக்கும் இன்பம் வேறெதிலும் இல்லை.

    பதிலளிநீக்கு
  15. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (18.07.2015) கிடைத்துள்ள ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

    -=-=-=-=-=-=-

    அகஸ்மாத்தாக படிக்கக் கிடைத்தது தங்களின் நகைச்சுவை சிறுகதை. தலைப்பே 'தலையை கிறு கிறு ன்னு சுத்த வைக்குதே' உள்ளே எந்த வெங்காய அரசியல் வெந்துண்டு இருக்கோ தெரியலையே..... படிக்கலையின்னா தலை வெடிச்சுடும் போல ஒரு அவசரத்தில், நகைச்சுவையைத் தேடி மூச்சு முட்ட படிக்க ஆரம்பித்தேன்.

    அரசியலில் எனக்கு ஈடுபாடு கிடையாது. இருப்பினும், நகைச்சுவை மட்டுமே தூண்டில் போட்டது. வ.வ.ஸ்ரீ யின் எழுச்சியான போக்கு பொடி வைத்துப் போக்குக் காட்டிக் கொண்டே வந்தது.

    அதென்ன, 'கொழுக்கட்டை' கதை சொல்லி.... ஒரேடியா வாரிட்டேள். பார்த்து பார்த்து.... ஆத்துலேர்ந்து பூரிக்கட்டையோட.... வந்து நிக்கப் போறாங்க.

    'பட்டணம் பொடி' கூட விளம்பரப் படுத்தி இருக்காது... அவ்ளோ நிறம்... மணம் .... தரம் ...... தூள்.. ! பொடி டப்பாக்குள்ளே (கதைக்குள்ளே) புதுசாய் சொக்குப்பொடி சேர்த்திருக்கேள்... ஒரு அரசியல் வாதி பொடி போட்டுக் கொண்டே பேசும் 'பாணி’யைக் கூட சரியாக கதைக்குள்ளே ’போணி’ பண்ணியிருக்கேள் .

    மொத்தத்தில், ஒரு சின்னக் காலிட்டின் உள்ளே, கார சாரமாய், ஆபீஸ் அரசியல், வீட்டு அரசியல், துபாயும் அதன் பிரம்மாண்டமும், பொடி போடும் மூக்குப் படுத்தும் பாட்டையும் கதை (???!!!) சொல்லி அடைத்து விட்டு... படித்து முடித்ததும், வழுவட்டைக் 'கருவை' கம கமன்னு (!) 'பொடி டின்' முத்திரை பதித்து வெற்றி அடைந்து விட்டீர்கள்.

    முன்பே அறிந்திருந்தால், கதை விமரிசனப் போட்டியிலும் கலந்து கொண்டு இன்னும் கூடவே 'எழுச்சியான' விமரிசனத்தைத் தந்திருக்கலாம். என்று எண்ணுகிறேன்.

    இணையத்திலேயே... தன் கதைக்கு விமரிசனப் போட்டி வைத்த ஒருவர் என்னும் பெருமை உங்களையே சாருமோ? இது வரை நான் அப்படி ஒரு போட்டியையும் பார்க்கவில்லை. அதனால் எழுகிறது சந்தேகம். நல்ல ஆரம்பம் நல்லதொரு முடிவு.... கதை எழுச்சியானது.

    -=-=-=-=-=-=-

    இப்படிக்கு,
    தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை

    பதிலளிநீக்கு
  16. பொடி விஷயங்கள் நல்ல நகைச்சுவை விருந்துதான் படிக்கும் போதே பக்கத்ல யாரோ உக்காந்துண்டு பொடி போட்டு கையை உதறிட்டா போல இருக்கு ஒரே அடுக்கு தும்மல்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் August 26, 2015 at 10:04 AM

      வாங்கோ பூந்தளிர், வணக்கம்.

      //பொடி விஷயங்கள் நல்ல நகைச்சுவை விருந்துதான் படிக்கும் போதே பக்கத்ல யாரோ உக்காந்துண்டு பொடி போட்டு கையை உதறிட்டா போல இருக்கு ஒரே அடுக்கு தும்மல்தான்.//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      பாராட்டுகள் அருமை. மிக்க நன்றி !!

      நீக்கு
  17. பொடி வெக்காம பொடி போடும் விஷயங்கள் அருமை. கொஞ்சம் இருங்கோ. மூக்கில பொடி ஏற்றா மாதிரி இருக்கு. ஹச், ஹச், ஹச். அப்பாடா!

    பரிசு பெறப்போகும் விமர்சகர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 28, 2015 at 6:47 PM

      //பொடி வெக்காம பொடி போடும் விஷயங்கள் அருமை. கொஞ்சம் இருங்கோ. மூக்கில பொடி ஏற்றா மாதிரி இருக்கு. ஹச், ஹச், ஹச். அப்பாடா!

      பரிசு பெறப்போகும் விமர்சகர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      தங்களின் அன்பான வருகைக்கும் ஹச், ஹச் என்ற தும்மலுடன் கூடிய அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  18. பொடிய வச்சு கூட சூப்பரா சிரிப்பாணி கத சொல்லினிங்க. கொளுக்கட்ட பக்குவமும் சொல்லிபோட்டு பொஞ்சாதிகளயும் கம்பேர் பண்ணி வம்பிளுக்குறீங்களே.

    பதிலளிநீக்கு
  19. மூக்குபொடி நெட் இங்கவரை அடிக்கிறது. நல்ல நகைச்சுவை. புதுபொண்டாட்டி முதலில் பூவாசம் ஸெண்ட்வாசமா இருந்தாங்களா நாளாக நாளாக சாம்பார்பொடி மசாலா வாசனை மறக்க பொடி போடும் ஆசை வந்ததா. ஏதோ ஒரு காரணம் சொல்லணுமே. கொழுக்கட்டைலாம் கோச்சிக்கபோறது.

    பதிலளிநீக்கு
  20. இழுக்க இழுக்க இன்பம்...சுவாரசியமான நகைச்சுவைக்கதை...எப்ப படிச்சாலும்...ஹச்..ஹச்..

    பதிலளிநீக்கு
  21. பேட்டியெடுக்கும் விதமாக இவர் கேட்கும் கேள்விகள் சிரிப்புடன் கூடிய சமுதாயச் சீர்திருத்தத்திற்கான சிந்தனைகள். ஏதோ ஒரு பழக்கத்திற்கு அடிமையானவர்களால் அவ்வளவு விரைவில் அதிலிருந்து வெளிவந்து விட முடியாது. அதை அவர்கள் ஏதோ ஒரு காரணம் கூறி ஞாயப்படுத்தவும் செய்வார்கள். பெரியவர்களிடம் காணப்படும் பழக்கங்கள், பிஞ்சு நெஞ்சங்களில் ஆழமாய்ப் பதிந்துவிடும். ஆதலால் பெற்றொர்களும், பெரியோர்களும் நற்பழக்கங்களைக் கடைபிடிப்பது அடுத்த தலைமுறை வளம்பெற அவசியம் எனும் கருத்தை வலியுறுத்தும் விதமாகக் காட்சிகளும் கேள்விகளும் அமைக்கப்பட்டுள்ள விதம் பாராட்டுக்குரியது.

    இனி பொடிபோடும் நபர்களைப் பார்க்கும்போதும், தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளிவிட்டு வலம் வரும் வேட்பாளர்களைப்பார்க்கும் போதும் ஒருகணம் எழுச்சியான வ.வ. ஸ்ரீ நம்கண்மு நிற்பார் என்பதில் ஐயமில்லை.



    இக்கதையைப் படிப்பவர்களின் உள்ளத்தில் ஒரு தாக்கத்தையும், விழிப்புணர்வையும், தன் நகைச்சுவை உணர்வால் சிரிப்பலைகளையும் ஏற்படுத்திய கதாசிரியர் நம் அனைவரின் உள்ளம் கவர்ந்த கள்வனாகி விடுகிறார். அவருக்கு என் எழுச்சியான பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. My Dear Mr. Seshadri Sir,

      வாங்கோ, வணக்கம்.

      கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  22. பொடி விஷயம்!ஒரு நகைச்சுவைக் கருவாய்!!
    வழுவட்டை ,எழுச்சி தெரிந்து கொண்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னை பித்தன் January 21, 2016 at 8:34 PM

      வாங்கோ, வணக்கம் சார்.

      //பொடி விஷயம்! ஒரு நகைச்சுவைக் கருவாய்!!
      வழுவட்டை ,எழுச்சி தெரிந்து கொண்டேன்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சார்.

      அன்புடன் VGK

      நீக்கு
  23. முதல்ல 5-- வது பகுதி மட்டுமே படிச்சேன்... ஆனாலும் புது பெண்டாட்டிய இந்தளவுக்கு மட்டம்தட்டி வாரியிக்க கூடாது... அப்புறம்.. எல்லா பகுதியுமே படிச்சு பொடி நெடி தாங்காம தும்மல் சிரிப்புனு போகுது...... என்ன நக்கல்... என்ன நகைச்சுவை.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ராப்தம் 05.08.2016

      //முதல்ல 5-- வது பகுதி மட்டுமே படிச்சேன்... ஆனாலும் புது பெண்டாட்டிய இந்தளவுக்கு மட்டம்தட்டி வாரியிக்க கூடாது... அப்புறம்.. எல்லா பகுதியுமே படிச்சு பொடி நெடி தாங்காம தும்மல் சிரிப்புனு போகுது...... என்ன நக்கல்... என்ன நகைச்சுவை...//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். :)))))))))))))))))))))

      என்றும் அன்புடன் கோபால்ஜி

      நீக்கு
  24. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், எட்டு பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்:

    64 + 66 + 56 + 72 + 59 + 63 + 80 + 79 = 539

    அதற்கான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_11.html

    http://gopu1949.blogspot.in/2011/03/2.html

    http://gopu1949.blogspot.in/2011/03/3.html

    http://gopu1949.blogspot.in/2011/03/4.html

    http://gopu1949.blogspot.in/2011/03/5_18.html

    http://gopu1949.blogspot.in/2011/03/6.html

    http://gopu1949.blogspot.in/2011/03/7.html

    http://gopu1949.blogspot.in/2011/03/8.html

    பதிலளிநீக்கு
  25. பொடிக் கதையைப் பெரிய கதையாகச் சொல்லியிருக்கிறீர்கள். மொத்தமாகப் படிக்கும்போது அனுகூலம் காத்திராமல் படித்துவிடமுடியும். பிரதிகூலம், சில பகுதிகள் கதையை முடிந்தபின்னும் நீட்டுவதற்காக வந்துள்ளது தெரிந்துவிடும். இதில் மூன்று பகுதிகள் இருக்கின்றன. நகைச்சுவையினால் கதை தொய்வில்லாமல் செல்கிறது.

    மூக்குப்பொடின்னாலே எனக்குக் கொஞ்சம் அலர்ஜி. அவர்கள், தானும் கெட்டதுமில்லாமல், சுத்தியிருக்கற ஆசாமிகளின் மூக்கையும் பதம் பார்த்துவிடுவார்கள். அவர்களிடம் பேசும்போது, பேச்சைவிட, எப்போதுடா இந்த ஆசாமி தும்மல் போட்டு நம்ம சட்டையைக் காலி பண்ணிவிடுவாரோ என்ற பயத்திலேயே இருக்கவேண்டும்.

    நடனம் படத்தை நீங்கள் வரைந்தது ரசிக்கமுடிந்தது. படம், மூக்குப்பொடி போடும் (மற்றவர்களைப் பற்றி அக்கறையில்லாமல் 'நாசூக்குக் குறைவாகத் தும்மும்) ஆசாமியை அப்படியே நினைவுபடுத்திவிட்டது.

    அதே வ.வ.ஸ்ரீ, துபாய் பயணத்தை விவரிக்கும்போது, வ.வ.ஸ்ரீ வேடத்தில் கோபு சார்தான் பொடிமட்டை மாஸ்டரா என்று சந்தேகிக்க வைத்துவிட்டீர்கள். (எந்தப் பதிவர் சந்திப்பிலும் யாரும் இதைப் பற்றி எழுதாததால் என் சந்தேகத்திலிருந்து தப்பிவிட்டீர்கள்) அதுக்கு ஏத்தபடிதான் உங்கள் துபாய் பயண விவரிப்பு இருந்தது. Flight படமும், உபசரிப்புப் பெண்ணின் படமும் ஒட்டவில்லை என்று சொல்லித்தான் ஆகணும். (அதுக்காக நீங்கள் பிரயாணம் செய்யும்போது அவங்க போட்டோவை எடுத்திருக்கலாமே என்று சொல்லி உங்களுக்கு வம்பு வரவைக்க இஷ்டமில்லை)

    "அடுத்தடுத்து ஐந்தாறு பிள்ளைகுட்டிகள் பிறந்து, குடும்பத்தில் எவ்வளவோ பிரச்சனைகள், மனக்கசப்புக்கள், மனைவியின் விதண்டாவாதப்பேச்சுக்கள்" மற்றும் அதைத் தொடர்ந்த பல வருணனைகள், (உதாரணம், புதுக்கொழுக்கட்டை போன்ற, இந்தப் புதுப்பொண்டாட்டி, நாளடைவில் இந்த ‘ஊசிப்போன கொழுக்கட்டை) - படிக்க நகைச்சுவையாக இருந்தது. வீட்டுல உள்ளவர்கள் படித்தால், அவர்கள் காதில் புகை வருவதும், அடுத்தவேளை சோத்துக்குத் தடை வருவதும் நிச்சயம். யாரு இதை உங்கள் வீட்டில் கொளுத்திப்போடப்போகிறார்களோ (ஏற்கனவே செய்யாவிட்டால்)

    திதிப்புக் கொழுக்கட்டையை நன்றாக சிலாகித்து எழுதியிருக்கிறீர்கள். நானும், கொஞ்சம் திதிப்புக் கொழுக்கட்டை பண்ணிவிட்டு, பூரணத்தைத் தனியாக ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். அது 2 வாரம் ஆனாலும் நல்லா அவ்வப்போது சாப்பிடலாம்.

    ஆமாம்... வெறும் திதிப்புக் கொழக்கட்டையை எப்படிச் சாப்பிடுவது? அவ்வப்போது உப்புக் கொழக்கட்டையையும் வாயில் போட்டுக்கொண்டால்தானே நிறைய தி.கொழுக்கட்டை உள்ளே இறங்கும்.

    கதை நல்லா இருந்தது. பசி நேரம், கொஞ்சம் கடுப்பா இருக்கற நேரம், இவையெல்லாம் பொருத்து கதையின் ஓட்டமும் மாறுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நெல்லைத் தமிழன் November 7, 2016 at 1:06 PM

      வாங்கோ, ஸார். வணக்கம்.

      //பொடிக் கதையைப் பெரிய கதையாகச் சொல்லியிருக்கிறீர்கள். மொத்தமாகப் படிக்கும்போது அனுகூலம் காத்திராமல் படித்துவிடமுடியும். பிரதிகூலம், சில பகுதிகள் கதையை முடிந்தபின்னும் நீட்டுவதற்காக வந்துள்ளது தெரிந்துவிடும். இதில் மூன்று பகுதிகள் இருக்கின்றன. நகைச்சுவையினால் கதை தொய்வில்லாமல் செல்கிறது.//

      அனுகூல, பிரதிகூலங்களை மிகச்சரியாகவே ஆராய்ந்து சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

      //மூக்குப்பொடின்னாலே எனக்குக் கொஞ்சம் அலர்ஜி. அவர்கள், தானும் கெட்டதுமில்லாமல், சுத்தியிருக்கற ஆசாமிகளின் மூக்கையும் பதம் பார்த்துவிடுவார்கள். அவர்களிடம் பேசும்போது, பேச்சைவிட, எப்போதுடா இந்த ஆசாமி தும்மல் போட்டு நம்ம சட்டையைக் காலி பண்ணிவிடுவாரோ என்ற பயத்திலேயே இருக்கவேண்டும்.//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! கரெக்டூஊஊஊஊஊ.

      //நடனம் படத்தை நீங்கள் வரைந்தது ரசிக்கமுடிந்தது. படம், மூக்குப்பொடி போடும் (மற்றவர்களைப் பற்றி அக்கறையில்லாமல் 'நாசூக்குக் குறைவாகத் தும்மும்) ஆசாமியை அப்படியே நினைவுபடுத்திவிட்டது.//

      ஏதோ ஒரு இதழில் வெளியான இதனை என்றைக்கோ வரைந்து என் ஸ்டாக்கில் வைத்திருந்தேன். இங்கு வ.வ.ஸ்ரீ. க்கு பொருத்தமாக இருக்கக்கூடும் என நினைத்து, பயன் படுத்திக்கொண்டேன். அதனை வரைந்தவர் பெயர் ‘நடனம்’ என்பதா? தங்கள் மூலம் அறிந்துகொண்டதில் சந்தோஷம்.

      >>>>>

      நீக்கு
    2. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (2)

      //அதே வ.வ.ஸ்ரீ, துபாய் பயணத்தை விவரிக்கும்போது, வ.வ.ஸ்ரீ வேடத்தில் கோபு சார்தான் பொடிமட்டை மாஸ்டரா என்று சந்தேகிக்க வைத்துவிட்டீர்கள். (எந்தப் பதிவர் சந்திப்பிலும் யாரும் இதைப் பற்றி எழுதாததால் என் சந்தேகத்திலிருந்து தப்பிவிட்டீர்கள்) அதுக்கு ஏத்தபடிதான் உங்கள் துபாய் பயண விவரிப்பு இருந்தது.//

      உங்களுக்கு ஏற்பட்டுள்ள இது மிகவும் நியாயமான சந்தேகம்தான். :)

      கதையுடனும் கதாபாத்திரத்துடனும் வாசகர்கள் ஒன்றிப்போகணும் என்பதால், நானும் என்னைக் கஷ்டப்படுத்திக்கொண்டு ‘களவும் கற்று மற’ என்பதுபோல, பொடியின் நெடியையும், சுகத்தையும் அனுபவித்திருப்பேனோ என்னவோ என்ற உங்களின் சந்தேகத்தில் ஓர் நியாயம் உள்ளது.

      //Flight படமும், உபசரிப்புப் பெண்ணின் படமும் ஒட்டவில்லை என்று சொல்லித்தான் ஆகணும். (அதுக்காக நீங்கள் பிரயாணம் செய்யும்போது அவங்க போட்டோவை எடுத்திருக்கலாமே என்று சொல்லி உங்களுக்கு வம்பு வரவைக்க இஷ்டமில்லை)//

      அது எப்படி ஒட்டும்? வ.வ.ஸ்ரீ.யுடன் ஒட்டி வந்தவள் இவளாக இருக்க முடியாது. இவளை எங்கோ நான் பிடித்து இங்கு இழுத்து வந்து மிகவும் கஷ்டப்பட்டு ஒட்டியுள்ளேனாக்கும். :)

      >>>>>

      நீக்கு
    3. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (3)

      //"அடுத்தடுத்து ஐந்தாறு பிள்ளைகுட்டிகள் பிறந்து, குடும்பத்தில் எவ்வளவோ பிரச்சனைகள், மனக்கசப்புக்கள், மனைவியின் விதண்டா வாதப்பேச்சுக்கள்" மற்றும் அதைத் தொடர்ந்த பல வருணனைகள், (உதாரணம், புதுக்கொழுக்கட்டை போன்ற, இந்தப் புதுப்பொண்டாட்டி, நாளடைவில் இந்த ‘ஊசிப்போன கொழுக்கட்டை) - படிக்க நகைச்சுவையாக இருந்தது. வீட்டுல உள்ளவர்கள் படித்தால், அவர்கள் காதில் புகை வருவதும், அடுத்தவேளை சோத்துக்குத் தடை வருவதும் நிச்சயம். யாரு இதை உங்கள் வீட்டில் கொளுத்திப்போடப்போகிறார்களோ (ஏற்கனவே செய்யாவிட்டால்)//

      நான் தடை ஏதும் செய்யாது இருப்பினும் என் மேலிடம் என் பதிவுகள் எதையும் வாசிப்பது இல்லை. நானாகவே ஓர் ஆர்வக்கோளாறினால் சிலவற்றை, சில சமயங்களில், வேறு வழியில்லாமல் பகிர்ந்துகொள்வது உண்டு. அதையும் இந்தக் காதில் வாங்கிக்கொண்டு அந்தக்காதில் விட்டுவிடக்கூடிய, நல்ல சுபாவங்களும், ஞாபக மறதி என்ற வரமும் வாய்க்கப் பட்டவங்க.

      இந்நேரம் இதனை யாரேனும் கொளுத்திப் போட்டும் இருக்கலாம். கொளுத்திப்போடப்பட்ட வெடிகள் எல்லாமே எப்போதுமே வெடித்துவிடும் எனச் சொல்ல முடியாது அல்லவா! அதனால் தப்பித்திருப்பேன்.

      >>>>>

      நீக்கு
    4. கோபு >>>>> நெல்லைத் தமிழன் (4)

      //திதிப்புக் கொழுக்கட்டையை நன்றாக சிலாகித்து எழுதியிருக்கிறீர்கள். நானும், கொஞ்சம் திதிப்புக் கொழுக்கட்டை பண்ணிவிட்டு, பூரணத்தைத் தனியாக ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். அது 2 வாரம் ஆனாலும் நல்லா அவ்வப்போது சாப்பிடலாம். //

      வெரி குட்.

      //ஆமாம்... வெறும் திதிப்புக் கொழக்கட்டையை எப்படிச் சாப்பிடுவது? அவ்வப்போது உப்புக் கொழக்கட்டையையும் வாயில் போட்டுக்கொண்டால்தானே நிறைய தி.கொழுக்கட்டை உள்ளே இறங்கும்.//

      எனக்கென்னவோ அந்த மணிக்கொழுக்கட்டைகள் (சிறிய கோலிக்குண்டு போன்ற வெந்த மாவு உருண்டைகள்) சாப்பிடப் பிடிப்பது இல்லை. அதனுடன் உள்ள காரசாரமான உசிலியை மட்டும் வாங்கி விரும்பிச் சாப்பிடுவது உண்டு.

      //கதை நல்லா இருந்தது. பசி நேரம், கொஞ்சம் கடுப்பா இருக்கற நேரம், இவையெல்லாம் பொருத்து கதையின் ஓட்டமும் மாறுகிறது.//

      சந்தோஷம். கதாபாத்திரங்களும் சூழ்நிலைகளும், நான் சொல்ல விரும்பியுள்ள சுறுசுறுப்பான எழுச்சிமிக்க விஷயங்களும் அதுபோல கதையின் ஓட்டத்தை ஆங்காங்கே மாற்றியுள்ளன.

      தங்களின் அன்பான வருகைக்கும், நேர்மையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  26. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

    முதல் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13-01-03-first-prize-winners.html

    இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
    http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13-02-03-second-prize-winners.html

    மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
    http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13-03-03-third-prize-winner.html

    சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

    பதிலளிநீக்கு
  27. ஒரு பொடியை வைத்து இத்தனை தொடர்களா.. வியந்து போனேன்... இப்போ எனக்கும் மூக்குப் பொடி போட்டுத் தும்ம வேணும் போல வருகிறது...

    அந்தக் கொழுக்கட்டை கோதுமை மாவில் செய்ததோ? தோல் அவ்ளோ மென்மையாகவும் வழுவழுப்பாகவும் இருக்கு..

    முக்குப்பொடி ரின் ஏதோ லஞ் கரியர் போல இருக்கே:).

    தேடித் தேடிப் படிப்பதைக் காட்டிலும் ஒரே இடத்தில் படித்தது என் நேரத்தை மிச்சமாக்கிட்டுது:)..

    அருமையான தொடர்கள்.

    இனியும் எழுதுங்கோ .. நிறுத்திட வேண்டாம் எழுதுவதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. asha bhosle athira June 14, 2017 at 3:51 PM

      வாங்கோ அதிரா, வணக்கம். நினைத்தேன் வந்தாய்
      (போனதுபோக இன்னும்) நூறு வயது .....

      //ஒரு பொடியை வைத்து இத்தனை தொடர்களா.. வியந்து போனேன்...//

      தாங்கள் எழுச்சியுடன் இங்கு இப்போது ஓடி வந்ததைப் பார்த்து நானும் வியந்து போனேன். :)

      //இப்போ எனக்கும் மூக்குப் பொடி போட்டுத் தும்ம வேணும் போல வருகிறது...//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! அந்த நாசிகா சூர்ணம் என்பதை கணிசமாக எடுத்து சர்ர்ர்ர்ர்ரென உறுஞ்சிப் பாருங்கோ.

      //அந்தக் கொழுக்கட்டை கோதுமை மாவில் செய்ததோ? தோல் அவ்ளோ மென்மையாகவும் வழுவழுப்பாகவும் இருக்கு..//

      இல்லை பச்சரிசி மாவில் செய்தவை. செய்யும் எங்கட ஆட்கள் மென்மையானவர்கள் + வழுவழுப்பானவர்கள் + மேன்மையானவர்களாக்கும். :)))))

      //முக்குப்பொடி ரின் ஏதோ லஞ் கரியர் போல இருக்கே:).//

      அது குட்டியூண்டு டின் மட்டுமே. க்ளோஸ்-அப் பில்
      போட்டோ எடுத்ததால் அப்படி டிபன் கேரியர் போலத் தெரிகிறது.

      //தேடித் தேடிப் படிப்பதைக் காட்டிலும் ஒரே இடத்தில் படித்தது என் நேரத்தை மிச்சமாக்கிட்டுது:).. அருமையான தொடர்கள்.//

      மிக்க மகிழ்ச்சி ... அதிரா.

      //இனியும் எழுதுங்கோ .. நிறுத்திட வேண்டாம் எழுதுவதை.//

      எழுதத்தான் ஆசை எனக்கும். எழுத நிறைய எத்தனையோ மேட்டர்களும் கைவசத்திலும் என் கற்பனையிலும் உள்ளன.

      இருப்பினும் என்னவோ மனஸே சரியில்லை. ஏதோ சில அரிய பொக்கிஷங்களை பறிகொடுத்து விட்டது போல ஓர் ஃபீலிங் உள்ளது.

      எனினும் தாங்கள் தந்துவரும் இந்த உற்சாகம் கொடுக்கும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி அதிரா. பார்ப்போம்.

      நீக்கு
  28. WHATS-APP COMMENTS AT 15.49 Hrs.ON 21.05.2019 FROM Mrs. PADMA SURESH FOR MY STORY VGK-13

    👏👏👏👏👏👏
    Awesome comedy... I couldn't control my laughter when I was reading your (official) discussions... 😜 Enjoyed the whole story.... very interesting... throughout the story, there was a suspense about how you are going to combine it with politics and how it is going to end.... Well done. 👏👏👏👏

    Mrs. PADMA SURESH
    MDMT


    [MDMT = My Dear Maths Teacher]

    பதிலளிநீக்கு
  29. https://mail.google.com/mail/u/0/#inbox/FMfcgxwKkRLmLlGKgxkNPlLNdNVMFmpj?projector=1&messagePartId=0.1

    PUBLISHED AT PAGE NO. 198 OF MIN NILAA PONGAL MALAR 2021 (14.03.2021) BY ENGAL BLOG

    https://mail.google.com/mail/u/0/#inbox/FMfcgxwKkRLmLlGKgxkNPlLNdNVMFmpj?projector=1&messagePartId=0.1

    பதிலளிநீக்கு
  30. WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. MANIVANNAN SIR, 9750571234 ON 03.06.2021

    அருமையா நகைச்சுவை,நேரில் உட்கார்ந்து நடந்ததைப்பார்த்த உணர்வு, ஆண்களின் எண்ண ஓட்டம், பெண்களை ரசிக்கும் மனப்பாங்கு, ருசிக்க துடிக்கும் ஆவல் அனைத்தும் எதார்த்தம். இதுபோன்ற எண்ணமில்லை என்போர் வழுவட்டை தான். மூக்குபொடி போடுவோரை நானும் அறிவேன், பொடி இல்லை எனில் குடிமுழுகியது போன்று இடிந்து போய்விடுவர். நம்மை சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பதோடு வேறு கோணத்திலும் பார்க்குற பண்பு எழுத்தாளர்களின் சிறப்பு. நகைச்சுவை மனிதர்கள் எப்போதும் நல்லவர்களே.

    -=-=-=-=-

    THANKS A LOT FOR YOUR KIND READING & ALSO FOR OFFERING THIS VERY VALUABLE COMMENTS. - VGK 

    பதிலளிநீக்கு
  31. To Mr. Manivannan Sir,

    அந்தக்காலம்போல, கார, சார, மணம், குணம் கொண்ட, மூக்குப்பொடி மட்டும் பிரத்யேகமாக விற்கப்படும் கடைகளை இப்போது காணும். இதுவே ஒருவேளை இந்தக் கொடிய கொரானா பரவலுக்கு மூல காரணமாக இருக்கக்கூடும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். அரசாங்கம் இதனைப்பற்றி ஆராய்ச்சி செய்ய முற்பட்டால் நல்லது. கொரானா மரணங்களில் மாண்டவர்களைப்பற்றி ஆராய்ந்தால் போதும். அதில் எழுச்சியுடன் மூக்குப்பொடி போட்டவர்கள் எவருமே இருக்க வாய்ப்பு இல்லை என்ற பேருண்மை தெரிய வரும்.

    - VGK :)

    பதிலளிநீக்கு