About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, April 26, 2014

VGK 13 / 03 / 03 THIRD PRIZE WINNER - ’வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ., - புதிய கட்சி : மூ.பொ.போ.மு.க. உதயம் !’






’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 


VGK 13 - ” ’வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ., - 

புதிய கட்சி : மூ.பொ.போ.மு.க. உதயம் ! “


இணைப்பு:

மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 







நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து


















இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 






  


மற்றவர்களுக்கு: 







    

மூன்றாம் பரிசினை 


வென்றுள்ளவர் 





 திரு. ரவிஜி  


[ மாயவரத்தான் எம். ஜி. ஆர். ]


அவர்கள்




வலைத்தளம்

mayavarathanmgr.blogspot.com









  



மூன்றாம் பரிசினை வென்றுள்ள  


 திரு. ரவிஜி  



[ மாயவரத்தான் எம். ஜி. ஆர். ]



 அவர்களின் விமர்சனம் இதோ:




வழுவட்டை’ என்ற தலைப்பே இது ஒரு நகைச்சுவை கலந்த கதை என்ற எண்ணத்தை ஏற்படுத்தி வாசகனை உள்ளே ஈர்க்கிறது.  ஒரு சராசரி அலுவலகம் எப்படி இருக்கும் என்பதை கண்முன் நிறுதுவதைப் போல ஆரம்பக் காட்சி அமைப்பு இருக்கிறது. எழுச்சிக்கு எதிர்ப்பதமான வார்த்தைப் பிரயோகமே வழுவட்டை என்பது ஆரம்பத்திலேயே தெரியப் படுத்தப்படுகிறது.  ஆரம்பத்தில் வழுவட்டை சீனிவாசனே கதாநாயகனாக காட்டப்படுகிறார்.  வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு சுருட்டு, மகாத்மா காந்திக்கு கைத்தடி – மூக்குக் கண்ணாடி என்பதைப்போல் மூக்குப்பொடி டப்பா வ.வ. ஸ்ரீனிவாசனுக்கு அடையாளமாகக் காட்டப்படுகிறது.

மனிதன் பழக்கத்திற்கு அடிமை!  அந்த அடிமைப் பழக்கதிற்கு ஆளானவர்களெல்லாம் ஒரு வட்டமாக இருப்பது வழக்கமான ஒன்றுதான்.  அந்த வகையில் அனுபவித்துப் பொடி போடும் வ வ ஸ்ரீனிவாசனுக்கு ஒரு ‘பொடி’ வட்டம் இருப்பது நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது.  பணமாகக் கேட்டால் செலவு செய்ய தயங்குபவர்கள்கூட  கட்டிங் வாங்கித்தரவோ அல்லது சிகரெட் வாங்கித்தரவோ தயங்குவதில்லை அதனை செலவாகவும் நினைப்பதில்ல. அந்த வகையில் இங்கு மூக்குப்பொடி!  அதிலும்  தம்பி, நீ ஒரு பொடிப்பையன்.   பொடியைப்பற்றி உனக்குத்தெரிந்திருக்க நியாயம் இல்லை.   ஓஸியிலே பொடி வாங்கி நாசியிலே போட்டால் கிடைக்கும் இன்பமே இன்பம்;  அதெல்லாம் அனுபவிச்சவனுக்குத்தான் தெரியும்” என்ற வரிகள் வ வ ஸ்ரீ விடுப்பில் சென்றதும் ‘ஓசிப் பொடியர்’கள் படும்பாட்டினை நகைச்சுவையுடன் சித்தரிக்கிறது.

”இந்த தமிழ்நாடு எலெக்‌ஷன் முடியற வரைக்கும் எனக்கு ரெஸ்டே கிடையாது தம்பி.   அடிக்கடி லீவு போடுவேன்.  234 தொகுதிகளுக்கும் போய்ப் பலபேரை சந்திக்கணும். ஆற்றவேண்டிய கட்சிப்பணிகள் நிறையவே இருக்குப்பா”  என்ற வரிகள்    வ வ ஸ்ரீயின் பட்டாவையும் வெளிப்படுத்துகிறது. பொடி போடுபவர்களின் மேனரிஸம் கதையில் மிக அருமையாக சித்தரிக்கப் பட்டுள்ளது. 

அதனை  “இடது கை விரல் நுனியில் பொடிடப்பாவை வைத்துக்கொண்டு, வலதுகை ஆள்காட்டி விரலால் அதன் தலையில், மிருதங்க வித்வான் போல தட்டியவாறே, என்னை ஒரு விஷமப்பார்வை பார்த்து மீண்டும் பேசலானார்” என்ற வரிகளும்,   “இந்த மூக்குப்பொடி போடும் ஆசாமிகள் சற்று தள்ளி நின்று பொடி போட்டாலே நமக்குத்தும்மல் வந்துவிடும் போது, அவர்களால் எப்படிப் பொடியை கணிசமான அளவில் விரல்களால் எடுத்துக்கொண்டு, **வேட்டுக்குழாயில் கந்தகம் அடைப்பது போல**, மூக்கினுள் அடைத்து, சர்ரென்று ஒரே இழுப்பாக இழுத்து, தும்மாமல் இருக்க முடிகிறது என்று எனக்கு அடிக்கடி ஒரு சந்தேகம் வருவதுண்டு” என்ற வரிகளும் ரசித்துச்சிரிக்கும்படியாக சித்தரிக்கின்றன.

40 வருடங்களுக்கு மேலாக ஒரு அலுவலகத்தில் சூப்பரின்டென்டென்ட் ஆக இருந்துவரும் ஒருவருக்கு எப்படி ஒரு அலட்சியம், பயமற்ற, மேலதிகாரிகளை மதிக்காத போக்கு இருக்கும் என்று அருமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதனை
“ஏற்கனவே இங்கிருந்து டிரான்ஸ்பரில் போன மேனேஜர்பயல் V V என்றால் புதிதாக வந்துள்ள இவன் S V V யாக இருப்பான் போலிருக்கு” (V.V= வழுவட்டை;  S.V.V = சூப்பர் வழுவட்டை)”  என்ற வரிகளும், “புதிதாக டிரான்ஸ்ஃபர் ஆகி வந்துள்ள இந்த மேனேஜர்பயல் என் சின்னப்பையனை விட வயதில் ரொம்பவும் சின்னவன் தெரியுமோ; அவன் வயசைப்போல ஒண்ணரை மடங்கு இந்த நிறுவனத்தில் நான் சர்வீஸே போட்டாச்சு தெரியுமோ; இந்த ஆபீஸில் சீனியர் ஆபீஸ் சூப்பிரண்டெண்டான நான், என் 41  வருஷ சர்வீஸில் இவனைப்போல எவ்வளவு மேனேஜர்பயலுகளைப் பார்த்திருப்பேன் தெரியுமோ?” என்றார் வ.வ.ஸ்ரீ.” என்ற வரிகளும் மற்றும் ”அவன் கிடக்கிறான், நீ எதற்குமே கவலையே படாதே; அவனால் உனக்கு ஏதாவது பிரச்சனையென்றால் என்னிடம் வந்து சொல்லு.    RETIRE ஆக இன்னும் மூணு மாதங்களே உள்ளன எனக்கு.  அதற்குள், I will teach him a Lesson”  [நான் அவனுக்கொரு பாடம் கற்பிக்கிறேன்]   என்றார்” எனும் வரிகளும் கண்முன்பாக நிறுத்துகின்றன.

“தம்பி, பொடிட்டின் நிறைய பொடியை அடைத்தாலும் அந்தப்பொடிட்டின் தும்மல் போட்டுப் பார்த்திருக்கிறாயா நீ...”  என்றார். “ எனும் வரிகள் “A snuff box never sneezes” என்ற ஆங்கிலப் பழமொழியை நினைவுறுத்துகின்றன.

 பல இடங்களிலும் பொடிபோடுபவரின் மேனரிஸம் குறித்து எழுதப்பட்டிருக்கும் வரிகள் செவாலியே சிவாஜிகணேசன் அவர்களது கேரக்டர் ஸ்டடிசெய்து நடிக்கும் தன்மைக்கு கதாசிரியர் எந்த அளவிலும் குறைந்தவரில்லை என்பதனைத் தெளிவுபடுத்துகின்றது.(சிவாஜி கணேசன் அவர்கள் காஞ்சிப் பெரியவரின் நடை உடை பாவனைகளை அடியொற்றி திருவருட்செல்வர் படத்தில் நடித்திருப்பார் என்று கூறப்படுவதுண்டு.)
          
வ வ ஸ்ரீ அவர்களின் ஆண்டு அனுபவிக்கும் தன்மையை “இது எங்கப்பரம்பரை வழக்கமப்பா, நான் என்ன செய்வது?; எங்க தாத்தா (அப்பாவோட அப்பா) தவறிப்போகும் போது அவருக்கு வயது 108.  அவர் தன் 12 ஆவது வயதிலிருந்து பொடிபோடப் பழகியவர்ன்னு கேள்வி.  என் அப்பாவும் பொடி போடுவார்.   அவர் என் தாத்தாபோல செஞ்சுரி போடாவிட்டாலும் பொடி போட்டே 99 வயதுக்கு மேல் ஒரு மூணு மாதமும் வாழ்ந்தவர்” என்ற வரிகள் மூலமாக அறிய முடிகிறது.

          ஒரு திரைப்படத்தில் திரு. கவுண்டமணி அவர்கள் தன்னை நாடி வரும் நோயாளியை “பொடி, குடி, லேடி எதுவுமில்லாமல் நீயெல்லாம் எதுக்குடா நூறு வயசு வாழணும்?” என்று கலாய்ப்பது இங்கு ஞாபகம் வருகிறது.

அன்றைய அலுவலக நேரம் இத்துடன் முடிந்து விட்டதால்,  நாங்கள் ஆற்ற வேண்டிய அரும் பணியை இவ்விதமாகப் பேசிப்பேசியே (Group Discussions) கழித்து விட்ட நாங்களும் வீட்டுக்குப் புறப்பட ஆயத்தமானோம்.” என்ற வரிகள் மூலமாக அலுவலகங்களில் எவ்வாறு காலவிரயம் ஆகிறது என்பதனை நகைச்சுவைக்கு இடையேயும் கோடிட்டுக் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அப்பாக்களின் கெட்ட வழக்கங்களும் எப்படி பிள்ளைகளுக்கு ஒட்டிக் கொள்கிறது என்பதும், மக்களை அந்த பழக்கங்களுக்கு அடிமைப் படுத்த எவ்வாறு வியாபாரிகள் காரணமாக இருக்கின்றனர் என்பதனை “பொடி போடும் என் அப்பாவுக்கு நான் தான் அந்தக்காலத்தில் பொடி வாங்கி வருவேன்.  அவருக்கு திருச்சி மலைவாசலில் தேரடி பஜாரில் மேற்குப்பார்த்த முதல் கடையில் தான் ’டி.ஏ.எஸ்.  ரத்தினம் பட்டணம் பொடி’ வாங்கி வரணும். அங்கு எப்போதும் கமகமவென்று ஒரே பொடிமணமாக இருக்கும்.  என்ற வரிகளும், அதை விட வேடிக்கை என்னவென்றால், பொடிப்பயல்கள் முதல் பெரியவர்கள் வரை, நடுநடுவே ஓஸிப்பொட்டிக்கு கைவிரலை நீட்டுபவர்களுக்கெல்லாம், இலவசப்பொடி வழங்கப்பட்டு வந்ததே அந்தக்கடையின் தனிச்சிறப்பு” மற்றும்  அந்தக் காலத்தில் அதுபோல இலவசப்பொடியை நுகர ஆரம்பித்த நுகர்வோர்களில் 12 வயதே ஆன நானும் ஒருவன்” என்ற வரிகளும் அறியத்தருகின்றன.

எப்போதுமே சீட்டில் இருப்பவர் போல ஏதோ ஒரு ஃபைலை மேஜை மீது விரித்து வைத்து, அதன் மேல் ஒரு பேப்பர் வெயிட்டையும், மூக்குக்கண்ணாடியையும், மூக்குப்பொடி டப்பாவையும் வைத்து விட்டுச் சென்று விடுவார். பார்ப்பவர்களுக்கு அவர் இங்கு எங்கோ தான் பாத் ரூம் போய் இருப்பார் என்று நினைத்துக்கொள்ள, அது அவர் கையாளும் ஒரு டெக்னிக் என்பது, நான் மட்டுமே நாளடைவில் தெரிந்து கொண்டது. “ எனும் வரிகள் ஒரு அலுவலகத்தில் எப்படியெல்லாம் எஸ்கேப் ஆகிறார்கள் என்பதனை படம் போட்டுக்காட்டுவதாக அமைந்துள்ளது.

பொண்டாட்டி இல்லாமல்கூட இருக்கலாம் னால் பொடியில்லாது 
இருக்க முடியாது என்று பொடிக்கு அடிமையான நிலைமையை 
  ஸ்ரீ கூறியிருப்பதும் அதற்கு அவர் கூறும் காரணங்களும் 
குடிகாரன் குடிக்கான காரணத்தைக் கூறுவதுபோலத்தான் இருக்கிறது.

      ”CONGRATULATIONS”  

என்று தொடங்கி “In fact இப்போ என் சீட்டில் என்ன பெரிய வேலை நான் பார்த்து வருவதாக நீ பயப்படுகிறாய்.  சும்மா வருகிறவன் போகிறவனுடன் அரட்டை அடித்து வருகிறேன்.   இந்த கம்ப்யூட்டர் வந்த பிறகு எல்லா வேலைகளையும் உன்னைப்போல இளைஞர்கள் தானே பார்க்கிறீர்கள்!  நான் தான் இந்தக் கம்ப்யூட்டர் கன்றாவியெல்லாம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று ஒதிங்கி ஒரு எட்டு வருஷத்துக்கு மேல் இருக்குமே” என்றும் “இதெல்லாம் நானும் இந்த ஆபீஸில் ஏதோ வேலை செய்கிறேன் என்று ஒரு பாவ்லா காட்ட மட்டும் தான் வைத்திருக்கிறேன்”   என்று உள்ளதை உள்ளபடிச் சொல்லி, எனக்கு ஒரு உற்சாகம் அளித்தார்” என்றும் ரகசியத்தை கூறுவதுபோல் வேலையை முழுதும் உடனிருப்பவன் தலையிலேயே கட்டிவிட்டு தப்பித்துக்கொள்ளும் தன்மையை காணத்தருகிறார்.

          பொடியை நிறுத்த மருத்துவர் அறிவுறுத்தியும்கூட முடியாது திணறி மறுபடியும் போட அரம்பித்துவிடுகிறார். வெளிநாடு செல்லும்போதுகூட எப்படியாவது திருட்டுத்தனமாக எடுத்துச் சென்று பொடிபோடும் நிலைக்குத்தள்ளப்படுகிறார். “பொடிகூட விற்காத பொடலங்காய் ஷாப்பிங் “ என்று சாடுகிற நிலைக்குப் போய்விடுகிறார்.

“மூக்குப் பொடி போடுவோர் முன்னேற்றக் கழகம்”  ஆரம்பிக்கும் அளவுக்கு மனநிலை பாதித்துப்போய் மீண்டும் குணமடைகிறார். அப்பொழுதும்கூட தேர்தல் சின்னமாக பொடிடப்பாதான்! ஏனென்றால் அறிஞர் அண்ணா பொடிபோடும் பழக்கமுள்ளவர் என்பதோடு அவரின் அரசியல்வாரிசாக நினைத்தும் கொள்கிறார்.

தற்காலிக அட்டாக்கிலிருந்து வெளியாகி பணியில் சேர்ந்து ஓய்வும் பெறுகிறார். ஓய்வு பெறும் போதும் பொடி டப்பா, பொடி கொடுத்தே விடை பெறுகிறார்.

          அலுவலகத்தின் அவலமான நிகழ்வுகளை நகைச்சுவையோடு கலந்து கொட்டுவைத்திருப்பதனைப் பாராட்டலாம்.  பழக்கத்திற்கு அடிமையாகி கடைசியில் லேசான மனநோய் பாதிப்பிற்கும் உள்ளானதை கோடிட்டு எந்தப்பழக்கதிற்கும் அடிமைப்படவேணடாமென எல்லோரையும் அறிவுறுத்துகிறார். முன்னிலை, படர்க்கை அதிகம் பயன்படுத்தாது தன்மையிலேயெ பெரும்பாலான கதைப்பகுதியைக் கொண்டு சென்றிருப்பது நம்மைக் கதையுடன் ஒன்றவைத்துவிடுகிறது.  கூகிள் டிரான்ஸ்லேட்டர் மூலமாக தேடினால் வழுவட்டை என்பதற்கு ஆங்கிலத்தில் gliding joint என்று பொருள் தருகிறது. சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும் நெடுங்கதை!

          மொத்தத்தில் கார நெடி தூக்கலான காமெடி கதை!

 










மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.




    



   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.










இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.



காணத்தவறாதீர்கள் !




    






’போனஸ் பரிசு’ பற்றிய 

மகிழ்ச்சியானதோர் தகவல்.


’VGK-13 வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ. 

புதிய கட்சி மூ.பொ.போ.மு.க. உதயம் !’ 

என்ற இந்தக் குறிப்பிட்ட சிறுகதைக்கு 

 விமர்சனம் எழுதி 

அனுப்பியுள்ள 

ஒவ்வொருவருக்குமே 

மூன்றாம் பரிசுக்குச் சமமான தொகை என்னால் 

 ’போனஸ் பரிசாக ’

அளிக்கப்பட உள்ளது என்பதை 

பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏன்? எதற்கு? எப்படி? என யாரும் குறுக்குக்கேள்வி எதுவும் கேட்கக்கூடாது.  ஒருசில கதைகளையும், அவை உருவாகக் காரணமாக இருந்த சூழ்நிலைகளையும் நினைக்கையில் மனதில் அவ்வப்போது ஏற்படும் ஏதோவொரு [ எழுத்தில் எடுத்துரைக்க இயலாத ] சந்தோஷம் மட்டுமே இதற்குக் காரணமாகும். 

உயர்திரு நடுவர் அவர்களால் பரிசுக்கு இங்கு இப்போது தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவர்களுகும் இந்த போனஸ் பரிசு என்னால் உபரியாக அளிக்கப்படும் என்பதையும் மேலும் மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபோன்ற போனஸ் பரிசுகள் அவ்வப்போது மேலும் ஒருசில கதைகளுக்கு மட்டும் என்னால் அறிவிக்கப்பட உள்ளன. அவை எந்தெந்த கதைகள் என்பது மட்டும் இப்போதைக்கு ’சஸ்பென்ஸ்’.

அதனால் இந்த ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான அனைத்துக் கதைகளுக்கும், அனைவருமே, இப்போது போலவே மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள். அப்போதுதான் போனஸ் பரிசு கிடைக்கும் வாய்ப்புக்களும் தங்களுக்கு அவ்வப்போது அமையக்கூடும்.

    







அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



” அழைப்பு 





விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


01.05.2014  


இந்திய நேரம் 



இரவு 8 மணிக்குள்.















என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

28 comments:

  1. திரு ராவிஜி ரவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மூன்றாம் பரிசு பெற்றுள்ள திரு.ராவிஜி ரவி அவர்களுக்கு இனிய பாராட்டுகள்.

    ReplyDelete

  3. மூன்றாம் பரிசினை வென்றுள்ள
    திரு. ராவிஜி ரவி அவர்களுக்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
  4. இனிய நண்பர் திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. மூன்றாம் பரிசு பெற்ற திரு. ராவிஜி ரவி அவர்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது.
    அவ்ருக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. பரிசு பெற்ற திரு. ராவிஜி ரவி அவர்களுக்கு

    பாரட்டுக்கள் ! !

    ReplyDelete
  7. எனக்கு வாய்ப்பளித்த திரு VGK அவர்களுக்கும், தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்த மற்றும் தெரிவிக்க இருக்கும் அன்பு நென்சங்கள் அனைத்திற்கும் ரவிஜியின் மனமார்ந்த நன்றிகள்!!!

    ReplyDelete
  8. திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!...

    ReplyDelete
  9. http://mayavarathanmgr.blogspot.in/2014/04/vgk.html
    திரு. ராவிஜி ரவி [மாயவரத்தான் எம்.ஜி.ஆர்] அவர்கள்.

    இந்த வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  10. http://gopu1949.blogspot.in/2014/04/vgk-10-04-04-vgk-01-to-vgk-10.html

    மேற்படி பதிவின்படி VGK-01 TO VGK-10 வரை முதல் 10 போட்டிகளில் பரிசுக்குத் தேர்வானவர்களிடமிருந்தும், அதைத்தவிர போனஸ் பரிசுக்கு மட்டும் தேர்வானவர்களிடமிருந்தும், [பரிசுத்தொகையினை அனுப்பி வைக்க] வங்கிக்கணக்குத் தகவல்கள் அனுப்பி வைக்குமாறு மெயில் மூலம் கேட்டிருந்தேன்.

    வங்கித்தகவல்கள் மெயில் மூலம் 25.04.2014க்குள் அனுப்பி வைத்துள்ள அனைவருக்கும், பரிசுப் பணம் அவரவர்களின் வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பியாகிவிட்டது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பரிசுத்தொகை தங்களின் வங்கிக்கணக்குக்கு கிடைக்கப்பெற்றவர்கள் மெயில் மூலம் அதை உறுதிசெய்து எனக்கு தகவல் தெரிவித்தால் நல்லது.

    இதுவரை வங்கித்தகவலை மெயில் மூலம் அனுப்பி வைக்காதவர்கள் தயவுசெய்து 30.04.2014 க்குள் அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    பிரியமுள்ள கோபு [VGK]

    ReplyDelete
  11. திரு VGK அவர்களுக்கு வணக்கம்! தாங்கள் நடத்தும் சிறுகதை விமர்சனப் போட்டியில் மூன்றாம் பரிசினை வென்றுள்ள சகோதரர் ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள். மாயவரத்தான் எம். ஜி. ஆர் என்றழைக்கப்படும் ரவிஜி எனக்கு புதுமுகம்!

    ReplyDelete
  12. ரவிஜி என்பவரை இன்று தான் இந்தப் பதிவின் மூலம் அறிமுகம் செய்து கொண்டேன். ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள். இன்னும் இது போல் பலரும் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வேண்டும்.

    ReplyDelete
  13. மூன்றாம் பரிசு பெற்ற ரவிஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. திரு ரவிஜிக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. எனக்கு 'மாயவரத்தான்' என்ற பெயரில் வலைப்பூ நடத்தும் திரு. ரமேஷ்குமார் நண்பர்.
    http://www.mayavarathaan.blogspot.com/
    அட, ரவிஜியும்கூட maayavaraththaan mgr என்ற பெயரில் வலைப்பூ நடத்துகிறாரா? நல்லது, சென்று பார்க்கிறேன்.
    புதிய நண்பருக்கு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. மூன்றாம் பரிசு பெற்றுள்ள திரு.ராவிஜி ரவி அவர்களுக்கு இனிய பாராட்டுகள்.
    Vetha.Elanagthilakam.

    ReplyDelete
  17. அன்புடையீர்,

    வணக்கம்.

    மேலும் ஒரு மகிழ்ச்சியான தகவல்:

    இந்த VGK-13 'வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ., புதிய கட்சி மூ.பொ.போ.மு.க. உதயம் !’ என்ற கதைக்கு விமர்சனம் எழுதி அனுப்பியிருந்த அனைவருக்குமே போனஸ் பரிசு அளிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அதற்கான புதிய அறிவிப்பு இந்தப்பகுதியில் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்தக்குறிப்பிட்ட போட்டியில் கலந்து கொண்டுள்ள அனைவரின் தகவல்களுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  18. மூன்றாம் பரிசினை வென்ற திரு ரவிஜிக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  19. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (18.07.2015) கிடைத்துள்ள ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

    -=-=-=-=-=-=-

    அகஸ்மாத்தாக படிக்கக் கிடைத்தது தங்களின் நகைச்சுவை சிறுகதை. தலைப்பே 'தலையை கிறு கிறு ன்னு சுத்த வைக்குதே' உள்ளே எந்த வெங்காய அரசியல் வெந்துண்டு இருக்கோ தெரியலையே..... படிக்கலையின்னா தலை வெடிச்சுடும் போல ஒரு அவசரத்தில், நகைச்சுவையைத் தேடி மூச்சு முட்ட படிக்க ஆரம்பித்தேன்.

    அரசியலில் எனக்கு ஈடுபாடு கிடையாது. இருப்பினும், நகைச்சுவை மட்டுமே தூண்டில் போட்டது. வ.வ.ஸ்ரீ யின் எழுச்சியான போக்கு பொடி வைத்துப் போக்குக் காட்டிக் கொண்டே வந்தது.

    அதென்ன, 'கொழுக்கட்டை' கதை சொல்லி.... ஒரேடியா வாரிட்டேள். பார்த்து பார்த்து.... ஆத்துலேர்ந்து பூரிக்கட்டையோட.... வந்து நிக்கப் போறாங்க.

    'பட்டணம் பொடி' கூட விளம்பரப் படுத்தி இருக்காது... அவ்ளோ நிறம்... மணம் .... தரம் ...... தூள்.. ! பொடி டப்பாக்குள்ளே (கதைக்குள்ளே) புதுசாய் சொக்குப்பொடி சேர்த்திருக்கேள்... ஒரு அரசியல் வாதி பொடி போட்டுக் கொண்டே பேசும் 'பாணி’யைக் கூட சரியாக கதைக்குள்ளே ’போணி’ பண்ணியிருக்கேள் .

    மொத்தத்தில், ஒரு சின்னக் காலிட்டின் உள்ளே, கார சாரமாய், ஆபீஸ் அரசியல், வீட்டு அரசியல், துபாயும் அதன் பிரம்மாண்டமும், பொடி போடும் மூக்குப் படுத்தும் பாட்டையும் கதை (???!!!) சொல்லி அடைத்து விட்டு... படித்து முடித்ததும், வழுவட்டைக் 'கருவை' கம கமன்னு (!) 'பொடி டின்' முத்திரை பதித்து வெற்றி அடைந்து விட்டீர்கள்.

    முன்பே அறிந்திருந்தால், கதை விமரிசனப் போட்டியிலும் கலந்து கொண்டு இன்னும் கூடவே 'எழுச்சியான' விமரிசனத்தைத் தந்திருக்கலாம். என்று எண்ணுகிறேன்.

    இணையத்திலேயே... தன் கதைக்கு விமரிசனப் போட்டி வைத்த ஒருவர் என்னும் பெருமை உங்களையே சாருமோ? இது வரை நான் அப்படி ஒரு போட்டியையும் பார்க்கவில்லை. அதனால் எழுகிறது சந்தேகம். நல்ல ஆரம்பம் நல்லதொரு முடிவு.... கதை எழுச்சியானது.

    -=-=-=-=-=-=-

    இப்படிக்கு,
    தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

    ReplyDelete
  20. திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  21. திரு ரவிஜி அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya September 28, 2015 at 7:11 PM

      //திரு ரவிஜி அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

      Delete
  22. திரு ரவிஜி அவங்களுக்கு வாழ்த்துகள். பொடி க்கு நல்லா வெளம்பரம்தா

    ReplyDelete
  23. திரு ரவிஜிக்கு வாழ்த்துகள்விமரிசனமும் நகைச்சுவையாக இருக்கு.

    (சப்த ரிஷி) பின்னூட்டபோட்டிலயும் கலந்துகிட்டீங்களா. பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. ;-)))))))))))))இதாருங்க புது பார்ட்டி??

    ReplyDelete
  25. RAVIJI RAVIDecember 8, 2015 at 7:48 PM
    ;-)))))))))))))இதாருங்க புது பார்ட்டி??//

    போகப்போகத் தெரியும்.... இந்தப்பூவின் வாஸம் புரியும்....

    :))))) இப்போது (2015) புதுப்போட்டியில் கலந்துகொள்வதால் புதுப் பார்ட்டிக்கு இந்தப்பதிவினையும் அதிலுள்ள பின்னூட்டங்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கு :)))))

    மிக்க மகிழ்ச்சி, வாத்யாரே !

    ReplyDelete
  26. திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!...

    ReplyDelete
  27. WHATS-APP COMMENTS AT 15.49 Hrs. ON 21.05.2019 FROM Mrs. PADMA SURESH FOR MY STORY VGK-13


    👏👏👏👏👏👏
    Awesome comedy... I couldn't control my laughter when I was reading your (official) discussions... 😜 Enjoyed the whole story.... very interesting... throughout the story, there was a suspense about how you are going to combine it with politics and how it is going to end.... Well done. 👏👏👏👏

    Mrs. PADMA SURESH
    MDMT

    [MDMT = My Dear Maths Teacher]

    ReplyDelete