என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

VGK 11 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - ’நாவினால் சுட்ட வடு’





’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு : 



VGK 11 - ” நாவினால் சுட்ட வடு ”



 

 

   



மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 







நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து















இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 






  


மற்றவர்களுக்கு: 







    



முதல் பரிசினை 


வென்றுள்ளவர்கள் இருவர்.


அதில் ஒருவர் 


’ஹாட்-ட்ரிக்’ சாதனையாளர்


திருமதி 



கீதா மதிவாணன் 


அவர்கள்




இந்தப்போட்டியில் முதல் பரிசினை வென்று 

பகிர்ந்து கொண்டதுடன்


சென்ற போட்டியிலேயே ஹாட்-ட்ரிக் பரிசினை

 இருமடங்காகப் பெற தகுதி பெற்றிருந்த இவர்

இதிலும் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளதால்

தனக்குக்கிடைத்த ஹாட்-ட்ரிக் தொகையை


மும்மடங்காகப் பெற 


தற்போது தகுதி பெற்றுள்ளார்.


இவரின் தொடர் வெற்றியினைப் பொறுத்து, 

இவருக்கான ஹார்-ட்ரிக் பரிசு  


 நான்கு மடங்காகக்   


கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

 
வலைத்தளம் : ” கீதமஞ்சரி ”



geethamanjari.blogspot.in


முதல் பரிசினை வென்றுள்ள



திருமதி 



கீதா மதிவாணன் 


அவர்களின் விமர்சனம் இதோ:




அன்புள்ள மகளுக்கு,

அம்மா எழுதும் அன்புமடல். உன் கடிதம் கண்டேன். ரேவதி உன் வீட்டிற்கு தன் நாத்தனாரின் இரட்டைக் குழந்தைகளோடு அடிக்கடி வருவதையும், வரும்போதெல்லாம் அக்குழந்தைகளால் உனக்கு உண்டாகும் தொல்லைகளையும், சென்றமுறை ஒரு குழந்தை உன் கணவரின் லாப்டாப்பைக் கீழே தள்ளிவிட்டு அதனால் நீ பயந்துகிடந்ததையும், அதை உணர்ந்துகொள்ளாமல் உன் கணவர் உனக்குக் குழந்தையில்லை என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிவிட்டதையும் அதனால் உன் மனம் உடைந்து படும்பாட்டையும் மிக விளக்கமாக எழுதியிருந்தாய்.

உன் தாயான என்னால் உன் வேதனையை முழுவதுமாய் உணர்ந்துகொள்ள முடிகிறது. இந்த சமூகத்தில் ஒரு தம்பதிக்கு குழந்தையில்லை என்றால் உடனே எல்லோருடைய பார்வையும் அந்தப் பெண்ணின் பக்கம்தான் இருக்கும். அவள் என்னென்ன பரிகாரங்கள் செய்யலாம், என்னென்ன விரதங்கள் இருக்கவேண்டும், என்னென்ன சிகிச்சைகள் மேற்கொள்ளலாம் எந்தெந்த கோயில்குளங்களுக்குப் போகலாம் என்று ஆளாளுக்கு அவளுக்கு ஆலோசனை சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அந்தவகையில் பலரும் உன்னைப் பாடாய்ப் படுத்தியதில் உன் மனம் மிகவும் வேதனைப்பட்டுப் போயிருப்பதை நான் அறிவேன்.  

வளைகாப்பு வைபவங்களில் நடக்கும் சம்பவங்களும் உறவினர்களின் ஜாடை மாடை பேச்சும்தான் உன்னை குழந்தைகள் என்றாலே வெறுக்கும் அளவுக்குக் கொண்டுபோயிருக்கிறது என்று நினைக்கிறேன். கிட்டாத ஒன்றுக்கு ஏங்குவதைக் காட்டிலும் அதை மறந்துவிடுவது மகோன்னதம் என்பதைத் தான் பெரியவர்கள் ‘கிட்டாதாயின் வெட்டென மற’ என்றார்கள். நீயும் உனக்குக் கிட்டாத குழந்தைச்செல்வத்தை மறந்துவிட்டதோடு ‘சீச்சீ… இந்தப் பழம் புளிக்கும்’ என்னும் மனப்பாங்கையும் வளர்த்துக்கொண்டுவிட்டாய். அதனாலேயே சாதாரணமாய் குழந்தைகள் செய்யும் விஷமங்கள் கூட உன் ரசிப்புத்திறனை மழுங்கச்செய்து தொல்லை என்ற எண்ணத்தைத் தோற்றுவித்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

உன் கணவர் ரேவதியைப் பார்க்குந்தோறும் ஒரு புத்தொளி அவரிடத்தில் பரவுவதாகக் குறிப்பிட்டிருந்தாய். காரணத்தை உன்னால் அறியமுடிகிறதா? உன்னையும் அவளையும் குழந்தையின்மை என்னும் ஒரே தராசில் நிறுத்தினால் அவளுள்ளிருக்கும் தாய்மையின் பாரத்தால் அவளிருக்கும் தட்டு தாழ்ந்துவிடும். அதுதானம்மா அவளிடத்தில் இருக்கும் பெரும்பலம். தன் குறையை நினைத்து கவலைப்படாமல், நாத்தனார் குழந்தைகளிடத்தில் இவ்வளவு அன்பு காட்டுகிறாள் என்றால்.. யோசித்துப் பார்.. அவளிடத்தில் எவ்வளவு தாய்மையுணர்வும் சகிப்புத்தன்மையும் இருக்கவேண்டும் என்று.

ஒரு அரைநாள் உன்னால் சமாளிக்கமுடியாத குழந்தைகளை அவள் நாளெல்லாம் தன்னோடு வைத்துக்கொள்கிறாள், தான் செல்லுமிடமெல்லாம் அழைத்துச் செல்கிறாள் என்றால் குழந்தைகளிடத்தில் அவளுடைய பாசம் எவ்வளவு வலியது என்று புரிந்துகொள். மேலும் குழந்தையில்லாத உனக்கும் அவளைப் போலவே குழந்தைகள்பால் அன்பிருக்கும் என்று எண்ணிதான் குழந்தைகளை அவ்வப்போது உன்னிடத்தில் அழைத்துவந்திருக்கிறாள் என்றும் தோன்றுகிறது. உனக்குப் பிடிக்கவில்லை என்று ஒருமுறை வாய்திறந்து சொல்லியிருந்தாள் போதும், குழந்தைகளை அழைத்துக்கொண்டு மட்டுமல்ல, அவளே கூட உன்வீட்டுப்பக்கம் வர யோசிப்பாள். ரேவதியினுடைய அந்த தாய்மையுணர்வுதான் உன் கணவருக்கு அவள் மீது ஒரு மதிப்பையும் பிரியத்தையும் உண்டாக்கியிருக்கவேண்டும்.

நீ இப்படிக் குழந்தைகளை வெறுக்கப் பழகிவிட்டால் பின்னாளில் உனக்கென்று ஒரு குழந்தை பிறந்தாலும் அதனிடம் உன்னால் ஒட்டமுடியுமா? உண்மையான பாசங்காட்ட இயலுமா? சரி, ஒரு பேச்சுக்கு சொல்கிறேன். உங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்று வைத்துக்கொள். எவ்வளவு நாளைக்குதான் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு இப்படியே இருப்பீர்கள்? ஒரு குழந்தையை தத்தெடுத்தாவது வளர்க்க முன்வரவேண்டாமா? வாழ்க்கையில் அதைவிட வேறென்ன சந்தோஷம் இருக்கிறது? ஆனால் நீ குழந்தைகளிடத்தில் பற்றில்லாமல் இருந்தால் அதற்குமல்லவா வாய்ப்பில்லாமல் போய்விடும்… உன் கணவருக்கும் அதை நினைத்து பயமோ கவலையோ இருக்கலாம் அல்லவா? அது நேரம்பார்த்து வெளிப்பட்டிருக்கலாம் அல்லவா?

அவர் பேசியது தவறுதான். மறுக்கமாட்டேன். ஆனால் அப்படிப் பேசும்படி நடந்துகொண்டது உன் தவறல்லவா? தீர யோசித்துப் பார். தேவையில்லாமல் மனத்தைக் குழப்பிக் கொள்ளாதே… வைத்தது வைத்தபடி இருந்தால் அதிலென்ன சுவாரசியம்?

குழந்தைகள் ஒவ்வொன்றும் ஒருவிதம். சில குழந்தைகள் சொல்பேச்சு கேட்டு சமர்த்தாய் இருக்கும். சில விஷமிகளாய் இருக்கும். ஆனால் அக்குழந்தைகள் பற்றித் தெரிந்திருக்கும் நிலையில் நீதான் எச்சரிக்கையாய் இருந்திருக்கவேண்டும். குழந்தைகளின் கைக்கு எட்டும் வகையில் மருந்துப்புட்டிகள், லாப்டாப் போன்ற விலையுயர்ந்த பொருட்கள் போன்றவற்றை வைத்திருப்பதைக் கூடுமானவரை தவிர்க்கவேண்டும். அதுவும் இந்தக் குழந்தைகளைப் பற்றித் தெரிந்தும் நீ அலட்சியமாயிருந்தது உன் தவறுதானே?  

பயனிலா வாழ்வு பற்றிய புறநானூற்றுப் பாடலொன்றைக் கேள்விப்பட்டிருக்கிறாயா?

படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழு நாளே.

தினந்தோறும் விருந்து படைக்குமளவுக்கு எவ்வளவுதான் செல்வமிருந்தாலும் அவ்விருந்தின் நடுவே குறுகுறுவென நடந்து, தன் சின்னஞ்சிறு கரங்களால் இலையிலிருக்கும் சோற்றை அள்ளி வாயிலும் மேனியிலும் பூசி உதிர்த்தபடி உண்ணும் குழந்தையினைப் பெறாத வாழ்வு பயனிலா வாழ்வு என்கிறார் பாண்டியன் அறிவுடைநம்பி.

செல்வந்தர்க்கு மட்டுமல்ல, வறியவர்க்கும் அது பொருந்தும். உண்பது கூழாயினும் குழந்தையின் கை பட்டால் அது அமுதமாகும் என்கிறார் வள்ளுவர்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

அதுமட்டுமா…

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

என்றும் சொல்கிறார். எனவே உன் மனப்போக்கை மாற்றிக்கொள்ளம்மா. உன் மனப்போக்கு மாறினால் வாழ்க்கையின் போக்கும் மாறும். ஒவ்வொரு நாளும் புதிதாய்த்தோன்றும். குழந்தையில்லை என்று பிறர் கூறுவது உன் மனத்தைப் பாதித்தாலும் அதைப் புறந்தள்ளி பிற ஆக்கபூர்வமான சிந்தனைகளில் மனத்தைச் செலுத்து. வாழ்க்கையை ரசிக்கப் பழகிக்கொள். உங்கள் வாழ்க்கையைப் பயனுள்ளதாகவும் இனிமையானதாகவும் மாற்றுவது இனி உன் கையில்தானம்மா.

அன்புடன்
உன் அம்மா.  





மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


இனிய நல்வாழ்த்துகள்.


 




    


முதல் பரிசினை வென்று 


பகிர்ந்து கொண்டுள்ள


மற்றொருவர் 




திரு. E.S. சேஷாத்ரி   


அவர்கள்







வலைத்தளம்: 

காரஞ்சன் [சேஷ்] 

esseshadri.blogspot.com





  



முதல் பரிசினை 

வென்றுள்ள



திரு. E.S. சேஷாத்ரி


அவர்களின் விமர்சனம் இதோ:





மனிதனை மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது  பேச்சும், நகைச்சுவை உணர்வும்தான்.  எண்ணங்களையும், உணர்வுகளையும் பிறரோடு பேச்சின் மூலம் பகிர்ந்துகொள்ள  உறுதுணையாக இருக்கும் நாவிற்கு, வள்ளுவர் தனி அதிகாரம் அமைத்து முக்கியத்துவம் கொடுப்பதிலிருந்தே அதை அடக்கி ஆள வேண்டியதன் அவசியம் வெளிப்படுகிறது. தலைப்பைப் பார்த்தவுடன்  கதை நம்மைப் படிக்கத் தூண்டுகிறது.


இன்றும் கூட கிராமங்களில் “வார்த்தையைக் கொட்டிவிட்டால் வாரமுடியாது” என்ற பழமொழி வழக்கில் உள்ளது. எந்த ஒரு கருத்தும், அது வெளிப்படும் விதம், சூழல் இவற்றைப் பொறுத்து விளைவுகளை ஏற்படுத்தும். நாவடக்கம் எந்தச் சூழலிலும் அவசியம் என்பதை வலியுறுத்தும் இந்தக் கதைக்கு  “நாவினால் சுட்ட வடு” என்ற தலைப்பு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.  

வாழ்வின் பேரின்பம் மழலைச் செல்வங்கள்தான். அது இல்லாத இடங்களில் ஆயிரம் செல்வமிருப்பினும் ஒரு வெறுமையை ஏற்படுத்திவிடுகிறது.  தன் கல்லூரித் தோழியான ரேவதி தன் நாத்தனார் குழந்தைகளுடன் தன் வீட்டிற்கு வரும்போதெல்லாம், அந்தக் குழந்தைகளின் சேட்டையால், ஒரு சலிப்பும், பயமும் அடைந்தாலும்,   குழந்தைகளுக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என எண்ணும் பாங்கும், அவர்களுக்குப் பிரியமான உணவுகளைத் தயார் செய்து வைத்துவிட்டுக் காத்திருப்பதிலும்  குழந்தைகள் மீது கதாநாயகிக்கு ஒரு அக்கறை இருப்பதை உணர்த்தும் விதமாய் அமைந்துள்ளது. குழந்தைகளின் குறும்புகளை விவரிக்கும்போது ஆசிரியர் அருகிலிருந்து பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறார். அவர்களுக்குப் பிடித்தமான உணவுவகைகளையும் பட்டியலிட்டவிதம் அருமை!



குழந்தைகள் மிகவும் இயல்பானவர்கள். தாம் செல்லும் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுடன் உடனே ஒன்றாய்க் கலந்து விளையாட ஆரம்பிக்கும் இயல்புடையவர்கள். அவர்கள் தனித்து விடப்படும்போது, பிறர் கவனத்தை தன் மீது ஈர்ப்பதற்காக கையாளும் வழிமுறைகள் தர்மசங்கடமாக சிலருக்குத் தோன்றுகின்றன. தோழியின் வருகையால் தான் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பது தடைபடுமோ என்று எண்ணி வெளிப்படையாகவே அது முடிந்ததும் வரச் சொல்வதும், அன்றைய தினம் மதிய உறக்கம் கெட்டுவிடும் என நினைப்பதும் ஒரு சராசரிப்பெண்ணின் சின்ன சின்ன ஆசைகள் கதாநாயகிக்குள் இருப்பதை அழகாக வெளிக்கொணரும் விதத்தில் அமைக்கப் பட்டுள்ளது. 



தான் இருக்கும் இடத்தில் இருந்திருக்க வேண்டிய, தான் இந்த இடத்தில் வாழ்க்கைப்பட உதவிய தன் தோழி ரேவதிக்கும் குழந்தை பாக்கியம் இதுவரை இல்லாதிருப்பதை எண்ணி  தானும் அவளும் ஒரே நிலையில் இருப்பதை நினைத்து அல்ப சந்தோஷம் அடைவதும், தனக்கு ஒன்றுக்கே வழி இல்லாதபோது சிலருக்கு ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தையாகப் பிறப்பதை எண்ணி ஆதங்கப் படுவதிலிருந்தும், மழலைச் செல்வம் இல்லாததால் மனதில் குடிகொண்ட ஏக்கத்தையும், பெற்றவர்களைப் பார்த்து பெருமூச்செறியும் சராசரிப் பெண்ணாகிவிடுவதை வெளிப்படுத்துகிறது.



குழந்தைகளுக்கு தொட்டில் இடும்போது, குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறாதவர்கள், அம்மிக் குழவிகளைக் குளிப்பாட்டி, அலங்காரம்  செய்தால் விரைவில் வளைகாப்பு சீமந்தம் வரும் என்று, கூடியிருந்த வயதான பெண்மணிகள் கூற, மறுமனை என்ற பெயரில்  பிள்ளைத்தாச்சி பொண்ணுடன் மனையில் அமர்த்தி, இவர்களுக்கும், மாலையிட்டு, கைநிறைய வளையல்கள் அணிவித்து, பல அம்மிக்குழவிகளை குளிப்பாட்டி, வேப்பிலை அடிக்க வைத்து விடுகின்றனர். பலமுறை இப்படி நிகழும்போது அதனால் அந்தப் பெண்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை கதாநாயகி   தன் உள்ளக்குமுறலை வெளிப்படுத்துவதாய் அமைத்து  அத்தகைய செயல்களைத் தவிர்க்கலாமே என சமுதாயத்திற்கும் ஒரு சாட்டையடி கொடுத்துள்ளார்.

குழந்தையில்லாமல் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு நிகழ்விலும் ஒவ்வொருவர் வெவ்வேறுவிதமான ஆலோசனைகளையும், ம்ப்பிரதாயமான  தீர்வுகளையும் சொல்லும்போதும், பிறர் பார்வையில் அவர்கள் ஒரு காட்சிப்பொருளாக ஆகநேர்கையில்  அவர்களின் மனவேதனை எப்படியிருக்கும் என்பதை க்கே  உரித்தான பாணியில் எடுத்துரைத்த கதாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அயர்ந்து  உறங்கிய குழந்தையால் நேரம்போவது தெரியாமல் அளவளாவிய தோழிகள், சத்தம் கேட்டவுடன் படுக்கையறையில் இருந்த மடிக்கணினியை கீழே இழுத்துத் தள்ளியிருப்பதைப் பார்த்து அதிர்ந்தாலும், ரேவதி நான் வருகிறேன் என்று கூறி அசட்டையாக அகல்வதும், அதனால் கதாநாகி எரிச்சல் அடைவதும் சராசரிப் பெண்களின் வாழ்வில் நிகழ்வதுதான். கணவரின் மடிக்கணினியை இயக்கத் தெரியாது அப்படியே முயற்சித்து ஏதாவது பழுதாகிவிட்டாலென்னசெய்வது என எண்ணும் இடத்தில் கதாநாயகியுடைய தாழ்வு மனப்பான்மை வெளிப்படுத்தப் பட்டுள்ளது.

கணவரிடம் அந்நிகழ்வை உரைப்பதற்கு கதாநாயகி பீடிகை போடுவதும் அருமை! அவர் மனம் நோகாத வகையில் அதை வெளிப்படுத்த நினைத்ததும் அருமை.   வீட்டிற்குச் சென்றபின் ரேவதி தன் தோழியிடம் மடிக்கணினிக்கு ஏதாவது சேதம் விளைந்ததா என வினவியிருக்கலாம்.  இதுபோன்ற நிகழ்வுகள் யாருக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்துவதற்காக தோழியின் செயல்பாடு  அமைக்கப்பட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அசட்டையாய் அகன்ற ரேவதிக்கு, தன் கணவர் தொலைபேசியில்,  தன் மடிக்கணினிக்கு எள்ளவும் சேதமில்லை என உரைப்பதைக் கேட்டு மனதிற்குள் தனக்கு மனைவியாக வந்திருக்க வேண்டியவளிடம் கனிவுடன் தன் கணவர் பேசுவதாக ஆதங்கப் படுவதாய் அமைத்தது நியாயமான நிகழ்வுதான்.

”குழந்தைகள் என்றால் அப்படி இப்படித்தான் .....  விஷமம் செய்வதாகத் தான் இருக்கும். அவ்வாறு விஷமத்தனம் இருந்தால் தான் அது குழந்தை. நல்லது கெட்டதோ, பொருட்களில் விலை ஜாஸ்தியானது விலை மலிவானது என்ற பாகுபாடோ, எதுவும் தெரியாத பச்சை மண்கள் அவை. பொருட்களின் மதிப்புத் தெரிந்த உனக்குக் குழந்தைகளின் மதிப்புத் தெரியவில்லையே”   என்று கணவர் கூறும்போது, தன்னில் பாதியான தன் மனைவியின் மனம் எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும்  என உணரத் தவறி விட்டார். ஒருவேளை மடிக்கண்ணிக்கு ஏதாவது நேர்ந்திருந்தால் இதே வார்த்தைகள் வெளிப்பட்டிருக்குமா என்பது கேள்விக்குறிதான். மேலும் குழந்தையில்லாமல் போனதற்கு மனைவி மட்டுமே காரணம் என அவர் எண்ணுகிறாரா? அவரிடமும் குறைகள் இருக்கலாம் அல்லவா?
மடிகணினி உடையாததைப்பற்றி மகிழ்வடைந்த கணவர் தன் மனைவியின் மனம் உடைந்ததை உணராதது கொடுமை!

மொத்தத்தில் இந்தக் கதையில்  குழந்தைகளின் குறும்புகள், குழந்தைகளை அழைத்துச் செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள், குழந்தைகளை வரவேற்கக் காத்திருப்பவர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் போன்றவை மிகவும் தெளிவாக விளக்கப் பட்டுள்ளன.

நாம் சொல்லும் சொற்கள், சொல்லும் சுழ்நிலைகள் மற்றும்  சொல்லும் விதத்தைப் பொறுத்து பிறர் மனத்தை எப்படி பாதிக்கும் என்பதை அருமையாக விளக்கி “நா காக்க” என அறிவுறுத்துகிறார் கதாசிரியர். குழந்தையில்லாதர்களுக்கு, சில சடங்குகளில் அவர்களை மீண்டும் மீண்டும் ஈடுபடுத்துவதால் அவற்றின் மீது அவர்கள் நம்பிக்கை இழப்பதும், செய்யச் சொல்பவர்களின் மீது வெறுப்புணர்ச்சி கொள்வதும் நிகழும் என்பதை அழகாக விளக்கி அவற்றைத் தவிர்க்கவும் அறிவுறுத்துகிறார்.

அருமையான  இந்தக் கதையைப் படைத்த சிரியருக்கு என் பாராட்டுகள்!

காரஞ்சன்(சேஷ்)





மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


இனிய நல்வாழ்த்துகள்.


 

    




   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.






நடுவர் அவர்களின் 

வழிகாட்டுதல்களின்படி

முதல்  பரிசுக்கான தொகை 

இவ்விருவருக்கும் 

சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.



-oOo-



போட்டியில் பரிசு பெற்றுள்ள மற்றவர்கள் 

பற்றிய விபரங்கள்  தனித்தனிப்

பதிவுகளாக பல மணி நேர இடைவெளிகளில்

ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. 

இணைப்புகள் இதோ:





காணத்தவறாதீர்கள் !


oooooOooooo


இதுவரை முதல் பதினோறு கதைகளுக்கான 
விமர்சனப் போட்டி பரிசு முடிவுகள் 

முற்றிலுமாக வெளியிடப்பட்டுள்ளன.


  [[
சிறுகதை விமர்சனதாரர்களா  ..... கொக்கா ! 

இதுவரை ஹாட்-ட்ரிக் 
வெற்றியாளர்கள் 
பட்டியலில் உள்ளோர் :




1)  சாதனைப் பெண்மணி 

 கீதமஞ்சரி ** 

திருமதி   
      கீதா மதிவாணன்    
அவர்கள்

[VGK-07 to VGK-11] 

தொடர்ச்சியாக அடுத்தடுத்து 

ஐந்து முறைகள் வெற்றி

 
2) திரு. ரமணி அவர்கள் 

[VGK-01 to VGK-04]

தொடர்ச்சியாக அடுத்தடுத்து 
நான்கு முறைகள் வெற்றி

 
3) திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் 

[VGK-04 to VGK-06] 

தொடர்ச்சியாக அடுத்தடுத்து 
மூன்று முறைகள் வெற்றி

 
4] திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் 

[VGK-08 to VGK-10] 

மீண்டும் தொடர்ச்சியாக அடுத்தடுத்து 
மூன்று முறைகள் வெற்றி

  

இந்தப்பட்டியலில் அடுத்தது யார் ?

இதைப்படித்துக்கொண்டிருக்கும்
நீங்களாகவும் இருக்கலாம் !

oooooOooooo

ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் 
பட்டியலில் இம்முறை

மேலும் முன்னேற்றத்துடன் 
முன்னனியில்
 இடம் பெற்றுள்ள

திருமதி.  

        கீதா மதிவாணன்  

 [கீத மஞ்சரி ] 

அவர்களுக்கு


நம் ஸ்பெஷல் பாராட்டுக்கள் + 
நல்வாழ்த்துகள்.

** இவர்களின் தொடர் வெற்றியினைப் பொறுத்து
ஹாட்-ட்ரிக் பரிசுக்கான தொகை பிறகு நிர்ணயிக்கப்படும்.
அது பற்றிய மேலும் விபரங்களுக்கு இணைப்பு:

oooooOooooo


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo




இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 




இணைப்பு: 

கதையின் தலைப்பு:


VGK-13



” வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ  


புதிய கட்சி 


மூ.பொ.போ.மு.க. 


உதயம் ”





விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


17.04.2014  


இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.














என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்






26 கருத்துகள்:

  1. முதல் பரிசினை வென்ற திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும், திரு சேஷாத்ரி அவர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. திருமதி கீதா மதிவாணன் அவர்கள் -
    தாய் மகளுக்கு எழுதும் கடிதம் வெகுவாக ரசிக்கவைத்தது..
    மனம் நிறைந்த பாராட்டுக்கள்..! வித்தியாசமான சிந்தனை..!

    முதல் பரிசினை வென்ற திருமதி கீதா மதிவாணன்
    அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  3. முதல் பரிசினை வென்று பகிர்ந்து கொண்ட
    திரு சேஷாத்ரி அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்..

    அவரது அருமையான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  4. சாதனை சகோதரி கீதா மதிவாணன் அவர்களுக்கும், இனிய நண்பர் திரு. E.S. சேஷாத்ரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. முதல் பரிசினைப் பகிர்ந்துகொண்ட திரு . E.S. சேஷாத்ரி மற்றும்
    திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !

    பதிலளிநீக்கு
  6. ஹாட் ட்ரிக் அடித்துள்ள திருமதி கீதாவிற்குப் பாராட்டுக்கள்!
    திரு சேஷாத்ரி அவர்களுக்கும் பாராட்டுகள்.

    இனிய ஜய வருடப் புத்தாண்டு வாழ்த்துகள், கோபு ஸார்!

    பதிலளிநீக்கு
  7. தங்கள் சிறுகதை விமர்சனப் போட்டியில் முதல் பரிசினை வென்றுள்ள சகோதரி ”கீதமஞ்சரி” கீதா மதிவாண்ன் அவர்களுக்கும் சகோதரர் E.S. சேஷாத்ரி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. திரு VGK அவர்களுக்கு எனது உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. இனிய சித்திரைப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  10. உள்ளத்தில் உவகை பொங்க
    ஒளி வெள்ளத்தில் தவழும் நிலவே
    இல்லத்தில் மகிழ்வு பொங்க
    ஈடு இணையற்ற சித்திரைப் புத்தாண்டு
    நல் வாழ்த்துக்கள் இதோ ....

    எடுங்கோ எடுங்கோ
    கொடுங்கோ கொடுங்கோ
    மாமூலாய் நான் விரும்பும்
    மாம்பழச் சாற்றை...

    மாம்பழம் போல் மனம் இனிக்க
    வெற்றி பெற்ற அனைவருக்குமே என்
    மனமார்ந்த பாராட்டுக்களும் இனிய
    சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களும் .

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    அனைவரின் அன்றாட நன்முயற்சிகளிலும் ஜயம் உண்டாகட்டும்.

    ஜய ஜய ஜய ஜய ! ஜய ஜய ஜய ஜய !
    ஜய ஜய ஜய ஜய ! ஜய ஜய ஜய ஜய !

    அன்புடன் கோபு [ VGK ]

    பதிலளிநீக்கு
  12. மீண்டும் பரிசு! மீண்டும் முதல் பரிசு! கூடவே ஹாட்ரிக் பரிசு! ஆனந்தத்தின் அளவுக்கு சொல்லவா வேண்டும்! மகிழ்ச்சியில் திளைத்துக்கிடக்கிறேன். கூடவே அடுத்தடுத்தப் போட்டிகளிலும் பங்கேற்று பரிசுபெற்று, இந்தப் பெருமையைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டுமே என்ற பயமும் எழுகிறது. விமர்சனம் எழுதவே தயங்கிய நான் இன்று இப்படித் தொடர்பரிசுகள் பெறுகிறேனென்றால் அனைத்துக்கும் தாங்கள் அமைத்துக்கொடுத்த களமும் ஊக்கமுமே காரணம். மனமார்ந்த நன்றி கோபு சார். என்னோடு பரிசு பெற்ற திரு.சேஷாத்ரி அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள். அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. தொடர்வெற்றி பெற்றுவரும் சாதனையாளர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்! வாய்ப்பளித்துவரும் திரு. VGK அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி!
    வாழ்த்துரைத்த அன்பு நெஞ்சங்கள் அனைவ்வருக்கும் என் நன்றி! அனைவருக்கும் என் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  14. இந்த வெற்றியாளர், தாங்கள் இதுவரை பரிசுபெற்றுள்ள ஒட்டுமொத்தமான மகிழ்ச்சிகளை, மனம் திறந்து, தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    http://geethamanjari.blogspot.in/2014/04/blog-post.html
    திருமதி கீதா மதிவாணன் அவர்கள் [கீதமஞ்சரி]

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  15. இந்த வெற்றியாளர், தாங்கள் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    http://esseshadri.blogspot.com/2014/04/blog-post_3722.html
    திரு. E S சேஷத்ரி அவர்கள் [காரஞ்சன் - சேஷ்]

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  16. முதல் பரிசை வென்றிருக்கும் இரு விமரிசனங்களுமே மிக அருமையாக அமைந்துள்ளன. இருவருக்கும் பாராட்டுகள். தொடர்ந்து முதல் பரிசை வென்று வரும் கீதா மதிவாணனுக்குச் சிறப்புப் பாராட்டுகள். வாழ்த்துகள். தொடர்ந்து வெல்லவும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. விமர்சனப் போட்டியில் தொடர்ச்சியாக ஐந்து முறை பரிசு பெற்று சாதனை படைத்து வரும் கீதா மதிவாணனுக்கு விமர்சன வித்தகி என்ற பட்டத்தை அளிக்கிறேன். தொடர்ந்து பரிசுகள் பெற்று இது போல் இன்னும் பல சாதனைகள் படைக்கவும் வாழ்த்துகிறேன்! முதல் பரிசு பெறும் சேஷாத்ரி அவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kalayarassy G April 15, 2014 at 7:06 PM

      வாங்கோ .... வணக்கம்.

      //விமர்சனப் போட்டியில் தொடர்ச்சியாக ஐந்து முறை பரிசு பெற்று சாதனை படைத்து வரும் கீதா மதிவாணனுக்கு விமர்சன வித்தகி என்ற பட்டத்தை அளிக்கிறேன். //

      ’விமர்சன வித்தகி’

      அழகான அருமையான பொருத்தமான பட்டம் தான். சந்தோஷம்.

      ஒருவேளை அவர்கள் ஆறாம் முறையும் தொடர் வெற்றியினை எட்டிவிட்டால் ;)))))) இதே பட்டத்தினை நான் அங்கீகரித்து கெளரவித்து வெளியிட்டு விடுகிறேன்.

      நாம் நல்லதே நினைப்போம் .... நல்லதே நடக்கட்டும் !

      அன்புடன் கோபு [ VGK ]

      நீக்கு
  18. திருமதி கீதா மதிவாணன் மற்றும் திரு. இ.ஆர். சேஷாத்திரி ஆகிய இருவருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  19. பரிசு வென்ற திருமதிகீதாமதிவாணன் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  20. அருமையாக விமர்சனம் எழுதி முதல் பரிசை வென்ற திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் திரு சேஷாத்ரி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 28, 2015 at 6:53 PM

      //அருமையாக விமர்சனம் எழுதி முதல் பரிசை வென்ற திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் திரு சேஷாத்ரி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகள்//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா. :)

      நீக்கு
  21. பரிசு வென்ற திருமதிகீதாமதிவாணன் தரு சேஷாத்திரி அவங்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  22. திருமதி கீதாமதிவாணன் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள் ஒருதாய் மகளுக்கு எழுதும் உருக்கமான கடிதமாக விமரிசனம் நல்ல யுக்தி. நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  23. இரு வேறு கோணங்களில் எழுதப்பட்ட விமர்சனங்கள். பரிசு பெற்ற இருவர்க்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  24. தொடர்வெற்றி பெற்றுவரும் சாதனையாளர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்! வாய்ப்பளித்துவரும் திரு. VGK அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி! வாழ்த்துரைத்த அன்பு நெஞ்சங்கள் அனைவ்வருக்கும் என் நன்றி! அனைவருக்கும் என் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்! நன்றி!

    பதிலளிநீக்கு