VGK 12 - ” உண்மை சற்றே வெண்மை “
மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,
மிக அதிக எண்ணிக்கையில் பலரும்,
மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு,
வெகு அழகாக விமர்சனங்கள்
எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் என்
மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
மற்றவர்களுக்கு:
முதல் பரிசினை வென்றுள்ளவர்கள்
மொத்தம் இருவர்.
அதில் ஒருவர் இம்முறை
ஹாட்-ட்ரிக் பரிசினைப்பெற்றிட
முற்றிலும் தகுதியாகியுள்ள
ராதாபாலு
அவர்கள்
வலைத்தளங்கள்:
” எண்ணத்தின் வண்ணங்கள் ”
” எண்ணத்தின் வண்ணங்கள் ”
http://radhabaloo.blogspot.com/
“அறுசுவைக் களஞ்சியம் ”
http://arusuvaikkalanjiyam.blogspot.com/
“ என் மன ஊஞ்சலில் “
http://enmanaoonjalil.blogspot.com/
ஹாட்-ட்ரிக் பரிசு என்ற
முரட்டுத் தடிமனான
புலி வாலையும்
புலி வாலையும்
மிகத் துணிச்சலுடன்
கையில் பிடித்துக் கொண்டுள்ள
திருமதி
ராதாபாலு
அவர்களின் வெகு அழகான விமர்சனம் இதோ :
"அட! ஆமாம் ! ரொம்ப அழகா இருக்காளே அவ!"
"அம்மா...நான் போய் அந்தக் புது ஃ ப்ரெண்டோட விளையாடவா?"
"ஹ்ம்ம்..போபோ...அடி சிவப்பி...அந்தக் கருப்பியைப் பார்த்தியா? எத்தனை அழகா இருக்கா பார்த்தியா? ரொம்ப கர்வமா இருப்பாளோ?"
"என்ன இருந்தாலும் நம்மளைவிட அதிக விலையோட அவளுக்கு 'காராம்பசு'ன்னு ஒரு சிறப்பும் இருக்கே?" நமக்கெல்லாம் அது இல்லையே?"
"நாம பெருமூச்சு விட்டு என்ன செய்ய? சிலருக்குதான அதல்லாம் அதிர்ஷ்ட்ட வசமா கிடைக்குது?"
"அதோ பாரு அவ நம்ம பக்கமா வரா. நம்மளோட பேச வராளோ?"
"நான் இந்தக் கொட்டிலுக்கு புதுசு. நீங்க எல்லாரும் ஏன் என்னைப் பார்த்து விலகிப் போறீங்க? எனக்கு உங்க கூடல்லாம் பேசிப் பழக ஆசையா இருக்கு. உங்க பேரெல்லாம் என்ன அக்கா?."
"நீ ரொம்ப பெரிய இடத்தில இருந்து வந்திருக்க. ரொம்ப விலை கொடுத்து உன்னை வாங்கியிருக்கறதா காலையில நம்ம எஜமானர் பேசிக்கிட்டாரு. நிறைய பாலும் கறப்பியாமே? வீட்டுல மவுசும் அதிகம்தான? அதனாலதான் நாங்க விலகியிருக்கோம். இனிமே பழகிக்கிடுவோம்.
"நான் சிவப்பி. அவதான் வெள்ளைக்கறுப்பி. இவ பிரவுனி. அவ பக்கத்துல செல்லி... இங்க கட்டிருக்கிறவ வெளுப்பி. அங்கன இருக்காளே அவ லட்சுமி... இந்த வீட்டு அம்மாவுக்கு அவளை ரொம்பப் பிடிக்கும். ஆமாம் உன்னை ஏன் பழைய வீட்டுக்காரங்க வித்துட்டாங்க?"
"அவங்களுக்கு பணக் கஷ்டம் ஆயிட்டதால என்னை மனசே இல்லாமதான் கொடுத்தாங்க. அக்கா...இந்த வீட்டு அம்மாவும், அய்யாவும் எப்படிக்கா? நம்மளை நல்லா கவனிச்சுப்பாங்களா?"
"அவங்க தங்கமானவங்க. தினமும் எங்களைக் குளிப்பாட்டி, மஞ்சள், குங்குமம் வெச்சு, சுத்தமா பராமரிப்பாங்க. இந்தக் கொட்டகையே எவ்வளவு பளபளப்பா இருக்கு பாரு. நல்ல ஆரோக்கியமான சத்தான உணவு தருவாங்க. நம்மளை வாயில்லாப் பிராணிகளா நினைக்காம அவங்களுக்கு சரியா வெச்சுப்பாங்க.
"காலையில எங்க எல்லாரையும் தடவிவிட்டு, எங்க கூடவெல்லாம் பேசுவாங்க. எங்க குட்டிங்களுக்கு போக மிச்ச பாலைத்தான் அவங்களும் சாப்பிட்டு, மீதியை வித்துப்பாங்க.
"வெள்ளிக்கிழமை, பொங்கல் நாளுகள்ள எல்லாம் எங்களுக்கு ஸ்பெஷல் பூஜை, சாப்பாடு எல்லாம் உண்டு. மொத்தத்துல எங்களால அவங்களுக்கு வருமானம். அவங்களால எங்களுக்கு சந்தோஷமான வாழ்க்கை. இனி உனக்கும் இதல்லாம் கிடைக்கும். இதுவரைக்கும் நாங்க 14 பேர் இருந்தோம். இனி உன்னையும், உன் குட்டியையும் சேர்த்து 16 பேர் ஆகிட்டோம்.
"ஏன் அக்கா... இவங்களுக்கு இந்த ஒரு பொண்ணு மட்டும்தானா/"
"ஆமாம். அந்தப் பொண்ணு அழகைப் பார்த்தியா? மகாலட்சுமியாட்டமா இருக்கு. அதுக்கு கல்யாணத்துக்கு பார்த்துகிட்டிருக்காங்க ."
"சிவப்பி அக்கா... அழகும், பணமும், வசதியும் இருந்தும் அந்தப் பொண்ணுக்கு ஏன் கல்யாணம் தள்ளிப் போகுதோ தெரியல."
"அந்தப் பொண்ணு லட்சுமி அக்காகிட்டப் போய்த்தான் எப்பவும் தடவிக்கிட்டே பேசிக்கிட்டிருக்கும். அதுக்கு என்ன வருத்தமோ? ஏன் லட்சுமி அக்கா... உனக்கு தெரியுமா? அது ஏன் அடிக்கடி கண்கலங்குது?"
"அவங்க அப்பா மாட்டுப் பண்ணைதான நடத்துறாரு? அத்தோட அந்தப் புள்ளை ஜாதகத்திலையும் ஏதோ குறை இருக்குதாமே?"
"ஆமாம் வெளுப்பி.. நீ சொல்வது சரிதான். அந்தப் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு. பொய் சொல்லப் பிடிக்காது. நமக்கெல்லாம் ஆசை வந்தா இராத்திரியில கத்துவோமில்ல. உடனே காளைக்கு கூட்டி விடுவாங்கள்ள? ஆனா இந்தப் பொண்ணு தன் உணர்ச்சிகளை எப்படி சொல்லும்? அதான் சொல்லவும் முடியாம, தாங்கவும் முடியாம ரொம்ப கஷ்டப்படுது."
"அப்ப லட்சுமி அக்காவுக்கு அது ஏன்னு தெரிஞ்சிருக்கும். நீதானக்கா ரொம்ப வருஷமா இந்த வீட்டில இருக்க? சொல்லுக்கா. எங்களுக்கும் தெரிஞ்சிக்க ஆவலா இருக்கு."
"அய்யா பால் கறக்க வர்றாரு. அப்பறமேல சொல்லறேன்."
"இந்த வெளுப்பி முகத்தைப் பார்த்தீங்களா? எத்தனை சந்தோஷமா இருக்கா? இப்ப அவ மூணு மாச சினையா இருக்கா இல்லையா?அறிவில்லாத நமக்கே இது இத்தனை சந்தோஷமான விஷயம்னா, மனிதர்களுக்கு இது எவ்வளவு முக்கியமான விஷயம்? அந்தப் பொண்ணு அந்த சினைமாட்டைப் பார்த்து ஏங்கி நிக்கிறது மனசுக்கு கஷ்டமாதான் இருக்கு."
"அது சரிக்கா...இத்தனை அழகா இருக்கிற பொண்ணுக்கு என்னதான்க்கா குறை?"
"வெளியில தெரியாத குறை. ப்ச்சு...பாவம்....நினைக் கவே வருத்தமா இருக்கு. எனக்கே இப்படி இருக்கே? அந்தப் பொண்ணுக்கும், பெத்தவங்களுக்கும் எப்படி இருக்கும்?"
"என்னக்கா....நீ இப்படி கண்கலங்கற? என்னனு சொல்லு."
"நம்ம கூட இப்போ புதுசா வந்திருக்காளே கருப்பு அழகி (காராம்பசு)... அவ உடம்புல கருப்பு கலரும், மடியில வெள்ளை கலருமா இருக்கு பார்த்தீங்களா?"
"ஆமா... அதுக்கென்ன... அதுதான அவளுக்கு அழகு. அதனாலதான அவளை ஏக விலை கொடுத்து வாங்கியிருக்கிறார் நம்ம ஐயா? அதுக்கும் நம்ம ஐயா பொண்ணுக்கும் என்ன சம்பந்தம்?"
"அந்த மாதிரி இருப்பது காராம்பசுவுக்கு அழகு. ஆனா அதேபோல வெள்ளைக்கலர் அந்தப் பொண்ணுக்கும் அவள் பெறும் பிள்ளைக்குப் பாலூட்டும் இடத்தில் இருக்கே? அதுதான் அவள் குறை."
"அது எப்படி லட்சுமி அக்கா உனக்கு தெரியும்?"
"அவளுடைய நாலு வயதிலிருந்து நான் இங்க இருக்கேன். முன்னெல்லாம் அவள் அம்மா அவளை இங்குள்ள கிணற்றடியில்தான் குளிப்பாட்டுவாள். அப்பொழுதே நான் பார்த்திருக்கேன். எனக்கு அவள் பெரியவளானதும் இந்தப் பிரச்னையும் பெரிதாகி அவளுக்கு திருமணம் தடைபடுமே என்று யோசிப்பேன்.
"பாவம்....தன் பெற்றோரிடம் மனதைத் திறந்து பேச முடியாமல்தான் அந்த பேதைப் பெண் என்னிடம் அடிக்கடி வந்து பேசுவாள். என்னால் அவளுக்கு ஆறுதலோ, தேறுதலோ சொல்ல முடியாமல் அவளை உராய்ந்து நக்கிக் கொடுப்பேன்."
"பாவம் ...பையன் வீட்டுக் காரர்களிடம் இதைச் சொல்லாமல் இருக்கலாமே?"
"அது தவறு என்று அவர்கள் மூவரும் நினைப்பதினால்தான் அவள் திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது."
"இந்த மனிதர்கள் இவ்வளவு மோசமாக இருக்கிறார்களே? மன அழகுதான் உண்மை என்பது ஏன் அவர்களுக்குப் புரியவில்லை.அழிந்து போகும் உடல் அழகை வைத்து ஒருவரை எடை போடுவது எவ்வளவு அறிவீனம்? ச்சே! நான் மனிதர்களைப் பற்றி எவ்வளவோ உயர்வாக நினைத்திருந்தேனே? இந்தச் சின்ன குறையை பெரிதாக்கும் அவர்கள் மனிதர்களாக வாழவே தகுதி இல்லாதவர்கள். எனக்கு மட்டும் வாயிருந்தால் இந்த மனிதர்களை நறுக்கென்று நாலு வார்த்தை கேட்டிருப்பேன்."
"வெளுப்பி... ஆடை போட்டு மறைக்காத வாயில்லா ஜீவன்களாகிய நம் மதிப்பு மார்க்கெட்டில் நம் காராம்பசுவைப் போன்று கலரினால் உயர்கிறது. அதை விலை அதிகம் கொடுத்து வாங்கும் மக்கள், யார் பார்வையிலும் படாத இடத்தில் இருக்கும் ஒரு சின்னத் தழும்பிற்காக அந்த மனிதர்களையே ஒதுக்குவது எவ்வளவு கேவலமான செயல்?"
"ஆமாம் லட்சுமி அக்கா.. இந்த வெண்மைப் பிரச்னையை வெள்ளை மனதோடு சொல்லும் இவர்களின் பெண்ணை ஒதுக்கும் அந்தப் பையன் வீட்டார் மனம்தான் கருப்பு. அவள் காராம்பசுவாக இருந்திருந்தால் அவள் மதிப்பு இன்று பல லட்சம்.... ஆனால் பாவம் கன்னிப்பெண்ணாய்ப் பிறந்ததால் அவளை யாருமே லட்சியம் செய்யாதவளாக ஆகிவிட்டாள்."
"ஆனாலும் இந்தப் பெண்ணுக்கேத்த ஒரு நல்ல பையன் எங்கேயோ பிறந்திருப்பான். அவன் விரைவில் வந்து இவளை மணக்க இறைவன் அருள் புரியட்டும். நாம் அந்த பெண்ணுக்கு விரைவில் திருமணம் நடக்க இறைவனைப் பிரார்த்திப்போம்."
இந்த வாயில்லா ஜீவன்களோடு நானும் இந்தக் கன்னிப்பெண், முதிர்க்கன்னியாகிவிடும் முன்பு, தகுதியுள்ள காளை ஒருவனை சீக்கிரமே கைப்பிடித்து, கல்யாணப் பெண்ணாகி, பதினாறும் பெற்று பெருவாழ்வு பெற இறைவனை வேண்டுகிறேன்!
உண்மை சற்றே வெண்மை அல்ல.... மிக மிகக் கருமை!
காராம்பசுவைக் கன்னிப் பெண்ணுக்கு உவமையாக்கி ஒரு சுவாரசியமான கதையை எழுதிய ஆசிரியருக்கு பாராட்டுக்கள்!
ராதாபாலு
பேச வைத்துள்ள தங்களின் வித்யாசமான
கற்பனை மிகவும் அருமை.
லட்சுமி அக்கா, கறுப்பழகி, வெளுப்பி, சிவப்பி,
வெள்ளைக்கறுப்பி, பிரவுனி, செல்லி எனச் செல்லமாக
பெயர்கள் வைத்து வெளுத்து வாங்கிட்டீங்கோ ! ;)
பசுக்களைப்பற்றி எழுதியுள்ள
(பெண்) புலிக்கு
என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
பிரியமுள்ள கோபு
-oOo-
கற்பனை மிகவும் அருமை.
லட்சுமி அக்கா, கறுப்பழகி, வெளுப்பி, சிவப்பி,
வெள்ளைக்கறுப்பி, பிரவுனி, செல்லி எனச் செல்லமாக
பெயர்கள் வைத்து வெளுத்து வாங்கிட்டீங்கோ ! ;)
பசுக்களைப்பற்றி எழுதியுள்ள
(பெண்) புலிக்கு
என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
பிரியமுள்ள கோபு
-oOo-
முதல் பரிசினைப்
பகிர்ந்து கொண்டுள்ள
மற்றொருவர் யார் ?
தொடர்ச்சியாக அடுத்தடுத்து
ஆறாம் முறையாக வெற்றிவாகை சூடியுள்ள
’கீத மஞ்சரி ’
திருமதி
கீதா மதிவாணன்
அவர்களே தான் ! ;)
சென்ற முறை ஹாட்-ட்ரிக் பரிசினை மும்மடங்காகப் பெற
தகுதி பெற்றிருந்த இவர் தொடர்ந்து இந்தப்போட்டியிலும் பரிசினை
வென்றுள்ளதால் ஹாட்-ட்ரிக் பரிசின் உச்சக்கட்ட அளவினையே
தொட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தகுதி பெற்றிருந்த இவர் தொடர்ந்து இந்தப்போட்டியிலும் பரிசினை
வென்றுள்ளதால் ஹாட்-ட்ரிக் பரிசின் உச்சக்கட்ட அளவினையே
தொட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இவருக்கான ஹாட்-ட்ரிக் பரிசு அதிகபட்ச அளவான
நான்கு மடங்காக தரப்பட உள்ளது.
இதுபோன்றே மேலும் பல ஹாட்-ட்ரிக் பரிசுகளை இவர் வென்றிடவும்
இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.
கிரிக்கெட் விளையாட்டில் ஒரே ஓவரில் .... ஆறு பந்துகளில் ....
ஆறுமுறை தொடர்ச்சியாக சிக்ஸர் அடித்தவரையும் பார்த்துள்ளோம்.
ஆறுமுறை தொடர்ச்சியாக சிக்ஸர் அடித்தவரையும் பார்த்துள்ளோம்.
ஆனால் இந்த மிகவும் சிக்கலான ‘சிறுகதை விமர்சனப் போட்டியில்’ ,
மிகக்கடுமையான அம்பையர் [நடுவர்] அவர்களின் மேற்பார்வையில்,
தொடர்ச்சியாக ஆறுமுறைகள் வெற்றிபெற முடியுமா ?
ஏன் முடியாது? என சவால்விட்டு சாதித்துக் காட்டியுள்ளார்
திருமதி கீதா மதிவாணன் [கீதமஞ்சரி] அவர்கள்.
-oOo-
மிகக்கடுமையான அம்பையர் [நடுவர்] அவர்களின் மேற்பார்வையில்,
தொடர்ச்சியாக ஆறுமுறைகள் வெற்றிபெற முடியுமா ?
ஏன் முடியாது? என சவால்விட்டு சாதித்துக் காட்டியுள்ளார்
திருமதி கீதா மதிவாணன் [கீதமஞ்சரி] அவர்கள்.
-oOo-
இவர் ஒருநாள் டெய்லரிடம் ஜாக்கெட் தைக்கக்கொடுக்கச் சென்று வந்த
கதையைச் சொல்லிருந்தார் ...
’VGK-07ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்”
என்ற என் சிறுகதைக்கான தனது விமர்சனத்தில்.
கதையைச் சொல்லிருந்தார் ...
’VGK-07ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்”
என்ற என் சிறுகதைக்கான தனது விமர்சனத்தில்.
அதைப்படித்துப் பரவஸம் ஆன நான்,
இவர்களின் முத்திரை எழுத்துக்களுக்கு
மோதிரங்கள் அளித்திருந்தேன் .....
இவர்களின் முத்திரை எழுத்துக்களுக்கு
மோதிரங்கள் அளித்திருந்தேன் .....
அவர்களுக்கு மட்டுமல்ல .....
அவர்களின் கதாபாத்திரங்கள் இருவருக்கும் கூட.
அவர்களின் கதாபாத்திரங்கள் இருவருக்கும் கூட.
இவ்வாறு VGK-07 இல்
ஜாக்கெட் தைக்கச்சென்ற இவர்
ராக்கெட் வேகத்தில் வரிசையாக
ஜாக்கெட் தைக்கச்சென்ற இவர்
ராக்கெட் வேகத்தில் வரிசையாக
VGK-07, VGK-08, VGK-09, VGK-10, VGK-11 மற்றும் இப்போது VGK-12 வரை
தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஆறுமுறைகள்
வெற்றி பெற்றுக்கொண்டே வருவது
வெற்றி பெற்றுக்கொண்டே வருவது
மிகவும் வியப்பளிக்கிறது.
மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
முதல் பரிசினை வென்றுள்ள
’ஆட்ட நாயகி’
[MAN OF THE MATCH இன் பெண்பால்]
திருமதி.
கீதா மதிவாணன்
அவர்களின் விமர்சனம் இதோ:
அனைவருக்கும் வணக்கம். என்னை நீங்கள் அனைவரும் நன்கறிவீர்கள். ஆயிரமாயிரம் வண்ணங்களுள் நானும் ஒன்று. என் எண்ணங்களைப் பகிரவந்தேன் உங்களுடன் இன்று. என்னை உங்கள் அனைவருக்குமே பிடிக்கும். கள்ளமில்லா உள்ளத்துக்கு என்னைத்தான் உதாரணமாகக் குறிப்பிடுவார்கள். இப்போது தெரிந்திருக்குமே… நான் யாரென்று? நான்தான் வெண்மை.
உங்களை சந்திக்க இப்போது வந்துள்ள காரணம்? சென்றவாரம் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது தளத்தில் என்னைப் பற்றிய கதை ஒன்றை வாசித்தேன். என்னை மிகவும் பாதித்த அக்கதையைப் பற்றிய என் கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ளவே வந்துள்ளேன்.
கதையின் தலைப்பு: உண்மை சற்றே வெண்மை.
உண்மை எப்போதும் என்னோடு கைகோர்த்தபடிதானே உலாவரும்? அதனால்தானே உண்மையின் நிறம் வெண்மை என்று சொல்லப்படுவதுண்டு. அதென்ன உண்மை சற்றே வெண்மை? இங்கே கதாசிரியர் தன் கதையில் குறிப்பிடும் வெண்மையான என்னைப்பற்றித் தெரிந்துகொண்டால் உங்களால் வியக்காமல் இருக்கமுடியாது. இப்படியொருதலைப்பிட்டதன் மூலம் அவர் உங்களுக்கு எதையோ சூசகமாக உணர்த்தத் தலைப்படுகிறார் என்பதைப் புரிந்துகொண்டீர்கள் அல்லவா?
ஆம்… கதாநாயகியின் உடலில் ஒரே ஒரு இடத்தில் ஒரு ரூபாய் நாணயமளவு தேமல் வடிவில் நான் குடிகொண்டிருக்கிறேன். அதை அவளைப் பார்க்கவரும் வரன்களிடம் மறைக்காமல் நாணயமாய் தெரிவிக்க, அவர்களோ நா நயமின்றி அவளை மறுத்து ஒதுக்கிச் செல்கின்றனர். என்ன மனிதர்கள்? ஒரு பெண்ணின் உடல்முழுக்க நான் பரவியிருந்தால் ‘ஆஹா… பெண் நல்ல நிறம்!’ என்று வாயாரப் புகழ்ந்து உடனே ஏற்றுக்கொள்கிறீர்கள். அதுவே ஒன்றிரண்டு திட்டு என்றால் திகட்டுகிறது உங்களுக்கு.
என்னைப் பாலாய்ப் பீச்சித்தந்து பார் முழுக்கப் பசியாற்றும் பசுவின் உடலில் ஆங்காங்கே நான் இருந்தால் அதுவே லட்சணம் என்று கூறி அடித்துப்பிடித்துக்கொண்டு வாங்க இந்த அசட்டு உலகம் தயாராயிருக்கிறது. அதுவே ஒரு பெண்ணிடமென்றால் அவலட்சணம் என்று அலட்சியப்படுத்தி நிராகரிக்கிறது.
ஒரு கன்னிப்பெண்ணின் ஆழ்மனக்கிடக்கைகளை தெள்ளந்தெளிவாய் விவரிக்கும் வரிகள் என்னை மட்டுமல்ல உங்களையும் இரங்கச்செய்திருக்கும். ஐந்தறிவுள்ள ஜீவனும் தன் தாபத்தை வெளியிட்டுத் தீர்த்துக்கொள்ள முடிகிற இந்த உலகில் ஆறறிவு பெண்ணின் ஆசையோ ஆழ்கடல் சங்காக அவளுக்குள்ளேயே நிசப்தமாய் ஊதி அடங்கவேண்டிய அபாக்கியம். அதை அறிந்தும் அறியாததுபோல் நடந்துகொள்ளவேண்டிய அவள் பெற்றோருடைய நிலையோ பெரும்பரிதாபம்!
வெள்ளை நிறமான நான் அக்குடும்பத்தினரின் வாழ்க்கையுடன் எல்லாவிதங்களிலும் பின்னிப்பிணைந்து கிடப்பதால்தான் அவர்களுக்காக இன்று உங்களிடம் வக்காலத்து வாங்க முன்வர முடிகிறது. அவர்களுடைய உள்ளத்திலும் இல்லத்திலும் நானே குடியிருக்கிறேன். அவர்கள் வளர்க்கும் பசுக்களிடம் பாலாய் உருவெடுத்து அவர்கள் வயிற்றில் பால்வார்க்கிறேன். அவர்கள் மனத்தில் நிறைந்திருந்து வாழ்க்கையில் நிறைவைத் தருகிறேன். பால்மணம் கமழும் அவ்வில்லத்தின் பால்மனம் கொண்ட பாவையின் நெஞ்சத்திலும் குடியேற எண்ணி சற்றே அவள் மார்போரம் தஞ்சமடைந்தேன். அது இவ்வளவுதூரம் அவள் வாழ்க்கையைப் பாதிக்கும் என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.
நான் ஒன்றும் நோயல்ல, தோலின் மேல்பகுதியில் நிறமிக்குறைபாட்டால் உண்டாகியிருக்கும் சிறுமாற்றம். அதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் ஏனிந்த தடுமாற்றம்? முறையான சிகிச்சையின் மூலம் முற்றிலும் என்னை நீக்கிவிடமுடியும். அப்படியே என்னை நீக்கமுடியாது போனாலும் அதனால் அவள் மணவாழ்க்கையில் பாதிப்பெதுவும் ஏற்பட்டுவிடாது. அவ்வடிவில் இருக்கும் நான் ஒன்றும் தொட்டவர்களைத் தொற்றிக்கொள்ளமாட்டேன். பயப்படாமல் பரிகசிக்காமல், பரிதாபங்கொள்ளாமல் அப்பெண்ணை மணக்க முன்வாருங்கள் மணவாளர்களே.
அழகிருந்தும், படிப்பிருந்தும், போதுமான வசதி வாய்ப்புகள் இருந்தும் நான் அவளிடத்தில் குடிகொண்டிருக்கும் விவரத்தை மறைக்கத் தெரியாமல், தன் வாழ்வில் வசந்தகாலம் வருமோ,வாராதோ என்று தன் வருங்காலத்தை எண்ணி வாடிக் கொண்டிருக்கிறாள் அவள். இளங்கலைப் பட்டம் பெற்ற அவ்விளங்கன்னி, விரைவில் முதிர்கன்னி என்னும் முதுகலைப் பட்டம் பெற்றுவிடுவேனோ என்றஞ்சும் அவளது வார்த்தைகள் என்னையே உலுக்கியெடுக்கின்றனவே.. உங்களை உலுக்கவில்லையா என்ன?
என்னைத் தன் நெஞ்சகத்தில் கொண்டதால் மட்டும் அவள் மணவாழ்க்கை பாதிக்கப்படவில்லை. அந்த உண்மையை வஞ்சகமின்றி வெளியில் சொல்வதாலேயே பாதிக்கப்படுகிறாள். எத்தனையோ பொய் சொல்லி திருமணம் செய்யலாம் என்றிருந்தாலும் பெண்ணின் மணவாழ்க்கையில் பின்னாளில் சிக்கலுண்டாகிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தால் உண்மையை மறைக்க விரும்பாத தாய் தந்தையரின் பண்புக்கு அனைவரும் தலைவணங்கவேண்டும். ஆனால் இந்த உலகமோ அவர்களை ‘பிழைக்கத் தெரியாதவர்கள்’ என்று பழிக்கும்.உண்மைக்கு இன்று இதுதான் நிலைமை. இருந்தபோதும் மனந்தளராமல் தங்கள் கொள்கையில் பிடிப்புடன் இருக்கும் இவர்களுக்கு ஒருநாள் விடியாமலா போகும்?
கதையின் இறுதியில் கதாநாயகியின் ஏக்க வார்த்தைகள் மூலம் கதாசிரியர் இந்த பாழாய்ப்போன சமூகத்துக்கு சாட்டையடி கொடுக்கிறார், ஒரு மாட்டுக்கு இருக்கும் மதிப்பு இங்கொரு மனுஷிக்கு இல்லையே… என்று. சாதாரணமாய்ச் சொன்னாலும் எவ்வளவு பெரிய சொடுக்கு! உண்மைதானே… மறுக்கமுடியுமா உங்களால்? நீங்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி, நாய்களுக்குக் கூட கிடேரியும், பெட்டையும் பிறக்கவேண்டுமென்று விரும்புவீர்கள். ஆனால் ஒரு பெண்ணுக்கு பெண் பிறந்தால் முகத்தைச் சுழிப்பீர்கள். என்ன ஒரு பாரபட்சம்?
நான் அவளிடத்தில் துளியளவு இருந்தாலும், இருப்பதை மறைக்காமல் துணிவோடு சொல்லும் அவளது, அவளுடைய பெற்றோரது நல்ல உள்ளத்தைப் புரிந்துகொள்ளுங்கள். இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட நேர்மையான உள்ளங்களைக் காண்பதே அரிது என்பதை உணருங்கள். நல்லதொரு மனையாளாய் அவளை ஏற்று வாழ்வியுங்கள் இளைஞர்களே… உண்மை சற்றே வெண்மை அல்ல, உண்மை முழுவதும் வெண்மை என்று உங்கள் பால்மனத்தால் உலகுக்குப் பறைசாற்றி அவளைப் பரவசப்படுத்துங்கள்.
வெள்ளமாய் என் மனத்தைத் திறந்துவிட்டேன். வெள்ளையாய் என் எண்ணங்களைப் பகிர்ந்துவிட்டேன். இனி உள்ளந்திறப்பது உங்கள் கையில்தான் உள்ளது!
பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்காக
வெண்மையையே உண்மையாகப் பேச வைத்துள்ள கற்பனை
மென்மையாகவும் மேன்மையாகவும் உள்ளது.
பிரியமுள்ள கோபு
-oOo-
மிகக்கடினமான இந்த வேலையை
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
நடுவர் அவர்களின்
வழிகாட்டுதல்களின்படி
முதல் பரிசுக்கான தொகை
இவ்விருவருக்கும்
சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.
-oOo-
இன்றைய முதல் பரிசினை வென்றுள்ள இருவரில்
ஒருவருக்குப் புகுந்த வீடு ....................... திருச்சி !
மற்றொருவருக்குப் பிறந்த வீடு ....................... திருச்சி !!
மொத்தத்தில் எனக்கு இதில் மகிழ்ச்சியோ .................... மகிழ்ச்சி !!!
இன்றைய முதல் பரிசினை வென்றுள்ள இருவரில்
ஒருவருக்குப் புகுந்த வீடு ....................... திருச்சி !
மற்றொருவருக்குப் பிறந்த வீடு ....................... திருச்சி !!
மொத்தத்தில் எனக்கு இதில் மகிழ்ச்சியோ .................... மகிழ்ச்சி !!!
-oOo-
போட்டியில் பரிசு பெற்றுள்ள மற்றவர்கள்
பற்றிய விபரங்கள் தனித்தனிப்
பதிவுகளாக பல மணி நேர இடைவெளிகளில்
ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.
இணைப்புகள் இதோ:
காணத்தவறாதீர்கள் !
oooooOooooo
இதுவரை முதல் பன்னிரண்டு கதைகளுக்கான
விமர்சனப் போட்டி பரிசு முடிவுகள்
முற்றிலுமாக வெளியிடப்பட்டுள்ளன.
சிறுகதை விமர்சனதாரர்களா ..... கொக்கா !
இதுவரை ஹாட்-ட்ரிக்
வெற்றியாளர்கள்
பட்டியலில் உள்ளோர் :
1) சாதனைப் பெண்மணி
கீதமஞ்சரி
திருமதி
கீதா மதிவாணன்
அவர்கள்
[VGK-04 To VGK-06]
தொடர்ச்சியாக அடுத்தடுத்து
[VGK-08 To VGK-10]
மீண்டும்
தொடர்ச்சியாக அடுத்தடுத்து
மூன்று முறைகள் வெற்றி
5] திரு.
E.S. சேஷாத்ரி
(காரஞ்சன் - சேஷ்) அவர்கள்
[ VGK-10 To VGK-12 ]
இந்தப்பட்டியலில் அடுத்தது யார் ?
இதைப்படித்துக்கொண்டிருக்கும்
நீங்களாகவும் இருக்கலாம் !
oooooOooooo
ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள்
பட்டியலில் இம்முறை
மேலும் முன்னேற்றத்துடன்
எட்டியுள்ள
விமர்சன வித்தகி*
விமர்சன வித்தகி*
திருமதி.
கீதா மதிவாணன்
அவர்களுக்கு
நம் ஸ்பெஷல் பாராட்டுக்கள் +
நல்வாழ்த்துகள்.
என்ற இந்தப்பொருத்தமான பட்டத்தினை
முன்மொழிந்து, வழிமொழிந்த
முன்மொழிந்து, வழிமொழிந்த
ஹாட்-ட்ரிக் பட்டியலில் இன்று
புதிதாக இடம்பெற்றுள்ள
திரு. E.S. சேஷாத்ரி * அவர்கள்
மற்றும்
திருமதி. ராதாபாலு * அவர்கள்
ஆகிய இருவருக்கும்
நம் ஸ்பெஷல் பாராட்டுக்கள் +
* இவர்கள் இருவரின் தொடர் வெற்றியினைப் பொறுத்து
ஹாட்-ட்ரிக் பரிசுக்கான தொகை பிறகு நிர்ணயிக்கப்படும்.
அது பற்றிய மேலும் விபரங்களுக்கு இணைப்பு:
oooooOooooo
அனைவரும் தொடர்ந்து
ஒவ்வொரு வாரப்போட்டியிலும்
உற்சாகத்துடன் பங்கு கொண்டு
சிறப்பிக்க வேண்டுமாய்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOooooo
இந்த வார சிறுகதை
விமர்சனப் போட்டிக்கான
இணைப்பு:
வரும் வியாழக்கிழமை
24.04.2014
இந்திய நேரம்
இரவு 8 மணிக்குள்.
இந்த வார சிறுகதை
விமர்சனப் போட்டிக்கான
இணைப்பு:
கதையின் தலைப்பு:
VGK-14
” நீ .... முன்னாலே போனா ....
நா .... பின்னாலே ....வாரேன் ! ”
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
வரும் வியாழக்கிழமை
24.04.2014
இந்திய நேரம்
இரவு 8 மணிக்குள்.
===
இன்று 22.04.2014 செவ்வாய்க்கிழமை
திருச்சி டவுன் வாணப்பட்டரை மஹமாயீ [ மாரியம்மன்]
தேர்த்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
சற்று முன்பு மதியம் சுமார் 1.30க்கு மேற்படி தேர்
என் வீட்டு வாசலுக்கு வந்தபோது,
என் வீட்டு ஜன்னல் கம்பிகளின் வழியே
எடுக்கபட்ட படங்கள் இதோ:
தொடர்புடைய பதிவுகள்:
தெய்வம் இருப்பது எங்கே ?
குலதெய்வமே உன்னைக் கொண்டாடுவேன்
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
இரண்டு விமர்சனங்களும் மிக நன்று. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் சொல்லி அழகாய் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.
பதிலளிநீக்குதிருமதி ராதா பாலு மற்றும் திருமதி கீதமஞ்சரி ஆகிய இருவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
தொடர்ந்து முதல் பரிசினைப் பெற்று சாதனை படைத்துக் கொண்டிருக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும், திருமதி ராதா பாலு அவர்களுக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள். தொடர்ந்து வெற்றிமாலை சூடப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குதிருமதி ராதாபாலு அவர்களுக்கும், விமர்சன வித்தகி சகோதரி திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குபரிசு பெற்றோருக்கு என் மகிழ்வான வாழ்த்துக்கள்! தொடர்க தங்கள் புதுமைப் போட்டி!
பதிலளிநீக்குமுதல் பரிசினைப்பகிர்ந்துகொண்டிருக்கும் இருவருக்கும் மகிழ்ச்சி கலந்த இனிய வாழ்த்துகள்...
பதிலளிநீக்குவித்தியாசமான அருமையான விமர்சனங்களுக்கு
மனம் நிறைந்த பாராட்டுக்கள்..
என் விமரிசனத்தை முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும், ஹாட்-ட்ரிக் வெற்றியை புலிவாலுக்கு உவமையாக்கி என்னை ஏகமாகப் பாராட்டிய திரு கோபு சார் அவர்களுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குஉண்மையிலேயே இந்த வெற்றிகள் புலிவாலைப் பிடித்த அளவுக்கு கடினமானவைகள்தான். இந்த அளவுக்கு என்னை எழுத ஊக்கம் கொடுத்த ஆசிரியர் அவர்களுக்கு மீண்டும் நன்றிகள் பல.
முதல் பரிசை என்னுடன் பகிர்ந்துகொண்ட 'ஆட்ட நாயகி', 'விமரிசன வித்தகி' திருமதி கீதாவுக்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்! ஆட்டம் தொடரட்டும் கீதா!
என்னைப் பாராட்டிய அன்பு நண்பர்களுக்கு நன்றிகள்.
திருமதி ராதா பாலு மற்றும் விமர்சன வித்தகி திருமதி கீதமஞ்சரி ஆகிய இருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்! தொடரட்டும் உங்கள் வெற்றி!
பதிலளிநீக்குதிருமதி. ராதா பாலு,
பதிலளிநீக்குதிருமதி. கீதமஞ்சரி இருவருக்கும்
நல்வாழ்த்துக்கள்.
இரு விமர்சனங்களும் வித்தியாசமாய் இருந்தன.
முதல் பரிசினை வென்ற சகோதரிகள் ராதாபாலு மற்றும் கீதா மதிவாணன் இருவருக்கும் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமுதல் பரிசு முதல் கட்டுரையில் அந்த கடைசி பாராவை மட்டும் நீக்கி விட்டு, 'வெண்மையல்ல; கறுமை' என்று தலைப்பிட்டுப் பாருங்கள். இது வேறே ஒரு கதை மாதிரி தெரியும்; அதாவது வை.கோ. சாரின் கதை மாதிரியேவான இன்னொரு கதை.
பதிலளிநீக்குஇந்த பாணி நன்றாகத் தான் இருக்கிறது. அருமையாகவும் வந்திருக்கிறது. சிறப்பான எழுத்தும் கூட. இருந்தாலும் ஒரு குறை. இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டிருந்தால் கோபு சாரின் கதைக்கான விமரிசனக் கதையாக இதையே மாற்றியிருக்கலாம்.
வாழ்த்துக்கள்.
http://enmanaoonjalil.blogspot.com/2014/04/blog-post_20.html
பதிலளிநீக்குதிருமதி. ராதாபாலு அவர்கள்
இந்த வெற்றியாளர், தான் பரிசு பெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
மீண்டும் பரிசுக்குரியதாய்... அதுவும் முதல் பரிசுக்குரியதாய் என் விமர்சனம் நடுவர் அவர்களால் தேர்ந்தெடுகப்பட்டது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்தடுத்தப் போட்டிகளில் இந்தப் பெருமையைத் தக்கவைக்க வேண்டிய பொறுப்பும் கூடிப்போவதை உணர்கிறேன். இப்படியொரு அருமையான வாய்ப்பினை அளித்தமைக்கும் அழகழகான பட்டங்களால் அறிமுகப்படுத்தியுள்ளமைக்கும் அகம் நெகிழ்ந்த நன்றி கோபு சார்.
பதிலளிநீக்குமுதல் பரிசினைப் பகிர்ந்துகொண்டுள்ள திருமதி ராதா பாலு அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். புலிவாலைப் பிடித்த கதையாகத் தொடர்ந்து பல பரிசுகள் வென்றிட இனிய வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள், கீதமஞ்சரி!
பதிலளிநீக்குநீங்கள் எழுத எடுத்துக் கொண்ட விஷயம் என்னவோ வெண்மை நிறம் தன் கதையைத் தானே சொல்கிற மாதிரியான பாவனை. ரொம்ப இயல்பாய் ஆரம்பித்திருக்கிறீர்கள்.
அந்தக் கதையோடு கோபு சாரின் கதையையும் இழைத்து எவ்வளவு திறமையாக விமர்சன இழைகளைப் பின்னியிருக்கிறீர்கள்!
விமரிசனங்களை மாறுபட்ட கோணங்களில் எப்படி அமைக்கலாம் என்பதற்கு இலக்கணமாய் திகழ்கிறது இந்த உங்கள் விமரிசனம்.
வியக்கிறேன். வாழ்த்துக்கள், கீதமஞ்சரி!
தங்களுடைய ஊக்கமிகு வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி ஜீவி சார். தொடர்ந்து சிறப்பாக எழுதவேண்டியதன் அவசியத்தை உணர்கிறேன். மிக மிக நன்றி தங்களுக்கு.
நீக்குஅன்புடையீர்,
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம்.
இந்தப்பதிவின் இறுதியில் ஒருசில புகைப்படங்களும், சூடான சுவையான செய்திகளும், இப்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.
இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு
22.04.2014
14.12 Hrs.
திருச்சி டவுன் வாணப்பட்டரை மஹமாயீ [ மாரியம்மன்]
பதிலளிநீக்குதேர்த்திருவிழா மிகச்சிறப்பான படங்கள்..பாராட்டுக்கள்..!
பரிசு பெற்றவர்களுக்கும், பரிசு கொடுத்தவருக்கும்
பதிலளிநீக்குபாராட்டுக்கள்
பாராட்டிய அனைவருக்கும் என் அன்பான நன்றிகள் பல.
பதிலளிநீக்குஇந்த வெற்றியாளர் ’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்கள் தான் பெற்றுள்ள இந்த வெற்றியினைத் தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
பதிலளிநீக்குஇணைப்பு:
http://geethamanjari.blogspot.in/2014/06/blog-post_16.html
தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
புலி வாலைப் பிடித்த திருமதி ராதா பாலு அவர்களைப் பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
பதிலளிநீக்குபரிசு வென்றவர்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபரிசு பெற்ற, ஏற்கனவே பெற்ற, இனியும் பெறப்போகிற தோழ, தோழியர் அனைவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதிருமதி ராதா பாலு (புலி வாலையே புடிச்சுட்டாங்க, இதெல்லாம் அவங்களுக்கு ஜுஜுபி போல) அவர்களுக்கும் விமர்சக வித்தகி திருமதி கீதா மதிவாணன் (மதின்னா என்ன புத்தி, கூடவே இருக்கும் போது பரிசு மழையில நனையாம இருக்க முடியுமா?) அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
Jayanthi Jaya September 28, 2015 at 7:01 PM
நீக்குவாங்கோ ஜெயா, வணக்கம்மா.
//பரிசு பெற்ற, ஏற்கனவே பெற்ற, இனியும் பெறப்போகிற தோழ, தோழியர் அனைவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
திருமதி ராதா பாலு (புலி வாலையே புடிச்சுட்டாங்க, இதெல்லாம் அவங்களுக்கு ஜுஜுபி போல) அவர்களுக்கும் விமர்சக வித்தகி திருமதி கீதா மதிவாணன் (மதின்னா என்ன புத்தி, கூடவே இருக்கும் போது பரிசு மழையில நனையாம இருக்க முடியுமா?) அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//
தங்களின் அன்பான வருகைக்கும் ஆத்மார்த்தமான, அழகான, வெளிப்படையான சிறந்த கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + இனிய நன்றிகள், ஜெயா.
பிரியமுள்ள கோபு அண்ணா
வமரிசனங்க நல்லா எளுதிருக்காங்க. வாழ்த்துகள். இப்பூடில்லா விமரிசனம்லா எளுத ரொம்ப தெறம வேணும். அவங்க கிட்டால நெறய இருக்குது.
பதிலளிநீக்குதிருமதி ராதாபாலு திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள். ரெண்டு பசுமாடுகள் பேசிக்கொள்வது போல வித்யாசமான பின்னாட்டம் நல்லா இருக்கு.
பதிலளிநீக்கு//காராம்பசுவைக் கன்னிப் பெண்ணுக்கு உவமையாக்கி ஒரு சுவாரசியமான கதையை எழுதிய ஆசிரியருக்கு பாராட்டுக்கள்!//
பதிலளிநீக்கு//உண்மை எப்போதும் என்னோடு கைகோர்த்தபடிதானே உலாவரும்? அதனால்தானே உண்மையின் நிறம் வெண்மை என்று சொல்லப்படுவதுண்டு. அதென்ன உண்மை சற்றே வெண்மை? இங்கே கதாசிரியர் தன் கதையில் குறிப்பிடும் வெண்மையான என்னைப்பற்றித் தெரிந்துகொண்டால் உங்களால் வியக்காமல் இருக்கமுடியாது. இப்படியொருதலைப்பிட்டதன் மூலம் அவர் உங்களுக்கு எதையோ சூசகமாக உணர்த்தத் தலைப்படுகிறார் என்பதைப் புரிந்துகொண்டீர்கள் அல்லவா?// ஆமாம்.
பரிசுக்கு வாழ்த்துகள்..
திருமதி ராதா பாலு மற்றும் விமர்சன வித்தகி திருமதி கீதமஞ்சரி ஆகிய இருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்! தொடரட்டும் உங்கள் வெற்றி!
பதிலளிநீக்கு