என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 17 ஜூலை, 2013

26] குறையொன்றும் இல்லை

2
ஸ்ரீராமஜயம்




வெளிப்பொருள் ஏதோ கிடைக்காததால் நமக்குக்குறை வந்து விட்டதாக துக்கப்படுவது சுத்த தப்பு.  நமக்குக்குறையே இல்லை.  நமக்குள் நாமே பூரணப்பொருள். 

நமக்கு அந்நியமாக வெளி என்றே ஒன்றும் இல்லை. வெளியிலே இருக்கிற அத்தனை ஆனந்தமும் நமக்குள்ளேயே அடக்கம்.

கோபத்திலே பல பாபங்களைச் செய்கிறோம். கோபத்திற்கு காரணம் ஆசை. காமம். 

காமத்தை, ஆசையை ஒழிக்க வேண்டும். பற்றை நிறைய வளர்த்துக்கொண்டு காரியம் செய்யாமல் இருப்பது என்பது முடியாது. பற்றை ஒழித்துவிட்டால் பாபம் செய்யாமல் இருக்கலாம்.


வெளிப்பொருள்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தே தான் ஆனந்தம் பிறக்கிறது.



oooooOooooo

அற்புத நிகழ்வுகள் 

வில்வ இலைகளை 
வைத்து விட்டுப்போனது யார்?

மஹாஸ்வாமிகளை உருக வைத்த நிகழ்ச்சி.

[பகுதி-1  படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/21.html  ]

[பகுதி-2  படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/22.html  ]     

[பகுதி-3  படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/23.html  ]   

[பகுதி-4  படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/24.html ]   


பகுதி 5  of  9

மதியம் 3.00 மணி. அந்த சிறுவன் சொன்னபடி வந்து சேர்ந்தான். தயங்கியபடியே முற்றத்துச் சுவர் ஓரம் நின்றிருந்த அவனைக்காட்டி, ஸ்வாமிகளிடம் ஏதோ கூறினார் ஸ்ரீகார்யம். 

அவனைக்கிட்டே வரும்படி ஸ்வாமிகள் அழைத்தார். அருகே வந்தவன், சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்துவிட்டு, கைகட்டி நின்றான்.

அவனது தோற்றத்தைப் பார்த்த ஆச்சார்யாளுக்கு சிரிப்பு வந்து விட்டது.  எண்ணெய் தடவி வாரி முடிந்த கட்டுக்குடுமி, மூலக்கச்சமாக வெள்ளை வேஷ்டி கட்டி இருந்தான். நெற்றி, உடம்பில் விபூதிப்பட்டை. பளிச்சென்று இருந்தான்.   

அவனை முற்றத்தில் அமரும்படி சைகை காட்டிச்சொன்னார் ஸ்வாமிகள்.  ஆனால் அவன் அமரவில்லை.

”பேரு என்ன?” ஸ்வாமிகள் தெலுங்கில் கேட்டார்.

அவன், ‘புரந்தரகேசவலு’ என்று ஸ்பஷ்டமாகத் தமிழில் பதில் சொன்னான். 

உடனே ஆச்சார்யாள் ஆச்சர்யத்தோடு, “பேஷ்.... நன்னா தமிழ் பேசறியே நீ!’” ன்னு கேட்டுவிட்டு, ”என்ன ... என்ன பேரு சொன்னே?” என்று மீண்டும் கேட்டார்.

“புரந்தரகேசவலுங்க!” - நிறுத்தி நிதானமாகக் கூறினான அந்தச் சிறுவன்.

”தமிழ்ல பேசறியே நீ?” என்று புருவங்களை உயர்த்தினார் ஆச்சார்யாள்”

“என் கதையை நீங்க கேக்கணும்ங்க சாமி.....” அவன் கண்களில் நீர் கோர்த்தது.

”பேஷா .... சொல்லு ... சொல்லு...” - அவனை உற்சாகப்படுத்தினார் ஸ்வாமிகள். 

புரந்தரகேசவலு தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தான்:

தொடரும்......

oooooOooooo


தேடினேன் ...... வந்தது !

நாடினேன் ........ தந்தது !!

வாசலில் ........ நின்றது !!!

வாழவா ....... என்றது !!!!

இப்படி, ஜாலியாகப் பாட்டுப்பாடிக்கொண்டிருக்கும் அந்த இளம்பெண் [பதிவர்] யார்? 

அவர் வேறு யாருமில்லை. 

நம் பதிவர் செல்வி. ’யுவராணி தமிழரசன்’ அவர்கள் தான். 




வலைத்தளத்தின் பெயர்: ’கிறுக்கல்கள்’


அவருக்கு என்ன அப்படியோர் திடீர் சந்தோஷம் ஏற்பட்டுள்ளது? 

விடை காண விரும்புவோர், முதலில் கீழே உள்ளவற்றைப் பொறுமையாகப் படியுங்கள்.

வலைச்சரத்தின் [19.11.2012 - 25.11.2012] ஆசிரியர் யுவராணி தமிழரசன் எழுதியுள்ளவை:


என் மீது நம்பிக்கை வைத்து பரிந்துரைத்து வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்த திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும், வாய்ப்பளித்த திரு.சீனா ஐயா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
               
கிறுக்கல்களை ரசித்து வண்ணத்தீட்டல்களால் அவ்வப்போது என்னை ஊக்கப்படுத்திப்போகும் அழகிய ஓவியங்களுக்கு எனது நன்றிகள் என்றென்றும்!

இங்கு என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள நான்  யுவராணி தமிழரசன் . ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தை சேர்ந்தவள்! (அதே சந்தனக்கடத்தல் வீரப்பன் வாழ்ந்த ஊரே தான்).

பயில்வது இறுதி ஆண்டு முதுகலை கணிப்பொறி பயன்பாட்டியல். 

15 வயதில் கவிதைகளென கிறுக்க ஆரம்பித்து பின் கல்லூரி சேர்ந்த பிறகே கிறுக்கியதை செதுக்கி உயிர்பிக்க ஆரம்பித்தேன். உயிர்பித்து அறிமுகப்படுத்த தவித்திருக்கையில் தோழியின் சொல் கேட்டு வலையுலகத்தில் கால் பதித்தேன். இன்று ஓராண்டை கடந்து போகும் என் பதிவுலக பயணம் கற்றுக்கொடுத்தவை ஏராளம். 

தேர்ந்தெடுத்தது தகவல் தொழில் நுட்பத்துறை என்றாலும் எனது கனவுகளும் ஆசைகளும் அணைத்துக்கொண்டு அடையத்துடிப்பது வங்கித் துறையின் வேலைவாய்ப்பினை தான். 

சரியான வழிநடத்துதலும் ஆலோசனைகளும் இன்றி வேறு துறையில் கல்வி பயின்றும் இன்றும் கூகிளின் துணையோடும் சில நட்பு வட்டங்களின் துணையோடும் முயற்சித்தும் என்னால் நான் விரும்பும் வங்கித்துறையில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லையா? இல்லை கிடைக்கும் வாய்ப்பினை எனதாக்கிக்கொள்ள தெரியவில்லையா? என அறியத்தவித்தும் தகவல் தொழில்நுட்பத்துறையில் வளாகத்தேர்வில் வேலை பெற்று இன்னும் சில மாதங்களில் வேலைக்குச் சேரப்போகிறேன். 

நினைத்தது அனைத்தும் கிடைத்துவிட்டால் வாழ்க்கை அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது என்பதில் எனக்கு என்றும் நம்பிக்கையுண்டு 

அதனால் சூழலுக்கு ஏற்ப வாழப்பழக எளிதாகும். மேலும் உகந்த உழைப்பின்றி கிடைக்கும் அனைத்து வெற்றிகளும் சந்தோஷத்தை அளித்தாலும் அது மேலும் அடுத்த கட்ட பயணத்தை தளர்த்தச்செய்து வெற்றிப்படிகளை விலக்கி வைக்கும்.

அதனால் இப்போதைக்கு எதை பற்றியும் கவலைப்படாமல் நேற்று முடிந்த பரிட்சையோடு எனது இரண்டரை ஆண்டு முதுகலை பட்டத்தை முடித்துவிட்டு அடுத்த ஆறுமாதங்கள் செய்யவேண்டிய பிராஜக்ட் -க்கு நான் வேலைக்கு தேர்வாகி உள்ள நிறுவனத்தின் பதிலுக்காக காத்திருக்கிறேன் எனது கல்லூரி வாழ்க்கையின் கடைசி துளியை அனுபவித்தபடி.
   
ooooooooooooOoooooooooooo





November 19, 2012 at 10:45:00 AM GMT+5:30 

வை.கோபாலகிருஷ்ணன் said...

// சரியான வழிநடத்துதலும் ஆலோசனைகளும் இன்றி வேறு துறையில் கல்வி பயின்றும் இன்றும் கூகிளின் துணையோடும் சில நட்பு வட்டங்களின் துணையோடும் முயற்சித்தும் என்னால் நான் விரும்பும் வங்கித்துறையில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லையா? இல்லை கிடைக்கும் வாய்ப்பினை எனதாக்கிக்கொள்ள தெரியவில்லையா?//
என்னால் முடிந்த ஒருசில வழிகாட்டுதலும், ஆலோசனைகளும் தங்களுக்கு விரைவில் மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும். 


ஒரு வேளை அதன் மூலம் தாங்கள் விரும்பும் வங்கித்துறை வேலை வாய்ப்புகள் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. 


அதனால் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். 

நாம் எதுவாக வேண்டும் என நம் ஆழ்மனதினில் நினைக்கிறோமோ, அதற்கான முழு முயற்சிகளில் தொடர்ந்து நாம் ஈடுபடுகிறோமோ, வெகு விரைவில் அதுவாகவே ஆகிவிடுவோம் என்பதே வாழ்க்கையின் இரகசியமாகும். 

அதனால் தாங்கள் நியாயமாக நினைப்பது யாவும் நிச்சயமாக நடக்கும். 

அதற்கு என் மனமார்ந்த ஆசிகளும் வாழ்த்துகளும்.


அன்புடன் VGK
-=-=-=-=-=-=-=-=-=-=-


தங்களைப்பற்றி தெரிந்து கொள்ள ஒன்றொன்றும் என்னை வியக்க வைக்கிறது சார். தங்களது நட்பு கிடைத்தது என்னை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது! தங்களின் ஆசிர்வாதம் அனைத்து வளர்ந்து வரும் எதிர்கால தலைமுறைக்கும் அவசியம் தேவை! 

வை.கோபாலகிருஷ்ணன்November 29, 2012 at 10:05 AM
வாங்கோ யுவராணி, வணக்கம்.

//தங்களிடம் சொன்னதே தான் சார்! இருப்பவர்கள் அனைவருக்கும் கொடுத்துதவ மனம் வருவதில்லை! ஆனால் என்ன ஏதென்று கூட கேட்காமல் தாங்கள் கொடுத்துதவிய பணம் ஒருவரின் வாழ்க்கையையே மாற்றி அமைத்திருக்கிறது என்பதை கேட்க மகிழ்ச்சியாக உள்ளது! தங்களது பணி தொடரட்டும் சார்!//


ஏதோ அன்றையதினம் என்னிடம் ரொக்கமாக வீட்டில் பணம் இருந்தது.

இவர் தன் பெண்ணை எஞ்சினீரிங் காலேஜ் சேர்க்க பணம் கேட்டு என்னிடம் வந்தாலும் வரலாம் என வேறொரு நண்பர் எனக்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தார்.

என்னுடன் SSLC வரை ஒன்றாகவே படித்தவர். எங்கள் அலுவலகத்திலேயே ஒரே துறையில் வேறு செக்‌ஷனில் பணியாற்றியவர். BHEL டவுன்ஷிப்பில் என் வீட்டு அருகிலேயே குடியிருந்தவர். எங்கள் இருவரின் மனைவிகளும் சினேகிதிகளே. [இப்போது அவரும் பணி ஓய்வு பெற்று சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ளார்]

அன்று தன் பெண்ணை பொறியியல் படிப்பில் சேர்க்க வேண்டி என்னிடம் பணம் கேட்டுள்ளார்.

அதனால் படிப்பு விஷயமாக ஒரு சிறிய உதவி செய்யும் பாக்யம் எனக்குக் கிடைத்தது.

அவர்களைப்பொறுத்தவரை அது ஒரு Timely Help. பிறகு ஓரிரு மாதங்களில் பணத்தையும் Prompt ஆகத் திருப்பியளித்து விட்டார்கள்.

//எனக்கும் தங்களிடம் பேனா வாங்க ஆசையாக உள்ளது சார்! படிப்பில் சாதிக்க வேண்டிய காலம் கடந்துவிட்டாலும் பரவாயில்லை சார்! வாழ்க்கையில் சாதிக்க வேண்டிய தருணங்கள் நிறைய இருக்கிறது! தங்களை சந்திக்கும் தருணம் எனக்கு அமைந்தால் நிச்சயம் நானும் பேனா கேட்பேன்!//

சந்தோஷமாக உள்ளது யுவராணி. சந்திக்கும் தருணம் அமைந்தால், தாங்கள் ஒருவேளை கேட்க மறந்து விட்டாலும், எனக்கு ஞாபகம் வந்தால், கட்டாயம் நானே உங்களுக்குப் பேனா கொடுக்கிறேன். கவலைப்படாதீங்கோ.

நான் அளிக்கும் அதே பேனாவுடன் தாங்கள் ஓர் வங்கி அதிகாரியாக பணி ஏற்கும் வாய்ப்பு அமையலாம் என நான் நம்புகிறேன். ALL THE BEST, YUVARANI ;)))))

பிரியமுள்ள
VGK

***** நான் அளிக்கும் அதே பேனாவுடன் தாங்கள் ஓர் வங்கி அதிகாரியாக பணி ஏற்கும் வாய்ப்பு அமையலாம் என நான் நம்புகிறேன். ALL THE BEST, YUVARANI ;))))) *****

மிக்க நன்றி சார்! அத்தருணத்திற்காக காத்திருக்கிறேன்!

ooooooooooo
யுவராணி தமிழரசன் January 3, 2013 11:51 PM
***** நான் அளிக்கும் அதே பேனாவுடன் தாங்கள் ஓர் வங்கி அதிகாரியாக பணி ஏற்கும் வாய்ப்பு அமையலாம் என நான் நம்புகிறேன். ALL THE BEST, YUVARANI ;))))) *****
//மிக்க நன்றி சார்! அத்தருணத்திற்காக காத்திருக்கிறேன்!//

அந்த நாளும் விரைவில் வந்திடும். கவலை வேண்டாம்.

அன்புடன்
கோபு
oooooOooooo


http://gopu1949.blogspot.in/2012/03/4.html என்ற இதே பதிவினில் புதுமுகமாக வருகை தந்து மிகச்சிறப்பாக பல்வேறு கருத்துக்கள் கூறியுள்ள Mr. Seenivasan Ramakrishnan [ORCHILD] அவர்களின், பின்னூட்டங்கள் என் மனதை மிகவும் நெகிழச்செய்தன. 

அவருக்கும் அவரின் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள் + வாழ்த்துகள். 

மீண்டும் அடிக்கடி என் வலைப்பக்கம் வாங்கோ ..... ஐயா .... ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஐயா. ;)))))


- பிரியமுள்ள கோபு  



oooooOooooo




செல்வி யுவராணி அவர்களுக்கு என்ன அப்படியோர் 
திடீர் சந்தோஷம் ஏற்பட்டுள்ளது, என்பதை உங்களால் 
இப்போது ஓரளவுக்கு யூகிக்க முடிந்திருக்கும்.


தேடினேன் ...... வந்தது !


என்ன வந்தது? எப்படி வந்தது?


நாடினேன் ........ தந்தது !!


எதைத்தந்தது? யார் தந்தது?


அதைப்பற்றிய முழு விபரங்களும் 
என் அடுத்த பதிவினில் சொல்லி விடுகிறேன்.




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

இதன் தொடர்ச்சி 19.07.2013 
வெள்ளிக்கிழமை வெளியாகும்





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

46 கருத்துகள்:

  1. மஹா பெரியவாள் தொடர் மன நிறைவை தருகிறது! செல்வி யுவராணி அவர்களுக்கு வங்கி வேலை கிடைத்து விட்டது என்று நினைக்கிறேன்! அடுத்த பதிவில் மீதியை தெரிந்து கொள்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  2. முதலில் /// நமக்குள் தான் எல்லாமே பிறக்கிறது // அருமை...

    தங்களின் ஆசிர்வாதத்துடன் யுவராணி தமிழரசன் அவர்களுக்கு நினைத்தது படி எல்லாம் நடக்க வேண்டுகிறேன்... நடக்கும்...

    மஹாஸ்வாமிகளை உருக வைத்த நிகழ்ச்சியை விட இந்நிகழ்ச்சி உருக வைக்கிறது உண்மையில்... வாழ்த்துக்கள் ஐயா... மேலும் பல விபரங்களை அறியும் ஆவலுடன் காத்திருக்கிறேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஐயா , நான் விடுமுறைக்கு வந்திருந்தபோது தங்களை சந்திக்க முடிந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் .மேலும் முன்னறிவிப்பு இல்லாமல் வந்தும் நல்ல முறையில் வரவேற்று உபசரித்த உங்களுக்கும் , வீட்டுக்கரர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஜீமும்அற்புதவிளக்கும் July 17, 2013 at 5:06 AM

      //வணக்கம் ஐயா , நான் விடுமுறைக்கு வந்திருந்தபோது தங்களை சந்திக்க முடிந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் முன்னறிவிப்பு இல்லாமல் வந்தும் நல்ல முறையில் வரவேற்று உபசரித்த உங்களுக்கும், வீட்டுக்காரர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.//

      அன்பு நண்பர் திரு. அஜீம் பாஷா அவர்களே,

      வாருங்கள், வணக்கம். தங்களை அன்று சந்தித்ததில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே.

      நம் சந்திப்பு பற்றி, போட்டோக்களுடன், என் கீழ்க்கண்ட இணைப்பினில் எழுதியுள்ளேன்.

      http://gopu1949.blogspot.in/2013/07/19.html தயவுசெய்து பாருங்கள்.

      தங்களின் மெயில் விலாசம் + திருச்சி விலாசம் + கைபேசி எண் முதலியவற்றை தயவுசெய்து எனக்கு மெயிலில் அனுப்பி வைக்கவும். அன்று நேரில் உங்களைச் சந்தித்தபோது இவற்றை வாங்கிக்கொள்ள மறந்து விட்டேன். அதனால் உங்களை என்னால் பிறகு தொடர்புகொண்டு பேசவே முடியாமல் போய் விட்டது. ;( அதற்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன்.

      என் மெயில் விலாசம்: valambal@gmail.com

      நல்லபடியாக செளதி சென்றடைந்திருப்பீர்கள் என நம்புகிறேன். மற்ற விஷயங்கள் மெயில் மூலம் பேசுவோம்.

      என்றும் அன்புடன் VGK



      நீக்கு
  4. வெளிப்பொருள் ஏதோ கிடைக்காததால் நமக்குக்குறை வந்து விட்டதாக துக்கப்படுவது சுத்த தப்பு. நமக்குக்குறையே இல்லை. நமக்குள் நாமே பூரணப்பொருள்.

    பூரணப்பொருளை குறைவின்றி
    பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  5. மஹாஸ்வாமிகளை உருக வைத்த நிகழ்ச்சி.

    நெகிழவைத்தது ..!

    பதிலளிநீக்கு
  6. ஜகத் குருவின்தொடர் மனதிற்கு மிக நிறைவைத் தருகிறது
    தொடர்ந்து தொடர வாழ்த்துக்கள்
    யுவராணி அவர்களின் எழுத்தின் ரசிகர் நான்
    தங்கள் அன்பும் ஆசியும் பெற்ற அவர் எல்லா
    வளங்களையும் நலங்களையும் பெற
    வேண்டிக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு

  7. ஒவ்வொரு பதிவிலும் மனசில் நிற்கும்படியாகச் சில செய்திகளைச் சொல்லிச் செல்லும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  8. நமக்குள் நாமே பூரணத்துவம் என்பதை அழகாக சொன்னீர்கள் ஐயா. யுவராணி தோழிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. புரந்தர கேசவலுவின் கதையை கேட்க ஆவலாக இருக்கிறேன்.
    மஹா பெரியவா சொல்வது போல நம் யாருக்கும் எந்தக் குறையும் இல்லை! அவரது அருள் அமுதத்தை தவறாமல் பருகுபவர்களுக்கு என்ன குறை இருக்க முடியும்?

    யுவராணி அவர்களுக்கு அவர் தேடியது கிடைத்து வாழ்க்கையில் எல்லா நலன்களும் பெற்று சிறப்புற வாழ வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  10. வெளிப்பொருள்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தே தான் ஆனந்தம் பிறக்கிறது.//
    aRputham.புரந்தர கேசவலுவின் கதையை அறிய ஆவலாக இருக்கிறேன்//நன்றி!

    பதிலளிநீக்கு
  11. வெளிப்பொருள் ஏதோ கிடைக்காததால் நமக்குக்குறை வந்து விட்டதாக துக்கப்படுவது சுத்த தப்பு. நமக்குக்குறையே இல்லை. நமக்குள் நாமே பூரணப்பொருள்

    Its really a lesson for me.
    But cannot be sorrow for last thing.
    i think i can get gnana soon.
    Like to know whether she got the bank job?

    Waiting for the next post about Paramachariya.
    viji

    பதிலளிநீக்கு
  12. வெளிப்பொருள்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தே தான் ஆனந்தம் பிறக்கிறது.//

    காலங்கார்த்தாலே ஒரு நல்ல வார்த்தை!!

    பதிலளிநீக்கு
  13. \\வெளிப்பொருள்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தே தான் ஆனந்தம் பிறக்கிறது.\\

    இதை உணர்ந்தால் போதும், வாழ்க்கை இனிமையாய் அமைந்துவிடும்.

    தங்களின் வழிகாட்டுதலாலும் ஆசிர்வாதத்தாலும் யுவராணி தமிழரசன் அவர்களுக்கு அவர் விரும்பிய பணி கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். பாராட்டுகள்.

    புரந்தரகேசவலுவின் கதை என்னவென்று அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். இனிதே தொடரட்டும் அற்புத நிகழ்வுகள்.

    பதிலளிநீக்கு
  14. ஒவ்வொரு பதிவும் உருக வைக்கும் பதிவு அய்யா. புரந்தர கேசவலுவின் கதையினை அறிய ஆவலுடன் காத்திருக்கின்றேன்

    பதிலளிநீக்கு
  15. //வெளிப்பொருள்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தே தான் ஆனந்தம் பிறக்கிறது.//

    இதனைப் புரிந்து கொண்டால் ஆனந்தமே!.....

    பதிலளிநீக்கு
  16. தொடர் அற்புதமாக செல்லுகிறது... யுவராணி அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
  17. புரந்தர்கேசவலுவின் கதை தெரிய ஆவல். மகா பெரியவர் அந்த சிறுவனுக்கு வழங்கிய அருளனுபவம் பற்றியும் தெரிந்து கொள்ள ஆவல்.

    யுவராணிக்கு எனது வாழ்த்துக்களும், ஆசிகளும்.

    பதிலளிநீக்கு
  18. யுவராணி வாழ்க்கையில் எல்லா நலன்களும் பெற்று சிறப்புற வாழ வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  19. \வெளிப்பொருள்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தே தான் ஆனந்தம் பிறக்கிறது.\ நல்லமுதம்.
    யுவராணிக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. உங்கள் பதிவில் பழங்காலத்து கதைகள் போல், கதைக்குள் பல கதைகள். எல்லாவற்றிலும் ஒரு சஸ்பென்ஸ்.

    பதிலளிநீக்கு
  21. உண்மை
    உண்மை
    உணரும்போதுதான்
    அது இனிக்கும்
    அதுவரை அதை
    தேடிக்கொண்டிருக்கவேண்டும்
    அயர்ச்சியில்லாது

    பதிலளிநீக்கு
  22. congrats to yuvarani ji and wish her all the very best for her future. Hopefully she got the bank job...
    will continue reading, thank you very much sir for sharing it with us...

    பதிலளிநீக்கு
  23. யுவராணி அவர்களுக்கு வங்கிப்பணி கிடைத்திருக்கும் என நினைக்கிறேன். ..

    பதிலளிநீக்கு
  24. யுவராணி என்பவரை இன்று வரை கேட்டதில்லை. அறிமுகத்திற்கு நன்றி. அவருக்கு வங்கி வேலை கிடைத்திருக்கும் என நம்புகிறேன். அவர் சந்தோஷத்துக்கு அதுவே காரணமாக இருக்கும். இல்லையா? வாழ்த்துகள். வலியச் சென்று வேண்டிய உதவிகள் செய்யும் உங்கள் நல்மனத்திற்கும் என் வாழ்த்துகள், பிரார்த்தனைகள். சேவை தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  25. புரந்தர கேசவலு குறித்து அறிந்திருந்தாலும் படிக்கக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  26. //காமத்தை, ஆசையை ஒழிக்க வேண்டும். பற்றை நிறைய வளர்த்துக்கொண்டு காரியம் செய்யாமல் இருப்பது என்பது முடியாது. பற்றை ஒழித்துவிட்டால் பாபம் செய்யாமல் இருக்கலாம்.

    வெளிப்பொருள்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தே தான் ஆனந்தம் பிறக்கிறது.//உண்மை...

    சிறுவனை பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள அடுத்த பகுதிக்கு செல்கிறேன்..

    பதிலளிநீக்கு
  27. வெளிப்பொருள் ஏதோ கிடைக்காததால் நமக்குக்குறை வந்து விட்டதாக துக்கப்படுவது சுத்த தப்பு. நமக்குக்குறையே இல்லை. நமக்குள் நாமே பூரணப்பொருள்.//

    பூரணப் பொருளைத் தெரிந்து கொண்டால் நம் குறையோ, அல்லது வேறு குறையோ தெரியாது என்பது உண்மைதான். ஆனந்தத்தை நம்மில் தான் தேட வேண்டும் அருமையான அருள் மொழிகள்.

    யுவராணிக்கு உங்கள் ஆசீர்வாதத்தால் அவர்கள் விருப்பப்பட்ட வேலை கிடைத்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
    யுவராணிக்கு வாழ்த்துக்கள்.
    உங்கள் உதவும் குணத்திற்கு பாராட்டுக்கள்.
    பிறருக்கு உதவ நல்ல மணம் வேண்டும் அந்த மணம் உங்களிடம் இருப்பது மகிழ்ச்சி.
    சிறுவன் கதையை கேட்க ஆவல்.


    பதிலளிநீக்கு
  28. நம்மிடமிருந்தே ஆனந்தம் பிறக்கிரது.. வெளிப்பொருள்களி டமிருந்து இல்லை. இது மனதில்ப் பதியவைக்க வேண்டும். இந்த வரி அருமையாகயிருக்கிரது. சிந்திக்கத் தூண்டுகிறது. அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான விஷயம். மிகவும் அழகாகப், பயனுள்ளதாகப் போய்க்கொண்டிருக்கிரது உங்கள்ப் பதிவுகள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  29. வெளிப்பொருள்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தே தான் ஆனந்தம் பிறக்கிறது.//

    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
    கிடைத்ததை நினைத்து திருப்திப் படுவோருக்கு நிச்சயம் உள்ளிருந்தே ஆனந்தம் பொங்கும்.

    யுவராணிக்கு வாழ்த்துக்கள்.

    நல்லதைச் செய்யும் தங்களுக்கு என்றும் நல்லதே கிடைக்கும், இறைவன் அருளால்.

    உங்களின் இந்தப் பதிவுகளை அடிக்கடி படிக்கும்போது தீய எண்ணங்கள் மறைந்து நல்லெண்ணங்கள் உருவாகுவது உறுதி.

    பதிலளிநீக்கு
  30. ஆனந்தம் நாம் எண்ணுவதைப் பொருத்ததுதான்.

    தொடருகிறேன்.

    பதிலளிநீக்கு
  31. அன்பின் வை.கோ - புரந்தர கேசவலு - தினந்தினம் வில்வம் கொண்டு வரும் சிறுவன் - ஆச்சார்யாளிடம் தன் கதையைக் கேட்க வேண்டுமென வேண்டுகோள் வைக்கிறான். அவரும் சம்மதிக்கிறார் - நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  32. //கோபத்திலே பல பாபங்களைச் செய்கிறோம். கோபத்திற்கு காரணம் ஆசை. காமம். // பிபி ஏறினாலும் வரும்.. ஹா..ஹா..ஹா...

    பதிலளிநீக்கு
  33. அப்பப்பா மிகுந்த சந்தோஷத்தோடும் பூரிப்போடும் எனது பழைய உரையாடல்களை படிக்கிறேன் சார்!!!! சொன்னது போலவே நான் கேட்டவுடன் நீங்கள் இரண்டே நாட்களுக்குள் பேனா அனுப்பி வைத்ததும் அதே பேனாவில் நான் அப்பாயின்மென்ட் ஆர்டர் சைன் பண்ணினதும் இன்றும் என்னால் நம்பமுடியவில்லை சார்!

    இதை எதையுமே தெரியாமல் நீங்கள் முன்பே இதை சொன்னது எனக்கு இப்பொழுது படிக்க படிக்க மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது சார்!
    ///////
    யுவராணி தமிழரசன் January 3, 2013 11:51 PM
    ***** நான் அளிக்கும் அதே பேனாவுடன் தாங்கள் ஓர் வங்கி அதிகாரியாக பணி ஏற்கும் வாய்ப்பு அமையலாம் என நான் நம்புகிறேன். ALL THE BEST, YUVARANI ;))))) *****
    //மிக்க நன்றி சார்! அத்தருணத்திற்காக காத்திருக்கிறேன்!//

    அந்த நாளும் விரைவில் வந்திடும். கவலை வேண்டாம்.
    ///////

    பதிலளிநீக்கு
  34. யுவராணி தமிழரசன் September 15, 2013 at6:34 AM

    //அப்பப்பா மிகுந்த சந்தோஷத்தோடும் பூரிப்போடும் எனது பழைய உரையாடல்களை படிக்கிறேன் சார்!!!! சொன்னது போலவே நான் கேட்டவுடன் நீங்கள் இரண்டே நாட்களுக்குள் பேனா அனுப்பி வைத்ததும் அதே பேனாவில் நான் அப்பாயின்மென்ட் ஆர்டர் சைன் பண்ணினதும் இன்றும் என்னால் நம்பமுடியவில்லை சார்!

    இதை எதையுமே தெரியாமல் நீங்கள் முன்பே இதை சொன்னது எனக்கு இப்பொழுது படிக்க படிக்க மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது சார்!//

    வாங்கோ யுவா. மிகவும் சந்தோஷம்மா. நான் 2 நாட்களாக ஊரில் இல்லை. நீ.....ண்.....ட மெயில் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. பிறகு பொறுமையாக பதில் தருவேன். ALL THE BEST !

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  35. ஒரு மர்மம் தொடர் கதையாகிறது.

    பதிலளிநீக்கு
  36. யவராணி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஆசார்யா சின்னப்பையன் மூலமாக என்ன விஷயம் சொல்ல போறாங்க.

    பதிலளிநீக்கு
  37. சின்ன பயபுள்ளனு கூட பாக்காம அந்த புள்ளகிட்டகூட குருசாமி எப்பூடி பேசுது. குருசாமிக்கு அல்லா பாஸையும் வருமா.

    பதிலளிநீக்கு
  38. குறையொன்றுமில்லை. நமக்குள் நாமே இருக்கும்போது. புரந்தர கேசவலு அதிர்ஷ்டகார பையன் சுவாமிகளின் தரிசனம் ஸ்வாமி களின் பேச்சு கேட்கும்பாக்கியம் எல்லாம் கிடைச்சிருக்கே.

    பதிலளிநீக்கு
  39. வெளிப்பொருள்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தே தான் ஆனந்தம் பிறக்கிறது.// உண்மையில் ஆனந்தம் என்பது நம் மனதில்தான் இருக்கிறது....

    பதிலளிநீக்கு
  40. யுவராணி தமிழரசன் .அவர்க்ளுக்கு வங்கிப் பணி கிடைக்க வாழ்த்துவோம். உங்களுக்கு இன்னும் ஒரு கேஷியர் கிடப்பாங்களே!!!

    பதிலளிநீக்கு
  41. புரந்தர கேசவலுவின் கதைக்காக காத்திருக்கோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. happy November 6, 2016 at 5:42 PM

      //புரந்தர கேசவலுவின் கதைக்காக காத்திருக்கோம்..//

      வா .... ஹாப்பி. வணக்கம்.

      புரந்தர கேசவலுவின் கதைக்காக அன்று பலரும் காத்திருந்தார்கள். அதில் நியாயம் உண்டு.

      ஆனால் நீ இப்போது காத்திருக்க வேண்டாமே, தொடர்ந்து ’ஹாப்பி’யாகப் படித்துக்கொண்டே போகலாமே. :)

      இதில் நீ மிகவும் லக்கி ’லடுக்கி’ அல்லவா !

      -=-=-=-=-

      ‘லடுக்கி’ என்றால் ஹிந்தியில் ‘பெண்’ அல்லது ‘சிறுமி’ என்று அர்த்தம். உன் சின்ன மாமாவிடம் கேட்டுப்பார். அவர் சொல்லுவார். :)))))

      நீக்கு
  42. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (03.06.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=407867353049298

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு