About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, July 1, 2013

18] பக்தியே முக்திக்கு வழி.

2
ஸ்ரீராமஜயம்



பக்தியை விட்டு நேராக முக்திக்கு நாம் முயற்சி பண்ண வேண்டும் என்பதே இல்லை. 

பக்தி பண்ணிக்கொண்டிருந்தாலே போதும். தானே அதுவாக முக்திக்கு அழைத்துப்போகும்.

கிருஷ்ணன் பண்ணிய திருட்டுக்களை நினைத்தால் நமக்கு திருட்டு புத்தி போகும். 

அவன் ராச லீலைகள்  பண்ணியதை நினைத்தால் நமக்கு காமம் போகும். 

அப்படி விக்நேஸ்வரருடைய வக்ரதுண்டத்தை நினைத்தால் நமது வக்ர குணங்களும் போகும்.

ஆலயத்திற்கு சுத்தமில்லாமல் போகக்கூடாது. அங்கு அசுத்தமான பொருட்களைச் சேர்க்கக்கூடாது.



oooooOooooo


அதிசய நிகழ்வு 

நெஞ்சை உருக்கும் சம்பவம்

மிராசுதாரை மிரள வைத்த மஹாபெரியவா! 



முன் கதை பகுதி- 1 of 10   

முன் கதை பகுதி- 2 of 10 

முன் கதை பகுதி- 3 of 10    

முன் கதை பகுதி- 4 of 10  

முன் கதை பகுதி- 5 of 10  

முன் கதை பகுதி- 6 of 10  

முன் கதை பகுதி- 7 of 10  ..... தங்கள் நினைவுக்காக 
http://gopu1949.blogspot.in/2013/06/17.html


”மிராசுதார்வாள்! ஒண்ணு தெரிஞ்சுக்கணும். கனபாடிகளுக்கு இப்போ எண்பத்தோரு வயசாகிறது. தன்னோட பதினாறாவது வயசிலேந்து, எத்தனையோ சிவச் க்ஷேத்ரங்கள்ளே ஸ்ரீ ருத்ர ஜபம் பண்ணியிருக்கார். ஸ்ரீருத்ரம் எப்போதுமே அவர் நாடி நரம்புகள்ளேயும், ஸ்வாசத்திலேயும் ஓடிண்டே இருக்கு, அப்பேர்ப்பட்ட மஹான் அவர். நீ நடந்துண்ட விதம் மஹா பாபமான காரியம் .... மஹா மஹா பாபமான காரியம்! .... மேலே பேசமுடியவில்லை பெரியவாளால். கண்மூடி கண்மூடி மீண்டும் மெளனமாகிவிட்டார்.  சற்றுப்பொறுத்து ஆச்சார்யாள் மீண்டும் தொடர்ந்தார். 

“நீ பந்தி பேதம் பண்ணின காரியம் இருக்கே .... அது கனபாடிகள் மனஸை ரொம்பவும் பாதித்திடுச்சு. அவர் என்ன காரியம் செஞ்சார் தெரியுமா நோக்கு?சொல்றேன் கேளு! 

நேத்திக்கு சாயங்காலம் அவர் நேரா தேப்பெருமாநல்லூருக்குப் போகலே.

திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி கோயிலுக்குப் போனார். ’அஸ்மேத’ [பெரிய பிரகாரப்] பிரதக்ஷணம் மூணு தடவைப் பண்ணினார்.  

நேரா மஹாலிங்க ஸ்வாமிக்கு முன்னால் போய் நின்னார். கைகூப்பி நின்னுண்டு என்ன பிரார்த்தித்தார் தெரியுமா? மேலே பேசமுடியவில்லை பெரியவாளால். சற்று நிதானப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார். 


[பகுதி 8 of 10]






”கண்ணுலேர்ந்து தாரையா நீர் வழிய, ”அப்பா ஜோதி மஹாலிங்கம்! நா ஒன்னோட பரம பக்தன். பால்யத்திலேந்து எத்தனையோ தடவ ஒன் சந்நதியிலே மஹன்யாச ஸ்ரீருத்ரம் ஜபிச்சிருக்கேன். நீ கேட்டிருக்கே. இப்போ நேக்கு எண்பளத்தோரு வயசாறது. மனசுலே பலமிருக்கு. வாக்குலே அந்த பலம் போயிடுத்துப்பா ! 

இன்னிக்கு மத்யானம் சாப்டறச்சே நடந்தது நோக்குத் தெரியாமல் இருக்காது. அந்த சர்க்கரைப் பொங்கல் ரொம்ப ரொம்ப ருசியாக இருந்ததேன்னு, இன்னும் கொஞ்சம் போடுங்கோன்னு, வெக்கத்தைவிட்டு, அந்த மிராசுதார்ட பலதடவை கேட்டேன். அவர் காதுலே விழுந்தும், விழாது மாதிரி நகர்ந்து போய்ட்டார். 


நேக்கு சர்க்கரைப் பொங்கல்ன்னா உசிருன்னு நோக்குத்தான் தெரியுமே! சபலப்பட்டுக் கேட்டும் அவர் போடலியேன்னும்  அப்போ ரொம்பத் தாபப்பட்டேன். 

ஆனா சாப்புட்டு கையலம்பிண்டு வாசத்திண்ணைக்கு வந்து ஒக்காந்தபுபறம்தான், ’இப்படியொரு ஜிஹ்வா சபலம்  [பதார்த்தத்தில் ஆசை] இந்த வயசிலே நமக்கு இருக்கலாமான்னு தோணித்து. 

அப்பா ... மஹாலிங்கம், இப்போ அதுக்காகத்தான் நோக்கு முன்னாடி வந்து நிக்கறேன். ஒன்னை மத்யஸ்தமா வெச்சுண்டு இந்த க்ஷணத்திலேந்து ஒரு பிரதிக்ஞை பண்ணிக்கறேன். 

எல்லோரும் காசிக்குப்போனா தனக்குப் பிடிச்ச பதார்த்தத்தை விட்டுடுவா.  காசியிலேயும் நீ தான், இங்கேயும் நீ தான். அதனால உனக்கு முன்னாலே இப்போ சொல்றேன்; இனிமே என் சரீரத்தைவிட்டு ஜீவன் பிரியற வரைக்கும் சர்க்கரைப் பொங்கலையோ அல்லது வேறு எந்த திதிப்பு வஸ்துக்களையோ தொடவே மாட்டேன்! இது சத்தியம்டாப்பா .... மஹாலிங்கம்’னு வைராக்யப் பிரமாணம் பண்ணிண்டு, ‘அப்பா ஜோதி மஹாலிங்கம், நா ஒங்கிட்ட உத்தரவு வாங்கிக்கறேன்’னு சொல்லி பன்னிரண்டு சாஷ்டாங்க நமஸ்காரங்கள் பண்ணினார்.    கனபாடிகள் கண்ணுலேந்து பொலபொலன்னு கண்ணீர். ஊருக்குப் பொறப்டுட்டார். 

இப்போ சொல்லு நீ பண்ணின கார்யம் தர்மமா? மஹாலிங்க ஸ்வாமி ஒத்துப்பாரா? ” பெரியவா நிறுத்தினார்.

அப்போது மதியம் மூன்று மணி. ”நேக்கு இன்னிக்கு பிக்ஷை வேண்டாம்” என்று சொல்லிவிட்டார் ஸ்வாமிகள். அங்கிருந்த ஒருவருமே நகரவில்லை. சாப்பிடவும் போகவில்லை. அமைதி நிலவியது. அனைவரது கண்களிலும் நீர். 

மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர் பிரமித்துப்போய் நின்றிருந்தார். அவருக்குப்பேச நா எழவில்லை. பக்தர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. 

‘நேற்றையதினம் திருவிடைமருதூர் க்ஷேத்ரத்தில் நடந்த அத்தனை விஷயங்களையும், உடன் இருந்து நேரில் பார்த்த மாதிரி பெரியவா சொல்றாளே! இது எப்படி? என அனைவரும் வியந்தனர். 

தொடரும்





ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.


இதன் தொடர்ச்சி 
03.07.2013 புதன்கிழமை 
வெளியிடப்படும்.



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

42 comments:

  1. ’இப்படியொரு ஜிஹ்வா சபலம் [பதார்த்தத்தில் ஆசை] இந்த வயசிலே நமக்கு இருக்கலாமான்னு தோணித்து.

    சபலம் .. சிரமம் தந்திருக்கிறதே..!

    ReplyDelete
  2. அப்பா ஜோதி மஹாலிங்கம், நா ஒங்கிட்ட உத்தரவு வாங்கிக்கறேன்’னு சொல்லி பன்னிரண்டு சாஷ்டாங்க நமஸ்காரங்கள் பண்ணினார்.


    போறவழிக்குப் புண்ணியம்
    சேர்த்துக்கொண்டாரோ..!

    ReplyDelete
  3. ‘நேற்றையதினம் திருவிடைமருதூர் க்ஷேத்ரத்தில் நடந்த அத்தனை விஷயங்களையும், உடன் இருந்து நேரில் பார்த்த மாதிரி பெரியவா சொல்றாளே! இது எப்படி? என அனைவரும் வியந்தனர்.

    முக்கால்மும் உணர்ந்த ஞானியாகத்திகழ்ந்தவர் ஆயிற்றே!1

    ReplyDelete
  4. அமுத மழை படிக்க படிக்கத்தான் பிடிக்கிறது...

    ReplyDelete
  5. மகான்களின் கதைகள் படிப்பதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது. அது உங்கள் பகிர்விலும் தெரிகிறது.

    தொடருங்கள்... தொடர்கிறோம்...

    ReplyDelete
  6. நன்றி VGKஅவர்களே.

    மனம் பண்படவேண்டும். மனம் பண்பட்டால்தான்
    அந்த இறைவனின் லீலைகளை புரிந்து கொள்ளமுடியும்.

    அதற்கு இது போன்ற மகான்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களைத் தெரிந்துகொண்டால்தான்.அவரவர் மனதில்உள்ள அகந்தை என்னும் அழுக்கு நீங்கும் ஒரு சாதகனின் அறியாமையை போகும்.


    எல்லோரும் காசிக்குப்போனா தனக்குப் பிடிச்ச பதார்த்தத்தை விட்டுடுவா.

    ஆனால் காசி விஸ்வநாதன் விடமாட்டான் அங்கு பிராணனை விடுபவர்களின் செவியில் ஸ்ரீராமா நாம உபதேசத்தை செய்யாமல் என்பதை பக்தர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

    காசியிலேயும் நீ தான், இங்கேயும் நீ தான்.

    இந்த உண்மை எத்தனை பேருக்கு புரிகிறது. ?
    புரிந்துகொண்டால் அவனை எங்கேயெல்லாமோ தேடி தேடி களைத்து ஓய்ந்து போவார்களா?

    பகவானிடம் அபசாரப்படலாம்.
    பகவான் கோபப்படமாட்டான்.

    அவன் பக்தனிடம் ஒருவன் அபசாரப்பட்டால்
    அவனை யாராலும் காப்பாற்றமுடியாது

    பகவானானாலும் ஒன்றும் செய்யமுடியாது
    அந்த பக்தனின் காலடியில் போய் விழ வைத்துவிடுவான் அந்த பகவான்.

    ”நேக்கு இன்னிக்கு பிக்ஷை வேண்டாம்” என்று சொல்லிவிட்டார் ஸ்வாமிகள்.

    காலகாலனின் அவதாரமான காலடியில் அவதரித்த ஆதி சங்கரரின் அம்சமான ஸ்வாமிகள் மிராசுதாரரின் அகந்தையில் நிகழ்ந்த விளைவை நினைத்து கண் கலங்கியதில் ஆச்சரியம் இல்லை.

    ReplyDelete
  7. அற்புதம்! தொடர்கிறேன்!

    ReplyDelete
  8. பதார்த்தத்தில் ஆசைக்குப்பேர் ஜிஹ்வா சபலாவா? சபலம்ன்னா ஆசை. கனபாடிகள் நன்றாக வேண்டிண்டார். எப்பவுமே ஜிஹ்வா சபலா இல்லாதிருக்கணும். கொரைஞ்ச பக்ஷம் வயஸானப்புரம். யாரோ செய்த தப்பிற்கு, தான் உபவாஸமிருந்து இதெல்லாம் யா
    ரால் செய்ய முடியும்?
    பக்திபண்ணிண்டு உண்மையோடிரு.
    யாரை நினைத்து எப்படி இருக்கணும். உபமானங்கள் யாவும் அருமை. அன்புடன்

    ReplyDelete
  9. ஆஹா, பிறருடைய தப்பையும் தன் தலைமேல் போட்டுக் கொண்ட அந்த கனபாடிகள் எவ்வளவு பெரியவர்! அவரைப் பற்றி அறிந்து கொண்டு மிராசுதாரின் ஆணவத்தைப் போக்க நினைக்கும் பெரியவாளின் கருணையை என்னவென்று சொல்வது! நமஸ்கரிக்கிறேன்.

    ReplyDelete
  10. // ‘நேற்றையதினம் திருவிடைமருதூர் க்ஷேத்ரத்தில் நடந்த அத்தனை விஷயங்களையும், உடன் இருந்து நேரில் பார்த்த மாதிரி பெரியவா சொல்றாளே! இது எப்படி? என அனைவரும் வியந்தனர். //

    அங்கு இருந்தவர்களுக்கு மட்டும் அல்ல, உங்கள் தொடரைத் தொடர்ந்து படித்து வரும் எனக்கும் இந்த வியப்புதான் ஏற்பட்டது. அடுத்த பதிவில் இதற்கு விடை கிடைக்கும் என்று நினைக்கிறேன்.


    ReplyDelete
  11. மேலும் மேலும் சுவாரஸ்யத்துடன் வியப்பு தான்... தொடர்கிறேன்... வாழ்த்த்துக்கள் ஐயா... நன்றி...

    ReplyDelete
  12. தொடரைப் படிக்க என்னையும் அறியாமல்
    உடல் சிலிர்த்தது
    என்ன சொல்வது எனத் தெரியவில்லை
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

    ReplyDelete
  13. I felt so emotional.Like to read next issue immediatly.
    viji

    ReplyDelete
  14. பக்தியால் பரந்தாமன் திருவடிகளைப் பணிந்து செல்லவும்
    முக்திக்கு வழி தானாகவே திறந்துவிடும் கனபாடிகளின்
    உள்ளத்தைத் தெள்ளத் தெளிவாகக் கண்டு மகிழக் கிடைத்த
    அரிய தொடர் ....!!!! வாழ்த்துக்கள் ஐயா விடா முயற்சியாக நீங்களும் எழுதிக் கொண்டே இருக்கின்றீர்கள் .மேலும் சிறப்பாகத் தொடரட்டும் .

    ReplyDelete
  15. ஆமாம் . திருவிடைமருதூரில் நடந்தது எப்படியோ தெரிந்து விட்டதே!இப்ப மிராசுதார் என்ன செய்தார்?

    தொடர்ந்து படிக்க வருகிறேன்.....

    ReplyDelete
  16. / காசியிலேயும் நீ தான், இங்கேயும் நீ தான்./ என எடுத்த சத்தியப் பிரமாணம்.. எதிர்பாராத முடிவு. தொடருங்கள்.

    ReplyDelete
  17. பழியை தன் மேல் போட்டுக் கொண்டு சத்திய பிரமாணம் எடுத்த கனபாடிகளும், இதற்காக உபவாசம் இருந்த பெரியவாளும் வாழ்ந்த பூமியில் நாமும் வாழ்கிறோம் என்பதே பெரிய பேறு அல்லவா!

    ReplyDelete
  18. //முக்திக்கு பக்தியே வழி - பக்தி பண்ணிண்டு இருந்தாலே போதும் அதுவே முக்திக்கு அழைச்சிண்டு போயிடும்// மனது சிலிர்த்து விட்டது.

    ஜிஹ்வா என்றால் நாக்கு. நாக்கு சபலம் தான் ஜிஹ்வா சபலம்.நாமெல்லோருமே நாக்கிற்கு அடிமைதானே. நாக்கை அடக்க வேண்டும்.பேசுவதில் மட்டுமல்ல; சாப்பிடுவதிலும் கூட!
    மிராசு மட்டுமில்ல; இந்தத் தொடரை படிக்கிறவா எல்லோரும் கற்க வேண்டிய பாடம் இது!

    ReplyDelete
  19. படிக்கும்போது சிலிர்த்துப் போனது. அமுதமழையில் நனைகின்றோம்.

    ReplyDelete
  20. ஆன்மாவை உய்விக்க இதெல்லாம் ஆன்மீக பாடம்!!

    ReplyDelete
  21. //இப்படியொரு ஜிஹ்வா சபலம் [பதார்த்தத்தில் ஆசை] இந்த வயசிலே நமக்கு இருக்கலாமான்னு தோணித்து. //

    படிக்கும்போதே அவரது கஷ்டம் கன் முண்ணே.....

    தொடருங்கள். நானும் தொடர்கிறேன்.

    ReplyDelete
  22. படிக்கும்போதே கண்கள் பனித்தன! நன்றி! தொடருங்கல் ஐயா!

    ReplyDelete
  23. கனபாடிகளின் பிரார்த்தனை என் மனதை அடைத்துவிட்டது.
    //நேக்கு சர்க்கரைப் பொங்கல்ன்னா உசிருன்னு நோக்குத்தான் தெரியுமே! சபலப்பட்டுக் கேட்டும் அவர் போடலியேன்னும் அப்போ ரொம்பத் தாபப்பட்டேன்.// இன்னும் மனதை பாரமாக்கியது.
    எல்லாம் தெரிந்தவர் என்பதால்தான் அவர் ஞானியாகவும், வணங்குதலுக்குரியவராகவும் இருக்கிறார்.
    அமுதமழை,தொடர் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. எல்லோரும் காசிக்குப்போனா தனக்குப் பிடிச்ச பதார்த்தத்தை விட்டுடுவா. காசியிலேயும் நீ தான், இங்கேயும் நீ தான். அதனால உனக்கு முன்னாலே இப்போ சொல்றேன்; இனிமே என் சரீரத்தைவிட்டு ஜீவன் பிரியற வரைக்கும் சர்க்கரைப் பொங்கலையோ அல்லது வேறு எந்த திதிப்பு வஸ்துக்களையோ தொடவே மாட்டேன்! //

    எவ்வளவு மனம் நொந்து போய் இருந்தால் இப்படி முடிவு எடுத்து இருப்பார்!
    படிக்கும் போதே மனம் வருத்தமாய் இருக்கிறது.
    ஒவ்வொரு கால கட்டத்திலும் நம்மை தயார் செய்ய அந்த இறைவனின் கட்டளை இது. யாரும் தப்பிக்க முடியாது என்பதை சொல்கிறது கனபாடிகளின் வரலாறு.

    ReplyDelete
  25. படிக்கும்போதே என்னவோ போல் இருந்தது,தொடருங்கள் ஐயா!!

    ReplyDelete
  26. எல்லோரும் காசிக்குப்போனா தனக்குப் பிடிச்ச பதார்த்தத்தை விட்டுடுவா. காசியிலேயும் நீ தான், இங்கேயும் நீ தான். அதனால உனக்கு முன்னாலே இப்போ சொல்றேன்; இனிமே என் சரீரத்தைவிட்டு ஜீவன் பிரியற வரைக்கும் சர்க்கரைப் பொங்கலையோ அல்லது வேறு எந்த திதிப்பு வஸ்துக்களையோ தொடவே மாட்டேன்! //

    உண்பதிலும் நாக்குக்கு அடிமையாகக் கூடாது என்று நமக்கு உணர்த்துகிறார்.

    அப்போது மதியம் மூன்று மணி. ”நேக்கு இன்னிக்கு பிக்ஷை வேண்டாம்” என்று சொல்லிவிட்டார் ஸ்வாமிகள். அங்கிருந்த ஒருவருமே நகரவில்லை. சாப்பிடவும் போகவில்லை. அமைதி நிலவியது. அனைவரது கண்களிலும் நீர். //

    அடுத்து நடக்கப்போவதை உணர்ந்து பிக்‌ஷை வேண்டாம் என்று சொல்லி இருப்பாரோ

    ReplyDelete
  27. பக்தி பண்ணிக்கொண்டிருந்தாலே போதும். தானே அதுவாக முக்திக்கு அழைத்துப்போகும்.
    நன்று சொன்னீர் அய்யா. அதனால்தானே நம் முன்னோர்
    கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்று உரைத்தனர். நன்றி அய்யா

    ReplyDelete
  28. கனபாடிகளின் மனவேதனையை உணரமுடிகிறது. இந்த தள்ளாத வயதில், அவருடைய மனத்தை வேதனைப்படுத்திய மிராசுதாரர் தன் தவறை இனியேனும் உணர்ந்துகொள்வாரா?

    ReplyDelete
  29. By reading the stories of the great people we also learn good lessons.

    Can't wait to read your next post. thanks

    ReplyDelete
  30. கனபாடிகளின் வைராக்கிய வாக்கு பாவமாகவும்,வியப்பாகவும் உள்ளது.

    ReplyDelete
  31. அன்பின் வை.கோ - பக்தியே முக்திக்கு வழி - அருமையான விளக்கம் . மிராசுதார் நடந்து கொண்ட விதம் பெரியவாளைப் பொங்கச் செய்து கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றிருக்கிறது - சாந்த சொருபீயான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா இவ்வளவு கோபம் கொள்வார் என்பது அங்கு இருந்தவர்களூக்கு எல்லாம் புதிய நிகழ்வாகத் தோன்றி இருக்கும்.

    //நீ நடந்துண்ட விதம் மஹா பாபமான காரியம் .... மஹா மஹா பாபமான காரியம்! .... மேலே பேசமுடியவில்லை பெரியவாளால். கண்மூடி கண்மூடி மீண்டும் மெளனமாகிவிட்டார். சற்றுப்பொறுத்து ஆச்சார்யாள் மீண்டும் தொடர்ந்தார். //

    கனபாடிகள் வருத்தமடைந்தது பெரியவாளையே உலுக்கி - கோபத்தின் உச்சிக்கே கொண்டுசென்று - மிராசுதாருக்குப் பாடம் கற்பிக்க வைத்திருக்கிறது.

    கனபாடிகள் திருவிடை மருதூர் மகாலிங்க ஸ்வாமியிடம் வேண்டியது - விளக்கமாகப் பதிவிட்டது நன்று.

    அதனை மிராசுதாருக்கு பெரியவா கூறி - மிராசுதாரைத் திருத்தியது பற்றி எழுதியது நன்று.

    ஆசை அறுமின் ஆசை அறுமின் - எண்பத்தோரு வயதான் கனபாடிகள் ஆசையை அடக்க முடியாமல் - சக்கரைப் பொங்கல் மீது ஏற்பட்ட சபலத்தால் வெட்கத்தை விட்டு மிராசுதாரரிடம் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சமெனக் கெஞ்சினார். மிராசுதாரரோ கண்டு கொள்ள வில்லை - திருவிடை மருதூர் ஈசனிடம் புலம்புகிறார்.

    காசிக்குச் சென்றால் எதியாவது விட்டு விட்டு வர வேண்டும் - இவரோ அங்கு செல்ல இயலாமல் - இங்கேயே இறைவன் சந்நிதியிலேயே சபதம் செய்கிறார் - இனிமேல் சக்கரைப் பொங்கல் மட்டுமல்ல - எந்த ஒரு இனிப்புப் பலகாரத்தினையும் தொடுவதில்லை என.

    மதியம் மூண்று மணீ - பெரியவா சாப்பிடவில்லை - கனபாடிகள் சரியாகச் சாப்பிட வில்லை என்பதனால் பெரியவாளூம் சாப்பிட வில்லை - அங்கு இருந்தவர்களூம் சாப்பிட வில்லை.

    அருமையான நிகழ்வு - பதிவு திரும்பத் திரும்ப படித்தேன் - பெரியவாளின் கோபம் - கோபமடையச் செய்த மிராசுதாரின் செயல் - வருத்த மடைந்த கனபாடிகள் ஈசனிடம் வேண்டியது - எல்லாமே மனதில் ஆழப் படிந்து விட்டது.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  32. //ஆனா சாப்புட்டு கையலம்பிண்டு வாசத்திண்ணைக்கு வந்து ஒக்காந்தபுபறம்தான், ’இப்படியொரு ஜிஹ்வா சபலம் [பதார்த்தத்தில் ஆசை] இந்த வயசிலே நமக்கு இருக்கலாமான்னு தோணித்து. ///

    ஹா..ஹா..ஹா.. நகைச்சுவையான பாணியில் நல்லதோர் கதை.

    ReplyDelete
  33. சாப்பாட்டுப் பொருள்களிலே சபலம் வைப்பது வயதான பிறகு விட வேண்டிய ஒன்று.

    ReplyDelete
  34. பதார்த்த ஆசை விட்டுடா மத்த ஆசைகளையும் விட்டுடலாம் போலதான் இருக்கு.அந்த மிராசுதார் பண்ணிய தவறுக்கு ஆசார்யா சாப்பிடாம இருந்துட்டாளே .

    ReplyDelete
  35. அதான அந்த மிராசு பண்ணின தப்புக்கு இவுக ஏனுங்க சாப்பிடாம போகோணும் அந்த ஐயிரு கூட சாமிக்கிட்டத்ல போயி இனிமேக்கொண்டுகிட்டு இனிப்பு சாப்பிடவே மாட்டேனுடாங்க.

    ReplyDelete
  36. அந்த மிராசுதார் இவ்வளவு அவமானங்களைச்செய்திருந்தாலும் கனபாடிகள் அஒர்மேல் கோபம் கொள்ளாமல் தன் பதார்த்த ஆசையை விட்டு விட்டாரே. உருக்கமான பதிவு.

    ReplyDelete
  37. எல்லோரும் காசிக்குப்போனா தனக்குப் பிடிச்ச பதார்த்தத்தை விட்டுடுவா. காசியிலேயும் நீ தான், இங்கேயும் நீ தான். அதனால உனக்கு முன்னாலே இப்போ சொல்றேன்; இனிமே என் சரீரத்தைவிட்டு ஜீவன் பிரியற வரைக்கும் சர்க்கரைப் பொங்கலையோ அல்லது வேறு எந்த திதிப்பு வஸ்துக்களையோ தொடவே மாட்டேன்! இது சத்தியம்டாப்பா .... மஹாலிங்கம்’னு வைராக்யப் பிரமாணம் பண்ணிண்டு, ‘அப்பா ஜோதி மஹாலிங்கம், நா ஒங்கிட்ட உத்தரவு வாங்கிக்கறேன்’னு சொல்லி பன்னிரண்டு சாஷ்டாங்க நமஸ்காரங்கள் பண்ணினார். /// சில நிகழ்வுகள் இப்படியான வைராக்கியங்களை தோற்றுவிக்கின்றன..

    ReplyDelete
  38. கனபாடிகளுக்கு அப்ப கூட மிராசுதார் மேல கோவம் வரலியே தன்னோட ஆசைகளை ருசியான இனிப்பை விட்டுடணும்னுதானே ஆண்டவன் கிட்ட வேண்டிக்கறா.. என்ன பெரிய மனசு..

    ReplyDelete
    Replies
    1. happy November 1, 2016 at 11:21 AM

      வாம்மா .... ஹாப்பி, வணக்கம்.

      //கனபாடிகளுக்கு அப்ப கூட மிராசுதார் மேல கோவம் வரலியே .. தன்னோட ஆசைகளை ருசியான இனிப்பை விட்டுடணும்னுதானே ஆண்டவன் கிட்ட வேண்டிக்கறா.. என்ன பெரிய மனசு..//

      ஆமாம்மா. அதுதான் இதில் உள்ள அவரின் மிகப்பெரிய வைராக்யம் என்ற ஸம்பத்து. வைராக்யம் என்பதைவிட வேறு மிகப்பெரிய ஸம்பத்து இந்த உலகில் கிடையாது.

      Delete
  39. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (25.05.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://www.facebook.com/groups/396189224217111/permalink/403532726816094/

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete