என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 5 ஜூலை, 2013

20] பணமும் பதவியும் படுத்தும் பாடு

2
ஸ்ரீராமஜயம்



’புராணங்கள் புளுகு மூட்டைகள்’ ’சாஸ்திரங்கள் குருட்டு நம்பிக்கையை வளர்ப்பவை’ என்பதைத்தான் ஆரம்பத்திலிருந்தே நம் குழந்தைகள் கேட்டு வருகிறார்கள்.

இவர்களுக்கு எப்படி நம் மத வழிமுறைகளிலும் நெறிமுறைகளிலும் பிடிப்பு ஏற்படமுடியும்?

அவனவனுக்கும் அதது கடமை என்கிறபோது அதில் உயர்வு தாழ்வு இல்லவே இல்லை. 

ஆனால் பணம் தான் குறிக்கோள், பதவிதான் குறிக்கோள் என்றால், அதிகப்பணம் சேர்க்கிறாவன் உயர்த்தி, மற்றவன் தாழ்த்தி, பெரிய பதவியில் வருகிறவன் உயர்த்தி, மற்றவன் தாழ்த்தி என்ற பேத எண்ணங்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.

நமக்கு நிஜமான சிரத்தையும், தைர்யமும் இருந்தால் எதையும் நடத்திக் கொண்டு விடலாம்.

பித்ரு கார்யங்களுக்கு சிரத்தை வேண்டும்.


oooooOooooo


அதிசய நிகழ்வு 

நெஞ்சை உருக்கும் சம்பவம்

மிராசுதாரை மிரள வைத்த மஹாபெரியவா! 


முன் கதை பகுதி- 1 of 10   

முன் கதை பகுதி- 2 of 10 

முன் கதை பகுதி- 3 of 10    

முன் கதை பகுதி- 4 of 10  

முன் கதை பகுதி- 5 of 10  

முன் கதை பகுதி- 6 of 10  

முன் கதை பகுதி- 7 of 10  

http://gopu1949.blogspot.in/2013/06/17.html

முன் கதை பகுதி- 8 of 10  
http://gopu1949.blogspot.in/2013/07/18.html


முன் கதை பகுதி- 9 of 10  ..... தங்கள் நினைவுக்காக 
http://gopu1949.blogspot.in/2013/07/19.html

பெரியவா கால்களில் அப்படியே விழுந்தார் மிராசுதார். கேவிக்கேவி அழ ஆரம்பித்து விட்டார். அவர் நா தழுதழுத்தது. 

“பெரியவா, நா பண்ணினது மஹா பாபம்! அகம்பாவத்தில் அப்படிப் பண்ணிப்புட்டேன். என்னை மன்னிச்சிடுங்கோ. இனி என் ஜென்மாவில் இப்படி நடந்துக்கவே மாட்டேன். *மன்னிச்சுட்டேன்னு சொல்லணும் பெரியவா*” என்று கன்னத்தில் அறைந்து கொண்டார் மிராசுதார். 

ஆசார்யாள் வாய் திறக்கவில்லை. விடவில்லை மிராசுதார்

“பிரார்த்திக்கிறேன் பெரியவா! நீங்க இந்த மஹாலிங்க ஸ்வாமி பிரஸாதத்தை ஸ்வீகரித்துக்கொள்ளணும்; என்னை மன்னிச்சுடுங்கோ” என்று பிரஸாதத்தட்டை நோக்கிக் கைகளைக் காண்பித்தார்.

உடனே ஆச்சார்யாள் “இருக்கட்டும் .... இருக்கட்டும். எனக்கு அந்த மஹாலிங்க ஸ்வாமியே பிரஸாத அனுக்ரஹம் பண்ணுவார்” என்று சொல்லி முடிப்பதற்குள் ..... “நகருங்கோ ... நகருங்கோ” என்று ஒரு குரல்  கூட்டத்துக்கு வெளியே கேட்டது. 

எல்லோரும் விலகி வழிவிட்டனர். தலையில் கட்டுக்குடுமி,  பளிச்சென்ற பஞ்சக்கச்ச வேஷ்டி, இடுப்பில் பச்சைப்பட்டு வஸ்திரம், கழுத்தில் பெரிய ருத்ராக்ஷமாலை, பட்டுத்துணியில் பத்திரப்படுத்தப்பட்ட பிரஸாதத்தை ஒரு பித்தளைத் தட்டில் வைத்து, கைகளில் பக்தியோடு ஏந்தியபடி, சுமார் அறுபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர்,  பெரியவாளுக்கு அருகே வந்து சேர்ந்தார். 

பிரஸாதத்தட்டைப் பெரியவாளுக்கு முன்பு பெளயமாக சமர்பித்துவிட்டு, ”எம் பேரு மஹாலிங்கம், திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி கோயில் அர்ச்சகர். நேத்திக்கு ஸ்வாமிக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. ஒரு மிராசுதார் நடத்தினார். இந்தூர்ல தான் எங்க அக்காவை [சகோதரி] கல்யாணம் செய்து கொடுத்திருக்கு.ஆச்சார்யாளுக்கும் இந்தப் பிரஸாதத்தைக் கொடுத்துட்டு,  அவளையும் பார்த்துட்டுப்போகலாம்னு வந்தேன். நமஸ்காரம் பண்ணிக்கிறேன். பெரியவா அநுக்ரஹிக்கணும்”என்று நமஸ்காரம் பண்ணப்போனவரைத் தடுத்தார் ஸ்வாமிகள்.

”நீங்களெல்லாம் சிவதீக்ஷை வாங்கிண்டவா. நமஸ்காரம் பண்ணப்படாது” என்று சொன்னப்பெரியவா, அவர் கொண்டுவந்த பிரஸாதங்களை ஸ்வீகரித்துக்கொண்டு, சிவாச்சாரியாருக்கு மடத்து மரியாதை செய்யச்சொன்னார்.

அதற்குள் சற்று தள்ளி நின்று கொண்டிருந்த மிராசுதாரைப் பார்த்து விட்டார், சிவாச்சாரியார். 

“பெரியவா! இவர் தான் நேற்று அங்கே ருத்ராபிஷேகம் பண்ணி வெச்சவர். அவரே இங்கே வந்திருக்காரே!” என்று ஆச்சர்யத்துடன் கூறிவிட்டு, உத்தரவு பெற்றுக்கொண்டு போயே விட்டார், அந்த மஹாலிங்கம் சிவாச்சாரியார்.  

ஆச்சார்யாளை மீண்டும் ஒருமுறை நமஸ்கரித்து எழுந்து கன்னத்தில் போட்டுக்கொண்ட மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர், ”திரும்பத் திரும்பப் பிரார்த்திக்கிறேன் பெரியவா ... நா பண்ணினது ரொம்பப் பெரிய பாவகாரியம் தான்! இதுக்கு நீங்கதான் ஒரு பிராயச்சித்தம் சொல்லணும்” என்று மன்றாடினார். 





[நிறைவுப் பகுதி - 10 of 10]


விருட்டென்று ஸ்வாமிகள் எழுந்து விட்டார். 

“இதுக்குப் பிராயச்சித்தம் நான் சொல்ல முடியாது. தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள்தான் சொல்லணும்!” என்றார்.

“இந்தப்பாவி பண்ணின காரியத்துக்கு கனபாடிகள் பிராயச்சித்தம் சொல்லுவாரா பெரியவா?” என்று தாபத்தோடு கேட்டார், மிராசுதார்.

உடனே ஸ்வாமிகள் சற்று உரத்த குரலில், “நோக்குப் பிராப்தம் இருந்தால் நிச்சயம் சொல்வார்” என்று கூறிவிட்டு, விடுவிடுவென்று உள்ளே சென்றுவிட்டார். அதன் பிறகு பெரியவா வெளியே வரவே இல்லை. 

சிலமணி நேரம் காத்திருந்து பார்த்தார் மிராசுதார். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவராகப் புறப்பட்டு பஸ் பிடித்து செங்கல்பட்டு வந்தார். அங்கிருந்து ரயிலைப் பிடித்து, அடுத்தநாள் காலை திருவிடைமருதூர் வந்து சேர்ந்தார்.

அங்கே காவிரி ஆற்றுக்குச்சென்று, ஸ்நானத்தை முடித்துக்கொண்டு, ஒரு வைராக்யத்துடன் அருகிலுள்ள தேப்பெருமாநல்லூரை நோக்கி நடையைக்கட்டினார். 

எப்படியும் வேங்கடேச கனபாடிகளைப் பார்த்து, அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்புக்கேட்டு, அவர் கூறும் பிராயச்சித்தத்தைப் பூர்த்திசெய்து, பாபவிமோசனம் பெற்றுவிட வேண்டும் என்கிற வைரக்யத்துடன் வேக வேகமாக நடந்தார்.

தேப்பெருமாநல்லூர் அக்ரஹாரத்திற்குள் நுழைந்தார் மிராசுதார்.  எதிர்ப்பட்ட ஒருவரிடம் கனபாடிகள் பெயரைச்சொல்லி, அவர் க்ருஹம் [வீடு] எங்கே? என விசாரித்தார்.  

உடனே அவர், வெளியே பலர் கூட்டமாக நின்று கொண்டிருந்த ஓர் வீட்டைச் சுட்டிக்காட்டி “துக்கம் விஜாரிக்க வந்திருக்கேளா? அதான் வேங்கடேச கனபாடிகள் வீடு. 

இன்னிக்கு விடியக்காலம் தான் கனபாடிகள் திடீர்ன்னு காலமாகிட்டார்.  *‘அநாயாஸேன மரணம்’ *[*சிரமங்கள் இல்லாத சுலப மரணம்*]. போய்ப்பார்த்துட்டு வாங்கோ” என்று சொல்லிட்டுப் புறப்பட்டார்.

இதைக்கேட்டவுடன் பிரமித்து நின்றுவிட்டார், நாராயணஸ்வாமி ஐயர். யாரோ அவர் தலையில் சம்மட்டி கொண்டு தாக்கியதுபோல இருந்தது.

நேற்று மடத்தில் ஆச்சார்யாள் உரத்த குரலில் ஆணித்தரமாகச் சொன்ன வாக்கியம் மீண்டும் அவர் காதுகளில் ஒலிப்பது போல இருந்தது. ”நோக்குப் பிராப்தம் இருந்தால் நிச்சயம் சொல்லுவார்”!

‘பிராப்தம் இல்லேங்கறது நேத்திக்கே பெரியவாளுக்குத் தெரிஞ்சிருக்கு’ என்பது மிராசுதாருக்கு இப்போது புரிந்தது. 

கனபாடிகள் வீட்டுக்குச் சென்றார் மிராசுதார். மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு,  கனபாடிகளின் பூத உடலுக்கு நமஸ்காரம் பண்ணினார். புறப்பட்டார்.

அதன்பிறகு பலவித கஷ்டங்களுக்கு ஆளான மிராசுதார், ஓரிரு வருஷங்களுக்கு உள்ளாகவே தன் சொத்துக்களையெல்லாம் இழக்க நேரிட்டது.   வடக்கே சென்று பல சிவாலயங்களிலே  திருமடப்பள்ளி கைங்கர்யம் பண்ணிவிட்டு, காசி க்ஷேத்ரத்திலே காலகதி அடைந்தார். 


oooooOooooo  oooooOooooo  oooooOooooo




கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழ்நாட்டில் தங்கி, வலையுலகப் பதிவர்களாகிய நம்மில் பலரையும் நேரில் சந்தித்து மகிழ்வித்த என் அன்புத்தங்கை திருமதி மஞ்சுபாஷிணி அவர்கள் இன்று [05.07.2013 வெள்ளிக்கிழமை] சென்னையிலிருந்து கிளம்பி குவைத் செல்கிறார்கள். அவர்களின் இன்றைய விமானப்பயணம் இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும், வசதியாகவும், பாதுகாப்பானதாகவும் அமையப் பிரார்த்திப்போம். 

TA - TA - BYE -  BYE - MANJU !  


WISHING YOU ALL A VERY VERY HAPPY JOURNEY.... 
WITH SO MUCH OF LOVE AND AFFECTION .... MANJU


அவள் ..... பறந்து ..... போனாளே !

நம்மை மறக்காமல் சொல்லிவிட்டுப் போனாளே!!

மனிதாபிமானம் மிக்க மகத்தான “மஞ்சூ” .... 
நீ .... எங்கிருந்தாலும் வாழ்கடா தங்கம்! ;)

பிரியமுள்ள கோபு அண்ணா + மன்னி




oooooOooooo

மீண்டும் ஓர் புதிய சந்திப்பு

03.07.2013 புதன்கிழமையன்று திருச்சிக்கு, தன் மனைவியுடன் வருகை தந்த பெங்களூர் பதிவர் திரு. GMB ஐயா அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

பிற்பகல் 4.15 முதல் 5.45 வரை சுமார் ஒன்றரை மணி நேரம் மனம் விட்டு பல விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தோம்.  திருச்சியைச் சேர்ந்த பதிவரும், என் நண்பருமான திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களும் இந்த சந்திப்பில் என்னுடன் முழுவதுமாகக் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த சந்திப்பு நிகழ்ச்சி பற்றிய மேலும் சில சுவையான விபரங்களை திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் நிறைய படங்களுடன் தனிப்பதிவாகவே எழுதியுள்ளார்கள். இணைப்பு: http://tthamizhelango.blogspot.com/2013/07/gmb.html



Mrs. GMB  + Mr. GMB Sir + V Gopalakrishnan


VGK .... தன் கையொப்பமிட்ட 
சிறுகதைத்தொகுப்பு நூல் ஒன்றினை
Mr. GMB ஐயா அவர்களுக்குஅளித்தல்


VGK .... தன் கையொப்பமிட்ட 
சிறுகதைத்தொகுப்பு நூல் ஒன்றினை
திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்குஅளித்தல்


VGK + Mr. GMB Sir + திரு. தி. தமிழ் இளங்கோ


A Money Purse being given by VGK to Mr. GMB Sir


A Money Purse being given by VGK to Mr. T.Tamil Ilango Sir


சூடான சுவையான தூள் பக்கோடா + காஃபியுடன், இந்த சந்திப்பினை இனிமையாக்கித் தந்துதவிய தாயுள்ளம் கொண்ட திருமதி கமலா சாந்தி GMB அவர்களுக்கு என் முதற்கண் நன்றிகள். வெங்காய தூள் பக்கோடா கரகரப்பாகவும் மொறுமொறுவென்றும் மிகவும் ஜோராக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்தமான திண்பண்டமாக இருந்ததால் நான் அதை மிகவும் ரஸித்து ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தேன். என் நாக்கும் வயிறும் உங்களை இன்றும்கூட நன்றியுடன் நினைத்துப்பார்க்கின்றன. உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றியோ நன்றிகள்.  

என்னைக்கண்டதும் முகத்தில் ஓர் தனி சந்தோஷமும், பெருமகிழ்ச்சியும் காட்டி, கட்டிப்பிடித்துக்கொண்டு வரவேற்று உபசரித்த திரு. GMB Sir அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள். 

கடைசி கால்மணி நேரம் மட்டும் எங்களின் சந்திப்பினில் கலந்து கொண்டவரும், ’பதிவர்களுக்குள் இவ்வளவு ஒரு நட்பும் பாசமும் பொங்கிவழிய முடியுமா?’ என ஆச்சர்யப்பட்டவருமான, திரு. GMB தம்பதியினரின் மூத்த பிள்ளை திரு. மனோஹர் அவர்களுக்கு என் அன்பான நன்றிகள். 

இந்த சந்திப்பில் முழுவதும் ஆர்வமுடன் பங்குகொண்ட என் அருமை நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  





ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.

இந்தத் தொடரின் அடுத்த பகுதி 
07.07.2013 ஞாயிறு வெளியாகும்.





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

60 கருத்துகள்:

  1. எதிர்ப்பார்க்காத முடிவு...!

    இனிமையான 'சுவையான' சந்திப்பு...

    வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. பெரியவர்களை நோகடிப்பதால் தீமையே வரும்! என்பதை அழகாக சொன்னது பெரியவாளுடைய கதை! இனிமையான சந்திப்பை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! சகோதரி மஞ்சு பாஷினியின் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. செல்வத்துப் பயன் ஈதல்

    ஆனால் அது நம்மிடம்
    இருப்பதை கொண்டு
    கர்வம் கொண்டால்
    அது நம்மை
    செல்லா காசாக்கிவிடும்.

    நாம் அதை
    வைக்கின்ற இடத்தில்
    வைக்காவிட்டால்.

    நல்ல பதிவு
    வாழ்க VGK

    பதிலளிநீக்கு
  4. என்ன செய்ய முடியும். வினை விதைத்தவன் அதைத்தானே அறுவடை செய்யமுடியும். நீதியைத் தெரிந்து கொண்டவர்கள் தினை விதைத்து தினையை அறுவடை செய்ய வேண்டும். நண்பர்களின் ஸந்திப்பு அழகாக இருக்கிரது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  5. கனபாடிகள் வீட்டுக்குச் சென்றார் மிராசுதார். மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, கனபாடிகளின் பூத உடலுக்கு நமஸ்காரம் பண்ணினார். புறப்பட்டார்.

    அதன்பிறகு பலவித கஷ்டங்களுக்கு ஆளான மிராசுதார், ஓரிரு வருஷங்களுக்கு உள்ளாகவே தன் சொத்துக்களையெல்லாம் இழக்க நேரிட்டது. வடக்கே சென்று பல சிவாலயங்களிலே திருமடப்பள்ளி கைங்கர்யம் பண்ணிவிட்டு, காசி க்ஷேத்ரத்திலே காலகதி அடைந்தார்.//

    கனபாடிகள் இறந்து போனது மனதுக்கு வருத்தமாய் இருக்கிறது.
    மிராசுதார் நிலைமையும் மனதுக்கு வருத்தம் தான் தன் தவறை எண்ணி மன்னிப்பு கேடக போயும் மன்னிப்பு வழங்க கனபாடிகள் இல்லை. ஆனால் கனபாடிகளின் நல்ல உள்ளம் மிராசுதாரை மன்னித்து இருக்கும்.



    மிராசுதாருக்கு மனசாட்சியே கொன்று இருக்கும்.
    //சிரமங்கள் இல்லாத சுலப மரணம்*//].


    கனபாடிகளுக்கு மகாலிங்க சுவாமி கஷ்டங்களை கொடுக்காமல் அழைத்துக் கொண்டார்.
    இறைவன் நடத்தும் நாடகத்தை யாரால் அறிந்து கொள்ள முடியும்!

    மஞ்சுபாஷ்ணியின் விமானப்பயணம் இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும், வசதியாகவும், பாதுகாப்பானதாகவும் அமையப் பிரார்த்திப்போம்

    மஞ்சுபாஷ்ணிக்கு வாழ்த்துக்கள்.

    திரு. GMB Sir அவர்களையும், அவர்கள் துணைவி அவர்களையும் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களையும் சந்தித்தது மகிழ்ச்சி.
    சந்திப்பு நல்ல இனிமையான அனுபவம் தான்.
    பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.







    பதிலளிநீக்கு
  6. நமக்கு நிஜமான சிரத்தையும், தைர்யமும் இருந்தால் எதையும் நடத்திக் கொண்டு விடலாம்.

    பித்ரு கார்யங்களுக்கு சிரத்தை வேண்டும்.

    சிரத்தையாகச் செய்வதால் தான்
    அது சிரார்த்தம்...!

    பதிலளிநீக்கு
  7. சுவையான பதிவர் சந்திப்புகள்...வாழ்த்துகள்.

    சகோதரி மஞ்சுபாஷினி பயணம்
    இனிமையாக அமையட்டும் ..

    பதிலளிநீக்கு

  8. நேற்று மடத்தில் ஆச்சார்யாள் உரத்த குரலில் ஆணித்தரமாகச் சொன்ன வாக்கியம் மீண்டும் அவர் காதுகளில் ஒலிப்பது போல இருந்தது. ”நோக்குப் பிராப்தம் இருந்தால் நிச்சயம் சொல்லுவார்”!

    ‘பிராப்தம் இல்லேங்கறது நேத்திக்கே பெரியவாளுக்குத் தெரிஞ்சிருக்கு’ என்பது மிராசுதாருக்கு இப்போது புரிந்தது.

    அகந்தை கொண்டவரின் சோக முடிவு
    பதிவாக்கித்தந்த பகிர்வு நிறைவளித்தது..

    பதிலளிநீக்கு
  9. பதிவர் சந்திப்பி ஆனுபவங்களை அழகாக பகிர்ந்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. எதிர்பார்க்காத முடிவு,கண்ணீர் வந்துவிட்டது..

    //பித்ரு கார்யங்களுக்கு சிரத்தை வேண்டும்.//சரியாக சொன்னீர்கள்..பதிவர் சந்திப்பிற்க்கு வாழ்த்துக்கள் ஐயா!!

    பதிலளிநீக்கு
  11. நமக்கு நிஜமான சிரத்தையும், தைர்யமும் இருந்தால் எதையும் நடத்திக் கொண்டு விடலாம்.//

    மஹாபெரியவாளைப் பற்றிய தொடரை நிஜமான சிரத்தையுடன் தொடரும் தங்களின் முயற்சி மிகவும் மகிழ்வளிக்கிறது! நல்ல பகிர்விற்கு உளமார்ந்த நன்றி!

    பதிலளிநீக்கு
  12. எதிர்பாராத முடிவு அய்யா.
    மஞ்சு சுபாஷினி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    அய்யா ஜி.எம்.பி. அவர்களுடனான சந்திப்பு விவரங்கள் அருமை அய்யா. எழுத்துக்களின் வழியாக ஏற்பட்ட நட்பின் பலம் அதிகம் அய்யா. நன்றி
    அய்யா அவர்களைச் சந்திக்க எனக்கம் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்ச்சி கொள்கின்றேன் அய்யா

    பதிலளிநீக்கு
  13. இதில் பெரியவாளின் செயலும் நோக்கமும் சரியா? ஒருவேளை அவருக்கு ஞானதிருஷ்டியில் எல்லாம் தெரிந்திருந்தது என்றே வைத்துக் கொள்வோம் - தவறு செய்துவிட்டேன் என்று உளமார மன்னிப்புக் கேட்க/கேட்கத்துடிக்கும் ஒருவனை இப்படி தண்டிப்பது எந்தவகைக் கருணையில் சேர்த்தியாகும்? க்ஷமிப்பது தெய்வ லக்ஷணமில்லையோ? பழிவாங்கும் செயல் போல அல்லவா படுகிறது?! பெரியவாளுக்கும் சிறியவாளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போனதே!



    பதிலளிநீக்கு
  14. மஞ்சுபாஷிணி ஒருவழியா கிளம்பினாங்களா. அப்பாடி!

    பதிலளிநீக்கு
  15. ஜிஎம்பி சுவாரசியமான மனிதர், உங்களைப் போலவே. நிறைய பேசியிருப்பீர்கள், கூட இருந்து கேட்டிருக்கலாம் போல தோன்றுகிறது. அடுத்த திருச்சி பயணத்தில் இளங்கோ அவர்களையும் சந்திக்க வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
  16. எதிர்பார்க்காத முடிவு.

    பதிவர்கள் சந்திப்பு குறித்து மிக்க மகிழ்ச்சி சார்...

    பதிலளிநீக்கு
  17. // என் அன்புத்தங்கை திருமதி மஞ்சுபாஷிணி அவர்கள் இன்று [05.07.2013 வெள்ளிக்கிழமை] சென்னையிலிருந்து கிளம்பி குவைத் செல்கிறார்கள். அவர்களின் இன்றைய விமானப்பயணம் இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும், வசதியாகவும், பாதுகாப்பானதாகவும் அமையப் பிரார்த்திப்போம். //

    சகோதரிக்கு, என்னுடைய வாழ்த்துக்களையும் சொல்லி விடுங்கள்.

    // இந்த சந்திப்பில் முழுவதும் ஆர்வமுடன் பங்குகொண்ட என் அருமை நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கும், என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். //

    உங்களை முன்னிட்டு எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை
    ( திருச்சியில் மூத்த பதிவர் திரு GMB அவர்களோடு ஒரு இனிய சந்திப்பு ) அளித்த உங்களுக்கு நன்றி! பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பது போல நானும் மணம் பெற்றேன்.

    பதிலளிநீக்கு
  18. போன பதிவிலேயே முடிவைச் சொல்லிடலாமானு நினைச்சேன். அப்புறமாக் கஷ்டப் பட்டு அடக்கிக் கொண்டேன்.

    @அப்பாதுரை, :))))) இந்தக் கேள்வி கேட்கலைனா அப்பாதுரையே இல்லை. :)))))

    பதில் எழுதணும்னு நினைச்சேன். வேண்டாம்னு விட்டுட்டேன். :))))ஆனால் பெரியவர் பழிவாங்கவில்லை. கனபாடிகளின் உயிர் போகப் போகிறது என்பது வேண்டுமானால் தெரிந்திருக்கலாம், அதுக்காக மிராசுதாரைப் பழி வாங்கினார்னு எப்படிச் சொல்ல முடியும்? அதோடு கனபாடிகள் இறந்துவிடுவார் என்பதையும் முன்கூட்டி எப்படிச் சொல்ல முடியும்?? அவரோட தப்பைச் சுட்டிக் காட்டினார். கால அவகாசம் இல்லை என்பதால் உடனே போய் மன்னிப்புக் கேள் என்பதை மறைமுகமாய்ச் சொல்லி விட்டார். அவ்வளவே அவர் செய்யக் கூடியது. பாதிக்கப்பட்டவரின் மன்னிப்பு மிராசுதாருக்குக் கிடைக்கவேண்டும் என்றே நினைத்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு சாதகமாகத் தோன்றுவதை எடுத்துக் கொள்கிறோம் (என்னையும் சேர்த்து). பிராப்தம் இருந்தா நடக்கும் என்பது மறைமுகமா? கனபாடிகளை விடுங்கோ கீதாமா.. இந்த மிராசுதார் பெரியவாளிடம் மன்னிப்பு கேட்குறப்போ அதையாவது சொல்லியிருக்கலாமே.. ஐயா மிராசுதார்.. நான் மன்னிச்சுட்டேன், இல்லை என்னால மன்னிக்க முடியாது.. இதை சொல்லியிருக்கலாமே? குரு தெய்வத்துக்கு சமானமென்று கிளப்பிவிட்டதால் தானே குருவிடம் மன்னிப்பு கேட்க வந்தார் அந்த சாமானியர்? குரு என்ன செய்தார் இங்கே?

      நீக்கு
    2. //பாதிக்கப்பட்டவரின் மன்னிப்பு மிராசுதாருக்குக் கிடைக்கவேண்டும் என்றே நினைத்திருக்கிறார்
      எப்படிச் சொல்றீங்க? நான் இங்கே எதை சரியா புரிந்து கொள்ளவில்லை?

      நீக்கு
    3. முதலில் பதில் போட வேண்டாம் என்று நினைத்து விட்டு விட்டேன். அப்புறம் கீதா மேடத்திற்கும் நீங்கள் பதில் போடவும் என்னாலும் பதில் தராமல் நிறுத்த முடியவில்லை ! மிராசுதார் எங்கே மன்னிப்பு கேட்க வந்தார்.. பிரசாதம் கொடுக்கத்தானே வந்தார்.. வந்த இடத்தில் அவரது பிழை சுட்டிக்காட்டப்படவும் வேறு வழியில்லாமல் மன்னிபு கேட்டார்.. அவ்வளவே.. அப்பாத்துரை ஸார். உங்களுக்குத் தெரியாததில்லை.. நான் இந்த நிகழ்ச்சிக்கு சொல்லவில்லை. பொதுவாய் ஆயுள் முழுக்க ஒருவர் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு, தன்னால் எதிர்த்து பேச முடியாத (மஹா பெரியவா) போல ஒருத்தர் அதட்டி கேட்டதும், 'அய்யா சாமி மன்னிச்சுக்குங்க' என பல்டி அடிப்பது நிஜ மன்னிப்பில் அடங்குமா..

      நீக்கு
    4. அப்படி ஒரு கோணம் இருக்கோ ரிஷபன்! இதை படித்த போது மிராசுதார் நிஜமாகவே மன்னிப்பு கேட்பதாகத் தான் எனக்குத் தோன்றியது. போகிறது.

      நீக்கு
    5. பெரியவாள் செய்தார் என்பதற்காக எல்லாமே ஏற்புடையதாக எனக்குத் தோன்றவில்லை. கருத்திட தயங்கும் சமாசாரம் (கண்ணைக் குத்திட்டா?) என்றாலும்.. ஹிஹி.. சுவாரசியமான மேட்டருன்னா பதில் போடத்தான் வேண்டும். கீதா சாம்பசிவம், ரிஷபனுக்கு நன்றி.

      நீக்கு
    6. இது ஒண்ணும் கருத்திடத் தயங்கும் சமாசாரம் இல்லை அப்பாதுரை,கண்ணைக் குத்திட்டானு எல்லாம் பயப்படும் ஆளும் நான் இல்லை. கடவுளை ஒரு நண்பராகவே கருதுவேன். ஆகவே பயம் என்பதெல்லாம் இல்லை. பயபக்தியும் கிடையாது. மஹாபெரியவர் மனம் வேதனை அடைந்திருந்ததால் அவரைக் கேட்டு உணர வைத்து விட்டார்.

      பொதுவாகப் பந்தியில் அவமரியாதை நடப்பது என்பதை நான் நிறையவே அனுபவித்திருக்கேன். ஆகவே கனபாடிகளின் மனோநிலை அந்தக் கணம் எப்படி இருந்திருக்கும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. பந்தியில் அவமரியாதை செய்தது தப்பு என்பதைத் தான் பெரியவர் சுட்டிக் காட்டியுள்ளார். மற்றபடி இதை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் சொந்த விருப்பம். இல்லையா! :)))))))

      நீக்கு
    7. //பொதுவாகப் பந்தியில் அவமரியாதை நடப்பது என்பதை நான் நிறையவே அனுபவித்திருக்கேன்//

      என்னையும் ஒரு முறை எழுப்பி விட்டார்கள். ! சாதத்தில் கை வைக்குமுன். எழுந்து வெளியே வந்து விட்டேன். சாப்பிட போகவே இல்லை மறுபடி. அந்த உறுத்தல் ஒருவித அவஸ்தை .

      நான் பதில் எழுதியதும் ஆன்மீகப்பார்வையில் இல்லை. கண்ணைக் குத்தும் என்கிற பயம் இல்லை. மனசுக்குப் பட்டதை (பதிவிடாமல்) சகாக்களுடன் விமர்சனப் பார்வையில் வைக்கிற ரகம்தான்.

      கிராமமோ நகரமோ.. இன்றும் இப்போதும்.. ஆன்மீகமும் சரி பகுத்தறிவும் சரி.. சில நேரங்களில் அதை நம்புகிறவர்களை சீண்டுகிற தொனியில் இருக்கிறது.

      எது சரி எது தப்புன்னு நம் துலாக்கோல் அவ்வப்போது மாறிக் கொண்டேதான் இருக்கிறது பல விஷயங்களில். ஆனால் அது மாறாமல் இருப்பது ஒரு விஷயத்தில் (என் பார்வையில்) ‘அடுத்தவரை எப்போதும் அவமரியாதை செய்துவிடாதே’ என்பதில்!

      இரந்து வந்தவரை ஏளனம் செய்த அர்ஜுனனிடம் தர்மபுத்திரர் சொன்னாராம். ‘அர்ஜுனா ஒரு நிமிஷம் தப்பிப் பிறந்த அவன் பிச்சை கேட்டு.. நீ ராஜ்யத்தில்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.. ‘

      நீக்கு
  19. மஞ்சுபாஷிணி அவர்கள் சுகமாக குவெய்த் சென்று அடையப் பிரார்த்தனைகள்.

    திரு ஜிஎம்பியைச் சந்தித்தீர்களா? இது பற்றி எழுதுவீர்கள் என நினைத்தேன். படங்கள் எல்லாம் நன்றாக வந்திருக்கின்றன. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. பிராப்தம் இருந்தால் ..... அவருக்குப் பிராப்தம் இருக்காது என எனக்கும் தோன்றியது.... படிக்கும்போது.

    தொடர்ந்து பதிவர் சந்திப்புகள்... நடத்துங்க நடத்துங்க!

    பதிலளிநீக்கு
  21. ஓரளவுக்கு எதிர்பார்த்ததுதான். மிராசுதார் பாவம். என்ன பண்ணி என்ன, பெரியவாளின் அனுக்ரஹமும் கிடைக்கவில்லை; கனபாடிகளிடம் மன்னிப்பு பிராப்தமும் இல்லை.

    திருமதி மஞ்சு பாஷிணியை இங்கு வந்தபோது சந்திக்க இயலவில்லை. அவர் நலமாக ஊர் போய் சேர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

    பதிவர் திரு GMB அவர்களுடனான சந்திப்பு படிக்க சுவையாக இருந்தது. கூடிய விரைவில் நானும் ஸ்ரீரங்கம் வந்து உங்களை சந்திக்க வேண்டும்.


    பதிலளிநீக்கு
  22. முதல்லேருந்து மறுபடி படிங்க அப்பாதுரை. அவர் குருவிடம் மன்னிப்புக் கேட்க வரலை. மஹாலிங்க சுவாமியின் பிரசாதத்தைக் கொடுத்துட்டுத் தான் நடத்திய ருத்ர ஜபம் பற்றிச் சொல்லிப் போகவே வந்தவரிடம், அவர் சொல்லாமலேயே பெரியவர் தான் இந்நிகழ்ச்சி பற்றிக் கேட்கிறார். கனபாடிகளை அவமானப் படுத்தியது தப்பு என உணர வைத்ததே பெரியவர் தானே! அதுவரைக்கும் மிராசுதாருக்குத் தான் நடந்து கொண்டது பற்றிப் பெருமையாகத் தானே இருந்திருக்கு. அது தப்புனு சுட்டிக் காட்டியதுமே தான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மிராசுதாருக்குத் தோன்றி இருக்க வேண்டும். உடனே கிளம்பி இருந்தாரானால் ஒருவேளை கனபாடிகளை உயிருடன் பார்த்திருக்கலாம். சில மணி நேரங்கள் தாமதித்தே தான் கிளம்பி இருக்கார். அவரோட எண்ணங்கள் முழுதும் மாறவில்லை என்பதைப் புரிந்து கொண்டே பெரியவர், "பிராப்தம் இருந்தா பார்க்கலாம்" னு சூசகமாச் சொல்லி இருக்கார். அப்போதாவது புரிந்து கொள்ளணும் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பதிலைப் பார்க்காமல் நானும் பதில் போட்டுவிட்டேன்.. நீங்கள் சரியாக சொல்லி விட்டீர்கள்.

      நீக்கு
  23. WISHING YOU ALL A VERY VERY HAPPY JOURNEY....
    dear Manju......

    I never expected the climax.
    My body itself shaked.......
    This is the lesson great lesson.........

    Thanks for the post Sir.
    Happy viewing your friendship meeting sir..
    viji

    பதிலளிநீக்கு
  24. Mrs. MANJU & HER FAMILY MEMBERS HAVE SAFELY LANDED KUWAIT YESTERDAY MID NIGHT AROUND 12 O' CLOCK IST, ACCORDING TO HER PHONE CALL TO ME THIS MORNING.

    THIS IS FOR THE KIND INFORMATION OF ALL CONCERNED.

    நம் அன்புச்சகோதரி திருமதி மஞ்சுபாஷிணி அவர்களும், அவர்கள் குடும்பத்தாரும் நேற்று நள்ளிரவு 12 மணி சுமாருக்கு, செளகர்யமாக குவைத் போய்ச்சேர்ந்துவிட்டதாக, மஞ்சு கைபேசி மூலம் இன்று காலை என்னிடம் பேசும்போது கூறினார்கள்.

    இது சம்பந்தப்பட்ட அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    இங்கு வாழ்த்துக்கூறியுள்ள அனைவருக்கும் மஞ்சுவின் நன்றிகள் + என் நன்றிகள்.

    என்றும் அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  25. கடைசியில் இதற்கு பதில் போடலாம் என்று இருந்தேன்.இருக்கிற

    விமர்சனங்களைப் பார்க்கும்போது நான் எழுதுவது அதிகப் பிரசங்கமாகி

    விடுமோ என்கிற பயம் எனக்குள் !

    (1) முதலில் அப்பாதுரையின் சந்தேகம் தான் எனக்கும் வந்தது. பிறகு தெளிந்தது. பெரியவருக்கு அந்த மிராஸ்தார் மீது கோபம் எங்கே வந்தது ? அது வாத்ஸல்யம் தான் ...எங்கே தன் குழந்தை

    தவறு செய்து விடுவானோ என்ற தாயின் வாத்ஸல்யம் அது !

    பெரியவர் 'ப்ராப்தம் இருந்தால் கிடைக்கும் என்கிற அந்த வார்த்தையிலே

    அவரின் வேதனை தெரிகிறதே 'அட இந்த குழந்தைக்கு பிராயச்சித்தம்

    கிடைக்காமல் போகப் போகிறதென்று ! மற்றபடி அவரவர் கர்ம வினைப் படி தான் அவரவர்க்கு! மற்றபடி தெய்வ பலமும், ஆச்சார்யன் திருவடி ஆசியும் நாம் செய்கின்ற செயலை இலகுவாக்கும் அவ்வளவு தான் !

    (2) GMB சாரைப் பார்க்கவேண்டும் என்று முயன்று பார்த்தேன். எனக்கு

    கொடுத்து வைக்க வில்லை !

    (3) மஞ்சு பாஷிணி குடும்பம் இனிய பயணமாக அமைய அடியேனின்

    வாழ்த்துக்களுடன் ..........





    ஆர்.ஆர்.ஆர்.

    பதிலளிநீக்கு
  26. அதன்பிறகு பலவித கஷ்டங்களுக்கு ஆளான மிராசுதார், ஓரிரு வருஷங்களுக்கு உள்ளாகவே தன் சொத்துக்களையெல்லாம் இழக்க நேரிட்டது. வடக்கே சென்று பல சிவாலயங்களிலே திருமடப்பள்ளி கைங்கர்யம் பண்ணிவிட்டு, காசி க்ஷேத்ரத்திலே காலகதி அடைந்தார்.//

    செய்த தவறுக்கு மனம் வருந்தி, வருந்தி மன்னிப்புக் கேட்டிருப்பார் போல் இருக்கிறது மிராசுதார் அவர்கள். கடைசியில் அவர் செய்த கைங்கர்யங்கள் அவருக்கு காசியில் முக்தி கிடைக்கச்செய்திருக்கிறது.

    ஆனால் இப்படி நடந்திருக்கும் என்றே நான் நினைக்கவில்லை. இது என்ன நாம எழுதற கதையா? நாம நினைத்தபடி நடக்க.

    பதிலளிநீக்கு
  27. அருமையான முடிவு.
    அழகான சந்திப்பு.
    ஊருக்கு திரும்பும் சகோதரியின் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  28. ”நோக்குப் பிராப்தம் இருந்தால் நிச்சயம் சொல்லுவார்”! முன்பே உணர்த்திவிட்டார் பெரியவர்.

    இனிய நட்புகள் சந்திப்பு . வாழ்த்துகள்.

    மஞ்சுபாஷினி அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    நட்புக்களின் படங்களையும் நிகழ்ச்சிகளையும் எங்களுக்கு காண கொடுக்கும் உங்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

    பதிலளிநீக்கு
  29. பதிவர்கள் மஞ்சுபாஷிணி, திரு.தமிழ் இளங்கோ, திருமதி&திரு. GMB சந்திப்பு பற்றியறிய மகிழ்வாக இருந்தது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு

  30. அன்பின் கோபு சார், அன்று உங்களை சந்தித்தபோது உங்கள் அன்பாலும் பரிவாலும் திக்கு முக்காடிப் போய்விட்டேன். ஒரு நல்ல இனிய மனிதரை சந்தித்ததில் எனக்குத்தான் பெருமையும் மகிழ்ச்சியும். பயணம் முடிந்து நேற்று பெங்களூர் வந்தோம். நேற்று என் பேரனின் பிறந்த நாளாக இருந்ததால் என் மகன் வீட்டில் இறங்கினோம். இன்று நாங்கள் என் வீட்டுக்கு வந்தோம். பதிவுகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் திருமண நாள் அன்றுதான் என் மனைவியின் பிறந்த நாளும். அவளது பிறந்த நாள் அன்று இம்மாதிரி ஏதாவது கோயிலில் இருந்து வேண்டிக் கொள்வோம். திரு. ரிஷபனும் ராமமூர்த்தியும் அன்று மாலை அலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். அவர்களையும் சந்திக்க முடிந்திருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும். அன்று நட்சத்திர ஓட்டலில் விருந்து பலமாக இருந்ததா.?அன்புடனும் வாழ்த்துக்களுடனும்.

    பதிலளிநீக்கு
  31. ஏற்பதும் ஏற்க மறுப்பதும் நிச்சயமாக அவரவர் விருப்பமும் உரிமையும் தான் கீதாம்மா. என்னால் ஏற்கமுடியவில்லை என்று தான் சொன்னேன். பெரியவர்கள், அதுவும் மதக்குருக்கள் என்றால், உச்சந்தலையில் ஒரு பட்டுத்திண்டு போட்டு அதில் உட்காரவைத்துக் கண்ணைமூடிக் கொண்டாடும் சமூகத்தில் தான் நானும் பிறந்தேன் வளர்ந்தேன் வாழ்கிறேன் என்பதால் எனக்கு இது நன்றாகவே புரிகிறது. பெரியவா செஞ்சா அதில் ஆழமான அர்த்தம் இருக்கும், அடுத்தவாளுக்கு புரிஞ்சுக்குற சக்தி கிடையாது என்றே சொல்லிக் கொண்டிருப்போம். அதனால் என்ன?

    கீதா சாம்பசிவம், ரிஷபன், ராமமூர்த்தி.. அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  32. அதிதி தேவோ பவ: என்பது இந்தியச் சுற்றுலாத்துறையின் முக்கிய லோகோ. அப்படி இருக்கையில் ஒரு பொது இடத்தில் பொதுவாக நடத்திய ஒரு விசேஷத்தில் குறிப்பிட்ட ஒருவரை, அதுவும் ஒரு வயதானவரைப் பந்தி உபசாரத்தில் அவமானப்படுத்தியதைச் சுட்டிக்காட்டியதைத் தவிர வேறெதுவும் பெரியவர் செய்யவில்லை. யார் அவமானப்படுத்தினார்களோ அவங்க தான் தான் யாரை அவமரியாதை செய்தோமோ அவர்களிடம் மன்னிப்புக் கேட்டாக வேண்டும். இங்கே இந்த மிராசுதார் பெரியவர் தன்னை மன்னித்தால் போதும்னு நினைச்சது எப்படிச் சரியாகும்?

    நானே இப்படி ஒருத்தரை அவமதித்திருந்தால் நான் அவரிடம் போய் மன்னிப்புக் கேட்பதே முறை. அவமதிப்புச் செய்துவிட்டுக் காஞ்சி மடத்திற்கோ, சிருங்கேரி மடத்துக்கோ போய் மன்னிப்புக் கேட்டால் சரியாகிடுமா? அவங்க மன்னிச்சாலும் என்னால் புண்படுத்தப்பட்டவர் மனம் புண்பட்டது புண்பட்டது தானே!

    பெரியவர் என்ற லாஜிக்கை மறந்துட்டு ஒரு சாமானியர் என்ற கோணத்தில் பாருங்கள் அப்பாதுரை. அவர் செய்தது சரியே என்பது புரியவரும். அதோடு கண்ணை மூடிக் கொண்டு கொண்டாடுவது எங்களுக்கு வழக்கமும் இல்லை. உச்சந்தலையில் பட்டுத் திண்டெல்லாம் போட்டுக்கறதும் இல்லை. காவி வேஷ்டி, எப்போதாவது சில சமயம் கதர் பட்டு. அதுவும் காஞ்சி மடத்தில் கதர்த் துணி மட்டும் தான். பட்டு பயன்படுத்திப் பார்த்ததில்லை. சிருங்கேரி மடத்தில் மட்டும் விஜய நகர சாம்ராஜ்யத்தில் அரசன் மடத்து பீடாதிபதியையே அரசனாக ஆக்கி நாட்டைக் காணிக்கையாக்கி அவரின் பிரதிநிதியாக ஆட்சி புரிந்ததால் அவங்களுக்கு மட்டுமே ராஜாங்க சேவை என்பது வருடத்தில் ஒரு நாள் உண்டு. :))))) இப்போதும் கர்நாடக மக்களும், ஆந்திராவில் ஒரு பகுதியினரும் (பழைய விஜயநகர சாம்ராஜ்யம்) அவரைத் தங்கள் அரசராகவே கருதுவார்கள். சிருங்கேரி மடத்துக்குப் போய்ப் பார்த்தால் தெரியும். :))))))

    பதிலளிநீக்கு
  33. மனம் கனக்கவைத்த முடிவு. பந்தியில் செய்யப்பட்ட அவமரியாதையும் தன்மீதான கழிவிரக்கமும் ஒன்றுசேர்ந்து கனபாடிகளின் உயிரைப் பறித்துவிட்டன. மிராசுதாரர் உண்மையிலேயே மனம் திருந்தினாலும் அவர் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படாதவரை குற்றவுணர்வினால் மருகுவது நிச்சயம்.

    நட்புப் பதிவர்களின் சந்திப்பு விவரங்களும் படங்களும் மகிழ்வைத் தருகின்றன. அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  34. மிராசுதரின் முடிவு மனதை கனக்கச்செய்துவிட்டது. அழகாக இக்கதையை பதிவிட்டமைக்கு நன்றிகள். பதிவர்கள் சந்திப்பு இனிதே தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  35. மிராசுதாருக்கு கண்டிப்பாக மன்னிப்புக் கிடைத்து விடும் என்று எண்ணியிருந்தேன்.கடைசியில் மிராசுதார் நிலைமை இப்படியாகிவிட்டதே!

    பதிவர்களுக்கெல்லாம் திருச்சி தான் தலை நகரமோ.?திரு.GMB சார் பதிவையும் படித்து விட்டு சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  36. I didn't expect the end. It was a very moving story. Also gives us the valuable lesson to treat everyone alike. Thanks for sharing this wonderful story. Please continue sharing such morals.

    பதிலளிநீக்கு
  37. கனபாடிகளின் முடிவு மனதை மிகவும் வேதனைப்படுத்தியது.அந்த அனிமேடிங் ஏற்போட் படம் மனதை சற்று ர்லாக்ஸ் ஆக்கியது. பயங்கரமா படம் செலக்சன் & அப்லோட் செய்றிங்க சார்.

    பதிலளிநீக்கு
  38. அன்பின் வை.கோ - பதவியும் பணமும் படுத்தும் பாடு - அருமையான விளக்கம்

    மிராசுதார் - கனபாடிகளிடம் சென்றால் பிராயச் சித்தம் கிடைக்குமா எனக் கேட்க - பெரியவா - நோக்குப் பிராபதம் இருந்தா நிச்சயம் கிடைக்குமெனக் கூறுகிறார். மிராசுதாருக்குப் ப்ராப்தம் இல்லை - கன பாடிகள் வீட்டிற்குச் சென்ற போது கனபாடிகள் இறைவனடி சேர்ந்து விட்டார்.

    அமுத மழைப் பதிவுகள் அனைத்துமே அருமை - விவரமான விளக்கங்கள் கொண்ட தொடர் பதிவு - இன்னும் 25 பதிவுகள் இருக்கின்றன - படித்து விடுகிறேன் - நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  39. அன்பின் வை.கோ - பதிவர் சந்திப்புகளீலும் தூள் கெளப்புறீங்க - தாயகம் வந்த உடன் திருச்சி வருகிறேன் - சந்திக்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  40. அடடா மஞ்சுபாஷினியை ஏத்திக் கொண்டு பிளேன் மேலே எழும்பிவிட்டதே...

    சந்திப்புக்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  41. நாராயணஸ்வாமி அய்யருக்கு பிராப்தம் இல்லை. தெரியாமல் செய்யற தவறுகளுக்குத்தான் பிராயச்சித்தம் உண்டு. தெரிஞ்சு செய்யற தவறுகளுக்கு பிராயச்சித்தம் இல்லை. தண்டனையை அனுபவிப்பதுதான் பிராயச்சித்தம்.

    பதிலளிநீக்கு
  42. மிராசுதார் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க சென்றும்கூட மன்னிப்பு கிடைக்கலியே. ஸோ யாராக இருந்தாலும் செய்த தப்புக்கு தண்டனை அடைந்துதான் தீரணம் போல இருக்கு

    பதிலளிநீக்கு
  43. அட பாவமே அந்த மிராசு மனசு வருந்தி திருந்தி மன்னாப்பு கேக்க போனாகாட்டியும் அந்த ஐயிரு மவுத் ஆகிட்டாங்களே

    பதிலளிநீக்கு
  44. அகம்பாவமும் அகந்தையும் ஆட்டிப்படைத்தால் தண்டனை அனுபவித்துதான் ஆகணும் போல. சந்தோஷமளித்த பதிவர் வருகைகளுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  45. ”நோக்குப் பிராப்தம் இருந்தால் நிச்சயம் சொல்லுவார்”!/// திரைப்படக் காட்சிகள்போல காட்சியமைப்பு கனகச்சிதம். அருமையான வாசிப்பு அனுபவம்..

    பதிலளிநீக்கு
  46. பாடம் புகட்டும் முடிவு...அற்புதப் பதிவு..நன்றி.

    பதிலளிநீக்கு
  47. அரசன் அன்று கொஸ்வான் ஆண்டவன் நின்று கொல்வானு சொல்வாங்க. இங்க அது சரியாதான் இருக்கு. இதெல்லாம் படிக்கறவாளுக்கு பெரிய படிப்பினைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. happy November 1, 2016 at 11:27 AM

      வாம்மா .... ஹாப்பி, வணக்கம்.

      //’அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்’ன்னு சொல்வாங்க. இங்க அது சரியாதான் இருக்கு. இதெல்லாம் படிக்கறவாளுக்கு பெரிய படிப்பினைதான்//

      ஆமாம்....டா, ஹாப்பி. நீ சொல்வது சரியே. நமக்கெல்லாம் இவை படிப்பினைகளேதான்.

      நீக்கு