என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 19 ஜூலை, 2013

27] மறைந்திருக்கும் ’மறை’

2
ஸ்ரீராமஜயம்இறைவனும் குருவும் வேறில்லை. இறைவனே தன்னைக் காட்டிக் கொடுக்கிற ரூபத்தில் குருவாக இருக்கிறான். இப்படி நம்பி ஒருவரை குருவாக வரித்துவிட்டால் பலன் நிச்சயம்.

எழுத்து அதைப்படித்து மூளைக்குப் புரிகிற அர்த்தம் - இவைகளோடு வேதம் முடிந்துபோய் விடுவது இல்லை. பெரிய பெரிய அனுபவங்களைத் தரும் சக்தி அதனுடைய எழுத்து வடிவத்திற்குள்ளேயே இருக்கிறது. அதை உள்ளே வைத்துக்கொண்டிருக்கும் ”மறை”யாக அது இருக்கிறது.

எல்லா சமயங்களும் கடவுள் ஒருவரே என்று சொல்லுகின்றன. ஒருவரேயான அந்தக்கடவுள் எந்த சமயத்தின் மூலம் வழிபட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார். 

எனவே எவருமே தங்கள் பிறந்த மதத்தை விட்டு இன்னொரு மதத்தை தழுவ வேண்டியதில்லை.


oooooOooooo

அற்புத நிகழ்வுகள் 

வில்வ இலைகளை 
வைத்து விட்டுப்போனது யார்?


மஹாஸ்வாமிகளை உருக வைத்த நிகழ்ச்சி.


[பகுதி-1  படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/21.html  ]

[பகுதி-2  படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/22.html  ]     

[பகுதி-3  படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/23.html  ]   

[பகுதி-4  படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/24.html ]   

[பகுதி-5 படிக்க:   http://gopu1949.blogspot.in/2013/07/26.html ] 


பகுதி 6  of  9

”எனக்கு சொந்த ஊரு மதுர பக்கத்ல உள்ள உசிலம்ப்பட்டிங்க. நா பொறந்த ரண்டு வருசத்துக்குள்ள ஒடம்பு சரியில்லாம எங்கம்மா எறந்துட்டாங்க. 

அதுலேருந்து எங்கப்பாதான் என்னய வளர்த்துனாரு. எனக்கு ஆறு வயசாகும்போது என்ன கூட்டிக்கிட்டு பொளப்பு தேடி இந்தப்பக்கம் வந்தாரு. 

இந்த ஊரு ஜமீன்ல மாடு மேச்சு பராமரிக்கற வேலை கெடச்சிச்சுங்க. 

நா படிக்க பள்ளிக்கூடம் போவலீங்க. எங்கப்பாருட்ட நெறயா படிச்சிருக்கேன். எங்கப்பாருக்கு பாட்டுன்னா உசிரு. 


புரந்தரதாசரு .... திருவையாறு தியாகராஜசாமி பாட்டெல்லாம் ரொம்ப நல்லா பாடுவாரு. எனக்கும் சொல்லி வெச்சிருக்காரு. நானும் பாடுவேன். 

அந்த ஆசையிலதான் என் பெயரைப் ’புரந்தரகேசவலு’ன்னு வெச்சிருக்காரு. இப்ப அவரு இல்லீங்க. மோட்சத்துக்கு போய் ரண்டு வருசம் ஆயிடிச்சி.  

நா இப்ப ஜமீன் மாடுங்களை மேச்சுப் பராமரிக்கிறேன். ஜமீன்ல சோறு போட்டு சம்பளம் தர்றாங்க. 

இப்ப எனக்குப் பன்னண்டு வயசாவுது சாமி...”

இதைக்கேட்டு நெகிழ்ந்தார் ஸ்வாமிகள். 

“அது சரி ..... ‘இந்த சுத்து வட்டாரத்லேயே வில்வ மரம் இல்லே’னு எல்லாரும் சொல்றச்சே ஒனக்கு மட்டுமெங்கேருந்து இவ்வளவு பில்வம் கெடச்சுது?” என்றார் ஆச்சர்யத்தோடு.

புரந்தரகேசவலு பவ்யமாகச் சொன்னான்: “இங்கருந்து மூணு மைல் தள்ளிருக்கற மலை அடிவாரத்தில நெறயா புல்லு மண்டிக் கெடக்குது சாமி. 

அங்கதான் எங்கப்பாரு காலத்துலேருந்து மாடு மேய்க்கப் போவோம். 
அங்க மூணு பெரிய வில்வ மரங்கள் இருக்குது! 

அப்போ எங்கப்பாரு அந்த எலைங்கள பறிச்சாந்து காட்டி, ‘எலே புரந்தரா ....  இந்த எலை பேரு வில்வம். இதால சிவபெருமானுக்கு பூஜை பண்ணுனா அம்புட்டு விசேஷம்டா ... பாத்து வெச்சுக்கடா’ன்னு சொன்னாரு. அது நெனப்லய இருந்துச்சு சாமி. 

முந்தா நாளு நம்ம மடத்துக்காரவங்க இந்த எலையக்காட்டி, ‘நெறைய வேணும்’னு கேட்டப்ப புரிஞ்சு போச்சு .... ஓடிப்போயி ஓலக்குடயிலே பறிச்சாந்து வெச்சேன் .... மாடு மேய்க்கற பையன் கொண்ணாந்ததுனு தெரிஞ்சா பூஜைக்கு ஏத்துக்க மாட்டீங்களோனு பயந்துதான் யாருக்கும் தெரியாம வெச்சிட்டுப்போனேன். இதான் சாமி சத்தியம்!”

மேலும் நெகிழ்ந்த ஆச்சார்யாள் சற்று நேரம் மெளனம் காத்தார். 

பிறகு, “புரந்தரகேசவலு .... ஒனக்கு என்ன வேணும் .... என்ன ஆசைன்னு சொல்லு. அத மடத்லேர்ந்து பூர்த்தி பண்ணச் சொல்றேன்!” என்றார் வாஞ்சையுடன்.

உடனே புரந்தரகேசவலு, “சிவ ... சிவா!” என்று சொல்லி கன்னத்தில் போட்டுக்கொண்டு, மேலும் பேச ஆரம்பித்தான்: 

தொடரும்......oooooOooooo

18.07.2013 பேத்தி ’பவித்ரா’வின் பிறந்த நாள்
திருச்சி ’பவித்ராலயா’ இல்லத்தில் 
கொண்டாடப்பட்டது. 

இதோ சில படங்கள் தங்கள் பார்வைக்காக!   
என் பேத்தியால்  எடுக்கப்பட்ட  போட்டோ [கீழே]


நேற்று இரவே திருச்சியிலிருந்து கிளம்பி 
சிங்கப்பூருக்கு ஓரிரு வார இன்பச்சுற்றுலா சென்றுள்ள 
’பவித்ரா’ செல்லத்திற்கு மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.

oooooOooooo


தேடினேன் ...... வந்தது !

நாடினேன் ........ தந்தது !!

வாசலில் ........ நின்றது !!!

வாழவா ....... என்றது !!!!
பெரும்பாலான நபர்களுக்கு தாங்கள் விரும்பிடும் கல்வியைக் கற்க வாய்ப்புக் கிட்டுவது இல்லை.

அதுபோல தாங்கள் விரும்பிடும் வேலை வாய்ப்புகள் அனைவருக்குமே அமைந்து விடுவதும் இல்லை. 

பெரும்பாலானோர்,  தாங்கள் படித்த படிப்புக்கு தகுந்த வேலைகளிலும் அமர்ந்து விடுவதும் இல்லை. 

படித்த படிப்பு ஒன்று, செய்யும் வேலை மற்றொன்று. பெரும்பாலும் இதற்கும் அதற்கும் சம்பந்தா சம்பந்தமே இருப்பது இல்லை. 

’யுவராணி’ படித்த படிப்பு முதுகலை கணிப்பொறி பயன்பாட்டியல். இவர் படித்து முடித்துள்ள படிப்புக்கு ஏற்ற வேலையொன்றுக்கும் காம்பஸ் செலெக்‌ஷனில் ஒரு நிறுவனத்தால் தேர்வாகியுள்ளார். 

வேலைவாய்ப்புக்கான நியமன  உத்தரவை அந்த நிறுவனத்திலிருந்து எதிர்பார்த்துக் காத்திருந்து வந்துள்ளார்.

இருந்தும், இவருக்கு வங்கியொன்றில் பணியாற்ற வேண்டும் என்பதே ஆரம்பத்திலிருந்து விருப்பமாக இருந்து வந்துள்ளது.

அதற்கான முயற்சிகளில் யுவராணி தொடர்ந்து ஈடுபட்டும் வந்துள்ளார். 

செல்வி யுவராணி தமிழரசன் அவர்களுக்கு அவர் ஆழ்மனத்தில் துளிர் விட்டிருந்த ஆசைப்படியே, நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ள வங்கியொன்றில் பணியாற்றும் வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது.

15.07.2013 திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு APPOINTMENT ORDER + POSTING ORDER வழங்கப்பட்டுள்ளது.

அதுவும் தமிழ்நாட்டிலேயே, மிகவும் தொழில் வளர்ச்சியடைந்த மிகப்பெரியதொரு மாவட்டத்தின் தலைநகரில் [HEART OF THE CITY] அமைந்துள்ள வங்கிக்கிளையில் POSTING கிடைத்துள்ளது.

இதைப்பற்றிய மேலும் சில விபரங்களை, அவரே அவரின் வலைத்தளத்தில், என்றாவது ஒருநாள் பதிவாக வெளியிடுவார். 

மனதளவில் மிகவும் சோர்வடைந்திருந்த யுவராணிக்கு என்னால் என் கடிதங்களால் கொஞ்சம், தன்னம்பிக்கையையும், மனோதைர்யமும் மட்டும் அளித்து அவ்வப்போது உற்சாகமும் ஆறுதலும் தர முடிந்தது.

ஒரு பாசமுள்ள தந்தையாக, பிரியமுள்ள அண்ணனாக, கீதை சொன்னக்கண்ணனாக,  நலம் விரும்பும் நண்பனாக என்னைப் பல்வேறு கோணங்களிலும் வைத்துப்பார்த்து, பெரிதும் மகிழ்ச்சி கொள்கிறாள், யுவராணி. 

இன்றைய உலக நடைமுறை யதார்த்தங்களை எடுத்துச்சொல்லி, ஒருசில ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் மனம் விட்டுப் பகிர்ந்து, என்னால் யுவராணிக்குப் புரியும்படி சொல்லிக்கொடுக்க முடிந்தது.

“சொல்லிக்கொடுத்த வார்த்தைகளும், கட்டிக்கொடுத்தச் சோறும் [பயணம் செய்வோருக்கு] எவ்வளவு நாட்களுக்கு உபயோகமாக இருக்க முடியும்?" என்று ஓர் பழமொழி சொல்லுவார்கள்.

யுவராணி தன் விடா முயற்சியினாலும், கடும் உழைப்பினாலும், தனது முதுநிலைப் பட்டப்படிப்பினாலும், தனித்திறமைகளாலும் மட்டுமே இன்று இந்த வங்கிப்பணிக்குத் தேர்வாகி இருக்கிறாள் என்பதே உண்மை.

இருப்பினும், “வங்கிப்பணிக்கான எழுத்துத்தேர்வுகள் + நேர்முகத் தேர்வுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட சிறு தோல்விகளால் துவண்டு போயிருந்த எனக்கு, அவ்வப்போது ஊக்கமும் உற்சாகமும் அளித்துக்கொண்டே இருந்த தாங்கள் தான் இந்த என் வெற்றிக்கு முழுக் காரணகர்த்தா” என்று அவ்வப்போது சொல்லிச் சொல்லிப் பூரித்துப் போகிறாள், யுவராணி.

இதுவரை நானும் யுவராணியும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்காவிட்டாலும், மிகவும் முக்கியமான, அதிக அன்பும் பாசமும் நிறைந்த, என் வலையுலக நட்புக்களில் [PEN FRIENDS' VERY CLOSE CIRCLE] யுவராணியும் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார். 


தங்கள் விருப்பப்படியே அடியேனால் ஆசீர்வதித்துக்

 கொடுக்கப்பட்டுள்ள பேனாக்களுடன்

 வங்கிப்பணியில் சேர உள்ள  

தங்களுக்கு என் மனமார்ந்த 


இனிய நல்வாழ்த்துகள்


யுவராணி.இறையருளாலும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹத்தாலும், தங்களுக்கு, 

தங்களின் அலுவலகப்பணிகளிலும், சொந்த வாழ்க்கையிலும், மேலும் 

தொடர்ந்து பல வெற்றிகள் கிடைக்க மனதாரப் பிரார்த்திக்கிறேன். அன்புடன் கோபு 
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

இதன் தொடர்ச்சி 
21.07.2013 ஞாயிறு வெளியாகும்

என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

51 கருத்துகள்:

 1. குரு பற்றிய சரியான தகவல்கள்.
  தங்கள் பேத்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  யுவராணிக்கு வங்கிப்பணி கிடைக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. புரந்தரகேசவலு எதையும் கேட்க மாட்டார் என்றே நினைக்கிறேன்...

  பேத்தி பவித்ரா அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

  ஊக்கமும் உற்சாகமும் மட்டுமல்லாமல், மனதார நினைத்த, உண்மையான அருளால் ஆசீர்வதிக்கப்பட்ட, யுவராணி அவர்களுக்கு மென்மேலும் சிறக்க, எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...

  நன்றிகள் ஐயா...

  பதிலளிநீக்கு
 3. நிறை மொழி மாந்தர் பெருமை உலகத்து அவர் மறை மொழி காட்டிவிடும்.
  படமும் கருத்தும்
  அருமைபாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 4. //எல்லா சமயங்களும் கடவுள் ஒருவரே என்று சொல்லுகின்றன. ஒருவரேயான அந்தக்கடவுள் எந்த சமயத்தின் மூலம் வழிபட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார்.

  எனவே எவருமே தங்கள் பிறந்த மதத்தை விட்டு இன்னொரு மதத்தை தழுவ வேண்டியதில்லை.//

  மதம் மதம் என்று மதம் பிடித்து அலைபவர்களுக்கு இந்த வார்த்தைகள் போய் சேர வேண்டும்.

  செல்வி பவித்ராவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  செல்வி யுவராணிக்கு அவர் தேடியது கிடைத்தது பெரிய வரம். அவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. ஐயா,
  தங்களின் பேத்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  யுவராணி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

  மாடு மேய்க்கும் பையனுடன் எங்களையும் பயணிக்க வைத்துவிட்டீர்கள்...

  பதிலளிநீக்கு
 6. குரு பற்றிய தகவல்களும் புரந்தர கேசவலுவின் பணிவான பதில்களும் கவர்ந்தன! தங்களின் பேத்திக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 7. உங்கள் பதிவுகள் உங்களைக் காட்டும் கண்ணாடி. உங்கள் நட்புக்கு பெருமை அடைகிறேன். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

  பதிலளிநீக்கு
 8. தங்களின் பேத்தி செல்வி பவித்ராவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. // 18.07.2013 பேத்தி ’பவித்ரா’வின் பிறந்த நாள்
  திருச்சி ’பவித்ராலயா’ இல்லத்தில் கொண்டாடப்பட்டது. //

  தங்கள் பேத்திக்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  // செல்வி யுவராணி தமிழரசன் அவர்களுக்கு அவர் ஆழ்மனத்தில் துளிர் விட்டிருந்த ஆசைப்படியே, நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ள வங்கியொன்றில் பணியாற்றும் வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. //

  சகோதரி யுவராணி தமிழரசன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

  // மனதளவில் மிகவும் சோர்வடைந்திருந்த யுவராணிக்கு என்னால், என் கடிதங்களால் கொஞ்சம் தன்னம்பிக்கையையும், மனோதைர்யமும் மட்டும் அளித்து, அவ்வப்போது உற்சாகமும் ஆறுதலும் தர முடிந்தது. //

  பல பதிவர்களுக்கு நீங்கள் அளிக்கும் உற்சாகம் அனைவரும் அறிந்ததே!

  //ஒரு பாசமுள்ள தந்தையாக, பிரியமுள்ள அண்ணனாக, கீதை சொன்னக் கண்ணனாக, நலம் விரும்பும் நண்பனாக என்னை பல்வேறு கோணங்களிலும் வைத்துப்பார்த்து, பெரிதும் மகிழ்ச்சி கொள்கிறாள், யுவராணி.//

  ”எங்கிருந்தோ வந்தான் கண்ணன்! ஈங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்தேன்? “ என்றான் நமது பாரதி! உங்கள் பெயரிலும் கண்ணன்! யுவராணி பெற்ற தவம். தங்கள் ஆசீர்வாதத்தில் அவர் மேலும் பதவி உயர்வு பெறட்டும். வாழ்த்துக்கள்!
  நிறைவாக, இன்றைய பதிவு மொத்தத்தில் “எல்லாம் இன்ப மயம்”

  பதிலளிநீக்கு
 10. தங்கள் பேத்தி செல்வி பவித்ரா வுக்கு
  எங்கள் ஆசிர்வாதங்கள்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 11. Vilva ilai patri melum padikka aavalaaga irukkiren...Periyavaa yenda vidhaththil Purandaravukku udavinaar?

  பதிலளிநீக்கு
 12. Wishing Pavithra a very very happy belated birthday wishes, Thatha koodu jammunu birthday celebrate panniyacchu, and she has clicked a good photo as well.
  Information about guru is excellent, just waiting for the next post sir, thank you for sharing...

  பதிலளிநீக்கு
 13. பவித்ராவிற்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.....

  வில்வம் கொண்டு வந்த சிறுவன் கேட்கப்போவது என்ன..... ஆவலுடன் நானும்..

  பதிலளிநீக்கு
 14. மாட்டு மேய்க்கும் பையனுக்கு அருள் புரிந்த விதம் பற்றித் தெரிந்து கொள்ள ஆவல்.
  பவித்ராவிற்கு என் மனமார்ந்த ஆசிகள் பலப்பல. வாழ்த்துக்களும் தான்.
  யுவராணியை நேரில் பார்க்காமலே நீங்கள் ஒரு கிரியா ஊக்கி ஆனா விவரம் கண்டு மகிழ்ந்தேன். யுவரானிக்கு என் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. எழுத்து அதைப்படித்து மூளைக்குப் புரிகிற அர்த்தம் - இவைகளோடு வேதம் முடிந்துபோய் விடுவது இல்லை. பெரிய பெரிய அனுபவங்களைத் தரும் சக்தி அதனுடைய எழுத்து வடிவத்திற்குள்ளேயே இருக்கிறது. அதை உள்ளே வைத்துக்கொண்டிருக்கும் ”மறை”யாக அது இருக்கிறது.

  மறை பொருளான வேதம் பற்றி அருமையான வரிகள்..

  பதிலளிநீக்கு
 16. தங்கள் பேத்தி செல்வி பவித்ரா வுக்கு
  இனிய் பிறந்தநாள் வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
 17. செல்வி யுவராணி தமிழரசன் அவர்களுக்கு அவர் ஆழ்மனத்தில் துளிர் விட்டிருந்த ஆசைப்படியே, நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ள வங்கியொன்றில் பணியாற்றும் வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது.//

  இனிய வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 18. பிறகு, “புரந்தரகேசவலு .... ஒனக்கு என்ன வேணும் .... என்ன ஆசைன்னு சொல்லு. அத மடத்லேர்ந்து பூர்த்தி பண்ணச் சொல்றேன்!” என்றார் வாஞ்சையுடன்.


  ஆச்சாரியாளையே நெகிழவைத்த “புரந்தரகேசவலு ...!

  பதிலளிநீக்கு
 19. My hearty wishes to your beloved grand daughter.

  I am happy that she got a job as per her wish.

  Waiting to read further.
  viji

  பதிலளிநீக்கு
 20. புரந்தரகேசவலு என்ன கேட்கப் போகிறாரோ....ஆவலுடன்

  பவித்ராவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

  யுவராணிக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 21. \\எல்லா சமயங்களும் கடவுள் ஒருவரே என்று சொல்லுகின்றன. ஒருவரேயான அந்தக்கடவுள் எந்த சமயத்தின் மூலம் வழிபட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார்.\\

  அனைவரும் மனத்தில் இருத்திக்கொண்டால் உலகில் மதச்சண்டை, இனச்சண்டைக்கு வழியேது?

  மாடுமேய்க்கும் சிறுவனின் பணிவு மனந்தொட்டது.

  பேத்தி பவித்ராவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 22. தங்களின் பேத்தி பவித்ராவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யா

  பதிலளிநீக்கு
 23. யுவராணிக்கு வங்கியில் வேலை கிடைத்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் பேத்தி பவித்ராவுக்கு எங்கள் வாழ்த்துகள். இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். புரந்தர கேசவலுவைக் குறித்து முன்னரே படித்திருக்கிறேன். மீண்டும் படிக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 24. யுவராணி குறித்து எழுதி இருக்கும் பகுதியில் மட்டும் எழுத்துக்கள் உடைந்து ஒன்றோடொன்று கலந்து சரியாகப் படிக்க முடியாமல் இருக்கிறது. :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //Geetha SambasivamJuly 21, 2013 at 1:14 AM
   யுவராணி குறித்து எழுதி இருக்கும் பகுதியில் மட்டும் எழுத்துக்கள் உடைந்து ஒன்றோடொன்று கலந்து சரியாகப் படிக்க முடியாமல் இருக்கிறது. :( //

   தகவலுக்கு மிக்க நன்றி.

   இப்போது கஷ்டப்பட்டு COMPLETE RE-TYPE செய்து வெளியிட்டுள்ளேன்.

   சரியாக உள்ளதா என்று பார்த்துவிட்டு, FEEDBACK மீண்டும் ஒரு பின்னூட்டம் மூலம் தயவுசெய்து கொடுங்கோ.

   நீக்கு
  2. யுவராணி குறித்து எழுதி இருக்கும் பகுதி இப்போச் சரியா இருக்கு. நீங்க அதை காப்பி, பேஸ்ட் பண்ணி இருந்தாலே போதும். மறுபடி தட்டச்சி இருக்க வேண்டியதில்லை. :))) வேர்ட் டாகுமென்டில் இருந்து சில சமயம் காப்பி, பேஸ்ட் பண்ணுகையில் இம்மாதிரியான பிரச்னைகள் எனக்கும் வருகிறது. சில சமயம் வேண்டாத E அல்லது கட்டங்கள் வந்துவிடுகின்றன. கூகிள் பிரச்னையா அல்லது நம்ம கணினி பிரச்னையானு புரியலை. நான் இப்போல்லாம் வேர்டில் இருந்து நோட்பேடுக்கு மாற்றிவிட்டு அங்கிருந்து பதிவேற்றுகிறேன்.

   நீக்கு
  3. //Geetha Sambasivam July 22, 2013 at 12:13 AM
   யுவராணி குறித்து எழுதி இருக்கும் பகுதி இப்போச் சரியா இருக்கு. //

   FEEDBACK தகவலுக்கு மிக்க நன்றி, மேடம்.

   //நீங்க அதை காப்பி, பேஸ்ட் பண்ணி இருந்தாலே போதும். மறுபடி தட்டச்சி இருக்க வேண்டியதில்லை. :)))//

   நான் எதிலும் மிகவும் PERFECTION எதிர்பார்க்கக்கூடியவன்.
   ஆனாலும் இந்த கணினியில் நான் எதிர்பார்க்கும் PERFECTION ஐ, என்னால் கொண்டுவர முடிவது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

   COPY & PASTE போடும் போதும், எழுத்துக்களை சின்னதாக்கி பெரியதாக்கி, BOLD LETTERS ஆக்கி, கலர் கொடுத்து, BACKGROUND கலர் கொடுத்து HIGHLIGHT செய்யும் போதும், சிலசமயங்களில் என்னைப் படாதபாடு படுத்தி விடுகின்றது. அதுபோல LEFT & RIGHT MARGIN அழகாக சீராக வராமலும் படுத்துகிறது.

   அதுபோல எவ்வளவு முறை திரும்பத் திரும்பப் படித்தாலும், ஒருசில எழுத்துப்பிழைகள், தேவையில்லாத புள்ளிகள் நம் கண்களில் படாமல் ஏமாற்றி விடுகின்றன. பிறகு கண்டு பிடிக்கும் போது கையோடு திருத்தி விடுவதும் உண்டு.

   என்னவோ போங்கோ ..... வர வர பதிவுகளே அலுத்துப் போய் விடும் போலிருக்கிறது. இதெல்லாம் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு ஓடுமோ .... பார்ப்போம். 500 பதிவுகள் ஆனதும் நான் விருப்ப ஓய்வில் சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

   நீக்கு
 25. புரந்தர கேசவலு மாதிரி புதல்வர்கள் நாட்டின் பெருமை!

  யுவராணிக்கு வாழ்த்துக்கள்! பணியில் பெயர் நாட்டட்டும்!!

  பதிலளிநீக்கு
 26. //எல்லா சமயங்களும் கடவுள் ஒருவரே என்று சொல்லுகின்றன. ஒருவரேயான அந்தக்கடவுள் எந்த சமயத்தின் மூலம் வழிபட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார்.

  எனவே எவருமே தங்கள் பிறந்த மதத்தை விட்டு இன்னொரு மதத்தை தழுவ வேண்டியதில்லை.// சூப்பர்ர்ர்ர்ர்ர்

  தங்கள் பெத்தி பவித்ராவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

  யுவரணிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு

 27. பேத்தி பவித்ரா அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

  யுவரணிஅவர்களுக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!!

  “புரந்தரகேசவலு நெகிழவைத்து விட்டான்!

  நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 28. எல்லா சமயங்களும் கடவுள் ஒருவரே என்று சொல்லுகின்றன. ஒருவரேயான அந்தக்கடவுள் எந்த சமயத்தின் மூலம் வழிபட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார். //

  அருமையான வார்த்தைகள்.
  மறை நூல்கள் எவ்வளவு படித்தாலும் இறை ஒன்று தான் என்ற நம்பிக்கை தான் முக்கியம்.

  பேத்தியின் சிங்கப்பூர் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.பேத்தி பவித்ராவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
  யுவராணிக்கு வாழ்த்துக்கள்.
  யுவராணிக்கு தன்னம்பிக்கை கொடுத்து தேர்வுகளை எழுத வைத்த உங்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
  புரந்தரகேசவலுவின் கதை மனதை நெகிழ வைத்து விட்டது.

  பதிலளிநீக்கு
 29. பவித்ராவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 30. பவித்ராவுக்கு என் இனிய வாழ்த்துக்களும்,ஆசீர்வாதங்களும் குரு கடவுளுக்குச் சமமானவர். அவரை நம்பி,அவர்வழி நடத்தலே நன்மையைத் தரும்.மனம் மாறாமல் இது ஒரு வழி. பக்திக்கு,மதமாற்றமோ, வேறெதுவுமோ அவசியமில்லை. நம் மதம் ஒன்றே நமக்குப் போதும். நல்ல கருத்துக்கள்.
  புரந்தர கேசவலு. மனதை நிறைவிக்கிறான்.
  யுவராணிக்கு என் வாழ்த்துக்கள். அன்புடன்

  பதிலளிநீக்கு
 31. எல்லா சமயங்களும் கடவுள் ஒருவரே என்று சொல்லுகின்றன. ஒருவரேயான அந்தக்கடவுள் எந்த சமயத்தின் மூலம் வழிபட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார்.

  எனவே எவருமே தங்கள் பிறந்த மதத்தை விட்டு இன்னொரு மதத்தை தழுவ வேண்டியதில்லை.

  சரியாகச் சொன்னீர்கள். எல்லா மதமும் நல்ல விஷயங்களைத்தான் சொல்கின்றன. நல்ல விஷயங்களைத்தான் கடை பிடிக்கச் சொல்கின்றன.

  குருவே சரணம்.

  பவித்ராவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பவித்ராவின் சிங்கப்பூர் பயணம் இனிதே முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

  யுவராணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  இந்த மாதத்துடன் (ஜூலை 2013) தொலை தொடர்பு நிறுவனத்தில் 39 ஆண்டுகள் பணி நிறைவு முடிக்கும் என் வாழ்த்துக்களை யுவராணிக்குத் தெரிவித்து விடுங்கள்.

  ‘புரந்தர கேசவலு’வைப் பற்றி மேலும் படிக்க ஆவலாய் இருக்கிறேன்.

  //அதுபோல எவ்வளவு முறை திரும்பத் திரும்பப் படித்தாலும், ஒருசில எழுத்துப்பிழைகள், தேவையில்லாத புள்ளிகள் நம் கண்களில் படாமல் ஏமாற்றி விடுகின்றன.//

  சின்னப் பிள்ளைகளைப் போல் முதுமைக்கும் பிழை அழகு.

  //500 பதிவுகள் ஆனதும் நான் விருப்ப ஓய்வில் சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.//

  SORRY YOUR APPLICATION REJECTED.

  பதிலளிநீக்கு
 32. maniyam selvathil oviyathodu muthana padhivu. Glad to know about the celebration of your grand daughter's birthday.

  please convey my belated ' Happy birthday' to Pavithra.

  Hearty congratulations to Yuvarani and a royal salute to you sir for the support you have rendered.

  // எனவே எவருமே தங்கள் பிறந்த மதத்தை விட்டு இன்னொரு மதத்தை தழுவ வேண்டியதில்லை.//

  very true. If one doesn't place confidence in god whom they have prayed to right from bith and convert to some other religion, what confidence they can place on the new form of the almighty?

  பதிலளிநீக்கு
 33. கடவுள் ஒருவர்தான்,ஒற்றுக்கொள்ளத்தான் பலருக்கும் மனதில்லை.

  அந்த சிறுவனின் கதை & விரும்பியது என்னவென்று தெரிந்துகொள்ள ஆவல்.

  யுவராணிக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 34. அன்பின் வை.கோ - மறைந்திருக்கும் மறை - பதிவு நன்று - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா - வில்வம் கொண்டு வரும் சிறுவனை அழைத்து அவனின் கதைஅயைக் கேட்டறிந்து - மகிழ்ந்து .....

  // “புரந்தரகேசவலு .... ஒனக்கு என்ன வேணும் .... என்ன ஆசைன்னு சொல்லு. அத மடத்லேர்ந்து பூர்த்தி பண்ணச் சொல்றேன்!” என்றார் வாஞ்சையுடன்.//

  தொடர்கிறது .....

  அமுத மழை பொழியும் பதிவுகள் அனைத்துமே நன்றூ - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 35. அன்பின் வை.கோ - பேத்தி பவித்ராவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ( தாமதமான ) - சிங்கப்பூர் இன்பச் சுற்றுலா சென்று வந்தமைக்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - யுவராணி தமிழரசனுக்கு வங்கியில் வேலை கிடைத்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி - நல்வாழ்த்துகள் யுவராணி தமிழரசன் - நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 36. வில்வம்பழங்கள் பார்க்க ஆசையாக இருக்கு, ஆனால் கொழும்பில் சாப்பிட்டிருக்கிறேன், எனக்கந்த சுவை பிடிக்கவில்லை.

  பவித்திராவுக்கு காலம் தாழ்த்திய, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சகல செல்வங்களும் பெற்று சீரோடும் சிறப்போடும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

  ஊ.கு:
  எனக்கொரு டவுட்டு:)) படத்தைப் பார்த்தால் பவித்திராவுக்குத்தான் பிறந்த நாளா.. இல்ல கோபு அண்ணனுக்க்க்க்க்க்க்.......?? வாணாம் மீ ஒண்ணுமே சொல்ல மாட்டேன் ஜாமீ:).

  பதிலளிநீக்கு
 37. சார் மிகுந்த சந்தோஷம் எனது வெற்றியை பற்றி நீங்கள் கொண்ட மகிழ்ச்சிக்கும் அதை பற்றி பகிர்ந்துகொண்டமைக்கும்!! மிகுந்த தாமதமான கருத்துரைக்கு என்னை மன்னிக்கவும் சார் உங்களது அறிவுரைகளுக்கும் வழிகாட்டுதலுக்கும் என்றுமே எனது நன்றிகள் சார்! நான் முன்பே தங்களிடம் சொன்னது போல் என் வாழ்க்கையின் பக்கங்களில் உங்களால் ஏற்பட்ட திருத்தங்கள் என்றுமே நான் மறக்க முடியாதது சார்! எதிர்பார்க்காத நேரத்தில் தேவையான இடத்தில் கிடைத்த உங்களது நட்பு என்றுமே எனக்கு பொக்கிஷம் தான்!!! இன்னும் அந்த பூரிப்பில் தான் இருக்கிறேன்!!!!அதற்காக இன்றும் கடவுளிடம் நன்றி சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன்!

  cheena (சீனா)
  thirumathi bs sridhar
  Mira
  JAYANTHI RAMANI
  Kamatchi
  கோமதி அரசு
  Seshadri e.s.
  S.Menaga
  middleclassmadhavi
  Geetha Sambasivam
  கோவை2தில்லி
  இராஜராஜேஸ்வரி
  rajalakshmi paramasivam
  தி.தமிழ் இளங்கோ
  சே. குமார்
  Ranjani Narayanan
  திண்டுக்கல் தனபாலன்
  Sasi Kala

  என்னை வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! இதில் பலரை வலைச்சரத்தில் சந்தித்த நினைவுகளும் மீண்டும் தொடர்கிற எதிர்பார்ப்பும் ஆவலும் அதிகரிக்கிறது இதோ வருகிறேன் !!!!!!

  பதிலளிநீக்கு
 38. யுவராணி தமிழரசன்September 15, 2013 at 6:26 AM

  வாங்கோ யுவா ! வணக்கம்மா.

  //சார் மிகுந்த சந்தோஷம் எனது வெற்றியை பற்றி நீங்கள் கொண்ட மகிழ்ச்சிக்கும் அதை பற்றி பகிர்ந்துகொண்டமைக்கும்!! மிகுந்த தாமதமான கருத்துரைக்கு என்னை மன்னிக்கவும் சார் உங்களது அறிவுரைகளுக்கும் வழிகாட்டுதலுக்கும் என்றுமே எனது நன்றிகள் சார்! நான் முன்பே தங்களிடம் சொன்னது போல் என் வாழ்க்கையின் பக்கங்களில் உங்களால் ஏற்பட்ட திருத்தங்கள் என்றுமே நான் மறக்க முடியாதது சார்! எதிர்பார்க்காத நேரத்தில் தேவையான இடத்தில் கிடைத்த உங்களது நட்பு என்றுமே எனக்கு பொக்கிஷம் தான்!!! இன்னும் அந்த பூரிப்பில் தான் இருக்கிறேன்!!!!அதற்காக இன்றும் கடவுளிடம் நன்றி சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன்!//

  அன்புள்ள யுவா,

  உங்களின் ஆவல், விடாமுயற்சி, கடின உழைப்பு இவற்றிற்குக் கிடைத்த வெற்றி மட்டுமே இது.

  நம்பிக்கை இழந்து, சோர்ந்து போயிருந்த தங்களுக்கு நான் சற்றே நம்பிக்கை அளிக்க முடிந்ததிலும், என்னால் சற்றே தூண்டி விடப்பட்ட விளக்காக தாங்கள் இன்று பிரகாசித்து எரிவதிலும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே.

  ALL THE BEST YUVA!

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 39. உங்கள் பேத்தி பவித்ராவுக்கு வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 40. ஒனக்கு என்ன வேணும்? மனசில நிறைவாயிருக்கிறவனுக்கு என்ன வேணும்?

  பதிலளிநீக்கு
 41. ம்ம்ம் வெளியில் சொல்லிக்காம திரை மறைவிலும் நல்ல செயல்கள் செய்து வருகிறீர்களா. ரூம்ப சந்தோஷமா இருக்கு இந்த புரந்தர தாசருக்கு மஹாஸ்வாமிகள் என்ன அனுக்ரஹம் பண்ணப்போறாங்க

  பதிலளிநீக்கு
 42. அந்த புள்ளக்கி அவ வாப்பா வில்வ எல பத்தி சொல்லினது இப்ப எப்படி உபயோக மாச்சுதுல. சாமி கிட்டத்ல எதயுமே கேக்க தோணாதுதா.

  பதிலளிநீக்கு
 43. மாடு மேய்க்கிற பையன் கொண்டு வந்தா ஏத்துப்பீங்களோ மாட்டீங்களோன்னு தெரியாம லச்சுட்டு போனேன். என்ன வெகுளித்தனமான பேச்சு.

  பதிலளிநீக்கு
 44. பவித்ராவுக்கு எங்களின் வாழ்த்துகள். போன எபிசோட்ல நீங்கள் சொன்னது இந்த எபிசோட்ல அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கிடைத்துவிட்டதே!! நல்ல கைராசிதான்...

  பதிலளிநீக்கு
 45. மாடு மேய்க்கும் சின்ன பையன் என்று நினைக்கவே முடியலை. தெளிவான பேச்சு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. happy November 6, 2016 at 5:45 PM

   வாம்மா .... ஹாப்பி, வணக்கம்.

   //மாடு மேய்க்கும் சின்ன பையன் என்று நினைக்கவே முடியலை. தெளிவான பேச்சு.//

   அந்த சின்னப் பையனின் பேச்சு, எங்கடச் சின்னப் பொண்ணு ’ஹாப்பி’யினுடைய பேச்சு போலவே மிகத் தெளிவானது + இனிமையானது + இயல்பானது + தெய்வீகத் தன்மை வாய்ந்தது. :)))))

   நீக்கு
 46. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (03.06.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:

  https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=407867353049298

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு