என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 9 ஜூலை, 2013

22] பண்பு அடக்கம், அன்பு ஆனந்தம்

2
ஸ்ரீராமஜயம்




பெண்கள் தான தர்மத்தை வளர்க்கிற தீபங்களாக இருக்கிறவர்கள். அவர்களில் பண்பு கெடுவதற்கு இடமே தரக்கூடாது. அப்புறம் தேசம் பிழைக்காது. குலப்பெண்களின் சித்தம் கெட்டுப்போய்விட்டதானால் அப்புறம் தருமமே போய்விடும்.

நாம் ”தானம் கொடுக்கிறோம்” என்ற வார்த்தையைச் சொல்வதுகூடத் தப்புதான். 

“பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான். கொடுத்தோம்” என்று அடங்கி அடக்கமாகக் கொடுக்க வேண்டும். 

எங்கே இதிலும் ஒரு அகங்காரம் வந்துவிடுமோ என்று பயந்துகொண்டு கொடுக்க வேண்டும்.

அன்பு நமக்கும் ஆனந்தம். எதிராளிக்கும் ஆனந்தம். உள்ளத்திற்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே உண்டாகிறது.



oooooOooooo



அற்புத நிகழ்வுகள் 

வில்வ இலைகளை 
வைத்து விட்டுப்போனது யார்?


மஹாஸ்வாமிகளை உருக வைத்த நிகழ்ச்சி.

[   பகுதி-1 படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/21.html   ]

பகுதி 2  of  9

சத்திரத்தில் ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர் பூஜைக்கு ஏற்பாடுகள் நடந்தன. ஆச்சார்யாள் ஸ்நானத்துக்காக அருகிலிருந்த புஷ்கரணிக்குச் சென்றிருந்தார்.  அப்போது ஸ்ரீமடத்தின் வயதான காரியஸ்தர், பூஜா கைங்கர்யம் பண்ணுகிற இளைஞர்களிடம் கவலையுடன் கேட்டார்.

”ஏண்டாப்பா! பூஜைக்கு ‘ஸம்ருத்தி’யா [நிறைய] புஷ்பம் ஏற்பாடு பண்ணி வெச்சிருக்கேள். ஆனா, ‘வில்வ’ பத்திரத்தையே காணுமே. அது இல்லாம பெரியவா எப்டி சஹஸ்ர நாமார்ச்சனை பண்ணுவா?”

அந்த இளைஞர்கள் கைகளைப் பிசைந்தபடி நின்றிருந்தனர். காரியஸ்தர் விடவில்லை. 

“ஏண்டாப்பா ... இப்டி பேசாம நின்னுட்டா வில்வ பத்ரம் வந்து சேர்ந்துடுமா என்ன? போங்கோ .... வாசல்ல போய், கிராமத்து ஜனங்கள்ட்ட, ‘பெரியவா பண்ற சந்திரமெளலீஸ்வரர் பூஜைக்கு வில்வ பத்திரம் வேணும்’னு சொல்லி, மூணு தளத்தோட பறிச்சு மூங்கில் கொடலைல [கூடை] போட்டுக் கொண்டுவரச் சொல்லுங்கோ. 

பெரியவா தங்கியிருக்கிற வரைக்கும் வில்வதளம் தேவைன்னும் சொல்லுங்கோ. தெலுங்கு தெரிஞ்சவாள வெச்சுண்டு பேசுங்கோ. 

அப்டியும் தெரிலேன்னா, நம்மள்ட்ட ஏற்கெனவே பெரியவா பூஜை பண்ணின ‘நிர்மால்ய’ [பூஜித்த] வில்வம் இருக்குமே .... அதக்கொண்டுபோய்க் காட்டி, பறிச்சுண்டு வரச்சொல்லுங்கோ!” என்று அவசரப்படுத்தினார்.

தெலுங்கு தெரிந்த ஒருவருடன், நிர்மால்ய வில்வ தளங்களுடன் வாசலுக்கு வந்தனர் இளைஞர்கள்.  அங்கு நின்றிருந்த ஊர் ஜனங்களிடம் நிர்மால்ய வில்வ தளங்களைக் காட்டிய அவர், இன்னும் அரை மணி அவகாசத்துக்குள் வில்வம் வேண்டும். உதவி பண்ணுங்கோ!” என்றார். 

”இந்த வில்வ இலைகளோடு கூடிய மரத்தை நாங்க இதுவரை பார்த்ததே இல்லை” என ஊர்மக்கள் கூறினர். அந்த ஊர்  எல்லைக்குள் வில்வ மரமோ, வில்வ தளமோ இல்லையே என்று வருத்தத்துடன் கூறினர்.

ஸ்ரீ மஹாஸ்வாமிகள் ஸ்நானம் முடிந்து வந்தார்கள். நடுக்கூடத்தில் பூஜா சாமான்களெல்லாம் தயாராக இருந்தன. அவற்றை நோட்டம் விட்ட மஹா பெரியவா கேட்ட முதல் கேள்வி: “ ஏண்டாப்பா! அர்ச்சனைக்கு வில்வம் ஏற்பாடு பண்ணி வெச்சுட்டேளா?”

மடத்துக் காரிஸ்தர் மென்று விழுங்கினார்.

“ஏன் என்ன விஷயம்? வில்வ பத்ரம் கெடைக்கலியோ... இந்த ஊர்ல...?” என்று கேட்டார், ஆச்சார்யாள்.  

காரியஸ்தர் மெதுவாக, “ஆமாம் பெரியவா. இந்த ஊர்ல வில்வ மரமே கெடயாதுன்னு ஊர்க்காராளும், வேதப்பண்டிதாளும் சொல்றா” என்றார் தயக்கமாக.

ஸ்வாமிகள் தனக்குள் சிரித்துக்கொண்டார். அப்போது காலை மணி: 10.30

ஸ்வாமிகள் வேகமாக சத்திரத்தின் கொல்லைப்புறத்தை நோக்கி நடந்தார். பசுமாட்டுத் தொழுவத்துக்குள் பிரவேசித்தார். அங்கிருந்த கருங்கல் பாறை ஒன்றில் ஏறி அமர்ந்து, தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.  

‘பூஜைக்கு வில்வ பத்ரம் இல்லாததால் இன்னிக்கு ஸ்ரீசந்திரமெள்லீஸ்வரருக்கும், பெரியவாளுக்கும் பிக்ஷாவந்தனம் நின்று போயிடுமோ’ என்று கவலைப்பட்டனர், ஸ்ரீமடத்து முக்கியஸ்தர்கள். 

காரியஸ்தருக்குக் கண்களில் நீர் தளும்பியது. ஜமீந்தார் காதுக்கும் தகவல் எட்டியது. அவர் தன் ஆட்களைவிட்டு வில்வ பத்திரத்தைத் தேடச் சொன்னார். ஏமாற்றமே மிஞ்சியது. மணி அப்போது 11.30  

அனைவரும் கவலையுடன் தொழுவத்தருகே நின்றிருந்தனர். பூரண மெளனம். கருங்கல் பாறையில் மஹா ஸ்வாமிகள், தியானத்தில் வீற்றிருந்த காட்சி, கயிலாய பர்வதத்தில் வீற்றிருக்கும் சாக்ஷாத் ஸ்ரீ பரமேஸ்வரனையே நினைவூட்டியது.  

தொடரும்......










ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

இதன் தொடர்ச்சி 11.07.2013 
வியாழக்கிழமை வெளியாகும்





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

43 கருத்துகள்:

  1. சிலவே இல்லாமல் செய்யக்கூடியது, கொடுக்கக் கூடியதும் அன்புதான்.தானங்களை வலதுகையால் கொடுப்பது இடது கைக்குக்கூட தெரியக்கூடாது என்பார்கள்.
    அன்ன தானம், ஏழைகளுக்குமட்டுமல்லாது பசியறிந்து யாருக்குச் சாப்பாடு போட்டாலும் உத்தமமானதுதான்.
    அன்னதானம் செய்வது பெண்களுக்குண்டான முக்கிய தர்மம்.
    நன்றாக படிக்க நிம்மதியாக இருக்கிரது பதிவு.
    வில்வம் எப்படி கிடைத்தது. நாமும் பூசித்தமாதிரி இருக்கும். அன்புடன்

    பதிலளிநீக்கு
  2. //“பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான். கொடுத்தோம்” என்று அடங்கி அடக்கமாகக் கொடுக்க வேண்டும்.

    எங்கே இதிலும் ஒரு அகங்காரம் வந்துவிடுமோ என்று பயந்துகொண்டு கொடுக்க வேண்டும்.//

    அமிர்த மொழிகள்..

    வில்வம் வந்துதான்னு தெரிஞ்சுக்க நானும் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  3. // அப்போது ஸ்ரீமடத்தின் வயதான காரியஸ்தர், பூஜா கைங்கர்யம் பண்ணுகிற இளைஞர்களிடம் கவலையுடன் கேட்டார். //

    ஒரு காரியஸ்தர் எப்படி முன்னேற்பாடாக இருக்க வேண்டும் என்பதனை விளக்கும் அத்தியாயம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. அன்பு நமக்கும் ஆனந்தம். எதிராளிக்கும் ஆனந்தம். உள்ளத்திற்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே உண்டாகிறது.

    ஆனந்தமான பகிர்வுகள்...!

    பதிலளிநீக்கு
  5. வில்வ இலைகளை
    வைத்து விட்டுப்போனது யார்?


    எத்தனை சிரமப்பட்டு சிரத்தையாக தேடி இருக்கிறார்கள்..!
    ப்ரப்த்தமிருப்பவர் கொண்டு வ்ந்து தந்திருக்கிறார்..!

    பதிலளிநீக்கு
  6. பூஜைக்கு ‘ஸம்ருத்தி’யா [நிறைய] புஷ்பம் ஏற்பாடு பண்ணி வெச்சிருக்கேள். ஆனா, ‘வில்வ’ பத்திரத்தையே காணுமே. அது இல்லாம பெரியவா எப்டி சஹஸ்ர நாமார்ச்சனை பண்ணுவா?”

    ஏக வில்வம் சிவார்ப்பணம் ஆயிற்றே..!

    வில்வ பத்ரம் அத்தனை மலர்களுக்கும் மேலானதாயிறே சந்ரமௌலீஸ்வர பூஜைக்கு..!

    பதிலளிநீக்கு
  7. கருங்கல் பாறையில் மஹா ஸ்வாமிகள், தியானத்தில் வீற்றிருந்த காட்சி, கயிலாய பர்வதத்தில் வீற்றிருக்கும் சாக்ஷாத் ஸ்ரீ பரமேஸ்வரனையே நினைவூட்டியது.

    ஆத்மார்த்தமான காட்சி..!

    பதிலளிநீக்கு
  8. “பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான். கொடுத்தோம்” என்று அடங்கி அடக்கமாகக் கொடுக்க வேண்டும்.

    எங்கே இதிலும் ஒரு அகங்காரம் வந்துவிடுமோ என்று பயந்துகொண்டு கொடுக்க வேண்டும்.

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின்
    ’அமுத மழை ’வர்ஷிக்கிறது..!

    பதிலளிநீக்கு

  9. அமைதிக்கும் பக்திக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் பெரியவர். பல ஆண்டுகளுக்கு முன் காஞ்சியில் மட அதிபதிகள் மூவரையும் ஒருங்கே தரிசனம்செய்திருக்கிறேன். ஆனால் பல சமய ஆச்சாரியர்கள்.... ஏதும் சொல்லாமல் இருப்பதே நன்று. இந்த நிகழ்வுகளைப் படித்த நினைவு இருக்கிறது/. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. கருங்கல் பாறையில் மஹா ஸ்வாமிகள், தியானத்தில் வீற்றிருந்த காட்சி, கயிலாய பர்வதத்தில் வீற்றிருக்கும் சாக்ஷாத் ஸ்ரீ பரமேஸ்வரனையே நினைவூட்டியது
    aha aha
    I am closing my eyes and seeing it manaseekam.
    viji

    பதிலளிநீக்கு
  11. நல்மொழிகள்....

    வில்வபத்திரம் கிடைத்ததா என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  12. வில்வம் நிச்சயம் கிடைத்திருக்கும். எப்படி என்றுதான் தெரியவில்லை.
    நாங்களும் பெரியாவாளின் தரிசனத்தை - கயிலாய பர்வதத்தில் வீற்றிருக்கும் சாக்ஷாத் ஸ்ரீ பரமேஸ்வரனை - மனக் கண்ணில் கண்டோம்.

    பதிலளிநீக்கு
  13. திருமதி ரஞ்சனி சொல்வது போல் வில்வம் எப்படியாவது வந்து சேர்ந்திருக்கும். அதில் சந்தேகமேயிலலை .
    ஆனால் எங்கிருந்து யார் கொண்டுவந்தார்கள்?

    பதிலளிநீக்கு
  14. அன்பு நமக்கும் ஆனந்தம். எதிராளிக்கும் ஆனந்தம். உள்ளத்திற்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே உண்டாகிறது.


    அருமை.

    பதிலளிநீக்கு
  15. \\அன்பு நமக்கும் ஆனந்தம். எதிராளிக்கும் ஆனந்தம். உள்ளத்திற்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே உண்டாகிறது.\\

    அற்புதமான வரிகள். ஒவ்வொருவரும் மனத்தில் ஏற்று நிறைக்கவேண்டிய வரிகள்.

    வில்வ இலைகள் கிடைத்தனவா? பூஜை நல்லமுறையில் நடந்தேறியதா? அறியக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. //“பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான். கொடுத்தோம்” என்று அடங்கி அடக்கமாகக் கொடுக்க வேண்டும்.//
    அருமையான பொன்மொழி.


    அன்பு நமக்கும் ஆனந்தம். எதிராளிக்கும் ஆனந்தம். உள்ளத்திற்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே உண்டாகிறது.//

    அருமையான வரிகள்.

    வில்வம் பத்திரம் பூஜைக்கு கிடைத்து இருக்கும்! அது எப்படி கிடைத்து இருக்கும் எனப்பார்க்க ஆவல்.

    பதிலளிநீக்கு
  17. சுவாமிகளைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு அருமையான பகிர்வு...
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  18. //“பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான். கொடுத்தோம்” என்று அடங்கி அடக்கமாகக் கொடுக்க வேண்டும். //

    நல்மொழி...

    வில்வபத்திரம் எப்படி கிடைத்ததென்று தெரிந்து கொள்ள ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
  19. பெரியவாளின் அற்புதங்களை அறிய தொடர்கிறேன்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  20. பெண்கள் தான தர்மத்தை வளர்க்கிற தீபங்களாக இருக்கிறவர்கள். அவர்களில் பண்பு கெடுவதற்கு இடமே தரக்கூடாது. அப்புறம் தேசம் பிழைக்காது. குலப்பெண்களின் சித்தம் கெட்டுப்போய்விட்டதானால் அப்புறம் தருமமே போய்விடும்.//

    பொன்னேட்டில் பொறிக்க வேண்டிய வார்த்தைகள்.
    இன்றைய ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். வழி தவறிப் போய்க்கொண்டிருக்கும் தர்மத்தை மகா பெரியவாள்தான் நேர் பாதையில் செல்ல வழி காட்ட வேண்டும்.

    வில்வம் கிடைத்ததா?
    கிடைக்காமல் இருக்குமா? கண்டிப்பாகக் கிடைத்திருக்கும்.

    எப்படி கிடைத்தது என்பதை தெரிந்து கொள்ளத்தான் ஆவலாக இருக்கிறோம்.



    பதிலளிநீக்கு
  21. அற்புதமான விஷயங்களை
    அழகாக எளிமையாகச் சொல்லிச் செல்லும்
    திறன் கண்டு மெய்சிலிர்க்கிறோம்
    அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்

    பதிலளிநீக்கு
  22. அன்பே ஆனந்தம், பேரானந்தம். அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம அன்பு மட்டுமே - அருமையான பகிர்விற்கு நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  23. அகந்தை (aganda-நம்முள் அகண்டு பரவியிருக்கின்ற )
    I(நான் )என்ற எண்ணத்தை நாம் கண்டுகொண்டு அகற்றாவிடில் அது நம்மை அழித்துவிடும். .
    அது ஒழியவேண்டுமென்றால் மகான்களின் பாதங்களை சரணடையவேண்டும். அதற்கு வாய்ப்பு கிட்டாவிடில் அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை அடிக்கடி படித்து நினைவில் கொண்டால் அகந்தைவிலகிவிடு. ஆன்மீக பாதையில் முன்னேற்றம் கிடைக்கும்.
    அந்த வகையில் VGK அவர்களின் பணி பாராட்டத்தக்கது. பாக்கியம் உள்ளோரே இதை படித்து பயன்பெறுவர் என்பது திண்ணம்.

    பதிலளிநீக்கு
  24. //நாம் ”தானம் கொடுக்கிறோம்” என்ற வார்த்தையைச் சொல்வதுகூடத் தப்புதான்.

    “பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான். கொடுத்தோம்” என்று அடங்கி அடக்கமாகக் கொடுக்க வேண்டும். //

    அமுதமொழிகள்...

    வில்வம் கிடைத்ததா என தெரிந்துக்கொள்ள அடுத்த பகுதிக்கு ரெடியாயிட்டேன்!!

    பதிலளிநீக்கு
  25. வில்வம் வந்துதான்னு தெரிஞ்சுக்க ம் காத்திருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  26. அருமையான விளக்கத்தோட எழுத்து நடை சூப்பர். வில்வம் கிடைத்தா என நானும் ஆவலோடு வழிமேல் விழி வைத்து காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  27. நாம் ”தானம் கொடுக்கிறோம்” என்ற வார்த்தையைச் சொல்வதுகூடத் தப்புதான். நல்ல சிந்தனை.

    அன்பே ஆனந்தம்.

    பதிலளிநீக்கு
  28. //பெண்கள் தான தர்மத்தை வளர்க்கிற தீபங்களாக இருக்கிறவர்கள். அவர்களில் பண்பு கெடுவதற்கு இடமே தரக்கூடாது. அப்புறம் தேசம் பிழைக்காது. குலப்பெண்களின் சித்தம் கெட்டுப்போய்விட்டதானால் அப்புறம் தருமமே போய்விடும்.//

    இன்றைய நிலை மிக மோசமாக இருக்கிறதே! எங்கே பார்த்தாலும் பெண்கள் செய்யும் குற்றங்களே மேலோங்கிக் காண்கிறாப்போல் தெரிகிறது. :(((


    //எங்கே இதிலும் ஒரு அகங்காரம் வந்துவிடுமோ என்று பயந்துகொண்டு கொடுக்க வேண்டும்.//

    உண்மைதான், இதைப் பூரணமாக உணர்ந்திருக்கிறேன். நன்றி,

    மாட்டிடைச் சிறுவன் வில்வம் கொண்டு வருவான். அது தானே? :))))) எல்லாரும் படிச்சுட்டதாலே முன் கூட்டிச் சொன்னால் தப்பில்லைனு சொல்லிட்டேன். :)))

    பதிலளிநீக்கு
  29. பண்பு,அடக்கம்,அன்பு ஆனந்தமே!

    வில்வ இலை எப்படியோ வரப்போகிறது என்பதை எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  30. அன்பின் வை.கோ - அன்பு ஆனந்தம் - பண்பு அடக்கம் - நல்லதொரு விளக்கம் - அருமை அருமை

    சந்திரமௌளீஸ்வர பூஜைக்கு ஏற்பாடுகள் செய்த போது வில்வம் கிடைக்க வில்லை. அக்கிராமத்தில் வில்வ மரமே கிடையாதாம். ஏற்பாடு செய்யச் சொல்லி விட்டு பெரியவா ஒரு கருஙகல்லில் த்யானத்தில் அமர்ந்து விட்டார்.

    கருங்கல் பாறையில் மஹா ஸ்வாமிகள், தியானத்தில் வீற்றிருந்த காட்சி, கயிலாய பர்வதத்தில் வீற்றிருக்கும் சாக்ஷாத் ஸ்ரீ பரமேஸ்வரனையே நினைவூட்டியது.

    நல்லதொரு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  31. // உள்ளத்திற்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே உண்டாகிறது.
    // உண்மைதான் அன்பைப் பெறுவதிலும் பார்க்க கொடுப்பதிலேயே அதிக ஆனந்தம் உள்ளது.

    பதிலளிநீக்கு
  32. வில்வ பத்திரம் கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
  33. வில்வ பத்ரத்துக்காக எல்லாருமே ஆசாரியர்களுடன் காத்திண்டு இருக்கோம்



    பதிலளிநீக்கு
  34. வில்வ பத்ரம்னாக்க என்னாது அது இல்லாகாட்டி பூச பண்ண மிடியாதா.

    பதிலளிநீக்கு
  35. மடத்து சம்பிரதாயங்கள் பூஜை விவரங்கள் விளக்கமாக சொல்லிவருகிறீர்கள் அந்த ஊரில் வில்வ மரமே இல்லியா. ஸ்வாமிகள் ஏன் புன்னகை புரிந்தார்கள்.

    பதிலளிநீக்கு
  36. மடத்து சம்பிரதாயங்கள் பூஜை விவரங்கள் விளக்கமாக சொல்லிவருகிறீர்கள் அந்த ஊரில் வில்வ மரமே இல்லியா. ஸ்வாமிகள் ஏன் புன்னகை புரிந்தார்கள்.

    பதிலளிநீக்கு
  37. நாம் ”தானம் கொடுக்கிறோம்” என்ற வார்த்தையைச் சொல்வதுகூடத் தப்புதான்.

    “பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான். கொடுத்தோம்” என்று அடங்கி அடக்கமாகக் கொடுக்க வேண்டும். // அந்த அடக்கம் உண்மையில் அவசியமானது கொடுக்கும் வாய்ப்பு பெற்ற அனைவர்க்கும்,

    பதிலளிநீக்கு
  38. ஓ...சந்த்ர மௌலிஸ்வரர் பூஜைக்கு வில்வ பத்ரம் கிடைக்கலயா. பெரியவா அநுக்ரஹத்தால எப்படியும் கிடைச்சுடும்னு தோணறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. happy November 2, 2016 at 12:14 PM

      //ஓ...சந்த்ர மௌலிஸ்வரர் பூஜைக்கு வில்வ பத்ரம் கிடைக்கலயா. பெரியவா அநுக்ரஹத்தால எப்படியும் கிடைச்சுடும்னு தோணறது..//

      ஆஹா, உனக்கே வில்வ பத்ரம் கிடைச்சுடும்ன்னு தோன்றிவிட்டதே .. பின் அது கிடைக்காமல் போய்விடுமா என்ன?

      நீக்கு