என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 31 ஜூலை, 2013

33] சொத்து உரிமை

2
ஸ்ரீராமஜயம்



ஒவ்வொரு மதத்திலும் சின்னங்களும், மூர்த்திகளும், சடங்குகளும் வேறுபடலாம். ஆனால் அருள் தரும் பரமாத்மா மாறவில்லை.

எனவே எவரும் தங்கள் மதத்தைவிட்டு விட்டு இன்னொரு மதத்திற்கு மாற வேண்டியதில்லை. இப்படி மாறுகிறவர்கள் தங்கள் பிறந்த மதத்தை மட்டுமின்றி சேருகிற மதத்தையும் குறைவு படுத்துகிறார்கள்.

நம் சொத்து என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதை  நம் விருப்பப்படி விநியோகிக்க உரிமை பெற்றிருக்கிறோம் அல்லவா?

அப்படியே இறைவனின் சொத்தாகிய நாமும், நம்மை அவன் இஷ்டப்படியே நடத்தட்டும் என்று விட்டு விட்டால் நமக்கு எந்த பாரமும் இல்லை. ஒரே ஆனந்தம் தான்.



oooooOooooo


ஓர் சம்பவம்



திருநெல்வேலி பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த ஒருத்தரோட கதை இது. அவர் பேர் சிவன். அங்கிருந்து புறப்பட்டு மடத்துக்கு அடிக்கடி வந்து போவார்.


அவர் வீர சைவர் பிரிவைச் சேர்ந்தவர். நெத்தியிலே பட்டை பட்டையா விபூதி பூசிண்டு, ‘சிவப் பழம்’ மாதிரி இருப்பார். சுத்தம் என்றால் அவ்வளவு சுத்தம். ஆசாரம் என்றால் அவ்வளவு ஆசாரம். சாப்பாட்டுல வெங்காயம் கூடச் சேர்த்துக்க மாட்டார்! அப்படி ஒரு கட்டுப்பாடு.



சிவன் காஞ்சிபுரம் வந்தார்னா, பெரியவாதான் அவருக்கு எல்லாம். அவருக்கு 80 வயசு. பெரும் பணக்காரர். மகா பெரியவாதான் அவருக்கு தெய்வம். பெரியவா சொல்றதுதான் அவருக்கு வேத வாக்கு!

காஞ்சிபுரம் வரும்போது, கையிலே ஒரு மஞ்சள் பை எடுத்துண்டு வருவார். அதில் துண்டு, வேட்டி, விபூதி பிரசாதம், கொஞ்சம் போல பணம்… இவ்வளவுதான் இருக்கும்.

பெரியவாளோட சந்நிதானத்துல போய் உட்கார்ந்தார்னா, அவருக்கு நேரம்- காலம் போறதே தெரியாது. பத்து நாள் தரிசனம் பண்ணினாலும், அவருக்குப் போதாது.

சரி, பெரியவா கிட்டே பேசுவாரோ? .......... ஊஹூம். 

சந்தேகம் ஏதாவது கேட்பாரோ? .................. அதுவும் இல்லை.


”பெரியவர் எங்கிட்டே பேசணும்னு அவசியமே இல்லீங்க! அவர் மனசுல நான் நிறைஞ்சிருக்கேனா என்கிறதுதான் எனக்கு முக்கியம்”னுவார்.

வெளியிடத்துக்கு வந்தார்னா, கண்ட இடத்தில் போய்க் கண்டதை வாங்கிச்  சாப்பிட மாட்டார்; அவ்வளவு ஏன், ஒரு வாய் ஜலம்கூட வாங்கிக்குடிக்க மிகவும் தயங்குவார். அவ்வளவு ஒரு ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைபிடித்து வந்தவர்.

ஒரு தடவை தரிசனம் எல்லாம் முடிஞ்சு, பெரியவாகிட்டே உத்தரவு வாங்கிக்கப் போனார் சிவன்.



வழக்கமா கை அசைச்சு ஆசீர்வதிச்சு அனுப்பி வைக்கிற பெரியவா அன்னிக்கு என்னவோ, ”கிளம்பியாச்சா ஊருக்கு? சோடாவாவது வாங்கி ஒரு வாய் குடிக்கலாமோல்லியோ? சரி, போறச்சே அதையாவது பண்ணுங்கோ!”ன்னு குறிப்பா சொல்லி விடை கொடுத்தார் பெரியவர்.


செங்கல்பட்டுலே பஸ் ஏறி, திருநெல்வேலிக்குப் புறப்பட்டுட்டார் சிவன். 

அதே பஸ்ஸூல நாலு பேர், வயசுப் பசங்க உட்கார்ந்திருந்தாங்க. 


பஸ்ஸூக்குள்ளே கத்தலும் கூச்சலுமா அவங்க பண்ணின அமர்க்களம் தாங்க முடியலை. ஆனா, அந்த முரட்டுப் பசங்களை யாரு கண்டிக்கிறது!

மதுரை நெருங்குறப்போ, ஒரு குக்கிராமத்துல பஸ்ஸை நிறுத்தினார் டிரைவர். அங்கே ஒரு பெட்டிக்கடை இருந்தது. பஸ்ஸின் ஜன்னல் வழியா பார்க்குறப்போ, அந்தப் பெட்டிக் கடையில சோடா பாட்டில்கள் அடுக்கி வெச்சிருக்கிறது ... சிவன் கண்ணுல பட்டுடுத்து. 

உடனே, ”ஒரு சோடாவாவது வாங்கிக் குடியுங்க”ன்னு பெரியவா சொன்ன வார்த்தைகள்தான் சட்டுனு ஞாபகத்துக்கு வந்தது.

சிவனுக்குத் தண்ணீர் குடிக்கணும் போல தாகமாகவும் இருந்தது. அதே நேரம், பெரியவா உத்தரவை நிறைவேத்தின மாதிரியும் ஆச்சுன்னு கீழே இறங்கிப் போய், அந்தப் பெட்டிக் கடையில ஒரு சோடா வாங்கிக் குடிச்சுட்டு வந்தார் சிவன்.

பஸ்ஸூக்குள்ள வந்து தன் ஸீட்டைப் பார்த்தால், அவரோட மஞ்சள் பையைக் காணோம். அதுலே பெரிசா சாமானோ பணமோ இல்லேன்னாலும், அவரோட ஸீட்டுல இருந்ததாச்சே!

அப்போ அந்த நாலு முரட்டுப் பசங்களும், ”யோவ் பெரிசு! ஒன்னோட மஞ்சப் பையத் தேடறியா? அதோ பார்… பின்னால ஸீட்டுல கிடக்குது. அங்கே போய் உக்காரு!”ன்னு கேலியா சொன்னாங்க.

மஞ்சள் பை பத்திரமாக கடைசி ஸீட்டுக்கு முன் ஸீட்டுல இருந்துது. 

‘சரி, ஊர் போய்ச் சேர்ந்தா போதும்; இவங்களோடு நமக்கு என்ன வாக்குவாதம்!’னு அங்கே போய் உட்கார்ந்துட்டார் பெரியவர் சிவன்.

அந்த நாலு பசங்களில் ரெண்டு பேர், சிவன் இதுவரைக்கும் உட்கார்ந்து வந்த அந்த ஸீட்டுல போய் உக்கார்ந்துண்டாங்க.

ராத்திரி வேளை. பஸ் கிளம்பியாச்சு. பஸ் புறப்பட்டு ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். என்ன ஆச்சுன்னே தெரியலே, எதிரில அசுர வேகத்துல வந்த லாரி ஒண்ணு இந்த பஸ் மேல மோதிடுத்து.

சிவனோட இடத்துல அடமா போய் உட்கார்ந்துண்டு, ”யோவ் பெரிசு, பின்னால போய் உட்காரு”ன்னு எகத்தாளமா சொன்ன அந்த ரெண்டு இள வயசுப் பசங்களும், அங்கேயே ’ஆன் த ஸ்பாட்’ செத்துப் போயிட்டாங்க. பெரியவர் சிவன் சின்ன காயம்கூட இல்லாம தப்பிச்சுட்டார்!

‘ஒரு சோடாவாவது வாங்கிச் சாப்பிட்டுப் போங்க’ன்னு பெரியவா ஏன் சொன்னார்? மதுரை குக்கிராமத்துலே, டிரைவர் சரியா ஒரு பெட்டிக்கடை முன்னாடி எதுக்காக பஸ்ஸை நிறுத்தினார்? அங்கே சிவன் கண்ணுல படற மாதிரி சோடா பாட்டில்கள் அடுக்கி வெச்சிருப்பானேன்? 

பெரியவர் சொன்னாரேங்கிறதுக்காக ராத்திரி அகால வேளையில சோடா சாப்பிட பஸ்ஸை விட்டு சிவன் இறங்கிக்கொண்டதால்தானே, அவரோட உயிர் தப்பிச்சுது?

இதெல்லாம் எப்படி நடக்கிறது! யோசிக்க, யோசிக்க… சிவன் அப்படியே ஹோன்னு அழுதுட்டாராம். தான் உயிர் தப்பிச்சது ஒருபுறம் இருக்க, வயசுப் பசங்க ரெண்டு பேரும் அந்த ஸ்தலத்துலயே செத்துப்போனது அவர் மனசை என்னவோ பண்ணிடுத்து.

ஆனா, அவருக்கு ஒண்ணு மட்டும் புரிஞ்சுது. தனக்கும் இன்னிக்குக் கண்டம்தான். பெரியவரை பத்து நாள் தரிசனம் பண்ணிய புண்ணியம்தான் அந்தக் கண்டத்துலேர்ந்து தன்னைக் காப்பாத்தியிருக்கு. 

யோசிக்க யோசிக்க, அந்த மஹான், ‘ஒரு சோடாவானும் சாப்பிட்டுட்டுப் போங்கோ’னு சொன்னது, தெய்வமே நேர்ல வந்து சொன்ன குறிப்பு மாதிரி தோணுச்சு அவருக்கு.

1983-ல், மஹா பெரியவா யாத்திரை எல்லாம் போயிட்டுக் காஞ்சிபுரம் திரும்பினப்போ நடந்த சம்பவம் இது.

சிவனோடு நான் பேசிண்டிருந்தபோது, அவர் தான் தன் உடம்பெல்லாம் சிலிர்க்க இந்தச் சம்பவத்தை விவரிச்சு சொன்னார். அதை நான் பெரியவாகிட்டே வந்து சொன்னேன்.

”சிவன் சௌக்கியமா இருக்காரோ?”ன்னு விசாரிச்சார் பெரியவா. 

தொடர்ந்து, ”நான்தான் அவரைக் காப்பாத்தினேன்னு சொன்னாராக்கும்! 

அசடு; நான் எங்கேடா காப்பாத்தினேன்! அந்தப் பரமேஸ்வரன்தானே அவரைக் காப்பாத்தினான்!” என்றார் பெரியவா.

அதைக் கேட்டு எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துப்போச்சு!



[  இது அமிர்த வாஹினி 27.06.2013 இல் ஒரு பக்தர் எழுதியுள்ளது ]


oooooOooooo








ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.


இதன் தொடர்ச்சி 
நாளை மறுநாள் வெளியாகும்.





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
[31.07.2013 புதன்கிழமை]

48 கருத்துகள்:

  1. மகா பெரியவரின் இந்த அனுக்கிரஹம் படித்து மெய் சிலிர்த்துப் போனேன். அவனன்றி ஓரணுவும் அசையாது
    என்பது போல் சொன்ன மஹாபெரியவரின் அற்புதங்கள் படிக்க படிக்க தெவிட்டாதவை.

    நன்றி பகிர்விற்கு.
    தொடருங்கள்.....

    பதிலளிநீக்கு
  2. எவரும் தங்கள் மதத்தைவிட்டு விட்டு இன்னொரு மதத்திற்கு மாற வேண்டியதில்லை. இப்படி மாறுகிறவர்கள் தங்கள் பிறந்த மதத்தை மட்டுமின்றி சேருகிற மதத்தையும் குறைவு படுத்துகிறார்கள்.
    சத்தியமான வார்த்தைகள் அய்யா. நன்றி

    பதிலளிநீக்கு
  3. மதம் மாறுவது பற்றிச் சொல்லியிருப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  4. நம் சொத்து என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதை நம் விருப்பப்படி விநியோகிக்க உரிமை பெற்றிருக்கிறோம் அல்லவா?

    அப்படியே இறைவனின் சொத்தாகிய நாமும், நம்மை அவன் இஷ்டப்படியே நடத்தட்டும் என்று விட்டு விட்டால் நமக்கு எந்த பாரமும் இல்லை. ஒரே ஆனந்தம் தான்.

    அதன் பெயர்தான் சரணாகதி

    பதிலளிநீக்கு
  5. மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்... ஆனந்தம் சொன்னவிதம் மிகவும் அருமை... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
  6. மதம் மாற்றம் பற்றிய அமுத மொழி நன்று....

    சொன்ன சம்பவம் மனதினை விட்டு அகலாது.....

    பதிலளிநீக்கு
  7. மதம் சம்மதம்.இந்துமதம் என் மதம்

    பதிலளிநீக்கு
  8. அப்படியே இறைவனின் சொத்தாகிய நாமும், நம்மை அவன் இஷ்டப்படியே நடத்தட்டும் என்று விட்டு விட்டால் நமக்கு எந்த பாரமும் இல்லை. ஒரே ஆனந்தம் தான்.

    நிம்மதி தரும் ஆனந்தப் பகிர்வுகள்..!

    பதிலளிநீக்கு

  9. ”பெரியவர் எங்கிட்டே பேசணும்னு அவசியமே இல்லீங்க! அவர் மனசுல நான் நிறைஞ்சிருக்கேனா என்கிறதுதான் எனக்கு முக்கியம்”னுவார்.

    தெளிவான புரிதலுடன் அனுக்ரஹ தரிசனம் ..!

    பதிலளிநீக்கு

  10. "ஒவ்வொரு மதத்திலும் சின்னங்களும், மூர்த்திகளும், சடங்குகளும் வேறுபடலாம். ஆனால் அருள் தரும் பரமாத்மா மாறவில்லை."

    மதம் பற்றிய தங்கள் கருத்து மிக மிக சரியானது ஐயா .நான் வழி மொழிகிறேன்

    பதிலளிநீக்கு
  11. சில “ஏன்” களுக்கு நம்மால் விடை கண்டுபிடிக்கவே முடியாது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதோவொன்று எதற்காகவோ நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இங்கு பெரியவர் வடிவில் இறைவன் குருவாக வந்து வழி காட்டி இருக்கிறான். நேற்று எனது டிவிஎஸ் 50 வண்டியில் செல்லும்போது எனக்கு நடந்ததற்கும் இந்த பதிவில் நடந்த விபத்திற்கும் அதிக வித்தியாசமில்லை. நேற்று நான் அடைந்த திகிலுக்கு மனதில் எழுந்த ஏன் என்ற கேள்விக்கும், மன நிறைவான ஒரு பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தமிழ் இளங்கோ - சில ஏன்களுக்கு தீர்வே கூற இயலாது- வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வும் ஏதோ ஒரு காரணத்திற்காகத் தான் நடக்கிறது. ஆட்டுவிப்பவன் இறைவனே. மன நிறைவான வை.கோவின் பதிவு - ம்ன நிறைவான தங்களீன் மறுமொழி - மறுமொழிகளும் படிக்கும் என் வழக்கம்- அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

      நீக்கு
  12. படித்ததும் எமக்கும் மெய் சிலிர்த்துப்போய்விட்டது.

    பதிலளிநீக்கு
  13. கோவிலுக்குப் போனால் தெய்வ சந்நிதானத்தில் இறைவன் நம்மிடம் பேச வேண்டுமென்று நினைப்பதில்லையே. அதுபோலத்தான் மஹா பெரியவாளின் சந்நிதியும், அங்கு கிடைக்கும் மன அமைதியும் தெய்வ சாந்நித்யமும்.

    பதிலளிநீக்கு
  14. நம்மை அவன் இஷ்டப்படியே நடத்தட்டும் என்று விட்டு விட்டால் நமக்கு எந்த பாரமும் இல்லை. ஒரே ஆனந்தம் தான்.//
    அருமையான வாக்கு.

    சிவன் அவர்களின் கதை சிலிர்க்க வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  15. மஹா பெரியவாளின் அற்புதங்கள் அதிசயிக்க வைக்கின்றன! // இறைவனின் சொத்தாகிய நாமும், நம்மை அவன் இஷ்டப்படியே நடத்தட்டும் என்று விட்டு விட்டால் நமக்கு எந்த பாரமும் இல்லை. ஒரே ஆனந்தம் தான்.// அருமையான பொன்மொழி! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  16. எனக்கும் உடம்பெல்லாம் சிலிர்த்துப் போச்சு!

    பதிலளிநீக்கு
  17. எந்த மதத்திலுள்ளோமோ, எதன் வழி நம்முன்னோர்கள் இருந்தார்களோ
    அதுவே நமக்குப் போதும். மதமும் மாறவேண்டாம்,மனமும் மார வேண்டாம். சிவன் அவர்களுக்கு எப்படிப்பட்ட கருணை ஒரு வார்த்தையிலேயே அடக்கி அருள் செய்திருக்கிரார். எல்லாம் வியப்பாகவும்,இருக்கிறது. பக்தியையும் அதிகப் படுத்துகிரது. எல்லாமே அருளமுதம்தான். அன்புடன்

    பதிலளிநீக்கு
  18. மெய் சிலிரிக்க வைத்த நிகழ்வு. பகிர்வுக்கு நன்றி. பத்து நாட்களாக வேலை அதிகமாக இருந்ததால் வரவே முடியலை. இன்னிக்குத் தான் முடிஞ்சது. உங்க பதிவெல்லாம் நிதானமாப் படிக்க வேண்டியது. :))))

    பதிலளிநீக்கு
  19. \\தான் உயிர் தப்பிச்சது ஒருபுறம் இருக்க, வயசுப் பசங்க ரெண்டு பேரும் அந்த ஸ்தலத்துலயே செத்துப்போனது அவர் மனசை என்னவோ பண்ணிடுத்து.\\

    தான் உயிர் தப்பித்த நிலையிலும் இறந்துபோன அந்த பையன்களுக்காக பரிதாபப்படுவதிலிருந்தே அவருடைய நல்லமனம் புரிகிறது. நெகிழவும் வியக்கவும் வைத்தப் பதிவு. பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.

    பதிலளிநீக்கு

  20. இறைவனின் சொத்து நாமா. இல்லை நம் சொத்து இறைவனா, தெளிவில்லாவிட்டால் பிரச்சனைகள் அதிகமாகும். பகிர்வுக்கு நன்றி கோபு சார்.

    பதிலளிநீக்கு
  21. மெய் சிலிர்க்கவைத்த பதிவு,தொடருங்கள் ஐயா!!

    பதிலளிநீக்கு
  22. படித்ததும் மெய் சிலிர்த்தது
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  23. A very heart touching and lovely story, it just moved me. Thank you very much sir for sharing....

    பதிலளிநீக்கு
  24. அமுத மொழிகளும், சிவனின் அனுபவமும் அருமை.

    பதிலளிநீக்கு
  25. //இறைவனின் சொத்தாகிய நாமும், நம்மை அவன் இஷ்டப்படியே நடத்தட்டும் என்று விட்டு விட்டால் நமக்கு எந்த பாரமும் இல்லை. ஒரே ஆனந்தம் தான்.//கரெக்ட்!

    விவரித்த சம்பவம் ஆச்சரியம்!

    பதிலளிநீக்கு
  26. சிவன் சௌக்கியமா இருக்காரோ?”ன்னு விசாரிச்சார் பெரியவா.
    தொடர்ந்து, ”நான்தான் அவரைக் காப்பாத்தினேன்னு சொன்னாராக்கும்! அசடு; நான் எங்கேடா காப்பாத்தினேன்! அந்தப் பரமேஸ்வரன்தானே அவரைக் காப்பாத்தினான்!” என்றார் பெரியவா./மெய் சிலிர்க்க வைத்த வரிகள்! மதமாற்றம் குறித்த கருத்தும் அருமை! பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  27. //பெரியவரை பத்து நாள் தரிசனம் பண்ணிய புண்ணியம்தான் அந்தக் கண்டத்துலேர்ந்து தன்னைக் காப்பாத்தியிருக்கு. //

    உண்மை வரிகள்! பெரியவாள் மனித வடிவில் தெய்வம்!
    பகிர்விற்கு நன்றீ ஐயா!

    பதிலளிநீக்கு
  28. //எனவே எவரும் தங்கள் மதத்தைவிட்டு விட்டு இன்னொரு மதத்திற்கு மாற வேண்டியதில்லை. இப்படி மாறுகிறவர்கள் தங்கள் பிறந்த மதத்தை மட்டுமின்றி சேருகிற மதத்தையும் குறைவு படுத்துகிறார்கள்.//

    எல்லா மதங்களும் சொல்லும் கருத்துக்கள், மார்க்கங்கள் ஒன்றேதான். எந்த மதத்தில் இருந்தாலும், மற்ற மதத்தவர்களை காயப் படுத்தாமல் இருப்பதே உத்தமம்.

    //‘சரி, ஊர் போய்ச் சேர்ந்தா போதும்; இவங்களோடு நமக்கு என்ன வாக்குவாதம்!’னு அங்கே போய் உட்கார்ந்துட்டார் பெரியவர் சிவன்.//

    ‘விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போவதில்லை’ பெரியவங்க எல்லாம் அனுபவித்து எழுதியவைதான் பழமொழிகள்.

    //”நான்தான் அவரைக் காப்பாத்தினேன்னு சொன்னாராக்கும்!

    அசடு; நான் எங்கேடா காப்பாத்தினேன்! அந்தப் பரமேஸ்வரன்தானே அவரைக் காப்பாத்தினான்!”//

    சாதாரண மனிதனாக இருந்தால் நான் தான் காப்பற்றினேன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பான். அவர் மகா பெரியவா. இப்படித்தான் சொல்லுவார்.

    பதிலளிநீக்கு
  29. //அப்படியே இறைவனின் சொத்தாகிய நாமும், நம்மை அவன் இஷ்டப்படியே நடத்தட்டும் என்று விட்டு விட்டால் நமக்கு எந்த பாரமும் இல்லை. ஒரே ஆனந்தம் தான்.//

    உண்மைதான்.

    சிவனின் கதை படித்து புல்லரித்தது, ஆனா பெரியாவார் சொன்னதை சிவன் கேட்டு நடந்தமையாலே தப்பினார்ர்.. சிலர் இருக்கினம், ஆர் என்ன சொன்னாலும் நான் என் ஆச்சாரத்தைக் கைவிட மாட்டேன்ன். பாதையில் போகும்போது வாய் நனையேன்ன், என நியாயம் பேசுவோருமுண்டு.

    பதிலளிநீக்கு
  30. பதில்கள்
    1. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

      அன்புடையீர்,

      வணக்கம்.

      31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இதுவரை, 2011 ஜனவரி முதல் 2013 ஜூலை வரையிலான 31 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
  31. அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,

    அன்புள்ள ஜெயா,

    வணக்கம்மா !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 ஜூலை மாதம் வரை முதல் 31 மாதங்களில் உள்ள என் அனைத்துப் பதிவுகளிலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.

    பிரியமுள்ள நட்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  32. பெரியவா முன்னால நாம போயி நின்னாலே நம்ம முகாலமும் பெரியவாளுக்கு திரிஞ்சுடும் போல இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

      வணக்கம்மா.

      31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 ஜூலை வரை முதல் 31 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      பிரியமுள்ள நட்புடன் கோபு

      நீக்கு
    2. பூந்தளிர் August 18, 2015 at 2:28 PM

      வாங்கோ, வணக்கம்.

      //பெரியவா முன்னால நாம போயி நின்னாலே, நம்முடைய முக்காலமும் பெரியவாளுக்கு தெரிஞ்சுடும் போல இருக்கு//

      ஆமாம்மா. அவர் முக்காலமும் உணர்ந்த மஹாஞானியாகவே, அவதார புருஷராகவே இருந்துள்ளார்கள். மிகவும் எளிமையாகவே வாழ்ந்து காட்டியுள்ளார்கள். நம்மில் பலருக்கும் வாழ்க்கைக்கு நல்லதோர் வழிகாட்டியாகவே இருந்துள்ளார்கள்.

      இன்றும் நினைத்தாலே என்னை மிகவும் சிலிர்க்க வைக்கிறது அவர்களுடன் எனக்கு ஏற்பட்டுள்ள பல நேரடி அனுபவங்கள். அவர்களுடனான என் சொந்த அனுபவங்களை முழுவதுமாக என்னால் இந்தத்தொடரில் மனம் விட்டுச் சொல்ல இயலவில்லை என்பதே உண்மை.

      இந்த என் தொடருக்குத் தங்களின் அன்பான தொடர்ச்சியான வருகைக்கும் அழகான ஏராளமான பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றிம்மா.

      நீக்கு
  33. குருசாமி பேச்சி கேட்டுகிட்டதால அவரு உசிரு காப்பாத்திருக்காருங்கோ.

    பதிலளிநீக்கு
  34. அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:

    அன்புள்ள (mru) முருகு,

    வணக்கம்மா !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 ஜூலை மாதம் வரை, முதல் 31 மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு

    பதிலளிநீக்கு
  35. சோடா வாங்கி குடி என்று சொல்லும்போதே அதில் ஏதோ விஷயம் சொல்கிறார்கள் என்றுதான் தோன்றியது அவருக்கு ஆயுசு இருந்தது .

    பதிலளிநீக்கு
  36. அன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர்
    திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 ஜூலை மாதம் முடிய, என்னால் முதல் 31 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    பதிலளிநீக்கு
  37. ஒவ்வொரு மதத்திலும் சின்னங்களும், மூர்த்திகளும், சடங்குகளும் வேறுபடலாம். ஆனால் அருள் தரும் பரமாத்மா மாறவில்லை.

    எனவே எவரும் தங்கள் மதத்தைவிட்டு விட்டு இன்னொரு மதத்திற்கு மாற வேண்டியதில்லை. இப்படி மாறுகிறவர்கள் தங்கள் பிறந்த மதத்தை மட்டுமின்றி சேருகிற மதத்தையும் குறைவு படுத்துகிறார்கள்./// எந்த மதமும் உயர்வுமில்லை குறைவுமில்லை!!!

    பதிலளிநீக்கு
  38. -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
    So far your Completion Status:

    372 out of 750 (49.6%) within
    10 Days from 26th Nov. 2015.
    -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

    அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
    திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 ஜூலை மாதம் வரை, என்னால் முதல் 31 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    பதிலளிநீக்கு
  39. இந்தச் சம்பவத்தை முதன் முதலாகப் படிக்கிறேன். வெளியில் சாப்பிடாதவர்கள் என்றால், ஹோட்டல் மற்றும் சுத்தமில்லாத உணவைச் சாப்பிடாதவர்கள். அவர்கள் சோடா குடிப்பதாவது. ஆனால், சிவன் செய்தது சோடா குடித்ததல்ல, ஆசாரியன் கட்டளையை நிறைவேற்றியது. அந்த விசுவாசம், பக்தி. அதுதான் அவரைக் காப்பாற்றியது. ரொம்ப சிலிர்த்துவிடும் சம்பவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நெல்லைத் தமிழன் October 18, 2016 at 7:48 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இந்தச் சம்பவத்தை முதன் முதலாகப் படிக்கிறேன். வெளியில் சாப்பிடாதவர்கள் என்றால், ஹோட்டல் மற்றும் சுத்தமில்லாத உணவைச் சாப்பிடாதவர்கள். அவர்கள் சோடா குடிப்பதாவது. ஆனால், சிவன் செய்தது சோடா குடித்ததல்ல, ஆசாரியன் கட்டளையை நிறைவேற்றியது. அந்த விசுவாசம், பக்தி. அதுதான் அவரைக் காப்பாற்றியது. ரொம்ப சிலிர்த்துவிடும் சம்பவம்.//

      ஆமாம். ஆசாரியன் கட்டளையை நிறைவேற்ற வேண்டியே சோடா குடித்த அவரும் உங்கள் ஊராம் திருநெல்வேலிக்காரர் என்பது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது. :)

      தங்களின் அன்பான வருகைக்கும், உயர்ந்த கருத்துக்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  40. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (10.06.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=411230636046303

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு