என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 3 மே, 2014

VGK 14 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - நீ .. முன்னாலே போனா .. நா .. பின்னாலே வாரேன் !






’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 


VGK 14 - ’ 'நீ .. முன்னாலே போனா .. 

நா .. பின்னாலே வாரேன் ! ’


இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/04/vgk-14.html


 


  


 


 


மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 







நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து


















இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 






  


மற்றவர்களுக்கு: 











    




இரண்டாம் பரிசினை 


வென்றுள்ளவர்கள் இருவர்.


அதில் ஒருவர் 


தனது  ஹாட்-ட்ரிக் பரிசினை

இருமடங்காகப் பெற

முற்றிலும் தகுதி பெற்றுள்ள



களம்பூர் திரு.


 G. பெருமாள் செட்டியார் 


அவர்கள்




வலைத்தளம்

http://gperumal1974.blogspot.in/


இரண்டாம் பரிசினை 


வென்றுள்ள


தொடரும் ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்


களம்பூர் திரு.


 G. பெருமாள் செட்டியார் 


அவர்களின் விமர்சனம் இதோ:





இடம் :                                     இணைய  தளத்தின்  கருத்தரங்கம் .

இன்றைய தலைப்பு:        "   நீ  முன்னாலே  போனா 
                                                 நா  பின்னாலே  வாரேன் ... "
                                                 என்ற  திரு. VGK  அவர்களின்  சிறு கதையும்
                                                 அதில் உள்ள  நிகழ்வுகளும்.

குழுமியிருப்போர் :           திருநடுவர் அவர்களும்,
                                               படைப்பாளி  திரு. VGK  அவர்களும்.
                                   விமரிசக  வித்தகர்களும்,
                                              வாசகர்களும்,  மற்றும் கதையில்  பங்கேற்ற
                                              சிலபல கதா பாத்திரங்களும்.

குழுமியிருக்கும் அனைவருக்கும்  என் வணக்கங்களை தெரிவித்துக் கொண்டு 
என்   கருத்துக்களை  பகர்கின்றேன் !


இதற்கு முந்தைய படைப்பில்,    வாசகர்கள்  அனைவரையும்  வயிறு குலுங்க
சிரிக்க வைத்து,  ஊடே  சிந்திக்கவும் வைத்து,   சாதனை  புரிந்த  கதாசிரியர் , அடுத்ததாகவாசகர்களின் நெஞ்சை  உலுக்கிமிகவும்கனக்க  வைத்த, அற்புதமான   காவியத்தைப்   படைத்துமற்றுமொரு  சாதனை  புரிந்திருக்கிறார் ! !அவருக்கு   என்   மனமார்ந்தவாழ்த்துக்கள் !

தந்தை தாய்  பேண் "  என்ற  மூதாட்டியின்  மூதுரையை , அனைவருக்கும்
நினைவுறுத்தும்  வகையில்,  இக்காவியத்தை  ஒரு  முதியோர்  இல்லத்தில்
தொடங்கி, தனயனே  தந்தையை  முதியோர்  இல்லத்தில்  விட்டு செல்வது போன்றதொரு  காட்சியை அமைத்த நேர்த்தியை பாராட்டுகின்றேன் !

ஒரு  படை  வீரனின்  கடமை,   " நாட்டைக் காக்க  போர்களத்தில்  போராடுவது மட்டுமல்லநாட்டு மக்களுக்கும்   தக்கதருணத்தில்  உதவுவதும்கூட  "  என்ற கருத்தினை  வலியுறுத்தும் வகையில்,
பெரியவரை '   ராணுவத்தைச்  சார்ந்த ஒரு  அதிகாரியாக படைத்துமுதியோர் இல்லத்தில்  
சேர்ந்த மறு  நாளேஒரு நோயாளிக்கு முதல் சிகிச்சை அளிக்கும் மனித 
நேயமுள்ள ஒரு கண்ணியவானாக  காட்டியிருக்கும்  அழகை,   ஆராதிக்கிறேன் !

ஒளிரும்   விளக்கை  வாழ்க்கைக்கும், எண்ணெயையும்திரியையும்  கணவன்மனைவிக்கும்  உவமையிட்டு , இதில்  எது முந்தினாலும்,  மற்றவரின்  வாழ்க்கையில்  ஒளி  மறைந்து போகும்  என்ற  யதார்த்தத்தை ,      //  எரியும் விளக்கில் திரி முந்தியோ,எண்ணெய் முந்தியோ என்று சொல்லுவார்கள்.// 
 என்ற  பெரியவரின்  வார்த்தைகளால் கோடிட்டு காட்டிய   விதத்தை
பாராட்டுகின்றேன் !


கண்டிப்புடன்  இருந்ததினால் . பெற்ற  பிள்ளைகளும்  பெரியவரை 
விட்டு சற்றே விலகியிருக்க
அதை ஒரு  குறையாக  காட்டாமல்,  

பெரியவரின் மனைவி,   தன் பிள்ளைகளை  நேசித்ததையும்
மருமகள்களை,  பெற்ற பெண்களைப்போல்  சீராட்டியதையும்
மருமகனை  கொண்டாடியதையும்  விவரித்த விதத்தில் , 
மனைவிக்கு கிடைத்த  புகழாரமெல்லாம்  தனக்கும்
கிடைக்கவில்லையே  என்ற   பெரியவரின் ஏக்கம்  தொனித்தாலும்,   

//////      அனைவரையும்  அரவணைத்துச்  சென்று , அன்பு செலுத்தி , 
அனைவரிடமும் நல்ல பெயர்  வாங்குவது என்பது என் மனைவிக்கு  
மட்டுமே  வாய்ந்த  கை வந்த கலை !     //////
என்ற  பெரியவரின்  பெருமிதம் வாய்ந்த  சொற்களால்
எல்லா  புகழாரங்களும்அவளை  மணம்  புரிந்துஅவளின்  
சரிபாதியாக  நின்ற பெரியவருக்கும்  உரியதே    என்றதொரு  
எண்ணம்  தொக்கி நிற்குமாறு   அமைத்த விதம் ,  மிக மிக அருமை ! 

நல்லசுவையான   உணவுகளை  உண்ணவேண்டும்  என்ற  சராசரி 
மனிதனின்  ஆசைகளை விவரிப்பதற்காக, பல சுவையான உணவு வகைகளையும் , பழரச  வகைகளையும்  பட்டியலிட்டு ,அவைகளை தயாரிக்கும் முறை, பக்குவப் படுத்தும் முறை ஆகியவற்றையும்  விவரமாக  விளக்கிய  விதம்  
அருமை !

அதே மனிதனுக்கு  வசதிகள் இருந்தும்வாய்ப்புக்கள்  இருந்தும்
நோய்களின்  தாக்கத்தால்,  அத்தகைய  உணவுகளை    புறக்கணித்தே   
ஆக வேண்டும்  என்ற  கட்டாயத்திற்கு  அவனை ஆட்படுத்தப்படும்போது
அம்மனிதனின்  ஏக்கங்களையும்மன ஓட்டங்களையும்  
விவரித்த  விதமும்...    மிகமிக  அருமை !

கதையின்  ஊடே,   
தன்  மரணத்தை  முன்கூட்டியே  அறிந்த  ஒரே  மனிதன்  பரிஷித்துவின் கதையை இணைத்து , அவன்  தன்  கடைசி  ஏழு நாட்களை பாகவதத்தை  கேட்பதில்  செலவிட்டு , ஏழாம்  நாள் உயிர்  நீத்ததை   விவரித்துவிட்டு, அதேபோல்  பெரியவரும் பாகவதத்தை  ஏழு நாட்கள் கேட்டு  ரசித்து ,   ஏழாம்  நாள்  இறுதியில்  உயிர்  நீத்ததை   விவரித்த விதம்  அனைத்து வாசகர்களின்  நெஞ்சத்தையும்  உலுக்கிவிட்டது  ! 

வாசகர்களின்  கலங்கிய  கண்களின்  ஓரத்தில்  துளிர்த்த,   
ஒவ்வொரு  சிறு துளி  கண்ணீரும்  பறை  சாற்றும் ,  
இந்த   படைப்பாளியின்   சாதனையை !

எலும்புக்கும்  சதைக்கும்  மருத்துவம்  கண்டேன் !
இதற்கொரு  மருந்தைக் கண்டேனா ?
இருந்தால்  அவளை  தன்னந்தனியே 
எரியும்  நெருப்பில்  விடுவேனா ?  
என்ற  பாடலின் வரிகள்  படைப்பாளியின்  மனதில்  ஆழ்ந்த
சலனத்தை  ஏற்படுத்தியிருக்க வேண்டும் !  அதன்  எதிரொலிதான்,
பெரியவர்  தன சொத்தை , மருந்துகளின்  ஆராய்ச்சிற்காக
எழுதி வைத்திருப்பது .    இதன்   நோக்கம் ,  படைக்கப்பட்ட
கதா பாத்திரத்தின்   ஏக்கத்தையும் , எண்ணங்களையும்  மேன்மைப் 
படுத்துவதற்காக  அமைக்கப்பட்டதுபோல்  இருந்தாலும்,
படைப்பாளியின் இந்த கருத்து 
சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று !
வரவேற்கப்பட வேண்டிய  ஒன்று !   
வாழ்த்தப்பட வேண்டிய  ஒன்று !

இந்த  காவியத்தில்  அமைக்கப்பட்ட   காட்சிகளை  நிகழ்வுகளாகக் 
கொண்டு ,  அதில்  பங்கேற்ற  சில  கதா பாத்திரங்களுக்கு  சிலவற்றை  
கூற  விழைகின்றேன் !

முதன் முதலாக

பெரியவர்   முதியோர்  இல்லத்தில்  அடியெடுத்து  வைத்த  நாளிலிருந்து
அவரின்  இறுதி மூச்சு வரை அவரை தொடர்ந்துகண்காணித்துஅவரைப் 
பற்றிய விவரங்களை  மற்றவர்களுக்கு  வெளிச்சம் போட்டு காட்டிய 
திரு. " அரட்டைராமசாமி  அவர்கள் !

அரட்டை அரங்கத்தில்  கலந்து கொள்ள  ஆசைப்பட்டு, வாய்ப்பு  கிடைக்காததால்  " அரட்டை "  என்ற பட்டப் பெயருடன்  
வலம்வரும்  திருராமசாமி அவர்கள் !

அந்த  அரட்டை  அரங்கம்,   வீணே  கதை பேசி  காலத்தை  கழித்த  
அரங்கமல்ல !  தமிழகத்தின் சீரிய  சிந்தனையாளர்களை, நல்ல உள்ளங்களைசாதனையாளர்களைதிறமைசாலிகளை,  விடாமுயற்சி 
கொண்டு உயர்ந்த  உத்தமர்களை, உலகுக்கு  வெளிச்சம் போட்டு காட்டிய  அரங்கம் !

"  அந்த  அரங்கம்  வாய்ப்பு கொடுக்காவிட்டால் என்ன ?  
நான்  தருகிறேன் மற்றுமொரு  சந்தர்ப்பம் ! 
இதோ  ஒரு மா மனிதன் !  
இவனை , இனம் பிரித்து காட்டு " 
என்று  இறைவன்  கொடுத்த சந்தர்ப்பத்தை  சரியாகப் பயன்படுத்தி
பெரியவருடன் பேசிஒரு துப்பறிவாளனைப்போல் அவருடைய  
உடைமைகளை  ஆராய்ந்துஅவரைப் பற்றிய உண்மைகளையும்
எண்ணங்களையும்  எங்களுக்கு  அறிமுகப்படுத்திய  உங்களுக்கு,
ஆயிரம்  கோடி  நமஸ்காரங்கள் !

ஒரு வேளை, "   இந்த  பெரியவரும்,  நம்மைப் போன்ற , பிள்ளைகளால் 
கை விடப்பட்ட  மற்றொருவர்   "  என்று எண்ணிநீங்கள்   வாளாது  இருந்திருந்தால் , அவரைப் பற்றிய 
உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கும்.

மகா  பாரதத்தில் , பதினெட்டு  நாள்  போர்களையும்  திருதராஷ்டிரனுக்காக  
நேர்முக  வர்ணனை  செய்த  சஞ்சயனைப் போல் ,பெரியவர், முதியோர்  இல்லத்தில் இருந்த  அனைத்து நாட்களிலும்அவரைப் பற்றிய 
செய்திகளை   மற்றவர்களுக்கு தெரியப்படுத்திக்கொண்டிருந்த  
உங்களுக்கு  மனமார்ந்த  நன்றிகள் !

பாகவதம்  முடிந்த  ஏழாம்  நாள் ,  தன்  அறையில் அமர்ந்திருந்த 
பெரியவர்,   மடிமேல்  தன்  மனைவியின் போட்டோவை  வைத்துக் 
கொண்டுஒவ்வொரு  சொட்டாக ஊற்றி , " குடி குடி " என்று 
சொல்லிய விதத்தில்பெரியவர் தன் மனைவிமேல்  கொண்ட 
பாசத்தையும்நேசத்தையும்பரிவையும் , காதலையும்
நேரில்  கண்டு  அதிர்ந்து,  
அதன் பின்னர்சில மணி நேரத்தில்  உயிர் நீத்த  பெரியவரின் 
மரணத்தையும்  நேரில் கண்டு  கலங்கி
மூன்று  நாட்கள்  மௌனம்  காத்த  உத்தமரே ! 
உங்களுக்கு  ஆறுதல் சொல்ல
வார்த்தைகள்  இல்லை என்னிடம் ! 

ஆயினும்,    ஒன்று  சொல்வேன் !
"  நல்லாரைக் காண்பதுவும்  நன்றே "   என்றாள்  அந்த  மூதாட்டி ..!
நீங்கள்  இந்த  நல்லவரை  கண்டதுமட்டுமல்ல.......
அவருடன்  பேசியும்பழகியும் .......
புண்ணியம்  செய்தவர்  ஐயா  நீங்கள்  ! ! 


அடுத்ததாக,

பெரியவர்  பெற்றெடுத்த  பெருஞ்செல்வங்களே !

"குழந்தையும்  தெய்வமும்  கொண்டாடும்  இடத்தில் "  என்பார்கள்.

உங்கள்   தாய்,      உங்களைக்   கொண்டாடி   மகிழ்ந்தது ,
நீங்கள்  கொண்டவர்களையும்  கொண்டாடியது     அனைத்தும் ,
அவரைக்  கொண்டவன்,
அவரை  கொண்டாடியதால்  அல்லவா ?

உங்கள் தாயின்  மறைவு,  உங்களை  மிகவும்  பாதித்திருக்கிறது
என்பதனை   நான்  நீக்கமற  அறிவேன் !

மரணத்தை  முன்னரே  அறிந்தவர்  எவருமிலர்,  ஒருவனைத் தவிர.
அதனை   அறிந்த  ஒரே ஒருவன் , பரிஷித்துவின்  கதை,   உங்களுக்கு
தெரியும்.

நீங்கள்  மறந்த,
ஆனால் ,
உங்களைப்  பெற்றவர்களின் மனதில் ஓடிய,
மற்றொரு கதையைஉங்களுக்கு நினைவூட்டுகிறேன் !

மகா பாரதத்தில்,
மான்  உருவம் கொண்டு  போகித்திருக்கும்  முனிவனை,
மானெனக் கருதி   கொன்றதனால்,
போகிக்கும் போது  மரணம் "  என்ற சாபத்தைப் பெற்றவன்,
பாண்டு.

இதனால் , மந்திரத்தை உபயோகித்து  மக்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்
என்று குந்தியையும்மாதரியையும்  நிர்பந்தித்துமக்களைப் பெற்ற பின்,
பெண் வேட்கைக்கு  ஆளாகிறான்,  பாண்டு.
(  பாண்டுவின்   இரண்டாவது மனைவியை    " மாத்தரிஎன்று  வில்லிபுத்தூராரும்
மாத்ரி " என்று  மற்றவரும்  குறிப்பிட்டுள்ளனர்,  நான்சில உபன்யாசங்களில் கேட்டுப் பழகிய 
 " மாதரி " என்ற  வார்த்தையை  உபயோகித்திருக்கிறேன்பிழையிருப்பின்  மன்னிக்கவும் )


கொண்டவனின்  வேட்கையை தணிக்கமாதரியும்  உடன்படுகிறாள்.

அவளுக்கு தெரியாதாபெண் வேட்கை,   கொண்டவனைக் கொல்லும்  என்று ?

தெரிந்தும்  சம்மதிக்கிறாள் !

பாண்டு மரிக்கஉடன்கட்டையேறுகிறாள்மாதரி !

குந்தியோ  அல்லது  மற்றவர்களோ  தன்னை தூற்றுவார்களோ என்ற எண்ணம்  மனதில் தோன்றினாலும்கணவனின்  விருப்பத்தை பூர்த்தி செய்வதே தன் கடமைஎன்று  எண்ணிஅச்செயலின் பலனை எதிர்பாராமலும்
பொருட்படுத்தாமலும்,  மனைவியாக  தன் கடமையை செய்த  மாதரி , இந்நிகழ்விற்கு பல ஆண்டுகளுக்குப் பின் , குருஷேத்திரத்தில்         
 "   கடமையைச் செய் , பலனை எதிர்பாராமல்  "  என்ற   கண்ணனின்  கீதைக்கு,     வித்திடுகிறாள் .  

மாதரியின்  செயலைஅன்று  குறை கூறியவர்கள்  யாரும் இல்லை.

தருமனுக்கு தெரியாதா , தன் தந்தையின் மரணமும்அதன் காரணமும்.?

என்றும் குறை கூறியதில்லைதன் சிற்றன்னையைப் பற்றி !

வனவாசத்தின் போது,  நச்சு நீர் அருந்திதம்பியர்  நால்வரும் வீழ்ந்து
கிடக்கயட்சனாய் வந்த  தர்ம தேவதைக்கு  சரியான பதிலளித்த
தருமனுக்கு கிடைத்த  பரிசு,  " தம்பியர் நால்வரில்ஒருவனை   மட்டும்
உயிர்பித்துக்கொள் " என்று.    

தருமன் நகுலனைத் தேர்ந்தெடுக்ககாரணம் கேட்டதுதரும தேவதை.

குந்திக்கு  நானிருக்கிறேன் ,  மாதரிக்கு நகுலன்  வேண்டும் "
என்று பதிலளித்த  தர்மவான்தருமன்.

எந்நிலையிலும்,  தன் நிலை  பிறழாத தருமன் , என்றும் பேதம்
பார்த்ததில்லை , தன் அன்னைக்கும்சிற்றன்னைக்கும் !

அத்தகைய  தருமன் போற்றிய , மாதரி  வழி நின்ற கர்ம  வீரன் ,
உங்கள்  தந்தை!

அன்றைய குருஷேத்திரத்தில்,   மரணத்தை  எண்ணிக்  கலங்கிடும்
வீரனாக சித்தரிக்கப்பட்டவன்  ,  விஜயன் .

இன்றைய  நிகழ்விலே,  மரணத்தை  எண்ணி    கலங்கிடாமல்,
தருமன் போற்றிய  மாதரி  வழி நின்ற , மா வீரனாக
வடிவமைக்கப்  பட்டிருக்கிறார்,  உங்கள்  தந்தை !

மரணத்தை எண்ணி  கலங்காதே ! போர் செய்போர் செய் ! "
என்று  விஜயனை  எழுச்சியுறச் செய்த,  
கண்ணனின் மனதும் கல் மனதல்ல!

உங்கள்  தாயின்  ஆயுள்,  
நான்கு நாட்கள்தான்  என்று  நிர்ணயிக்கப்பட்ட நிலையில்,
தாயினும் சாலப் பரிந்து ,
தன் மனைவியின்  விருப்பங்களையும் ஆசைகளையும்  
மாதரி வழி நின்று பூர்த்தி    செய்த ,
உங்கள்  தந்தையும்,     இரக்கமற்ற  அரக்கனுமல்ல !

உங்களுக்கு  தெரியுமா,  இந்த  நிகழ்வு,  
அந்த  அன்புள்ளங்களின்  ஆத்மார்தமான   ஒப்பந்தம் என்று ?

என்று  உங்கள்  தாய்க்கு  சர்க்கரை நோய் இருப்பதாக  கண்டுபிடிக்கப்பட்டு ,
உணவு முறைகள்  வரையறுக்கப்பட்டதோ,  அன்றே  அவர்கள்  எடுத்த முடிவு ,    " 
இறப்பதற்குமுன், தாம்   விரும்பிய அனைத்தையும்  உண்டு  மகிழ்ந்துவிட  
வேண்டும் "  என்பதுதான்  ! 

மனைவி  விரும்பிய  பொருட்களை,  கைகள்  கனிவுடன் நீட்டினாலும்
மனது எப்படி  துடித்திருக்கும்,      அந்த  பெரியவருக்கு ?

அவரால்  வாய் திறந்துதான்  சொல்லியிருக்க  முடியுமா,  
கண்மணியே !   நீ  காற்றில்  கரையப் போகிறாய்,  
 பிரியமானவளே !, நீ என்னைவிட்டு  பிரியப் போகிறாய் " என்று ?. 

அல்லது,  உங்கள் தாயார்தான்  கேட்டிருப்பார்களா 
மறுக்கப்பட்டவைகள்   ஏன்  அளிக்கப்பட்டன  "  என்று ? .

இரு விழிகள்  கணை  தொடுக்க
மற்ற  இரு விழிகள்  உரைத்திருக்கும்,   அந்த  முடிவுரையை ! 

கண்கள்  கலங்கினாலும்ஒரு துளி  கண்ணீரைச்  சிந்தினாலும்,
நீங்கள்  கண்டுபிடித்து விடுவீர்கள்  என்று  கண்ணீரையும்  
கட்டிப் போட்ட  உத்தமன்,  உங்கள்  தந்தை !

அவரையா  குறை  கூறுகிறீர்கள்,  தாயை கொன்றவர் என்று ......?

ஒரு வேளை,  உங்கள் தந்தை  முந்தியிருந்தால்,  உங்கள் தாயாரும்  செய்திருப்பார்  இதே  செயல்களை,  மன நிறைவுடன் ! 

அப்போது , குறை கூறியிருப்பீர்களா  உங்கள் தாயை ?

 உங்கள் தாயுடன்  நீங்கள் கொண்டிருந்த நெருக்கம் ,  குறை சொல்ல விடாது !

உங்கள்  தந்தை , கண்டிப்புடன் இருந்ததினால்சற்று  விலகியே  
நின்றுவிட்டிர்கள் !

மற்றொரு  உண்மை தெரியுமா உங்களுக்கு ?

உங்களிடம்  கண்டிப்பாக  இருந்த பெரியவர்,
உங்களைக் கொண்டாடும்  சுதந்திரத்தை ,
உங்கள் தாய்க்கு கொடுத்ததின் காரணமென்ன?

நான் கண்டிப்புடன் இருக்கிறேன்,  
நீ கண்ணின் கருமணியைப் போல் கருதிகாப்பாற்று"
என்ற  நிலைப்பாடுடன்  வாழ்ந்தவர்கள்,  உங்களைப் பெற்றவர்கள் !

உங்களின் இன்றைய சிறப்பான  நிலைமைக்குதந்தையின் கண்டிப்பும்தாயின்  பாசமும்பரிவும்  அல்லவா  காரணங்கள் !

தவறு ,  செல்லங்களே !
தவறு !

நீங்கள்,   உங்கள்  தந்தைமேல்  கொண்ட  பார்வை , தவறு !

தாயை  உங்களிடமிருந்து  பிரித்துவிட்டார்  என்ற  தவறான பார்வையினால்,
நீங்கள்  அவருக்கு  கொடுத்த  தண்டனை,  உங்களை  அவர் பிரிந்திருப்பது !

"  தாயிற் சிறந்த ஒரு  கோயிலும் இல்லை  "   என்பதை உணைந்த  நீவிர் ,
"  சுற்றத்திற்கு  அழகு  சூழ  இருத்தல் "  என்பதனை  மறந்ததும்  ஏனோ ?


பெற்றவர்க்கு இல்லை  குற்றமும்  சினமும்  "  என்ற  
மூதுரைப்படி  , நீங்கள் கொடுத்த   தண்டனையையும்  புன்சிரிப்புடன்
ஏற்றுக் கொண்ட பெருந்தன்மையாளன் , அவர் !

குறை ஒன்று சொன்னால்உங்களின் சீரான  வாழ்க்கையில்
சுருக்கங்கள்  வந்துவிடுமோ  அன்று அஞ்சிஎதையும்
நிறைவாகவே  கொண்ட  உத்தமன் ,  உங்கள் தந்தை !

யாம் பெற்ற  இன்பம்  பெறுக  இவ்வையகம் "   என்பதற்கு  மறு மொழியாக
"  நான் பெற்ற துன்பம்,  இனி  எவருக்கும் வேண்டாம் " என்ற
 நினைவுடன்தன்  மரணத்திலும்  பிறர் நலம்  காண  நினைத்த  நல்லவர்,
உங்கள்  தந்தை !

நாளை,  அவர் கனவு  மெய்ப்படும்போது,  அவர் வாழ்க்கை
காவியமாகும் !

அவரைப் பற்றிய  எழுத்துக்களும்  காவியமாகும் !

போற்றுங்கள் !

உங்கள்  தாய்க்கு,
தாயுமானவனாய்  நின்ற  உங்கள்  தந்தையை
போற்றுங்கள் !

மனைவிக்கு,
மருத்துவனாய்  நின்று  சேவை செய்த
மா மனிதனைப் போற்றுங்கள் !

நாட்டு  மக்களும்
நலம் காண  வழி வகுத்த
நல்லவனை  போற்றுங்கள் !


இறுதியாக.

பெரியவரின்  " நல்ல மனம் வாழ்க,  நாடு போற்ற  வாழ்க "  என்று  வாழ்த்தி,
வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி  விடை பெறுகிறேன் ! 


By
களம்பூர்  G  பெருமாள்  செட்டியார்


  




மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


இனிய நல்வாழ்த்துகள்.



    

இரண்டாம் பரிசினை 


வென்றுள்ள மற்றொருவர்




 திரு. ரவிஜி  



[ மாயவரத்தான் எம். ஜி. ஆர். ]


அவர்கள்

வலைத்தளம்

mayavarathanmgr.blogspot.com



  



இரண்டாம் பரிசினை வென்றுள்ள  


 திரு. ரவிஜி  




[ மாயவரத்தான் எம். ஜி. ஆர். ]



 அவர்களின் விமர்சனம் இதோ:



கதையின் தலைப்பினைப் பார்க்கும்பொழுது, முதலில் பழைய ‘என்னடி முனியம்மா ஒன் கண்ணுல மையி..’ என்ற குதூகலமான நாட்டுப்புறப்பாடல் வரிகள் போல இருக்கிறதே, ஒருவேளை இது ஒரு ஜாலிக்கதைதான் என்ற எண்ணம் ஏற்படுத்தினாலும், கதையின் துவக்க வரிகளே இதுவேறுவிதம் என்பதுபோல், வயதான தோற்றத்தில் நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் காரிலிருந்து இறங்கிவருவதுபோன்ற தோற்றத்தை மனதில் ஏற்படுத்துகிறது!

          பெரியவருடன் ஐம்பது வயதில் ஒருவர் பழிவாங்கிவிட்ட முகபாவனையுடன் வருவதும், அவர் கிளம்புமுன்பாக பெரியவர் ஏதோ சொல்லமுயன்று அதற்கு அவர் காதிலும் வாங்காமல் பதிலும் எதுவும் சொல்லாமல் கிளம்பிச் செல்வதும் வசனமே எதுவுமில்லாமல், மவுனக் காட்சியாகச் சித்தரிக்கப்பட்டு ஒரு இறுக்கமான  சூழ்நிலையில் சினிமாவில் வரும் வசனமில்லாத காட்சியமைப்பினைப்போல கண்முன் நிறுத்துகிறது.
          
முதியவரின் தோற்றம் சித்தரிக்கப்பட்டிருப்பதிலிருந்து உடல் நலம், பணவசதி, கண்ணியமான தோற்றம், எல்லாமே இருந்தும் இவர் ஏன் இந்த முதியோர் இல்லத்திற்கு வரவேண்டும் என்ற கேள்வியை நம் மனதில் கதாசிரியர் ஏற்படுத்திவிடுகிறார்.
        
  கதையின் நாயகரை கதைக்குள் அழைத்துச் செல்லும் முக்கிய பாத்திரமாக ‘அரட்டை’ ராமசாமி அறிமுகம். வந்தவரை  உட்காரவைத்து தண்ணீர் கொடுத்து உபசரித்து மெதுவே கேள்விகளை துவக்குகிறார்.  முதியோருக்கே உரிய ஆர்வம், “பெரியவரைப் பற்றிய கதையைக்கேட்க அங்குள்ள அனைவரும் தங்கள் காதைத் தீட்டிக்கொண்டனர். ஒரு சிலர் தங்களின் காது மிஷினை சரிவரப் பொருத்திக் கொண்டனர்” என்ற வரிகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டு நம்மை கதையின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது.

ஆறே கேள்விகளில் பெரியவரின் மேல் அம்மாவைக்கொன்றதாக பிள்ளைக்கு வந்த சந்தேகம் மற்றும் கோபம் அதனால் பதினாறாம் துக்கம் முடியும் முன்பாக அப்பாவை முதியோர் இல்லத்திற்கு அனுப்பியதாக சொல்லி நமக்கு இன்னும் விறுவிறுப்பை அதிகரிக்கிறார்.

மறுநாள் காலையே மூதாட்டி ஒருவருக்கு சர்க்கரை நோய்க்கான ஊசி போடும் கம்பவுண்டர் நேரத்திற்கு வராததால் உணவும் அருந்த முடியாது திணறும் வெளையில், சற்றும் தடுமாறாமல் மருந்தின் அளவு பார்த்து ஊசியில் எடுத்து  இடதுகையால் சதையை உப்பலாகப் பிடித்து கை நடுங்காமல் ஊசிபோட்டுவிட்டு பஞ்சையும், சிரிஞ்சையும் குப்பைத்தொட்டியில் போடுவதை குறிப்பிட்டிருப்பதன்மூலம் அவரது நிதானம், அனுபவம், ஒழுங்கு இவற்றைச்சித்தரிப்பதோடு, அவரும் அவரது மனைவியும் சர்க்கரை நோயாளிகள் அதிலும் அவரது மனைவி இன்சுலீன் போடும் அளவிற்கு பாதிப்பு உள்ளவர் என்பதனை தெரியப்படுத்திவிடுகிறார் கதாசிரியர். மற்றும் “கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக நானே அவளுக்கு தினமும் ஊசி போட்டு வந்ததால், இந்த ஊசி போடும் கலை எனக்கு சுலபமாகப் பழகி விட்டது. ஒரு வேளை போட்ட இடத்திலேயே மறுவேளையும் போடாமல், கைகள், கால்கள், தொடை, இடுப்பு, வயிறு என மாற்றி மாற்றி, வலி ஏதும் ஏற்படாதபடி, மிகவும் கவனமாக மெதுவாகப் போட வேண்டியது முக்கியம்” என்ற வரிகளின் மூலம் மனைவியிடம் அவர் கொண்டிருந்த சிரத்தை, ஊசி போட அவர் கற்றுக்கொள்ளவேண்டியதின் அவசியம் தெளிவுபடுத்தப்படுகிறது.

எரியும் விளக்கில் திரி முந்தியோ, எண்ணெய் முந்தியோ என்று சொல்லுவார்கள். ஏதாவது ஒன்று தான் மிஞ்சும். அதுதானே உலக வழக்கம்?” என்ற வரிகளால் ‘கணவனும் மனைவியும் எண்ணெயும் திரியுமாக இருந்ததால்தான் குடும்ப விளக்கு பிரகாசமாக எரிந்தது, குடும்பம் வளர்ந்தது ‘என்பதனை கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

“அவள் கொடுத்து வைத்தவள் தான். பூவும் பொட்டுமாகப் போய்ச்சேர்ந்து விட்டாள். என்னைத்தான் அனாதையாக விட்டு விட்டுப் போய் விட்டாள். என்ன செய்வது? “என்று அவர் புலம்பும்போதும் முதியோர் இல்லத்தில் உள்ளோரெல்லாம் நாமனைவரும் ஒரு கப்பலின் பயணிகளே -  நமக்கு நாமே ஒருவருக்கொருவர் உறவு என்று ஆதரவளிப்பது முதியோர் இல்லங்களின் இன்றைய நிலைமையை பறைசாற்றுகிறது. அதற்கு அடுத்த கட்டமாக சிலர் வீடுகளில் முதியோருக்கு இல்லாமல் போன அரவணைப்பு அதன் காரணமாக சிலர் தாமே முதியோர் இல்லம் நாடிச்செல்வதும் “பரவாயில்லை. நாம் ஏதோ நம்மால் முடிந்த பணம் கொடுத்தாலும், நம் மீது அக்கறை எடுத்துக்கொண்டு, ஆட்களைப்போட்டு, நமக்கு வேளா வேளைக்கு, டயப்படி ஏதாவது ஆகாரம் கொடுத்து கவனித்துக்கொள்கிறார்களே; அதுவே பெரிய விஷயம் தான். சில வீடுகளில் கூட இதுபோல நேரப்படி ராஜ உபசாரம் நடக்கும்னு சொல்லமுடியாது; என்ற வரிகளால் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது.

மனைவி இருந்த காலத்தில் பெரியவர் வாய்க்கு ருசியாக வக்கணையாக சாப்பிட்டது, பின்னர் சர்க்கரை நோய் ஏற்பட்டு வாயைக்கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது பெயர் ‘சர்க்கரை நோய்’ என்றாலும் உண்மையில் கசப்பையே அளிக்கிறது என்பதனை அடிக்கோடிருகிறார் ஆசிரியர். சர்க்கரை நோயை எவ்வாறு அணுகுவது என்று விளக்கமாக பயனுள்ள வகையில் கதையினூடே சொல்லப்படுகிறது.

கண்டிப்பான அப்பா, அதனால் அம்மாவிடமே அதிகம் ஒட்டுதல் பெற்றபிள்ளைகள் என்று எதார்த்தமான குடும்பம் கண்முன்னே விரிகிறது.

கதையில் வரும் சுகர் மகாரஜாவின் பாத்திரப் படைப்பு முதியோர் இல்லத்தார்க்கு ஒரு தெளிவை ஏற்படுத்துகிறது. ‘sugar’பாடாய்படுத்துகிறது, ‘சுகர்’ பாத்திரம் பாடம் நடத்துகிறது. உபன்யாசம் கேட்கச் செல்லும் நேரத்தில் பெரியவரின் பெட்டி ஆராய்ச்சி செய்யப்படுகிறது. ‘பரீக்ஷித்து மஹாராஜா’ கதைகள் நமது கதையின் ஒருபகுதியாகவே மாறிவிடுகிறது.

          பாகவதம் முடியும் நேரம் பெரியவரின் வாழ்க்கையே முடியும் நேரம் என்று நமக்கே தொன்றச் செய்து bgm scoreஎல் ஷெனாய் வாத்தியங்கள் ஒலிப்பதுபோல ஒரு பிரமை ஏற்பட்டிருக்கிறது.  மனைவிக்கு இறுதியாக விரும்பிய இனிப்புவகைகளைக் கொடுத்து அதனால் அவர் இறந்ததாக கூறப்படுவது மெர்சி கில்லிங் என்று அவர் கூறுவது மனைவிமேல் உள்ள ஆழ்ந்த அன்பினையும் ராணுவப்பணியாளர் என்றதால் இறப்பை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உண்டு என்பதையும் தெரிவுபடுத்துகிறது. அதே முறையில் தானும் உயிர் நீப்பதும், //சர்க்கரை நோயாளிகள் எந்தவித உணவுக் கட்டுப்பாடுகளும் இல்லாமல், தங்களுக்குப் பிடித்ததை சாப்பிடவும், இந்தக் குறைபாடு வந்துவிட்டால் அதை முற்றிலும் போக்கவும் புதிய மருந்துகள் கண்டு பிடிக்கப்பட வேண்டும். அதற்கான மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக மட்டுமே சுமார் ஒன்றரைக்கோடி ரூபாய் மதிப்புள்ள என் சொத்துக்கள் முழுவதும் பயன் படுத்தப்பட வேண்டும்// என தன் உயிலில் எழுதியிருந்தார் என்ற இடத்தில் பெரியவரின் மனைவிமேல் கொண்ட பாசம், சர்க்கரை நோயால் அவர்களது இழப்புக்கள் அதன் பின்விளைவுகள் அதனால் எழுதிய உயில்….பெரியவரின் பாத்திரப் படைப்பு அற்புதம். நிமிர்ந்து நிற்கிறது.

 இறுதியில் அரட்டை ராமசாமி மவுனசாமியாகி மவுன அஞ்சலியுடன் கதை முடிக்கப்படுகிறது.

வாழ்க்கையில் யார் முன்னாலே… யார் பின்னாலே… காலமே அறியும்.

நன்றி..



 









மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.




    



   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.









நடுவர் அவர்களின் 

வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம்  பரிசுக்கான தொகை 

இவ்விருவருக்கும் 

சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.



-oOo-



இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.



காணத்தவறாதீர்கள் !






அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



VGK-16 

” ஜா தி ப் பூ 





விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


08.05.2014  


இந்திய நேரம் 



இரவு 8 மணிக்குள்.








என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்














25 கருத்துகள்:

  1. வித்தியாசமாய் விரிவாய் பாரதக்கதையுடன் விமர்சனம் எழுதி பரிசு பெறும் களம்பூர் திரு.G. பெருமாள் செட்டியார் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு

  2. இரண்டாம் பரிசினை வென்றுள்ள
    திரு. ரவிஜி [ மாயவரத்தான் எம். ஜி. ஆர். ]அவர்களுக்கு
    இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!:

    பதிலளிநீக்கு
  3. பரிசு பெற்ற இருவருக்கும் என் பாராட்டுகள்! திரு பெருமாள் செட்டியார் அவர்களின் விமர்சனம் பரமிக்க வைத்தது! மேலும் பல பரிசுகள் வெல்ல இருவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துகள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. இந்த அரிய வாய்ப்பினை நல்கிய திரு வை.கோ. அவர்களுக்கும், நடுவர்களுக்கும், வாழ்த்திப் பாராடிய அன்பு உள்ளங்களுக்கும், வாழ்த்திப் பாராட்ட இருக்கும் அன்பு உள்ள என் அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றி நன்றி! வெற்றி பெற்ற அனைவருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா3 மே, 2014 அன்று 7:54 PM

    இரண்டாம் பரிசினை வென்றுள்ள
    திரு. ரவிஜி [ மாயவரத்தான் எம். ஜி. ஆர். ]அவர்களுக்கு
    இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!:
    Vetha.Elanagthilakam.

    பதிலளிநீக்கு
  6. களம்பூர் திரு. க. பெருமாள் செட்டியார் அவர்களின் விமர்சன மேடைப் பேச்சு நல்ல அலசல். அவருக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. கதையை அழகுற விமர்சனம் செய்த திரு மாயவரத்தான் ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. திரு. G. பெருமாள் செட்டியார் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  9. http://mayavarathanmgr.blogspot.in/2014/05/vgk.html
    திரு. ரவிஜி [மாயவரத்தான் எம்.ஜி.ஆர்] அவர்கள்.

    இந்த வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  10. இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!
    http://blogintamil.blogspot.in/2014/05/blog-post_4.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இராஜராஜேஸ்வரி May 4, 2014 at 7:27 AM
      இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!
      http://blogintamil.blogspot.in/2014/05/blog-post_4.html//

      தங்களின் அன்பான தகவலுக்கு அடியேனின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  11. பேச்சரங்கத்தில் பேசுவது போன்ற பாணியுடன் சிறப்பான விமர்சனம் செய்து இரண்டாம் பரிசுக்குரியவராய்த் தேர்வாகியுள்ளதோடு, ஹாட்-ட்ரிக் பரிசுக்கும் தேர்வாகியுள்ள களம்பூர் திரு. பெருமாள் செட்டியார் அவர்களுக்கும் கதையின் சிறப்பம்ச வரிகளை மேற்கோள்களுடன் குறிப்பிட்டு அழகாக விமர்சித்துள்ள மாயவரத்தான் ரவிஜி அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  12. இரண்டாம் பரிசினை பெற்ற களம்பூர் திரு. G. பெருமாள் செட்டியார் அவர்களுக்கும் மற்றும் ரவிஜி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. வாழ்த்திய அனைவருக்கும், என்னை பரிசுக்கு உரியவராக்கிய
    நடுவர் அவர்களுக்கும், திரு. VGK அவர்களுக்கும் , மனமார்ந்த நன்றிகள் .

    பரிசினை என்னுடன் பகிர்ந்து கொண்ட திரு. ராவிஜி ரவி
    அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  14. இரண்டாம் பரிசு பெற்ற இருவருக்கும் எனது வாழ்த்துகள். திரு பெருமாள் அவர்களின் விமர்சனம் நீண்டதாக இருந்தாலும் ரசிக்கும்படியாக இருந்தது!

    பதிலளிநீக்கு
  15. சிறப்பான விமரிசனங்களை எழுதி அசத்தியுள்ள பெருமாள் செட்டியாருக்கும், திரு மாயவரத்தானுக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து பரிசை வெல்வார்கள் எனவும் நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  16. http://gperumal74.blogspot.in/2014/05/vgk-14.html
    களம்பூர் திரு. G. பெருமாள் செட்டியார் அவர்கள்

    இந்த வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  17. பெருமாள் செட்டியார் மற்றும் ரவிஜிக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  18. பரிசு வென்ற திரு பெருமாள்செட்டியார் மற்றும் திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. சிறப்பான விமரிசனங்களை எழுதி அசத்தியுள்ள பெருமாள் செட்டியாருக்கும், திரு மாயவரத்தான் ரவிஜி அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 29, 2015 at 3:05 PM

      //சிறப்பான விமரிசனங்களை எழுதி அசத்தியுள்ள பெருமாள் செட்டியாருக்கும், திரு மாயவரத்தான் ரவிஜி அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ. :)

      நீக்கு
  20. பரிசு வென்ற திரு ரவிஜி திரு பெருமாள் செட்டியாரவங்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  21. திரு ரவிஜி திரு பெருமாள் செட்டியார் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. பரிசு பெற்ற இருவருக்கும் என் பாராட்டுகள்! திரு பெருமாள் செட்டியார் அவர்களின் விமர்சனம் பிரமிக்க வைத்தது! மேலும் பல பரிசுகள் வெல்ல இருவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துகள்! நன்றி!

    பதிலளிநீக்கு