என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 2 மே, 2014

VGK 16 - ஜா தி ப் பூ



இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்: 08.05.2014 

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 

REFERENCE NUMBER:  VGK 16

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:



'ஜா தி ப் பூ'

[சிறுகதை]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-




 


பூக்களை விட ... அந்தப்பூக்காரி ... நல்ல அழகு ! 


பதினாறுக்கு மேல் பதினெட்டு தாண்டாத பருவப்பெண்.


இரண்டைப் பின்னல்கள். பாவாடை சட்டை தாவணி. பளிச்சென்ற தோற்றம். பார்த்தால் படித்த பெண்ணாகத் தோன்றுகிறாள். பூ வியாபாரத்திற்குப் புதியவளோ! என்னவோ .... புரியாத நிலை.


அந்தக்கோயில் வாசலில் ஏற்கனவே பூ விற்று வந்த கிழவியின் வியாபாரம் இந்தப் புதுப் பெண்ணின் வருகையால் கடந்த ஒருவார காலமாகப் படுத்துப்போனது.


இந்தப்பெண்ணின் புதிய பூ வியாபாரத்தால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. பலாப்பழத்தை ஈ மொய்ப்பது போல, பூ வாங்கும் சாக்கில் பல இளைஞர்கள் அந்தப்பெண்ணை வட்டமிட ஆரம்பித்தனர். சிலர் தங்கள் பாழும் நெற்றியில் புதிதாகப் பட்டையிட்டுக்கொண்டு, அவளை பக்திப்பரவசத்தால் ஆட்கொள்ளப் பார்த்தனர்.


இதுபோல எவ்வளவு பேர்கள் அவளிடம் வந்தாலும், வழியோ வழியென்று வழிந்தாலும், தன்னுடைய சாமர்த்தியமான பேச்சால், ஜொள்ளர்களை சமாளித்து, பூ வியாபாரத்திலேயே தன் முழுக் கவனத்தையும் செலுத்தி, மிகக் குறுகிய நேரத்திற்குள், தன் கூடை முழுவதும் காலிசெய்துவிட்டு, கை நிறைய காசுகளுடன், கிழவியைப்பார்த்து கண் சிமிட்டியவாறே “வரட்டுமா பாட்டி” எப்படி என் சாமர்த்தியமான வியாபாரம்? என்பது போல, சிரித்துக்கொண்டே சென்று விடுவாள்.


”ஜாக்கிரதையாப் பார்த்துப் போம்மா கண்ணு” என்பாள் அந்தக்கிழவியும் எந்த விதமான போட்டியோ பொறாமையோ இல்லாமல்.


ஆனாலும் அந்தப்பெண் போன பிறகே பாட்டிக்கு தன் பூ வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்.


அந்தப் பெண்ணைப் பற்றி பலரும் இந்தப்பாட்டியிடம் விசாரித்தார்கள். அந்தப்பெண் யார்? அவள் பெயர் என்ன? எந்த ஊரு? இங்கே எங்கே தங்கியிருக்கிறாள்? என்று தெரிந்து கொள்வதில் அவர்களுக்கு ஓர் ஆவலும் ஆர்வமும்.


”அந்தப்பாப்பா யாரோ எனக்குத் தெரியாதுப்பா; மொத்தத்தில் அது என் பிழைப்பைக் கெடுக்கத்தான் இங்கு வந்து போயிட்டு இருக்கு; இனிமேல் அது இங்கே செவ்வாய் வெள்ளி மட்டும் தான் வருமாம், இன்னிக்கு என்னிடம் சொல்லிட்டுப்போச்சு” என்று கிழவி தன்னிடம் விசாரித்த பலரிடமும் சொல்லிக்கொண்டிருந்தாள்.


இதை கவனித்த ஒரு இளைஞன் மட்டும் கிழவியின் காதருகே போய் “பாட்டி, அந்தப்பொண்ணை செவ்வாய் வெள்ளியும் கூட இங்கு வரவேண்டாம்ன்னு கண்டிச்சு சொல்லிடுங்க” என்றான், சற்றே தயங்கியவாறு. 


இதைச்சொன்ன அந்த இளைஞனை, அந்தப்பூக்காரக் கிழவிக்கு, அவனுடைய சின்ன வயதிலிருந்தே பழக்கம் உண்டு. செல்லமாக அவனைப் ’பேராண்டி’ என்று தான் கூப்பிடுவாள்.


தினமும் தவறாமல் இந்தக் கோயிலுக்கு வருபவன். உண்மையிலேயே கடவுள் பக்தி உடையவன்.


ஒரு நாள், உடல்நலமின்றி இருந்து, பலத்த மழையில் நனைய வேண்டிய இந்தக்கிழவியை, பாசத்தோடு குடை பிடித்து, அவளின் பூக்கூடையுடன், அவளின் குடிசை வீடு வரை கூடவே போய், அவளை அவள் வீட்டில் பத்திரமாகக் கொண்டு சேர்த்தவன்.  


இந்தத்தள்ளாத வயதிலும், பூத்தொடுத்து பூ வியாபாரம் செய்து உழைத்து சாப்பிடும் அந்தக் கிழவி மேல் அவனுக்கு ஒரு தனி பிரியம் உண்டு. மேலும் கோயிலுக்குப்போய் ஸ்வாமி கும்பிட்டு விட்டு திரும்ப வீட்டுக்குப்போகும் முன் இந்தக் கிழவியிடம் ஒரு பத்து நிமிடங்களாவது தினமும் பேசிவிட்டுத் தான் போவான்.


அவன் தனது சிறு வயதில், ஒவ்வொரு பூக்களின் பெயர்களையும் பாட்டியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டவன்.


“இது மல்லிகைப்பூ, இது முல்லைப்பூ, இது ஜாதிப்பூ, இது கனகாம்பரப்பூ,  இது வாடாமல்லி, இது ரோஜாப்பூ, இது தாழம்பூ, இது வெண் தாமரைப்பூ, இது செந்தாமரைப்பூ, இது மரிக்கொழுந்து, இது ஜவந்திப்பூ, இது பட்டுரோஜா, இது பாரிஜாதம் (பவழமல்லி), இது இருட்சிப்பூ, இது நந்தியாவட்டை, இது செம்பருத்தி, இது மகிழம்பூ, இது வில்வம், இது துளசி” என ஒவ்வொன்றையும் அவனுக்கு அந்தப்பாட்டி பொறுமையாகச்சொல்லிப் புரிய வைத்திருக்கிறாள்.


”மனுஷங்கக்கிட்டே தான் ஜாதிவெறி இருக்குன்னு பார்த்தா, பூக்களில் கூட ’ஜாதிப்பூ’ன்னு ஒரு ஜாதி தனியா இருக்காப்பாட்டி” என்று புரட்சிகரமாக அவன் சிறு வயதிலேயே கேட்டதை நினைத்து கிழவி பலமுறை தனக்குள் வியந்து இருக்கிறாள்.


தான் பள்ளியில் படித்து முதல் ரேங்க் வாங்குவது முதல், காலேஜில் சேர்ந்தது, காலேஜ் படிப்பு முடிந்த கையோடு, உள்ளூரிலேயே பேங்க் ஒன்றில் நல்ல வேலையில் அமர்ந்துள்ளது, கை நிறைய இப்போது சம்பளம் வாங்குவது வரை, அவ்வப்போது அனைத்து விஷயங்களையும் அந்தப்பூக்காரப் பாட்டியிடம் பகிர்ந்துகொண்டு, அவள் அவனை மனதார வாழ்த்துவதில் பேரின்பம் கொண்டு வருபவன் அவன்.


பெண் வீட்டுக்கு எந்த ஒரு செலவும் வைக்காமல், தான் திருமணம் செய்துகொள்ள விரும்பும், அந்த இளம் பூக்காரப்பெண்ணை, பொது இடத்தில் பலரும் மொய்ப்பதில் அவனுக்குத் துளியும் இஷ்டமில்லை.


வழக்கம்போல் அந்தப்பூக்கார கிழவியிடம், தன் மனதில் உள்ள விருப்பத்தைத் தெரிவித்து, அது நல்லபடியாக நடக்க வேண்டி, ஆசீர்வதிக்கும் படியாக வேண்டினான். 

அப்போது கோயில் மணி அடித்தது நல்லதொரு சகுனமாகத் தோன்றியது அந்தப்பாட்டிக்கும், அவளின் பேராண்டிக்கும்.




உயர்நிலைப் பள்ளிப் படிப்புத் தேர்வு முடிந்து, லீவுக்கு தன் வீட்டுக்கு வந்துள்ள தன் பேத்தி, தான் எவ்வளவு தடுத்தும் கேளாமல், தனக்குப் போட்டியாக ஒரு மாதம் மட்டும் பூ வியாபாரம் செய்யப்போவதாகவும், நான் உன் பேத்தி தான் என்று யாரிடமும் சொல்லக்கூடாது என்று நிபந்தனை போட்டுள்ளதை அந்தப்பூக்காரக் கிழவி தனக்குள் நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.


விளையாட்டாக பூ வியாபரம் செய்ய இங்கு வந்து போன தன் சொந்தப்பேத்திக்கு, அதுவே பூச்சூடி மணமகளாக மாறும் பாக்யத்தைத் தந்துள்ளதிலும், அதுவும் இந்தத் தனக்கு மிகவும் பழக்கமான, ரொம்ப நல்ல பையன் தன் பேத்தியை தன் மனசார விரும்புவதையும் நினைத்துப் பூரித்துப்போனாள். 


எல்லாம் அந்தக் கோயிலிலுள்ள அம்பாளின் அனுக்கிரஹம் தான் என்று வியந்து, சந்தோஷத்தில் பூத்துக் குலுங்கினாள் அந்தப் பூக்காரக்கிழவி. 


“எல்லாம் உன் மனசுப்படியே நல்லபடியாகவே நடக்கும்டா மாப்ளே!” என்றாள் அந்தக்கிழவி. 


 



மீண்டும் கோயில் மணி 
மேள தாளத்துடன் ஒலித்தது. 



 









oooooOooooo





’VGK-14 
நீ .... முன்னாலே போனா ..... 
நா .... பின்னாலே வாரேன் .... ’


 

 

 

’VGK-14 
நீ .... முன்னாலே போனா ..... 
நா .... பின்னாலே வாரேன் .... ’

என்ற சிறுகதைக்கு கணிசமாக எண்ணிக்கையில் பலரும் 
விமர்சனம் எழுதி அனுப்பி சிறப்பித்திருந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் 
என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

போட்டியில் பரிசுக்குத் தேர்வான விமர்சனங்கள் 
நாளை சனி / ஞாயிறு / திங்களுக்குள்
வெளியிடப்படும்.

காணத்தவறாதீர்கள்


oooooOooooo

28 கருத்துகள்:

  1. அருமையான கற்பனைக் கதை மிகவும் ரசித்துப் படித்தேன் யாரோ
    ஒரு பூக்காரி என்று எண்ணியிருந்த வேளையில் அந்தப் பெண்
    இந்தப் பாட்டிக்கு பேத்தி என்று இறுதியில் கதைக்கு நல்லதொரு
    முடிப்பைக் கொடுத்துள்ளீர்கள் தங்களின் கற்பனைக்கு ஓர்
    அபார சக்தி இருப்பதை ஒவ்வொரு கதையிலும் உணர முடிகிறது ஐயா உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .

    பதிலளிநீக்கு
  2. நல்லதை நினைத்து நல்லதே செய்தாள் பாட்டி.நல்லதே நடந்தது.

    பதிலளிநீக்கு
  3. விமரிசனப் போட்டி விமரிசையாக தொடர வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. மலர்ந்து மணம் வீசும்
    மலராக அருமையான கதை ..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  5. போட்டிக்கான பூக்காரி பாட்டியோட பேத்தி. நல்ல போட்டிக்கான பேத்தி. அழகான பூ. அன்புடன்

    பதிலளிநீக்கு
  6. முன்பே படித்து இருந்தாலும், உங்கள் எழுத்து நடை மறுபடியும் படிக்க சொல்கிறது.
    மிக அருமையான கதை. அம்பாளின் கடைகண் பார்வை பட்ட எல்லோரும் மலர் போல மகிழ்ந்து மணம் வீசுவார்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா3 மே, 2014 அன்று 11:58 AM

    அருமையான சிறுகதை.
    முதன் முறையாக இங்கு படித்தேன்
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  8. இந்தக் கதையை இன்று தான் முதல் முதலாகப் படிக்கிறேன். கடைசி பஞ்ச் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  9. அருமையான கதை ஐயா... இன்று தான் படிக்க முடிந்தது...

    பதிலளிநீக்கு
  10. சட்டென முடிவது போல் இருந்தாலும்
    தொடர்ச்சியை படிப்பவர்கள் முழுமையாக
    உணரும்படி விட்டுச் சென்றது அருமை

    பதிலளிநீக்கு
  11. இந்த சிறுகதைக்கான விமர்சனப்போட்டியில் கலந்துகொண்ட திரு. G. பெருமாள் செட்டியார் அவர்கள் [அவர்களின் விமர்சனம் போட்டியின் நடுவர் அவர்களால் பரிசுக்குத்தேர்வாகாமல் இருந்தும்கூட] அவர்கள் எழுதி அனுப்பியிருந்த விமர்சனத்தைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்கள்.

    இணைப்பு: http://gperumal74.blogspot.in/2014/05/06052014.html

    அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  12. இந்தக்கதைக்கு திருமதி. ராதாபாலு அவர்கள் எழுதி அனுப்பியிருந்த விமர்சனம் அவர்களின் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டுள்ளது.

    இணைப்பு: http://enmanaoonjalil.blogspot.com/2014/11/vgk-16.html

    போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாமல் இருந்தும்கூட, அதை தன் வலைத்தளத்தினில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ள திருமதி. ராதாபாலு அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    VGK

    பதிலளிநீக்கு
  13. 'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'

    இந்த சிறுகதைக்கு பெரியவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று [13.02.2015] அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு இதோ:
    http://swamysmusings.blogspot.com/2015/02/blog-post_13.html

    இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

    நடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட அதனைத் தன் பதிவினில் வெளியிட்டு சிறப்பித்துள்ள முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் கோபு [VGK]
    ooooooooooooooooooooooooooo

    பதிலளிநீக்கு
  14. நான் அப்பவே..நிணைச்சேன்........பெரியவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு நன்றி!!

    பதிலளிநீக்கு
  15. வலிப்போக்கன் -February 13, 2015 at 11:53 AM

    வாங்கோ, வணக்கம்.

    //நான் அப்பவே..நினைச்சேன்........பெரியவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு நன்றி!!//

    :) தங்களின் முதல் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி + நன்றி.

    ’பெரியவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கு நன்றி!!’ எனச்சொல்லியுள்ள தங்களுக்கும், அவருக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  16. அருமையான தெளிந்த நீரோட்டம் போன்ற காதல் கதை. வாழ்க அந்தக் காதலர்கள்.

    பதிலளிநீக்கு
  17. முன்பே படிச்சிருந்தாலும் மறுபடியும் படிக்த் தூண்டும் அபார எழுத்து ரசிக்க வைக்குது.

    பதிலளிநீக்கு
  18. கற்பனை அற்புதம். எத்தனை முறை படித்தாலும் அலுக்காத எழுத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 28, 2015 at 7:33 PM

      //கற்பனை அற்புதம். எத்தனை முறை படித்தாலும் அலுக்காத எழுத்து.//

      ஜாதிப்பூ போலவே, மணம் (மனம்) வீசும், அற்புதமான + அலுக்காத கருத்துக்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஜெ.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  19. இதுபோல அல்லா பேத்திகளுக்கும் ஒரு வாப்பாத்தா இருந்துகிட்டா எவளோ நல்லாருக்கும்

    பதிலளிநீக்கு
  20. நல்ல கதை பூக்களிலும் ஜாதிகள் இருக்கே. பாட்டியின் பேத்திக்கு சுபமான தீர்ப்பு.

    பதிலளிநீக்கு
  21. ஓப்பனிங் அசத்தல்னா.ஃபினிஷிங் அசத்தலோ அசத்தல். மனம் விரும்புதே!!!

    பதிலளிநீக்கு
  22. சிந்திக்க வைக்கும் முனைப்பு!
    சமுதாயச் சூழல்கள் சித்தரிப்பு!
    சிறந்த நடையில் படைப்பு!
    கோர்வையாய் எடுத்துரைப்பு!
    அத்தனையும் தித்திப்பு!
    இவையே கதாசிரியரின் சிறப்பு!

    எல்லோர் மனங்களிலும் இடம்பிடிப்பு!
    வைகோ அவர்களுக்கு வழங்கிடுவோம் இனிப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. My Dear Mr. Seshadri Sir,

      வாங்கோ, வணக்கம்.

      கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், பூப்பூவாக மணக்கும் வரிகளுடன் கூடிய கவிதை நடையில் எழுதியுள்ள விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      :) படித்ததும் எனக்கும் ஒரே சிரிப்பு :)

      அன்புடன் VGK

      நீக்கு
  23. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 71 + 34 = 105

    அதற்கான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2011/09/blog-post_30.html

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_12.html

    பதிலளிநீக்கு
  24. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான ஆறு விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2014/05/vgk-16-equal-prize-winners-list-1-of-3.html

    http://gopu1949.blogspot.in/2014/05/vgk-16-equal-prize-winners-list-2-of-3.html

    http://gopu1949.blogspot.in/2014/05/vgk-16-equal-prize-winners-list-3-of-3.html

    சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

    http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

    பதிலளிநீக்கு