கதையின் தலைப்பு
VGK 15 - ’ அ ழை ப் பு ’
மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,
அவர்கள் அனைவருக்கும் என்
மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
மற்றவர்களுக்கு:
இரண்டாம் பரிசினை
வென்றுள்ளவர் இருவர் :
sivamgss.blogspot.in
" எண்ணங்கள் “
இரண்டாம் பரிசினை
வென்றுள்ள மற்றொருவர்:
தான் பெற்ற ஹாட்-ட்ரிக் பரிசினை
தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டு
ஐந்தாவது சுற்றிலும்
முன்னனியில் நிற்கும்
களம்பூர் திரு.
G. பெருமாள் செட்டியார்
அவர்கள்
இரண்டாம் பரிசினை வென்றுள்ள
ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்
களம்பூர் திரு.
G. பெருமாள் செட்டியார்
அவர்களின் விமர்சனம் இதோ:
அதில் ஒருவர்
திருமதி
கீதா சாம்பசிவம்
அவர்கள்
sivamgss.blogspot.in
" எண்ணங்கள் “
"கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார் "என்று சொலவடை உண்டு. வீடு கட்டுவதில் உள்ள கஷ்ட, நஷ்டங்களை மட்டும் குறிக்காது அது. அந்த வீட்டை நாம் எவ்வளவோ கஷ்டங்கள் பட்டுக் கட்டினப்புறமா வந்து பார்க்கும் ஒவ்வொருத்தரும் ஆயிரம் நொட்டை சொல்லுவாங்க பாருங்க! அதிலே தான் நொந்து நூலாகிப் போவோம். அதே போல் கல்யாணம் பண்ணுவதும் சாமானிய விஷயம் இல்லை. இன்றளவும் கல்யாணம் பண்ணுவது என்பது சிரமமான காரியமாகவே இருந்து வருகிறது. இத்தனைக்கும் இப்போதெல்லாம் சமையலுக்கு காடரிங் ஆட்கள் வந்துவிடுகின்றனர். அந்த அந்த நேரத்துக்கு ஒவ்வொரு சடங்குக்கும் உரிய எல்லா சாமான்களையும் நம் கையில் கொடுத்து உதவுகின்றனர். பழக்கமே தெரியாதவர்களுக்கு ஒரு சில காடரிங் ஆட்கள் பழக்க வழக்கங்களையும் சொல்லித் தருவது நடந்து வருகிறது. ஆனால் எல்லாத்துக்கும் மேல் இந்த அழைப்பு அனுப்பும் வேலை இருக்கே அது தான் முக்கியமானது.
அழைப்பிதழ் அச்சிடுவதில் ஆரம்பிக்கும். பிள்ளை வீட்டுக் கல்யாணமோ, பெண் வீட்டுக் கல்யாணமோ எதுவானாலும் அவரவர் தந்தை வழித் தாத்தா, தாய் வழித்தாத்தா இருவர் பெயரும் போட வேண்டும். இதிலேயே ஒரு சிலர் தாய் வழித்தாத்தா பெயர் எதுக்குனு சொல்வாங்க. அவங்களை சமாதானம் செய்யணும். இதுக்காகக் கோவிக்கும் மனைவியை சமாதானம் செய்யணும். இப்படி ஒவ்வொன்றாகப் போட்டு விட்டுக் கடைசியில் "உங்கள் நல்வரவை எதிர்பார்க்கும்" என்னும் ஒரு பத்தியைப் பூர்த்தி செய்வதற்குள்ளாக ஒவ்வொருத்தர் வீட்டிலே பெரிய பிரச்னையாகிவிடும். தென் மாவட்டத்துக்காரங்கன்னா கேட்கவே வேண்டாம். தாய் மாமனுக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் கொடுத்து அவங்க பெயரையும் பத்திரிகையில் சேர்க்கணும். இல்லைனா தாய் மாமன் கோவித்துக் கொண்டு கல்யாணத்துக்கே வராமல் போய் விடும் தர்ம சங்கடங்கள் நேரலாம். பெண்ணுக்கோ, பிள்ளைக்கோ முதலில் கல்யாணம் ஆகி இருந்தால் அவங்க இருவர் பெயரோடு அவரவரின் கணவன், மனைவி பெயரையும் போட்டாக வேண்டும். இந்த வம்பெல்லாம் வேண்டாம்னு உற்றமும், சுற்றமும் அப்படினு போட்டுட்டுச் சும்மா இருக்கிறவங்க உண்டு.
இங்கே நம் நண்பர் எல்லாமும் கிரமமாகச் செய்கிறார். தூர தேசங்களில் இருப்பவர்களுக்கும் வெளி மாநிலங்களில் இருப்பவர்களுக்கும் முன் கூட்டியே பத்திரிகையை அனுப்புவதன் மூலம் தன் முன் ஜாக்கிரதையையும் அனைவரும் அப்படியே செய்ய வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டுகிறார். திட்டமிட்டு அனைத்தும் செய்கிறார். பத்திரிகை அனுப்பியவர்கள் பெயரையும் குறித்து வைத்துக் கொள்கிறார். இதன் மூலம் வெளியூர்களில் இருந்தாலும் தங்கள் பிள்ளையின் கல்யாணத்தில் அவர்களும் பங்கேற்கும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துகிறார். உறவுகளை அரவணைத்துச் செல்லும் அவர் போக்கு இங்கே புரிய வருகிறது. அதே போல் உள்ளூர் உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் தானே தன் மனைவியோடு நேரில் சென்று அழைக்கவும் தயாராகிறார்.
இதில் பணச் செலவு மட்டுமில்லை, உடல் சோர்வும் கூடவே இருக்கிறது. ஆனாலும் இவை எதையும் பொருட்படுத்தாமல் யாருக்கும் தொந்திரவாக இல்லாத ஒரு நேரத்தில் தன் பயணத்தை ஆரம்பித்து ஒவ்வொரு வீடாக அழைக்கச் செல்கிறார். ஆட்டோவை வெயிட்டிங்கில் போடுவதில் உள்ள சிரமம், போக்குவரத்து நெரிசலின் தாமதம், ஒருவழிப்பாதை என்பதால் கிட்ட இருக்கும் இடங்களுக்குக் கூடச் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டிய அவஸ்தை என அனைத்தையும் சமாளித்துக் கொண்டு சென்றாலோ செல்ல வேண்டிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பலவற்றில் லிஃப்ட் இல்லை; லிஃப்ட் இருந்தாலும் மின்சாரம் இல்லாமல் இயங்கவில்லை போன்ற தொந்திரவுகள். பெயர்க் குழப்பங்கள், முன் கூட்டிச் சொல்லிவிட்டுச் செல்லாததால் வீட்டில் காண வேண்டிய நபர் இல்லாமை ஆகிய தொந்திரவுகள் நேருகின்றன. அப்படியே காண வேண்டிய நபர்கள் இருந்தாலும் எல்லாருமே ஒரே மாதிரியான வரவேற்பையா கொடுக்கிறார்கள்.
சிலர் தொலைக்காட்சி சீரியல் பார்க்கிறச்சே இவன் என்ன தொந்திரவு என்ற எண்ணத்திலும், இன்னும் சிலர் பத்திரிகையைப் பிரித்தே பார்க்காமல் ஓரமாய்ப் போட்டுவிடுவதும், மனம் இருப்பவர்கள் குடிக்க, சாப்பிட என்று தருவதும், மனமில்லாதவர்கள் குடிக்கத் தண்ணீர் கூடக் கொடுக்காததும் என மாறுபட்ட பல்வேறு அனுபவங்கள். இன்னும் சிலர் இவங்க இன்னும் பல வீடுகள் செல்லணுமே, ஆட்டோ வெயிட்டிங்கில் இருக்கேனு நினைக்காமல் பேசித்தள்ளும் நபர்களாகவும் இருந்தார்கள். எல்லாவற்றையும் விட தொலைக்காட்சிகளில் மூழ்கி இருப்பவர்கள் அரை மனதாகப் பேசுவது தான் இவரை மிகவும் பாதித்திருக்கிறது. அதோடு பிசினஸில் மூழ்கி இருக்கும் நபர் ஒருத்தர் போனதும் வரவேற்று ஒரு வார்த்தை சொன்னதோடு சரி. அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகளைக் கவனிக்கவே அவருக்கு நேரம் சரியாகிறது. இவரைக் கவனிக்கவோ, என்ன விஷயம் எனக் கேட்கவோ அவருக்கு நேரமும் இல்லை. தொலைபேசி அழைப்புகள் அவரைப் பேச விடவும் இல்லை. இப்படியான பலதரப்பட்ட மனிதர்களிடம் பலதரப்பட்ட அனுபவங்கள் போதாது என்று இன்னொரு வீட்டில் பார்க்கவேண்டிய நபரின் இரு தாரங்களும் இல்லாமல் வேறொரு பெண்மணி இருந்ததும், இவர் மனதைக் குடைகிறது.
மனிதர்களில் தான் எத்தனை வகை! உயரம், குள்ளம், குண்டு, ஒல்லி, நடுத்தரம், கறுப்பு, சிவப்பு, மாநிறம் என இருப்பதைப் போல் அவர்களின் குணங்களிலும், நடத்தைகளிலும், வீட்டுக்கு வருகிறவர்களை நடத்தும் முறைகளிலும் எத்தனை எத்தனை மாறுதல்கள்! இத்தனை வேறுபாடுகள் கொண்ட சுவாரசியமான உலகம் ஒன்றைப் பார்த்து நண்பர் மூலமாகவே அனைத்துச் செய்திகளையும் பெற்றுக் கொண்டு பார்த்து ரசிக்கிறார் இந்தக் கதாசிரியர். அதில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளவில்லை ஒரு மூன்றாம் மனிதராகவே அனைத்தையும் பார்த்து வருகிறார். ஆனால் கடைசி வரை அவரால் அப்படி இருக்க முடிந்ததா என்றால் இல்லை.
அங்கே தான் இருக்கிறது முக்கியமான செய்தியே.. "உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு". என்னும் வள்ளுவரின் வாக்கை மெய்ப்பிக்கிறார் நம் கதாசிரியர். ஒரு வழியாக நண்பரின் மகனுக்குக் கல்யாண தினமும் வந்துவிடுகிறது. மண்டபத்துக்கும் வந்துவிடுகிறார் ஆசிரியர். ஆனால் கல்யாணப் பிள்ளையின் தந்தையான இவரின் நண்பரைக் காணவே காணோம். மேடையில் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. ஆண்கள் அரட்டை அடிக்கப் பெண்கள் பட்டுப்புடவையிலும் நகைகளிலும் ஜொலித்துக்கொண்டு அங்குமிங்கும் போய்க் கொண்டிருக்க, அவசரமாய்க் கிளம்புபவர்கள் மொய் எழுதிவிட்டுக் கிளம்பிக் கொண்டிருக்க, பிள்ளையின் தந்தை இருக்குமிடமே தெரியவில்லை. அவரை எல்லா இடமும் தேடிய கதாசிரியர் நண்பரின் மனைவியைக் கேட்க, அவர் இன்னமும் மணமகன் அறையில் இருப்பதாகவும், தன் பிறந்தகத்து மநுஷர்களை அலக்ஷியம் செய்துவிட்டதாகவும் கோபமாகச் சொல்ல விஷயம் என்னவென விசாரித்துத் தெரிந்து கொள்கிறார்.
பிள்ளையின் தாய் மாமா மும்பையில் இருக்கிறார். அவருக்குப் பத்திரிகையைத் தபாலில் அனுப்பிவிட்டுக் கூடவே ஒரு கடிதமும் வைத்துத் தொலைபேசியிலும் சொல்லி இருக்கிறார் நண்பர். இத்தனை அமர்க்களத்தில் மும்பைக்கு ரயிலில் டிக்கெட் எடுத்துக் கொண்டு நேரில் போய் அழைப்பது என்றால் சும்மாவா! ஆகையால் இவ்வளவு முன் ஜாக்கிரதை எடுத்துக் கொண்டு எல்லாமும் செய்தும், தாய்மாமாவுக்கு நேரில் அழைக்காத கோபம். முறுக்கிக் கொண்டு நிற்கிறார். பிள்ளையின் தந்தை எவ்வளவோ சமாதானம் செய்தும் ஒரே முறுக்காக முறுக்கிக் கொண்டு இருக்கிறார். இவர்களுக்கும் வயதாகிவிட்டது; உடல் நலம் சீராக இராது என்பதை எல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க மறுக்கிறார்.
நம் கதாசிரியருக்கு நிலைமை புரிகிறது. "ஆடிக்கறக்கற மாட்டை ஆடிக் கற; பாடிக்கறக்கற மாட்டைப் பாடிக்கற" என்பார்கள். அதற்கேற்ப, மும்பைக்காரர் செல்லும் வழியிலேயே போய் அவரை மடக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு தன் நண்பரைக் கடிந்து கொள்கிறாப்போல் பாவனை செய்கிறார். மும்பை போய் அழைக்காதது மாபெரும் குற்றம் என்கிறாப்போல் பேசவும் மும்பைக்காரருக்கே ஒரு மாதிரி ஆகி விடுகிறது. அதோடு இல்லாமல் மும்பைக்காரர் பெருந்தன்மையோடு இதை மன்னித்துக் கல்யாணத்தில் கலந்து கொள்ள வந்திருப்பதாகவும் அவரைத் தூக்கி வைத்துப் பேச முகஸ்துதிக்கு மயங்காதார் யார்! அப்படியே மயங்கி விடுகிறார். இதுதான் சரியான நேரம் என நம் கதாசிரியரும் அவர் காலில் தம் நண்பர் சார்பாக விழுந்து மன்னிப்புக் கேட்க, ஒரு வழியாய் மும்பைக்காரர் வழிக்கு வந்து விடுகிறார்.
இங்கே தான் நம் ஆசிரியரின் பெருந்தனமை மட்டுமில்லாமல் மனிதர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பதில் அவருக்குள்ள சாமர்த்தியமும் தெரிய வருகிறது. கல்யாணத்தை நிறுத்துவது மும்பைக்காரரின் நோக்கம் இல்லை என்றாலும் அவருடைய ஈகோவானது அவருக்கு முதல் மரியாதை கொடுக்க வேண்டும் என எதிர்பார்த்தது. அது கிடைக்கவில்லை என்றதும் முறுக்கல், வக்கிரம். அதைத் தூண்டி விடுகிறாப்போல் சகோதரியின் பேச்சு. எல்லாமும் சேர்ந்து கொள்ள மனிதர் ஒரேயடியாகக் கோபப்பட்டார். அந்தக் கோபத்தை சாந்தப்படுத்தத் தெரியாமல் விழித்த தம் நண்பரை இவர் சரியான சமயத்துக்குப் போய் அவர் சார்பாகப் பேசிக் கல்யாண நிகழ்ச்சிகளில் மகிழ்வோடு பங்கு பெறும் அளவுக்கு அவர் மனதை வசமாக்கிவிட்டார். இது எல்லாருக்கும் கைவந்த ஒன்றல்ல. இங்கே அவர் மட்டும் அப்படி நடந்திராவிட்டால் கல்யாணத்தில் தேவையில்லா மனக்கசப்பும், வருத்தமும் நேரிட்டிருக்கும்.
நான் தான் உசத்தி, நீ என்ன என்னை விட உசத்தியா என்றெல்லாம் நினைக்காமல், அப்படியெல்லாம் பேசாமல் நண்பருக்காகத் தன்னைத் தாழ்த்திக் கொண்டு காலில் விழுந்து நமஸ்காரமும் பண்ணி ஒருவரை வழிக்குக் கொண்டுவருவது என்பது சாதாரணமாக நடக்கும் ஒன்றல்ல. உண்மையில் மிகப் பெரிய மனம் வேண்டும். அடக்கம் வேண்டும். விநயம் வேண்டும். இவை அனைத்தும் கைவரப் பெற்ற நண்பரைப் பெற்ற கல்யாணப் பிள்ளையின் அப்பா உண்மையில் பாக்கியசாலியே! கதாசிரியருக்கும் சேர்த்து மும்பைக்கு விருந்தினராக வரும்படி அழைப்பும் கிடைக்கிறது. கல்யாணமும் சுமுகமாக நடைபெற வழி செய்தாயிற்று. கல்யாணத்தில் சந்தோஷத்துக்குக் குறைவிருக்காது.
பொருத்தமான இடங்களில் பொருத்தமான படங்களையும் சேர்த்துக் கதை அழகுக்கு அழகு செய்திருக்கிறார். அதிலும் வாஷிங்டனில் திருமணம் படங்கள் பிரமாதம். எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காது.
வென்றுள்ள மற்றொருவர்:
தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டு
ஐந்தாவது சுற்றிலும்
முன்னனியில் நிற்கும்
களம்பூர் திரு.
வலைத்தளம்
http://gperumal1974.blogspot.in/
ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்
களம்பூர் திரு.
G. பெருமாள் செட்டியார்
அவர்களின் விமர்சனம் இதோ:
[ To make the letters in BOLD size to easily read,
Click here first and then Press
'Control and Plus' Buttons simultaneously.
Do it again and again to get more & more BIG Size of Letters.
At last Press 'Control and Minus' Buttons to bring it to Normal Size. - VGK ]
Click here first and then Press
'Control and Plus' Buttons simultaneously.
Do it again and again to get more & more BIG Size of Letters.
At last Press 'Control and Minus' Buttons to bring it to Normal Size. - VGK ]
மிகக்கடினமான இந்த வேலையை
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி
இரண்டாம் பரிசுத்தொகை இவ்விருவருக்கும்
சரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது
.
இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள
மற்றவர்கள் பற்றிய விபரங்கள்
தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர
இடைவெளிகளில் வெளியிடப்படும்.
அனைவரும் தொடர்ந்து
ஒவ்வொரு வாரப்போட்டியிலும்
உற்சாகத்துடன் பங்கு கொண்டு
சிறப்பிக்க வேண்டுமாய்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOooooo
இந்த வார சிறுகதை
விமர்சனப் போட்டிக்கான
கதையின் தலைப்பு:
VGK-18
ஏமாற்றாதே ! ஏமாறாதே
ஏமாற்றாதே ! ஏமாறாதே
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
இரண்டாம் பரிசினை வென்றுள்ள திருமதி கீதா சாம்பசிவம்
பதிலளிநீக்குஅவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..!
இரண்டாம் பரிசினை வென்று தான் பெற்ற
பதிலளிநீக்குஹாட்-ட்ரிக் பரிசினை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்ட
ஐந்தாவது சுற்றிலும் முன்னனியில் நிற்கும்
களம்பூர் திரு.G. பெருமாள் செட்டியார் ஐயா அவர்களின் பிரமிக்கத்தக அருமையான விமர்சனத்திற்கு பாராட்டுக்கள்..இனிய வாழ்த்துகள்..!
அற்புதமான பெருமாள் செட்டியாரின் விமரிசனத்தோடு என்னுடையதும் பரிசு பெற்றிருப்பதை நினைத்தால் ஆச்சரியமாகவே இருக்கிறது. பெருமாள் செட்டியாருக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபரிசு பெற்ற திருமதி. கீதா சாம்பசிவம்
பதிலளிநீக்குஅவர்களுக்கு வாழ்த்துக்கள் !
சிறந்த கதையினைப் படைத்து ,
என்னை எழுதத் தூண்டிய
கதாசிரியர் அவர்களுக்கும்,
என்கருத்தினையும் , எழுத்துக்களையும்
பரிசுக்கு உகந்ததாகத் தேர்ந்தெடுத்த
நடுவர் அவர்களுக்கும் ,
மனமார்ந்த நன்றிகள் !
http://gperumal74.blogspot.in/2014/05/blog-post_17.html
பதிலளிநீக்குகளம்பூர் திரு. G. பெருமாள் செட்டியார் அவர்கள்
இந்த வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
கீதா மேடம் அவர்களுக்கும், திரு. பெருமாள் செட்டியார் அவர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபரிசு பெற்ற திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கும், திரு. பெருமாள் செட்டியார் அவர்களுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்!! தொடரட்டும் உங்களது வெற்றிகள்!
பதிலளிநீக்குஇரண்டு மாறுபட்ட விமர்சனங்களை எழுதி இரண்டாம் பரிசுக்குரியவர்களாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி கீதா சாம்பசிவம் மேடம் அவர்களுக்கும் திரு.பெருமாள் செட்டியார் அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇரண்டாம் பரிசு பெற்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் திரு பெருமாள் அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇரண்டாம் பரிசினை வென்ற திருமதி கீதா சாம்பசிவம் மேடம் அவர்களுக்கும் திரு.பெருமாள் செட்டியார் அவர்களுக்கும் பாராட்டுகள்.
பதிலளிநீக்குபரிசு வென்ற கீதாசாம்பசிவம்மேடம் பெருமாள்செட்டியார் அவர்களுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குஇரண்டாம் பரிசை வென்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் ரொம்ப வித்தியாசமாக யோசித்து விமர்சனம் எழுதும் திரு பெருமாள் செட்டியார் அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குJayanthi Jaya September 29, 2015 at 3:14 PM
நீக்கு//இரண்டாம் பரிசை வென்ற திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் ரொம்ப வித்தியாசமாக யோசித்து விமர்சனம் எழுதும் திரு பெருமாள் செட்டியார் அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//
:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ ! :)
பரிசு வென்ற திருமதி கீதாசாம்பசிவம் திரு பெருமாள் செட்டியாரவங்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதிருமதி கீதா சாம்பசிவம் திரு பெருமாள் செட்டியார் அவர்களுக்கு வாழ்த்துகள் இருவரின் விமரிசனமுமே நல்லா இருக்கு.
பதிலளிநீக்கு;-))))
பதிலளிநீக்குபரிசுபெற்றவர்களுக்கு பாராட்டுகள்! மேலும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்
பதிலளிநீக்கு