என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 19 மே, 2014

VGK-01 TO VGK-15 :: ’HAT-TRICK PRIZE WINNERS’ LIST AS A WHOLE !

   
 விமரிசனங்களுக்கான விமரிசனம்.            
      
  

 ?  
 
         
       
 நடுவர் அவர்களின் குறிப்பு 


ழகு படுத்தப் படுத்த எதற்குமே ஒரு ஜொலிப்பு கூடத்தான் செய்கிறது.  எழுத்தும் இதற்கு விதிவிலக்கல்ல.  அந்த அழகுபடுத்தலின் விளைவாகத் தான் எழுதுதலின் வடிவங்களும் வெவ்வேறு உருக்கொள்கின்றன.

சிறுகதைகள் எழுதுவதில் தான் எத்தனை வடிவங்கள்?..

எழுத்தாளரே கதையைச் சொல்கிற மாதிரியான பாணி ரொம்ப அதரப்பழசான பாணி. நாளாவட்டத்தில் கதையை எழுதும் எழுத்தாளன் கதையின் போக்கில் வாசிப்பவர்களுக்கு தெரிகிற மாதிரி. வாசிப்பதின் அமைதியைக் குலைக்கிற மாதிரி வெளிப்பட தான் குறுக்கிடாமல் விலகியிருந்து  ஒரு பொம்மலாட்ட இயக்கம் போல கதாபாத்திரங்களை ஆட்டிப் படைக்கும் முறை வந்தது.

பிறகு தான் கடிதங்களாய் கதை சொல்லுதல்,  கதையின் கதாபாத்திரங்கள் தாங்களே பேசுவது போல கதையை வடித்தல்,  கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலமாகவே கதையை நகர்த்துதல்,  நிகழ்வுகளின் கோர்த்தல்  கதையாக வடிவம் கொள்ளுதல் என்று சிறுகதைகளின் வடிவங்கள் காலந்தோறும் பல மாற்றங்களைக் கொண்டன.

சிறுகதைகளைப் போல வடிவங்களில் பல வெரைட்டிகள் இல்லாவிடினும் விமரிசனங்களை எழுதுவதிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.   அவற்றில் ஒன்று தான் வேறுபட்ட கோணங்களில், தான் விமரிசிக்க எடுத்துக் கொண்ட பொருளை (கதையை) அலசுவது.

இப்படியான பாணி, எதுபற்றியும் விமர்சிப்பதில் அற்புதமான வடிவம்; விமர்சிப்பவரின் சுய திறமைக்கு வடிகால் காணுகின்ற சுகமான வடிவம்.

விமர்சனங்களை இந்த வடிவில் அமைப்பது ரொம்ப சிரமமான காரியம்.  அதற்கு நிறைய பயிற்சி வேண்டும்.  குறிப்பாக இந்த மாதிரியான வடிவத்தில் விமர்சகர் தான் விமர்சிக்கும் கருத்துக்களை தன் விமர்சனத்தில் பதிப்பது முக்கியம்.

ஷொட்டோ, குட்டோ அது விமரிசனக் கருத்தாய் பதியவில்லை என்றால் பொட்டில்லா நெற்றி போல வெறுமையாய் தோற்றமளிக்கும்;  தண்ணீரில் சொட்டிய எண்ணைத் துளி போல தனித்துத் தோற்றமளிக்கும்;  எவ்வளவு சிறப்பாக விமரிசனத்தை வடித்திருந்தாலும் எழுத எடுத்துக் கொண்ட பொருளிலிருந்து விலகி தனிக்கச்சேரி நடத்தியது போலத் தோற்றம் கொள்ளும்.  

இன்னொன்று. விமரிசனம் எழுத எடுத்துக் கொண்ட கதையையே வேறு வடிவங்களில் கவிதை, உரையாடல் என்று விமரிசன லேபிள் தரித்துச் சொல்வதும் விமர்சனமாகாது. கவிதை, உரையாடல் போன்ற வேறு வடிவங்களில் சொல்லும் பொழுது அப்படிச் சொல்லும் வடிவங்களில் விமரிசனக் கருத்துக்கள் வருகிற மாதிரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படியான குறைகள் இருப்பினும் எழுத எடுத்துக் கொண்ட சிரமத்திற்காகவும் எழுதியவரின் எழுத்துத் திறமைக்காகவும் இதுகாறும் பரிசுக்குத் தேர்வாயின.

இப்பொழுது நிலைமை என்னவென்றால்,  இப்படி எழுதினால் தான் தேர்வாகும் என்கிற எண்ணத்தினாலோ என்னவோ நிறைய இந்த மாதிரியான வடிவம் கொண்ட விமரிசனக் கட்டுரைகள் வர ஆரம்பித்து விட்டன.

வை.கோ.சாரின் கதைகளை விமர்சிக்கிற  விதத்தில் இந்த மாதிரியான வேறுபட்ட கோணங்களில் எழுதும் விமரிசனங்களை அமைத்தால் அது அற்புதமாக இருக்கும்.  அது தவறின், இந்தப் போட்டிக்கு சம்பந்தமில்லாத தனிப்படைப்பாய் அவை அமைந்து விடுகிற ஆபத்து இருக்கிறது.

கோபு சாரின் சிறுகதைகளுக்கான விமரிசனப் போட்டி என்று ஆரம்பித்து இராம காதையில் அணிலின் உதவி போல் தமிழில் 'விமர்சனக்கலை'யை வளர்க்கும் சின்னஞ்சிறிய வாய்ப்பாக இந்தப் போட்டிப்பகுதி உருவாகியிருப்பதால்,  வரும் விமர்சனங்களை வாய்க்கால் திருத்தி வழிபடுத்த ஒரு நெறியாக இதைக் கொள்ள வேண்டியிருக்கிறது.

விமர்சக அன்பர்கள் கோபு சாரின் நல்முயற்சிக்கு தங்கள் எழுத்துத் திறமையோடு துணையாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கை என்றும் உண்டு.

மென்மேலும் சிறப்பான விமரிசனங்களை அனுப்பி வைத்து இந்தப் போட்டிப் பகுதியை மேலும் சிறப்பிக்க கோபு சாரின் சார்பில் வேண்டுகிறேன்.

    
oooooOooooo

’விமரிசனங்களுக்கான விமரிசனம்’
என்ற தலைப்பில் அனைவருக்கும்
பயன்தரும் விதமாகக் குறிப்புகள் வழங்கியுள்ள 

உயர்திரு நடுவர் அவர்களுக்கு 
அனைவர் சார்பிலும் 
என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரியமுள்ள கோபு 

oooooOooooo
 இதுவரை முதல் பதினைந்து சிறுகதைகளுக்கான 
விமர்சனப் போட்டி பரிசு முடிவுகள் 
முற்றிலுமாக வெளியிடப்பட்டுள்ளன.

  [[
சிறுகதை விமர்சனதாரர்களா  ..... கொக்கா ! இதுவரை ஹாட்-ட்ரிக்
வெற்றியாளர்கள் 
பட்டியலில் உள்ளோர் :

 


[ 1 ]

 கீதமஞ்சரி  
            திருமதி     
 கீதா மதிவாணன்     

அவர்கள்

[VGK-07 To VGK-12] 

தொடர்ச்சியாக அடுத்தடுத்து  

 6  முறைகள் வெற்றி !

[ அதற்கு மேலும் இருமுறை 
VGK-13 and VGK-14 போட்டிகளிலும் 
உபரியாக / தொடர்ச்சியாக
வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதும் 
குறிப்பிடத்தக்கது ]

 
 
    

 The Very First Winner of the 
Highest Hat-Trick Prize ! 

தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஆறுமுறைகள் வெற்றி பெற்றதற்காக
சாதாரண ஹாட்-ட்ரிக் பரிசுத்தொகையினைப்போல 
நான்கு மடங்கு பரிசுத்தொகையினை 
முதன்முதலாகப் பெற்றுள்ளார்கள் .  

[ ஹாட்-ட்ரிக் பரிசின்  நிபந்தனைகளின் கீழ்வரும் 
அதிகபட்சப் பரிசுத்தொகை இதுவே ஆகும் ]

இதே போட்டியில் தொடர்ந்து கலந்துகொண்டு
இவர்களே மீண்டும் பல ஹாட்-ட்ரிக் பரிசுகள் பெறவும்
இன்னும் வாய்ப்புகள் உள்ளன.


 
[ 2 ] 

களம்பூர் திரு.

 பெருமாள் செட்டியார்  

அவர்கள்.[VGK-11 To VGK-15]

தொடர்ச்சியாக அடுத்தடுத்து 
ஐந்து முறைகள் வெற்றி.

 
  

This Hat-Trick Prize amount will be fixed later according to his 
further continuous success in VGK-16.

For further details please refer:

 
[ 3 ]

  திரு.    ர ம ணி   அவர்கள் [VGK-01 To VGK-04]

தொடர்ச்சியாக அடுத்தடுத்து 
நான்கு முறைகள் வெற்றி


   

   
  
[ 4 ] 

திருமதி. 


 இராஜராஜேஸ்வரி  

அவர்கள்  
[VGK-12 To VGK-15] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 
நான்கு முறைகள் வெற்றி


    

  
This Hat-Trick Prize amount will be fixed later according to her 
further continuous success in VGK-16 and VGK-17.


 

[ 5 ]

திருமதி. 

 இராஜராஜேஸ்வரி   


அவர்கள்

  [VGK-04 To VGK-06] 

தொடர்ச்சியாக அடுத்தடுத்து 
மூன்று முறைகள் வெற்றி

  


   

[ 6 ] 

திருமதி. 

 இராஜராஜேஸ்வரி  

அவர்கள் 

[VGK-08 To VGK-10] 

தொடர்ச்சியாக அடுத்தடுத்து 
மூன்று முறைகள் வெற்றி


  

   
[ 7 ] 

திரு. 

   E.S. சேஷாத்ரி   

(காரஞ்சன் - சேஷ்) அவர்கள்[ VGK-10 To VGK-12 ] 

தொடர்ச்சியாக அடுத்தடுத்து 
மூன்று முறைகள் வெற்றி

  

  
   

[ 8 ] 

திருமதி

 ராதாபாலு  

அவர்கள்[ VGK-10 To VGK-12 ] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 
மூன்று முறைகள் வெற்றி

  

 
[ 9 ]

திரு. ரவிஜி 


[ மாயவரத்தான் எம்.ஜி.ஆர். ] 
அவர்கள்.

[ VGK-13 To VGK-15 ] 


தொடர்ச்சியாக அடுத்தடுத்து 
மூன்று முறைகள் வெற்றி

  

  This Hat-Trick Prize amount will be fixed later according to his 
further continuous success in VGK-16, VGK-17 and VGK-18

For further details please refer:

 


அனைவருக்கும் 
நம் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 
அன்பான இனிய நல்வாழ்த்துகள்

 

இந்தப்பட்டியலில் அடுத்தது யார் ?

இதைப்படித்துக்கொண்டிருக்கும்

நீங்களாகவும் இருக்கலாம் !


oooooOooooo


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOoooooஇந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
இணைப்பு: 
கதையின் தலைப்பு:


VGK - 18


” ஏமாற்றாதே ! ஏமாறாதே !!  ” விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 


22. 05. 2014  


இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.


என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

26 கருத்துகள்:

 1. விமரிசனத்துக்கு விமரிசனம் சிறப்பாக இருந்தது. ஹாட் ட்ரிக் பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து முன்னிலையில் இருக்கவும் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 2. போச்சானு தெரியலை. இன்னொரு முறை! :)

  விமரிசனத்துக்கு விமரிசனம் சிறப்பாக இருந்தது. ஹாட் ட்ரிக் பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து முன்னிலையில் இருக்கவும் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 3. திருமதி .கீதா மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  திரு. பெருமாள் செட்டியார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  திரு. ரமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  திரு. சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  திருமதி. ராதாபாலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  திரு. ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 5. விமரிசனங்களுக்கான விமரிசனம்’
  என்ற தலைப்பில் அனைவருக்கும்
  பயன்தரும் விதமாக ஜொலிக்கும் குறிப்புகள் வழங்கியுள்ள
  நடுவர் அவர்களுக்கு பாராட்டுக்கள்..

  எந்த வித்தியாச வடிவில் விமர்சனம் எழுதினாலும் அது கதையை மையப்படுத்தியதாக அமைய வேண்டும் ..

  பாதையை விட்டு விலகிய பயணம் இலக்கை சென்று அடைவதில்லையே..!

  பதிலளிநீக்கு
 6. HAT-TRICK WINNERS - VGK-01 TO VGK-15
  அனைவருக்கும் வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 7. நல்ல யோசனைகள் ஐயா... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 8. விமரிசனம் எழுதும் முறையைத் தெளிவுபடுத்திய நடுவருக்கு நன்றி.

  'ஹாட் ட்ரிக்' பரிசு பெற்றவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. தொடர் வெற்றியாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துகள்! ஆலோசனை வழங்கிய நடுவர் ஐயா/அம்மா அவர்களுக்கும், தொடர்ந்து அனைவரையும் ஊக்கப்படுத்தி வரும் திரு. வை. கோ. ஐயா அவர்களுக்கும் எனது நன்றி

  பதிலளிநீக்கு
 10. நடுவர் அவர்கள் குறிப்பு மிக அருமை.
  நடுவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  அனைவருக்கும் இப்படி அழகான வாய்ப்பை அளித்து எழுத உற்சாகம் அளித்து பரிசும் பாராட்டும் அளிக்கும், சாருக்கு நன்றியும், வாழ்த்துக்களும்.

  பதிலளிநீக்கு
 11. அனைவருக்கும் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
  Killergee
  www.killergee.blogspot.com

  பதிலளிநீக்கு
 12. 'உயர்திரு' என்று வை.கோ.சார் அவ்வப்போது குறிப்பிடுவதால் நடுவர் ஆணாகத் தான் இருக்க வேண்டும் இத்தனை நாளும் மேம்போக்காக நினைத்திருந்தேன்

  'ஆலோசனை வழங்கிய நடுவர் ஐயா/அம்மா அவர்களுக்கு; என்று
  RAVIJI RAVI குறிப்பிட்டிருப்பதை படித்த பிறகு தான் என் தவறு தெரிந்தது. 'உயர்திருமதி' என்று அழைக்கும் வழக்கம் தான் புழக்கத்தில் இல்லையே! .அவர் சந்தேகம் சரி தான்.

  பதிலளிநீக்கு
 13. ஹாட் ட்ரிக் பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. 'ஹாட் ட்ரிக்' பரிசு பெற்றவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்! இவைகள் அனைத்துக்கும் காரணமான வை கோ சாருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 15. நடுவர் அவர்களின் இந்த அழகான அருமையான வழிநடத்தல் உரை மிகவும் பயனுள்ளதாய் உள்ளது. ஏராளமாய் வரும் பலவிதமான விமர்சனங்களிலிருந்து உரியவற்றைத் தேர்ந்தெடுப்பதென்பது மிகவும் பொறுமையுடனும் பொறுப்புடனும் ஆற்றவேண்டிய அரும்பணி. அதை சிரத்தை மாறாமல் செய்வதுடன், விமர்சகர்களை வழிதவறாமல் சரியான பாதையில் பயணிக்கத் தக்க அறிவுரைகளும் பயனுள்ள குறிப்புகளும் தந்து உதவும் அவர்களுடைய பெருந்தன்மைக்கு மிக்க நன்றி.

  தொடர்பரிசுகள் பெற்று தொடர்ந்துவரும் நட்புகள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. விமர்சகருக்குத் தேவைப்படும் பயனுள்ள குறிப்புகள் தந்த நடுவர் அவர்களுக்கு நன்றி!

  ஹாட்-ட்ரிக் பரிசாளர்கள் அருமையான தொகுப்பு!

  பதிலளிநீக்கு
 17. ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் அனைவரும் மேலும் மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 18. பெயரில்லா22 மே, 2014 அன்று PM 1:43

  விமரிசனத்துக்கு விமரிசனம் சிறப்பாக இருந்தது. ஹாட் ட்ரிக் பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
  Vetha.Elanagthilakam.

  பதிலளிநீக்கு
 19. ஹாட்-ட்ரிக் பரிசாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 20. ஹாட ட்ரிக் வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்

  பதிலளிநீக்கு
 21. பரிசு மேல பரிசு வந்து கொட்டிய நேரம் அது.

  திருமதி .கீதா மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  திரு. பெருமாள் செட்டியார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  திரு. ரமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  திரு. சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  திருமதி. ராதாபாலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  திரு. ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya September 29, 2015 at 3:18 PM

   //பரிசு மேல பரிசு வந்து கொட்டிய நேரம் அது. //

   ஜெயமடைய, ஜெயத்துடனான, ஜெயாவின் பின்னூட்டம் மேலே பின்னூட்டமாக வந்து கொட்டிடும் நேரம் இது.

   :))))) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா :)))))

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 22. ஹாட் ட்ரிக் பரிசு வென்றவங்களுக்கு அல்லாம் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 23. விமரிசனத்துக்கு விமரிசனம் நல்லா இருக்கு. ஹாட் ட்ரிக் பரிசு வென்றவர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 24. வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள். அக்கவுண்ட்ட எப்பவோ ஓபன் பண்ணிட்டாங்க போல. நாந்தேன் லேட்டு..!!

  பதிலளிநீக்கு
 25. ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு