என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 26 மே, 2014

VGK 17 / 03 / 03 - THIRD PRIZE WINNER - 'சூழ்நிலை’






’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 


’ VGK 17 -  சூழ்நிலை ! ’



  




எதையும் தாம் ஒருவரே தீர்மானிக்கலாம் என்று ஒரு குடும்பத்தில் சிலர் அமைந்து விடுவதில் நன்மைகளும் உண்டு; தீமைகளும் உண்டு.  எல்லாம் அந்தந்த சூழ்நிலைகளை அவரவர் கையாள்வதைப் பொருத்திருக்கிறது.  உடனடி நன்மைகள் நீண்ட கால தீமையை தன்னுள் ஒளித்து வைத்திருப்பதும் உண்டு.  எது எப்படியாயினும், நம்மை அழுத்தும் சில சூழ்நிலைகளுக்கு கைதியாக வேண்டாம்; சுதந்திர புருஷராகவும் செயல்படலாம் என்பதற்கு இந்தக் கதையின் நாயகன் எடுத்துக் காட்டோ?....


 



மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 








நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  



ஐந்து







இந்தியத் தொலைகாட்சி 
வரலாற்றிலேயே 
முதன் முறையாக .... 
என்று ஏதேதோ சொல்வார்களே !

அதேபோல இதையும் படிக்கலாம். ;)

-oOo-

இந்த சிறுகதை விமர்சனப்போட்டி
வரலாற்றிலேயே முதல் முறையாக
இந்த VGK-17 ’சூழ்நிலை’ சிறுகதை 
விமர்சனங்களுக்கான பரிசுகள் அனைத்தையும்
முற்றிலும் பெண்கள் அணி மட்டுமே
பெற்றுள்ள ’சூழ்நிலை’ ஏற்பட்டுள்ளது.

மகத்தான மங்கையர் அணிக்கு நம் 
ஸ்பெஷல் பாராட்டுக்கள் + 
இனிய நல்வாழ்த்துகள்.

-oOo-

அன்புள்ள ஆண் விமர்சனதாரர்களே ! 

இது உங்களுக்கு அவர்கள் விடுத்துள்ள ஓர் சவால் அல்லவா!!

இனியாவது உஷாராகச் செயல்படுங்கள் !!!




’விழுவது மீண்டும் எழுவதற்காகவே ’

எனத் தன்னம்பிக்கையோடு செயல்படும் 

இந்தக்கிளியைப் பாருங்கோ! ;)))))

-oOo-






இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 






  


மற்றவர்களுக்கு: 







    

மூன்றாம் பரிசினை 

முத்தாக வென்றுள்ளவர் 


திருமதி



 ராஜலக்ஷ்மி பரமசிவம் 


அவர்கள்






திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்



rajalakshmiparamasivam.blogspot.com


வலைத்தளம்: “அரட்டை”

 


முத்தான மூன்றாம் பரிசினை வென்றுள்ள


திருமதி.





 ராஜலக்ஷ்மி பரமசிவம் 





அவர்களின் விமர்சனம் இதோ:




கதையின் நாயகன்  மகாலிங்கம்  சுற்றியே இந்தக் கதை செல்கிறது. முதலில் படிக்க ஆரம்பிக்கும் போதே ஒரு துக்க செய்தி மகாலிங்கத்திற்கு போனில் செய்தி வருகிறது. அதற்குக் குஷியாக சிரித்துக் கொண்டே பதில் சொல்வதைப் 
பார்க்கும் போது வாசிக்கும் நானும் மகாலிங்கத்தின் குணாதிசயங்களில் 
குற்றம் கண்டேன். இப்படியும் ஒரு மனிதரா! என்கிற கோபம் தான் வந்தது. ஏன் 
இப்படிப் பேசுகிறார் என்கிற சந்தேகம் அவர் மகள் ஜெயாவிற்கு மட்டுமல்ல 
எனக்கும் தோன்றியது. மரணம்  நம் விரோதிக்கே நேர்ந்தாலும், மனம் ஒரு சில 
நிமிடங்கள் பதைபதைக்குமே! மஹாலிங்கத்திற்கோ இறந்து போனது அவர் மாமனார். 
மாமனாரிடம் மாப்பிள்ளைக்கு எவ்வளவோ  மனஸ்தாபம் இருக்கலாம். னால் அதற்காக 
 இப்படியா....... மனிதாபிமானமே இல்லாதவராயிருக்கிறாரே என்று தோன்றும்படி 
கதையை ஆரம்பித்திருக்கிறார் ஆசிரியர். நமக்கே அவர் மேல் இவ்வளவு கோபம் 
வரும்போது  அவர் மனைவி ஈஸ்வரிக்கு அவர் மேல் பயங்கரக் கோபம் வந்ததில் 
வியப்பில்லை தான்.

துக்க வீட்டில்   தன மாமனாரின் இறுதிச் சடங்குகளை  செய்வதில் இவர் பங்கு 
தான் அதிகம்  என்பதை  ஈஸ்வரி உணரும்படி  செய்திருந்தால் அவளின் கோபம் 
குறைந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் துக்க வீட்டில் இருவரும் மனம் 
விட்டுப் பேசமுடியாத நிலைமை. அதனால் தான் ஈஸ்வரி  தன கணவனைப் பற்றி ஒரு 
தவறான அபிப்பிராயம் கொண்டிருந்திருக்கிறாள்  என்பதைப் பூடகமாக ஆசிரியர் 
உணர்த்தினாலும், கதையின் விறுவிறுப்பில்  அந்த செய்தி காணாமல் போய் 
விடுகிறது. இரண்டாவது முறைப் படிக்கும் போது தான் அதை உணர்ந்தேன்.


மகாலிங்கம் நடந்து கொள்வதற்கு வேறு காரணம் இருக்கிறது என்பதை 
வெளிப்படையாக சொல்லாமல் அதே சமயம் உணர்த்தும் விதமாக ஓரிரு வரி 
எழுதியிருப்பது  கதையின் சஸ்பென்ஸ் வெளிவராமல்  தடுத்தது  எனலாம்.


அதற்காக  ஆசிரியருக்கு  ஒரு " சபாஷ் " போட்டேயாக வேண்டும்.

சஸ்பென்ஸ்  ஈஸ்வரி டெல்லி போகும் வரை  அப்படியே காக்க வேண்டிய அவசியத்தை 
உணர்ந்த கதாசிரியர் ஈஸ்வரியின் கோபத்தை பயன்படுத்தி அவள் 
மகாலிங்கத்திடம் பேசாமல் பார்த்துக் கொண்டார் எனலாம். ஏன் கோபு சார், 
உங்கள் சஸ்பென்சைக் காப்பாற்ற இந்தத் தம்பதியை ஒரு மாதம் பேசிக் 
கொள்ளாமல் செய்து விட்டீர்களே! நியாயமா  சார் இது!

மீண்டும் தம்பதிகள்  டில்லியில் சந்திக்கும் போது தான் ஈஸ்வரிக்கு 
உண்மைத் தெரிய வருகிறது. அவருக்கு தன் தந்தையின் மரணம் பற்றிய செய்தி 
கிடைக்கும் போது, மகளின் திருமணம் பற்றி மாப்பிள்ளை வீட்டினருடன் பேசிக் 
கொண்டிருந்திருக்கிறார் என்பதும், தன தந்தையின் இறுதிச் சடங்கிற்கும்  தன் 
கணவரின் உதவி மிகப்பெரிய அளவில்  இருந்திருக்கிறது என்பது புரிந்ததும் 
ஈஸ்வரி தன் தவறை உணர்கிறாள்.

ஈஸ்வரிக்கு மட்டுமல்ல, வாசகர்களாகிய நமக்கும்  அப்பாடி..... மஹாலிங்கம் 
மோசமானவரில்லை என்பது பெரிய  திருப்தி அளிக்கிறது. பாவம்...... அவர் ஒரு 
சூழ்நிலைக் கைதி மட்டுமே  என்பது நமக்கு மட்டுமல்ல ஈஸ்வரிக்கும், ஏன் 
அவர் மகள் ஜெயாவிற்கும் புரிகிறது.

ஈஸ்வரி தன் கணவனைப் பற்றித் தவறாக நினைக்க வைத்ததும் அவளுடைய 
சூழ்நிலையே. அதனால் ஈஸ்வரியை மன்னித்து விடலாம்..

ஒரு சின்னக் கருவை எடுத்துக் கொண்டு கதையைத் தொய்வில்லாமல், சஸ்பென்சை 
இறுதிவரைக் கொண்டு சென்று ஒரு அருமையான கதைக் கொடுத்த ஆசிரியரை  எத்தனைப் 
பாராட்டினாலும் தகும். அது மட்டுமல்லாமல் துக்க நிகழ்ச்சியில் 
ஆரம்பித்தக் கதையை மங்களகரமாக முடித்து வைத்ததற்கு மிக்க நன்றி கோபு சார்.

பாராட்டுக்கள் கோபு  சார்!


 










மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


இனிய நல்வாழ்த்துகள்.





    



   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.










இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.



காணத்தவறாதீர்கள் !






அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



VGK-19



' எட்டாக்க(ன்)னிகள் '





விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


29.05.2014  


இந்திய நேரம் 



இரவு 8 மணிக்குள்.















என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

19 கருத்துகள்:

  1. திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம், வணக்கம்.

    தாங்கள் என் கதைகளுக்கு விமர்சனங்கள் எழுதி அனுப்பும் போது தயவுசெய்து நேரிடையாக மெயிலில் டைப் செய்து அனுப்பவும்.

    வேறு எதிலோ டைப் செய்து Copy + Paste போடுகிறீர்கள் என நினைக்கிறேன். அதுபோலத் தாங்கள் செய்வதால், நான் அதை வெளியிடும்போது Font-Size Mis-match ஆகிவிடுகிறது. எழுத்துக்கள் சீராக இல்லாமல் உடைந்து உடைந்து Justify ஆகாமல் போய் விடுகின்றன. நான் ஏதேதோ செய்து பார்த்ததில் இப்போது மிகப்பொடிப்பொடியாக எழுத்துக்கள் தோற்றமளிக்கின்றன. அதுவும் சரியாக Justify ஆகாமல், அழகாக அமையாமல், திருப்தியாக இல்லாமல் உள்ளன.

    இனிமேலாவது அனுப்பும்போது இவைகளை தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும்.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  2. மகத்தான மங்கையர் அணிக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்
    இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. மூன்றாம் பரிசினை முத்தாக வென்றுள்ள :
    திருமதிராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு
    இனிய வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  4. சஸ்பென்சைக் காப்பாற்ற, திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அம்மா அவர்களின் நியாயமான கேள்வியுடன் விமர்சனம் அருமை... அவருக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. நல்ல விமர்சனம்.

    சூழ்நிலைக் கைதிகளாகத் தான் பல சமயங்களில் இருக்கிறோம் - ஆனாலும் அதை மற்றவர்கள் புரிந்து கொள்வதில்லை!

    மூன்றாம் பரிசு பெற்ற திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. திறமையான விமர்சனம் எழுதி பரிசு பெற்ற
    திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும்,
    அடுத்ததாக பரிசு பெறப்போகும் மகளிர் அணிக்கும்
    பாராட்டுக்கள் ! மேலும் பல வெற்றிகளை குவித்திட
    வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  7. இங்கு வந்து வாழ்த்திய நண்பர்களுக்கும், வாழ்த்தப் போகும் நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

    பரிசு பெற வாய்ப்பளித்த கோபு சாருக்கும், பரிசு கொடுத்த நடுவர் அவர்களுக்கும் எனது நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  8. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. றாஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. மூன்றாம் பரிசினைப் பெற்ற சகோதரி ராஜலஷ்மி பரமசிவம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. திருமதி ராஜலஷ்மி பரமசிவம் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. திருமதிராஜலஷ்மிபரமசிவம் அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  13. //ஏன் கோபு சார்,
    உங்கள் சஸ்பென்சைக் காப்பாற்ற இந்தத் தம்பதியை ஒரு மாதம் பேசிக்கொள்ளாமல் செய்து விட்டீர்களே! நியாயமா சார் இது!//

    அதானே. ஆனா நம்மால ஒரு நொடி கூட வீட்டய்யா கிட்ட பேசாம இருக்க முடியலயே. 32 வருஷத்துல சண்டை போட்டு (சின்னதா அதெல்லாம் உண்டு) ஒரு நொடி இல்ல இல்ல அரை நொடி, கால் நொடி கூட பேசாம இருந்ததில்லயே.

    இது நியாயமா? சரியான கேள்விதான்.

    மூன்றாம் பரிசினைப் பெற்ற சகோதரி ராஜலஷ்மி பரமசிவம் அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya October 15, 2015 at 1:41 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      **ஏன் கோபு சார், உங்கள் சஸ்பென்சைக் காப்பாற்ற இந்தத் தம்பதியை ஒரு மாதம் பேசிக்கொள்ளாமல் செய்து விட்டீர்களே! நியாயமா சார் இது!**

      - ‘அரட்டை’ பதிவர் திருமதி. ராஜலெக்ஷ்மி பரமசிவம் அவர்கள் தன் விமர்சனத்தில்.

      -=-=-=-=-=-=-

      //இது நியாயமா? சரியான கேள்விதான்.

      மூன்றாம் பரிசினைப் பெற்ற சகோதரி ராஜலஷ்மி பரமசிவம் அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      -=-=-=-=-=-=-

      //அதானே. ஆனா நம்மால ஒரு நொடி கூட வீட்டய்யா கிட்ட பேசாம இருக்க முடியலயே. 32 வருஷத்துல சண்டை போட்டு (சின்னதா அதெல்லாம் உண்டு) ஒரு நொடி இல்ல இல்ல அரை நொடி, கால் நொடி கூட பேசாம இருந்ததில்லயே.//

      :) ஆஹா .... நீங்க மிகவும் பாக்யவதிதான் / கொடுத்து வைத்த மகராஜிதான் :) இப்படியே சண்டை சச்சரவு இல்லாமல் பேசிக்கொண்டே எப்போதும் வாழ்க ! .................

      இருப்பினும் பாவம் அந்த நம் ரமணி சார் ! :) {என்னைப்போலவே அவரும் ஓர் அப்பாவி ஆனால் மிகவும் நல்ல மனுஷ்யர்.}

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  14. பரிசு வென்ற திருமதி ராஜலட்சுமி பரமசிவம் அவங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. திருமதி ராஜலட்சுமி பரமசிவம் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. // மகாலிங்கம் நடந்து கொள்வதற்கு வேறு காரணம் இருக்கிறது என்பதை
    வெளிப்படையாக சொல்லாமல் அதே சமயம் உணர்த்தும் விதமாக ஓரிரு வரி
    எழுதியிருப்பது கதையின் சஸ்பென்ஸ் வெளிவராமல் தடுத்தது எனலாம்.


    அதற்காக ஆசிரியருக்கு ஒரு " சபாஷ் " போட்டேயாக வேண்டும்.// அதை கதைக்கு கதை போட்டாக வேண்டியுள்ளது!!!
    வாழ்த்துகள் சகோதரி.

    பதிலளிநீக்கு
  17. பரிசினை வென்ற திருமதி ராஜலட்சுமி பரமசிவம் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  18. அன்புடையீர்,

    அனைவருக்கும் வணக்கம் + இனிய ‘பிள்ளையார் சதுர்த்தி’ நல்வாழ்த்துகள்.

    ‘அரட்டை’ வலைப்பதிவர் திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் நேற்று ‘பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டை செய்வது எப்படி?’ என ஓர் சமையல் குறிப்புக்கான மிகச்சிறிய மூன்று நிமிடம் + 45 வினாடிகளுக்கான வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதனைக் கண்டு மகிழ இதோ ஓர் இணைப்பு:

    https://www.youtube.com/watch?v=t6va0K3KDtc&feature=youtu.be

    மேற்படி வீடியோவில் 0:55 முதல் 1:25 வரை சுமார் 30 வினாடிகள் மட்டும், திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் பற்றியும், அதன் அடிவாரத்தில் வசித்துவரும் அடியேனைப்பற்றியும் ஏதேதோ புகழ்ந்து சொல்லி மகிழ்ந்துள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 2014-ம் ஆண்டு, என் வலைத்தளத்தினில், 40 வாரங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்ற ‘சிறுகதை விமர்சனப் போட்டி’களில் கலந்து கொண்டு ஒன்பது முறைகள் (4 முதலிடம், 4 இரண்டாம் இடம், ஒரு மூன்றாம் இடம்) வெவ்வேறு பரிசுகளையும், கீதா விருதும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி போட்டிகளில் முதன் முறையாக, முதல் பரிசினைத் தட்டிச்சென்ற பெண் பதிவர் என்ற பெருமையும் இவர்களுக்கு உண்டு. மேலும் விபரங்களுக்கு சில இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.com/2014/02/vgk-02-01-03.html

    http://gopu1949.blogspot.com/2014/02/vgk-04-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/03/vgk-05-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/03/vgk-09-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/05/vgk-15-01-03-first-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/05/vgk-17-03-03-third-prize-winner.html

    http://gopu1949.blogspot.com/2014/06/vgk-21-01-03-first-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/07/vgk-25-01-03-first-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/09/vgk-34-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/11/part-3-of-4.html

    http://gopu1949.blogspot.com/2014/10/4.html

    http://gopu1949.blogspot.com/2014/11/vgk-31-to-vgk-40.html

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு