கதையின் தலைப்பு
VGK 14 - 'நீ .. முன்னாலே போனா ..
நா .. பின்னாலே வாரேன் ! ’
நா .. பின்னாலே வாரேன் ! ’
மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,
அவர்கள் அனைவருக்கும் என்
மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
மற்றவர்களுக்கு:
மூன்றாம் பரிசினை
முத்தாக வென்றுள்ளவர் :
முக்கனிகள் போல்
மூன்றாம் முறையாக
ஹாட்-ட்ரிக் பரிசினைப் பெற்றிட
முற்றிலும் தகுதி பெற்றுள்ள
திருமதி
இராஜராஜேஸ்வரி
அவர்கள்
http://jaghamani.blogspot.com/
வலைத்தளம் : “மணிராஜ்”
http://rjaghamani.blogspot.in/
"krishna"
இராஜராஜேஸ்வரி
அவர்களின் விமர்சனம் இதோ:
மூன்றாம் முறையாக
ஹாட்-ட்ரிக் பரிசினைப் பெற்றிட
முற்றிலும் தகுதி பெற்றுள்ள
திருமதி
இராஜராஜேஸ்வரி
அவர்கள்
வலைத்தளம் : “மணிராஜ்”
http://rjaghamani.blogspot.in/
"krishna"
திருமதி.
இராஜராஜேஸ்வரி
அவர்களின் விமர்சனம் இதோ:
ஆரம்பமே அமர்க்களமாக சஸ்பென்ஸுடன் என்பத்துமூன்று வயது தந்தையை அவர் மனைவியை இழந்து பதினைந்தே நாளான துக்கம் முழுவதும் விலகாத அந்த நிலையிலேயே -ஐம்பதுவயது மகன் முதியோர் இல்லத்தில் சம்ப்ரதாயங்களை முடித்து சேர்த்துவிட்டு விடைபெறாமலே செல்கிறார் -
அடுத்து அவரைச்சேர்க்க அவர் வாரிசு வரும் ..
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வருவேன் என்பதை அழுத்தமாக சொல்லிப்போகிறது கதை ..
அதற்கு மேலும் அழுத்தம் சேர்க்கும் விதமாக மூன்றாவது காலான கைத்தடியை உறுதியாகப் பற்றியிருக்கும் முதிய கரத்தின் படமும் முதியோர் இல்லத்தில் பசுமை நிறைந்த நினைவுகளை சுகமாகவும், எதிர்காலத்தின் சுமை நிறைந்த நினைவுகளை கனமாகவும்- உடலிலும் மனதிலும் ஏற்றவர்கள் காட்சிப்படங்களாக நிறைந்து பரபரப்பு கூட்டுகிறது கதை அமைப்பு..!
இக்கட்டான சமயத்தில் உயிர்காக்கும் தோழனாக களத்தில் குதித்து சர்க்கரை நோயாளிக்கு பக்குவமாக கைவசம் வைத்திருந்த மனைவியின் மருந்துகளை செலுத்திவிட்டு மீதியை ஃப்ரிஜ்ஜில் பத்திரப்படுத்திய நேர்த்தி மனதில் பதிகிறது...
சர்க்கரை நோய்பற்றி அது கணையத்தில் இன்சுலின் சுரப்பியின் குறைபாடே தவிர நோயல்ல என்றும் நாற்காலியின் உவமை கூறி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம், வயது பாகுபாடின்றி இன்று பெரும்பாலோர் பாதிக்கப்பட்டு வாழ்வின் இனிமையையும் நாக்குக்கு இனிப்பையும் இழந்து கசந்த வாழ்வில் வாழும் சோகம் எல்லாம் கதை ஓட்டத்தில் ஆழமாக மனதில் பதியும்படி எடுத்துச்சொன்ன வாழ்க்கைப் பாடத்திற்கு ஆசிரியர் சபாஷ் என்று வியந்து பாராட்டவைக்கிறார்..
இத்தனை தெளிவாக. நயமாக- பக்குவமாக- தோழமையுடன் -ஹிதமாக குடும்பமருத்துவர் போல் எடுத்துச்சொல்ல கதை ஆசிரியரைத் தவிர யாரால் முடியும்!!
அதேபோல் தான் பாகவதக் கதையும் கதை ஓட்டத்துடன் சஸ்பென்ஸுக்கு விடை கிடைக்குமா என்கிற ஆவலில் படிக்க வைத்து விடுகிறார் ஆசிரியர்..
கதை தனியாக வந்தால் சலிப்புடன் நகர்ந்துவிடுவார்களே..
எத்தனை திட்டமிட்டு நேர்த்தியாக பாகவதத்தை கதையில் புகுத்தி படிக்கவைத்து -திறமையாக காய் நகர்த்தி வெற்றி காண்கிறார் கதாசிரியர்..புண்ணியம் சேர்த்துக்கொள்கிறார்...!
வக்கணையாக சாப்பிட்டு பழகியவர்கள் பத்தியம் சாப்பிட திண்டாடுகிறார்கள்.. உப்பில்லாத பத்தியக்காரன் கண்ணில் ஊறுகாய் தென்படுவது போல, கண்ணெதிரே ஆசைப்பட்டு சாப்பிடும் உணவு வகைகள் கைக்கெட்டியும் வாய்க்கெட்டாமல் போவதுபோல விருந்துபரிமாறி கைகளையும் வாயையும் கட்டிவைத்தது போல துன்புறுவதை விளக்கமாக எடுத்துரைத்து கருத்துக்கு விருந்துபடைக்கிறார் ஆசிரியர்..
குடும்பத்தில் தந்தை சென்ற தலைமுறைவரை இந்த பெரியவரைப் போல ஒரு இடைவெளியுடன் தான் காட்சிப்பட்டிருக்கிறார்கள்..
அப்பா பேப்பர் படிக்கிறார். அம்மா சமைக்கிறாள் என்பது போல...
இந்தத்தலைமுறைகளில் தான் ஏதோ சிறிது மாற்றம் வந்திருக்கிறது..
அதிலும் பெரியவர் மிலிட்டரியில் வேலைபார்த்தவர் கண்டிப்பும் கட்டுப்பாடுகளுமாக பிள்ளைகளுடன் இடைவெளி இட்டு நிரப்பப்படாமலே இருந்திருக்கிறது..
அவர் மனைவி தற்போதைய தொலைக்காட்சித்தொடர் மாமியார்போல இல்லாமல் பாசமாக, கணவன், மகன்கள்- மருமகள்கள், மருமகன் என எல்லோரையும் அன்பால் கட்டிவைத்திருக்கிறாள்..
அதட்டிபேசாமல் அதிர்ந்து நடத்தாமல் பாங்கான பெண்மணி அவரை அநியாயமாக இழக்க எந்த வாரிசுக்குத்தான் மனம் ஒப்புக்கொள்ளும்..!
சாதாரணமாக சர்க்கரை நோய் -வேறு ஏதாவது பிரச்சினைக்கு மருத்துவமனை சென்று ரத்தப்பரிசோதனை செய்யும் போதுதான் தெரிய வருவது தான் சகஜம் ..
அது முற்றிய நிலையில், இன்சுலின் ஊசிமூலம் செலுத்தும் நிலையில் தெரிய வந்து, ஊசிபோட கற்று, மனைவிக்கு வலியில்லாமல் ஊசி போட தேர்ச்சியுறும் பெரியவர், பாசத்தால் நெகிழவைக்கிறார்... அதனை குடும்பத்திற்கு உணரவைப்பதில்தான் தவறிவிடுகிறார்..
அவர் மனைவிக்கு பிடித்த உணவைக் கொடுக்காமல் பத்தியமாக மறுத்திருந்தாலும், சிறிது நாளில் துன்பத்துடன் மரணத்தைத்தழுவும் நிலையிலிருந்த மனைவிக்கு, மன ஆறுதலுக்காக சாப்பிடத்தந்த இனிப்புகள், வாரிசுகள் கண்களில் பட நேர்ந்து, அவர்கள் பாசத்துடன் நேசிக்கும் அம்மாவை கொன்றதாக குற்றம் சாட்டுகிறார்கள்..
அவர்களைப்பொறுத்தவரை தந்தையின் பாசமான மறுபக்கம் காட்டப்பட வாய்ப்பு இல்லாமலே இதயமற்றவராக சித்தரிக்கப்பட்டு நிராகரிக்கப்படுவது பெரும் சோகம்..
அவரது அன்பைப்புரிந்த ஒரே ஜீவனும் உலகைவிட்டுப்பிரிந்த நிலையில் இறப்பதற்கு முன்பு நமக்கு பிரியமானவற்றை விரும்பி சாப்பிட்டுவிட்டு மன மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் இந்த உலகை விட்டு விடைபெற வேண்டும். அதில் எந்தக்குறையும் யாருக்கும் யாரும் வைக்கக்கூடாது என்ற இருவரின் இரகசிய ஒப்பந்தம்; எவ்வளவோ சர்வ ஜாக்கிரதையாகவும், உஷாராகவும் செயல்பட்டும், பெற்ற பிள்ளைகளிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டு விட ஊமை கண்ட கனவாக உண்மை வெளிவராமலே போகிறது....பண்பும் பயனுமாக அன்பகத்திருந்த -இல்வாழ்க்கை துணையின்- பிரிவு என்னும் பெரும் சோகம் தழுவுகிறது..
பாகவதம் முடிந்த கையோடு - இனிப்பு சாப்பிடக்கூடாத கட்டுப்பாட்டில் இருக்கவேண்டிய- தானும்- தனக்கு ஒவ்வாத இனிப்பு பாயசத்தை சாப்பிட்டும், மருத்துவமனையில் பிராணவாயு குழாயை பிடுங்கியும் விரும்பியே மரணத்தைத்தழுவி நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன் .. என்று - இன்று நீ நாளை நான் என்ற மாற்றமுடியாத வாசகத்தில் மனதில் நிறைகிறார்..
அறத்திற்கே அன்பு சால்பென்ப - மறத்திற்கும் அஃதே துணை -என நிறுவ காலம் துணை செய்யட்டும்..!
சர்க்கரை நோயாளிகள் எந்தவித உணவுக் கட்டுப்பாடுகளும் இல்லாமல், தங்களுக்குப் பிடித்ததை சாப்பிடவும், இந்தக் குறைபாடு வந்துவிட்டால் அதை முற்றிலும் போக்கவும் புதிய மருந்துகள் கண்டு பிடிக்கப்பட மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக மட்டுமே சுமார் ஒன்றரைக்கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முழுவதும் பயன் படுத்தப்பட வேண்டும்- என தன் உயிலில் எழுதியிருந்தது தன் சோகம் பிறரையும் பற்றாமலிருக்க முனையும் அன்பு உள்ளம் அவர் வாரிசுகளுக்குப் புரியும் காலம் வருமா...
மனித குலம் முழுவதும் தழைக்க சமுதாய அக்கறையோடு தன் உழைப்பின் மூலம் பெற்ற சொத்துக்களை அர்ப்பணிக்கும் போது மீண்டும் மீண்டும் அவரது உயரிய நோக்கினை பறைசாற்றுகிறார் கதை ஆசிரியர்..!
கதையின் வெற்றி முரசு ஓங்கி ஒலித்து இந்த கதைக்கு தங்க நெக்லஸ் பரிசும் வாங்கித்தந்து சிகரத்தில் ஏற்றியிருக்கிறது ஆசிரியரின் அயராத உழைப்பை..!
எத்தனை எத்தனை நுணுக்கமான விவரங்களை அலசி கதையின் போக்கில் கலந்து கரைத்து புகட்டியிருக்கிறார் என எண்ணும் போது வியப்பு தாளவில்லை..!
மிகக்கடினமான இந்த வேலையை
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள
மற்றவர்கள் பற்றிய விபரங்கள்
தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர
இடைவெளிகளில் வெளியிடப்படும்.
அனைவரும் தொடர்ந்து
ஒவ்வொரு வாரப்போட்டியிலும்
உற்சாகத்துடன் பங்கு கொண்டு
சிறப்பிக்க வேண்டுமாய்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOooooo
இந்த வார சிறுகதை
விமர்சனப் போட்டிக்கான
கதையின் தலைப்பு:
” ஜா தி ப் பூ “
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
அற்புதமான விமர்சனம்
பதிலளிநீக்குஇதற்கே மூன்றாம் பரிசென்றால்
முதல் இரண்டாம் பரிசுக்குரிய
விமர்சனங்க்களைப் படிக்க ஆவல் அதிகரிக்கிறது
ஹேட்ரிக் பரிசு பெற்ற நான் விரும்பித் தொடரும்
பதிவருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மூன்றாம் பரிசினை வென்று மூன்றாம் முறையாக ஹாட்-ட்ரிக் பரிசினையும் பெற்றுள்ள சகோதரி இராஜராஜேஸ்வரி
பதிலளிநீக்குஅவர்களுக்கு எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!
முத்தான மூன்றாம் பரிசிற்கு விமர்சனத்தை
பதிலளிநீக்குதேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் -
சிரத்தையாக போட்டியை நடத்தும் ஆசிரியருக்கும்
மனம் நிறைந்த இனிய நன்றிகள்...!
சகோதரி இராஜெசுவரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபரிசு பெற்ற திருமதி . இராஜராஜேஸ்வரி அவர்கள்
பதிலளிநீக்குமேலும் பல ஹாட் - ட்ரிக் சாதனை புரிய வாழ்த்துக்கள் !
ஹாட்ரிக் பரிசாய் அள்ளிக் கொண்டிருக்கும் திருமதி ராஜராஜேஸ்வரிக்கு என் இனிய வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅருமையாக விமரிசித்து மூன்றாம் பரிசினைப் பெற்ற திருமதி ராஜராஜேஸ்வரிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து பரிசுகளை வென்றிடவும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதிருமதி. இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன் என்ற கதைத் தலைப்பை மனைவித் தொடர்ந்து கணவன் மரணத்தை நாடுவதாய் அனைவரும் புரிந்திருக்கையில், முதியோர் இல்லத்துக்கு நீ முன்னாலே போனால்... நான் பின்னாலே வாரேன் என்று தந்தை- மகனுக்கானதாய் உணர்த்தியமை சிறப்பு. மூன்றாம் பரிசு பெற்று மும்முறை ஹாட்-ட்ரிக் பரிசுகளுக்குத் தேர்வாகியுள்ள இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கு இனிய பாராட்டுகள்.
பதிலளிநீக்குமூன்றாம் பரிசினையும், மூன்றாம் முறையாக ஹாட்ரிக் பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதிருமதி.இராஜராஜேஸ்வரிக்கு எனது பாராட்டுகள்.
பதிலளிநீக்குபரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமூன்றாம் பரிசை வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குJayanthi Jaya September 29, 2015 at 3:01 PM
நீக்கு//மூன்றாம் பரிசை வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ. :)
பரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி அம்மாவங்களுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குதிருமதி இராஜராஜேஸ்வரி மேடம் வாழ்த்துகள் எண்பத்து மூன்று வயதான மனைவியை இழந்து பதினைந்தே நாடகளான தந்தையை ஐம்பது வயதான மகன் முதியோர் இல்லத்தில் சேர்க்கவருவதில் தொடங்கி வரிக்கு வரி ரசித்து விமரிசனம் செய்திருக்காங்க. நல்லா இருக்கு.
பதிலளிநீக்குபரிசு மழையில் நனையும் சகோதரிக்கு வாழ்த்துகள்..ஹாட்ரிக் தொடரட்டும்..
பதிலளிநீக்குபரிசினை வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு பாராட்டுகள்! தொடரட்டும் பரிசுமழை!
பதிலளிநீக்கு