இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை
விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய
கடைசி நாள்: 29.05.2014
வியாழக்கிழமை
இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.
வியாழக்கிழமை
இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.
விமர்சனம் அனுப்ப வேண்டிய
மின்னஞ்சல் முகவரி:
மின்னஞ்சல் முகவரி:
valambal@gmail.com
REFERENCE NUMBER: VGK 19
போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:
எட்டாக் க[ன்]னிகள்
சிறுகதை
By வை. கோபாலகிருஷ்ணன்
நான் தினமும் பயணிக்கும் அரசுப்பேருந்தில், அது கிளம்பும் இடத்திலேயே ஏறி விடுவதால் அதிக கும்பல் இருக்காது. பாதி பஸ் காலியாகவே இருக்கும். கடந்த ஒரு மாத காலமாக மட்டும் இளம் வயதுப்பெண்கள் ஒரு கூட்டமாக அந்தப்பேருந்தில் ஏறி கலகலப்பை ஏற்படுத்து வருகின்றனர்.
ஏதோ ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையில் ப்ராஜக்ட் வொர்க்கோ, டிரைனிங்கோ செய்யச்செல்கின்றனர் என்று கேள்வி. எது எப்படியோ கும்மென்ற மல்லிகை மணத்துடன் பயணம் இப்போது இனிமையாக மாறியுள்ளது எனக்கு.
அந்த இளம் வயதுப் பெண்கள் கூட்டத்தில் ஒருத்தி மட்டும் ஒட்டடைக்குச்சி போல அசாதாரண உயரம். குதிரை முகம். மோட்டு நெற்றி. அதில் சோடாபுட்டி மூக்குக்கண்ணாடி வேறு. எலி வால் போன்று குட்டையாகக் கொஞ்சூண்டு தலைமுடி மட்டுமே.
ஆரம்பத்தில், இப்படியும் ஒரு அழகற்ற படைப்பா ! என அவள் மேல் நான் அனுதாபம் கொண்டேன்.
ஆனால் நாளடைவில் அவள் என்னுடன் வலிய வந்து அன்புடன் பேசியதில், எனக்குள் ஏதோ ஒருவித இரசாயன மாற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு எனக்கு, அவளும் ஒரு அழகிய தேவதையாகவே தெரிய ஆரம்பித்து விட்டாள்.
என் உருவத்தைப் பார்த்தால் அவ்வளவாக அனுமானிக்க முடியாதே தவிர, எனக்கும் விளையாட்டுப்போல முப்பத்து ஐந்து வயது ஆகி விட்டது.
இதுவரை பெண் வாடையே அறியாத ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் கூடிய சுத்த * பிரும்மச்சாரி * நான். இருந்தும் என் வீட்டில் இன்னும் என் திருமணம் பற்றிய பேச்சே எடுக்காமல் உள்ளனர். ;(
”சார், மணி என்ன ஆகுது. என் வாட்ச் ஓடவில்லை. பேட்டரி மாற்றனும் என்று நினைக்கிறேன்” என்றாள் என்னிடம் ஒருநாள்.
”இந்தக்காவிரி நதி நீர் பிரச்சனை கடைசியில் எப்படி சார் போய் முடியும்? நமக்கு தண்ணீர் வருமா வராதா? செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த என் கவனத்தை அவள் பக்கம் திருப்பினாள், ஒரு நாள்.
“பொங்கியெழும் இளமை உணர்ச்சிகளையும், ஓடிவரும் நதி நீரையும் ஒருவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. அது கட்டுக்கடங்காமல் வெள்ளமாய்ப் பாய்ந்து வரும். தாகமும் மோகமும் தீர அனுபவிப்பது அனைவரின் பிறப்புரிமையே” என விளக்கினேன்.
எனக்கு அவள் மேல் ஏற்பட்டுள்ள தாகத்தையும் மோகத்தையும் கோடிட்டுக் காட்ட இது தான் சந்தர்ப்பம் என்று விளக்கம் கொடுத்த என்னுள் ஒருவித சந்தோஷமும் பரவசமும் ஏற்பட்டதை உணர்ந்தேன்.
பஸ் சார்ஜுக்கு சரியான சில்லறைக்காசு இல்லாமல், நடத்துனரிடம் பாட்டு வாங்க இருந்த என்னை, தானே சில்லறை கொடுத்து உதவி செய்தாள், மற்றொரு நாள்.
இப்படியாக எங்களின் பஸ் ஸ்நேகிதம் நாளுக்கு நாள் நன்கு வளர்ந்து வந்தது. மிகவும் உயரமான அவள் என் மனதிலும் ஒரு உயர்ந்த இடத்தைப் பிடித்து விட்டாள் என்றால் அது மிகையாகாது.
என் மனதிலிருந்த ஆசைகளையெல்லாம் கொட்டி, அவளுக்கு ஒரு காதல் கடிதம் எழுதி வைத்து விட்டேன், மறுநாள் சந்திக்கும் போது எப்படியும் அவளிடம் கொடுத்து விடவேண்டும் என்ற எண்ணத்தில்.
என் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவோ, அவள் ஏன் வரவில்லை என்று மற்ற பெண்களிடம் காரணம் கேட்கவோ, எனக்கு ஒருவித தயக்கமாக இருந்தது. அவள் ஃபோன் நம்பர், வீட்டு விலாசம் போன்ற விபரங்கள் கூட, இதுவரை அவளிடம் கேட்டு தெரிந்து கொள்ளாதது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்து நான் மிகவும் வேதனைப் பட்டேன்.
நான் அவளுக்கு எழுதிய கடிதத்தை, நானே பலமுறை பிரித்துப் பிரித்துப் படித்ததில், அது கசங்க ஆரம்பித்து விட்டது. எப்படியும் நாளை வருவாள் என்ற நம்பிக்கையில், இரவு முழுவதும் கண் விழித்து முத்து முத்தாக மீண்டும் அதே கடிதத்தை, வேறொரு புதிய தாளில் அழகாக எழுதி முடித்து, ஒரு கவரில் போட்டு பத்திரப் படுத்திக் கொண்டேன்.
மறுநாள் பஸ்ஸில் ஏறிய சற்று நேரத்தில் ஒரு பெண் [வாத்துக் கூட்டத்தில் ஒன்று] என்னிடம் ஓடிவந்தாள்.
“சார், உங்க ஃப்ரண்ட் இதை உங்களிடம் கொடுக்கச்சொன்னா” என்று சொல்லி ஒரு கவரை என்னிடம் நீட்டினாள்.
“தாங்க்யூ வெரிமச்” என்று சொல்லி பலவித சந்தோஷமான கற்பனைகளுடன் அதை வாங்கிய நான், தனிமையில் அமர்ந்து, அந்தக்கவருக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு, என் கண்களில் ஒத்திக்கொண்டு, அந்தக்கவரை அவசரமாகப் பிரித்துப் படித்தேன்.
அதைப்படித்ததும் என் கண்கள் இருட்டி வந்து என் தலை சுற்றுவது போல உணர்ந்தேன்.
அவளுடைய அத்தைப்பையனுடன் அவளுக்கு நாளைய தினம் நிச்சயதார்த்தமாம். இரண்டு மாதங்கள் கழித்துத் திருமணமாம். நாளைய நிச்சயதார்த்தத்திற்கு நானும் கட்டாயம் வர வேண்டுமாம். அழைப்பிதழ் போல அழகாக கையால் எழுதி அனுப்பியிருக்கிறாள்.
அதிகமாக அழகில்லாவிட்டாலும், நல்ல உயரமான அவளை மணக்கவும் ஒருவன் முன் வந்துள்ளான். அவள் மேல் அதிகமாக ஆசை வைத்துவிட்ட எனக்குத்தான் கொடுப்பினை இல்லை. மன வருத்தம் அடைவதைத்தவிர நான் வேறு என்னதான் செய்ய முடியும்?
/சற்று இடைவேளை/
..................................
..........................................
..................................................
..........................................................
...................................................................
..............................................................................
.......................................................................................
நான் எழுந்து நின்றால் அவள் முழங்கால் வரை தான் இருப்பேன்.
முப்பத்து ஐந்து வயதாகியும் மூன்று அடி மூன்று அங்குல உயரமே வளர்ந்துள்ள என்னை மணக்க எவள் எங்கே பிறந்திருக்கிறாளோ?
உங்களில் யாருக்காவது தெரிந்தால் தயவுசெய்து எனக்குத் தெரிவியுங்களேன்.
oooooOooooo
o-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-o
* பிரும்மச்சாரி * என்றால் இன்னும் திருமணமே ஆகாதவன் என்று பொருள்.
நான், ஒரு இராமாயண உபன்யாசம் கேட்ட போது, இராமாயணக் கதை சொன்னவர் வேடிக்கையாக, நகைச்சுவையாக ஒரு விஷயம் சொன்னார்.
”அதாவது, ஆஞ்சநேயர் (அனுமன்) ஒரு சுத்த பிரும்மச்சாரி.
ஆனால் அவர் ஒரு வானரம் (குரங்கு இனம்).
வானரத்தில் கூட பிரும்மச்சாரி உண்டா? என்று நீங்கள் கேட்கலாம்.
வானரத்திலும் பிரும்மச்சாரிகள் உண்டு .........
பிரும்மச்சாரிகளிலும் வானரங்கள் உண்டு” என்றார்.
இதைக்கேட்டதும் அந்த அவையில் கூடியிருந்த
நாங்கள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தோம்..
o-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-o
’எட்டாக்க[ன்]னிகள்’
உடன் ஓர் இலவச இணைப்பு
‘எட்டிய MONEYகள்’
ஓர் வயதான கணவன் மனைவி.
கணவன் படுத்த படுக்கையில் நாட்களை
எண்ணிக்கொண்டு இருக்கிறார்.
அவர் தன் கடைசி ஆசையை
தன் அன்பு மனைவியிடம்
சொல்ல நினைத்து
”நிறைவேற்றித்தருவாயா?”
எனக்கேட்கிறார்.
”எதுவாக இருந்தாலும்
தயங்காமல் சொல்லுங்கள்.
நிச்சயமாக நான்
நிறைவேற்றித் தருவேன்”
என்கிறாள் மனைவி.
கணவரின் கடைசி ஆசை இது தான் .....
”நான் கஷ்டப்பட்டு உழைத்து
சேமித்த என் பணம் முழுவதும்
[சுமார் ஒரு கோடி ரூபாய்] நான்
இறந்த பிறகு என்னுடனேயே
சேர்த்து புதைத்திட வேண்டும்”
தன் கணவனின் கடைசி ஆசையை,
மனைவி அப்படியே
மிக்க மகிழ்ச்சியுடன்,
நிறைவேற்றித்தருவதாக
ஏற்றுக்கொள்கிறாள்.
கணவர் டெபாஸிட் செய்திருந்த
அவரின் பணமெல்லாம்
வங்கியிலிருந்து 1000 ரூபாய்
நோட்டுகளாக மாற்றப்பட்டு
எடுத்து வந்து, ஒரு பெரிய
சூட்கேஸ் நிறைய வீட்டில்
பத்திரமாக மனைவியால்
பாதுகாக்கப்படுகிறது.
கணவன் மனைவிக்கு மட்டுமே
தெரிந்த இந்த விஷயம்,
தெரிந்த இந்த விஷயம்,
மிகவும் இரகசியமாகவே
பாதுகாக்கப்படுகிறது.
பிறருக்கு இந்த விஷயம் கசிந்தால்
பிறகு புதைப்பதில்
பல்வேறு பிரச்சனைகள்
வரக்கூடும் அல்லவா!
யாராவது புதைத்த அந்தப்பணத்தைத்
தோண்டி கொள்ளை அடித்தும்
செல்லலாம் அல்லவா!
அதனால் மிகவும் உஷாராகவே
தேவரகசியமாகவே
இந்த விஷயத்தை பிறர் அறியாமல்
பாதுகாத்து வந்தனர்.
அந்த நாளும் வந்தது.
மனைவி அழுத கண்ணும்
சிந்திய மூக்குமாக, கணவனை நல்லடக்கம்
செய்யும் இடத்திற்குத் தானும்,
அந்த மிகப்பெரிய பூட்டிய சூட்கேஸை
தூக்க முடியாமல் கஷ்டப்பட்டுத்
தூக்கிச்சென்றாள்.
அதை முதலில் தன் கையாலேயே
குழியில் இறக்கி வைத்துவிட்டு,
பிறகு தன் கணவனின் பூத உடலின்
நல்லடகத்தில் கலந்துகொண்டு,
அவரை சூட்கேஸுடன் புதைத்த
அந்த இடத்தை முழுவதும் பூசும்வரை
அங்கேயே நின்று அழுதுவிட்டு,
பிறகே வீடு திரும்பினாள்.
சொன்ன சொல்லை, கொடுத்த வாக்கினை
காப்பாற்றி விட்டதில்
அவளுக்கு இப்போது
ஓர் மிகப்பெரிய நிம்மதி !
மற்றவர்களிடமெல்லாம்
அந்தப்பெட்டியில் உள்ளவை,
”என் கணவர்
அன்றாடம் எழுதி வந்த பலவருஷ
பழைய டயரிகள் மட்டுமே” எனச்
சொல்லி சமாளித்து விட்டாள்.
சந்தேகப்பட்டுத் தூண்டித்துருவிக்
கேட்டுக்கொண்டிருந்த
தன் சொந்தத் தம்பியிடம் மட்டுமே,
வீடு திரும்பியதும்
அந்த உண்மையைச்
சொல்லும்படியாகி விட்டது அவளுக்கு.
“ஏன் அக்கா மடத்தனமாக இப்படிச்செய்தாய்?
என்று மனம் கொதித்துப்போய்க் கேட்டான் தம்பி.
“என் பிரியமான கணவரின்
கடைசி ஆசையடா அது;
அதை கூட நான் நிறைவேற்றாவிட்டால்
என் மனமும் அவர் ஆன்மாவும் எப்படி
சாந்தியடையும்?” என்றாள்.
”நீ செய்த இந்த முட்டாள் தனத்தால்
யாருக்கு என்ன லாபம்?”
என்றான் தம்பி.
”இந்த என் செயலால் யாருக்கு என்ன நஷ்டம்?
குறிப்பாக உனக்குத்தான்
இதில் என்ன பெரிய நஷ்டம்?
அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த
பணத்தை அவர் தன்னுடன்
மேலுலகம் வரை கொண்டு
செல்ல விரும்பினார்;
அவ்வளவு தான்;
இதில் என்ன தப்பு இருக்கிறது? ”
என்று தொடர்ந்து வாதம் செய்தாள்
அந்த அக்காக்காரி.
“நீ இப்படி .... பணத்தின் மதிப்புத்தெரியாத
பைத்தியக்காரியாக இருக்கிறாயே ...
வேறு யாருக்காவது இந்த விஷயம்
தெரிந்தால் அவரைப்
புதைத்த இடத்தை தோண்டி,
பணம் முழுவது கொள்ளை
போய் விடும், தெரியுமா?
என்று தொடர்ந்து வாதம் செய்தான்
அவளின் அன்புத் தம்பி.
இதைக்கேட்டதும் அக்காக்காரிக்கு
தன் தம்பி மேல்
மிகுந்த கோபம் வந்து விட்டது.
/சற்று இடைவேளை/
.............
............................
.. .............................. .......
............. .............................. ...
.............................. ...........................
........
.............................. ...........
.............................. ......................................
”நானா பணத்தின் மதிப்புத் தெரியாதவள்?
நானா பைத்தியக்காரி?
நானா பைத்தியக்காரி?
போடா போக்கத்தவனே .....
நான் அவருடன் சூட்கேஸில்
அனுப்பியுள்ள தொகை
By way of Cheque மட்டுமே;
அதுவும் ’Account Payee only’ என்று
’Special Crossing’ செய்யப்பட்டது.
அனுப்பியுள்ள தொகை
By way of Cheque மட்டுமே;
அதுவும் ’Account Payee only’ என்று
’Special Crossing’ செய்யப்பட்டது.
அதுவும்
Payable .... in favour of
'MY BELOVED HUSBAND', only ;
அவரைத்தவிர அந்தப்பணத்தை யாருமே
வங்கியிலிருந்து எடுக்க முடியாது;
ஏன் அவரே கூட இனி
அந்தப் பணத்தை எடுக்க முடியாது;
அந்தப் பணத்தை எடுக்க முடியாது;
பைத்தியக்காரா,
நான் உன் அக்கா.......டா;
உனக்கு முன்னாலேயே
பிறந்தவளாக்கும்” என்றாள்.
oooooOooooo
இது எப்படியிருக்கு ! ;)
அக்காவா கொக்கா ?
மிகச்சிறிய சிரிப்புக்கதைகளாக உள்ளதால்
ஒன்றுக்கு இரண்டாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒன்றுக்கு இரண்டாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
தயவுசெய்து இரண்டுக்குமே சேர்த்து, ஒரே மெயிலில்
தனித்தனியாக விமர்சனம் எழுதி அனுப்புங்கோ.
ஆனால் பரிசு ஒன்றே ஒன்று மட்டுமே !
நினைவு இருக்கட்டும்.
VGK-16 'ஜாதிப்பூ’ சிறுகதைக்கான
விமர்சனப் போட்டி பரிசு முடிவுகள்
நாளை சனி / ஞாயிறு / திங்களுக்குள்
வெளியிடப்பட உள்ளன.
காணத்தவறாதீர்கள் !
ஒவ்வொரு வாரப் போட்டிகளிலும்
கலந்துகொள்ள மறவாதீர்கள் !!
என்றும் அன்புடன் தங்கள்
கோபு [VGK]
அழகான வாத்துக் கூட்டத்திற்கு நடுவே கொக்கு நிற்பது போல அருமையான எடுத்துக் காட்டு.
பதிலளிநீக்குகதை நன்றாக இருக்கிறது முன்பே படித்து ரசித்து இருக்கிறேன்.
’எட்டிய money’அருமையான நகைச்சுவை கதை.
எட்டாக்கனி
பதிலளிநீக்குகிட்டாதாயின் வெட்டென மற....
’எட்டாக்க[ன்]னிகள்’ உடன் இலவச இணைப்பாக
பதிலளிநீக்கு‘எட்டிய MONEYகள்’ ரசிக்கவைத்தது..!
பணம் என்னவெல்லாம் செய்ய வைக்கிறது... இதுவல்லவோ அக்கா...!
பதிலளிநீக்குஅது தானே!
பதிலளிநீக்குநினைத்தேன் இப்படி ஏதும் இருக்கும் என்று.
மிக சுவையான கதை.எல்லொருக்கும் இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
எட்டாக் கனிகள் எட்டி ருசிக்கமுடிந்தது. நன்றாக இருந்தது. அன்புடன்
பதிலளிநீக்குமுன்னது சோகமான கதை;
பதிலளிநீக்குபின்னது சுகமான கதை ( நகைச்சுவை கதை).
அமர்க்களமான அட்டகாசமான அவசியமான விமரிசனப் போட்டி....
பதிலளிநீக்குஇரண்டாவது கதையை ஆங்கிலத்தில் படிச்சிருக்கேன். :)) முதல் கதையும் நகைச்சுவையாகத் தெரியவில்லை. :( பாவம் அந்த மனிதன். :(
பதிலளிநீக்குAha best twist.I never expect it.
பதிலளிநீக்குSo only he referred the girl as kokku.
Because he is short.
ahaha.......
correct there are vanarams in brahmacharies.But they will chance once they became hirasharas.
Ladies are always brillent you know. How correctly she has handled the money matter.
Nice Nice stories.
அருமையான கதை. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇந்த இரு கதைகளுக்காக, திருமதி. ராதாபாலு அவர்கள் எழுதி அனுப்பியிருந்த விமர்சனங்கள் அவர்களின் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டுள்ளன.
பதிலளிநீக்குஇணைப்பு: http://enmanaoonjalil.blogspot.com/2014/11/blog-post_5.html
போட்டியில் தன் விமர்சனங்கள் பரிசுக்குத் தேர்வாகாமல் இருந்தும்கூட, அவற்றைத் தன் வலைத்தளத்தினில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ள திருமதி. ராதாபாலு அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
VGK
yathavan nambi June 8, 2015 at 2:34 AM
பதிலளிநீக்கு//அன்பு வலைப்பூ நண்பரே! நல்வணக்கம்!//
வாருங்கள், வணக்கம்.
//இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.
தங்களின் வலைத்தளத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவுக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ஏற்கனவே அங்கு நான் வருகை தந்து என் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளேன்.
எனினும் தங்களின் தகவலுக்கு என் நன்றிகள்.
மென்மேலும் சிறப்படையவும் எழுத்துலகில் தனித்தன்மையுடன் தாங்கள் ஜொலித்துப் பிரகாசிக்கவும் என் அன்பு நல்வாழ்த்துகள்.
என்றும் எப்போதும் தங்கள் பதிவுகளில் நல்லதை மட்டுமே நல்லமுறையில் எழுதுங்கள். அதுவே பொதுவாக அனைவரால் விரும்பி வாசிக்கப்படும்.
பதிவுகளின் எண்ணிக்கைகளை விட, எப்போதாவது ஒரு பதிவு வீதம் கொடுத்தாலும்கூட, மிகத் தரமான பதிவுகளாகக் கொடுத்து வந்தீர்களானால், வாசகர்கள் தானாகவே வருகை தந்து ஆதரவு அளிப்பார்கள். இது தங்களுக்கான என் ஆலோசனை மட்டுமே.
நல்வாழ்த்துகள் :)
அன்புடன் VGK
எட்டாக் கனிகளின் மீதுதான் மோகம் அதிகமாக இருக்கும்.
பதிலளிநீக்குமின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (20.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:
பதிலளிநீக்கு-=-=-=-=-=-=-
எட்டாக் க(ன்)னிகள் : மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிதெனக் காட்டும் கதை. அழகற்ற பெண்ணை கண்ணுக்குள் கொண்டு தரும் அழகான வர்ணனை.
நவரசத்தில்... இந்தக் கதை ஒரு ..."ஆச்சரியம்"..!
-=-=-=-=-=-=-
இப்படிக்கு,
தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.
பின்னூட்டத்திலேயே எல்லாரும் திறமையைக்காட்டுறாங்க. எனக்கு அந்த திறமை கூட இல்லியே:(((((
பதிலளிநீக்குபூந்தளிர் August 26, 2015 at 11:37 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//பின்னூட்டத்திலேயே எல்லாரும் திறமையைக்காட்டுறாங்க. எனக்கு அந்த திறமை கூட இல்லியே:(((((//
அப்படியெல்லாம் தயவுசெய்து நினைக்காதீங்கோ. உங்களின் தனித்திறமைகளை நான் நன்கு அறிவேன். :)))))
//
பதிலளிநீக்குவானரத்திலும் பிரும்மச்சாரிகள் உண்டு .........
பிரும்மச்சாரிகளிலும் வானரங்கள் உண்டு” என்றார். //
ஹ, ஹ, ஹா
எட்டாக்கனியோ என்னவோ வித்தியாச விமர்சகர்களுக்கு பரிசு எட்டும் கனியேதான்.
Jayanthi Jaya September 30, 2015 at 8:36 AM
நீக்கு**வானரத்திலும் பிரும்மச்சாரிகள் உண்டு .........
பிரும்மச்சாரிகளிலும் வானரங்கள் உண்டு” என்றார்.**
//ஹ, ஹ, ஹா//
:)))))
//எட்டாக்கனியோ என்னவோ வித்தியாச விமர்சகர்களுக்கு பரிசு எட்டும் கனியேதான்.//
வாங்கோ ஜெயா, வணக்கம்மா.
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.
பிரியமுள்ள கோபு அண்ணா
இந்த ஆளு சர்க்கசுல இருந்தா அவுகளுக்கேத்தாப்புல கனி கெடச்சிருக்கும்லா.
பதிலளிநீக்குஅழகான வாத்துக்கூட்டத்துக்கு நடுவில் கொக்குபோல. என் கற்பனை. அவனுடைய உயரக்குறைவு அவனுக்கு நினைவில் இல்லையோ.
பதிலளிநீக்குதோற்றம் எப்படியிருந்தாலும் உணர்வுகள் ஒன்றுதான் என்பதை சொல்லாமல் சொல்லும் கதை முதலாவது.
பதிலளிநீக்குஎட்டிய மணி-யை பிறர் தட்டிச்செல்லவிடாத விடாக்கண்டர் கதை இரண்டாவது. மனம் கவர்ந்த கதைகள்!!!
கனிகள் தொங்கும் மரங்களின் படத்தோடு, “எட்டாக் க(ன்)னிகள்” கதை தொடங்குகிறது. யாருக்குக் கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போனதோ? எனும் கேள்வியை நம்முள் எழுப்பி, கதைக்குள் இழுத்துச் செல்கிறது.
பதிலளிநீக்குபொருத்தம் மனதிலும் உடலிலும் வேண்டும். “என்னை மாதிரி பசங்களைப் பார்த்தா பிடிக்காது, பார்க்க பார்க்கத் தான் பிடிக்கும்” படிக்காதவனின் தனுஷின் வசனம், கதாநாயகனின் படத்தைப் பார்த்ததும் நம் ஞாபகத்திற்கு வருகிறது. கவலைப் படாதே சகோதரா! உனக்கு எட்டும் கனியாக, ஜாடிக்கேற்ற மூடியாக, ஒருவள் நிச்சயம் உனக்கு விரைவில் கிடைப்பார் என ஆறுதல் சொல்லத் தோன்றுகிறது.
ஈட்டி எட்டியமட்டும் பாயும். பணம் பாதாளம் வரையில் பாயும். பணத்தை இழக்க விரும்பாத அக்கா கொக்குதான்!
My Dear Mr. Seshadri Sir,
நீக்குவாங்கோ, வணக்கம்.
இரு கதைகளையும் பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் VGK
இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் என் வலையுலக ஆரம்ப நாட்களில், வெளியிட்டிருந்தபோது அவற்றிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 58 + 42 = 100
பதிலளிநீக்குஅதற்கான இணைப்புகள்:
http://gopu1949.blogspot.in/2011/10/blog-post_6168.html
http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_07.html
மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:
பதிலளிநீக்குமுதல் பரிசுக்குத் தேர்வானது:
http://gopu1949.blogspot.in/2014/06/vgk-19-01-03-first-prize-winner.html
இரண்டாம் பரிசுக்குத் தேர்வானது:
http://gopu1949.blogspot.in/2014/06/vgk-19-02-03-second-prize-winner.html
மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
http://gopu1949.blogspot.in/2014/06/vgk-19-03-03-third-prize-winner.html
சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:
http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html
http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html
http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html
http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html
COMMENTS FROM Mr. V. NATANA SABAPATHI Sir, in my WhatsApp STATUS page on 15.09.2018 :-
பதிலளிநீக்கு-=-=-=-=-=-
சிறு கதைகளை இரசித்தேன்! கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை என்பது போல் கதைகள் சிறியதாய் இருந்தும் இரசிக்கும்படி இருந்தன.
-=-=-=-=-=-
கதையை மிகவும் ரஸித்துப்படித்து, விரிவாகவும், அழகாகவும் அருமையாகவும், பொறுமையாகவும் பின்னூட்டம் அளித்துள்ள திரு. வே. நடன சபாபதி ஐயா அவர்களுக்கு அடியேனின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் கோபு
WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. MANIVANNAN SIR, 9750571234 ON 09.06.2021
பதிலளிநீக்குஎட்டாக்கனி, முதிர் கன்னியர் போல பிரம்மச்சரியர் மனமும் அவருடைய ததும்பும் இளமை எண்ணவோட்டமும் புரிந்து ரசிக்க வைத்தது அருமை.
எட்டிய MONEY பிள்ளையை அடிக்கவும் வேண்டும் வலிக்கவும் கூடாது என்ற புத்திசாலித்தனம் பாராட்ட கூடிய ரகம்.
-=-=-=-=-
THANKS A LOT FOR YOUR KIND READING & ALSO FOR OFFERING THIS VERY VALUABLE COMMENTS. - VGK